மணவாட்டி ஊழியம்

மணவாட்டி ஊழியம்

Thursday, November 27, 2014

I தெசலோனிக்கேயர் 4 அதிகாரம்

15. கர்த்தருடைய வார்த்தையை முன்னிட்டு நாங்கள் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: கர்த்தருடைய வருகைமட்டும் உயிரோடிருக்கும் நாம் நித்திரையடைந்தவர்களுக்கு முந்திக்கொள்வதில்லை.

16. ஏனெனில்,
 கர்த்தர் 
தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்.

செய்தி: ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்படுதல்

129. இந்த மகத்தான நிகழ்ச்சியை நீங்கள் கவனிக்க விரும்புகிறேன். காணத் தவறவேண்டாம். கர்த்தர் பிரசன்னமாகு முன்புமூன்று காரியங்கள் நிகழ வேண்டுமென்று 13 முதல் 16 வசனங்கள் உரைக்கின்றன. அவை ஆரவாரம்சத்தம்எக்காளம்என்பனவாம்.அது உண்மையா என்பதை நாம் அறிந்து கொள்ள மறுபடியும் 16ம் வசனத்தை படியுங்கள். அவர் இறங்கி வரும் போது இவை மூன்றையும் அவரே செய்கிறார்.

செய்தி:- ஏழு முத்திரைகளின் வெளிப்பாடு-ஐந்தாம் முத்திரை.

200.தேவனே,நான் மிகவும் மகிழ்ச்சிக் கொள்கிறேன்.என்ன செய்வதென்றே எனக்குத் தோன்றவில்லை.இப்பொழுது இதை நானாக கூறுகிறேன் என்று நினைக்க வேண்டாம்.நானும் கூட இங்கே உங்கள் மத்தியில் இருக்கிறேன்.பாரூங்கள்? நான், அது நான்.எனக்கு ஒரு குடும்பம் உண்டு.எனக்கு சகோதரரும்,சகோதரிகளும் உண்டு? அவர்களை நான் நேசிக்கிறேன். பரலோகத்தின் தேவன் தாமே கிருபையாய் இறங்கி வந்து தரிசனங்களின் மூலமாக அவரையும் அவருடைய சத்தியத்தையும் வெளிப்படுத்திக் கொண்டு வருகிறார்.முப்பது வருட காலமாக இவை யாவும் உண்மையென்று நிரூபிக்கப்பட்டுள்ளது.நாம் இங்குள்ளோம். நாம்...ஆம்,நாம் கடைசி காலத்தில் வந்துவிட்டோம். அவ்வளவுதான்.இது உண்மையென்று விஞ்ஞான ஆராய்ச்சி நிரூபித்துள்ளது.தேவனுடைய வார்த்தையும் அது உண்மையென்று நிரூபித்துள்ளது. அப்படியானால் நாம் கடைசி காலத்தில் இருக்கிறோம்.இந்த வெளிப்பாடு தேவனிடமிருந்து வருகிறது.இது சத்தியம்.

201.நீங்கள் ஏதாவதொன்றைக் கண்டுபிடித்தீர்களா? (சபையோர்ஆமென் என்கின்றனர்)நீங்கள் அதை கண்டீர்களா என்று நான் சற்று அதிசயித்தேன். பாரூங்கள்?ஆம்,ஐயா. அப்படியானால், நான் ஞாயிறன்று அதைக் கூற வேண்டியதில்லை. கவனியுங்கள். கவனியுங்கள். அதிசயம்!இப்பொழுது, இப்பொழுது   இப்பொழுது கவனியுங்கள்.

செய்தி:- தேவன் எளிமையில் மறைந்திருந்து, அதன்பின் அவ்விதமே தம்மை வெளிப்படுத்துதல்.  பக்கம்:69,70 பாரா:268,269,270,273.

மேசியா தோன்றும் போது,அவர் நேராக ஆலயத்துக்கு  வந்து 'காய்பாவே நான் வந்துவிட்டேன்' என்று சொல்வார் என்று அவர்கள் நினைத்திருக்கக்கூடும். அல்லது ஒருகோடி தேவதூதர்கள் அவரை வணங்கிய வண்ணம் அவர் தோன்றுவார் என்றும்,தேவன்,'பூமியிலுள்ள ஜனங்களே, நீங்கள் ஒரு மகத்தான சபை,நீங்கள் என் ஜனம். நான் யந்திரக் கைப்பிடியைச் சுழற்றி வானத்தின் தாழ்வாரங்களைக் கீழே இறக்கப் போகிறேன்.இன்று காலை மேசியாவை உங்களுக்கு அனுப்புவேன்.அவர் உங்கள் முற்றத்தில் நேராக இறங்குவார்' என்று சொல்வார். அப்பொழுது அங்கு சூழ்ந்திருக்கும் ஜனங்கள்,'டாக்டர் பட்டம் பெற்றவர்களே, நீங்கள் முன்னால் நின்று இயேசுவுக்கு முதலில் வரவேற்பு கொடுங்கள்' என்று சொல்வார்கள் என்றெல்லாம் அவர்கள் நினைத்திருப்பார்கள்.

ஒருக்கால் இன்றைக்கும் அவர்கள் அவ்வாறு நினைக்க வழியுண்டு.நான் கூறுவது கொடூரமாகக் காணப்படலாம். ஆனால் ஒரு முக்கியமான விஷயத்தைக் கூற நான் முயல்கிறேன்.

'நாங்கள் நினைத்தவண்ணமே அது நடக்கவேண்டும்;நாங்கள் நினைத்ததற்கு மாறாக அது நடந்தால்,அது அந்திகிறிஸ்துவின் கிரியையாகும்' என்று அவர்கள் எண்ணுகின்றனர்.பாருங்கள்? மேலும் அவருடைய இரண்டாம் வருகையில் ஒரு கோடி தேவதூதர்கள் மேளம் அடித்துக் கொண்டு வணங்க,மரித்தவரும் இவர்களும் பரிசுத்தவான்களும் (Saints) புத்திமான்களும் (Sages) மரித்த இடமாகிய இந்த புனித ஸ்தலத்தில் சுற்றி அங்குமிங்குமாக உலாவுவார்கள் என்று கற்பனை செய்கின்றனர். (மத்.23:29-32)

அவருடைய தோற்றம் அவர்கள் கொண்டிருந்த கருத்துக்களை அதிகமாக பாதித்தது.பாருங்கள்? அவர்களுடைய கல்வி அறிவு அதை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.வேதத்தைப்பற்றி அவர்கள் கொண்டிருந்த கருத்துக்கள், அவர் எவ்விதம் தோன்றுவா ரென்பதை அறிந்து கொள்ளவே முடியவில்லை. ஆயினும் அவர் கர்த்தர் உரைத்த விதமாகவே தோன்றினார். ஓ என்னே!.

அதை நினைக்கும்போதே எனக்கு நடுக்கம் உண்டாகிறது. அதே சம்பவம் இப்பொழுது மறுபடியும் நிகழ்வதை காணும்போது.... தேவன் ஒரு போதும் மாறாதவராயிருக்கிறார்.

செய்தி:- உலகம் விழுந்து போதல். டிசம்பர் 16 -1962.

41.  அவர்கள் மேசியாவுக்காக ஜெபம் செய்து கொண்டிருந்தனர். அவர்களுக்கு மேசியா அவசியமாயிருந்தது. ஆனால் காரியம் என்னவெனில், அவர்களுக்கு விருப்பமான வழியில் அவரைப் பெற அவர்கள் விரும்பினர்.தேவன் தமது சொந்த வழியில் அவரை அனுப்பினார்,அவர்களோ அவரைப் புறக்கணித்தனர்.

42. இன்றைக்கும் அவர்கள் அதையே செய்கின்றனர்.அவர்கள் மறுபடியும் அவரைப் புறக்கணிக்கின்றனர். அன்று அவர்கள் செய்த அதையே இன்று செய்கின்றனர்.ஏன்? அதே காரணம் தான்,அதே காரணம்.அவர் அப்பொழுது வந்தார்,அவர் வந்தாரென்று நாமறிவோம்.அவர் அவர்களிடம் வந்தார்,ஆனால் அவர் எவ்வாறு வரவேண்டுமென்று அவர்கள் விரும்பினார்களோ,அவ்விதமாக அவர் வரவில்லை. இன்றைக்கும் தேவன் ஒன்றை நமக்கு அனுப்பும்போது,அது நமக்கு வேண்டாம்.நமது ஸ்தாபன ருசியை அனுசரித்து அது வருவது கிடையாது.நமது வேதசாஸ்திர கருத்துக்களுடன் பொருந்தும் வண்ணம் அது வருவதில்லை.ஆனால் அதற்காகத்தான் நாம் ஜெபித்து வந்தோம். தேவனுக்கு முன்பாக நாம் ஏறெடுத்த அந்த விண்ணப்பத்துக்கு செவிகொடுத்து தேவன் அதை நமக்கு அனுப்பினார், நாமோ அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறோம்.

செய்தி: குற்றச்சாட்டு  63-0707

186. அதற்கென எல்லா ஒழுங்குகளும் நிறைவேறி வருகின்றன. பரிசுத்த ஆவியானவர் தாமே, தாம் கிரியை செய்யக்கூடியவர்களின் மூலம் இயேசுவை தத்ரூபமாக்கி, அவரை நிரூபித்து வருகிறார். அவர் தாமே கீழே இறங்கி வந்து, தம்முடைய புகைப்படத்தை எடுக்க அனுமதித்து, அதைக் காண்பித்து, அதை குறித்து விஞ்ஞானம் பேசும்படியாகச் செய்து, மற்றக் காரியங்கள், தாம் என்ன செய்யப்போவதாக அவர் கூறியுள்ளதை சரியாக நிரூபிக்கிறார்.
187. அவரை மறுதலித்தனர். அவர்களுடைய மேசியாவை அவர்கள் மறுதலித்து, எங்களுக்கு அவர் தேவையில்லை என்றனர். இன்றைக்கும் அதே காரியத்தை அவர்கள் செய்கின்றனர். நான் அங்கு சென்று, அந்த குழுவினர் நடந்து கொள்வதுபோல் நானும் நடந்துக்கொள்ள வேண்டுமென்றால், எனக்கு அது தேவையில்ல. சரி, அப்படியானால் அதை நீ பெற்றுக்கொள்ள முடியாது. அவ்வளவுதான். பாருங்கள்? அதே தான் இன்றும்.
செய்தி: பிளவு 63-0317 மாலை
256. கர்த்தருடைய வருகை மட்டும் உயிரோடிருக்கிறவர்கள் நித்திரையடைந்தவர்களுக்கு முந்திக்கொள்வதில்லை. ஏனெனில் கடைசி எக்காளத்தில், தேவ எக்காளம் முழங்கும். கடைசி முத்திரை உடைக்கப்பட்டிருக்கும்பொழுது ஏழாம் தூதன் தன் செய்தியை அளிக்கும்பொழுது, கடைசி எக்காளம் முழங்கும். கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் எழுந்திருப்பார்கள். உயிரோடிருக்கும் நாமும் அவர்களோடே எடுக்கப்பட்டு அவரை ஆகாயத்தில் சந்திப்போம். அவர் உரிமை பெறுகிறார்! அவர் தம் சொத்துக்களைப் பெற்றுக்கொள்ள புறப்பட்டு வருகிறார்.
செய்தி: ஏழாம் முத்திரை, மார்ச் 24, 1963 மாலை
இந்த ஏழாம் முத்திரை எல்லா காரியங்களும் முடிவடையும் சமயம் என்பதை நாம் நினைவு கூரவேண்டும். அது உண்மை. ஏழாம் முத்திரையைக் கொண்ட புஸ்தகத்தில் எழுதப்பட்டவை உலகத் தோற்றத்துக்கு முன்னால் மீட்பின் திட்டம் அதில் முத்திரையிடப் பட்டடிருந்தது. எல்லாமே முடிவடைகின்றது. அதுதான் முடிவு; கஷ்டத்தினால் போராடிக் கொண்டிருக்கும் உலகத்தின் முடிவு அதுவாகும். தவித்துக் கொண்டிருக்கும் இயற்கைக்கு அதுவே முடிவாகும். எல்லாவற்றிற்கும் அதுவே முடிவாகும். அதில் எக்காளங்கள் முடிவடைக்கின்றன; கலசங்கள் முடிவடைகின்றன; பூலோகமும் முடிவடைக்கின்றது. அது... காலம் என்பது கூட முடிவடைகின்றது.

இனிகாலம் செல்லாது என்று வேதம் உரைக்கின்றது. மத்தேயு 7-ம் அதிகாரம்... நான் கருதுவது வெளிப்படுத்தல் 7-வது... வெளிப்படுத்தல் 10-ம் அதிகாரம் 1 முதல் 7 வாசனங்களில் காலம் முடிவடைகின்றது. பலமுள்ள தூதன், இனி காலம் செல்லாது என்கிறான்... இந்த மகத்தான காரியம் நிகழும் நாட்களில்...

ஏழாம் முத்திரையின் முடிவில் இந்தக் காலத்துடன் எல்லாமே முடிவடைகின்றன. கவனியுங்கள்சபையின் காலங்களின் முடிவும் அதுவாகும். ஏழாம் முத்திரையின் முடிவும் அதுவே. எக்காளங்கள் அப்பொழுது முடிவடைகின்றன. கலசங்களும் முடிவடைகின்றது. ஏழாம் முத்திரையில், ஆயிரம் வருட அரசாட்சியின் வருகையின் முன்னறிவிப்பும் முடிவடைகின்றது.

இது ஒரு ராக்கெட்டை ஆகாய மண்டலத்தில் வெடிப்பது போன்றதாகும். அந்த ராக்கெட் இங்கே வெடித்து மேலே சென்று, மறுபடியும் வெடிக்கின்றது. அச்சமயம் ஐந்து நட்சத்திரங்கள் அதனின்று வெளியே வருகின்றன. அவ்வாறு வெளிவந்த நட்சத்திரங்களில் ஒரு நட்சத்திரம், மறுபடியும் வெடித்து அதனின்று ஐந்து நட்சத்திரங்கள் வெளியே வருகின்றன. அதனின்று வந்த நட்சத்திரங்களில் ஒன்று வெடித்து அதினிலிருந்து ஐந்து நட்சத்திரங்கள் புறப்பட்டுச் சென்று மறைந்து விடுகின்றன.

அதுதான் ஏழாம் முத்திரையாகும். உலகத்தின் காலத்தை அது முற்றுப் பெறச் செய்கிறது. இதனுடைய காலத்தை அது முற்றுப் பெறச் செய்கின்றது. அதனுடைய காலத்தை அது முடிவடையச் செய்கின்றது. இதனுடைய காலத்தை அது முடிவடையச் செய்கின்றது. அது காலத்தை முடிக்கிறது. ஏழாம் முத்திரையில் எல்லாமே முடிவடைகின்றன.
செய்தி: யார் இந்த மெல்கிசேதேக்கு?, பிப்ரவரி 21, 1965
சோதோமில் இருக்கும் மக்களை நோக்கிப் பாருங்கள். அங்கே அவர்களுடைய தூதர்கள் அவர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஆபிரகாமுடைய ராஜரீக வித்து எங்கே இருந்தது? சோதோம் நாட்களில் நடந்து போல என்று சொல்லும் போது அதற்குரிய அடையாளம் என்ன? தேவன் மாம்சத்தில் வந்து தன்னை வெளிப்படுத்தினார். தன்னுடைய முதுகிற்கு பின்னால் இருந்த கூடாரத்திற்குள் இருந்த சாராள் தன்னுடைய இருதயத்தில் நினைத்ததை அவர் பகுத்தறிந்து கூறினார். புறஜாதியாரின் உலகம் அழிக்கப்படுவதற்கு முன் கொடுக்கப்பட்ட கடைசி அடையாளம் அதுவே. தேவனுடைய கோபத்தினால் புறஜாதியரின் ஆட்சியிலுள்ள இந்த முழு உலகம் அக்கினியால் அழிக்கப்படுவதற்கு முன் சபையானது அதின் கடைசி அடையாளத்தை பெற்றாகி விட்டது. நீ இதை விசுவாசிக்கிறாயா?
செய்தி: இப்பொழுது காவலிலுள்ள ஆத்துமாக்கள், நவம்பர் 10, 1963
பாருங்கள், ஜனங்களே. கவனியுங்கள். உங்களுக்குத் தெரியுமா? நீங்கள், சகோ. பிரான்ஹாமே, ஓ, இதைக் குறித்தெல்லாம் என்ன? என்று கேட்கிறீர்கள். உங்களுக்குத் தெரியுமா? ஜனங்கள் எப்பொழுதும் போல் சுவிசேஷத்தைப் பிரசங்கித்துக்கொண்டேயிருக்கக்கூடும் - அவர்கள் சுவிசேஷம் என்று அழைப்பதை; ஆனால் அது முடிவடைந்திருக்கும். நோவாவின் நாட்களில் அவர்கள் அப்படியே செய்தார்கள். லோத்தின் நாட்களில் அவர்கள் அப்படியே செய்தார்கள். இயேசுவின் நாட்களிலும் அவர்கள் அப்படியே செய்தார்கள். அது சரியா? கோபாக்கினை வந்து விட்டது என்று இயேசு யூதர்களிடம் சொல்லிய பின்பும்... நீங்கள் முடிந்து விட்டீர்கள். இனி வேறொன்றும் இல்லை. நீங்கள் முடிந்துவிட்டீர்கள் என்றார் அவர். அவர்களோ, ஓ, அந்த உருளும் பரிசுத்தன். அவன் எந்த பள்ளிக்கூடத்தில் படித்துவிட்டு வந்தான்? அவன் எங்கிருந்து வந்தான் என்றனர்.

அவர் அப்பொழுது அவருடைய மூன்றாம் இழுப்புக்கு ஆயத்தமாயிருந்தார் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். அது உண்மை. எத்தனை தரமோ உன்னைக் கூட்டிச் சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன் என்றார் அவர் (லூக் 13:34).
லோத்து தன் கடைசி அழைப்பை விடுத்தான், அதாவது தூதன் அதை செய்தார் - செய்தியாளன், அது யாராயிருப்பினும், தேவன் அந்நாளில் பிரதிநிதியாகத் தோன்றினார். தேவன் மாமிசத்தில் பிரதிநிதியாகத்தோன்றி தமது கடைசி அடையாளத்தைக் காண்பித்து, தமது கடைசி வேலையைச் செய்தார். அதன்பின்பு எல்லாமே முடிந்துவிட்டது.

நோவா தன் கடைசி பிரசங்கத்தை செய்தான், அவன் உள்ளே சென்றவுடன் கதவு அடைக்கப்பட்டது. அவ்வளவுத்தான். அவர்கள் அதைப்பார்த்து நகைத்தார்கள், கேலி செய்தார்கள். யோசித்துப் பாருங்கள். ஜனங்கள் பிரசங்கித்துக்கொண்டே செல்லமுடியும். உலக சபைகள் ஆலோசனை சங்கம், அவர்கள் வாக்குரைத்தபடியே, கத்தோலிக்க சபையுடன் சேர்ந்துகொள்ள முடியும். எல்லா ஸ்தாபனங்களும் அதற்குள் வரக்கூடும். மிருகத்தின் முத்திரை ஏற்கனவே அங்குள்ளது. அதை அவர்கள் தரித்துக்கொண்டு விட்டனர். அவர்கள், ஓ, அல்லேலூயா தேவன் ஆசீர்வதிக்கப்படுவாராக, கடந்த இரவு அநேகர் இரட்சிக்கப்பட்டனர் என்கின்றனர். அப்படியா?

இப்பொழுது; இந்தக் காரியங்களை நாம் பார்க்கிறோம். ஏழு முத்திரைகளும் வெளிப்பட்டு முடிந்துவிட்டன என்பதை ஞாபகம் கொள்ளுங்கள்


17. பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக மேகங்கள்மேல், அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும்கர்த்தருடனேகூட இருப்போம்.



பாகம்-3

செய்தி: விளக்கைப் போடக்கூடிய ஒரு மனிதன் இங்கிருக்கிறார் 63-1229

யாரோ ஒருவர், அந்த நிமிடத்தையும் மணிநேரத்தையும் எந்த மனிதனும் அறியான் என்றாராம்.

நான் நிமிடத்தையும் மணிநேரத்தையும் கூறவில்லையே. நள்ளிரவிலிருந்து பொழுது விடிவதற்குள் எப்பொழுதாவது வருவார் என்று நான் கூறினேன் என்று சொல்லிவிட்டு, பில்லி, வா போவோம் என்று ஏதோ அதுபோல் கூறினேனாம் நான், நாங்கள் காரில் ஏறி மலையின் மேல் சென்றோம். அப்பொழுது வெளிச்சம் வர ஆரம்பித்தது போலிருந்தது, ஆனால் பூமியின் மேல் வானம் இருண்டிருந்தது. நான் சாலையின் ஒரு புறம் சென்று, என் கையை இப்படி உயர்த்தினதாக அவன் கூறினான். அப்பொழுதும் என் கண்களிலிருந்து அக்கினி ஜூவாலை வந்து கொண்டிருந்ததாம். நான், ஆண்டவரே, உமது கட்டளையின்படி இதை செய்தேன்.
இதை இவ்விதம் செய்ய வேண்டும் என்று நீர் என்னிடம் கூறினதால் நான் செய்தேன். நீர் என்னிடம் கூறினபடியே நான் இவைகளை செய்தேன் என்று கூறினதாக அவன் சொன்னான். நான் கிரானைட் மலைக்கு சைகைகாட்டினேனாம். அப்பொழுது ஒளி நூற்றுக்கணக்கான டன்கள் எடையுடைய கைகளால் பெயர்க்கப்படாத பாறையைப் பிளந்து, அது உருண்டு வந்ததாம். நான், தலையை திருப்பிக்கொள்ளுங்கள், பார்க்க வேண்டாம். இன்னும் சில நிமிடங்களில் அது யாவும் முடிந்துவிடும் என்றேனாம். கல் உருண்டு அந்த இடத்தை நோக்கி வந்து கொண்டிருந்தபோது ஒரு பரிசுத்தமான அமைதி நிலவினதாக அவன் கூறினான்.

142. நாம் நினைப்பதைக்காட்டிலும் காலதாமதமாகியிருக்கக்கூடும். அங்கே… பாருங்கள், அது முற்றிலும் வேதபூர்வமானது (நீங்கள் பார்த்தீர்களா?), கைகளால் பெயர்க்கப்படாத கல் மலையிலிருந்து உருண்டு வருதல். ஆகையால் இந்நாட்களில் ஒன்றில் அப்படித்தான் நடக்கும். நீங்கள் ஏதோ ஒன்றிற்காக கூச்சலிடுவீர்கள். நான் அவனிடம், அந்த நேரம் ஏற்கனவே வந்துள்ளது. தேவன் உன்னை ஒவ்வொரு நேரமும் சதா எச்சரித்துக்கொண்டே வந்திருக்கிறார் என்றேனாம். ஆம். அது என் சொந்த மகனாக இருந்தாலும், யாராக இருந்தாலும், அந்த நேரம் இங்குள்ளது. அவர் என்னிடம் கூறச் சொன்னதை மாத்திரமே என்னால் கூற முடியும், அது இங்கு இருக்கும். அது இங்கு வந்துள்ளது என்றேனாம். அப்பொழுது திடீரென்று அவர் கைகளால் பெயர்க்கப்படாத கல்லாக உருண்டு வந்தார். அநேக ஆண்டுகளுக்கு முன்பு தானியேல் அதைக்கண்டான் என்று உங்களுக்குத் தெரியும். பில்லிக்கு அதைக்குறித்து ஒன்றுமே தெரியாது. அது தேவனால் அவனுக்கு அனுப்பப்பட்ட சொப்பனம்.

143. இப்பொழுது, பாருங்கள், அவர்கள் ஆராதிப்பதாக உரிமை கோரும் அதே தேவனை அவர்கள் பரியாசம் பண்ணுகின்றனர். இன்றைக்கும் அதே காரணங்கொண்டு அதே காரியம் நடந்து கொண்டு வருகிறது. அவர்கள் வெளிச்சத்தில் வாழ்வதற்கு பதிலாக பொய்யான வெளிச்சத்தில் வாழ்ந்துக்கொண்டிருக்கின்றனர். பெரிய வெளிச்சத்திற்கு பிரகாசம் உண்டு.சரி.

செய்தி: பிரசவ வேதனை 65-0124

நீங்கள் விரும்பினால் என்னை பயித்தியக்காரன் என்று அழைக்கலாம். ஆனால் வனாந்திரத்தில் இஸ்ரவேல் ஜனங்களை வழி நடத்தின அதே அக்கினி ஸ்தம்பம் இதோ இங்கிருக்கும் அந்த பெண்மணியின் மேல் காணப்படுகிறது.
இப்பொழுது ஞாபகம் கொள்ளுங்கள். இயேசு, இன்னும் கொஞ்ச காலத்திலே உலகம் என்னைக் காணாது, நீங்களோ என்னைக் காண்பீர்கள். நான் தேவனிடத்திலிருந்து வந்தேன், திரும்பவும் தேவனிடத்திற்கே போகிறேன் என்று கூறினார். அவரே அந்த அக்கினி ஸ்தம்பமும் வனாந்திரத்தில் காணப்பட்ட கன்மலையுமானவர். இருக்கிறவராக இருக்கிறேன் என்றவர் யார்? எரியும் முட்புதரில் காணப்பட்டவர் தானே? அவரே மாமிசமாகி நமது மத்தியில் வாசம் செய்தார். பரிசுத்த ஆவியாயிருந்த நிலைக்கு தாம் திரும்புவதை குறிக்கவே அவர், நான் தேவனிடத்திலிருந்து வந்திருக்கிறேன், திரும்பவும் தேவனிடத்திற்கே போகிறேன். என்றார். அதே தேவன் இதோ நம் மத்தியிலே இருக்கின்றார். விஞ்ஞானமும் அவரைப் படம் எடுத்தது. விஞ்ஞானப் படத்தின் நிரூபணத்ததிற்கு மேலாக அவர் இதோ இங்கே நிரூபிக்கத்தக்கவராக இருக்கிறார். இந்த நாளுக்கென்று வெளிப்படும் மனுஷ குமாரன் நான்தான். அது அவரே. நீங்கள் அவரை காண்கிறீர்களா? என்று நீங்கள் கேட்கலாம். யோவான் அவரைக் கண்டான். ஆனால் மற்றவர்களோ அவரைக் காண முடியவில்லை.

பிரிந்து வெளியே வாருங்கள்! நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதை தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். அப்பொழுது நான் உங்களை ஏற்றுக்கொள்வேன். உங்களுடைய முழு ஜீவியத்தையும் தேவனுக்கு ஒப்புக்கொடுக்க ஆயத்தமாயிருக்கிறீர்களா? அப்படியானால் நீங்கள் எழுந்து நின்று, எல்லாம் முடிவுற்றபடியினால் தேவனுடைய கிருபையினால் நான் அதை ஏற்றுக்கொள்கிறேன் என்று கூறுங்கள்.

அல்லேலூயா! தேவனுக்கு ஸ்தோத்திரம்! அவரை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அப்படியானால் உங்கள் கரங்களை உயர்த்தி என்னோடு ஜெபம் செய்யுங்கள். உங்களுடைய பாவங்களை அறிக்கையிடுங்கள். பிரசவ வேதனை  மரிப்பது மிகவும் கஷ்டமான காரியம். ஆனால் இப்பொழுதே மரியுங்கள்! உங்களுடைய சொந்த அவிசுவாசத்தினின்று வெளியே வாருங்கள்! இயேசு பூமியில் வந்தபோது காணப்பட்டதுபோல, வெளிப்பட்ட தேவனுடைய வார்த்தை இதுதான்! இயேசு கிறிஸ்து திரும்பவும் உங்கள் மத்தியில் நிரூபணமாக இருக்கிறார்.




No comments:

Post a Comment