இரண்டாம் வருகையில்......
47. நீங்கள்
ஆவியினால் நிறையப்படும்போது, எனக்குத் தெரிந்த மிகச் சிறந்த அடையாளங்களில் இது ஒன்றாகும்;
அதாவது நீங்கள் கிறிஸ்துவில் மிகவும் அன்புகூர்ந்து, அவர் உரைத்துள்ள ஒவ்வொரு வார்த்தையும்
சத்தியம் என்று விசுவாசிப்பீர்கள். பாருங்கள்? அதுவே பரிசுத்த ஆவியை நீங்கள் பெற்றுக்
கொண்டீர்கள் என்பதன் அத்தாட்சியாகும். உங்கள் வாழ்க்கை சந்தோஷத்தினால் நிறைந்திருக்கும்.
ஓ, என்னே, எல்லாமே முன்னைக்காட்டிலும் வித்தியாச மாயிருக்கும். அதுதான் பரிசுத்தாவி.
51. இப்பொழுது
கவனியுங்கள். இயேசு, “விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் தொடரும்” என்று உரைத்தார். பாருங்கள்? விசுவாசிக்கிற
குழுக்களின் மூலமாக பரிசுத்த ஆவியின் முழு சுபாவமும் பாய்ந்தோடுகிறது. அவர்கள் அன்பினால்
நிறைந்தவர்களாய் உள்ளனர். பாருங்கள், அதுதான் பரிசுத்த ஆவி. அவர்கள் தங்களுக்கு அந்நிய
பாஷைகள் உண்டாகும் தருணத்தில் அந்நிய பாஷைகள் பேசுகின்றனர். அதற்கு அவசியம் உள்ள போது
அவர்கள் அந்நிய பாஷைகள் பேசுகின்றனர். ஒரு தீர்க்கதரிசனம் உண்டாகுமானால், அதை உரைக்கின்றனர்.
ஓ, அது ஒவ்வொரு முறையிம் மிகவும் பரிபூரணமாக அமைந்துள்ளது.
55. இப்பொழுது,
இந்த கூட்டத்தை நான் தர்மசங்கடத்தில் ஆழ்த்த விரும்பவில்லை, என்னையும் உங்கள் முன்னிலையில்
தர்மசங்கடத்தில் ஆழ்த்திக்கொள்ள விரும்பவில்லை. இன்று காலையில் நான், இக்கூட்டத்தில்
யாருக்கெல்லாம் பரிசுத்த ஆவி உள்ளதென்று கேட்டால், ஒருக்கால் உங்களில் 95% உங்களுக்கு
பரிசுத்த ஆவி உள்ளதென்று கரங்களை உயர்த்தக்கூடும். அதன்பிறகு நான் உங்களுக்கு பரிசுத்த
ஆவியை பெற்றுக்கொண்டதற்கான வேத அத்தாட்சியை கொடுத்தால், ஒரே ஒரு வேத அத்தாட்சி, ஒன்றிரண்டு
கைகளும் உயர்த்தக்கூடுமா? என்பது எனக்கு சந்தேகம் தான். பாருங்கள், பாருங்கள்? அந்தவிதமான
ஓரிடத்தில் உங்களை கட்டி விடுதல். ஆனால் அவ்விதம் செய்யும் போது, உங்கள் சபையோரை நீங்கள்
புண்படுத்துகிறீர்கள். ஆனால் நீங்கள் அவர்களை குழந்தை பருவத்தை விட்டு மனித பருவத்துக்கு
கொண்டு வர வேண்டியவர்களாயிருக்கிறீர்கள். பாருங்கள்?.
69. இப்பொழுது
என்ன? இங்கு ஒரு நிமிடம் உங்களுக்கு ஒரு சிறு பிரச்சனையை அளிக்க விரும்புகிறேன். நான்,
“எத்தனை பேர் பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கிறீர்கள்?” என்று கேட்டால் நீங்கள் எல்லோருமே
கைகளை உயர்த்துவீர்கள். நான், “சரி, நீங்கள் பெற்றீர்களா? என்று பார்க்கப் போகிறேன்” என்று
கூறுவதாக வைத்துக் கொள்வோம். பரிசுத்த ஆவியைப் பெற்றிருந்தவர்கள் நகரத்தில் நடக்கும்
அருவருப்புகளினிமித்தம் இரவும் பகலும் பெருமூச்சு விட்டு கதறி அழுதனர் என்று வேதம்
உரைக்கிறது. இப்பொழுது, எத்தனை கரங்கள் உயர்த்தப்படும்? உங்களில் எத்தனைப்பேர் தேவனுடைய
வல்லமையினால் நிறைந்து மகிழ்ச்சியினால் பொங்கி, இரவில் இளைப்பாற முடியாமல், இழக்கப்பட்ட
ஜனங்களுக்காக பரிதபித்து, அருவருப்புகளின் நிமித்தம் இரவும், பகலும் கதறி அழுகின்றீர்கள்?
நீங்கள் செய்வதில்லை…பாருங்கள்? அப்படிப்பட்டவர்கள் நகரதில் யார் இருக்கின்றனர்? அப்படிபட்டவர்கள்
எத்தனைப்பேர் சபையில் இருக்கின்றனர்? அதுவே பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டதன் அத்தாட்சி
என்று வேதம் உரைக்கிறது.
71. யோசுவா
கானான் தேசத்துக்குள் பிரவேசித்த போது, அவன், “நீங்கள் யாரையும் உயிரோடு விடாதீர்கள்.
அது சிறு குழந்தையாயிருந்தாலும்-சிறு அமலேக்கியன் அல்லது எமோரியனாயிருந்தாலும்-அதைக்
கொன்று போடுங்கள். அவன் வளர்ந்து பெரிய அமலேக்கியன் ஆவான் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள்;
அவன் பாளையத்தை அசுசிப்படுத்துவான்” என்றான். அது போன்று தேவனுடைய வசனத்துடன் இணங்காத சிறு
காரியங்கள் வரும்போது, அதை ஒழித்து விடுங்கள்.
அது எந்த ஸ்தாபனத்தை சேர்ந்ததாயிருந்தாலும்
எனக்கு கவலையில்லை.
72. நீங்கள், “நல்லது, அவர்கள் நல்லவர்கள்” எனலாம்.
அவர்கள் எவ்வளவு நல்லவர்களாயிருந்தாலும் எனக்குக்கவலையில்லை. அவர்கள் வார்த்தைக்கு
முரணாயிருப்பார்களானால் அதை உங்களை விட்டு அகற்றி விடுங்கள். அது வளருகின்ற சிறு அமலேக்கியன்.
காண்பதற்கு அழகாகவும் களங்கமில்லாதவனை போலவும் இருக்கலாம்; அது சரியாயுள்ளது போல் காணப்படலாம்.
ஆனால் அதனுடன் எந்த தொடர்பும் கொள்ளாதீர்கள். அதிலிருந்து விலகியிருங்கள்.
73. “நல்லது,
சகோ.பிரான்ஹாமே, அங்கு நான் ஏன் போகிறேன் என்றால்…நல்லது, நான்…”இதை மட்டும்
ஞாபகம் கொள்ளுங்கள், எந்த அமலேக்கியானாலும், அது வார்த்தையை மறுதலிக்கிற எதுவாயிருந்தாலும்,
அதை விட்டு விலகியிருங்கள்; அதனுடன் யாதொரு சம்பந்தமும் கொள்ளவே வேண்டாம்! அது உண்மையென்று
எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள்? அது நிச்சயமாக உண்மையே. பாருங்கள்? அதை விட்டு விலகியிருங்கள்!
74. நகரத்தில்
செய்யப்படுகிற அருவருப்புகளின் நிமித்தம் பெருமூச்சு விட்டு அழுகிறவர்கள்…அதை எங்கு
காண்கிறீர்கள்? அந்நிய பாஷை பேசுகிறவர்களுக்கு; உண்மையில் பாவத்துக்காக பாரப்பட்ட ஒருவரை
மட்டுமே நான் உங்களுக்கு காண்பிக்க முடியும்…ஒரு மணி நேரமாவது ஜெபிப்பவர். ஆனால்
வேதம் அதை உரைத்துள்ளதென்று உங்களுக்கு தெரியுமா?...நகரத்தில் செய்யப்படுகிற அருவருப்புகளினிமித்தம்
பெருமூச்சு விட்டு அழுகிறவர்களின் நெற்றிகளில் மட்டும் அடையாளம் போடு என்று? அதை எத்தனை
பேர் படித்திருக்கின்றீர்கள்? நிச்சயமாக. அது ஜனங்களை அடையாளமிடுவதற்காக புறப்பட்டு
வருகிற பரிசுத்த ஆவி. அவர் சங்காரத் தூதனிடம், “நீ புறப்பட்டுப் போய், நெற்றிகளில்
அடையாளமில்லாத எல்லோரையும் சங்கரித்துக் கொன்று போடு” என்றார்.
தேவனுடைய அடையாளம் பரிசுத்த
ஆவி; அதுதான் தேவனுடைய முத்திரை.
75. இப்பொழுது,
அவ்வளவு அக்கரை கொண்டுள்ள ஜனங்கள் இன்று எங்கே? மேலும் கீழும் குதித்து சபையில் அழும்
மக்களை என்னால் உங்களுக்கு காண்பிக்க முடியும். கூச்சலிட்டு கட்டிடம் முழுவதும் ஓடுகின்ற
மக்களை என்னால் உங்களுக்கு காண்பிக்க முடியும். தீர்க்கதரிசனம் உரைத்து அது நிறைவேறுகின்ற
மக்களை என்னால் உங்களுக்கு காண்பிக்க முடியும்; அந்நிய பாஷைகள் பேசுகிறவர்களையும்,
தீர்க்கதரிசனம் உரைத்து, அதற்கு அர்த்தம் உரைத்து, அது நிறைவேறுகின்ற மக்களையும் என்னால்
உங்களுக்கு காண்பிக்க முடியும். ஆனால் நகரத்தில் செய்யப்படுகிற அருவருப்புகளின் நிமித்தம்
பெருமூச்சு விட்டு அழுகிற நபர் எங்கே? அந்த பாரப்பட்ட ஆத்துமா எங்கே?
செய்தி:
கேள்விகளும் பதில்களும் 2:21 64-0830M
104.
இப்பொழுது, அது உங்கள் பிறப்பின் பாதை; அதற்கேற்றவாறு தான் மாம்சப்பிரகாரமான மனிதரும்
ஸ்திரீகளுமாகிய நீங்கள் இருக்கிறீர்கள். ஆனால்
நீங்கள் மறுபடியும் பிறக்கும் போது, அது வெளிப்புறமான புலன் அல்ல. வெளிப்புறத்தில்
நீங்கள் பார்த்து , உணர்ந்து, முகர்ந்து, காதுகளினால் கேட்கிறீர்கள். ஆனால் உங்கள்
உள்ளில் உள்ளதுதான் நிஜமான நீங்கள். இப்பொழுது, இங்குள்ள வெளிப்புறத்தில், சாத்தான்
உங்களை சோதித்து, எல்லா வகைகளிலும் உங்களை கீழே விழத்தள்ளுகிறான்; ஆனால் உள்ளில் உள்ள
இங்கேயோ,அவனை நீங்கள் அனுமதித்தாலொழிய அவனால் ஒன்றும் செய்ய இயலாது. ஏனெனில் இங்கு
உள்ளில் உங்களுக்கு விசுவாசம் உள்ளது. விசுவாசம் வெளிப்புற புலனில் மூலம் வருவதில்லை.
அந்த வெளிப்புறப் புலனின் மூலம் வருவதில்லை. அந்த வெளிப்புறப் புலன் அறிவைப் பயன்படுத்தி
சிந்திக்கிறது. ஆனால் விசுவாசத்தில் அவ்விதம் சிந்தித்தல் எதுவுமில்லை. அதை நீங்கள்
தேவனிடத்திலிருந்து பெற்றிருக்கிறீர்கள், அது அங்குள்ளது என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.
அது எவ்வளவு தவறாக காணப்பட்டாலும் எனக்குக் கவலையில்லை, அது சரியென்று நீங்கள் அறிந்திருப்பீர்கள்;
அது கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால் என்பது. பாருங்கள்? அதை எதுவுமே தொல்லைப்படுத்த
முடியாது. அது நேராக சென்று கொண்டிருக்கிறது. கடினம் என்பது அதற்கு கிடையவே கிடையாது.
அது அதன் வழியாக கடந்து சென்று விடுகிறது. ஏனெனில் அது வார்த்தையாயுள்ளது. வார்த்தை
என்பது பட்டயம், அது வெட்டுகிறது. அந்த பட்டயம் வெட்டி தன்னை எல்லாவற்றிலிருந்தும்
விடுவித்துக் கொள்கிறது. பார்த்தீர்களா? அந்த வார்த்தையாகிய பட்டயத்தைப் பிடிக்க விசுவாசம் என்னும் கரம் தேவைப்படுகிறது.
106.
... மற்ற எல்லோருமே இந்த வலையில் சிக்கிக் கொண்டுள்ளனர். அங்கு ஒரு கூட்டம் மக்கள் ஒன்று சேர்ந்து அறிவைப் பயன்படுத்தி
சிந்திக்கின்றனர். மனிதனுக்கு அதிகமான கௌரவம் உண்டு. இங்கு ஒரு பேராயர் உட்கார்ந்து
கொண்டிருக்கிறார், பொதுவான மேற்பார்வையாளர், அவர் ஏதாவதொன்றைச் சொன்னால், ஒரு சின்ன
அள் என்ன? சொல்ல முடியும்? அவன் ஏதாவதொன்றைச் சொல்ல பயப்படுவான். "நீர் சொல்வதை
நான் ஆமோதிக்கிறேன். ஆம், அது உண்மை! உ! ஊ! ஆம், பேராயர் அவர்களே, போதகர் அவர்களே,
அது முற்றிலும் உண்மை" என்பான். அவன் அவருடன் ஒத்துப் போகிறான்.
109.
ஒரு ஸ்தாபனத்தில் மனிதர் ஒன்று கூடும்போது, அவர்கள் உட்காருகின்றனர்; சிறிய ஆட்கள்
ஏதாவது சொல்ல பயப்படுகின்றனர். ஏனெனில் பேராயர் இவ்விதம் உரைத்துள்ளார். அந்த மனிதனை
அவமதிக்க வேண்டாம். அவர் நல்லவர் என்று நம்புங்கள். ஆனால், தேவனுடைய வார்த்தையே சரியென்றும்
அதற்கு முரணான மற்ற எல்லாமே தவறு என்பதை எப்பொழுதும் நினைவில் வைத்திருங்கள்.
"என் வார்த்தையே சத்தியம், மற்றெந்த மனிதனுடைய வார்த்தையும் பொய்" (ரோமர்
3:4).அதை கண்டீர்களா? அதை தான் நாம் செய்ய விரும்புகிறோம்,அதை நாம் விசுவாசிக்க விரும்புகிறோம்
113.
ஆனால் பாருங்கள்? பெந்தெகொஸ்தே நாளில் அவருடைய ஜீவன் வெவ்வேறாகப் பிரிந்தது. அந்த அக்கினி
ஸ்தம்பம் இறங்கி வந்தபோது அது அக்கினி நாவுகளாகப் பிரிந்து அவர்கள் ஒவ்வொருவர் மேலும்
அமர்ந்தது. தேவன் ஜனங்களின் மத்தியல் தம்மை பிரித்துக் கொள்ளுதல். ஏனெனில் கணவனும்
மனைவியும் ஒருவர் போல, சபையும் கிறிஸ்துவும் ஒருவரே.
செய்தி:
கேள்விகளும் பதில்களும் 2:21 64-0830M
15. இயேசுவானவர்
உலகத்திற்கு வந்தபோது, அவரை புரிந்துக்கொள்ள முடியாமற் போயிற்று. அவர்கள் மட்டும் அந்த
நாட்களில் அவர்களுடைய பாரம்பரியத்தை பாராமல், தேவனுடைய வார்த்தையை நோக்கி பார்த்திருப்பார்களேயானால்,
அவர்தான் தேவகுமாரன் என்று அவர்கள் அறிந்திருப்பார்கள். ஏனெனில் வேதமானது அவருடைய முழு
வருகையை குறித்தும் யாவரும் அறியும் படியாக அறிவிக்கிறது. அவர் வார்த்தையின் முழு வெளிப்படுத்தலுடன்
வருகிறார்.
26. இதை
நான் மரியாதையுடன் சொல்லுகிறேன். ஆனால் இது உங்களுக்குள் பதிய வேண்டும் என்பதற்காக
சொல்லுகிறேன். அன்று காலையில் சந்தித்த அந்த ஊழிக்காரர் கூட்டத்தை காட்டிலும், ஆப்பிரிக்காவை
சேர்ந்த மாந்திரீக வைத்தியர் கூட்டத்திடம் அதிக புரிந்துக்கொள்ளுதலும், மேலான ஒரு ஐக்கியமும்
எனக்கு இருந்தது. அவர்கள் தேவனுடைய வார்த்தைக்கு அதிக சிரத்தை காட்டினார்கள். கேள்விகள்
கேட்டார்கள். எனக்குள்ளாக அழுந்தி இருந்ததான நம்பிக்கையை நித்திய ஜீவனின் நம்பிக்கையை
என்னால் அவர்களுக்கு கொடுக்க முடிந்தது.
27. இந்த
ஊழியக்காரர்களுக்கு அப்படிப்பட்ட காரியங்களுக்கெல்லாம் நேரமே இல்லை. மிகவும் சீக்கிரமாக,
ஏதோ நீ சொன்ன மாத்திரத்தில், எழும்பி போய்விடுவார்கள். அந்த விதமாகதான் அது இருக்கின்றது.
அவர்கள் தாங்களாகவே அதை குறித்து ஒரு எண்ணத்தை உடையவர்களாய், கொஞ்ச நேரம் அப்படியே
இருந்து போய்விட்டார்கள். அவ்வளவுதான் அவர்களுக்கு அறியவேண்டியிருந்தது. அவர்கள் விசுவாசிக்கின்ற
காரியத்தில் ஒரு வார்த்தை ஒப்புக்கொள்ளக் கூடாமற் போகுமானால், அவர்களால் தரித்திருந்து
அதை முழுவதுமாக கேட்க முடியாது. அதே காரணத்தினால்தான் அவர்களால் இயேசுகிறிஸ்துவை அவருடைய
முதலாம் வருகையின் போது அவர்களால் ஏற்றுக்கொள்ளக் கூடாமற் போயிற்று, அந்த காரணத்தினால்தான்
அவருடைய இரண்டாம் வருகையில் காண தவறிவிடுவார்கள்.
28. ஒவ்வொரு
முறையும் அவர்கள் காணத்தவறிவிடுகிறார்கள். அவர்கள் எப்பொழுதும் அப்படிதான்……
29. இருந்த
போதிலும், இவை எல்லாவற்றின் மத்தியிலேயும், நாம் நோக்கி பார்க்கும் படியாய் கட்டளையிடப்பட்டுள்ளோம்.
பூமியின் எல்லை யெங்குமுள்ளவர்களே என்னை நோக்கிப் பாருங்கள்.
32.எனக்கு
ஒரு காரியம் தெரியும். அது என்னவென்றால் இயேசுகிறிஸ்துவை, அவருடைய உயிர்த்தெழுதலின்
வல்லமையில் அறிவேன் எனக்கு தெரிந்ததெல்லாம் அதை குறித்து சொல்வதே.
42. ஆதியாகமம்
துவங்கி, ஒவ்வொரு தலைமுறைக் கென்றும் தேவனுடைய வார்த்தையின் ஒரு பகுதியானது சரியானபடியாக
ஒதுக்கப்பட்டிருக்கின்றது. தேவன், எப்பொழுதும் யாரையாவது அனுப்புகிறார். வழக்கமாக பிரசங்கிமார்கள்
அதை அவ்வளவாய் அது ஒரு பாரம்பரியமாக ஆகுமட்டாய் குழப்பிவிடுகிறார்கள். இயேசுவின் வருகையில்
அது இருந்தது போன்று.
112.
…நீங்கள் சுவிசேஷத்தை சுமந்து கொண்டு போகும்போது, பரிசுத்த ஆவியானவர் உள்ளே வந்து,
ஒரு கூட்ட பழைய விதமான ஜனங்களின் மத்தியில் அதை ரூபகாரப்படுத்துவாரானால், அது உங்களுக்கு
அந்நியமாய் காணப்படுவதில் ஆச்சரியம் ஏதுமில்லை. உங்களுக்கு அதை விசுவாசிப்பது கடினமாயிருக்கும்.
117.
…பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படாமல், பிரசங்கம் செய்ய எந்த மனிதனுக்கும் உரிமையில்லை.
சரியா! வேத சாஸ்திரிகளும் கணித மேதைகளும் மற்றவர்க்களும் உள்ளது அற்று போகும்படி அவை
எல்லாவற்றையிம் உனக்கு விவரிக்ககூடும். ஆனால் ஒரு மனிதன் எப்பொழுதாவது வனாந்திரத்திற்கு
பின்பக்கமாக போய் அந்த பரிசுத்த இடத்தில், மோசேயை போன்று தேவனை சந்தித்திருப்பானேயானின்,
அவனிடமிருந்து அதை எடுத்துப்போட ஒருவனாலும் முடியாது. அவன் அறிந்திருக்கிறான். அங்கிருந்தவன்
அவனே. அதை குறித்து அவனுக்கு சொல்ல அங்கே ஒருவனும் இல்லை. அவன் அங்கு இருந்தான். அந்த
காரணத்தின் நிமித்தமாகத்தான் இயேசு அவருடைய சீஷர்களுக்கு “நீங்கள் எருசலேமுக்கு போய், பரத்திலிருந்து
நீங்கள் வல்லமையை பெற்றுக் கொள்ளுமட்டாய் பிரசங்கியாதிருங்கள். அதற்குப் பின்பு நீங்கள்
எனக்கு சாட்சிகளாய் இருப்பீர்கள்” என்று கட்டளையிட்டார். அதைத்தான் அவர்கள் கண்டார்கள்.
ஆம் ஐயா!
127.
நண்பர்களே! அமெரிக்காவுங்கூட அதை செய்யப்போகின்றது. ஒரு நாளில் அவர்கள் நோக்கிப்பார்த்து
உண்மையாகவே அது “தேவகுமாரன்” என்று சொல்லபோகிறார்கள். ஆனால் அது காலம் கடந்ததாயிருக்கும். கடைசி முறையாக
அவர்கள் சிரித்து பரிகசித்தார்கள்.
128.
எந்த இடத்தில் அவன் இரட்சிக்கப் பட்டிருக்கக்கூடும் என்பதை மட்டுந்தான் அவனால் நோக்கி
அப்பொது பார்க்க முடியும். ஆனால் அச்சமயம் அது மிகவும் காலம் கடந்ததாயிருக்கும். ஜீவனின்
அதிபதியை அவன் சிலுவையிலறைந்தான்.
129.
அவர்கள் மத்தியிலேயே சரியாக அவர் யாரென்று தெளிவாக ரூபகாரப்படுத்திக் காணும்போதே, இன்றைக்கு,
அநேக சமயங்களில் ஜனங்கள் இயேசு கிறிஸ்துவை அவர்களுடைய இருதயங்களிலிருந்து தள்ளிப் போடுகிறார்கள்.
ஆம் ஐயா.
185.
உங்களுக்குத் தெரியும் சுகமளிக்கும் வரம் என்றால் என்னவென்று? சுகமளித்தலில் விசுவாசம்.
புரிகின்றதா? யாரோ ஒருவருக்கு ஜெபிக்கும் படியாக, நீ உன்னுடைய விசுவாசத்தை அனுப்புகிறாய்.
அவ்வளவு தான் சுகமளிக்கும் வரமெல்லாம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஊழிக்காரனும் அதை உடையவனாயிருக்க
வேண்டும். புரிகின்றதா. சுகமளிக்கும் வரம் உன்னிடத்தில் இருக்க வேண்டும். உன்னை சுகப்படுத்துகிற வல்லமை உனக்கு உள்ளாக இருக்கிறது
பரிசுத்த ஆவி. அது தானாய் தன் வழியே வெளியே வரும்படியாய் நீ விடவேண்டும் அவ்வளவுதான்.
இயேசுவை
நோக்கிப்பார்த்தல் 64-0122
15. ஒரு
அவசர நிலை ஏற்படும் போது, அதுதான் தேவனை நோக்கிப்பார்க்க வேண்டிய நேரம். அவசர நிலை
வரும்முன் அவரை நோக்கிப் பார்த்திருந்து அவரோடு நட்பாயிருங்கள். இது நமக்குத் தெரியும்.
தேவனிடம் நமக்கு ஆதரவு உண்டாயிருக்குமானால், வேறு எந்த நண்பனிடமும் கேட்பது போல நாம்
அவரிடம் எதுவும் கேட்கக்கூடும்; ஆபத்துக் காலத்தில் அநுகூலமான துணையுமானவர் அவர்.
19. …இப்பொழுது அநேகமுறை, சில காரியங்கள் நிகழ்வதை பயங்கரமென்று
எண்ணுகிறோம். ஆனால் தேவன் உங்களை அதுபோன்ற கட்டங்களுக்குள் வழிநடத்துவதாயிருக்கக் கூடும்.
அவர் அதை சொன்னபோது அவர் அதைச் செய்வார்.
41. மணவாட்டியையும்,
அவளிருக்கும் நிலையையும் நாம் காண்கிறோம். சபையானது புறப்பட ஆயத்தப்படுக்கொண்டிருக்கிறது
என்பதை நாம் இயற்கையின் மூலமாகவே அறிகிறோம். என்ன ஒரு மகத்தான நேரம். எல்லாத் தீர்க்கதரிசிகளும்
காண வாஞ்சித்த நேரம் இது, இந்த மணி நேரம்.
44. “இந்த
மனிதன் நாங்கள் விசுவாசிப்பதைப் போல விசுவாசிப்பதில்லை. ஆண்டவரே, இவரை ஊழியத்தில் வைத்ததன்
மூலம் நீர் ஒரு தவறை செய்து விட்டீர்” என்று அவரிடம் சொல்லி அவரைத் திருத்த துணியக்கூடியவன்
யார்? தேவன் அதில் தவறு செய்து விட்டார் என்று தேவனிடம் சொல்லப்போகிறவன் யார்? “நீ குற்றவாளி” என்று
நான் சொல்லத்தக்கதாக குற்றம் புரிந்தவனைக் காட்டிலும் மோசமானவனாலேயே அது கூடும். தாம்
என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை தேவன் அறிவார். யாரைத் தெரிந்தெடுப்பது என்றும்,
யாரைத் தெரிந்தெடுக்கக் கூடாதென்றும், என்ன செய்ய வேண்டுமென்றும், எப்பொழுது செய்யவேண்டு
மென்றும் அவர் அறிவார். ஒரு குறிப்பிட்ட வேலையைச் செய்ய ஒரு குறிப்பிட்ட ஆள் தகுதியுள்ளவர்
என்று நாம் எவ்வளவுதான் எண்ணினாலும், அந்தக் காலத்திற்கும், பருவத்திற்கும், அல்லது
அந்தக் காலத்திற்கும் அதை செய்வதற்கேற்ற வேளைக்கும் தகுதியானவர் யார் என்பதை தேவன்
அறிவார்.
45. ஆகவே
மெய்யான உண்மையான கிறிஸ்தவன், தேவன் பேரில் மெய்யான உண்மையான விசுவாசமுள்ள மனிதன்,
இத்தகைய காரியங்களுக்காக கர்த்தருக்கு காத்திருப்பான். உங்கள் ஊழியத்தைக் குறித்து
காத்திருங்கள். நீங்கள் அழைக்கப்படுவதாக உணர்ந்தால், அது தேவன் தான் என்று நிச்சயித்துக்
கொள்ளுங்கள். அது சரியானது என்ற நிச்சயத்தோடிருங்கள். நீங்கள் என்ன சொல்லுகிறீர்களோ
அது அந்தக் காலத்திற்கேற்றது என்ற நிச்சயம் உங்களுக்கிருக்கட்டும். “கர்த்தருக்கு
காத்திருக் கிறவர்களோ புதுபெலன் அடைந்து கழுகைப்போல செட்டைகளை அடித்து எழும்புவார்கள்.
அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள். அவர்கள் நடந்தாலும் சோர்ந்து போகார்கள்”என்று
வேதாகமம் கூறியிருக்கிறது.
64. அநேகமுறை,
தேவன் மனிதருடன் இடைப்பட்டு, அவர்களுக்கு ஒரு வரத்தை அளிக்கும்போது, மக்கள் அந்த மனிதர்களை
நெருக்குகின்றார்கள். அவர்கள் தேவனுடைய சரியான அழைப்பைப் பெற்று அவரால் அனுப்பப்பட்டிராவிட்டால்,
மக்கள் அவர்களை கட்டாயப்படுத்துவதன் மூலம் அந்த மனிதனையோ அல்லது ஸ்திரீயையோ தேவனுடைய
சித்தமில்லாத ஏதாவதொன்றை சொல்ல வைத்து விடுவார்கள்.
78. …என்ன காலம் நடந்து கொண்டிருக்கிறது என்பதைக் காணமல்,
அவர்கள் பழைய ஸ்தாபனங்களைக் கலந்தாலோசிக்கிறார்கள். வருஷத்தில் சில குறிப்பிட்ட காலங்களைத்தவிற,
மற்ற காலங்களின் சில உணவுப் பொருள்களை உங்களால் உற்பத்தி செய்யமுடியாது.
79. … தேவனில்லாமல்
உடன்படிக்கைப் பெட்டியால் பிரயோஜனம் என்ன? அது வெறும் மரப்பெட்டி, அதனுள் இரண்டு கற்பலகைகள்
இருந்தன. அது இராப்போஜனம் எடுப்பது, ஞானஸ்நானம் பெறுவது போன்றது. நீ முதலில் மனந்திரும்பியிராவிட்டால்,
நீ ஞானஸ்நானம் பெற்றுக்கொள்வதால் என்ன பிரயோஜனம்? தேவனுடைய வார்த்தைக்கேற்ற ஜீவியம்
ஜீவிக்காமல், தேவனுடைய மற்றெல்லா வார்த்தையையும் விசுவாசியாமல், இராப்போஜனம் எடுத்துக்கொண்டு
ஒரு மாய்மாலக்காரனாவதல் என்ன பிரயோஜனம்? அதில் ஒரு பகுதியை மட்டும் எடுத்துக்கொண்டு
மற்றதை எடுத்துக் கொள்ளாமல் போவது, அங்கே ஏதோ தவறிருக்கிறது என்பதைக் காட்டுகிறது.
94. ஓ,
சகோதரனே, கவனி! நாம் எந்த நேரத்தில் வசிக்கிறோம்? இது எந்தக் காலம்? எந்த மணி நேரத்தில்
நாம் வசிக்கிறோம்? அவர்கள் பேசிக்கொள்ளுகிற இந்தக் காரியங்களுக்கு இது நேரமல்ல. அது
கடந்து விட்டது. நியாயதீர்ப்பு இப்போது இங்கேயிருக்கிறது. அது நிகழ ஆரம்பிப்பதை நீ
பார்க்கலாம். மலையுச்சியின் மேலிருந்த கற்பாறை நினைவிருக்கிறதா? நியாயத்தீர்ப்பின்
நேரம் மணவாட்டியைக் குறித்து வெளிப்பாடு அல்லது தரிசனம் நினைவிருக்கிறதா? அவள் (சரியான)
நடை தவறாமல் போகும்படி மட்டும் பார்த்துக்கொள். அவள் நடை தவறிப்போக விட்டு விடாதே.
102.
இப்போது, முன்னுரைக்கப்பட்டு “கர்த்தர் உரைக்கிறதாவது” என்று சொன்ன காரியங்கள் நிகழ்வதை
அவர்கள் காணும் போது, “உங்கள் எண்ணெயில் எங்களுக்கு கொஞ்சம் கொடுங்கள்” என்று
அவர்கள் கூறுகிறார்கள். பாருங்கள்?
103.
ஆனால் இப்போது, செல்வாக்கை கவனியுங்கள். சில சமயங்களில் பெரிய மனிதர்கள் ஒன்று கூடுகிறார்கள்.
அவர்கள் இவ்வாறு கூறுவதை நீங்கள் கேட்கலாம். பெரிய இன்னார்-இன்னார் மற்றும் மகத்தான
இன்னார்-இன்னார், நம்முடைய பெரியவர்… அதை ஒருபோதும் செய்ய வேண்டாம் நம்மில் மகத்தானவர் ஒருவரும்
கிடையாது. மகத்தானவர் ஒரே ஒருவர்தான் உண்டு. அவர் தேவன். நாம் சகோதரர்களும், சகோதரிகளுமாயிருக்கிறோம்.
ஐந்து பேர் கொண்ட சபையின் மேய்ப்பனாக நீங்கள் இருந்தாலும் எனக்கு கவலையில்லை; அது உங்களை
சிறியவராக்கு வதில்லை. அது உங்களை ஒரு சகோதரனாக்குகிறது. (பாருங்கள்?) நீங்கள் தேவனுடைய
வார்த்தைக்கு உண்மையா யிருப்பீர்களானால். என்ன எப்படி என்பதைக் குறித்து கவலையில்லை.
நீங்கள் குறைவாகப் பெற்றுக் கொள்வதில்லை. தேவனுக்கு சிறு பிள்ளைகளென்றும் பெரிய பிள்ளைகளென்றும்
இல்லை. அவருக்கு பிள்ளைகள் மட்டும் உண்டு; அவர்களனைவரும் ஒன்றாகவேயிருக்கிறார்கள்.
104.
கவனியுங்கள், தேவன்தாமே நம்மில் ஒருவராகத்தக்கதாக மகிமையின் தந்தம் மாளிகையிலிருந்து
இறங்கி வந்தார். இப்போது யார் பெரியவர்? ஒரு ஆசாரியனின் ரூபத்தை எடுக்க அவர் இங்கு
இறங்கி வரவில்லை. ஆனால் ஒரு வேலையாளைப் போல ரூபமெடுத்து தாம் உண்டாக்கின களிமண்ணைக்கழுவ,
தம்முடைய அப்போஸ்தல்களின் கால்களை கழுவ… இப்போது யார் பெரியவர்?
125.
மனிதன் எவ்வளவுதான் உண்மையும் உத்தமமுமாக செய்தாலும், தேவன் அதை வெளிப்படுத்துவதற்கு
அளித்துள்ள வழிக்கு புறம்பாக அவன் அவருக்கு சேவை செய்ய முயலும் போது அதைக் குழப்பிவிடுகிறான்.
தேவன் அதை தம்முடைய வழியிலே அமைக்கிறார். மனிதனோ, அதற்கு புறம்பாக செயல்படும்போது,
எவ்வளவுதான் உண்மையும் உத்தமமுமாக செய்ய முயன்றாலும் நீங்கள்-நீங்கள் அதைக் குழப்பிவிடுகிறீர்கள்.
137.
அநேக உண்மையான மக்கள் ஒரு ஸ்தாபனத்தையோ அல்லது ஒரு கூட்டத்தையோ அல்லது ஒருவித மத அணுசரணை
முறையையோ சென்று சேர்ந்து கொள்கின்றனர். அங்கே அவர்கள் ஆவிக்குரிய மரணம் அடைகின்றனர்.
அவர்களிடம் உங்களால் ஒன்றும் சொல்ல முடியாது. அவர்கள் அந்த ஸ்தாபனங்களின் உபதேசத்தால்
பலமாய் நிரப்பப்படுகின்றனர். “ஏன், இந்த அத்தியட்சகர்கள் இதை, இதை, இதை, இதை சொன்னார்கள்” என்பார்கள்.
நீங்கள் தேவனுடைய வார்த்தையிலிருந்து “கர்த்தர் உரைக்கிறதாவது” என்பதை அவர்களுக்கு காட்டினால்,
“ஆனால் எங்கள் போதகர்…” என்பார்கள். உங்கள் போதகர் என்ன கூறுகிறார் என்பதைக்
குறித்து எனக்குக் கவலையில்லை. நான் என்ன கூறுகிறேன் என்பதைக் குறித்தும் எனக்குக்
கவலையில்லை. அல்லது மற்ற யார் கூறுவதைக் குறித்தும் கவலையில்லை. அது தேவனுடைய உறுதிப்படுத்தப்பட்ட
வார்த்தைக்கும், மணி நேரத்திற்கும், காலத்திற்கும், செய்திக்கும் ஆகிய காரியங்களுக்கு
மாறுபட்டிருந்தால் அதை மறந்து விடுங்கள். அதை விட்டு விலகியிருங்கள். நியாயத்தீர்ப்பின்
நாளன்று நான் உங்கள் ஒவ்வொருவர் முன்பாகவும் நிற்க வேண்டியிருக்கும், அதை அறிவீர்கள்.
139.
…கோடா கோடிக்கணக்கான பணம் இருக்கும் போதும் மார்க்கத்திற்காக இன்னும் பிச்சைக்
கேட்கின்றனர். உத்தமம்தான், சந்தேகமில்லை. சபைகள் சென்று பிரசங்கிக்கின்றன. தங்கள்
சபைக்கு புது அங்கத்தினர்களைக் கொண்டு வர ஊழியக்காரர்கள் பிரசங்க மேடைகளில் நின்று
கொண்டு தங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்கின்றனர். ஆனால் அது ஒரு புதிய உடன்படிக்கைப்
பெட்டி. பின் செல்லவேண்டிய உடன்படிக்கைப் பெட்டி ஒன்றுதான் உண்டு. அது தேவனுடைய வார்த்தையாகும்.
அந்த உடன்படிக்கைப் பெட்டிக்கு மாறுபட்டதாக எது இருந்தாலும் அதை விட்டு விலகியிருங்கள்.
அது தேவனுடைய தோள்களின் மீதில்லாதபடி ஒரு புது இரதத்தின் மீது ஏற்றப்பட்டிருக்கிறது.
அது உண்மை. அந்தக் காரியத்தைவிட்டு விலகியிருங்கள். அதோடு உங்களுக்கு எந்தவித தொடர்பும்
வேண்டாம்.
145.
…சபையார் முந்நூறு ஆண்டுகளுக்கு அல்லது அதற்கு அதிகமான ஆண்டுகளுக்குமுன் விழுந்ததையும்,
அநேக நூற்றாண்டுகளுக்கு முன் விழுந்ததைப் புசிக்க முயல்கின்றனர். அவர்கள் பழைய மன்னாவைப்
புசிக்க முயல்கின்றனர். ஓ, சகோதரனே, அது தேங்கி நிற்பதால் அசுத்தமானது. அது கெட்டுப்போனது.
அது…அதில்-அதில்-நான் எப்போதும் சொல்வதுபோல அதிலே புழுக்கள் நெளிகின்றன. அதைச் சாப்பிடுவாயானால்
அது உன்னைக் கொல்லும்.
147.
…கர்த்தர் உரைக்கிறதாவது அது பரிசுத்த வேதாகமத்திலுள்ளது..தேவன் அதை முழுமையாக
பரிபூரணமாக அடையாளம் காட்டி அதுவே சத்தியம் என்று கடந்த முப்பத்து மூன்று ஆண்டுகளாக
உயர வானத்திலும் மற்றெல்லாவற்றிலும் அடையாளங் களினாலும், அற்புதங்களினாலும் அதை உறுதிப்படுத்
தியிருக்கிறார். அதற்கு அவர்கள் செவி சாய்ப்பார்களென்று நினைக்கிறீர்களா? இல்லை. அவர்கள்
மரித்துப்போனார்கள். அவர்கள் ஏதோ ஒன்றிடம் தங்கள் கையை நீட்ட அது அவர்களை முற்றுமாக
கொன்றுவிட்டது. இல்லை, இனி பிரயோஜனமில்லை, இனி பிரயோஜனமில்லை-ஒருபோதுமில்லை.
153.
….எந்த மனிதனும் தன்னைத் தவறாகப் பார்ப்பதில்லை. தேவனுடைய வார்த்தையாகிய கண்ணாடியில்
உன்னை நீ பார்க்கும்போது அதுதான் நீ தவறு செய்கிறாயா? இல்லையா? என்று கூறுகிறது. …..
158.
கிறிஸ்துவே நம் உடன்படிக்கைப் பெட்டியாயிருக்கிறார். ஆனால் அவர்களோ அதை ஏற்றுக்கொள்ள
மாட்டார்கள். கிறிஸ்துதான் வார்த்தை. அவர்களோ அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவர்களுக்கு
அவர்கள் கொள்கைதான் வேண்டும், அவர்கள் ஸ்தாபனங்கள் வேண்டும். அல்லது-அல்லது-அல்லது
ஒரு புது வாகனம் வேண்டும். கிறிஸ்துவே நமது உடன்படிக்கைப் பெட்டி என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
கிறிஸ்துதான் வார்த்தை என்பதை விசுவாசிக்கிறீர்களா? அப்படியானால் வார்த்தைதான் உடன்படிக்கைப்
பெட்டியாகும். அது சரியா? சரிதான். கிறிஸ்து தமது சரியான ஸ்தானத்திற்கு எந்த ஸ்தாபன
இரதத்தின் மூலமாகவும் கொண்டு செல்லப்பட முடியாது. கிறிஸ்து ஒரு தனிப்பட்ட நபருடன் இடைபடுகிறார்.
ஒரு கூட்டத்தினருடன் அல்ல. ஒரு கூட்டத்தினருடன் அவர் ஒருபோதும் இடைப்பட்டது (காரியங்களைச்
செய்தது) கிடையாது; ஒரு தனிப்பட்ட நபர். எப்போது அவர்? … அப்படி அவர் செய்தால் அவர் தம்முடைய
வார்த்தைக்கு முரண்பாடாக செய்கிறவராவார். ஆமோஸ் 3:7. தேவனுடைய வார்த்தையை பொய் சொல்ல
வைக்க உங்களால் கூடாது. இல்லை, ஐயா! அது-அது சத்தியம்.
162.
பாருங்கள், தேவனுடைய ஆவியை தங்களுக்குள் பெற்றவர்கள் இன்றைக்குரிய வாக்குத்தத்தைப்
பார்க்கிறார்கள். அதைத் தாங்கள் காணும்வரை அதற்காக கவனித்திருந்து காத்திருக் கிறார்கள்.
அதைக் கண்டவுடன் “அதுதான் இது” என்கிறார்கள். தேவன் அவர்களுக்கு அதை வெளிப்படுத்துகிறார்.
166.
இப்பொழுது, கடைசி நாட்களில் தாம் என்ன செய்யப்போகிறார் என்பதைக் குறித்து வாக்குத்தத்தம்
பண்ணியிருக்கிறார். ஆகவே அவர் அவர்களுக்கு – நமக்கொரு செய்தியை அனுப்பியுமிருக்கிறார்.
இந்தச் செய்தியானது எலியாவுடையதும், எலிசாவுடையதும், யோவான் ஸ்நானகனுடையதுமான அதே அடையாளத்தைப்
பெற்றிருக்கும். அது மக்களின் இருதயத்தை ஸ்தாபனங் களிடமாய் அல்ல, மூல விசுவாசத்திற்கு,
அப்போஸ்தலப் பிதாக்களிடத்திற்கு, திருப்பும். இவைகளெல்லாம் எப்படி உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றன!
எப்படி வெளிப்படுத்தின விசேஷம் 10-ம் அதிகாரத்தில் குறிப்பிட்டுள்ள கடைசி தூதன் சத்தமிடும்
போது, ஏழாம் தூதனின் நாட்களில் இந்த இரகசியங்களெல்லாம்…
174.
…இன்று அவர் அந்த பரிசுத்த ஆவி என்னும் நபரில் நம் மத்தியிலே நின்றுகொண்டு, தம்மை
மேலும் மேலும் வெளிப்படுத்திக்கொண்டு தம்முடைய சபையிலே வந்து கொண்டிருக்கிறார். தம்மை
வெளிப்படுத்துகிறார். ஏனென்றால் மணவாளனாகிய அவரும் மணவாட்டியும் ஒன்றாயிருப்பார்கள்.
அவரை வெளிப்படுத்துவார்கள். ஆகவே ஒரு நாளிலே, உங்கள் இருதயத்தில் உணர்ந்து அந்த ஒன்றை,
அவருடைய அடையாளங்களைக் காண்கிற உங்கள் முன்னிலையில் செயலாக்கப்படுவதை நீங்கள் காண்பீர்கள்.
அப்பொழுது நீங்களும் அவரும் ஒன்றாயிருக்கின்றீர்கள். நீங்கள் வார்த்தையால் இணைந்தீர்கள்.
அப்போது ஆதியிலிருந்த வார்த்தை ஆதியாகிய தேவனிடத்திற்குச் செல்லும்.
175.
…அக்கினி ஸ்தம்பமானது மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள்ளே சென்று, கேரூபீன்கள் செட்டைகளின்
மேலே சென்று, தன்னுடைய இளைப்பாறும் ஸ்தலத்தை வந்தடைந்தது. தேவனுடைய மகிமையானது அங்கே
உள்ளேயிருந்தது. எப்படி ஊழியஞ்செய்வதென்று காணக்கூடாதவர் களாயிருந்தார்கள். ஆமென்!
அவர் தம்முடைய மணவாட்டிக்காக வரும்போது அது ஒவ்வொரு மத சாஸ்திர விற்பன்னனுடைய கண்களையும்
மறைத்துப்போடும். அவர்களுக்கு நேர்ந்தது போல, அவள் நடு இரவிலே எடுத்துக்கொள்ளப்படுவாள்.
அவள் செல்வதை அவர்கள் காணக்கூடமாட்டார்கள். ஓ, தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக.
179.
…நண்பர்களே, கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் செவிகொடுங்கள். இந்தக் காரியங்கள்
நீங்கள் நம்பாமல் இருக்க கூடாதபடி இது மிகவும் வெளிப்படையாய் உள்ளன. நீங்கள் காணாமல்
இருக்க கூடாதபடி மிகவும் வெளிப்படையாய் உள்ளது. ஆனால் உங்களுடைய…இப்போது,
இந்தப் புதிதான காரியங்களினாலே இழுக்கப்படாதிருங்கள். இன்று அவர்கள் கொண்டுள்ள காரியங்களாலும்
இழுப்புண்டு போகாதிருங்கள். அவர்கள் எவ்வளவு நல்ல மனிதர்களாயிருந்தாலும் எனக்குக் கவலையில்லை,
அவர்கள் எவ்வளவு உத்தமமானவர்களாயிருந்தாலும் சரி; அவர்கள் நியாயப்பிரமானத்தின் படியும்
தீர்க்கதரிசிகளின் ஆகமங்களின் படியும் பேசாவிட்டால் அவர்களில் ஜீவனில்லை என்று வேதாகமம்
கூறியிருக்கிறது. பார்த்தீர்களா?
செய்தி:
தேவ சித்தத்திற்குப் புறம்பாக அவருக்கொரு சேவை செய்தல் 65-0718.
140.
…நீங்கள் பரிசுத்த ஜாதி (1பேதுரு.2:9). நீங்கள் என்ன செய்தீர்கள்? ஒரு தேசத்தை
விட்டு வேறொரு தேசத்திற்குள் பிரவேசித்தீர்கள். நீங்கள் எப்படி அதற்குள் பிரவேசித்தீர்கள்.
ஏனெனில் அது வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசம். அது எத்தகைய வாக்குத்தத்தம் “நான்
கடைசி நாட்களில் மாம்சமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன்” ஒரே
ஆவியினாலே வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட அந்த தேசத்திற்குள் சகோதரர்களே, சகோதரிகளே, அல்லேலூயா!
அங்கே இருதய சுத்தம் இருக்கும். எந்த பொறாமையும், விரோதமும் எதுவும் அங்கு காணப்படுவதில்லை,
சகோதரன் ஒருவன் வழிதவறி செல்ல நேரிட்டால், அவன் எத்தகைய தவறு செய்திருந்தாலும், அவனை
நீங்கள் பின்தொடர்ந்து சென்று சரி செய்ய முயல்வீர்கள்.
புத்திரசுவிகாரம்-2
60-0518
33. தேவன்
“எவ்விதமாக தமது ஜனங்களை அவரவர் ஸ்தானத்தில் வைக்க முனைகிறார் என்று ஒரு நபரை
தேவன் அவனுடைய ஸ்தானத்தில் வைக்கும்போது, எல்லோரும் அந்த மனிதன் வகிக்கும் ஸ்தானத்தையே
வகித்து, அவன் புரியும் செயல்களையே புரிய விரும்புகின்றனர். ஆனால் நாம், வெவேறு விதமாக
இருக்க உண்டாக்கப்பட்டிருக்கிறோம்.
36. நீங்கள்
ஒருக்கால் தவறான காரியங்களைச் செய்யலாம். ஒவ்வொரு முறையும் நீங்கள் தவறு செய்யும் போது,
அதற்கான கிரயத்தை நீங்கள் செலுத்தியே தீரவேண்டும். ஆம், ஐயா! நீங்கள் எதை விதைக்கிறீர்களோ,
அதையே அறுப்பீர்கள். ஆனால் அதற்கும் இரட்சிப்புக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. நீங்க்கள்
தேவனுடைய ஒரு பாகமாக, தேவனுடைய புத்திரராக ஆகிவிடுகின்றீர்கள்.
43. எனக்கு
இரட்சிப்பு அவசியமாயிருந்தது. என்னை எதுவுமே இரட்சிக்க முடியவில்லை. அதைக் குறித்து
என்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லை, என்னை நானே இரட்சித்துக்கொள்ள முடியவில்லை. ஆனால்
எனக்கோ இரட்சிப்பு அவசியமாயிருந்தது. ஏனெனில் தேவனில் நான் விசுவாசம் கொண்டிருந்தேன்.
தேவன் பாவமுள்ள சரீரதின் சாயலில் உண்டாக்கப்பட்ட தமது குமாரனை அனுப்பி, எனக்குப்பதிலாக
அவர் பாடனுபவிக்கும்படி செய்தார். அதன் விளைவாக, நான் இரட்சிக்கப்பட்டேன். கிருபையினால்
மாத்திரமே நான் இரட்சிக்கப்பட்டேன். அதற்காக நான் ஒன்றுமே செய்ய முடியவில்லை. நீங்களும்
உங்களை இரட்சித்துக் கொள்ள ஒன்றுமே செய்யமுடியாது. உலகத் தோற்றத்துக்கு முன்பு அவர்
எவர்களை முன்ன்றிந்தாரோ…
91. …அவர்
தம் கரத்தை நீட்டி தூக்கியெடுத்து, “மகனே, இப்படி நட” என்று கற்பிக்கிறார். அவர், “ஸ்தாபனங்கள்
என்ன கூறினாலும் எனக்குக் கவலையில்லை. நீ இப்படி சொல். என் வார்த்தை இப்படி கூறினால்,
அதில் உறுதியாய் நின்று அதன்படி நட, அதில் நிலைகொள். மற்றவர்கள் என்ன கூறினாலும் கவலைப்படாதே.
அதில் உறுதியாய் நில். இப்படி நட. இப்படித்தான் உன் அடிகளை எடுத்து வைக்க வேண்டும்” என்று
கூறுவார்.
92. நம்முடைய
பாவங்களுக்காக பரிகாரம். நம்முடைய பாவங்களின் நிமித்தம் அன்பு இல்லையேல் நமக்கு தருணமே
இருந்திருக்க முடியாது. அந்த வார்த்தையில் நாம் எவ்வளவாக நங்கூரமிடப்பட்டிருக்க வேண்டும்!.
101.
அங்கு சாராயம் விற்றுக்கொண்டிருப்பவன் நித்திய ஜீவனுக்கென்று முன்குறிக்கப்பட்டவனா
இல்லையா என்பது உங்களுக்கு எப்படி தெரியும்? அங்கு வீதியில் நடந்து சென்று கொண்டிருக்கும்
விலை மாதுவினிடம் நீங்கள் பேசவும் பயப்படுகின்றீர்களே, அவளிடம் கை குலுக்கி சபைக்கு
வரும்படி அழைப்பு விடுத்தால், அது அவளை மகிமையில் தேவனுடைய பரிசுத்தவாட்டியாக ஆக்கும்
வாய்ப்புண்டா இல்லையா வென்று உங்களுக்கு எப்படி தெரியும்? அதுதான் நமக்கு தெரியாது.
ஆனால் அவ்விதம் அழைப்பு விடுப்பது நமது கடமையாகும்.
150.
நல்லது, மாய்மாலக்காரனே! உனக்கு என்ன நேர்ந்தது? வஞ்சிக்கப்பட்ட பிள்ளையே, நீ சுவிசேஷத்தை
விட்டு வெகுதூரம் அகன்று சென்று விட்டாய். அது மிகவும் பரிதாபம். நீ சேறு நிறைந்து
பாதைக்கு, எரிந்துக் கொண்டிருக்கும் குவியலுக்கு வழி திருப்பப்பட்டிருக்கிறாய். அவர்
என்ன கூறியுள்ளார் என்பதை உன்னால் புரிந்துக்கொள்ள முடியவில்லை. இயேசுகிறிஸ்து இப்பொழுது
மாம்சத்தில் தோன்ற வில்லை என்று அறிக்கை பண்ணும் ஒவ்வொரு ஆவியும் தவறான ஆவியாகும்.
இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்று வேதம் கூறுகின்றது.
அவர் அன்று என்ன சொன்னாரோ, அப்படியே இன்றும்
இருக்கிறார். அவர் என்றும் அவ்வாறே இருக்கிறார்.
கவனியுங்கள்.
புத்திரசுவிகாரம்-3
60-0522
68. இப்பொழுது
கவனியுங்கள், தேவன் எப்படியிருக்க வேண்டும், மேசியா எப்படி
இருக்க வேண்டுமென்று அவர்கள்
தங்கள் சொந்த கருத்தைக் கொண்டிருந்தனர். ஆனால் மேசியா எப்படி இருக்க வேண்டுமென்று வார்த்தை
அறிவித்திருந்தது. இப்பொழுது பாருங்கள், மேசியா எப்படி இருக்க வேண்டுமென்று தங்கள்
சுயபுத்தியில் விளைந்த கருத்தை அவர்கள் உடையவர்களாயிருந்தனர்..(மல்.3:1)..
69. யாராவது
ஒரு மாய்மாலக்காரன் அங்கு நடந்து சென்று, “நான் தான் மேசியா. நான் டாக்டர் இன்னார்,
இன்னார்” என்ற்று கூறியிருந்தால், அவர்கள் அவரை ஏற்றுக்கொண்டிருப்பார்கள்.
70. ஆனால்
அவர்கள் சந்தேகமான பிறப்பைக் கொண்ட, எந்த பள்ளியிலும் கல்வி பயிலாத, எந்த வேதசாஸதிர
கல்லூரியிலும் படிக்காத, ஐக்கியச்சீட்டு எதையும் பெற்றிராத ஒரு மனிதனைக் கண்டனர். ஆனால்
அவரோ தேவனுடைய வார்த்தை நிறைவேறுதலாக வந்தார்.
71. அதை
இந்நாளுக்கு நாம் பொருத்தலாம் அல்லவா? பரிசுத்தாவி வந்திருக்கும் போது, அவர்கள் அதை
வேறொரு காலத்துக்குப் பொருத்தப் பாக்கிறார்கள். அவர் நித்திய ஜீவனின் வல்லமையைக் கொண்டவராய்
கிரியை செய்து கொண்டிருக்கும்போது, அவர்கள் அதை “காட்டுத்தனமான மூடமதாபிமானம்” என்கின்றனர்.
ஏன்?அவர்கள் கர்த்தருடைய வார்த்தையின் மேல் சாய்ந்திராமல், தங்கள் சுயபுத்தியின்மேல்
சாய்ந்துள்ளனர். அது உண்மையென்று உங்களுக்குத் தெரியும்.
72. வாக்குத்தத்தம்
நிறைவேறுவதே அதற்களிக்கும் வியாக்கியானம். அப்படித்தான் அது அடையாளம் கண்டுக்கொள்ளபட
வேண்டும்.
95. போதகர்களே,
உங்கள் சபையை நீங்கள் ஏன் சுத்தப்படுத்துவதில்லை? ஏனெனில் நீங்கள் கர்த்தருடைய வார்த்தைக்கு
பதிலாக உங்கள் ஸ்தாபன கோட்பாட்டை கைக்கொள்கிறீர்கள். அது உண்மை. உங்கள் சுயபுத்தியின்
மேல் சாயாதீர்கள். கர்த்தருடைய வார்த்தையின் மேல் சாய்ந்திருங்கள்.
96. அவர்கள்
அதை ஏற்றுக் கொள்ளாததன் காரணம், தேவனுடைய வார்த்தை உறுதிப்படுவதை அவர்கள் ஏற்றுக்கொள்ள
மறுப்பதே. இயேசு, அவர் எப்படி வருவார் என்று கூறியிருந்தாரோ, அதே விதமாக சுவிசேஷத்தைக்
கொண்டவராய் வந்தார்.
98. யோவானால்
அதைப் புரிந்துக்கொள்ள முடியவில்லை. எனவே அவன் தன் சீஷர்களில் சிலரை இயேசுவிடம் அனுப்பி,
வருகிறவர் அவர் தானா என்று கேட்டான். இயேசுவுக்கு அது என்ன ஒரு மரியாதை கேடு! ………
100.
அநேகம் பேர் இடறலடைந்து விட்டனர். தேவனுடைய வார்த்தையின் நிமித்தம் அநேகர் எளிதில்
இடறலடைந்து விடுகின்றனர். அது முரணாயுள்ளது. அவர்கள் தங்கள் சுயபுத்தியின் மேல் சாய்ந்திருக்க
பிரியப்படுகின்றனர். அவர்கள் தேவனுடைய வார்த்தையை ஏற்றுக்கொள்ள பிரியப்படுவதில்லை.
அவர்களுக்கு கற்பிக்கப்பட்ட வழியில், அவர்கள் சபை சாய்ந்துள்ள வழியில் அவர்கள் செல்ல
விரும்புகின்றனர். இன்று காலை மழையை பெய்யப் பண்ணுவதாக தேவன் வாக்களித்திருந்து, அவர்களுடைய
சபை “அது மூடத்தனம்” என்று கூறுமானால், அவர்கள் தேவனுக்குப் பதிலாக தங்கள் சபை கூறுவதையே விசுவாசிப்பார்கள்.
ஏன்? அவர்கள் சபையினால் பிறந்தவர்கள்.
101.
ஆனால் தேவனால் பிறந்த எவனும் தேவனுடைய வித்தாயிருக்கிறான். தேவனுடைய வித்து தேவனுடைய
வார்த்தையே. அவன் அதைக் கொண்டு தான் ஜீவிக்கிறான். அதுதான் அவன் ஜீவன்.
118.
நீங்கள் பொய்யை விசுவாசித்து ஆக்கினைத்தீர்ப்படையலாம் என்று வேதம் உரைக்கின்ற தென்று
உங்களுக்குத் தெரியுமா? பாருங்கள், அது முற்றிலும் உண்மை. தேவனுடைய வார்த்தை என்ன கூறினபோதிலும்,
அவர்கள் தங்கள் சுய புத்தியின் மேல் சாய்ந்து, அதை விசுவாசித்து, அது உண்மையென்று நம்புகின்றனர்.
நீங்கள் ஒரு பொய்யை மறுபடியும், மறுபடியும், மறுபடியும் விசுவாசித்து, அது உங்களுக்கு
முடிவில் சத்தியமாகி விடுகிறது. அது உண்மை.
119.
அது சத்தியமா இல்லைவென்று நாம் எப்படி அறிவது? தேவன் அது சத்தியமென்று நிரூபிக்கிறார்.
ஏனெனில் அது அவருடைய வார்த்தை, அவர் அதை உறுதிப்படுத்துகிறார். அதன் மூலம் அவரே அதை
வியாக்கியானப்படுத்துகிறார்.
உன் சுயபுத்தியின்
மேல் சாயாதே 65-0120
1 தெச.4:13-17
129.
இந்த மகத்தான நிகழ்ச்சியை நீங்கள் கவனிக்க விரும்புகிறேன்.காணத் தவறவேண்டாம். கர்த்தர்
பிரசன்னமாகு முன்பு,மூன்று காரியங்கள் நிகழ வேண்டுமென்று 13 முதல் 16 வசனங்கள் உரைக்கின்றன.
அவை ஆரவாரம், சத்தம்,எக்காளம்,என்பனவாம்.அது உண்மையா என்பதை நாம் அறிந்து கொள்ள மறுபடியும்
16ம் வசனத்தை படியுங்கள்.அவர் இறங்கி வரும் போது இவை மூன்றையும் அவரே செய்கிறார்.
204.
ஒருக்கால் இச்சம்பவம் ஏற்கனவே நிகழ்ந்து விட்டதா? மணவாட்டி ஏற்கனவே அழைக்கப்பட்டு முடிந்து
விட்டதா? இப்பொழுது இதுதான் சம்பவித்துக் கொண்டு வருகின்றதா? மணவாட்டி கிறிஸ்துவின்
சாயலுக்கு ஒப்பாக வார்ப்பிக்கபடவேண்டும். கிறிஸ்துதான் வார்த்தை, அதனுடன் நாம் ஒன்றையும்
கூட்டமுடியாது.உதரணமாக, ஒரு கை மனித கை நாயின் பாதமாகவும் உள்ள எந்த ஒரு பெண்ணுமாயும்
நாம் காண்பதில்லை.அது தேவனுடைய வார்த்தையாகவே இருக்க வேண்டும்.அவரே வார்த்தை.மனைவி
கணவனின் ஒரு பாகமாக இருக்கிறாள். ஏனெனில் அவள் கணவனிலிருந்து எடுக்கட்டவள். அவ்வாறே
மணவாட்டியும் மணவாளனின்று எடுக்கப்பட்டவள். ஆகவே மணவாட்டியும் மணவாளனின் ஒரு பாகமாக
இருக்கிறாள்.ஏவாள் ஆதாமின் ஒரு பாகம். அவள் அவன் விலாவினின்று வெளியே எடுக்கப்பட்டவள்:
அது போன்று மணவாட்டியும் கிறிஸ்துவின் ஒரு பாகமாக இருக்கிறாள்.அவள் ஸ்தாபனத்திலிருந்து
எடுக்கப்பட வில்லை.அவள் இக்காலத்துக்குறிய தேவனுடைய வார்த்தையினின்று எடுக்கப்பட்டவள்.
செய்தி:-ஆகாயத்தில்
எடுத்துக்கொள்ளப்படுதல்.04-12-1965.
484.அவருடைய
பிரசன்னம், தனிப்பட்ட நபரில்,ஒரு தனிப்பட்ட விதத்தில் தம்மைத்தாமே உறுதிப்படுத்தி தம்மைத்தாமே
வெளிப்படுத்தி, இந்நாளுக்கென வாக்குத்தத்தம் செய்யப்பட்ட அந்த ஜீவிக்கின்ற வார்த்தையானது,
தம்மைத்தாமே உன் மூலமாக வெளிப்படுத்துகின்றது, தேவனுடைய மகத்தான வெளிப்பாட்டின் உறுதிப்படுத்துதல்.பாருங்கள்,
தனிப்பட்ட ஒரு நபருக்குள்,ஒரு குழுவில் அல்ல! ஒரு தனிப்பட்ட நபர்; ஒரு குழுவில் அல்ல!
ஒரு தனிப்பட்ட நபரில் அடையாளங் கண்டு கொள்ளுதல் இருக்கின்றது.உங்களுக்கு புரிகின்றதா?.......................
485.”ஒருவனை
ஏற்றுக்கொள்ளுவேன்,மற்றவனைப் பிரித்து விடுவேன்.” அது உண்மை,”வயலில்
இரண்டு பேர் இருப்பார்கள்,ஒருவனை ஏற்றுக்கொள்ளுவேன், மற்றவனைக் கைவிடுவேன்.”
486.அது
ஒரு குழுவல்ல.அது தேவனுடைய பரிசுத்த ஆவியினால் நிறையப்பட்டு கர்ப்பந்தரித்த தேவனுடைய
பிள்ளையின் மூலமாய் தம்மை தனிப்பட்ட விதத்தில் வெளிப்படுத்துதல்.அந்த தேவனுடைய பிள்ளை
தன்னை தேவனுக்கு முற்றிலும் சமர்ப்பித்தவனாய் வேறொன்றையும் குறித்து கவலை கொள்ளாதிருப்பான்.பரிசுத்த
ஆவியானது அதனுடைய ஜீவியத்தை செய்து,அவன் மூலமாக நாடித் துடிப்பை செய்து வார்த்தையின்
தனிப்பட்ட உறுதிப்படுத்துதலை காண்பித்து,தம்மைத்தாமே, ஜனங்களுக்கும்,உலகிற்கும் வெளிப்படுத்துகிற
வராயிறுக்கிறார்.
487.இப்படிபட்ட
ஒன்றைக் காணமல் ஜனங்கள் எப்படி குருடாயிருக்க முடியும்?..... .............
490.”என்னுடைய
சபை.....” என்று கூறாதீர்கள். இப்பொழுது”என் சபைக்கும்” இதற்கும் எவ்வித தொடர்புமில்லை.
491.அது
தனிப்பட்ட நபரைக் குறித்த ஒன்றாகும்.ஒரு நபர்! பாதாளம் முழுவதுமே இந்த போதனைக்கு விரோதமாக
உள்ளது.பாதாளம் முழுவதுமே இந்த சத்தியத்திற்கு எதிராக உள்ளது.ஆனால் இது சத்தியம்.
செய்தி:
கிறிஸ்து தேவனுடைய பரம ரகசியத்தின் வெளிப்படுதலாயிருக்கிறார்.28-07-1963.
23. இப்பொழுது
நம்மால் அநேக காரியங்களைச் செய்ய முடிகிறது. நம்மால் இராப்போஜனம் எடுக்க முடிகிறது.
நாம் ஞானஸ்நானம் பண்ணப்பட முடியும். நம்மால்-நம்மால் சபைக்கு வரமுடியும். நம்முடைய
பெயர்களைப் புத்தகங்களில் பதிவு செய்திருக்க முடியும் அல்லது நம்மால் இருக்க முடிந்தளவு
மரியாதையாயும்,பயபக்தியாயும் இருக்க முடிந்தும்,அதே சமயத்தில் இழக்கப்படமுடியும். அது
ஒரு பயபக்திக்குரிய எச்சரிப்பாயிருக்கிறது. ஆவியானது பொழியப்படும்போது நம்மால்... அப்படியே
களிகூரமுடியும். ஒரு கூட்டத்தில் வார்த்தையானது பிரசங்கிக்கப்படும் போது,நம்முடைய ஆத்துமாக்கள்
வார்த்தையினால் களிகூர்ந்தும்,நாம் இழக்கப்படமுடியும்.
25. நாம்
ஞாயிற்றுக்கிழமையில் எந்த ஒரு காரியத்தையும் நம்முடைய கரங்களைக் கொண்டு செய்யாத அளவிற்க்கு
மிகவும் பயபக்தியுள்ளவர்களாயிருக்கலாம்.நாம் நம்முடைய ஆடைகளில் ஞாயிற்றுக்கிழமையில்
ஒரு தையலும்கூட போடாதவர்களாயிருக்கலாம் ஞாயிற்றுக் கிழமையில் ஆகாரத்தை வாங்குவது நேர்மையாய்
காணப்படவில்லையென்ற உணர்வையும் கூட கொண்டிருக்கலாம். நாம் மிகுந்த பக்தியுள்ளவர்களாயும்,
மிகுந்த கடமையுணர்வை பேணுகிறவர்களாயும் இருக்கலாம். ஆனால் அதே சமயத்தில் நாம் தேவனுடைய
ஆவியில் சரியாக மீண்டும் பிறக்கவில்லையென்றால்,நாம் வீணாய் ஆராதித்துக் கொண்டிருக்கிறோம்.
செய்தி:-
கொரிந்தியர்,திருத்துதலைக் கொண்ட புத்தகம்,14-04-1957
400-வது
பக்கம்
இக் காலத்துத்
தூதன் புகழ் பெற்றவராயிரா விட்டாலும்,தேவன் அவர் சரியென நிரூபிப்பார்.யோவான் ஸ்நானனை
இயேசுவும்,இயேசுவைப் பரிசுத்த ஆவியும் உறுதிப்படுத்தியது போன்று,வேறெங்கும் காணக்கூடாத
அற்புதங்களையும், அடையாளங்களையும் பரிசுத்த ஆவியானவர் இத்தூதனுடைய ஜீவியத்தின் மூலம்
நிகழ்த்தி,அவரை உறுதிப்படுத்துவார்.இயேசு இவ்வுலகத்தில் வாழ்ந்த போது,யோவானைக் குறித்து
சாட்சி கொடுத்தது போன்று,தம்முடைய இரண்டாம் வருகையில் இத்தூதனைக் குறித்து சாட்சிக்
கொடுப்பார்.இத்தூதனும் யோவானைப் போன்று,இயேசுவின் வருகையை அறிவிப்பார்.இயேசு கிறிஸ்துவின்
இரண்டாம் வருகையே இந்தத் தூதன் அவருடைய வருகைக்கு முன்னோடியவன் என்பதை நிரூபிக்கும்.இயேசு
மறுபடியும் பிரசன்னமாகும்போது, புறஜாதிகளின் காலம் முடிவு பெறும்.அப்பொழுது அவரைப்
புறக்கணித்தவர்கள் இரட்சிக்கப்பட முடியாமல் காலதாமதமாகியிருக்கும்.
செய்தி:-ஏழு
சபைக்காலங்களின் வியாக்கியானம்-04-12-1965
200.தேவனே,நான்
மிகவும் மகிழ்ச்சிக் கொள்கிறேன்.என்ன செய்வதென்றே எனக்குத் தோன்றவில்லை.இப்பொழுது இதை
நானாக கூறுகிறேன் என்று நினைக்க வேண்டாம்.நானும் கூட இங்கே உங்கள் மத்தியில் இருக்கிறேன்.பாரூங்கள்?
நான், அது நான்.எனக்கு ஒரு குடும்பம் உண்டு.எனக்கு சகோதரரும்,சகோதரிகளும் உண்டு? அவர்களை
நான் நேசிக்கிறேன். பரலோகத்தின் தேவன் தாமே கிருபையாய் இறங்கி வந்து தரிசனங்களின் மூலமாக
அவரையும் அவருடைய சத்தியத்தையும் வெளிப்படுத்திக் கொண்டு வருகிறார்.முப்பது வருட காலமாக
இவை யாவும் உண்மையென்று நிரூபிக்கப்பட்டுள்ளது.நாம் இங்குள்ளோம். நாம்...ஆம்,நாம் கடைசி
காலத்தில் வந்துவிட்டோம். அவ்வளவுதான்.இது உண்மையென்று விஞ்ஞான ஆராய்ச்சி நிரூபித்துள்ளது.தேவனுடைய
வார்த்தையும் அது உண்மையென்று நிரூபித்துள்ளது. அப்படியானால் நாம் கடைசி காலத்தில்
இருக்கிறோம்.இந்த வெளிப்பாடு தேவனிடமிருந்து வருகிறது.இது சத்தியம்.
201.நீங்கள்
ஏதாவதொன்றைக் கண்டுபிடித்தீர்களா? (சபையோர்”ஆமென்” என்கின்றனர்)நீங்கள் அதை கண்டீர்களா
என்று நான் சற்று அதிசயித்தேன். பாரூங்கள்?ஆம்,ஐயா. அப்படியானால், நான் ஞாயிறன்று அதைக்
கூற வேண்டியதில்லை. கவனியுங்கள். கவனியுங்கள். அதிசயம்!இப்பொழுது, இப்பொழுது இப்பொழுது கவனியுங்கள்.
செய்தி:-
ஏழு முத்திரைகளின் வெளிப்பாடு-ஐந்தாம் முத்திரை.
மேசியா
தோன்றும் போது,அவர் நேராக ஆலயத்துக்கு வந்து
'காய்பாவே நான் வந்துவிட்டேன்' என்று சொல்வார் என்று அவர்கள் நினைத்திருக்கக்கூடும்.
அல்லது ஒருகோடி தேவதூதர்கள் அவரை வணங்கிய வண்ணம் அவர் தோன்றுவார் என்றும்,தேவன்,'பூமியிலுள்ள
ஜனங்களே, நீங்கள் ஒரு மகத்தான சபை,நீங்கள் என் ஜனம். நான் யந்திரக் கைப்பிடியைச் சுழற்றி
வானத்தின் தாழ்வாரங்களைக் கீழே இறக்கப் போகிறேன்.இன்று காலை மேசியாவை உங்களுக்கு அனுப்புவேன்.அவர்
உங்கள் முற்றத்தில் நேராக இறங்குவார்' என்று சொல்வார். அப்பொழுது அங்கு சூழ்ந்திருக்கும்
ஜனங்கள்,'டாக்டர் பட்டம் பெற்றவர்களே, நீங்கள் முன்னால் நின்று இயேசுவுக்கு முதலில்
வரவேற்பு கொடுங்கள்' என்று சொல்வார்கள் என்றெல்லாம் அவர்கள் நினைத்திருப்பார்கள்.
ஒருக்கால்
இன்றைக்கும் அவர்கள் அவ்வாறு நினைக்க வழியுண்டு.நான் கூறுவது கொடூரமாகக் காணப்படலாம்.
ஆனால் ஒரு முக்கியமான விஷயத்தைக் கூற நான் முயல்கிறேன்.
'நாங்கள்
நினைத்தவண்ணமே அது நடக்கவேண்டும்;நாங்கள் நினைத்ததற்கு மாறாக அது நடந்தால்,அது அந்திகிறிஸ்துவின்
கிரியையாகும்' என்று அவர்கள் எண்ணுகின்றனர்.பாருங்கள்? மேலும் அவருடைய இரண்டாம் வருகையில்
ஒரு கோடி தேவதூதர்கள் மேளம் அடித்துக் கொண்டு வணங்க,மரித்தவரும் இவர்களும் பரிசுத்தவான்களும்
(Saints) புத்திமான்களும் (Sages) மரித்த இடமாகிய இந்த புனித ஸ்தலத்தில் சுற்றி அங்குமிங்குமாக
உலாவுவார்கள் என்று கற்பனை செய்கின்றனர். (மத்.23:29-32)
அவருடைய
தோற்றம் அவர்கள் கொண்டிருந்த கருத்துக்களை அதிகமாக பாதித்தது.பாருங்கள்? அவர்களுடைய
கல்வி அறிவு அதை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.வேதத்தைப்பற்றி அவர்கள் கொண்டிருந்த கருத்துக்கள்,அவர்
எவ்விதம் தோன்றுவா ரென்பதை அறிந்து கொள்ளவே முடியவில்லை. ஆயினும் அவர் கர்த்தர் உரைத்த
விதமாகவே தோன்றினார். ஓ என்னே!.
அதை நினைக்கும்போதே
எனக்கு நடுக்கம் உண்டாகிறது.அதே சம்பவம் இப்பொழுது மறுபடியும் நிகழ்வதை காணும்போது....
தேவன் ஒரு போதும் மாறாதவராயிருக்கிறார்.
செய்தி:-
தேவன் எளிமையில் மறைந்திருந்து, அதன்பின் அவ்விதமே தம்மை வெளிப்படுத்துதல். பக்கம்:69,70 பாரா:268,269,270,273.
அவள்,''மேசியா
வருகிறாரென்று அறிவேன். அவர் வரும் போது இவைகளைச் செய்வார்" என்றாள். அப்பொழுது
அவர், "உன்னுடனே பேசுகிற நானே அவர்" என்றார். பவுலிடமும் மற்றவர்களிடமும்
அவர் கூறினார். கவனியுங்கள்.இப்பொழுது சபை முதன்மையான உயர்ந்த ஸ்தானத்தை கொண்டிருக்கிறது.
தேவனுடைய
மகத்தான இரகசியம் எப்பொழுதுமே உலக ஞானத்தை குருடாக்குகினது.அவர்களால் அதை புரிந்துக்கொள்ள
முடியாது.அவர்கள் அதை புரிந்து கொள்வதில்லை.அதை-அதாவது எப்படி தேவனும் கிறிஸ்துவும்
ஒருவரே என்பதை-முன்குறிக்கப்பட்டவர் மாத்திரமேயன்றி வேறு யாறும் புரிந்துக் கொள்வதில்லை.
அவர்கள் ஒவ்வொரு முறையும் அவரை மூன்றாக ஆக்கிவிடுகின்றனர்.பாருங்கள்? அவர்கள் அப்படி
செய்வது நிச்சயம்.
கவனியுங்கள்,இரண்டாவதாக,கிறிஸ்து
மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருந்துக் கொண்டு வெளிப்படுதல்.அந்த மகத்தான வெளிப்படுத்தப்பட்ட
தேவன் கிறிஸ்துவுக்குள்,இப்பொழுது கிறிஸ்து உங்களில் வெறிபடுத்தப்படுகிறார்.
நாம்
துரிதமாக கடந்து செல்வோம்,பாருங்கள்! ஒரு காலத்தில் தேவனுடைய மகத்தான இரகசியம், தம்முடைய
சிந்தையில் இருந்த மகத்தான இரகசியங்கள்,இப்பொழுது விசுவாசியின் இருதயங்களில் வைக்கப்பட்டிருக்கின்றது,
அதாவது,கிறிஸ்துவினுடைய சரீரத்தில் ஒரு காலத்தில் தேவனுடைய மகத்தான இரகசியமாக உலகத்
தோற்றத்திற்க்கு முன்னர் தம்முடைய சிந்தையில் இருந்த ஒன்று,இப்பொழுது வெளிப்படுத்தப்படுகின்றது.
அதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள் ! பாருங்கள்? ஓ, என்னே! ஓ நான்....
ஓ, அதை
நாம் புரிந்துக்கொள்ளவில்லையென்று நிச்சயமாக எனக்குத் தெரியும். நல்லது,எவ்விதமாக அதை
நான் காண வேண்டுமோ அவ்விதமாக என்னால்-என்னால் அதை காண முடியவில்லை. ஆகவே? ஆகவே உங்களால்
முடியவில்லை என்று நிச்சயமாக தெரியும்.பாருங்கள்?
ஆனால்
தேவனுடைய மகத்தான இரகசியம், ஒரு இரகசியமாக நித்திய தேவன் எதை வைத்திருந்தாரோ, இப்பொழுது
அது இயேசு கிறிஸ்துவுக்குள் வெளியரங்கமாக்கப்பட்டு பிறகு சரியாக தம்முடைய சபைக்கு அளிக்கப்பட்டிருக்கின்றது.ஒரு
காலத்தில் தேவனுடைய சிந்தையிலிருந்தவை,இப்பொழுது கிறிஸ்துவின் சரீரத்திலிருக்கிறது.
இயேசு தமது மணவாட்டியாகிய சபையை நோக்கி காதல் செய்து, இரகசியங்களை குசுகுசு வென்று
அவளிடம் மெல்லப் பேசிக்கொண்டிருக்கிறார்.
நீங்கள்
விவாகம் செய்ய வேண்டுமென்று தீர்மானித்துள்ள பெண்ணிடம் உங்கள் இரகசியங்களை எப்படி சொல்வீர்கள்?
அவளை நீங்கள் அதிகமாக நேசிக்கிறீர்கள். அவளை உங்கள் பக்கத்தில் உட்காரவைத்து, அவளை
நீங்கள் சிநேகிப்பதாக கூறிவிட்டு, அவளிடம் உங்கள் அந்தரங்க இரகசியங்கள் குசுகுசு வென்று
கூறுவீர்கள் அல்லவா? அது எப்படியிருக்குமென்று உங்களுக்குத் தெரியும்.
அதைத்தான்
கிறிஸ்து சபைக்குச் செய்துக்கொண்டிருக்கிறார். பாருங்கள்? அவள் இரகசியங்களை, இரகசியங்களை
மாத்திரம் அறியும்படி செய்கிறார்-எல்லோரிடமும் சல்லாபம் செய்யும் பெண்களிடமல்ல - அவருடைய
மனைவியிடம். பாருங்கள்? அது சரி. இப்பொழுது கவனியுங்கள்.இல்லை, தம்முடைய கிருபையினால்,தம்முடைய
இரகசியத்தைக் குறித்த வெளிப்பாட்டை அவர்களுக்கு தெரியப்படுத்துக்கின்றார்! எப்படி தேவனுடைய
கிருபை! ஜனங்களே, எனக்குத் தெரியும்.... இது மாத்திரம் தனிப்பட்ட விதத்தில் கூறப்படுவதாக
நீங்கள் எண்ண வேண்டாம். தேவன் தமது இரகசியத்தை முழு சபையிடம் பகிர்ந்து கொள்கிறார்-அவர்கள்
அதை ஏற்றுக் கொள்வார்களானால். பாருங்கள், அது எனக்கும் உங்களுக்கும் மாத்திரம் என்றல்ல.
அவர்-அவர் உள்ளே நுழைய முயன்று கொண்டிருக்கும் சபை முழுவதற்குமே இது உரியது.
"அவர்கள்
ஏன் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர்?" என்று நீங்கள் கேட்கலாம்.அவர்களால் ஏற்றுக்கொள்ள
முடியாது.அவர், இந்த காரியங்களை மறுபடியும் கூறினர். "ஆகவே எப்படி அவர்களால்?"
ஏனெனில் அவர்களால் அதை காணமுடியாது என்று ஏசாயா கூறினான். பாருங்கள்?ஆகவே அவர் எப்பொழுதுமே
கூறியுள்ளார்.
செய்தி:
கிறிஸ்து தேவனுடைய பரமரகசியத்தின் வெளிப்படுதலாயிருக்கிறார்.
பக்கம்:113,114,115 பாரா:392,393,394,395,396,397,398,399.
150.
நல்லது,மாய்மாலக்காரனே1உனக்கு என்ன நேர்ந்தது? வஞ்சிக்கப்பட்ட பிள்ளையே,நீ சுவிசேஷத்தை
விட்டு வெகுதூரம் அகன்று சென்று விட்டாய்.அது மிகவும் பரிதாபம்.நீ சேறு நிறைந்த பாதைக்கு,எரிந்து
கொண்டிருக்கும் குவியலுக்கு வழி திருப்பப்பட்டிருக்கிறாய்.அவர் என்ன கூறியுள்ளார் என்பதை
உன்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இயேசு கிறிஸ்து இப்பொழுது மாம்சத்தில் தோன்றவில்லை
என்று அறிக்கை பண்ணும் ஒவ்வொரு ஆவியும் தவறான ஆவியாகும்.இயேசு கிறிஸ்து நேற்றும்,இன்றும்,என்றும்
மாறாதவராயிருக்கிறார் என்று வேதம் கூறுகின்றது.அவர் அன்று என்ன சொன்னாரோ,அப்படியே இன்றும்
இருக்கிறார்.அவர் என்றும் அவ்வாறே இருக்கிறார். கவனியுங்கள் .
செய்தி:-
புத்திரசுவிகாரம்-பாகம்-3
326.
நான் கண்டதையும் எனக்கு அறிவிக்கப் பட்டதையும் மாத்திரமே நான் உரைக்கிறேன்.நீங்கள்
என்ன வேண்டுமானாலும் செய்யலாம். செய்யப் போகின்றது யார்...என்ன நடக்குமென்று எனக்குத்
தெரியாது. ஆனால் ஒன்றை நானறிவேன்-அதாவது அந்த ஏழு இடிகளும் பரலோகம் அமைதியான காரணத்தின்
இரகசியத்தை தங்களுக்குள் வைத்துள்ளன. எல்லோருக்கும் புரிந்துவிட்டதா?(சபையோர் “ஆமென்” என்று
கூறுகின்றனர்)அந்த மகத்தான நபர் தோன்ற நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோமே, அவர்
தோன்றும் நேரம் இப்பொழுதாக இருக்கலாம்.
327. ஜனங்களை தேவனுடைய வார்த்தைக்குத் திருப்ப முயன்ற
என்னுடைய ஊழியம் ஒருக்கால் அதற்கு அஸ்திபாரமாக அமைந்திருக்கும்.அப்படியானால்,நான் உங்களை
விட்டு ஒரேயடியாகச் செல்ல நேரிடும். ஒரே சமயத்தில் நாங்கள் இருவர் இருக்க முடியாது.
பாருங்கள்? அப்படி இருக்க நேர்ந்தால்,அவர் பெருக வேண்டும்,நான் சிறுக வேண்டும். எனக்குத்
தெரியாது.
செய்தி:-ஏழாவது
முத்திரை.
41. ஆகவே அந்த முத்திரைகள் உடைக்கப்பட்டு,தேவ ரகசியம்
வெளிப்படுகையில்,அந்த தூதன்,அந்த செய்தியாளன்,கிறிஸ்து கீழே இறங்கி வந்து தம்முடைய
பாதத்தை பூமியின் மேலும் சமுத்திரத்தின் மேலும் வைக்கின்றார்.அவருடைய சிரசின் மேல்
வானவில் இருந்தது. பலமுள்ள தூதன் பூமிக்கு இறங்கும் இந்த வருகையின் நேரத்தில் இந்த
ஏழாம் தூதன் பூமியில் ஏற்கனவே இருக்கிறான் என்பது நினைவிருக்கட்டும்.
42. யோவான்
செய்தியைக் கொடுத்துக் கொண்டிருக்கும்போது, அதே சமயத்தில் மேசியா வந்ததற்கு இது ஒத்திருக்கிறது.இயேசுவை
அறிமுகப்படுத்துவதற்காக தான் குறிக்கப்பட்டவன் என்பதை யோவான் அறிந்திருந்தபடியால்,தான்
அவரைக் காண்பான் என்பது அவனுக்கு நன்றாகத் தெரியும்.
செய்தி:-
ஏழு சபையின் காலங்களுக்கும் ஏழு முத்திரைகளுக்கும் இடையேயுள்ள பிளவு.
இக்காலத்திலும்
கர்த்தர் மனிதரின் இருதயங்களிலுள்ள ரகசியங்களை வெளிப்படுத்துகிறார் என்பதை நீங்கள்
அறிந்திருக்கிறீர்களா? வார்த்தையேயன்றி, இருதயத்திலுள்ள ரகசியங்களை வேறு யார் வெளிப்படுத்தக்கூடும்?
எபி.4:12. வார்த்தை வல்லமையுள்ளதா யிருப்பதால்,வார்த்தையாகிய இயேசுவில் இருந்த அதே
ஆவி இக்கடைசிகாலங்களில் சபையில் காணப்பட்டு,மக்களை நியாயத்தீர்ப்பினின்று விடுவிக்க
கடைசி அடையாளமாகக் கொடுக்கப்பட்டி ருக்கிறது. மக்களின் இருதயங்களிலுள்ள எண்ணங்களை அறிவதே
இக்கடைசிகாலத்தின் அடையாளம். இவ்வடையாளத்தைக் கண்டும் விசுவாசமற்று, வார்த்தையாகிய
இயேசுவைப் புறக்கணிக்கிறவர்கள், இப்பொழுதே நியாயத் தீர்ப்புக்குட்படு கின்றனர்.எபி.6:6.
செய்தி:-
ஏழு சபைக்காலங்களின் வியாக்கியானம்
120. நாம் நினைக்கும் வண்ணம் பகட்டான காரியங்களில் அல்ல,
எளிமையான காரியங்களில் தேவன் தத்ரூபமாக காணப்படுகிறார். எனவே,தேவன் தம்மை வெளிப்படுத்தி,பின்பு
மறைந்து கொள்வதில் பிரியம் கொள்கிறார். அதேவிதமாக தம்மை மறைத்துக்கொண்டு சாதாரணமாகமாக
சிறு காரியங்களில் தம்மை வெளிப்படுத்துகிறார். அது மனிதனின் தலைக்குமேல் சென்று விடுகிறது.
….
122. ஆகவே,எளியவர்கள் கண்டுகொள்ளத்தக்கதாக தேவன் தம்
கிரியைகள் எல்லாவற்றையும் எளியவிதத்தில் அமைத்திருக்கின்றார். சாதாரணமானவர்கள் தம்மை
அறிந்து கொள்ள வேண்டுமென்று கருதி, தேவனும் எளியவர்களிடத்தில் எளியவராகி விடுகிறார்.
ஏசாயா 35-ம் அதிகாரத்தில்,”பேதையராயிருந்தாலும் திசைக்கெட்டுப்போவதில்லை” என்று
எழுதப்பட்டுள்ளது. அது அவ்வளவு எளிமையானது.
123. தேவன் மகத்தானவர் என்று நாம் அறிந்துள்ளோம். ஆதலால்
அவருடைய காரியங்களை ஏதோ ஒரு மகத்தான காரியமாக இருக்கும் என்று நாம் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
அதன் காரணமாக சாதாரண, எளிமையான காரியங்களை நாம் இழந்து விடுகிறோம். எளிமையைக் கண்டு
நாம் இடறிப் போகிறோம்.அவ்வாறேதான் நாம் தேவனை காணமுடியாமல் தவறவிட்டுவிடுகிறோம். அதாவது
எளிமையைக் கண்டு இடறி விழுவதால்தான்.தேவன் மிகவும் எளிமையாய் இருப்பதன் காரணமாக இக்காலத்திலும்,எல்லா
காலங்களிலுமுள்ள ஞானிகள் அவரை இலட்சக்கணக்கான மைல்கள் இழந்து போகின்றனர்.ஏனெனில் தேவனைவிட
மகத்தானவர் யாருமில்லை என்பதனைத் தங்கள் அறிவுக் கூர்மையால் அவர்கள் அறிந்துள்ளனர்.
ஆனால் அவருடைய வெளிப்படுதலில்,அவர் அதை மிக எளிமையாக்குவதால்,அவர்கள் இடறி விழுந்து
அவரைக் காணத் தவறினர்.
124. இப்பொழுது நீங்கள் அதனை ஆராய்ந்து பாருங்கள். இவைகள்
எல்லாவற்றையுமே ஆராய்ந்து பாருங்கள். இங்கு காண வந்திருப்பவர்களே, உங்கள் அறைகளுக்குச்
சென்றவுடனே இங்கு கூறப்பட்டவைகளை நன்றாக ஆலோசித்துப் பாருங்கள். இதை விவரிக்க வேண்டிய
அளவுக்கு விவரிக்க நமக்கு சமயம் போதாது. ஆயினும், நீங்கள் அறைகளுக்குச் சென்ற பிறகு
இவையெல்லா வற்றையும் ஒன்றாகப் பிணைத்து அதனை தியானிக்க வேண்டுமென்றே நான் விரும்புகிறேன்.
125. அவர் தம்மைத்தாமே வெளிப்படுத்தும் விதத்தில் அவரைக்
காணத் தவறுகின்றனர்;ஏனெனில் அவர் மிகவும் மகத்தானவர், ஆனாலும் எளியவர்களுக்கு தம்மைத்தாமே
வெளிப்படுத்தும் பொருட்டாக அவர் தம்மை எளிமையில் மறைத்துக் கொள்கின்றார். எளிய முறையில்
மறைந்திருக்கிறார்,பாருங்கள்? பெரியவைகளில் அவரைக் காண நினையாதீர்கள்.ஏனெனில் அவர்
அவைகளைத் தாண்டிச் சென்று விடுகிறார். தேவனுடைய எளிமையைக் கூர்ந்து கவனியுங்கள்.அப்பொழுது
தேவனை சரியாக – எளிமையான விதத்தில் இங்கேயே தேவனைக் கண்டுகொள்வீர்கள்.
செய்தி:-
தேவன் எளிமையில் மறைந்திருந்து அதன்பின் அவ்விதமே தம்மை வெளிப்படுத்துதல்
41. அவர்கள் மேசியாவுக்காக ஜெபம் செய்து கொண்டிருந்தனர்.
அவர்களுக்கு மேசியா அவசியமாயிருந்தது. ஆனால் காரியம் என்னவெனில், அவர்களுக்கு விருப்பமான
வழியில் அவரைப் பெற அவர்கள் விரும்பினர்.தேவன் தமது சொந்த வழியில் அவரை அனுப்பினார்,அவர்களோ
அவரைப் புறக்கணித்தனர்.
42. இன்றைக்கும்
அவர்கள் அதையே செய்கின்றனர்.அவர்கள் மறுபடியும் அவரைப் புறக்கணிக்கின்றனர்.அன்று அவர்கள்
செய்த அதையே இன்று செய்கின்றனர்.ஏன்? அதே காரணம் தான்,அதே காரணம்.அவர் அப்பொழுது வந்தார்,அவர்
வந்தாரென்று நாமறிவோம்.அவர் அவர்களிடம் வந்தார்,ஆனால் அவர் எவ்வாறு வரவேண்டுமென்று
அவர்கள் விரும்பினார்களோ,அவ்விதமாக அவர் வரவில்லை. இன்றைக்கும் தேவன் ஒன்றை நமக்கு
அனுப்பும்போது,அது நமக்கு வேண்டாம்.நமது ஸ்தாபன ருசியை அனுசரித்து அது வருவது கிடையாது.நமது
வேதசாஸ்திர கருத்துக்களுடன் பொருந்தும் வண்ணம் அது வருவதில்லை.ஆனால் அதற்காகத்தான்
நாம் ஜெபித்து வந்தோம். தேவனுக்கு முன்பாக நாம் ஏறெடுத்த அந்த விண்ணப்பத்துக்கு செவிகொடுத்து
தேவன் அதை நமக்கு அனுப்பினார்,நாமோ அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறோம்.
92. தேவன் அவர்கள் மேல் அனுப்பினார்;1963-ல் நம்மேல்
அனுப்பினார்.தேவன் துவக்கத்தில் அனுப்பின அதே அபிஷேகத்தை 1963-ல் நம்மேல் அனுப்பினால்,அவர்களைப்போல்
நாமும் அதைப் புறக்கணிப்போம்.ஏனெனில் அபிஷேகம் பண்ணப்பட்ட மேசியா சபைக்கு வருவாரானால்,அவர்
எப்படியிருந்தார் என்று வேதம் கூறுகிறதோ இப்பொழுதும் அப்படியேயிருப்பார்.’’இயேசுகிறிஸ்து
நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்”என்று எபிரேயர் 13:8 உரைக்கின்றது.நாம்
ஒரு மேசியாவுக்காக? அபிஷேகம் பண்ணப்பட்ட ஒருவருக்காக - ஜெபிப்போமானால்,நமக்கு என்ன
வேண்டும்? மதசம்பந்தமான அரசியல்வாதியா? நமக்கு இராணுவ மேதையா வேண்டும்? நமக்கு படித்த
விஞ்ஞானியா வேண்டும்? உங்களுக்கு ஆட்டுக்குட்டி
அவசியம்-தனக்கு மகிமையை எடுத்துக்கொள்ளாமல், உங்களை வார்த்தைக்கு திரும்பக் கொண்டு
செல்லும் ஆட்டுக்குட்டி.என்னாவாயினும் உங்களுக்கு சத்தியத்தை எடுத்துரைத்து அதில் நிலை
கொண்டிருக்கும் ஒருவர்;ஆனால் அவர்களுக்கோ அது வேண்டாம்.இன்றைக்கு அவர் வருவாரானால்,அவர்
முன்பிருந்ததைப்போல் இப்பொழுதும் இருப்பார்;அவர் பிதாவின் வார்த்தையில் அப்படியே நிலைத்திருப்பார்.வேதத்தில்
வாக்குத்தத்தம் செய்யப்பட்டுள்ள ஒவ்வொரு வசனமும் மனுப்புத்திரர்களுக்குள் வெளிப்படுகின்றதா
என்று அவர் உறுதி கொள்வார்.அது நிச்சயம்.
94. இன்றைக்கும் அவ்வாறே இருக்கும் மேசியா வருவாரானால்,அவர்
தேவன் வேதத்தில் வக்குத்தத்தம் செய்துள்ளவைகளை எடுத்து,அதை மனுப்புத்திரருக்கு முன்பாக
வெளிப்படுத்திக் காண்பிப்பார்.ஆனால் ஸ்தாபனங்கள் ஒவ்வொன்றும் அவரைப் புறக்கணிக்கும்.அவர்களுக்கு
அது வேண்டாம்.அவர்கள் அதனுடன் எவ்வித தொடர்பு கொள்ளவும் மாட்டார்கள்.ஆனால் அதைத் தான்
தேவன் அவர்களிடம் அனுப்புவார். அவர் எதையாவது அவர்களுக்கு அனுப்புவாரானால்,அது அதுதான்.
அவர்கள் அதைக் குற்றப்படுத்தி தங்கள் மீது ஆக்கினையை வருவித்துக் கொள்வார்கள்.அந்த
நாளில் யூதர்கள் செய்தது போல,இந்த மானிட வர்க்கமும் அதைச் செய்யும்,ஆம் ஐயா.
அவர்
என்ன செய்வார் தெரியுமா? மேசியா 1963-ல் வருவாரானால், அவர் என்ன செய்வார் தெரியுமா?
அவர் நாம் பெற்றுள்ள ஒவ்வொரு ஸ்தாபனத்தையும் தகர்த்தெறிவார்.அதை தரைமட்டமாக்கி விடுவார்.
102. எனவே நீங்கள் பிறந்துள்ள தேவனுடைய ராஜ்யம் உங்களுக்கு
அளிக்கப்படும்போது,நீங்கள் ஏன் ஸ்தாபனத்துடன் நுகத்தில் பிணைக்கப்படவேண்டும்? தேவனுடைய
ராஜ்யத்தில் மாய்மாலக்காரன் ஒருவன் கூட கிடையாது. எல்லோருமே ஆதியாகமத்திலிருந்து வெளிப்படுத்துதல்
வரைக்குமுள்ள தேவனுடைய வார்த்தையை விசுவாசித்து அதில் நிலைத்திருக்கும் தூய்மையான,கலப்படமற்ற
தேவனுடைய குமாரரும் குமாரத்திகளுமாவர். உங்கள் வாழ்க்கை அதை நிரூபிக்கிறது,தேவன் தமது
வார்த்தையை அதனுடன் உறுதிப்படுத்தித் தருகிறார்.அதுதான் மேசியா.அதுதான் மேசியாவின்
மனைவி.
தேவன்
அதில் போதகர்கள் மேய்ப்பர்கள்,தீர்க்கதரிசிகள் போன்றவர்களை வைத்து தமது மேசியாத்துவத்தை
நேராக வைத்து,அது எந்த ஸ்தாபனக் கோட்பாடுகளுடனும் கலவாமல் இருக்க,இவைகளைப் பிடுங்கியெறிந்து,சபையை
கிறிஸ்துவுக்கும் அவருடைய வார்த்தைக்கும் தூய்மையாகவும் கலப்படமற்றதாகவும் வைக்கிறார்.
செய்தி:-
உலகம் விழுந்து போதல். டிசம்பர் 16
-1962.
45. இப்பொழுதும்,நாம்
கடைசி நாட்களிலே,ஒரு தூதன் வருவதற்காக எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறோம். ஏனெனில்,இயேசு
அவ்வாறிருக்கும் என்று கூறினார். ஏனெனில் தீர்க்கதரிசிகள் அவ்வாறே இருக்கும் என்று
கூறியுள்ளனர்.மல்கியாவும் அவ்வாறே நடக்கும் என்று கூறியுள்ளான். அனைத்து தீர்க்கதரிசிகளும்
சாட்சியிட்டுள்ளனர்.இயேசுவானவர், சிலுவையில் அறையப்படுவதற்கு சற்று முன்னர்கூட,தான்
மரித்துப் போவதைக் குறித்து கூறியதைவிட, மேலதிகமாக,த ம்முடைய இரண்டாம் வருகையைக் குறித்தே
பேசினார். இவைகளெல்லாம் சம்பவிக்கத் தொடங்குவதை நாம் காண்கையில்,நாம் வேத வாக்கியங்களை
ஆராயப் போவது நமக்கு நலமாயிருக்கும்.ஏனெனில், கள்ளக் கிறிஸ்துக்களும், கள்ளத் தீர்க்கதரிசிகளும்
எழும்பி,கூடுமானால் தெரிந்துக்கொள்ளப்பட்ட வர்களையும் வஞ்சிக்கதக்கதாகப் பெரிய அடையாளங்களையும்
அற்புதங்களையும் செய்வார்கள் (மத்தேயு 24:24) என்று அவர் கூறினார்.
47. மனுஷகுமாரன்
வருவதற்கு சற்று முன்னால் உள்ள நாட்கள் சோதோமின் நாட்களுக்கு ஒப்பாக இருக்கும் என்று
இயேசு கூறினார். இவ்வாரத்தில் நாம் ஏற்கனவே பார்த்தது போல,அங்கே மூன்று வகையான மக்களுக்காக,
சோதோமுக்கு ஒரு தூதன் வந்தான்;மூன்று தூதர்கள் வந்தார்கள்.ஒரு சாரார்,சோதோமியர்கள்,
இரண்டாமவர் வெதுவெதுப்பான சபை,மூன்றாவதானவர்கள் வெளியே பிரித்து அழைக்கப்பட்ட சபையாகிய
தெரிந்து கொள்ளப்பட்டவர்கள். ஆபிரகாமும் அவனது குழுவினரும்,லோத்தும் அவனது குழுவினரும்,
சோதோமும் அவர்களது குழுவினரும்-இருவர் அங்கே சென்றனர். அச்சுவிசேஷகர் சோதோமுக்குள்
சென்றார்; விசுவாசிகளாகிய அம்மக்களை வெளியே கொண்டு வருவதற்காக அங்கே சென்றார்.அவர்களில்
சிலரை வெளியே கொண்டு வந்தார்.
48. ஆனால்,தெரிந்துக்கொள்ளப்பட்ட
சபையோடு பிந்தி தனித்திருந்த அந்த ஒருவரோ,ஒரு அடையாளத்தைக் காண்பித்தார் என்று நாம்
காண்கிறோம்.தேவன் தாமே அதைச் செய்தார்.அது ஒரு புராணக் கதையல்ல.அது ஒரு நிழலான சரீரமல்ல,அப்படிப்பட்ட
ஒரு நிழல் சரீரத்தால் புசிக்க இயலாது. அவரோ, கன்றுக்குட்டியின் மாமிசத்தைப் புசித்து
வெண்ணையோடு கூடிய அப்பத்தையும் புசித்தார்.பசுவின் பாலையும் குடித்தார்.ஒரு நிழல் சரீரமானது
புசிக்காது, குடிக்காது.அது தேவன் மாம்சத்திலே பிரத்தியட்சமானதாகும்.நிச்சயமாக அது அப்படித்தான்
இருந்தது.அவர் என்ன பேசிக் கொண்டிருந்தார்?”…அந்த நாளிலே இருந்தது போலவே இருக்கும்…”என்று
இயேசு கூறினார். தேவன்,தாம் கிரயத்துக் கொண்டு பரிசுத்தமாக்கிய தம்முடைய ஜனங்களுடைய
மாமிசத்துக்குள்ளே,மீண்டும் வருவார்.தமது தெரிந்து கொள்ளப்பட்ட சபைக்கு முன்பு அவர்
காண்பித்த அதே அடையாளத்தை இப்பொழுது தமது தெரிந்து கொள்ளப்பட்ட சபைக்கும் காண்பிப்பார்.
49. “அதை விட்டு
வெளியே வாருங்கள்” என்ற பிரசங்கம் இல்லை. இது,அது என்பதெல்லாம் ஒன்றுமில்லை அங்கே.ஆபிரகாம் ஏற்கனவே
அதைவிட்டு வெளியே தான் இருக்கிறான்.ஆனால் ஏனைய தூதர்களோ வெளியே வாருங்கள்,வெளியே வாருங்கள்
என்று அழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.சபையானது,சபை என்ற வார்த்தைக்கே ”பிரித்தெடுக்கப்பட்டவர்கள்” என்பது
பொருளாகும். தேவனுடைய சபையானது ஏற்கனவே பிரித்தெடுக்கப்பட்டதாக இருக்கிறது. அது பிரித்தெடுக்கப்பட்டதாக
இருக்கிறது.
50. அவர்
அவனுக்கு நான் தான் அவர் என்று கூறும் அடையாளத்தைக் கொடுத்தார்.அவர் அதைச் செய்தபொழுது,தனது
முதுகுப் பக்கமாக இருந்த சாராள் நகைத்ததைக் கூறினார்,அதே வல்லமையால் இயேசுவானவர் தம்முடைய
வருகையில்,சமாரியர்,யூதர் ஆகிய இரு சாராருக்குமே,அதே அடையாளத்தைச் செய்து காண்பித்தார்.இக்
கடைசி நாட்களிலே அவர் தம்முடைய தூதனை அனுப்புவார் என்பதாக முன்னுரைக்கப் பட்டுள்ளது.அத்தூதனானவர்
இன்றிரவிலே ஒரு மனிதனல்ல.இல்லை ஐயா,அவர் பரிசுத்த ஆவியானவர். அவர் தான் அவருடைய தூதன்.
அதெப்படியென்றால், தேவன் தம்முடைய வருகைக்கு சற்று முன்னதாக, தம்முடைய சபையிலே அசைவாடி,
அற்புதங்களையும் அடையாளங்களையும் காண்பித்துக் கொண்டிருக்கிறார்.
செய்தி:-
மரியாளின் விசுவாசம் ஜனவரி 21,1961.
104.
“இந்நாட்களில் பரிசுத்தாவியின் அபிஷேகம் என்று ஒரு காரியமே இல்லை.அது அப்போஸ்தலருக்கு
மட்டுமே உரியதாயிருந்தது.அது கடந்து போய்விட்டது.தீர்க்கதரிசிகள் என்ற ஒரு காரியமா?அப்படிபட்ட
ஒரு காரியமே அறியப்பட்டதல்ல.அற்புதங்களா?அவைகள் விஞ்ஞானப் பூர்வமானதல்ல.மல்கியா 4ம்
அதிகாரமா? அது வேறொரு காலத்திற்குரியது.யோவான்.14:12-ஆ? ஓ, இயேசு உண்மையில் அந்த அர்த்தத்தில்
சொல்லவில்லை.லூக்கா 17:30 ஆ? அது ஒரு கட்டுக்கதை.இவை தவறாக வியாக்கியானிக்கப்பட்டுள்ளன.அது
மூல வேதாகமத்தில் இல்லை” என்று இவ்வாறெல்லாம் கூறப்படுகிறது. இவ்விதமான அபத்தமான
காரியங்களையெல்லாம்,சர்வ வல்லமையுள்ள தேவன் நம் மத்தியில் இறங்கி வரும்பொழுது தவறானவை
என்று நிரூபிக்கிறார்.இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்
என்று தேவன் கூறும்பொழுது,அது சரியென்று அவர் நிரூபிக்கிறார்.மற்றவர் அதைப்பற்றி கூறாமற்
போனால் எனக்கு அக்கறையில்லை;தேவன் தமது சொந்த வார்த்தையை வியாக்கியானிக்கிறவராயிருக்கிறார்.இக்கடைசி
நாட்களில் இவைகளை செய்வதாக வாக்களித்திருக்கிறார். “…சாயங்காலத்தில் வெளிச்சம் உண்டாகும்…”என்று
அவர் வாக்களித்தப்படியே தேவனுடைய குமாரனை வெளிப்படுத்துவதற்காக வெளிச்சம் இப்பொழுது
இங்கே இருக்கிறது.
105.
கிழக்கில் உதிக்கும் அதே சூரியன்தான் மேற்கில் அஸ்தமிக்கிறது. “பகலுமல்ல,அது
இரவுமல்ல…(சகரியா.14:7) என்று தீர்க்கதரிசி கூறினார்.சூரியனை மேகங்கள் மறைத்து அதினால்
பொழுது மந்தாரமாய் இருக்கிற வேளை அது.” “…சாயங்காலத்தில் வெளிச்சம் உண்டாகும்..”என்று
கூறப்பட்டுள்ளது.அல்பாவும் ஒமேகாவுமாயிருக்கிற அதே குமாரன்,கிழக்கில் உதித்த அதே குமாரன்தான்.இக்கடைசி
நாட்களில்,நாளானது முடியுமுன்னர்,மீண்டும் மேற்கில் எழும்பப்போவதாக முன்னுறைக்கப்பட்டிருக்கிறது.அவர்கள்
இவ்வசனத்தை எவ்வாறு வியாக்கியானிக்கிறார்களோ எனக்குத் தெரியாது;ஆனால் தேவன் தமது சொந்த
வார்த்தையின் வியாக்கியானிக்கிறவராயிருக்கிறார்,அவர்
அதை நிரூபிக்கிறார்,இது சாயங்கால வேளையாயிருக்கிறது.
106.
வருந்தத்தக்கதான காரியம் என்னவெனில், கிறிஸ்துவின் மணவாட்டி யென்னப்படுகிறவள் மீண்டும்
அதற்கு (வஞ்சகத்திற்கு-ஆசி) இரையாகிவிட்டாள்.அவள் உறுதிப்படுத்தப்பட்ட சுத்தமான தேவனுடைய
வார்த்தையை விசுவாசிப்பதற்குப் பதிலாக,ஏதோ,சில வேதக்கல்லூரிப் பிரசங்கியின் மேதாவித்தனமான
அறிவை எடுத்துக் கொண்டு,விழுந்து விட்டாள்.
செய்தி:-
இப்பொல்லாத காலத்தின் தேவன் ஆகஸ்டு 1,
1965
116.
…இயேசு கிறிஸ்துவின் ஊழியம் இந்த கடைசி நாட்களில் மறுபடியுமாக மாம்சத்தில் அவருடைய
சபையில் வெளிப்படுத்தப்படுகிறது. அதைத்தான் நம்மில் அநேகர் விசுவாசிக்கிறோம்.உங்களோடு
சேர்ந்து நானும் அவ்வாறே விசுவாசிக்கிறேன்.இதை நான் விசுவாசிக்காவிட்டால், இதைக்குறித்து
வேறெதாவதொன்றைச் செய்வேன்.ஏனெனில் இதில் சம்பந்தப்பட்டவன் நானே.தேவனுடைய ஆவியானவர்
உங்களில் வாசம் செய்தால் நீங்கள் ஜனங்களுக்காக கவலை கொள்பவராயிருப்பீர்கள்.
121. என்னுடைய ஜீவனத்திற்காக நான் பிச்சையெடுக்க நேரிட்டாலும்,
அல்லது வேறெந்த நிலைமை வந்தாலும்,ஜனங்களுக்கு சத்தியத்தை எடுத்துரைப்பதில் நான் தேவனுக்கும்
ஜனங்களுக்கும் உத்தமமாக இருப்பேனாக! நான் ஒருபோதும் வஞ்சகனாக இருக்கவேண்டாம்.நான் நேசிக்கிறவர்களை
எப்படி வஞ்சிக்க முடியும்? அவர்களுடைய மனதை நான் புண்படுத்த நேரிட்டாலும்,அவர்களை நான்
நேசிக்கிறேன்.உங்கள் பிள்ளையை நீங்கள் அடித்து வளர்க்கும் காரணம்,நீங்கள் அவனை நேசிப்பதால்தான்.அவன்மேல்
உங்களுக்குப் பிரியம் இல்லை என்பதனால் அல்ல,நீங்கள் அவனை நேசிக்கிறீர்கள் என்பதனால்தான்.
அவன் தவறாயிருந்து, அவனை நீங்கள் திருத்தாவிட்டால், அவன் கொலை செய்யப்படுவான்.
122.
ஊழியமும் அவ்வாறே இருந்து வந்துள்ளது.அன்று இருந்தது போலவே,இன்றும் இருந்தது வருகிறது.
அது பிரசங்கிக்கப்பட்டு தேவனுடைய வார்த்தையினால் திட்டவட்டமாக உறுதிப் படுத்தப்பட்டுள்ளது.இது
தேவனாயிருக்கவேண்டும் என்பதை அது ஊர்ஜிதப்படுத்து கின்றது.அது அப்படித்தான் இருக்க
வேண்டும்.
கவனியுங்கள்.இயேசு
செய்த அதே ஆவிக்குரிய அடையாளங்கள் இந்தக் கடைசி நாட்களில் பூமியில் மீண்டும் சம்பவித்துள்ளது.எந்த
ஆவிக்குரிய அடையாளத்தினால் அவர் தம்மை மேசியாவென்று அடையாளம் காண்பித்தாரோ,அதே ஆவிக்குரிய
அடையாளம் இன்றைக்கும் அவரை அடையாளம் காண்பித்துவிட்டது.அவர் இன்னமும் மேசியாவாக இருக்கிறார்.
123.பரி.பவுல்
கண்ட அதே அக்கினி ஸ்தம்பம்,இன்றைக்கும் புலப்படக்கூடிய அடையாளமாக பூமியில் தோன்றி,தம்மை
யாரென்று காண்பித்துள்ளது-அதே அக்கினி ஸ்தம்பம்.அது அதே தன்மைகளுடன் தோன்றி,அதே கிரியைகளை
செய்து கொண்டிருக்கிறது……
214.முன்குறிக்கப்பட்ட
சபைக்கு நான் பேசிக்கொண்டிருக்கிறேன். வெளியிலிருப்பவர்களுக்கு அல்ல. இல்லை,ஐயா.ஒவ்வொரு
கூட்டத்தா ரிலிருந்தும்,தமது முன்குறிக்கப்பட்டவர்களை அவர் வெளியே இழுத்து விடுகிறார்.அவர்களுக்காகத்தான்
அவர் ஒவ்வொரு காலத்திலும் வருகிறார்.
செய்தி:-இப்பொழுது
காவலிலுள்ள ஆத்துமாக்கள். நவம்பர்
10,1963.
57.இப்பொழுது
கவனியுங்கள்.நித்திய மகத்துவமான வரும், இயற்க்கைக்கு அப்பாற்பட்ட தேவனுமானவர் முதலில்
ஆவியாய் இருந்தார்.மாம்சத்தில் வெளிப்படு வதற்காக, இரண்டாவதாக வார்த்தையென்னும் சரீரமாகிய
ஆவிக்குரிய சரீரத்தில் தியோபனி (theophany) தோன்றினார். மெல்கிசேதேக்காக ஆபிரகாமை சந்தித்தபோது
இவ்விதமான சரீரத்தில்தான் இருந்தார்.அவர் தியாபனி உருவில் இருந்தார்.கர்த்தருக்கு சித்தமானால்
இன்னும் சில நிமிடங்களுக்குள் இதை நிரூபிப்போம்.அவர் வார்த்தையாக இருந்தார்.
58. ‘தியாபனி
(theophany) யென்னும் தியாபனி உருவில் சரீரத்தை நீங்கள் பார்க்க முடியாது.அது இப்பொழுது
இங்கே இருக்கக்கூடும். ஆயினும் அதை நீங்கள் காணமுடியாது. அது டெலிவிஷனைப் போல இன்னொரு
பரிமாணத்தில் (dimension) உள்ளது. ….
160.
சோதோமில் இருக்கும் மக்களை நோக்கிப் பாரூங்கள்.அங்கே அவர்களுடைய செய்தியாளர்கள் அவர்களுடன்
பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால்
ஆபிரகமுடைய ராஜரீக வித்து எங்கே இருந்தது? “சோதோம் நாட்களில் நடந்தது போல” என்று
சொல்லும் போது அதற்குரிய அடையாளம் என்ன? தேவன் மாம்சத்தில் வந்து தன்னை வெளிப்படுத்தினார்.
தன்னுடைய முதுகிற்கு பின்னால் இருந்த கூடாரத்திற்குள் இருந்த சாராள் தன்னுடைய இருதயத்தில்
நினைத்ததை அவர் பகுத்தறிந்து கூறினார்.புறஜாதியாரின் உலகம் அழிக்கப்படுவதற்கு முன்
கொடுக்கப்பட்ட கடைசி அடையாளம் அதுவே.தேவனுடைய கோபத்தினால் புறஜாதியாரின் ஆட்சியிலுள்ள
இந்த முழு உலகம் அக்கினியால் அழிக்கப்படுவதற்கு முன் சபையானது அதின் கடைசி அடையாளத்தை
பெற்றுவிட்டது.நீ இதை விசுவாசிக்கிறாயா? (சபையார் “ஆமென்” என்று கூறுகின்றனர்-ஆசி)
161.
மெல்கிசேதேக்கு தன்னை ஒரு மனுஷ சரீரத்தின் அடையாளமாக வெளிப்படுத்தினான்; அதன் பிறகு
அவர் மாம்சமானார், இப்பொழுது, இந்த இரவிலே, அவர் நேற்றும்,இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்.
நீ இதை விசுவாசிக்கின்றாயா? (சபையார் “ஆமென்” என்று கூறுகின்றனர்-ஆசி).
162.
அப்படியென்றால், நேற்றும்,இன்றும்,என்றும் மாறாதவராயிருக்கும் இந்த மெல்கிசேதேக்கு
யார்? அவனுக்கு தகப்பனும் கிடையாது,தாயும் கிடையாது; அவனுக்கு நாட்களின் துவக்கம் கிடையாது,நாட்களின்
முடிவும் கிடையாது.அவன் ஆபிரகாமை சந்தித்த போது எவ்விதமான அடையாளத்தை செய்தான்? அவர்
மாம்சத்தில் வந்தபோது,கடைசி காலத்தில் அச்சம்பவம் மறுபடியும் நடக்கும் என்று கூறினார்.
நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? நான் அதை விசுவாசிக்கிறேன் ! …..
செய்தி:-
யார் இந்த மெல்கிசேதேக்கு ? பிப்ரவரி 21, 1965.
368.
உங்களைச் சற்று புண்படுத்த எண்ணுகிறேன்.வேண்டுமென்று நான் அப்படிச் செய்யப்போவதில்லை.பாருங்கள்?
நீங்கள் நன்றாக புரிந்துக் கொள்ள வேண்டுமென்ற காரணத்தால்தான் ஒன்று அல்லது இரண்டு நிமிடங்களுக்கு
நான் அங்ஙனம் செய்ய முற்படுகிறேன்.உங்களுக்கு புரிகிறதா? (சபையார் ‘ஆமென்’ என்கின்றர்-ஆசி)
கவனியுங்கள் ? ஏன்?.
369.
யோவானின் ஊழியத்தில் மனந்திரும்பின சீஷர்கள்தான் இப்பொழுது இயேசுவுடன் கூட நடந்தது
“எலியா முதலில் வந்து எல்லாவற்றையும் சீர்படுத்த வேண்டுமென்று வேதம் ஏன் கூறுகின்றது?
போதகர் ஏன் கூறுகின்றனர்” என்று கேட்கின்றனர்.அவர்கள் அவனை அறிந்துகொள்ள முடியவில்லை.நான்
சொல்வதன் அர்த்தம் உங்களுக்குப் புரிகிறதா? பாருங்கள்? ஒரு சில பேருக்கு மாத்திரமே
யோவான் ஸ்நானன்தான் எலியா என்பது வெளிப்படுத்தப்பட்டது.பாருங்கள்? அவர்கள் மாத்திரமே
அந்த உண்மையை ஏற்றுக் கொள்ளவும் அறிந்து கொள்ளவும் நியமிக்கப்பட்டிருந்தனர்.
370.
“எலியா முதலில் வந்தாயிற்று.நீங்கள் அதை அறியவில்லை என்று இயேசு சொன்னார்.ஆயினும்
அவன் செய்யப்போவது என்ன என்று வேதம் கூறிய அனைத்தையும் அவன் செய்து முடித்தான்.நீங்கள்
என்னை ஏற்றுக் கொண்டு விசுவாசிக்க,அவன் உங்களைத் திருப்பினான்.அவனுக்கு என்ன செய்யப்படும்
என்று வேதம் கூறியதையும் அவர்கள் அவனுக்கு செய்தனர்.அவன் ஏற்கனவே வந்தாயிற்று. நீங்களோ
அதை அறியவில்லை,”என்றார்.
371.
நீங்கள் ஆயத்தமா? உங்களுக்கு இப்பொழுது சற்று நடுக்கத்தை உண்டாக்க விரும்புகிறேன்.எடுக்கப்படுதலும்
அவ்விதமாக சம்பவிக்கும்.அது மற்றவர்கள் அறிந்துகொள்ள முடியாதபடி ஒரு சாதாரண சம்பவமாயிருக்கும்.
எடுக்கப்படுதல் (rapture) வரப்போகும் ஒரு நாளில் நிகழும்.யாரும் அது சம்பவித்துவிட்டது
என்று அறியவே மாட்டார்கள்.இப்பொழுது நீங்கள் எழுந்து போய்விட வேண்டாம்.நான் கூறுவதை
ஒரு நிமிடம் ஆலோசனை செய்து பாருங்கள்.நான் இப்பொழுது முடித்துவிடுகிறேன். எடுக்கப்படுதல்
ஒரு எளியவிதத்தில் சம்பவித்த பிறகு,நியாயத்தீர்ப்பு ஜனங்களின் மேல் விழும் அப்பொழுது
அவர்கள் மனுஷகுமாரனைக் காண்பார்கள்.அவரிடம், ‘எலியா எங்களுக்கு அனுப்பப்பட வேண்டுமா?
எடுக்கப்படுதல் சம்பவிக்க வேண்டுமே?” என்று கேட்பார்கள்.
372.
அவர் அதற்கு பிரதியுத்தரமாக, ‘அவையெல்லாம் ஏற்கனவே சம்பவித்துவிட்டன, நீங்கள் அதை
அறியவில்லை’ என்பார். தேவன் எளிமையில் காணப்படுதல். பாருங்கள்?
376.
சபையானது ஆயிரக்கணக்கான பேர்களை கொண்டதாயிருக்கும். ஆனால் அவர்கள் இரண்டாவது உயிர்த்தெழுதலின்
பிறகுதான் வருவார்கள்.அவர்கள் ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடைவதில்லை. பாருங்கள்?.
377.
இந்த நிமிடத்தில் 500 பேர் பூமியை விட்டுச் சென்றால்,உலகத்தினர் அதைக் குறித்து ஒன்றுமே
அறிந்து கொள்ளமுடியாது.இயேசு, ‘படுக்கையில் படுத்திருக்கும் இருவரில் ஒருவன் எடுத்துக்
கொள்ளப்படுவான்,மற்றவன் கைவிடப்படுவான்’ என்றார்.அது இரவில் நிகழ்கின்றது. ‘வயலில்
இருவர் வேலை செய்து கொண்டிருப்பார்கள் (பூமியின் மற்றைய பாகத்தில் அப்பொழுது பகலாயிருக்கும்)
ஒருவன் எடுத்துக் கொள்ளப்படுவான்.மற்றவன் கைவிடப்படுவான்’ ‘நோவாவின் நாட்களில் நடந்தது போல மனுஷகுமாரன்
வருகையிலும் நடக்கும்’ (லூக்கா.17:33-36).
379.
கல்லறைகள் எவ்வாறு திறக்கப்படும் என்று நினைக்கிறீர்கள்? நான் சொல்ல விரும்பினதைப்
பற்றி பேச எனக்கு இப்பொழுது அவகாசமில்லை.என்றாலும் தேவனுடைய எளிமையை வலியுறுத்த ஒரு
சில காரியங்களை மாத்திரம் கூறுகிறேன்.பாருங்கள்? நம் சரீரம் கால்ஷியம்,பொட்டாஸியம்
இவைகளால் உண்டாக்கப்பட்டுள்ளது. சரீரம் அழியும்போது இவையெல்லாம் சேர்ந்து ஒரு கரண்டியளவுதான்
உள்ளது. அது சரி. இது மறுபடியும் உயிர்த்தெழுதலின் ஜீவனைப்பெறுகிறது. தேவன் பேசும்
போது உயிர்த்தெழுதல் உண்டாகி,எடுக்கப்படுதல் சம்பவிக்கிறது.ஒரு தேவ தூதன் இறங்கி வந்து,மண்
வெட்டியினால் கல்லறைகளிலுள்ள மண்ணை அகற்றி,அதனுள்ளிலிருந்து ஒரு செத்த பிணத்தை எடுப்பான்
என்று நாம் நினைப்பதெல்லாம் தவறு.அது என்ன? முதலாவதாக இந்த சரீரம் பாவத்தில் பிறந்தது.உயிர்த்தெழுதலில்
அளிக்கப்படுவது அதற்கு ஒப்பான ஒரு புது சரீரம்.பாருங்கள்? இந்த சரீரத்தை நாம் அப்பொழுது
பெற்றுக்கொண்டால்,நாம் மறுபடியும் மரிப்போம்.பாருங்கள்? நாம் நினைப்பது போன்று கல்லறைகள்
திறக்கப்பட்டு,மரித்தோர் அவைகளினின்று வெளியேறுவதில்லை.அது அவ்விதமாக சம்பவிப்பதில்லை.பாருங்கள்?
அது சரி.பாருங்கள்?.
380.
அது இரகசியமாக நிகழும்,ஏனெனில் அவர் “இரவில் திருடன் வருகிற விதமாய்” வருவார்.நாம்
எடுக்கப்படுதலைக் குறித்து அவர் ஏற்கனவே நமக்குக் கூறிவிட்டார்.
381.
எடுக்கப்படுதல் சம்பவித்த பிறகு நியாயத்தீர்ப்பு-பாவம்-வாதைகள்-வியாதிகள் போன்றவை-விழுமென்று
அவர் ஏற்கனவே நமக்கு சொல்லியிருக்கிறார். நியாயத்தீர்ப்பின் கோரத்தினின்று தப்பித்துக்கொள்ள
ஜனங்கள் மரித்துப்போக ஆசிப்பர். ‘ஆண்டவரே,முதலில் எடுக்கப்படுதல் சம்பவிக்கவேண்டுமே!
பின்னை ஏன் இந்த நியாயத்தீர்ப்பு இப்பொழுது எங்கள்மேல் விழ வேண்டும்?’என்று
அவர்கள் கூக்குரலிடுவர்.
382.
அவர் அதற்கு, ‘எடுக்கப்படுதல் ஏற்கனவே சம்பவித்துவிட்டது.நீங்கள் அதை அறியவில்லை’ என்பார்.
பாருங்கள்? தேவன் எளிமையில் மறைந்திருக்கிறார். ஓ,என்னே! அது சரி. “அது ஏற்கனவே
சம்பவித்துவிட்டது. நீங்கள் அதை அறியவில்லை.”
383.
விசுவாசிகள் ஏன் அவருடைய வருகையை அறிவிக்கும் எளிய அடையாளங்களை நம்புவதில்லை?
செய்தி:-
தேவன் எளிமையில் மறைந்திருந்து, அதன்பின் அவ்விதமே தம்மை
வெளிப்படுத்துதல் ஞாயிறு காலை, மார்ச்சு 17,1963.
எல்லா
நிழல்களும் கடந்து போய்விட்டது என்பது மகத்துவமுள்ளதாய் இருக்கிறதல்லவா? நல்லது நான்
உயர்த்தெழுதலில் வருவேன் என்று நம்புகிறேன்.இனி “நம்பிக்கை” என்பதாக
அல்ல.அதற்கான உறுதியை உடையவர்களாய் இருக்கிறோம்.அவ்விதமாக “நம்புகிறேன்” என்பதாக
அல்ல.ஏனென்றால் நாம் பாவங்கள் நிறைந்த சூழ்நிலையில் இருந்தபோது நம் மத்தியில் உயிர்த்தெழுந்தவராகிய
கிறிஸ்து நம்மிடத்தில் வந்தபோது நம்முடைய வாழ்க்கையில் ஏதோ ஒன்று சம்பவித்து அது எல்லாவித
நிழல்களையும் அப்பறப்படுத்திப்போட்டது.
பலிபீடத்தில்
அவருடைய சிலுவை மரணத்தில் அவரோடுகூட பழைய காரியங்கள் யாவும் மரித்துப் போய் விட்டது.அவரோடுகூட
நாமும் புதியவர்களாய் உயிர்த்தெழுந்து அவரோடு ஜீவித்து அவரோடு அரசாட்சி செய்து உன்னதங்களிலே
கிறிஸ்து இயேசுவோடு அமர்ந்திருக்கிறோம்.நாம் ஏற்கனவே அவரோடுகூட உயிர்த்தெழுந்த வர்களாய்
இருக்கிறோம்.நாம் ஏற்கனவே அறிந்திருக்கிறபடி உயிர்த்தெழுதல் என்பது நடந்தது முடிந்த
ஒன்று.ஏனென்றால் நாம் இப்பொழுது கிறிஸ்துவோடுகூட உயிர்த்தெழுந்தவர்களாய் இருக்கிறோம்,
ஆமென். உன்னதங்களிலே கிறிஸ்துவோடு கூட அமர்ந்திருக்கிறோம். இனி அதைப்பற்றி “அவ்விதமாக” என்பதாக
அல்ல.அவை எல்லாம் முடிந்துபோன ஒன்று.ஆமென்.நான் அதை நேசிக்கிறேன் என்பதாக இனி அது இருக்காது.
“நினைக்கிறேன்” என்பதாக இனி இருக்காது. “வாழ்த்துகிறேன்” என்பதாக இனி அது இருக்காது, அவ்விதமாக
அது இருக்காது. ஓ அது முடிந்துவிட்டது.நாம் அவரோடுகூட உயிர்த்தெழுந்து உன்னதங்களிலே
அவரோடுகூட உட்கார்ந்திருக்கிறோம்.
சபைக்கு
இப்பொழுதும் உள்ளேயும் இதற்கு மேலேயும் நீங்கள் சொல்லக்கூடும், “சகோதரன்
பிரன்ஹாமே இதை எப்படி அர்த்தங்கொள்வது,நாங்கள் சுவிசேஷத்தை பிரசங்கிக்க வேண்டுமா?” அது
நம்முடைய அடுத்த நம்பிக்கையாயிருக்கிறது,அது நம்முடைய அடுத்த காரியமாயிருக்கிறது.நமக்கு
ஒரு பெரிய கட்டளை கொடுக்கப்பட்டிருக்கிறது. அவரோடு உயிர்த்தெழுந்த பிறகு உலகமெங்கும்
போய் இந்த நற்செய்தியை மற்றவர்களுக்கு கொண்டு செல்ல வேண்டும்.
செய்தி:-
என் மீட்பர் உயிரோடிருக்கிறார் ஏப்ரல்.10,1955
124.
அபிஷேகம் பண்ணப்பட்டு தேவனை முழுவதுமாக தங்களுக்குள் கொண்டவர்களாய்,அவர்களுடைய ஒவ்வொரு
செய்கையும் அசைவும் கர்த்தர் உரைக்கிறதாவது என்பதாக அமைந்திருந்து,அந்த ஷெகினா மகிமையில்
நடந்தது கொண்டிருக்கும் ஒரு சபையை எனக்குத் தாருங்கள். அப்பொழுது பூமியின் மேல் ஒரு
மேசியா (தேவனால் அபிஷேகம் பண்ணப்பட்டவர்) நின்று கொண்டிருப்பதை உங்களுக்கு காண்பிப்பேன்.
158.
அதற்கு முந்தின நாள்,நான் ஒரு பாறையை எடுத்து ஆகாயத்தில் எறிந்து, “கர்த்தர்
உரைக்கிறதாவது,அந்த நேரம் இங்கு வந்து விட்டது. பூமியில் நியாயத்தீர்ப்புகள் தொடங்கும்.மேற்கு
கரை முழுவதும் குலுங்கும்” என்றேன்.அது எவ்வளவு பிழையின்றி நிறைவேறினது பாருங்கள்?.
நாளுக்கு நாள்,அவர் உரைத்தப்படியே நடந்தது வருகிறது.சகோதரரே, அதை நாம் எப்படி புறக்கணிக்க
முடியும்? நம்முடைய விசுவாசத்தை நாம் அவர் பேரில் வைத்திருப்போம்.
159.
அவர்கள், “இவர் யார்?” என்று கேட்கின்றனர்.இவர் யாரென்று நமக்குத் தெரியும்.இவர் நேற்றும் இன்றும்
என்றும் மாறாதவராயிருக்கிற இயேசு கிறிஸ்து,அக்கினி ஸ்தம்பம்.மோசேயின் காலத்தில் அது
என்ன செய்ததென்று பாருங்கள்.இன்றைய அக்கினி ஸ்தம்பத்துக்கு அது முன்னடையாளமாயிருந்தது.அது
எப்பொழுதுமே….இயேசு கிறிஸ்து வார்த்தையாயிருக்கிறார் என்று அவர்கள் ஏன் விசுவாசிக்கவில்லை?
அவர்கள் தவறாக புரிந்து கொண்டிருந்தனர்.ஏவாள் செய்து போல, அவர்கள் இப்பொழுது செய்கின்றனர்.
208.
காலம் மாறிவிட்ட போதிலும் ஜனங்கள் அன்று போல் இன்றும் உள்ளனர்.அவர் நேற்றும் இன்றும்
என்றும் மாறாதவராயிருக்கிறார் என்று எபிரேயர் 13:8 உரைக்கிறது.இதைக் கூறி நான் முடிக்கிறேன்:
அந்த கேள்வி இனி அவர்களுக்குகல்ல.அவர்கள்,”இவர் யார்?” என்று
கேட்டனர்.ஆனால் 1964ல் எழும் கேள்வி, “இவர் யார் என்று நீங்கள் சொல்லுகிறீர்கள்?”என்பதே.இதெல்லாம்
என்ன? வேதத்தை ஆராய்ந்து பார்ப்பதை நீங்கள் நிறுத்தி விட்டீர்களா? இவர் யார் என்று
நீங்கள் நினைக்கின்றனர்? இது மனோதத்துவத்தினால் சிந்தனைகளை அறிவதா? அல்லது வனாந்தரத்திலிருந்து
எங்கோ புறப்பட்டு வந்த காட்டுத்தனமான ஒன்றா? யோவான் முன்னோடியாக இங்கு வருவான் என்று
முன்னுறைத்த பிறகும், “யோவான் ஒரு காட்டு மனிதன்.அவன் அங்கு ஜனங்களை தண்ணீரில்
மூழ்கடிக்கிறான்” என்று அவர்கள் கூறினது போல்.அந்த தீர்க்கதரிசிகள், “அவருக்கு
முன்னோடியாக இந்த தீர்க்கதரிசி எழும்புவான்” என்று முன்னுரைத்திருந்தனர். இதோ
அவன் வந்தான்.
209.
அவர்களோ, “இவன் காட்டு மனிதன்.அவனை விட்டு விலகி நில்லுங்கள்.அவனுடன் எவ்வித தொடர்பும்
கொள்ளாதீர்கள்” என்றனர். இதோ மேசியா வேதவாக்கியங்கள் கூறின விதமாகவே வந்தார் – அதாவது
அவர் நீநியுள்ளவரும் தாழ்மையுள்ளவரும் கழுதையின் மேல் ஏறி,வேதவசனம் நிறைவேறத்தக்கதாக,நகரத்துக்குள்
வருவார் என்று. இதோ ஜனங்கள்,பிலேயாம் மதசம்பந்தமான பண்டிகையில் நின்று கொண்டிருந்தது
போல்,மறுபடியும் மதசம்பந்தமான பண்டிகையில் நின்று கொண்டு, “இவர்
யார்?” என்று கேட்கின்றனர்.
210.நண்பர்களே,
இவ்வேளைக்கென வாக்களிக்கப் பட்டுள்ள வேத வாக்கியங்கள் இன்று ஒவ்வொரு மணி நேரமும் நமது
மத்தியில் நிறைவேறி வருகின்றன.இவர் யார் என்று நினைக்கின்றீர்களா?.....
செய்தி:-
இவர் யார் என்று சொல்லுகிறீர்கள்? டிசம்பர் 27,1964.
65. அதற்காக
இயேசு அவர்களைக் கடிந்து கொண்டார்.அவர், “வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்,அவைகளால்
உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டென்று உரிமை கோருகீறிர்களே,என்னைக் குறித்து சாட்சி கொடுக்கிறவைகளும்
அவைகளே.நான் உங்களை ஆராயச் சொல்லும் இந்த வேத வாக்கியங்கள்,நான் யாரென்பதை உங்களுக்கு
அறிவிக்கும்”என்றார். (யோவான்.5:39).
66.ஆனால்
அவர்கள் வார்த்தை கூறினதன் மேல் சாய்ந்திருக்கவில்லை. அவர்கள் தங்கள் சுயபுத்தியின்
மேல் சாய்ந்திருந்தனர்.அவர்களுடைய கண்கள் திரையிட்டு மறைக்கப்பட்டிருந்ததாக வேதம் உரைக்கின்றது.
அவர்களுடைய வேதசாஸ்திரம் என்னும் திரை அவர்களை குருடாக்கியிருந்தது.
நீங்கள்,
“சகோ.பிரன்ஹாமே,என்ன கூற முயல்கிறீர்கள்?” எனலாம்.
67. இதை
தான் கூற விரும்புகிறேன்.அது மறுபடியும் நடந்தது கொண்டிருக்கிறது.ஆண்களும் பெண்களும்,
தேவனுடைய வார்த்தை என்ன கூறினபோதிலும்,அவர்கள் சேர்ந்து கொண்ட குறிப்பிட்ட சபையின்
மேல் சாய்ந்துள்ளனர்.அவர்கள் அப்படியே தொடந்து சென்று, தங்கள் சுயபுத்தியின் மேல் சாய்ந்து,தேவனுடைய
வார்த்தை ஒருக்காலும் எழுதி வைக்கப்படாதது போல் அதை அசட்டை செய்கின்றனர்.அது ஜீவனே
இல்லாத விதை.அது மாமிச பிரகாரமான ஜீவனைப் பெற்றுள்ளது.ஆனால் உயிர்ப்பிக்கப்பட ஆவிக்குரிய
ஜீவன் அங்கில்லை. அவர்கள் முகத்தின் மேல் திரையிருந்தது.
68. இப்பொழுது
கவனியுங்கள்,தேவன் எப்படியிருக்க வேண்டும்,மேசியா எப்படி இருக்க வேண்டுமென்று அவர்கள்
தங்கள் சொந்த கருத்தைக் கொண்டிருந்தனர்.ஆனால் மேசியா எப்படி இருக்க வேண்டுமென்று வார்த்தை
அறிவித்திருந்தது,இப்பொழுது பாருங்கள்,மேசியா எப்படி இருக்க வேண்டுமென்று தங்கள் சுயபுத்தியில்
விளைந்த கருத்தை அவர்கள் உடையவர்களாயிருந்தனர்.பிரதான ஆசாரியன், “எனக்குக்
கீழுள்ள ஆசாரியர்களே,மேசியா வரும்போது…நாம் பெரிய தேவாலயத்தை இங்கு கட்டி வைத்திருக்கிறோம்.நாம்
இதையெல்லாம் செய்திருக்கிறோம். “அவர் தம்முடைய ஆலயத்துக்கு தீவிரமாய் வருவார்” என்று
வேதம் உரைக்கிறது(மல் 3:1).எனவே மேசியா வரும்போது,இந்த ஆலயத்துக்கு வந்து,அவரை நமக்கு
அடையாளம் காண்பித்து, “நான் தான் மேசியா.நான் வந்து விட்டேன்.நீங்கள் எதிர்ப்பார்த்துக்
கொண்டிருந்த மேசியா நானே என்பார்” என்று சொல்லியிருப்பான் என்பதில் சந்தேகமில்லை.ஆனால்
அவர் வந்தபோதோ,அவர்கள் நினைத்திருந்ததைக் காட்டிலும் வித்தியாசமான முறையில் வந்ததால்,அவர்கள்
அவரை அடையாளம் கண்டு கொள்ளவில்லை.அவர் யாரென்று அவர்கள் அறிந்து கொள்ளவில்லை. ஆனால்
அவருடைய….
69. யாராவது
ஒரு மாய்மாலக்காரன் அங்கு நடந்தது சென்று, “நான் தான் மேசியா.நான் டாக்டர் இன்னார்
இன்னார்” என்று கூறியிருந்தால், அவர்கள் அவரை ஏற்றுக்கொண்டிருப்பார்கள்.
70. ஆனால்
அவர்கள் சந்தேகமான பிறப்பைக் கொண்ட,எந்த பள்ளியிலும் கல்வி பயிலாத,எந்த வேதசாஸ்திர
கல்லூரியிலும் படிக்காத, ஐக்கியச்சீட்டு எதையும் பெற்றிராத ஒரு மனிதனைக் கண்டனர்.ஆனால்
அவரோ தேவனுடைய வார்த்தை நிறைவேறுதலாக வந்தார். “நான் செய்கிற கிரியைகள் நான் யாரென்பதை
அறிவிக்கும்.நான் செய்வேன் என்று வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட கிரியைகளை நான் செய்யாமல்
போனால்,என்னை விசுவாசிக்காதீர்கள்”.
71. அதை
இந்நாளுக்கு நாம் பொருத்தலாம் அல்லவா? பரிசுத்த ஆவி வந்திருக்கும் போது,அவர்கள் அதை
வேறொரு காலத்துக்குப் பொருத்தப் பார்க்கிறார்கள்.அவர் நித்திய ஜீவனின் வல்லமையைக் கொண்டவராய்
கிரியை செய்து கொண்டிருக்கும்போது,அவர்கள் அதை “காட்டுத்தன மான மூடமதாபிமானம்” என்கின்றனர்.ஏன்?
அவர்கள் கர்த்தருடைய வார்த்தையின் மேல் சாய்ந்திராமல், தங்கள் சுயபுத்தியின்மேல் சாய்ந்துள்ளனர்.அது
உண்மையென்று உங்களுக்குத் தெரியும்.
72. வாக்குத்தத்தம்
நிறைவேறுவதே அதற்களிக்கும் வியாக்கியானம். அப்படித்தான் அது அடையாளம் கண்டு கொள்ளப்பட
வேண்டும்.
செய்தி:-
உன் சுயபுத்தியின் மேல் சாயாதே.ஜனவரி
20,1965.
36. இன்றைய
குருமார்களும் அவ்வாறே உள்ளனர்.நாம் காலத்தை சரிவர நிதானிப்பதில்லை.அன்று போலவே இன்றும்
உள்ளது.அதுதான் அந்த நேரம் என்று அவர்கள் சமாதானத்துடன் வாழ்ந்து வந்ததாக எண்ணினர்.எனவே
அவர்கள் மேசியாவை எதிர்நோக்கியிருக்கவில்லை. இயேசு தமது வருகையை இரவில் திருடன் வருகிறவிதமாய்
இருக்கும் என்றுரைத்தார்.அவருடைய வருகையைக்குறித்து ஜனங்கள் அறியாமலே இருப்பார்கள்.ஆனால்
சில கன்னிகைகள் அவரைச் சந்திக்கச் சென்றனர்.அவர்களில் பாதிபேருக்கு தங்கள் தீவட்டிகளில்
எண்ணெய் இருந்தது.அவர்கள் ஆயத்தமாயிருந்தனர்.அவர்கள் அந்த அடையாளத்துக்காக விழிப்புடன்
நோக்கியிருந்தனர். அவர்களிடம்தான் இன்றிரவு நான் பேசிக் கொண்டிருக்கிறேன் (பாருங்கள்?).அந்த
அடையாளத்தை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு,அவருடைய வருகையின் அடையாளத்தை.
37. கர்த்தரால்
அளிக்கப்பட்ட இந்த அடையாளங்கள்,விசுவாசிகளுக்கே அளிக்கப்படுகிறது. அவிசுவாசிகள் அதை
காணவே மாட்டார்கள்.அது அவர்கள் தலைக்கு மேல் சென்று விடுகிறது.அவர்கள் அதைக் காண்பதில்லை.உங்களை
இப்பொழுது நான் காண்பது எவ்வளவு உண்மையோ,அவ்வளவு உண்மையாக கர்த்தருடைய தூதன் இன்றிரவு
மேடையின் மேல் நின்று கொண்டிருக்கக்கூடும்.நீங்கள் அதைக் காணமுடியும், ஒருக்கால் நான்
அதைக் காணாமலிருக்க முடியும் அல்லது நான் அதைக் காணமுடியும்.நீங்கள் அதைக் காணாமலிருக்கலாம்.அது
வேதபூர்வமானது என்று உங்களுக்கு தெரியும்.அது முற்றிலும் உண்மை. அவர்கள் கண்டனர்…பவுல்
தரையிலே விழுந்தான் என்று உங்களுக்குத் தெரியும்.ஆனால் அவர்கள்…அவனுடன்
கூட இருந்த ஒருவருமே அந்த ஒளியைக் காண முடியவில்லை.
43…..இந்த
அடையாளம் விசுவாசியுடன் இணைவதை நீங்கள் காணும் போது,அது முற்றிலும் உண்மையாகின்றது.
இதை நான் விசுவாசிக்கு மாத்திரமே கூறிக் கொண்டிருக்கிறேன்.ஏனெனில் அவிசுவாசி இதை ஒருக்காலும்
காணமாட்டான்.அவர் இன்று பூமியில் இருப்பாரானால், இந்த அடையாளத்தை கண்டுக்கொள்ளக் கூடாத
நமது குருமார்கள் அநேகருக்கு அது எப்படிபட்ட கடிந்து கொள்ளுதலாக அமைந்திருக்கும்! இந்த
அடையாளங்களை நாம் தினந்தோறும் இந்த கூடாரத்தில் கண்டு கொண்டு,இவைகளைக் காண்கிறோம்.மற்றவர்
இந்த அடையாளத்தை படிக்கின்றனர்.சுவற்றில் எழுதப்பட்ட கையெழுத்தைக் காண்கின்றனர். இருப்பினும்
அநேகர் அதை அசட்டை செய்து அதைக் காணத் தவறுகின்றனர்.அவர்களுக்கு அது ஒன்றுமேயில்லை.
அவர்கள் அதை கவனிப்பதில்லை.
101.
நாம் எந்த நாளில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதைக் கவனியுங்கள்! அந்த முத்திரைகளைக்
கவனியுங்கள்.அது சிதறப்பட்ட தேவனுடைய வார்த்தையை எப்படி கொண்டு வந்தது என்று.இது லூத்தரும்
மற்ற மகத்தான சீர்திருத்தக்காரரும் செய்தவைகளை வேதாகமத்தில் எடுத்துக்காட்டி,ஒவ்வொருவரும்
என்ன செய்வார்கள் என்றும்,சபைக்கு என்ன நடக்குமென்றும்,அவர்கள் கூறாமல் விட்டு விட்டதை
எல்லாம் எடுத்துக்கூறினது.இந்த கடைசி நாளில்,அதைக் குறித்து நாம் ஒன்றுமே அறியாதிருந்தபோது,ஒரு
குறிப்பிட்ட சம்பவம் நடக்கும் என்று அவர் முன்னறிவித்தார்.செய்தித்தாள்களும் கூட அதை
வெளியிட்டன.அவர் இறங்கி வந்து அதை வெளிப்படுத்தி,எல்லா இரகசியங்களையும் ஒன்றாக இணைத்துக்
கூறினார் ஆமென்! அது எனக்கு பயபக்தியான ஒன்று! அது என்னைப் பொறுத்தவரையில் வார்த்தையை
வரிசைப்படுத்துகிறது…ஜனங்கள் என்ன நினைத்தாலும் கவலையில்லை.ஜனங்கள் என்ன நினைக்கிறார்கள் என்று எனக்கு
கவலையுண்டு.அது உண்மை.ஆனால் என்னை பொறுத்தவரையில்,அது வேதாகமத்தின் சத்தியம்.
103.
என்னே ஒரு நாள்! நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் நேரம் எப்படிப்பட்டது! இந்த பெரிய தேவரகசியம்
முடிந்து விட்டது: தேவதுவத்தை கொண்டு வந்து,அது என்னவென்று காண்பிக்கப்பட்டது. இந்த
சிறு தத்துவங்கள் புறப்பட்டு சென்றிருந்தன.ஒருவர் அதுவரை இதுவாக செய்திருந்தார். மற்றொருவர்
அவரை அதுவாக செய்திருந்தார். ஆனால் கர்த்தருடைய தூதன் இறங்கி வந்து,அவர்களுடைய தத்துவங்கள்
அனைத்தையும் காண்பித்து,அதிலிருந்து உண்மையை வெளியே இழுத்து,அதை நமக்களித்தார்.அது
இதோ பிழையற்றதாய் அமைந்துள்ளது,நீங்கள் வேறு எந்த வழியிலும் செல்ல முடியாது.பார்த்தீர்களா,அதுதான்
அவர்.பாருங்கள், சர்ப்பத்தின் வித்து- ஜனங்களிடையே இரகசியமாக அமைந்திருந்த வெவ்வேறு
காரியங்கள். பாருங்கள்? அது என்? அவர்…இது எதற்கு அடையாளம்?இணைவதற்கு.
செய்தி:-
இணையும் நேரமும் அடையாளமும். ஆகஸ்டு
18,1963
87. இப்பொழுது
தீர்மானம் செய்ய வேண்டிய நிலைக்கு அது கொண்டுவரப்பட்டுள்ளது..சபைகளோ அதைப் புறக்கணித்து
விட்டன. சபைகள் எதை விரும்பின? வார்த்தையைக் கொலை செய்பவனை; முறைமைகளை ஏற்றுக் கொள்பவனை.முறைமையானது
வார்த்தைக்கு முரணாய் இருக்குமானால்,அது வார்த்தையை கொலை செய்யும் ஒன்றாய் உள்ளது.உண்மையான
வார்த்தை வெளிப்பட்டு,அது ஜனங்களின் மத்தியில் தேவன் என்று விஞ்ஞானத்தினாலும் புகைப்படங்களினாலும்
நிரூபிக்கப் பட்டதை ஏற்றுக்கொள்வதற்கு பதிலாக அவர்கள் ஸ்தாபன பாரம்பரியங்களை விரும்பினர்.அந்த
ஒளி,அதே கர்த்தருடைய தூதன்,அக்கினி ஸ்தம்பம்;
இயேசுகிறிஸ்துவின் சரீரத்தில் பூமியில் வாழ்ந்த
அவரே.இந்தக் கடைசி காலத்தில் தமது ஜனங்களின் மேல் வந்துள்ளார். விஞ்ஞானம் அதை புகைப்படம்
எடுத்தது.சபையானது அதன் கிரியைகளைக் கண்டது.அது ஒலிநாடாக்களாலும் மற்றவைகளாலும் அடையாளம்
கண்டு கொள்ளப்பட்டு,தனிப்பட்ட முறையில் ஊழியம் செய்துள்ளது.
இவையனைத்துக்கும்
பிறகும்,அவர்களுடைய முறைமைகள் சத்தியத்தை புறக்கணித்து,சபைகளின் ஆலோசனை சங்கத்தை விரும்புகின்றன.
எல்லாவற்றையும் மூடி,அவைகளை நிறுத்தி,அவைகளை விற்றுப்போடும் ஒரு கொலைபாதகனை அவை விரும்புகின்றன.அது
அதை நிச்சயம் செய்யும்.அவர்கள் அவைகளை நிறுத்தி விடுவார்கள்.சபைகளின் ஆலோசனை சங்கம்
அப்படி செய்ய வேண்டும்.அதோ மிருகத்தின் முத்திரை!அந்திகிறிஸ்து-கிறிஸ்துவாகிய வார்த்தைக்கு
எதிரானது. அவர்களுடையது அல்ல…அவர்கள் நினைக்கின்றனர்.
88. பாரம்பரியங்கள்.அவர்களுடைய
பாரம்பரியங்கள் தேவனால் உண்டானதாக அவர்கள் எண்ணுகின்றனர். பாருங்கள்? ஆனால் அது வார்தையின்
முன்னால் நிற்க முடியாது.அது சரியென்று தேவன் உறுதிப்படுத்துவதில்லை. இயேசு வார்த்தையுடன்
நின்றார்.அவர்களுடைய ஆலோசனை சங்கத்துடன் கூட அல்ல.அவர் வார்த்தையுடன் கூட நின்றார்.அந்த
வார்த்தை அவர் தேவன் என்பதை நிரூபித்தது.
அது இன்றைக்கும்
அது தேவன் என்பதை நிரூபிக்கிறது.ஏனெனில் அது அதே வாழ்க்கை வாழ்ந்து,அது முன்பு செய்த
அதே கிரியைகளையும், அது முன்னுரைத்தவைகளையும் இப்பொழுது நமது மத்தியில் செய்து வருகிறது.
134.
தேவனுடைய சரீரம் அவருடைய மணவாட்டியாக ஒன்றிணைந்துள்ளது.அவளும் கிறிஸ்துவும் ஒன்றாக,
பரிசுத்த ஆவி இயேசுவின் மாம்சத்தில் கிரியை செய்தது போல,இப்பொழுது சபையின் மாம்சத்தில்
கிரியை செய்து கொண்டிருக்கிறது.ஏனெனில் அது அவருடைய சரீரத்தின் ஒரு பாகம்.இருவர் அல்ல,ஒருவரே.அவர்கள்
ஒருவரே. கணவனும் மனைவியும் இனி இருவராயிராமல் ஒருவரே. கிறிஸ்துவும் அவருடைய சரீரமும்
ஒன்றே.கிறிஸ்துவுக்குள் இருந்த அதே ஆவி இப்பொழுது அவருடைய சரீரமாகிய மணவாட்டிக்குள்
இருந்து, அவர்களை எல்லா வார்த்தையுடனும் இணைக்கிறது.தேவன் அங்கு வாசம் செய்து,தம்மை
வெளிப்படுத்துகிறார்.
145.…கடைசி
காலத்தின் வாக்குத்தத்தங்களை புறக்கணித்து விட்டது. கடைசி கால செய்தி,கடைசி கால அடையாளம்,கடைசி
காலத்தில் இருக்க வேண்டிய எல்லாமே,தேவன் முன்னுரைத்தபடியே,வார்தைக்கு வார்த்தை அப்படியே
நிறைவேறியிருந்த போதிலும்…
இது ஒலி
நாடாவில் உள்ளது…. அவர்கள் என்னைச் சுட்டுக் கொன்றாலும்,என்ன செய்தாலும்,அந்த செய்தியை அவர்களால்
நிறுத்த முடியாது! பாருங்கள்? அது என்னவானாலும் சென்றுக்கொண்டிருக்கும் பாருங்கள்?
அது ஏற்கனவே ஒலிப்பதிவு செய்யப்பட்டு வெளியே சென்று விட்டது.அது சென்று விட்டது.பாருங்கள்?
அவர்களால் ஒரு போதும்… அது இப்பொழுது, முடிவுகாலத்தின் வார்த்தையாக,முற்றிலும் உறுதிப்படுத்தப்பட்டு,
மறுபடியும், மறுபடியும், மறுபடியும் அடையாளங் களாலும், இயங்கும் முறையினாலும், இயக்கும்
சக்தியினாலும் விஞ்ஞானத் தினாலும்,சபையாலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதுவே நேரம் என்பதை
தேவனே வார்த்தையினாலும் அடையாளங் களாலும் அற்புதங்களாலும் நிரூபித்திருக்கிறார்.
161.
….உலகம் பூராவும் செல்லப்போகும் இந்த ஒலிநாடாவின் மூலம் லட்சக்கணக்கானவர்களிடம்
நான் பேசிக் கொண்டிருக்கிறேன்.பாருங்கள்? ஒலி நாடா செல்லும் தேசத்திலுள்ளவர்களே,நீங்கள்
எங்கிருந்தாலும், அவர் உங்கள் கரங்களில் இருக்கிறார்.அது உண்மையென்று உங்களுக்கு தெரியும்.தெரியாவிட்டால்
நீங்கள் குருடர்களாயிருக்கிறீர்கள்.நீங்கள் வார்த்தையைக் காண முடியாவிட்டால்,வார்த்தையில்
தேவனையும் உங்களால் காண முடியாது.அவர் உங்கள் கரங்களில் இருக்கிறார். அவரை நீங்கள்
என்ன செய்யப் போகிறீர்கள்?.
செய்தி:-
கிறிஸ்து என்னப்பட்ட இயேசுவை நான் என்ன செய்ய வேண்டும்? நவம்பர் 24,1963.
288.
அந்த நிலையிலுள்ள சபை கடைசி நாளில் இதை அடையாது என்று நமக்குத் தெரியும்.அப்படியானால்
அது எப்படி மல்கியா 4ஐ நிறைவேற்றும்? அது எப்படி அதைச் செய்யும்? அப்படிப்பட்ட ஒன்றில்
அவர்களுக்கு நம்பிக்கையே கிடையாது.அது எப்படி…லூக்கா 17:30ஐ நிறைவேற்றும்? இந்த
கடைசி நாட்களுக்கென்று வாக்குத்தத்தம் பண்ணப்பட்டுள்ள எல்லா வேதவாக்கியங்களை அது எப்படி
நிறைவேற்றும்? அதனால் செய்ய முடியாது,ஏனெனில் அது அதை மறுதலிக்கிறது! “லோத்தின்
நாட்களில் நடந்ததுபோல,மனுஷகுமாரன் வருங்காலத்திலும் நடக்கும்.”
289.
சோதோம் அன்றிருந்த நிலையைப் பாருங்கள், இன்று சபை உள்ள நிலையைப் பாருங்கள். தெரிந்துக்கொள்ளப்பட்ட
ஆபிரகாமுக்கு என்ன நடந்ததென்று பாருங்கள்.
290.
லோத்துக்கும் சோதோமிலிருந்த மற்றவர்களுக்கும் அங்கு என்ன சம்பவித்ததென்று பாருங்கள்.பில்லி
கிரகாமுக்கும்,ஓரல் ராபர்ட்ஸும் அந்த ஸ்தாபனங்களிடையே உள்ளதைப் பாருங்கள்,வெளியே இழுக்கப்பட்ட
ஆபிரகாமின் சபையை பாருங்கள்.
291.
மாம்சத்தில் தோன்றிய தேவனாகிய இயேசு தாமே அங்கு மாம்ச சரீரத்தில் நின்றுகொண்டு,என்ன
விதமான அடையாளத்தை அளித்தார் என்று பாருங்கள்.நீங்கள், “அது தூதன்” எனலாம்.வேதம்
அவர் தேவன் என்றுரைக்கிறது.
292.
கர்த்தராகிய தேவன்,ஏலோகிம் மாம்ச சரீரத்தில் நின்றுகொண்டு, அவர் கடைசி நாட்களில் தம்முடைய
சபையை அதிகமாக அபிஷேகிப்பார் என்று காண்பித்தார்.அது தேவன் மறுபடியுமாக மானிட சரீரத்தில்
கிரியை நடப்பிப்பதேயாகும். “சோதோமின் நாட்களில் நடந்தது போல,மனுஷகுமாரன் வரும்காலத்திலும்
நடக்கும்.” அதே விதமான காரியம்.அதை நீங்கள் வேத வசனங்களில் காணலாம். “வேதவாக்கியங்களைப்
படித்து அவைகளை ஆராய்ந்து பாருங்கள். அவைகளால் நித்திய ஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே,” இதைக்
குறித்து சாட்சி கொடுக்கிறவைகளும் அவைகளே.பாருங்கள்?பாருங்கள்?
297.
“நீ எங்களுக்கு போதிக்கிறாயா? நீ வேசித்தனத்தில் பிறந்தவன்.” ஓ, தேவனே!.
298.
அதே காரியம் மறுபடியும் சம்பவிக்கிறதை பார்த்தீர்களா? (சபையார் “ஆமென்” என்கின்றனர்)
அது மறுபடியும் சம்பவிக்கிறதை பார்த்தீர்களா? இவையெல்லாம் அவர்களுடைய மதசம்பந்தமான
விஞ்ஞானத்தில் அடங்கியுள்ளன……
செய்தி:-
கிறிஸ்துவின் மணவாட்டியின் காணக்கூடாத இணைப்பு. நவம்பர் 25, 1965.
தேவன்
தமது கிரியைகள் அனைத்தையும் நிறைவேற்ற ஒரு நேரத்தையும் அந்த நேரத்துக்கான காரணத்தையும்
வைத்திருக்கிறார். தேவன், தாம் என்ன செய்யப்போகிறார் என்பதை முற்றிலுமாக அறிந்திருக்கிறார்.
நமக்கோ அது தெரியாது. அதை அவர் நமக்களிக்கும்போது, நாம் ஏற்றுக்கொள்ள வேண்டியவர்களாயிருக்கிறோம்.
ஆனால் அவருக்கு தெரியும். அவர் செய்யத் திட்டமிட்டுள்ளது ஒன்றும் தவறாகப் போய் விடாது.
அது எல்லாம் நிறைவேறியே ஆகவேண்டும். ஒரு பொருளின் உண்மையான இயல்பை வெளியே கொண்டு வர
சில சமயங்களில் கரடுமுரடான, கடினமான காரியங்கள் தேவையாயுள்ளன.
மழையானது
கரடுமுரடான, மின்னலடிக்கும், இடி முழுங்கும் வானத்தில் பிறக்கிறதென்று உங்க்களுக்குத்
தெரியும். மழையில்லாமல் போனால், நம்மால் உயிர்வாழ முடியாது. ஆனால் மழையை பிறப்பிக்க
எது அவசியமென்று பார்த்தீர்களா? இடி, மின்னல் பிரகாசம், கோபம், அதிலிருந்து மழை உண்டாகிறது.
ஒரு வித்து
புது ஜீவனைக் கொண்டு வருவதற்கென, நிலத்தின் புழுதிக்குள் சென்று, அங்கு செத்து, அழுகி,
துர்நாற்றமெடுக்க வேண்டியதாயுள்ளது.
தேவன்
ஒரு நேரத்தை நியமிக்கிறார். அவர் செய்யும் ஒவ்வொன்றுக்கும் ஒரு நோக்கமுண்டு. கர்த்தரிடத்தில்
அன்பு கூர்ந்து அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களுக்கு எதுவுமே எதேச்சையாக
நடப்பதில்லை. பாருங்கள்? நாம் முன் குறிக்கப்பட்டவர்கள். சகலமும் அதற்கென்று சரியாக
நடக்கிற்றது. அவர் பொய்யுரையாதவர். ஒவ்வொன்றுக்கும் அதனதன் நேரம், காலம், வழிகள் உள்ளதாக
அவர் கூறியுள்ளார். ஒவ்வொரு அசைவுக்கும் பின்னால் தேவன் இருக்கிறார். எல்லாமே தவறாக
சென்று கொண்டிருக்கிறதென்று நீங்கள் சில நேரத்தில் நினைக்கக்கூடும். அவை சோதனைக்கென்றும்,
ஏன் இப்படி நடக்கிறதென்று நாம் வியக்கவுமே நம் மேல் சுமத்தப்படுகின்றன. அந்த சோதனைகளை
நாம் எப்படி ஏற்றுக்கொள்கிறோம் என்று காணவே அவை அளிக்கப்படுகின்றன.
…அவர், “கிறிஸ்து இயேசுவுக்குள் தேவ பக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்” என்று
கூறியுள்ளார்…..
நீங்கள்
சோதிக்கப்படுவதற்காக, இந்த நித்தையை சகிக்க வேண்டியவர்களாகயிருக்கிறீர்கள். கிறிஸ்துவினிடத்தில்
வரும் ஒவ்வொரு மனிதனும், தேவன் அவனை நியமித்த நோக்கத்திற்கென முதலில் பிள்ளையைப் போல
பயிற்சி பெற வேண்டும். நீங்கள் மாத்திரம் அமைதியாயிருப்பீர்களானால்! ஞாபகம் கொள்ளுங்கள், அவர் உங்களை இதற்கென அழைத்திருந்தால்,
அது நிறைவேறுவதை எதுவுமே தடை செய்ய முடியாது. தேவனுடைய வார்த்தை வெளிப்படாமலிருக்கச்
செய்ய நரகத்தில் போதுமான பிசாசுகள் கிடையாது. நீங்கள் ஒரு நோக்கத்திற்காக பிறந்திருக்கிறீர்கள்.
உங்கள் இடத்தை வேறு யாருமே எடுத்துக்கொள்ள முடியாது. ஒருக்கால் உங்களைப் போல் பாவனை
செய்யும் போலியாட்கள் இருக்கக்கூடும். ஆனால் அவர்கள் உங்கள் இடத்தை ஒருபோதும் எடுத்துக்கொள்ள
முடியாது. தேவனுடைய வார்த்தை வெற்றி பெறும். அது தவற முடியாது.
அதில்தான்
ஒவ்வொரு கிறிஸ்தவனும் நிலைத்திருக்க வேண்டும். சோதனைகள் எல்லா பக்கங்களிலிருந்தும்
வரும் என்பதை நீ அறிந்திருக்க வேண்டும். ஆனால் தேவனுக்கு ஒரு நோக்கமுண்டு என்பதை ஞாபகம்
கொள். எல்லாமே நன்மைக்கு ஏதுவாக நடக்கும்.
இன்று
பாருங்கள்-இப்பொழுது நான் ஒன்றைக் கூறப்போகிறேன். இன்று வேசிப்பிள்ளைகளைப் பாருங்கள்.
வேசியும் அவளுடைய பிள்ளைகளும் எல்லா தேசங்களையும் ஸ்தாபனங்களின் அரசியல் ஆளுகைக்குள்
கொண்டு வந்துவிட்டனர். எப்படிப்பட்ட ஸ்தாபனங்களின் சந்ததி எழும்பியுள்ளது என்றும்,
நீதிமான்கள் எவ்வளவு சொற்ப பேராய் உள்ளனர் என்பதையும் பாருங்கள். கவலைப்படாதீர்கள்!
வார்த்தையில் நில்லுங்கள்.
நீங்கள்
பரியாசம் பண்ணப்படு, உருளும் பரிசுத்தர் என்று அழைக்கப்படுவீர்கள். அதனால் பரவாயில்லை.
நீங்கள் எந்த மோசமான பெயராலும் அழைக்கப்படலாம். இருப்பினும் அதில் நில்லுங்கள். அது
வார்த்தை. அவர்கள் உங்களைக் குறித்து சொல்பவை வார்த்தையின் நிமித்தம் வரும் நிந்தையாகும்.
மனிதர் என்றென்றைக்கும் ஒரே போல் இருக்கின்றனர்.
நான் மறுபடியும் ஒன்றை உங்களிடம் கூறப்போகிறேன். நீங்கள் அதை…இது ஒலிப்பதிவு
செய்யப்படுகின்றதா, இல்லையாவென்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் இது ஒலிப்பதிவு செய்யப்பட்டால்,
இந்த ஒலிநாடாவைக் கேட்பவர்களே, நான் சொல்வதை கவனமாய் கேளுங்கள். இதை காணத் தவறாதீர்கள்!
இதை நன்கு ஆராய்ந்து படியுங்கள். …அவர் முன்காலத்தில் என்ன செய்தார் என்பதை அவன் அறிந்திருக்கிறான்.
அவர் என்ன செய்யப்போகிறார் என்று வாக்களித்துள்ளதை அவன் அறிந்திருக்கிறான். ஆனால் அவர்
இக்காலத்தில் செய்வதை அவன் காணத் தவறுகிறான்.
ஓ, பெந்தெகோஸ்தேயினரே,
நீங்களல்லவா அதற்கு உதாரணம்! நீங்கள் ஏதோ ஒன்று நடக்க எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்,
ஆனால் அது ஏற்கனவே உங்கள் முன்னால் நடந்து விட்டது. நீங்களோ அதை அறியாமலிருக்கிறீர்கள்.
கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின் கீழே கூட்டிச் சேர்த்துக் கொள்ளும் வண்ணமாக எத்தனை
தரமோ அவர் உங்களைச் கூட்டிச் சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தார். உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று.
நீங்கள் அவருடைய வார்த்தையையும் அவருடைய ஆவியையும் காட்டிலும் உங்கள் பாரம்பரியங்களுக்கும்,
ஸ்தாபனங்களுக்கும் அதிக முக்கியத்துவம் அளித்தீர்கள் ….33 ஆண்டுகளுக்கு முன்பு பரிசுத்த ஆவியானவர் நதியண்டையில் பேசின அதே காரியம்.
டிசம்பர் 9ம் தேதி அவர்கள் அதை தோண்டியெடுத்தனர். வான சாஸ்திரம் அதை நிரூபித்தது… எப்படி
ஜூபிரும் மற்ற நட்சத்திரங்களும் அவைகளுடைய “நட்சத்திரக் கூட்டத்தில்”.
…மூன்று நட்சத்திரங்கள் ஒன்றாக சேரும்போது, அதுவே மேசியா பூமியில் இருக்க வேண்டிய
நேரம் என்பதை அவர்கள் தேவனுடைய வார்த்தையின் மூலம் அறிந்திருந்தனர்.
ஆமென்!
ஆமென்! நீங்கள் எங்கு நின்று கொண்டிருக்கிறீர்கள் என்பதை அது பொறுத்தது. நீங்கள் எதை
பார்க்கிறீர்கள் என்பதை அது பொறுத்தது.
…எந்த நிபுணனுமே அந்த நட்சத்திரங்களை இழுத்து ஒன்று சேர்க்க முடியாது. அந்த நட்சத்திரம்
வானத்தில் தோன்றும் போது, மேசியா பூமியில் இருக்க வேண்டிய நேரம் அதுவே என்று நாம் அறிந்திருக்கிறோம்.
மேசியா பூமியில் இருக்கிறார். சில நூற்றாண்டுகளுக்கு பிறகு அந்த நட்சத்திரங்களின் சேர்க்கை
மறுபடியும் உண்டாகி பூமிக்கு மறுபடியும் ஒரு ஈவு அளிக்கப்படுகிறது.
கவனியுங்கள்,
அந்த நட்சத்திரங்களின் சேர்க்கை உண்டாகும்போது, மேசியா பூமியில் இருக்கிறார். அவர்
பூமியில் இருக்கிறார் என்று சாஸ்திரிகள் அறிந்துக்கொண்டனர். …அவர்கள்
வீதியின் மேலும் கீழும் அந்த ஒட்டகங்களின் மேல் சென்று, “அவர் எங்கே? நாங்கள் கிழக்கிலே அவருடைய
நட்சத்திரத்தைக் கண்டோம். அவர் இங்கு எங்கோ இருக்கிறார். அவர் எங்கே? அவர் எங்கே? அவர்
எங்கே?” என்றனர். என்ன ஒரு நிந்தை!
அவர்கள்
பிரதான ஆசாரியனிடம் சென்றனர். அவன், “உங்களுக்கு என்ன நேர்ந்தது? நீங்கள் மூட மதாபிமானிகள்” என்று
கூறியிருப்பான், பாருங்கள்.
“மர்மமான அடையாளம் ஏதாவது தென்படுகிறதா?”
“இல்லையே, எங்களுக்கு ஒன்றும் தென்படவில்லையே.” இல்லை, இன்றைக்கும் அவர்களுக்கு
தென்படுவதில்லை. அதே விஷயம்தான். அவர்களால் ஒன்றும் காணமுடியவில்லை. அவர்களால் காணமுடியாது.
“நாம் போதகர்களை வரவழைப்போம். நீங்கள் கண்டீர்களா?”
“எங்களுக்கு நட்சத்திரம் எதுவும் தென்படவில்லை”.
ஆனால்
அது அங்கிருந்தது! அது இப்பொழுது அங்குள்ளது! அவர்களால் அதை காணமுடியாது. அவர்களைச்
சுற்றி அது சென்று கொண்டிருக்கிறது. அவர்களால் அதை காண முடியாது.
நிச்சயமாக
நீ காணமாட்டாய். நீ மிகவும் குருடனாயிருக்கிறாய். அது நீ காண்பதற்காக அல்ல. நீ அவ்வளவு
குருடாயிருந்தால், நிச்சயமாக அதை காணமாட்டாய். தேவன் அதை யாருக்கு வெளிப்படுத்துகிறாரோ,
அவர்களுக்கு மாத்திரமே. அவர்கள் மாத்திரமே அதை காணமுடியும். அது எக்காலத்தும் அவ்வாறே
இருந்து வந்துள்ளது.நிச்சயமாக!.
ஆனால்
சாத்தான் இதை நம்பவில்லை. அவன், “நீர் தேவனுடைய குமாரனேயானால்…”என்றான்.
தேவதூதன்,
“அவர் தேவனுடைய குமாரனே” என்றான். அதுதான் வித்தியாசம்.
இயேசு,
“மாயக்காரரே, நீங்கள் தீர்க்கதரிசிகளின் கல்லறைகளைக் கட்டுகிறீர்கள். நீங்கள்
தான் அவர்களை அங்கு வைத்தீர்கள். அவர்கள் தேவனுடைய வார்த்தையுடன் வந்தனர். நீங்களோ
அவர்களை விசுவாசிக்கவில்லை. அவர்கள் ஒவ்வொருவருடைய இரத்தப்பழிக்கும் நீங்கள் குற்றவாளிகள்” என்றார்.
தேவனுக்கு
சித்தமானால்…இந்த சந்ததி இயேசு கிறிஸ்துவைக் கொன்றதாக அவர்கள் மேல் குற்றச்சாட்டைக் கொண்டுவரப்
போகிறேன். அவரை மறுபடியும் சிலுவையில் அறைந்ததற்காக.
- வார்த்தையின் நிமித்தம் வரும் நிந்தை. 62-1223
50. இப்பொழுது
நமது சகோதரருக்கும், இந்த்த ஒலிநாடா செல்லவிருக்கும் உலக முழுவதிலுமுள்ள மக்களுக்கும்
இதை கூற விரும்புகிறேன். இந்த செய்தி எந்த தனிப்பட்ட நபரையும் தாக்கிப் பேசப்படும்
ஒன்றல்ல. …நாங்கள் எப்பொழுதும் சபையையே ஆதரிக்கிறோம். இன்று நாங்கள் இவ்வாறு பிரிந்திருக்கும்
காரணம் என்னவென்று பரிசுத்த ஆவியின் உதவியினால் உங்களுக்குச் சுட்டிக் காண்பிக்க விரும்புகிறோம்.
115.
இன்றைக்கு போதகர்களாக நியமிக்கப்பட்டுள்ள இந்த குழுவை நான் குற்றஞ்சாட்டுகிறேன். அவர்கள்
நேசித்து, ஆராதித்து வருவதாக உரிமை பாராட்டும் அதே தேவனை, அவர்களுடைய கோட்பாடுகளின்
மூலமாகவும், ஸ்தாபனங்களின் காலணமாகவும், மனிதர்களுக்கு முன்பாக அவர்கள் சிலுவையில்
அறைகின்றனர்.
119.
தேவனுடைய வார்த்தையை ஜனங்களுக்குப் புகட்டுவதாக அவர்கள் கூறிக்கொண்டு, ஆனால் அதை அவர்கள்
நடுவிலிருந்து அறவே அகற்றி, கிறிஸ்துவை சிலுவையில் அறையும் செயலைப்புரிகின்றனர். சரியாக
இதே காரியத்தைப் போன்று தான் அங்கே அவர்கள் செய்து கொண்டிருந்தனர்.
151.
இன்றைக்கு அவர்கள் ஜீவ வழியை ஏற்றுக்கொள்ள மறுத்து, அதற்கு பதிலாக, மரணவழியாயும்,பொய்யாகவும்
அமைந்துள்ள மனிதனின் வார்த்தைகளை ஏற்றுக் கொள்கின்றனர். இந்த சந்ததியை நான் குற்றப்படுத்தி
அவர்கள் தவறென்று தேவனுடைய வார்த்தையைக் கொண்டு அவர்கள் மேல் குற்றஞ்சாட்டுகிறேன்.
அவர்கள் ஆவியை சிலுவையில் அறைய முயல்வதற்காக குற்றவாளிகளாயுள்ளனர்.
155.
அவர்கள் என்ன செய்கின்றனர்? அவர்கள் எப்படியெல்லாம் வேஷம் தரிக்கின்றனர்! பிரசங்கியே,
நீ என்ன பிரசங்கிக்கின்றாய்? அவரைச் சிலுவையில் அறைவதற்காக நீ எப்படியெல்லாம் மேடையைக்
கட்டிக் கொண்டிருக்கிறாய்!
156.
அவர்கள் தங்கள் கோட்பாடுகளின் மூலம் சுவிசேஷம் ஜனங்களுக்கு அளிக்கக்கூடிய பலன்களை சிலுவையில்
அறைகின்றனர். அதுதான் சிலுவையில் அறைதல், பொது ஜனங்கள், சபைகள், ஸ்தாபனங்கள் எனப்படும்
பெரிய சவக்கிடங்குகளில் அறைகளில் அமர்ந்துக்கொண்டு, கோட்பாடுகள் என்னும் கோட்டை வரைந்துக்
கொள்கின்றனர். தேவனுடைய வார்த்தை அவர்களுக்கு எவ்வித பலனையும் அளிக்காது. ஏனெனில் என்னவெல்லாம்
நிகழும் என்று கிறிஸ்து கூறினாரோ, அவைகளை அவர்கள் கண்டனம் செய்கின்றனர். ஏனெனில் அது
அவர்களுடைய கோட்பாடுகளுக்கு ஏற்றாற்போல் வரவில்லை.
157.
அவருடைய வருகையை அவர்கள் கற்பனை செய்து நினைத்திருந்தபடியே இயேசு வரவில்லை. தேவன் அவரை
அனுப்பின விதத்தில் அவர் வந்தார். அவர் சரியாக வார்த்தை என்ன கூறியிருந்ததோ அதன்படியே
வந்தார். ஞானிகள், கல்விமான்கள் கண்களுக்கு அவர் மறைத்து, கற்க விரும்பும் பாலகருக்கு
அவர் வெளிப்படுத்தினார் என்று அவர் கூறினதில் வியப்பொன்றுமில்லை. உங்க்களுக்கு புரிகிறதா?
181.
சபை அவரை வெறுத்தது. ஏன்? அவர் அவர்கள் தேவனாயிருந்தார். அவர்கள் அவரை வெறுத்து, அவர்
தங்கள் மேசியா என்பதை மறுதலித்தனர். இல்லை, ஐயா, அதைப் போன்ற ஒருவரை தங்கள் மேசியாவாக
இருக்க அவர்கள் விரும்பவில்லை.
182.
இன்றைக்கும் சபை அதே காரியத்தை செய்கிறது. அது வார்த்தையை மறுதலிக்கிறது. அவர்களுக்கு
அது வேண்டாம். அவர்கள் விசுவாசிக்க வேண்டுமென்று அவர்களுக்கு போதிக்கப்பட்டுள்ள தங்கள்
கோட்பாடுகளுக்கு முரணாக அது இருக்கிறது.
185.
எந்த நேரத்திலும் சபையானது “மேலே வா” என்னும் கட்டளையை பெறக்கூடும். ஆமென்.
186.
அதற்கென எல்லா ஒழுங்குகளும் நிறைவேறி வருகின்றன. பரிசுத்த ஆவியானவர் தாமே, தாம் கிரியை
செய்யக்கூடியவர்களின் மூலம் இயேசுவை தத்ரூபமாக்கி, அவரை நிரூபித்து வருகிறார். அவர்
தாமே கீழே இறங்கி வந்து, தம்முடைய புகைப்படத்தை எடுக்க அனுமதித்து, அதைக் காண்பித்து,
அதை குறித்து விஞ்ஞானம் பேசும்படியாகச் செய்து, மற்றக் காரியங்கள், தாம் என்ன செய்யப்போவதாக
அவர் கூறியுள்ளதை சரியாக நிரூபிக்கிறார்.
187.
அவரை மறுதலித்தனர். அவர்களுடைய மேசியாவை அவர்கள் மறுதலித்து, “எங்களுக்கு
அவர் தேவையில்லை” என்றனர். இன்றைக்கும் அதே காரியத்தை அவர்கள் செய்கின்றனர். “நான்
அங்கு சென்று, அந்த குழுவினர் நடந்து கொள்வதுபோல் நானும் நடந்துக்கொள்ள வேண்டுமென்றால்,
எனக்கு அது தேவையில்ல”. சரி, அப்படியானால் அதை நீ பெற்றுக்கொள்ள முடியாது. அவ்வளவுதான். பாருங்கள்?
அதே தான் இன்றும்.
191.
கிணற்றடியில், அவளுடைய அழுக்கான நிலையில் நின்ற அந்த ஸ்திரீ எதற்கு அடையாளமாயிருந்தாள்?
இந்த கடைசி நாட்களில், புறம்பாக்கப்பட்டவர்களை தேவன் தம்மிடம் இழுத்துக் கொள்வார் என்பதற்கு.
199.
மோசமான பெயர் கொண்டிருந்த அந்த ஸ்திரீயைப் பாருங்கள். அவள் கண்டு கொண்டாள். அவள் கெட்ட
நடத்தையுள்ள ஸ்திரீ என்னும் பெயர் பெற்றிருந்தாள். அவள் ஒழுக்கம் தவறினவளாயிருந்தாள்.
யாரும் அதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஆனால் தேவனுடைய கட்டளைகள் அது குற்றமென்று தீர்ப்பு
கூறுகின்றன. அவள் ஒழுக்கம் தவறினவள். ஆனால் அவள்…
200.
நீ எவ்வளவு பெரியவன் அல்லது சிறியவன் என்பதை அனுசரித்து அவர் தீர்ப்பு கூறுவதில்லை.
அவர் உன் இருதயத்தின்படி-நீ என்னவாயிருக்க உன் இருதயத்தில் விரும்புகிறாய் என்பதை அனுசரித்து-தீர்ப்பு
கூறுகிறார்.
201.
ஆகவே அவளுக்கு அந்த கோட்பாடுகள் எதுவும் தேவையாயிருக்கவில்லை. ஆகவே இந்த காரியமானது
அவளுக்கு முன்பாக பிரகாசித்த போது அதைத்தான் அவள் விரும்பினாள். முன்பு அவள் என்ன நிலைமையில்
இருந்த போதிலும், தேவனிடம் வர ஆயத்தமானாள். தேவன் இருதயத்தைப் பார்த்து தீர்ப்பு கூறுகிறார்.
மனிதனோ வெளித்தோற்றத்தின்படி தீர்ப்பு கூறுகிறான். தேவன் இருதயத்தைப் பார்க்கிறார்.
ஆகவே அள் என்னவாயிருந்த போதிலும், அந்த வெளிச்சம் பிரகாசித்தது. அதுதான் அதன் முடிவு.
அவள் நித்திய ஜீவனின் சத்தை கிரகித்துக் கொண்டாள்.
202.
ஓ, என்னே! இது சத்தியம் என்பதைக் காண எவ்வளவு ஐசுவரியமுள்ளதாயிருக்கிறது! இதில் நான்
நிலைநிற்பேன்… பரலோகத்தின் தேவன் உயிரோடெழுப்புவார். அப்பொழுது என் சத்தம் மறுபுறத்தில், தேவனுடைய
மகத்தான காலத் என்னும் காந்த ஒலிநாடாவில் பதிவு செய்யப்பட்டிருக்கும். அது இந்த கடைசி
நாளில் இந்த சந்ததியை ஆக்கினைத்தீர்ப்புக்குட்படுத்தும்…
208.
பார்த்தீர்களா? அவர் என்ன தவறு செய்தார்? அவர் ஒன்றுமே செய்யவில்லையே! அப்படியானால்
அவர்கள் ஏன் அவரை சிலுவையில் அறைந்தார்கள்? ஏன்? ஏன்? ஏனெனில் அவர் யாரென்று அவர்கள்
அடையாளம் கண்டுக்கொள்ளவில்லை.
209.
இன்றைக்கும் அதே காரியம்தான். இந்த நாட்களின் போதகர்களும், நமது நவீன வேத ஆசிரியர்களும்
ஜனங்களுக்குள் அதிகமான கோட்பாடுகளை நுழைத்து, இது செய்வினை என்றும், பிசாசு என்றும்,
மனோதத்துவ செயல் என்றும், ஒருவிதமான ஏமாற்றுதல், தந்திரம் என்றும் அவர்களை நம்பச் செய்துள்ளபடியால்,
இது இந்த நாளுக்கான தேவனுடைய வார்த்தையின் உறுதிப்படுத்துதல் என்பதை அவர்களால் கண்டு
கொள்ள முடியவில்லை. ….
210.
நீங்கள் அவர்களுடைய ஸ்தாபனத்தின் அங்கத்தினராக இராமற்போனால், அவர்கள், “அது ஒரு
மாயை, அது தந்திரம் இவர் செய்வதைப் பாருங்கள், அவர் செய்வதைப் பாருங்கள்” என்பார்கள்.
உண்மையான காரியத்தை அவர்கள் தந்திரம் என்றும், தவறென்றும் நிரூபிக்கட்டும். அவர்களால்
முடியாது. அது ஒருபோதுமே தவறாயிருந்ததில்லை. அது இனி தவறாயிருக்கப்போவதுமில்லை. ஏனெனில்
அது தேவனாயுள்ளது. பாருங்கள்? ஆனாலும் அவர்கள் தவறென்று சுட்டிக் காண்பிக்க விரும்புகின்றனர்.
215.
“குருடனுக்கு குருடன் வழி காட்டினால், இருவருமே குழியில் விழுவார்கள்” என்று
இயேசு கூறியுள்ளார். இந்த கடைசி நாட்களில் தேவன் உங்கள் கண்களைத் திறக்குமாறு ஜெபியுங்கள்.
சரி.
217.
அக்காலத்தில் அவர்கள் எவ்வாறு தேவதாஷணம் உரைத்தனர்? அவர்களால் அப்பொழுது அதற்கு விரோதமாக
தேவதூஷணம் உரைக்க முடியவில்லை. ஏனெனில் பரிசுத்த ஆவி அப்பொழுது வரவில்லை.
219.
…அவ்வாறு அசுத்தம் என்று அழைத்தால், கிருபைக்கும் நியாயத்தீர்ப்புக்கும் இடையேயுள்ள
கோட்டை நீங்கள் கடந்து விட்டீர்கள். நீங்கள் ஒருக்காலும் மன்னிக்கப்படுவதில்லை.
220.
…தேவதூஷணம். தேவகுமாரனை அவர்கள் ஜனங்களின் முன்னிலையில் மறுபடியும் சிலுவையில்
அறைகின்றனர். அவரே உறுதிப்படுத்தப்பட்ட வார்த்தை. அவருக்கு விரோதமாக பேசப்படும் ஒரு
வார்த்தையும் கூட மன்னிக்கப்படாது.
221.
அப்படியானால் நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்? நீங்கள் எங்கு நிற்கப்போகிறீர்கள்?.......
247.
… “சகோ.பிரன்ஹாமே, அவர்கள் மேல் நீங்கள் எப்படி குற்றஞ்சாட்டலாம்?”. …அவர்கள்
வெறுப்பாக அதை புறக்கணித்த காரணத்தால், அவர்கள் மேல் குற்றஞ்சாட்டுகிறேன். நீங்கள்
பரிசுத்த ஆவியைத் தூஷிப்பதன் மூலம் இயேசுகிறிஸ்துவை சிலுவையில் அறைந்த குற்றத்தைப்
புரிந்தவர்களாகயிருக்கின்றீர்கள். அது உண்மை.
284.
அவர் யாரால் சிலுவையில் அறையப்படுகிறார்? மேய்ப்பர்களால், மாய்மாலக்காரரே, உங்களுக்கு
இதைவிட நன்றாகத் தெரியும். நான் உங்கள் பேரில் கோபமடையவில்லை. ஆனால் எனக்குள்ளே ஏதோ
ஒன்று பொங்கி வருகிறது. தேவன் உங்கள் மத்தியில் முழுவதுமாக அடையாளம் கண்டுகொள்ளப்பட்டுவிட்டார்.
285.
எந்த இடத்தில் அவருடைய விலாவில் ஈட்டியால் குத்தினார்கள்? அவருக்கு எங்கு குத்து ஏற்பட்டன?
கல்வாரியில். இன்றைக்கு அவர் எங்கு ஈட்டிக்குத்துக்களைப் பெறுகிறார்? பிரசங்க பீடத்தில்.
அது எங்கிருந்து அப்பொழுது வந்தது? எருசலேமிலிருந்து. இன்று அது எங்கிருந்து வருகிறது?
அவரை நேசிப்பதாக கூறிக்கொள்ளும் ஸ்தாபனங்களிலிருந்து. இன்றைக்கும் அதைத்தான் அவரை ஈட்டியால்
குத்துகிறார்கள். இது இரண்டாம் கல்வாரி.
செய்தி:- உலகம்
விழுந்து போதல். டிசம்பர் 16 -1962.
41.
அவர்கள் மேசியாவுக்காக ஜெபம் செய்து கொண்டிருந்தனர். அவர்களுக்கு மேசியா
அவசியமாயிருந்தது. ஆனால் காரியம் என்னவெனில், அவர்களுக்கு விருப்பமான வழியில்
அவரைப் பெற அவர்கள் விரும்பினர்.தேவன் தமது சொந்த வழியில் அவரை
அனுப்பினார்,அவர்களோ அவரைப் புறக்கணித்தனர்.
42. இன்றைக்கும் அவர்கள் அதையே
செய்கின்றனர்.அவர்கள் மறுபடியும் அவரைப் புறக்கணிக்கின்றனர். அன்று அவர்கள் செய்த
அதையே இன்று செய்கின்றனர்.ஏன்? அதே காரணம் தான்,அதே காரணம்.அவர் அப்பொழுது
வந்தார்,அவர் வந்தாரென்று நாமறிவோம்.அவர் அவர்களிடம் வந்தார்,ஆனால் அவர் எவ்வாறு
வரவேண்டுமென்று அவர்கள் விரும்பினார்களோ,அவ்விதமாக அவர் வரவில்லை. இன்றைக்கும்
தேவன் ஒன்றை நமக்கு அனுப்பும்போது,அது நமக்கு வேண்டாம்.நமது ஸ்தாபன ருசியை
அனுசரித்து அது வருவது கிடையாது.நமது வேதசாஸ்திர கருத்துக்களுடன் பொருந்தும்
வண்ணம் அது வருவதில்லை.ஆனால் அதற்காகத்தான் நாம் ஜெபித்து வந்தோம். தேவனுக்கு
முன்பாக நாம் ஏறெடுத்த அந்த விண்ணப்பத்துக்கு செவிகொடுத்து தேவன் அதை நமக்கு
அனுப்பினார், நாமோ அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறோம்.
செய்தி: குற்றச்சாட்டு 63-0707
186.
அதற்கென எல்லா ஒழுங்குகளும் நிறைவேறி வருகின்றன. பரிசுத்த ஆவியானவர் தாமே, தாம் கிரியை
செய்யக்கூடியவர்களின் மூலம் இயேசுவை தத்ரூபமாக்கி, அவரை நிரூபித்து வருகிறார். அவர்
தாமே கீழே இறங்கி வந்து, தம்முடைய புகைப்படத்தை எடுக்க அனுமதித்து, அதைக் காண்பித்து,
அதை குறித்து விஞ்ஞானம் பேசும்படியாகச் செய்து, மற்றக் காரியங்கள், தாம் என்ன செய்யப்போவதாக
அவர் கூறியுள்ளதை சரியாக நிரூபிக்கிறார்.
187.
அவரை மறுதலித்தனர். அவர்களுடைய மேசியாவை அவர்கள் மறுதலித்து, “எங்களுக்கு
அவர் தேவையில்லை” என்றனர். இன்றைக்கும் அதே காரியத்தை அவர்கள் செய்கின்றனர். “நான்
அங்கு சென்று, அந்த குழுவினர் நடந்து கொள்வதுபோல் நானும் நடந்துக்கொள்ள வேண்டுமென்றால்,
எனக்கு அது தேவையில்ல”. சரி, அப்படியானால் அதை நீ பெற்றுக்கொள்ள முடியாது. அவ்வளவுதான். பாருங்கள்?
அதே தான் இன்றும்.
செய்தி: பிளவு 63-0317 மாலை
256.
‘கர்த்தருடைய வருகை மட்டும் உயிரோடிருக்கிறவர்கள்
நித்திரையடைந்தவர்களுக்கு முந்திக்கொள்வதில்லை. ஏனெனில் கடைசி எக்காளத்தில், தேவ எக்காளம்
முழங்கும்.’ கடைசி
முத்திரை உடைக்கப்பட்டிருக்கும்பொழுது ஏழாம் தூதன் தன் செய்தியை அளிக்கும்பொழுது,
‘கடைசி எக்காளம் முழங்கும். கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் எழுந்திருப்பார்கள். உயிரோடிருக்கும் நாமும் அவர்களோடே
எடுக்கப்பட்டு அவரை ஆகாயத்தில் சந்திப்போம்.’ அவர் உரிமை பெறுகிறார்! அவர் தம் சொத்துக்களைப் பெற்றுக்கொள்ள
புறப்பட்டு வருகிறார்.
செய்தி: ஏழாம் முத்திரை, மார்ச் 24, 1963 மாலை
இந்த ஏழாம் முத்திரை எல்லா காரியங்களும்
முடிவடையும் சமயம் என்பதை நாம் நினைவு கூரவேண்டும். அது உண்மை. ஏழாம்
முத்திரையைக் கொண்ட புஸ்தகத்தில் எழுதப்பட்டவை உலகத் தோற்றத்துக்கு முன்னால்
மீட்பின் திட்டம் அதில் முத்திரையிடப் பட்டடிருந்தது. எல்லாமே முடிவடைகின்றது.
அதுதான் முடிவு; கஷ்டத்தினால் போராடிக் கொண்டிருக்கும் உலகத்தின் முடிவு
அதுவாகும். தவித்துக் கொண்டிருக்கும் இயற்கைக்கு அதுவே முடிவாகும்.
எல்லாவற்றிற்கும் அதுவே முடிவாகும். அதில்
எக்காளங்கள் முடிவடைக்கின்றன; கலசங்கள் முடிவடைகின்றன; பூலோகமும்
முடிவடைக்கின்றது. அது... ‘காலம்’ என்பது கூட முடிவடைகின்றது.
‘இனிகாலம் செல்லாது’ என்று வேதம் உரைக்கின்றது. மத்தேயு 7-ம் அதிகாரம்... நான்
கருதுவது வெளிப்படுத்தல் 7-வது... வெளிப்படுத்தல் 10-ம் அதிகாரம் 1 முதல் 7
வாசனங்களில் காலம் முடிவடைகின்றது. பலமுள்ள தூதன், ‘இனி காலம் செல்லாது’ என்கிறான்... இந்த மகத்தான காரியம் நிகழும் நாட்களில்...
ஏழாம் முத்திரையின் முடிவில் இந்தக் காலத்துடன்
எல்லாமே முடிவடைகின்றன. கவனியுங்கள். சபையின் காலங்களின் முடிவும் அதுவாகும். ஏழாம் முத்திரையின் முடிவும்
அதுவே. எக்காளங்கள் அப்பொழுது முடிவடைகின்றன. கலசங்களும் முடிவடைகின்றது. ஏழாம் முத்திரையில், ஆயிரம் வருட
அரசாட்சியின் வருகையின் முன்னறிவிப்பும் முடிவடைகின்றது.
இது ஒரு
ராக்கெட்டை ஆகாய மண்டலத்தில் வெடிப்பது போன்றதாகும். அந்த ராக்கெட் இங்கே வெடித்து
மேலே சென்று, மறுபடியும் வெடிக்கின்றது. அச்சமயம் ஐந்து நட்சத்திரங்கள் அதனின்று
வெளியே வருகின்றன. அவ்வாறு வெளிவந்த நட்சத்திரங்களில் ஒரு நட்சத்திரம், மறுபடியும்
வெடித்து அதனின்று ஐந்து நட்சத்திரங்கள் வெளியே வருகின்றன. அதனின்று வந்த
நட்சத்திரங்களில் ஒன்று வெடித்து அதினிலிருந்து ஐந்து நட்சத்திரங்கள் புறப்பட்டுச்
சென்று மறைந்து விடுகின்றன.
அதுதான் ஏழாம்
முத்திரையாகும். உலகத்தின் காலத்தை அது முற்றுப் பெறச் செய்கிறது. இதனுடைய காலத்தை
அது முற்றுப் பெறச் செய்கின்றது. அதனுடைய காலத்தை அது முடிவடையச் செய்கின்றது.
இதனுடைய காலத்தை அது முடிவடையச் செய்கின்றது. அது காலத்தை முடிக்கிறது. ஏழாம்
முத்திரையில் எல்லாமே முடிவடைகின்றன.