சரீரம், ஆவி, ஆத்துமா
311. உங்களுக்குள் இருக்கும் உள்ளான
அந்த சிறு பகுதிதான் ஆத்துமா. அங்கிருந்துதான் நீ ஆரம்பிக்கின்றாய். அதிலிருந்து வந்தால்,
நீ ஒரு ஆவி. பின்பு நீ ஜீவிக்கிற ஒருவனாக இருக்கிறாய், ஜீவிக்கிற ஒருவனுக்கு தொடர்பு
கொள்ள ஐம்புலன்கள் உள்ளன. இரண்டாவதாக ஆவிக்கு ஐம்புலன்கள் உள்ளன. வெளிப்புற சரீரத்திற்கு
பார்த்தல், ருசித்தல், உணர்தல், முகர்தல், கேட்டல் என்னும் ஐம்புலன்கள் உள்ளன. உட்
சரீரத்திற்கு அன்பு, மனசாட்சி போன்ற ஐம்புலன்கள் உள்ளன. ஆனால் உள்ளிற்கும் உள்ளானது
தான் கட்டுப்படுத்தும் கோபுரம். அதை கட்டுப்படுத்துவது தேவன் அல்லது சாத்தான்.
செய்தி:
மறுரூபபடுத்தும் வல்லமை 65-1031
209. அதுதான் வழிக்காடி. அதுதான் கட்டுப்படுத்தும்
கோபுரம். உள்ளுக்குள் இருக்கும் உள்ளானது. ஆத்துமா ஆவியை கட்டுப்படுத்துகிறது, ஆவி
சரீரத்தை கட்டுப்படுத்துகிறது.
செய்தி:
விசுவாசத்தை வெளிப்படுத்துவது கிரியைகள் 65-1126
23. வெளிப்புறமான சரீரத்திற்கு எவ்விதம்
ஐம்புலன்கள் உள்ளன என்று சென்ற ஞாயிறன்று பார்த்தோம்…சரீரத்தின்
அந்த ஐம்புலன்கள் தாம் உட்செல்லும் வழியாக சரீரத்தில் அமைந்துள்ளன. அந்த சரீரத்தை அடைய
ஒரே வழிதான் உள்ளது-அதுதான் அந்த ஐம்புலன்களின் மூலமாக, பார்த்தல், உணர்தல், முகர்தல்,
கேட்குதல் போன்றவை. சரீரத்தினுடன் தொடர்பு கொள்ளவேண்டுமானால், வேறு எந்த வழியும் கிடையாது.
24. ஆனால் மனிதனின் உட்புறத்தில் ஆவி
என்னும் மனிதன் இருக்கிறான். அந்த மனிதனுக்கும் ஐம்புலன்கள் உள்ளன; சிந்தனை, அன்பு,
மனச்சாட்சி போன்றவை. சரி.
25. உங்கள் சரீரத்தின்மூலம் நீங்கள்
சிந்தனை செய்ய முடியாதது. உங்கள் மனதின் மூலமாகவே நீங்கள் சிந்தனை செய்கிறீர்கள். …ஆனால் அவர்களுடைய
உட்புறத்தில், அடுத்த ஆதிக்கத்தில் மூன்றாவது ஆதிக்கம – ஆத்துமா உள்ளது.
அது தேவனால் முன் குறிக்கப்பட்டுள்ளது. அங்குதான் உண்மையான விதையின் ஜீவன் உள்ளது.
செய்தி:
கிறிஸ்து தமது சொந்த வார்த்தையில் வெளிப்படுகின்றார் 65-0822 காலை
163. இங்கே பாருங்கள். உங்கள் வெளிப்புற
ஆள். உங்களுக்கு ஐம்புலன்கள் உள்ளன. அது உங்கள் வெளிப்புற சரீரத்துடன் தொடர்பு கொள்கின்றது.
தேவன் உங்களுக்கு ஐம்புலன்களைக் கொடுத்திருக்கிறார். அவருடன் தொடர்புகொள்ள அல்ல. பூமிக்குரிய
வீடுடன் தொடர்பு கொள்ள; பார்த்தல், ருசித்தல், உணர்தல், முகர்தல், கேட்டல்.
164. அதற்குள் நீங்கள் ஒரு ஆவியைக் கொண்டிருக்கிறீர்கள்.
அதற்கு ஐந்து வடிகால்கள் உள்ளன. மனசாட்சி, அன்பு போன்றவை. இந ஐந்து வடிகால்களின் மூலம்
நீங்கள் ஆவி உலகத்துடன் தொடர்பு கொள்ளுகிறீர்கள்.
165. உங்கள் சரீரம், சரீரத்துக்குரியவைகளுடன்
தொடர்புகொள்கின்றது. உங்கள் ஆவி, ஆவிக்குரியவைகளுடன் தொடர்புகொள்கின்றது. ஆனால் அதற்கும்
உள்ளில் உங்கள் ஆத்துமா உள்ளது. அந்த ஆத்துமா வந்த அணுவாகும்.
செய்தி:
வழி நடத்தும் தன்மை 65-1207
204. இப்போது, ஞாபகம் கொள்ளுங்கள், நீங்கள்
மூன்று சக்கரத்தில் இருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் ஒரே ஆள். பிதா, குமாரன், பரிசுத்த
ஆவி மூன்று சக்கரங்களாயிருந்து, ஒரே ஆளாயிருப்பது போல. ஒரே தேவனின் மூன்று தன்மைகள்
: குமாரத்துவம், பரிசுத்த ஆவி. நீங்கள் : சரீரம், ஆவி, ஆத்துமா.
205. வெளிப்புறமுள்ள சரீரத்துக்கு, நீங்கள்
பூலோக வீட்டுடன் தொடர்புகொள்ள, ஐந்து உட்குழாய்கள் உள்ளன : பார்த்தல், ருசித்தல், உணருதல்,
முகருதல், கேட்டல் என்பவை. உள்ளேயிருக்கும் ஆத்துமாவுக்கு ஒன்று தான் உண்டு. அங்குதான்
நீங்கள் ஜீவிக்கிறீர்கள்.
செய்தி:
விசுவாசத்தை வெளிப்படுத்துவது கிரியைகள் 65-1126
No comments:
Post a Comment