மணவாட்டி ஊழியம்

மணவாட்டி ஊழியம்

Wednesday, September 23, 2015

இரவல் வாங்கின காகிதத்தில் நான் எழுதின செய்யுள் WROTE POETRY ON BORROWED PAPER


நான் இப்படி ஒரு செய்யுளை எழுதினேன். அது... அதை எழுதும்போது எனக்கு பன்னிரண்டு வயது மாத்திரமே என்பதை நினைத்துப் பாருங்கள். அன்று நான் மலைக்கணவாயைப் பார்த்து நின்று கொண்டு, சிங்கம் தன் குகை அறையில் உட்கார்ந்து கொண்டு கண்ணாடி ஜன்னல் வழியாக வெளியே பார்க்கும் என்று நினைத்துப் பார்த்தேன். அப்பொழுது நான் எழுதின ஒரு சிறு செய்யுள் எனக்கு ஞாபகம் வந்தது. நான் வீடு சென்று அதை கண்டெடுத்தேன். அது இவ்வாறு எழுதப்பட்டிருந்தது.

சற்று நினைத்துப் பாருங்கள், எப்படி தேவன்... தேவன் தான் ஊக்கம் அனைத்தும் அளிப்பவர் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? தேவனே பாடலை எழுத வேண்டும். தேவன் பாடல்களில் இருக்கிறார் என்பதை விசுவாசிக்கிறீர்களா? இயேசு அவ்வாறு கூறியுள்ளார். அவர் தாவீது எழுதின சங்கீதங்களைக் குறிப்பிட்டு, தாவீது சங்கீதத்தில் இவ்வாறு கூறினான் என்று உங்களுக்குத் தெரியாதா? என்றார்.

சிலுவை மரணத்தைப் பாருங்கள். தாவீது அதைக் குறித்து 22ம் சங்கீதத்தில் பாடினான். என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்? என் எலும்புகளெல்லாம் கட்டு விட்டது. என் கைகளையும் கால்களையும் உருவக்குத்தினார்கள் என்று. அது ஒரு பாடல். சங்கீதம் என்பது பாடல்.

நான் எழுதின இந்த செய்யுள் எவ்வாறு நிறைவேறினது என்பதைக் கவனியுங்கள். ஒரு சிறுவனாக அங்கு கடன் வாங்கின காகிதத்தில் நான் எழுதின இந்த செய்யுள்:

ஓ, தென் மேற்கில் தூரத்தில் நான் தனிமையிலிருந்தேன்

அங்கு நிழல்கள் மலை சிகரத்தின் மேல் படர்ந்தன

நீல நிற மந்தார நேரத்தில் பதுங்கியுள்ள ஒரு ஓநாயை என்னால் காணமுடிகிறது.

மாடுகள் புல் மேயும் இடத்தில் ஒரு நரி ஊளையிடுவதை என்னால் கேட்க முடிகிறது,

அரிசோனாத் தொடரிலுள்ள தூரத்து காடாலினா மலைகளில்

மலைக் கணவாயில் எங்கோ ஒரு சிங்கம் சத்தமிடுவதை என்னால் கேட்க முடிகிறது.

இதை எழுதி நாற்பது ஆண்டுகள் கழித்து அந்த மலைக் கணவாயில் நான் உட்கார்ந்து கொண்டிருந்தபோது, அந்த சிங்கம் என்னை முறைத்துப் பார்த்தது. ஓ, தேவனே, நதிக்கு அப்பால் எங்கோ ஒரு தேசம் உள்ளது. அது அங்கு இருக்கத்தான் வேண்டும். பாருங்கள்? அதைக்குறித்து அநேக சம்பவங்கள் உரைக்கின்றன. இவையனைத்தும் கட்டுக்கதையல்ல. அவை உண்மையானவை. அவை தத்ரூபமானவை. அங்கு நான் நித்திய காலமாக வாழ எதிர்பார்க்கும் மக்களுடன் இன்றிரவு இங்குள்ளதற்காக நான் மிக்க மகிழ்ச்சியுறுகிறேன். அங்கு வியாதியில்லை, மரணம் இல்லை, பிரிவினை இல்லை. பிரயாணம் செய்வதென்பது நமக்கு ஒரு எளிதான செயலாயிருக்கும்.


கர்த்தருடைய சமூகத்தினின்று விலகி ஓடிப்போகும் ஒரு மனிதன், பெப்ருவரி 17, 1965, பத்தி எண் 32-36

No comments:

Post a Comment