மணவாட்டி ஊழியம்

மணவாட்டி ஊழியம்

Wednesday, September 23, 2015

அக்கினிஸ்தம்பம் வெளிப்படையாக தோன்றுதல்




ஒருவர் கூறினார், டாக்டர் டேவிஸ் என்னிடம் கூறினார், பில்லி, நீர் அப்படிப்பட்ட காரியத்தைப் பிரசங்கிக்கிறீரென்றால், சபையின் தூண்களுக்குத்தான் நீர் வார்த்தையைப் பிரசங்கிப்பதாக அது இருக்கிறது.

அப்படியென்றால், நான் தூண்களுக்கு தேவனுடைய வார்த்தையைப் பிரசங்கிப்பேன். ஏனெனில், தேவன் இந்தத் தூண்களைக் கொண்டு ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டு பண்ண வல்லவராயிருக்கிறார் என்று பதிலளித்தேன். அது சரிதான். தேவனுடைய வார்த்தை உண்மையாயிருக்கிறது.
அவர்கள் நீர் கூறுவதை விசுவாசிப்பார்கள் என்றா எண்ணுகிறீர்கள்? என்று கேட்டார்.

அது என் வேலையல்ல, அந்த வார்த்தையோடு உத்தமமாக நிலைத்திருப்பதே எனது கிரியையாயிருக்கிறது என்று நான் கூறினேன். அது சரிதான்.
அவர் மேலும், தெய்வீக சுகமளித்தல் என்ற உபதேசத்தோடு இந்த கல்வியறிவு நிறைந்த இவ்வுலகை சந்திக்க முடியும் என்று எண்ணுகிறீர்களா? என்று கேட்டார்.
அது என்னுடைய தெய்வீக சுகமளித்தல் அல்ல, அது அவருடைய வாக்குத்தத்தமாகும். அவரே அந்தக் கட்டளையைக் கொடுத்தவர் என்று பதிலளித்தேன்.

ஓ, 1933ம் ஆண்டில் ஜூன் மாதத்தில் அந்த நதியில் அப்பெரிய ஒளியினுள்ளே அவர் தீவிரமாக வந்திறங்கி நின்று, கிறிஸ்துவின் முதல் வருகைக்கு முன்பாக யோவான் ஸ்நானன் அனுப்பப்பட்டு, முன்னோடினது போல, கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு முன்னோடியாக போகும்படி, நான் உன்னை ஒரு செய்தியோடு அனுப்புகிறேன் என்று கூறியதை நான் நினைவு கூருகிறேன். அவ்வாறே உலகமெங்கிலும் செய்தியானது புறப்பட்டு போய்விட்டது, அதினால் எழுப்புதல் அக்கினியானது கடந்த பதினைந்து ஆண்டு காலமாக ஏறத்தாழ ஒவ்வொரு மலையின் மேலும் நிலைபெற்றுள்ளது. தேசங்கள் தோறும் தெயவீக சுகமளித்தலும், வல்லமையும், திரும்ப அளிக்கப்படுதலும் ஏற்பட்டுள்ளது. மேலும், இப்பொழுது அது இறுதியான உச்சகட்டத்தை பளீரென அளிக்க ஆயத்தமாயுள்ளது என்று நான் விசுவாசிக்கிறேன்; அவ்வாறு ஆகும்பொழுது, சபையை மகிமையில் எடுத்துக் கொள்வதற்கான விசுவாசத்தை அது கொண்டு வரும். அவள் தானே இந்த செய்திகளில் தங்கியிருக்கிறாள். நாம் உண்மையாகவே கடைசி காலத்தில் இருக்கிறோம். அவைகள் யாவையும் குறித்து நாம் பேசியிருக்கிறோம், ஆனால் அக்காரியமானது இப்போது நம் மேல் அசைந்து வந்துள்ளது. இங்கே ஒருவர் இருக்கிறார், ஆம் ஐயா, அவருக்கு செவி கொடுங்கள். அது சரிதான்.


முற்றிலுமானவர், டிசம்பர் 30, 1962, பத்தி எண் 207-212

No comments:

Post a Comment