(பில்லி ஞானஸ்நானம் பெறுதல்)
ஜெபர்ஸன்வில்,
இண்டியானா, அமெரிக்கா
ஏப்ரல் 9,
1950
அப்போஸ்தலர்களின் இருதயங்களில் ஜீவித்து அந்த குருடனின் கண்களைத் திறந்த....?....,
அவர்கள் இரட்சிக்கப் பட்டிருக்க வேண்டும். மேலும் விசுவாசிக்கிறவன் ஆக்கினைக் குள்ளாகத்தீர்க்கப்படான்.
இந்த அடையாளங்கள் விசுவாசிக்கிறவர் களைப் பின்தொடரும். என் நாமத்தினால் பிசாசுகளைத்
துரத்துவார்கள், நவமான பாஷைகளைப் பேசுவார்கள், சர்ப்பங்களையோ அல்லது சாவுக்கேதுவான
யாதொன்றை எடுத்தாலும் அது அவர்களை சேதப்படுத்தாது. (ஒலி நாடாவில் காலியிடம் ஆசிரியர்)....
இவ்விதமாய்க் கர்த்தர் அவர்களுடனே பேசினபின்பு,
பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, தேவனுடைய வலது பாரிசத்தில் உட்கார்ந்து, தம்முடைய
சபையை உற்றுநோக்கி கவனித்துக் கொண்டிருக்கிறார். அவர் உங்களில் இருப்பதை நீங்கள் அறிக்கையிட்டால்,
அவர் தம்முடைய வல்லமையோடும் தம்முடைய மகிமை யோடும் வரும்போதும் பிதாவுக்கு முன்பாக
அவர் அறிக்கைபண்ணுவார்..... அவருடைய சீஷர்கள் புறப்பட்டுப் போய், எங்கும் பிரசங்கம்பண்ணினார்கள்.
கர்த்தர் அவர்களுடனே கூடக் கிரியை நடப்பித்து, அவர்களால் நடந்த அடையாளங்களினாலே வசனத்தை
உறுதிபடுத்தினார். பரிசுத்த மாற்கு.16.
அவர் எவ்வளவு அற்புதமானவர்! அவர் எவ்வளவு
மகிமையானவர்! ஞானஸ்நானத்திற்கான இந்த வேளையை விட மிகவும் மகத்தான தருணம் இந்த உலகத்திலேயே
கிடையாது. சரியாக அங்கேயே அப்படியே தரித்திருங்கள்.... பையன்கள் கொஞ்ச நேரத்தில் வெளியே
இருப்பார்கள்.... கலந்து கொள்பவர்கள் உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் சத்தத்தைக் கேட்டிருக்கிறார்கள்.
அங்கே ஒரு ஸ்திரீ அவளுடைய தலையின் பக்கத்தில்
நின்றுகொண்டிருந்தாள்.... ரிச்மண்ட் அவர்களைக் கொண்டுசெல்ல பொருள் உதவி வருவதைக் கண்டேன்.
அவள் வெளிநாட்டை சேர்ந்த ஒருத்தி. அவள், “கர்த்தருடைய வருகையின் மகிமையை என் கண்கள்
கண்டன” என்றாள். ஏதோவொரு நாளில் அவர் வருவார். நம்முடைய எல்லா துக்கமும் அப்போது முடிந்துவிடும்.
உயிர்த்தெழுதலின் நாளாகிய இது ஒரு அற்புதமான நாள். உங்களில் யாராவது அங்கிருப்பீர்களானால்...
(ஒலிநாடாவில் காலியிடம்-ஆசிரியர்).
அவர்.... கர்த்தருடைய ஆவியானவர் பிலிப்புவிடம்,
“நீ போய், அந்த இரதத்துடனே சேர்ந்துகொள்” என்று சொன்னார். இங்கே எத்தியோப்பியருடைய
ராஜ ஸ்திரீயாகிய கந்தாகே என்பவளுக்கு மந்திரியும் அவளுடைய பொக்கிஷமெல்லாவற்றிற்கும்
தலைவனு மாயிருந்த எத்தியோப்பியனாகிய ஒரு மந்திரி இருந்தான், அவன் ஏசாயா 40-ம் அதிகாரத்திலுள்ள
வசனங்களை வாசித்துக் கொண்டிருந்தான். (ஏசாயா 53-ம் அதிகாரம் - தமிழாக்கியோன்) “அடிக்கப்படும்படி
கொண்டு போகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியை போலவும், தன்னை மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச்
சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார். நம்முடைய
மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்;
நமக்குச் சமாதானத்தை உண்டு பண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால்
குணமாகிறோம்.”
பிலிப்பு அவனிடம், “நீர் வாசிக்கிறவைகளின்
கருத்து உமக்குத் தெரியுமா?” என்றான்.
அதற்கு அவன் ஒருவன் எனக்குத் தெரிவிக்காவிட்டால்
அது எனக்கு எப்படித் தெரியும் என்று சொல்லி; பிலிப்பு ஏறி, தன்னோடே உட்காரும்படி அவனை
வேண்டிக்கொண்டான்.
பிலிப்பு அந்த இரதத்தில் ஏறி; அந்த வேதவாக்கியத்தை
முன்னிட்டு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலையும் அவருடைய வல்லமையையும் குறித்து அவனுக்குப்
பிரசங்கித்தான். கிறிஸ்து நம்மோடு இருக்கிறார் என்று நான் விசவாசிக்கிறேன், நீங்கள்
விசுவாசிக்கவில்லையா?
மந்திரி அந்த செய்தியை கேட்டஉடனே இதோ,
தண்ணீர் இருக்கிறதே, நான் ஞானஸ்நானம் பெறுகிறதற்குத் தடையென்ன என்றான்.
அதற்கு பிலிப்பு, “நீர் உம்முடைய முழு
இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், முழு மனதோடும் விசுவாசித்தால், தடையில்லை” என்றான்.
மந்திரி, “இயேசு கிறிஸ்துவே தேவனுடைய
குமாரன் என்று என் முழு மனதோடும் நான் விசுவாசிக்கிறேன்” என்றான். அவன் இரதத்தை நிறுத்தினான்.
அது செய்யப்பட்டது.
அவர் தேவனுடைய குமாரன் என்று நீங்கள்
உண்மையாகவே உங்கள் இருதயத்தில் விசவாசிக்கும்போது, விசுவாசிக்கிறவன் ஆக்கினைக் குள்ளாகத்
தீர்க்கப்படுவதில்லை. அவன் அந்த இரதத்தை நிறுத்தினான். பிலிப்பும் மந்திரியும் தண்ணீருக்குள்
சென்றார்கள். பிலிப்பு அவனுக்கு ஞானஸ்நானம் கொடுத்ததன் மூலம் தனக்கு கொடுக்கப்பட்ட
பொறுப்புக்கு கீழ்ப்படிந்தான். அவன் ஞானஸ்நானம்
கொடுத்த பின்பு, கர்த்தருடைய ஆவியானவர் அவனைக் கொண்டு போய்விட்டார். அவர்கள் அதற்கு
மேல் அவனைக் காணவில்ûல்; அவன் இருநூறு மைல்களுக்கு அப்பால்
இருந்தான்... (ஒலிநாடாவில் காலியிடம் – ஆசிரியர்)
மரித்துக்கொண்டிருக்கும் ஒருவருக்கு...
இப்பொழுது இரட்சிக்கப்பட்டு ஆவியால் நிரம்பியிருக்கின்றனர். அவர்களெல் லாரும் சத்தமிட்டுக்கொண்டு
தொடர்ந்து அலறிகூச்சலிட்டுக் கொண்டிருந்தனர்.பரிசுத்த ஆவியானவர் விழுந்துகொண்டிருந்தார்.
மனந்திரும்புதலுக்கு பிற்பாடு அடுத்ததாக செய்யவேண்டியகாரியம் ஞானஸ்நானமே. அப்போஸ்தலர்
2-ம் அதிகாரம் 37-ம் வசனம் : இதை அவர்கள் கேட்டபொழுது, இருதயத்திலே குத்தப்பட்ட வர்களாகி,
பேதுருவையும் மற்ற அப்போஸ்தலரைப் பார்த்து : சகோதரரே, நாங்கள் என்னசெய்ய வேண்டும் என்றார்கள்.
பேதுரு அவர்களை நோக்கி : நீங்கள் மனந்திரும்பி,
ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள்.
அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.
வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள்
பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும்
உண்டாயிருக்கிறது என்றான்.
பரலோக பிதாவே, இந்த வேதவாக்கியம்
1900 வருஷங்களுக்கு முன்பே எழுதப்பட்டது, அம்முடைய வாக்குத்தத்தமானது இன்னும் புதிதாகவே
உள்ளது. மேலும் இப்பொழுது, கர்த்தாவே, இங்கே இந்த வாலிப ஜனங்கள் உள்ளனர், இங்கே என்
வலதுபக்கத்தில் நின்று கொண்டிருக்கும் இந்த இரண்டு வாலிப ஸ்திரீகள் உம்மை தங்களுடைய
இரட்சகராக ஏற்றுக்கொண்டுள்ளனர்; அவர்கள் சுவிசேஷ விவரணத்தை விசுவாசிக்கின்றனர்.
கர்த்தாவே, என் இடது பக்கத்தில் என் சிறிய
மருமகன் மெல்வினும் என் சொந்த பையனும் இருக்கின்றனர். ஓ, தேவனே, கூடுமானால் இந்தக்
காலையில் அவ்விரு தாய்மார்களும் அழைக்கப்பட்டு அந்த படிக்கட்டின் பக்கத்திலுள்ள கைப்பிடி
கம்பியினூடாக நோக்கி, இப்பொழுது இங்கேயுள்ள தங்களுடைய பையன்களை கீழே நோக்கிப்பார்த்து
காணும்படி அனுமதிப்பீராக...
ஓ, கர்த்தாவே, நான் எவ்வளவாக மகிழ்ச்சியடைகிறேன்!
ஓ, நீர் - நீர் ஜெபத்திற்கு பதிலளிக்கிறீர் என்பதை அறிவதென்பது அந்த சிறு ஏழை தாயான
ரூத், பலவருடங்களுக்கு முன்பே (மரித்து – தமிழாக்கியோன்) போய் விட்டாள், ஆனால் அவளுடைய
ஜெபத்திற்கு இப்போது பதிலளிக்கப்பட்டுவிட்டது. அவன் உம்மை நேசித்து உம்மை சேவிக்க வேண்டுமென்று
அவள் ஜெபித்தாள். அவன் இந்தக் காலையில் தன்னுடைய நிலையில் நிலைத்திருக்கிறான். கர்த்தாவே,
இங்கேயுள்ள மற்றவர்களும் தங்களுடைய தாய்மார்கள் போனவர்களாக காணப்படலாம், எங்களுக்குத்
தெரியாது; என்னவாயினும் நீர் ஜெபத்திற்குப் பதிலளிக்கிறீர்.
அன்புள்ள பிதாவே, இப்பொழுது நான் உம்முடைய
தாழ்மையான ஊழியனாக, சுவிசேஷத்தின் ஒரு ஊழியக்காரனாக, ஒரு ஆசாரியனாக என் கடமையை செய்யும்படி
முன்னோக்கி நடத்தி செல்கிறேன். தேவனே, இரக்கமாயிரும். நான் அவர்களை தண்ணீரில் ஞானஸ்நானம்
பண்ணும்போது, பரிசுத்த ஆவியானவர் அவர்களுடைய இருதயத்திற்குள் கிறிஸ்துவை முத்திரை யிடுவாராக.
அவர்கள் தண்ணீரை விட்டு வெளியே வருவது, நீர் ஈஸ்டர் காலையில் எழுந்தது போலிருக் கட்டும்,
இந்த கடுங்குளிரான தண்ணீரின் வெள்ளமாகிய கல்லறையை விட்டு அவர்கள் எழும்புவார்களாக.
ஏதோவொரு நாளில், அவர்கள் கல்லறையில் இளைப்பாற செல்வார்களானால் இந்த மண் பூமி வெடித்து,
கல்லறையின் மேல் மூடப்படும் கல் புரட்டித் தள்ளப்படுவதாக. அவர்கள் இந்த எல்லாவற்றையும்
செய்யக்கூடிய நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுடன் அந்த இராஜ்ஜியத்தில் தங்களுடைய
அன்பார்ந்தவர்களுடன் மீண்டும் ஒன்று கூடட்டும், கர்த்தாவே. ஒவ்வொருவரும் ஒரு முழு நினைவாற்ற
லோடும், அவர்கள் செய்துகொண்டிருப்பதைக் குறித்த முழு நம்பிக்கையோடும் இப்பொழுது முன்னோக்கி
அசைந்து சென்று, இந்த செய்தி உண்மையென்று விசுவாசிப்பார்களாக. அவர் “விசுவாசிக்கிறவன்
ஆக்கினைக்குள்ளாக தீர்க்கப்படுவதில்லை. நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்
என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான். உயிரோடி ருந்து என்னை விசுவாசிக்கிறவன்
என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்” என்றார். இங்கே அவர்களுடைய விசுவாசமும் சாட்சியும்
உள்ளது. கர்த்தாவே, இந்த சபையின் ஐக்கியத்திற்குள் அவர்களை ஞானஸ்நானம் பண்ணுகிறேன்,
கர்த்தாவே, பரிசுத்த ஆவியால் உம்முடைய பிரியமான குமாரனின் ஐக்கியத்திற்குள் அவர்களை
ஞனாஸ்நானம் பண்ணும், நாங்கள் இதை கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம், ஆமென்.
நீங்கள் உங்களுடைய அறைக்குள் செல்கிற வேளையில் தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. (ஒலிநாடாவில்
காலியிடம் – ஆசிரியர்)
கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில், உங்கள்
விசுவாசத்தை அறிக்கையிட்டு, இயேசு மரித்து மீண்டும் உயிர்த்தெழுந்தார் என்று இந்தக்
காலையில் விசுவாசித்தவர்களாக செல்லுங்கள்... தேவன் அவரை ஆசீர்வதித்து, மரித்துக்கொண்டிருக்கும்
ஒரு தேசத்திற்கு இந்த ஜீவ வார்த்தையைக் கொண்டு செல்ல, அவரை ஒரு போதகராக ஆக்குவாராக.
நாம் அவர்களுடைய தலைகளை வணங்குவோமாக.
ஓ பரலோக பிதாவே, இரக்கமாயிரும், அன்புள்ள பிதாவே. இங்கே நின்றுகொண்டிருக்கும் இந்த
சிறு ஏழைப்பையனை நோக்கிப் பாரும். கர்த்தாவே, அது கூடுமா என்பது எங்களுக்குத் தெரியாது...
கர்த்தாவே, கூடுமானால், அங்கே அந்த தேசத்திலிருக்கும் அவனுடைய தாய், தன்னுடைய அன்பான
பையன் இப்பொழுது கர்த்தராகிய இயேசுவிடம் திரும்பினதை இந்த காலையில் அறிந்துகொள்ளட்டும்.
ஏதோவொரு நாளில் இந்த மாம்ச சரீரம் அவனுடைய மேல்பாகத்தை விட்டு புறப்பட்டு போய்விடும்
என்றும் அவள் முன்கூட்டியே உயிர்த்தெழுந்து வருவாள் என்றும் அறிந்து ஒரு பழைய கடுங்குளிரான
(தண்ணீரான) கல்லறைக்குள் போவானாக. கர்த்தாவே, தேவன் அவனை ஆசீர்வதித்து, அவனை ஒரு மகத்தான
மனிதனாக ஆக்கி, அவன் உம்முடைய நாமத்தை மகிமைப்படுத்தட்டும். இப்பொழுது. நீர் ஏதோவொரு
நாளில் அவனை அழைத்தீர் என்பதை நான் அறிவேன், கர்த்தாவே. ஓ, நீர் அவனுக்கு நித்திய ஜீவனைக்
கொடுக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். உமக்குச் சித்தமானால் அவனை ஒரு ஊழியக்காரனாகவும்
வார்த்தையை பிரசங்கிப்பவனாகவும் ஆக்கும். கர்த்தாவே, உலகமெங்கும் சென்று சகல தேசத்தாரையும்
சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுங்கள் என்று நீர்
எங்களுக்கு கொடுத்த பொறுப்பின் படி, என் ஜெபத்தைக் கேளும். என்னுடைய அன்பான சகோதரனே,
உன்னுடைய விசுவாச அறிக்கையின் பேரிலும், தேவனுடைய குமாரனில் உன் விசுவாசத்தின் பேரிலும்
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் உன்னை ஞானஸ்நானம் பண்ணுகிறேன். ஆமென்.
(ஜனங்கள், “அவர் என்னை எங்கு நடத்தினாலும்
நான் பின்செல்வேன்” என்ற பாடலை பாடுகின்றனர். சகோதரன் பிரான்ஹாம் பாடலின் போது பேசுகிறார்
– ஆசிரியர்) கர்த்தருக்கு ஸ்தோத்திரம்... ஒவ்வொருவருக்கும் சகோதரனைத் தெரியும்... அது
எப்படியென்று நான் அறிவேன்... அதோ அங்கே ஒரு குடும்பம் பின்னால் உள்ளது, இது உம்முடைய
ஜெபத்திற்கான பதிலாகும். இங்கே தேவனுடைய... ஒருவர் இருக்கிறார்... எனக்கு ஒரு தகப்பனைப்
போன்றுள்ள ஒரு மனிதர் இங்கே இருக்கிறார். நான் அனேக தடவைகள் ஆர்வமின்றி அவருடைய உதவிகளை
மறுத்துவிட்டிருக்கிறேன். அது சரியே. நான் அவருடைய உதவியை மறுத்திருந்தாலும் அல்லது
நான் என்ன செய்திருந்தாலும் ஒரு பொருட்டல்ல, அவர் அப்படியே என்னுடைய தோழனாக இருந்தார்.
அதுவே ஒரு உண்மையான நண்பர். அது ஒரு காய்ந்த சீதோஷ்ண நிலையிலான நண்பர் அல்ல; சரியோ
அல்லது தவறோ எதுவாயிருந்தாலும் உங்களோடு ஒட்டிக் கொண்டிருக்கும் ஒரு நண்பர். நான் இந்தக்
காலையில் சகோதரன் நெல்சனுக்காக மகிழ்ச்சி யடைகிறேன். அவர் இந்த நாளில் தெரிந்து கொள்ளப்பட்டதற்காக
நான் மகிழ்ச்சியடைகிறேன். நான்... அவர் அதை செய்வார் என்பதை நான் அறிவேன், ஆனால் அவர்
இந்த நாளில் உயிர்த்தெழுதலை தெரிந்துகொண்டு, இயேசுவை தம்முடைய சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு,
அவருடைய உயிர்த்தெழுதலை விசுவாசித்து, இயேசு கிறிஸ்துவின் மரணம், அடக்கம், உயிர்த்தெழுதலை
அவர் விசுவாசிக்கிறார் என்பதை இந்த காலையில் ஜனங்கள் முன்னிலையில் சாட்சி கூறிக்கொண்டிருக்கிறார்,
அவரை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு இப்பொழுது ஞானஸ்நானம் பெறும்படி வெளியே நின்று
கொண்டிருப்பார் என்பது எனக்குத் தெரியாது. என் அன்புள்ள சகோதரன்.மாக், தேவன் உங்களை
ஆசீர்வதிப்பாராக. தேவன் அவரை பரிசுத்த ஆவியால் நிரப்ப வேண்டுமென நான் ஜெபிக்கிறேன்...
அவருடைய ஸ்தானமானது அப்படியே ஊழியக்காரர்களுக்கான மாறாத ஸ்தானமாக உள்ளது. ஏதாவது...
ஊழியக்காரர்கள் வந்து அவர் கொண்டிருக்கும் காரியத்தில் சற்று உதவி செய்யுங்கள். அவரும்,
அவருடைய மனைவியும், பிள்ளைகளும் நல்ல இருதயமுடையவர்களாயும் நல்ல மனப்பண்பு கொண்டவர்
களாகவும் உள்ளனர். தேவன் இப்பொழுது இன்னும் அபரிமிதமாக ஆசீர்வதிக்க வேண்டும் என்று
நான் ஜெபிக்கிறேன். நாம் இப்பொழுது ஜெபிக்கிற வேளையில், நீங்கள் உங்களது தலையை தாழ்த்துங்கள்.
நீங்கள் சரியாக இந்த வழியாக சுற்றிலும் திரும்பி...
சர்வ வல்லமையுள்ள தேவனே, இந்த மனிதர்
செய்துள்ள பெருந்தன்மையுள்ள செயல் வேறெங்கும் இருக்க முடியாது, ஆனால் நீர் அதைப்பற்றி
அறிந்திருக்கிறீர். நீர் அவையெல்லா வற்றையும் முழுவதுமாக குறித்துவைத்துள்ளீர். ஆனால்
அவர் தன்னுடைய ஜீவியத்தில் எப்பொழுதும் செய்ததிலேயே மிகப்பெரிய செயலும், மகத்தான காரியமும்
என்னவென்றால் உம்முடைய நேச குமாரனை தம்முடைய சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டிருப்பது
தான். இந்தக்கூட்டத்தினர் முன்பாக ஒரு அறிக்கையை செய்யவும், தண்ணீரில் ஞானஸ்நானம் பெறுவதைக்
குறித்து சாட்சி கூறவும், இந்த ஈஸ்டர் சங்கதி உண்மையென்று விசுவாசிப்பதற்கும் இங்கே
நடந்து வருபவர்களுக்காக ஜெபிக்கும் ஒவ்வொருவரின் ஜெபத்தையும், அவருடைய அன்பான மனைவி
மற்றும் பிள்ளைகளின் ஜெபத்தையும் கேளும்.
சர்வவல்லமையுள்ள தேவனே, பரிசுத்த ஆவியால்
அவரை நிரப்பும். வரப்போகும் உலகத்திலும் ஒரு நீண்ட சந்தோஷமான ஜீவியத்தையும், இயேசு
கிறிஸ்து மூலமாக நித்திய ஜீவனையும் அவருக்குக் கொடும். ஓ, இயேசுவே, இருக்க வேண்டிய
வழியை எங்களுக்குப் போதிக்கும் தேவகுமாரனே... நீங்கள் உலகமெங்கும் போய், சகல ஜாதிகளையும்
சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுங்கள்
என்றீர்... என் அன்புள்ள சகோதரனே, உங்களுடைய பாவங்களை அறிக்கையிட்டதன் பேரிலும், தேவனுடைய
குமாரனில் உள்ள உங்கள் விசுவாசத்தின் பேரிலும், நான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின்
நாமத்தில் உங்களை ஞானஸ்நானம் பண்ணுகிறேன். ஆமென். (ஒலி நாடாவில் காலியிடம் -ஆசிரியர்)
இப்பொழுது, இங்கேயுள்ள சகோதரன் பில்லியை
தேவன் முழுவதுமாக பரிசுத்த ஆவியால் நிரப்ப வேண்டுமென்று நாமெல்லாரும் ஜெபித்துக் கொண்டிருக்
கிறோம். நான் அவனை சகோதரன் பில்லி என்று அழைக்கிறேன், ஏனெனில் நண்பர்கúü, நாங்கள் சொந்த
சிநேகிதர்களாக இருக்கிறோம். இப்பொழுது உங்கள் கரங்களை, சற்று உங்கள் சரீரத்தை சுற்றிலும்
வையுங்கள்.
பரலோக பிதாவே, இப்பொழுது அப்படியே இந்தக்
காட்சியை நோக்கிப் பாரும். எங்கள் சகோதரன் ஜாசன் இயேசு கிறிஸ்துவிலுள்ள விசுவாசத்தை
அறிக்கையிட்டு, மரணம் அடக்கம் உயிர்த்தெழுதலை விசுவாசித்து இங்கே நின்றுகொண்டிருக்கிறார்.
எங்களுடைய இடத்தில் மரித்து, எங்களுடைய இரட்சகரை அப்பால் எடுத்துச் சென்ற மரணத்தை பிரதிநிதித்
துவப்படுத்தும்படி இங்கே மிகக்குளிரான தண்ணீரில் நின்றுகொண்டிருக்கிறார். அவருடைய மரணம்
அடக்கம் உயிர்த்தெழுதலின் ஒரு ஞாபகார்த்தமாகவும், அவரை சேவிக்க புது ஜீவனுக்கு எழும்பவும்
நாங்கள் போய்க் கொண்டிருக்கிறோம். சர்வ வல்லமையுள்ள தேவனே, என்னுடைய சகோதரனை ஆசீர்வதியும்;
அவருடைய தாலந்துகளை ஆசீர்வதியும், கர்த்தாவே, உமக்காக ஒரு மகத்தான மனிதராக அவரை ஆக்கும்.
உம்முடைய ஊழியக்காரனின் ஜெபத்தை கேளும்.
கர்த்தராகிய இயேசுவே, நாங்கள் உலகமெங்கும்
சென்று, சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தில் ஞானஸ்நானம்
கொடுக்க வேண்டும் என்று எங்களிடம் ஒப்புவித்தபடி, என் அன்புள்ள சகோதரனே, பாவத்தின்
அறிக்கையின் பேரிலும் தேவனுடைய குமாரனில் உங்களுடைய விசுவாசத்தின் பேரிலும் நம்முடைய
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் உங்களை ஞானஸ்நானம் பண்ணுகிறேன். ஆமென்.
(ஒலிநாடாவில் காலியிடம் – ஆசிரியர்)
இது என்னுடைய ஜீவியத்தினுடைய மகத்தான
தருணங்களில் ஒன்று. என் தாயே, யாரோ ஒருவருடைய தோளின் ஊடாக நோக்கிப் பார்த்தீர்கள்.
நான் அவளை இங்கே வெளியே ஓஹியோ ஆற்றுக்கு நடத்திச் சென்று அவளுக்கு கர்த்தராகிய இயேசுவின்
நாமத்தில் ஞானஸ்நானம் கொடுத்தேன்.
இப்பொழுது, என்னுடைய சொந்த பையன். ஓ,
தேவனே, கூடுமானால் ஹோப் பூமிக்கும் மகிமைக்கும் இடையே தொங்கிக்கொண்டு, திரையினூடாக
நோக்கி, படிக்கட்டின் கைப்பிடி கம்பியினூடாக இந்தக் காலையில் கீழே நோக்கிப் பார்க்க
அனுமதியும். தேவனே, என்னுடைய மகன் ஒரு போதகராக ஆக வேண்டுமென நான் ஜெபிக்கிறேன். தேவன்
அவனை அபிஷேகித்து, இரண்டு மடங்கு ஆவியை அவனுக்கு அருள் வேண்டுமென நான் ஜெபிக்கிறேன்.
தேவன் அவனுடைய ஜீவியத்தை ஆசீர்வதிப்பாராக.
உங்களுடைய ஜெபத்திற்காக உங்கள் அனைவருக்கும்
நன்றி. ஜெபம் காரியங்களை மாற்றுகிறது. நான் உங்களுடைய பிள்ளைகளுக்காக அதிகமாக ஜெபிப்பேன்.
பில்லி பையனே, இயேசு வரத் தாமதிக்குமானால், தேனே, இந்த ஏதோவொரு நாளில், நாம் செல்ல
வேண்டியவர் களாயிருக்கிறோம், அவர்கள் நம் மீது தூசியை எறிவார்கள். ஆனால் மகனே, தேவன்
நம்மை மேலே கொண்டு வருவார். “என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசி நாளில்
பூமியின் மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன்.”
தேவன் அவனை ஆசீர்வதித்து, சத்துருவிடமிருந்து
அவனை காக்க வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன். அங்கே அனேக ஆத்துமாக்கள் மரித்துக் கொண்டிருக்
கின்றனர். மகனே, இந்த நீண்ட பாதையில், அவர்கûü அவனிடமிருந்து
விடுவி. ஜீவ கயிறை அவர்களிடம் எறிந்து அவர்களை மேலே கொண்டு வா. தங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டதற்காக
ஆயிரமாயிரம் பேர் சாட்சி கூறி, நீ நின்று அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பாய் என்று
நான் நம்புகிறேன். என் பையனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக, நான் ஜெபிக்கிறேன்...
ஓ எஜமானரே, ஓ, எப்படியாக நான்... கர்த்தாவே,
என் பையனை உமக்காக நான் உயர்த்தியிருக்கிறேன். கர்த்தாவே, இங்கே என்னுடைய பையன் இருக்கிறான்.
நான் பெற்றிருப்பதெல்லாம் அவன் தான். நான் இந்தக் காலையில் அவனை உம்மிடம் கொண்டுவருகிறேன்.
அவன் இதை விசுவாசிப்பதற்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாயிருக்கிறேன்... தேவனே, அவன்
பாவத்திற்காக மனஸ்தாபப்படுவதற்காக நன்றி. ஓ கர்த்தராகிய இயேசுவே, ஓ கிறிஸ்துவே, அவனை
பரிசுத்த ஆவியினால் அபிஷேகியும். கர்த்தாவே, உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் ஆவியின் வல்லமையை
அருளும். என் பையனை பரிசுத்தப்படுத்தம். இதை அருளும், கர்த்தாவே. கிறிஸ்துவின் கலப்படமற்ற
சுவிஷேமாகிய வார்த்தையை உலகம் முழுவதும் சென்று பிரசங்கிக்க தேவனுடைய ஆவியினால் அவனை
நிரப்பும், கர்த்தாவே. இதை அருளும், கர்த்தாவே. அவனை ஆசீர்வதித்து, அவனை பயன்படுத்தும்.
கர்த்தாவே, அவன் தனக்கு முன்பாக கல்லறையை
கொண்டவனாக நின்றுகொண்டிருக்கிறான். அவனுடைய தாயும் சகோதரியும் அங்கே படுத்துக்கொண்டிருப்பது
போல நாங்களும் அங்கே போய்க்கொண்டிருக்கிறோம், அதோ அங்கேயுள்ள அந்த காலை நேரத்தைக் குறித்து
நான் எண்ணுகிறேன். ஓ கிறிஸ்துவே, இது பரலோகத்தில் பதிவு செய்யப்படும். தேவனே, இரக்கமாயிரும்,
என் மகனுடைய ஜீவிய காலத்தில் வீட்டிற்கு செல்லும் அவனுடைய பிரயாணம் முழுவதும் அவனுக்கு
விசுவாசத்தை அருளும், இந்த ஜீவியத்தில் அவனை ஆசீர்வதியும், கர்த்தாவே, அவனை ஆசீர்வதியும்.
ஆத்துமாக்களை இரட்சிக்கப்பண்ணும் ஒரு மகத்தான ஊழியத்தை அவன் கொண்டிருப்பானாக. கர்த்தாவே,
அவன் இங்கே இருக்கிறான்.
உலகமெங்கும் போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி,
பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தில் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்க வேண்டுமென்று
உம்முடைய ஊழியக்காரனுக்கு ஒப்புவித்த பிரகாரம், கர்த்தாவே, இந்தக்கட்டளையின் பிரகாரம்,
என்னே, என் இருதயம் உமக்காக இரத்தம் சொரிகிறது.
என் மகனே, உன்னுடைய பாவங்களை அறிக்கையிடு
வதின் பேரிலும், தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவில் உன்னுடைய விசுவாசத்தை அறிக்கையிடு
வதின் பேரிலும், என் நேச குமாரனே, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் உன்னை
ஞானஸ்நானம் பண்ணுகிறேன். ஆமென். (ஒலிநாடாவில் காலியிடம் – ஆசிரியர்).
ம்கத்;த் ய்ற்ள்ல்ஹடகச்ள்;:-
13. ற்ல்ஹ்;ஹ்ல்ஹந்; ஞ்ல்ன்க்;ஷட்ந்;
த்ன்ல்ழ்க்வ்;ச்ள்;-60-0930
14. த்டன்;ச்;ச்த்ன்ல்ழ்ல்ஹட்ச்ல்ஹ
ந்ல்ச்ட்ஹட்
15. ,சஹதண்ற்
ச்ட்ப்;ழ்ல்ஹல்ஹ்; ம்ண்ர்த்;த்ஹ்;
கூடார தரிசனம்
(பங்ய்ற் யண்ள்ண்ர்ய்)
இது 1955-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் கர்த்தருடைய தூதன் தோன்றி சகோதரர் பிரன்ஹாம்
அவர்களுக்கு அருளிய தரிசனம்
என் ஊழியத்தின் ஆரம்பத்தில் கர்த்தருடைய தூதன் எவ்விதம் ஒளியாகத் தோற்றமளித்து
என்னுடன் பேசி எவ்விதம் நான் தரிசனத்தின் படி ஊழியம் செய்யவேண்டும் என்று கூறியதை நான்
கூறக்கேட்ட, நானிருந்த என் ஸ்தாபனத்தைச் சேர்ந்த ஒரு ஊழிய சாகோதரன் அது பிசாசினால்
உண்டானது என்றும் என் சபையும் நான் பின்பற்றும் உபதேசமும் தவறென்றும், தரிசனம் காணுதல்
மற்றும் அற்புதங்களைச் செய்தலின் நாட்கள் முடிந்து விட்டது என்றும் கூறினார்.
ஒவ்வொரு
யுகத்திலும் தாம் செய்து வந்தது போலவே இன்றும் தேவன் வேதாகமத்தில் தூதர்கள், தீர்க்கதரிசிகள்,
அதிசயங்கள், அற்புதங்கள், அடையாளங்கள் மூலம் தம் ஜனங்களைச் சந்திப்பதாக சபைக்கு வாக்களித்திருப்பதை
அவர்கள் அறியாதிருந்தனர். அங்கே, சபை சரித்திரத்தில் ஏழு யுகங்கள் உண்டு. நாம் கடைசி
யுகத்தில், ஆயிரம் வருட அரசாட்சிக்கு சற்று முன்புள்ள யுகத்தில் இருக்கிறோம்.
கர்த்தர்
கூறினவிதமாகவே செய்ய நான் தீர்மானித்து அவருடைய வழிநடத்துதலின் படியே ஊழியத்தைத் துவங்கினேன்.
மூன்று ஆபத்துக்களைக் குறித்து ஒரு ஊழியக்காரன் கவனிக்க வேண்டும் என்று நான் உணர்ந்தேன்.
புகழ், பெண், பணம் போன்றவைகளை. முதல் இரண்டைக் குறித்து எனக்கு பயமிருக்கவில்லை. ஆனால்
பணத்தைக்குறித்த காரியத்தில் பயமிருந்தது. ஆகவே பணத்தைக் குறித்த காரியத்தில் எனக்கு
ஒரு நெருக்கமுண்டாகும் நேரம் வருமானால் நான் ஊழியக் களத்தை விட்டு விலகி விடுவேன் என்று
1946ல் தேவனிடம் வாக்குப் பண்ணியிருந்தேன். கூட்டங்களின் தேவைகள் சந்திக்கப்படும்வரை
ஊழியம் செய்வேன் என்றும், தேவைகளில் குறைவு ஏற்படுமேயானால் ஊழியத்தை விட்டு வீட்டிற்குச்
சென்று விடுவேன் என்றும் வாக்களித்திருந்தேன்.
ஒன்பதாண்டுகள்
வரை நான் பணத்திற்காக முயற்சிகள் மேற்கொள்ள அவசியமில்லாத வகையில் கர்த்தர் எல்லாத்
தேவைகளையும் சந்தித்து வந்தார். ஆனால் 1955-ல் என்னுடைய மூன்று தொடர்ச்சியான மிகப்பெரிய
கூட்டங்கள் ஒவ்வொன்றிலும் செலவுகளின் தேவையில் குறைவு ஏற்பட்டது; எனவே சகோதரர்கள் அதிகமான
குறைவுகளை சரிக்கட்ட முயற்சி மேற்கொண்டனர். இந்தக் கூட்டங்களின் முடிவு நாட்களில் என்னுடைய
மனைவி, மகன் மற்றும் சிறிய மகளும் நான் தங்கியிருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தனர்.
அது அதிகாலை 2-மணி வேளையாயிருந்தது. அவர்களை உறங்கச் செல்லுமாறு கூறிவிட்டு நான் மலைப்
பகுதிக்குச் சென்று முழங்கால் படியிட்டு தேவனை நோக்கிக் கதறினேன். நான் ஊழியக்களத்தை
விட்டுவிட வேண்டும். தொடர்ச்சியாக மூன்று கூட்டங்களின் தேவைகள் சந்திக்கப்படவில்லை
என்று மற்றவர்களால் குறைக் கூறி எழுதப்பட்டது.
அது நான் தேவனிடத்தில் வாக்குப் பண்ணினது போல் இருக்கவில்லை. நான் வாக்குப் பண்ணினது
என்னவென்றால் கூட்டங்கில் தேவை சந்திக்கப்படாவிட்டால் நான் ஊழியக்களத்தை விட்டு சென்று
விடுவேன் என்பதே. நான் என் வாக்கை நிறைவேற்ற வேண்டிதாயிருந்தது. நான் என் அறைக்குத்
திரும்பி வந்த போது நான் அழுது கொண்டிருந்ததைக்
கண்ட என் மனைவி பில்லி உமக்குள்ள காரியம் என்ன? என்றாள். தெய்வீக சுகமளிக்கும்
கூட்ட ஊழியங்களை விட்டு விடப்போகிறேன் என்பதை அவளிடம் கூற இயலாத வனாயிருந்தேன். எனவே
“ஓ, அது அவ்வளவுதான்” என்று கூறினேன். நாங்கள் கலிபோர்னியாவிலிருந்து கிழக்குநோக்கி
அரிசோனா, டெக்சாஸ், மற்றும் தேசத்தின் பல பகுதிகளையும் கடந்து இறுதியாக ஜெஃபர்ஷன்வில்,
இந்தியானாவுக்கருகில் வந்தபோது இதைப்பற்றிக் கூறினேன்.
சுவிசேஷத்தைப்
பிரசங்கிக்காவிட்டால் எனக்கு ஐயோ என்று வேதத்தில் பவுலினால் கூறப்பட்டுள்ளதே, எனவே
நீர் அவ்வவாறிருக்க முடியாது என்று பில்லி பால் கூறினான். நான் அவனிடம் மகனே நான் சுவிசேஷ
ஊழியத்தை விட்டு விடுவதாக ஒரு போதும் கூறவில்லை. கர்த்தர் என்னை ஜீவனோடு வைக்கும் வரை
இந்த ஊழியத்தைச் செய்யவே விரும்புகிறேன். தெய்வீக சுகமளிக்கும் கூட்ட ஊழியங்களை விட்டு
விடுவதைக் குறித்தே கூறினேன் என்றேன். "பணக்குறைவினிமித்தம் கடல் கடந்தும் மற்ற
இடங்களிலும் நடைபெறவுள்ள பெரிய கூட்டங்களை விட்டு விடப் போகிறீர்களா? தேவன் அவைகளை
விட்டு விடும்படி கூறவில்லை. அது உமது சொந்தத் தீர்மானம்’ என்று பில்லிபால் கூறினான்.
நானோ ஒரு நேர்மையான மனிதன் தன் வார்த்தையைக் காத்துக்கொள்வான். நான் தேவனிடத்தில் ஒரு
வாக்குப் பண்ணியிருக்கிறேன். அதை நான் காத்துக்கொள்ள
வேண்டும் என்றேன்.
அடுத்த
நாள் காலை என் மனைவியும் நானும் நேரத்தோட எழுந்தோம். நான் என் தலையைக் கைகளால் தாங்கியவாறு
கட்டிலின்மேல் உட்கார்ந்திருந்தேன். நான் என் மனைவியிடம், “நல்லது, தேனே நான் இன்று
ஜெஸ் மிட்செலைக் கண்டு அவருடைய இன்டியானா லைட் அன்ட் பவர் கம்பெனியில் தொலைக்கம்பிகளைச்
சுற்றி நடந்து பழுதுபார்க்கும் என் பழைய வேலையைத் திரும்ப அளிக்கும்படி கேட்கப் போகிறேன்”
என்றேன். உடனடியாக நான் அறைக்கு வெளியே நோக்கினேன். அப்பொழுது இரண்டு பழைய மரக்கட்டைகளால்
ஆன சக்கரங்களை உடைய சிறிய கட்டைவண்டியைத் தள்ளிக்கொண்டு இரண்டு சிறு பிள்ளைகள் என்னை
நோக்கி வருவதைக் கண்டேன். அவர்கள் மெக்சிகோவைச் சேர்ந்த ஏறக்குறைய நிர்வாண நிலையிலும்
கறுப்புநிற சரீரமும் கறுப்புமயிரும் கறுப்புக் கண்களும் உடையவர்கள் போல் காணப்பட்டனர்.
என் மனைவி அறையில் நடமாடுவதை நான் கேட்க முடிந்தது; நான் அவளிடம், “தேனே, ஏழைச் சிறு
பிள்ளைகள் என்று நான் கூறினேனே, அவர்களை நீ பார்க்கவில்லையா?” என்று கேட்டேன். நான்
தரிசனத்தின் ஆழமான பரிமாணத்தில் சென்றபோது நான் என் மனைவியை விட்டு சற்றப்பால் சென்று,
குள்ளமான சகோதரன் ஆர்கன் பிரைட்டை சந்தித்தேன். அவர் “சகோதன் பிரன்ஹாமே, ஜெப அட்டைகளெல்லாம்
கொடுக்கப்பட்டு விட்டது. கூட்டத்துக்கு உங்களை அழைத்துவர எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டு
விட்டது” என்றார். சகோதரர் ஆர்கன் பிரைட்டுடன் யாரோ ஒருவர் இருந்தார். நான் அவர்களைக்
கடந்து சென்றபோது நான் கண்ட சிறுபிள்ளைகளைப்போல் கறுப்பு நிறத்தவர்களாயிருந்த பெரிய
கூட்டமாயிருந்த ஜனங்கள் நிரம்பியிருந்த வெளிப்புறத்திற்கு வந்தேன். அவர்களிடம் என்
ஸ்தானத்தில் பேசிக் கொண்டிருந்தவர் வேறு ஒரு நபராயிருந்தார். என் அருகில் நின்ற ஒரு
மனிதனிடம் பேசிக்கொண்டிருக்கும் மனிதன் யார் என்று கேட்டேன். அவர் என்னிடம் “அவர்கள்
அந்த மனிதரை அங்கு பேசவைத்துள்ளனர்” என்றார். நான் “அவர்கள் யார்’ என்றேன். அப்பொழுது
ஒரு மனிதன் - என் ஸ்தானத்தில் பேசிக்கொண்டிருந்தவர் கூட்டத்தை முடித்து விட்டார். அனைவரும்
கலைந்து செல்லத்தொடங்கினர். நான், ‘ஓ, அது சரியல்ல, பீட அழைப்பு எங்கே?’ என்று கூச்சலிட்டேன்.
ஒரு மனிதன் வந்து, ‘ நாங்கள் காணிக்கை எடுத்து விட்டோம். கூட்டத்தை முடித்துவிட்டோம்
சகோதரன் பிரன்ஹாம்’ என்றனர். நான், ‘எப்பொழுதிலிருந்து காணிக்கை யானது பீட அழைப்பைக்
காட்டிலும் மிக முக்கியமானதாக ஆனது?’ என்று கேட்டேன்.
ஆயிரக்கணக்கான
ஆத்துமாக்கள் கிறிஸ்துவுக்காக அங்கே ஆதாயப்படுத்தப்பட்டிருக்கக் கூடும். ஆனால் அம்மனிதர்
அவர்களைக் கலைந்துபோகச் செய்து விட்டார். மழைபெய்ய ஆரம்பித்து விட்டது. அந்த ஆத்துமாக்க
ளெல்லாம் கலைந்து சென்று விட்டனர். ஒருவேளை அவர்கள் திரும்பவும் வராமற்போகலாம் என்றேன்.
அந்த மனிதன் என்னிடம், ‘ஓ, நீங்கள் அவர்களுடன் இன்று பிற்பகலில் பேசப்போகிறீர்கள்’
என்றார். நான், ‘எந்த நேரத்தில் அவர்களுடன்
பேசுவதாக அந்த மனிதர் அறிவிப்பு செய்தார்?’ என்று கேட்டேன். அவர் “எந்த நேரத்திலும்”
என்றார்.“எந்த நேரத்திலுமா? அங்கு பன்னிரண்டுபேர் கூட அந்நேரத்தில் இருக்க மாட்டார்களே?”
என்று கூக் குரலிட்டேன். அப்பொழுது எனக்கு வலதுபக்கமாய்ப் பின்னாக இருந்து அன்பாக மெல்லிய
சத்தமாய் ஆனால் உறுதியாக, “நம்முடைய கர்த்தர் சத்தியத்தை அவர்களுக்குச் சொன்னபோது ஆயிரக்கணக்கானவர்கள்
அவரைவிட்டு விலகிய போது, பன்னிருவருடன் தனித்துவிடப்பட வில்லையா?”என்று வினவியது.
ஒரு
கரம் என் வலதுபக்கத்திலிருந்து எனக்கு முன்பாக அசைவாடியது. அப்பொழுது நான் (தரிசனத்தில்)
இன்னும் ஓர் மேலான பரிமாணத்திற்குள் செல்வதுபோல் தோன்றினது. என் மனைவி மேடா அறையினுள்
நடப்பதை அதற்கு மேல் என்னால் கேட்க முடியவில்லை. நான் ஒரு அழகான ஏரிக்கருகில் நின்றிருந்தேன்;
அதைப்போன்ற தெளிவான நீரை நான் ஒரு போதும் என் வாழ்வில் கண்டதில்லை.
முதலாவதாக
நான் ஒன்பதாண்டுகளுக்கு முன்பு ஊழியத்திற்குச் சென்ற போது நான் ஒரு தரிசனம் கண்டேன்.
அதில் நான் மீன் பிடித்துக்கொண்டிருந்தேன். அந்த மீன் பெரிய வெண்மையும் கருமையுமான
புள்ளிகளை உடையதாயிருந்தது. அவைகள் சரியாகக் காணப்பட வில்லை. ஆனால் இந்தத் தரிசனத்தில்
ஏரி மிகப்பெரியதாயிருந்தது. அதிலே தெளிவான தண்ணீரும் மிகப்பெரிய அழகான ரெயின்போ ட்ரவுட்
மீன்களும் இருந்தது. அதைச்சுற்றிலும் நூற்றுக்கணக்கான தேவ ஊழியக்காரர்கள் மீன்பிடித்துக்
கொண்டிருந்தனர். நான் என் உள்ளத்தில், “நான் அவர்களைப் போன்றே நன்றாக மீன் பிடிப்பவன்
அல்லது அவர்களைவிட நன்றாக மீன் பிடிப்பவன்” என்று கூறினேன். நான் மிகப்பெரிய அழகான
மீனைப் பிடிக்கவேண்டும் என்றிருந்தேன். அதற்காக என் தூண்டிலையும் இரையையும் தயார்செய்ய
ஆயத்தமானேன்.
அதன்
பிறகு எனக்குப் பின்புறம் வலது பக்கமாக என் சிறுவயது முதல் என்னோடு பேசிக் கொண்டிருக்கும்
கர்த்தருடைய தூதனின் சத்தம் “எப்படி மீன் பிடிப்பது என்று உனக்கு நான் கற்பிப்பேன்.
ஆனால் அதைக்குறித்து கண்டிப்பாய் யாரிடமும் எதுவும் கூறாமல் நீ அமைதலாயிருக்க வேண்டும்”
என்றது. நான் அமைதலாயிருப்பேன் என்று பதிலுரைத்தேன். அவர் உன் இரையைத் தூண்டிலின் முனையில்
வை என்றார். நான் அவ்வாறு செய்தேன். அப்பொழுது அவர் “இப்பொழுது அந்தப் பெரிய மீனைப்பிடிக்க
நீ தூண்டிலை ஆழமான தண்ணீரில் போடவேண்டும்” என்றார். நான் தூண்டிலை என் முழுப்பெலத்தோடு
வீசினேன். தூண்டில் கயிறு அதன் முழு நீளத்தோடு தண்ணீரில் விழுந்தது. அவர் அது நன்றாகச்
செய்யப்பட்டது என்றார். தூண்டில் கயிறு தண்ணீரின் ஆழத்தில் சென்றபோது அவர் “இப்பொழுது,
முதலில் மெதுவாய் இழுத்து மீன்களை வசப்படுத்து. அதன்பிறகு தூண்டில் முள்ளை வேகமாய்
தண்ணீரிலிருந்து இழு; அவர்கள் சிறிய மீன்களைப் பிடித்துக் கொண்டிருக்கும்போது உனக்குப்
பெரிய மீன் அகப்படும், அமைதலாயிருக்கக் கவனமாயிருந்து இதைக் குறித்து யாரிடமும் ஒன்றும்
கூறாதே. மூன்றாம் இழுப்புக்காக உன் தூண்டிலை கெட்டியாய்ப் பிடித்துக்கொள். அப்பொழுது
நீ உன் மீன் பிடிப்புக்கு ஆயத்தமாயிருப்பாய்’ என்றார். “நான் அறிந்து கொண்டேன்” என்றேன்.
எல்லா ஊழியக்காரர்களும் எல்லா இடங்களிலுமிருந்து வந்து “சகோதரன் பிரன்ஹாம், நீங்கள்
மீனைப்பிடிக்க முடியும் என்று அறிவோம்” என்றனர். நான், “ஓ, ஆம், அதை எப்படிச் செய்வது
என்று எனக்குத் தெரியும்” என்றேன். அப்பொழுது கர்த்தருடைய தூதன் எனக்குச் சொன்ன வண்ணமாகவே
அதை அவர்களுக்கு விவரித்தேன். ஊழியக்காரர்களுக்கு மீன் பிடிப்பது எப்படி என்று விவரித்துக்
காண்பித்தபோது நான் பரவசமடைந்தேன். எனவே என் தூண்டிலை தண்ணீரிலிருந்து மேலே இழுத்து
தூண்டில் முனையளவுள்ள ஒரு மீனைப் பிடித்தேன். தூண்டிலின் முனையில் மீனின் தோல் நன்கு
சுற்றிக் கொண்டதுபோல் தோன்றினது. ஓ, நான் எவ்விதமாய் எப்பொழுதுமே இல்லாத விதமாய் அதைப்
பிடித்தேன் என்று வியந்தேன்.
கர்த்தருடைய
தூதன் என் வலது பக்கமாய் பின்புறத்திலிருந்து நடந்து எனக்கு முன்பக்கமாய் எனக்கு நேராக
வந்தார். நான் எப்பொழுதும் பார்த்திருப்பது அவரைத்தான். மிக உயரமானவராய், பலமானவராய்,
200 பவுண்டு எடையுடைய உருவமுடையவராய், பெரிய கரங்களுடையவராய் வெண்ணிற அங்கி தரித்தவராய்,
வெறுங்கால்களுடன் கருத்த தலைமயிர் உடையவராய் அவர் காணப்பட்டார். அவர் என் முகத்தை நேராக
உற்றுப்பார்த்து“நான் உன்னை எதைச்செய்யக் கூடாதென்று கூறினேனோ அதையே நீ செய்தாய்” என்றார்.
அப்பொழுது அதுவே என் முடிவு என்று நான் எண்ணினேன். மேலும் அவர், “முதல் தடவை தூண்டிலை
மெதுவாக இழுக்கவும் அதைப்பற்றி ஒன்றும் கூறாமல் அமைதியாயிருக்கும் படியும் கூறினேன்.
அது உன் கரங்கள் மீது ஜனங்களின் கைகளை வைக்கும்போது அவர்களின் வியாதிகளை உனக்கு வெளிப்படுத்திக்
கூறின போது ஆகும். உன்னிடம் தூண்டிலை வேகமாக இழுத்து பின் அதைப்பற்றி ஒன்றும் கூறாமல்
அமைதியாய் இருக்கும்படி கூறினபோது அது நான் சொன்னபடியே உனக்கு ஜனங்களின் இருதயங்களின்
இரகசியங்களை அறிந்து வகையறுத்துக் கூறும்படி செய்தேன். அது இரண்டாம் இழுப்பு. இக்காரியங்களைக்
குறித்து அமைதியாயிருப்பதற்கு மாறாக நீ மேடைகளின்மேல் நின்று இந்த தெய்வீக வரங்களைக்
குறித்துப் பொதுவான காட்சியைக் காட்டிவிட்டாய். பார் நீ எவ்வளவு மாம்சப்பிரகாரமான போலிபாட்களைத்
தோன்றச் செய்து விட்டாய்” என்றார். நான் மிகவும் சத்தமாய்க் கதறி, “நான் அவ்விதமே செய்துவிட்டேன்,
நான் வருந்துகிறேன் ஐயா” என்றேன்.
என்
தூண்டில் கயிறுகள் என் கால்களைச் சுற்றிக்கொண்டது. என் தூண்டில் என் கைகளில் இருந்தது.
நான் கதறிக்கொண்டிருந்த போது தூண்டில் கயிறை நேராக்கும்படி அதை என் பற்களால் கடித்து
இழுத்தேன். அப்பொழுது அவர் என்னைக் கடினமாய் உற்று நோக்கி, ‘நீ இப்படிப்பட்ட நேரங்களில்
உன் தூண்டில் கயிறை சுருண்டு விடும்படி செய்யாதே’ என்றார். நான் “ஐயா, தூண்டில் கயிறை
இனிமேல் ஒரு போதும் சுருண்டு விட செய்ய மாட்டேன். என் மீது தயவாயிரும்” என்றேன்.
அப்பொழுது
நான் இன்னும் சற்று மேலான ஓர் பரிமாணத்திற்குள் செல்வது போல் தோன்றினது. என் கரத்திலிருந்த
தூண்டில் கயிறு அரையங்குல அளவுள்ள ஒரு காலணியின் கயிறாக மாறியிருந்தது. நான் ஒரு சிறு
பிள்ளையின் காலணியைக் கையில் பிடித்திருந்தேன். அதில் 1/8 அங்குல அளவான துவாரங்கள்
இருந்தது. நான் அந்த அரை அங்குல அளவான காலணிகயிறை
1/8 அங்குல அளவான துவாரத்தில் நுழைக்க முயற்சி செய்து கொண்டிருந்தேன். அப்படிச் செய்தபோது
காலணிக்கயிற்றின் சில நூலிழைகளை உடைத்திருந்தேன் (கிழித்திருந்தேன்). எனக்கு முன்பாக
நின்ற கர்த்தருடைய தூதன் உறுதியாக ஆனால் தயவாக என்னிடம் “நீ என்ன செய்ய முயற்சித்துக்
கொண்டிருக்கிறாய்” என்று கேட்டார். நான் “அக்கயிற்றைக் கொண்டு காலணியைக் கட்ட முயற்சிக்கிறேன்”
என்றேன். அவர் “கயிற்றின் தவறான முனையைப் பயன்படுத்தப் பார்க்கிறாய்” என்றார். நான்
கீழே பார்த்து அந்த மறுமுனை ஒரு தகட்டினால் சுற்றப்பட்டு அந்த துவாரத்தில் எளிதாக நுழைய
ஏதுவாக மெல்லியதாக்கப் பட்டிருப்பதைக் கவனித்தேன். நான், “ஓ, வருந்துகிறேன் ஐயா, நான்
தவறான முனையைப் பயன்படுத்தினதை நான் கவனிக்கவில்லை” என்றேன்.‘உலகத்துக்குரிய உதாரணங்களைக்
கூறாமல் சிறு பிள்ளைகளுக்கு இயற்கைக்கு மேம்பட்ட காரியங்களைப் போதிக்கமுடியாது’ என்றார்
கர்த்தருடைய தூதன்.
அப்பொழுது
இன்னும் சற்று மேலான பரிமாணத்திற்குள் செல்வதாக நான் உணர்ந்தேன். நான் இதுவரை என் வாழ்வில்
கண்டிராத மிகப்பெரிய கூடாரத்தில் ஆகாயத்தில் நான் நின்று கொண்டிருந்தேன். எனக்கு கீழாக
அமைக்கப்பட்டிருந்த பீடத்தின் மேல் எல்லா ஜனங்களுக்கும் மேலாக நான் இருந்தேன். நான்
பிரசங்கத்தை முடித்தவுடனே பீட அழைப்புக் கொடுத்தேன். அங்கே நூற்றுக்கணக்கான ஜனங்கள்
தங்கள் கைகளை மேலே உயர்த்தியவாறு அழுதுகொண்டிருந்தனர். அவர்களிருக்கும் இடத்திற்கு
கீழே இறங்கிச் செல்ல நான் முயற்சி செய்து கொண்டிருந்த போதிலும் நான் ஆகாயத்திலேயே தான்
இருந்தேன். ஒரு உண்மையான, தயவுள்ள, நல்ல தோற்றமுள்ள ஒரு மனிதர் ஜனங்களுக்கு முன்பாக
வந்து, “அருமை நண்பர்களே, நமது சகோதரன் பிரன்ஹாம் இந்த அற்புதமான பீட அழைப்பை முடித்து
சற்று ஒரு கணம் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் வலது பக்கமாக ஒரு ஜெபவரிசையை
அமைப்போம்” என்றார். என்னால் காணக்கூடிய தூரம்வரை கூடாரத்தின் உள்ளேயும் வெளியேயும்
தெருவிலும் அதனைக் கடந்து செல்லும் தூரம் வரையும் ஜனங்கள் திரண்டிருக்கும் ஜெபவரிசை
அமைக்கப்பட்டது. தோல் துணியாலான வேலியமைப்பு நான்கு அடி உயரமானதாகவும் ஒரு நுழைவாயிலை
உடையதாகவும் கூடாரத்தின் உட்புறத்தில் அமைக்கப்பட்டிருந்ததை நான் கண்டேன்.
அந்த
வேலியமைப்பினுள் சதுரவடிவான சிறிய மரப்பெட்டி அறை ஒன்று இருந்தது. தோல்துணியாலான வேலியமைப்புக்குள்
செல்லும் வாயிலின் அருகில் ஒரு ஸ்திரீ ஒரு சக்கர நாற்காலியில் ஒரு ஸ்திரீயை வைத்துக்கொண்டு
அவளுடைய பெயரையுடைய ஒரு ஜெப அட்டையையும் வைத்துக்கொண்டு நின்று கொண்டிருந்தாள். அந்தத்
தள்ளுவண்டிக்குப் பின்பக்கமாக ஒரு மனிதன் கக்கத் தண்டங்களுடன் இருந்தான். அந்த ஸ்திரீ
அந்த மனிதனுடைய ஜெப அட்டையையும் பெயரையும் வைத்திருந்தாள். ஒரு பலமான மனிதன் வந்து
ஸ்திரீ படுக்கவைக்கப்பட்டிருந்த தள்ளுவண்டியை தோல் துணியாலான வாயிலினூடாக அந்தச் சிறிய
மரப்பெட்டி அறைக்குள் தள்ளிக் கொண்டுபோய் விட்டான்.
என்
ஊழியத்தில் என்னோடு கூடவேயிருக்கும் அந்த ஒளியின் “உஷ்” என்ற எனக்குப் பரிச்சயமான அந்த
சத்தத்தை நான் கேட்டேன். அந்த ஒளி என்னிடத்திலிருந்து அந்தச் சிறிய அறைக்குள் சென்றது.
கர்த்தருடைய தூதன் இன்னும் ஆகாயத்தில் என் பக்கத்தில் நின்று கொண்டிருந்தார். அவர்,
“அங்கே உள்ளே உன்னைச் சந்திப்பேன்” என்றார். அவருடைய கரம் அந்த சிறிய அறையைச் சுட்டிக்
காட்டியதை நான் கண்டேன். மேலும் அவர் “இது
என் மூன்றாம் இழுப்பு” என்றார். நான் “இது எனக்குப் புரியவில்லை” என்றேன். அவர் “நான்
உன்னை அங்கே சந்திப்பேன்” என்றார்.
நான்
கவனித்துப பார்த்தபோது வியாதியுள்ளவளாயிருந்த ஸ்திரீ சிறிய அறையின் மறுபுறத்திலிருந்த
ஒரு வாயிலின் வழியாக வெளியே வந்தாள். அவள் அப்பொழுது உள்ளே தள்ளிக்கொண்டு போகப்பட்ட
தள்ளுவண்டியில் இருக்கவில்லை. ஒரு சகோதரி அவளுடைய சாட்சியைப் பதிவு செய்ய பதிவுசெய்யும்
கருவியுடன் (பஹல்ங் தங்ஸ்ரீர்ழ்க்ங்ழ்) நின்றிருந்தாள். சிறிய அறையிலிருந்து வெளியே
வந்த ஸ்திரீயிடம் அந்த சகோதரி “அந்தச் சிறிய அறையில் என்ன நிகழ்ந்தது?” என்று கேட்டாள்.
அதற்கு அவள் “எனக்குத் தெரியாது” என்றாள். அதன் பிறகு கக்கத் தண்டங்களைக் கையில் எடுத்துக்
கொண்டு அந்த மனிதன் வெளியே வந்தான். அந்த சகோதரி அவனிடன் “அந்தச் சிறிய அறையில் என்ன
நிகழ்ந்தது?” என்று வினவினாள். அவன் “எனக்குத் தெரியாது” என்றான்.
கர்த்தருடைய
தூதன், “இது பொது ஜனங்கள் யாவருக்குமான காட்சி அல்ல. வேதத்திலே நம்முடைய கர்த்தரின்
வார்த்தை, 'நீயோ ஜெபம்பண்ணும் போது உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து உன் கதவைப் பூட்டி
அந்தரங்கத்திலிருக்கிற உன் பரமபிதாவை நோக்கி ஜெபம் பண்ணு; அப்பொழுது அந்தரங்கத்தில்
பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார். மாயக்காரரைப் போல மனுஷர் காணவேண்டுமென்று
செய்யாமல் நீங்கள் உங்கள் மறைவிடங்களில் ஜெபியுங்கள்' என்று எழுதப் பட்டிருக்கவில்லையா?’
என்றார்.
அப்பொழுது
கர்த்தருடைய தூதனும் நானும் சிறிய அறைக்குள் இறங்கினோம். அவர் அங்கு கூறியது, நான்
இந்த இரகசியத்தை என் வாழ்நாள் முழுவதும் காத்துக் கொள்ள வேண்டும் என்பதே.
கூடாரத்தைக் குறித்து சகோ.பிரான்ஹாம்
பேசிய செய்திகளிலிருந்து எடுக்கப்பட்ட குறிப்புகள்
வெகுவிரைவில்
மீண்டும் நாமெல்லோரும் ஒன்றாய்க்கூட ஒரு வழி உண்டாகுமென்று நான் நம்புகிறேன். ஒரு பெரிய
கூடாரத்தில் நாம் அப்பொழுது கூடலாம். அக்கூடாரத்தில் வேதத்தில் கூறப்பட்டுள்ள ஏழு கலசங்களைக்
குறித்துப் பிரசங்கம் செய்ய நான் உறுதியாய் ஏவப்படுகின்றேன்.
கடைசிக்காலத்தில் ஆவியின் அபிஷேகம் பெற்றவர்கள்
இங்குள்ள தர்மகர்த்தாக்களை நன்றாகக் காணவிருக்கிறேன்.
ஓரிடத்தில் கூட்டம் நடத்த ஏவப்படுவதாக நான் உணரும்போது இடம் கிடைக்காது என்ற காரணத்தால்
கூட்டம் நடத்த இயலாமல் போகும்போது மனம் விட்டுப் போகிறது. ஆகவே நம்முடைய கூடாரத்தை
எடுத்தது, ஓரீடத்தில் போட்டு, அதே இடத்தில் தங்கி கூட்டம் நடத்தக்கூடுமா என்று அவர்களைக்
கேட்கலாமா என்று நினைக்கிறேன். கர்த்தர் நடத்துகிறபடி பந்து விளையாடும் பூங்கா அல்லது
பண்ணை போன்ற இடங்களுக்கு ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அதை நகர்த்திக் கொண்டு
போவது........ அவர் அப்படித்தான் செய்யப்போகிறார் என்று யூகிக்கிறேன். அதைக்குறித்த
தரிசனம் ஒன்றிருப்பதை நீங்கள் அறிவீர்கள். இது நிகழ்வதற்குக் காரணம் அதுவாகக்கூட இருக்கலாம்
என நினைக்கிறேன்........ இப்பொழுது அநேகமுறை சில காரியங்கள் நிகழ்வதை பயங்கரம் என்று
எண்ணுகிறோம். ஆனால் தேவன் உங்களை அது போன்ற கட்டங்களுக்குள் வழி நடத்துவ தாயிருக்கக்கூடும்.
அவர் அதைச் சொன்னார். அவர் அதைச் செய்வார்.
தேவ சித்தத்திற்குப் புறம்பாக அவருக்கொரு
சேவை செய்தல்
எனக்கு சொந்தமாக ஒரு கூடாரத்தை வாங்க
நான் உத்தேசித்துள்ளேன். ஆண்டவர் எனக்களித்த தரிசனத்தின் படி இப்பொழுது அந்த நேரம்
வந்துவிட்டது என்று நம்புகிறேன். நான் இங்கிருக்கும் போதே நாம் ஏன் அந்தக் கூடாரத்தை
வாங்கக் கூடாது?
அப்பொழுது நாங்கள் ஜெபர்சன்வில்லுக்கு
வரும் போது, ஒன்று அல்லது இரண்டு, மூன்று, நான்கு நாட்கள் கூட்டங்கள் வைக்கப்படுவதற்குப்
பதிலாக நாம் வெளியே சென்று இந்தக் கூடாரத்தை அமைத்து இரண்டு, மூன்று வாரங்கள் கூட்டங்கள்
வைக்கலாம். அதைக்குறித்து யாருமே ஒன்றும் கூற முடியாது. நாம் விளையாட்டு மைதானத்தை
வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம். அவர்கள் அதைத் தரமறுத்தால் இங்கு ஒரு பண்ணையாளர் இருக்கிறார்.
அவர் தமது பண்ணையை நமக்குத் தருவார். அதை நாம் வாடகைக்கு எடுத்துக் கொண்டு கூடாரத்தை
நாம் அங்கு அமைக்கலாம். நாம் செய்யவேண்டிய ஒன்றே ஒன்று, நமது சௌகர்யங்களுக்காக வெளிப்புற
அறைகளை அமைத்துக் கொள்வதே. அதை நாம் எளிதில் செய்துவிடலாம். அவ்வாறு நமது ஆராதனைகளை
நாம் நடத்தலாம். ஏனெனில் அது ஆண்டவரிடமிருந்து வந்த தரிசனத்தின்படியாகும். அந்த முறையில்
அது செய்யப்பட வேண்டும்.
வெட்கப்படுதல்
எப்படியோ, ஆண்டவரே, அந்தத் தரிசனம் நிறை
வேறுவதற்காக எங்களைக் கூடாரத்திற்கு விரட்டுபவர் நீராக இருக்கக் கூடும்.
வெட்கப்படுதல்
தேவன் இதை வெளிப்படுத்தித் தருவாரென்று
நம்புகிறேன். ஒவ்வொரு முறையும் ஒலி நாடாக்களைப் போட்டுக் கேட்கும் உங்களுக்கு சபைக்கு
தேவன் எதைக் கூற விரும்புகிறார் என்பதைக் குறித்த ஆவிக்குரிய விளக்கம் அதை வெளிப்படையாகக்
கூறாமலே உங்களுக்குக் கிடைத்துள்ளது என்று நான் நம்புகிறேன். பாருங்கள்? சில சமயங்களில்
ஒன்றைக் கூறுவது... நாம் சில காரியங்களைக் கூற வேண்டியவர் களாயிருக்கிறோம். அது சபையில்
ஆட்களைக் குறைத்து விடுகிறது. மற்றும் சிலரை அது சிந்திக்கும்படி செய்கிறது.
அது வேண்டுமென்று செய்யப்படுகிறது. அது
அப்படித் தான் செய்யப்பட வேண்டும்.
ஒருக்கால் சிலர் தேவன் வேண்டுமென்றே அப்படிப்பட்ட
ஒரு காரியத்தைச் செய்வார் என்றா கூறுகிறீர்கள்? என்று கேட்கலாம். அவர் நிச்சயமாய் அப்படிச்
செய்தார். இப்பொழுதும் செய்து வருகிறார்.
தேவன் திரை நீக்கப்படுதல்
அப்பொழுது அது கிட்டத்தட்ட ஒரு பெரிய
கூடாரக்கூட்டமாயிருக்குமா என்று வியப்பாயுள்ளது. அது- அது வரும்போது முடிந்த அளவு நீங்கள்
எல்லாருமே உண்மையாகவே ஒரு கூட்டத்திற்காக தலைநகரான வாஷிங்டனில் இருக்க வேண்டும் என்று
நான் விரும்புகிறேன். அது என்னுடைய முதல் கூடாரக் கூட்டமாயிருக்கும். கர்த்தர் அங்கே
கூட்டத்தில் கூடாரத்தில் உள்ள அந்தச் சிறிய இடத்தில் என்னை அவர் சந்திப்பதாக வாக்களித்தார்
என்பதை நீங்கள் அறிவீர்கள். அதாவது அவர்கள் அதை இப்பொழுது திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் எங்களை அழைத்து எங்களிடமே கூறினர். அங்குள்ள வர்த்தகப் புருஷர் அதாவது அவர்கள்
நாங்கள் பேசின இடத்திலேயே அவைகூடும் மன்றத்தை எடுத்து ஏற்பாடு செய்வார்கள் அல்லது ஒரு
பெரிய கூடாரத்தை அமைப்பார்கள். அவர் “பெரிய கூடாரம்” என்று கூறியவுடனே ஏதோ ஒன்று ஒரு
விதத்தில் முன்பதிவு செய்யப்பட்டது. ஒருக்கால் அங்கே உள்ள மாமன்றக் கூடாரத்திலேயே கூட்டம்
இருக்கலாம்
உண்மையான ஈஸ்டர் முத்திரை
வெளிப்படுத்தின
விசேஷத்தின் கடைசி ஏழு கலசங்களைப் பற்றியும், ஏழு எக்காளங்களைப் பற்றியும், ஏழு இடி
முழக்கங்களைப்பற்றியும் உங்களுக்குப் போதிக்கும் நோக்கத்துடன் இங்கு வந்திருக்கிறோம்.
அவைகளை திறக்கப்பட்ட ஏழு முத்திரைகள் ஏழு சபைக்காலங்கள் இவற்றைத் தொடர்ந்து நாம் வாழும்
இந்தச் சமயத்தில் ஒன்றாகப் பிணைத்துப் பார்க்க வேண்டும். அவைகளைப் பிரசங்கிக்க இங்கு
இடம் போதாது. அதை எவ்வளவு விரைவாகச் செய்ய முடியுமோ அவ்வளவு விரைவாக அதற்கெனப் போதிய
இடவசதியுள்ள ஒரு இடத்தை நாம் இங்கோ, நியூ ஆல்பனிபில் உள்ள லூயிவில்லிலோ எடுத்துச் செய்வோம்.
அல்லது இதற்கென ஒரு பெரிய கூடாரத்தை அமைத்துக் கொண்டு, அங்கு கர்த்தர் நம்மை நடத்துகிறவரையிலும்
தங்கியிருந்து அவற்றைக் கேட்போம்.
இப்பொல்லாத காலத்தின் தேவன்
நான் பார்த்த போது அந்தப் பாறையிலிருந்த
வெள்ளைப் படிகக் கல்லில் “வெள்ளைக் கழுகு” என்று எழுதப்பட்டிருந்தது – யார் மூலம் அடுத்த
செய்தி வருமென்று அந்தத் தரிசனம் கூறினவிதமாகவே.
அது இதுவரை எனக்கு இல்லாத ஒரு மேலான விசுவாசத்திற்கு
என்னை வழி நடத்தியுள்ளது. தேவனே அது குணமாகிவிடும் என்று நானறிவேன்.
வயோதிபனான நான் என் வாழ்நாள் முழுவதும்
அவதிப்பட்டேன். அவர் ஏன் இப்பொழுது என்னை சுகப்படுத்தினார்? இந்தப் பாதையில் நான் இன்னும்
ஒருமுறை சவாரி செய்வேன் என்று நம்புகிறேன். நான் ஒரு செய்தியைக் கொண்டுவர வேண்டும்.
அன்புள்ள
தேவனே, இவைகளுக்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். பிதாவே, நீர் நோவாவுக்கு ஒரு அடையாளம்
தந்தீர். நீர் உலகத்திற்கு ஒரு அடையாளம் தந்தீர். நீர் எனக்கு ஒரு அடையாளம் தந்தீர்.
அடுத்த நாள், அந்தக் கழுகு பறப்பதைக் கண்டபோது, ஓ, தேவனே இப்பொழுது ஒரு செய்தி வந்து
கொண்டிருக்கிறது. தேவனே, புறா அதை வழிநடத்த நீர் செய்ய வேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறேன்.
கர்த்தாவே, அதை அருளும்.
பனி வெண்புறா சிறகுகளின் மேல்
அந்த வேளையில் நான் அரிசோனாவுக்குப் போய்
அந்தக் கூடாரத்தை அமைக்க வேண்டியவனாயிருக்கிறேன். மேலும் இந்தச் சிறிய அறையை அதன் பக்கத்தில்
(தரிசனத்தின்படி) அவர் கூறினவிதமாகவும் எப்படிச் செய்ய வேண்டும் என்று கூறிய விதமாகவும்
அமைக்கவேண்டும். அங்கே நான் ஜனங்களின் நடுவில்
இருக்கமாôட்டேன். அதை நீங்கள் அறிவீர்கள். ஒலிநாடா
இவையனைத்தையும் கூறும். அவர் “இதனை போலியாகச் செய்யமுடியாது” என்றார். ஆகவே பிறகு அது
நடக்கும்போது நான் உயரமான இடத்தில் இருப்பேன்.
மந்தையின் மேய்ப்பன்
நாம் அந்த வேளையை காணுவோம் என நம்பிக்கையாயிருக்கிறோம்.
(அதி சீக்கிரத்தில் இருக்கலாம்). அப்பொழுது கூடாரத்தை பட்டணத்திற்கு கொண்டுவரக்கூடும்.
அதனை பந்து விளையாட்டு மைதானத்தில் அமைத்து சற்று நீண்ட காலம் மூன்று அல்லது நான்கு
வாரங்கள் எழுப்புதல் கூட்டங்களுக்காக தொடர்ந்து தங்கியிருக்கலாம்.
இந்த வேதவாக்கியம் இன்றைய தினம் நிறைவேறிற்று
“இப்பொழுது அநேக வேளைகளில் அது வரிகளுக்கிடையே
எழுதப்பட்டுள்ளது. பிறகு நமது பெரிய கூடாரத்தினை வெளியே எங்காகிலும் அமைத்து அதிகப்படியாôன காலத்தை எடுத்துக்
கொண்டு, வரிகளுக்கிடையில் எழுதப்பட்டவற்றினை” ஆராய்வோம். உயிர்த்தெழுதல் இன்னும் மற்றுமுள்ள
காரியங்கள் அங்கே எவ்வாறு செயல்படும் என்று கவனியுங்கள்.
தேவனால் அருளப்பட்ட பலி
நாம் கூடாரம் அமைக்கவேண்டும் என்று அதற்காக
எதிர்நோக்கிக் கொண்டிருந்தபோது அதனைச் செய்வேன் என்று அப்பொறுப்பினை என் மீது ஏற்றுக்
கொண்டேன். கூடாரம் அமைப்பதையும் அதன் பெரும் பொருட் செலவையும் குறித்து சிந்தித்தபோது.......
நான் ஏன் தெய்வீக சுகமளிக்கும் கூட்டங்களை
(தரிசனத்தில்) விட்டுவிட்டேன் என்று பார்த்தீர்களானால் நான் கூட்டங்களில் 15000 டாலர்கள்
கடன்பட்டேன். ஜனங்களிடம் நான் காணிக்தை கேட்கமாட்டேன்; அதை நான் செய்யமாட்டேன். நான்
(தேவனிடம்) அதைச் செய்யமாட்டேன் என்று (தேவனிடம்) வாக்குப் பண்யியிருந்தேன். எனவேதான்
கூட்டங்களை நான் விட்டுவிட்டேன். கலிபோர்னியாவில் நடந்த கூட்டத்தில் 15000 டாலர் கடனுடன்
திரும்பினேன். கூடாரத்திற்காக 100000 டாலர்கள் கடன்வாங்கியிருந்தேன். அப்படியானால்
அதைக்குறித்து நான் பேசியது விசுவாசத்துடனாகும்.
அது கர்த்தரிடத்திலிருந்து வந்தது. அது கர்த்தரிடத்திலிருந்து வந்தது. அதைக்குறித்த
நன்மையான காரியம் யாதெனில், ஒரு நல்ல நண்பர் பணக்காரராயிருந்த ஒரு தேவ ஊழியர் சகோ.
பிரன்ஹாம் கடனைச்செலுத்த உமக்கு ஒரு பைசா கூட வட்டியின்றி பணத்தைத் தருகின்றேன். வட்டி
எதுவும் செலுத்த வேண்டியதில்லை. நீங்கள் பெறும் கடனை மட்டும் திருப்பித் தந்தால் போதும்.
அதற்காக எந்த வட்டியும் செலுத்த வேண்டியதில்லை’ என்றார். எனவே அது அற்புதமானது இல்லையா?
நான், “கர்த்தாவே உமக்கு நன்றி” என்றேன். நாம் தொடர்ந்து சென்று அந்தக் கூடாரத்தை அமைத்து
ஆறு வாரங்கள் அங்கு தங்கியிருக்கும்படியாக அதனை இரட்டை நகரத்தில் அமைத்து ஆறு வாரங்கள்
எழுப்புதல் கூட்டங்களை நடத்துவோம். ஒவ்வொரு சபையும் தங்களுக்குள் இருக்கும் தடைகளையும்
வேறுபாடுகளையும் களைந்து ஒன்றுசேர்ந்து வந்து ஒருவரோடொருவர் கைகளைக் குலுக்குதல் அற்புதமான
காரிமல்லவா? ஒருவருக்காக ஜெபித்து சத்துரு பின் பக்கமாக வந்து தாக்கும்படியாக சாதாரணமாக
ஜெபிப்பதல்ல. சரியாகத் திரும்பத் திரும்ப ஜெபித்தல். அதுதான் செய்யப்பட வேண்டியதாகும்.
அது சரியாகும்வரை தொடர்ந்து அங்கேயே தரித்திருங்கள். அவ்விதம் இரவுக்குப்பின் இரவு,
இரவுக்குப்பின் இரவு, இரவவுக்குப்பின் இரவாக தொடர்ந்து செய்யுங்கள். தேவன், ‘அது நடந்துவிட்டது.
நான் அதைச்செய்து முடித்துவிட்டேன். நீங்கள் இப்பொழுது வேறெங்காகிலும் செல்லுங்கள்’
என்று சொல்லுமளவும் அவ்விதம் செய்வோம். அந்தமாதிரியான எழுப்புதல் கூட்டங்கள்தான் நமக்குத்
தேவை. நாம் அவ்விதமாக நீண்டகாலம் ஒன்று கூடித் தரித்திருப் போமானால் ஒவ்வொரு இரவும்
எப்படிப்பட்ட காரியங்கள் சம்பவிக்கும்? எப்படிப்பட்ட விதமாக அது இருக்கும்? என்று அதிசயிக்கிறேன்.
கிறிஸ்துவில் மறைந்திருக்கும் ஜீவியம்
அந்த மிகப்பெரிய வரம்....... அது எப்படி
செய்யப்படவேண்டும்? என்று மற்றவர்களுக்கு விவரித்தேன். இதையோ, விவரிக்க முடியாது. பொறுத்திருங்கள்.
அதை முழுமையான விதத்தில் இப்பொழுது இயக்கமுடியாது. சபைகளின் ஆலோசனைச்சங்கம் அதன் மீது
இந்த உபத்திரங்களைக் கொண்டுவரும்வரை பொறுத்திருங்கள். அப்பொழுது அது நிகழும். எனவே
தான் நான் மீண்டும் உங்களிடம் வியாதிஸ்தர்களுக்காக ஜெபிக்க வந்துள்ளேன். என் வாழ்வில்
அவர் கூறினவை அனைத்திலும் ஒன்று மட்டும் நிகழவில்லை என்று அறிவேன்; அது ஒருவிதமான கட்டிடம்
அல்லது கூடாரத்தில் ஒரு சிறியஅறை உண்டாக்கப்பட்டு நான் அதனுள் சென்று வியாதிஸ்தர் களுக்காக
ஜெபிப்பதே. அது, நான் அறிந்தவரை அது இன்னும் நிகழவில்லை. அதை மாத்திரமே நானறிவேன்.
-என்றும் மாறாத தேவனின் வாக்குத்தம்
அது மின்னசோட்டா, அயோவா, வடக்குடக்கோட்டா
மற்றும் கான்சாஸ் மற்றும் சுற்றுவட்டாரங்களில் உள்ள அனைவரையும் கூட்டிச்சேர்க்கும்
ஒன்றாக இருக்கும்?...... பத்திரிகையில் உள்ள எனது தரிசனம் பற்றி நீங்கள் எப்போதாவது
படித்ததுண்டா? இங்குள்ளவர்களில் எத்தனைபேர் படித்திருக்கிறீர்கள்? அநேகர் என்று நான்
நம்புகிறேன். அதுசரி.... சகோ.போஸ் அதை வெளியிட்டுள்ளார் என்றும்; வருகையின் தூதன் அதைக்
கொண்டுள்ளது என்றும் நினைக்கிறேன். சுகமாக்கும் சத்தம் அடுத்தமாதம் அதை வெளியிடும்.
அது நம் கர்த்தராயிருக்கிற இயேசு செய்யும்படி தீர்மானித்திருக்கும் மிகப்பெரிய காரியம்
ஆகும். அந்தக்கூடாரத்துக்குள் செல்ல நான் தாமதப்படக் கூடாதவனாய் இருக்கிறேன். அது அற்புதமான
ஒன்றாக இருக்கப்போகிறது. அதை அவர் தம்முடைய வருûக்ககு முன்பு
செய்வார் என்றே அறிநந்துள்ளேன். நாம் எல்லாரும் அதில் நாம் ஒவ்வொருவரும் அதில் இருப்போம்
என்று யூகிக்கிறேன்.
தேவனால் அருளப்பட்ட பலி
தேவன் அவனுக்கு ஒரு நாள் தரிசனமாகி ஆபிரகாமே
நான் சர்வ வல்லமையுள்ள தேவன். நீ எனக்கு முன்பாக நடந்து கொண்டு உத்தமனாயிரு என்றார்.
ஒரு நூறு வயதான, சரியாக நூறு வயதான மனிதனை, 'நீ எனக்கு முன்பாக நடந்து கொண்டு உத்ததமனாயிரு.
நான் சர்வ வல்வமையுள்ள தேவன்' என்றார். நீங்கள் இந்த வார்த்தைகûளை விசுவாசித்தால்
இங்கு ஜெபர்சன்வில்லில் உள்ள கூடாரத்தில் சிறிது காலத்திற்குள் ஒரு எழுப்புதல் கூட்டத்தை
நடத்த விரும்புகிறேன். நாம் நமது கூடாரத்தையும் வெளிப்புற அறைகளையும் ஓரிடத்தில் அமைக்கும்போது......
நாம் மேற்கண்ட வார்த்தைகளை எடுத்துப் பிரசங்கித்து அது எதை அர்த்தப்படுத்துகிறது? என்று
பார்க்கப்போகிறோம். அந்த வார்த்தைகளின் சரியான அர்த்தத்தையே. சர்வவல்லமையுள்ள தேவன்
என்னும் வார்த்தையின் எபிரேய பதம் எல்ஷடாய் ஆகும். அது ஒரு பெண்ணின் மார்பகம் போன்றது
என்று அர்த்தமுடையதாகும்.
தேவன் ஒரு வழியை உண்டு பண்ணியிருக்கிறார்
No comments:
Post a Comment