பில்லிபால் சாட்சிகள்
பில்லிபால் கர்த்தருடைய தூதனை காணுதல்
என் தகப்பனார்
என்னிடம், ‘நீ ஊழியத்தில் என்னுடன் வேலை செய்ய நான் விரும்புகிறேன்’ என்றார்.
எனவே நான்
14 வயதாக இருக்கும்போதே என்னுடைய தகப்பனாருடன் பிரயாணம் செய்ய தொடங்கினேன்.
இந்த சாட்சியை
நீங்கள் கேட்டிருக்கிறீர்கள் என்று நான் அறிவேன். ஆனால் எப்பொழுதும் யாராவது ஒருவர்
என்னை சந்தித்து, ‘நீங்கள் அதை திரும்பவும் கூறுவீர்களா?’ என்று கேட்கிறார்கள். எனவே
நான் அதை மீண்டும் கூறுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.
நாங்கள் வண்டாலியா,
இல்லினாய்ஸிலுள்ள ஒரு சிறிய மலிவான உணவு விடுதியில் தங்கியிருந்தோம். தகப்பனார் ஒரு கூடாரத்தைக் கொண்டிருந்து அங்கே போய்க்
கொண்டிருந்தார். நான் என் ஆடையில் அழுக்கு ஆகாமல் இருக்க அதற்கு மேலாக ஒரு உடையை (ஹல்ழ்ர்ய்)
உடுத்திக்கொண்டு என் தகப்பனாருடைய சகோதரனான டோனியுடன் வேலை செய்து கொண்டிருந்தேன்.
நாங்கள் ‘இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்’, ‘நான் அந்த
பரம தரிசனத்திற்கு கீழ்ப்படியாதவனாயிருக்கவில்லை’, ‘பிரான்ஹாம் கூட்டத்தில் தெய்வீக
சுகமளித்தல்’ ஆகிய மூன்று சிறு புத்தகங்களை
விற்றுக்கொண்டிருந்தோம். நான் அந்த கூடாரத்திற்கு சென்று அவைகளை விற்றுக்கொண்டிருந்தேன்.
என் மாமா டோனி
அவர்கள் கர்த்தருடைய தூதனைக் குறித்து எப்பொழுதும் என்னிடம் சொல்லிக் கொண்டிருப்பார்.
நாங்கள் தங்கியிருந்த உணவு விடுதியிலுள்ள அறையில் குளியலறை கூட கிடையாது. அங்கு மூலையில்
ஒரு சிறிய கை கழுவும் தொட்டி இருந்தது. குளியலறை அந்த கூடத்தின் (ட்ஹப்ப்) கடைசியில்
இருந்தது. டோனி அவர்களும் நானும் என் தகப்பனாரும் அங்கு தங்கியிருந்தோம்.
ஒரு நாள் இரவு
நாங்கள் படுத்து தூங்கிக்கொண்டிந்தோம். அதிகாலை 2 மணியளவில் தகப்பனார் என்னை எழுப்பினார்.
அவர் ஒரு தலையணையை என்னுடைய முகத்தில் வைத்து மறைத்துக்கொண்டு, “பில்லி” என்றார்.
நான், ‘என்ன,
அப்பா’ என்றேன்.
அவர், ‘அப்பா
பேசுகிற அந்த தூதனை உனக்குத் தெரியுமா?’ என்று கேட்டார்.
நான், ‘ஆம்’
என்றேன்.
அவர் என்னிடம்,
‘சென்ற இரவில் அவர் என்னை சந்தித்து சம்பவிக்கப்போகிற சில காரியங்களை என்னிடம் கூறினார். நான் அவரிடம், ‘நீர் திரும்பி
செல்வதற்கு முன்னால், நான் என் சகோதரனையும், என் மகனையும் எழுப்பி உம்மை காணும்படி
அவர்களை அனுமதிப்பீரா?' என்று கேட்டேன்’ என்றார்.
மேலும் அவர்
‘கர்த்தருடைய தூதன் அனுமதி கொடுத்து, ‘பில்லியை எழுப்பு' என்றார்’ என்று கூறினார்.
அது என்னை எதுவும்
செய்யவில்லை, ஆனால் என்ன ஒரு சிலாக்கியம்!
தகப்பனார் என்னிடம்,
‘அறையில் கை கழுவும் தொட்டி இருக்கும் இடம் உனக்கு தெரியுமா?’ என்று கேட்டார்.
நான், ‘ஆம்’
என்றேன்.
அவர், ‘அப்பா
உன் கண்களை விட்டு இந்த தலையணையை எடுக்கும்போது, அறையின் அந்த மூலையில் நோக்கிப் பார்,
தூதன் அங்கே நின்று கொண்டிருப்பார்’ என்று கூறினார்.
அவர் அந்த தலையணையை
என் கண்களை விட்டு நீக்கியவுடன் அந்த மூலையில் ஒரு மனிதர் நின்று கொண்டிருந்தார். அவர்
அங்கு தம்முடைய கரங்களை மடக்கிக் கொண்டு வெண்ணாடை அணிந்து, தலைமயிர் தம்முடைய தோள்கள்
வரை இருந்தவாறு கருமையான முகத்தோற்றத்துடன்
காணப்பட்டார்.
அது என்னை மரித்துப்
போகுமளவிற்கு திகிலடைய செய்தது, நான் உடனே அவசர அவசரமாக என் தகப்பனாரின் கரங்களை பற்றிப் பிடித்துக்கொண்டேன். அதை என்னால்
மறக்க முடியாது.
தகப்பனார் என்னிடம்,
‘அவர் உனக்கு தீங்கு எதுவும் செய்யமாட்டார். அவர் சர்வ வல்லமையுள்ள தேவனின் சமூகத்திலிருந்து அனுப்பப்பட்டிருக்கிறார்’ என்று
கூறினார்.
பிறகு கர்த்தருடைய
தூதன் ஒரு ஒளியின் ரூபத்தில் அறையை விட்டு கடந்து போய் விட்டார். ஒரு வானவில் அறைக்குள்
வந்து மணிக்கணக்காக தொங்கிக்கொண்டிருந்தது.
நான் என் தந்தையிடம்,
‘அது ஏன் சம்பவித்தது?’ என்று கேட்டேன். அவர், ‘பில்லி, அது ஏன் சம்பவித்தது என்றால்,
நீ என்னுடன் வேலை செய்யும்படி தேவன் உன்னை அழைத்திருக்கிறார்’ என்றார்.
அது என்னை ஒரு
மகத்தான மனிதான ஆக்கவில்லை, ஆனால் என்னவொரு சிலாக்கியம். நான் ஆப்பிரிக்காவிலோ, இந்தியாவிலோ எங்கிருந்தாலும் அது
ஒரு பொருட்டல்ல, அந்த தூதன் அருகிலேயே இருக்கிறார் என்று என்னால் கூற முடியும். நாம் செய்ய வேண்டுவதெல்லாம்
நம்மைத் தாழ்த்துவதே. உங்களை தாழ்த்துங்கள். நம்முடைய கர்த்தராகிய இயேசுவைக் குறித்து
பேசுங்கள். அவர் அருகில் வருவார். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்.
மாறுகண் பார்வையுடைய பிள்ளைகள் சுகமடைதல்
நான் மாறு கண் பார்வையுடைய பிள்ளைகள் மேடைக்கு
கொண்டு வரப்படுவதை கண்டிருக்கிறேன்..... நான் எப்பொழுதும் என் தகப்பனாரை கவனித்துக்
கொண்டிருப்பேன்.
அவர் அந்த நிலையில்
உள்ள ஒரு பையனுக்காக ஜெபிக்கும் போது தம்முடைய கரங்களை குறுக்காக வைத்து ஜெபிப்பதைக்
கண்டேன். தம்முடைய கரங்களை அவ்விதம் வைத்து, ‘இயேசுவின் நாமத்தில் சுகமடைவாயாக’ என்று ஜெபிப்பார்.
நான் அவரிடம்,
‘அப்பா, நீங்கள் அந்த மாறுகண்களைக் கொண்ட பிள்ளைகளுக்காக ஜெபிக்கும்போது, உங்கள் கைகளை
குறுக்காக வைப்பதை நான் கவனித்தேன். ஏன் அவ்வாறு செய்கிறீர்?’ என்று கேட்டேன்.
அவர், ‘பில்லி,
நீ கூர்ந்து கவனிப்பதைக் குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். அவர் என்னிடம் ‘ஜனங்கள் உன்னை
விசுவாசிக்கும்படி செய்தால், உன் ஜெபத்திற்கு முன்பாக எதுவும் நிற்க முடியாது’ என்றார்.
நான் என்னுடைய கரங்களை குறுக்காக வைக்கும்போது அது மாறுகண்ணை குறிக்கிறது. நான் கரங்களை
அதிலிருந்து எடுக்கும்போது, அவர்கள் கண்கள் சரியாகி சுகமடைகிறது’ என்று கூறினார்.
ஊமையும் செவிடுமானவர்களுக்கான பள்ளியிலுள்ள எல்லோரும் சுகமடைதல்
ஆர்கன்ஸôஸிலுள்ள லிட்டில் ராக் என்னுமிடத்திலுள்ள
ஊமையும் செவிடுமானவர்களுக்கான பள்ளியிலுள்ள எல்லோரும் சுகமாகி, அந்த பள்ளி காலியானது.
நம்முடைய கர்த்தரின் ஆச்சரியமான கிருபை அது. அந்த கூட்டத்தில் அவர்கள் ஒவ்வொருவரும்
இயேசு கிறிஸ்துவின் வல்லமையால் சுகமாக்கப்பட்டனர்.
சகோ. பிரான்ஹாமின் கூட்டத்திற்கு ஆம்புலன்ஸ் வாகனங்களில் வந்த வியாதியஸ்தர்
அனைவரும் சுகமடைதல்
ஆப்பிரிக்காவில்
நடந்த கூட்டங்களில் நான் என் தகப்பனாருடன் இருந்த சமயமது. ஆப்பிரிக்காவில் டர்பனில் நடந்த கூட்டம். கூட்டம்
முடிந்தவுடன் திடீரென அங்கே பெரிய சந்தடி காணப்பட்டது. என்ன சம்பவித்தது என தெரியவில்லை.
அது தகப்பனாரையும் கவலை கொள்ள செய்தது. ஜனங்கள் அங்குமிங்கும் சென்று கொண்டிருந்தனர்.
காவல் துறையினரும் சுற்றிலும் ஓடிக்கொண்டிருந்தனர்.
தகப்பனார் என்னிடம்,
‘போய் என்ன பிரச்சனை என்று பார்’ என்று கூறினார்.
எனவே அவர் ஒருவரை
வெளியே அனுப்பி, ‘என்ன பிரச்சனை?’ என்று கேட்டார்.
அவர், ‘சகோ.பிரான்ஹாமே,
ஒரு பிரச்சனையுமில்லை. காசநோய்(ப.ஆ) மருத்துவமனையிலிருந்து 17 ஆம்புலன்ஸ் வாகனங்களில்
நோயாளிகள் கூட்டத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தனர். இப்போது அவர்கள் ஒருவரையும் காணவில்லை.
அவர்கள் அனைவரும் சுகமடைந்து தங்களின் உறவினர்களுடன் வீடுகளுக்கு சென்று விட்டனர்’
என்றான்.
ஏன்? இயேசு கிறிஸ்து
நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்.
ஜெப அட்டை எண் மூன்று
ஒரு சமயம் ஒரு
சகோதரி கூட்டத்திற்கு வந்திருந்தாள். நான் அவளுக்கு ஒரு ஜெப அட்டை கொடுத்தேன். அவள்
சந்தோஷமாய் இருக்க வேண்டும். ஆனால் அவள் என்னிடம் வந்து, ‘இந்த ஜெப அட்டை எனக்கு வேண்டாம்’
என்றாள்,
நான், ‘ஏன் வேண்டாம்?’
என்று கேட்டேன்.
அவள், ‘ஏனெனில்
அந்த ஜெப அட்டை எண் எனக்கு பிடிக்கவில்லை’ என்று கூறினாள்.
நான், ‘சகோதரியே,
நான் அவைகளை ஒன்றாக கலந்து கொடுக்கிறேன். எனவே இக்காரியத்தில் என்னால் உனக்கு உதவி
செய்ய முடியாது’ என்றேன்.
அவள், ‘நான்
கடல் கடந்து இங்கு வருகிறேன். பல வருஷங்களுக்கு முன் உன் தகப்பானர் எனக்காக ஜெபித்து
விட்டு நான் ஒரு மிஷனரி ஆகப்போகிறேன் என்றார்.
நான் சுகமடைந்து தற்போது ஒரு மிஷனரியாக இருக்கிறேன். ஆனால் நான் அங்கிருந்த
சமயத்தில் மற்றொரு வியாதி என்னை தொற்றிக்கொண்டது’ என்றாள்.
மேலும் அவள்,
‘கர்த்தாவே, சகோ.பிரான்ஹாம் இருக்கும் இடத்திற்கு சென்று, அவருடைய மகன் எனக்கு ஜெப
அட்டை எண் 3-ஐ கொடுத்து, நான் ஜெப வரிசையில் மூன்றாவது நபராக அழைக்கப்படுவேனானால்,
கர்த்தாவே, அதை உம்மிடத்திலிருந்து வரும் ஒரு அடையாளமாக எடுத்துக்கொள்வேன். இவ்வாறு
நான் அந்த எண்ணைப் பெற்று, அவர் என்னை அழைக்கும் போது, நான் ஜெப வரிசையில் 3-வது நபராக
இருந்தால், சுகமடைவேன் என்பதற்கு அதுவே உம்மிடத்திலிருந்து வரும் அடையாளம்’ என்றாள்.
அவள் என்னிடம்,
‘தேவன் என்னை இங்கே கொண்டு வந்திருக்கிறார். நீர் எனக்கு ஜெப அட்டை எண் 98-ஐ கொடுத்துள்ளீரே’ என்றாள்.
நான், ‘எந்த
அட்டையை கொடுக்க வேண்டும் என்பதில் உனக்கு உதவி செய்ய முடியாது. நான் வருந்துகிறேன்.
என்னால் அதை மாற்ற முடியாது’ என்றேன்.
தகப்பனார் பிரசங்க
பீடத்துக்கு வந்து பிரசங்கித்தார். பிறகு அவர், ‘நாம் இன்றிரவு ஜெப வரிசையை தொடங்கப்
போகிறோம்’ என்றார்.
அவர், ‘நாம்
இன்றிரவு அதை வித்தியாசமாக செய்யப் போகிறோம். நாம் 100-லிருந்து தொடங்கி இறங்கு வரிசையில் அழைக்கப்
போகிறோம். 100,99,98...’ என அழைத்தார்.
மூன்றாவது எண்
(98)! ஓ, தேவன் தவறு செய்வதேயில்லை.
அவளுடைய எல்லாவற்றையும் கர்த்தர் அறிவார்
ஒரு முறை சிந்தனையை
பகுத்தறியும் சமயத்தில் மேடையில் ஒரு ஸ்திரீ வந்தாள்.
தகப்பனார் அவளிடம்,
‘மாலை வணக்கம், சகோதரியே’ என்றார். அவளும், ‘மாலை வணக்கம்’ என்றாள்.
அவர், ‘உன்னுடைய
பெயர் இன்னின்னது, நீ இந்த முகவரியில் வசிக்கிறாய்’ என்று கூறினார்.
அவள், ‘அது சரியே’
என்றாள்.
அப்பொழுது அங்கே
கீழே இரண்டு ஸ்திரீகள் இதை கவனித்து கொண்டிருந்தனர்.
அவர்களில் ஒருத்தி,
‘ஆ, அங்கே அது தவறாயுள்ளது. அங்கே மேலே மேடையில்
இருப்பவளாகிய மேரியை எனக்குத் தெரியும், அவள் அங்கே வசிக்கவில்லை. அவள் வால்நெட்
தெருவில் வசிக்கிறாள்’ என்றாள்.
ஆனால் சகோ.பிரான்ஹாமோ,
‘நீ 824 மேப்பிள் தெருவில் வசிக்கிறாய்’ என்று கூறினார். அவளும், ‘ஆம்’ என்றாள்.
எனவே இந்த ஸ்திரீ,
‘அவள் பொய் சொல்கிறாள். அவள் எங்கு வசிக்கிறாள் என்பது நமக்கு தெரியும்’ என்றாள்.
ஆராதனை முடிந்த
பிறகு மேடையில் நின்ற ஸ்திரீயும் அந்த இரண்டு ஸ்திரீகளும் சந்தித்துக் கொண்டனர்.
‘மேரி எப்படி
இருக்கிறாய்?’
‘ஜேன் எப்படி
இருக்கிறாய்?’
அவர்களிருவரும்
ஒருவரையொருவர் அறிந்திருந்தனர்.
ஒருத்தி அவளிடம்,
‘நீ கூறுவதை நான் கேட்டேன். நீ அந்த முகவரியில் வசிக்கவில்லையே. மேரி, நீ மேப்பிள்
தெருவில் வசிக்கவில்லையே. நீ வால்நட் தெருவில் அல்லவா வசிக்கிறாய். நீ அங்கு வருடக்கணக்காக
வசிக்கிறாய் என்பது எனக்குத் தெரியும்’ என்றாள்.
அதற்கு மேடையில்
இருந்த ஸ்திரீ, ‘ஓ, நான் உன்னிடம் சொல்ல மறந்து விட்டேன். நான் நேற்றைக்கு முந்திய தினம் தான் இடம் பெயர்ந்தேன்
(ம்ர்ஸ்ங்க்)!’ என்றாள்.
ஆம், தேவன் தவறு
செய்வதேயில்லை.
No comments:
Post a Comment