மணவாட்டி ஊழியம்

மணவாட்டி ஊழியம்

Wednesday, September 23, 2015

தேவன் இல்லாமல் போயிருந்தால். நான் கொலைக்காரனாகியிருப்பேன் "I'D A-BEEN A MURDERER" EXCEPT FOR GOD


ஜெபத்தின் மூலமாய் உங்கள் சுபாவத்தை இனிமையாக்கிக் கொண்டு, பிறகு உங்கள் மனதில் தீர்மானித்துக் கொள்ளுங்கள்... எனக்குத் தொடக்கத்தில் இருந்த கோபத்தைப் போல இந்த கட்டிடத்திலுள்ள அதிகம் பேருக்கும் இருக்காது என்று எண்ணுகிறேன். ஓ, என் வாய் எப்பொழுதும் அடித்து கொதறப்பட்டது. என் ஆகாரத்தை நான் 'ஸ்ட்ரா' வழியாக உறிஞ்சி சாப்பிடுவது வழக்கம்.

என் தாயார், உங்களுக்குத் தெரிந்தபடி, பாதி சிகப்பு இந்தியர். என் தந்தை அயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர், கென்டக்கியில் குடிபுகுந்த ஐரீஷ்காரர். இருவருக்குமே கோபம் அதிகம். எல்லா நேரங்களிலும் என் வாய் கொதறியிருந்தது; நான் தொடக்கத்தில் சிறுவனாயிருந்த போது, அவர்கள் என்னைத் தூக்கி, குத்தி கீழே வீழ்த்துவார்கள். நான் மறுபடியும் எழுந்திருப்பேன்; அவர்கள் மறுபடியும் குத்தி வீழ்த்தி, என்னால் எழுந்திருக்க முடியாத நிலை வரும் வரைக்கும் குத்தி வீழ்த்திக் கொண்டேயிருப்பார்கள். அது எப்பொழுதும் நடந்து வந்தது. என்னால் எழுந்திருக்க முடியும்போது, நான் எழுந்திருப்பேன்; அவர்கள் மறுபடியும் என்னைக் குத்தி கீழே வீழ்த்துவார்கள். அப்படித்தான் எனக்கு நடந்து வந்தது.

நான் கிறிஸ்தவனாக ஆகவே முடியாது என்று எண்ணினேன். ஆனால் பரிசுத்த ஆவி என் வாழ்க்கைக்குள் வந்த போது, அது அதை சாதித்து விட்டது.

ஒரு சமயம் ஒரு ஸ்திரீ இருந்தாள். அவளுடைய மின்சாரத்தைத் துண்டிக்க நான் சென்றிருந்தேன். அப்பொழுது என் தலையில் மயிர் இருந்தது. அவள் என்னைப் பார்த்து, பித்தம் பிடித்த முட்டாளே என்றாள்.

நான், ஸ்திரீயே, நீ அவ்விதம் என்னைத் திட்டக் கூடாது. ஓ, உனக்கு தேவ பயம் இல்லையா? என்று கேட்டேன்.

அவளோ, பித்தம் பிடித்த முட்டாளே, அப்படிப்பட்ட காரியங்களைக் குறித்து என்னிடம் யாராவது பேசவேண்டுமென்று நான் விரும்பினால், உன்னைப் போன்ற பைத்தியக்காரனை அழைக்க மாட்டேன் என்றாள்.

ஹூ! அவள் என்னை எல்லாவிதமான அவதூறான பெயராலும் அழைத்தாள். ஓ, என்னே, அது மாத்திரம் ஒரு ஆண்டுக்கு முன்பு நடந்திருந்தால்! ஒரு ஸ்திரீயை அடிக்கும் மனிதன், ஒரு மனிதனை அடிக்கக் கூடிய ஆண்மைத்தனம் கொண்டவன் அல்ல என்று நான் அடிக்கடி கூறுவது வழக்கம். ஆனால் என் தாயாரை அவதூறான பெயரால் அழைத்த போது, அந்த வாக்கை நான் மீறியிருப்பேன். ஆனால் என்ன நடந்தது தெரியுமா? அது என்னை சிறிதும் கோபப்படுத்தவில்லை. நான், உனக்காக ஜெபிக்கிறேன் என்று சொன்னேன். அது தொல்லைப் படுத்தவேயில்லை... எனக்கு என்னமோ நடந்துள்ளதென்று நான் அந்த நேரத்தில் அறிந்து கொண்டேன். ஆம், ஐயா! ஓ, என்னே!

நான் சிறுவனாயிருந்த போது, சண்டையிட்டதனால் செய்த தீங்குகள் உங்களுக்குத் தெரியுமா? ஒரே நேரத்தில் நான் ஐந்து மனிதர்களை ஏறக்குறைய கொன்று விட்டேன். பதினாறு குண்டுகள் நிறைத்திருந்த ஒரு துப்பாக்கியை நான் கையிலெடுத்து, நான் கென்டக்கி நாட்டைச் சேர்ந்தவன் என்ற காரணத்தால் அந்த பையன்கள் என்னை அடித்த போது, வேறு எந்த காரணத்துக்காகவும் அல்ல... என் தலையை என்னால் நிமிர்த்தவும் கூட முடியவில்லை. ஒரு பையன் என் கைகளை இப்படி பிடித்துக் கொள்வான். மற்றொரு பையன் கையில் ஒரு கல்லை வைத்துக் கொண்டு நான் ஜீவனற்று போகும் வரை என் முகத்தில் குத்துவான். இவ்வுலகில் வேறெதுவுமே...

அவர்கள் என்னை கென்டக்கி ஸ்வாப் என்று அழைத்தார்கள். ஏனெனில் என் தாயார் வாலிபமாயிருந்த போது சிகப்பு இந்தியரைப் போல் காணப்பட்டார்கள் (சற்று முன்பு நான் அவர்களுடைய புகைப்படத்தை நோக்கிக் கொண்டிருந்தேன்), அவர்கள் பாதி சிகப்பு இந்தியர் என்று அந்த பையன்கள் அறிந்திருந்தனர். நான் கென்டக்கியை சேர்ந்தவனாயிருந்து என் தாயார் சிகப்பு இந்தியராக  இருந்த காரணத்தால் அவர்கள் என்னை கென்டக்கி ஸ்வாப் என்று அழைத்தனர். அதற்கு நான் பொறுப்பாளியே அல்ல. நான் கென்டக்கியில் பிறந்தது என் தவறல்ல.

நான் பள்ளிக்கூடத்துக்குச் சென்றபோது எனக்கு உடுக்க துணிகளே இருக்கவில்லை. என் தாயார், தந்தை விவாகத்தின் போது உடுத்த அவருடைய பழைய கோட்டை எடுத்து அதை வெட்டி, எனக்கு கால் சட்டை தைத்துக் கொடுத்தார்கள். நான் பள்ளிக்கு முதன்முதலாக சென்ற போது அதை அணிந்து கொள்ள நான்... என் தாயார் எனக்கு வெள்ளை நிறக் காலுறையை அணிவித்து அதன் மேல் டென்னிஸ் காலணிகளை அணிவிப்பது வழக்கம். இந்த பையன்கள் என்னை நோக்கி, உன்னைப் பார்த்தால் பயந்தாங்கொள்ளியான கென்டக்கி நாட்டான் போல் இருக்கவில்லையா? என்று கேலி செய்வார்கள். இது நான் பள்ளிக்கூடத்தில் இருந்த நாட்கள் முழுவதும் நடந்து வந்தது.

ஓரிரண்டு பையன்கள், நான் சாலையில் ஏதோ ஒரு சிறு பெண்ணுடன் அவளுடைய புத்தகங்களை தூக்கிக் கொண்டு நடந்து சென்ற காரணத்தால்... அவ்விதம் நான் செய்வது அவர்களுக்கு பிரியமில்லை. அவர்கள் என்னை அங்கு சந்தித்து, நான் நினைவிழந்து போகும் வரைக்கும் என்னை அடித்தார்கள். அவர்கள் என்னை போக விட்டால், நான் நேராக வீட்டுக்கு போய்விடுவேன் என்று அவர்களுக்கு வாக்கு கொடுத்தேன். எனவே அவர்கள் என்னை போகவிட்டு, எனக்கு நான்கைந்து உதைகள் கொடுத்து, என்னைக் குத்தி கீழே வீழ்த்தி, என் முகம் முழுவதும் குத்தினார்கள். நான் அடிபட்டவனாக வயலின் வழியாக அந்த நிலையில் வீடு திரும்பினேன்.

என்னிடம் .22 வின்சென்ஸ்டர் துப்பாக்கி இருந்தது. அது கதவண்டையில் வைக்கப் பட்டிருந்தது. நான் தோட்டாக்களால் நிறைக்கப்படடிருந்த அந்த துப்பாக்கியை என் கையிலெடுத்துக் கொண்டு, புதரின் வழியாக சென்று, சாலையின் பக்கத்தில் ஒளிந்திருந்து, இந்த ஐந்தாறு பையன்கள் வருவதற்காக காத்திருந்தேன். அவர்கள், அந்த கென்டக்கி நாட்டான் இப்பொழுது முதற்கொண்டு அவன் நிலை என்னவென்பதை உணருவான் என்று பேசிக் கொண்டே வந்தனர்.

நான் துப்பாக்கியின் மேல்கம்பியை  பின்னால் இழுத்து, ஒளிந்த இடத்திலிருந்து வெளி வந்து, உங்களில் யார் முதலில் இறக்க விரும்புவது, அப்பொழுது நீங்கள் மற்றவர்களை கவனிக்க மாட்டீர்கள் என்றேன். அவர்கள் அலறத் தொடங்கினர். நான், அலறாதீர்கள், நீங்கள் ஒருவர் பின் ஒருவராக எல்லாரும் சாகப் போகிறீர்கள் என்றேன். அதை நான் உண்மையில் செய்ய வேண்டுமென்று நினைத்தேன். நான் மேல் கம்பியை இழுத்து சுட்டேன். துப்பாக்கியிலிருந்த குண்டு வெடித்தது. நான் வேறொரு தோட்டாவை உள்ளே போட்டு சுட்டேன். அதுவும் வெடித்தது. இப்படியாக பதினாறு தோட்டாக்களை நான் தரையை நோக்கி சுட்டேன். அவை ஒவ்வொன்றும் வெடித்தன. அந்த பையன்கள் அலறிக் கொண்டு ஓடி, மலையின் மேல் ஏறி ஓடினார்கள்.

அவர்கள் போன பிறகு அங்கு நான் நின்றேன். எனக்கு அதிக கோபம் வந்தால், நான் அழமாட்டேன், ஒரு முட்டாளைப் போல் சிரிப்பேன், அப்பொழுது என் கண்களிலிருந்து கண்ணீர் வடியும். இப்பொழுது, அது ஒரு கோபாவேசம். தேவன் இல்லாமல் போயிருந்தால், நான் கொலைகாரனாகியிருப்பேன்.

அந்த தோட்டாக்களை நான் பொறுக்கி அவைகளை துப்பாக்கியில் நிறைத்து,பௌ, பௌ. அவை முன்னைப் போல் நன்றாக வெடித்தன. கிருபையைக் குறித்து பேசினால், இதுதான் கிருபை!


கேள்விகளும் பதில்களும் (COD 2:22), ஆகஸ்ட் 30, 1964 மாலை, பத்தி எண் 94-105

No comments:

Post a Comment