ஞாயிறு மாலை,
ஆகஸ்டு -4, 1963
மேரிகோல்டு சென்டர்,
சிகாகோ, இல்லினாய்ஸ், அமெரிக்கா
சகோதரனே,
தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. சகோதரனே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நாம் நமது தலைகளை வணங்குவோம்.
2. பரலோகப் பிதாவே, நாங்கள் இன்னும் உம்மை உடையவர்களாயிருப்பதற்காக
நாங்கள் மகிழ்ச்சி யுள்ளவர்களாயிருக்கிறோம், கர்த்தாவே. எல்லா மற்றக் காரியங்களும்
எங்களை விட்டுப் போகிறதாயிருக் கையில் நாங்கள் இன்னும் உம்மை உடையவர் களாயிருக்கிறோம்.
நீர் நித்தியத்திலிருந்து நித்தியம் வரை இருக்கிறவராயிருக்கிறீர். இந்தக் கடைசி காலத்தில்
நீர் எங்களுக்குக் காண்பித்த அந்த அதிசயமான காரியங்களுக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம்,
கர்த்தாவே. இந்த எழுப்புதலுக்காகவும், இந்த இடத்திற்காகவும், சரியானதைப் பற்றிக்கொள்ள
முயற்சிக்கும் சகோதரன் கார்ல்ஸன் மற்றும் சுற்றிலும் ஊழியம் செய்யும் சகோதரர்களுக்கும் நாங்கள் நன்றி
கூறுகிறோம். நீர் சிக்காகோவில் ஒரு பெரிய விழிப் புணர்வைத் தரப்போகிறீர். எனவே கர்த்தாவே,
அந்த சகோதரர்களுக்காக எங்கள் முழு இருதயத்தோடும் நாங்கள் ஜெபிக்கிறோம். கர்த்தாவே,
அதை அருளும். நாங்கள் அதற்காக முன்னோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இப்பொழுது
எங்கள் பாவங் களையும் மீறுதல்களையும் மன்னியும். மேலும் கர்த்தாவே, நான் சரீரப்பிரகாரமாகக்
களைப்புற்றவனாகப் பேசும் இவ்வேளையிலும் ஆவியில் புத்துணர்வு பெற்ற வனாயிருக்கிறேன்.
நீர் எங்கள் எல்லோரையும் புத்துணர்வுடையச் செய்து, நீர் இன்றிரவு எங்களுக்காக வைத்திருக்கும் யாவுக்காகவும் எங்களை ஆயத்தப் படுத்த வேண்டுமாக
ஜெபிக்கிறேன். இவைகளை இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென்.
3. நீங்கள் இருக்கையில் அமரலாம். இந்த
நேரம் நிச்சயமாகவே எனக்கு மகத்தான புத்துணர்வையூட்டும் ஒரு வேளையாக இருக்கிறது. நான்
இதனை மிகவும் பாராட்டுகிறேன். அவர் நமக்கு
என்ன செய்துள்ளாரோ அதற்காக நான் எவ்வளவாய் நன்றி செலுத்துகிறேன் என்பதைக் கர்த்தராகிய
இயேசு ஒருவர் மட்டுமே அறிந்திருக்கிறார்.
4. இப்பொழுது இந்தக் கூட்டத்திலுள்ள ஜனங்களாகிய நீங்கள் எங்களுடன் தரித்திருந்து வார்த்தையைக் கூர்ந்து
நோக்குவதையும் நீங்கள் எங்களிடம் காட்டிய அன்பு மற்றும் ஒத்துழைப்புக்காகவும் நன்றி
கூற விரும்புகிறேன். ஞாயிறு பிற்பகல் ஆராதனையைக் கொண்டிருந்தும் கூட ஞாயிறு இரவிலும்
மீண்டுமாக இந்த இடம் ஜனங்களால் நிரம்பியுள்ளது. நாங்கள் அதற்காக மிகவும் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம்.
5. பில்லி பால் மூலமாக நீங்கள் எனக்கு
கொடுத்தனுப்பிய சிறு அன்பின் அடையாளங்களான வெகுமதிகளுக்காக இப்பொழுது நன்றி கூற விரும்புகிறேன்.
மிட்டாய் பெட்டி, இனிப்பு பலகாரப் பெட்டி மற்றும் நீங்கள் அறிவீர்கள், வால்நட் பருப்புப்பெட்டி
மற்றும் ஓ, எல்லா சிறு வெகுமதிகள் எங்கள் இருதயத்திற்கு அது மிகவும் அதிகமான அன்பை
வெளிப்படுத்துவதாக உள்ளது. நிச்சயமாக நாங்கள் அதை மெச்சுகிறோம். வழக்கமாகவே...
6. அவர்கள் ஒரு அன்பின் காணிக்கையை எடுத்ததாகக்
கூறினார்கள் என்று நினைக்கிறேன். இத்தனை வருடங்களுக்குப்பிறகு
நான் இங்கு வருவதற்கு நோக்கம் அதுவல்ல என்று நீங்கள் யாவரும் அறிவீர்கள். ஆனால் அந்த
அன்பின் காணிக்கை என்னவென்று நான் பார்க்கவும் கூட இல்லை. அது நேரடியாக நான் மேற்கொள்ளத்
திட்டமிட்டுள்ள கடல்கடந்த மிஷனரிப் பயணத்திற்காக உபயோகப் படப்போகிறது.
7.அருமையான நார்வே மற்றும் ஸ்வீடனிலிருந்து
வந்துள்வர்களே, உங்கள் சொந்த வீடுகளுள்ள நார்வே,
ஸ்வீடன் மற்றும் கீழே டென்மார்க் மற்றும் பின்லாந்து வரை சென்று பார்க்கவிருக்கிறேன்.
8. அதன் பிறகு கென்யா மற்றும் தாங்கனிக்காவில்
மாட்சனையும் அவருடைய பள்ளிகளையும் காண வேண்டுமென்றிருக்கிறேன். அந்த சிறிய சகோதரன்
அந்தப் பள்ளிகளில் நிச்சயமாகவே கடினமாக உழைத்து வருகிறார். கர்த்தராகிய இயேசு எனக்களித்துள்ள
ஊழியத்தினை சுவிசேஷத்துடன் வெளியே செல்லும் அந்த விலையேறப்பெற்ற இளம் ஊழியர்களுக்கு விவரித்துக்
காட்ட அவரைக் காணும்படி செல்ல விருக்கிறேன்.
9. அங்கிருந்து தென் ஆப்பிரிக்காவுக்கும்
உலகின் மறுபக்கத்திலுள்ள சீனா, ஜப்பான் இவற்றைக்
கடந்து திரும்பிவர முயற்சிப்பேன்.
10. அதைத் தான் இந்த அன்பின் காணிக்கை மூலம் நாம் செய்கிறோம். மேலும் நாம்... கூட்டங்களுக்காக ஜனங்கள் பொருளுதவி
செய்ய இயலாமலிருப்பதால், ஜனங்கள் எனக்குக்
கொடுக்கக் கொண்டு வரும் யாவற்றையும் நான் அப்படியே அதற்கென்று வைத்துக் கொள்கிறேன்.
நான் காசோலை எதையும் பணமாக மாற்றுவதில்லை. அது சபையால் முத்திரையிடப்பட்டு கடல் கடந்த மிஷனரிப் பணிக் கென்று மட்டுமே பயன்படுத்தும்படியான
காணிக்கை யாக அதற்கென்றே ஒதுக்கி வைக்கப்படுகிறது. எனவே அது சரியான விதத்தில் செலவிடப்படுகிறதென்று அறிந்து, அதற்கென்று நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம்.
11. மேலும், நிச்சயமாகவே நான் மகிழ்ச்சியடைகிறேன்.
இங்கு சிக்காகோவில் கூடியுள்ள ஜனங்களில் எண்பது சதவீதத்திற்கு மேற்பட்டோர் வழக்கமாக
நார்வே அல்லது ஸ்வீடன் மக்களாக இருக்கின்றனர்.
அவர்கள் உண்மையாகவே அன்பான ஜனங்கள்.
12. உண்மையில் சிக்காகோவிலிருந்து அரிசோனா
விலுள்ள டூசானுக்குச் செல்கிறேன். அங்கு தான் நான் இப்பொழுது வசிக்கிறேன். நான் வசிக்கிறேன்...
என் வீட்டின் சொந்தக்காரர் ஒரு சிறிய ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்தவர். அவள், சகோதரி லார்சன்;
இன்றிரவு இங்கு உட்கார்ந்திருப்பாள் என்று நம்புகிறேன். நான் அரிசோனாவிலுள்ள டூசானில்
அவளுடைய வீட்டில் வசிக்கிறேன். அவள் இங்கே சிக்காகோவில் வசிக்கிறாள். நான் அவளை இன்னும் இங்கு பார்க்கவில்லை.
அவள் இந்த வேளையில் டூசானில் இல்லையெனில் ஒரு வேளை இங்கு இருக்கக்கூடும். அன்பான இனிமையான
சிறிய சகோதரி. அருமையான அன்பான கணவருடன் இருப்பவள். நாங்கள் நிச்சயமாக அவளைப் பாராட்டுகிறோம்.
13. மேலும் இப்பொழுது, சகோ.கார்ல்ஸன்,
கிறிஸ்தவ வர்த்தக மனிதர்களே, எங்குமிருந்து வந்துள்ள எல்லா ஊழியக்கார சகோதர்களே, கர்த்தர்
உங்களை அபரிமிதமாக ஆசீர்வதிப்பாராக. கர்த்தர் இந்த இடத்தை ஆசீர்வதித்து நீதிமான்கள்
அதற்குள் ஓடி பாதுகாப்பாய் இருக்கும் ஒரு அடைக்கலமான மகத்தான இரட்சிப் படையும் இடமாயிருப்பதாக.
அதுவே என் உத்தமான ஜெபமாயிருக்கிறது. மேலும் என்முழு இருதயத்தோடும் அதனை விசுவாசித்து...
14. இந்த கருக்காக வெட்டும் செய்தியில்
நான் எவரையாவது வேண்டுமென்றே புண்படுத்தவேண்டும் என்று முயற்சித்திருந்தால் தேவன் என்னை
மன்னிப் பாராக. நான் எதற்காகவும் அப்படிப்பட்ட
காரியத்தைச் செய்யமாட்டேன்.ஆனால் நான் வார்த்தையினால் சிறை பிடிக்கப்பட்டவனாயிருக்கிறேன்.பாருங்கள்,நான்அதனுடன்
சரியாக நிலைத்திருக்க வேண்டும். ஜனங்களை சங்கடத்துக்குள்ளாக்க
வேண்டும் என்று கடினமாக காரியங்களை நான் பேசுவதில்லை. சில வேளைகளில் ஜனங்கள் பார்த்து,
“ஓ, பாருங்கள்” என்று வியக்கும்படி கூர்மையாகப் பேசுகிறேன். அவர்கள் காண வேண்டும் என்று
கருதி அவ்வாறு செய்கிறேன். பாருங்கள், அவ்வாறு செய்யும்போது சில வேளைகளில்
அது அவர்களை சற்று கோபமூட்டுகிறது. பத்தில்
ஒன்பது முறை ஒரு சிறு தூண்டுதல் ஏற்பட்டாலும், அவர்கள் வேத வசனத்துக்குச்
சென்று ஆராயும் பொழுது, மீதி காரியங்களை தேவன் பார்த்துக் கொள்வார். பாருங்கள், வேத
வசனங்களை மட்டும் நோக்கிப் பாருங்கள். நான் எப்பொழுதாகிலும் வேத வார்த்தைக்கு முரணாக
எதையாகிலும் கூறினால் நீங்கள் நேரிலோ, எழுதியோ எவ்விதத்தினாலோ நான் அறிந்து
கொள்ளும்படி செய்ய நீங்கள் கடமைப்பட்டவர்களாயிருக்கிறீர்கள். நான் அவ்விதமாகவே வேதவாக்கியங்களை விளக்கிக்காட்ட கடமைப்பட்டவனாயிருக்கிறேன் என்றும்
உணருகிறேன். அதனை விளக்கவும் கூட நான் முயற்சிப்பதில்லை. அது எவ்வாறு உள்ளதோ அவ்வாறே
அதைக் கூறுகிறேன். அது அவ்வாறே கூறுகிறது.
அதனை விசுவாசியுங்கள், அதை அவ்வாறே விசுவாசியுங்கள்.
15. இப்பொழுது, நான் இங்கு வந்திருப்பதை
நிச்சயமாகவே சிலாக்கியமாகக் கருதுகிறேன். நான் உங்களிடம் களைப்புற்றவனாய் வந்திருக்கிறேன்.
பேட்டிகள், கூட்டங்கள் போன்றவற்றால் மிகவும்
களைப்படைத்தவனாக வந்துள்ளேன். ஒரு நாளில்
இரண்டு கூட்டங்கள் இன்னும் அதற்கும் அதிகமாக. நல்லது, இவ்வாறு இப்பாதையில்
கடந்து சென்று கொண்டிருக்கிறேன். நான் சமீபத்தில்
இரண்டாம் முறையாக இருபத்தைந்து ஆண்டுகளை கடந்துள்ளேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். அது
சரி.
16. நல்லது, எனக்கு ஒரே காரியம் மட்டுமே
வருத்தமளிப்பதாக உள்ளது. அது என் வாழ்வில் நான் அவரை இன்னும் சற்று முன்பாகவே அறியாதிருந்ததே.
நான் சுவிசேஷத்தை இருபத்தி இரண்டு வயதாக இருக்கும் போது பிரசங்கிக்க ஆரம்பித்தேன் என்று
நினைக்கிறேன். ஆனால் நான் சிறுவனாக பேச ஆரம்பித்த போதே சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க ஆரம்பித்திருக்க
வேண்டும் என்று விரும்புகிறேன். அந்த விலையேறப்பெற்ற வருடங்களை நான் தவறவிட்டு விட்டேன்.
இங்குள்ள இளவயதுள்ள வர்களே, நான் இருபத்தியொன்று இருபத்தியிரண்டு வயதில் (தாமதமாக-மொழி பெயர்ப்பாளர்)
பிரசங்கிக்கத் தொடங்கிய தவறை நீங்கள் செய்யாமல்
பத்து வயதிலிருந்தே சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கத் துவங்குவீர்கள் என்று நம்புகிறேன்.
நீங்கள் முன்னதாகவே பிரசங்கிக்கத் தொடங்குவீர்கள் என்று நம்புகிறேன். அவ்வாறு செய்வீர்களானால் நான் பின்னோக்கிப் பார்த்து
வருந்துவதைப் போல் நீங்கள் செய்ய வேண்டியதிருக்காது.
17. கர்த்தர் உங்களோடிருப்பாராக என்பதே
என் ஜெபம். ஒரு வரத்தின் மூலம் சில காரியங்களை செய்யும்படி கர்த்தராகிய இயேசு என்னை
ஏவுகிறார் என்று நம்புகிறேன்...
18. நீங்கள் பாருங்கள். என்னால் ஒரு பிரசங்கி என்று கூற முடிவதில்லை. பாருங்கள், நான்
நன்றாக பேச அறியாதவனாகவும், கல்வியறிவு இல்லாதவனாகவும் இருப்பதினால் என்னைப் ‘பிரசங்கி’ என்று கூற முடிவதில்லை. ஏனெனில் ‘ஒரு ஊழியக்காரன்’ என்று
கூறும்பொழுது அவர்கள் உடனடியாக அவரிடம் எந்த
கல்லூரி பட்டம் இருக்கிறது என்றும் ஏதோவொரு பெரிய வேதப் பண்டிதர் அல்லது ஏதோவொன்றை
எதிர்பார்க்கிறார்கள். பிறகு நீங்கள், "பிரசங்கி’ என்று பேசும் போது, நீங்கள்
என் வார்த்தைகளைக் கேட்கும் போது,
என் மோசமான இலக்கணத்தையும் தோற்றத்தையும் காணும் போது அது என்னை கீழே வீசி எறிகிறது.
19. ஆனால் தேவன் என்னை
வியாதியாயுள்ள தமது பிள்ளைகளுக்காக ஜெபிக்கும்படி அனுப்பியுள்ளார். மேலும் அக்காரியத்தில்
அவரை அறிந்திருக்கிற தெப்படியோ அவ்விதமாகவே அதனை முழு இருதயத் தோடும் அறிவிக்க விரும்புகிறேன்.
நான் தவறு செய்தால் நீங்கள் எனக்காக ஜெபியுங்கள். நான் தவறிப்போகக் கூடாதவனல்ல.நான்
உங்கள் சகோதரன். மேலும் இப்பொழுது, தேவன் சில
காரியங்களைச் செய்துள்ளார் என்று நம்புகிறேன். அஹ்ர் அவ்விதம் இன்னும் செய்யாதிருந்தால்
அவர் அதை இன்றிரவு செய்வாராக. சில வார்த்தைகளைப்
பேசி அல்லது சில காரியங்களைக் கூறி நீங்கள்
அவரை விசுவாசிக்கும்படி செய்வாராக.
20. சில நாட்களுக்கு முன்பு யாரோ ஒருவர்
ஒரு வெகுமதியை என்னிடம் கொடுக்க விரும்பினார். அது பணமாயிருந்தது.“நான் - நான் - நான்
அதை வாங்க மாட்டேன்” என்றேன். “நான் அதைக்கொண்டு என்ன செய்வது என்று எனக்குத் தெரியாது.
பாருங்கள்” என்றேன். அவர்கள் கூறினர்... நல்லது,
நல்லது, அது ஆயிரம் டாலர்கள். பாருங்கள். “நான் அதைக்கொண்டு என்ன செய்வது என்று எனக்குத்
தெரியாது” என்றேன்.
21. அவர்கள், ‘நல்லது, இது உமக்கு மட்டுமே
இருக்க வேண்டுமென விரும்புகிறோம். இதை நீர் சபைக்குக் கொடுக்க வேண்டும் என்று நாங்கள்
விரும்பவில்லை” என்றனர்.
22. அது சபைக்குக் கொடுக்கப்பட்டதல்ல.
இது ஒரு அமைப்பாயிருக்கிறது. பாருங்கள்,எனவே இது சபையின் பெயரால் கடல் கடந்து செய்யப்படும்
ஊழியத்திற் கென்று மட்டும் ஒதுக்கப்பட்டு சபைக்கு கொடுக்கப் படுகிறது. பாருங்கள்?
எனவே அது.... வெகுமதிகளுக்கு வரிவிதிப்பு இல்லை. எனவே அது அதற்கென்று மட்டுமே செலவிடப்படவேண்டும்.
தர்மகர்த்தா குழு, தர்மகர்த்தாக்கள் அனைவரும்
இன்றிரவு இங்கு உட்கார்ந்து கொண்டு
என்னைப் பார்த்துக் கொண்டுள்ளனர். அது உண்மை. மேலும் நான் கூறினேன். ......... அவர்கள்,
“இது உமக்கும் உமது குடும்பத்தினர்க்கும்” என்றனர்.
23. அது ஒரு காசோலையாக இருந்தது. நான்
அதை எடுத்துக் கொள்ளவில்லை. பாருங்கள். “நான்
அதை எடுத்துக் கொள்ள முடியாது” என்றேன். ஆனால் நான், “நீங்கள் என்னை சந்தோஷப்படுத்த
விரும்புகிறீர்களா?” என்று கேட்டேன். அவர்கள், “நிச்சயமாக” என்றனர். “நான் அதைக்கொண்டு
நான் செய்ய விரும்பும் எதையும் செய்து கொள்ளலாமா?” என்று நான் கேட்டேன். அவர்கள்,
“சரி” என்றனர்.
24. நான், “அப்படியானால் கடல் கடந்து
நடைபெறும் என் ஊழியத்திற்கு அதனைக் கொடுக்க அனுமதி யுங்கள்” என்றேன். மேலும் நான்,
“உடுத்துவதற்கு எங்களுக்கு போதுமான உடைகள் இருக்கிறது. ஜனங்கள் எங்களுக்கு அதிகமான
உடைகளைக் கொடுத்திருக்கிறார்கள். எங்களுக்கு மேசையில் போது மான உணவு இருக்கிறது. நான்
சûபிலிருந்து வாரத்திற்கு
நூறு டாலர்கள் சம்பளம் பெறுகிறேன்” என்றேன். மேலும் அதன் பிறகு நான், “எங்களுக்கு இங்கு
எல்லாம் சரியானபடி கிடைத்திருக்கிறது. நான் அதனைக் கொண்டு நான் விரும்பும் காரியத்தை
செய்ய அனுமதியுங்கள்” என்றேன். மேலும் நான்... அவர்கள் அது சரி, “அது (இனி மேல்) உங்களுடையது.
நீங்கள் உங்கள் சந்úôதாஷத்திற்காக அதை செய்யலாம்” என்றனர்.
நான், “அது என்னை மிகவும் மகிழ்ச்சிக்குள்ளாக்குகிறது” என்றேன்.
25. (ஒரு சகோதரன் பீடத்தண்டை வந்து சகோதரன்
பிரன்ஹாமின் பேச்சில் குறுக்கிட்டு, “ஒரு வார்த்தை மட்டும் உங்களுடன் பேச அனுமதியுங்கள்.
அங்கே சகோ.பிரன்ஹாமின் காருக்குப் பின்புறம் ஒரு நீல நிற பழைய நடமாடும் ஸ்டேஸன் வாகன்
நிறுத்தி வைக்கப்பட்டுள்து. அவர்கள் எப்போதும் அங்கிருந்து கிளம்புவார்கள். அவர்கள்
நெரிசலில் சிக்கிக் கொண்டுள்ளனர். கார் நிறுத்துமிடத்திலிருந்து அந்த நீல நிற காரை உடையவர் இங்கிருந்தால் தயவு செய்து நீங்கள் சென்று அதனை
அங்கிருந்து நகர்த்துவீர்களா? எனக்கு உங்கள்
உரிம எண் தெரியாது. அது யாரென்று
உங்களுக்கு தெரிந் திருக்கலாம். தயவு கூர்ந்து அந்த வாகனத்தை நகர்த்துங்கள்
– நன்றி” என்று கூறுகின்றார் - ஆசிரியர்) ஆம், ஐயா.
26. அன்பு, நிச்சயமாகவே நாங்கள் ஜனங்களே உங்களைப் பாராட்டுகிறோம்.
மேலும் இப்பொழுது தேவன் உங்களை அபரிமிதமாய் ஆசீர்வதிப்பாராக. மேலும் நீங்கள் எப்போதாவது
ஜெஃபர்சன்வில் வழியாய் வர நேர்ந்தால் அங்கு நிறுத்தி என்னைப் பார்த்துச் செல்லுங்கள். நீங்கள் டூசானின் வழியாய் வந்தாலும் அங்கு நிறுத்தி
என்னைப் பார்த்துச் செல்லுங்கள். நான் உங்களைக்
காண்பதில் மகிழ்ச்சியுறுவேன்.
27. இப்பொழுது எல்லா நாட்களும் டூசானில்
இருப்பேன். (நினைவில் வையுங்கள்) அலுவலகம் ஜெஃபர்சன்வில்லில் இருக்கும். பில்லிபால்
எப்போதும் அங்கிருப்பான். எந்நேரத்திலும் என்னை எப்படித் தொடர்பு கொள்வது என்பதை அவன்
அறிந்திருப்பான் பாருங்கள்? நான் ஊழியக்களத்திலிருக்கிறபடியால் எனக்கடுத்தபடியாக அவன் தான் என்னைக்குறித்து அறிந்திருக்கிறவன். அவன்
இங்கே இருக்கக்கூடும், ஏனெனில் ஜெஃபர்சன்வில்லிலிருந்து
டூசானுக்கு ஒரு மணி நேரப் பயணம் மட்டுமே ஆகும். நான் ஹவாய்க்கு பிரயாணம் செய்வது போன்று கர்த்தர் எனக்கு
ஒரு தரிசனம் அளித்துள்ளார். பாருங்கள். தேவன்
எங்கெல்லாம் என்னை நடத்துகிறாரோ அங்கு நான் செல்கிறேன். வேறெங்கும் செல்வதில்லை. அவர்
வழி நடத்துமிடத்துக்கு மட்டுமே செல்கிறேன். பாருங்கள். மேலும் நீங்கள் எனக்காக ஜெபியுங்கள். ஆற்றின் இக்கரையில்
இனி ஒரு போதும் நான் உங்களைக் காணமுடியாமற்போகுமானால், நான் உங்களை அங்கு சந்திப்பேன். ஆமென்.
28. இப்பொழுது வார்த்தையை அணுகுமுன்பு.
மேலும் இன்றிரவு நான் சில நிமிடங்கள் மட்டும் பேச எடுத்துக் கொள்ள விரும்புகிறேன்.
ஏனென்றால் ஜெஃபர்சன் வில்லிலிருந்து வந்திருக்கும் சில நண்பர்களைக் கண்டேன்.அங்கிருந்த
மற்றொரு குழுவையும் தெருவில் சந்தித்தேன். அவர்கள் இந்த ஆராதனை முடிந்த பிறகு இன்றிரவில்
காரோட்டிச் செல்லவேண்டும். மேலும் நான் “இறங்கு வரிசையில் எண்ணுதல்” என்னும் பொருளின்
பேரில் பேச போகிறதாக இருந்தேன். அது இரண்டரை மணி நேரச் செய்தியாகும். எனவே அதை முடித்து
அவர்கள் விடியு முன்பு ஜெபர்சன்வில்லுக்குச் சென்றடைய முடியாது. ஜனங்களாகிய உங்களில்
அனேகர் வேலைக்குச் செல்ல வேண்டியர்களா யிருக்கிறீர்கள். மேலும் இவ்வாரம் முழுவதும்
நான் பேசுவதைக் கேட்டீர்கள். நாங்கள் உங்களுடன் இருந்ததை (மகிழ்ச்சியுடன்) அனுபவித்தோம். மேலும் இன்றிரவில் என்னால் நன்கு செய்ய முடிவதைச்
செய்ய முயற்சிக்கப் போகிறேன். இப்பொழுது நான்
தவறாக எதையும் கூறப்போவதில்லை.
29. இப்பொழுது வேதவார்த்தையை அணுகும்
முன்பு ஜெபிக்கப் போகிறோம்.
30. இரக்கமுள்ள தேவனே, இங்குள்ள ஜனங்களை
நோக்கிப் பார்த்து அவர்களில் சிலரை இனி ஒரு
போதும் மீண்டும் காணமாட்டேன் என்று அறிந்து கொண்டேன். இது நாங்கள் கடைசியாக சந்திக்கும்
வேளையாயுள்ளது. நான் ஓராண்டிற்குப்பிறகு இங்கு வருவேனென்றால் அனேகர், முதிர்வயதான சிலர்
எப்படியும் சென்றிருப்பார்கள். மேலும் கர்த்தாவே, இன்றிரவு இங்கிருக்கும் அனேகர் வியாதியுள்ளவர்
களாக இருக்கின்றனர். அவர்களுடைய சரீரங்களை
நீர் ஏதோ சில வழிகளில் தொடாமற்போனால் அவர்களில் அனேகர் வெகு காலம் இங்கு (உலகத்தில்
– மொழிபெயர்ப்பாளர்) இருக்க மாட்டார்கள் என்று உணருகிறேன். மேலும் கர்த்தாவே, நானும்
மிக நீண்டகாலம் இங்கே இல்லாமல் இருக்கலாம். நாங்கள் அதை அறிந்திருக்கவில்லை. பின்பு
நாங்கள் உத்தமமாயும் உறுதியாகவும் தேவனின்
வார்த்தையை நினைவு கூர்ந்து, “தேவனிடத்தில் அன்பு கூருகிறவர் களுக்கு சகலமும் நன்மைக்கேதுவாக
நடக்கிறதென்று” அறிந்துகொள்ளச் செய்யும்.
31. மேலும் கர்த்தாவே, நான் வார்த்தையை
வாசிக்கப்போகிறேன்.வார்த்தையை வாசிப்பதே என்னால் செய்ய முடிகிற காரியமாயிருக்கிறது.
பின்பு அதிலிருந்து சிலவற்றைக்கூற அல்லது சிலவற்றைச்
செய்ய நாங்கள் உம்மை சார்ந்திருக்கிறோம்.அது இன்றிரவு இங்கிருக்கும் இரட்சிக்கப்படாத
ஒவ்வொரு வரையும் இரட்சிக்கும். இன்றிரவு இங்கிருக்கும் சிலருக்கு தேவனுடைய வார்த்தை
தத்ரூபமானதாக இருந்து, கர்த்தாவே, இரட்சிக்கப்படாதவர்கள் உம்மைத் தங்கள் இரட்சகராக
ஏற்றுக்கொள்ளும் வரை அவர்களுடைய இருதயத்தின் ஆழத்தில் செல்வதாக. பரிசுத்த ஆவியானவர் தாமே எங்கள் மத்தியில்
வந்து பேசி,தேவனின் கிரியைகளைச் செய்து பின்தொடரும் அடையாளங்களினாலே வார்த்தையை உறுதிப்படுத்துவாராக. பிதாவே அதை அருளும்.
32. எங்கள் வாழ்க்கையை நாங்கள் முடித்து
நித்திய ஜீவனுக்குள் பிரவேசிக்கும் நாள் வரை கார்த்தாவே நாங்கள் நன்றியுள்ளவர்களாயிருப்போம்.
மேலும் முடிவே யில்லாத காலங்கினூடாக உமது பாதங்களில் அமர்ந்திருந்து நாங்கள் நேசிப்பவரும்
எங்களை நேசித்தவருமான ஒருவரையே நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்க விரும்புகிறோம். அந்நேரம்
வரை உமக்கு சேவைபுரிய எங்களை சுகத்தோடும் மகிழ்ச்சியோடும் வைப்பீராக. இயேசுவின் நாமத்தில்
ஜெபிக்கிறோம். ஆமென்.
33. (ஒரு சகோதரன் மீண்டும் பீடத்தினருகில்
வந்து வாகனத்தின் உரிமையாளர் தயவு செய்து வாகனத்தை நகர்த்தும்படி கேட்டுக் கொள்கிறார்
– ஆசிரியர்)
34. நாம் இப்பொழுது வேதாகமத்தில் பரிசுத்த
மாற்கு 4-ம் அதிகாரத்தில் 35-ம் வசனத்திற்கு திருப்பி அதை வாசிப்போம். நீங்கள் விரும்பினால்
என்னுடன் சேர்ந்து வாசிக்கலாம் அல்லது அதை
எழுதிக்கொள்ளலாம். அனேக ஜனங்கள் தங்கள் வேதாகமத்தை எடுத்து அதைக் குறித்து வைக்கிறார்கள்
என்று அறிவேன். ஒரு தேவ ஊழியர் ஒரு வேதபாடத்தை அதிலிருந்து எடுக்கும் போது அவர்கள்
அதைக் குறித்து வைத்துக்கொண்டு மீண்டும் அதை ஒப்பிட்டுப் பார்க்கும்படியாக வேதாகமத்தின்
இந்த எளிய செய்திகளை வாசித்து அதிலிருந்து பேசுவதை நான் விரும்புகிறேன். அது என் இருதயத்தைப்
புளகாங்கிதம் அடையச் செய்கிறது. பரிசுத்த மாற்கு 4-ம் அதிகாரத்தின் 35-வது வசனம் முதல்.
அன்று சாயங்காலத்தில், அவர் அவர்களை நோக்கி:
அக்கரைக்குப் போவோம் வாருங்கள் என்றார்.
அவர்கள் ஜனங்களை அனுப்பிவிட்டு அவர் படவிலிருந்தபடியே
அவரைக் கொண்டு போனார்கள். வேறே படவுகளும் அவரோடே கூட இருந்தது.
அப்பொழுது பலத்த சூழல்காற்று உண்டாகி, படவு நிரம்பத்தக்கதாக
அலைகள் அதின் மேல் மோதிற்று.
கப்பலின் பின்னணியத்தில் அவர் தலையணையை
வைத்து நித்திரையாயிருந்தார். அவர்கள் அவரை
எழுப்பி: போதகரே, நாங்கள் மடிந்து போகிறது உமக்குக் கவலையில்லையா? என்றார்கள்.
அவர் எழுந்து, காற்றை அதட்டி, கடலைப்பார்த்து:
இரையாதே, அமைதலாயிரு என்றார். அப்பொழுது காற்று
நின்று போய், மிகுந்த அமைதல் உண்டாயிற்று.
அவர் அவர்களை நோக்கி : ஏன் இப்படி பயப்பட்டீர்கள்?
ஏன் உங்களுக்கு விசுவாசம் இல்லாமற்போயிற்று என்றார்.
அவர்கள் மிகவும் பயந்து : இவர் யாரோ?
காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று ஒருவரோடொருவர் சொல்லிக் கொண்டார்கள்.
35. இன்றிரவு ஒரு சிறு பிரசங்கத்திற்காக,
வாசித்த பகுதியிலிருந்து ஒரு பாடத்திற்காக அதனை “இயேசுவைக் காட்சியில் அழைத்தல்” என்றழைக்க
விரும்புகிறேன். நாம் இயேசுவைக் காட்சியில் அழைப்போம்.
36. நீங்கள் அறிந்திருக்கறீர்கள், அவர் எவ்விதமாக உணர்ந்திருப்பார்
என்று நான் கற்பனை செய்கிறேன். அவர் ஒரு மகத்தான நாளை உடையவராயிருந்தார். அவர்.........
அவர் களைப்படைத்திருந்தார். அவர் அந்த நாளில் அதிகமாகப் பேசி உவமைகளைக் குறித்துக்
போதித்தார். நீங்கள் கவனிப்பீர்களானால் கடுகு விதை மற்றும் பல்வேறு உவமைகளைப் போதித்தார். அவர் வியாதியஸ்தர்களை சுகமாக்கி,
போதித்த மகத்தான நாளில் அவருடைய சரீர பெலன்
அவரை விட்டுப் போய்விட்டது. எந்த ஒரு ஊழியரும் நம் சிறு ஊழியங்களில் நாம் எப்படியாகக்
களைப்புறுகிறோம் என்பதை அறிந்திருப்பர். அப்படியானால் அவரது (கடினமான – மொழிபெயர்பாளர்)
ஊழியம் அவருக்கு எதனைச் செய்திருக்க வேண்டும்?
37. நினைவில் கொள்ளுங்கள். மாம்சத்தில் அவர் ஓர் மனிதர் மட்டுமே, ஆனால் ஆவியிலோ
அவர் தேவனாயிருந்தார். அவர் மாம்சத்தில் மனிதனாயிருந்த படியினால், அவருடைய சரீரம் மனிதத்தன்மையுடைய
தாயிருந்தபடியினால், அது சோதனைகளுக்கும், வியாதி களுக்கும் உட்பட்ட நம்முடைய சரீரம் போன்றே இருந்தது; அவர்
மானிட சரீரத்தை தரித்து ஒரு மனிதனாயிருந்தபடியால்.
ஆனால் ஆவியில் அவர் தேவன். அவர், “நானும் என் பிதாவும் ஒன்றாயிருக் கிறோம். என் பிதா என்னில் வாசமாயிருக்கிறார்” என்றார்.
38. யோவான் யோர்தானில் அவருக்கு ஞானஸ்நானம்
கொடுத்தபோது தேவன் பரலோகத்திலிருந்து புறாவின்
ரூபத்தில் இறங்கி வந்ததைக் காண்கிறோம். ஒரு
சத்தம், “இவர் என்னுடைய நேசக்குமாரன். இவரில் வாசம் செய்யப்பிரியமாயிருக்கிறேன்”
என்றது. நீங்கள் மூலப்பதிப்பில் எழுதப்பட்டுள்ளதை எடுத்துக்கொள்வீர் களானால் அது,
“இவரில் வாசமாயிருக்கப் பிரியமா யிருக்கிறேன்”
என்றுள்ளது. பாருங்கள்? ஆனால் அவர்கள் வினைச் சொல்லை பெயர்ச் சொல்லுக்கு முன்பாகப்
பொருத்திவிட்டனர்.இவரில் வாசமாயிருக்கப் பிரியமாயிருக்கிறேன்
அல்லது இவரில் வாசமாயிருக்கப் பிரியமாயிருக்கிறேன்.அவரில் வாசமாயிருக்க பிரியமா யிருக்கிறேன்.
பாருங்கள்.
39. அவர், தேவன் கிறிஸ்துவில் வாசம் செய்தார்.
தேவத்துவத்தின் பரிபூரணம் சரீரப்பிரகாரமாக அவருக் குள் இருந்தது. தேவன் தம்மை இயேசுவின்
மூலம் வெளிப்படுத்தினார். இயேசு தேவனின் உறுதிப்படுத்து
தலாயிருந்தார். அதை இப்பொழுது உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா? (சபையார்,“ஆமென்”
என்கின்றனர் – ஆசிரியர்) பாருங்கள். மூன்று
பேர்கள் அல்ல; ஒரே தேவனின் மூன்று தன்மைகள். மூன்று தெய்வங்கள் அல்ல; மூன்று தெய்வங்கள் என்று சொல்வோமானால்
நாம் அஞ்ஞானிகள் ஆவோம். பாருங்கள்? மூன்று தெய்வங்கள் அல்ல. பிதா குமாரன் பரிசுத்தஆவி
என்பது மூன்று வேறுபட்ட தேவர்கள் அல்ல. அது ஒரே தேவனின் மூன்று வெளிப்பாடுகள்.
40. பிதாவாகிய தேவன் பரிசுத்த ஆவியின் ரூபத்தில்
அக்கினி ஸ்தம்பத்தில் இருந்தார். எனவே
அவரை ஒருவருமே தொடக்கூடாதிருந்தது. அவர் பரிசுத்த ராயிருந்தார். பாவத்தைப் போக்கக்கூடிய
பலி (அது வரை–மொழிபெயர்பாளர்) செலுத்தப்படவில்லை. அதற்கு நிழலான பலி மட்டுமே செலுத்தப்பட்டு
வந்தது.
41. இப்பொழுது அதே அக்கினிஸ்தம்பம் பிதாவானவர்
இறங்கி வந்து குமாரத்துவத்தில் தேவனானார். அவர் அக்கினி ஸ்தம்பத்தில் வாசம் செய்தார்,
இங்கே அவர்... ஷெக்கினா மகிமையில் இருந்தார்.
இங்கு அவர் மானிடராக சிருஷ்டிக்கப்பட்ட
உருவாக்கப்பட்ட இரண்டாம் ஆதாமாக்கப்பட்டகுமாரன் என்னும் சரீரத்தில் வாசம் செய்தார்.
அவர் நிந்தனைக்குள்ளாகும் படியாக ஆதாமைப்போல்
ஸ்திரீயின் கருவின் மூலம் வந்தார் “
ஒவ்வொரு மனிதரும் ஸ்திரியின் மூலம் வருவதைப் போல். ஆகவே அவர் அவ்விதமாய்
வர வேண்டியதா யிருந்தது. இப்பொழுது அது தேவனாயிருக்கிறது
- குமாரனாக, அதே தேவனாக இருக்கிறது. மேலும் அவர் இப்பொழுது தம்முடைய சரீரத்தைப் பாவமில்லாததாய் பலியிட்டதினாலே மனிதருக்காகப் பலியானார்.
42. இப்பொழுது திசு (இங்ப்ப்) அல்லது
ஆவி, ஜீவன் இரத்தத்தில் இருக்கிறது. ஒரு ஆட்டுக்குட்டி அல்லது ஒரு மிருகத்தின் திசு
உடைக்கப்படும் போது அந்தத் திசுவில் இருந்து
வெளிப்படும் ஜீவன் ஆராதனை செய்பவரின் மேல் வர முடியாது.
ஏனென்றால் அது ஒரு மிருகத்தினுடையது.நாம்
மனிதர்களாய் வித்தியாசப் பட்டவர்களாயிருக்கிறோம்.
ஒரு மிருகத்திற்கு ஆத்துமா என்பது கிடையாது. மனித இனம் ஆத்துமாவை உடையதாயிருக்கிறது. எனவே அவன் (மிருகத்தை – மொழிபெயர்பாளர்) பலி செலுத்தும்போது அதிலிருந்து புறப்படும் ஆவி அவன் மீது வர முடியாது. ஆயினும் அவன்
அதைச் செய்கிறான் (மிருக பலி செலுத்து கிறான்–மொழிபெயர்ப்பாளர்) விசுவாசத்தினால் உத்தம
மாகக் கூறுவோமானால் ஓர் பரிபூரணமான பலி வருகிறது
என்பதை அவன் விசுவாசித்து அதைச் செய்கிறான்.
43. ஆனால் இயேசுவில் அந்த இரத்த அணுக்கள்
உடைபட்டபோது, தேவன் வெளிப்பட்டார். பாருங்கள். அவர் தேவனாயிருந்தார். அவரிலிருந்த இரத்தம்
யூத இரத்தமல்ல. அந்த இரத்தம் புற ஜாதியுடையதும்
அல்ல. அது உருவாக்கும் இரத்த அணு. அது தேவன் தாமே. இப்பொழுது அந்த இரத்தத்தின் மூலம் நமது பாவங்களுக்காக
குற்ற நிவாரண பலியை உண்டாக்கி அதை விசுவாசிப்பவர்களை அவர்கள் ஒரு போதும் பாவமே செய்யாதவர்கள்
போல் அவர்களைச் சுத்தமாக்கி அவர்கள் பாவங்களை அகற்றி பரிசுத்த மாக்கி விடுகிறார். தேவன் அவர்கள் பாவங்களை மறதியின் கடலில்
போட்டுவிடுகிறார். இயேசுவில் இருந்த அதே தேவன் ஒரு விசுவாசிக்குள்ளிருந்து அவர் இங்கிருந்தபோது
செய்த அதே கிரியைகளைச் செய்கிறார். ஏனென்றால்
அது அதே ஆவியா யிருக்கிறது.
44. அங்கே தேவன் இருக்கிறார். பாருங்கள்.
மூன்று தெய்வங்கள் அல்ல. ஓ திரித்துவ ஜனங்களே, உங்களில் எத்தனை பேர் அவ்விதமாய் கலந்து
விட்டீர்கள்? ஒருத்துவக்காரர்களே, உங்களிலும் எத்தனைபேர் அவ்விதமாய் கலந்து விட்டீர்கள்?
ஒரு கையின் விரலைப் போல் அவரை (இர்ன்ய்ற்ண்ய்ஞ்) வைத்திருக்கிறீர்கள்?உ...... ஊ....
பாருங்கள்? அவர்கள் எல்லாரும் அவ்விதமாகக் கலந்து விட்டனர். பாருங்கள்.
அது சரி. உங்கள் விரலைப் போல்......... அவர் ஒரே தேவன், அவர் தாமே எப்படி தம் பிதாவாக
முடியும்? பாருங்கள். பாருங்கள். அவரே தம்முடைய
பிதாவாக இருக்க முடியாது. பரிசுத்த ஆவியைத் தவிர வேறு ஒரு பிதாவை அவர் உடையவராயிருபாரானால்
– மத்தேயு 1-ம் அதிகாரத்தில் அவருடைய பிதா பரிசுத்த ஆவி என்று சொல்லியிருக்க, தேவன் என்ற மற்றொருவரை அவர் பிதா என்றழைத்தால் அவர் முறை தவறிய பிள்ளையாயிருந்திருப்பார். பாருங்கள்? எனவே நீங்கள் எந்த வழியிலும் அதைச்
(தேவனை மூன்று பேர்களாக – மொழிபெயர்பாளர்)
செய்ய முடியாது. உங்கள் அனைவரின் கருத்தும்
தவறானது.
45. அவர் தம்முடைய சிருஷ்டிக்கப்பட்ட
குமாரனுடைய மாம்சத்தில் வெளிப்பட்ட தேவன். பாருங்கள்? இப்பொழுது, அது தேவன் குமாரனை
சிருஷ்டித்த தாகும்.
46. மேலும் கத்தோலிக்கர்களாகிய நீங்கள்
நித்திய குமாரத்துவம் என்று கூறும் போது அப்படிப்பட்ட
ஒரு வார்த்தையை எங்கிருந்து பெற்றுக் கொண்டீர்கள்? அது எனக்கு எந்த ஒரு அர்த்தத்தையும்
உண்டாக்கு வதில்லை. அவர் எப்படி நித்தியமானவராயிருந்து, குமாரனாகவும் இருக்க முடியும்? ஒரு குமாரன் எனப்படுபவர் ஜெனிப்பிக்கப்படுபவர்.
எனவே அவர் எப்படி நித்தியமாயிருக்க முடியும்? நித்தியம் ஒரு போதும் தொடங்கவுமில்லை. அது ஒரு போதும் முடிவதுமில்லை. எனவே அது எப்படி நித்திய குமாரத்துமாக இருக்க முடியும்?
ஓ என்னே!
47. இந்த ஸ்தாபனங்கள் நற்பண்புகளை உருவாக்கா
விடில் அவை எதை உடையதாயிருக்கும் என்று எனக்குத்
தெரியவில்லை. எதில் விசுவாசம் வைப்பது என்பதை ஜனங்கள் அறியாதிருக்கிறபடியால், ஜனங்கள்
(வார்த்தையை - மொழிபெயர்ப்பாளர்) விசுவாசிக்கக் கூடாதவர்களாயிருப்பதைக் குறித்து ஆச்சிரியப்படுவதற்
கொன்றுமில்லை.அது சரி. நமக்குத் தேவையான தென்னவென்றால்
பழைய பாணியிலான வேதத்துக்கு திரும்புதலே; அது
சரி. மிகவும் சரி. அது சரியே.
48. இப்பொழுது, இயேசு மனிதனாக சரீரப்பிரகாரமாக
களைப்படைந்திருந்தார். அங்கே களைபுற்று படுத்துக் கொண்டிருந்தார். பலம் அவரை விட்டுப்
போயிருந்தது. மேலும் அஹ்ர் தேவனாயிருப்பதால் அவர் எதை யெல்லாம் செய்யக்கூடுமோ........
49. இப்பொழுது நீங்கள், ‘அவர் எவ்வாறு
தேவனாகவும் மனிதனாகவும் இருக்க முடியும்?’ என்கிறீர்கள். பாருங்கள். அங்கே தான் இரகசியம் இருக்கிறது.
பாருங்கள். சரீரத்தில் அவர் மனிதன், ஆவியில் அவர் தேவன். பாருங்கள்?
50. யாரோ ஒருவர் என்னிடம், “அது எப்படி?
அவர் யாரிடம் கெத்சமனே பூங்காவில் ஜெபித்தார்?” என்று கேட்டார்.
51.
நான், “நீங்கள் இதற்கு பதிலளிப்பீரானால் நான் அதற்கு பதிலளிப்பேன். நீங்கள் பரிசுத்த ஆவியை உடையவராயிருக்கிறீரென்று
நீர் விசுவாசிக்கிறீரா?” என்றேன். அவர், “ஆம்” என்றார்.
52. நான், ‘அப்படியானால் நீர் யாரிடம்
ஜெபிக்கிறீர்? நீர் அவரிடம் ஜெபிக்கும்போது அவர் எங்கிருக்கிறார்? நீங்கள் அவரை உடையவராக
இருப்பதாக உரிமை கோரியும் நீர் அவரிடம் ஜெபிக்கிறீர்” என்றேன். பாருங்கள். ஜனங்கள்
தங்களில் சிறு கருத்துக்களை உடையவர்களாயிருந்து அதில் தீவிரமாக நடக்கின்றனர். நீங்கள்
பாருங்கள். அவ்விதமாகத் தான் அது செல்கிறது.
53. இப்பொழுது ஆவியில் அவர் தேவனாயிருக்கிறார்.
கவனியுங்கள், இயேசு யோவான் 3-ம் அதிகாரத்தில்,
“மனுஷகுமாரனாகிய நான் இப்பொழுது பரலோகத்தி லிருந்து கொண்டு பூமியிலும் நின்று கொண்டிருக்
கிறேன். இப்போது பரலோகத்திலிருக்கும் மனுஷ குமாரன்” என்றார். அதற்கு நீங்கள் என்ன பதில்
கூறுவீர்கள்? பாருங்கள். அவர் தாம் பரலோகத்தில்
இருக்கிறதாகவும் அதே சமயத்தில் பூமியிலும்
நின்று கொண்டிருப்பதாவும் கூறினார். பாருங்கள். ஓ, என்னே! நீங்கள் அதைப்பாருங்கள்.
அவர் தேவனாக இருக்க, சர்வவியாபியாக இருக்க வேண்டியதாயிருந்தது. பாருங்கள். நிச்சயமாக.அவர்
எங்கும் வியாபித்துள்ளார். அவர் எல்லா எண்ணங்களையும்
அறிந்திருக்கிறார். அவர் சர்வ ஞானியாக இருந்து
எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார். அவர் சர்வ வியாபியாக இருக்க முடியும். பாருங்கள்?
54. ஆகவே - அவருக்கு மறுநாளில் ஒரு மகத்தான
பணி ஒன்று அவருக்கு முன்பாக உண்டென்று அறிந்தவராக அவர் கதரேனருடைய பட்டணத்திற்குப்
போனார் என்பதை நாம் காண்கிறோம். அங்கே கதரேனருடைய பட்டணத்தில் அங்கே தன் புத்தி சுவாதீனத்தை
இழந்த பைத்தியக்காரனான பிசாசு களுக்கு நடுவில் வாழ்ந்து கொண்டு தன்னைத் தானே காயப்படுத்திக்
கொண்டிருக்கும் பரிதாபமான தனக்குத் தானே உதவி செய்து கொள்ள முடியாத ஒருவன் இருந்தான். அவர் அங்கு தம் பாதையில்
முன்னே சென்று கொண்டிருந்தார் என்று இப்பொழுது காண்கிறோம். அதைப்பற்றி அனைத்தையும்
அவர் அறிந்திருந்தார் என்று நான் விசுவாசிக்கிறேன். பிதா அவரை அங்கு அனுப்பியிருந்தார்.
அவர் அதை அறிந்திருந்தார்.
55. அவர் களைப்படைந்து சோர்வுற்றிருந்தார். படகு சென்று கொண்டிருந்த வேளையில் இந்த சந்தர்ப்பத்தை
பயன்படுத்தி பின்னணியத்தில் சென்று கொஞ்சம்
இளைப்பாறினார். மகத்தான அந்த நாளில் ஒரு வேளை
இதைப்போன்ற மாலை வேளை, அல்லது சற்று அதற்குப் பிறகு அவர்கள் கடலைக் கடந்து சென்று கொண்டிருந்த வேளையில்,
இயேசு பின் பக்கமாகச் சென்று, பின்னணியத்தில் அனேகமாக பின்புறமாக உள்ள அந்தச் சிறிய
அறையினுள் சென்று தலையணையை வைத்துப் படுத்துக்கொண்டார். மேலும் அவர் படுத்து இளைப்பாறுகையில் சீஷர்கள்,
“நமக்கு இந்த நாளின் பிரயாணம் முடிந்து விட்டது. நாம் இப்போது நம் வழக்கமான பணியை மேற்
கொண்டுள்ளோம். நாம் படகை ஓட்டிச் செல்வோம்’ என்று எண்ணினர்.
56. எழுப்புதல் கூட்டம் முடிந்த பிறகு
நாம் இருக்கிற விதமாகவே அந்த சீஷர்களும் இருந்தனர். அது முடிந்து விட்டது என்று நாம்
அனைவரும் அறிவோம். அது முடிந்து விட்டது என்று கூறி நீங்களும், “அது முடிந்து விட்டது;
நாம் பெற்றிருந்த மகத்தான எழுப்புதல் முடிந்து விட்டது” என்று கூறக்கூடும். நாம் சற்று
சோர்வுற்றுள்ளோம். எனவே அது முடிந்து ஒவ்வொரு வரும் தங்கள் சொந்த சபைக்கும் இன்னும்
தாங்கள் செய்து வந்த பழைய காரியங்கள் என்னவெல்லாம் உண்டோ அதற்குத் திரும்பி விடுகின்றனர்.
57. இயேசு சற்று ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது அவர்கள் அவ்வாறு
செய்தனர் என்று நாம் காண்கிறோம். அவர்கள் தாங்கள் கண்ட அவர் செய்த மகத்தான கிரியைகளைக்
குறித்து ஒருவருடன் ஒருவர் பேசி மகிழ்ச்சியாயிருந்திருக்க வேண்டும். ஓ, அவ்விதமாக அவர்கள்
தாங்கள் அந்த நாளில் பெற்றிருந்த எழுப்புதலுக்காக
அவர்கள் மகிழ்ந்தி ருப்பார்கள் என்று நான்
நினைக்க விரும்புகிறேன்.
58. நாம் இப்பொழுது இருப்பதைப் போன்றுதான்
சீஷர்களும் இருந்தனர் என்று நீங்கள் அறியுங்கள்.
கர்த்தராகிய இயேசு இன்றிரவு நம்மை சந்தித்து மிகப்பெரிய காரியங்களைச் செய்து நேற்று
இரவில் செய்தது போல் முடக்குவாதமுடையவர்களை எழும்பி நடக்கச் செய்ததையும் இன்னும் வித்தியாசமான
காரியங்களையும் செய்வதையும் கண்டு நாம் வீட்டிற்குச்
செல்கிறோம். பாருங்கள்? இப்பொழுது அவர் அதைச் செய்து சிலரை இரட்சிப்பாரானால் அல்லது
ஏதாவதொன்றை செய்வாரானால், நீங்கள் வீட்டிற்குச் சென்று, ஸ்திரீயும் கணவருமாய், பிள்ளைகளும்
அல்லது மற்றவர்களும் உட்கார்ந்து அதனைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பீர்கள், அப்படியிருக்கக்
கூடும்.
59. இந்த சீஷர்களும் அதைத்தான் செய்திருப்பார்கள்
என்று நம்புகிறேன். அவர்கள் தாங்கள் கண்ட கிரியைகளைக் குறித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள்.
ஓ, அவர்கள் அதைக்குறித்து களிகூர்ந்திருக்க வேண்டும். அவர் எவ்வாறு அந்தக் கிரியைகளை
நடப்பித்துத் தம்மை வாக்குப்பண்ணப்பட்ட வார்த்தை என்று அவர் நிருபித்ததைக் குறித்து
பேசிக்கொண்டிருந்தனர். இப்பொழுது மேசியா தமது கிரியைகளினாலும் தமது வார்த்தையினாலும்,
தமது செயல்களினாலும், தாமே அபிஷேகம் பண்ணப்பட்ட அந்த ஒருவர் என்று நிரூபித்துக் கொண்டிருந்தார்.
இப்பொழுது “அபிஷேகம் பண்ணப்பட்ட ஒருவர்” அல்லது “கிறிஸ்து” என்னப்படு வதற்கு அர்த்தம்
“அபிஷேகம் பண்ணப்பட்ட ஒருவர்” என்பதே. ஆகவே எல்லா தீர்க்கதரிசிகளைக் காட்டிலும் அபிஷேகம்
பண்ணப்பட்ட ஒருவர் இருப்பார். தீர்க்கதரிசிகள்
தேவனின் ஒரு பாகத்தை உடைய வராயிருந்தனர். ஆனால் அவர் (இயேசு) தேவனின் பரிபூரணத்தை
உடையவராயிருந்தார். பாருங்கள்? இப்பொழுது, மனிதன் தேவனின் ஒரு பாகத்தை மட்டுமே பெறமுடியும்.
அவரோ தேவத்துவத்தின் பரிபூரணத்தை உடையவராயிருந்தார். இப்பொழுது, அவர்கள்
அவர் எவ்வாறு தம்மை நிரூபித்தார் என்று வார்த்தையிலிருந்து தம்மைப்பற்றி விளக்கிக் கூறக்
கேட்ட அவர்கள் வார்த்தையினால் அவர் யார் என்பதை
அறிந்துகொண்ட விதம் குறித்து பேசிக்கொண்டிருந்தார்கள். ஓ, சீஷர்களுக்கிடையே நடந்த அந்த
உரையாடல் எவ்வளவு மகத்தானது!
60. அவர்களில் ஒருவன், “நல்லது, பின்பு
நாம் அறிந்து கொண்டோம். நாம் திருப்தியானோம். நாம் அவரே அந்த மேசியா என்று விசுவாசிக்கிறோம்”
என்று கூறியிருக்கலாம். இப்பொழுது, பாருங்கள்.
அவர் அதை (அவர்கள் பேசிக்கொண்டிருப்பதை – மொழி பெயர்ப்பாளர்) அறியவில்லை என்று அவர்கள்
நினைத்தனர். அவர் கப்பலின் பின் பகுதியில் இருந்தார். எனவே – எனவே அவர்கள், “அவர் கட்டாயம்
அபிஷேகிக்கப்பட்ட மேசியா தான் என்று நாம் அறிந்து கொண்டோம்” என்றனர்.
61. பின்பு அவர்கள் ஜனங்களுடைய எண்ணங்களைக்
குறித்தும் பேசியிருக்க வேண்டும். இப்பொழுது
அவர்கள் இதைப்போன்று, “நாம் படிப்பறிவில்லாதவர் களாயும் ஏரியிலிருந்து வந்த மீனவர்களாயுமிருந்தும் அவருடைய கிரியைகளைக் கண்டும்
வேதத்தை வாசித்தும் அவரே தேவனால் அடையாளம் கண்டு கொள்ளப்பட்ட மேசியா என்றும் வேதத்தில் கூறப் பட்டுள்ளவற்றுடன் சரியாகப் பொருந்துபவர் என்றும்
அறிந்து கொண்டுள்ளோமே!ஏன் இந்த அறிவாளிகளால் அறிந்து கொள்ள முடியவில்லை? அவர் அதைக்
காண முடியாததற்காக அவர்களுடன் உள்ள காரியம் என்ன?” என்று கூறினர். ஜனங்களின் எண்ணங்களைக்
குறித்துப்பேசினர். ‘அவர்களில் சிலர், ஜனங்களில் சிலர் விசுவாசித்தனர், சிலர் விசுவாசிக்க
வில்லை.”
62. ஏன், அது இன்றுள்ளது போலவே இருந்தது.
இன்று சில ஜனங்கள் அவரை விசுவாசிப்பார்கள். மற்றவர்கள் அவரை விசுவாசிக்க மாட்டார்கள்.
ஆனால் அது அவரை சிறிதளவும் மாறச் செய்வதில்லை. அவர் இன்றும் அதே நபராயிருக்கிறார்.
அது அவரை மாறச் செய்வதில்லை.
63. அன்று ஜனங்களில் சிலரின் பேச்சு இவ்விதமாக
இருந்திருக்கக்கூடும்: “உங்களுக்குத் தெரியுமா? அங்கிருந்த ஒரு கூட்ட ஜனத்துடன் இன்று
நான் பேசினேன். பெருகச் செய்த அப்பத்தையும் மீன்களையும் புசித்த பின்பு அவர்களில் சிலருடன்
நான் பேசினேன். அவர்கள், ‘அவர் யோகோவாவேயல்லாமல்
வேறல்ல; ஏனென்றால் இஸ்ரவேல் ஜனங்களுக்கு அப்பத்தை
(மன்னாவை – மொழிபெயர்ப்பாளர்) மழையாகப் பொழிந்தவர் அந்த யோகோவாவே’ என்றனர். மேலும் அவர்கள், ‘ஒரு மனிதனும் ஒருக்காலும்
இப்படிப் பேசினதில்லை. ஏன் இவர் மேசியாவாகத்தான்
இருக்க வேண்டும். ஏனெனில் மேசியா ஒரு தீர்க்கதரிசியாக இருப்பார் என்று அறிவோம், ஏனெனில், அவர் எதையெல்லாம் உரைத்தாரோ அது சம்பவிக்கிறது.
இந்த மனிதர் அந்த மேசியாதான், ஏனெனில் அவர் எதை உரைத்தாலும், அது சம்பவிக்கிறது’ என்றனர்.’ ஆமென்! நான் அதை விரும்புகிறேன்.
64. எனவே தான் நான் அதில் நிச்சய முள்ளவனாயிருக்கிறேன்.
ஏனெனில் இதுவே அவர் உரைத்தது; அது சம்பவிக்கப்போகிறது. அது சரி. அவர், அவர் உரைத்தார்.
இது தான் அவருடைய வார்த்தை. அவர் எதை உரைத்தாலும் அது சம்பவிக்கும். “வானமும் பூமியும்
ஓழிந்து போகும். என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை.”
65. மேலும் அப்பொழுது அவர்களில் சிலர்
எதிர்மறையான நிலையை எடுத்துக் கொண்டனர். அவர்கள் – அவிசுவாசிகளான அவர்கள், “இந்த மனிதன்
ஒரு குறிசொல்பவன் மாத்திரமே. இப்பொழுது, இந்த
மனிதனால் ஒன்றும் செய்ய முடியாது. இவன் ஒரு குறி சொல்பவன் மாத்திரமே என்று அறிந்திருக்கிறோம்”
என்றனர்.
66. இப்பொழுது, அவர்கள் அவருடைய வாழ்க்கை
ஒரு வினோதமானது என்றறிந்திருந்தனர்.ஏனெனில் அவரால் ஜனங்களின் இருதயத்தைப் பார்த்து
அவர்கள் செய்து கொண்டிருப்பவைகளை துல்லியமாகக் கூற முடிந்தது. அவர்கள் என்ன செய்தனர்
என்றும் அவர்களுக்குள்ள தொல்லை என்ன என்றும் என்ன சம்பவிக்கப் போகிறது என்றும் கூறினார். மேலும் அது ஒரு போதும் தவறிப்போகவில்லை. அது சரியாக
அவ்வாறே சம்பவித்தது. மேலும் அது தேவனாகத்தான்
இருக்க முடியும்.
67. இப்பொழுது முடியாது – ஒரு குறி சொல்பவன்
அல்லது ஒரு ஜோசியன் வந்து சில காரியங்களை அனுமானித்து அரைகுறையாக உங்களுக்கு சில வற்றைக்
கூறமுடியும். அது பிசாசு. எவருமே அதை அறிவார். எனவே ஒரு குறி சொல்பவனோ, ஜோசியனோ அங்கு
வந்து தேவனுடைய வார்த்தையை வெளிப்படுத்திக் காட்ட முடியாது. உண்மையாகவே முடியாது. அவர்கள் அதைச் செய்வதில்லை. அவர்கள் உங்களை
வஞ்சிப்பதற்கென சில காரியங்களைச் சொல்லி, காணிக்கை பெற்று கொள்கிறார்கள். அது சரி.
அவர்கள் எப்படிப்பட்ட வாழ்க்கையும் வாழ்கிறார்கள். ஆனால் இந்த மனிதர் (இயேசு) அவர்
மேசியா வாயிருக்கிறார் என்று நிரூபித்தார்.
68. நீங்கள் பாருங்கள். அந்த இரண்டு ஆவிகளும்
மிக நெருக்கமாயிருந்து கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கும். ஆனால்
அவர்கள் தெரிந்து கொள்ளப்பட்டவர்களாயிருந்தால், அது அவர்களை வஞ்சிக்காது. பாருங்கள்? ஆனால் அந்த ஆவிகள் மிக நெருக்கமாயிருக்கும்,
குறிப்பாக இந்தக் கடைசி நாட்களில், இயேசு, அந்த இரு ஆவிகளும் இருக்கும் என்று உரைத்திருக்கிறார். அந்த மறுபக்கத்திலுள்ள
தவறிப்போனவர்கள், தொடக்கூடாத தூரத்தில் எவ்வளவாய்
சென்று விட்டனர்.
69. எங்காகிலும் யுத்தம் உண்டென்றால்
அது சரியாக சாத்தானுடன் தான். சிலர் செய்வது போல் சிறு கத்தியுடன் (கேக் வெட்டுதல்
– மொழிபெயர்ப்பாளர்) சென்று குழந்தைகளை முத்தம்
செய்வது மரித்தோரை அடக்கம் பண்ணுவதும் அல்ல; ஆனால் வேறு சிலர் செய்வது போல் இருபுறமும்
கருக்குள்ள பட்டயத்தை எடுத்துக் கொண்டு யுத்தத்தின் முன்னணியில் செல்வது. அது தான்
அந்த ஒருவர் – பாருங்கள். அது மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அங்கு தான்
யுத்தத்தின் தீவிரம் உள்ளது. அங்கு தான் சத்துருவும் நின்று கொண்டிருக்கிறான்.
70. நல்லது, அந்த பின்புறமாக உள்ள வழியில்
அவர்கள் அதைக் கவனிப்பதில்லை. பாருங்கள். அதில்
எந்த நிந்தையும் வருவதில்லை. அங்கு எதுவும் வருவது இல்லை. “டாக்டர் இன்னார் இன்னார். நாங்கள் உங்களைக் காண்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம்.
எங்கள் ரெவரண்ட் அவர்களே, சகோதரனே, டாக்டர் “ இன்னார், இன்னார், பரிசுத்த தெய்வீக பிதாவே” என்றழைக்கப்படுகின்றனர். பாருங்கள், ஓ என்னே! ஆனால்
நீங்கள் அங்கு செல்லும் போதோ, “அந்தப் பழைய பெயெல்செபூல், சாத்தான், அந்த மாய் மாலக்காரன்,அவன்
சாத்தானேயல்லாமல் வேறல்ல,” அவன் ஏதாவதொன்றை எந்நேரமும் கிளப்பிவிடுவான். ஆம், ஐயா.
பாருங்கள்?
71. அங்கு தான் அவரும் (இயேசுவும் – மொழி
பெயர்ப்பாளர்) நின்று கொண்டிருக்கிறார். மேலும்
அவர்கள் வார்த்தை உறுதிப்படுத்தப்பட்டு நிரூபிக்கப் படுவதினால் அது அவரே என்று அறிந்து
கொள்கின்றனர்.
72. மேலும் அவ்வாறு, நீங்கள் அறிவீர்கள்,
அது வாலிப யோவானாக இருக்கக்கூடும். அவன் வேத சாஸ்திரங் களால் திகிலடைந்தான். அவன் இவ்வாறு
ஏதோ கூறியிருக்க வேண்டும்: “அதை நினைத்துப்பாருங்கள்!
இங்கே இந்தக் கப்பலிலேயே யெகோவாவின் தாசனாக (நங்ழ்ஸ்ஹய்ற்) இருப்பதற்கு யோகோவாவின்
வார்த்தை யாலும், யெகோவா வாசம் செய்ய விரும்புகிறவருமாய் அடையாளம் கண்டு கொள்ளப்பட்டவர்
நம்மோடு கூட இருக்கிறார். என்ன ஒரு பாதுகாப்பான உணர்வு!” என்று கூறியிருக்கக் கூடும்.
73. ஓ, இன்றிரவு நாம் மாத்திரம் அந்த
தரிசனத்தை பற்றிக் கொள்ளக் கூடுமானால்! வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்த மகத்தான
யேகோவா நமது வாழ்க்கைப் பாதையில் நம்முடைய சிறு படகில் இருக்கிறார். யேகோவா, ஆவியின்
ரூபத்தில் பரிசுத்த ஆவியானவராக உங்களுக்குள் இருக்கிறார்.பாருங்கள்? பரிசுத்த ஆவியான
தேவன் தாமே உங்களில் இருக்கிறார். இயேசு, “அந்நாளில் நான் என் பிதாவிலும் என் பிதா
என்னிலும், நீங்கள் என்னிலும் இருப்பதை அறிவீர்கள்”
என்றார். ஓ, ஓ, என்னே!
74. பின்பு தேவன்-தேவன் என்னவாக இருந்தாரோ
அதை இயேசுவில் ஊற்றினார். இயேசு என்னவாக இருந்தாரோ அதை சபையில் ஊற்றினார். பெந்தெ கோஸ்தே
நாளில் தம்மைத்தாமே பிரித்துக் கொண்டு அந்த
அக்கினி ஸ்தம்பம் கீழே இறங்கி வந்து ஷெக்கினா மகிமையாக வெடித்து வேறுபட்ட மக்களில்
அதை வைத்தார். அக்கினி நாவுகள் அவர்கள் ஒவ்வொருவர் மேலும் காணப்பட்டது. பரிசுத்த ஆவியான
தேவன் மனிதர்களிடம் தம்மை அடையாளப் படுத்திக் கொண்டார். ஆமென்.
75. அந்த ஆச்சர்யமான கிருபையைக் குறித்துப்
பேசினால் அது எவ்வளவு இனிமையாய்த் தொனிக்கிறது!
என்ன ஒரு பாதுகாப்பு அது! நம் வாழ்வின்
பாதையில் நாம் என்ன செய்து கொண்டிருந்தபோதிலும் படகில் இயேசு இருக்கிறார் என்பது என்ன
ஒரு பாதுகாப்பான உணர்வு! ஆமென். எந்த அற்புதத்தையும் நிகழ்த்தக்கூடிய, செய்ய வேண்டுமென்றிருப்பதைச்
செய்பவர், மீண்டும் இன்னும் அதைச் செய்பவராயிருந்து பூரணமாய் தம்மை அடையாளம் காண்பிக்கும்
ஒருவர். அவர் நம் ஜீவியப் பாதையில் நமது சிறிய படகில் இருக்கிறார். அன்று இருந்தது
போலவே அவர் இன்றும் அதே நபராக இருக்கிறார். ஜீவியத்தின் அலை மோதும் பயணத்தில் என்ன ஒரு பாதுகாப்பான உணர்வு! சிறந்த,
சிறிய பாடகரான ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த மெல்ஜான்சன், “நான் யோர்தானைக் கடக்கும் போது என்று பாடும் போது.” சற்று
சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் அங்கு அந்த நதியருகில் வரும்போது அவர் அங்கே இருப்பார்.
“நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை.’ அலைகள் உள்ள தண்ணீரில்
பயணம் செய்கையில், என்னே ஒரு வாக்குவாதம்!
76. அவர்கள் (சீஷர்கள்) நாம் இன்றிருப்பது
போலிருந்தனர். அன்றிரவில் அந்தக் கப்பலில் அந்த சீஷர்கள் எழுப்புதல் கூட்டத்திற்குப்
பிறகு அதன் விளைவுகள் பற்றி அசைபோட்டனர்.
77. இப்பொழுது நாம் எழுப்புதல் கூட்டங்களுக்கு
இடையில் இருக்கலாம். நாம் இன்னும் ஒரு எழுப்புதலை எதிர்நோக்கியிருக்கிறோம். அங்கு ஏதாகிலும் நடக்க வேண்டியுள்ளது. அது சபையைக் கூட்டிச் சேர்க்கும். அங்கே எதாகிலும் அழுத்தம் இருக்க வேண்டிய தாயுள்ளது. தேவன் தம் பிள்ளைகளை ஒன்று கூட்டிச் சேர்க்க எப்போதுமே
அதைச் செய்து வருகிறார். அது ஏற்கனவே துவங்கி விட்டது என்றும், அதை ஏற்றுக் கொள்ளாதவர்கள்மூலம்
கதவடைக்கப்பட்டு அவருடைய சபையை ஒன்று கூட்டிச் சேர்க்கும் என்றும் நான் விசுவாசிக்கிறேன். மேலும் நாம்
அது நிகழவேண்டுமென்று காத்திருக்கிறோம். நாம்
நடந்து முடிந்த மகத்தான எழுப்புதல் கூட்டங்களின் விளைவுகளில் நாம் ஜீவித்துக் கொண்டுள்ளோம். மேலும் அவர் இளைப்பாறிக் கொண்டிருக்கிறார்.
78. அவர் அப்பொழுது ஆதியாகமத்தில் தம்
கிரியைகளை முடித்து இளைப்பாறியது போல் இளைப்பாறிக் கொண்டிருந்தார். “தேவன் தம் கிரியைகளை
முடித்து ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார்” என்று வேதம் கூறுகிறது. இப்பொழுது இயேசு அந்த
நாளில் தம் கிரியைகளை முடித்து இளைப்பாறிக் கொண்டிருந்து, அடுத்த நாளில் பெரிய கிரியைகளை
தொடங்கும் படியாக இளைப்பாறிக்கொண்டிருந்தார். பாருங்கள். ஒரு சிறிய ஓய்வை எடுத்துக்
கொண்டிருந்தார்.
79. அதைத்தான் அவர் இப்பொழுது செய்து
கொண்டிருக்கிறார் என்று நினைக்கிறேன். ஜனங்க ளிடையே ஒரு எழுப்புதல் இல்லை. பத்து பதினைந்து
வருடங்களுக்கு முன்பு நம்மால் தொடங்கப்பட்ட ஒரு போதும் கண்டிராத நீண்டு நிலைத்திருந்த
எழுப்புதலின் போது, நாம் கொண்டிருந்த ஆர்வம் இப்போது ஜனங்களிடையே இல்லை. அதிகபட்சம்
மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரு எழுப்புத(லும்)ல் இருந்தது இல்லை என்று சரித்திரம் கூறுகிறது. நாம் இப்பொழுது இக்கடைசி நாட்களில் பதினைந்து ஆண்டுகளாக
உடையவர்களாயிருக்கிறோம். அந்த எழுப்புதல் அக்கினி
உலகத்தையே உலுக்கியது.
80. ஆனால் இப்பொழுது, அது இளைப்பாறுதல்
போல் தோன்றுகிறது. நாம் வியப்படைகிறோம், ஆவியால்
நிரப்பப்பட்டுள்ள ஒவ்வொரு ஊழியரும் மேலே நோக்கிப்பார்த்து, ‘கர்த்தராகிய இயேசுவே, ஏதோ
காரியம் நிகழப் போகிறது என்று நான் விசுவாசிக்கிறேன். அழுத்தம் வந்து கொண்டிருக்கிறது என்பதை நான் உணருகிறேன்.
கர்த்தாவே, நான் உம்மை நேசிக்கிறேன். இப்பொழுது, சமாதானத்துடன் உம்மைக் காண நான் விரும்புகிறேன், கர்த்தாவே. எங்களுக்கு உதவி செய்யும். நாங்கள் உமக்கென்று
காத்திருக்கிறோம்.’ அது எண்ணங்களின்படியே இருக்கிறது.
81. அந்த விதமாகவே சீஷர்கள் தாங்கள் கண்டவைகளைக்
குறித்தும் பேசிக்கொண்டிருந்தார்கள். மேலும்
அப்பொழுது சடுதியில் ஒரு தொல்லை உண்டானது.
82. அது சாத்தான். அந்த காரியத்தில் அதிக நேரம் நீங்கள் இளைப்பாற அவன்
அனுமதிக்க மாட்டான். கர்த்தராகிய இயேசுவைக்
குறித்தும் அவருடைய கிரியைகளைக் குறித்தும் நீங்கள் பேசத் துவக்கும் போதே அதில் குறுக்கிட
சாத்தான் சரியாக அங்கே இருப்பான்.
83. அப்பொழுது சடுதியில் தொல்லை உண்டாகியது. கப்பல் அசையத் துவங்கியது. பாய்மரங்கள் பறந்து விட்டது;
துடுப்புகள் உடைந்து போனது; படகு தண்ணீரால் நிரம்பியது. தொல்லை அருகிலேயே இருந்தது!
பாருங்கள். இது சடுதியில் சம்பவித்தது. பிழைப்போம் என்கிற நம்பிக்கையெல்லாம் போய் விட்டது.
அவர் அனேக பெரிய காரியங்களைச் செய்ததை அவர்கள் கண்டிருந்தபோதிலும் தொல்லை அவர்களைத்
தாக்கிய போது அதைப்பற்றிய எல்லாவற்ûயும் அவர்கள் மறந்து போனார்கள்.
84. இப்பொழுது ஒரு சகோதரனாக உங்களிடம்
சில காரியங்களைக் குறித்துக் கேட்க விரும்புகிறேன். அது இன்றைய ஜனங்களுடைய போக்கைப் போல இல்லையா? நாம் இங்கு சபைக்கு வந்து நம்முடைய சகோதரர்கள்
வார்த்தையின் பேரில் பேசுவதையும் அதிலிருந்து வாக்குத்தங்களைக் குறித்தும் நாம் கேட்டு
ஆர்ப்பரித்து தேவனைத் துதிக்கிறோம். தேவன்
என்ன செய்தார் என்று சாட்சிகளாக சிலரால் கூறப்படுவதை
– ஒருவர், “நான் ஒரு காலத்தில் குருடனாயிருந்தேன், என் கண்கள் குருடாயிருந்தது; இப்பொழுது
காண்கிறேன்” என்பதைக் கூறக் கேட்டு அப்படியே தேவனைத் துதிக்கிறோம். இன்னொருவர் எழுந்து, “புற்று நோயுடன் இருந்த என்னை
மருத்துவர்கள் கைவிட்டு விட்டனர். ஆனால் இரண்டு
வாரத்திலோ, இரண்டு நாட்களிலோ புற்றுநோய் சற்றுமின்றி குணமாகிவிட்டது” என்றும் “முன்பு
தான் புற்று நோயிருந்தது. இப்போது என்னில்
இனி அதை ஒரு போதும் காணமுடியாது” என்றும், இன்னொருவர், “நான் சக்கர நாற்காலியில் வாதத்தால்
பிடிக்கப்பட்டவனாய் வந்து உட்கார்ந்திருந்தேன். நான் இப்பொழுது மற்ற எல்லாரையும் போல் நன்றாக நடக்கிறேன்” என்றும் அப்படிப்பட்ட சாட்சிகளைக்
கேட்கிறோம்.
85. ஆனால் அதைப்போன்ற தொல்லை ஒரு முறை
நமது சிறிய இல்லத்தைத் தாக்கட்டும்; அப்பொழுது நாம் அனுபிவித்த மகிமையான காரியங்களையும்,
அந்த எல்லா மகத்தான கிரியைகளையும் மறந்து விடுகிறோம். ஓ, அது இப்போது நாமாக இருக்கிறது. பாருங்கள்,
அந்தக் காரியங்கள் ஒரு நோக்கத்துக்காக சம்பிவிக்கிறது. அது உங்களை சோதிக்கும் படியாகச் சம்பவிக்கிறது. இப்பொழுது அந்தத் தொல்லையை நாம் தீர்த்துக்கொள்ள
முடியாது. மருத்துவர்களால் தீர்க்க முடியாது;
அல்லது எதுவுமே தீர்க்க முடியாது.
86. அந்தத் தொல்லை படகின் பாய்மரத்தை
அசைத்தது. அது பறந்து போயிற்று. அது அதன் துடுப்புகளைத் தாக்கியது. அவை உடைந்து போயிற்று. அது கப்பலின் நடுமையத்திற்கு பாய்ந்து சென்று அதை
நிரப்பியது. பாருங்கள். சாத்தான் அவர்களைக் கொன்று போடவேண்டுமென்று தீர்மானித்திருந்தான்.
இப்பொழுது அவன் இயேசு உறங்கிக் கொண்டிருக் கிறார் என்றும் அவர்களை விட்டு சற்று அப்பால்
இருக்கிறாரென்றும் நினைத்தான். எனவே அவனால்
அவர்களை நெருங்க முடிந்தது.
87. இப்பொழுது இன்றும் அதே விதமாகத் தானிருக்கிறது.
சாத்தானுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுது அவன் இங்கு வருகிறான். பாருங்கள்?
நீங்கள் மருத்துவரிடம் செல்லும் போது அவர், “நீங்கள் இனி ஒன்றும் செய்ய முடியாது, அது
முற்றிப்போய் விட்டது’ என்பார். யார்? இந்த நரம்புத் தளர்ச்சிக்கு நம்மிடம் ஒன்றுமேயில்லை.
மனநிலை கோளாறுக்கு நம்மிடம் எதுவுமில்லை. இல்லை, நாம் ஒன்றும் செய்ய முடியாது. மூட்டு பிரச்சனைக்கு? அதற்கு நம்மால் எதுவும் செய்ய
முடியாது. வீக்கத்தைக் குறைக்க பயன்படும் உடலின் அக ஆக்கு வினைபொருள்(இர்ழ்ற்ண்ள்ர்ய்ங்)-ஐ
நாங்கள் உங்களுக்குக் கொடுக்கலாம். அது உங்களைக்கொன்று போடும். எனவே அதற்காக எதுவுமே
எங்களிடம் இல்லை. சந்திரரோகமா? அதைக் குறித்து நாம் ஒன்றும் செய்ய முடியாது” என்பார். பாருங்கள். பிறகு நீங்கள்
எல்லா தொல்லைகளையும் அடைகிறீர்கள்.
88. ஆனால் நீங்கள் திரும்பிப்பாருங்கள். அவர் சந்திரரோகத்தையுடையவனைக் குணமாக்கவில்லையா?
அவர் புற்றுநோயை குணமாக்கவில்லையா? அவர் எல்லாவற்றையும் சரியாக்கவில்லையா? அவர் தமது
வார்த்தையைக் காத்துக்கொள்ளவில்லையா? பாருங்கள்; அது நம் சிறிய கப்பலைத் தாக்கும் போது
நாம் தொல்லைக்குள்ளாகிறோம். நம்முடைய பயணத்தில்
இருக்கும் நம்முடைய இந்தச் சிறிய பாய்மரகப்பல் பலவீனமானதும் சந்தேகத்தாலும் உலகத்தின்
காரியங்க ளாலும் நிறைந்ததாயுமிருக்கிறது.
89. கவனியுங்கள். அந்தத் தொல்லை அவர்களால்
தீர்க்கக்கூடாததாயிருந்தது. இப்போதுள்ளது போன்றே
அவர்களை பயம் சூழந்து கொண்டது. நாம் நமது தேசீய காரியங்களிலும் கூட பயமடைகிறோம். நாம் நமது சபை பிரச்சனைகளைக் குறித்து பயமடைகிறோம். நாம் எங்கும் எல்லாக் காரியங்களைக் குறித்தும் பயமடைகிறோம்.நாம்
இப்பொழுது, “நல்லது, இப்பொழுது நாம் அதைக் குறித்து என்ன செய்யக்கூடும்?” என்கிறோம். நாம் மாத்திரம் அவர் நம்முடைய கப்பலில் இருக்கிறார் என்பதை நினைவு கூருவோமானால்! பாருங்கள்?
“ஆனால் அவர் கப்பலில் இருக்கிறாரா?” என நீங்கள் கூறுகிறீர்கள்.
90. இங்கே, அது அவர், “ஆதியிலே வார்த்தை
இருந்தது. அந்த வார்த்தை தேவனோடிருந்தது; அந்த
வார்த்தை தேவனாயிருந்தது.” மேலும் அந்த வார்த்தை, “நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்” என்கிறது. அது இன்னும் அந்த தொல்லையை
எதிர் கொள்கிறது. அதுவே தீர்வாக இருக்கிறது.
அதுவே மருந்தாக இருக்கிறது. எந்தத் தளர்ச்சியையும்
குணமாகவல்லது அதுவே. எந்தப்புற்று நோய்க்கும்
அதுவே சுகம் கொடுக்கக்கூடியது. எந்த வேதனைûயும் தீர்க்கக்
கூடியது அதுவே. அது தேவன் வார்த்தையில் வெளிப்படுவதாகும். “வார்த்தையே தேவன்.” இயேசு, “அது ஒரு வித்து” என்றார்.
சரியாகப் பண்படுத்தப்பட்ட நிலத்தில் விதைக்கப்படும் எந்த வித்தும் அது எதுவாக இருக்கிறதோ அதுவாக முளைக்கும்,
அதுபோன்றே (தேவனின்) ஒவ்வொரு வாக்குத்தத்தமும் அது உரைத்ததைக் கொண்டுவரும். நாம் அவற்றை யெல்லாம் மறந்து விட்டோம். அவர் கப்பலில்
இருக்கிறார் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
91. அவர் அது சம்பவிக்கப் போகிறது என்பதை
அறிந்திருந்தார் என்று அவர்கள் கட்டாயம் அறிந்திருக்கவேண்டும். நீங்கள் அதை விசுவாசிக் கிறீர்களா? (சபையோர், ‘ஆமென்’
என்கின்றனர் – ஆசிரியர்). நிச்சயமாக, அவர் அதை அறிந்திருந்தார். அது சம்பவிக்கப்போகிறது
என்று அவர் எல்லா நேரங்களிலும் அறிந்திருந்தார். ஏன்? அவர்களின் விசுவாசத்தை சோதிப்பதற்காகவும்
தம்மை உறுதிப் படுத்தவும் அவரே அதைச் செய்தார்.
92. மேலும் சில சமயங்களில் அதே காரியங்களை உங்களுக்கும் எனக்கும் செய்கிறார். அதைக் குறித்து என்ன செய்கிறோம் என்பதைக் காண அவர்
அவைகளை அனுமதிக்கிறார். அதை நீங்கள் விசுவாசிக் கிறீர்களா? (சபையோர், “ஆமென்” என்கின்றனர்
– ஆசிரியர்) வேத வார்த்தை, “தேவனிடத்தில் வரும்
எந்தப்பிள்ளையும் சோதிக்கப்படவேண்டும், சிட்சிக்கப்பட வேண்டும், நிரூபிக்கப்பட வேண்டும்”
என்று கூறுகிறது. நீங்கள் உரிமை கோருகிற ஒவ்வொரு அங்குல நிலத்திற்கும் நிரூபிக்க சாத்தான்
நிச்சயமாக சோதிப்பான். ஆகவே, சில நேரங்களில் தேவன் இக்காரியங்கள் சம்பவிக்க அனுமதிக்கிறார்.
93. இப்பொழுது அவர்கள் திகிலடைந்தார்கள்
என்பதை நினைவில் வையுங்கள். எல்லா நம்பிக்கையும் அற்றுப்போயிற்று. அந்தக்கப்பல்...
பாய்மரங்கள் அவர்கள் பயணிப்பதற்குத் தேவையான பாய்மரம், அது போய் விட்டது. தாங்கள் கப்பலை ஓட்ட உபயோகிக்கும் துடுப்பு-அது
உடைந்து போய்விட்டது. அலைகள் அந்தப்படகை மேலும்
கீழும் உலுக்கியது. எல்லா நம்பிக்கையும் அற்றுப் போயிற்று; என்றாலும்
அவர்களுடன் கப்பலில் இருந்த ஒருவர் தாமே வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தவர் என்பதை நிரூபித்தவராயிருந்தார். ஆமென். அற்புதங்களினாலும்
அடையாளங்களினாலும் அவர் தாம் யாரென்பதை நிருபித்தார். மேசியா என்ன செய்வார் என்றும் தேவன் தாம் கூறிய வார்த்தையை எடுத்து அந்த மனிதரை தம்முடைய மேசியா என்று நிரூபித்தார்.அவர் கப்பலின் பின்னணியத்திலேயே
அவர்களோடே இருந்தார். ஆனாலும் அவர்கள் மரித்துப் போவோமென்று பயந்தார்கள்.
94. மகிமை! நான் ஒரு......... போல உணருகிறேன். என்னை யாரென்று நினைக்கிறீர்கள்? ஒரு பரிசுத்த உருளையன்
என்றா? நல்லது, இப்பொழுது கவனியுங்கள்.......அது ஒரு வேதபண்டிதரின் தொனி போல் இருக்காது
என்றறிவேன். ஆனால் அதைக் கூறுவதற்கு எப்படியிருந்தாலும்
அதைக்குறித்து நான் மிகவும் நன்றாக உணர்கிறேன். பாருங்கள்.
95. ஆகவே கவனியுங்கள். அங்கே அவர்களுடைய சகாயர் அங்கேயே படுத்திருந்தார்.
அவர்களோ அதைக் குறித்த எல்லாவற்றையும் மறந்து விட்டனர். அதற்கு முந்தைய நாள் அப்பத்தையும்
மீன்களையும் சிருஷ்டித்த, அதே தேவன் தாமே என்று இயேசு நிரூபித்தார். அவர் தம்மை சிருஷ்டிகர்
என்று நிரூபித்தார். அவர்கள் அதைக்குறித்து இன்னும் வியந்து கொண்டிருந்தனர். (ஒலி நாடாவில்
காலியிடம் – ஆசிரியர்)
96. இயேசு, “என்னைக் குறித்து எழுதப்பட்டவைகளை
நான் செய்யாதிருந்தால் நீங்கள் என்னை விசுவாசிக்க வேண்டியதில்லை. ஆனால் என்னைக்குறித்து
எழுதப் பட்டவைகளை நான் செய்வேனேயானால் அவைகள் நான் யாரென்று சாட்சி கொடுக்கும்” என்றார்.
ஓ, என்னே.
97. நீங்கள் உங்களை ஒரு கிறிஸ்தவன் என்று
உரிமைகோரினால், வேதம் இங்கே உங்களிடம் ஒரு கிறிஸ்தவன் எவ்விதமாக இருக்கவேண்டும் என்று கூறுகிறது. நீங்கள் ஒரு விசுவாசியா,
இல்லையா என்று மாற்கு 16 கூறும். பாருங்கள். நீங்கள் என்னவாயிருக்க வேண்டும் என்று
அது கூறுகிறது.
98. இயேசு, “என்னில் பாவம் உண்டென்று
உங்களில் யார் என்னை குற்றப்படுத்தக் கூடும்?” என்றார். பாவம் என்பது அவிசுவாசம் ஆகும்.
“நான் என்னவாயிருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதோ, அவ்விதமாய் நான் என்னை உங்களுக்கு
உறுதிப்படுத்தாதிருந்தால்” என்றார்.
99. அப்படிப்பட்ட எந்த ஒரு மகத்தான செய்தியாளரையும்
பற்றி வேதத்தில் முன்னுரைக்கப் பட்டுள்ளது. அதைக்குறித்து நாம் வேதத்தில் எப்போதும்
காணமுடியும். அந்தக் காரணத்தினால் தான் இன்றைய நாளைக் குறித்து பரிசுத்த ஆவியானவர்
வேதத்தில் முன்னுரைத்திருக்கிறார்.மேலும் அது இங்கே இருக்கிறது என்று நாம் அறிவோம்.
அது என்னவாயிருக்கிறது என்ற உறுதிப்படுதலை நாம் வேதவார்த்தையின் மூலம் அறிகிறோம். அது
ஆதியிலே எவ்வாறு கிரியை செய்தது என்றும், அது கிறிஸ்துவில் எவ்விதம் கிரியை செய்தது
என்றும், அது இன்று எவ்வாறு கிரியை செய்கிறது என்றும் பார்த்தோம். பாருங்கள். அது பரிசுத்தஆவியா
இல்லையா என்று நாமறிவோம். ஏனெனில் அது தேவனின் வார்த்தையை வெளிப்படுத்தி, உறுதிப்படுத்தி
ஜீவிக்கச் செய்கிறது.
100. இப்பொழுது, “என்னைக் குறித்து சாட்சியிடு
பவைகள் இவைகளே. வேத வாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள். அவைகள் நான் யாரென்று உங்களுக்கு
கூறும்.” அவர்கள் அவர்தான் அப்பத்தை சிருஷ்டித்த அதே தேவன் என்று கண்டிப்பாக அறிந்திருக்க
வேண்டும். அவர் காற்றையும் அலைகளையும் கூட சிருஷ்டித்தார். நிச்சயமாக. அவர் தேவனின்
ஒரு பாகம் மாத்திரமல்ல. அவர் முற்றிலுமான தேவன். அவர் காற்றையும் அலைகளையும் சிருஷ்டித்தார்.
அவர் சிருஷ்டிகராயிருந்து,மற்றக்காரியங்களெல்லாம் அவருக்கு கீழ்ப்படியுமானால், காற்றும்
அலைகளும் கூட அவருக்குக் கீழ்ப்படிய வேண்டுமல்லவா? ஆமென்.
101. கவனியுங்கள். அவர் நம்முடைய சரீரத்தையும்
சிருஷ்டித்தார் என்று நாம் நினைவிற்கொள்வோம். மேலும், நமது சரீரம் அவருக்குக் கீழ்ப்படிய
வேண்டாமா? ஆமென். உங்கள் சிந்தனைகளை அவருக்கு ஒப்புக் கொடுங்கள். உங்கள் ஜீவியத்தை
அவருக்கு ஒப்புக் கொடுங்கள், உங்கள் விசுவாசத்தை அவருக்கு ஒப்புக்கொடுங்கள்; அப்பொழுது
உங்கள் சரீரம் அவர் என்ன கூறுகிறாரோ அதற்குக் கீழ்ப்படிகிறதைக் கவனியுங்கள். நீங்கள்
ஒரு குடிகாரராக இருந்து குடிப்பதை விட்டுவிடமுடியவில்லை யெனில், உங்கள் வாழ்க்கையை
அவருக்கு ஒப்புக்கொடுத்து, கவனியுங்கள்; நீங்கள் அதற்குப்பிறகு ஒருபோதும் குடிக்கமாட்டீர்கள்.
நீங்கள் புகைபிடிக்கும் பழக்கமுடையவராயிருந்து அதைவிட்டுவிட முயற்சி செய்தும் புகைப்பதை
நிறுத்த முடியாதிருந்தால் உங்களை அவருக்கு ஒப்புக்கொடுத்து என்ன சம்பவிக்கப் போகிறது
என்று கவனியுங்கள். அவர் அந்த சரீரத்தை வார்த்தைக்குக் கீழ்ப்படியப் பண்ணுவார். ஆம்
ஐயா. ஆனால் நீங்கள் உங்களை அவருக்கு ஒப்புக்கொடுக்கவேண்டும். நீங்கள் அவரை விசுவாசித்தாக
வேண்டும். அவர் நமது சரீரங்களை உருவாக்கினார்; அது அவருடைய சித்தத்திற்குக் கீழ்ப்படியவேண்டும்.
அதை நீங்கள் விசுவாசிக் கிறீர்களா? (சபையோர், “ஆமென்” என்கின்றனர்-ஆசிரியர்) நீங்கள்
ஒரு கிறிஸ்தவராயிருந்தால் நீங்கள் விசுவாசித்து தான் ஆகவேண்டும்.
102. நீங்கள், “அவருக்குக் கீழ்ப்படிவதற்கென்றா நமது
சரீரங்களைப்படைத்தார்? ஓ, நமக்கு அதன் மீது அதிகாரம் உண்டென்று நான் நம்புகிறேன்” என்று
கூறுகிறீர்கள். அப்படியானால் நீங்கள் உங்களை முற்றிலுமாக ஒப்புக்கொடுக்கவில்லை.
103. ஏனெனில் நீங்கள் உங்களுடையவர்களல்ல;
நீங்கள் மரித்தவர்களாயிருக்கிறீர்கள். “நீங்கள் மரித்தீர்கள்; உங்கள் ஜீவன் கிறிஸ்துவின்
மூலம் தேவனுக்குள் மறைந்திருக்கிறது. மேலும் அது பரிசுத்த ஆவியால் முத்திரையிடப்பட்டுள்ளது.”
அதினின்று நீங்கள் எப்படி விலகிச்செல்ல முடியும்? நமக்கு ஒரு எழுப்புதல் தேவையென்று
நான் நினைக்கிறேன். “நமது ஜீவன் மரித்துவிட்டது.” நாம் மரித்துவிட்டோம்; உங்கள் சொந்த
எண்ணங்கள். நீங்கள் - நீங்கள் சுத்தமாய் எண்ணுகிறீர்கள். உங்களை வழிநடத்திய உலகத்தின்
பழைய எண்ணங்களுக்கு நீங்கள் மரித்துவிட்டீர்கள். “உங்கள் ஜீவன் கிறிஸ்துவுடனே கூட தேவனுக்குள்
மறைந்திருந்து, பரிசுத்த ஆவியினால் முத்திரையிடப் பட்டுள்ளது.” ஓ, என்ன ஒரு ஸ்தானம்!
என்ன ஒரு பாதுகாப்பு! ஓ என்னே! எது வரைக்கும் (முத்திரையிடப்பட்டிருக்கிறீர்கள்? –
மொழிபெயர்ப்பாளர்) அடுத்த எழுப்புதல் கூட்டம் வரையிலுமா? “மீட்கப்படும் நாள் வரை”.
எபேசியர் 4:30. “நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த
ஆவியை துக்கப்படுத்தாதிருங்கள்.” பரிசுத்த ஆவியானவர் மூர்க்கமான உங்கள் சுபாவத்தை மாற்றுகிறார்
என்பதை அறிந்துகொள்வது என்ன ஒரு பாதுகாப்பான உணர்வு! ஆமென். பின்பு நாம் மரணத்தைவிட்டு
நீங்கி ஜீவனுக்குள் பிரவேசித்து விட்டோம் என்றும் பரிசுத்த ஆவியானவர் நமக்குள் ஜீவிக்கிறார்
என்றும் நம்மிலிருப்பது அவருடைய ஜீவன் என்றும் நாம் அறிந்துகொள்ளுகிறோம்.
104. பவுல், “நான் முன்பு வாழ்ந்து கொண்டிருந்தேனே, அவ்வாறல்ல,
இனி நானல்ல; கிறிஸ்துவே எனக்குள் ஜீவிக்கிறார்” என்றான். அதுதான் அது! அவன் மரணத்தை
விட்டு நீங்கி ஜீவனுக்குள் பிரவேசித்து விட்டான்; கிறிஸ்து அவனுக்குள் ஜீவித்தார்.
பாதுகாப்பாக இருத்தல்... கிறிஸ்து அந்தக்கப்பலில் ஒருவராக இருந்தார். பவுல் அமர்ந்திருந்து
அவருக்கு கீழ்ப்படிய வேண்டியவனாயிருந்தான்.
105. கவனியுங்கள். தேவன் நம்முடைய சரீரங்களை
அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கும்படியாக உருவாக்கியிருக் கிறார். அவர் யோவான் 6ம் அதிகாரத்தில்,
“என் மாம்சத்தைப் புசித்து என் இரத்தத்தைப் பானம் பண்ணுகிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு.
நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன்” என்று கூறியுள்ளார். அதைக்குறித்து சிந்தியுங்கள்.
நமது சரீரத்தின் மீது நமக்கு இனியும் அதிகாரம் இல்லையென்று நாம் அறியும்போது நமது சரீரம்
அவருக்குக் கீழ்ப்படிகிறது; அது ஒரு கரண்டியளவு சாம்பலாய்ப் போனாலும் தேவன் அந்த சரீரத்துடன்
பேசுவார்; அப்பொழுது அது உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்துவின் சாயலில் உயிர்த்தெழும்பும்.
நீங்கள் இதைக்குறித்து கவலைப்படுகிறதென்ன? அது தேவனுடைய கரத்திலிருக்குமானால் கடைசிநாளில்
அவர் அவனை எழுப்புவார். ஆமென். அவர் அதைச் செய்வதாக வாக்களித்துள்ளார். இது கர்த்தர்
உரைக்கிறதாவது. அது அவருடைய வார்த்தையில் எழுதியிருக்கிறது. பின்பு ஏன் இந்தச் சிறிய
படகைக்குறித்துக் கலங்குகிறீர்கள்? அவர் படகில் இருக்கிறார்!
106. அவர் இப்பொழுது இங்கில்லையென்றாலும்
கூட அவர் இங்கு வரும்வரை இவ்விடத்தை விட்டுப் போய்விடாதே. அவரின்றிப் படகில் பயணம்
செய்வது ஆபத்தான ஒன்றாகும். நீங்கள் அமிழ்ந்துவிடுவீர்கள். நிச்சயமாக.
107. ஆனால் நீங்கள் மூழ்க முடியாது. நீங்கள் மூழ்கினாலும்
அவர் உங்களை மீண்டும் எழுப்புவார். எனவே அது என்ன வித்தியாசத்தை உண்டு பண்ணப்போகிறது?
எல்லா சிருஷ்டிப்பையும் அவருக்கு கீழ்ப்படிய பண்ண வல்லவராகிய தேவன் நித்திய ஜீவனாயிருக்கிறார்.
ஓ, அந்தப் பழைய சபைப்பாடலை நான் விரும்புகிறேன் :
காற்றும் அலைகளும் அவரின் சித்தத்திற்குக்
கீழ்ப்படிகிறது.
இரையாதே, அமைதலாயிரு! இரையாதே, அமைதலாயிரு!
108. எல்லாமே அவருக்குக் கீழ்ப்படிய வேண்டும்.
எல்லா இயற்கையுமே அவருக்குக் கீழ்ப்படிந்தாக வேண்டும். அவர் இயற்கையை சிருஷ்டித்தவர்.
ஆமென்.
109. இறுதியாக அந்த சீஷர்களுக்கு அது உதித்திருக்க வேண்டும்.
எனவே அவர்கள் அறிந்து கொண்டனர். அவர்கள் தாங்களாகவே அதைக் குறித்து எதுவும் செய்ய முடியாதென்று
அறிந்தபோது அது அவர்களின் சிந்தையில் உதித்திருக்கவேண்டும். அவர்களில் ஒருவன், “நாம்
ஒரு ஆபத்தான சூழ்நிலையில் இருக்கிறோம். ஓ, நான் மரிக்கப் போகிறேன்.நான் அமிழ்ந்துபோக
விரும்பவில்லை... இந்த.....” என்றான்.
110. அவர்களில் மற்றொருவன், “ஒரு நிமிடம்
பொறு! ஒரு நிமிடம் பொறு! அவர் அங்கே படுத்துக்கொண்டிருக்கிறார் என்ற எண்ணம் உனக்கு
உதிக்கவேயில்லையா? நாம் இங்கு அவரைக் குறித்த எல்லாவற்றையும் அவரைக் குறித்த சாட்சிகளையும்
அவருடைய மகத்தான கிரியைகளைக் குறித்துப்பேசி அவர் தான் மேசியா என்றும் உரிமை கோரினோம்.
அவர்தாமே சரியாக இங்கேயே நம்முடன் இருக்கிறாரே” என்று கூறியிருக்க வேண்டும்! ஓ! ஓ!
மகிமை! ஓ, என்ன ஒரு உணர்வு!
111. நீங்கள் எப்போதாவது பாதையின் முடிவுக்கு
வந்துவிட்டதாக நினைத்ததுண்டா? எட்டு மாதங்களுக்கு முன்பு வீட்டில் ஒரு தரிசனத்தைக்
கண்டபோது, அதைக்குறித்து நீங்கள் அறிவீர்கள். ஐயன்மீர் இது என்ன நேரம்? நான் அதைக்கண்டபோது
அந்தத் தரிசனத்தில் அந்த வெடிசத்தம் வெடித்து, ஏழு தூதர்கள் இறங்கி வந்து என்னைப் பற்றிப்பிடித்ததைக்
கண்டேன். அவையனைத்தையும் நான் உங்களுக்குக் கூறினேன். “இது அனேகமாக பாதையின் முடிவாக
இருக்கக்கூடும்” என்றேன். என் மனைவியிடம் சென்று, “தேனே, இது என்னுடைய முடிவாக இருக்கலாம்.
எனக்குத் தெரியாது” என்றேன். எத்தனைபேர் அந்த ஒலி நாடாவை கேட்டதுண்டு? நல்லது, நிச்சயமாக,
நீங்கள் அறிவீர்கள். அதில் பாருங்கள்? நான், “இது கர்த்தர் உரைக்கிறதாவது. ஏதோ நிகழவிருக்கிறது,
எனக்குத் தெரியாது” என்றேன். பிறகு நான் அவளிடம் சென்று, “இனிய இதயமுடையவளே, இப்பொழுது
நீ என்ன செய்ய வேண்டும் என்று நான் கூறப்போகிறேன். இது என் முடிவாக இருக்குமானால்,
தேவன் எனக்கு ஒரு தரிசனத்தைக் காண்பித்துள்ளார் என்று அறிந்துகொள்” என்றேன்!
112. அவர் எப்போதுமே அது என்னவென்று கூறுவதில்லை.
அவர் பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசி களுக்கோ அல்லது புதிய ஏற்பாட்டின் தீர்க்கதரிசி
களுக்கோ அது என்னவென்று ஒரு போதும் கூறின தில்லை. அனேக வேளைகளில் அவர்கள் அறிய வேண்டுமென்று
அவர் விரும்பினால் மட்டுமே அவர்களுக்குக் கூறுவார். அவர்கள் வெறுமனே அதை எழுதி மட்டும்
வைப்பர். பாருங்கள். அதை அறிந்து கொள்வது என்பது அவர்களின் வேலை அல்ல. அது தேவன் சில
காரியங்களைச் செய்வதாகும்.
113. சகோதரன் கார்ல்ஸனிடம் கேட்டுப்பாருங்கள்!
தேவன் மாத்திரம் பதினைந்து நிமிடங்களுக்கு முன்பு காட்சியில் வந்திராவிடில் அன்றொருநாள்
காலையில் நான் இங்கிருந்த கிளம்பும் முன்பு சிறிது காலத்திற்குக்கூட இங்கு நீடித்திருக்க
முடியாது. நான் இங்கு வருவதற்கு பதினைந்து நிமிடங்களுக்கு முன்பு கர்த்தராகிய தேவன்
பேசியிருக்காவிட்டால், கர்த்தரின் நாமத்தில் நான் கூறுகிறேன், இப்போதிலிருந்து ஆறுமாதம்
கூட இந்த சபை நிலைத்து நிற்காது. நீங்கள் ஆடுகளைப்போல் சிதறடிக்கப் பட்டிருப்பீர்கள்.
ஆனால் கர்த்தராகிய தேவன் தமது இரக்கத்தின் படி நான் அதைக்குறித்து ஒன்றும் அறியாதிருக்கையில்
என்னுடன் பேசினார். நான் இங்கு வந்து அதை சகோதரன் கார்ல்ஸனிடம் கூறினேன். அவையனைத்தும்
ஒரே நேரத்தில் வெளிப்படுத்தப்பட்டது. அது அங்கே இருந்தது. இப்போது சகோ. கார்ல்ஸன் இங்கிருக்கிறார்.
பாருங்கள்.
114. ஓ, ஆபத்துக்காலத்திலே அவர் நம்முடைய
கப்பலில் இருப்பதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஆமென்.
115. கர்த்தரின் நாமம் எவ்வளவாய் துதிக்கப்
படத்தக்கது! நான் வார்த்தையை (அவரிடத்திலிருந்து – மொழிபெயர்ப்பாளர்) பெற்றிருக்க விரும்புகிறேன்.
அவர் நமக்கு வைத்துள்ளவற்றை வெளிப்படுத்தக் கூடிய ஏதோ சில வார்த்தையை நான் உடையவனா
யிருக்கிறேன். ஆனால் அது வார்த்தையிலிருந்தல்ல. நாம்... அவர்...அவர், தீர்க்கதரிசி,
“அவர் ஆலோசனைக் கர்த்தர், சமாதானப் பிரபு, வல்லமையுள்ள தேவன், நித்தியப் பிதா” என்று
கூறியுள்ளான். அவன் வார்த்தைக்கு வெளியே, “அவர் அதிசயமானவர்” என்றான். அவருக்குக் கொடுப்பதற்கு
அவனிடத்தில் அதற்குமேல் பட்டங்கள் இல்லை. “ஆலோசனைக் கர்த்தர், சமாதானப் பிரபு, வல்லமையுள்ள
தேவன், நித்தியப்பிதா, அதிசயமானவர்.’ ஆமென், ஓ, அந்த மகத்தான தேவனாகிய கர்த்தர் யேகோவாவை
எவ்வளவாய் நாம் துதிக்கிறோம்!
116. விக்கிரகாராதனைக்கு நடுவிலும் உலகத்தின்
கோட்பாடுகளின் நடுவிலும் எல்லாவிதமான குழப்பங்கள் மற்றும் கலப்படங்களின் நடுவிலும்
இன்னமும் நாம் அவரை நம் கப்பலில் கொண்டிருக்கிறோம். ஓ, இந்த நாளில், இந்த நாளில் மதங்கள்
எந்த வழியில் செல்வதென்று அறியாதிருக்கும்போது, மாறாத தேவன் அதே ஷெக்கினா மகிமையுடன்,
நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் நம்முடைய கப்பலில் இருக்கிறார் என்பதை அறிந்திருப்பதற்காய்
எவ்வளவாய் மகிழ்ச்சியா யிருக்கிறேன். மரணத்தின் பள்ளத்தாக்கை நான் கடக்க வேண்டியவனாயிருக்கிறேன்.
(அவர் வரத்தாமதிப் பாரானால்) என்பதை அறிந்திருக்கிறேன். தாவீது, “ஒரு பொல்லாப்புக்கும்
பயப்படேன். ஏனெனில் நீர் என் கப்பலில் இருக்கிறீர்” என்று கூச்சலிட்டதில் வியப்பொன்றுமில்லை.
ஆமென்.
117. ஓ, அவர்கள் எப்படி இதனைக் கண்டார்கள்?
அவர்கள் அதிகமாய் அதைக் கண்டபடியால் அவர்கள் தாங்கள் கண்டவைகளையெல்லாம் அவர்களால் கூற
முடியவில்லை. இப்பொழுது அவர் அவர்களுக்கரு கிலேயே படுத்துக் கொண்டிருக்கிறார் என்பது
அவர்களுக்குதித்தது.
118. இப்பொழுது அவர் அப்போதிருந்ததைக்காட்டிலும்
உனக்கு மிகவும் சமீபமாயிருக்கிறார். அது சரியா? (சபையோர், “ஆமென்” என்கின்றனர் – ஆசிரியர்)
“நான் இப்போது உங்களுடன் கூட இருக்கிறேன். ஆனால் இனி உங்களுக்குள் இருப்பேன். இன்னும்
கொஞ்ச காலத்தில் உலகம் என்னைக்காணாது. நீங்களோ என்னைக் காண்பீர்கள். ஏனென்றால் நான்
உங்களுடன் உங்களுக்குள் உலகத்தின் முடிவு பரியந்தமும் இருப்பேன்.’
119. “சகோதரன் பிரன்ஹாமே, நான் இதில்
(இந்த வாக்குத்தத்தத்தில்) இளைப்பாறமுடியுமா?” இயேசு அவ்விதமாய்க் கூறியுள்ளார்! “அதை
நான் அறிந்து கொள்வதெப்படி?”
120. “நான் செய்கிற கிரியைகளை நீங்களும்
செய்வீர்கள்.” அங்கே தான் நீங்கள் இருக்கிறீர்கள். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா?
(சபையோர், “ஆமென்” என்கின்றனர் – ஆசிரியர்) அது சரி. “நேற்றும், இன்றும் என்றும் மாறாதவர்!”
121. ஆபத்து வருகிறபோது, சீஷர்கள் கண்டிப்பாக,
“நாம் சென்று அவரை எழுப்புவோம். நாம் சென்று அவரைக் கூப்பிடுவோம். நாம் அவரைக் காட்சியில்
அழைப்போம்” என்று கூறியிருக்கவேண்டும், என்று சொல்கிறோம். ஓ, என் அருமைச் சகோதரனே,
என் அன்பான சகோதரியே, நான் உங்களை நேசிக்கிறேன். மேலும் நான் உங்களுக்கு சத்தியத்தை
எடுத்துரைக்கிறேன் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இன்றிரவில் நீங்கள் தொல்லையில் அகப்பட்டால்
அவர் உங்கள் அருகிலேயே இருக்கிறார். உங்களுடைய உதடுகளின் ஒரு சிறு அசைவினாலே அவரை நீங்கள்
காட்சியில் அழைக்கமுடியும். அவர் காட்சியில் வருவார். ஆமென். இயேசுவை காட்சியில் அழையுங்கள்!
இயேசுவை எழுப்புங்கள். ஏனென்றால் நாம் அவரை நம்முடன் கொண்டுள்ளோம். அவர் நேற்றும் இன்றும்
என்றும் மாறாதவராயிருக்கிறார்.
122. தேவனின் வார்த்தை அவரால் உறுதிப்படுத்தப்
பட்டதை அவர்கள் கண்டனர்; அவ்விதமே நாமும் கண்டுள்ளோம். எனவே அவரை காட்சியில் அழைப்பது
கடினமானதல்ல. அவர் அங்கே படுத்துக் கொண்டிருந்து அவர்கள் அவரை அழைக்கும்படி காத்துக்
கொண்டிருந்தார்.
123. இப்பொழுது, இன்றிரவு அவர் சரியாக
உங்கள் இருதயங்களில் இருக்காவிட்டால், நீங்கள் அவரை எழுப்பும்படி காத்துக் கொண்டிருப்பாரோ
என்று வியக்கிறேன். அது சரியே. ஓ, அதை நான் விரும்புகிறேன்.
124. ஜனங்கள் இன்று, “நல்லது, இப்பொழுது
நாங்கள் மட்டும் பாதுகாக்கப்படுவோம் என்று அறிந்து கொள்ளமுடிந்தால்” என்று கூறுகின்றனர்.
அவர்கள், “இது தான் அது, இதுதான் அது” என்று கூறுவதைக் கேட்கிறோம்.
125. ஆனால், இதுதான் அது. இது தான் அது.
இப்பொழுது அவர் உரைத்தது இதுவே. இது அவருடைய வார்த்தை. அவரும் அவருடைய வார்த்தையும்
ஒன்றே. அவருடைய வார்த்தை அவரை அடையாளம் கண்டு கொள்ளும்படி செய்வதாக.
126. அவர் தேவனென்று கூறியதை நிரூபிக்கக்கூடிய
வழி அதுவே. ஏனெனில் தேவன் அவர் செய்யும்படி கூறிய கிரியைகள் அவரால் செய்யப்பட்டது.
“என் பிதாவின் கிரியைகளை நான் செய்யாதிருந்தால் நீங்கள் என்னை விசுவாசிக்க வேண்டாம்.”
பாருங்கள்? அதுதான் அவரை அவ்விதம் அடையாளம் காட்டியது.
127. அவ்விதமாகத்தான் உன்னை அடையாளம்
கண்டுகொள்ள வேண்டும். நீங்கள் உங்களை ஒரு கிறிஸ்தவன் என்று கூறினால் வேதத்தின்படியான
ஒரு கிறிஸ்தவனின் அடையாளமாயுள்ள கிரியைகளை நீங்கள் செய்யாவிடில் அங்கு ஏதோ ஒரு தவறுண்டு.
பாருங்கள். “விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன”. ஆம் ஐயா. “அவைகள் இருக்கலாம்”
என்றல்ல; “அவைகள் இருக்கும்” என்றே கூறப்பட்டுள்ளது.
128. நாம் மாத்திரம் அவர் இங்கே இருக்கிறார்
என்பதை உணர்ந்துகொள்ளக் கூடுமானால்! அவர் நேற்றும்,
இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். “இதோ நான் எப்போதும் உங்களுடனே இருக்கிறேன்.
நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை; உன்னைக் கைவிடுவதுமில்லை. உலகத்தின் முடிவு பரியந்தம்
உங்களோடிருக்கிறேன்.” 24ம் அதிகாரத்தில், “நான் ஒரு போதும் உன்னைவிட்டு விலகுவதில்லை”
என்று மீண்டும் கூறுகிறார். ஓ, மீண்டும், “நான் உங்களைவிட்டு விலகுவதுமில்லை, உங்களை
ஒருபோதும் கைவிடுவதுமில்லை” என்றார். நான் சற்று வேத வாக்கியங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
அவைகளைக் குறித்தவைகளை நான் குறித்துவைத்துக் கொண்டேன்.
129. நாம் எவ்வாறு உறுதிகொள்ள முடியும்?
அவருடைய உறுதிப்படுத்தப்பட்ட வார்த்தையின் மூலம். அவர் இப்பொழுது நீங்கள் அவரை காட்சியில் அழைக்க வேண்டுமென்று காத்துக்கொண்டிருக்கிறார்.
எனவே அவர் நம் வாழ்க்கையில் கிறிஸ்துவானவர் தம்மை உறுதிப்படுத்தும்படி அவரை நாம் சென்று
எழுப்புவோம்.
130. கிறிஸ்துவை நீங்கள் எவ்விதம் எழுப்பப்
போகிறீர்கள்? வார்த்தையை விசுவாசிப்பதின் மூலம்; விசுவாசம் அவரைக் காட்சியில் கொண்டுவருகிறது.
விசுவாசமாகிய அது தான் அவரைக் காட்சியில் கொண்டு வருகிறது. அப்பொழுது அவருடைய வார்த்தையை
உறுதிப்படுத்தும்படி அவரை அழையுங்கள். மேலும் பயத்துடன் சந்தேகப்படாதீர்கள். அதைச்
செய்யாதீர்கள். அப்படியே அது எழுதியிருக்கிற வண்ணமாகவே அவரை விசுவாசித்து அதைக்கிரியை
செய்ய வையுங்கள். அப்பொழுது தேவன் இயேசுகிறிஸ்துவை நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராக
நிரூபிப்பார். நாம் (ஒரு) காணக்கூடாத தேவனை சேவிக்கிறோம்.
131. இன்றிரவு, ஒரு மனிதன் கைகளில் ஆணி
கடாவப்பட்டவனாகவும், முட்களின் தழும்புகளோடும் பீடத்தின்மேல் நடந்தாலும் அவன் தேவனாயிருக்க
முடியாது. அப்படிப்பட்ட அனேகரை இந்தக் கடைசி நாட்களில் நாம் கொண்டிருக்கிறோம். பாருங்கள்?
நல்லது, எந்த ஒரு மாய்மாலக்காரனும் அதைச் செய்ய முடியும். பாருங்கள். எந்த ஒரு போலியானவனும்
பகட்டானவனும் அதைச் செய்யமுடியும். ஆனால் நீங்கள் இயேசுவை அறிந்துகொள்ளக்கூடிய ஒரே
வழி அவருடைய கிரியைகளின் மூலமே. அந்த மனிதன் (போலியானவன்–மொழிபெயர்ப்பாளர்) தன்னை இயேசு
வாக ஆக்க முயற்சி செய்யலாம்; ஆனால் இயேசு அப்படிப்பட்ட சரீரத்துடன் அவருடைய வருகை வரை
காணப்படப்போவதில்லை. “கடைசி நாட்களில் கள்ளக் கிறிஸ்துக்கள் எழும்பி பெரிய அற்புதங்களையும்
அடையாளங்களையும் காண்பிப்பார்கள்” என்று அவர் கூறினார். ஆனால் அவர்கள் இன்னும் கிறிஸ்துவாக
இருக்க முடியாது.
132. மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி
மேற்கில் மறைவது போல் மனுஷ குமாரனுடைய வருகையும் இருக்கும்.’
133. ஆனால் அவர் நம்மோடிருக்கிறார் என்பதையும்
எந்த ரூபத்தில் இருக்கிறார் என்பதையும் நாம் எவ்வாறு அறியமுடியும்? அறிவுக்கூர்மையான
கருத்துக்களினால் அல்ல; அது அவர்கள் வாழ்க்கையில் நிரூபிக்கப் படவில்லை. “நான் விசுவாசிக்கிறேன்”
என்று வெறுமனே கூறுவதினால் அல்ல. அது அதைச் செய்வதில்லை. அது உங்களில் ஏதோ ஒன்றை சம்பவிக்கச்
செய்யக்கூடியதாயிருக்க வேண்டும். அது, பரிசுத்த ஆவியானவர் தாமே உங்களுக்குள் வருவதாகும்.
அதுவே தேவனின் உறுதிப்படுத்துதல்.
134. மேலும் நீங்கள் பரிசுத்த ஆவியைப்
பெற்றிருப்பதாகக் கூறி, ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிக்காவிடில் நீங்கள் பெற்றுக்கொண்ட
ஆவியில் ஏதோ தவறுண்டு. பரிசுத்த ஆவியானவரே வேதத்தை எழுதினார். அவர், “நான் பொய்யுரைத்துவிட்டேன்;
நான் அவ்விதமாக அதைக் கருதவில்லை” என்று கூறமுடியாது. அவர் அவ்வாறு கூறமாட்டார். அவர்
பரிபூரணமானவர்.
135. கவனியுங்கள். எவ்விதம் அவர் அறியப்பட
முடியும்? எது அவரை அடையாளம் காண்பிக்கும்? வேதம், கொலோசெயர் 1 : 15 ல், “நாம் (ஒரு)
அதரிசனமான தேவனை” ஆராதிக்கிறோம் என்று கூறுகிறது. தேவன் காணக்கூடாதவர். நீங்கள் அதை
விசுவாசிக்கிறீர்களா? (சபையோர், “ஆமென்” என்கின்றனர் – ஆசிரியர்) பின்பு இந்த மனிதன்
(போலியானவன் – மொழி பெயர்ப்பாளர்) ஆணி கடாவப்பட்ட தழும்புகளுடனும், புகை, இரத்தம் மற்றுமுள்ள
போலியான காரியங்களுடனும் இங்கு வருவானாகில் அது அவனை தேவனாக்கிவிடாது.நாம் (ஒரு) காணக்கூடாத
தேவனை ஆராதிக்கிறோம். அவர் தம்மை இயேசு கிறிஸ்துவில் அடையாளம் காண்பிக்கும் வரையிலும்
எப்போதும் காணக்கூடாதவராகவே இருந்தார். அது சரிதானே. (“ஆமென்”)
136. இப்பொழுது காணக்கூடாத அந்த தேவன்
தம்மை உங்களுக்குள் அடையாளப்படுத்துகிறார். பாருங்கள்? நீங்களே அவருடைய ஆலயம். “உங்கள்
சரீரம் பரிசுத்த ஆவியின் ஆலயமாயிருக்கிறது.” வேதவசனம் அவ்வாறு கூறுகிறது.
137. மோசே கண்ட அக்கினிஸ்தம்பம் அதரிசனமான
தேவனல்ல; அந்த அக்கினி ஸ்தம்பமானது ஷெக்கினா மகிமையாயிருந்து அதரிசனமான தேவன் அருகிலிருப்
பதின் பிரதிபலிப்பாயிருந்தது.
138. யோவான் தேவகுமாரனாகிய இயேசுவுக்கு
ஞானஸ்நானம் கொடுத்தபோது, தேவன், அதரிசனமான தேவன், ஒளியின் வடிவில் கீழிறங்கிவந்து புறாவின்
ரூபங்கொண்டு காற்றில் பயணம் செய்திறங்கி, அதரிசனமான தேவன் ஷெக்கினா மகிமையில் தம்மை
அடையாளம் காண்பித்தார்.
139. அதே அதரிசனமான தேவன் தம்மை அக்கினி
ஸ்தம்பத்தில் ஷெக்கினா மகிமையாக தம்மை அடையாளம் காண்பித்தார். அவர்கள் சாலொமோனின் நாட்களில்
ஆலயத்தைப் பிரிதிஷ்டைசெய்தபோது அது உள்ளே வருவதும் போவதுமாயிருந்தது. அக்கினி ஸ்தம்பம்
திரைக்குப் பின்னால் மகாபரிசுத்த ஸ்தலத்துக்குள் சென்றது. ஷெக்கினா மகிமை அடையாளம்
கண்டுகொள்ளப்பட்டது.
140. இப்பொழுது பவுல், தமஸ்குவுக்குச்
செல்லும் பாதையில், அதரிசனமான இயேசுகிறிஸ்து, பவுலுக்கு ஒரு பாவியைக் குருடாக்கத்தக்க
ஒரு ஒளியாக ஷெக்கினா மகிமையின் ரூபத்தில் தம்மை அடையாளம் காண்பித்தார். ஆமென்.
141. அதே ஷெக்கினா மகிமை இன்றிரவு இங்கிருக்கிறது.
நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராக இருக்கும் அதரிசனமான தேவனின் பிரதிநிதித்துவமாக
இருந்து அவர் செய்வதாகக் கூறியிருந்தவைகளைச் செய்து அவருடைய வார்த்தையை அதே அடையாளங்
களுடன் உறுதிப்படுத்துகிறது. அவர் காட்சியில் அழைக்கப்படுகிறார்.
142. இப்பொழுது நீங்கள் அவரை உங்கள் ஜீவியத்தில்
அழைத்து, “கர்த்தராகிய இயேசுவே, நான் உம்மை உமது வார்த்தையின்படி ஏற்றுக்கொள்ளுகிறேன்.
நீர் இங்கே இருக்கிறீர் என்று நான் விசுவாசிக்கிறேன். இன்றிரவு நீர் எனக்கு உதவி செய்ய
இங்கிருக்கிறீர் என்று விசுவாசிக்கிறேன். என் படகில் நீர் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
மகத்தான பரிசுத்த ஆவியானவரே, எனக்குள் வரவேண்டும் என்று விரும்புகிறேன். நான் ஆபத்தில்
இருக்கிறேன். நான் வியாதியாயிருக்கிறேன். நான் ஒரு பாவி. நீர் என்னிடத்தில் வந்து எனக்கு
உதவி செய்ய வேண்டுமென்று நான் விரும்புகிறேன். நீர் அங்கே படுத்துக் கொண்டிருந்து நான்
உம்மை அழைக்க வேண்டும் என்று காத்துக்கொண்டிருக்கிறீர் என்பதை உணருகிறேன். நான் இப்பொழுது
உம்மை என்னுடைய முழு இருதயத்தோடும் அழைக்கப்போகிறேன்.
143. நான் அவ்வாறு அழைக்கும்போது நம்
தலைகளை வணங்கியிருப்போம். பயபக்தியாயிருங்கள். முன் ஒரு போதும் ஜெபித்திராதவண்ணம் ஜெபியுங்கள்.
144. ஒவ்வொருவரும் ஒரு நிமிடம் நிறுத்தி
சிந்தியுங்கள். நீங்கள் யார் என்றும் என்னவாயிருக் கிறீர்கள், எங்கேயிருந்து வந்தீர்கள்,
எங்கே போகிறீர்கள் என்பதை சிந்தியுங்கள். நீங்கள் இன்றிரவு கிறிஸ்துவை அறியாத பாவியாக
இருந்து அவர் உன் கப்பலில் வந்து கொந்தளிக்கும் தண்ணீர்களினூடே அவர் உதவி செய்ய வேண்டுமென்று
விரும்பினால், ஜெபத்தில் நினைவு கூரப்பட விரும்பினால் உங்கள் கரங்களை உயர்த்துவீர்களா?
தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. உன்னை, உன்னை, உன்னை இக்கட்டிடத்தைச்
சுற்றியுள்ள உங்களனை வரையும்.
145. இப்பொழுது நினைவுகூரப்பட வேண்டாமா?
நான் உங்களுக்காக ஜெபிக்கும்போது அப்படியே உங்கள் இருதயத்தை திறவுங்கள். அதற்கு அதுதான்
தேவையானதாக இருக்கிறது. “கர்த்தாவே, நான் தவறானவனாயிருக்கிறேன். நீர் என்னை நினைவுகூர
நான் விரும்புகிறேன்’ என்று அறிக்கை செய்யுங்கள்.
146. தேவனாகிய கர்த்தாவே, அந்தக்கரங்களை
நீர் கண்டீர். அந்த ஜனங்கள், நான் விசுவாசிக்கிறேன் பிதாவே. அவர்களுக்காக நான் ஜீவனுக்கும்
மரணத்திற்கும் நடுவில் நின்று கொண்டிருக்கிறேன். நான் இப்பொழுது செய்பவைகளுக்காக நியாயத்தீர்ப்பு
நாளில் நான் பதில் கூறவேண்டும் என்று உணருகிறேன். கர்த்தாவே, இந்த வேளையில் தேவனின்
ஷெக்கினா மகிமை அவர்களுக்குக் காட்சியளிக்க வேண்டும் என்று நான் அவர்களுக்காக ஜெபிக்கிறேன்.
அது அவர்களின் எஞ்சிய ஜீவிய காலமெல்லாம் அவர்களைவிட்டுப் போகாதிருக்கும். அவர்களின்
ஜீவிய காலம் முழுவதும் ஒவ்வொரு சிறு ஆபத்துகளிலும் அந்த ஷெக்கினாமகிமை தாமே கூட இருந்து
எந்த நேரத்திலும் அதை அழைக்க முடியும் என்று அவர்கள் அறிந்து கொள்வார்களாக.
147. பிதாவே, வேதத்தில் அது, “உம்முடைய
விருப்பத்தின்படியே உம்மைக் கப்பலில் ஏற்றிக்கொண்டு போனார்கள்” என்று கூறப்பட்டுள்ளது.
கர்த்தராகிய இயேசுவே, இன்றிரவு நீர் ஆவியின் ரூபத்தில் பரிசுத்த ஆவி என்கிற பெயரில்
இங்கிருக்கிறீர்.
148. ஓ, தேவனே, விசுவாசத்தினால் உம்மை
நாங்கள் நீர் இருக்கிற வண்ணமாகவே எங்கள் கப்பலில் ஏற்றுக்கொள்கிறோம் பிதாவே. தேவனே,
எங்களுக்கு உதவி செய்யும். உமது ஷெக்கினா மகிமை எங்களுக்குக் காட்சியளித்து எங்களுக்கு
சமாதானம் அருளுவதாக.
149. கர்த்தாவே, “என் பிதா ஒருவனை இழுத்துக்
கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான். பிதாவானவர் எனக்குக்கொடுக்கிறயாவும்
என்னிடத்தில் வரும்” என்று நீர் கூறியுள்ளதை கூறுவதைத் தவிர வேறொன்றும் எனக்கு செய்யத்
தெரியவில்லை. என் கரங்களுக்குப் பின்னாக அவர்கள் தங்கள் கரங்களை உத்தமத்துடன் உயர்த்தியுள்ளனர்
என்று நம்புகிறேன். கர்த்தராகிய இயேசுவே, உம்முடைய ஊழியக்காரனாக அவர்களை இந்த சிக்காகோ
கூட்டத்தின் விருதுகளாக உமக்களிக்கிறேன்.
150. அவர்களை மீண்டும் தொடாதபடிக்கு சாத்தானை
கடிந்துகொள்கிறேன்! அவர்கள் தேவனின் உரிமைப் பொருளாயிருக்கிறார்கள். அவர்கள் தங்களை
முற்றிலும் ஸ்திரப்படுத்திக்கொண்டு சத்துருவை எப்படி மேற் கொள்வது என்பதை அறிந்துகொள்ளுமட்டும்
அவர்கள் மீதுள்ள உன் கரத்தை எடு. அவர்களைவிட்டு விலகியிருக்கும்படி சாத்தானை இயேசுகிறிஸ்துவின்
மூலம் கடிந்துகொள்கிறேன்.
151. மேலும் அன்பான பரிசுத்த ஆவியானவர்
தாமே அவர்களை எடுத்து தண்ணீர் ஞானஸ்நானத்திற்கும், பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தைப்
பெறவும் வழிநடத்தி, தம்முடைய மணவாட்டியை எடுத்துக் கொள்ளும்படியாக கர்த்தராகிய இயேசுவானவர்
தமது காணக்கூடிய சரீரத்தில் வரும்வரை அவர்களை தேவனுடைய ராஜ்யத்துக்குள் முத்திரையிடுவாராக.
பிதாவே, அவர்கள் உம்முடையவர்கள். ஷெக்கினா மகிமையையுடைய மகத்தான தேவன் இப்பொழுதும்
என்றென்றும் அவர்களுடன் இருப்பாராக. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென்.
152. இப்பொழுது ஒரு கணம். அதுவே செய்யப்பட வேண்டிய முதற்காரியம்.
நீங்கள் அவரை ஏற்றுக் கொண்டிருப்பீர்களானால், அதைக்குறித்து அதைக் குறித்து சாட்சி
கூறுங்கள். இரண்டாவதாக செய்யப்பட வேண்டிய காரியம் இதுவே. ஏனெனில் அவர் நீங்கள் அறிக்கை
செய்யும் பிரதான ஆசாரியாராயிருக்கிறார். முதலாவது நீங்கள் விசுவாசத்தினால் அவரை ஏற்றுக்கொண்டு
வெளிப்படையாக அவரை உங்கள் இரட்சகர் என்று அறிக்கை செய்யும் வரை அவர் உங்களுக்கு உதவிசெய்ய
முடியாது. நீங்கள் அவரைக் குறித்து இங்கு அறிக்கை செய்வீர்களானால் அவர்...... இங்கு
நீங்கள் அவரை அறிக்கைசெய்ய வெட்கப்படுவீர் களானால், அவரும் உங்களைக்குறித்து அங்கே
அறிக்கைசெய்ய வெட்கப்படுவார். அவரை இங்கு அறிக்கை செய்ய நீங்கள் வெட்கப்படாதிருந்தால்
அவரும் அங்கே உங்களை அறிக்கை செய்ய வெட்க மடையமாட்டார். இந்தக் கூட்டத்தின் முடிவில்
கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொண்ட இந்த ஜனங்கள் பீடத்துக்கு வந்து தேவன் அவர்களின்
இருதயத்தில் என்ன செய்துள்ளார் என்பதனை அறிக்கை செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்.
153. இப்பொழுது, “நம்முடைய மீறுதல்களினிமித்தம்
அவர் காயப்பட்டார். நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார். நமக்கு
சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் நாம் குணமானோம்.’
154. இப்பொழுது அங்கே ஜெபஅட்டைகள் இல்லை.
அன்றொருநாள் இரவு வியாதியுள்ள ஜனங்களுக்காக ஜெபிக்கும்போது இதைச்செய்ய நான் ஏவப்பட்டேன். இங்கு எத்தனை வியாதிஸ்தர்கள்
இருக்கிறீர்கள்? உங்கள் கரங்களை உயர்த்துங்கள். வியாதியாயிருந்து தேவையுள்ளவர்கள் யாரென்று
தேவன் அறிவார். நீங்கள் அப்படியே விசுவாசம் கொண்டிருங்கள்.
155. இப்பொழுது, யாரும் அடுத்த சில நிமிடங்களுக்கு
அசைந்து கொண்டிருக்க வேண்டாம். இது ஒரு பெரிய காரியம். இது மிகவும் மகத்தானது!
156. இங்கே யாராவது அவசுவாசிகள் இருந்து
இது தேவனுடைய வார்த்தையென்று விசுவாசிக்காமலிருந் தால் நீங்கள் தேவனின் வார்த்தையேயன்றி
வேறு ஏதாகிலும் வழிகளை அறிந்திருந்தால் அதன் மூலம் இக்காரியங்கள் செய்யப்படுவதை நான்
பார்க்கும்படி செய்யமுடியுமா என்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் நான் சவால் விடுகிறேன்.அது
உங்களால் முடியவில்லை யென்றால், நான் கூறுவதை விசுவாசியுங்கள்.
157. இப்பொழுது இங்குள்ள ஒவ்வொரு நபரும்
நேராக இந்த வழியாகவோ அல்லது மேல் நோக்கியோ பாருங்கள். அது, நல்லது. நான் எதற்கு உங்கள் கவனத்தை ஈர்க்கக்கூடாதோ அவற்றுக்கு உங்கள் கவனத்தை
ஈர்த்து விடுவேனோ என்று அஞ்சுகிறேன். பேதுருவும் யோவானும், “எங்களை நோக்கிப்பார்” என்று
கூறியதைப் போல் - நான் அதை அந்த அர்த்தத்தில் கூறவில்லை. நாம் – நாம் மேல்நோக்கிப்
பார்ப்போம்.
158. மேலும் நான் இன்னும் ஒரு வேதவசனத்தை
மேற்கோள் காட்டவிரும்புகிறேன். “அவர் நாம் அறிக்கை செய்கிற பிரதான ஆசாரியர்.” நாம்
அதை அறிந்திருக்கிறோம்.“அவர் நம்முடைய பெலவீனங்களைக் குறித்து தொடக்கூடிய பிரதான ஆசாரியராயிருக்கிறார்.”
அது சரியா?
159. இப்பொழுது நான் அறிந்துள்ளவர்கள்
யாராகிலும் உண்டா என்று பார்க்கப் போகிறேன். ஏனென்றால் அங்கு கூடாரத்திலிருந்து வந்துள்ளவர்கள்
சிலர் இங்கு உட்கார்ந்திருக்கிறார்கள்.அவர்களில் ஒருவரை இப்போது தான் அடையாளம் கண்டு
கொண்டேன். அவள் அங்கே கீழே வருகிறாள். அது திருமதி...... அவள் பெயர் கிரிப்பின். அவள்
பெயரை நான் இப்பொழுது மறந்துவிட்டேன். அது சகோதரி ரோஸல்லா, அவளும் அவள் தாயாரும் இங்கு
உட்கார்ந்து கொண்டிருக் கிறார்கள். சிக்காகோவின் மிகப்பெரிய குடிகாரி; அவளைக் கர்த்தர்
கூட்டத்தில் சுகமாக்கினார். ஏறக்குறைய நீங்கள் எல்லோருமே இங்கிருக்கும் ரோஸல்லாவை அறிவீர்கள்.
இப்பொழுது அவளுடைய ஊழியங்களையும் அவள் எங்குசென்று சாட்சி பகருகிறாள் என்பது போன்றவைகளையும்.
ஒரு முழுக்குடிகாரியாயிருந்தவள்; இப்பொழுது ஒரு அருமையான கிறிஸ்தவளாய் அதே ஷெக்கினா
மகிமையினால் அழைக்கப்பட்டவளாயிருக்கிறாள். அது நீண்டகாலமாகவே அவ்விதமாக உள்ளது. இல்லையா
சகோதரி ரோஸல்லா? (சகோதரி ரோஸல்லா, “ஆமென்” என்று கூறுகிறாள் – ஆசிரியர்)
160. இப்பொழுது மீண்டும் ஒருமுறை சுற்றிலும்
பார்த்தேன். என்னால் சரியாகக் கூறமுடியவில்லை. ஆனால் நான், இங்கிருந்து சரியாக இரண்டாவதாக
உட்கார்ந்து கொண்டு தன்னுடைய கையை அவருடைய வாய் வரை உயர்த்தியிருக்கும் ஸ்திரீயை நான்
அறிந்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். அவளுடைய பெயரை என்னால் அழைக்கமுடியாது. ஆம்,
நீங்கள் கூடாரத்திற்கு வருகிறவளில்லையா? அது திருமதி. பெக்கின் பாவ் இல்லையா? அது சரியா?
அதுவாகத்தான் இருக்குமென்று நான் நினைத்தேன். முற்றிலும் சரி.
161. மேலும் பிறகு சரியாக பின்பக்கமாக
மூன்றாவது ஸ்திரீயாக திருமதி. வே, சபையில் அன்றொரு நாள் இருதயநோயினால் மரித்து கீழே
விழுந்து பிறகு ஜீவனுக்குள் மீண்டுமாக அழைக்கப்பட்ட மனிதரின் மனைவியாகிய அவள் இங்கே
உட்கார்ந்திருக்கிறாள்.
162. மரித்தபின்பு உயிரோடெழுப்பப்பட்டவர்களை
நீங்கள் யாராவது பார்த்ததுண்டா? அப்படி ஒரு போதும் நீங்கள் பார்க்காதிருந்தால் கரங்களை
உயர்த்துங்கள். மரித்து உயிரோடெழுப்பப்பட்டவர்களை ஒருபோதும் பார்த்தி ராதவர்கள்? திரு.
வே, எழுந்து நில்லுங்கள். (சபையோர் களிகூருகின்றனர் – ஆசிரியர்)
163. நான் இப்போது பிரசங்கிப்பதைப் போன்று
பிரசங்கித்துக்கொண்டிருந்தேன்.அப்பொழுது ஷெக்கினா மகிமை பிரசன்னமானது. திடீரென இதயநோயினால்
அவருடைய கண்கள் உள்ளே சென்றது. நீங்கள் இப்பொழுது உங்கள் கண்களை மூடலாம். ஆனால் உங்கள்
கண்களை உள்ளே இழுத்துக்கொள்ள முடியாது. அவருடைய மனைவி அனேக ஆண்டுகளாக ஒரு பதிவுபெற்ற
செவிலியராக இருப்பவள், அவர் மரித்துவிட்டதை அறிந்து அவருடைய இருதயத்தைப் பிடித்துக்கொண்டு
கதறினாள். நான் ஜனங்களை அமைதியாக இருக்கும்படி கூறி கீழே இறங்கிச் சென்றேன். நான் தேவனிடம்
பேசி என் கைகளை அவர் மீது வைத்து உணர்ந்தேன். நான் மேலே நிமிர்ந்து அவளைப்பார்த்தேன்.
அவள், “அவர் (மரித்துப்) போய்விட்டார்” என்றாள். நான் அவருடைய கண்களை திறந்திருக்கும்படி
செய்ய முயற்சித்தேன். அவர் கண்கள் உள்ளே செருகிக்கொண்டு போனது. அவருடைய கண்களை சுற்றியுள்ள
இமைகள் மூடிக்கொண்டது. அவருக்கு அதற்குமேல் நாடித்துடிப்பு இல்லாமல் போனது.
164. நான், “கர்த்தராகிய இயேசுவே” என்று
கூப்பிட்டேன். அவர் காட்சியில் வந்தார்.
165. நான் அவர் மீது என் கைகளை வைத்தேன்.
அவர், “சகோ. பிரன்ஹாமே” என்று பேசமுயற்சி செய்தார். அவர் மிகவும் பலவீனமாயிருந்தபடியினால்
அவரால் பேச முடியவில்லை. ஆனால் அவர் இன்றிரவு இங்கு (உயிருடன்) நின்று கொண்டிருக்கிறார்.
தேவனுடைய கிருபைக்கு விருதாக.
166. இப்பொழுது குறைந்தபட்சம் ஆறு நிச்சயமான மரித்தோரிலிருந்தெழுப்பப்பட்ட
சாட்சிகளை நாம் கொண்டுள்ளோம். அவர்களில் சிலர் மரித்து ஆறு அல்லது எட்டு மணி நேரம்
கழித்து, ஜெபத்தில் கிறிஸ்துவின் பிரசன்னத்தினால் ஜீவனைப் பெற்றுக் கொண்டனர்.
167. இங்கிருக்கும் இந்த ஸ்திரீயை நான்
அறிந்திருக்கிறேனா என்று தெரியவில்லை. நான் அறிந்திருக்கும் ஒரு ஸ்திரீ என்று நம்புகிறேன்.
நான் உன்னை அறிந்திருக்கிறேன். உன் பெயர் என்னவென்று அறிந்திருக்கவில்லை. ஆனால் உன்னை
அறிவேன். சரிதானே?
168. மேலும் சகோதரன் ப்ரௌன், அது சரியென்று
நான் நம்புகிறேன். நான் தவறாக இல்லையெனில் அங்கு உட்கார்ந்து கொண்டிருப்பது...... அது
சகோதரன் ப்ரௌன் தானே? இல்லை. நான் அப்படி நினைக்கவில்லை. நான் வருந்துகிறேன். அது முற்றிலும்
சரி. அது அதைக்குறித்தது என்று நான் நம்புகிறேன்.
169. நீங்கள் இப்பொழுது ஜெபியுங்கள்.
“கர்த்தராகிய இயேசுவே, நீர் பிரதான ஆசாரியராயிருக்கிறீர். நான் உமது வஸ்திரத்தை தொடட்டும்”
என்று கூறுங்கள். மேலும் சகோதரன் பிரன்ஹாமுக்கு என்னைத் தெரியாது. அவருக்கு என்னைக்
குறித்து ஒன்றும் தெரியாது என்று அறிவேன். ஆனால் நீர் என்னை அறிவீர். நான் சுகமடைய
விரும்புகிறேன். உமது வஸ்திரத்தை நான் தொட நீர் சற்றே அனுமதியும். இப்பொழுது உங்கள்
ஜெபங்களில் அவ்வாறு ஜெபியுங்கள்.
170. மேலும் நான் தேவனிடம் இதைக் கேட்கிறேன்.
கர்த்தராகிய இயேசுவே, இன்றிரவு இந்தக்கூட்டத்தை முடிக்கும் இத்தருணத்தில் இக்கட்டிடத்தின்
வாயிலுக் குள்ளிருக்கும் ஜனங்கள் புதியவர்களாயிருந்து இதைப் புரிந்துகொள்ளாமலிருக்கலாம்.
ஆனால் இந்த செய்தி உண்மையென்று அவர்கள் அறியும்படி செய்யும். கர்த்தராகிய இயேசுவே,
நீர் வந்து இதை அருளும். நாங்கள் ஒருமித்து எங்களை உம்மிடம் சமர்ப்பிக்கச் செய்யும்.
அவிசுவாசிகள் அல்லது புதிதாய் மறுபடியும் பிறந்த கிறிஸ்தவர்களாய் இங்குள்ளவர்கள் ஷெக்கினா
மகிமை இங்குள்ளதைக் காண்பார்களாக. அது உலக மெங்குமுள்ள சபைகளில் புகைப்படமாக விஞ்ஞானத்தி
னாலும் அடையாளம் காணப்பட்டு இருக்கிறதே. நீர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய்
இருக்கிறீர். நாங்கள் உம்மை விசுவாசிக்கிறோம்.
171. கர்த்தராகிய இயேசுவே (ஒரு சகோதரி
அன்னிய பாஷைகளில் பேசத்துவங்குகிறாள். ஒலிநாடாவில் காலி இடம்–ஆசிரியர்) கர்த்தருக்கு
ஸ்தோத்திரம். இப்பொழுது இங்கு தேவன் தம்மை அடையாளம் காண்பித்துக் கொண்டுள்ளார். இப்பொழுது
அது உண்மையென்று நான் விசுவாசிக்கிறேன்.
172. இப்பொழுது சுற்றிலுமுள்ளவர்கள் இந்த
வழியில் சிலராகவும் அந்தவழியில் சிலராகவும் முன்பாக வாருங்கள். நீங்கள் அப்படியே அதை
விசுவாசியுங்கள். யாரும் அங்குமிங்கும் அசையாதீர்கள். உண்மையான பயபக்தியாயிருங்கள்.
173. இப்பொழுது அவர் இதைச் செய்வார் என்று
நான் கூறவில்லை. அவர் அதைச் செய்வார் என்று நம்பிக் கொண்டிருக்கிறேன். அவர் அப்படி
செய்வாரானால் அது அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக் கிறார் என்னும் வார்த்தையின்
உறுதிப்பாடாக இருக்காதா? மேசியா தொடக்கத்தில் எவ்வாறு இருந்தார் என்பதை அதன் மூலமாக
எவ்விதம் அறிந்திருக்கிறீர்கள்? அப்படியானால் இன்றிரவும் அவர் தம்முடைய சபையில் தம்மை
அதே மேசியாவாக அடையாளம் காட்டுவார். நீங்கள் விசுவாசித்தால் மட்டும்.
174. இப்பொழுது அப்படியே ஜெபியுங்கள்.
நான் ஒரு வழியில் என்னை முற்றும் ஒப்புவிக்க வேண்டும். அதைவிட ஒருவழியில் மிகவும் ஈடுபாடுகொண்டு
ஜனங்களை நோக்கி கண்டுகொள்ளும்படியாக. நான் – நான்......
175. ஆம், தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக.
இங்கு அது இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உள்ளது. தேவனின் மகிமைக்காக இங்குள்ள ஒவ்வொரு
ஆவியையும் என் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்கிறேன். இப்பொழுது அது எதனை அர்த்தப்படுத்துகிறது
என்று நீங்கள் அறிவீர்கள். பயபக்தியாயிருங்கள்.
176. சரியாகப் பின்னால் ஒரு வெளிறிய சிவப்பு
உடை அணிந்துள்ளவளாய் அமர்ந்திருக்கும் ஒரு இளம்பெண் மீது அந்த ஒளி தொங்கிக் கொண்டிருக்கிறது.
அவள் தன் கணவனுக்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறாள். அவன் பின்மாற்றமடைந்தவன். அவன் பின்பக்கமாய்
ஒரு கம்பத்தினருகில் உட்கார்ந்து கொண்டிருக்கிறான். நீ விசுவாசிப்பாயானால், அவன் விசுவாசித்து
அதை மீண்டும் ஏற்றுக்கொள்ளும்படியாக தேவன் அந்த அற்புதத்தை உனக்காகச் செய்வார்.
177. உனக்கடுத்தவளாய் உட்கார்ந்திருக்கும்
ஸ்திரீ தன் கணவரைக் குறித்து வியந்து கொண்டிருக்கிறாள். இல்லை, அது நாளையதினத்தில்
முதியவீரர்களுக்கான மருத்துவமனையில் சேர்க்கப்படவிருக்கும் அவளுடைய சகோதரனைப் பற்றியதாகும்.
நீ விசுவாசித்தால் அது உனக்குச் செய்யப்படும். நீயும் விசுவாசிக்கக் கூடுமானால்.
178. இங்கு ஒரு மனிதன் இருக்கிறார். கர்த்தர்
உம்மை ஆசீர்வதிப்பாராக. அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் கேட்டதைப் பெற்றுக் கொள்ளமுடியும்.
179. புற்று நோய்க்கான அறுவை சிகிச்சை
செய்து கொண்டு உட்கார்ந்திருக்கும் ஒரு மனிதன் அங்கிருக்கிறார். நீங்கள் விசுவாசிப்பீர்களானால்
தேவன் உங்களைக் குணமாக்குவார். நீங்கள் அதை விசுவாசிக் கிறீர்களா? திரு. வில் காக்ஸ்
நீர் எழுந்து காலூன்றி நின்று உம் சுகத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். என் வாழ்வில் அந்த மனிதரை
நான் பார்த்ததில்லை என்பதை பரலோகப் பிதா அறிந்திருக்கிறார். அது சரி. கவலைப்படாதிருங்கள்
ஐயா. நாம் அன்னியர்கள் தானே? அப்படியானால் உங்கள் கரங்களை ஒன்றோடொன்று சேர்த்து அசையுங்கள்.
அது சரி.
180. அது என்ன? ஷெக்கினா மகிமை. இயேசுகிறிஸ்து
நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்.
181. இங்கு குடலிறக்கத் தொல்லையுடன் உட்கார்ந்து
கொண்டிருக்கும் கறுப்பு நிற சகோதரியே, திருமதி. பர்னட், கர்த்தராகிய இயேசு உன்னை சுகமாக்குவார்
என்று விசுவாசிக்கிறாயா? அப்படியானால் அது உனக்குக் கிடைக்கும். ஆமென். என் வாழ்வில்
அந்தப் பெண்ணை நான் பார்த்ததே இல்லை.
182. ஆஸ்துமாவினால் துன்பப்பட்டுக் கொண்டு
என்னையே நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கும் மனிதரே, ஓ, என்னால் கூடுமானால்...... அது
யாரென்று கர்த்தர் என்னிடம் கூறுவார். திரு. மெக்கில் (ஙஸ்ரீஎண்ப்ப்) எழுந்து நின்று
உங்கள் சுகத்தை இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் பெற்றுக்கொள்ளுங்கள். என் வாழ்வில் ஒருபோதும்
இந்த மனிதரைப் பார்த்ததேயில்லை. சர்வ வல்லமையுள்ள தேவனறிவார்.
183. வேறொருவர் இங்கிருக்கிறார். அங்கு
வரிசையில் பின்பக்கமாய் தன் இருதயத்தைச்சுற்றி இரத்தம் உறைந்துபோகுதலின் தொல்லையுடன்
உட்கார்ந்து கொண்டிருக்கிறார்.சர்வவல்லவராகிய தேவன் உங்களை சுகமாக்குவார் என்று விசுவாசிக்கிறீர்களா?
ஜீவனோடி ருப்பதற்காக உமக்குரிய ஒரே நம்பிக்கை இதுவே.
184. எனக்கு நேராகக் கீழே, கடைசியில்
உட்கார்ந்து கொண்டு நார்வேயிலுள்ள தன் சினேகிதர்களுக்காக ஜெபித்துக்கொண்டு அமர்ந்திருக்கும்
இந்த மனிதர் – இந்த மனிதரும் முதுகுவலியினால் கஷ்டப்பட்டுக் கொண்டுள்ளார். அது உண்மை
அல்லவா? உங்கள் கரங்களை உயர்த்துங்கள். அது தான் அது. நீங்கள் விரும்புவதைப் பெற்றுக்கொள்வீர்கள்.
185. அவரை அழையுங்கள்! அவர் இங்கிருக்கிறார்.
அவர் கப்பலில் இருக்கிறார். நீங்கள் அவரை விசுவாசிக்கிறீர்களா? (சபையோர்கள் களிகூருகின்றனர்
– ஆசிரியர்)
186. எழுந்து காலூன்றி நின்று பின்பு,
“கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவே, நான் இப்பொழுது உம்மை அழைக்கிறேன். நான் உம்மை விசுவாசிக்கிறன்.
என் காரியமாக உம்மை நான் காட்சியில் அழைக்கிறேன்” என்று கூறுங்கள். உங்கள் கரங்களை
உயர்த்தி உங்கள் சொந்தவழியில் உங்கள் தேவைகளுக்காக கதறுங்கள். அதைச் செய்யவேண்டியது
நீங்கள்தான். சுகவீன மாயிருப்பது நீங்கள்தான். அவர் இங்கிருக்கிறார். அவர் சரியான விதத்தில்
தம்மை அடையாளம் காட்டுகிறார். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்.
தேவனுக்கே மகிமை! பரலோகப்பிதாவே, தேவையுள்ள இந்த நேரத்தில் தானே நீர் உதவிசெய்வீராக.
187. அடையாளம் கண்டுகொள்ளப்பட்ட இயேசு
கிறிஸ்துவின் பிரசன்னத்திலிருந்து, சாத்தானே, நான் உனக்கு சவால் விடுகிறேன். இந்தக்
கைக்குட்டை களுக்காக, இந்த ஜனங்களுக்காக - நீ அவர்களை பிடித்துவைக்க முடியாது. இயேசுகிறிஸ்து
உன்னை கடிந்து கொள்கிறார்! ஜனங்கள், அவர் இங்கு இந்த கப்பலில் இருக்கிறாரென்று விசுவாசிக்கிறார்கள்.
அவர் இப்பொழுது இங்கிருக்கிறார். அவருடைய ஷெக்கினா மகிமை எங்கள்மேல் இருக்கிறது. சாத்தானே,
இங்கிருந்து வெளியே போ! இயேசுவின் நாமத்தில் நான் உனக்கு சவால் விடுகிறேன்!
No comments:
Post a Comment