மணவாட்டி ஊழியம்

மணவாட்டி ஊழியம்

Thursday, July 5, 2012

செய்தி:- உங்களிலிருக்கிறவர் 63-0910

……நான் கூறுவதென்னவென்று உங்களுக்குப் புரியும். ஜனங்களிடையே சற்று கீர்த்தி பெறுகின்றனர். அது தேவனுடைய கிரியையென்று அவர்கள் எண்ணுகின்றனர். ஆனால் அநேக சமயங்களில் அது பிசாசின் கிரியையாயுள்ளது.

ஆண்டவரே, நான் சிறியவனாகவும், தாழ்மையுள்ளவனாகவும் இருக்கும்படி செய்யும், அப்பொழுதுதான் அவர் சத்தியத்தை வெளிப்படுத்தித் தருவார், பாருங்கள்? அவ்வாறான பகட்டான காரியங்களைச் செய்ய எனக்கு விருப்பமில்லை. பிரகாசமான விளக்குகள், இவ்வுலகின் பகட்டான காரியங்கள் ஒன்றும் எனக்கு வேண்டாம். நிந்தையடைந்த ஆண்டவருடைய சிலருடன் நானும் அவ்வழியே செல்ல விரும்புகிறேன், தேவனுடைய வார்த்தையில் நான் நிலைத்திருக்கட்டும்.
… ஏழு முத்திரைகள் புதிய ஏற்பாட்டை முடிவு பெறச் செய்து அதை முத்தரித்து விட்டன. அது உண்மை, தீர்க்கதரிசன உரையின் மூலமாகவும், விஞ்ஞானப் பிரகாரமாகவும், தேவனுடைய வார்த்தையின் பிரகாரமாகவும் அது உண்மையென்று நாமறிவோம். இவை மூன்றும் அது உண்மையென்று சாட்சி பகருகின்றது.

எனவே நாம் கடைசி காலத்தில் இருக்கிறோம் என்று நமக்குத் தெரியும். நாம் அங்கு வந்துவிட்டோம். இன்னும் எவ்வளவு தூரம் உள்ளது என்பது எனக்குத் தெரியாது, அவர் அதை நமக்குத் தெரியப்படுத்த மாட்டார், ஏனெனில் அவருடைய வருகை “இரவில் திருடன் வருகிற விதமாய்” இருக்கும். ஆனால் நண்பனே, என் சகோதரனே, சகோதரியே, எவ்வாறாயினும் நாம் ஆயத்தமாயிருப்போம். நம்மை நாம் கற்புள்ளவர்களாக்குவோம், பாருங்கள்? உலகம் தற்பொழுது போகும் போக்கிலேயே போய்க்கொண்டிருக்கும், அது (எடுத்துக் கொள்ளப்படுதல்) நிகழ்ந்துவிட்டது என்று கூட அத்குத் தெரியாது, கிருபையின் வாசல் அடைபட்ட பின்பும் போதகர்கள் இரட்சிப்பைக் குறித்து பிரசங்கித்து, ஜனங்கள் மனந்திரும்படி செய்து, எப்பொழுதும் சென்ற விதமாய் சென்று கொண்டிருப்பார்கள். மற்ற காலங்களிலும் அவ்வாறே நிகழ்ந்தது. இக்காலத்திலும் அவ்வாறே நடக்கும். எடுத்துக்கொள்ளப்படுதல் சடுதியாகவும் துரிதமாகவும் இருக்குமாதலால், எடுத்துக் கொள்ளப்படுதலில் அவர்கள் சென்று விட்டனர் என்றும்கூட அவர்கள் அறியமாட்டார்கள், அது உண்மை. அதைக் குறித்து அவர்கள் ஒன்றுமே அறியாதவர்களாயிருப்பார்கள். அவர் வந்து அவர்களை மெல்லக் கொண்டு சென்று விடுவார். அவர்கள் எடுத்துக்கொள்ளப்படிருப்பார்கள். மற்றவர்களோ அதைக் குறித்து ஒன்றுமே அறிந்திருக்க மாட்டார்கள். எனவே ஜெபித்துக் கொண்டேயிருங்கள். எனக்காக ஜெபியுங்கள். உங்களுக்காக நான் ஜெபிக்கிறேன். அந்நேரம் எப்பொழுது வருமென்று நமக்குத் தெரியாது. ஆனால் அது விரைவில் இருக்குமென்று நாம் நம்புகிறோம். பளபளப்பான (பகட்டான) காரியங்களிலிருந்து விலகியிருங்கள். சவிசேஷத்தில் நிலை நில்லுங்கள். அதில் இப்பொழுது நிலை நின்று ஜெபியுங்கள். பாருங்கள்? .

பாருங்கள், லூத்தரன் காலத்திலிருந்த முன்குறிக்கப்பட்டவர் அனைவரையும் அவர் வெளியே இழுத்துக் கொண்டார். அவ்வாறே வெஸ்லியின் காலத்திலும் அவர் வெளியே இழுத்தார். வெவ்வேறு காலங்களில்-பெந்தேகோஸ்தே காலத்திலும்-முன் குறிக்கப்பட்டவர்களை அவர் வெளியே இழுத்தார், அவர்கள் அங்கிருக்கின்றனர். மற்றவர்களுடன் அவர்கள் நியாயந்தீர்க்கப்படுவதில்லை. அவர்கள் எடுத்துக்கொள்ளப்படுவார்கள். உலகத்தோற்றத்திற்கு முன்பே அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புஸ்தகத்தில் பெயரெழுதப்பட்டுள்ள கடைசி நபர் வெளிவரும் போது-அந்த கடைசி நபர் மீட்கப்பட்டவுடன், அவருடைய கிரியை முடிவு பெறுகின்றது. அவர் மீட்டவர்களை உரிமையாக்கிக் கொள்ளப் புறப்பட்டு வருகிறார். அது நமது இருதயத்தில் இரத்தம் கசியச் செய்கின்றது. அதன்பின்பு ஆயிரம் வருடம் கழிந்தாலும், ஒருவர்கூட மீட்கப்படமுடியாது. உலகத்தோற்றத்திற்கு முன்பு ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் பெயரெழுதப்படாத யாருமே மீட்கப்பட முடியாது. அவர்கள் யார்? எனக்குத் தெரியாது. தேவன் மாத்திரமே அறிவார். நம் எல்லோரின் பெயர்களும் அந்த புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன என்று நம்புகிறேன். என் பெயர் அப்புதகத்தில் இருந்தால், நான் நிச்சயமாக அங்கே இருப்பேன். இல்லாவிட்டால் நான் அங்கிருக்கமாட்டேன். அவ்வளவுதான். பாருங்கள். அது தேவனைப் பொறுத்த விஷயம். “ஆகையால் விரும்புகிறவனாலும் அல்ல, ஓடுகிறவனாலும் அல்ல, இரங்குகிற தேவனாலேயாகும்” (ரோமர் 9:16) பாருங்கள்?

(பாவம்)  நாளுக்கு நாள் அது மோசமாகிக் கொண்டுதான் வரும். தேசிய மனந்திரும்புதல் என்பது இனி இராது. தேசத்திற்கு அளிக்கப்பட்ட சமயம் கடந்து விட்டது. இனிமேல் நபர்களாகிய நீங்கள் மாத்திரமே. அதுவும் ஏற்கனவே முடிவடையவில்லையென்றால் அது விரைவில் முடிவடையும். சிறு பிள்ளைகளே, இதை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். சகோதரன் பிரான்ஹாம் கூறியது சரியா தவறாவென்று அறிந்துகொள்ளுங்கள். (இது சகோதரன் பிரான்ஹாம் கூறுவதல்ல) பாவம் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வந்து, கடைசியில் ஒரு நாள் வானம் தீப்பிடிக்கும். அது பூமியில் விழுந்து, பூமியும் பயங்கர தீயினால் எரியும். ஆனால் மீட்கப்பட்டவர்களோ அப்பொழுது இங்கிருக்க மாட்டார்கள். அவர்கள் ஏற்கனவே சென்றிருப்பார்கள்.

No comments:

Post a Comment