ஜூன் 20,
1964, சனிக்கிழமை மாலை
முனிசிபல் ஆடிட்டோரியம்,
டோபிகா, கான்ஸாஸ், அமெரிக்கா
பரிசுத்த மாற்கு எழுதின சுவிசேஷத்திலிருந்து வாசிப்போம்.
நான் வாசிப்பதற்கு தேர்ந்தெடுத்துள்ள மாற்கு 10:46-ம் வசனத்திலிருந்து வாசித்துவிட்டு,
பிறகு அதைப்பற்றி சிறிதுநேரம் பேசலாம் என நம்புகிறேன். நாம் வாசிக்கும் போது தேவனுடைய
வார்த்தைக்குக் கனத்தைச் செலுத்தும்படியாக எழுந்து நிற்போம். அந்த வார்த்தை தேவனாயிருந்தது.
நாம் யாவரும் அதை அறிந்திருக்கிறோம். நீங்கள் எழுந்து நின்று அதற்கு பயபக்தியைச் செலுத்துங்கள்.
தேசத்தின் கொடி பறக்கும்போது எழுந்து நின்று வணக்கம் செலுத்தும் நாம் தேவனுடைய வார்த்தை
வாசிக்கப்படுகையில் ஏன் அப்படிச் செய்யக்கூடாது?
பின்பு அவர்கள் எரிகோவுக்கு வந்தார்கள். அவரும் அவருடைய
சீஷர்களும் திரளான ஜனங்களும் எரிகோவை விட்டுப் புறப்படுகிறபோது திமேயுவின் மகனாகிய
பர்திமேயு என்கிற ஒரு குருடன், வழியருகே உட்கார்ந்து, பிச்சை கேட்டுக் கொண்டிருந்தான்.
அவன் நசரேயனாகிய இயேசு வருகிறாரென்று கேள்விப்பட்டு:
இயேசுவே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று கூப்பிடத் தொடங்கினான்.
அவன் பேசாதிருக்கும்படி அநேகர் அவனை அதட்டினார்கள்.
அவனோ: தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று முன்னிலும் அதிகமாய்க் கூப்பிட்டான்.
இயேசு நின்று, அவனை அழைத்து வரச்சொன்னார். அவர்கள் அந்தக் குருடனை அழைத்து திடன்கொள்,
எழுந்திரு, உன்னை அழைக்கிறார் என்றார்கள்.
உடனே அவன் தன் மேல்வஸ்திரத்தை எறிந்துவிட்டு, எழுந்து,
இயேசுவினிடத்தில் வந்தான்.
இயேசு அவனை நோக்கி: நான் உனக்கு என்ன செய்யவேண்டும்
என்றிருக்கிறாய் என்றார். அதற்கு அந்தக்குருடன் ஆண்டவரே, நான் பார்வையடைய வேண்டும்
என்றான்.
இயேசு அவனை நோக்கி: நீ போகலாம், உன் விசுவாசம் உன்னை
இரட்சித்தது என்றார். உடனே அவன் பார்வையடைந்து வழியிலே இயேசுவுக்குப் பின் சென்றான்.
1. நாம்
ஜெபம் செய்வோமாக. மகத்தான பரிசுத்த ஆவியானவரே, இன்றிரவு இந்த சிறு நாடகம் மூலமாக உமது
வார்த்தையை எங்களில் உயிர்பெறச் செய்யும். நாங்கள் இந்தக் காட்சியை உயிருள்ளதாகக் காண்பதால்
தேவன் இன்னும் ஜீவிக்கிறார் என்றும் அவர் நேற்றும்
இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்னும் விசுவாசத்தை அது கொண்டு வருவதாக. இதை
எங்கள் இரட்சகரும் அவருடைய நேசகுமாரனுமாகிய இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென்.
உட்காருங்கள்.
2. இன்றிரவு,
நம்முடைய பொருள், தேவன் ஒரு அருளப்பட்ட ஆட்டுக்குட்டியை உடையவராய் இருக்கிறார் என்பதாகும்.
3. இயேசு,
எரிகோ பட்டணத்திற்குள் நுழைகிற காட்சியைப் பார்க்கிற இவ்வேளையில், இந்தக் காலை நேரத்தில்,
அது நமக்கு மிகவும் மகத்தான ஒரு நேரமாகும். சகேயு என்னப்பட்ட ஒரு குள்ளமான மனிதன் ஒரு
காட்டத்தி மரத்தில் ஏறித் தன்னைத் தான் மறைத்துக் கொண்டான் என்று பார்க்கிறோம். ஏனெனில்
அவன், இயேசு ஒரு தீர்க்கதரிசி என்று விசுவாசிக்கவில்லை.
ஆனால் அவனுடைய மனைவி இயேசுவினுடைய சீஷியாக இருந்தாள். அவள் அவனுக்காக ஜெபித்துக் கொண்டிருந்தாள்.
இயேசு சரியாக அந்த மரத்தினடியில் வந்தபோது நின்று அண்ணார்ந்து பார்த்து அவனைப் பெயர்சொல்லி
அழைத்து, “சகேயுவே, சீக்கிரமாய் இறங்கி வா, நான் இன்று உன் வீட்டில் தங்கப்போகிறேன்”
என்றார். இன்றிரவு அது நமக்கு ஒரு நல்ல கருப்பொருளாக இருக்குமென்று நினைக்கிறேன். நாம்
இங்கிருக்கிற இவ்வேளையில் நாம் இயேசுவைப் பின் தொடருவோமாக. அவருடன் நாம் எரிகோவுக்குள்
செல்ல விரும்புகையில் இன்று காலையில் அவர் நம்முடன் கூட வரும்படியாக அவரை அழைப்போம்.
நாம் எரிகோவில் அவரை பின் தொடருவோமாக.
4. இப்பொழுது,
இன்றிரவு நம்முடைய காட்சி எரிகோவில் இதே இடத்தில் சகேயுவின் வீட்டில் இயேசு உணவருந்திக்
கொண்டிருப்பதிலிருந்து ஆரம்பமாகிறது. அது ஒரு அக்டோபர் மாதத்தின் ஒரு குளிரான நாளாயிருந்தது.
அது ஒரு அமைதியான, மலையினின்று வரும் காற்று வீசிக்கொண்டிருக்கும் ஒரு அதிகாலைப் பொழுதாயிருந்தது.
ஒவ்வொரு வருடமும் இக்காலத்தில் யூதேயா முழுதும் காலை வேளைகளில் குளிர் நிறைந்து இருக்கும்.
5. மேலும்
இப்பொழுது இருப்பதைவிட யூதேயா நாட்டில் அக்காலத்தில் அதிகமான பிச்சைக்காரர்கள் இருந்தார்கள்.
தெருமுனைகளில் சுற்றிலும் பிச்சை எடுப்பார்கள். நான்... நான்... அந்தத் தேசத்தின் எல்லாத்
தெருக்களிலும் பிச்சைக்காரர்கள் இருப்பார்கள். ஓ, இந்தியா மற்றும் ஆப்பிரிக்கா, மற்றும்
அநேக இடங்களில் இன்றும் முடமான, நலிந்தவர்கள், குருடர், இயலாதவர்களாய் பிச்சையெடுக்கிற
வர்களாயிருக்கின்றனர். சில சமயங்களில் தங்களின் ஜீவனத்திற்கு ஏதும் கிடைக்காதவர்கள்
கூட அங்கே பட்டினியோடிருந்து பிச்சை எடுக்கிறார்கள்.
6. நான்
இந்தியாவில் இருந்தபோது இந்த ஜனங்களால் எனக்களிக்கப்பட்ட கொஞ்சம் டாலர்களை பணமாக மாற்றிக்
கொண்டு தெருக்களில் சென்றேன். மேலும் அதை அவர்களுக்கு கொடுக்க முயற்சித்தபோது அவர்கள்
(அதைப் பெற்றுக்கொள்ள - மொழிபெயர்ப்பாளர்) என்னைச் சூழ்ந்து கொண்டபடியினால் அவர்களிடத்திலிருந்து
என்னை வெளியே கொண்டுவர இராணுவப்பிரிவை அழைக்க வேண்டியதாயிருந்தது. ஒரு ஏழைப் பெண்மணி
பசியால் சாலையில் மரித்துக்கொண்டிருந்தாள். சிறு குழந்தை ஒன்று பசியினால் எலும்பும்
தோலுமாகக் காணப்பட்டது. மண்டைஓடு மட்டும் உடலுடன் ஒட்டிக்கொண்டிருந்தது. உங்கள் கரங்களை
நீட்டுவீர்களானால், அதற்கு அன்பை வழங்குவீர்களானால் அது மரித்துப் போகாது. இந்த ஒரு
குழந்தையை காப்பாற்றுவீர்களானால் அந்த குழந்தை என்னவாகும்? இந்தக் குழந்தையைப் பற்றிய
காரியம் என்ன? அந்தக் குழந்தையைப் பற்றியது...? ஓ, என்னே, அது... நீங்கள் - நீங்கள்
இங்கு குப்பைத் தொட்டியில் போடும் மீதியான பொருட்களைத் திரட்டினால் எறக்குறைய அவர்களனைவரையும்
போஷிப்பதற்குப் போதுமானதாக இருக்கும். உலகிலுள்ள மற்ற நாடுகள் பசியால் வாடும்போது நம்முடைய
நாட்டின் செழிப்பைச் சற்றும் சிந்தித்துப் பார்க்கக் கூடாதவர்களாயிருக்கிறார்கள்.
7. அவ்விடம்
முழுவதும் பிச்சைக்காரர்களால் நிறைந்திருந்தது. எருசலேமிலிருந்து எரிகோவுக்கு வந்தால்
நுழைவாயிலாக இருக்கும் வடக்குவாயிலின் வழியாய் பிச்சைக்காரர்கள் வழக்கமாக வரும் இடத்திலிருந்து
நம் இன்றைய காட்சி ஆரம்பமாகிறது. எரிகோ ஒரு செழிப்பான பட்டணமல்ல. ஆனால் எருசலேமோ தன்னில்
தானே நன்றாய் ஸ்தாபித்துக்கொண்ட, தேவாலயத்தைக் கொண்ட புகழ்வாய்ந்த, எல்லோரும் அங்கு
வந்து சேருகின்ற ஒரு ஈர்க்கும் பட்டணம். அங்கிருந்து வரும் மக்களும் செல்வசெழிப்பு
மிக்கவர்களாகவே இருப்பர். வியாபாரிகளும் மற்றவர்களும் பகல் வேளைகளில் (எரிகோவின்- மொழிபெயர்ப்பாளர்)
உள்ளே வரும்போது இந்தப் பிச்சைக் காரர்கள் அங்கே படுத்துக்கொண்டிருப்பார்கள். பிச்சை
எடுக்கவும் உணவிற்காகவும் அவர்கள் ஒவ்வொருவரும் படுத்துக்கிடக்க வேண்டும் என்பது எழுதப்படாத
சட்டம் என்பது அவர்களுக்குத் தெரியும்.
8. அந்த
வியாபாரிகள் பட்டணத்திற்குள் வரும்போது, அந்தப் பிச்சைக்காரர்கள் சீக்கிரமாக அங்கே
செல்ல வேண்டும். ஏனெனில் ஒருவர் ஒரு நாளில் ஒரு பிச்சைக்காரனுக்கு மட்டும் உதவி செய்யக்கூடும்.
அவர்கள் வெளியே கடந்து செல்வதற்குள் அவர்களுடைய சட்டைப்பையில் ஒரு காசைப் போட்டு செல்வார்கள்.
அந்தக்காலம் ரோமானியர்கள் பாலஸ்தீனாவை ஆட்சிசெய்த காலமாகும். அவர்களுடைய பணம் ரோமன்
தினார் ஆக இருந்தது. அதனால் அவர்கள் அந்த நாளில் இந்தக்காசை தாங்கள் முதலில் பார்க்கின்ற
பிச்சைக்காரனுக்குக் கொடுப்பதற்கு அந்தக்காசைத் தர்மமாகப் போடுவார்கள். அவர்கள் ஒவ்வொரு
பிச்சைக்காரனுக்கும் கொடுக்கும்படி போதுமானதாக வைத்திருக்க முடியாது. அதனால் அவர்களை
முதலில் சந்திக்கும் அந்தப் பிச்சைக்காரன் அந்த நாணயத்தைப் பெற்றுக்கொள்ளலாம். ஒவ்வொரு
நாளிலும் வணிகர்களும் சுற்றுலாப் பயணிகளும் மற்றவர்களும் பட்டணத்திற்குள் நுழைவதற்குமுன்பே
அந்தப் பிச்சைக்காரர்கள் முன் வாயிலில் இடம் பிடித்து விடுவார்கள். குறிப்பாக சுற்றுலா
பயணிகள் உள்ளே நுழைகின்ற அந்த வடக்கு நுழைவாயிலில் படுத்துக் கொண்டிருப்பார்கள்.
9. நாம்
இவ்விதமாகப் பேசிக்கொண்டிருக்கும் இந்தக் காலை வேளையிலே சூரியன் உதித்து மேலே எழும்புகிறது.
ஏறக்குறைய ஒன்பது மணிக்கு ஒரு குருடனான பிச்சைக்காரன் தாமதமாக வந்தான்.
10. அவன்
தொல்லையுடைய ஒரு இரவைக் கொண்டிருந்தான். அவன் ஒரு குருடன். அவன் சிறு பையனாக இருந்த
போதிலிருந்தே அவன் குருடனா யிருக்கிறான். அவன் தாமதமாக வந்திருந்தான். அவன் நேரத்தோடு
எழுந்திருக்கவில்லை. ஏனெனில் முந்தின இரவெல்லாம்
அவன் தன்னால் மீண்டும் பார்க்க முடியும் என்று கனவு கண்டு கொண்டிருந்தான். அவன்
படுக்கையில் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தான். அது... அது அவனால் பார்க்கமுடியும்
அவனால் பார்க்கமுடியும் என்று அவன் நினைத்து, ஆனால் விழித்தபோது பார்க்க முடியாதவனாய்
ஏமாற்றத்துடன் எழுந்தான். உண்மையில் அது வெறும் கனவு மட்டுமே.
11. அவன்
தன்னுடைய இடத்திற்குப்போக ஆயத்தப்பட்டான். அவன் அங்கே சென்றடைந்தபோது... (இப்பொழுது
இது ஒரு நாடகம். என்னுடைய கருத்தைப் புரிந்துகொள்ளும்படியாக) அங்கே யாருமே இல்லை. அங்கே
ஏதோ ஒரு விசித்திரமான காரியம் நடந்திருந்தது. இன்னும் ஒன்பதரை அல்லது பத்து மணிகூட
ஆகியிருக்கவில்லை. மேலும் அங்கு பிச்சைக்காரர்கள் ஒருவரும் இருக்கவில்லை. வழக்கமாக
எல்லோரும் அவரவருடைய இடத்தில் இருப்பார்கள். அந்த நகரத்தில் என்ன நடந்திருந்தது என்று
அவன் அறியாதவனாயிருந்தான். அதைப்பற்றிதான் இந்தக் காலையில் காலை உணவின்போது பேசினோம்.
இயேசு வாயிற்கதவிலிருந்து பட்டணத்திற்குள் சென்றிருந்தார். அது என்னவென்று அறிவதற்காக
ஜனங்கள் போய்க் கொண்டிருந்தார்கள். மற்றும் பிச்சைக்காரர்களும் அங்கு சென்றிருந்தார்கள்.
அவன் தாமதமாக வந்திருந்தபடியினால் அவன் அதை அறிந்திருக்கவில்லை. அதனால் அவன் ஒவ்வொருவரையும்
பெயர்சொல்லிக் கூப்பிட ஆரம்பித் திருப்பான் என்று பார்க்கிறோம். ஆனால் அங்கே... அங்கே
ஒருவருமில்லை. ஒரு வகையான தனிமையான சூழல்... அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒருவேளை
அந்த ரோமானிய அதிகாரிகள் அவர்களை அவர்களுடைய இடத்திலிருந்து துரத்திவிட்டிருக்க வேண்டும்
அல்லது ஏதோ ஒன்று நடந்திருக்க வேண்டும். அதனால்
அவனால் யாருடைய சத்தத்தையும் கேட்க முடியவில்லை. அதனால் அவன்... அது ஒரு வகையான
மிகக்குளிர்ச்சியான வேளையாயிருந்தது. அத்துடன் அவன் கந்தையான ஆடையை உடுத்தியிருந்தான். அவனுடைய ஆடைகள் மிகவும்
கிழிந்து போயிருந்தது.
12. சூரிய
வெயில்படும் ஒரு பாறையை அவன் கண்டுபிடிக்க சுற்றுமுற்றும் தட்டுத் தடவினான். அந்தக்
கற்கள் யோசுவாவின் நாட்களில் தேவன் அந்தப் பழைய மதிலை அசைத்தபோது விழுந்ததாக இருக்கவேண்டும்.
அவன் இந்தக் கல்லில் அமர்ந்து முந்தின இரவின் கனவைப்பற்றி சிந்திக்க முயன்று கொண்டிருந்தான்.
அவன் உண்மையிலேயே பார்க்க முடிந்தால் எவ்வளவு உண்மை யானதாக இருக்கும்? அவனால் பார்க்க
முடியவில்லை. அவன் குருடன். அவன் இந்தக்காரியங்களைக் குறித்து சிந்திக்கத் தொடங்கினான்.
அவனுடைய மனம், தான் சிறுவனாயிருந்த பருவத்தை நோக்கிப் பின்னோக்கிச் சென்றது.
13. நீங்கள்
அறிவீர்கள். நான் – நான் அப்படிச் செய்ய விரும்புவதுண்டு. கடந்தவைகளைச் சிந்திப்பதுண்டு.
சந்தோஷமான நிகழ்வுகள், வெற்றிகரமானவைகள்... தேவனில் வெற்றி பெற்றவைகள், அந்த நேரங்கள்!
14. மேலும், பர்த்திமேயு என்னும் பெயரால் நாம் அறிந்து கொண்டிருக்கும்
அவன் அந்த இரவு அவன் பார்வை பெற்றுக் கொண்டது போன்று கனவு காண்கிறான். மேலும் அவன்
தான் உண்மையாகவே பார்க்கமுடிந்தால் அது எவ்வளவு உண்மையாயிருக்கும் என்று சிந்திக்கத்
துவங்கினான். அவன் நினைத்தான்... “ஓ நான் எவ்வளவோ காலமாக குருடனாக இருந்திருக்கிறேன்.
மீண்டும் சுற்றிலும் எப்படிச்செல்வது என்று எனக்குத் தெரியவில்லை.” அதனால் அவன் அனேக
ஆண்டுகளுக்கு முன்பிருந்த அதாவது அவனுடைய சிறு வயதிலிருந்தபோது நடந்தவைகளை சிந்தித்துபார்க்க
அரம்பித்தான். அவன் அங்கே குன்றின் மேல் ஏறிவிளையாடுவது வழக்கம். அது யோர்தான் நதியின்
கரையில் அமைந்திருந்தது. அங்குள்ள பள்ளத்தாக்கில் தானியங்களைப் பயிரிடுவார்கள். அவன்
அந்தக்குன்றின் பக்கத்தில் வசித்துவந்ததாக நாம் சொல்வோம். அது எவ்வளவு அருமையாக இருந்ததென்று
ஞாபகப்படுத்திப் பார்க்கிறான். அந்த வசந்த காலத்தில் சிறிய பூக்கள் அங்கு வளரும்போது
அவன் எப்படி கைநிறைய அவைகளைப் பறிப்பான் என்றும் அங்கு உட்கார்ந்து அந்த நீல வானத்தைப்
பார்ப்பதையும் ஞாபகப்படுத்திப் பார்த்தான்.
15. குருட்டுத்
தன்மை என்பது பயங்கரமான ஒன்று என்பது உங்களுக்குத் தெரியும். நான் ஒரு குருடனைப்பார்க்கும்
போது என் இருதயம் அவர்களுக்காக இரங்கும். ஆனால் அவ்வாறிருப்பினும் எனக்கு மற்றும் ஒரு
குருட்டுத் தன்மையைக்குறித்துத் தெரியும். அது ஆவிக்குரிய குருட்டுத்தன்மையாகும். அது
மோசமானது. தேவன் எவ்வாறாகத் தம்மைப் பார்க்குபடி மனிதனை உண்டாக்கியிருக்கிறார்! ஆனால்
அவர்கள் அவரைக் காணக்கூடாதவர்களாயிருக்கின்றனர்.
16. ஒரு
முறை சின்சினாட்டியிலுள்ள மிருகக்காட்சி சாலையில் நான் இருந்தேன். நானும் என்னுடைய
மகளும் அங்கிருந்தோம்... நான் வெளியில் சென்று சுற்றிப்பார்ப்பதில் மிகவும் பிரியப்படுவேன்
என்பது உங்களுக்குத் தெரியும். அங்கு நான் ஒரு கழுகைப் பார்த்தேன். அது அங்கு கூண்டில்
பிடித்து அடைக்கப் பட்டிருந்தது. அது பரிதாபத்துக்குரியதாயிருந்தது. நான் ஒரு சத்தத்தைக்
கேட்டேன். என் மகள் சாராவைக் கைகளில் பிடித்தவாறே நாங்கள் அந்தக் கூண்டினருகில் சென்றோம்.
இந்த மகத்தான பெரிய பறவை முகமெல்லாம் இரத்தம் தோய்ந்தும், இறகுகள் எல்லாம் காயப்பட்டும்
இருத்தது. நான், “என்ன ஒரு பரிதாபமான காட்சி!” என்று எண்ணினேன்.
17. அது
கீழிறங்கி, கூண்டினுள் குறுக்காகச் சுற்றிலும் நடந்தது. அது தான் பலவீனமாகிப்போன இறகுகளினால்
கூண்டிலிருந்து வெளியேறும்படியாக சிறகை அடித்து எழும்ப நினைத்து சிறகடித்தது. ஆனால்
அதன் தலை கூண்டின் ஒரு பக்கமாய் மோதி மீண்டும் கீழே விழுந்தது. அவ்வாறு மோதியதில் அதன்
இறகுகள் முறிந்து விழுந்தன. அது பிடித்து அடைக்கப்பட்டிருந்தது. அதன் முயற்சிகளினால்
மீண்டும் மீண்டும் தரையில் விழுந்தது. அது அதன் கண்களை உருட்டி, தான் இருக்கவேண்டிய
நீல வானத்தைப் பார்த்தது. அது வானத்துக்குரிய பறவை என்று உங்களுக்குத் தெரியும். ஆனால்,
நீங்கள் பாருங்கள். மனிதனின் புத்திசாலித்தனமான செயல் அதைக் கூண்டில் அடைத்துவிட்டது.
18. நான்
அங்கு நின்று அதைப்பார்த்துக் கொண்டிருந்தேன். “நான் எனக்கு (அந்தக் கழுகை வாங்க- மொழிபெயர்ப்பாளர்)
முடியுமானால் அதற்காக எதையும் கொடுப்பேன்.
அதை வாங்க முடியுமானால், அதன் கட்டுகளை அவிழ்த்து, 'போய்விடு! வயதான நன்பனே,
நீ அதை விரும்புவாய், நானும் அதை விரும்புகிறேன். விடுதலையாகி அங்கே சென்று விடு, நீ
மேலே உள்ள அவ்விடத்தைச் சேர்ந்தவன். நீ அதற்காகவே பிறந்திருக்கிறாய்' என்பேன் என்று
நினைத்தேன். அது (இப்பொழுது) நான் பார்த்ததிலேயே மிகவும் பரிதாபமான காட்சி என்று நினைத்தேன்.
19. நான்
சாராவை என் கைகளால் பிடித்துக் கொண்டு, “தேனே, நீ உன் கண்களால் காணக்கூடிய மிகவும்
மோசமான காட்சி அங்கே இருக்கிறது” என்றேன்.
20. நான்
அங்கு நின்று அதைவிட மோசமான காட்சியை எனக்குத் தெரியும் என்று நான் நினைத்தேன். அங்கே
குன்றின் மீது மனிதர்கள் மதுப்புட்டிகளுடனும், பெண்கள் குட்டைப் பாவாடையணிந்து சிகரெட்டைப்
புகைத்துக் கொண்டு இருப்பதைப் பார். அவர்கள் மெய்யாகவே தேவனுடைய குமாரர்களும், குமாரத்திகளுமாய்
பிறந்திருக்கையில் அவர்கள் அங்கே சாத்தானால் பிடிக்கப்பட்டு பாவத்தின் கூண்டில் அடைத்து
வைக்கப் பட்டுள்ளர்.ஒரு வேளை சில சபைகளைச் சேர்ந்தவர்களாயும், பாடற்குழுவில் பாடுகிறவர்களாயிருந்தும்,
பரிதாபமானவர் களாயும், ஆவிக்குரிய குருடராயும் பாவத்தின் கூண்டில் அடைக்கப்பட்டுள்ளவர்களாயிருக்கின்றனர்.
21. மேலும்
பர்திமேயு தன் இளம் பருவத்தைக்குறித்து நினைக்க முயற்சிக்கையில் எப்படியாக மாலையில்
2 மணியளவில் அவனுடைய அழகான சிறிய யூதத்தாய், “பர்திமேயு” என்று அழைப்பாள் என்று எண்ணினான்.
ஏறக்குறைய அவளுடைய அதே சத்தத்தை அவனால் கேட்க முடிந்தது. அவனுடைய சத்தம் குன்றின் மேல்
எதிரொலிப்பதையும், அதைக்கேட்டு அவன் ஓடி வருவதையும் நினைத்தான். அவள் வீட்டின் முற்றத்துக்கு
வந்து தன்னை அப்படியே தன் கைகளில் ஏந்தி பழைய சாய்வு நாற்காலியில் அமரவைப்பாள்; அவன்
எவ்வாறாக தன் தாயின் அழகான கண்களைப் பார்ப்பானென்றும், அவள் என்ன ஒரு அழகான தாய் தனக்கிருந்தாள்
என்றும் நினைத்துப் பாத்த்தான். மேலும் தன்னை அவள் எவ்வாறு தாலாட்டித் தூங்க வைப்பாள்
என்றும் நினைத்துப் பார்த்தான். அவள் எவ்விதமாகத் தங்கள் ஜனங்களின் கதைகளை கூறியும்;
அவர்களுக்குள்ளிருந்த தேவனின் மகத்தான தீர்க்கதரிசிகளைக் குறித்ததுமான கதைகளைக் கூறியும்
தன்னைத் தூங்கவைப்பாள் என்றும் நினைத்துப் பார்த்தான். அவன் அந்தக் கதைகளை எவ்வளவாய்
விரும்பினான்; அதைக் கேட்பதற்கு எவ்வளவாய் விருப்பம் கொண்டிருந்தான்!
22. இவ்விதமாக
வேதத்திலுள்ள கதைகளைக் (பிள்ளைகளுக்கு) கூறுவதற்குப் பதிலாக பிள்ளைகளைத் தொலைக்காட்சிப்
பெட்டிகளுக்கு முன்னால் உட்காரச் செய்து ஹாலிவுட்டின் திருட்டுகளைக் குறித்து தாய்மார்கள்
பிள்ளைகளுக்குக் காட்டுவது எவ்வளவு மிகவும் மோசமான காரியமாயிருக்கிறது?
23. ஆனால்
அவள் ஒரு உண்மையான எபிரெயத் தாயாக இருந்து அப்படிப்பட்ட சிறு வேதக்கதைகளை சொல்லிக்
கொண்டிருப்பாள். அவர்கள் (முற்பிதாக்கள் – மொழி பெயர்ப்பாளர்) எகிப்தில் அடிமைகளாக
இருந்தபோது தேவன் மகத்தான தீர்க்கதரிசியாகிய மோசேயை அனுப்பினதைக் குறித்துக் கூறுவாள்.
தேவன் ஆபிரகாமிடம் அவர்களை அங்கிருந்து விடுதலையாக்குவதாக வாக்களித்திருந்தார். மேலும்
அவர் தாம் அவர்களில் எழுப்பிய மோசே என்ற ஒரு – ஒரு – ஒரு மகத்தான தீர்க்கதரிசிக்குத்
தரிசனமானார். மேலும் அவர் ஒரு அக்கினி ஸ்தம்பத்தின் ரூபத்தில் வந்து, மோசேயை எகிப்திற்கு
அனுப்பி, பலத்த மகா பெரிய அடையாளங்களினாலும், அற்புதங்களினாலும் அவர்களை வெளியே அழைத்துக்கொண்டு
வந்தார். மேலும் அவர்கள் வனாந்தரத்தில் கீழ்ப்படிதலுடன் வந்தபோது அங்கு அப்பங்களோ எதுவுமே
சாப்பிட இல்லாதபோது, எப்படியாக தேவன் வானத்திலிருந்து மன்னாவைப் பெய்யப் பண்ணினார்
என்றும் கூறினாள்.
24. “அம்மா,
ஒரு நிமிடம், தேவன் தம்முடைய தூதர்களைக் கொண்டு ஆகாயத்தில் அடுப்புகளை உண்டாக்கி, தூதர்களை
அதிகப்படியான நேரம் வேலை செய்யவைத்து அப்பங்களை ஆயத்தம் செய்து அங்கிருந்து பெய்யப்
பண்ணியிருப்பார்” என்று சிறு பர்திமேயு கூறியதை என்னால் கேட்க முடிகிறது.
25. “இல்லை,
தேனே, அதை அறிவதற்கு நீ மிகவும் இளம் பிள்ளையாயிருக்கிறாய். பார், யேகோவா அதைச்செய்ய
வேண்டியதில்லை. யேகோவா அடுப்புகளைக் கொண்டிருக்க வேண்டியதில்லை. அவர் சிருஷ்டிகர்.
அவர் சும்மா பேசினாலே, அது அப்படியே உண்டாகும்.”
26. இயேசுவும்
அதே காரியத்தைச் செய்பவராக இருக்கிறாரே! அப்படியானால் அதைக் குறித்து நாம் என்ன கூறப்
போகிறோம்? அங்கே அவரைக்குறித்து கண்டிப்பாக ஏதோ தெய்வீகம் இருந்தாக வேண்டும். அவர்
ஏதோ வகையில் யேகோவாவிற்கு ஒப்பானவராயிருக்க வேண்டும். இன்று சிலர் அவரை ஒரு சாதாரணத்
தீர்க்கதரிசியாகவோ, அல்லது சாதாரண மனிதராகவோ, ஒரு தத்துவ ஞானியாகவோ, ஒரு நல்ல போதகராகவோ
ஆக்க முயற்சிக்கின்றனர். அவர் மாம்சத்தில் வெளிப்பட்ட தேவனேயன்றி அதற்கு எவ்விதத்திலும்
கீழானவர் அல்ல.
27. அங்கே
அவள், அவர்கள் எவ்வாறாக பெரிய வனாந்தரத்தில், வசந்தகாலத்தில், ஏப்ரல் மாதத்தில் யூதேயா
தேசத்தின் எல்லா மலைகளிலுமுள்ள பனிக்கட்டிகள் உருகி யோர்தானில் வெள்ளமாய் கரைபுரண்டோடும்போது
அதனைக் கடந்துவந்தார்கள் என்பதைப் பற்றிக் கூறினாள். ஆனால் சின்ன பர்திமேயுவோ யேகோவா
அவர்களை வழிநடத்தக் கூடாதவர்போல் தோன்றுகிறதே; வெள்ளம் யோர்தானில் கரைபுரண்டு ஓடும்
கொடிய நாட்களில் அந்த நேரத்தில் அவர்கள் கடந்துபோக அவர் எவ்வாறு ஒரு பாலத்தைக் கட்டமுடியும்?
அந்த சிறிய யோசுவா... அது யோசுவா அல்ல... பின்பு அவன், “அம்மா! பிறகு அவர் அவர்களை
எவ்வாறு கடக்கச் செய்தார்?” என்றான்.
28. “தேனே,
யேகோவா இன்னும் சிருஷ்கராயிருக்கிறார் என்பதை நினைத்துக்கொள். அவர் சும்மா பேசினாலே
அந்த ...” என்றாள்.
29. தேவன்
காரியங்களைச் செய்ய விரும்பும் வழி... அங்கே குழப்பமிருக்கும்போது தம்மை தேவன் என்று
காண்பிக்கிறார். அந்த வசந்த காலத்தில் தானே! வெய்யிற் காலத்தில் நீங்கள் யோர்தானை சுலபமாகக்
கடந்துவிடலாம். அங்கே நகரத்திற்குக் கடக்கும் துறை ஒன்று உண்டு. வேவுகாரர்கள் இந்த
துறை வழியாக உட்சென்று, திரும்பிச் சென்றனர் என்று நாமறிவோம். ஆனால் அந்தப் பள்ளத்தாக்கு
முழுவதையும் வெள்ளம் கரைபுரண்டு சென்ற வேளையில் தேவன் தமது வல்லமையினால் பரலோகத்திலிருந்து
இறங்கி யோர்தானில் ஒரு உலர்ந்த பாதையை உண்டாக்கினார். அதற்குள் கற்கள் கீழே இருந்தது.
அவைகளை யோசுவா எடுத்து யேகோவாவின் வல்லமைக்கு சான்று பகரும் தூண்களாய் நிறுத்தினான்.
அவருடைய ஜனங்கள் எவ்வாறாகக் காக்கப்பட்டனர்! மேலும் அவர்...
30. மேலும்
ஒன்றை அவன் அதிகமாய் விரும்பினான். அது சூனேமிலிருந்த ஸ்திரீயை பற்றியது. அவன் அதை
நினைத்துப் பார்த்தான். வழக்கமாக அவனுடைய தாய் சூனேம் ஸ்திரீயைக் குறித்த கதையைக் கூறுவாள்.
மகத்தான தீர்க்கதரிசியாகிய எலியாவின் நாட்களில் எவ்வாறாக அந்த ஸ்திரீ தீர்க்கதரிசியின்
மீது பற்றும், அன்பும் கொண்டிருந்தாள் என்பதைக் கூறினாள். ஆனால் அவள் (சூனேமியஸ்திரீ
- மொழிபெயர்ப்பாளர்) ஒரு இஸ்ரவேலைச் சேர்ந்த ஸ்திரீ அல்ல. அவள் ஒரு சூனேமிய ஸ்திரீயாயிருந்தாள்.
31. அவள்
எலியா தேவனின் மகத்தான தீர்க்கதரிசி என்று விசுவாசித்தாள். எனவே... ஒரு நாள் அவள் தன்
புருஷனிடம், “நம் வீட்டில் அவருக்கு ஒரு சிறிய அறையை கட்டி, அவரை உபசரிப்போம். ஏனெனில்
அவர் ஒரு பெரிய மனிதர்” என்றாள்.
32. ஒரு
நாள் எலியாவும் அவன் வேலைக்காரனாகிய கேயாசியும் அங்கு வந்து அவளுடைய உபசரிப்பைக் கண்டபோது,
எலியா கேயாசியிடம், “போய் அவளிடம், ‘என்ன வேண்டும், நான் ராஜாவிடத்திலாவது சேனாபதியிடத்திலாவது
ஏதாவது பேசவேண்டுமா?’ என்று கேள்” என்றான்.
33. அவள்,
“நான் என் ஜனத்தின் நடுவே சுகமாய்க் குடியிருக்கிறேன்” என்றாள்.
34. ஆனால்
கேயாசி, “அவள் மலடியாயிருக்கிறாள். அவள் வயது சென்றவள். அவள் புருஷனும் வயதுசென்றவன்.
அவர்களுக்குப் பிள்ளைகள் இல்லை” என்றான். மேலும் அவன் சொன்னான்...
35. எலியா
கண்டிப்பாக ஒரு தரிசனம் கண்டிருக்க வேண்டும். அவன், “அவளிடம் போய் அவள் ஒரு குழந்தையைப்
பெறப் போகிறாள். இது கர்த்தர் உரைக்கிறதாவது. ஒன்பது மாதத்தில் ஒரு சிறுபையன் இருப்பான்”
என்றான்.
36. (ஒலி
நாடாவில் காலியிடம் – ஆசிரியர்) ...வயதான அவன், தன் தகப்பனுடன் வயலில் இருந்தான். அவனுக்கு
வெயிலின் தாக்கம் உண்டாகியிருக்க வேண்டும். அவன் அழுது, ‘என் தலை நோகிறது; என் தலை
நோகிறது” என்றான். தகப்பன் அவனை வீட்டுக்கு அனுப்பினான். அவன் தாய் அவனைத் தன் மார்பில்
சாய்த்து தாலாட்டினாள். அவனுக்குக் கொடுக்கவேண்டிய நிவாரணமளிக்கும் அனைத்தையும் அவள்
கொடுத்திருக்கக் கூடும். அவனுக்குத் தலைநோவு மோசமாகி இறுதியாக மத்தியானத்தில் அவன்
மரித்தான்.
37. ஆனால்
அந்த சிறு தாய் எவ்விதத்திலும் தோல்வியடையவில்லை! அந்தப் பிள்ளையின் தகப்பனும் அண்டைவீட்டாரும்
வந்து அழுது கொண்டிருந்தனர். ஆனால் அவள் புறஜாதியாளாயிருந்த போதிலும் எபிரேய தீர்க்கதரிசியான
அவனிடம் இன்னும் விசுவாச முடையவளாயிருந்தாள். அவள், “எனக்கு ஒரு கோவேறு கழுதையின்மேல்
சேணம் வைத்துக்கொடு. மேலும் – மேலும் – அதன் ஓட்டத்தை எங்கும் நிறுத்தாதே; கர்மேல்
பர்வதத்தின் மேல் தீர்க்கதரிசி இருக்கும் இடம் வரைக்கும் எங்கும் ஓட்டத்தை நிறுத்தாதே”
என்றாள்.
38. அவனுடைய
புருஷன் அவளிடம், ‘இது அமாவாசியும் அல்ல, ஓய்வு நாளுமல்ல, அத்துடன் அவர் அங்கிருக்கமாட்டார்’
என்றான்.
அவள், ‘எல்லாம் நன்றாகவே இருக்கும்’ என்றாள்.
அவன், ‘சரி, போ’ என்றான்.
39. அவள்
வருவதை எலியா கண்டபோது, அவனும் கேயாசியும் கெபியிலிருந்து வெளியே வந்து பார்த்து, வெளியே
நின்று கொண்டிருந்தனர். அவள் அங்கே வந்தாள். அவன், "அதோ, சூனேமிய ஸ்திரீ அங்கே
வருகிறாள். அவள் கலங்கியிருக்கிறாள். தேவன் அதை எனக்கு அறிவியாமல் மறைத்து வைத்தார்’
என்றான்.
40. உங்களுக்குத்
தெரியும். தேவன் தீர்க்கதரிசிகளுக்கு எல்லாவற்றையும் சொல்வதில்லை; அவர்கள் அறிந்துகொள்ள
வேண்டுமென்று அவர் விரும்புகிறதை மட்டுமே அவர்களுக்கு அறிவிக்கிறார்.
41. எனவே
அவன் – அவன் பார்த்து அவள்... “போய் அவளைக் கண்டு, நீ சுகமாயிருக்கிறாயா? உன் புருஷன்
சுகமாயிருக்கிறானா? உன் பிள்ளை சுகமாயிருக்கிறானா? என்று விசாரி” என்றான். மேலும் இது
எனக்கு விருப்பமான பகுதி ஆகும்.
42. கேயாசி
அவளை சந்தித்தபோது, “நீ சுகமாயிருக்கிறாயா? உன் புருஷன் சுகமாயிருக்கிறானா? பிள்ளை
சுகமாயிருக்கிறானா?” என்று கேட்டான்.
43. அவள்,
“எல்லாம் சரிதான்” என்றாள். தன் குழந்தை மரித்திருக்கிறது; தன் கணவன் அழுது கொண்டிருக்கிறான்;
அவளுடைய இருதயத்தின் ஆழத்தில் கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. ஆனால் அவள், ‘எல்லாம்
சரிதான்’ என்றாள். தேவன் ஏன் அந்தப் பிள்ளையை எடுத்துக் கொண்டார் என்பதனை கூறவும் அவளை
ஆசீர்வதிக்கவும் தேவனிடத்திலிருந்து நிச்சயமாக வெளிப்பாட்டை பெறக்கூடிய மனிதனுக்கு
முன்பாக அவள் வந்திருந்தாள். “கர்த்தர் கொடுத்தார்; கர்த்தர் எடுத்தார், கர்த்தருடைய
நாமத்திற்கு ஸ்தோத்திரம்.” அது ஏன் என்று அவள் அறிய விரும்பினாள்.
44. அவள்
வந்து எலியாவின் பாதத்தில் விழுந்தாள். கேயாசி அவளை விலக்கிவிட முயன்றான். ஏனெனில்
அப்படி செய்வது அவனுடைய எஜமானுக்குப் பிடிக்காத செயல். அங்கே நடந்த தவறான காரியத்தை
(பிள்ளையின் மரணத்தை – மொழிபெயர்ப்பாளர்) அவள் கூறினாள். எலியா அங்கு சென்று தன் உடல்
சிறு பிள்ளையின் மேல் இருக்கும் படியாக வைத்து சிறு பையனை உயிரோடு எழுப்பினான்.
45. இங்கு
நீங்கள் தாயின் விசுவாசத்தையும் கவனிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். எலியா படுத்திருந்த
கட்டிலில் குழந்தையின் சரீரத்தை கிடத்தினாள். நீங்கள் அதை அறிய நான்...
46. என்
எண்ணத்தின்படி பவுலின் எண்ணத்தை விளக்க விரும்புகிறேன். பவுலின் கச்சைகளையும், உறுமால்களையும்
அவனிடத்திலிருந்து எடுத்துக்கொண்டு போய் வியாதிஸ்தர் மேலும் நோயுள்ளவர்கள் மேலும் வைத்தனர்.
பவுல் வேதவசனத்துக்கு ஒவ்வாததைச் செய்தான் என்று நான் நம்பவில்லை. இங்கு தான் அவன்
இதைப் பெற்றுக்கொண்டான் என்று காண்கிறேன். எலியா கேயாசியிடம் முதலாவதாக சொன்ன காரியம்
என்ன? “என்னுடைய தடியை எடுத்துக்கொண்டு போய் குழந்தையின் சரீரத்தின் மேல் வை” என்பதே.
அவன் தொட்டதெல்லாம் ஆசீர்வதிக்கப்படும் என்று அவன் அறிந்திருந்தான். பவுல் அந்தக் கச்சைகளுக்காக
ஜெபிக்கவில்லை என்பதை நினைவுகூறுங்கள். ஜனங்கள் அவனுடைய கச்சைகளை (வியாதிஸ்தர்கள் மேல் போடும் படியாக –
மொழி பெயர்ப்பாளர்) வெறுமனே அப்படியே எடுத்துச் சென்றனர். அது அந்த ஜனங்களின் விசுவாசமாயிருந்தது.
47. எனவே
நீங்கள் பாருங்கள். அவன், “என் தடியை எடுத்துக்கொண்டு போ; வழியில் எவனாவது உன்னை வினவினாலும்
நீ ஒன்றும் பதில் கூறாமல் போய் தடியை குழந்தையின் சரீரத்தின் மேல் வை” என்றான்.
48. ஆனால்
அந்த ஸ்திரீயின் விசுவாசம் அவனுடைய தடியின் மேல் அல்ல; அது தீர்க்கதரிசியின் மேல் இருந்தது.
எனவே அவள், “நான் உம்மை விடுவதில்லை என்று உம்முடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன். நிச்சயமாக
நான் நான் உம்மை விடுவதில்லை” என்றாள்.
49. எனவே
எலியா அவளை ஆறுதல்படுத்தும்படியாக அவளுடன் செல்ல வேண்டியிருந்தது. அவன் உள்ளே சென்று
தன் சரீரம், மரித்துப் போன சிறு பிள்ளையின் சரீரத்தின் மேல் இருக்கும்படி கிடத்தி ஜெபித்தான்.
அப்பொழுது சிறுபிள்ளை ஏழுதரம் தும்மி உயிரோ டெழுந்தான்.
50. என்னே,
இந்த சிறு பிள்ளைக்கு அது என்ன ஒரு மகத்தான கதையாக இருந்திருக்கும்? இந்த பர்திமேயு
சிறுவனாக இருந்தபோது, இந்தக் கதையை அவன் கேட்க விரும்பிய காரணம் அது ஒரு சிறுபையனின்
உயிர்த்தெழுதலைப் பற்றியதாக இருந்ததினாலேயே. அது அவனுக்கு மிகவும் பிடித்தவைகளில் ஒன்றாக
இருந்தது.
51. “ஆனால்
அது அந்த கடந்துபோன நாட்களில் நடந்த ஒன்று” என்று அவனிடம் ஆசாரியர்கள் இப்பொழுது கூறினர்.
ஆனால் அந்தோ, அந்நாட்கள் இஸ்ரவேல் தன்னுடைய பெரிய, மகத்தான மனிதர்களைக் கொண்டிருந்த
நாட்களாயிருந்தது; பெரிய, மகத்தான தீர்க்கதரிசிகள் தேசத்தில் இருந்த நாட்கள். ஆனால்
ஆசாரியர்கள் “யேகோவாவுக்கு இனி தீர்க்கதரிசிகள் அவசியமில்லை என்று உங்களுக்குத் தெரியுமா?”
என்றனர். ஆசாரியர்கள் அதை மாத்திரம் அவ்வாறு கூறவில்லை. ஆனால் – ஆனால் அவர்கள், “யேகோவாவுக்கு
இனி தீர்க்கதரிசிகள் அவசியமில்லை. அவர் நமக்கு நியாயப்பிரமாணத்தைத் தந்திருக்கிறார்.
நாம் ஒரு சபையை, ஒரு ஆலயத்தை கட்டியுள்ளோம். அதுவே நமக்கு தேவையான எல்லாமாக இருக்கிறது
என்றும் கூறினர். அவ்வாறாகவே அது இந்நாட்களிலும் விசுவாசிக்கப்படுகிறது. ஆனால், யேகோவா
இன்னும் யேகோவாவாகவே இருக்கிறார். அவர் தமது வழிகளை மாற்றிக்கொள்ள முடியாது. அவர் தேவன்;
அவர் மாறுவதில்லை. இப்போது அவர்கள் அதுதான் தங்களுக்கு – தங்களுக்கு வேண்டிய எல்லாம்
என்று விசுவாசிக்கின்றனர்.
52. எனவே
அவன் அங்கு அமர்ந்து தன் பகற்கனவைக் கண்டு கொண்டிருக்கையில்; அவ்விதமாகச் சிந்தித்துக்
கொண்டிருக்கையில், அவனுடைய குருட்டுக் கண்கள் வெப்பமான சூரியனுக்கு நேராக திரும்பியது.
திடீரென ஒரு சிறு கோவேறு கழுதையின் குளம்புகளின் சத்தத்தைக் கேட்டான். அது கற்களால்
நிறைந்துள்ள பாதையாக இருந்தது. அது எருசலேமிலிருந்து வரும் பாதையாக இருந்தது. அவன்
உற்றுக் கவனிக்கையில் பாதரட்சை அணிந்தவனாய் கோவேறு கழுதையை ஓட்டிக்கொண்டு செல்லும்
சத்தம் கேட்டது. நிச்சயமாக அரு ஒரு ஐஸ்வர்யவானான ஒரு மனிதனாக இருக்கவேண்டும்; ஏனெனில்
அந்தப்பயணம் கோவேறு கழுதையின் மேல் செல்லும் பயணமாயிருந்தது. மேலும் அதை ஓட்டிச் செல்ல
ஒரு வேலைக்காரனும் இருக்கிறான் என்று அறிந்துகொண்டான்.
53. எனவே
அவன், தன் ஜீவனத்துக்காக சில காசுகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றறிந்தவனாய் இப்பொழுது
எழுந்தான். எனவே அவன் எழுந்து தன் போர்வையைப் போர்த்துக்கொண்டான். கிழிந்துபோன போர்வையைச்
சுற்றிக்கொண்டு தெருவின் பக்கம் ஓடி, “நான் இன்று தாமதமாக வந்துவிட்டேன். எனக்குத்
தர்மம் வேண்டும்; தயவு கூர்ந்து எனக்குத் தர்மம் அளிப்பீர்களா? நான் ஒரு குருடன்” என்று
கேட்டான்.
54. மேலும்
நாம் இப்பொழுது உண்மையில் ஒரு கடூரமான சத்தம் வருகிறதைக் கேட்கிறோம். “பிச்சைக்காரனே,
வழியிலிருந்து அப்பாலே போ!நான் யேகோவாவின் ஊழியக்காரன். நான் ஒரு ஆசாரியன். எரிகோவில்
இன்று காலையில் நடக்கவிருக்கும் சுகமளிக்கும் கூட்டத்தை நிறுத்தும்படியாக ஆலோசனை சங்கத்தாரால்
எருசலே மிலிருந்து அனுப்பிவைக்கப்பட்டிருப்பவன் நான். நான் இங்கிருக்கும் ஜனங்களாகிய
சகோதரர்களைக் கண்டு அதை நடத்தக்கூடாதென்று கூறும்படி செல்கிறேன். அங்கே ஒரு கள்ளத்
திர்க்கதரிசி இருக்கிறான் பாருங்கள். நாம்...
அவன் இந்த காலையில் எரிகோவிலிருக்கிறான் என்று நாங்கள் கேள்விப்படுகிறோம். நான்
அவனைத் தடை செய்யும் பாதையில் இருக்கிறேன். எனவே வழியை விட்டு அப்பாலே போ!” ஆசாரியன்.
“சரி, வேலைக்காரனே, உன் வழியைப்பார்த்து சரியாக ஓட்டு.” அந்த சிறு கோவேறு கழுதை தன்
பயணத்தைக் தொடர்ந்தது.
55. பின்பு
அந்தப் பிச்சைக்காரன் தான் முன்பு உட்கார்ந்திருந்த பாறையைக் கண்டு பிடிக்க தடவிப்பார்த்து
உட்கார்ந்தான். அவன் மீண்டும் கனவுகாணத் துவங்கி, ‘நான் நின்று கொண்டிருந்த இந்த பாதையில்
தான் பெரிய மகத்தான தீர்க்கதரிசியான எலியாவும் எலிசாவும் கைகோர்த்துக் கொண்டு இதே பாதையில்
யோர்தானுக்குச் சென்றனர். மேலும் யோர்தான் அவர்களுக்கு முன்பாக மேலும் ஒரு முறை கூடவிலகியது.
யோர்தானின் மறு கரையில் இந்த வயதான களைத்துப்போன தீர்க்கதரிசியான எலியாவைத் தன் வீட்டுக்குக் கொண்டு செல்லும்படியாக அக்கினி இரதமும்,
அக்கினிக் குதிரைகளும் கட்டிவைக்கப் பட்டிருந்தது. மேலும் அவன், எலிசா அதைக்காண வேண்டியவனாயிருந்தான்.
அவன் செய்ய வேண்டிய ஊழியத்திற்கான காரியங்களை முன்வைத்து செய்யப்பட்ட அக்காரியத்தை
அவன் காணவேண்டியதாயிருந்தது. அவன் இந்தத் தீர்க்கதரிசிகள் மேல் தன் கண்களை வைக்க வேண்டியதாயிருந்தது”
என்று சிந்திக்கத் தொடங்கினான்.
56. மேலும்
நான் யூகிக்கிறேன். பர்திமேயு, நான் மாத்திரம் அந்தத் தீர்க்கதரிசிகளின் நாட்களில்
வாழ்ந்திருப்பேனானால் அந்தத்தீர்க்கதரிசிகளிடம் ஓடி முகங்குப்புற விழுந்து, “ஓ, தேவனின்
தீர்க்கதரிசிகளே! யேகோவா எனக்கு மீண்டும் பார்வையளிக்கும்படி எனக்காக ஜெபியுங்கள் என்று
கூறியிருப்பேன்” என்றான். “ஆனால் ஆசாரியன்,
இங்கே அப்படிப்பட்ட காரியம் எதுவுமில்லை. நாங்கள் அதைக் கொண்டிருக்கவில்லை. யேகோவா
தம் வல்லமையினால் இனிமேல் யாரையும் சுகமாக்குவதில்லை. எங்களுக்கு மருத்துவர்களும் மற்றவர்களும்
உண்டு. அவைகள் அதைச் செய்கிறது. அது (தெய்வீக சுகமளித்தல் – மொழி பெயர்ப்பாளர்) இனிமேலும்
எங்களுக்குத் தேவையில்லை. எனவே யேகோவா சுகமளிப்பதில்லை. அது கடந்துபோன நாட்களுக்குரியது.
நாங்கள் நியாயப்பிரமாணத்தை மட்டும் கைக்கொள்கிறோம். எங்களுக்கு வியாதி ஏற்பட்டால் மரித்து
பரலோகத்திற்குப் போவோம். அவ்வளவு தான். அது தான் எங்களுக்கு வேண்டும் என்கின்றனர்”
என்றான்.
57. பிறகு
அவன் சிந்திக்கத் துவங்குகையில், அவன் நினைத்துப்பார்த்தான். அவன் உட்கார்ந்திருந்த
இடத்தி லிருந்து ஐநூறு கெஜ தூரம் கூட இல்லாது குறுகிய தூரத்தில்தான் இஸ்ரவேலர் யோர்தானைக்
கடந்து பாளயமிறங்கி எல்லாம் ஒழுங்கின்படி அமைந்து எல்லாக் கோத்திரங்களின் கூடாரங்களும்
அதனதன் இடத்திலிருக்க எரிகோவுக்குள் நுழையும் உத்தரவுக்காகக் காத்துக் கொண்டிருந்தனர்.
மேலும் அவன் உட்கார்ந்திருந்த பாறையே நிச்சயமாக யேகோவா தேவன் மதில்களைத் தகர்த்தபோது
விழுந்த ஒன்றாகும்.
58. மேலும், “நினைத்துப்பாருங்கள்! வெகுகாலத்துக்கு முன்பு ஒரு
சிறந்த போர்த் தளபதியாகிய யோசுவா; பெரிய மகத்தான தேவனின் போர்ச்சேவகன் ஆற்றை வசந்த
காலத்தில் தானே கடந்து சரியாக சத்துருக்களுக்கு முன்பாக கூடாரங்களை அமைத்தான். ஒரு
நாள் காலையிலோ மாலையிலோ எரிகோவைத் தாக்கத் திட்டம் வகுக்கும்படியாக மதில்களைச் சுற்றி
வந்து அது எவ்வளவு பெரிதென்று பார்த்துக் கொண்டிருந்தான். அந்த மதில் மீது இரதங்கள்
சவாரி செய்யமுடியும்; அனேக குதிரைகள் அதன் மீது ஓடமுடியும். அதை யோசுவா பார்த்துக்கொண்டிருந்தான்.
அவன் அந்த மதிலுக்கெதிராகப் பார்த்துக் கொண்டிருக் கையில் உருவப்பட்ட பட்டயத்துடன்
ஒரு மனிதர் நின்று கொண்டிருந்ததைக் கண்டான். யோசுவா தன் பட்டயத்தை உருவினவனாய் அவரைச்
சந்திக்கச்சென்றான். யோசுவா பதறலுடன், ‘நீர் எங்களைச் சேர்ந்தவரோ அல்லது எங்கள் சத்துருக்களைச்
சேர்ந்தவரோ?’ என்றான். அவர், ‘அப்படியல்ல, நான் கர்த்தருடைய சேனையின் அதிபதியாக வந்தேன்’
என்றார். மகத்தான யோசுவா தன் பட்டயத்தைத் தரையில் வீசிவிட்டு, தன் தலைச் சீராவைக் கழற்றிவிட்டு,
அவருடைய பாதத்திலே விழுந்தான். ”
59. குருடனான
பர்திமேயு, “அது நான் இப்பொழுது உட்கார்ந்திருக்கும் இடத்திலிருந்து ஐநூறு கெஜ தூரம்
கூட இருக்காது. அங்கே மகத்தான சேனையின் அதிபதிக்கு முன்பாக அவருடைய பாதத்தில் யோசுவா
விழுந்தானே. ஓ, நான் மாத்திரம் அந்தக் கூடாரங்களுக்கு அருகில் இருந்திருந்தால், குருடனாக(வே)
நான் அப்பொழுது இருந்திருந்தால், நான் மகத்தான சேனையின் அதிபதியிடம், ‘என் பார்வையை
எனக்கு மீண்டும் தாரும்’ என்று கேட்டிருப்பேன். அவரும் அதைத் தந்திருப்பார்” என்று
நினைத்துக் கொண்டிருந்தான். சில நூறு கெஜ தூரம் கூட இல்லாத மிகச் சமீபமான இடத்தில்
தான் அந்த மகத்தான சேனையின் அதிபதி இருந்தார் என்பதனை இந்த சிறிய பையன் அறிந்திருந்தான்.
60. இன்றிரவு
அந்தத் தோல்வியான தவறான காரியங்களைத் தான் நாமும் செய்கிறோம். நாம் கிறிஸ்துவின் எல்லா
மகிமையான காரியங்களையும் நாம் மற்ற காலங்களுடன் பொருத்திவிடுகிறோம். வேதம், “அவர் நேற்றும்
இன்றும் என்றும் மாறாதவர்” என்று கூறுகிறது. அவர் கலிலேயாவிலும் எருசலேமிலும் சுற்றித்
திரிந்தது போலவே இன்றிரவு இக்கட்டிடத்திலும் இருக்கிறார்.
61. இந்த
மகத்தான சேனையின் அதிபதி சகேயுவின் வீட்டிலிருந்து வெளியே வந்தார்; ஜனங்கள் அவருக்காக
வெளியே காத்துக் கொண்டிருந்தனர்.
62. ஒரு
சில நிமிடங்களில் அவன் ஒரு சத்தத்தைக் கேட்டான். அந்தச் சத்தம் ஒரு சந்தடியுள்ளதாயிருந்தது.
63. ஜனக்கூட்டத்தின்
ஒரு சாரார், “கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற தீர்க்கதரிசியானவருக்கு ஓசன்னா! யெகோவாவின்
தாசனாகிய (நங்ழ்ஸ்ஹய்ற்) கலிலேயாத் தீர்க்கதரிசியானவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்!” என்றனர்.
64. கூட்டத்தின்
மறுசாரார் “அந்த மனிதனை விட்டு விலகியிருங்கள்! இப்படிப்பட்ட ஒருவனை நாம் இங்கே, இந்தப்
பட்டணத்தில் நம்முடன் சேர்த்துக் கொள்வதில்லை” என்றனர். அவர் வாயிலின் வழியாக உட்பிரவேசிக்கையில்
சிலர் அழுகிய பழங்களை அவர் மீது வீசினர்.
65. அவன்
– அவன் அப்படி ஒருபோதும் கேட்டதில்லை. எனவே
அவன், “என்ன நடந்து கொண்டிருக்கிறது? இந்த சந்தடி எதற்காக? இங்கு சுற்றிலும் என்ன நடந்து
கொண்டிருக்கிறது?” என்று கேட்டான். மேலும் ஜனங்கள் நெருக்கிக்கொண்டு...
66. சிறிது
நேரத்திற்குப் பிறகு, அந்தக் கூட்டத்தை நடத்தக் கூடாதென்று சங்கத்தாரால் அனுப்பப்பட்டு,
சென்ற அதே ஆசாரியனுடைய சத்தத்தைக் கேட்டான். அவன், “நீ மரித்தோரை எழுப்புகிறாயென்று
அவர்கள் என்னிடம் கூறுகின்றனர். இப்பொழுது குன்றின் மேல் உள்ள கல்லறைத் தோட்டத்தில்
அநேக மரித்தோரை அடக்கம் செய்திருக்கிறோம். நீ வந்து அவர்களில் சிலரை உயிரொடெழுப்புவதை
நாங்கள் காணட்டும்” என்று கூறுவதைக் கேட்டான்.
67. ஆனால்
நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். அவர் சிலுவையிலறையப்படும்படியாக எருசலேமுக்கு நேராய்
போய்க் கொண்டிருக்கிறார். உலகத்தார் யாவருடைய பாவமும் அவர் மீது சுமத்தப்பட்டிருந்தது.
மேலும் அவர் எருசலேமில் தன்னை பலியாக ஒப்புக்கொடுக்கப்போகிறார். அவர்கள் அவரைப் பரியாசம்பண்ணி
நிந்தித்தார்கள். சிலர் அவரை போற்றினார்கள். சிலர் அவரை சபித்தார்கள். அது போலவே தான்
ஒவ்வொரு கூட்டத்திலும் நடைமுறையில் அவர் எங்குள்ளாரோ அங்கு சிலர் அவருடைய பட்சமாகவும்
சிலர் அவருக்கு சத்துருக்களாகவும் உள்ளனர். ஆனால் அது அவரை அசைக்கவில்லை. அவர் தம்முடைய
ஓட்டத்தை ஓடி முடிப்பதின்மேல் நோக்கமாயிருந்தார். அவர் உறுதிகொண்டவராய் எருசலேமை நோக்கி
நடந்து சென்றார். மேலும் பன்னிரண்டு சிறிய மனிதர்கள் மட்டும் அவருக்குப் பாதுகாப்பாக
இருந்து கூட்டத்தினரை பின்னுக்குத் தள்ளிக் கொண்டிருந்தனர். சிலர் அவரைத் தொடமுயற்சித்துக்
கொண்டிருந்தனர். சிலர் அவரைப் பார்த்துப் பரியாசம்பண்ணி கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர்.
மேலும் – மேலும் அதைப்போன்று...
68. நாம்
இன்றிரவு நம்முடைய சுபாவங்களைக் கொண்டிருப்பது போலவே அந்தக் கூட்டத்தில் சிலர் குருடனான
அவனைத் தள்ளிவிட்டு செல்வதுபோல் சென்றனர். அங்கு ஒரு அருமையான இளம்பெண்ணாக நாம் இன்று
காலையில் நம்முடைய கதையில் பார்த்த ரெபேக்காவின் சகோதரி என்றும் ஒரு கிறிஸ்தவ விசுவாசி
என்றும் அவள் அங்கு வந்தாள் என்றும் கருதுவோம். அந்த வயதான குருடனை அவர்கள் தள்ளுவதை
அவள் கண்டாள் என்றும் அவள்... அவர்கள் அவனிடத்தில் அன்பில்லாதவர்களாய் இருந்தார்கள்
என்றும் கண்டாள். ஆனால் அவள் இயேசுவில் விசுவாசியாயிருந்தபடியினால் அவள் அன்புள்ளவளாயிருந்தாள்.
அது (கிறிஸ்துவின் அன்பு - மொழிபெயர்ப்பாளர்) எப்போதுமே அவ்வாறே செய்கிறது. அது முதியவர்களையும்
தேவையில் உள்ளவர்களையும் குறித்துக் கரிசனை கொள்ளச் செய்கிறது. அந்த வயதான மனிதன் அவர்களால்
தள்ளிவிடப்பட்டான். ஆனால் அவள் நின்று அவனைத் தூக்கிவிட்டாள். அவள்...
69. அவன்
அவளிடம், “இளம் பெண்ணே, உன் குரலைக்கொண்டு நீ ஒரு இளம்பெண் என்று என்னால் கூற முடியும்”
என்று கூறியிருக்கக் கூடும்.
70. “ஆம்,
ஐயா, நான் வாலிப பெண் தான். முதியவரே நீர் எழுந்து நிற்க முடியுமா? அவர்கள் உமக்குத்
தொல்லை கொடுத்திருப்பர் என்று நம்புகிறேன்” என்றாள்.
71. அவன்,
“அந்த – அந்த சந்தடி எல்லாம் என்ன? அங்குள்ள குழப்பமான, குழப்பத்தை விளைவிக்கும் விதமாக
அங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது? அதெல்லாம் எதனால் உண்டாகியிருக்கிறது?” என்று கேட்டான்.
72. அவள்,
“ஏன், தாவீதின் குமாரனாகிய நாசரேத்தை சேர்ந்த இயேசு இந்நகரத்திற்கு வந்துள்ளதை நீர்
அறியவில்லையா? கலிலேயாத் தீர்க்கதரிசியானவராகிய அவர் தான் போய்க்கொண்டிருக்கிறார்.
நீர் அதை அறியாதிருக்கிறீரே” என்றாள். “இல்லை, நான் – நான் ஒரு போதும் அவரைக் குறித்துக்
கேள்விப்பட்டதில்லை” என்றான் அவன்.
73. “நல்லது, இந்தக் காலையில் பட்டணத்தில்
என்ன நடந்தது என்று நான் உமக்குக் கூறட்டும்.
உணவு விடுதிக்காரனாகிய சகேயுவை உமக்குத்
தெரியுமா?”
74. “ஆம்” “அவன் எப்பொழுதுமே ஒரு வகையான
குறை கூறுபவன். அவனுடைய மனைவியோ ஒரு விசுவாசி. இக்காலையில் அவன் இயேசுவை காணும்படியாக ஒரு காட்டத்தி
மரத்தில் ஏறினான். அதுவரை ஒரு போதும் எரிகோவுக்கு
வந்திராத இயேசு அங்கு அந்த மரத்தினடியில் வந்து நின்று அண்ணாந்து பார்த்து, சகேயுவைப் பெயர் சொல்லி அழைத்தார்.
நாம் அனைவரும் அவர் தீர்க்கதரிசி என்று அறிந்திருக்கிறோம்”
75. அந்த முதியவரான பிச்சைக்காரனின் முகம்
மலர்ந்தது. அவன், “அப்படியானால் அது உபாகமம்.
18:15-ன் நிறைவேறுதலாகும். ‘மோசேயைப் போன்ற ஒரு தீர்க்கதரிசியை நம்முடைய தேவனாகிய
கர்த்தர் எழுப்புவார்’. அது அவராகத் தான் இருக்க வேண்டும். அது அவரேயானால்
அவர் இப்பொழுது எங்கே இருக்கிறார்?” என்று
கேட்டான். “அவர் இங்கே இதே சாலையில் ஒரு சில நூறு கெஜ தூரத்தில் இருக்கிறார்.’
76. அந்த முதியவரான பிச்சைக்காரனின் முகம்
மலர்ந்தது. அவன், “அப்படியானால் அது உபாகமம்.
18:15-ன் நிறைவேறுதலாகும். ‘மோசேயைப்
போன்ற ஒரு தீர்க்கதரிசியை நம்முடைய தேவனாகிய கர்த்தர் எழுப்புவார்’.
அது அவராகத் தான் இருக்க வேண்டும். அது அவரேயானால் அவர் இப்பொழுது எங்கே இருக்கிறார்?” என்று கேட்டான். “அவர் இங்கே இதே
சாலையில் ஒரு சில நூறு கெஜ தூரத்தில் இருக்கிறார்.’
77. அவர் அவனைக் கடந்து சென்றதைக் குறித்து
அவன் நினைத்தான். ஆகவே அவன், “இயேசுவே, தாவீதின் குமாரனே, எனக்கிரங்கும். ஓ, தாவீதின்
குமாரனே, எனக்கிரங்கம். நீர் கடந்து செல்கையில்
எனக்கிரங்கும்” என்று கூப்பிட்டான்.
78. இப்பொழுது, அங்கிருந்த சந்தடியில்
அவனுடைய சத்தத்தை அவர் மாம்சப்பிரகாரமாக அறிந்திருக்கமாட்டார். சிலர் அவரை
ஸ்தோத்தரித்துக் கொண்டும் சிலர் அவரைத் துதித்துக் கொண்டும் சிலர் அவரை தூஷித்துக்
கொண்டும் சென்றனர். அந்த சந்தடியில் அவர் அவன்
கூப்பிட்டதைக் கேட்டிருக்க முடியாது.
79. ஆனால் அவர் வார்த்தையாயிருந்தார். மேலும் ஒரு ஆத்துமா கதறும் போது; அந்தப் பெரும்பாடுள்ள
ஸ்திரி அவருடைய வஸ்திரத்தைத் தொட்டது போன்று.
வேதம், “அவர் நின்றார்” என்று கூறுகிறது. அது அவரை நிற்கச் செய்தது. அதை நினைத்துப் பாருங்கள். அதை சற்றே எண்ணிப் பாருங்கள். ஒரு – ஒரு முக்கியத்துவமற்ற முதிர் வயதான பிச்சைக்காரனின்
கூப்பிடுதல் ஒரு மனித ஆத்துமாவின் கூப்பிடுதல்
அவரை அங்கேயே நிற்கச் செய்தது. உலகத்தின் பாவ பாரத்தை சுமந்தவராய் பாவ நிவாரண பலியாக
ஆவதற்காக அவர் எருசலேமுக்குப் போய் கொண்டிருந்த நேரத்திலும் அது அவரை அங்கேயே நிற்கச்
செய்தது.
80. அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்.
அன்று நடந்தது போலவே, இன்றிரவும் கூட, ஒரு கூப்பிடுதல் அவரைக் காட்சியில் கொண்டு வந்து விடும். அவர் எவ்வாறாக மாறாதாவராகவே
இருக்கிறார்.
81. ஒரு நாள் இரவில் டெக்சாஸிலுள்ள டல்லாஸிலிருந்து
வந்ததை நினைவு கூறுகிறேன். அது பல ஆண்டுகளுக்கு முன்பாகும். நான் மெம்பிஸில்
இறங்கினேன். (விமானத்திலிருந்து - மொழி பெயர்ப்பாளர்).
மேலும் நான் பீபாடி (டங்ஹக்ஷர்க்ஹ்) என்னும்
பிரசித்தி பெற்ற தங்குமிடத்தில் தங்க வைக்கப்பட்டேன். அவர்கள் அடுத்த நாள் காலையில் விமானத்தில் ஏற்றி
செல்லும்படி அழைக்கப் போவதாகக் கூறியிருந்தனர்.
82. அன்றிரவில் நான் நன்கு உறங்கிக் காலையில்
எழுந்து சில கடிதங்களை எழுதி அவைகளை அனுப்பும்படி அஞ்சல் அலுவலகம் சென்றேன்.
நான் இறங்கி வீதியில் சென்று கொண்டிருந்தேன். சடுதியில் ஏதோவொன்று, “நீ நின்று திரும்பி போ” என்று
கூறுவதை உணர்ந்தேன்.
83. நல்லது, ஜனங்கள் எவ்விதமாகப் புரிந்து
கொள்கின்றனர் என்று நீங்கள் அறிவீர்கள். நான், “நல்லது, அது அதற்காகத்தானிருக்க வேண்டும்”
என்று நினைத்தேன்.
84. சிறிது தூரம் சென்றபோது, அது மறுபடியும்,
“நின்று திரும்பிச் செல்” என்றது.
85. நல்லது, நான்-நான் ஒரு மூலைக்குச்
சென்றேன். அங்கே ஒரு பெரிய உருவமுடைய ஐரிஸ் காவலன் இருந்தான். நான்... ஒரு ஜன்னலின்
வழியாக மீன் பிடித்தூண்டில்களையும் மற்ற காரியங்களையும் ஒரு அறையில் வைத்திருந்ததைப் பார்த்துக் கொண்டிருந்தேன். நான்
அவைகளில் ஒன்றை எடுப்பதற்காக வந்திருப்பேன் என்று அவன் சந்தேகப்படாமலிருக்கும்படி நான்
அந்த இடத்தை விட்டு சற்று தூரத்திலிருக்க வேண்டும் என்று எண்ணி, திரும்பி சற்று தூரம்
நடக்க ஆரம்பித்தேன். நான் திரும்பி வேகமாக,
வேகமாக நடந்த போது அந்த உணவு விடுதியிலிருந்து தூரமாய் கடந்து வழியின் கீழாக இருக்கும்
ஆற்றுக் கருகில் வந்து சேர்ந்தேன். நான் சரியான
இடத்தை கண்டு கொண்டேனா என்று எனக்குக் தெரிய வில்லை.“இங்கு இப்பொழுது தாமதமாகி கொண்டருக்கிறது.
ஆனால் ஏதோ ஒன்று ......” என்று நினைத்தேன்.
86. தேவனால் வழி நடத்தப்படுதல் என்பதை
நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? (கூட்டதினர், “ஆமென்” என்கின்றனர் – ஆசிரியர்) நான் அப்படியே
கீழே சென்றபோது – நான் – நான்...... அது தாமதமாக
விட்டது என்றும் நான் துரிதமாய் என் தங்குமிடத்திற்குத் திரும்ப வேண்டுமென்றும் நினைத்தேன்.
ஆனால் ஏதோ ஒன்று என்னிடம், “போ, போய்க் கொண்டேயிரு” என்று கூறிக்கொண்டிருந்தது.
87. நான் திரும்பி விமானத்தைப் பிடிக்க
மிகத்தாமதமாயிருந்தபோதிலும், நான், “நல்லது, நான் இந்த நடத்துதலைப் பின்பற்ற வேண்டும்”
என்று நினைத்தேன். நான் இந்த சிறிய பாடலைப்பாட நேர்ந்தது. பெந்தெ கொஸ்தேயினராகிய உங்களை
நான் சந்தித்த போது பாடப்பட்ட.
அவர்கள் மேலறையில் கூடி,
எல்லோரும் அவருடைய நாமத்தில் ஜெபித்துக்
கொண்டிருந்தனர்,
பரிசுத்த ஆவியில் ஞானஸ்தானம் பண்ணப்பட்டனர்,
ஆராதனைக்கான வல்லமை வந்தது.
88. நீங்கள் அப்பாடலை எப்போதாவது கேட்டதுண்டா?
“நான் அவர்களிலொருவன் என்று கூற முடிவதால்,
நான் மகிழ்ச்சியடைகிறேன்.”
நான் அந்தப் பாடலை எப்போதும் திரும்பத் திரும்ப பாட
முயற்சித்தேன்.
என் சகோதரனே, வந்து இந்த ஆசீர்வாதத்தைத்
தேடு
அது உன் இருதயத்தை பாவத்திலிருந்து சுத்தமாகும்.
89. நான் தெருவில் சென்று கொண்டிருந்தேன். நான் பழைய பாணியிலிருக்கும் ஜெமிமா ஆன்ட்டி, வேலிப்படலின் மீது சாய்ந்து
கொண்டிருப்பதைப் பார்த்தேன். ஒரு சிறிய
வெள்ளையடிக்கபட்ட சிறு மரப்பெட்டி போன்ற வீடு -
அதின் வேலிப்படலின் மீது அவள் சாய்ந்து கொண்டிருந்தாள். அவள் தன் தலையை ஆண்களின் ஆடையைக்
கொண்டு சுற்றிக்கட்டியிருந்தாள்.
90. நான் பாடுவதை நிறுத்திவிட்டு நடக்கத்
தொடங்கினேன். நான் எங்கு சென்று கொண்டிருக்கிறேன்
என்று எனக்கு தெரியாது. அவர், “போ, போய்க்
கொண்டேயிரு”. என்று மட்டும் கூறினார். மேலும் நான் அவளுக்கு சற்று அருகில் சென்றபோது
அவள் ஒருவிதமாகப் புன்னகை செய்ததைப் பார்த்தேன். நான் அவளைப் பார்த்துவிட்டு என் தலையைத்
திருப்பிக்கொண்டு நடந்தேன்.
91. அவள், “காலைவணக்கம், பார்சன்” என்றாள்.
இப்பொழுது, தெற்கில் பார்சன் என்பதற்கு ‘போதகர் (ம்ண்ய்ண்ள்ற்ங்ழ்)’ என்று அர்த்தம்.
நான் – நானும், ‘காலை வணக்கம், ஆன்ட்டி” என்றேன்.
92. நான் பின்பக்கமாய்ப் பார்த்து, “நான்
ஒரு போதகர் என்று அவள் எப்படி அறிந்தாள்?” என்று நினைத்தேன். மேலும் நான் ஒரு வேதாகமத்தையோ
வேறெதையுமோ வைத்திருக்கவில்லை. நான் பின்பக்கம் திரும்பினேன். “நான் ஒரு போதகர் என்று
எவ்வாறு அறிந்தீர்கள்?” என்று கேட்டேன். அவள், “நீர் வருவதை நான் அறிந்திருந்தேன்” என்றாள்.
நான், “இது எனக்கு ஒரு வினோதமானதாக இருக்கிறது”
என்றேன்.
93. மேலும் – அவள், “நீர் எப்போதாவது
வேதாகமத்தில் சூனேமிய ஸ்திரீயைக் குறித்துப் படித்ததுண்டா?” என்று கேட்டாள்.
94. நான், “ஓ, ஆம் சீமாட்டி” என்றேன்.
அவள், “உமக்குத் தெரியும், அவளுக்குப் பிள்ளை இல்லை, அவள் மலடியாயிருந்தாள், அவள் பிள்ளையில்லாதிருந்தாள்”
என்றாள். நான், “ஆம் சீமாட்டியே, நான் அந்தக் கதையைப் நினைத்துப் பார்க்கிறேன்” என்றேன்.
95. அவள், “மேலும் அவள் கர்த்தரிடம்
(அவள் பிள்ளை பெற்ற பிறகு – மொழி பெயர்ப்பாளர்) அந்தக் குழந்தையைக் கர்த்தருக்கென்று
வளர்ப்பேன் என்று வாக்குப்பண்ணினாள். மேலும் நானும் அப்படிப்பட்ட ஒரு ஸ்திரீ என்று
உமக்குத் தெரியுமா?” என்றாள். “நானும் என் கணவரும் பிள்ளை பெறக்கூடாதவர்களாயிருந்தோம்.
மேலும் நான் கர்த்தரிடம் அவர் எனக்கு ஒரு குழந்தையைக் கொடுப்பாரானால் நான் அதை அவருக்கென்று
வளர்ப்பேன் என்று கர்த்தரிடம் வாக்குப்பண்ணியிருந்தேன்” என்றாள். “அவர் எனக்கு ஒரு
குழந்தையைக் கொடுத்தார். நான் என்னால் முடிந்தவரை அந்தப் பையனை கர்த்தரைச் சேவிக்கும்படி
வளர்த்தேன்” என்றாள். அவள், “ஆனால் உமக்குத் தெரியுமா? அவன் தவறான சிநேகிதர்களுடன்
சேர்ந்ததினால் அவனுடைய சரீரத்தில் ஒரு வியாதி வந்தது. மருத்துவர் அவரால் முடிந்த எல்லா
மருந்துகளையும் கொடுத்துப்பார்த்தார். அது உபயோகமில்லாமல் போய்விட்டது. “அவனுடைய இரத்தத்தில்
சிபிலிஸ் என்னும் பால்வினை நோய் இருக்கிறது.’ மேலும் அவள், ‘அவனுடைய இருதயத்திலிருந்து
இரத்தம் வடிகிறது. அவனுடைய இருதயத்தில் துவாரங்கள் இருக்கின்றன” என்றாள். மேலும் அவள்,
“அவன் சுய நினைவின்றி படுத்துக்கொண்டிருக்கிறான்” என்றாள். இங்கிருக்கும் ஒரு மருத்துவர்
இரண்டு நாட்களுக்கு முன்பு, ‘அவன் இனி எழுந்திருக்கமாட்டான், அவன் போய்விட்டான்’ என்றார்’
என்றாள்.
96. மேலும் அவள், என்னால் அவன் அவ்விதமாக
மரிப்பதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. பிறகு நான் இரவு முழுவதும் ஜெபித்து,
‘நீர் அவனை எடுத்துக் கொள்ளப் போவதுண்டானால்........ அப்பொழுது அவன், தான் இரட்சிக்கப்பட்டுவிட்டதாகக்
கூறுவதைக் கேட்க விரும்புகிறேன். அவனை எனக்குத் தாரும். அதன் மூலம் நான் அவனை மறுபடியும்
சந்திப்பேன் என்று அறிவேன்.’ மேலும் சூனேமிய ஸ்திரீயைக் குறித்து அவர் செய்ததைக் கூறி
ஜெபித்தேன்” என்றாள்.
97. பிறகு நான் உறங்கச் சென்றேன். அப்போது
ஒரு சொப்பனம் கண்டேன். அதில் நான் தேவனிடம், ‘நீர் எனக்கு ஒரு குழந்தையைக் கொடுத்தீர்.
நான் சூனேமியாளைப் போல் இருக்கிறேன். ஆனால் உம்முடைய தீர்க்கதரிசி எங்கே?’ என்று கேட்டேன்.
அதற்கு அவர், “பார்த்துக் கொண்டிரு. (தீர்க்கதரிசி - மொழி பெயர்ப்பாளர்) வந்து கொண்டிருக்கிறான்’
என்றார். அப்பொழுது ஒரு மனிதன் சிறுதொப்பியை பக்கவாட்டில் சாய்வாக அணிந்துகொண்டு சாம்பல்
நிற சூட்டை அணிந்தவராய் தெருவில் வந்து கொண்டிருந்தார்’ என்றாள்.
98. மேலும் அவள், “அது காலை நான்கு மணியளவில்
இருக்கும். அந்நேர முதற்கொண்டே நான் இங்கு நின்று கொண்டிருக்கிறேன்” என்றாள்.
அவர்
இன்னும் தேவனாக(வே) இருக்கிறார். அவர் இரு முனைகளிலும் பதிலளித்துக் கொண்டிருக்கிறார்.
99. நான், “என் பெயர் பிரன்ஹாம். நான்
வியாதியஸ்தர்களுக்காக ஜெபிக்கிறவன். என் ஊழியத்தைப் பற்றி எப்போதாவது கேள்விப்பட்டதுண்டா?”
என்று கேட்டேன்.
100. அவள், “இல்லை, ஐயா, போதகர் பிரன்ஹாம்
அவர்களே, நான் ஒருபோதும் உங்களைப்பற்றிக் கேள்விப்பட்டதேயில்லை. உள்ளே வரமாட்டீர்களா?”
என்று கேட்டாள்.
101. உள்ளே செல்லும்படி வாயிலைத் திறந்தபோது,
அங்கு ஒரு சிறிய பழைய வேலி இருந்தது. அது ஆர்கன்சாஸ் பகுதியில் முற்காலத்தில் பயன்படுத்திய
ஒரு முனைக்கதவு போல் இருந்தது. அது ஆற்றின் மறுகரையிலே இருந்தது. எனவே அது எப்படியிருந்திருக்கும்
என்று அறிவீர்கள். எனவே அந்த நுழைவாயிலை நான் இழுத்து உள்ளே சென்றேன்.
102. நான் அந்த வீட்டினுள் சென்றபோது;
நான் இராஜாக்களின் அரண்மனையில் இருந்திருக்கிறேன். மூன்று நான்கு வித்தியாசமான ராஜாக்களின்
அரண்மனைகளில் இங்கிலாந்து, ஸ்வீடன் கஸ்டாப்
ராஜா அரண்மனை போன்ற பல அரண்மனைகளுக்கு அவர்களுக்காக ஜெபிக்கும்படி சென்றிருக்கிறேன். மேலும் பல மிக அருமையான வீடுகளில் இருந்திருக்கிறேன்.
அது ஹாலிவுட்டில் என்று நினைக்கிறேன். ஆனால் இந்த வீட்டில் பெற்றுக்கொண்ட வரவேற்பைப் போல் எங்கும் பெற்று கொண்டதில்லை.
வெறும் இரண்டு சிறிய பழைய அறைகள் கொண்டது. பின் பக்கத்தில் சிறிய சமையலறை, ஒரு படுக்கை
அறை அதில் சிறு பழைய, முன் காலத்து மரக்கட்டில் அங்கே இருந்தது. அங்கே சுவரில் கவர்ச்சிகரமான
படங்கள் இல்லை. ஆனால் அங்கு ஒரு படம் இருந்தது, அதில் “தேவனே எங்கள் இல்லத்தை ஆசீர்வதியும்” எனறெழுதப்பட்டிருந்தது.
103. நான் பார்த்தேன். அங்கு ஒரு மிகப்பெரிய உருவமுடைய, பார்ப்பதற்கு பதினெட்டு
வயது மதிக்கதக்க ஒரு நீக்ரோ வாலிபன் படுத்துக் கொண்டிருந்தான். பெரிய, திடகாத்திரமான,
நல்ல தோற்றமுடைய வாலிபன். அவன் ஒரு கம்பளியை கையில் வைத்துக்கொண்டு “ஊ! ஊ!” என்று முனகிக்
கொண்டிருந்தான். நான் “அவனைக் குறித்த காரியம் என்ன?” என்று கேட்டேன்.
104. அவள், “அவன்-அவன் ஒரு இருளான கடலில் இழக்கப்பட்டவன் போல்
எண்ணுகிறான். அவன் ‘நான் கடலில் இழக்கப்பட்டவனாயிருக்கிறேன்’
என்று சொல்லிக் கொண்டிருக்கிறான். அவன் தன்
(தப்பிக் கொள்ளும் – மொழிபெயர்ப்பாளர்) வழியை அறிய முடியவில்லை. அவன் இரண்டு மூன்று
நாட்களாக ஒரு படகை ஒட்டுவது போலவும், கடலின் ஆழத்தில் இழக்கப்பட்டவன் போலவும் நினைத்துக் கொண்டிருக் கிறான்.
அவன் அவ்விதம் மரித்துப் போக என்னால் விட முடியாது. நீர் அவனுக்காக ஜெபிப்பீரா?” நான்,
“சரி அம்மா” என்றேன்.
105. தெய்வீக சுகமளித்தலைக் குறித்து
நான் பேசினேன். ஆனால் அவள் அதில் சிரத்தை கொள்ளவில்லை. அவளுக்குத் தேவையானதெல்லாம்
அவன் தான் இரட்சிக்கப்பட்டுவிட்டேன் என்று கூறக் கேட்பதே. அதுவே அவளுடைய நோக்கமாக இருந்தது. அவன் இரட்சிக்கப்பட வேண்டும் என்பதே -மேலும் நான்
– அவன்... என்றேன்.
106. அவள் தன் மகனிடம் நடந்துக் சென்று
அவனைப் பின்பக்கமாக இழுத்து, அவனுடைய தலையைப்
பின் பக்கமாக இழுத்து, அவன் கன்னதில் முத்தமிட்டு,
“தேவன் அம்மாவின் பிள்ளையை ஆசீர்வதிப்பாராக”
என்றாள்.
107. நான் அங்கு நின்று கொண்டு அதைப்பார்த்து,
“ஆம், ஆம், அது தான் அது” என்று நினைத்தேன். அவன் எவ்வளவு தான் அவமானகரமான காரியத்தை
அந்தக் குடும்பத்திற்குக் கொண்டு வந்திருந்த போதிலும் அவன் எவ்வளவு தூரம் அகன்று போயிருந்தும், அவன் எந்த
வியாதியில் இருந்தாலும் அது ஒரு காரியமேயில்லை.
அவன் இன்னும் அம்மாவின் பிள்ளையாகவே இருந்தான்.
108. மேலும் வேதம், “ஒரு தாய் தன் பாலகனை
பால் குடிக்கும் குழந்தையைக் கூட மறக்கக்கூடும்.
ஆனால் நான் உன்னை மறக்கமுடியாது” என்று கூறுவதை நினைத்தேன். “நீங்கள் ........ அங்கு எவ்வளவு அன்பு இருக்கிறது!
உங்கள் பெயர்கள் என் உள்ளங்கைகளில் வரையப்பட்டுள்ளது” என்பதை நினைத்தேன்.
109. அவள் அவனை முத்தமிட்டாள். நாங்கள்
முழங்கால் படியிட்டோம். நான் கட்டிலின் கால்மாட்டில் முழங்கால் படியிட்டேன். நான் அவனுடைய
பாதத்தில் என் கரங்களை வைத்தேன். அது சூடாகவும்
ஒட்டும் பசைத் தன்மையுடையதாயும் இருந்தது.
110. மேலும், மேலும் நான் “ஆன்ட்டி, நீங்கள்
முதலில் ஜெபிப்பீர்களா?’ என்றேன். என் நண்பரே, அவள் அவருடன் இதற்கு முன் பேசியிருக்கிறாள்
என்பதை நான் அறிந்தேன். ஓ, அவள் தேவனிடம் எவ்விதமாக
ஜெபித்தாள்! பின்பு அவள், ‘நீர் ஜெபிப்பீரா?’ என்று கேட்டாள்.
111. நான் “சரி, சீமாட்டியே” என்றேன்.
நான், “பரலோகப்பிதாவே, நான் விமானத்தைப் பிடிக்க
குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் தாமதித்துள்ளேன். நான் இங்கு வரும்படி நீர் கூறினீர். நானும் அப்படியே வந்துள்ளேன். அப்பொழுது
நான் இங்கு வரவேண்டுமா, இல்லையா என்று அறிந்திருக்கவில்லை. ஆனால் நான்
இங்கு நிறுத்தப்பட்டேன். நீர் இந்தப் பையனுக்காக
ஜெபிக்கும்படி என்னை அனுப்பியிருப்பீரானால்.......” என்று ஜெபித்தேன்.
112. அப்படி ஜெபித்த அந்நேரத்தில் தானே
அவன், ”ஓ, அம்மா” என்று அழைத்தான்.
அவள்,
“அம்மாவின் பிள்ளைக்கு என்ன வேண்டும்?” என்றாள்.
113. அவன் “என் அறைக்குள் வெளிச்சம் வந்து
கொண்டிருக்கிறது” என்றான். அடுத்து ஐந்து நிமிடங்களில் அவன் தன் கட்டிலின் மேல் உட்கார்ந்தான்.
114. நான் அந்த வீட்டிலிருந்து அவசரமாய்
வெளியேறினேன். “நல்லது ஒரு வாடகை வண்டியைப்
பிடித்து செல்லவேண்டியது தான் நான் செய்ய வேண்டிய காரியம், இல்லாவிட்டால்
ஒரு நாளோ அல்லது அடுத்து விமானம் வரும்
வரை காத்துக் கிடக்க வேண்டும்” என்று நினைத்தேன்.
115. நான் விமான நிலையத்தின் நுழைவாயிற்கருகில்
சென்றடைந்தபோது இரண்டு மணி நேரத்திற்கும் மேல் தாமதமாகியிருந்தது. அறிவிப்பு செய்கிறவன்,
“கென்டக்கி யிலுள்ள லூயிவில்லுக்குச் செல்லும் அறுபத்தேழாம் எண் கொண்ட விமானம் புறப்படுதவற்கு
முன் பயணிகளுக்கு இதுவே கடைசி அழைப்பு” என்று கூறுவதைக் கேட்டேன்.
116. அது என்ன? அது என்ன? தேவனின் இராஜாதி
பத்தியம்! பாருங்கள்? ஒரு ஏழையான, சிறிய பிரசித்தியில்லாத, நீக்ரோ பெண்ணின் ஜெபமும்
விசுவாசமும் வானில் பறந்து கொண்டிருந்த ஒரு விமானத்தைத் தரையிலிறங்கச் செய்து அங்கு
நின்று காத்துக் கொண்டிருக்க செய்தது. அவரே எரிகோ மதிலினருகில் நோக்கிக் கதறிக் கூப்பிட்ட
குருடனான பிச்சைக்காரனுக்காக நின்று, சுற்று முற்றும் நோக்கிய தேவன். அவர் நேற்றும்
இன்றும் என்றும் மாறாத தேவனாயிருக்கிறார். அதைச் செய்தது விசுவாசமே. நீங்கள் அவரை விசுவாசிக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.
117. அந்தப் பாதையில் இரண்டு வருடங்களுக்குப்
பிறகு, ஒரு ரயிலில் பீனிக்ஸிற்குத் திரும்பி வரும்போது அங்கு வந்தேன். இரயிலினுள்ளே
சான்ட் விச்களுக்கு அதிக பணம் வாங்குவதை நீங்கள்
அறிவீர்கள். எனவே வழக்கமாக நான் இரயில் வண்டி
நிலையங்களில் நிறுத்தப்படும் போது ஹாம்பர்கர்
போன்றவைகளை என் பயணம் முடியும் நேரம் வரை கோணிப்பை
நிறைய வாங்கிக் கொள்வேன். ஏனெனில் சிறிய துண்டுகளாக்கப்பட்ட ஒரு சிறிய பழைய சான்ட்விச்சுக்கு
(மெல்லிய அதன் ஒரு பக்கம் மட்டும்) எழுபத்தைந்து சென்ட் அளவுக்கு வாங்கி விடுவார்கள். இப்பொழுது அது பயங்கரமானது. எனவே மெம்பிஸில்
இரயில் வண்டி நிறுத்தப்பட்டபோது நான் குதித்
திறங்கினேன். நீங்கள் எப்போதாவது மெம்பிஸ்க்குச்
சென்றிருந்தால் ரயிலை திரும்பும் சுழல் பாதையில் ரயில் எப்படி நிறுத்தப்பட்டிருக்கும் என்று அறிந்திருப்பீர்கள். நான் அங்கு குதித்து ஓடி ஒரு ஹாம்பர்கர் விற்கும்
கடைக்குச் சென்றேன். யாரோ ஒருவர், “ஹலோ, பார்சன்
பிரன்ஹாம்” என்று கூப்பிடுவதைக் கேட்டேன்.
118. நான் சுற்று முற்றும் பார்த்தேன்.
ஒரு சிறு சிவப்புத் தொப்பியுடன் தலை நிமிர்ந்தவனாய்
நின்று கொண்டிருந்த அவனைப் பார்த்து, “ஹலோ மகனே” என்றேன். அவன், “உங்களுக்கு என்னைத்
தெரியவில்லையா, என்னைத் தெரிகிறதா?” என்றான்.
நான்,
“இல்லை. உன்னை அறிந்திருக்கிறேன் என்று நம்பவில்லை”என்றேன்.
119. “உங்களுக்குத் தெரியுமா? ஒரு நாள் நீங்கள் என் வீட்டிற்கு வந்தீர்களே?” என்றான். மேலும் அவன், “என் அம்மா வீட்டின் வெளியில் முதுகுப்பாகமெல்லாம்
பனியில் நனைந்தவளாய் உங்களுக்காகக் காத்துக்
கொண்டு இருந்தாள்” என்றான். நான், ‘நீ தான் அந்தப் பையனா?” என்றேன்.
120. அவன் “ஆம், நான் தான். ஆம், நான்
– நான் சுகமடைந்தது மட்டுமல்ல, இரட்சிப்பையும் அடைந்து கொண்டேன்” என்றான். ஆகவே அது
தான் அது.
121. ஓ, ஆச்சர்யமான கிருபை! ஒரு குருடனான
பிச்சைக்காரனால் நிறுத்தி வைக்கப்பட்ட அதே தேவன்.
ஒரு பிரசித்தியில்லாத சிறிய, நீக்ரோ பெண்ணால் பறந்து கொண்டிருந்த விமானத்தைத்
தரையிலிறங்கச் செய்ய முடிந்தது. தேவன் மேலிருந்த அவளுடைய விசுவாசமும் ஜெபமும் அதைச்
செய்தது! அவள் அதை விசுவாசித்தாள்.
122. இயேசு அங்கே நின்றார். அந்தக் குருடான
பிச்சைக்காரனின் துணிச்சல், சரியாக அவருடைய பாதையில் அவரை நிற்கச் செய்தது “இயேசு அப்போது
நின்றார்’ என்ற பொருளின் பேரில் பிரசங்கிக்க சில இரவுகள் இருந்தால் நலம் என்று விரும்புகிறேன். இயேசு
அங்கே நின்று, “அவனை இங்கே அழைத்து
வாருங்கள்” என்றார். ஆமென்.
123. சில காலத்திற்கு முன்பு வேதத்தின்
வரலாற்றை நான் ஆராய்ந்து கொண்டிருக்கையில் குருடனான பர்திமேயு வைக் குறித்து, ஒரு கதையை வாசித்தேன். அது மிகவும் சிந்தையை ஈர்க்கும் ஒன்று; அது அவன்
எப்போதுமே சுகமாகுதலில் விசுவாசம் கொண்டிருந்தான் என்று கூறுகிறது. ஆசாரியர்கள் என்ன கூறின போதிலும் அது அவனுக்கு ஒரு
பொருட்டாயிருக்கவில்லை. அவன் தொடர்ந்து விசுவாசித்துக் கொண்டிருந்தான். அவன் திருமணமானவன்
என்றும் அவனுக்கு மனைவியும் ஒரு சிறு மகளும்
இருந்தனரென்றும் அவர்களை அவன் ஒருபோதும் பார்த்ததேயில்லை என்றும் கூறுகிறது. அவளுக்கு அப்போது பதினாறு வயதாக இருந்தது. அவன் அவளை ஒரு போதும் பார்த்ததேயில்லை. அவன்...காக என்ன செய்வான்?
124. நீங்கள் பிச்சை எடுக்க வேண்டுமானால்
மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க நீங்கள் மற்றவர்களைக் காட்டிலும் சற்று வித்தியாசமானவர்களாக
இருக்க வேண்டும் என்பதனை நீங்கள் அறிவீர்கள், அல்லது உங்களால் ஜனங்களின் கவனத்தை ஈர்க்க
முடியாது. இந்தியாவில் ஜனங்களை ஈர்ப்பதற்காக
ஒரு சிறு கீரியைக் கொண்டு பாம்பைக் கொல்வதாகக் கூறி ஜனங்களை ஈர்க்கிறார்கள்.ஒரு குரங்கு
ஒரு கோலை எடுத்துக் கொண்டு தெருவில் ஒரு பந்தை அடித்து விளையாடுவதை நான் கண்டேன். மற்றவர்கள்
வேறு ஏதோ ஒன்றை பயன்படுத்தி ஜனங்களின் கவனத்தை ஈர்த்து அவர்கள் காசுகளைக் கொடுக்கும்படி
செய்கின்றனர்.
125. மேலும் அந்த பர்திமேயு இரண்டு சிறு
காட்டுப்புறாக் குஞ்சுகளை வைத்திருந்ததாகவும் அவைகள் ஒன்றன் மீது ஒன்று உரசி கொஞ்சிக்
குலாவி, அங்கு வரும் ஜனங்களினால் அவர்கள் அவனுக்குக் காசுகளைக் கொடுப்பார்கள் என்றும்
கூறுகிறது.
126. மேலும் ஒரு நாள் இரவு அவனுடைய மனைவி
மிகவும் அதிகமாய் வியாதிப்பட்டாளாம். அவர்கள்
மருத்துவரிடம் சென்ற போது மருத்துவர், “பர்திமேயுவே, என்னால் ஒன்றும் செய்ய இயலாது. என்னால்
அவளுடைய ஜீரத்தைப் போக்க முடியவில்லை” என்றாராம்.
127. அவன் சுவற்றைப் பிடித்துக் கொண்டே
வீட்டின் வெளியே வந்து, “யேகோவாவே, நான் உம்மை நேசிக்கிறேன். நான் உம்மை விசுவாசிக்கிறேன். உமக்கு காணிக்கையாக செலுத்த என்னிடம் ஒன்றுமில்லை. நான் பிழைப்புக்காக வைத்திருக்கும் இரண்டு காட்டுப்புறாக்கள்
என்னிடம் உண்டு. நான் குருடனாகவும் பார்க்க
முடியாத வனாகவுமிருக்கிறபடியினால் என் மகளை வளர்ப்பதற்காக எனக்குதவியாக இருக்கும் அவளை ஜீவனோடு வைத்திருப்பீரானால், நாளைய தினத்தில்
ஒரு மகத்தான பலியாக அதை செலுத்தப் போகிறேன் என்று உம்மிடம் வாக்குப் பண்ணுகிறேன். நான்
என் காட்டுப்புறாக் குஞ்சுகளை எடுத்துக் கொண்டுபோய், எனது காணிக்கையாக அதை உமக்குப்
பலியிடுவேன்” என்றானாம்.
128.நல்லது, அவனுடைய மனைவி குணமாகிவிட்டதாக
அது கூறுகிறது. அவன் தன் காட்டுப் புறாக் குஞ்சுகளைக்
கொண்டுபோய் அதைப் பலியாக செலுத்தினான்.
129. அதன் பின்பு சிறிது காலம் கழித்து,
அவனுடைய சிறுமகள் வியாதிப்பட்டாள். அவளும் மரணத்தருவாயில் இருந்ததால் அவன் மறுபடியும்
ஜெபித்தான். அவன், “யேகோவாவே, என்னிடம் இப்போது ஒன்றும் இல்லை. ஆனால் என்னிடம் ஒரு ஆட்டுக்குட்டி இருக்கிறது” என்றான். அந்த நாட்களில் இப்போது வழிகாட்டியாக நாய்களை பயன்படுத்துவது போல்
குருடர்களை வழிகாட்டி நடத்துவதற்கு பயிற்சி கொடுத்து ஆடுகளைப் பயன்படுத்தி வந்தனர். அவனுக்கு ஒரு ஆட்டுக்குட்டி இருந்தது. அது அவன் பிச்சையெடுக்கும் கம்பத்திற்கு அவனை வழி நடத்திக் கொண்டிருந்தது. அவன், “யேகோவாவே, என்னிடம் மீதியாயிருப்பது அந்த
ஒரு ஆட்டுக்குட்டி மட்டும் தான்” என்றான்.
மேலும் அவன், “நான் அவளைப் பார்த்ததேயில்லை. ஆனாலும் அவளுடைய கூந்தலை நான் வாரிவிடுகையில் அவள் எனக்கு
ஆறுதலாயிருக்கிறாள். அவள் என்னை நேசிக்கிறாள். நான் – நானும் அவளை நேசிக்கிறேன். யெகோவாவே,
நீர் என் மகளை ஜீவனோடு வைப்பீரானால் நான்-நான் என் ஆட்டுக்குட்டியை பலியாக செலுத்துவேன்“
என்றானாம்.
130. அவனுடைய மகள் சுகமடைந்தாள். அவன் தன் ஆட்டுக்குட்டியுடன் தேவாலயத்துக்குப் போய்க்
கொண்டிருந்தான். ஆசாரியன் தன் வீட்டின் முகப்பில் வந்து நின்று, “பர்திமேயு குருடனே,
இந்தக் காலையில் எங்கு போய்க் கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டான்.
131. அவன் “நான் இந்த ஆட்டுக்குட்டியைப்
பலியாக செலுத்தும்படி ஆலயத்துக்குப் போய் கொண்டிருக்கிறேன்” என்றான்.
132. ஆசாரியன், ‘அப்படியா, பர்திமேயு
குருடனே, நீ அதைச் செய்யக் கூடாது. நான் உனக்குக்
கொஞ்சம் பணம் தருகிறேன். நீ கடைக்குச் சென்று
ஒரு ஆட்டை வாங்கி அதை பலியாகச் செலுத்து’ என்றான்.
133. பர்திமேயு அவனிடம், “நான் ஒரு போதும்
ஏதோ ஒரு ஆட்டுக் குட்டியை பலி செலுத்துவதாக தேவனிடம் வாக்குப் பண்ணவில்லை.ஆனால் தேவனிடம்
இந்த ஆட்டுக்குட்டியை பலியாகச் செலுத்துவதாகத்தான் வாக்களித்தேன்” என்றான்.
134. ஆசாரியன் அவனிடம், ‘ஆனால் பர்திமேயு
குருடனே, நீ அந்த ஆட்டுக்குட்டியைப் பலி செலுத்தக்கூடாது; ஏனென்றால் அந்த ஆட்டுக்குட்டி
உன்னுடைய கண்களாக இருக்கிறது” என்றான்.
135. பர்திமேயு அவனிடம், “யேகோவாவுக்கு
நான் கீழ்படிதலுடன் என் வாக்கை நிறைவேற்றினால்,
அவர் என் கண்களுக்காக ஒரு ஆட்டுக்குட்டியை அருளுவார்” என்றான்.
136. எனவே, அந்தக் குளிரான அக்டோபர் மாத்தில்
தானே, குருடனான பர்திமேயுவுக்கு கண்களாக ஒரு ஆட்டுக்குட்டி அருளப்பட்டு விட்டது. “அவனை
இங்கே அழைத்து வாருங்கள்” என்றார். அவர் தம் கரங்களை அவன் கண்கள் மீது வைத்து (தேவனால்
அருளப்பட்ட ஆட்டுக்குட்டியாகவே) அவனுடைய கண்களைத் திறந்து விட்டார்.
137. சிலுவையிலறைப்படும்படியாக சென்று
கொண்டிருந்த வேளையிலும் கூட அவர் செய்த அனேக நன்மையான காரியங்களைக் குறித்து அந்தக்
கதையில் கூறப் பட்டுள்ளதை, நண்பர்களே நீங்கள்
அறிவீர்கள். நாம் சற்று நேரம் கழித்து
அதைப்பற்றிப் பேசலாம். தேவனால் அருளப்பட்ட அதே ஆட்டுக்குட்டி இன்றிரவு இங்கே உங்கள்
கண்கள் திறக்கப்படுவதற்காகவும் அருளப்பட்டிருக்கிற தென்று உங்களுக்கு தெரியுமா? அதே
ஆட்டுக் குட்டியானவர் இன்றிரவு இங்கிருக்கிறார். தேவனால் அருளப்பட்டவர். அவர் வேறு ஒரு ஆட்டுக்குட்டியை உடையவராக இருக்கவில்லை;
வேறு ஒரு ஆட்டுக்குட்டியை உடையராக அவர் இருக்க
முடியாது. அது தேவனால் அருளப்பட்ட ஆட்டுக்குட்டியானவர். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா?
(கூட்டத்தினர், “ஆமென்” என்கின்றனர் - ஆசிரியர்)
138. நான் என் கடிகாரத்தைப் பார்த்தேன். நான் ஏற்கனவே இப்போது பத்துமணிக்கு சுமார் இருபது
நிமிடம் இருக்கும் நேரத்தில் இருக்கிறேன். எப்போதும் வழக்கமாக வெளியே செல்லும் நேரமான
ஒன்பதரை மணியைக் காட்டிலும் விரைவாக ஒன்பது மணிக்கே முடித்துவிட முயற்சித்துக் கொண்டிருந்தேன்.
139. நாம் நம் தலைகளை அப்படியே ஒரு கணம்
வணங்குவோம். உங்கள் ஒவ்வொருவருடைய கண்களும் மூடப்பட்டிருக்கவும், உங்கள் தலைகள் வணங்கியிருக்கவும்
வேண்டுமென்று விரும்புகிறேன். உண்மையாகவே ஒரு கணம் பயபக்தியாயிருங்கள்.
140. “ஓ இயேசுவே, தாவீதின் குமாரனே எனக்கிரங்கும்”
என்று அந்தப் பிச்சைக்காரன் கதறினான். அவன் அமைதியாக இருக்க முடியவில்லை. அவன்-அவன்
கட்டயாமாக...... அவன் கட்டாயம் அவருடைய கவனத்தை ஈர்த்தே ஆக வேண்டும். இன்றிரவு கூட
நமது அதே மாதிரியான கதறுதல் அவரைக் காட்சியில் கொண்டு வரும் என்று விசுவாசிக்க மாட்டீர்களா?
அப்பொழுது அது அதைச் செய்தது. ஏன் அது மறுபடியும் அதைச் செய்யக்கூடாது.
141. இப்பொழுது உங்கள் தலைகளும் இருதயமும் வணங்கியுள்ள நிலையில் நீங்கள் அவரை நோக்கி, இயேசுவே!”என்று
கதறுங்கள்.அவரை“தாவீதின் குமாரனே!” என்று அழைக்காதீர்கள். ஏனென்றால் அவர் உங்களுக்கு தாவீதின் குமாரன் அல்ல.
அவர் கர்த்தர். “கர்த்தராகிய இயேசுவே, எனக்கிரங்கும். என்னுடைய குருடான கண்களைத் திறந்தருளும்.
இன்றிரவில் இங்குள்ள இந்தப் போதகர் மூலமாக நீர் ஆபிரகாமின் வித்துக்களுக்கும் ஆபிரகாமுக்கு அன்றிருந்த வித்துக்களுக்கும்
வெளிப் படுத்தின விதமாகவே செய்வீர். நீர் அதை வாக்களித் திருக்கறீர்; நீரே வார்த்தையாக
இருக்கறீர் என்றும் அவர் கூறக் கேட்டேன்”.
142. “இந்த கடந்த சில இரவுகளில், நான்-நான்
வினோதமான காரியங்கள் சம்பவித்ததைக் கவனித்தேன். பரி. யோவான் 14:12-ல், “என்னை விசுவாசிக்கிறவன்
நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான்” என்று கூறியிருப்பதை அறிவேன். மேலும் அந்த
ஸ்திரீ அவருடைய வஸ்திரத்தைத் தொட்டாள். அவர் அவளுடைய தொல்லை என்னவென்று அறிந்திருந்தார்.
ஏனென்றால் அவள் தன் மிகுந்த விசுவாசத்தை செயலில் அவள் விசுவாசத்துடன் கிரியை செய்தபடியால்,
‘உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது’ என்றார்.
எரிகோவில் மதிலினருகே இருந்த ஒரு குருடனும் அதையே செய்தான். இன்று காலையில் நாம் பார்த்தபடி மரத்தின் மீதிருந்த
ஒரு மனிதனுடைய பாவங்கள் அவனுக்கு மன்னிக்கப்பட்டன.
143. “என்னுடைய குருடான கண்களைத் திறந்தருளும்
ஆட்டுக்குட்டியே. அவருடைய சமுகத்தில் நான் இருக்கிறேன் என்பதை நான் அதன் மூலம் உறுதிப்படுத்திக்
கொள்வேன். அவர் இங்கு இருக்கிறார் என்று அறிந்து
கொள்வேன். ‘எங்கே இரண்டோ மூன்றோ பேர் என்னுடைய நாமத்தில் கூடியிருக்கிறார்களோ அவர்கள்
நடுவில் நான் இருக்கிறேன்’ என்று நீர் கூறியுள்ளீர். ஓ தேவ ஆட்டுக்குட்டியே, குருடான
என் கண்களைத் திறந்து எனக்கிரங்கும்.’
144. அவ்வாறு நீங்கள் ஜெபித்துக் கொண்டிருக்கையில்
உங்கள் சிந்தையில் ஏதேனும் சந்தேகம் இருக்குமானால், எங்காகிலும் ஏதாவது சந்தேகம் இருக்குமானால்.........
நாம் ஒரு மகத்தான தெய்வீக சுகமளித்தல் ஆராதனையை நெருங்கியுள்ளோம். அதைக் குறித்து ஏதேனும்
சந்தேகம் இருக்குமானால் அதனைத் தெளிவாகப் புரிந்துகொள்ளும்படி உங்கள் கண்களிலுள்ள செதில்களை
அவர் அகற்றிப் போடும்படி கேட்கமாட்டீர்களா?
145. இந்த சில இரவுகளில், அவர் யூதர்களிடம்
திரும்பும் முன்பு, அவர் தமது சபைக்கு அளித்துக் கொண்டிருக்கும் கடைசி அடையாளத்தை நீங்கள்
காணவேண்டுமென்று, என் முழு இருதயத்துடனும் முயற்சித்துக் கொண்டிருந்தேன். புறஜாதி மணவாட்டி
அழைக்கப்படவிருக்கிறாள்.
146. (யாரோ ஒருவர் அன்னிய பாஷையில் பேசி
பின்பு வியாக்கியானம் செய்கிறார்-ஆசிரியர்)ஆமென். இப்பொழுது நான் சரியாகப் புரிந்து
கொண்டிருப்பேனென்றால், நீங்கள் ஜெபித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் பரிசுத்த ஆவியானவர்
பேசி வியாக்கியானப்படுத்தியது, அது தேவன் உங்களுக்கு அழைப்பைக் கொடுப்பதாகும்.
147. உங்களில் இங்கிருக்கும் எத்தனை பேர்
அவர் இங்கு பிரசன்னமாயிருப்பதை நீங்கள் காணும்படியாக, தேவனால் அருளப்பட்ட ஆட்டுக்குட்டி(யானவர்) உங்கள் கண்களைத் திறக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்? நீங்கள் உங்கள் கரங்களை உயர்த்தி, ‘தேவனே, என் குருடான
கண்களைத் திறந்தருளும். கர்த்தாவே, என் இருதயத்திலிருக்கும் முக்காடு களையப்பட்டு நான்
சரியாகப் புரிந்து கொள்ளும் படி செய்வீராக” என்று கேட்பீர்களா?
148. மேலும் இப்பொழுது அவர் எவ்விதம்
அறியப்பட முடியும்? நாம் அவரை எப்படி அறிந்து கொள்வோம்? அவருடைய குணாதிசயங்களைக் கொண்டும்,
அவர் என்ன கிரியைகளைச் செய்கிறாரோ அதைக் கொண்டும் தான். அவர், “நான் திராட்சைக் செடி,
நீங்கள் கொடிகள்” என்றார். இப்பொழுது கொடிகளே
கனிகளைக் கொடுக்கிறது, செடி அல்ல. செடி
கொடிக்கும் சக்தியளிக்கிறது. எப்பொழு தாவது கொடி கனியைத் தருமானால் அல்லது செடியானது
ஒரு கொடியைத் தோன்றச் செய்யுமானால், அதில் திராட்சைக் கனிகள் இருக்கும். வேறு ஒரு திராட்சைச் செடி தோன்றினாலோ அல்லது ஒரு
கொடி தோன்றினாலோ அதில் திராட்சைக் கனிகள் இருக்கும். அந்த திராட்சைச் செடியிலிருந்து
வந்த முதலாம் சபையானது எல்லா வரங்களையுமுடைய பெந்தெகொஸ்தே சபையாக இருந்திருக்குமானால்
அது மீண்டும் ஒரு கொடியைத் தோன்றச் செய்தால், அப்போஸ்தல நடபடிகளின் புத்தகத்தின் தொடர்ச்சியாக
இருக்கும். அவ்வாறு தான் அவர்கள் அப்போஸ்தலர்களின் நாட்களில் அவைகளை உடையவர்களாயிருந்தனர்.
மேலும் அப்போஸ்தல காலம் முடிந்து போகவில்லை.
149. பெந்தெகொஸ்தே நாளில் பேதுரு, “நீங்கள்
ஒவ்வொருவரும் மனந்திரும்பி பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம்
பெற்றுக் கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெற்றுக் கொள்வீர்கள். ஏனெனில் வாக்குத்தத்த மானது உங்களுக்கும் உங்கள்
பிள்ளைகளுக்கும் நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது” என்றான். மேலும் எவ்வளவு காலம் வரை தேவன் அழைத்துக் கொண்டிருக்கிறாரோ
அது வரையிலும் அப்போஸ்தலர்களின் காலம் சென்று கொண்டேயிருக்கும். ஏனெனில் வாக்குத் தத்தமானது
அப்பொழுது கொடுக்கப்பட்டது போலவே இப்பொழுதும், ‘வாக்குத்தத்தமானது உங்களுக்கும் உங்கள்
பிள்ளைகளுக்கும் நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும்
உண்டாயிருக்கிறது”.
150. கர்த்தாவே, அந்த அருளப்பட்ட ஆட்டுக்
குட்டியானவரைக் காணும்படி எங்கள் கண்களைத் திறந்தருளும். சோதோமில் நீர் மனுஷகுமாரனை வெளிப் படுத்தியது போல் இந்தக்
கடைசிக் காலத்திலும் நீர் உம்மைத் தாமே வெளிப்படுத்தப் போவதாக வாக்களித் துள்ளீர். தேவனே,
இப்பொழுது நீர் அதை அருளவேண்டு மென்று நாங்கள் ஜெபிக்கிறோம். கர்த்தாவே நாங்கள் உம்முடையவர்கள். நாங்கள் உம்முடைய திராட்சைச் கொடிகளாயிருக்கிறோம்.
151. நாங்கள் தகுதியுள்ளவர்களல்ல, உம்மிடத்தில்
எதையாகிலும் கேட்பதற்கு நாங்கள் தகுதியானவர்களல்ல. ஆனால் அதைக் குறித்து நாங்கள் சிந்திப்போமானால்
நாங்கள் மிகவும் சிறியவர்களும் நன்மையற்றவர்களு
மாயிருக்கிறோம். ஆனால் கர்த்தாவே, நான் அங்கு நோக்கிப் பார்த்து எனக்காக ஒரு ஆட்டுக்குட்டியானவர்
அருளப்பட்டிருக்கிறாரென்றும் பார்க்கும்போது தேவன் என்னைக் காண்பதில்லை, எனக்காக அருளப்பட்ட
ஆட்டுக்குட்டியையே காண்கிறார். அந்த ஆட்டுகுட்டியில்
எந்தப் பழுதும் இல்லையென்று அறிவேன். அது ஏற்கனவே
ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது.
152. இப்பொழுது, கர்த்தாவே, இன்றிரவு
எங்கள் மத்தியில் தேவனுடைய வார்த்தை தாமே வெளிப்படுத்தப்பட்டு
இங்கு பர்திமேயுவைப் போலவும், பெரும்பாடுள்ள ஸ்திரீயைப் போன்றும் மற்றவைகளை உடையவர்களைப்
போன்றும், சீமோன் பேதுருவைப் போன்றும் இன்னும் பல்வேறுபட்ட தேவைகளை உடையவர்களாகவும் மரத்தின் மேல்
உட்கார்ந்து கொண்டிருந்த சகேயுவைப் போன்றும் விசுவாசம் உள்ள யாவருக்கும் உம்மை வெளிப்படுத்தும். கர்த்தாவே, மனித சரீரத்தின் மூலம் உம்மை வெளிப்படுத்தும். இன்றிரவு உம்முடைய வார்த்தை ஜீவனுள்ளதாய் வெளிப்பட்டு நீர் தேவன் என்று நாங்கள் அறிந்து கொள்ளவும்
காணும்படியும் செய்வீராக, ஒவ்வொரு குருடாக்கப்பட்டுள்ள கண்களும் புரிந்து கொள்ளும்படி
திறக்கப்படுவதாக. கர்த்தாவே, இந்த மகத்தான சுகமாக்கும் ஆராதனை துவங்கும் பொழுது அவர்கள்
ஒவ்வொருவரும் சுகமாக்கப்படுவார்களாக. இந்த
எல்லா சிறு பிள்ளைகளும் கக்கத் தண்டங்களைக் கொண்டு நடப்பவர்களும், இன்னும் என்ன குறைபாடுகளுடன்
உள்ளவர்களையும் பர்திமேயு போல சுகமாக்கப்பட்டவர்களாக செல்வார்களாக. பிதாவே, அதை அருளும்.
நாங்கள் இதை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில்
கேட்கிறோம். ஆமென்.
153. இப்பொழுது நாம் ஜெபித்தோம். மேலும் இப்பொழுது-இப்பொழுது அமைதியாக பயப்பக்தியுடன்
விசுவாசித்துக் கொண்டிருங்கள். இப்பொழுது
... இந்த சிறிய நாடகம் - அது என்ன? அது சத்தியமாகவோ அல்லது சத்தியமில்லாததாகவோ
இருக்க வேண்டும்., மேலும் இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவ ராயிருக்கிறார். இப்பொழுது அவரை எவ்வாறு அறிந்து கொள்வீர்கள்?
154. இங்கு யாராவது ஒரு மனிதன் ஒரு அங்கியை
அணிந்து கொண்டு இயேசுவை ஓவியர்கள் படமாக வரைந்திருக்கும்
வண்ணமாகவோ தாடியும் தலைமயிரும் வைத்துக்கொண்டு
கையில் ஆணி கடாவப்பட்ட தழும்பு களுடனும், அவருடைய முகத்தில் இரத்தம் வடிந்தது போலவே
முகத்தில் இரத்தம் வடிந்தவனாய் வருவானானால் அது என்னவாக இருக்கும்? அது இயேசுவாக இருக்காது.
இருக்க முடியாது. அவர் மகத்துவமானவரின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார். அவர் மீண்டும் வரும்போது எல்லா முழங்கால்களும் அவருக்கு
முன்பாக முடங்கும்; எல்லா நாவுகளும் அவரை அறிக்கை பண்ணும். ஆனால்-ஆனால் நீங்கள் அவரை எப்படி அறிந்து கொள்வீர்கள்?
எந்த ஒரு மாய்மாலக்காரனும் தன்னை அவ்விதமாக வர்ணம் பூசிக்கொண்டு அந்தவிதமாக பாவனை செய்ய
முடியும். நிச்சயமாக.
155. ஆனால் நீங்கள் அவரை எப்படி அறிந்துக்
கொள்வீர்கள்? நீங்கள் அவருடைய வார்த்தை பேசப்பட்டு அவர் எப்போதும் செய்தது போலவே கிரியை
செய்யும் குணாதிசயத்தைப் பார்க்கும் போது தான் நீங்கள் அது அவர் என்று அப்பொழுது அறிந்து
கொள்கிறீர்கள். அது சரி தானே? “நான் செய்கிற கிரியைகளை“.
156. இப்பொழுது பாருங்கள், அவரை விசுவாசிக்கும்
படி, உங்களை விட்டுக்கொடுங்கள். வாருங்கள். ஜனங்கள் சொல்வது போல் உங்கள் சிந்தனையை
செயலற்றுப் போக விடாதிருங்கள். அதைச் செய்யவேண்டாம். நீங்கள் சிரத்தை யற்றவர்களாய்
தேவனிடம் வரவேண்டாம். நீங்கள் அவரிடம் வார்த்தையைக் குறித்த தெளிவுடன் வாருங்கள். நீங்கள்
உங்களுக்கு முன்பாக வார்த்தையை கொண்டு சென்று நீங்கள், “கர்த்தாவே, நீர் வாக்குத்தத்தம்
செய்திருக்கிறீர். என்னுடைய கண்களை திறக்கும்படி உம்மிடம் கேட்கிறேன். இன்றிரவு என் விசுவாசம் கர்த்தராகிய இயேசுவை நிற்கச்செய்யட்டும்.
அவர் என்னிடம் திரும்பி அவர்... அன்று சொன்னது போலவே........ அந்த ஸ்திரீ அநேக ஆண்டுகளுக்கு முன் செய்த போது சொன்னது போலவே சொல்வாராக’
என்று கேளுங்கள். மேலும் நீங்கள் உங்கள் முழு இருதயத்துடனும் விசுவாசியுங்கள்.
157. இப்பொழுது, இங்கு கூடியிருக்கிற
ஜனங்களில் என் கண் காணும் தூரம் வரையிலும்
எனக்கு அறிமுகமானவர் களை நான் காணவில்லை. நீங்கள் அனைவருமே எனக்கு அன்னியர்களாயிருக்கிறீர்கள்.
158. மேலும் சில சமயங்களில் இங்கே முன்னாலிருக்கும் ஜனங்கள் மட்டுமே அதைப்(சுகத்தை – மொழிபெயர்ப்பாளர்) பெறுகின்றனர்
என்று நினைக்கிறீர்கள். இல்லை, அது அப்படியில்லை...... நீங்கள் எங்கிருந்தாலும் எனக்கு
கவலையில்லை. நீங்கள்அப்படியே விசுவாசியுங்கள். நீங்கள் இந்தக் கட்டிடத்தில் எங்கிருந்தாலும்
எனக்குக் கவலை யில்லை.அவர் நீங்கள் யார் என்றும் எங்கிருக்கறீர்கள் என்றும் அறிந்திருக்கிறார்.
159. இப்பொழுது பாருங்கள். அவர் நேற்றும்
இன்றும் என்றும் மாறாதவராக இருப்பாரானால், பர்திமேயு செய்தது போல் உங்கள் விசுவாசம்
அவரை தடுத்து நிறுத்துமானால், நீங்கள் ஒரு போதும் பிச்சைக்காரனாயிருக்க வேண்டிய தில்லை.
நீங்கள் அவன் செய்தது போல் கதற வேண்டிய தில்லை.
அவனுடைய கதறல் அவரை தடுத்து நிறுத்த வில்லை. அவர் அவனுடைய கூப்பிடுதலைக் கேட்கவில்லை. அவனிலிருந்த விசுவாசமே அவரை நிற்கச் செய்தது. “உன்
விசுவாசம்!’ “உன் கதறல் உன்னை இரட்சித்தது” என்று அவர் கூறவில்லை. “உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது”. அது முற்றிலும்
சரி. கர்த்தர் ஸ்தோத்தரிக்கப்படுவாராக!
160. அங்கு உட்கார்ந்து கொண்டிருக்கும்
அறுபத்தைந்து வருடங்களாக சுவிசேஷத்தைப் பிரசங்கித்து வரும், முதியவரான போதக சகோதரரே,
(அவரைக் குறித்து ஆச்சசரியப்படுகிறேன்) எனக்கு ஒரு ஒத்தாசை செய்வீரா? ஐயா, அதைச் செய்வீர்களா?
உங்களுக்கு அடுத்ததாக உட்கார்ந்திருக்கும் அந்தப் பெண் மீது உங்கள் கரங்களை வையுங்கள்.
அவளிடமிருக்கும் இருதய தொல்லை அவளை விட்டு நீங்கும். சரி. அது
தான். சகோதரியே, நீ அதை விசுவாசிக்கிறாயா? அது முற்றிலும் சரி. அவ்வளவு தான்.
161. அவள் எதைக் தொட்டாள்? நான் அவளைப்
பார்த்ததேயில்லை, ஆனால் அது நிகழ்ந்து விட்டது. “உங்களால் விசுவாசிக்கக் கூடுமானால்!
” இப்பொழுது நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? (கூட்டத்தார், “ஆமென்” என்கின்றனர் – ஆசிரியர்)
162. அது அவரை அடையாளம் காட்டுமா? உங்கள்
கண்கள் திறக்கப்பட்டுவிட்டதா? அப்படியானால் அவரை நோக்கிப்பாருங்கள். அவர் அதிசயமானவர்,
வல்லமையாய் ஜெயங்கொண்டவர்! அங்கே கோட்பாடுகள், ஸ்தாபனங்கள், விஞ்ஞானிகள் அல்லது காரியங்கள்
எதுவுமே அவரைத் தடுத்து நிற்கச் செய்ய முடியாது. அவர் தேவன். ஆமென். இங்கு இப்பொழுது பிரசன்னராயிருக்கும் அவரை விசுவாசி யுங்கள்
என்று எவருக்கும் நான் சவால் விடுகிறேன்.
163. வாஷிங்டனில் அவர்கள் வைத்திருக்கும்
கர்த்தரின் தூதனுடைய படத்தை எத்தனை பேர் எப்பொழுதாவது பார்த்தீர்கள்? அவர் இப்பொழுது
சரியாக இங்கே பீடத்தின் வலதுபுறமாக நின்று
கொண்டிருக்கிறார். அது சரி! அது இங்கே
உள்ளதென்று எனக்குத் தெரியும். நான்
அதை அறிவேன். நான் ஒரு தீவிர மதவாதி அல்ல. நான் அதனின்று தொலைவில் உள்ளேன். நான் வேதத்தின் சத்தியத்தை உங்களுக்கு எடுத்துரைக்கிறேன். நீங்கள் அதை விசுவாசித்து என்ன சம்பவிக்கிறது என்று
பாருங்கள்.
164. இங்கே அது மீண்டும் இங்கே இருக்கிறது.
அங்கே கடைசியாக உட்கார்ந்து கொண்டிருக்கும், சுற்று முற்று பார்த்துக் கொண்டிருக்கம்
சகோதரி உண்மையாகவே அவள் தேவனிடத்திலிருந்து ஒரு ஒத்தாசையை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறாளர்.
அவள் ஒரு ஊழியக்காரி. அவள் ஊழியத்தில் தனக்கு உதவி செய்யும்படி தேவனிடம் ஜெபித்துக்
கொண்டிருந்தாள். அது சரியா சகோதரியே? அது சரி
என்றால் உன் கரத்தை உயர்த்து. நான் அவளை ஒரு
போதும் பார்த்ததேயில்லை. டென்னஸ்ஸியில் அச்சமயம் இருந்த அந்த கறுப்பு நிற சகோதரியைப்
போலவே இவளும் எனக்கு மிகவும் அன்னியமானவளாயிருக்கிறாள்.
165. ஒரு விதமான மிகையான சந்தோஷத்தினால்
நிறைந்தவராய் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு கறுப்பு நிற சகோதரன் அங்கு உட்கார்ந்து
கொண்டிருக்கிறார். ஐயா, நீர் என்னை தேவனுடைய ஊழியக்காரன் என்று விசுவாசிக்கிறீரா? நீர்
விசுவாசிக்கிறீரா? தேவனே, அந்த ஸ்திரீ உம்மைத் தொட்டபோது ‘திடமனதாயிரு’ என்றீரே. அவளைப்
போலவே உம்மை தொட்ட இவர்களுக்கும் “திடமான தாயிருங்கள்” என்பீராக. நான் உங்களை அழைக்கவில்லை.
உங்களை அழைப்பது அவரே. அதை உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசித்தால் அந்த சர்க்கரை
நீரழிவு நோய் உம்மைவிட்டு நீங்கிவிடும். அதை நீர் விசுவாசிக்கிறீரா? ஆமென். அது சரி.
அப்படியானால் நீங்கள் அதை (சுகத்தை) உடையவராயிருக்க முடியும். ஆமென்.
கர்த்தருக்கு ஸ்தோத்திரம். அது தான் அது.
அவர்
யாரைத் தொட்டார்? அவர் ஒரு போதும் என்னைத் தொடவில்லை. அவர் அவரைத் தொட்டார்.
166. இங்கே, இங்கே ஒரு வெள்ளைக்கார வாலிபன்
உட்கார்ந்து கொண்டு என்னைப்பார்த்துக் கொண்டிருக் கிறான். அவனுடைய இருதயத்தில் ஓர்
ஆழமான வாஞ்சையுடையவனாயிருக்கிறான். நான் ஒரு போதும் உன்னை அறிந்திருக்கவில்லை. ஆனால் நீ பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தைப் பெற ஆசித்துக்
கொண்டுள்ளாய். நீ சரியானவனாயிருக்கிறாய். நீ அதை விசுவாசிக்கிறாயா? விசுவாசித்தால்
நீ அதைப் பெற்றுக் கொள்வாய். வாலிபனே, அதை விசுவாசிக்கிறாயா? சரி, நீ விசுவாசிப்பாயானால்
உன்னால் அதை பெற்றுக் கொள்ளமுடியும்.
167. இங்கு வழியின் பின்பக்கமாக ஒரு சிறிய
ஸ்திரீ இருக்கிறாள். அவள் உபத்திரவப்பட்டுக்
கொண்டிருக் கிறாள். அது அவளுடைய இடது கையில். அது உடைந்திருக்கிறது. அவளுடைய இடது கையில் ஒரு முடிச்சு உண்டாயிருக்கிறது.
அவளுடைய வலது கையில் நரம்புத்தளர்வும், வாதத்தன்மையும்
இருக்கிறது. அவள் அதிலிருந்து விடுதலை பெறப்போகிறாள். திருமதி.கவுன்சில், உன் முழு
இருதயத்தோடும் அதை விசுவாசிக்கிறாய்? தேவன் அதைச் செய்வாரென்று விசுவாசிக்கிறாய்.......
நீ சுகமடைந்து விட்டாய். இயேசு கிறிஸ்து உன்னை சுகமாக்கி விட்டார்.
168. என் வாழ்வில் இந்த ஸ்தீரியைப் பார்த்ததோ
அல்லது அவளைக் குறித்துக் கேள்விப்பட்டதோ இல்லை.
அது உண்மையென்று யேகோவா அறிவார். ஆமென்.
169. இங்கு ஒரு சிறிய கறுப்பு நிற ஸ்திரீ
உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். அவள் அநேக வியாதிகளினால் உபத்திரவப்பட்டுக் கொண்டிருக்கிறாள்.
ஒரு காரியம். நீ உன் கண்ணில் உபத்திரத்தைக் கொண்டிருக்கிறாய். கண்ணாடி அனிந்திருப்பதினால்
அல்ல, எப்படியும் உன் கண்கள் மோசமாகிக் கொண்டிருக்கிறது. உனக்கு எலும்பு முறிவும் உண்டு.
அது சரி என்றால் உன் கரத்தை அசைத்தக் காட்டு.
உனக்கு நெஞ்சு வலி உண்டு. அது சரியா? உன் கரத்தை அசைத்துக் காட்டு. அவர் உன்னைக்
குணமாக்குவார் என்று விசுவாசிக்கிறாயா? நீ யாரென்று தேவன் என்னிடம் கூறமுடியும் என்று
விசுவாசிக்கிறாயா? எட்னா ஜெரால்ட், உன் முழு
இருதயத்தோடும் விசுவாசிப்பாயானால், அதை விசுவாசித்தால், உன் சுகத்தைப் பெற்றுக் கொள்ள
முடியும். ஆமென்.
170. அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்
என்பதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? (கூட்டத்தினர், “ஆமென்” என்கின்றனர் – ஆசிரியர்)
171. இங்கே இரண்டாவது வரிசையில் கடைசியாக
உட்கார்ந்து கொண்டு என்னையே பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு சகோதரியைக் குறித்த காரியம்
என்ன? அவள் தன் பாதத்தில் தொல்லையை உடையவளா யிருக்கிறாள். தேவன் உன் பாதத்தை குணமாக்கி
விடுவார் என்று விசுவாசிக்கிறாயா? நீ விசுவாசிப்பாயானால், உன் கரத்தை
உயர்த்து. அவளை எனக்குத் தெரியாது. அவளை ஒரு போதும் கண்டதில்லை.
172. அவளுக்கு அடுத்ததாக உட்கார்ந்திருக்கும்
ஸ்திரீயை குறித்த காரியம் உன்ன? நீ...... சகோதரியே, இந்த வழியாய் பாருங்கள். உன் முழு
இருதயத்தோடும் என்னை தேவனுடைய ஊழியக்காரன் என்று விசுவாசிக்கிறாயா? நீ நரம்புத்தளர்ச்சியால்
கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறாய். அது சரியென்றால் உன் கரத்தை அசைத்துக் காட்டு. இப்பொழுது
நீ சுகமடைய முடியும்.
173. அவளுக்கு அடுத்ததாக உட்கார்ந்திருக்கும்
ஸ்திரீ, நீ உன் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறாயா? நீயும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறாய்.
உன் தொல்லை என்னவென்று தேவன் என்னிடம் கூறமுடியும் என்று விசுவாசிக்கிறாயா? சிறுநீரகக்
கோளாறு. அது சரியென்றால், உன் கரத்தை அசைத்துக்
காட்டு.
174. அவளுக்கு அடுத்ததாக உட்கார்ந்திருக்கும்
ஸ்திரீயே, நீ விசுவாசிக்கிறாய்? நீ நரம்புத் தளர்ச்சியினால் அவதிப்படுகிறாய். கண் நோயினாலும் அவதிப்படுகிறாய். அது சரியென்றால் உன் கரங்களை அசைத்துக் காட்டு.
175. அவளுக்கு அடுத்ததாக உட்கார்ந்திருக்கும்
ஸ்திரீயே, சகோதரியே, விசுவாசிக்கிறாயா? நீ நிழலிடப்பட்டிருக்கிறாய், உனக்கு வயிற்றுக்
கோளாறுண்டு; அது உன் வயிற்றிலிருக்கும் புற்றுநோய் ஆகும். தேவன் உன்னைக் குணமாக்கி விட்டார் என்று விசுவாசிக்கிறாயா?
ஆமென்.
176. நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? உங்கள்
கண்கள் திறக்கப்பட்டு, அவர் தேவனுடைய குமாரன் என்று விசுவாசிக்கக் கூடுமா? அப்படியானால்,
நீங்கள் விசுவாசித்தால், நீங்கள் எழுந்து நின்று அவரை ஏற்றுக் கொள்ளுங்கள். அவர், நேற்றும்
இன்றும் என்றும் மாறாதவர் என்று உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள். “ ஓ இயேசுவே,
தாவீதின் குமாரனே, எனக்கிரங்கும்.”
ஓ, மிருதுவான இரட்சகரே, என்னை கடந்து
சென்று விடாதேயும்
என் தாழ்மையான கூக்குரலைக் கேட்டருளும்
மற்றவர்கûü நீர் சந்திக்கும்
போது,
என்னை கடந்து சென்று விடாதேயும்.
நீரே என்னை தேற்றும் நீரோடையாய்,
என் ஜீவனைக் காட்டிலும் மேலானவராய் இருக்கிறீர்,
உம்மையல்லாமல் பூலோகத்தில் எனக்கு யாருண்டு?
உம்மைத் தவிர பரலோகத்தில் எனக்கு யாருண்டு?
177. என்ன சம்பவித்துள்ளது? அந்தக் குருட்டுப்
பிச்சைக்காரனின் விசுவாசத்தைப் போன்ற உங்கள் விசுவாசம் அவரைக் காட்சியில் அழைத்து விட்டது.
ஆமென். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? (கூட்டத்தினர், “ஆமென்” என்கின்றனர் – ஆசிரியர்)
ஓ, சுகமாக்கப்படுதலுக்கென ஒரு ஜெபவரிசையே தேவை யில்லை. எப்படியாகிலும் உங்களில் எத்தனை
பேர் நாங்கள் சுகமாக்கப்பட்டோம் என்று விசுவாசிக்கிறீர்கள்? உங்கள் கரங்களை உயர்த்தி
அவரைத் துதியுங்கள்! ஆமென். நீங்கள் சுகமாக்கப்பட்டு விட்டீர்கள்.
178. எரிகோவினுடாய் நடந்து சகேயுவின்
பெயரையும் பர்திமேயுவையும் அறிந்து கொண்ட அதே இயேசு கிறிஸ்து நம் மத்தியில் இருக்கிறார்.
அதே கர்த்தராகிய இயேசு பரிசுத்த ஆவியின் ரூபத்தில் இன்றிரவு, இங்கு அதே காரியங்களைச்
செய்து, பிழையின்றித் தம்மை நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்று நிரூபித்துக்
கொண்டிருக்கிறார். கோட்பாடுகளும் வேதப்பள்ளித் தத்து வங்களும், குளிர்ந்து போன உபதேசங்களும்
உங்களைத் தாக்க அனுமதிக்காதீர்கள். உங்களுக்குள் வெளிப்படுத்தப் பட்டிருக்கும் இயேசு
கிறிஸ்துவின் பிரசன்னத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். ஆமென். நான் அதை என் முழு இருதயத்தோடும்
விசுவாசிக்கிறேன். ஆமென்.
179. “கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! நான்
அதை ஏற்றுக் கொள்கிறேன்” என்று கூறி உங்கள் சுகத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்.
180. நாம் அவரைப் பாடித் துதிப்போம்.
“நான் அவரை நேசிக்கிறேன், நான் அவரை நேசிக்கிறேன்.”
நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? (கூட்டத்தினர்,
“ஆமென்” என்கின்றனர் – ஆசிரியர்)
"ஏனெனில் முந்தி அவர் நேசித்ததால்’
நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா?
நான் அவரை நேசிக்கிறேன்.
181. இப்பொழுது அவருடைய பிரசன்னத்தில்
அவரை ஆராதியுங்கள். அவர் இங்கிருந்தாக வேண்டும் என்று அறிந்திருக்கிறீர்கள்.
... நேசிக்கிறேன்
முந்தி அவர் நேசித்ததால்
சம்பாதித்தார் என் இரட்சிப்பை
182. அது சுகம் பெறுதலும் கூட. அது உங்கள்
இரட்சிப்பின் ஒரு பாகமாயுள்ளது. அதை எங்கு
பெற்றுக் கொண்டீர்கள்? கல்வாரியில் – கல்வாரி மரத்தில். நம்முடைய இதயமெல்லாம்!
நான் நேசிக்கிறேன். நான் நேசிக்கிறேன்.
(உண்மையாய் உணர்ந்து அவரை ஆராதியுங்கள்!)
அவர் முந்தி நேசித்ததால்
சம்பாதித்தார் என் இரட்சிப்பை
கல்வாரி மரத்தில்
183. ஓ, அவரை நீங்கள் நேசிக்கமாட்டீர்களா?
(கூட்டத்தினார், “ஆமென்” என்கின்றனர் – ஆசிரியர்) யாராவது ஒருவருடன் கைகுலக்கி, “கர்த்தருக்கு
ஸ்தோத்திரம்!” என்று சொல்லுங்கள். நீங்கள் ஒருவரை யொருவர் நேசியுங்கள். அவரை நேசியுங்கள்.
நீங்கள் சுற்றிலும் திரும்பி யாராவது ஒருவருடன்
கைகுலுக்கி, “கர்த்தருக்கு ஸ்தோத்திரம், கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நாம் இங்கே இருப்பதற்காக
மகிழ்ச்சியாயிருக்கிறோம். சகோதரனே, கர்த்தராகிய இயேசுவின் சமூகத்தில் இருப்பதனால் மகிழ்ச்சியாயிருக்கிறோம்”
என்று கூறுங்கள். ஆமென். ஆமென். அற்புதம்! ஓ!
184. பவுல், “நான் பாடும்போது ஆவியில்
பாடுவேன்” என்றான். நாம் மீண்டும் ஆவியில் ஆராதிப்போம். நாம் ஆவியில்
பாடுவோம்.
நான் நேசிக்கிறேன், நான் நேசிக்கிறேன்
(அல்லேலூயா)
முந்தி அவர் என்னை நேசித்ததால்
சம்பாதித்தார் என் இரட்சிப்பை
கல்வாரி மரத்தில்
185. ஓ, நீங்கள் அவரை நேசிக்கமாட்டீர்களா?
அவர் அற்புதமானவரல்லவா? பாடுங்கள்.
ஓ, அற்புதம் அற்புதம் இயேசு எனக்கு
ஆலோசனைக் கர்த்தராம் வல்ல மீட்பாராம்
பாவம் சாபம் யாவும் நீக்கி என்னை இரட்சித்தார்
அற்புதம் என் இயேசுவுக்கு ஸ்தோத்திரம்!
ஓ அற்புத அற்புதம் இயேசு எனக்கு
ஆலோசனை கர்த்தராம் வல்ல மீட்பராம்,
பாவம் சாபம் யாவும் நீக்கி என்னை இரட்சித்தார்
அற்புதம் என் இயேசுவுக்கு ஸ்தோத்திரம்!
186. இதைப்போன்ற தேவனுடைய சமுகத்தில்
இப்பொழுதே என்னவெல்லாம் நடக்கக் கூடும்? ஒரு காலத்தில் நான் இழக்கப்பட்டிருந்தேன்.
இப்பொழுது காணப்பட்டேன், ஆக்கினைக்கு நீங்கலானேன்.
நான் இழக்கப்பட்டிருந்தேன், இப்பொழுது
கண்டுபிடிக்கப்பட்டேன்,
இயேசு நியாயத்தீர்ப்பிலிருந்து விடுதலையையும்
முழு இரட்சிப்பையும் கொடுத்தார்
பாவம் சாபம் யாவும் நீக்கி என்னை இரட்சித்தார்
அற்புதம் என் இயேசுவுக்கு ஸ்தோத்திரம்!
ஓ, நாம் அர்த்தத்துடன் அதைப்பாடுவோம்!
ஓ, அற்புதம் அற்புதம் இயேசு எனக்கு
ஆலோசனைக் கர்த்தராம் வல்ல மீட்பாராம்
பாவம் சாபம் யாவும் நீக்கி என்னை இரட்சித்தார்
அற்புதம் என் இயேசுவுக்கு ஸ்தோத்திரம்!
187. ஓ அது உங்களுக்கு யாதொன்றைச் செய்து
உங்கள் சாயத்தை வெளியேற்றி உங்களுக்குள் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதா? (கூட்டத்தினர்
களிகூருகின்றனர் – ஆசிரியர்) ஐக்கியம், ஓ, அது என்ன ஒரு உணர்வு! உலகத்தின் எல்லா பணத்தையும்
மற்றுமுள்ள எல்லா வற்றையும் கொடுத்தாலும் அதற்காக இதை கொடுக்க மாட்டேன். அவைகளை தூர
எறிந்து விடுங்கள்; ஆனால் எனக்கு இயேசுவைத் தாருங்கள். ஓ என்னே! ஆம் ஐயா. அந்த ஐக்கியம்!
188. ஓ, அவர் இங்கிருக்கிறார் என்பதை
அறிந்து அவருடைய நித்திய கரங்களில் சாய்ந்து கொண்டு அவருடன் இந்த மோட்சப் பிரயாணத்தில்
நடப்பதென்பது எவ்வளவு இனிமையானது! ஓ, பார்க்கும்
முதல் பார்வையிலேயே, நமக்குள்ளிலிருந்து ஏதோ ஒன்று அழைக்க துவங்குகிறது! ஓ, ஏதோவொன்றைப்
போல்... ஒரு மூடி அகற்றப்பட்ட ஆர்டீஸியன் கிணற்றிலிருந்து கொப்பளித்து வெளிவரும் தண்ணீரைப்
போல் – அது எவ்வளவு அதிகமாய்க் கொப்பளித்து
வெளியேற்றுகிறதோ, அவ்வள வாய் அது குளிர்ச்சியையும் புத்துணர்ச்சி யூட்டுவதாயும் ஆகிறது.
ஆமென். ஓ, அவர் அற்புதமானவர்! அவர் அப்படியில்லையா? (கூட்டத்தினர், ‘ஆமென்’ என்கின்றனர்
– ஆசிரியர்) நான் அவரை நேசிக்கிறேன். நீங்கள்
அவரை நேசிக்கமாட்டீர்களா? (“ஆமென்’) ஓ, என்னே!
189. நீங்கள் ஒருவரையொருவர் நேசிக்கமாட்டீர்களா?
(கூட்டத்தினர், ‘ஆமென்’ என்கின்றனர்- ஆசிரியர்) இப்பொழுது மெத்தடிஸ்ட்டுகளாகிய நீங்கள்
யாவரும் பெந்தேகோஸ்தேயினருடன், பாப்டிஸ்ட்டுகளுடன் மெய்யான நட்புடன் கைகளைக் குலுக்குங்கள்.
நீங்கள் அதைச் செய்யகூடாதிருந்தால், நீங்கள் அவரை நேசிக்கவில்லை. அது சரியே. ஏனெனில்
அவர்கள் அவரை நேசிக்கிறார்கள்; நீங்களும் அவரை நேசியுங்கள். அவர் உங்களை உங்கள் மாறுபாடான
காரியங்களுடன் ஏற்றுக் கொண்டாரே, மற்றவர்களையும் அப்படியே ஏற்றுக் கொள்வார் என்பதை
ஒத்துக் கொள்வோம். ஓ, அவர் அருமையானவரல்லவா?
(‘ஆமென்’) நாம் அதை நம் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறோம்.
190. ஓ, அதை நாம் மீண்டும் பாடுவோம்,
சபையின் இந்த அருமையான பழைய பாடலான “நான் அவரை நேசிக்கிறேன். நான் அவரை நேசிக்கிறேன்”.
191. அவர் முந்தி என்னை நேசித்ததால் அதைக்
குறித்து கூற எனக்கு வார்த்தைகள் இல்லை. ஒரு
ஏழையான குருடான, பாவத்தை நேசித்த பரிதாபத்துக்குரிய, ஒரு குடிகாரரின் மகனான என்னை தமது
கிருபையினால் மனமிரங்கி நேசித்தாரே! அதற்காக (அவருடைய அன்பைக் பெறுவதற்காக – மொழி பெயர்ப்பாளர்) நான்
எதையும் செய்யவில்லை. அவர் என்னைத் தெரிந்து
கொண்டார். ஆம். அது எப்படி இருக்க முடியும்? எப்படி ஒரு முட்செடியானது கோதுமையாக மாறமுடியும்?
தேவனின் வல்லமையே அதைச் செய்தது. ஆமென். நான் அவரை நேசிக்கிறேன். ஓ நான்-நான் ஒரு விதமாக
பக்தி பரவசமடைகிறேன். இப்பொழுது நான்-நான்-நான் நலமாக உணருகிறேன்.
192. அவர் இங்கிருக்கிறார் என்று அறிந்திருக்கிறேன்.
அது அவரே. அவர் அதை வாக்களித்தார். அவர் வாக்களித்தார். அவர் –அவர் இங்கு நம் மத்தியில்
இருக்கிறார். நான் எவ்வளவாய் அவரை நேசிக்கிறேன்! அவர் அற்புதமானவர். நாம் அதைக்குறித்து
யூகிக்க வேண்டிய அவசியமில்லை. அதை அறிந்து கொள்வது உங்களுக்கு நல்லுணர்வை தரும். எப்போதும் செய்து வந்தது போலவே அவர் இங்கேயே இருந்து
கொண்டு, சரியாக வார்த்தையில் தம்மை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். ஏதோ சில கோட்பாடுகளையோ,
ஏதோ தத்துவங்களையோ அல்ல, ஜீவிக்கிற தேவனாகிய தம்மையே வெளிப்படுத்துகிறார். அவர் எவ்விதமாய்த் தம்மை வெளிப்படுத்த முடியும்?
சோதோமுக்கு அல்ல, ஆனால் ஆபிரகாமுக்கு. இப்பொழுது ஆபிரகாமின் வித்துக்களாயிருக்கிற நமக்கும்
அதைக் காண்பிக்கிறார். ஆமென்.ஓ,என்னே! நான் உண்மையாகவே சரியாக இப்பொழுதே நன்றாக உணர்கிறேன்.
நான் அவரை நேசிக்கிறேன் (ஓ என்ன ஒரு ஆசீர்வாதத்தின்
மழை!)
நான் அவரை நேசிக்கிறேன்
ஏனெனில் அவர்...
சற்று சிந்தித்துப் பாருங்கள்; நீங்கள்
அவரை நேசிக்கும் முன்பே, அவர் உன்னை நேசித்தார்!
193. கர்த்தராகிய இயேசுவே, இந்த ஜனங்களுக்கு
சுகத்தை அருளும். பிதாவே, அவர்கள் ஒவ்வொருவரும் சுகமாக்கப் படுவார்களாக. இயேசு கிறிஸ்துவின்
நாமத்தில் உம்முடைய மகிமைக்கென்று ஜெபிக்கிறேன். ஆமென்.
கல்வாரி மரத்தில்
194 ஓ, நம் தலைகளை இப்பொழுது இனிமையாகவும்
அமைதியாகவும் வணங்குவோம். நாம் எப்படியும் அவருடைய பிள்ளைகள் என்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.
நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம். தன் பெற்றோரிடத் திலிருக்கும் பிள்ளைகள் எவ்வளவு
விடுதலையுடன் இருக்கிறார்களென்று நீங்கள் எப்போதாவது கவனித்த துண்டா? அவனுடைய பெற்றோர்
அவனைக் கவனித்துக் கொண்டேயிருக்கின்றனர், பாருங்கள். நாம் அந்தப் பாடலை மவுனமாகப் பாடுவோம்.
(சகோதரன் பிரன்ஹாம், “நான் நேசிக்கிறேன்” என்று மவுனமாகப் பாட ஆரம்பிக்கிறார் – ஆசிரியர்).
195. மகத்தான அக்கினி ஸ்தம்பமாகிய அவர்
இங்கு நின்று கொண்டிருப்பதை அப்படியே காண்பதென்பது! அவர், ‘நான் தேவனிடத்திலிருந்து
வந்தேன். தேவனிடத்திற்குப் போகிறேன்’ என்றார்.
மோசேயுடன் வனாந்தரத்திலிருந்த லோகோஸ் ஆகிய அக்கினி ஸ்தம்பம் அவரே. அவர் கல்வாரியில்
மரித்து பின்பு உயிர்த்தெழுந்தார். மேலும் சவுல் தமஸ்குவின் சாலையில் சென்று கொண்டிருந்த
போது அதே அக்கினி ஸ்தம்பம் அவனைக் கீழே விழத்தள்ளியது. அவன், ‘ஆண்டவரே, நீர் யார்?’
என்று கேட்டான்.
அவர்,
‘நானே இயேசு’ என்றார்.
196. அவர் தேவனிடத்திலிருந்து வந்தார்.
அவர் தேவனிடத்துக்குப் போனார். நம்முடைய விஞ்ஞானத்
தினாலும், சபைகளில் நடந்தவைகளினாலும், ஒவ்வொன் றினாலும் நிரூபிக்கப்பட்டிருக்கிறார்.
“நான்...’ அவருடைய வார்த்தையை அறிவித்து, தம்முடைய அதே காரியங்களைக் கொண்டுவருகிறார்.
அவரே வார்த்தையின் வியாக்கியா னியாயிருக்கிறார். (சகோதரன் பிரன்ஹாம், ‘நான் நேசிக்கிறேன்’
என்று மவுனமாகப் பாடுகிறார் – ஆசிரியர்)
197.அவர் வந்து சுற்றிலும் பார்த்து ஒவ்வொருவரும் (ஜீவியம்) மாற்றப்பட்டவர்களாய்
வெளியே செல்வதை அவர் காண்பது அவருக்கு இப்பொழுது
அது ஒரு அற்புதமான நேரமாக இருக்குமல்லா? அவர் சில நேரங்களில்... (சகோ. பிரன்ஹாம்,
‘நான் நேசிக்கிறேன்’ என்று மவுனமாகப் பாடுகிறார் – ஆசிரியர்).
198. இப்பொழுது நம் தலைகள் வணங்கியிருக்கும்பொழுது,
மிகவும் மெல்லிய குரலில். (சகோதரன் பிரன்ஹாம், ‘நான் நேசிக்கிறேன்’ என்று மவுனமாகப்
பாடுகிறார் – ஆசிரியர்)
199. காலையில் நடந்த ஆராதனைகûü நினைவுகூருங்கள்.
நீங்கள் புதியவராக இங்கு வந்திருந்து உங்களுக்கு ஒரு சபை இல்லாதிருக்குமானால்; இங்குள்ள
அருமையான போதகர்கள், அவர்கள் இதே சுவிசேஷத்தை விசுவாசிக்கின்றனர். (அப்படியில்லாதிருந்தால்
என்னை இங்கு அழைத்திருக்கமாட்டார்கள்) அவர்களுடைய சபைக்கு போக அவர்கள் வரவேற்கின்றனர்.
இன்றிரவு இளைப்பாறு தலுக்குப்பின் நாளை ஒரு நல்ல ஆராதனையைக் கொண்டிருங்கள். பின்பு
மாலையில் இங்கு சுகமளிக்கும் ஆராதனைக்காகக் திரும்பி வாருங்கள்.
200. (சகோதரன் பிரன்ஹாம் மவுனமாக, ‘நான்
நேசிக்கிறேன்’ என்று பாடுகிறார்- ஆசிரியர்) சரி. சகோதரரே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.
No comments:
Post a Comment