வாழ்க்கை துணையை
எவ்விதம் தெரிந்து கொள்வது?
(இந்த புத்தகம்
சகோ.வில்லியம் பிரான்ஹாம் அவர்களால் பிரசங்கிக்கப்பட்ட
அனேக செய்திகளிலிருந்து
தொகுக்கப்பட்டுள்ளது)
பிரசங்கியாய் இருப்பது, அது நமது கடமை.
நல்லது, நாம் செய்யவேண்டியது... அது மாத்திரமே. ‘ஆனால் நான் வெறெதாவதைச்
செய்யவிடுங்கள்’ என்ற பவுல்
‘அது அதற்கும் மேலானது. இப்பொழுது பணத்தை
எடுக்க எனக்கு உரிமை உண்டு, நான் தியாகம் செய்ய முடியும் என்று உங்களுக்கு காண்பிக்க
நான் கூடாரத் தொழில் செய்கிறேன். விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாயும், விவாக மஞ்சம்
அசுசிப்படாததாயும் இருப்பதாக. ஒரு மனிதன் விவாகம் செய்வது நலமாயிருக்கும். விவாகம்
செய்துகொள்ள எனக்கு உரிமையுண்டு. இப்பொழுது நான்-நான் விவாகம் செய்து கொள்ள முடியும்,
விவாகம் செய்துகொள்ள சட்டபூர்வமாக எனக்கு உரிமையுண்டு. ஆனால் நான் விவாகம் செய்து கொள்ளமாட்டேன்.
கர்த்தருக்கு என்று வெறொரு தியாகத்தை செய்ய நான் விரும்புகிறேன்’ என்றான். பாருங்கள்.
ஆதியாகமத்தின் பேரில் கேள்விகளும் பதில்களும்
53-0729
ஸ்திரீ மனிதனின் ஒரு பாகம்-ஒரு உபபொருள் (ஸ்திரீ
மூல சிருஷ்டிப்பில் இடம்பெறவில்லை. தேவன் சிருஷ்டிப்பதை நிறுத்தி எத்தனையோ ஆண்டுகள்,
ஆண்டுகள், ஆண்டுகள், சென்றபின்பு, மனிதனின் விலாவெலும்பிலிருந்து ஸ்திரீயை உண்டாக்கினார்.)
ஆதாம் எல்லா சிருஷ்டிகளுக்கும் பெயரிட்டான். ஆனால் அவனுக்குத் துணை யாருமில்லை. எனவே
தேவன் அவனுக்குத் துணையை உண்டாக்கினார். அவர் அவனுடைய விலாவிலிருந்து விலாவெலும்பை
எடுத்து, அந்த துவாரத்தை மூடி, அவனுக்கு ஒரு துணையை உண்டாக்கினார். மனிதன் தன்னுடைய
ஆவியில், ஆணும் பெண்ணுமாக இருந்தான்.
ஸ்திரீ மனிதனின் ஒரு பாகமே. ஒரு மனிதன்
தனக்கென ஒரு மனைவியைத் தெரிந்துக்கொள்ளும்போது, அவள் சரியாக அவனுடைய மனைவியாக – தேவனால் கொடுக்கப்பட்ட மனைவியாக “ இருப்பாளானால், அவள் அவனுடைய பாகமாக இருப்பாள்.
அதன் காரணமாகத்தான் குடும்பங்களில் இன்று
அநேக சச்சரவுகள் உண்டாகின்றன. ஏùனினில் நீ வெளியே
செல்லும் போது, அழகான பழுப்பு நிறக்கண்கள் அல்லது நீலநிறக் கண்களையுடைய, அழகான உடலுருவம்
கொண்ட பெண்ணைக் கண்டு, அவள் அழகில் மயங்குகிறாய். அவள் முதலாம் குழந்தையைப் பெற்றெடுத்தவுடன்,
அவளுடைய பற்கள் வெளியே வந்துவிடுகின்றன. அவளுடைய தோல் சுருங்கி வயதாகி விடுகிறது. அப்பொழுது
அவளை உதைத்து வெளியே அனுப்பிவிடப் பார்க்கிறாய். பெண்களாகிய உங்களில் சிலர் அழகிய சுருண்ட
தலைமயிர் கொண்ட பையன் ஒருவனை சந்திக்கிறீர்கள். அவனுடைய தாயின் எண்ணெய் குப்பியிலுள்ள
பாதி எண்ணெயை அவன் தலையில் ஊற்றி தலைவாரிக்கொண்டிருக்கிறான். ஆனால் தலைமயிர் உதிர்ந்து
போக வழியுண்டு. அதை என் அனுபவத்தில் அறிந்திருக்கிறேன். என்ன நேரிடுகிறது? அது என்ன?
நீங்கள் தலை மயிரைக்கண்டு மயங்கி விடுகிறீர்கள்.
நீங்கள் முதலில் ஜெபம் செய்யவேண்டும்.
ஏனெனில் ஸ்தரீ மனிதனின் ஒரு பாகமாக இருக்கிறாள். ஒரு ஸ்தீரியை நீங்கள் கட்டித் தழுவி
அவளை உங்கள் மனைவியாக ஏற்றுக்கொண்டால், அவள் உங்கள் மேல் ஒரு முத்திரையை போட்டு விடுகிறாள்....(நீங்கள்
புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இப்படி கூறுகிறேன்)... அந்த மார்பில் கட்டித் தழுவப்படும்
வெறெந்த பெண்ணும் அந்த முத்திரையில் பொருத்தமாட்டாள்! அதற்கு தேவன் உங்களை உத்திரவாதமுள்ளவர்களாகச்
செய்வார், அதை நீங்கள் நினைவில் கொள்ளுங்கள்.
சர்ப்பத்தின்
வித்து 58-0928
எந்த ஒரு விசுவாசியும் ஒரு அவிசுவாசியை
எக்காரணத்தைக் கொண்டும் விவாகம் செய்து கொள்ளக்கூடாது. எப்பொழுதுமே விசுவாசியை மணந்து
கொள்ளவேண்டும்.
ஆனால் ஆகாபோ இப்பொல்லாங்கான செயலைப்
புரிந்தான். யேசபேல் ஒரு அழகான பெண் என்பதில் ஐயமில்லை. அவளுடைய அழகைக்கண்டு அவன் மயங்கினானேயன்றி,
அவளுடைய உண்மையான தன்மையைக் கண்டல்ல. அது... இந்நாள் வரை அநேகர் அத்தவறை செய்து வந்துள்ளனர்.
அவள் தேசத்தில் ஜனங்களிடையே விக்கிரகாராதனையைக்
கொணர்ந்தாள். ஜனங்கள், ஆசாரியர்கள், போதகர்கள் இவ்வனைவருமே மக்களால் பொதுவாக விரும்பி
உரிமை கோரப்படும் (டர்ல்ன்ப்ஹழ் க்ங்ம்ஹய்க்) இந்த செயலுக்கு இரையாயினர்.
தேவனை
குறித்து நிச்சயமுடையவர்களாயிருங்கள் 59-0125
நேற்று காலை நாங்கள் படுக்கையை விட்டு
எழுந்திருக்க தாமதமாயிற்று. பிள்ளைகளுக்கும் நேற்று பள்ளிக்கூடம் இல்லை. நாங்கள் வெவ்வேறு
காரியங்களைக் குறித்து பேசிக் கொண்டிருந்தோம். அவைகளில் ஒன்று... ‘வெறுப்பு என்பது என்ன?’
நான் ‘வெறுப்பு என்பதற்கு ஒரு தொடக்கம் உண்டு, எனவே அதற்கு ஒரு
முடிவு இருக்க வேண்டும். ஆனால் அன்புக்கோ தொடக்கம் இல்லை, எனவே அதற்கு முடிவும் இல்லை. வெறுப்பு காலாகாலங்களில்
இருக்க வகையுண்டு. ஆனால் அன்பு நித்தியமானது. வெறுப்பு தொடங்கி முடிவு பெறுகிறது. அன்புக்கு
தொடக்கம் இல்லாததால் அது முடிவு பெறுவதில்லை’ என்றேன். பாருங்கள்?
அது நித்தியமானது.
ஒரு ஆண் அழகுக்காக ஒரு பெண்ணை மணக்கும்போது,
அதற்கு ஒரு முடிவு இருக்கும். ஆனால் அவன் தன்னை அறியாமலேயே ஒருத்தியிடம் அன்புக் கொள்ளும்
போது, அதே போன்று அவளும், அவனுடைய தோற்றம் எப்படியிருந்தாலும் அவனிடம் அன்பு கொள்ளும்போது,
அவன் அவள் மீது அன்பு கொள்கிறான், அவளும் அவன் மீது அன்பு கொள்கிறாள். அது மகிமையில்
நித்திய துணைவன் அல்லது துணைவியாக இருக்கும்...
மரணமோ அல்லது வெறெதுவும் அவர்களைப் பிரிக்க முடியாது. ஏனெனில் அவர்கள் நித்தியத்திலிருந்து
வந்தவர்கள். அவர்கள் காலம் என்பதற்குள் காலடி வைத்து மறுபடியும் நித்தியத்திற்கே திரும்பிச்
சென்று விடுகின்றனர். நித்தியம் என்பது காலம் என்னும் சரீரத்தில் கீழே விழுந்து, மறுபடியும்
மேலே நித்தியத்துக்கு சென்றுவிடுகிறது. அது ஒருக்காலும் அழியாது.
ஒரு அழகுள்ள ஸ்திரீ, அந்த அழகு நிச்சயமாக குறைந்து
விடும். நீங்கள் அதற்கு சில ஆண்டுகள் அளிக்கலாம். ஒருக்கால் இன்றைக்கு அவள் அரை நிர்வாணியாய்
தெருவில் உடலை நெளித்து நடந்து சென்று நாட்டில் உள்ள எல்லா மதுக்கடைகள் அனுப்புவதைக்
காட்டிலும் அதிக ஆத்துமாக்களை நரகத்துக்கு அனுப்பக்கூடும். அவள் அப்படி உடலை நெளித்து
நடக்கும்போது தான் யாரோ என்னும் உணர்வு அவளுக்கு இருக்கக்கூடும். ‘அவர்கள் கழுத்தை நெறித்து நடந்து, ஒய்யாரமாய் நடப்பார்கள்’ என்று வேதம் கூறுகிறது. (ஏசா.3:16) வேத வசனங்களை நிறைவேற்றிக்கொண்டு,
அதே சமயத்தில் அதை அறியாதிருக்கிறார்கள். அவர்கள் சீர்கேடான உடைகளை அணிந்து முற்றத்தில் நின்று கொண்டிருப்பார்கள். மனிதர் அவளை உற்றுப்
பார்த்துக் கொண்டிருப்பர். அதை அவர்கள் அறியாதிருப்பர். அவள் தன் புருஷனுக்கோ அல்லது
தன் சிநேகித பையனுக்கு மிகவும் உத்தமியாக“ கற்புள்ளவளாக இருந்திருக்கலாம். ஆனால் நியாயத் தீர்ப்பின்
நாளில், நூற்றுக்கணக்கான ஆண்களுடன் அவள் விபச்சாரம் செய்ததற்கு பதில் சொல்லியாக வேண்டும். அவர்கள் மேல் ஒரு ஆவி தங்கியுள்ளதை
அவர்கள் அறியாமலிருக்கிறார்கள். ‘நிர்வாணியும்,
குருடாயும் இருப்பதை அறியாமலிருக்கிறாய்’ என்று வேதம்
கூறுகிறது. பரிதாபமான பாகம் என்னவெனில், அதை அறியாமலிருப்பதே.
தேவன் அந்த பெண்ணுக்கு அளித்த அழகிய
உருவம் கொண்ட அந்த உடல், அடுத்த ஞாயிறுக்குள் அழுகிப் போக வகையுண்டு என்று உங்களுக்கு
தெரியுமா? உயரமான, கறுத்த அழகிய தேகக்கட்டு கொண்ட மனிதன் ஞாயிறுக்குள் குப்பை கூளமாக
ஆக வகையுண்டு. இவையனைத்தும் அழிந்து போகும்.
ஆனால்
உள்ளே இருக்கின்ற அது, தேவன்“அன்பு, நித்திய
காலமாய் வாழ்கின்றது. எனவே உள்ளேயுள்ளதன் பேரில் கவனம் செலுத்துங்கள். அந்த நோக்கத்தின்
மேல் உங்கள் கண்களை வையுங்கள்.
இனத்தான்
மீட்பர் 60-1002
வீட்டு வாழ்க்கையை நாம் எடுத்துக் கொள்வோம்.
அதுவும் நிச்சயமற்றதே. நமது ஸ்திரீகளை நல்லொழுக்கத்துக்கு என்ன நேர்ந்ததென்று எனக்குத்
தெரியவில்லை. விவாகரத்து பெருகி வருகின்றது.
அது மிகவும் பயங்கரமானது. விவாகரத்து நீதிமன்றங்களில் ஜனநெருக்கம் அதிகமுள்ளது. பையன்களும்
பெண்களும் மணம் புரிந்து ஒன்றாக வாழ்ந்து இரண்டு மூன்று குழந்தைகளைப் பெறுகின்றனர்.
அதன் பிறகு அவர்கள் பிரிந்து போய் வேறொருவனை அல்லது வேறொருத்தியை மணம் புரிகின்றனர்,
மணம் புரிகின்றனர், மணம் புரிகின்றனர். அவர்களுடைய
குடும்ப நிலை?
அன்றொரு நாள் நான் மிகவும் எளிய ஒருவர்
வீட்டுக்கு சென்றிருந்தேன். அந்த மனிதன், ‘நான் வருமானத்துக்கு
மிஞ்சின செலவு ஏற்படாமல் எப்படி சமாளிக்கப் போகிறேனோ’ என்றார்.
நான் சுற்றும் முற்றும் பார்த்தேன்.
அவர் பாடுபட்டு வேலை செய்தார். அவருக்கு மிகவும் உத்தமமான ஒரு மனைவி இருந்தாள். தரையில்
அழுக்கு படிந்த முகத்துடன் நான்கு அல்லது ஐந்து பிள்ளைகள் உட்கார்ந்து கொண்டிருந்தனர்.
நான், ‘நீர் ஒரு கோடீஸ்வரன்’ என்றேன்.
அவர், ‘ஹு! நல்லது, சகோ. பிரான்ஹாம். உமது சொற்களை நான் மறுத்து
கூறமாட்டேன். சகோதரனே, என்னிடம் ஒரு பைசா கூட இல்லை’ என்றார்.
நான் அவரிடம், ‘ஆனால் பணம் வாங்க முடியாத ஒன்றை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள்.
இங்குள்ள உங்கள் மனைவிக்கு உடுக்க ஒருக்கால் இரண்டு உடைகள் கூட இல்லாமல் இருக்கலாம்.
அதுவும் வேறு யாரோ அவளுக்கு கொடுத்தது. ஏனெனில் உமக்கு எப்பொழுதாவது ஒரு நாளைக்கு மாத்திரம்
வேலை கிடைக்கிறது. ஆனால் அவளைப் பாருங்கள், அவள் எவ்வளவாக உமக்கு உத்தமமுள்ளவளாய் இருக்கிறாள்
என்று. இன்றைக்கு வீட்டிற்கு அப்படிப்பட்ட ஒரு மனைவியிடம் வருவதற்கு தங்கள் கடைசி காசையும்
செலவழிக்க எத்தனையோ கோடீஸ்வரர்கள் ஆயத்தமாயிருக்கிறார்கள். அவனுடைய மனைவி ஒரு கூட்டம்
மனிதருடன் மது அருந்தும் ஸ்தலத்தில் மது அருந்தி, கொஞ்சி விளையாடி, ஆடிப்பாடி, புகைப்பிடித்து,
இரவில் அவர்களுடன் காரில் சென்று கொண்டிருக்கிறாள். இருப்பினும் அவன் அவளை நேசிக்கிறான். அவன் என்ன பெற்றிருக்கிறான் என்பதைப்
பாருங்கள். அவனுடைய வாழ்க்கை முழுவதுமே அவளுடன் இணைக்கப்பட்டிருக்கும்போது, அவள் எப்படி
நடந்து கொள்கிறாள் என்பதைப் பாருங்கள்’ என்றேன்.
அவ்வாறே மனிதரும் ஸ்திரீகளும் செய்கின்றனர்.
பாருங்கள், அவர்கள் இருவருக்குள்ளே இவ்விஷயத்தில் எவ்வித வித்தியாசமும் இல்லை. எல்லாமே
பாவத்தின் தொகுப்பு என்னும் நிலைக்கு இப்பொழுது வந்து விட்டது. வீட்டில் ஒரு பெண் தன்
பிள்ளைகளைப் பேணி வளர்த்து, அதே சமயத்தில்
அவளுடைய கணவன் குடித்து வெறித்து, மற்ற பெண்களுடன் சல்லாபம் செய்தால், அவளிடம்
கோடிக்கணக்கான டாலர்கள் இருக்குமானால், அவளுடைய கணவனை சீர்படுத்த அவள் என்ன செய்வாள்?
அதற்கு ஒரே வழி மாத்திரமேயுண்டு. இயேசு கிறிஸ்துவே அதற்கு பதில். வேறெதுவும் நன்மை செய்யாது. அது முடிவு காலத்தில் உள்ளது. அது
கிறிஸ்து, கிறிஸ்து மாத்திரமே.
விளங்காத சத்தம் 60-1218
அது காதல் விவகாரத்தைப் போன்றது. நீ
ஒரு பெண்ணுடன் கடமை கட்டாயத்துக்காக செல்வாயானால் அல்லது வாலிபப் பெண்ணாகிய நீ, ‘என் அம்மா சொல்வதால் இந்த பையனுடன் செல்கின்றேன். எனக்கு
அவனைப் பிடிக்கவில்லை’ என்பாயானால்,
அவன் வந்து உன்னைப் பார்ப்பதில் உனக்கு ஒன்றும்
கிடைக்காது. பையன் பெண்ணுடன் கடமைக்காக சென்றாலும், எல்லாம் ஒன்று தான்! நீ அவளுடன்
செல்லும் போது, அவள் உன்னை சலிப்படையச் செய்கிறாள். உன் தாய் நீ அவளுடன் செல்வதை விரும்புகிறாள்.
ஏனெனில் அந்த பெண் உன் தாய்க்குப் பிடித்தமானவள். அது உன்னை சலிப்படையச் செய்கிறது.
காதல் விவகாரம் எதுவும் உங்களிடையே இல்லை, நீ கவலைப்படுவதில்லை. உன் வழியை நீ மாற்றிக்
கொள்ள விரும்புவதில்லை. அவளைச் சென்று காண நீ விரும்புவதில்லை... அது ஒரு பயங்கரமான
காரியம். அவன் உன்னை காண வரும் போது, அவன் சீக்கிரம் சென்று விட்டால் நலமாயிருக்கும்
என்று நினைப்பாயானால்!
‘அவர் ஏன் நீண்ட
நேரம் பிரசங்கம் செய்கிறார்? இதெல்லாம் என்ன?’ என்று நீ கூறுவதும்
அவ்வாறேயுள்ளது. நீ அன்பு கொள்ளாமல் இருக்கிறாய்.
ஆனால் இன்று காலை பரிசுத்த ஆவியானவர்
உனக்கு எச்சரிக்கை விடுத்தது போல், நீ ஒவ்வொரு வார்த்தையையும் இறுகப்பற்றிக் கொண்டால்!
ஒவ்வொரு வார்த்தையும் இறுகப்பற்றி கொள்ளுதல். அதைக் குறித்து தான் ஒருக்கால் அவர் உங்களுக்கு
உரைத்திருப்பார். இறுகப் பற்றிக் கொள்ளுதல்! அது நித்திய ஜீவன் – தேவனுடைய வார்த்தை ஒவ்வொன்றும் சூழ்நிலை என்னாவாயிருப்பிலும்
சபைக்கு செல்லுதல் மகிழ்ச்சியூட்டுகின்றது. அது வெயிலானாலும், குளிரானாலும், அலட்சியமானாலும்,
ஜனங்கள் வீண் சந்தடி செய்தாலும், உறுமினாலும்“ அவர்கள் என்ன
செய்தாலும் “ தேவனுடைய வார்த்தையைக்
கேட்பது மகிழ்ச்சியளிக்கிறது என்றால், நீ உண்மையாகவே கிறிஸ்துவின் மேல் அன்பு கொண்டிருக்கிறாய். நீ சபைக்குச்
செல்ல பிரியப்படுவாய்.
‘அன்பே, ஞாயிறு
காலை வந்து விட்டது. நாம் பிள்ளைகளுக்கு முகம் கழுவி, அங்கு செல்ல வேண்டும். அது சலிப்பாயுள்ளது’ என்பாயானால், நீ அவர்பால் அன்பு கொள்ளவில்லை.
நீ, உண்மையாகவே அவரில் அன்பாயிருந்தால்,
ஞாயிறு காலை வரும் வரை உன்னால் காத்திருக்க முடியாது. அவர்களுடன் ஒன்று கூட நீ எப்படியாவது
சென்று விடுவாய்... தேவனுடைய ஜனங்கள் உன்னை சலிப்படையைச் செய்வதில்லை. அவர்கள் உன்
சகோதரரும், சகோதரிகளுமாயுள்ளனர். ‘சோர்கமில் கிடைக்கும்
வெல்லப்பாகு குளிர் மிகுந்த காலத்தில் கெட்டியாவது போல் நீங்கள் ஆகிவிடுகின்றீர்கள்’ என்று நான் கூறுவதுண்டு. அதை ஊற்ற முடியாது, அது ஒன்றோடொன்று
ஒட்டிக் கொள்ளும். அது இறுகி விடும். இந்த
உதாரணம் அவ்வளவு நல்லதல்ல. எனினும் நான் கூற விரும்புவதை இந்த உதாரணத்தின் மூலம் உங்களுக்குத்
தெரிவிக்கிறேன். பாருங்கள், நீங்கள் ஒருவரோடொருவர் ஒட்டிக் கொண்டிருக்கின்றீர்கள்.
குளிர் அதிகமாகுந்தோறும், அது இன்னும் இறுக்கமாக ஒட்டிக் கொள்கின்றது. அப்படித் தான்
நாம் இருக்க வேண்டும்.
என்றென்றும்
பிரசன்னமாயுள்ள கன்மலையின் தண்ணீர் 61-0723
இக்கூட்டத்தில் இன்று காலையில் பதினாறு
வயதுள்ள நம்முடைய பெண் பிள்ளைகள் வந்திருந்தார்கள். அவர்களைப் பார்க்க எனக்கு மிகவும்
வியப்பாயிருந்தது. அவர்கள் சபைக்கு வந்திருக்கிறார்கள். அந்த வயதுள்ள இளம்பெண்களைப்
பற்றி உங்களுக்கு தெரியும். அவர்கள் அழகாக இருக்க வேண்டுமென விரும்புகிறார்கள். அவர்கள்
தலைமுடியெல்லாம் தலையின் மேல் சுருள் சுருளாக சுருட்டி விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
நான் பிரசங்கிக்கையில் அவர்களைக் கவனித்தேன். உலர்ந்து போன சுருள் முடி முகத்தில் வந்து
விழ அதை அவர்கள் முகத்திலிருந்து பின்னால் தள்ளி விட்டுகொண்டேயிருந்தார்கள்.
சகோதரி டௌனிங்கின் மகளை நான் கவனித்தேன்.
சகோ.காலின்ஸ்“ன் மகள்... அவள்
பெயர் என்ன? பெட்டி“ அழகுள்ள நமது
குழந்தைகளை நான் கண்டபோது நான் எனக்குள்ளேயே நகைத்துக்கொண்டேன். அவர்கள் சரியான வயதை
எட்டியிருக்கிறார்கள்.
பிரியமான பிள்ளைகளே, எப்படியினும் நீங்கள்
என் பார்வைக்கு அழகாகவே இருக்கிறீர்கள். உங்கள் உள்ளங்கள் ஆசீர்வதிக்கப்படுவதாக. அந்த
ஆவி வரும்போது, கூட்டங்களில் அதற்குரிய லட்சணத்தோட அமர்ந்திருந்து, கவிசேஷத்திற்கு
செவி கொடுக்கச் செய்யும், அப்படிப்பட்ட நடத்தை தான் ஒரு பெண்ணை அழகுள்ளவளாக ஆக்குகிறது.
திருமணம் செய்துகொள்ள வேணடுமென இருக்கும் உரிய
வயதை அடைந்துள்ள எந்தவொரு வாலிபனும் அதே விதமாகத்தான்
சிந்திக்கிறான். (நன்றி ஐயா, அது நல்லதாயிருக்கிறது?) சிலர் நான் கூறுவதை ஒத்துக்கொள்வார்கள்.
அது சரிதான், அது சத்தியமாயிருக்கிறது என்று நான் விசுவாசிக்கிறேன்.
தானியேலை காபிரியேல் சந்தித்ததன் ஆறு
விதமான நோக்கங்கள் 61“0730
யோசேப்பு, தான் உயர்த்தப்படுவதற்கு முன்பாக,
அவன் சோதனைக்குள்ளானான். அவன் நிரபராதியாயிருந்தும் சிறையில் அடைக்கப்பட்டான் என்பதை
நினைவு பாருங்கள்.
எகிப்திய தேசத்தின் அதிபதியான போத்திபார்
என்பவன் எங்கோ வெளியூருக்குப் போய்விட்டான். அவனுக்கு ஒரு அழகிய மனைவி இருந்தாள். அவனது
மனைவி யோசேப்பை வீட்டுக்குள் வந்து பார்க்கத்தக்கதான
ஒரு வேளையை அவனுக்குக் கொடுத்தாள். அந்த நேரத்தில் பார்த்து, யோசேப்பு தவறான காரியத்தை
செய்யும்படி செய்ய முயற்சித்தாள். அவனோ தேவனுக்கு உண்மையாயிருந்தான். நான் உங்களுக்கு
கூறுகிறேன், அவர்கள் எப்பொழுதும்...
ஸ்திரீகளே, நான் எப்பொழுதும் உங்களைக்
குறித்து சப்தமிட்டுக் கடிந்து கொள்வதுண்டு. இப்பொழுது இன்னும் ஒரு நிமிட நேரத்தில்
உங்கள் சார்பாகப் பேசப்போகிறேன். ஸ்திரீயானவள் எப்பொழுதும் ஒரு பெலவீன பாத்திரமாய்
இருக்கிறாள். ஒரு கெட்ட ஸ்திரீ இருக்காமல் இருக்கும்போது, அப்போது ஒரு கெட்ட மனிதனும்
இருக்கமாட்டான் என்பதை நான் அறிவேன். ஆனால் அதை அறிந்திருக்கிற மனிதனே, நீ ஒரு தேவனுடைய
குமாரன் என்பதை அறிந்திருக்கிறாய், அப்படியிருந்தும், ஸ்திரீயின் பெலவீனத்தை சாதகமான
எடுத்துக்கொண்டால் அதற்காக நீ தலை குனிய வேண்டும். அவள் என்ன செய்கிறாள் என்பது காரியமல்ல,
அவள் ஒரு பெலவீன பாண்டம், நீ அதை அறிவாய். ஸ்திரீக்குரிய இலட்சணத்தோடு அவள் நடந்துகொள்ளாவிடில்
அவள் கையைப் பிடித்து அவளை சகோதரியாகப் பாவித்து, அவளோடு பேசு. நீ ஒரு தேவகுமாரனாயிருக்கிறாய்.
அவர்களுக்கு நீ பொல்லாங்கான காரியங்களைக் செய்ய வேண்டாம். யோசேப்பை பாருங்கள்; அவன்
உனக்கு ஒரு மாதிரியாக இருக்கிறான்.
அத்தேசத்திலேயே மிகவும் உயர்ந்த ஸ்தானத்தில் இருந்த அந்த கனம் பொருந்திய ஸ்திரீயாகிய போத்திபாரின்
அவ்வழகிய மனைவியானவள், அவனை கெஞ்சினாள், அவனைத் தூண்டினாள், அவனோ விலகிபோனான். அவள்
அவனைப் பிடித்திழுத்து தன்னோடு தழுவிக் கொள்ளும்படி செய்ய முயற்சித்தாள்; அவனோ அவளிடத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டான். அவள் பிடியிலிருந்து வலுவாக
அவன் தன்னை இழுத்துக்கொண்டபோது, அவனது மேலாடை கூட அவனை நழுவி விடும் அளவுக்கு
ஆகி விட்டது; இப்படியாக அவன் அவûü விட்டு விலகி ஓடிப்போனான். ஆம் ஐயா! அவள் கணவன் வந்தபோது, அவனிடம், அவன் அவளை கெடுக்க வந்ததாகவும்,
தன்னுடைய மேலாடையைக் கூட தன்னிடத்தில் விட்டு விட்டு ஓடிப்போனான் என்றும் அவர்கள் பொய்
கூறினார்கள். அதனால் அவன் சிறைசாலைக்கு போகும்படி நேர்ந்தது. ஆனால் அவர்கள் அவனை எங்கு
போட்டிருந்த போதிலும் தேவன் அவனோடு அச்சிறைச்சாலையில் இருந்தார். அவன் அந்த செழிப்பின் குமாரனுக்கு முன்னடையாளமாயிருந்தான்.
தானியேலை காபிரியேல் சந்தித்ததன் ஆறு
விதமான நோக்கங்கள் 61-0730
அது மாத்திரமல்ல, கணவனுக்கும் மனைவிக்குமிடையே
இருந்த அந்த ஒன்றாயிருந்தால் முடிவடைந்தது. கணவனுக்கும், மனைவிக்கும் தேவனுக்குமிடையே
அந்த இணைப்பு இல்லாமல் போனால் எந்த ஒரு மணவாழ்க்கையும் அது இருக்க வேண்டிய விதத்தில் இருக்க முடியாது என்பது என் கருத்து. அது உண்மை.
அந்த இணைப்பு இல்லாமல் போனால் அவர்கள் உலகில் பிள்ளைகளைப் பெற்றெடுத்து அவர்களை முறை தவறினவர்களாக்கி, அவர்களுக்கு சிகரெட் விஸ்கி
போன்றவைகளைக் கொடுத்து, அவர்களுக்கு முன்னாள் சீட்டு விளையாடி மது அருந்துவார்கள்.
அவர்கள் தங்கள் விவாக பொருத்தனைக்கு எவ்வளவு உண்மையாயிருந்த போதிலும், அது உடலுறவு
சம்பந்தமானது. அது மாம்சம். ஆனால் அங்கு ஒரு ஆவி உள்ளது. பாவியாகிய அப்பாவின் அம்மாவின்
ஆவி. அவர்கள் எவ்வளவு தான் தங்கள் பிள்ளைகளுக்கு உண்மையாயிருந்த போதிலும், அந்த இணைப்பு
தவறாகவே இருக்கும்.
நீங்கள், ‘தங்கள் பிள்ளைகளுக்கு அதை கற்றுக் கொடுக்காத மனிதரையும்
ஸ்திரீகளையும் நான் அறிவேன். அவர்கள் கிறிஸ்தவர்கள் அல்ல’ எனலாம். அவர்கள் பிள்ளைகளை கிறிஸ்துவினிடம் நடத்தாததே
அவர்கள் செய்யும் பெரியத் தவறு “ கிறிஸ்துவினிடம்
நடத்தாதது, பாருங்கள். அது இல்லாமல் உங்களால் சரியான இணைப்பை பெற முடியாது. ஐக்கியம் முறிந்து விடுகிறது.
ஒன்றாயிருத்தல்
62-0211
14. என் மனைவி எனக்கு மிகவும் அருமையானவள்,
பிரான்ஹாம் குடும்பத்துக்கு எதாகிலும் நன்மதிப்பு கொடுக்கப்பட வேண்டுமானால், அது அவளுக்கே
சேர வேண்டும். அவள் தான் எனக்கும் பொது ஜனத்துக்கும் இடையே இருந்தவள். நன்மையாக செய்யப்பட்ட
அனைத்தும் அவளே செய்ததாக கருதப்படவேண்டும்.
15. இங்குள்ள ஒவ்வொரு இளைஞனும் மணம் புரியும் போது, நானும் என் மனைவியும் ஒருமித்து
கடந்த இருபத்திரண்டு ஆண்டுகளாக மகிழ்ச்சியான மணவாழ்க்கையை நடத்தி வருவது போன்று, அவனுக்கும்
ஒரு நல்ல மனைவி கிடைத்து இருவரும் சந்தோஷமாயிருப்பார்களென்று நம்புகிறேன்.
17. ‘மனைவியைக் கண்டடைகிறவன்
நன்மையானதைக் கண்டடைகிறான்’ என்று சாலொமோன்
கூறியுள்ளான்.(நீதி 18:22) ‘குணசாலியான ஸ்திரீ
தன் புருஷனுக்கு கிரீடமாயிருக்கிறாள். அநீதியுள்ளவளோ அவனுடைய இரத்தத்தில் தண்ணீராக
இருக்கிறாள்.’ அவனுடைய இரத்த
ஓட்டமே அவனுடைய ஜீவன். எனவே அநீதியுள்ளவள் அவன் பெற்றுக்கொள்ளக்கூடிய மோசமான ஒன்று.
ஆனால் நீதியுள்ளவளே, இரட்சிப்புக்கு அடுத்தபடியாக
அவன் பெறக்கூடிய மிகவும் நன்மையான ஒன்று. தேவன் மனிதனுக்கு மனைவியைவிட
நன்மையான ஒன்றைக் கொடுக்க முடிந்திருந்தால் கொடுத்திருப்பார். ஏனெனில் தேவன் தமது பிள்ளைகளுக்கு நன்மையானவைகளையே
அருளுகிறார். அவர் அவனுக்கு மனைவியைத் தந்திருக்கிறார்.
அதற்காக நான் நன்றியுள்ளவனாயிருக்கிறேன்.
யெகோவா யீரே-3, 62-0707
நான் இப்பொழுது கூறப்போகும் தோரணையை
நீங்கள் மன்னிக்க வேண்டும். ஒரு சமயம் நான் என் மனைவியைப் பார்த்து, (நாங்கள் இருவரும்
வயது சென்றவர்களாகி விட்டோம்) “நீ எப்பொழுதும்
என்னை நேசிப்பது போல் இப்பொழுதும் நேசிக்கிறாயா?’ என்று கேட்டேன்.
அதற்கு
அவள், “ஆம், நிச்சயமாக நான் அவ்விதமே நேசிக்கிறேன்’ என்றாள்.
அப்பொழுது நான் அவளிடம் “உன்னை எனக்குள்ளாக இழுத்துக்கொண்டு, நாம் இருவரும் உண்மையாகவே
ஒருவராக இருக்குமளவுக்கு நான் உன்னை அவ்வளவாய் நேசிக்கிறேன் என்பதை அறிந்துகொள்’ என்று கூறினேன்.
இத்தகைய அன்பை நூறு கோடியால் பெருக்கினால்
எவ்விதமோ அவ்விதம் கிறிஸ்துவினிடத்தில் நேசத்தால் சிறைப்பட்ட ஒரு விசுவாசி, அவ்வளவாய்
அவரிடத்தில் அன்பு கூர்ந்து, அவருக்குள் செல்ல விரும்புவதை நீங்கள் காணலாம்; ஏனெனில்
அது ஒரு நேசமாயிருக்கிறது; இங்கு இந்த அழிந்து போகக்கூடிய சரீரத்தை உடையவர்களாகிய நாம்
எவ்விதம் அவருடைய வாக்குத்தத்தங்களினால் கிறிஸ்துவின் திவ்விய சுபாவத்திற்கு பங்குள்ளவர்களாகப்
போகிறோம் என்பதைக் காட்டப் போகிறார்.
இங்கு நான் ஒரு காரியத்தைச் சொல்லவேண்டும்.
சில நாளைக்கு முன்பு ஒரு சகோதரன் என்னைக் குறித்து தவறாய் புரிந்து கொண்டார். ஊழியக்காரர்களின்
ஐக்கியத்தினின்று ஒரு கடிதம் வந்தது. அதில், ‘கணவனும் மனைவியும்
ஆத்தும ஜோடியாக இருத்தல் வேண்டும். அவ்விதம் இல்லையென்றால், நாம்
நம்முடைய கூட்டாளியைத் தள்ளிவிட்டு, ஆத்தும ஜோடியாய் இருக்கத்தக்க வெறொருவளை விவாகம்
செய்து கொள்ளலாம் என்று நான் நம்புகிறேன்’ என்று எழுதியிருந்தது.
ஓ! அதற்கு நான், “அத்தகைய வேதப்புரட்டைக் குறித்து நான் குற்றமற்றவனாயிருக்கிறேன்’ என்று பதிலெழுதினேன். நான் எப்பொழுதும் அத்தகைய காரியத்திற்கு
எதிரிடையாக இருந்திருக்கிறேன். மேலும் அதை நான் விசுவாசிப்பதில்லை, நிச்சயமாக இல்லை.
தேவன் நமக்கு ஜோடியைத் தருகிறாரென்றும், பின்பு நாம் ஒருவரிலொருவர் பாகமாகிறோம் என்றும்
நான் விசுவாசிக்கிறேன்.
அதுதான் உண்மை. ஆகவே தான் ஒரு மனிதன்
விவாகம் செய்யும் முன்பே இக்காரியங்களைக் குறித்து ஆராய்தல் அவசியமாகும்.
ஒரு சமயம் ஒரு வாலிபன் என்னிடம், “சகோ.பிரன்ஹாமே, நான் இன்னவிதமான ஒரு பெண்ணை விவாகம் செய்துகொள்வதைக்
குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?’ என்று கேட்டான்.
அதற்கு
நான், ‘அவளைக் குறித்து நீ எந்த விதமாய் நினைக்கிறாய்?’ என்று கேட்டேன்.
அதற்கு
அவன், “ஓ, நான் அவளை மிகவும் நேசிக்கிறேன்’ என்று பதிலளித்தான்.
அப்பொழுது
நான், “நல்லது, அவளில்லாமல் நீ வாழ முடியாது
என்று எண்ணினால் அவளை விவாகம் செய்துகொள். அவளில்லாமல் வாழ முடியும் என்று எண்ணினால்
அவளை விவாகம் செய்துகொள்ளாதே. ஆனால் அவ்விதம் அவளை நீ விவாகம் செய்யாமலிருப்பது உன்னைக்
கொன்றுவிடும் என்று எண்ணினால் நீ தாராளமாக சென்று அவளை விவாகம் செய்துகொள்’ என்று கூறினேன். நான் எதை அவனுக்கு போதிக்க முயற்சி செய்தேன்
என்றால்,
நீ விவாகம் செய்து கொள்ளும் முன்பு எல்லாம்
அருமையாகவும், நலமாகவும் காண்பபடும், ஆனால் விவாகமான பின்பு வாழ்க்கையில் சோதனைகளும்,
உபத்திரவங்களும் வரும், அத்தகைய சமயத்தில் தான் நீங்கள் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு மிகவும் நேசிக்க வேண்டும். நீயோ
அல்லது அவளோ ஒருவரிலொருவர் ஏமாற்றத்தைக் காணும்போது இன்னுமாய் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு
நேசித்தலே சிறந்த அன்பு என்பதே என்னுடைய கருத்தாயிருக்கின்றது.
கிறிஸ்துவினிடம் காரியம் அவ்விதமேயிருக்கின்றது.
பாருங்கள்? நாம் ஒரு காரியத்தை அவரிடம் கேட்டு நமக்கு அதை அவர் கொடுக்காவிட்டாலும்,
அது நம்மை சிறிதேனும் பாதிக்காவண்ணம் அவ்வளவாய் நாம் அவரிடம் அன்பு கூர வேண்டும். பாருங்கள்?
பாருங்கள்? ஏன்? இதை செய்யத்தக்கதான ஒரே வழி அவருடைய திவ்விய சுபாவத்தில் பங்கு பெறுதலேயாகும்.
அப்பொழுது தான், அவர் ஏன் அதை உனக்குக் கொடுக்கவில்லை என்பதை நீ புரிந்து கொள்ள முடியும்.
“திவ்விய சுபாவத்தில் பங்குபெறுதல்.’
ஒரு
பரிபூரண மனிதனின் வளர்ச்சி 62-1014
அடுத்த நாள் இரவும் அவன் பட்டியின் வேலியின்
மீது உட்கார்ந்த வண்ணமாய், அவள் எப்பொழுது பாத்திரம் கழுவின தண்ணீரை வெளியே ஊற்ற வருவாளென்று
காத்துக் கொண்டிருந்தான். ஆனால் மற்றவர்களோ தொடர்ந்து நடனமாடிக் கொண்டிருந்தனர். அவன்
அவளைக் கவனித்துப் பார்த்தான். அவள் வந்தபோது அவன் அவளை அணுகி, ‘நான் இங்கு வந்திருப்பதன் உண்மையான நோக்கம் என்னவென்று
உனக்குத் தெரியுமா?’ என்று கேட்டான்.
அவள், ‘இல்லை ஐயா. எனக்குத் தெரியாது’ என்று பதிலுரைத்தாள்.
அவன், “மனைவியைக் கொள்வதற்காக நான் இங்கு வந்துள்ளேன். உன்னில்
காணப்படும் நற்பண்பு அவர்களிடம் இல்லை’ என்றான். அப்பொழுது
நான் என் சபையை நினைவு கூர்ந்தேன். ‘என்னை நீ விவாகம்
செய்து கொள்வாயா?’ என்று கேட்டான்.
அவள்
மாறுத்தரமாக, ‘நானா? நானா?
அதை நான் கனவிலுங்கூட நினைக்க முடியாது’ என்றாள்.
பாருங்கள்? அவன் முதலாளியின் மகன். நாட்டிலுள்ள
அநேகக் கம்பெனிகளும் நிலங்களும் அவனுக்குச் சொந்தமானவை. அவன், ‘நான் உண்மையாகவே கூறுகிறேன். சிக்காகோ பட்டிணத்தில் ஒரு
நல்ல பெண்ணைக் காணமுடியில்லை. நற்பண்பு கொண்ட உத்தமமான மனைவி எனக்குத் தேவை. நான் எவையெல்லாம்
எதிர்ப்பார்கிறேனோ அவையாவும் உன்னிடத்தில்
காணப்படுகின்றது. என்னை விவாகம் செய்து கொள்வாயா?’ என்று கேட்டான்.
அவள்
திகைப்புற்றவளாய், ‘ஆம்’ என்று தலையசைத்தாள்.
ஆகவே, அவன், “நீ ஆயத்தமாயிரு. சரியாக ஒரு வருடம் கழித்து நான் திரும்பவும்
வந்து உன்னை நிச்சயம் அழைத்துச்செல்வேன். அதன் பின்பு நீ இவ்விதம் உழைக்க வேண்டிய அவசியமேயில்லை.
உன்னை நான் அழைத்து செல்வேன். நான் சிக்காகோவுக்குச் சென்று, நீ ஒரு போதும் என்றுமே
கண்டிராத பிரம்மாண்டமான வீட்டை உனக்குக் கட்டி தருவேன்’ என்றான்
“எனக்கு வீடு
என்று ஒன்று எப்போதும் இருந்ததில்லை. நான்
ஒரு அனாதை’ என்றாள்.
“நான் உனக்கு
ஒரு நல்ல வீட்டைக் கட்டித்தருவேன். நான் திரும்ப வருவேன்’ என்றான்.
ஆறாவது முத்திரை 63-0323
நேற்று இரவு ஒரு வாலிப அம்மையார், ஒரு
சிறிய காதல் விவகாரத்தில் ஈடுபட்ட ஒரு ஊழியக்காரரின் மகள், அதைக் குறித்து தன் மனத்தெளிவை
இழந்திருந்தாள். மேலும், அவள் முறிந்துப்போன நிலைக்குப் போயிருந்தாள். ஒரு மிகவும்
சவுந்தரியமுள்ள வாலிப ஸ்திரீ. சுமார் 23 வயதிருக்கும். அவள் சுமார் 12 வயதான சிறுமியாயிருந்த
போது, அவள் சிக்காகோ அருகில் எல்கின் என்ற இடத்தில் இருந்தாள். மேலும், பார்க்கும்போது,
பரிசுத்தாவியானது வார்த்தையைக் கேட்க வந்து இருந்தவர்களின் ஊடே சென்று, அவள் யார் என்று
அழைத்து, மேலும், ‘நீ முறுமுறுக்கிற
இருதயமுள்ளவளாயிருக்கிறாய். டாக்டர்கள், நீ 15 வயது வரையில் உயிர்வாழ முடியாது என்று
சொல்கிறார்கள். ஆனால் கர்த்தர் இவ்விதமாக உரைக்கிறார். நீ சுகமாக்கப்பட்டாய்’ என்று சொல்லிற்று.
நேற்றிரவு, அவள் ஒரு வித்தியாசமான வகை
இருதயத் தொல்லையை உடையவளாயிருந்தாள். அது ஒரு ஆவிக்குரிய இருதயக் தொல்லை, அவளுடைய காதலன்
பிரிந்து ஓடிப்போய், வேறு ஏதோ ஸ்திரீயைக் கல்யாணம் செய்து விட்டான். மேலும் இருப்பினும்
அவள் இன்னும்கூட காதலித்துக் கொண்டிருந்தாள். இந்த பையனும், அவன் இன்னும் கூட அவள்
மீது, காதல் உள்ளவனாக இருப்பதாகவும் மேலும் அவனுடைய தகப்பனார் இது நடப்பதற்கு காரணமாயிருந்தார்
என்று சொல்லிக்கொண்டிருந்தான். ‘புத்திக் கெட்டத்தனம்!
அவன் அந்த அடுத்தப் பெண்ணைக் கல்யாணம் செய்துதான் ஆக வேண்டியிருக்கவில்லை! அவன் அதை
செய்தான், ஏனென்றால் உனக்காக சரியான விதமான அன்பைக் காண்பிக்க அவன் தவறிவிட்டான்’ என்று நான் சொன்னேன். மிகவும் சரி!
வெற்றியின் நாள் 63-0421
மேசியாவின்
ஜீவன் பிரத்தியட்சமாகி ஒரு சபையை “ மணவாட்டியை
“ ஆயத்தப்படுத்துகின்றது. ஒரு மனிதனை
மணந்த ஸ்திரீக்கு அவனிடம் வித்தியாசபேதம் இருக்குமானால், அவர்களிடையே தொடர்ந்து சச்சரவு
உண்டாகிக் கொண்டேயிருக்கும். அதற்குப் பதிலாக ஒரு மனிதனுக்கும் அவனுக்கென்று நியமிக்கப்பட்ட
பெண்ணுக்குமிடையே ஒருமனப்பான்மை இருக்குமானால் “ அவர்கள் ஒரே
ஆத்துமாவும் ஒரே சிந்தையுமுள்ளவர்களாயுமிருந்தால்... ஏனெனில் அவர்கள் ஒரே மாமிசமாகப்
போகின்றனர். மணவாட்டியின் மத்தியில் மணவாளன் பிரத்தியட்சமாகும் வரை, அத்தகைய ஒருமனப்பான்மையை
சபையானது தேவனிடம் கொண்டிருக்குமானால் “ ஏனெனில் அவர்களிருவரும்
ஒன்றாக ஆகப் போகின்றனர். ஓ என்னே ஒரு மகத்தான பாடம்!
மூன்றாம் யாத்திரை 63-0630
ஆனால் தேவனுடைய மகத்தான இரகசியம், ஒரு
இரகசியமாக நித்திய தேவன் எதை வைத்திருந்தாரோ, இப்பொழுது அது இயேசு கிறிஸ்துவுக்குள்
வெளியரங்கமாக்கப்பட்டு பிறகு சரியாக தம்முடைய சபைக்கு அளிக்கப்பட்டிருக்கின்றது. ஒரு
காலத்தில் தேவனுடைய சிந்தையிலிருந்தவை, இப்பொழுது கிறிஸ்துவின் சரீரத்திலிருக்கிறது. இயேசு தமது மணவாட்டியாகிய சபையை நோக்கி காதல் செய்து,
இரகசியங்களை குசுகுசு வென்று அவளிடம் மெல்லப்
பேசிக்கொண்டிருக்கிறார்.
நீங்கள் விவாகம் செய்ய வேண்டுமென்று
தீர்மானித்துள்ள பெண்ணிடம் உங்கள் இரகசியங்களை எப்படி சொல்வீர்கள்? அவளை நீங்கள் அதிகமாக நேசிக்கிறீர்கள்.
அவளை உங்கள் பக்கத்தில் உட்காரவைத்து, அவளை நிநேகிப்பதாக கூறிவிட்டு, அவளிடம் உங்கள்
அந்தரங்க இரகசியங்கள் அனைத்தையும் குசுகுசுவென்று கூறுவீர்கள் அல்லவா? அது எப்படியிருக்குமென்று
உங்களுக்குத் தெரியும்.
அதைத்தான் கிறிஸ்து சபைக்குச் செய்து
கொண்டிருக்கிறார். பாருங்கள்? அவள் இரகசியங்களை, இரகசியங்களை மாத்திரம் அறியும்படி
செய்கிறார்“ எல்லாரிடமும்
சல்லாபம் செய்யும் பெண்களிடமல்ல “ அவருடைய மனைவியிடம்,
பாருங்கள்?
கிறிஸ்து தேவனுடைய பரம இரகசியத்தின் வெளிப்படுதலாயிருக்கிறார்
63-0728
எனவே நாங்கள் அங்கேயே முழங்கால்படியிட்டு,
அவளை தேவனிடத்தில் ஒப்புக் கொடுத்தோம். நான், ‘அவளுக்கு இன்னும்
சில நாட்களில் பதினெட்டு வயதாகிறது. அந்த வயதுள்ள ஒரு பெண் ஆண் நண்பர்களை குறித்து
சிந்திக்கத் தலைபடுவாள். நாமோ அவளை வீட்டில் அடைத்து வைத்திருக்கிறோம். அவள் இப்பொழுது
மணம் புரிந்து கொள்ள நான் விரும்பவில்லை. அவளை இங்குள்ள அலுவலகத்தில் சேர்த்து, அவள்
வேலை செய்ய வேண்டுமென்று விரும்புகிறேன். அவள் ஆவியில் நிறைந்திருப்பதைக் காண விரும்புகிறேன்“ அவ்விதமாக வாழ’ என்றேன்.
அவள்...
நல்லது, நாங்கள் எல்லோரும் அதையே விரும்பினோம். மேடா, ‘அவள் அதைச் செய்ய மாட்டாள். அவள் கேட்க மாட்டாள்’ என்றாள்.
நான், ‘ஒரு நிமிடம் பொறு! நம்மால் முடிந்த வரை அவளை நாம் வளர்த்து
வந்தோம். இப்பொழுது அவளைத் தேவனுடைய கரங்களில்
வைப்போம்“அவளை அவரிடம் ஒப்புக் கொடுப்போம். அவள்
ஏதாவதொன்றைச் செய்தால் நீ அவளிடம், ‘பெக்கி, அன்பே,
நீ அதைச் செய்வதை உன் அம்மா விரும்பவில்லை,
இருந்தாலும் நான் உனக்கு சிநேகிதி; நான் உன்
கூடவே இருப்பேன்’ என்று சொல். பார்? நீ அவளை நேசிக்கிறாய் என்பதை அவள்
அறியட்டும். அவள் வேறு யாரையாகிலும் நேசிக்கத் தலைப்பட்டால் அது ஒரு வேளை தவறான ஸ்திரீயாக
இருக்கக் கூடும். பார்? அவளை சிúநிகிக்கும் ஸ்திரீ
நீயாக இருக்கட்டும். தேனே, இது கொடூரமாக தொனிக்கலாம். ஆனால் ஜனங்கள் எல்லாவிடங்களிலுமிருந்து
வந்து தனிப்பட்ட விதத்தில் பேட்டி காண்கின்றனர். நான் உனக்கு மிகவும் பழகினவனாகி விட்டேன்.
நாம் கணவனும் மனைவியுமாயிருப்பதால், நாம் ஒருவருக்கொருவர் மிகவும் பழகினவர்களாகி விட்டோம்.
ஆகவே நாம் ஆலோசனை கேட்பதில்லை. இது கர்த்தருடைய நாமத்தில் என்பதை நீ நினைவில் கொள்ள
வேண்டும்’ என்றேன்.
அவள்,
‘சரி’ என்றாள்.
நாங்கள்
முழங்கால்படியிட்டு அவளைத் தேவனிடம் ஒப்புக் கொடுத்தோம். அவளை நாங்கள் இனி மேல் ஒன்றும்
செய்யப் போவதில்லை என்று கூறினோம்.
அன்று
பிற்பகல் அவள் உள்ளே வந்தாள், அவள், ‘நல்லது, அங்கே நான் போகக்கூடாது என்று நீங்கள் இப்பொழுதும் சொல்லுகிறீர்களா?’ என்று கேட்டாள்.
அதற்கு மேடா, ‘இல்லை, நான் அதைக் குறித்து ஒன்றும் சொல்லவில்லை. நீ அதை
செய்வது உன் அம்மாவுக்குப் பிடிக்கவில்லை. அந்த பெண்ணுடன் நீ ‘பூகி வூகி’ இசை வாசித்துக்
கொண்டிருந்ததை உன் அப்பா கேட்ட போது, அது அவரை கொன்று விட்டது என்று உனக்குத் தெரியும்.
அதை நீ செய்வது அவருக்குப் பிடிக்கவில்லை, எங்கள் இருவருக்குமே பிடிக்கவில்லை. ஆனால்
பெக்கி, அதை நாங்கள் கர்த்தரிடம் சமர்ப்பித்து விட்டோம். நாங்கள் உன்னை நேசிக்கிறோம்
என்பதை நீ அறிய வேண்டும். நீ எதை செய்த போதிலும், நாங்கள் உன்னை அப்பொழுதும் நேசிப்போம்’ என்றாள்.
பெக்கி,
‘நான் எப்படியும் போகத்தான் போகிறேன்’ என்றாள். மேடா, ‘சரி, அன்பே’ என்றாள். பெக்கி போகப் புறப்பட்டாள். மேடா, ‘சரி, நீ திரும்பி வரும்போது இரவு உணவை ஆயத்தமாக வைத்திருக்கிறேன்’ என்றாள். அவள் போகவேயில்லை. இல்லை, அன்று அவள் போகவேயில்லை.
பாருங்கள்?
அதற்கு
பிறகு சற்று கழிந்து, அவள் ஜார்ஜை சந்தித்தாள். அவன் ஒரு கிறிஸ்தவன். அத்துடன் அது
முடிவு பெற்றது.
கேள்விகளும்
பதில்களும் 64-0823
மிகவும் அவசரம், சகோ. பிரான்ஹாமே, காலம்
முடிவடைந்து நித்தியம் துவங்குகிறது என்று அறிந்திருப்பதனால் விவாகம் செய்ய திட்டமிட்டிருக்கும் ஒரு தம்பதிகளுக்கு உங்கள்
ஆலோசனை என்ன?
நீங்கள்
முன் சென்று விவாகம் செய்து கொள்ளுங்கள். பாருங்கள்? நீங்கள் இன்னும் நூறாண்டுகள் இவ்வுலகில்
வாழப்போகின்றீர்கள் என்பது போல் அதை சென்று நிறைவேற்றுங்கள். உங்கள் இருதயத்தை கிறிஸ்துவின்
மேல் வைத்திருங்கள். இவ்வுலக காரியங்களின் மேல் உங்கள் இருதயங்கûü வைக்காதீர்கள்,
கிறிஸ்துவின் மேல் வைத்திருங்கள். பாருங்கள்? நீங்கள் சென்று விவாகம் செய்து பிள்ளைகளைப்
பெறுங்கள். தேவன் உங்கள் விவாகத்தில் உங்களை ஆசீர்வதிப்பாக.
கேள்விகளும்
பதில்களும் 64-0823
இரட்சிக்கப்பட்ட ஒரு மனைவி தன் கணவர் பாவியாயிருந்தால் அவர் அணுகினால் மறுக்க வேண்டுமா?
இல்லை, ஐயா! இல்லை ஐயா! அவர் உன் கணவர்.
அவ்விதம் செய்வதனால் அவரை தேவனிடத்திலிருந்து அதிக தூரம் துரத்தி விடுவாய். பார்? அது உண்மை. சகோதானே, சகோதரியே,
நீ அவரை விவாகம் செய்து கொண்டாய், அவர் உன்னுடையவர். நீ அவருடையவள்.
சகோ.பிரான்ஹாமே, ‘ஆனல்மெண்ட்’ என்னும் சொல்லில்
பொருள் என்ன? ஜனங்கள் விவாகம் செய்து கொள்ள
சுயாதீனம் பெறுகின்றனரா? அல்லது இது விவாகரத்தைக் குறிக்கும் மற்றொரு சொல்லா? இதன்
பேரில் சில தகவல் அறிய விரும்புகிறேன்.
நிச்சயமாக அவர்கள் விவாகமானவர்களே, அவர்கள்
பொருத்தனை செய்து கொண்ட வரைக்கும் அவர்கள் விவாகமானவர்களே. உதாரணமாக, ஒரு பையன் ஒரு
பெண்ணை விவாகம் செய்து கொள்வதாக நல் விசுவாசத்துடன் வாக்கு கொடுத்திருந்தால், அவன்
அந்த பெண்ணை விவாகம் செய்ய கடமைப்பட்டிருக்கிறான். அவன் அவளை விவாகம் செய்து கொண்டதற்கு
சமானம். நாட்டின் சட்டம் செய்கின்ற ஒரே காரியம்
என்னவெனில், நீங்கள் சட்டத்துக்குப் புறம்பாக கணவனும் மனைவியுமாக வாழ்வதற்கு பதிலாக, நீங்கள் ஒன்றாக வாழ்வதற்கு அது உங்களுக்கு உரிமை
பத்திரம் அளிக்கிறது. ஆனால் ஒரு மனிதன் ஒரு ஸ்திரியீடம், ‘நான் உன்னை விவாகம் செய்து கொள்வேன். தேனே; உன்னை என்
மனைவியாக ஏற்றுக் கொள்வேன். நீ என்னை ஏற்றுக் கொள்வாயா?’ என்று கேட்டால் அவன் விவாகமானவன்.
உங்கள் விவாக பொருத்தனை புனிதமானது;
அது தான் உங்களை விவாகம் செய்து வைக்கிறது. எந்த பிரசங்கியும் எந்த மாஜிஸ்ட்ரேட்டும்
அல்லது எவருமே உங்களை விவாகம் செய்து வைக்கிறதில்லை; நீங்கள் தேவனுக்கும் இந்த மனிதனுக்கும்
செய்யும் பொருத்தனையே விவாகம் செய்விக்கிறது. நீங்கள் வாக்கு கொடுக்கும் போது, உங்களுக்கு
விவாகமாகி விடுகிறது.
பாருங்கள் நீங்கள், ‘சகோ.பிரான்ஹாமே, அது சரி தானா? நீங்கள் வேதத்தைக் கொண்டு
மாத்திரமே பதில் சொல்வீர்கள் என்று கூறுனீர்களே’ எனலாம். அதைக்
குறித்த வேத ஆதாரம் உங்களுக்கு வேண்டுமா? வேண்டுமானால், உங்கள் கரங்களை உயர்த்துங்கள்.
இப்பொழுது நமக்கு ஆறு அல்லது எட்டு நிமிடங்கள் உள்ளன. சரி.
யோசேப்பு, அவளுடைய புருஷன் நீதிமானாயிருந்த
படியால் (அவளுடைய புருஷனாக அவன் நியமிக்கப்பட்டிருந்தான்.
ஆனால் அவன் ஏற்கனவே அவளுடைய புருஷன் என்று அழைக்கப்பட்டான்)... ‘யோசேப்பு நீதிமானாயிருந்து, அவளை அவமானப்படுத்த மனதில்லாமல்
இரகசியமாய் தள்ளி விட யோசனையாயிருந்தான். அவர்கள் கூடி வருமுன்னே, அவள் பரிசுத்த ஆவியினாலே
கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது. (பாருங்கள்?) கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குக்
காணப்பட்டு: தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக் கொள்ள
ஐயப்படாதே என்றான்’ (மத்.
1:19,20). அவனுக்கு ஏற்கனவே விவாகமாகி விட்டது. அவன் ஏற்கனவே அவளுக்கு வாக்குக் கொடுத்தாகி
விட்டது.
மற்றும் ... சிறு பெண்ணே. அந்த பையனை
விவாகம் செய்து கொள்வதாக நீ வாக்கு கொடுத்திருந்தால், அதை செய்ய நீ கடமைப்பட்டிருக்கிறாய்.
அந்த கடமைக்கு பிறகு, நீ வேறோருவனை விவாகம் செய்து கொண்டால் “ இப்பொழுது முதல் அதை நீ எப்படியும் செய்வாய் “ நீ விபசாரத்தில் வாழ்கிறவளாயிருப்பாய். கவனி, ஒரு பையன்
ஒரு பெண்ணை விவாகம் செய்து கொள்வதாக வாக்கு கொடுத்திருந்தாலும், அதே காரியம் தான்.
நீங்கள் கைக்கொள்வதாக இருந்தால் மாத்திரமே
நீங்கள் வாக்கு பண்ணுங்கள், இல்லையென்றால் யாருக்கும் வாக்கு கொடுக்காதீர்கள். அதற்கு
வேத ஆதாரம் உண்டேன்பதை ஞாபகம் கொள்ளுங்கள். யோசேப்பு மரியாளை விவாகம் செய்து கொள்வதாக
வாக்கு கொடுத்திருந்தான். அதுதான் விவாகமான நிலை என்பதாக தேவன் கூறினார்.
அதைக் குறித்த பழைய ஏற்பாட்டு பிரமாணத்தைப்
படியுங்கள். பாருங்கள்? பழைய ஏற்பாட்டு பிரமாணத்தின்படி
நீங்கள் ஒரு பெண்ணை மணந்து கொள்வதாக வாக்கு கொடுத்து விட்டு, வேறோருத்தியை மணந்து கொண்டால்,
நீங்கள் விபச்சாரம் செய்பவராகி விடுகிறீர்கள். அது உங்களை பாளயத்திலிருந்து புறம்பாக்கும்.
ஆம், ஐயா? ஒரு பெண்ணுக்கு நீங்கள் வாக்கு கொடுத்தால், அதை நிறைவேற்ற வேண்டும். அவள்
புனிதமான சிறு பாண்டம். அது உலகிற்கு ஒரு குழந்தையை கொண்டு வர வேண்டியதாயுள்ளது. எனவே
நீங்கள் அவளுக்கு வாக்கு கொடுக்கம்போது, அவளை நீங்கள் விவாகம் செய்து கொள்ள வேண்டும்.
கேள்விகளும் பதில்களும் 64-0823
சகோ. பிரான்ஹாமே, பதின்மூன்று வயதுக்குட்பட்ட
நமது பிள்ளைகள் எந்தவிதமான செயல்களில் பங்கெடுக்கலாம்? மேலும், அவர்கள் தங்கள் சகாக்களைத்
தேர்ந்தெடுக்க நாம் எந்த வகையில் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்?
உங்களால் கூடுமானவரையில் அவர்களை கிறிஸ்தவ
சகாக்களுடன் வைத்திருங்கள். அவர்களை “ அது பெண்ணாக
இருந்தால், அவளை கிறிஸ்தவ பெண்களுடன் வைத்திருங்கள்; அது கிறிஸ்தவ பையன்களாக இருந்தால்,
கிறிஸ்தவ பையன்களுடன் வைத்திருங்கள்.
கேள்விகளும் பதில்களும் 64-0830
நாம் செய்ய வேண்டிய காரியங்கள் அநேகம்
உண்டு. நாம் சந்திக்க வேண்டிய பொறுப்புகள் அநேகம். ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட பொறுப்பை
சந்திக்க வேண்டியவர்களாயுள்ளனர்.
உங்கள் மனைவியைத் தெரிந்து கொள்ளும்
விஷயத்தில், அல்லது கணவனைத் தெரிந்து கொள்ளும் விஷயத்தில், உங்களுக்கு ஒரு பொறுப்பு
உண்டு. பிறகு நீங்கள் ஞாபகம் கொள்ள வேண்டும்... ஒருக்கால் நீங்கள் ஒரு வீட்டைக் கட்டலாம்.
அது ஒரு அழகான வீடு. பிறகு ஞாபகம் கொள்ளுங்கள். மணமான பெண் என்னும் முறையில், பிள்ûüகûü வளர்க்கும்
பொறுப்பு உங்களுக்குண்டு. அந்த அழகான சுவர்களில் பிள்ளைகள் கைகûü வைத்து அவைகûü அழுக்காக்காதபடிக்கு
நீங்கள் பாதுகாக்க வேண்டும். உங்கள் பிள்ûüகûü படிக்க வைக்கும் பொறுப்பு உங்களுக்குண்டு.
அவர்களுக்கு உடுக்க உடைகûüயும், உண்ண உணவையும் அளிக்க வேண்டிய பொறுப்பை நீங்கள்
பெற்றிருக்கிறீர்கள். எல்லாமே பொறுப்பு தான். பொறுப்பை வகிக்காமல் அதை தள்ளி விடுவது
மிகவும் எளிதான செயல்.
விவாகம் என்பது எல்லா விதங்களிலும் பொறுப்பு
வாய்ந்தது என்று நாம் காண்கிறோம்.
தேவனுடைய சமூகத்திலிருந்து விலகி ஓடிப்போகும்
ஒரு மனிதன் 65-0217
இப்பொழுது ஆவிக்குரிய... இயற்கை ஆவிக்குரியவைகளுக்கு
உதாரணமாக இருக்குமானால், இவ்வுலகில் ஒருவன் மணமகளைத் தெரிந்துகொள்ளுதல் என்பது, ஆவிக்குரிய
காரியத்தில் மணவாட்டியைத் தெரிந்து கொள்ளுதலுக்கு ஒரு அடையாளமாக அமைந்துள்ளது எனலாம்.
நாம்
மனைவியை தெரிந்து கொள்ளுதல் என்பது “ அதாவது ஒரு
மனிதன் அவ்வாறு செய்வது – அது மிகவும்
கருத்தாய் செய்யப்படவேண்டிய விவகாரம்... ஏனெனில் ‘மரணம் நம்மை
பிரிக்குமளவும்’ என்று ஆணையிடப்படுகின்றது.
அந்த ஆணையை நாம் காத்துக்கொள்ளவேண்டும். மரணம்
மாத்திரமே உன்னைப் பிரிக்க முடியுமென்று நீ தேவனுடைய சந்நிதியில் ஆணையிடுகின்றாய்.
நான் நினைக்கிறேன்... எதிர்காலத்தை திட்டமிடும் புத்தி சுவாதீனமுள்ள ஒரு மனிதன், மிகவும்
கவனாக தன் மனைவியைத் தெரிந்து கொள்ள வேண்டியவனாயிருக்கிறான். அந்த விவகாரத்தில் நீங்கள்
என்ன செய்கிறீர்கள் என்பதைக் குறித்து மிகவும் ஜாக்கிரதையாயிருங்கள். அவ்வாறே கணவனைத்
தெரிந்துக்கொள்ளும் ஒரு பெண்ணும் – ஒருவரை கணவனாக
ஏற்றுக்கொள்ள சம்மதிக்கும் ஒரு பெண் – அவள் என்ன செய்கிறாள்
என்பதைக் குறித்து மிகவும் கவனமாக இருக்க வேண்டும். முக்கியமாக இந்த நாட்களில், ஒரு மனிதன் தன் மனைவியைத்
தெரிந்து கொள்வதற்கு முன்பு நன்கு ஆலோசித்து ஜெபம் செய்யவேண்டும்.
இன்று
விவாகரத்துக்கள் அநேகம் நேரிடுவதற்கு காரணம் விவாகரத்துகளில் அமெரிக்கா முதன்மை ஸ்தானம் வகிக்கிறது. உலகிலுள்ள
மற்ற நாடுகளைக் காட்டிலும், இவ்விஷயத்தில் நாம் முதன்மை ஸ்தானம் வகிக்கிறோம். கிறிஸ்தவ
தேசம் எனக் கருதப்பட்டு, அவ்வாறு அழைக்கப்படும்
இந்நாட்டில்தான், மற்ற நாடுகளைக் காட்டிலும் அதிக விவாகரத்துக்கள் ஏற்படுகின்றன. என்ன
ஒரு நிந்தை“ நமது விவாகரத்து
நீதிமன்றங்கள். அதற்கு காரணம், மனிதன் தேவனை விட்டு அகன்று சென்று விட்டான். ஸ்திரீயும் தேவனை விட்டு சென்று விட்டாள் என்பதே
என் கருத்து.
ஒரு
மனிதனோ அல்லது ஒரு ஸ்திரீயோ இந்த விஷயத்தில் அழகான கண்களையும், பலமான தோள்களையும்,
அல்லது வேறெதாவது உலகப் பிரகாரமான அன்பையும் நோக்கிப் பார்த்து அதற்கு முக்கியத்துவம்
கொடுப்பதற்கு பதிலாக, முதலாவதாக தேவனை நோக்கிப் பார்த்து ஜெபம் செய்து, ‘தேவனே, இது தான் உம்முடைய சித்தமா?’ என்று கேட்பது நலமாயிருக்கும்.
ஒரு
மணவாட்டியை தெரிந்து கொள்ளுதல் 65-0429
நமக்கு
விவாகமாக வேண்டிய நேரம் வரும்போது, நாம் சற்று யோசிக்கக் தலைப்பட்டால். நாம் மனைவி
அல்லது கணவனை தெரிந்துக்கொள்ளும் விஷயத்தில ஆராய்ந்து பார்க்க முற்பட்டால்..... ஒரு
மனிதன் இதைக் குறித்துக் கருத்தாய் ஜெபம் பண்ணவேண்டும். இல்லையெனில் அவன் தன் வாழ்க்கை
முழுவதையும் நாசமாக்கிக் கொள்வான். ‘மரணம் நம்மை
பிரிக்குமளவும்’ என்னும் பிரதிக்ஞை
ஞாபகமிருக்கட்டும், அவன் தவறாக தெரிந்து கொள்வதன் மூலம் தன் வாழ்க்கையை நாசமாக்கிக்
கொள்ள முடியும். ஆனால் அவன் தெரிந்தே தவறான தீர்மானம் ஒன்றைச் செய்து, அவனுக்கு மனைவியாயிருக்கக் தகுதியில்லாத ஒரு பெண்ணை மணம்
புரிந்துக்கொண்டால், அது அவனுடைய தவறே. அவ்வாறே
ஒரு பெண்ணும். ஒருவன் தனக்குக் கணவனாயிருக்க தகுதியற்றவன் என்று அறிந்த பின்பும், அவனை
மணந்து கொண்டால், அது அவளுடைய தவறாகும். எது
சரி எது தவறு என்று தெரிந்த பின்பும் அவ்வாறு செய்தால். எனவே இந்த விவகாரத்தில் நீங்கள்
நான்றாக ஜெபம் செய்யாமல் ஈடுபடக்கூடாது.
ஒரு மணவாட்டியை தெரிந்து கொள்ளுதல்
65-0429
ஒரு
மனிதன் எந்தவிதமான பெண்ணைத் தெரிந்து கொள்ளுகிறான் என்பதிலிருந்து, அவனுடைய ஆசை என்னவென்று
அவனுடைய குணாதிசயங்களும் புலனாகின்றன. ஒருவன் தவறான பெண்ணைத் தெரிந்துக்கொண்டால், அவன்
எப்படிப்பட்ட குணாதிசயங்களை உடையவனாயிருக்கிறான் என்பதை அது பிரதிபலிக்கிறது. அவன்
யாருடன் தன்னை இணைத்துக்கொள்ள முயல்கிறான் என்பது அவனுக்குள் உண்மையாக என்ன உள்ளது என்பதைக் காட்டுகிறது. ஒருவன் தெரிந்துக்கொள்ளும்
மனைவி, அவனுக்குள் என்ன உள்ளது என்பதை அது காண்பிக்கின்றது. அவன் வெளியில் என்ன கூறினாலும்
அவன் மணம் புரிந்துகொள்ளும் போது அவனைக் கவனியுங்கள்.
நான்
ஒரு மனிதனுடைய அலுவலகத்துக்கு செல்கிறேன். அவன் தன்னை கிறிஸ்தவன் என்று அழைத்துக் கொள்கிறான்
என்று வைத்துக்கொள்வோம். ஆனால் சுவர்களில் அரை நிர்வாணமாக பெண்களின் படங்கள் தொங்கவிடப்பட்டு,
அங்கு ‘பூகி-வூகி’ இசையும் முழங்கிக்
கொண்டிருந்தால் அவன் என்ன கூறினாலும் எனக்குக் கவலையில்லை. அவனுடைய சாட்சியை நான் நம்பமாட்டேன்.
ஏனெனில் அவனுடைய ஆவி உலக காரியங்களினால் போஷிக்கப்படுகின்றது. ஒருவன் ஒரு ‘கோரஸ் பெண்’ணையோ அல்லது
செக்ஸ் ராணியையோ, அல்லது அழகான ஒரு நவீன ரிக்கெட்டாவையோ மணந்து கொள்வதாகக் கூறினால்,
அது அவனுடைய குணாதிசயங்களை பிரதிபலிக்கிறது. அவனுயை எதிர்கால குடும்பம் எவ்வாறு இருக்கவேண்டும்மென்று
அவன் தன் மனதில் அவனுடைய குழந்தைகளைப் பெற்று வளர்க்க, அவன் அவளைத் தான். அந்த குழந்தைகளையும் அவள் வளர்ப்பாள். எனவே, ஒரு மனிதனுக்குள் என்ன உள்ளது என்பதை அது
பிரதிபலிக்கிறது. அப்படிப்பட்ட ஒரு பெண்ணை தெரிந்து கொள்ளும் ஒரு மனிதன், எதிர்காலத்தைக்
குறித்து என்ன நினைத்திருக்கிறான் என்பது வெளிப்படையாகின்றது. ஒரு கிறிஸ்தவன் அப்படிப்பட்ட
ஒரு செயலைப் புரிவான் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? இல்லை ஐயா. நான் அப்படி நினைக்கமாட்டேன்.
உண்மையான கிறிஸ்தவன் எவனும் அழகு ராணிகளையும், கோரஸ் பெண்களையும், செக்ஸ் ராணிகளையும்
தெரிந்துக்கொள்ள மாட்டான். அவன் கிறிஸ்தவ குணாதிசயம் கொண்ட பெண்ணையே தெரிந்து கொள்வான்.
நீங்கள்
எல்லாவற்றையும் ஒன்றாக அடைமுடியாது. ஓ பெண் அழகாக இருக்கலாம். மற்றொரு பெண் ஒருக்கால்..... மற்றவளைக் காட்டிலும்
தோற்றத்தில் சிறந்தவளாயிருக்கலாம். நீங்கள்
எதாகிலும் ஒன்றைத் தியாகம் செய்ய வேண்டும். ஆனால் ஒரு பெண், கனமுள்ள பெண்ணின் தோற்றத்தை
கொண்டிராமற்போனால்..... அவள் அழகாயிருந்தாலும் இல்லாமற்போனாலும் எனக்கு கவலையில்லை.
நீங்கள் அவளுடைய பண்புக்கு முக்கியத்துவம் கொடுங்கள் “அவள் அழகாயிருந்தாலும் இல்லாமற் போனாலும்.
இப்பொழுது...
ஒரு கிறிஸ்தவன் மனைவியைத் தெரிந்து கொள்ளும்போது, அவன் மறுபடியும் பிறந்த ஒரு பெண்ணையே
தெரிந்து கொள்ள வேண்டும். அவள் காண்பதற்கு எப்படியிருந்தாலும் பரவாயில்லை. அவள் என்னாவயிருக்கிறாளோ,
அது தான் அவளுடைய நடத்தை. அது மாத்திரமல்ல,
அத்தகைய செயல் அவனுடைய தெய்வீக பண்பைப் பிரதிபலித்து, அவனுடைய சிந்தையில் என்ன உள்ளதென்றும்,
அவனுடைய குடும்பம் எதிர்காலத்தில் எவ்வாறிருக்கும்
என்பதையும் எடுத்துக் காட்டுகின்றது“ அந்த பெண் எப்படிப்பட்ட
குடும்பத்தை கட்டி வளர்ப்பாள் என்றும், அவனுடைய
குடும்பத்தின் எதிர்கால திட்டம் என்னவென்றும்.
அவன் நவீன ரிக்கெட்டாக்கள், செக்ஸ் ராணிகள் போன்றவர்களில் ஒருத்தியை மணந்தால், அவன்
எதை எதிர்பார்க்கமுடியும்? வீட்டில் தங்கி குடும்பத்தைப் பேணிப்பாதுகாக்கும் நல்லொழுக்கம்
அற்றவளாய் வேறு யாரோ ஒருவருடைய அலுவலகத்தில் பணிபுரியும் ஆவல் கொள்ளும் ஒரு பெண்ணை
அவன் மணந்தால், அவள் எத்தகைய வீட்டுப் பணிகளைச் செய்பவளாயிருப்பாள்? நீங்கள் உங்கள்
குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள ஆட்களை அமர்த்த வேண்டியிருக்கும், அது உண்மை.
ஒரு மணவாட்டியை தெரிந்து கொள்ளுதல்
65-0429
நான் நிகழ்த்தின கடைசி கூட்டத்தின்போது,
அதன் பின்பு உண்மையில் இதுவே நான் பிரசங்கிக்கும் முதல் பிரசங்கமாகும். நான் லாஸ் ஏஞ்சலிஸில்
பில்ட்மோர் அரங்கத்தில் பிரசங்கம் செய்து கொண்டிருந்தேன். ஒரு மனிதன் தன் மனைவியைத்
தெரிந்து கொள்வதைக் குறித்து அப்பொழுது நான் பேசினேன். அந்த ஒலிநாடா ஒருக்கால் உங்களிடம் இருக்கலாம்.
நான், ‘அது அவனுடைய
குணாதிசங்களையும், நோக்கத்தையும் பிரதிபலிக்கிறது’ என்றேன். ஒரு மனிதன் ஒரு ஸ்திரீயை மனைவியாக ஏற்கும்போது,
ஒரு வாலிப பெண்ணை தன் மனைவியாகக் கொள்கிறான். அவன் நவீனப் பெண் ஒருத்தியை ஒரு சாதாரண
‘ரிக்கெட்டா’வை தெரிந்து கொண்டால், அவன் யாரென்பதை அது காண்பிக்கிறது.
அவன் ஒரு அழகு ராணியையோ அல்லது செக்ஸ் ராணியையோ விவாகம் செய்தால், அவனுக்குள் உண்மையில்
என்ன இருக்கிறது என்பதை அது தெரிவிக்கின்றது. ஆனால் கிறிஸ்தவனோ ஒரு ஸ்திரீயில் நற்பண்புகளை எதிர்பார்க்கிறான். ஏனெனில் அந்த ஸ்திரீயுடன் தன் எதிர்கால வீட்டை அமைக்க
அவன் திட்டமிடுகிறான். ஆகவே அவன் வீட்டை நன்றாக கட்டி காக்கும் ஒருவளை மனைவியாகக் கொள்கிறான். நான், ‘நமது எதிர்கால குடும்பம் எப்படியிருக்கும் என்று கிறிஸ்து
தமது வார்த்தையில் கூறியுள்ளார். அப்படியிருக்க, அவர் எப்படிப்பட்ட மனைவியைத் தெரிந்து
கொள்வார்? ஒரு ஸ்தாபன வேசியையா? இல்லை. தமது வார்த்தையை ஏற்றுக் கொள்ளும் நற்பண்பு
கொண்ட ஒரு ஸ்திரீயையே அவர் தெரிந்து கொள்வார்.
அவளே அவருடைய மணவாட்டியாயிருப்பாள்’ என்றேன்.
வெட்கப்படுதல் 65-0711
அங்கு
நான்கைந்து வாலிபர்கள் தங்களுடைய மனைவிகளுடன் வந்திருந்தனர். அந்த பெண்கள் மிகவும்
நல்லவர்கள். அந்த வாலிபர்கள் தங்கள் மனைவிகளை எவ்வளவாய் நேசிக்கின்றனர் என்பதை நான்
அறிந்திருந்தேன். எனவே நான் அவர்களிடம் இவ்வாறு கூறினேன்: ‘இதுதான் நீங்கள் பரிசோதிக்க வேண்டிய முறையாகும். உங்களுக்கு விவாகமாவதற்கு முன்பு உங்கள் மனைவி...
உங்களுக்கு விவாகமாகிறது என்று நீங்கள் சொப்பனம் காண்பதாக வைத்துக்கொள்வோம். ஆனால்
உண்மையில் உங்களுக்கு விவாகமாகவில்லை; விவாகமாகி விட்டது என்று சொப்பனம் தான் காண்கிறீர்கள். நீங்கள் உறக்கத்தினின்று எழுந்து உங்கள் பெண் சிநேகிதியிடம்
சென்று, ‘உனக்குத் தெரியுமா?
நமக்கு விவாகமாகி குழந்தைகள் பிறந்தனவென்றும், நாம் மகிழ்ச்சியாயிருந்து தேவனுடைய வருகையை
எதிர்நோக்கியிருக்கிறோம் என்று சொப்பனம் கண்டேன்’ என்று கூற,
அவள், ‘நான் வேறொருவரை நேசிக்கிறேன் என்று உங்களுக்குத்
தெரியுமா? உங்களைக் காட்டிலும் அவரை நான் அதிகமாக நேசிக்கிறேன். அவருடன் இன்னும் அதிக
மகிழ்ச்சியுடன் வாழ்க்கை நடத்த முடியும்’ என்று கூறுவாளானால்,
உங்கள் இருதயத்தின் ஆழத்திலிருந்து உண்மையாக, ‘அன்பே, தேவனுடைய
ஆசீர்வாதம் உன்மேல் தங்கியிருக்கட்டும். அவனுடன் சென்று நீ வாழ்க்கை நடத்து’ என்று கூறும் அளவிற்கு அவளை உங்களால் நேசிக்க முடியுமா?
இங்குள்ள
ஒவ்வொரு மனிதனும் பெண்ணும் அதைச் சற்று யோசித்துப்
பாருங்கள். உங்கள் அன்பு உண்மையாயிருந்து, அவளுடைய ஷேமத்தில் நீங்கள் அக்கரை கொண்டிருந்தால்,
என்ன... நீங்கள் அவளை மனைவியாக அடைந்து வாழ்க்கை நடத்த முடியுமென்று உங்களுக்கு தெரியும்.
அவள் உங்களை விவாகம் செய்யலாம்; ஆனால் அவள் சந்தோஷமாக இருக்க முடியாது. மற்றவனைக் கலியாணம்
செய்தால் அவள் அதிக சந்தோஷமாக இருப்பாள்... நீங்கள் உண்மையாக அவளை நேசிப்பீர்களானால்,
அவள் சந்தோஷமாக இருப்பதையே விரும்புவீர்கள்.
கிறிஸ்து தமது சொந்த வார்த்தையில் வெளிப்படுகின்றார்
65-0822
No comments:
Post a Comment