மணவாட்டி ஊழியம்

மணவாட்டி ஊழியம்

Wednesday, July 4, 2012

நித்திய அடையாளம் -- ஏழு மலைகளின் கூர் முனைகள்


அவர் கூறினார், “நீ அசைவதற்காக உன்னை அசைக்கும்படி ஒவ்வொரு தடவையும் ஏன் எனக்காக காத்துக் கொண்டிருக்கிறாய்? உனது வரம் எங்கே? நான் நேற்று உன்னிடம் கூறினது நினைவில் உள்ளதா? சகோதரன் ராய் ராபர்ஸன் தமது சொப்பனம் அல்லது தரிசனத்தில் கண்டு கூறியவற்றை ஞாபகத்தில் வைத்திருக்கிறாயா? நீ மோசேயைப் போல் கிரியை செய்தாய் என்பதை அவர் கண்டு கூறினாரல்லவா? உனது ஜனங்களின் மேல் நீ வைத்திருந்த அனுதாப உணர்வை நீ மறந்து விட்டாய். நான் உன்னை அழைத்த அழைப்பை நீ மறந்து விட்டாய்” என்று கூறினார். 

வியாதியஸ்தர் கிடக்கும்படி நான் அப்படியே விட்டு விட்டேன். நான் எங்கே போக வேண்டும், போகக் கூடாது என்பதைப் பற்றி கர்த்தர் சொல்லும்படி விரும்பினேன். அது தவறாகும். மக்கள் எனது செய்தியைக் கேட்காததினால், நான் எனக்குள்ளாகவே ஒருவித மனோபாவம் கொண்டு விட்டேன்.



எனவே பில்லி உறங்க சென்று விட்டான். நான் ட்ரக்கை மணிக்கு 55 மைல் வேகத்தில் வேகப்படுத்தி, மலையை விட்டு இறங்கிக் கொண்டிருந்தேன். அரிசோனாவை நோக்கி வீடு திரும்பும் எல்லையை நோக்கி வந்து கொண்டிருந்த போது, ஊடா என்ற இடத்திற்கு வந்தேன். … இப்பொழுது என்னுடைய சப்தத்தை நீங்கள் தெளிவாக கேட்கும் வண்ணமாக ஒரு சப்தம் எனக்குக் கேட்டது.
அது “உனது திட்டத்தை நிறைவேற்றிக்கொள். நீ அவ்வாறே இருப்பாய்” என்று கூறியது. “ஆண்டவரே நான் அவ்வாறிருக்க விரும்பவில்லை” எனக்கூறினேன்.
உன் மனைவியும் போய்விடுவாள். அவள் இம் மாதிரியான மலைகளில் வாழ விரும்பமாட்டாள். சொப்பனம் நீ எவ்வாறு ஒரு தேசந்திரியாக ஆவாய் என்று காண்பித்ததோ, அவ்வாறே நீ ஆவாய்” என்று அவர் கூறினார்.
“அவ்வாறு வாழ நான் விரும்பவில்லை, அவ்வாறு வாழவும் எனக்கு அவசியமில்லை. நான் வேறுவிதமான காரியத்தையே செய்ய விரும்புகிறேன். நீர் என்னை ஒரு தீர்க்கதரிசியாக இருக்கும்படி அழைத்திருக்கிறீர் என்று எனக்கு சொல்லப்பட்டது, தீர்க்கதரிசியைப்போல் நான் வனாந்திரத்தில் வாழ விரும்புகிறேன்” என்று நான் கூறினேன். நான் வேட்டையாட முடியும் என்ற காரணத்திற்க்காக, எனது சொந்த நலனை உத்தேசித்து, இத்தகைய சாக்குபோக்கை கூறினேன்.
அவர் கூறினார், “ஆனால் அப்படி ஜீவித்தவர்கள், பழைய ஏற்பாட்டஉத் தீர்க்கதரிசிகளாவர். அதைவிட மேலான தொரு ஊழியத்திற்காகவே நீ அழைக்கப் பட்டிருக்கிறாய்”. அவர் மேலும், “அதுவுமின்றி மேற்கொண்டு உனக்கு அதிக வரங்கள் கொடுக்கப் பட்டிருக்கின்றன. வியாதியஸ் தருக்காக ஜெபித்து, சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி நீ அழைக்கப் பட்டிருக்கிறாய். மேலும் அப்போஸ்தல ஒழுங்கின்படி, மேன்மையான காரியங்களைப் பற்றியும்,அநேக வரங்களைப் பற்றியும் நீ அறிவாய். நீ அசைவதற் காக உன்னை அசைக்கும்படி ஒவ்வொரு தடவையும் ஏன் எனக்காக காத்துக்கொண்டிருக்கிறாய்? உனது வரம் எங்கே? நான் நேற்று உன்னிடம் கூறினது நினைவில் உள்ளதா? சகோதரன் ராய் ராபர்ஸன் தமது சொப்பனம் அல்லது தரிசனத்தில் கண்டு கூறியவற்றை ஞாபகத்தில் வைத்திருக்கிறாயா? நீ மோசேயைப்போல் கிரியை செய்தாய் என்பதை அவர் கண்டு கூறினாரல்லவா? உனது ஜனங்களின் மேல் நீ வைத்திருந்த அனுதாப உணர்வை நீ மறந்து விட்டாய். நான் உன்னை அழைத்த அழைப்பை நீ மறந்து விட்டாய்” என்று கூறினார்.
“பில்லி, நீதானே பேசியது” என்று என் மகனை எழுப்பிக் கேட்டேன். அவனோ ஆழ்ந்த உறக்கத்திலிருந்தான், எழும்பவில்லை.
அவர் கூறினார், நான் உனக்கு நித்திய அடையாளத்தைக் கொடுப்பேன் என்று.அவர் மீண்டும் கூறினார்.  “நீ இருக்கிற இடத்திலிருந்து மேற்கு நோக்கிப் பார்” என்பதாக.
மேற்கு நோக்கிப் பார்பதற்காக நான் ட்ரக்கில் இருந்து தலையை திருப்பிப் பார்த்தேன் (வாகனத்தை மெதுவாக ஓட்டினேன்) அங்கே கர்த்தருடைய ஆவியானவர், ஓ! கதறி சப்தமிட வேண்டும்போல் எனக்கு இருந்தது. நான் பார்த்தபோது, வெண்மையான பனியினால் மேல் மூடியிடப் பட்டிருந்ததொரு மலையை கண்டேன். “எனக்கு ஒன்றும் தெரியவில்லை… அதில் எந்தவொரு நித்திய அடையாளத்தையும் நான் காணவில்லையே” என்று கூறினேன்.
அவர், “உனது பெயர் அதில் எங்கும் எழுதப்பட்டுள்ளது” என்று கூறினார்.
நான் வண்டியை நிறுத்தி மேல் நோக்கினபோது, ஏழு சிகரங்களுள்ள அந்த மலையை பார்த்தேன். “முக்கியமானதொன்றைக் காண விரும்புகிறாயா?” என்று கூறின சத்தத்ததைக் கேட்டேன். அம்மலையின் மேல் ஏழு சிகரங்கள் இருந்தன. அந்த ஒரு மலை பல மைல்கள் தூரம் வியாபித்திருந்தது. அதற்குப் பிறகு மலைகளே கிடையாது, அது கிழக்கிலிருந்து, மேற்கு நோக்கி அமைந்திருந்தது. அதின் உச்சியின்மேல் பனி மூடப்பட்டிருந்தது.
முதல் இரண்டும் சிறிய சிகரங்களாயிருந்தன. பிறகு ஒரு பெரிய சிகரம். அதன் பிறகு வேறொரு சிறிய சிகரம், அதற்கப்பால் ஒரு பெரிய சிகரம். அதற்கப்பால் ஒரு சிறிய சிகரம். அதன்பிறகு ஒரு நீண்ட பெரிய பனி மூடிய மலை. “ஆண்டவனே, அதின் அர்த்தம் என்னவென்று எனக்குத் தெரியவில்லை” என்று நான் கூறினேன்.

“அங்கே எத்தனை சிகரங்களுள்ளன?” என்று என்னைக் கேட்டார்.
நான் “ஏழு சிகரங்களுள்ளன” என்று கூறினேன்.
உனது பெயரில் எத்தனை எழுத்துக்கள் உள்ளன? என்று வினவினார். ஆங்கிலத்தில் B-R-A-N-H-A-M--- M-A-R-R-I-O-N என்று ஒவ்வொரு பெயரும் ஏழு எழுத்துக்கள் உள்ளதாக இருக்கிறது.
 
அங்கே தனிச்சிறப் வாய்ந்த மூன்று சிகரங்களிருந்தன. அம்மூன்று சிகரங்களும் முதலாம், இரண்டாம், மற்றும் மூன்றாம் இழுப்புகளாம். அந்த முதலாவது சிகரம் உனது ஊழியத்தின் முதலாம் பாகமாயிருந்தது. பின்பு ஒரு சிறிய மலை, உனது முதலாம் இழுப்பு நல்ல உயரமாயிருந்தது.. “என்று அவர் கூறினார். கையில் தோன்றும் அந்த அடையாளம் உங்களுக்குத் தெரியிமல்லவா? அதன் பிறகு சற்று இடைவெளி உண்டாயிருந்தது. நான் அதிக களைப்பாயிறதபடி, இளைப்பாறின நேரமது. உங்களில் அநேகருக்கு ஞாபகமிருக்கும். அதன்பிறகு இரண்டாம் இழுப்பாகிய பகுத்தறிதல் வரம் வந்து இப்பொழுது சில ஆண்டுகளாக எனக்கு ஓய்வு உள்ளது போன்று காணப்படுகின்றது. அதற்கு தான் அந்த சிறிய சிகரங்கள் ஒப்புமையாய் இருக்கின்றன. எனது ஊழியம் முடிவுபெறவில்லையெனக் கருதி நான் திரும்பி பார்க்கிறேன். அதன்பிறகு மூன்றாம் இழுப்பானது வருகிறது.
மூன்று என்னும் எண் முடிவான எண்ணாயிருக்கிறது. அடுத்த சிகரம் கிருபையின் எண்ணாக கருதப்படுகிற ஐந்து ஆகும். அதன்பின்பு, உள்ள சிகரம் பூரணத்தின் எண்ணாக உள்ள ஏழு ஆகும். “ஆறு நாட்கள் நீ வேளை செய்து வாரத்தின் கடைசி நாளாகிய ஏழாம் நாளில் ஓய்ந்திருப்பாயாக; அது காலத்தின் முடிவாயிருக்கிறது”. நான் நின்று, பில்லியிடம் அவைகளைக் காண்பித்து, அவைகளை உற்று நோக்கினேன்.
மேலும், ஆண்டவர் கூறினார், “அது உன் மனதில் நிலைத்தருக்கட்டும், எப்பொழுதாவது உன் மனதில் சந்தேகம் உண்டானால், இந்த இடத்தை ஞாபகப்படுத்திக் கொண்டு, இங்கு திரும்பி வா” என்று சொன்னார்.

அப்பொழுது பில்லி என் தோளில் தட்டி, “தந்தையே கிழக்கே பாருங்கள்” என்று கூறினான். அது எவ்வாறு சம்பவித்ததோ நான் அறியேன். சாலையில் கிழக்குப் பக்கத்தில், அங்கே குப்பை, செத்தைகள் திடீரென எரிந்துக் கொண்டிருந்தன. எந்தவொரு நகரத்திற்கும், பல நூற்றுக்கணக்கான மைகளுக்கு அப்பால் உள்ள அந்த இடத்தில், அந்த குப்பைகளை சாலையின் இடது பக்கம் எரிந்து கொண்டிருந்தன.

நான் ஊழியக்களத்திற்கு திரும்பிக் கொண்டிருக்கிறேன் ஆமென். வயோதிபமோ, வாலிபமோ எப்படியாயினும் மரணம் என்னை விடுவிக்குமளவும் நான் தேவனுக்குக் கீழ்படிவேன்.

No comments:

Post a Comment