தங்கக் கட்டிகள்
(GOLDEN NUGGETS)
By
வில்லியம் மரியன் பிரான்ஹாம்
-------------------------
நீங்கள் மகத்தான ஏதோவொன்று
நிகழ காத்திருக்கிறீர்களா?
Are You Looking For Something
Great To Happen?
பெந்தேகோஸ்தேயினர், ‘ஓ, மகத்தான ஒன்று நிகழவிருக்கிறது’ என்கின்றனர். அது நிகழ்ந்து கொண்டுதானிருக்கிறது.
அவர்களோ அதை அறியவில்லை.
வித்து பதருடன் சுதந்தரவாளியாயிருப்பதில்லை, பெப்ரவரி 18, 1965
நீ வேதாகமத்திற்குள் நோக்கினால், நாம் எந்த
காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று பார்ப்பாய். அப்போது தான், நீ இந்த மேன்மையான
காரியங்கள் வெளிப்படுவதை காண்பாய்.
தற்கால நிகழ்ச்சிகள் தீர்க்கதரிசனத்தின்
மூலமாய் தெளிவாக்கப்படுகின்றன, டிசம்பர் 6, 1965
பாருங்கள் பெருந்தன்மை என்பது தாழ்மை. சபையே
அதை மறந்து விடாதே! பெருந்தன்மை எப்பொழுதும் தாழ்மையில் வெளிப்படுகின்றது,...
நான் எப்படி ஜெயங்கொள்வது, ஆகஸ்டு
25, 1963
எடுத்துக்கொள்ளப்படுதலுக்கு முன்பு கிறிஸ்துவின்
மணவாட்டிக்கு ஊழியம் இருக்குமா?
நிச்சயமாக, இப்பொழுது நேரடியாக அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. கிறிஸ்துவின்
மணவாட்டி, நிச்சயமாக! அதுதான் ஏற்றவேளையின்
செய்தி- கிறிஸ்துவின் மணவாட்டி.
முத்திரைகள் மீதுள்ள கேள்விகளும் பதில்களும், மார்ச் 24, 1963 காலை
மணவாட்டி இங்கிருந்து புறப்படுவதற்கு
முன்பு பரிசுத்த ஆவியின் அசைவு இருந்து, அவளால் அற்புதங்களும் அடையாளங்களும் செய்யப்படுமா?
அல்லது அவருடைய பிரத்தியட்சமாகுதலுக்காக மட்டும் நாம் காத்திருக்கிறோமா?
...இப்பொழுது பொறுங்கள், இதற்கு முதலாவதாக நான்
பதில் கூறட்டும். இங்குள்ள கேள்வி இது: ‘மணவாட்டியினால்
அற்புதங்கள் செய்யப்படுமா?’ ஆம்,ஐயா. அது இப்பொழுது செய்யப்பட்டு
வருகிறது. அது உண்மை. பாருங்கள்? ஆனால் மகத்தான அற்புதங்களை எதிர்பார்க்காதீர்கள்.
மழை பெய்யாதபடிக்கு வானத்தை அடைத்தல் போன்றவைகளை. அது யூதர்களுக்கு செல்லவிருக்கிறது.
பாருங்கள்? அது இங்கு சம்பந்தப்பட்டதல்ல; அது மோசேயும் எலியாவும் யூதர்களிடம் செல்லுதல்,
அது இந்த சபைக்கு அல்லவே அல்ல.
கேள்விகளும் பதில்களும், ஆகஸ்டு 30,
1964
தாழ்மையாக இருந்து எளிமையான செய்தியுடன் முன்னேறுங்கள்.
முத்திரைகள் மீதுள்ள கேள்விகளும் பதில்களும், மார்ச் 24, 1963 காலை
இப்பொழுது, பெரிய மகத்தான ஏதோவொன்றிற்காக நோக்கிப்
பார்க்க வேண்டாம். அவர் என்ன வாக்குத்தத்தம் செய்தாரோ, அந்த எளிமையான காரியத்தை மட்டும்
விசுவாசிக்க வேண்டும் என்றும் நினைவில் கொள்ளுங்கள்.
இப்பொழுது நாம் எல்லோரும் சேர்ந்து சொல்லுவோம்.
நாம் (சபையார், ‘நாம்’ என்கின்றனர்) மகத்தான ஏதோவொன்றை (‘மகத்தான ஏதோவொன்றை’) நோக்கவில்லை (‘நோக்கவில்லை’). ஆனால் இயேசுவின் நாமத்தினால் (‘ஆனால் இயேசுவின்
நாமத்தினால்’) நாம் அவருடைய
வாக்குத்தத்தத்தைப் பெற்றுக்கொள்ளுகிறோம் (‘நாம் அவருடைய
வாக்குத்தத்தத்தைப் பெற்றுக்கொள்ளுகிறோம்’).
முத்திரைகள் மீதுள்ள கேள்விகளும் பதில்களும், மார்ச் 24, 1963 காலை
இந்த ஒலிநாடாவில் நான் ஏற்கனவே கூறியுள்ளபடி, நம்முடைய அநேக பெந்தெகோஸ்தே சகோதரர்கள்,
இதனை ஒத்துக்கொள்கிறதில்லை. அவர்கள் ஏதோ ஒரு மகத்தான, வல்லமையான காரியம் சம்பவிக்க
வேண்டுமென எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ‘என்னுடைய சகோதரர்களே,
நீங்கள் மிகவும் கவனமாக செவிகொடுப்பீர்களானால், அந்த மகத்தான வல்லமையான காரியமானது
ஏற்கனவே நடந்து முடிந்து விட்டது என்பதைக் கண்டுகொள்வீர்கள். இயேசு திரும்பி வருவதற்கு
ஆயத்தமாயிருக்கிறார்.
தானியேலின் எழுபது வாரங்கள், ஆகஸ்ட்
6, 1961
கவனியுங்கள். ஆம், ஐயா. ஆகவே இப்பொழுது அது ஒரு
மகத்தான, பெரிய காரியமாக இருக்காது. இங்கே வேதத்தில் அது ஏதோ ஒரு பெரிய காரியம் போன்று
காணப்படுகிறது.
மூன்றாம் முத்திரை, மார்ச் 20, 1963
மாலை
ஆவியின் நிறைவைப் பெற்ற ஜனங்களே, ஏதோ ஒன்று
நிகழவிருக்கிறது என்பதை உங்களால் காண முடியவில்லையா? உலகம் முழுவதிலும் ஒரு மகத்தான
எழுப்புதல் உண்டாகும் என்று நீங்கள் எதிர்பார்க்க வேண்டாம். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின்
வருகையைத் தவிர இனி நடக்கப்போவது வேறொன்றுமில்லை. கர்த்தரின் வாக்குத்தத்தத்தையும்
நினைவு கூருங்கள். நீங்கள் வேகமாக உள்ளே வரமாட்டீர்களா? அந்த பெரிய சுவர்களை விட்டு
விலகி வாருங்கள். உயிர்த்தெழுதல் மிகவும் சமீபமாயுள்ளது.
ஈஸ்டர் முத்திரை, 65-0410
திடீரென்ற, துரிதமான சபையின் எடுத்துக்கொள்ளப்படுதல்...
இப்பொழுது நீங்கள் சொல்லுகிறீர்கள், ‘சில காரியங்கள்
சம்பவிக்கும், பிறகு நான் ஆயத்தமாவேன்’ என்று. இப்பொழுதே ஆயத்தமாகுங்கள்.
திடீரென்று சபையானது இரகசியமாக மறைந்து
போகுதல், 58-1012
நியாத்தீர்ப்புக்கு அவள் ஆயத்தமாயிருக்கிறாள்
என்று உலகமுழுவதுமாக அடையாளக் கம்பங்களை நாம் பார்க்கிறோம். சபையின் மத்தியில் அடையாள
அற்புதங்களை பார்க்கிறோம். மகத்தான காரியங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. நாம் எப்படிப்பட்ட
ஜனங்களாய் இருக்க வேண்டும்? அந்த நேரத்திற்கு ஆயத்தமாயிருப்பது. ஏனென்றால் அவர் எப்பொழுது
வருவார் என்பதை அறியாதிருக்கிறோம். எந்த நிமிடத்தில், எந்த மணி நேரத்தில் கர்த்தர்
வருவார் என்பதை அறியாதிருக்கிறபடியால் நீங்களும் ஆயத்தமாயிருங்கள். ஏனென்றால் பின்பு
நீங்கள் ஆயத்தமாக முடியாது. ஏனென்றால் உங்களால் முடியாது என்று அவர் சொல்லியிருக்கிறார்.
திடீரென்று சபையானது இரகசியமாக மறைந்து
போகுதல், 58-1012
இது இரட்சிப்பின் நாளென்று நாமறிவோம். இந்நாளில்
தேவன் மனிதனை உலகத்திலிருந்து அழைத்து, பாவமான வாழ்க்கையிலிருந்து அவரை சேவிக்கும்
வாழ்க்கைக்கு அழைக்கிறார். தேவன் உயரத்திலிருந்து தமது ஆவியை ஊற்றி, இந்நாளின் ஊழியத்தில்
மகத்தான அற்புதங்களும் அடையாளங்களும் நடக்கும்படி செய்கிறார். இது முன்மாரியும் பின்மாரியும்
ஒன்றாக விழும் நேரமாகும். மகத்தான அடையாளங்களும் அற்புதங்களும் இந்நாளில் நிகழ வேண்டுமென்றும்
அதை ஸ்தாபனங்கள் புறக்கணிக்குமென்றும் நாம் அறிந்திருக்கிறோம்.
இனி வரப்போகும் காரியங்கள், டிசம்பர்
5, 1965
இக்கூடாரத்தின் பிரசங்க பீடத்தின் பின்னாக
நான் நின்று செய்தி கொடுத்த எல்லா காலத்திலும், இப்பொழுது இருக்கும் சூழ்நிலைகளாகிய
தேவனுடைய பரிமாணங்களுக்குள்ளும், ஆவிக்குரிய பரிமாணத்திலும் இருப்பது போல் இதற்கு முன்னதாக
எப்பொழுதுமே என்னுடைய ஊழியத்தில் இருந்ததே கிடையாது. என்னுடைய ஊழியத்தில், எந்த இடத்திலும்,
எந்த நேரத்திலும் எப்பொழுதாவது நிகழ்ந்த எல்லாவற்றைக் காட்டிலும் இது அதிக மேலானதாக
இருக்கிறது. மற்ற காரியங்கள் எல்லாம் சுகமளித்தலுக்குரியவைகள். ஆனால், இவைகள் அதே ஆவியானவரால்,
தேவ இரகசியங்களை வெளிப்படுத்துவதாகும்.
முத்திரைகள் மீதுள்ள கேள்விகளும் பதில்களும், மார்ச் 24, 1963 காலை
நினைத்துப் பாருங்கள்! உயிர்ப்பிக்கும் வல்லமை.
இந்த நாளில் நாம் என்ன பார்த்தோம் என்பதைக் கவனியுங்கள். ஏழு முத்திரைகளை திறக்கத்தக்கதாக
உயிர்ப்பிக்கும் வல்லமை நம்மிடத்தில் வந்துள்ளது. அது என்ன? அது மனிதனுடைய ஞானமா? இல்லை.
தேவனுடைய உயிர்ப்பிக்கும் வல்லமை இது சம்பவிக்குமென்று முன்னறிவித்தது. புரிந்து கொண்டீர்களா?
இது சூரிய உதயம், ஏப்ரல் 18, 1965
புரிந்து கொண்டீர்களா! உயிர்ப்பிக்கும் வல்லமை
அன்று காலையில் என்னை நிரப்பியது, அவர் என்னை திரைக்கப்பால் காணும்படி செய்தார், நான்
உங்கள் எல்லோரையும் அங்கே பார்த்தேன். பாருங்கள், புரிந்து கொண்டீர்களா? அஹ்-அஹ். பாருங்கள்?
‘நீ நேசித்த
யாவரும், உன்னை நேசித்த யாவரும் உனக்கு அளிக்கப்பட்டார்கள்’ என்று அவர் கூறினார். பாருங்கள்?
அவர்கள் எல்லோரையும் அவ்விதமாகவே நான் கண்டேன். என்ன அது? உயிர்ப்பிக்கும் வல்லமை.
அது என்ன? உயிர்ப்பிக்கும் வல்லமை.
இது சூரிய உதயம், ஏப்ரல் 18, 1965
பதினைந்து ஆண்டு காலமாக - ஏறக்குறைய இருபது ஆண்டுகள் ஆகிவிட்டது - செய்தியானது
ஒரு நாட்டிலிருந்து வேறொரு நாடு பரம்பிக்கொண்டே செல்கின்றது. இன்று காலை, அமெரிக்கா
தேசம் முழுவதுமே தொலைபேசியில் இணைக்கப்பட்டுள்ளது (பாருங்கள்?) இத்தனை ஆண்டுகள் கழிந்தும்
அது ஒரு ஸ்தாபனமாகவில்லை. அது தன்னை ஸ்தாபித்துக்கொள்ள முடியாது. இதைப்போன்ற ஒன்று
இதற்கு முன்பும் இருந்ததில்லை, இனி இருக்கப்போவதுமில்லை.
கிறிஸ்து தமது சொந்த வார்த்தையில் வெளிப்படுகின்றார்,
ஆகஸ்டு 22, 1965 காலை
இப்பொழுது, பாருங்கள். இந்தக்கடைசி நாட்களில்,
முன்பு நடக்காத காரியங்கள் நடப்பதை நாம் காண்கிறோம். பாருங்கள், அது தேவனுடைய அடையாளம்.
இணையும் நேரமும் அடையாளமும், ஆகஸ்டு 18, 1963
அணுகுண்டுகளும்; ‘பென்டகனில்’ ஜனங்கள் பயந்து போய், என்ன செய்வதென்று திகைத்துக் கொண்டிருக்கும்
போது, வானத்தில் பறக்கும் தட்டுகள் போன்ற மர்மமான அடையாளங்கள் காணப்படும்போது, தேவன்
முன்னறிவித்த யாவும் நிறைவேறிக்கொண்டிருக்கும் போது, எலியா காட்சியில் தோன்றும் நேரம்
வந்து விட்டது-அவன் எங்கோ இருக்கிறான்.
ஜனங்கள், அந்த சிறு மந்தை, தேவன் அவனுக்கு
அளிக்கப்போகும் அந்த மீதியானவர்கள், தேவனை நோக்கிக் கூப்பிடட்டும். அப்பொழுது என்ன
நடக்கிறதென்று கவனியுங்கள். தேசீய பலப்பரீட்சை உண்டாகும். அவர்கள் முன்பு கண்டிராத
வகையில் வல்லமை உண்டாகும். ஆனால் தொல்லை என்னவெனில், இந்த முறை அவர்களுக்கு காலதாமதம்
ஏற்பட்டிருக்கும். கதவுகள் அடைபட்டிருக்கும். எனவே நாம் முடிவு காலத்தில் இருக்கிறோம்
என்பதை நினைவுகூருங்கள். ஜெபம் செய்யுங்கள்!
கண்டும் காணாதது போல் விடப்படுகிற ஒரு
உண்மையான அடையாளம், நவம்பர் 12, 1961
இந்த கடைசி நாட்களில் தேவன் அசைத்திருக்கும்
போது... வேதத்தில் கூறப்பட்டுள்ள தேவனுடைய ஒவ்வொரு வரமும், இயேசு கிறிஸ்து வாக்களித்துள்ள
ஒவ்வொரு வரமும், ஒவ்வொரு அடையாளமும், ஒவ்வொரு முடிவுகால அடையாளமும், எனக்கு தெரிந்த
வரைக்கும், இந்த தேசத்திற்கு முன்பாக வெளிப்பட்டு, இந்த தேசம் அசைக்கப்பட்டுள்ளது.
ஆயினும் இந்த தேசம் விரைவாக நரகத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. நாம் எவ்வளவுதான்
எடுத்துக் கூறினாலும், அவர்கள் அங்குதான் சென்று கொண்டிருக்கின்றனர்.
அவருடைய வருகையின் அடையாளமாக பிரகாசிக்கும் சிகப்பு விளக்கு, ஜுன் 23, 1963
அவர் வேதத்தில் எங்கு அதை வாக்குத்தத்தம் செய்துள்ளார்
என்றும், அவர் என்ன செய்ய போகிறார் என்றும் நீங்கள் காண்கிறீர்கள். அது நிறைவேறுவதை
நாம் கண்கூடாகக் காண்கிறோம். அவர் சபைக்கு என்ன செய்யப் போகிறார் என்று வேதத்தில் நாம்
காண்கிறோம். அது நிறைவேறுவதை நாம் கண்கூடாகக் காண்கிறோம்.
இணையும் நேரமும் அடையாளமும், ஆகஸ்டு 18, 1963
********
www.brideministry.com,
http://goldennuggetsonline.blogspot.in/
No comments:
Post a Comment