கி.பி. 1906 லவோதிக்கேயா சபைக் காலமானது ஆரம்பித்தது என்று
நாம் விசுவாசிக்கிறோம். நான் முன்னுரைக்கிறேன். இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள் ஒலிநாடாவில்
செய்தியைக் கேட்கிறவர்களே! முன்னுரைக்கிறேன் என்ற வார்த்தையைக் கவனியுங்கள். அவ்வாறு
நிச்சயம் நடக்கும் என்று நான் உரைக்கவில்லை; 1977 வாக்கில் அது முடியும் என்று நான்
அனுமானித்து முன்னுரைக்கிறேன். ‘ப்ரெடிக்ட்’ அப்பொழுது
சபையானது முற்றிலும் விசுவாசத்துரோகத்திற்குள் போய்விடும். தேவனுடைய வாயினின்றும் அவள்
வாந்திப் பண்ணிப் போடப்பட்டிருப்பாள் என்றும் முன்னுரைக்கிறேன். கிறிஸ்துவின் இரண்டாம்
வருகை அல்லது எடுத்துக்கொள்ளப்படுதல் எந்த வேளையிலும் வரலாம். அவ்விஷயத்தில் நான் ஒரு
ஆண்டு தவறவிட்டிருக்கக்கூடும். அல்லது ஒருவேளை இருபதாண்டுகள் தவறவிட்டிருப்பேன் அல்லது
நான் அது நடப்பதைப் பற்றி நூறு ஆண்டுகள் கணக்குத் தவறுதலாக சொல்லிவிடக் கூடும். அது
எங்கே எப்பொழுது நடக்கும் என்பதை நான் அறியேன். அவர் எனக்குக் காண்பித்த ஒரு தரிசனத்தின்
அடிப்படையிலும், காலமானது முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறதின் அடிப்படையிலும், அது
33க்கும் 77க்கும் இடையில் இருக்கலாம் என்று அனுமானத்தின் பேரில் முன்னுரைக்கிறேன்.
இந்த மகத்தான தேசமானது, ஒரு யுத்தத்திற்குச் சென்று அதினால் அது தூள் தூளாக நொறுங்கிவிடும்.
அது மிகவும் சமீபமாக இருக்கிறது பயங்கரமான விதமாக சமீபமாயிருக்கிறது. நான் அனுமானத்தின்
பேரில் தான் முன்னுரைக்கிறேன். எனவே நான் தவறாக இருக்கக்கூடும். புரிந்து கொண்டுள்ள
ஒவ்வொருவரும் ‘ஆமென்’ என்று கூறுங்கள். (சபையார்,
‘ஆமென்’ என்று கூறுகிறார்கள் – ஆசி). பாருங்கள்.
ஆனால் கர்த்தர் 1933 ஆண்டில், பெரிய வல்லமை படைத்த ஒரு
ஸ்திரீயைக் குறித்து எனக்கு தரிசனத்தில் காண்பித்தார். அது எழுதி வைக்கப்பட்டுள்ளது.
எவ்வாறு ரூஸ்வெல்ட் உலகம் யுத்தத்திற்கு செல்லும்படி செய்துவிடுவார் என்பதைப் பற்றியும்
சொல்லப்பட்டது. எவ்வாறு முúஸôலினி எத்தியோப்பியா தேசத்தின்
மேல் தனது முதலாவது படையெடுப்பை எடுப்பான் என்பதும் அத்தேசத்தை அவன் கைப்பற்றுவான்
என்பதும், ஆனால் அவன் அவமானகரமான முடிவை எய்துவான என்பதும் தரிசனத்தில் காண்பிக்கப்பட்டது.
அதன் பிறகு, எவ்வாறு நாஜிக்கொள்கை, பாசிசக் கொள்கை, கம்யூனிசக் கொள்கை என்ற மூன்று
விதமான இஸம்கள் தோன்றும் என்பதும், இவையெல்லாம் கம்யூனிஸத்தில் போய் முடிவடையும் என்பதும்
காண்பிக்கப்பட்டது. அக்காலத்தில் எத்தனை பேர்கள் நான் பின்வரும் காரியத்தை நீங்கள்
நின்று கொண்டு சப்தமாகக் கூறும்படி செய்ததை நினைவில் வைத்திருக்கிறீர்கள்? ‘ருஷ்யாவை கவனி, வடதிசை இராஜாவாகிய
ருஷ்யாவைக் கவனி, வடதிசை இராஜாவாகிய ருஷ்யாவைக் கவனி, வடதிசை இராஜாவாகிய ருஷ்யாவைக்
கவனி’ என்று மீண்டும் மீண்டும் உங்களை
கூற வைத்தேன். எத்தனை பேர்கள் நான் இவ்வாக்கியங்களை கைகளை அசைத்து மீண்டும் மீண்டும்
திரும்பத் திரும்ப கூறியதைக் கேட்டிருந்தீர்கள். முன் காலத்தவர்கள், சபையின் ஆரம்ப
காலத்தில் இருந்தவர்கள், அதை அறிவார்கள். அவன் என்ன செய்வான் என்பதும், எல்லா ‘இஸம்களும்’ முடிந்து ருஷ்யாவில் போய்
குவிந்துவிடும் என்று உரைக்கப்பட்டது.
‘இந்த தேசம் ஜெர்மனியோடு யுத்தத்திற்குச் செல்லும்’ என்று பிறகு நான் கூறினேன்.
‘ஜெர்மனியானது அதன் எல்லையில்
காங்க்ரீட் மதிலினால் அரணாக்கப்படும்’ என்றும் கூறினேன். அதுதான் மேகினோட் லைன் என்ற சுவராகும்.
அது கட்டப்படுவதற்கு பதினொன்று ஆண்டுகளுக்கு முன்பே முன்னுரைக்கப்பட்டது. ‘அமெரிக்கர்கள் அந்த சுவரண்டை
மிக மோசமான தோற்கடிப்பை அடைவார்கள்’ என்றும் கூறினேன். இங்கேயுள்ள சில சகோதரர்கள் அங்கே அந்த
காங்க்ரீட் சுவரண்டை இருந்திருக்கிறார்கள். சகோதரன் ராய் ராபர்ஸன் அவர்களும் மற்றும்
ஏனையோரும் தான் அங்கே இருந்தார்கள். என்ன நடைபெற்றது என்பதை அவர்களிடம் கேட்டறிந்து
கொள்ளுங்கள். அவ்வாறு தான் அமெரிக்கர்களுக்கும் நடந்தது. ‘ஆனால் முடிவாக நாம் ஜெயிப்போம்,
நமக்கும் ஜெர்மனிக்கும் இடையே நடைபெறும் யுத்தத்தில் ஜெயிப்பதில் நாமும் ஒருவராக இருப்போம்’ என்று கூறினேன்.
‘அந்தக் காலத்திற்கு பின்னர் விஞ்ஞானமானது மிகவும் முன்னேறிப்போய்விடும்’ என்று உரைத்தேன். அவ்வாறே
அது நடந்தது, அவர்கள் அணுகுண்டையும் இன்னபிறவற்றையும் செய்தார்கள். ‘அவர்களுடைய முன்னேற்றத்தின்
கட்டத்தில் அவர்கள் முட்டை வடிவ மோட்டார் வாகனங்களைச் செய்வார்கள்’ என்று உரைத்தேன். 1933இல்
இருந்து அந்த பழைய காலத்து பெரிய மோட்டார் வாகனம், மடக்கிக் கொள்ளும் வசதியோடு துணியினால்
மேல் மூடி உள்ளதாக இருந்தது. அதை நீங்கள் நினைவில் வைத்திருக்கிறீர்களா? அதன் பெரிய
பின்பகுதியை கீழே இழுத்துக் கொள்ளலாம். பின்னால் உபரி டயர்கள் வைக்கப்பட்டிருக்கும்.
இப்பொழுது உள்ள வாகனங்களைப் பாருங்கள். அவைகள் முட்டை வடிவத்தில் இப்பொழுது வடிவமைக்கப்பட்டுள்ளன.
‘இறுதியாக அவர்கள் ஒரு மோட்டார்
வாகனத்தைக் கண்டு பிடிப்பார்கள், அதற்கு ஸ்டியரிங் வீலும் இருக்காது. ஒரு குடும்பத்தினர்
கண்ணாடியிலான மேல் மூடியையுடையதான அந்த அருமையான மோட்டார் வாகனத்தில் ஒரு பெரிய அழகாக
காட்சியளிக்கும் சாலைகளில் பயணம் செய்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். அவர்கள் ஒருவரையொருவர்
பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்த பொழுது அவ்வாகனமானது யாராலும் ஓட்டிச் செல்லப்படாமல்,
தானாகவே இயங்கி அது சாலைகளின் வளைவுகளிலும் மற்றும் எவ்விடங்களிலும் சென்று கொண்டிருந்தது’ என்று நான் கூறினேன். இப்பொழுது
அவர்கள் அந்த மோட்டார் வாகனத்தை செய்திருக்கிறார்கள். ஏற்கனவே அதைக் கண்டு பிடித்துவிட்டார்கள்.
அவர்களிடம் இப்பொழுது அவ்வாகனம் இருக்கிறது. ‘விஞ்ஞானமானது அந்நாளில் முன்னேறி விடும்’ என்று நான் அப்பொழுது கூறினேன்.
நான் மேலும் கூறினேன்: ‘அவர்கள் பெண்களுக்கு வாக்குரிமையை
வழங்கிடுவதை நான் பார்த்தேன்’ என்றேன். அவ்வாறே அவர்கள் பெண்கள் வாக்களிப்பதற்கும் அனுமதித்தும் விட்டார்கள்.
‘அவ்வாறு வாக்களிப்பதன் மூலம்
அவர்கள் இந்நாட்களில் ஒன்றில் தவறான மனிதனை தேர்ந்தெடுப்பார்கள்’ என்று கூறினேன். கடந்த தேர்தலில்
நீங்கள் அதைச் செய்திருக்கிறீர்கள். பெண்களின் வாக்குகள்தான் கென்னடியைத் தேர்ந்தெடுத்தது.
நாம் அறிவோம். அங்கே அவர்கள் ஆயத்தப்படுத்தியிருந்த சூழ்ச்சியான இயந்திரங்கள், மற்றும்
சில காரியங்களுக்கும் நடுவில் சில ஏற்பாடுகள் மூலமாக அதை சாதித்தார்கள். பெடரல் பீரோ
ஆப் இன்வெஸ்டிகேஷன் அதை கண்டுபிடித்து அம்பலப்படுத்தியது. ஏன் அதைக் குறித்து ஏதும்
செய்யமாட்டேனென்கிறார்கள்? ஏன் அதைக் குறித்து ஒன்றும் சொல்லமாட்டே னென்கிறார்கள்?
தங்கள் வேலையை இழந்து விடுவோமோ என்ற அச்சத்தினால்தான். முழுவதும் அழுகிப்போன அரசியலின்
கூட்டம் அது. அவ்வளவுதான் அது நிச்சயமாக!
தயயு செய்து இதைக் கூறுவதற்கு மன்னித்துக் கொள்ளுங்கள்.
இத்தேசத்திற்கு இரட்சிப்பே இல்லை. எந்த தேசத்திற்கும் இரட்சிப்பே இல்லை. இரட்சிப்பு
இயேசு கிறிஸ்துவில் மட்டுமே உள்ளது. அவரில் மட்டும் உள்ளது. அது சரிதான்; நான் அமெரிக்காவுக்காக
நன்றியுள்ளவனாயிருக்கிறேன்; உலகில் வேறு எந்த நாட்டில் வாழ்வதை விட இத்தேசத்தில் வாழ்வதையே
நான் விரும்புகிறேன். ஏனெனில், கனடாவிற்கு வெளியே... கனடாவும், அமெரிக்காவும் இரட்டையர்கள்.
நாம் அதை அறிவோம், இருவரும் அண்டை நாடுகள், அற்புதமான நாடு அது. வேறு எங்கும் வாழ்வதை
விட இங்கு தான் நான் வாழ விரும்புகிறேன். ஏனெனில் இது எனது தாய் நாடு.
நான் ஒரு அமெரிக்கனாயிருப்பதற்காக
மகிழச்சியுள்ளவனாயிருக்கிறேன். அதற்காக நான் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். ஆனால் நான்
உங்களுக்கு கூறுவதென்னவெனில், இத்தேசமானது அதற்கு சமமான எழுப்புதலை அவசியம் பெற்று
இருக்க வேண்டும். ஆனால் அது அதைப் பெற்றுக் கொள்ளாது. இல்லை, ஐயா, அவள் மீண்டும் எழும்பப்
போகிறதில்லை. இல்லை அவள் முடிந்து போய்விட்டாள். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக சிக்காகோவில்
நான் கூறியது உங்களுக்கு நினைவிலிருக்கும். அது ஒலிநாடாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜீன், உன்னிடத்தில் அது இருக்கிறது. ‘ஒன்று இந்த ஆண்டில் அவர்கள் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும்,
தவறினால், அவர்கள் தொடர்ந்து அதை புறக்கணித்தே விடுவார்கள்’ என்று நான் கூறினேன். அதைத்தான்
அவர்கள் செய்து இருக்கிறார்கள். பாருங்கள் அவள் தன்னுடைய முடிவை எய்துகிற வரையிலும்
அதையே தான் அவர்கள் செய்வார்கள்.
ஆனால் வல்லமை வாயந்த ஒரு ஸ்திரீ தோன்றுவாள். இப்பொழுது
நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இது ஒலிநாடாவிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு வல்லமை
பொருந்திய ஸ்திரீ வருவாள், அவள் ஒரு வேளை ஜனாதிபதியாக இருக்கக்கூடும். அல்லது கத்தோலிக்க
சபைக்கு எடுத்துக்காட்டாக அவள் இருக்கக் கூடும், அப்படியிருக்கும் என்று நான் கருதுகிறேன்;
அவள் ஒரு நாளில் இந்நாட்டை தன் கையிலெடுத்துக் கொண்டு, இந்த தேசத்தை ஆட்சி செய்வாள்.
இந்நாடு ஸ்திரீயின் தேசமாக இருக்கிறது. கொடியானது ஒரு ஸ்திரீயினால் உண்டாக்கப்பட்டதாகும்.
அதில் பதின்மூன்று நட்சத்திரங்கள் உள்ளன. பதின்மூன்று கோடுகள் கொடியில் உள்ளன. பதிமூன்று
காலனிகள் உள்ளன. எல்லாம் பதின்மூன்று, பதின்மூன்று, பதின்மூன்று என்று யாவற்றிலும்
அவ்வாறே காணப்படுகிறது. அவளது வெள்ளி டாலர் நாணயத்திலும் பதின்மூன்று நட்சத்திரங்கள்
பொறிக்கப்பட்டுள்ளன. யாவும் பதின்மூன்று என்றே காணப்படுகிறது. இத்தேசத்தின் எண் பதின்மூன்றாகும்.
அது வெளிப்படுத்தின விசேஷத்தின் பதின்மூன்றாம் அதிகாரத்திலும் காணப்படுகிறது. முற்றிலும்
பதின்மூன்று தான் யாவும், ‘ஸ்திரீ, ஸ்திரீ, ஸ்திரீ, ஸ்திரீ,
ஸ்திரீ’ என்றே இருக்கிறது. அவள் அனைத்து
அலுவலகங்களையும் கைப்பற்றியிருக்கிறாள். ஹாலிவுட்டையும் அவள் தன் கையில் எடுத்துக்
கொண்டுவிட்டாள். தேசத்தையும் மேற்கொண்டு விட்டாள். அலுவலகங்கள் அவளால் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
அங்கிருக்கின்ற யாவற்றையும் தன் அதிகாரத்தில் கொண்டு வந்திருக்கிறாள். மனிதனோடு அவள்
சரிசமமான உரிமைகளை பெற்றுவிட்டாள், ஆண்களோடு வாக்களிக்கும் உரிமையும் கிடைத்துள்ளது.
அவள் மனிதனைப் போலவே சபிக்கிறாள். ஆணைப்போலவே மது அருந்துகிறாள். இன்னும் என்னவெல்லாமோ
செய்கிறாள். ஒரு ஸ்திரீயை தொழுது கொளவதற்காக கத்தோலிக்க சபையானது பயன்படுத்தும் ஒரு
சரியான வஞ்சகமான கண்ணியாகும். எப்படியாயினும் அவர்கள் ஏற்கெனவே ஒரு ஸ்திரீயைத் தொழுது
கொண்டுதானிருக்கிறார்கள்.
லவோதிக்கேயா சபையின் காலம், டிசம்பர் 11, 1960, பத்தி
எண் 43-49
No comments:
Post a Comment