மணவாட்டி ஊழியம்

மணவாட்டி ஊழியம்

Friday, July 20, 2012

இன்றைய மன்னா

ஒரு கிறிஸ்தவன், அவன் முன்பு காணப்பட்ட விதமாக இருக்க முயல்வதில்லை; அவன் முன்பு எங்கிருந்தான் என்பதை நோக்கிப் பாராமல், அவன் எங்கு செல்கிறான் என்பதையே நோக்குகின்றான். பாருங்கள், பாருங்கள்? முன்பு எவ்விதம் இருந்தாய் என்பதைக் குறித்து கவனம் செலுத்தாதே; அதை நீ வாழ்ந்து முடித்து விட்டாய். அதற்கு நீ திரும்பிச் செல்லப் போவதில்லை; அது முன்காலத்து ஒன்று. காரிலுள்ள பின்புறம் காணும் கண்ணாடியின் வழியாக வாழ்க்கை சாலையில் காரோட்டிச் செல்லும் எந்த மனிதனும் விபத்துக்குள்ளாக்கி நாசமடைவான்; அப்படித்தான் கிறிஸ்தவ சாலையில் பயணம் செல்லும் உங்களுக்கும் நேரிடும். நீ என்னாவாயிருந்தாய் என்று பின் நோக்கிப் பாராதே, நீ என்னவாய் இருக்கப் போகின்றாய் என்பதை முன்நோக்கிப் பார். பவுல், “பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, பரம அழைப்பின் பந்தய பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்” என்றான் (பிலி.3:13-14).

செய்தி:- கேள்விகளும்,பதில்களும் 64-0823 மாலை.

No comments:

Post a Comment