மணவாட்டி ஊழியம்

மணவாட்டி ஊழியம்

Wednesday, September 23, 2015

மனமாற்றத்தின் போது. சிலுவையைப் போல் ஒளி தோன்றி ஒரு சத்தம் பேசுதல்




நாம் வாழ்கிற இக்காலத்தில், என்னுடைய குணப்படுதலின் போது, நான் இந்நிலையைக் கண்டேன். சபையானது என்னைப் பற்றிக் கொள்ளுமுன்னர் தேவன் என்னைப் பிடித்துக் கொண்டு விட்டார். அதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த சர்வ குழப்பங்களினால் நான் ஒருவேளை தேவனற்றவனாக ஆகியிருப்பேன். ஆம், ஐயா. நல்லது, வந்து எங்களோடு சேர்ந்து கொள்ளுங்கள். இல்லையெனில், உங்கள் கடிதத்தை எடுத்துக் கொண்டு மற்றதை சேர்ந்து கொள்ளும் என்று கூறுனர்.

நீ உனது கடிதத்தைக் கொண்டு வந்து ஐக்கியத்தில் சேர்ந்து கொள்ளுகிறதில்லையா? என்றனர்.

ஒரேயொரு எழுத்துத்தான் உண்டு, அது கிறிஸ்து உங்களுடைய பெயரை ஆட்டுக் குட்டியானவருடைய ஜீவ புத்தகத்தில் எழுதும்போது உள்ளதாகும். அது ஒன்றுதான் உள்ளது.

நான் இந்த மதஸ்தாபனங்களையெல்லாம் காண்கையில்... ஐரிஷ் குடும்பப் பின்னணியை உடைய நாங்கள் முன்பு கத்தோலிக்கராயிருந்தோம். அதுதானே, ஊழலுள்ளதாயும், நாற்றமெடுத்ததாயும் இருந்தது. இந்நகரத்திலுள்ள ஒரு குறிப்பிட்ட ஸ்தாபன சபைக்கு நான் சென்றிருந்தேன். அவர்கள், நாங்களே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறோம். எங்களிடம் அதன் யாவும் உள்ளது என்றனர்.
நியூ ஆல்பனியிலுள்ள மற்றொரு சபைக்குச் சென்றேன். அவர்களோ, அங்கிருக்கிறவர்களுக்கு தாங்கள் என்ன பேசுகிறோம் என்பதே அறியார்கள் என்று கூறினார்கள்.

கத்தோலிக்கரோ, நீங்களெல்லாருமே தவறாயிருக்கிறீர்கள் என்றனர்.

நான், இது என்ன இப்படியிருக்கிறது என்று எண்ணினேன்.

நான் ஜெர்மன் லூத்தரன் சபையைச் சேர்ந்த ஒரு பையனுடன் விளையாடுவதுண்டு.

 அவனிடம், நீ எந்த சபைக்குப் போகிறாய்? என்று கேட்டேன்.

நான் இன்ன சபைக்குப் போகிறேன் என்று கூறினான்.

நான் அந்த சபைக்கும் சென்றேன். அவர்களும் தாங்கள் தான் வழி என்று கூறக் கேட்டேன். இம்மானுவேல் பாப்டிஸ்ட் சர்ச் அல்லது முதல் பாப்டிஸ்ட் சபையைச் சேர்ந்த சகோ. டேல் அவர்களிடம் சென்றேன். இதுதான் வழி என்று அவர்கள் கூறினர்.

நான் பிறகு, ஐரிஷ் சபைக்குச் சென்றேன். ஆனால் அவர்களும், இதுவே மார்க்கம் என்று கூறினர்.

ஓ, நான் மிகவும் குழப்பமடைந்து போயிருக்கிறேன், என்ன செய்வதென்றே எனக்குத் தெரியவில்லை. ஆனால் நான் சரியானபடி ஆகவேண்டும் என்று நான் நம்புகிறேன் என்றேன். என்ன செய்வதென்றே எனக்குத் தெரியவில்லை; எப்படி மனந்திரும்புவது என்றே எனக்குத் தெரியவில்லை. நான் ஒரு கடிதம் எழுதினேன். அக்கடிதத்தில் நான் எழுதினதாவது:
அன்புள்ள ஐயா,

      இந்த வழியாக நீர் கடந்து செல்லுகிறீர் என்பதை நான் அறிவேன். ஏனெனில் நான் இங்கே தான் அணில் வேட்டைக்காக அமர்ந்திருப்பதுண்டு. நீர் அருகில் வருகிறீர் என்றும், நீர் இங்கே இருக்கிறீர் என்றும் நான் அறிவேன். நான் உம்மிடம் ஒரு விஷயத்தை கூற விரும்புகிறேன்.

நான் நினைத்தேன், இப்பொழுது ஒரு நிமிடம் பொறு, நான் பேச விரும்புகிற எவரையும் நான் காணவில்லை. நான் அவரிடம் பேச விரும்புகிறேன். நல்லது, இப்பொழுது, அதை எப்படிச் செய்வது என்று தான் எனக்குத் தெரியவில்லை என்று எண்ணினேன்.

நான் அங்கிருந்த ஒரு கொட்டகைக்குச் சென்றேன். அங்கே சேதமுற்ற ஒரு பழைய மோட்டார் வாகனம் நின்றிருந்தது. அந்த இடம் தண்ணீரால் ஈரமாயிருந்தது. நான் ஒரு படத்தைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் தங்கள் கரங்களை இவ்வாறு வைத்திருக்கிறார்கள் என்று நம்புகிறேன் என்றேன். நான் கீழே இறங்கினேன். இப்பொழுது நான் கூறப்போகிறேன். நீர் இதைச் செய்வதற்கான ஏதோ ஒரு வழியுள்ளது. எனக்கு அது தெரியாது. ஒவ்வொன்றையும் அணுகுவதற்கு ஒரு மார்க்கம் உண்டு என்று நான் அறிவேன் என்றேன்.

நான் எனது கைகளை இவ்வாறு வைத்துக் கொண்டு, அன்புள்ள ஐயா, ஒரு க்ஷணப்பொழுது நீர் என்னிடம் வந்து பேச வேண்டுமென நான் வாஞ்சிக்கிறேன். நான் எவ்வளவு மோசமாயிருக்கிறேன் என்பதை உமக்கு கூற வேண்டுமென நான் விரும்புகிறேன். என் கைகளை இந்தவிதமாக வைத்துக் கொண்டேன். நான் செவிகொடுத்தேன். மக்கள் தேவன் தன்னோடு பேசியதாகக் கூறினர். அவர் பேசுகிறார் என்பதை நானும் அறிவேன், ஏனெனில், நான் சிறுவனாக இருந்தபோது, அவர் என்னிடம், மது குடிக்காதே, என்றெல்லாம் கூறியிருக்கிறார். அவர் இத்தடவை என் வேண்டுதலுக்கு பதிலளிக்கவில்லை.

ஒருவேளை நான் எனது கரங்களை இந்தவிதமாக வைத்துக் கொள்ள லேண்டுமோ? என்று எண்ணினேன். எனவே, நான் அன்புள்ள ஐயா, சரியாக எவ்விதம் இதைச் செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை. நீர் எனக்கு உதவி செய்வீர் என்று நான் நம்புகிறேன் என்று எண்ணினேன்.

ஒவ்வொரு பிரசங்கியும் தங்களுடையதை வந்து சேர்ந்து கொள்ளுமாறும், எழுந்து நின்று, இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டதாகவும், இயேசு தேவ குமாரன் என்று விசுவாசிப்பதாகவும் அறிக்கையிட வேண்டுமென்று என்னிடம் கூறிக்கொண்டிருந்தனர். பிசாசுகளும் அவ்வாறே விசுவாசிக்கின்றனவே. எனவே நான் எனக்குள் இவ்வாறு சிந்தித்தேன். இதைவிட மேலான ஒன்றை நான் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று, எனவே நான் இந்தவிதமாக வாஞ்சித்துக் காத்திருந்தேன்.

அலங்கார வாசலிலே, பேதுருவும், யோவானும் கடந்து செல்லுகையில், அங்கே தன் தாயின் வயிற்றிலிருந்து சப்பாணியாய் பிறந்து வளர்ந்த ஒரு மனிதன் இருந்தான். அவர்கள் அவனிடம், வெள்ளியும் பொன்னும் என்னிடத்திலில்லை; என்னிடத்திலுள்ளதை... என்று கூறினர். நான் அதைப் பெற்றிருக்கவில்லை என்று அறிந்திருந்தேன்.

எனவே, அதை எவ்வாறு செய்வது என்பதை கண்டு பிடிக்க முயன்று கொண்டிருந்தேன். எவ்வாறு ஜெபிப்பது என்பதை நான் அறியவில்லை. நான் என் கைகளை விரித்தேன், பிறகு, நான் இவ்வாறு கிடந்தேன். வாஸ்தவமாகவே, சாத்தான் அப்பொழுது காட்சியில் தோன்றினான். நீ பார்த்தாயா? நீ அதிக நேரம் காத்திருந்து விட்டாய், நீ ஏற்கனவே இருபது வயதை அடைந்து விட்டாய். அதை இப்பொழுது முயற்சி செய்வதற்கு அவசியமில்லை. நீ செய்துவிட்டாய்... என்று கூறினான்.

நான் அப்பொழுது மனமுடைந்து அழ ஆரம்பித்தேன். பிறகு, நான் என் இருதயம் உண்மையிலேயே உடைந்த போது, நான் இவ்வாறு கூறினேன், நான் பேசப் போகிறேன். நீர் என்னிடம் பேசாவிடில், நான் எப்படியாயினும் உம்மிடம் பேசப் போகிறேன். எனவே நான் சொன்னேன், நான் நல்லவனல்ல, நான் என்னைக் குறித்தே வெட்கப்படுகிறேன். திருவாளர் தேவனே, எங்கிருந்தோ நீர் என் பேச்சை கேட்கிறீர் என்பதை நான் அறிவேன். நான் பேசுவது உமக்குக் கேட்கிறதா? நான் என்னைப் பற்றியே வெட்கமடைகிறேன். உம்மை நான் அசட்டை செய்து விட்டேன் என்பதினால் நான் வெட்கமடைகிறேன் என்று பேசினேன்.

ஏறக்குறைய அவ்வேளையில் நான் ஏறிட்டுப் பார்த்தேன். விசித்திரமான ஒரு உணர்வானது என்னைப் பற்றிக் கொண்டது. ஒரு ஒளியானது அவ்வறைக்குள்ளாக அசைந்து வந்து, ஒரு சிலுவையைப் போல் தோற்றத்தை உருவாக்கியது; என் வாழ்க்கையிலேயே நான் கேட்டிரா ஒரு சப்தம் என்னோடு பேசியது. நான் அதை உற்று நோக்கினேன். முழுவதும் குளிர்ந்து போனதாக இருந்தது. நான் பயந்தேன், என்னால் அசைய முடியவில்லை. நின்று அதை உற்று நோக்கினேன். அது கடந்து சென்று விட்டது.

 ஐயா, உமது பாஷையை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. நீர் என்னுடைய மொழியில் பேசாவிடில் என்னால் உம்முடையதை புரிந்து கொள்ளவில்லை. நீர் என்னை மன்னித்தீரென்றால், சிலுவையில் என் கணக்குத் தீர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்று நான் அறிவேன். என் பாவங்கள் அங்கே சுமத்தப்பட்டிருக்கத்தான் வேண்டும். நீர் என்னை மன்னிப்பீரென்றால், திரும்ப வந்து என்னோடு உமது சொந்த பாஷையிலே பேசும். எனது பாஷையில் உம்மால் பேச இயலாவிடில் அதைக் கொண்டு நான் புரிந்து கொள்வேன். அது மீண்டும் திரும்ப வரச் செய்தருளும் என்று நான் கேட்டேன்.

அது மீண்டும் தோன்றியது. ஓ, அது மிகவும் நன்றாயிருந்தது. அங்கேதான் என்னுடைய முற்றிலுமானதைப் பெற்றுக் கொண்டேன். ஆமென். ஆம், ஐயா. எனது தோள்களை விட்டு நாற்பது டன் எடையளவுக்கு பாரம் நீங்கினதாக உணர்ந்தேன். அங்கேயிருந்த மரநடைபாதையில் நடந்தேன். என்னால் நிலத்தைத் தொடக் கூட முடியவில்லை.

என் தாயார், பில்லி, நீ உணர்ச்சிவசப்பட்டிருக்கிறாய் என்றார்கள்.

இல்லை, அம்மா, என்ன நேர்ந்ததோ எனக்குத் தெரியாது என்றேன் நான்.

அங்கே பின்னால் ஒரு ரயில்பாதை உண்டாயிருந்தது. என்னால் இயன்ற அளவு உயரமாக அந்த ரயில் பாதையில் குதித்து ஓடினேன். எனது உணர்ச்சிகளை எவ்விதமாக வெளிப்படுத்துவது என்றே எனக்குத் தெரியவில்லை. எவ்வாறு ஆர்ப்பரிக்க வேண்டும் என்று எனக்கு மட்டும் தெரிந்திருந்தால் எப்படியிருக்கும். நான் ஆர்ப்பரித்தேன். ஆனால் நான் எனக்குத் தெரிந்த முறையில் அதைச் செய்தேன். நீங்கள் கவனித்தீர்களா?

அது என்னவாயிருந்தது இளைப்பாறுதலின் துறைமுகத்தில் என் ஆத்துமாவை நங்கூரமிட்டுக் கொண்டு விட்டேன். நான் அத்தோடு யாவும் சரிப்படுத்தப்பட்டது. அதுவே எனது முற்றிலுமானதாக இருந்தது. அங்கே நான் ஏதோ ஒரு கட்டுக் கதையையல்ல, ஏதோ சில கொள்கைகளையல்ல கண்டு கொண்டது. நான் அந்த மனிதனோடு பேசினேன். நான் சிறுவனாயிருந்த போது, நீ மது அருந்தக் கூடாது, புகைக்கக் கூடாது, ஸ்திரீகளினால் உன்னைக் கறைபடுத்திக் கொள்ளாதே என்றும், நீ பெரியவனாகும் போது, நீ எனக்காக செய்ய வேண்டிய வேலை ஒன்று இருக்கிறது என்று கூறினாரே அந்த மனிதனோடு பேசினேன். நான் அவரைத் தொடர்பு கொண்டேன். அவரேதான். ஆம் ஐயா, அவரே அந்த ஒருவர்.



முற்றிலுமானவர், டிசம்பர் 30, 1962, பத்தி எண் 262-283

No comments:

Post a Comment