இந்த
வேதவாக்கியம் இன்றைய தினம் நிறைவேறிற்று
வெளி.11-வது
அதிகாரம்
1. பின்பு கைக்கோலுக்கு
ஒப்பான ஒருஅளவுகோல் என்னிடத்தில் கொடுக்கப்பட்டது. அப்பொழுது தேவதூதன் நின்று,
என்னை நோக்கி: நீ எழுந்து, தேவனுடைய ஆலயத்தையும், பலிபீடத்தையும் அதில் தொழுது கொள்ளுகிறவர்களையும்
அளந்துபார்.
2. ஆலயத்திற்குப் புறம்பே
இருக்கிறபிராகாரம் புறஜாதியாருக்குக் கொடுக்கப்பட்டபடியால் அதை அளவாமல்
புறம்பாக்கிப்போடு; பரிசுத்த நகரத்தை அவர்கள் நாற்பத்திரண்டு மாதமளவும்
மிதிப்பார்கள்.
செய்தி: ஷாலோம் 64-0112
காரிருள், புறஜாதியாருக்கு
வெளிச்சம் உண்டாக வேண்டும் என்பதற்காக இஸ்ரவேலர் குருடாக்கப்பட்டனர். இப்பொழுதோ
இஸ்ரவேலருக்கு வெளிச்சம் உண்டாகும் பொருட்டு புறஜாதியார் குருடாக்கப்படுகின்றனர்.
அது பகலும் இரவும் போன்றது. ஒரு புறம் இருளாயிருக்கும் போது, மறுபுறம்
வெளிச்சமாயுள்ளது. பிறகு இருளிருந்த பாகத்துக்கு வெளிச்சம் வருகின்றது. பூமியானது
வெளிச்சத்தை மறைத்து, சந்திரன் இவ்வாறு அந்தகாரப்பட்டது. புறஜாதி சபை காலம் முடிவு
பெற்று விட்டது என்பதை நமக்கு பிரதிபலிக்கிறது. சபை தன்னை ஆயத்தப்படுத்திக்
கொண்டிருக்கிறது. சிறிது காலமாகவே அவள் தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டு வருகிறாள்.
எடுத்துக்கொள்ளப்படுதலுக்கு நேரமாகி விட்டது. ஏனெனில் இருள் புறஜாதியாரின் மேல்
சூழ்ந்து கொண்டிருக்கிறது. விரைவில் யூதர்களுக்கு வெளிச்சம் உண்டாகும். சூரியன்
கிழக்கிலிருந்து மேற்குக்கு பிரயாணம் செய்துவிட்டது. நாம் மேற்கு கடற்கரையில்
இருக்கிறோம். வெளிச்சம் இனி ஒன்று மாத்திரமே செய்யமுடியும். அது மறுபாகத்தில்
கிழக்குக்கு செல்லவேண்டும். உங்களுக்குப் புரிகிறதல்லவா? (சபையோர் ‘ஆமென்’
என்கின்றனர் - ஆசி) வெளிச்சம் முதலில் எங்கே துவங்கினதோ அதே கிழக்கு திசைக்கு
மறுபடியும் செல்லவேண்டும் - இஸ்ரவேலரிடம். தேவன் சிறிது காலம் அவர்களை
குருடாக்கியிருந்தார். ஆனால் இப்பொழுதோ இருள் புறஜாதி உலகத்தை முழுவதும்
மூடியுள்ளது. புறஜாதியாரின் காலம்
நிறைவேறும் வரைக்கும் எருசலேம் புறஜாதியாரால் மிதிக்கப்பட்டும். இயேசு அவ்வாறு
கூறியுள்ளார். இப்பொழுது அது நிறைவேறிவிட்டது.
3. என்னுடைய இரண்டு
சாட்சிகளும் இரட்டு வஸ்திரமுடுத்திக்கொண்டிருக்கிறவர்களாய், ஆயிரத்திருநூற்றறுபது
நாளளவும் தீர்க்கதரிசனஞ்சொல்லும்படி அவர்களுக்கு அதிகாரம் கொடுப்பேன்.
4. பூலோகத்தின் ஆண்டவருக்கு முன்பாக நிற்கிற இரண்டு ஒலிவமரங்களும் இரண்டு விளக்குத்தண்டுகளும் இவர்களே.
செய்தி: இயேசு கிறிஸ்துவைப் பற்றிய வெளிப்பாடு
முதலாம் பாகம்.1961.
42. இச்சம்பவத்திற்கு
முன்பு, நடைபெற்ற ஒரு கூட்டத்தில், ஓர் இளம் பெண்மணி, செய்வதறியாது எழுந்து
நின்றாள். கூட்டத்தினர் நடுவில் அவள் நின்று கொண்டிருந்தாள். அப்பொழுது பரிசுத்த
ஆவியானவர் அவள் மேல் இறங்கி, அதனால் அவள் அந்நிய பாஷையில் பேச ஆரம்பித்தாள்.
அப்பெண்மணி, ஷ்ரீவ்போர்ட்டிலுள்ள முதல் பாப்டிஸ்டு சபையைச் சேர்ந்தவள். தான் என்ன
செய்தோம் என்பதை அறியாமல் திகைதவளாக நின்று கொண்டிருந்தாள். அவள் அவ்வாறு அந்நிய
பாஷையில் தன்னையறியாமல் பேசி முடித்த பிறகு, அவள் வேறெதுவும் பேசும் முன்பாக,
பரிசுத்த ஆவியானவர் அவள் அந்நிய பாஷையில் பேசியவைகளின் அர்த்தத்தை, பாஷையை
வியாக்கியானித்துத் தந்தார். ‘கர்த்தர் உரைக்கிறதாவது என்னவென்றால், இன்னும்
மூன்று மாதத்திற்குள், இந்தக் கூடாரத்தில், மோசேயின் ஆவியும், எலியாவின் ஆவியும்,
கிறிஸ்துவின் ஆவியும், ஊழியத்தை நிறைவேற்றும்’
என்பதுதான் அப்பெண்மணி அந்நிய பாஷையில் பேசியவைகளின் வியாக்கியானமாயிருந்தது.
உரைக்கப்பட்ட அவ்வார்த்தையின்படியே முழுவதும் நிறைவேறிற்று.
(மத்தேயு.17 அதிகாரம் 1 முதல் 13 வசனங்களை
வாசிக்கவும்)
5. ஒருவன் அவர்களைச் சேதப்படுத்தமனதாயிருந்தால், அவர்களுடைய வாயிலிருந்து அக்கினி புறப்பட்டு, அவர்களுடைய சத்துருக்களைப் பட்சிக்கும்; அவர்களைச் சேதப்படுத்த மனதாயிருக்கிறவன் எவனோ அவன் அப்படியே கொல்லப்படவேண்டும்.
6. அவர்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லிவருகிற நாட்களிலே மழைபெய்யாதபடிக்கு வானத்தை அடைக்க அவர்களுக்கு அதிகாரமுண்டு; அவர்கள் தண்ணீர்களை இரத்தமாக மாற்றவும், தங்களுக்கு வேண்டும்போதெல்லாம் பூமியைச்சகலவித வாதைகளாலும் வாதிக்கவும் அவர்களுக்கு அதிகாரமுண்டு.
செய்தி: தேவனுடைய வார்த்தை அவிசுவாசத்தினின்று
முழுவதுமாக பிரிந்து வரும்படி அழைக்கிறது- 64-0121
ஒவ்வொரு முறை எங்கள்
விவாக நாளான அக்டோபர் 23ம் தேதி வரும்போது; அடிரன்டாக் மலையின் மேல் எங்கள்
தேன்நிலவின் போது என் மனைவியைக் கூட்டிச் சென்ற ஒரு இடம் உள்ளது. இந்த இடம் அது
போன்றே உள்ளது. ஒரே சலக்கும் புன்னை மரங்கள் புதராக வளரும் பிரதேசமாகும். அதுவோ
வழவழப்பான மரங்களைக் கொண்ட இடம். நான் ஒவ்வொரு 23ம் தேதியும் அங்கு சென்று, என்
தொப்பியைக் கழற்றி, இத்தனை ஆண்டுகளாக எனக்கு உத்தமும், உண்மையுமாய் வாழ்ந்து,
சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கச் செல்லும் போது எனக்கு உதவி செய்து வரும் அருமையான
மனைவியை எனக்குத் தந்தற்காக ஆண்டவருக்கு நன்றி செலுத்துவது வழக்கம்.
இந்த ஆண்டு,
தேசமெங்கிலும் வறட்சியாயிருந்தது போல், கொலராடோவிலும் வறட்சியாயிருந்தது.
திடீரென்று அங்கு……எங்களுக்கு முன்னால் அங்கு இருநூறு பேர்
மன்னிக்கவும். ஏறக்குறைய நூறு பேர் முகாமிட்டு, நான்கு அல்லது ஐந்து நாட்கள்
வேட்டையாடினர். நான் ஒரு மானைச் சுட்டேன், நான் அநேக ஆண்டுகளாக வேட்டையாடிக்
கொண்டிருந்த ஒன்று. ஆனால் மூடுபனி இறங்கினதால், அந்த மானை என்னால் கண்டு பிடிக்க
முடியவில்லை. நாள் முழுவதும் அதை நான் துரத்தி வேட்டையாடிக்கொண்டிருந்தேன். அடுத்த
நாள் வானொளியில், ‘கண்ணை மறைக்கும் உறை பனிப்புயல் வரப்போகின்றது.
அது ஒரே இரவில் இருபது அடி உயரத்துக்குப் பனியைக் குவிக்குக் கூடும்’ என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
எனவே நான் சகோதரரிடம்
கூறினேன்…அவர்களை அழைத்து (மார்ட்டின் பையன்களும்
அங்கிருந்தனர்) ‘சகோதரரே, செய்தியைக் கேட்டீர்களா? இங்கிருந்து
வெளியேற விரும்பினால், உடனே புறப்படுங்கள். இல்லையென்றால் காலதாமதமாகிவிடும்.
வேண்டுமானால் ஒரு வாரம் இங்கு தங்கலாம். ஆனால் நான் போக வேண்டும். ஏனெனில் அடுத்த
ஞாயிறன்று முழு சுவிசேஷ வர்த்தகர் குழுவின் கூட்டம் எனக்கு டூசானில் உள்ளது.
இருப்பினும், உங்கள் விருப்பத்தைத் தெரிவியுங்கள். நீங்கள் தங்க விரும்பினால்,
நானும் உங்களுடன் தங்கி உங்கள் வழிகாட்டியாயிருப்பேன்’ என்றேன்.
அவர்கள் எல்லோரும், ‘நாங்கள் தங்குவோம், நாங்கள் தங்குவோம்’ என்று தங்கள்
விருப்பத்தைத் தெரிவித்தனர்.
மார்ட்டின் பையன்களிடம்
அதி வேகம் செல்லும் மோட்டார் வாகனம் இருந்தது. அங்கு வேட்டையாட இரண்டு மான்கள்
இருந்தன. அந்த பொறுப்பை அவர்களிடம் ஒப்படைத்தோம். அவர்கள் புறப்பட்டுச் சென்றனர்.
அந்த இடத்தை விட்டு நகர அவர்களுக்கு விருப்பமில்லை. அவ்வளவுதான். இன்றிரவு அவர்கள்
சாட்சியாக இங்கு அமர்ந்துள்ளனர்.
அடுத்தநாள் நான், ‘நல்லது…’ என்று நினைத்தேன். அவர்கள் சென்ற அன்று பனி
பெய்யவில்லை. நான், ‘என் மனைவியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவள்
எனக்கு நல்ல மனைவியாக இருப்பதற்காக அவளுக்கு எவ்வளவாக நன்றியுள்ளவனாகயிருக்கிறேன்
என்று தெரியப்படுத்துவேன். அது எங்கள் விவாக நாள். நாளை அந்த இடத்திற்கு செல்வேன்.
பனிப் பெய்யும் முன்பு அங்கு செல்லக் கூடுமானால்’ என்று மனதில் எண்ணினேன்.
நான் உள்ளே சென்றேன். ஆனால் அவள் தொலைபேசியில் கிடைக்கவில்லை. நான் திரும்பி
வந்தேன். பட்டினத்திலிருந்த எல்லோருமே அந்த உறை பனியை எதிர் நோக்கியிருந்தனர்.
அன்றிரவு ‘கொலராடோவில் அது இருபது அடி உயரத்திற்கு பனியைக்
குவிக்கக் கூடும்’ என்று செய்தித்தாள் அறிவித்திருந்தது.
என்ன நடந்தது? அன்றிரவு
பனி பெய்யவில்லை. அடுத்த நாள் காலையில் மேகங்கள் தாழ்வாகவும் கொடூரமாகவும்
காணப்பட்டன. நான், ‘ சகோதரரே, அநேக ஆண்டுகளாக இங்கு நான் மாடு
மேய்த்திருக்கிறேன், வழிகாட்டியாகவும் இருந்திருக்கிறேன். முதல்துளி மழை
பெய்தவுடன், நீங்கள் துரிதமாக முகாமுக்குச் சென்று விடுங்கள். ஏனெனில் பதினைந்தே
நிமிடங்களுக்குள், உங்கள் கையை உங்களுக்கு முன்னால் வைத்தால், இரண்டு மூன்று
நாட்களுக்கு அதை காணமுடியாத அளவுக்கு பயங்கரமான உறைபனி இங்கு பெய்வதைக்
கண்டிருக்கிறேன்’ என்றேன். நாங்கள் 9000 அடி உயரத்தில் இருந்தோம்.
நான், ‘நீங்கள் உறைபனியில் மாட்டிக் கொண்டு வழி தவறி
விடுவீர்கள். நீங்கள் மலையின் மேலேயே மரிக்க வேண்டியிருக்கும்’ என்றேன். நான் ஒவ்வொருவரையும் கணக்கெடுத்து மேலே சென்றேன். நான், ‘எனக்காக காத்திருக்க வேண்டாம். அந்த முதல் துளி மழை தூறினவுடனே,
முகாமுக்கு விரைந்து செல்லுங்கள், இல்லையென்றால் முகாமுக்குப் போகும் வழியை
உங்களால் கண்டு பிடிக்க முடியாது’ என்றேன். அவர்களும் ஒத்துக்கொண்டனர்.
நான் மேலேறிச் சென்றேன்.
ஓநாய்கள் எங்கும் ஊளையிட்டுக் கொண்டிருந்தன. வான் நிலை மாறப்போகிறது என்று
அறிந்துக் கொண்டேன். அப்பொழுது சடுதியாக பலத்த காற்று அடிக்கத் தொடங்கினது. உறைபனி
கலந்து மழை விழத்தொடங்கினது. ‘எல்லோரும் திரும்பிச் சென்றிருப்பார்கள் என்று
நினைக்கிறேன்’ என்று எண்ணினேன். நான், நின்று சுற்றும் முற்றும்
பார்த்தேன். ‘ நான் திரும்பி செல்லும் முன்பு, நான் சுட்ட அந்த
மானைக் கண்டால் நலமாயிருக்கும். பனி அதை மூடிவிடும், பின்பு வசந்த காலம் வரைக்கும்
அதை கண்டு பிடிக்க முடியாது’ என்று நினைத்தேன். ‘நான் அவ்வளவு கஷ்டப்பட்டு அந்த மானை வேட்டையாடினேன். இந்த சிறு
துப்பாக்கி எனக்கு சொந்தமான முதற்கு, இப்படி மானை விட்டு விடுவது இதுவே முதல்
தடவையாகும். அப்படி விட்டு விடுவது எனக்குப் பிடிக்கவில்லை’ என்று எண்ணினேன்.
சிறிது நேரத்துக்கெல்லாம்
பெரிய பனித்துளிகள் எங்கும் விழத்தொடங்கின. காற்று பலமாக அடிக்கத்தொடங்கினது.
உச்சிக்கு என்னால் எப்படி ஏறிச் செல்ல முடியுமென்று எனக்குத் தெரியவில்லை. அந்த
முகடு மேல் எப்படி தங்கியிருப்பதென்று எனக்குத் தெரியும். நான் கீழே சென்று
குறுகிய சமவெளியை அடைந்தால் அதன் வழியாகச் சென்று குறுகிய சமவெளியை அடைந்தால் அதன்
வழியாகச் சென்று ஒரு சிறு நடைபாலத்தை சேரலாம், அங்கிருந்து கூடாரம் இருக்கும்
இடத்திற்கு எப்படியாவது சென்று விடமுடியும். அவ்கிருந்து வெளியேற அந்த ஒரு வழி
மாத்திரமேயுள்ளது. எனவே, ‘இப்படியும் அப்படியும் நகர்ந்தால், அவ்வளவு தான்.
அதன் பிறகு காணப்படமாட்டோம்… அங்கேயே மரித்து விடுவோம்’ என்று எண்ணினேன்.
நான் மலையிலிருந்து கீழே
இறங்கத் தொடங்கினேன். நான் இருந்த இடத்திலிருந்து முன்னூறு அல்லது நானூறு கெஜம்
கீழே இறங்கியிருப்பேன். இது விசித்திரமாகத் தென்படலாம். ஆனால் எனக்கு முன்னால்
வேதாகமம் உள்ளது. நான் கூறுவதற்கு பரலோகப் பிதா சாட்சி. நான் அங்கிருந்து வெளியேற
எண்ணி ஓடினேன். காற்று பலமாக அடித்து, எனக்கு முன்னால் இருபது அடி தூரம் வரைக்கும்
இருந்த மரங்களை சுழற்றினது. அப்பொழுது ஒரு சத்தம் ‘நில்! நீ புறப்பட்ட
இடத்திற்கு திரும்பிப்போ’ என்றது.
நான் புறப்பட்டு
சென்றேன். என் சத்தத்தை நீங்கள் எவ்வளவு தெளிவாக கேட்கின்றீர்களோ, அவ்வளவு தெளிவாக
ஒரு சத்தம் என்னிடம், ‘நீ புறப்பட்டு வந்த இடத்திற்கு திரும்பி செல்!’ என்றது. நான் மரணக் கண்ணிக்குள் நடக்க வேண்டுமென்று தேவன் கூறுவாரா
என்ன? என்று வியந்தேன்.
நான் ஒரு நிமிடம் அங்கு
நின்றேன், அதே சத்தம் தான் என்னிடம் அணில்களைக் குறித்து கூறினது. நான் நேற்று
உங்களிடம் கூறின அந்த சம்பவம், என் மனைவியைக் குறித்தும். அது ஒரு சத்தம், ஒரு
மனித சத்தம். நான் சிறுவனாயிருந்தபோது, அதே சத்தம் தான் என்னிடம், ‘மது அருந்தாதே, புகைப்பிடிகாதே, இவை கடைசி நாட்களில் சம்பவிக்கும்’ என்று கூறினது. தேவன்…இந்த வேதாகமத்தை என்
இருதயத்தின் மேல் வைத்து கூறுகிறேன்…உங்களிடம் பொய்யுரைத்து
என் ஆத்துமாவை நான் நரகத்துக்கு அனுப்புவதனால் எனக்கு என்ன பயன்? அது உண்மை. அது
வழக்கத்திற்கு மாறான ஒன்று அது உண்மை.
‘நல்லது, நான் அந்த சத்தத்துக்குக் கீழ்படிய
வேண்டும்’ என்று நினைத்தேன், நான் ஏன்…’நான் அங்கு செல்வதற்கு தேவனுக்கு ஒரு காரணம் இருக்கவேண்டும்,
ஒருக்கால் நான் இவ்வுலகை விட்டுச் செல்ல வேண்டிய வேளை வந்திருக்கலாம்’.
அப்பொழுது ஒரு சத்தம்
கேட்டது, அது, ‘நான் வானத்தையும், பூமியையும் சிருஷ்டித்த
பரலோகத்தின் தேவன்’ என்றது.
நான் தொப்பியைக்
கழற்றிவிட்டு, அமைதியாக உட்கார்ந்து கொண்டிருந்தேன். நான் மறுபடியும் கவனித்தேன். ‘அது காற்றல்லவே!’ என்று நினைத்தேன். ஓ, அது பலமாக அடித்து சத்தம்
உண்டாக்கிக் கொண்டிருந்தது.
நான் மறுபடியுமாக அந்த
சத்தத்தைக் கேட்டேன். அது ‘நானே கொந்தளிக்கும் கடலை அமரப்பண்ணினவர், நானே
சிருஷ்டி கர்த்தர், உன் முன்னிலையில் அணில்களை சிருஷ்டித்தவர் நானே, இவைகளை
செய்தேன்’ என்றது.
நான், ‘ஆம், ஆண்டவரே, உம்மை விசுவாசிக்கிறேன்’ என்றேன்.
அவர், ‘எழுந்து நில்!’ என்றார். நான் எழுந்து நின்றேன். அவர், ‘இப்பொழுது புயல் காற்றைக் கட்டளையிடு. நீ கட்டளையிடுவதை நான்
நிறைவேற்றுவேன்’ என்றார்.
நான் கூறுவது உண்மை.
உங்களை நியாயத்தீர்ப்பிலே சந்திக்கும்போது, இதற்கு நான் பதில்
கூறவேண்டியவனாயிருப்பேன். அவர்…நான், ‘புயலே,
உன் இடத்திற்குப் போ; நில். சூரியனே, நீ வழக்கம் போல் நான்கு நாட்கள் பிரகாசி’ என்று
கட்டளையிட்டேன். நான் கட்டளையிட்ட மாத்திரத்தில், என்னைக் கீழே தள்ள நோக்கிய
உறைபனியும், கல் மழையும் நின்று விட்டது! ஓரிரு நொடிகளில் சூரியன் பிரகாசித்து,
என் மேல் கதிர்களை வீசியது. நான்
மலைகளை நோக்கின போது, கீழ்காற்று அடிப்பதை என்னால் காணமுடிந்தது. (அது
மேற்கிலிருந்து வந்தது). அது இவ்வழியாக வந்து, அதிசய விதமாக மேகங்கள் மறைந்துப்
போவதைக் கொண்டேன்…அவை எங்கு சென்றனவோ நான் அறியேன். அங்கு நான் சில
நொடிகளில் நின்று கண்ணீர் சிந்தினேன். அது நரைத்த என் தாடியின் வழியாய்
வழிந்தோடியது. நான், ‘தேவனே, எப்படி எனக்கு என்ன செய்வதென்றே
தெரியவில்லை’ என்று எண்ணினேன். ‘சகோதரர் அனைவரும் முகாமை
அடைந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்’ என்று மனதில் எண்ணினேன்.
சூரியன் எல்லாவிடங்களிலும் பிரகாசித்தது.
நான் மலையை விட்டு இறங்கி
வந்த பின்பு நான்கு நாட்கள் வரை, வானத்தில் ஒரு மேகம் கூட காணப்படவில்லை. நான்
பெட்ரோல் விற்பவரிடம், ‘மிகவும் உலர்ந்துள்ளதல்லா?’ என்றேன்.
அவர், ‘ஒரு விசித்திரமான காரியம் உங்களுக்குத் தெரியுமா? புயல் வருமென்று
அன்று முன்ன்றிவிக்கப்பட்டது. அது வந்து, திடீரென்று நின்றுவிட்டது’ என்றார்.
7. அவர்கள் தங்கள் சாட்சியைச்சொல்லி முடித்திருக்கும்போது, பாதாளத்திலிருந்தேறுகிற மிருகம் அவர்களோடே யுத்தம்பண்ணி, அவர்களை ஜெயித்து, அவர்களைக் கொன்றுபோடும்.
பில்லி பால் சாட்சியம் (ஞாபகர்த்த ஆராதனை)
சகோதரன் பிரன்ஹாமும்,
நானும் இரண்டு இரவுகள் நடக்கும் கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக
இந்தியானாவுக்குத் திரும்பிச் செல்ல திட்டமிட்டிருந்தோம். அவர், ‘சர்பத்தின்
அடிச்சுவடு’ என்ற பொருளில் பேச விரும்பினார். இந்த ஆராதனையை நடத்தும்படிக்கு
பள்ளியின் அரங்கத்தை பெற்றுக் கொள்வதைக் குறித்து கவனித்துக்கொள்ள எங்கள் சபையின்
தருமகர்த்தாக்களில் ஒருவரும், சகோதரன் பிரன்ஹாமின் மிக நெருங்கிய நண்பருமான
சகோ.உட்டிடம் தொடர்புகொள்ளம்படி என்னிடம் கூறினார். நான் அப்படியே செய்தேன்.
சகோதரன் உட் அதை
உறுதிப்படுத்துவதற்காக என்னை அழைக்கும் முன்பு, தகப்பனார் என்னை அழைத்து, ‘நான்
அவ்வாறு செய்ய விரும்பவில்லை. நாம் விடுமுறையை கழிக்கும்படி சற்று வீட்டிற்கு
திரும்பிச் செல்லலாம்’ என்று என்னிடம் கூறினார்.
நாங்கள் டெக்ஸாஸின் எல்லைக்குள்
தாண்டிச் சென்றிருந்தோம். அமரில்லோவிலிருந்து எண்பது அல்லது தொண்ணூறு
மைல்களுக்குள் இருந்தோம். அப்பொழுது ஒரு கார் வந்து கொண்டிருப்பதை நான் கொண்டேன்,
எங்களை நெருங்கி வந்து கொண்டிருந்த அந்த காரின் ஓட்டுனர் பக்கமுள்ள முகப்பு
விளக்கு எரியவில்லை. நான் முதலில் அது ஒரு மோட்டார் சைக்கிள் என்று எண்ணினேன்,
ஏனெனில் அது சரியாக நடுவழியில் வந்து கொண்டிருந்தது. நான் அதில் அதிக கவனம்
செலுத்தவில்லை. அது சற்று இருட்டின பிறகு, சுமார் ஏழரை மணி இருக்கும் என்று நான்
கூறுகிறேன்.
அது அருகில் வந்தபோது
தான் அது ஒரு கார் என என்னால் காணமுடிந்தது. அதன் முகப்பு விளக்குகளில் ஒன்று
எரியவில்லை. நான் சொன்னபடி, டிரைவரின் பக்கமுள்ள முகப்பு விளக்கு சரியாக வழியின்
நடுவில் இருந்தது. எனவே முழு வாகனமும் சாலையில் என்னுடைய பக்கத்தில் இருந்தது.
நான் ஒரு கண நேரத்தில் என்னுடைய காரின் ஒலிப்பானால் ஒலி எழுப்பி காரை
வலப்பக்கத்திற்கு சட்டென்று திருப்பினேன். அந்த காரானது சாலையின் வலது பக்கம்
செல்வதைக் கொண்டேன். நான் மீண்டும் பார்த்தபோது இரண்டு கார்கள்
மோதிக்கொண்டிருந்தன. அந்த காரானது தகப்பனார் வந்த பாதையின் திசையில் நேரடியாக
திருப்பப்பட்டிருந்தது.
…இந்தக் காரானது என் இடது பக்கத்திலுள்ள ஒரு
பள்ளத்தில் விழுந்து கிடப்பதை நான் கொண்டேன். நான் சாலையிலிருந்து விலகி, என்னுடைய
முகப்பு வெளிச்சத்தில் பார்த்த போது, அது அது என்னுடைய தகப்பனாராக இருந்தது. நான்
காண முடிந்ததெல்லாம் அவருடைய தலை வெளியே தள்ளி நீட்டிக் கொண்டிருந்தது. நான்
நினைத்ததை அப்படியே உங்களிடம் கூறுகிறேன். அவர் போய்விட்டதாக (மரித்து விட்டதாக)
நான் எண்ணினேன். நான் என்னுடைய மனைவியிடம் ‘அவர் மரித்து விட்டார்’ என்று கூறினேன். எனவே அவள் காரிலிருந்து வெளியே குதித்து அங்கே
ஓடினாள். சரக்கு இரயில் அதன் மீது மோதியதைப் போன்று அந்த கார் காணப்பட்டது.
அப்படிப்பட்ட சின்னாபின்னாமாக்கப்பட்ட நிலை.
8. அவர்களுடைய உடல்கள் மகாநகரத்தின் விசாலமான வீதியிலே கிடக்கும். அந்த நகரம் சோதோம் என்றும் எகிப்து என்றும் ஞானார்த்தமாய்ச் சொல்லப்படும்; அதிலே நம்முடைய கர்த்தரும் சிலுவையிலே அறையப்பட்டார்.
செய்தி: குற்றச்சாட்டு
63-0707
284. அவர் யாரால் சிலுவையில் அறையப்படுகிறார்?
மேய்ப்பர்களால், மாய்மாலக்காரரே, உங்களுக்கு இதைவிட நன்றாகத் தெரியும். நான் உங்கள்
பேரில் கோபமடையவில்லை. ஆனால் எனக்குள்ளே ஏதோ ஒன்று பொங்கி வருகிறது. தேவன் உங்கள் மத்தியில்
முழுவதுமாக அடையாளம் கண்டுகொள்ளப்பட்டுவிட்டார்.
285. எந்த இடத்தில் அவருடைய விலாவில்
ஈட்டியால் குத்தினார்கள்? அவருக்கு எங்கு குத்து ஏற்பட்டன? கல்வாரியில். இன்றைக்கு
அவர் எங்கு ஈட்டிக்குத்துக்களைப் பெறுகிறார்? பிரசங்க பீடத்தில். அது எங்கிருந்து
அப்பொழுது வந்தது? எருசலேமிலிருந்து. இன்று அது எங்கிருந்து வருகிறது? அவரைநேசிப்பதாக கூறிக்கொள்ளும்
ஸ்தாபனங்களிலிருந்து. இன்றைக்கும் அதைத்தான் அவரை ஈட்டியால் குத்துகிறார்கள்.
இது இரண்டாம் கல்வாரி.
9. ஜனங்களிலும், கோத்திரங்களிலும், பாஷைக்காரரிலும், ஜாதிகளிலுமுள்ளவர்கள் அவர்களுடைய உடல்களை மூன்றரை நாள் வரைக்கும் பார்ப்பார்கள், அவர்களுடைய உடல்களைக் கல்லறைகளில் வைக்கவொட்டார்கள்.
பில்லி பால் சாட்சியம் (ஞாபகர்த்த ஆராதனை)
நாங்கள் சவ அறைக்குச் சென்றோம். நான் அந்த சரீரத்தை நோக்கிப் பார்த்த
போது, அது என் தகப்பனாரைப் போல் தோற்றமளிக்கவில்லை. அப்பொழுது நான், ‘அவர் அங்கே இல்லை’ என்று எண்ணினேன். நான் அவ்வாறு எண்ணுவதற்கு சில காரியங்கள் இருந்ததை
நான் அறிவேன்.
…எனவே நான் உங்களுக்கு சொல்லித்தான் ஆகவேண்டும். நாங்கள் முதலில்
எங்கள் தகப்பனாரை அடக்கம் செய்யவில்லை. நான், ‘கர்த்தாவே, இந்த அடக்க ஆராதனையினூடாக நான் செல்ல நீர் அனுமதித்தால்
நான் செய்ய கூடியது அவ்வளவுதான். அவரை கல்லறையில் வைக்க நான் முடிவெடுக்க முடியாது.
தாயார்தான் முடிவெடுக்க வேண்டியதாயுள்ளது’ என்றேன். நான் தாயாரிடம் சென்றேன், அவர்கள், ‘தகப்பனார் நமக்காக ஒரு வீட்டைக் கட்டியிருக்கும்
டூசானில் வாழ எனக்கு விருப்பமா என்பது தெரியவில்லை. எங்கே அவரை வைக்க வேண்டுமென்று
எனக்குத் தெரியவில்லை. ஆனால் நான் எங்கே இருப்பேனோ அங்கேயே அவரை வைக்க வேண்டும்’ என்றார்கள்.
நான் பிரேத விசாரணை நடத்துபவரிடம் கேட்டேன் (அவர் என்னுடைய மிக நல்ல
நண்பர்), என்ன செய்ய வேண்டுமென்று தாயார் தீர்மானிக்கும் வரை தகப்பனாரை அடக்கம்
பண்ணாமல் அங்கேயே வைத்திருக்கவோ அல்லது சவ அறையிலோ, ஏதோவொன்றிலோ வைத்திருக்க
எனக்கு அனுமதி கிடைக்குமா என்று விசாரித்தேன்.
அவர்,’நான்
அம்மனிதரை மிகவும் நேசிக்கிறேன். நான் அவரை அடக்கம் பண்ணுவதற்கு முன் சவத்தை
வைக்கும் இடத்திலேயே வைத்திருப்பேன். நீங்கள் தீர்மானம் பண்ணும் போது அடக்க
ஆராதனையைக் கொண்டிருக்கலாம்’ என்றார்.
10. அவ்விரண்டு
தீர்க்கதரிசிகளும் பூமியின் குடிகளை வேதனைப்படுத்தினபடியால் அவர்கள் நிமித்தம்
பூமியில் குடியிருக்கிறவர்கள் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து, ஒருவருக்கொருவர்
வெகுமதிகளை அனுப்புவார்கள்.
11. மூன்றரை நாளைக்குப்பின்பு தேவனிடத்திலிருந்து ஜீவஆவி அவர்களுக்குள் பிரவேசித்தது, அப்பொழுது அவர்கள் காலூன்றி நின்றார்கள்; அவர்களைப் பார்த்தவர்களுக்கு மிகுந்த பயமுண்டாயிற்று.
12. இங்கே ஏறிவாருங்கள் என்று வானத்திலிருந்து தங்களுக்கு உண்டான பெரிய சத்தத்தை அவர்கள் கேட்டு, மேகத்தில் ஏறி வானத்திற்குப் போனார்கள், அவர்களுடைய சத்துருக்கள் அவர்களைப் பார்த்தார்கள்.
13. அந்நேரத்திலே பூமி மிகவும் அதிர்ந்தது, உடனே அந்த நகரத்தில் பத்திலொருபங்கு இடிந்து விழுந்தது; மனுஷரில் ஏழாயிரம்பேர் பூமியதிர்ச்சியினால் அழிந்தார்கள்; மீதியானவர்கள் பயமடைந்து பரலோகத்தின் தேவனை மகிமைப்படுத்தினார்கள்.
No comments:
Post a Comment