நான் பதினெட்டு வயது வாலிபனாக இருக்கையில் கர்த்தரை விட்டு
ஓடிக் கொண்டிருந்தபோது, ஒரு குறிப்பிட்ட நாளை நான் நினைவு கூருகிறேன். நான் மேற்கு
பகுதிக்கு சென்றேன். என் தந்தை அங்கு குதிரைகள் சவாரி செய்து ஜீவனம் நடத்துகிறவராயிருந்தார்.
நான் அங்கே சென்று குதிரைகளைப் பழக்குவிக்கிற வேலையை செய்ய விரும்பினேன். அப்பொழுது,
என் இருதயத்தில் ஏதோ ஒன்றுக்காக நான் பசியாயிருந்தேன். ஓ, நான் அதை உங்களுக்கு சொல்லுவேன்.
நான் பாப்டிஸ்ட் சபை பிரசங்கியாரிடம் சென்ற போது, அவர்
என்னிடம், ‘நீ எழுந்து நின்று, ‘இயேசு தேவனுடைய குமாரன்’ என்று மட்டும் சொன்னால் போதும்,
நாங்கள் உன்னுடைய பெயரை சபைப் பதிவேட்டில் பதித்து விடுவோம்’ என்று கூறினார். அதுவும் என்னைத் திருப்தி செய்யவில்லை.
நான் சென்ற இடமெல்லாம் ஒவ்வொருவரும்... நான் ஏழு நாள்
ஓய்வு சபையைச் சேர்ந்த சகோதரன் பார்கர் என்ற அருமையான நேசமுள்ள
சகோதரர் ஒருவரிடம் சென்றேன். அவரும் என்னிடம், ‘பில்லி, நீ வந்து, கர்த்தருடைய ஓய்வை ஏற்றுக்கொள்’ என்று கூறினார். (நான் ஏற்கனவே அந்த ஓய்வை என் உள்ளத்தில் பெற்றிருக்கிறேன்).
ஆனால் அவர், ‘ஓய்வு நாளை ஏற்றுக்கொள்’ என்று தான் கூறினார். அப்பொழுது, நான், ‘ஓ, இதுவும் நான் தேடுவதை கொடுப்பதாக இல்லையே’ என்று எனக்குள் எண்ணினேன்.
நான் மேற்கில் சென்றேன். அன்றொரு இரவில் நாங்கள் மந்தையை
மேய்த்து அதை மடக்கினோம். குதிரையை விட்டு சேணத்தை எடுத்துவிட்டு, அங்கிருக்கும் கேம்ப்
பையையும் எடுத்து வைத்துவிட்டு, படுத்துறங்கப் போகையில், அச்சேணத்தையை தலைக்கு தலையணையைப்
போல் உபயோகிப்பதுண்டு. அவ்வாறு நான் அன்றிரவில் மிக வயதான பைன் மரங்களின் அடியில் படுத்துக்
கொண்டிருந்தேன். நான் பகல் நேர கண்காணிப்பு வேலையைச் செய்தேன். ஆகவே இரவு நேர வேலையைச்
செய்யும் பையன்கள் மந்தையை உள்ளே கொண்டு வந்தார்கள். அவர்களில் டெக்ஸôûஸச் செர்ந்த ‘ஸ்லிம்’ என்றழைக்கப்படும் ஒரு வயதான மனிதர் தன்னுடைய கிட்டாரை
மீட்டி, ‘அவர் நாமத்திற்கே மகிமை’ என்ற பாடலை இசைத்தார்.
இன்னொரு நபர் ஒரு சீப்பின் மேல் ஒரு தாளை வைத்து அதை ஊதி
இசைத்தார் (சகோதரன் பிரான்ஹாம் அவர்கள், ‘அவர் நாமத்திற்கே மகிமை’ என்ற பாடலை மௌனமாக இசைக்கிறார்
– ஆசி) அவர்கள் வேறு பாடல்களையும், கௌபாய் பாடல்களையும்
பாடினார்கள். ‘மீட்பர் மரித்த குருசண்டையில்’ என்ற பாடலையும் பாடினார்கள்.
நான் புரண்டு படுத்தேன். என் தலையில் மேல் பக்கமாக கம்பளியை
எடுத்துப் போட்டுவிட்டு, பின்னால் திரும்பிப் பார்த்தேன். இரவில் காணப்பட்ட நட்சத்திரங்கள்
கீழே இறங்கி வந்து அந்த பைன் மரங்களின் உச்சியில் தொங்கிக் கொண்டிருப்பது போலவும்,
அங்கிருந்த மலைகள் மேலும் வந்திறங்கி விட்டது போலவும் காணப்பட்டது. பைன் மரங்களில்
இருந்து சதாகாலமும் மனிதரை நோக்கி அவர்கள் காதுகளில் முணுமுணுக்கும் அந்த வழக்கமான
சப்தமாகிய, ‘ஆதாமே, நீ எங்கே இருக்கிறாய்?’ என்று அவர் என்னை நோக்கி கூப்பிட்டது எனக்குக் கேட்க
முடிந்தது.
மூன்று வாரங்கள் கழித்து, நான் நகரத்திற்குள் சென்றேன்.
அந்தப் பையன்கள் யாவரும் மது அருந்தியிருந்தார்கள். நான் மட்டும் குடிக்கவில்லை. நான்
எப்படியாவது அவர்களை மோட்டார் வாகனத்தில் ஏற்றி வீட்டுக்கு கொண்டு போய் சேர்த்தாக வேண்டும்
என்ற நிலை இருந்தது. குடித்திருந்த நிலையில் அவர்களுக்கு பாதுகாப்பின்றி அபாயகரமானதாக
இருந்தது. ஏனெனில் அவர்கள் ஒருவருக்கொருவர் முன்பாத விரல்களை சுட்டுக்கொண்டார்கள்.
அவர்கள் அங்கே ஒரு நேர்க்கோடு ஒன்றைப் போட்டு, அதில் வளையாமல் கோட்டின் மேல் நேராக
யார் நடக்கிறார்களோ அவர்களுக்கு 5 டாலர் என்று பந்தயம் கட்டிக்கொண்டு நடப்பார்கள்.
அவர்களால் குடித்த நிலையில் பாத சாரிகளுக்கென போடப்பட்டிருக்கும் நடைபாதையிலேயே சரியாக
நடக்க முடியாது. இவ்வாறு அவர்கள் ஆட்டம் போட்டு, பின்பு, குடிவெறி தெளிந்து தங்கள்
பணத்தைப் பெற்றுக் கொண்டு போவார்கள்.
அவர்கள் யாவரும் குடித்து வெறித்திருந்தார்கள். நானோ தனியே
அப்புறம் போய் உட்கார்ந்தேன். இது 35 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம். நான் தனியே
போய் உட்கார்ந்தேன். அந்நாட்களில் பீனிக்ஸ் ஒரு சிறிய ஊர் தான். அவர்கள் விக்கன் பர்கிலிருந்து
வந்திருந்தார்கள். நான் அவ்வாறு உட்கார்ந்து கொண்டிருக்கையில், வாலிபமான ஒரு ஸ்பானிய
பெண்ணொருத்தி, நலுக்கி குலுக்கி கொண்டு அவ்வழியாக வந்தாள். பெரிய தொப்பி அவள் தலைக்குப்
பின்னால் தொங்கிக் கொண்டிருக்க, அவ்வழியாகக் கடந்து சென்ற அவள், தனது சிறிய கைக்குட்டை
ஒன்றை என்னருகில் நைசாகப் போட்டுவிட்டுச் சென்றாள். நான் அவளை நோக்கி, ‘ஏய், உனது கைக்குட்டையை கீழே போட்டு விட்டுச் சென்றாயே’ என்றேன். நான் அவள் சமிக்ஞையின் பேரில் ஆர்வம் காட்டவில்லை.
(அந்நாட்டில் பெண்ணொருத்தி ஒரு ஆணிடம் சல்லாபம் கொள்ள தன்னுடைய விருப்பத்தை தெரிவிக்க
இவ்விதமான ஒரு சமிக்ஞையை அவ்வாணுக்குத் தெரிவிப்பதுண்டு – மொழிபெயர்ப்பாளர்.)
கீழ்ப்பகுதியில் உள்ள தெருவில் அப்பொழுது ஒரு சப்தம் கேட்டதும்
நான் அங்கே கீழே போனேன். அங்கே முகத்தில் வைசூரி வடுக்கள் கொண்ட வயதான கௌபாய் ஒருவர்
உட்கார்ந்து தன்னுடைய கிட்டாரில், தன் கண்களில் கண்ணீர் வடிய இசைத்து, ‘அவர் நாமத்திற்கு மகிமை’ என்ற பல்லவியைப் பாடிக் கொண்டிருந்தார். அவர் அந்த மோசமான கூட்டத்திலிருந்து
இரட்சிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டவராயிருந்தார்.
அவரது கன்னத்தில் கண்ணீர் வடிய பாடிக் கொண்டிருந்தார்.
நான் அவரருகில் சென்றதும் பாடுவதை நிறுத்தி விட்டு, ‘சகோதரனே, இந்த அற்புதமான கிறிஸ்துவை நீ பெற்றுக் கொள்கிற வரையிலும், இவ்வனுபவம்
எத்தகையது என்பதை நீ அறிய மாட்டாய்’ என்று கூறினார்.
‘அவர் நாமத்திற்கு மகிமை’
நான் என்னுடைய தொப்பியை கீழே இழுத்து விட்டுக் கொண்டு
அங்கிருந்து கிளம்பிவிட்டேன். அவர் சமுகத்தை விட்டு உங்களால் ஒளித்துக்கொள்ள முடியாது.
நீங்கள் மறைந்திருக்கிற இடத்தை விட்டு வெளியே வந்து, கூப்பிடுகிற அவருக்கு முன்பாக
வந்து, உங்கள் பாவங்களை அறிக்கை செய்தாக வேண்டும். ஓ! அவர் அற்புதமானவராக இருக்கிறார்.
ஆம், அவர் அப்படித்தான் இருக்கிறார்.
சர்தை சபையின் காலம், டிசம்பர் 9, 1960, பத்தி எண்
195-205
No comments:
Post a Comment