என் கொட்டிலில் நான் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றுக்
கொண்டேன். ஏறக்குறைய ஒரு ஆண்டு கழித்து – அப்படி ஏதோ ஒன்று – நான் அந்நிய பாஷையில் பேசினேன்.
அதற்கும் ஓரிரண்டு ஆண்டு கழித்து, நான் ஒரு சபையில் பிரசங்கித்துக்
கொண்டிருந்தேன். நான் இப்படி மேடையின் மேல் நின்று கொண்டிருந்தேன்... அப்பொழுது நான்
இளைஞனாயிருந்தேன், இப்பொழுது உள்ளதைப் போல் வயதாகியும் விரைப்பாயும் இல்லை. அப்பொழுது
என்னால் சிறிது நன்றாக மேடையில் நடமாட முடியும். அக்காலத்தில் நான் பிரசங்கிக்கும்
போது அதிக உணர்ச்சி வசப்படுவதுண்டு. அங்கு நின்று கொண்டு பிரசங்கித்துக் கொண்டிருக்கையில்,
ஒரு மேசையின் மேல் குதித்தேன். அது ஒரு பாப்டிஸ்ட் சபை, மில்டவுன் பாப்டிஸ்ட் சபை.
நான் மிகவும் பலமாக பிரசங்கித்துக் கொண்டே உட்பாதைக்கு சென்றேன். நான் பிரசங்கத்தை
நிறுத்தினவுடனே, ஏதோ ஒன்று என்னை ஆட்கொண்டது. நான் சில வார்த்தைகளை - நான்கு, ஐந்து,
ஆறு வார்த்தைகளை - அந்நிய பாஷையில் பேசினேன். நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்பதை
அறிந்து கொள்வதற்கு முன், ‘களைப்படையும் தேசத்தில் கன்மலை,
புயலடிக்கும் நேரத்தில் ஒதுங்குமிடம்’ என்று நான் கூறுவதை என்னால் கேட்க முடிந்தது. பாருங்கள்?
அதன் பிறகு ஒரு நாள் நான் ரயில் பாதையின் வழியாக, ஸ்காட்ஸ்பர்குக்கு
இந்த பக்கமாக, ரோந்து வந்து கொண்டிருந்தேன். அப்பொழுது காற்று பலமாக அடித்துக் கொண்டிருந்தது.
ஓ, என்னே, ரயில் பாதையின் மேல் பனிக்கட்டி படர்ந்திருந்தது. எனக்கு நியமிக்கப்பட்ட
முப்பத்து மூன்றாயிரம் எண் நெடுஞ்சாலையில் நான் நடந்து செல்வதற்காக, நான் ரயில் பாதையைக்
கடந்து மறுபுறம் சென்றேன். அறுபத்தாறு எண் கொண்ட நெடுஞ்சாலை மற்றொரு பக்கம் சென்றது.
அது ஏறக்குறைய ரயில் பாதைக்கு இணையாக சென்றது. நான் பாதையின் வழியாக நடந்து சென்று
கொண்டிருந்த போது சடுதியதாக... நான் பாடிக் கொண்டே தனிமையாக நடந்து சென்று கொண்டிருந்தேன்.
நான் எப்பொழுதும் பாடுவது வழக்கம். நான் ஜெபிக்க செல்ல எனக்கு வெவ்வேறு இடங்கள் இருந்தன.
நான் பாடிக் கொண்டே தனிமையாக நடந்து சென்று கொண்டிருந்த போது, திடீரென்று நான் அந்நிய
பாஷையில் பேசுவதை உணர்ந்தேன், பாருங்கள், நான் என்ன செய்து கொண்டிருந்தேன் என்று எனக்கு
தெரியவேயில்லை.
கேள்விகளும் பதில்களும் (2:12), ஜனவரி 12, 1961, பத்தி
எண் 103-105
No comments:
Post a Comment