மணவாட்டி ஊழியம்

மணவாட்டி ஊழியம்

Thursday, November 27, 2014

மகிமையான ஆயிரவருட அரசாட்சி
The Glorious Millennium


 1 கொரிந்தியர் 2:9-10

எழுதியிருக்கிறபடி: தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம் பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷருடைய இருதயத்தில் தோன்றவுமில்லை.

   நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார். அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும், ஆராய்ந்திருக்கிறார்.


 
 யாத்திரையின் தருணம் இப்பொழுது வந்து விட்டது. வெளியே அழைக்கப்பட்டு, வாக்குத்தத்தம் செய்யப்பட்ட தேசத்திற்கு கொண்டு செல்லப்படுவதற்கு சமயமாகி விட்டது. மற்றொரு தேசத்திற்கு செல்வதற்காக வாக்குத்தத்தம் அல்ல நமது வீட்டிற்கு, ஆயிரம் வருட அரசாட்சிக்கு. வெளியே அழைக்க சமயம் வந்து விட்டது இந்த நாட்டின் அக்கிரமம் கர்த்தருக்கு சித்தமானால் இன்றிரவு மறுபடியும் அதைக் குறித்து பேசலாம்... அவளுடைய அக்கிரம் நிறைவாகி விட்டது! அவள் அசுத்தமாயிருக்கிறாள்!

மூன்றாம் யாத்திரை, ஜூன் 30, 1963

    ஆனால் இந்த சமயத்தில் கர்த்தருக்கு மகிமை நமது மத்தியில் நாம் கண்டுகொண்டிருக்கும் இந்த அக்கினி ஸ்தம்பம், நம்மை ஆயிரம் வருட அரசாட்சிக்கு வழி நடத்தும், இந்த யாத்திரைக்குப் பிறகு, அந்த மகத்தான ஆயிரம் வருட அரசாட்சிக்காக, அவர் தமது ஜனங்களிடம் திரும்ப வருவார். அங்கு நாம் அவருடன் நித்திய காலமாய் வாழ்வோம். அவர் எப்பொழுதும் பிதாவின் வாக்குத்தத்தத்தை கொண்டிருக்கிறார். அது சரியென்று அவர் எக்காலத்தும் நிரூபித்து வருகிறார்.

மூன்றாம் யாத்திரை, ஜூன் 30, 1963

    நீங்கள் இதை கவனிக்க விரும்புகிறேன். அதே அக்கினிஸ்தம்பம் மறுபடியுமாக வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு - ஆயிரம் வருட அரசாட்சிக்கு - மக்களை வழிநடத்துகின்றது. ஆயிரம் வருட அரசாட்சிக்காக பூமியானது சுத்திகரிக்கப்பட வேண்டுமென்று நாம் ஆறாம் முத்திரையின் கீழ், பரிசுத்த ஆவியின் ஏவுதலினால், பார்த்தோம். அதற்கு முன்பு அம்முத்திரையைக் குறித்து அவ்விதம் பிரசங்கிக்கப்படவில்லை. அக்கினி ஸ்தம்பம் அவர்களை ஆயிரம் வருட அரசாட்சிக்கு வழிநடத்துகின்றது.

    கவனியுங்கள், இஸ்ரவேல் ஜனங்களை அடிமைத்தனத்தினின்று வெளியே கொண்டுவந்து, தேவனுடைய தலைமையின் கீழ் வழிநடத்தின அந்த அக்கினி ஸ்தம்பம்; தேவன்தான் அந்த அக்கினி. அந்த அக்கினி ஸ்தம்பம் தான் தீர்க்கதரிசியை அபிஷேகம் செய்தது. மோசே இவ்வூழியத்திற்கென்று பிரித்தெடுக்கப்பட்டான் என்பதற்கு அந்த அக்கினி ஸ்தம்பம் பரலோகத்தின் சாட்சியாக இருந்தது.

மூன்றாம் யாத்திரை, ஜூன் 30, 1963

    முதலாம் யாத்திரையின் போது அவர் என்ன செய்தார்? ஒரு இயற்கை தேசத்தை விட்டு அவர்களை வெளியே கொணர்ந்து, மற்றொரு இயற்கை தேசத்துக்குள் வழிநடத்தினார். இரண்டாம் யாத்திரையின் போது, அவர் ஒருவகை ஆவிக்குரிய நிலையிலிருந்து அவர்களை வெளியே கொணர்ந்து, பரிசுத்த ஆவியின் அபிஷேகத்திற்குள் வழிநடத்தினார். இப்பொழுது அவர் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்திலிருந்து நித்திய தேசத்துக்குள் வழி நடத்துகின்றார். அங்கு ஆயிரம் வருட அரசாட்சி நடைபெற்று, அது நித்தியமாக இருக்கும். அதே அக்கினி ஸ்தம்பம், அதே அபிஷேகத்தின் முறையைக்கைக் கொண்டு, அதே தேவன் அதே கிரியைகளைச் செய்கிறார். முதலாம் யாத்திரையைக் குறித்தும், இரண்டாம் யாத்திரையைக் குறித்தும் அதே தேவனுடைய வார்த்தை தான் உரைத்துள்ளது. அதே தேவனுடைய வார்த்தை தான் மூன்றாம் யாத்திரையைப் பற்றியும் கூறுகின்றது. அதை நாம் இப்பொழுது காண்கிறோம்.

மூன்றாம் யாத்திரை, ஜூன் 30, 1963

    கலியாண விருந்து மிக அருகாமையிலுள்ளது என்று நாம் காணலாம். நான் மறுபடியும் உங்களைக் காணாவிட்டால், கலியாண விருந்து மிக அருகாமையிலுள்ளது என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். அப்பொழுது வாக்குத்தத்தம் செய்யப்பட்ட பிரகாரம், ராஜ்யம் அளிக்கப்பட்டு அந்த மகத்தான ஆயிரம் வருட அரசாட்சி, சபை எடுத்துக் கொள்ளப்படுதல், துன்மார்க்கரின் அழிவு இவை நிகழும், ஆறாம் முத்திரையின் கீழ் எரிமலை குழம்பினால் உலகம் சுத்திகரிக்கப்பட்டு, எல்லா ஊழலும் உலகத்தின் பாவமும் அவளிலிருந்து அகற்றப்பட்டு, வரப்போகும் அந்த பிரகாசமான ஆயிரம் வருட அரசாட்சிக்கென்று அவள் மீண்டும் உருவாக்கப்படுவாள்.

    இந்த மகத்தான மூவகை வெளிப்பாடுகளை நாம் காணும்போது; கிறிஸ்துவுக்குள் தேவன், சபைக்குள் கிறிஸ்து; ராஜ்ஜியம் வருகின்றது. கிறிஸ்துவும் அவருடைய மணவாட்டியின் பிரதிநிதித்துவமாக ஆதாமும் ஏவாளும் ஏதேன் தோட்டத்திற்கு மறுபடியுமாக மீட்கப்படுகின்றனர், அப்பொழுது அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே ராஜ்ஜியமானது திரும்ப அளிக்கப்படப் போகிறது. தேவனுக்கு ஸ்தோத்திரம்!

கிறிஸ்து தேவனுடைய பரமரகசியத்தின் வெளிப்படுதலாயிருக்கிறார், ஜூலை 28, 1963, பத்தி எண் 579-580

    இஸ்ரவேலரில் மீதியானவர்கள் பொதுவான  உயிர்த்தெழுதல் வரைக்கும் எழுந்திருப்பதில்லை. இப்பொழுது, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வருகையின் போது, அவருடைய வருகையில்  உண்மையில் பிரியம் கொண்டவர்களும்  அதற்கென்று வாழ்ந்து கொண்டிருப்பவர்களும் ; அவர் ஆகாயத்தில் தோன்றும் போது, கிறிஸ்துவுக்குள் மரித்த சபை எழுந்திருந்து ஒரு இமைப்பொழுதில்  மறுரூபமாகும். மற்றவர்கள் அதைக்குறித்து ஒன்றுமே  அறியமாட்டார்கள். அவர்கள் நகரத்தில் அநேகருக்குக் காணப்பட்டார்கள் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள் (மத்.27:53). எடுத்துக்கொள்ளப்படுதலின் போதும் அவ்வாறே சம்பவிக்கும். நாம் ஒருவரையொருவர் காண்போம், அவர்களை நாம் காண்போம். உலகத்திலுள்ள மற்றவர்கள் அவர்களைக் காணமாட்டார்கள். அது எடுத்துக்கொள்ளப்பட்டு இரகசியமாக சென்று விடும். அதன்பிறகு அந்த நாளுக்காக காத்திருந்து, அந்த மகிமையான  ஆயிரம்  வருட அரசாட்சிக்கு அது பூமிக்குத் திரும்ப வரும், மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருடம் முடியுமளவும் உயிரடையவில்லை (வெளி. 20:5). அதன் பிறகு பொதுவான உயிர்த்தெழுதல் உண்டாகும்.

நான் எப்படி ஜெயங்கொள்வது?, ஆகஸ்ட் 25, 1963, பத்தி எண் 61

    இப்பொழுது திறக்கப்பட்ட ஆறாம் முத்திரையிலும் மூன்றுவித நோக்கங்கள் அடங்கியிருப்பதை நாம் காணலாம். இப்பொழுது அம்மூன்று நோக்கங்களும் இவைகளே.
    முதலாவதாக, உறங்கிக் கொண்டிருக்கும் கன்னிகைகள் சுத்திகரிக்கப்படுவதற்கென உபத்திரவ காலத்தில் பிரவேசிக்க வேண்டும். அவளிடமிருந்து அவிசுவாசம் என்னும் பாவம் போக்கப்பட வேண்டும். செய்தியை அவள் புறக்கணித்ததால் அவள் சுத்திகரிக்கப்பட வேண்டும்! இது உபத்திரவ காலத்தில் நிகழ்கின்றது. வெளிப்படுத்தல் 6-ம் அதிகாரத்திலும் 7-ம் அதிகாரத்திலும் இடையே அவள் சுத்திகரிக்கப்பட்டு, அவளுக்கு வெண்வஸ்திரம் அளிக்கப்படுகின்றது. அவள் மணவாட்டியல்ல, அவள் சபையை சார்ந்தவள். செய்தியை ஏற்றுக்கொள்வதற்கு அவளுக்கு சந்தர்ப்பம் வாய்க்காமலிருந்திருக்கலாம். அல்லது கள்ளத்தீர்க்கதரிசிகளின் மூலமாய் அவர்கள் கண்கள் மறைக்கப்பட்டிருக்கலாம். எனினும், அவர்கள் உத்தம இருதயம் படைத்தவர்கள். தேவன் அவர்கள் இருதயங்களை அறிவார். அவர்கள் உபத்திரவ காலத்தில் சுத்திகரிக்கப்படுகின்றனர்.

    வேறொரு சுத்திகரிப்பின் காலம் வருகின்றதைக் கவனித்தீர்களா? அது இஸ்ரவேலர் ஒன்று கூடும்போது நிகழும். இது இரண்டாம் நோக்கமாகும். உபத்திரவ காலத்தில் தேவன் இஸ்ரவேலரை சுத்திகரிப்பார், அங்கு ஒன்று கூடும் லட்சக்கணக்கானவர்களில் 1,44,000 பேர் தெரிந்தெடுக்கப்பட்டு சுத்திகரிக்கப்படுகின்றனர். தேவன் இஸ்ரவேலரை சுத்திகரிக்கின்றார்.

பூமி முழுவதும் சுத்திகரிக்கப்பட வேண்டுமென்பதை கவனியுங்கள். சந்திரனும், நட்சத்திரங்களும், இயற்கை யாவும் சுத்திகரிக்கப்படும் அது என்னவென்று தெரிகின்றதா? பூமியானது சுத்திகரிக்கப்பட்டு, தன்னை புதுப்பித்துக் கொண்டு, ஆயிரம் வருட அரசாட்சிக்கு ஆயத்தமாகின்றது. ஆயிரம் வருட அரசாட்சி வரவிருக்கின்றது. அழுக்குள்ள யாவும் ஆறாம் முத்திரையின்போது சுத்திகரிக்கப்பட வேண்டும்.

ஏழாம் முத்திரை, மார்ச் 24, 1963, பத்தி எண் 387-390

ஆயிரம் வருட அரசாட்சி தொடங்கும்போது, அவிசுவாசிகள் எவ்விதம் பூமியிலிருந்து அகற்றப்படுவார்கள்?

    அவிசுவாசிகள் புத்தியில்லாத கன்னிகைகளுடன் உபத்திரவ காலத்திற்குள் பிரவேசிப்பார்கள், அந்த மற்றெல்லாருமே (அவிசுவாசிகள், புத்தியில்லாத கன்னிகைகள்), மற்றும் வெளியே எடுக்கப்படும் இஸ்ரவேலில் மீதியானவர்களும்.

கேள்விகளும் பதில்களும் (COD 2:22), ஆகஸ்ட் 30, 1964 மாலை, கேள்வி எண் 404

ஆயிரம் வருட அரசாட்சியின் போது புத்தியில்லாத கன்னிகைகள் எங்கிருப்பார்கள்?

    ஆயிரம் வருட அரசாட்சியின் போது, அவர்கள் கல்லறையில் இருப்பார்கள். மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை (வெளி. 20:5).

கேள்விகளும் பதில்களும் (இஞஈ 2:22), ஆகஸ்ட் 30, 1964 மாலை, கேள்வி எண் 406
ஆயிரம் வருட அரசாட்சி ஆயிரம் ஆண்டு காலம் இருக்குமா அல்லது அது வெறும் காலக் கணக்கா?

    இன்று காலையில் அதற்கு நான் பதில் கூறினேன். பாருங்கள்? அது ஆயிரம் ஆண்டுகள். சரி.

கேள்விகளும் பதில்களும் (இஞஈ 2:22), ஆகஸ்ட் 30, 1964 மாலை, கேள்வி எண் 415

சபை காலம் முடிவடைந்து அந்தகாரம் சூழத்தொடங்கி, மணவாட்டி அழைக்கப்பட்டு விட்டிருந்தால், நாம் ஏற்கனவே உபத்திரவ காலத்தில் பிரவேசித்து விட்டோமா?

    இல்லை, இல்லை, இல்லை, நீங்கள்... இந்த கேள்விக்கு விடையளிக்க சற்று அதிக நேரம் இருந்தால் நலமாயிருக்கும். பாருங்கள். பாருங்கள்? மணவாட்டி சபையை விட்டு எடுக்கப்படும் போது, சபை காலம் முடிவடையும். லவோதிக்கேயா குழப்பத்துக்குள் செல்லும்; மணவாட்டி மகிமைக்குச் செல்கிறாள். புத்தியில்லாத கன்னிகைகளின் மேல் 31/2 ஆண்டுகள் உபத்திரவ காலம் வந்திறங்கும். இஸ்ரவேல் அப்பொழுது தன் தீர்க்கதரிசனத்தைப் பெற்றுக் கொண்டிருப்பாள்; பிறகு இஸ்ரவேலுக்கு உபத்திரவ காலம் தொடங்குகிறது; அதன் பிறகு அர்மகெதோன் யுத்தம் உண்டாகி, அது எல்லாவற்றையும் அழித்து போடும். பிறகு மணவாட்டி மணவாளனுடன் ஆயிரம் வருட அரசாட்சிக்காக திரும்பி வருகிறாள்; அதன்பிறகு வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு வருகிறது; அதன்பிறகு புதிய வானமும் புதிய பூமியும் உண்டாகி, புதிய நகரம் பரலோகத்தை விட்டு தேவனிடத்திலிருந்து இறங்கி வருகிறது. அப்பொழுது காலமும் நித்தியமும் ஒன்றாக இணைகிறது.

கேள்விகளும் பதில்களும் (COD 2:22), ஆகஸ்ட் 30, 1964 மாலை, கேள்வி எண் 392

    மரித்தோரின் உயிர்த்தெழுதல் இருக்கும். அவர் அதை உறுதிபடுத்துவார். அது உண்மை. அவர் அதை நிரூபிப்பார். சபையின் எடுத்துக்கொள்ளப்படுதல் நிகழும். அது எப்படி முடியும்? எனக்குத் தெரியாது, ஆனால் அவர் அதை நிரூபிப்பார். அவருடைய வார்த்தை உண்மையானது. ஆயிரம் வருட அரசாட்சி இருக்கும். அவர் அதை நிரூபிப்பார். அது அவருடைய வார்த்தை. புதிய வானமும் புதிய பூமியும் இருக்கும். அவர் அதை நிரூபிப்பார். ஏனெனில் அவருடைய வார்த்தை அவ்விதம் கூறுகின்றது. நீதிமான்கள் மாத்திரமே அங்கிருப்பார்கள். அவர் அதையும் நிரூபிப்பார். அது உண்மை. இந்த வார்த்தையின் ஒரு பாகமாக ஆக்கப்பட்டவர்கள் (பாருங்கள், அவர்களுடைய காலத்தில் இந்த வார்த்தையில் தங்கள் பாகத்தையும் ஸ்தானத்தையும் அறிந்து கொண்டவர்கள்) மாத்திரமே அங்கிருப்பார்கள். ஏனெனில் அது தான் அவர், அவர் வார்த்தையாயிருக்கிறார். ஸ்திரீ என்பவள் யார்? மனிதனின் சாயல். சபை என்பது என்ன? வார்த்தையின் சாயல். பாருங்கள், அது முற்றிலும் அப்படியே. பாருங்கள்? எனவே அது அப்படியே இருக்கும். அவருடைய வார்த்தையில் உண்மையான விசுவாசம் கொண்டுள்ளவர் மட்டுமே இதை அறிந்து விசுவாசிக்க முடியும். அது உண்மையென்று நிரூபிக்க தேவன் அவர்களுக்கு உதவி செய்கிறார், அது உண்மை.

அவருடைய வார்த்தையை நிரூபித்தல், ஆகஸ்ட் 16,1964, பத்தி எண் 232

    இப்பொழுது கவனியுங்கள், ஜனங்களை ஒன்றாக அழைப்பதற்கு எக்காளம் உபயோகிக்கப்படுகிறது - அவர்களை ஒரு காரியத்துக்காக ஒன்று கூடச் செய்தல். சில நேரங்களில் அது யோசேப்பு போன்ற முக்கியமான ஒருவரின் வருகையை அறிவிக்கிறது. அது ஏசாயாவில் உரைக்கப்பட்டுள்ள அந்த பெரிய எக்காளத்துக்கு அடையாளமாயுள்ளது. (அதைக் குறித்து சற்று கழிந்து நாம் பேசுவோம்). அந்த பெரிய எக்காளம் ஊதப்படும்போது, அங்கு கொடியேற்றப்பட்டு, எல்லா ஜாதிகளும் எருசலேமில் கூடுவார்கள் என்று ஏசாயா கூறியுள்ளான் (ஏசாயா 27:13). அது ஆயிரம் வருட அரசாட்சி தொடங்கும்போது - அந்த பெரிய எக்காளம்.
எக்காளப் பண்டிகை, ஜூலை 19, 1964

    ஏசாயா 27:12,13ல் தான் அவர் எக்காளத்தை ஊதுகிறார். அப்பொழுது இஸ்ரவேல் தன் சொந்த நாட்டில் உள்ளதென்றும் தேவன் அவளுடன் இருக்கிறார் என்பதையும் எல்லா தேசங்களும் அறிந்து கொள்ளும். அப்பொழுது மணவாட்டி மணவாளனுடன் கூட இருக்க வருவாள், மணவாளனும் மணவாட்டியும் (அதன் பிறகு அந்த மகத்தான ஆயிரம் வருட அரசாட்சி. முழு உலகமும் அணுசக்தியினால் அழிக்கப்பட்ட பின்பு, புதிய வானமும் புதிய பூமியும் இருக்கும்) என்றென்றைக்கும் வாழுவார்கள்.

எக்காளப் பண்டிகை, ஜூலை 19, 1964

    இப்பொல்லாத காலத்தின் தேவனாகிய சாத்தானானவன் இப்பொல்லாத காலத்தின் மக்களுக்கு தனது அறிவை அளித்து, அவர்களைத் தனது கலப்படமான மரமாகிய நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கச் செய்துள்ளான். ஒரு மகத்தானதொரு கிறிஸ்தவ நாகரீகத்தை, தன்னுடைய நன்மை தீமை அறியத்தக்க அறிவினால் கட்டிக்கொண்டிருக்கிறதாக அவன் கூறுகிறான். ஆனால் கிறிஸ்துவின் எளிய கற்புள்ள கன்னிகையாகிய மந்தை - வார்த்தை மணவாட்டியானவள் - அவனுடைய அறிவைப்பற்றி அக்கரை கொள்வதில்லை. அவள் அவனிலிருந்து தன்னை விலக்கிக் கொள்கிறாள். அது என்ன?

    அவளைக் குறித்து ஒரு நிமிடம் பேசுவோம். அவள் தனது ஆண்டவருக்காகவும், அவரோடு வாழவிருக்கும் ஆயிரமாண்டு தேன் நிலவுக்காகவும் காத்திருக்கிறாள். அவள் வார்த்தை மணவாட்டியாயிருக்கிறபடியால், வார்த்தை மணவாளனோடு இருப்பாள்.

இப்பொல்லாத காலத்தின் தேவன், அகஸ்ட் 1, 1965,பத்தி எண் 127-128

    இப்பொழுது கவனியுங்கள், அது மல்கியா 4 அல்ல; அது மல்கியா 3 ஆகும். மல்கியா 3-ல் உள்ள எலியா யோவான் ஆகும். மல்கியா 4 அல்ல. ஏனெனில் இந்த மல்கியா 4-ம் அதிகாரத்தில் குறிப்பிட்ட அந்த தீர்க்கதரிசனமானது வரும்பொழுது பூமியானது அக்கினியினால் அழிக்கப்பட்டு 1000 வருட அரசாட்சியில் நீதிமான்கள் துன்மார்க்கரின் சாம்பலின் மேல் நடப்பார்கள். அத்தகைய காரியம் யோவானின் நாட்களில் நடைபெறவில்லை.

நம்பமுடியாதது, ஆனாலும் உண்மை!, ஜூன் 2, 1964, பத்தி எண் 111

    கடைசிக்கால சபைக்கென அந்த விதையை விதைக்கப் போகின்ற அந்த ஒருவன் எங்கே? அந்த முதிர்ந்த விதை, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட எலியா எங்கே? அவனுடைய நாட்களுக்குப் பிறகு உடனே அந்த மகா பெரிய உபத்திரவம் வந்து பூமியைச் சுட்டெரித்துப் போடும்.

    பிறகு சபை மற்றும் அந்த மணவாட்டியின் திரும்ப வருதலில், அக்கினியினால் சுத்தமாக்கப்படுகின்ற போது, ஆயிர வருட அரசாட்சியில், மணவாட்டியும் கிறிஸ்துவும் அவர்களுடைய சாம்பலின் மீது நடப்பார்கள். அங்கே அவர்கள் அரசாட்சி செய்வார்கள். சுவிசேஷத்தை கேட்டிராத அஞ்ஞானிகள் அந்த சமயத்தில் எழுப்பப்படுவார்கள், தேவனுடைய குமாரர் வெளிப்படுத்தப்படுவர். அவன் அரசாட்சி செய்ய வேண்டுமெனில், அரசாட்சி செய்யப்படுவதற்கென ஒன்றை அவன் கொண்டிருக்க வேண்டும், அவனுக்கு ஒரு ஆட்சி எல்லை இருக்கின்றது. அவர்கள் கிறிஸ்துவோடு அரசாட்சி செய்து ஆளுகை செய்தனர். கிறிஸ்து தேசங்களை இருப்பு கோலால் ஆளுகை செய்தார். அப்பொழுது சுவிசேஷம்... அப்பொழுது வெளிப்படுத்தப்பட்ட தேவ குமாரர், அவர் பூமியில் இருந்தபோது எந்த விதமான அதிகாரத்தை உடையவராக இருந்தாரோ அதே அதிகாரத்தை உடையவர்களாக, அந்த அரசாட்சியில், ஆயிரவருட அரசாட்சியில் வருவார்கள், பாருங்கள், சாம்பலின் மீது நடப்பார்கள்.

கேள்விகளும் பதில்களும் (COD 2:15), மே 27, 1962,பத்தி எண் 177-178

    ஆகட்டும். நாம் அநேகப் பெரிய சண்டைகளை, ஆவிக்குரிய சண்டைகளைச் செய்திருக்கிறோம். அநேகப் பெரிய வெற்றியின் நாட்களை சபையானது பெற்றிருக்கிறது. நான் சபையை, கிறிஸ்துவின் சரீரத்தைக் குறிக்கிறேன். இப்போது, நான் ஸ்தாபன ஒழுங்குகளைக் குறித்துப் பேசுகிறேன். விசுவாசிகளான சரீரமானது, காலங்கள் தோறும் தொடர்ந்து பல வெற்றியின் நாட்களைக் கண்டிருக்கிறது. நாம் பல்வேறு யுத்தங்களையும், யுத்தங்களைப் பற்றிய செய்திகளையும், ய-நாட்களையும், ய-நாட்களையும், மேலும் ய-நாட்களையும், சந்தித்தோம். இது முடிவிலே அர்மகெதோனில் நடக்கப் போகிற மகா யுத்தத்தில் வந்து சேரும். ஆக, அதுவே கடைசியானதாக இருக்கும். அந்த மேன்மையான ஆயிரங்கால அரசாட்சிக்கு சிறிது முன்னதாக அவள் அர்மகெதோன் யுத்தத்திற்கு வரும்போது, அது எல்லாவற்றையும் தீர்த்து வைக்கும். அர்மகெதோன் பூமியைச் சுத்தப்படுத்துவதாக இருக்கும்! இந்த பூமியானது அணுக்களின் வீசுதலினாலும், மேலும் எரிமலைச் சாம்பல் போன்றவைகளாலும் தன்னை மறுபடியும் தூய்மைப்படுத்திக் கொண்டு, பூமியின் மேல் ஊறிப் போன மனித இரத்தத்தையும், பாவத்தையும் பூமியானது தனக்கு அடியிலே மூழ்கடிக்கும் போது மறுபடியுமாக எரிமலைகள் வெடித்துச் சிதறி அந்த மேன்மையான ஆயிரங்கால அரசாட்சிக்காக இந்த பூமியை புதுப்பித்து சுத்தப்படுத்தும். ஒரு ஜனமானது இங்கே வாழும்படியாக அவர் தம்முடைய சபையை அந்த சமயத்தில் சுத்தப்படுத்துகிறார். ஆமென்! நான் உங்களுக்கு சொல்கிறேன் பாருங்கள், இது எனக்கு பிடித்தமாயிருக்கிறது. ஆம் ஐயா! அதோ ஒரு காலம் வருகிறது அப்போது இது பிரமாதமாக இருக்கும்!

வெற்றியின் நாள், ஏப்ரல் 21, 1963, பத்தி எண் 77

    முடிவில் ஒரு கர்த்தராகிய இயேசு, அவருடைய மணவாட்டி அநேகர், ஒருமை விளங்குகிறதா? சிங்காசனத்தில் ஒரு தாவீது - (தேவனுடைய இருதயத்துக்கேற்ற ராஜா) - அவனுக்கு ஐந்நூறு மனைவிகள்! ஆயிரம் வருட அரசாட்சியில் இயேசு சிங்காசனத்தில் வீற்றிருந்து (அல்லேலூயா!) அவருக்கு தொடக்கத்தில் இருந்தது போன்ற ஒரு மனைவி; சர்வவல்லமையுள்ள தேவனுடைய கரங்களினால் உயிர்த்தெழுதலில் பூமியிலிருந்து சிருஷ்டிக்கப்பட்டு, அநேக அங்கத்தினர்களைக் கொண்டவளாயிருக்கிறாள். பார்த்தீர்களா?
விவாகமும் விவாகரத்தும், பெப்ரவரி 21, 1965, பத்தி எண் 241

    சிங்கம் முதன்முதலாக சிருஷ்டிக்கப்பட்டபோது, அது மனிதனுடன் நட்பு கொண்டிருந்தது. ஆனால் பிசாசோ மனிதனுடன் அது பகையுணர்ச்சி கொள்ளச் செய்தான். அது உண்மை. ஆனால் ஆயிரம் வருட அரசாட்சியில் ஓநாயும் ஆட்டுக் குட்டியும் ஒன்றாக மேயும். சிங்கம் மாட்டைப்போல் புல்லைத் தின்று அதனுடன் படுத்துக்கொள்ளும். ஆயிரம் வருட அரசாட்சியின் போது அவை ஒன்றுக்கொன்று தீங்கிழைக்காது. பிசாசு அப்பொழுது போய்விட்டிருப்பான். இவன்தான் இந்த மிருகங்கள் மற்றவைகளைப் பீறிக் கொன்றுத் தின்னும்படி செய்கிறான். ஆனால் சிங்கத்திலிருந்தவனிலும் அந்த தீர்க்கதரிசியாகிய தானியேலிலிருந்தவர் பெரியவர். பாருங்கள்? அந்த சிங்கத்திலிருந்தவனிலும் அந்த தீர்க்கதரிசியிலிருந்தவர் பெரியவர்.

உங்களிலிருக்கிறவர், நவம்பர் 10, 1963, பத்தி எண் 176

    நாம் அக்கரை கொள்ள வேண்டியதெல்லாம் அதுவே, தேவன் வாக்கு பண்ணியிருக்கிறார்! அது எவ்விதமாக இருக்கப் போகின்றது? என்னால் அதை உனக்கு சொல்ல முடியாது. ஆனால் தேவன் அப்படி சொல்லியிருக்கிறார். அவர் இரண்டாவது முறையாக இயேசு கிறிஸ்துவை அனுப்புவேன் என்று சொன்னார். அவர் சரீரபிரகாரமாக நிச்சயம் வருவார். அவர் தமக்கு சொந்தமானதை உரிமை பாராட்டுவார். மீட்கப்பட்டவர்கள் அவரோடு இந்த பூமியில் ஆயிரம் வருடங்கள், ஆயிர வருட அரசாட்சி இருக்கத்தான் போகின்றது. நாம் அந்த நேரத்தை எதிர்நோக்கி இருக்கிறோம், அதைத் தான் அவர் வாக்குபண்ணியிருக்கிறார்.

கோத்திர பிதா ஆபிரகாம், பிப்ரவரி 7, 1964, பத்தி எண் 14

முத்திரைகள் திறக்கப்பட்ட போது காலம் முடிவுறுகிறது என்றால், அப்பொழுது... முத்திரைகள் திறக்கப்பட்ட போது காலம் முடிவுற்றது என்றால் (என்னை மன்னிக்கவும்), அப்பொழுது ஆயிரம் வருட அரசாட்சி காலமும் முடிந்திருக்க வேண்டுமே, இல்லையா?

     இல்லை, இல்லை! முத்திரைகள் திறக்கப்பட்ட போது, காலம் முடிவுறவில்லை. அதை தவறாகப் புரிந்து கொண்டீர்கள். அப்பொழுது என்ன நடந்ததென்றால், இரகசியங்கள் வெளிப்படுத்தப்பட்டன, காலம் முடிவுறவில்லை. பாருங்கள்? இப்பொழுது உன்னிப்பாக கவனியுங்கள், நீங்கள் இதை ஒலிநாடாவிலிருந்து பெறுவீர்களானால், ஒலிநாடாவைப் போட்டுக் கேளுங்கள்.

    காலம் முடியவில்லை... இந்த கேள்வியைக் கேட்டவர் ஆயிரம் வருட அரசாட்சி முடிவடைந்து விட்டது என்னும் நம்பிக்கை கொண்ட கூட்டத்தாரில் ஒருவராக இருக்க வேண்டும். ஏனெனில் பாருங்கள்? சபையானது வீடுசென்று பூமிக்குத் திரும்ப வந்த பிறகு நமக்கு ஆயிரம் ஆண்டுகள் இருக்கும். புதிய வானம் புதிய பூமியின் போது காலம் முடிவடைகின்றது.

    இப்பொழுது, ஆயிரம் வருட அரசாட்சியின் காலம் புதிய வானமும் புதிய பூமியும் அல்ல. ஆயிரம் வருட அரசாட்சிக்கு பிறகும் பாவம் இருக்கும். ஆயிரம் வருட அரசாட்சி, நோவா பேழைக்குள் பிரவேசித்து, தண்ணீருக்கு மேலே உயர்த்தப்பட்டு, மற்ற பக்கத்தில் காமையும் மற்றவர்களையும் கொண்டு வந்ததற்கு முன்னடையாளமாயுள்ளது. பாவமும் கூட பேழைக்கு வெளியே வந்தது. பாருங்கள்?

    ஆனால் ஏனோக்கோ மேலே எடுத்துக்கொள்ளப்பட்டான், அவன் மேலே எடுத்துக்கொள்ளப்பட்ட மணவாட்டிக்கு முன்னடையாளமாயிருக்கிறான், மற்ற பக்கத்தில் கொண்டு வரப்பட்டவர்களுக்கு அல்ல. எனவே பாவம் ஆயிரம் வருட அரசாட்சியின் மறுபக்கத்திலும் இருக்கும், ஆனால் ஆயிரம் வருட அரசாட்சியின் போது அல்ல. பாருங்கள்? ஆயிரம் வருட அரசாட்சியின் போது சமாதானம் நிலவும். பாருங்கள்? ஆயிரம் வருட அரசாட்சியின் மறுபக்கத்தில் பாவம் ஒழிக்கப்படும், அதன்பிறகு காலம் என்பது மறைந்து விடும்.

    இப்பொழுது, பரிசுத்த ஆவியால் அருளப்பட்ட ஏழு முத்திரைகள் திறக்கப்படுதல், நமக்கு முன்பிருந்த காலங்களில் விடப்பட்டிருந்தவைகளை நமக்கு தெரியப்படுத்துவதற்காகவே.

*****
    அடுத்தபடியாக நடக்கவிருப்பது, சபை எடுத்துக்கொள்ளப்படுதலும், மோசேயும் எலியாவும் திரும்ப வருதலும், மணவாட்டியும் மணவாளனும் பூமியில் ஆயிரம் வருட காலம் அரசாட்சி செய்தலும், அதன்பிறகு நியாயத்தீர்ப்பும், பிறகு பாவம் முழுவதுமாக அழிக்கப்படுதலும். அப்பொழுது காலம் என்பது இருக்காது.

    இப்பொழுது... முடியவில்லை... முத்திரைகள் காலத்தை முடித்து விடவில்லை. ஆயிரம் வருட அரசாட்சிக்குப் பிறகு காலமும் காலங்களும். இல்லை! ஆயிரம் வருட அரசாட்சிக்குப் பிறகும் காலம் என்பது இருக்கும்.

கேள்விகளும் பதில்களும், ஆகஸ்ட் 30, 1964 காலை, கேள்வி எண் 339

ஆயிரம் வருட அரசாட்சி என்பது ஆயிரம் வருடங்களாக இருக்குமா? அது ஒரு சந்ததியின் காலமாக இருக்கக் கூடாதா?

    இல்லை! வேதத்தில் ஒரு சந்ததிக்கு நியமிக்கப்பட்ட காலம் நாற்பது ஆண்டுகளே. ஆனால் வேதமோ, அவர்கள் உயிர்த்து கிறிஸ்துவுடனே கூட ஆயிரம் வருஷம் அரசாண்டார்கள் என்று உரைக்கிறது (வெளி. 20:4). அது பூமியில் ஆயிரம் வருட காலமாக இருக்கும், ஏனெனில் பூமியில் நாம் கணக்கிடும் ஆயிரம் வருடம் தேவனுடைய கணக்கில் ஒரு நாள் மட்டுமே. பூமியில் ஆயிரம் வருடம் தேவனுக்கு ஒரே நாள், அவருடைய கணக்கின்படி. இதை எத்தனை பேர் புரிந்து கொண்டீர்கள்?

எனவே அது ஓய்வு நாள், அப்பொழுது சபை பாவத்திற்கு எதிராக பாடுபடாது. சாத்தான் சிறிது காலத்திற்கு, ஆயிரம் வருடங்களுக்கு கட்டப்பட்டிருப்பான். ஏனெனில் அவனுடைய பிரஜைகள் அனைவரும் அப்பொழுது நரகத்தில் இருப்பார்கள், அவனுடைய... பூமியிலுள்ள சபை மீட்கப்பட்டு கிறிஸ்துவின் சமூகத்தில் இருக்கும். எனவே அவனுக்கு கிரியை செய்ய ஒன்றும் இருக்காது. எனவே, நான் ஏற்கனவே கூறினபடி, அது ஒரு சங்கிலியாக இருக்காது, ஒரு நீண்ட சங்கிலியாக. அது சூழ்நிலை என்னும் சங்கிலி. அவனால் ஒன்றும் செய்ய முடியாது. அவன் உதவியற்றவனாகவும், நம்பிக்கையற்றவனாகவும், அவனுடைய பிரஜைகள் உயிரோடெழ காத்துக் கொண்டிருப்பான்; அப்பொழுது அவர்கள் செம்மறியாடுகளும் வெள்ளாடுகளுமாக பிரிக்கப்படுகின்றனர்.

கேள்விகளும் பதில்களும் (COD 2:21), ஆகஸ்ட் 30, 1964 காலை, கேள்வி எண் 340

    சபை, வெதுவெதுப்பான சபை, தெரிந்து கொள்ளப்பட்ட மணவாட்டிக்கு புறம்பேயுள்ள எதுவுமே உபத்திரவ காலத்தின் வழியாக கடந்து செல்லும். அவர்கள் முதலாம் உயிர்த்தெழுதலில் எழுந்திருக்க மாட்டார்கள். மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை (வெளி. 19:5). முன்குறிக்கப்பட்ட, தெரிந்து கொள்ளப்பட்ட, தேவனால் சொந்தமாக தெரிந்து கொள்ளப்பட்ட மணவாட்டி மட்டுமே. அது யார், சகோ.பிரான்ஹாமே? எனக்குத் தெரியாது. அது யாரென்று என்னால் கூற இயலாது, ஆனால் அது இருக்கப் போகிறதென்று எனக்குத் தெரியும், ஏனெனில் தேவன் அவ்வாறு உரைத்துள்ளார். பாருங்கள்? அவர்கள் தான் உபத்திரவ காலத்துக்கு தப்பி மேலே எடுத்துக்கொள்ளப்படுவார்கள். மற்றவர்களோ உபத்திரவ காலத்தின் வழியாக இங்கு கீழே கடந்து செல்வார்கள். எல்லாமே ஆயிரம் வருட அரசாட்சிக்கு முன்பு கொல்லப்படும். அதன் பிறகு நீதிமான்கள் ஆயிரம் வருட அரசாட்சியின் போது வந்து ஆயிரம் ஆண்டுகள் வாழ்வார்கள்.

    இந்த ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த மகத்தான வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு வருகிறது. அப்பொழுது மரித்தோர், நல்லோர் தீயோர் இருவரும், உயிரோடெழுவார்கள். புத்தகங்கள் திறக்கப்படுகின்றன. ஜீவபுஸ்தகமும் திறக்கப்படுகிறது; அப்பொழுது பரிசுத்தவான்கள் மனைவியும் கணவனும் உட்கார்ந்து கொண்டு நியாயந்தீர்ப்பார்கள். அப்பொழுது அவர் இருப்புக் கோலால் சகல ஜாதிகளையும் நியாயந்தீர்ப்பார் என்னும் வசனம் நிறைவேறுகிறது. எல்லா தேசங்களும் அங்கு அவருக்கு முன்பாக நிற்கும். அவர் இருப்புக் கோலால் அவர்களை நியாயந்தீர்ப்பார். அவர் வெள்ளாடுகளிலிருந்து செம்மறியாடுகளைப் பிரித்து, வெள்ளாடுகளை நோக்கி, அகன்று போங்கள் என்றும், செம்மறியாடுகளிடம், வாருங்கள், என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே என்பார்.

    பூமியின் பரப்பு முழுவதிலும் பரிசுத்தவான்களின் காம்ப் கூட்டம் ஒன்று நடைபெறும். சாத்தான் தன் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு, பரிசுத்தவான்களோடு யுத்தம் பண்ணச் செல்கிறான் அவன் தொடக்கத்தில் மகிமையில் செய்த அதே விதமாக. அப்பொழுது தேவன் வானத்திலிருந்து அக்கினியும் கந்தகமும் வருஷிப்பார். முழு பூமியும் அகற்றப்படுகிறது... அது எரிந்து அழிக்கப்படுகிறது. அப்பொழுது சமுத்திரம் இனி இல்லாமல் போகும், தண்ணீர் இனி இல்லாமல் போகும், ஒன்றுமே பூமியின் மேல் விடப்பட்டிருக்காது. எரிமலைகள் வெடித்து சிதறித் தெளித்து, எல்லாமே...

    பின்பு நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன்; முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்து போயின; சமுத்திரமும் இல்லாமற் போயிற்று. யோவானாகிய நான் பரிசுத்த நகரத்தைத் தேவனிடத்தினின்று பரலோகத்தை விட்டு இறங்கி வரக் கண்டேன்; அது தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப் போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது (வெளி. 21:1-2). அது உங்களுக்கு ஞாபகமுள்ளதா? இந்த மணவாட்டியில்... இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது (வெளி. 21:3). தேவன் அவர்களிடத்திலே கூர்நுனிக் கோபுர வடிவிலுள்ள ஆயிரத்தைந்நூறு சதுர மைல் பரப்புள்ள அந்த நகரத்திலே வாசமாயிருப்பார். நகரத்தின் உச்சியில் வெளிச்சம் இருக்கும். ஆமென்.

ஓ, சீயோன் மலையின் மேலுள்ள அந்நகரம்
அந்நியனாயிருந்தும், அதை இன்னும் நேசிக்கிறேன்
நான் மலையின் மேலுள்ள அந்நகரத்தை அடையும்போது
காலாகாலங்களில் உம்மை சந்திப்பேன்.

    சீயோன் மலையின் உச்சியில் ஆட்டுக்குட்டியானவர் வீற்றிருப்பார். நகரத்துக்கு வெளிச்சம் தேவையில்லை, ஆட்டுக்குட்டியானவரே அதற்கு விளக்கு. ஆட்டுக்குட்டியானவருக்கு மேல் பிதா, அந்த லோகாஸ் இருப்பார். தேவன், அந்த மகத்தான வெளிச்சம், நித்திய வெளிச்சம், சிங்காசனத்துக்கு மேலே பிரகாசிப்பார். இயேசு அவருடைய பிதாவின் சிங்காசனத்தில் வீற்றிருக்க மாட்டார், தம்முடைய சிங்காசனத்தில் வீற்றிருப்பார். பிதா குமாரனின் மேல் வட்டமிட்டுக் கொண்டிருப்பார், பிதாவும் குமாரனும் ஒன்றாயிருப்பார்கள். அப்பொழுது அவர்கள் கூப்பிடுகிறதற்கு முன்னே நான் மறு உத்தரவு கொடுப்பேன்; அவர்கள் பேசும்போதே நான் கேட்பேன் (ஏசா. 65:24). அது உண்மை.

    இயேசு ஒரு பரிபூரண, பரிபூரண காலத்தை, பரிபூரணமான ஜீவனுள்ள தேவனுக்கு ஒப்புவிப்பார் அவர் மீட்டுக்கொண்டதை பிதாவினிடம் ஒப்புவிப்பார். அது சரியா? ஆவியாயிருக்கிற பிதாவாகிய தேவனிடம் ஒப்புவிப்பார், மனிதனிடம் அல்ல, ஆவியாயிருக்கிற பிதாவினிடம். நன்மையானவைகளின் எல்லா சுபாவமும் ஒன்று திரண்டுள்ளது தான் தேவன். நன்மையானவைகளில்... நன்மை தாறுமாறாக்கப்படுதலே பொல்லாங்கு; அது சாத்தானின் ராஜ்யம். நன்மையான எல்லாமே தேவனுக்குச் சொந்தமானது. பொல்லாங்கு அனைத்தும் சாத்தானுக்கு சொந்தமானது.

    அதன்பிறகு தேவன் இயேசு கிறிஸ்து என்று அழைக்கப்பட்ட ஒரு மனிதனுக்குள் திடமான பொருளானார். அதுதான் அவருடைய குமாரன். இந்த குமாரன், மற்ற குமாரர்களைக் கொண்டுவரும் பொருட்டு தம்முடைய ஜீவனை ஈந்தார் தேவன் காணக்கூடியவராய் அவர்கள் எல்லோரிலும் கிரியை செய்யும் பொருட்டு, நான் என் பிதாவிலும், நீங்கள் என்னிலும், நான் உங்களிலும் இருக்கிறதை அந்நாளிலே நீங்கள் அறிவீர்கள் (யோவான் 14:20).

    ஓ, சகோதரனே, அது ஒரு உண்மையான நாளாயிருக்கும். நீங்கள் செய்தியைக் கேட்பதற்காக பர்மிங்ஹாமிலிருந்து காரோட்டிக் கொண்டு வரவேண்டிய அவசியமிராது; அப்பொழுது செய்தி நம்முடனே கூட இருக்கும். இல்லையா? ஓ, அது மிகவும் அருமையான, அற்புதமான தருணமாயிருக்கும். நாம் அந்த நாளுக்காக காத்திருக்கிறோம்; அந்த நாள் வர தேவன் துரிதப்படுத்துவாராக.

    அங்கு அமர்ந்திருக்கும் அந்த மகத்தான நகரம் (இப்பொழுது, பாருங்கள்?). அது... நீங்கள் நினைக்கலாம் ஆயிரத்தைந்நூறு மைல் உயரமா? என்று. அப்படித்தான் வேதம் கூறுகிறது. இப்பொழுது, அது செங்குத்தாக இப்படி ஆயிரத்தைந்நூறு மைல் இருக்காது. பாருங்கள்? எல்லா பாகங்களும் சமமாயுள்ள மற்றொரு பூகோள அளவு நமக்குள்ளது; அது தான் கூர்நுனிக் கோபுரம். பாருங்கள்?

    அந்த நகரம் ஒருக்கால் ஏறக்குறைய அறுபது டிகிரியில் துவங்கும், அவ்விதம் அது தொடங்குமானால், அதன் ஆயிரத்தைந்நூறு மைல்கள், அது எவ்வளவு உயரம் என்றும், அங்கு அடைய எவ்வளவு நேரம் எடுக்கும் என்பதையும் யோசித்துப் பாருங்கள். ஆனால் மலையின் மேல் நடந்து கொண்டிருக்கிறீர்கள் என்று உங்களுக்கு தெரியவே தெரியாது. அறுபது டிகிரி சரிவில் ஆயிரத்து ஐந்நூறு மைல் உயரம், நீங்கள் இப்படி இருப்பீர்கள். பாருங்கள்? நகரம் அனைத்தும் இந்த மலையின் மேல் தான் இருக்கும். அது எவ்வளவு உயரமோ அவ்வளவு நீளமும் கூட; அது எவ்வளவு நீளமோ அவ்வளவு அகலமும் கூட உயரம், ஆழம், அகலம் எல்லாமே சமம்; எல்லா சுவர்களும் சமம். கூர்நுனிக் கோபுரத்திற்கு நான்கு சுவர்கள் உள்ளன. இந்த நான்கு சுவர்களும்...

    இப்பொழுது, நகரத்தைச் சுற்றியுள்ள சுவர்கள் 216 அடி உயரம், 144 முழங்கள், அவை ஒவ்வொன்றும் ஒரு கல் அந்த நகரத்தைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள், நண்பர்களே. ஓ, என்னே! நாம் ஏன் இந்த உஷ்ணமான இடத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கிறோம்? நாம் ஏன் இவ்விதம் காரோட்டி வருகிறோம்? நாம் ஏன் கஷ்டப்படுகிறோம்? அது வழியில் ஒவ்வொரு அங்குலமும் தகுதியுள்ளது.

ஓ, நான் வழியின் முடிவை அடையும் போது
பாதையில் பட்ட கஷ்டங்கள் ஒன்றுமில்லாதது போல் தோன்றும்.
அது உண்மை. ஓ, அது எவ்வளவு இனிமையான நேரமாயிருக்கும்!

    அங்கு இயேசு சிங்காசனத்தில் வீற்றிருப்பார். சிங்காசனத்துக்குக் கீழே ஜீவ நதி ஓடி, இந்த நான்கு சுவர்களின் வழியாக பாய்ந்து சிறு ஓடைகளாகப் பிரிந்து, பிறகு நதியாக உருவாகி, நகரத்தின் வழியாக ஓடும். அது இப்படி தெருக்களின் வழியாக பாய்ந்தோடும். நதியின் இரு பக்கங்களிலும் ஜீவ விருட்சங்கள் நின்று கொண்டிருக்கும், அவை முப்பது நாட்களுக்கு ஒருமுறை தங்கள் கனியை மாற்றி வேறொரு கனியைக் கொடுக்கும். ஓ, என்ன ஒரு நகரம்!

    வானத்தையும் பூமியையும் படைத்த சிருஷ்டி கர்த்தராகிய தேவன் இப்பொழுது மகிமையில் இருந்து கொண்டு அந்த நகரத்தை ஆயத்தம் பண்ணிக் கொண்டிருக்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆபிரகாம் அந்த நகரம் வருவதற்காக காத்திருந்தான்... ஏன்? அவன் ஒரு தீர்க்கத்தரிசி. அவன் தீர்க்கத்தரிசியாயிருந்தான், அவன் ஆவியுடன் தொடர்பு கொண்டிருந்து, ஆவியின் ஒரு பாகமாயிருந்தான். அவனுக்குள் இருந்த ஏதோ ஒன்று அவனிடம், ஒரு நகரம் உண்டு என்று உரைத்தது, அவன் அது வருவதை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். அவன், நான் ஒரு அந்நியன், ஒரு சஞ்சாரி. தேவன் கட்டி உண்டாக்கின நகரத்துக்காக நான் காத்திருக்கிறேன் என்றான். அந்த நகரம் எங்கோ உள்ளது என்று அவன் அறிந்திருந்தான். ஓ, என்னே! அவன் அது எந்த இடத்தில் வரும் என்று காத்திருந்தானோ, அந்த பாலஸ்தீனாவில், அங்கு தான் அது எழும்பும் என்று நான் விசுவாசிக்கிறேன். ஏனெனில் அது சீயோன் மலையின் மேல் உள்ளது. அங்கு தான் அந்த நகரம் இருக்கும்.

    அது எங்கு பரம்புகிறது என்று பாருங்கள் சமுத்திரத்துக்குள், ஒரு சமுத்திரத்திலிருந்து மறு சமுத்திரம் வரைக்கும். கர்த்தருடைய பர்வதத்தின் மேல் ஆயிரத்தைந்நூறு மைல் நகரம் அமர்ந்திருப்பதை எண்ணிப்பாருங்கள். ஓ, அது அற்புதமாயிருக்கும்!

    அங்கு சிங்கமும் ஆட்டுக்குட்டியும் ஒருமித்துப் படுத்துக் கொள்ளும். சிங்கம் மாட்டைப் போல் வைக்கோலைத் தின்னும். கரடி சாந்தமாயிருக்கும், ஓனாய் அடங்கியிருக்கும். அது எப்படிப் பட்ட நேரமாயிருக்கும்! எதுவுமே தீங்கு செய்து அழிக்காது; எல்லாமே சமாதானத்திலும் அன்பிலும் இருக்கும். அங்கு வயோதிபம் இருக்காது; அங்கு வியாதியோ மரணமோ இராது.

    ஜனங்களே, இது சாண்டா க்ளாஸ் கதை அல்ல, ஏதோ ஒரு கட்டுக் கதை அல்ல, இது வார்த்தையில் எழுதப்பட்டுள்ளது. வார்த்தை ஒருபோதும் தவறினதில்லை, அந்த வாக்குத்தத்தத்தைக் குறித்து எண்ணிப் பார்க்கும் போது... இது வேதாகம நாட்களில் அல்ல, இந்நாளில், தேவன் நியமித்துள்ள இந்நாளில் நிறைவேறும். அவருடைய வார்த்தையில் ஒரு சிறு அணுவும் கூட ஒருபோதும் தவறினதில்லை. ஓ, அந்த நகரத்தை நோக்கி நான் சென்று கொண்டிருக்கிறேன். அதை நான் நேசிக்கிறேன், நீங்களும் நேசிக்கிறீர்கள் அல்லவா?

கேள்விகளும் பதில்களும், (COD 2:20), ஆகஸ்ட் 23, 1964 மாலை, பத்தி எண் 233-248

    சில நாட்கள் முன்னர் ஏழு எக்காளங்கள், எக்காளப்பண்டிகை இவைகளைக் குறித்து நான் உங்களுக்குப் போதித்தேன். அப்பொழுது நான், எட்டாம் நாள் பண்டிகை ஒன்றுண்டு என்று கூறினேன். ஏழாம் நாள் என்பது கடைசி நாள். அதுதான், ஆயிரவருட அரசாட்சி. ஆனால் எட்டாம் நாள் பண்டிகை ஒன்றுண்டு. வாரத்தில் ஏழு நாட்கள் மாத்திரம் இருப்பதால் எட்டாம் நாள் என்பது மறுபடியும் வாரத்தின் முதலாம் நாளாகி விடும். ஆகவே ஆயிரம் வருட அரசாட்சி வாரத்தின் முதலாம் நாளாகி விடும். ஆகவே ஆயிரம் வருட அரசாட்சி முடிவடைந்த பின்னர் ஏதேன் மறுபடியுமாக ஸ்தாபிக்கப்படும். தேவனுடைய மகத்தான இராஜ்யம் அங்கு மறுபடியும் நிலைநாட்டப்படும். ஏனெனில் கெத்செமனே தோட்டத்தில் இயேசு பிசாசுடன் போர் செய்து வெற்றியடைந்து ஏதேனை திரும்பவும் பெற்றுக் கொண்டார். அதை ஆயத்தப்படுத்த அவர் பரலோகத்திற்கு சென்றிருக்கிறார்; அவர் திரும்ப வருவார். பரலோகத்தில் அவர் அதை ஆயத்தம் செய்கிறார். அவர் பூலோகத்திலிருந்த போது, உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக என்றார்.

சாத்தானின் ஏதேன், ஆகஸ்ட் 29, 1965, பத்தி எண் 165

    பாருங்கள், தேவனுக்குள் இருந்த தன்மைகளைப் போல, உங்கள் சிந்தை ஒரு தன்மை. ஆதியிலே தேவன். நித்தியமானவர், தேவனாகவும் கூட இல்லை. அவர் நித்தியமானவராயிருந்தார், அவர் தேவனாகவும் கூட இல்லை. தேவன் என்றால் தொழுகைக்குரிய ஒன்று என்று பொருள். பாருங்கள்? எனவே அவர் அவ்வாறு இல்லை. அவர் ஏலோகிம், நித்தியமானவராக இருந்தார். ஆனால் அவருக்குள் சிந்தைகள் இருந்தன. அவர் ஒரு சரீரத்தில் வர விரும்பினார். அவர் என்ன செய்தார்? அவர் வார்த்தையைத் தோன்றப்பண்ணினது. அதுதான் ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தின விசேஷம் முடிய உள்ள முழு காட்சி. அதில் ஒரு தவறும் இல்லை. ஏலோகிம் கைகளால் தொடப்படுவதற்கும், தொட்டு உணர்வதற்கும் மாம்ச சரீரத்தில் தோன்றினார். ஆயிரம் வருட அரசாட்சியில் ஏலோகிம் சிங்காசனத்தில் வீற்றிருப்பார். பாருங்கள். அது உண்மை. உலகத் தோற்றத்துக்கு முன்பு அவர் முன்குறித்த பிரஜைகள் அவரைச் சூழ இருப்பார்கள்.

தேவன் திரைநீக்கப்படுதல், ஜூன் 14, 1964, பத்தி எண் 84

    ஆனால் ஆயிரம் வருட அரசாட்சியின் போது, அவர் தாவீதின் குமாரனாக ராஜாவாக - தாவீதின் சிங்காசனத்தில் உட்கார வருவார். அவர் தாவீதின் சிங்காசனத்தில் உட்கார வேண்டும். இப்பொழுது அவர் பிதாவின் சிங்காசனத்தில் உட்கார்ந்திருக்கிறார். அவர், நான் ஜெயங்கொண்டு, என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடே கூட உட்கார்ந்தது போல, ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடே கூட உட்காரும்படிக்கு அருள் செய்வேன் என்றார். எனவே ஆயிரம் வருட அரசாட்சியில். அவர் தாவீதின் குமாரனாக இருப்பார். அது என்ன? அதே தேவன் வெவ்வேறு காலங்களில் தமது முக மூடியை மாற்றிக் கொள்ளுதல்.

நமது முன்னிலையில் திரை நீக்கப்பட்டுள்ள வல்லமையுள்ள தேவன், ஜூன் 29, 1964, பத்தி எண் 52-53

    தானியேலில், அவனிடத்தில் அவர் வந்தார், அவருடைய சிரசின் மயிர் வெண்மையாய் இருந்தது, வெளிப்படுத்தின விசேஷம் 1ஆம் அதிகாரத்தில் நீங்கள் காண்பது போன்று. நியாயசங்கம் உட்கார்ந்தது, புஸ்தகங்கள் திறக்கப்பட்டன. எழுதப்பட்டவைகளின்படியே ஒவ்வொருவரும் நியாயத் தீர்ப்படைந்தனர். கவனியுங்கள், புஸ்தகங்கள் திறக்கப்பட்டன. அவன் பார்த்துக்கொண்டிருக்கையில் அவர் வந்தார், ஆயிரமாயிரம் பேர் அவரை சேவித்தார்கள் அவருடன் பரிசுத்தவான்கள் வந்தனர். அது சரியா, அது தானியேலில் உள்ளது. புஸ்தகங்கள் திறக்கப்பட்டன, அதுதான் தானியேலில் உள்ளது. தானியேலில் உள்ளது, அதுதான் உன் ஜீவியத்தின் புஸ்தகமாகும். ஒவ்வொரு மனிதனும் இவ்விதம் நியாயந்தீர்க்கப்பட்டான். வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது, அது தான் ஜீவ புஸ்தகமாகும். ஒவ்வொரு மனிதனும் நியாயந்தீர்க்கப்பட்டான்.

    இப்பொழுது கவனியுங்கள், அது மூன்றாக இருக்கின்றது என்பதை நீங்கள் எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் இதை நினைவில் கொள்ளவில்லையெனில் நிச்சயமாக நீங்கள் குழம்பிப் போவீர்கள். பூமியின் மேல் பிறந்த மக்களில் மூன்று வகையை சேர்ந்தவர்கள் இருந்தார்கள்; ஆதியில் மூன்று வகையினர் இருந்தனர்; கடைசியிலும் மூன்று வகையினர் இருப்பர். என்ன...

    அவரைத் தொழுது கொண்டிருக்கிற ஆயிரமாயிரம் பேர்களோடும் இயேசு திரும்பி வந்தார். அவர் கூறினதை நினைவில் வைத்திருக்கிறீர்களா, உங்களில் ஒருவனுக்கு வழக்குண்டானால், வழக்காடும்படி அவன்... அநீதக்காரரிடத்தில் போகத்துணிகிறதென்ன? பரிசுத்தவான்கள் உலகத்தை நியாயந்தீர்ப்பார்கள் என்பதை அறியீர்களா? பரிசுத்தவான்கள் உலகத்தை நியாயந்தீர்ப்பார்கள்! அல்லேலூயா! நான் அதை நினைக்கையில், என்னே! அவருடைய இரத்தத்தால் கழுவப்பட்டவர்களுடன் அவர் வருவதையும், ஆயிர வருட அரசாட்சிக்குப் பிறகு, மீட்பையும், காலங்கள்தோறும் மீட்கப்பட்ட யாவரும் அவருடைய பிரசன்னத்தில் நிற்பதையும் காண்பதை நான் நினைத்துப் பார்க்கிறேன், என்னே! இரத்தத்தால் கழுவப்பட்ட மணவாட்டி!

    நன்மக்களாய் இருப்பவர்கள் அல்ல, அவர்கள் நிச்சயமாக முதலாம் உயிர்தெழுதலில் இருக்க மாட்டார்கள். வேதம், மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிர வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை, என்று கூறுகிறது. அது சரியல்லவா? அவர்கள் ஆட்டுக்குட்டியானவருடைய ஜீவ புஸ்தகத்தில் பெயரெழுதப்பட்டவர்கள், ஆனால் பரிசுத்த ஆவியை பெற மறுத்தவர்கள்.

    அந்நேரத்தில் தெரிந்துகொள்ளப்பட்டவர் மாத்திரமே உள்ளே செல்வர். ஆயிர வருட அரசாட்சியில் தெரிந்துகொள்ளப்பட்டவர் மாத்திரமே செல்வர். ஓ, அப்படியானால், சகோதரனே, என்னவிதமான மக்களாய் நாம் இருத்தல் வேண்டும்? நான் ஆயிர வருட அரசாட்சியில் முழுவதுமாக இருக்க விரும்புகிறேன்! நாம் நம்முடைய பாரமான யாவற்றையும், நம்மை சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் புறம்பே தள்ளுவோமாக. ஒரு சகோதரன் ஏதோ ஒன்றை தவறாக கூறி, அல்லது இந்த விதமாக தவறாகச் செய்தால், நாம் அவருக்காக ஜெபித்து, தொடர்ந்து சென்று கொண்டே இருப்போம். உன்னுடைய ஒரே நோக்கமானது தேவனை நோக்கியவாறே இருக்கட்டும். வேறு யாரும் சென்றடையவில்லையானால், நீ சென்றடை. ஏனென்றால் தெரிந்துகொள்ளப்பட்டவர் மாத்திரம் ஆயிர வருட அரசாட்சியில் முழுதூடாக ஜீவித்து, கிறிஸ்துவுடன் ஆயிரம் வருடம் ஜீவிக்க உள்ளே சென்று, மகிமையில் அவருடன் சென்று, திரும்பவும் வருவார்கள். பொல்லாங்கரின் உயிர்த்தெழுதல் நடைபெற்றவுடன், ஆயிர வருட அரசாட்சி... ஆயிர வருட அரசாட்சி முடிவடைந்த பின்னர் கிறிஸ்து சபையுடன் மேலே செல்வார், ஆயிர வருட கடைசியில் அவர் சபையுடன் திரும்ப வருவார்.

    கிறிஸ்து மூன்று முறை வருகின்றார். முதலாவதாக, தமது சபையை மீட்க வந்தார். அது சரிதானே? இரண்டாவது முறையாக, தமது சபையை பெற்றுக் கொள்ள வருகிறார். மூன்றாவது முறையாக அவர் சபையுடன் வருகிறார். பாருங்கள்? அவளை மீட்க வருகிறார்; அவளை எடுத்துக்கொள்ள வருகிறார், வாதைகள் இன்னும் மற்ற காரியங்களின் நேரத்தில் ஆகாயத்தில் எடுத்துக்கொள்ள வருகிறார்; ஆயிர வருட அரசாட்சிக்காக திரும்பவும் வருகிறார், ஆயிரம் வருடங்கள் முழுவதும் இருக்கின்றார்.

    அதன்பிறகு அந்த மகத்தான ராஜாவும் ராணியும் நியாயந்தீர்க்க கீழே வருகின்றனர். வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு வைக்கப்பட்டு புஸ்தகங்கள் திறக்கப்பட்டன. அதோ அங்கே மீட்கப்பட்டவர்கள் அங்கு நின்று கொண்டிருக்கின்றனர். பரிசுத்த ஆவியினாலே பிறந்து ஜீவிக்கிற தேவனுடைய சபை அங்கே அந்த அழகுடன் நியாயந்தீர்க்க நின்று கொண்டிருக்கிறது. புஸ்தகங்கள் திறக்கப்பட்டன, நியாயத்தீர்ப்பு வைக்கப்பட்டது, ஒவ்வொரு மனிதனும் இவ்வாறு நியாயத்தீர்ப்படைந்தான் அதுதான் பாவிகள். வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது. பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டுள்ள மணவாட்டிக்கு அல்ல, அவள் எடுக்கப்படுதலில் இருப்பதினால் அவள் அதில் இல்லை.

    இந்த காலையில் நீங்கள் பரிசுத்த ஆவியினால் நிறையப்பட்டிருந்தால், தேவனுடைய வல்லமை உங்கள் சரீரத்தின் ஒவ்வொரு தசையிலும் அசைந்து கொண்டிருக்குமானால், நியாயத்தீர்ப்பின் நாளிலே எப்படிப்பட்ட நன்மையை அது உங்களுக்கு அளிக்கும்? நீங்கள் ஏற்கனவே நியாயந்தீர்க்கப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்ட, நிறைக்கப்பட்டு, ஏற்கனவே ஏற்கனவே கிறிஸ்து இயேசுவுடன் உன்னதங்களுக்குள் அமர மாற்றப்பட்டுள்ளீர்கள். நீங்கள் அப்படி இருக்கப்போகிறீர்கள் என்பதல்ல, நீங்கள் இப்பொழுதே மாற்றப்பட்டிருக்கிறீர்கள், சரியாக இப்பொழுதே மாற்றப்பட்டு இருக்கிறீர்கள்!

     அவர் எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்கள் ஆக்கியுமிருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார். ஆகவே. இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் கீழ் இருந்து பரிசுத்த ஆவியினால் நிறையப்பட்ட, இவ்வுலகத்தில் இருக்கின்ற ஒவ்வொரு மீட்கப்பட்ட நபருக்கும் நித்திய ஜீவன் இருக்கின்றது. அவன் அழிந்து போக முடியாது, அவன் ஏற்கனவே கிறிஸ்து இயேசுவுக்குள் உன்னதங்களில் அமர்ந்திருக்கிறான், அவன் ஆக்கினைக்குள்ளாக வர முடியாது. அவன் ஏற்கனவே மீட்கப்பட்டுள்ளான். அது அற்புதமானதல்லவா? பாருங்கள்? ஏற்கனவே மீட்கப்பட்டு, கிறிஸ்துவுடனே உன்னதங்களில் அவர்கள் அமர்ந்திருக்கின்றனர்... ஏற்கனவே மகிமைப்படுத்தி விட்டார்,  ஏற்கனவே மகிமைப்படுத்தி விட்டார்.

    சகோ. பில், வேத வாக்கியம் அப்படி கூறுகின்றதா? என்று நீங்கள் கேட்கலாம்.
    இயேசு அதைக் கூறினார், அல்லது வேத வாக்கியம் அதைக் கூறுகிறது. அல்லது இதை எழுதின பவுல், எவர்களை நீதிமான்களாக்கினாரோ, அவர்களை ஏற்கனவே மகிமைப்படுத்தியுமிருக்கிறார். அது என்ன? ஓ, என்னே! (என்னை மன்னியுங்கள்) ஏற்கனவே மகிமைப்படுத்திவிட்டார்! அப்படியானால் நாம் பரிசுத்த ஆவியினால் நிறைந்து, நம்முடைய தசைகளும், அவையவங்களும் தேவனுக்குள் காக்கப்பட்டு இருக்குமானால், இது நமக்கு முடிந்துபோய், நீ செல்லத்தக்கதாக ஒரு மகிமையின் சரீரம் ஏற்கனவே உனக்கு காத்துக் கொண்டிருக்கிறது. எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார்.

கேள்விகளும் பதில்களும் (COD 1:2), ஜனவரி 3, 1954,பத்தி எண் 99-109

    இக்காலை அளிக்கப்பட்ட செய்தியைப் பாருங்கள். நியாய சங்கம் உட்கார்ந்த போது, புஸ்தகங்கள் திறக்கப்பட்ட போது... இப்பொழுது, இயேசு கோடா கோடி பரிசுத்தவான்களுடன் வந்தார், அப்பொழுது நியாயசங்கம் உட்கார்ந்தது. இங்கே அவர்கள் எல்லாரும் வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பை சுற்றிலும் இருந்தார்கள் (நாம் வேத வசனத்தினூடாக அதை பார்த்தோம்), புஸ்தகங்கள் திறக்கப்பட்டன, ஜீவ புஸ்தகம் என்னும் மற்றுமொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது. இங்கே எடுத்துக்கொள்ளப்படுதலில் இருந்த அவர்கள் அவர்களை நியாயந்தீர்த்துக் கொண்டிருந்தனர். அது சரியா? வீட்டிற்கு சென்று தங்களுடைய மகிமைப் படுத்தப்பட்ட சரீரங்களை பெற்றுக்கொண்டு ஆயிர வருட அரசாட்சியினூடாக ஜீவித்த அவர்கள் இங்கே வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பில் அவர்களை நியாயந்தீர்த்துக் கொண்டிருந்தனர். அவர் செம்மறியாடுகளை வெள்ளாடுகளிலிருந்து பிரிப்பார் என்று கூறியுள்ளார்.

கேள்விகளும் பதில்களும் (COD 1:3), ஜனவரி 3, 1954, பத்தி எண் 68

      கிறிஸ்து ஆயிரம் ஆண்டுக்கால அரசாட்சியை கொண்டு வருகிறார், அவரே செழிப்பின் குமாரனாயிருக்கிறார். அவர் வரும்பொழுது, சபையானது மேலே எடுத்துக்கொள்ளப் பட்டிருக்கும். நாம் அடுத்தபடியாக எதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்? சபையின் எடுத்துக் கொள்ளப்படுதலுக் காகத்தான்.

   சபையின் எடுத்துக்கொள்ளப்படுதலையும், வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பையும் ஒன்றாகப் போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம். ஏனெனில், சபை எடுத்துக்கொள்ளப்படும்பொழுது நியாயத்தீர்ப்பு இல்லை, பாருங்கள். நியாயத்தீர்ப்பை நீங்கள் இங்கேயே சந்தித்து விட்டீர்கள். அதுதான் சரி. கிறிஸ்துவுக்குள் இருப்பவர்கள் நியாயத்தீர்ப்பினின்று நீங்கலாயிருக்கிறார்கள். இயேசு கூறினார்: என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறான்.

பத்து கன்னிகைகள், 60-1211 காலை, பத்தி எண் 34-35

    தேவன் ஆறு நாட்கள் கிரியை செய்து, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார். உலகமானது ஆறாயிரம் ஆண்டுகள் நிலைத்திருந்து, பிறகு, ஏழாவது ஆயிரத்தில் ஆயிர வருட அரசாட்சியாகும்.

இருபத்து நான்கு மூப்பர்கள், ஜனவரி 1, 1961, பத்தி எண் 197

    வரப்போகும் பாடங்களில் நியாயத்தீர்ப்புகளைப் பற்றி நாம் பார்க்கப்போகிறோம். அப்பாடம் உங்களுக்கு இவ்வுலகமானது எப்படி வெந்து எரிமலைப்போல் உருகிப்போகும் என்பதையும், வெடித்துச் சிதறும் என்பதையும் தலைகீழாக புரட்டிப்போடப்படும் என்பதையும் பற்றியும் உங்களுக்கு காண்பிக்கும் ஆனால் அவரோ தம் பேரிலே தானே ஆணையிட்டு, தான் அழிப்பதில்லை என்றும், தாம் அதை நேர்சீர் செய்து தமது பிள்ளைகளை ஆயிரமாண்டு அரசாட்சிக்காக அங்கே வைக்கப்போவதாகவும் உறுதியிட்டு வாக்குரைத்தார். ஓ, என்னே!

ஆயிரமாண்டு அரசாட்சியின் நாளுக்காக நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்;
அப்போது நமது துதிக்கப்பட்ட கர்த்தர் வந்து,
காத்து நிற்கும் தம் மணவாட்டியை எடுத்துக்கொள்வார்.
ஓ! எனது இதயம் அவ்வினிய விடுதலைக்காக ஏங்குகிறது, கதறுகிறது,
அப்போது நமது இரட்சகர் பூமிக்கு மீண்டும் வந்திடுவாரே.

    ஓ! ஆயிரமாண்டு அரசாட்சி வந்திடும் என அவர் வாக்குரைத்த அந்த மகத்தான நாளுக்காக நாம் எவ்வளவாய் ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கிறோம்!

இருபத்து நான்கு மூப்பர்கள், ஜனவரி 1, 1961, பத்தி எண் 202-203

    அக்காரணத்தினால் தான், நமக்கு அந்த ஆறு நாட்கள் உள்ளன, இந்த ஆறு நாட்களில் உலகமானது கிரியை செய்தது, நாம் இப்பொழுது ஏழாவது நாளுக்கு சமீபமாயிருக்கிறோம். முதல் இரண்டாயிரமாவது ஆண்டில் தேவன் உலகை தண்ணீரினால் அழித்தார். இரண்டாவது இரண்டாயிரமாவது ஆண்டில் கிறிஸ்து வந்தார். இந்த ஆண்டு 1961 ஆகும். நாம் வாசலண்டையில் வந்திருக்கிறோம். இன்னும் சிறிது காலம் தான் உள்ளது. இது இன்னும் ரொம்ப காலத்திற்கு போய்கொண்டேயிருக்காது. ஏனெனில் நான் என்னுடைய கிரியையை சீக்கிரமாகவே முடிப்பேன். அவ்வாறு நான் செய்யாவிடில், சகல மாம்சமும் அணுகுண்டினால் அழிக்கப்பட்டுவிடும். தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் நிமித்தமாக, என் நீதியின் கிரியையை சீக்கிரமாகவே முடிப்பேன். உரிய வேளைக்கு முன்னதாக முடிப்பேன் என்று கூறுகிறார். அதன்பிறகு மகத்தான நாளாகிய ஆயிரமாண்டு அரசாட்சி நடக்கும்.

    சபையானது ஆறாயிரம் ஆண்டுகள் பாவத்திற்கெதிராக பாடுபட்டது. அதன்பிறகு ஏழாயிரமாண்டிலிருந்து ஆயிர வருட அரசாட்சி நடைபெறும். தேவன் இவ்வுலகை உண்டாக்க ஆறாயிரம் ஆண்டுகள் எடுத்துக்கொண்டார்; அதன்பிறகு ஏழாயிரமாவது ஆண்டில் அவர் தன் கிரியைகளை விட்டு ஓய்ந்திருந்தார். சபையானது ஆறாயிரம் ஆண்டுகள் பாவத்திற்கெதிராக பாடுபட்டு, பின்பு ஏழாயிரமாவது ஆண்டில் இளைப்பாறுகிறது.

இருபத்து நான்கு மூப்பர்கள், ஜனவரி 1, 1961, பத்தி எண் 305-306

    ஆனால் இயேசு பிரகாசிக்கத் தொடங்கினவுடனே யோவானின் சிறு வெளிச்சம் அணைந்து போனது. பாருங்கள்?

    அது போல் அவர் வரும்போது, அந்த பரலோகத்தின் மகத்தான அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்து கிழக்கிலிருந்து மேற்குக்கு வரும்போது, இந்த சிறு வெளிச்சங்கள் அணைந்து போகும்... பாருங்கள்? இப்பொழுது அவர் பூமிக்கு வரமாட்டார். ஆயிரம் வருட அரசாட்சி வரைக்கும் மேசியா பூமிக்கு வரமாட்டார். பாருங்கள். பாருங்கள்? ஏனெனில், நாம் ஆகாயத்தில் எடுக்கப்பட்டு, கர்த்தரை அங்கு சந்திப்போம். அவர் பூமிக்கு வருவதில்லை. அவர் மணவாட்டியை ஆகாயத்தில் இழுத்துக் கொள்கிறார்.

    அவர் ஒரு ஏணியை எடுத்துக் கொள்கிறார்... அது என்ன நாடகம், லியோ, அதில் அந்த மனிதன் வீட்டின் பக்கத்தில் ஏணியை வைக்கிறானே? ரோமியோ ஜூலியட். அது சரி. அவர் ஏணியை வைத்து தன் மணவாட்டியைத் திருடிக்கொண்டு போய் விடுகிறார்.

    இப்பொழுது அவர் யாக்கோபின் ஏணியில் இறங்கி வந்து, ப்ஸ்ட், இருதயத்துக்கு இனியவளே, இங்கே வா என்று அழைக்கிறார். பாருங்கள், அவரை சந்திக்க நாம் மேலே செல்கிறோம்.

கேள்விகளும் பதில்களும் (இஞஈ 2:12), ஜனவரி 12, 1961,பத்தி எண் 447-450

    தாவீது நித்திய காலமாக இராஜாவாயிருந்தான்; கிறிஸ்து தாவீதின் சிங்காசனத்தில் ஆயிர வருட அரசாட்சியில் அமருகிறார். அவர்தாமே நித்திய இராஜாவாக இருக்கிறார். ஒரு புருஷன் தாவீதுக்கு இல்லாமற்போவதில்லை. அல்லேலூயா! தாவீதுக்கு ஒரு புருஷன் இல்லாமற்போவதில்லை என்று தேவன் வாக்குத்தத்தம் செய்தார்.

தலை நசுக்கப்பட்ட சர்ப்பம், ஜூன் 11, 1961

    அவருடைய வருகையிலே மீட்பின் ஆசீர்வாதங்கள் அனைத்தையும் பூரணமாக நாம் அனுபவிப்போம். சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரிப்பார்கள். மனிதர்களும், ஸ்திரீகளும் மீண்டும் தேவனுடைய குமாரரும் குமாரத்திகளுமாய் இருப்பார்கள். ஆயிர வருட அரசாட்சியின் துவக்கம் ஆரம்பிக்கும். என்னே ஒரு அழகான காரியம் இது!

தலை நசுக்கப்பட்ட சர்ப்பம், ஜூன் 11, 1961

    அநேக வேளைகளில் நாம் தேவனைத் தேடுகிறோம். அவருக்காக பார்த்துக் கொண்டிருக்கிறோம், தேவன் எங்கும் நிறைந்து இருப்பவராக இருப்பின், உங்களுக்கு அதற்காக ஒரு பெரிய... நல்லது, அவருக்கு ஒரு பெரிய சிங்காசனம் இருக்குமென்றால், அதிலே அவர் எங்கோ ஓரிடத்தில் அமர்ந்து கொண்டிருப்பாராகில், ஒவ்வொருவரும் அப்பொழுது தேவனில் விசுவாசம் கொள்ளுவார்கள். இங்கே ஓரிடத்தில் ஒரு பெரிய சிங்காசனத்தில் அவர் உட்கார்ந்து கொண்டிருப்பாராகில், அவர் இங்கே தான் இருக்கிறார். இதுதான் தேவன், நீங்கள் அவரிடத்தில் செல்லுங்கள், அவரால் இதை இப்படி மாற்ற முடியும் என்று சொன்னால் (சகோ. பிரான்ஹாம் தனது விரல்களை சுண்டுகிறார் ஆசி.) அப்பொழுது அவரை விசுவாசிப்பார்கள். அப்பொழுது விசுவாசம் வீணாகிப் போய் விடும். அப்பொழுது விசுவாசமே நமக்குத் தேவைப்படாது. அவ்விதமான நிலை தான் ஏற்படும். ஆயிர வருட அரசாட்சியில் தான் அப்படியிருக்கும். ஆனால் இப்பொழுதோ, அவர் அழைத்துக் கொண்டிருக்கிறார்; இரகசியமாகவும் இருளாகவும் அது காணப்படுகிறது. அதை எவ்வாறு செய்வது என்பதை நீங்கள் அறியாதிருக்கிறீர்கள். ஆனால் விசுவாசத்தினால் நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்கள். அக்காரணத்தினால் தான் அவர் அதைச் செய்தார். ஒவ்வொருவரும் அதைப் புரிந்து கொண்டீர்களா?

தலை நசுக்கப்பட்ட சர்ப்பம், ஜூன் 11, 1961, பத்தி எண் 165

    கர்த்தருடைய தீர்க்கதரிசியாகிய தானியேல் எரேமியாவின் புஸ்தகங்களை ஆராய்ந்து அதினால், இஸ்ரவேல் மக்கள் பாபிலோனை விட்டு உயிரோடு வெளியே வந்து, தங்கள் சொந்த தேசத்திற்குத் திரும்பிப் போவதற்கான வேளை நெருங்கி விட்டது என்பதை அறிந்து கொண்ட போது, அது அவனை இரட்டிலும் சாம்பலிலும் உட்காரத்தக்கதாக செய்யக் கூடுமானால், ஜீவனுள்ள தேவனுடைய சபையானது, காலமானது மங்கிக்கொண்டேயிருக்கிறதும் இனி காலம் செல்லாது என்றும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வருகையும் ஆயிரமாண்டு அரசாட்சியும் வருவதற்கு அயத்தமாகவுள்ளன என்பதை அறிந்துகொள்ளும் படியாக இருக்கையில், அந்நிலை எவ்வளவு அதிகமாக அதற்கு செய்வதாக இருக்கும்? எவ்வாறு நாம் நேரத்தை சூதாட்டத்திலும் நீச்சல் குளங்களிலும் ஞாயிற்றுக் கிழமைகளில் வீணாக செலவு பண்ணவும், கர்த்தருக்கென்று நேரமில்லாதவர் களாகவும் இருக்க முடியும்?

தானியேலுக்கு காபிரியேல் அறிவுறுத்தியவைகள், ஜூலை 30, 1961 காலை, பத்தி எண் 81

    யூதர்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளும் அதே நிமிடம் புறஜாதி சபையானது எடுக்கப்பட்டிருக்கும். பிறகு இங்குள்ள புறஜாதிகள் மேல் வாதைகள் விழும், உபத்திரவ காலம் வரும்.

    பெரிய போதகர்கள் என்று சொல்லப்படக் கூடிய மனிதர்கள் எல்லாம் சபையானது உபத்திரவ காலத்தின் வழியாகச் செல்லும், என்று இவ்வேதத்தைப் படித்துக்கொண்டே எவ்வாறு கூறுகிறார்கள்! ஆனால் வேதவாக்கியங்களிலோ அவ்வாறு கூறக்கூடிய ஒரு வசனம் கூட இல்லை. அவர்களுக்கு ஒன்று கூட இல்லை.

    சமீபத்தில் ஒரு மனிதன் என்னிடத்தில் வந்து, சகோதரி மெக்ஃபெர்சன், சபையானது உபத்திரவ காலத்தின் வழியாகச் செல்லும், ஏனெனில், நாம் அக்காலத்தில் பிரகாசிக்கிற வெளிச்சங்களாக இருப்போம் என்று போதித்தார்கள் என்று கூறினார். அக்காலத்தில் அது இஸ்ரவேலரைத்தான் குறிக்கும், புறஜாதிகளையல்ல. புறஜாதி சபையின் காலம் ஏற்கனவே முடிந்து போய்விட்டிருக்கும். அவர்கள் உபத்திரவ காலத்தின் வழியாக செல்ல வேண்டியதிருக்காது. வலுசர்ப்பம் தன் வாயிலிருந்து வெள்ளத்தை ஊற்றி விட்டு, மீதியானவர்களோடு யுத்தம் செய்ய புறப்பட்டு போனது (அது 17 ம் அதிகாரம்) நித்திரை செய்யும் கன்னியர்... உண்மையான சபையானது ஏற்கனவே போய் விட்டிருக்கும். அந்தக் காலத்தில் அந்த கடைசி வாரத்தில் சபையானது கலியாண விருந்துக்கு போய் விடும். அப்போது கலியாண விருந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும். அப்போது தான் உபத்திரவ காலமானது துவங்கும், அப்போது வெட்டுக்கிளிகளும் உபத்திரவங்களும் சபைகள் மேல் எழும்பும். பிறகு முடிவில் 19 ம் அதிகாரத்தில் அவள் தன்னுடைய மணவாளனுடன் வருவாள் (அல்லேலூயா), இராஜாதி இராஜா, கர்த்தாதி கர்த்தாவாக, இரத்தத்தில் தோய்த்த வஸ்திரம் தரித்தவராய் வருவார், அவரோடு பரலோக சேனைகளும் வெள்ளைக்குதிரைகள் மேல் ஏறிவர, அங்கே அவள் ஆயிரமாண்டு அரசாட்சியில் தன் ஸ்தானத்தை எடுத்துக்கொள்ள வருகிறாள். ஆமென்! ஓ!

தானியேலுக்கு காபிரியேல் அறிவுறுத்தியவைகள், ஜூலை 30, 1961 காலை, பத்தி எண் 158-160

    யோசேப்பு செய்த யாவும் விருத்தியடைந்தது. அதனால் தான் ஆயிர வருட அரசாட்சிக்கு இயேசு திரும்ப வரும்பொழுது, ரோஜாவைப் போல் பாலைவனங்கள் சோலைவனமாகும். அவர் செய்யும் யாவும் விருத்தியடைந்து செழிப்படையும். அவர்தான் செழிப்பின் குமாரனாவார். யோசேப்பை நீங்கள் எங்கு போட்டாலும், அது ஆசீர்வதிக்கப்பட்டதாயிருந்தது. இயேசு எங்கெல்லாம் இருக்கிறாரோ, அதெல்லாம் ஆசீர்வதிக்கப்படும். ஆகவே நீங்கள் அவரை உங்கள் இருதயத்தில் பெற்றுக்கொண்டு, ஆசீர்வதிக்கப்படுங்கள்.

தானியேலை காபிரியேல் சந்தித்ததன் ஆறு விதமான நோக்கங்கள், ஜூலை 30, 1961 மாலை, பத்தி எண் 69

    சகரியா 12-ம் அதிகாரம் எடுத்துக்கொள்வோமாக. அவர் தன் சகோதரருக்கு முன்பாக நிற்கும்போது, என்ன கூறப்போகிறார் என்பதை நாம் காண்போமாக. சகரியா 12-ம் அதிகாரம் 10-ம் வசனம் (இப்போது பாவத்தை தொலைக்கப் போகுதல் நடக்கிறது)

    அவர் இங்கே மீதியுள்ளவர்களைப் பற்றியே பேசுகிறதைக் கவனியுங்கள். எருசலேம் முற்றுகையிடப்படுதல், மிருகம், சேனைகள், அதைக் கைப்பற்றுதல் ஆகியவைகள் அங்கே விவரிக்கப்பட்டுள்ளது. இவையெல்லாம் முடிவு காலத்துக்கு அடுத்ததாக இருக்கிறது. இது ஏறத்தாழ ஆயிரவருட அரசாட்சிக்கு சமீபமான வேளையாயிருக்கிறது. இவை நடக்கும்போது ஆயிர வருட அரசாட்சியானது துவங்க ஆயத்தமாயிருக்கும்.

தானியேலை காபிரியேல் சந்தித்ததன் ஆறு விதமான நோக்கங்கள், ஜூலை 30, 1961 மாலை, பத்தி எண் 80-81

சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறது போல, பூமி கர்த்தருடைய மகிமையை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.
ஆப. 2:14

    அதனுடைய அர்த்தம் என்னவெனில், சத்துருவானவன் அடைக்கப்பட்டபொழுது, பாவமானது முடிவுக்கு கொண்டுவரப்படும்போது நித்திய நீதியானது வருவிக்கப்படும்பொழுது சாத்தானானவன் பாதாளக்குழியில் தள்ளியடைக்கப்பட்டு, முத்திரையிடப்பட்டு இருக்கும்போது, சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறது போல, பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும். ஆமென்! தேவனுக்கு மகிமையுண்டாவதாக! சகோதரனே, அது வரப்போகிறது. அது வரப்போகிறது. அப்பொழுது ஸ்திரீகள் யாவரும் எல்லா நற்குணமும் பொருந்திய மாது சிரோன் மணிகளாய் இருப்பார்கள். மனிதனானவன் எல்லாப் பண்பும் நிறைந்த ஒழுக்க சீலராய் இருப்பான். ஆமென்.

தானியேலை காபிரியேல் சந்தித்ததன் ஆறு விதமான நோக்கங்கள், ஜூலை 30, 1961 மாலை, பத்தி எண் 101

    இக்கூடாரமானது எசேக்கியேல் 43-ம் அதிகாரத்தில் விவரிக்கப்பட்டிருக்கிறது. எசேக்கியேல் 43:1-6 வசனங்கள்.

    நான் எசேக்கியேலுக்குத் திரும்பிச் சென்று, ஆயிரவருஷ அரசாட்சியிலே எவ்வாறு அவர்கள் அபிஷேகம் பண்ணுவார்கள் என்பதை சித்தரிக்கிறார் என்பதை நான் கண்டுகொள்வோமாக. எசேக்கியேல் 43 அதிகாரத்தில் நாம் சிறிது வாசித்து, ஆயிரவருஷ அரசாட்சியில் அபிஷேகம் பண்ணுவதை, அவர் எப்படி செய்யப் போகிறார் என்பதை நாம் காண்போமாக. எசேக்கியேல் 43-ம் அதிகாரம் 1-ம் வசனத்திலிருந்து 6-ம் வசனம் முடிய, நீங்கள் வீட்டுக்குத் திரும்பிப் போனபிறகு, அது முழுவதையும் நீங்கள் வாசித்துக்கொள்ளலாம். குறித்துக்கொள்ளுகிறவர்கள் எசேக்கியேல் 43 என்று குறித்துக்கொள்ளுங்கள்.

    பின்பு...
    இப்பொழுது கவனியுங்கள். ஆயிரவருஷ அரசாட்சியிலே கட்டப்படப்போகிற ஆலயத்தைப்பற்றி விவரக்குறிப்பு இது. வேதத்தை அறிந்திருக்கிற எவருக்கும் எசேக்கியேல் 40ம் அதிகாரத்திலிருந்து 44 ம் அதிகாரம் முடிய உள்ள விஷயங்கள் பூமியில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கிற ஆயிரவருஷ அரசாட்சி ஆலயத்தைப் பற்றியதேயல்லாமல் வேறு ஒன்றும் அல்ல என்பதை அறிவர். எவரும் அறிவர் அல்லவா? அப்பொழுது கர்த்தருடைய மகிமையானது அதை நிரப்பும்.

தானியேலை காபிரியேல் சந்தித்ததன் ஆறு விதமான நோக்கங்கள், ஜூலை 30, 1961 மாலை, பத்தி எண் 118-119

    எல்லாக் காலங்களைக்காட்டிலும் இது மிகவும் மகிமையான காலம். ஏனெனில் மகத்தான ஆயிர வருட அரசாட்சியை நாம் மறுபடியுமாக எதிர்நோக்கியிருக்கிறோம், ஏதேனை மறுபடியும் அடைய நாம் காத்துக்கொண்டிருக்கிறோம்.

சாத்தானின் ஏதேன், ஆகஸ்ட் 29, 1965, பத்தி எண் 64

    அவ்விதம் தான் மல்கியா 4-ம் அதிகாரம் வாக்களித்துள்ளது. அந்த தீர்க்கதரிசி வரும்போது இதுவரை ஸ்தாபனங்கள் சரிவர அறிந்துகொள்ளாது குழப்பியிருக்கும் எல்லா தேவரகசியங்களையும் வெளிப்படுத்தி பிள்ளைகளின் விசுவாசத்தை பிதாக்களிடம் திருப்புவார். அதன்பின்னர் நியாயத்தீர்ப்பு பூமியின் மேல் விழுந்து, அது எரிந்துபோகும். பின்பு ஆயிரம் வருஷ அரசாட்சியில் நீதிமான்கள் துன்மார்க்கரின் சாம்பலின்மேல் நடந்து செல்வார்கள்.

ஏழு சபையின் காலங்களுக்கும் ஏழு முத்திரைகளுக்கும் இடையேயுள்ள பிளவு, மார்ச் 17, 1963 மாலை, பத்தி எண் 218

Bro.william marrion branham

www.brideministry.com.

No comments:

Post a Comment