மணவாட்டி ஊழியம்

மணவாட்டி ஊழியம்

Sunday, July 21, 2013

வார்த்தை மாம்சமானது



 (இந்தியப் பிரயாணம்)
அக்டோபர் 3, 1954
ஜெபர்ஸன்வில், இந்தியானா, அமெரிக்கா

  காலை வணக்கம், நண்பரே. இந்தக் காலையில் இங்கே கூடாரத்தில் மீண்டும் இருப்பது நிச்சயமாகவே ஒரு சிலாக்கியமாக உள்ளது. நாம் தொடர்ச்சியாக உலகத்தின் வித்தியாசமான பகுதிகளிலும் மற்றும் மற்றவிடங்களினூடாக நெடுகிலும் பிரயாணம் செய்துள்ளோம், மீண்டும் எப்போது திரும்புவோம் என்று சில சமயங்களில் நீங்கள் வியப்படை கிறீர்கள், ஆனால் முன்னால் இருக்கும் ஆபத்துக்களையும் அபாயங்களையும் மற்றும் காரியங்களையும் காண்பதற்கு. ஆனால் சகோதரன் நெவில் சிறிது முன்னால், “கர்த்தர் நமக்காக பொறுப்பெடுத்துக் கொள்வார்” என்று சொன்னபடி, நாம் அவரை நம்புவதற்கு கற்றுக்கொள்ளுகிறோம்.......… (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசிரியர்.) மேலும் இந்தக் காலையில், அது ஒரு…
2.         நான் என்னுடைய முழு ஜீவியத்திலும் எப்போதாவது கொண்டிருந்ததை விடவும் கர்த்தராகிய இயேசுவுக்காக ஒரு ஆழமான அன்பை கொண்டிருக்கிறேன் என்று நான் நம்புகிறேன். உலகத்தின் வித்தியாசமான மார்க்கங்களையும், அவைகளின் செயல்பாடுகளையும், அவர்கள் என்ன விசுவாசிக்கின்றனர் என்பதையும், அவர்களுடைய சமயக் கொள்கையையும், மற்றவைகளையும் கண்ட பிறகு, நாம் கிறிஸ்தவர்களாக, உண்மையான ஜீவிக்கும் தேவனைக் கொண்டிருக்கிறோம் என்பதைப் புரிந்து கொள்ளும்படி கண்களுக்குப் புலப்படுகிறது…....... கிறிஸ்தவத்தை அந்த இடத்திற்கு கொண்டுவரும் போது, மற்ற எல்லா மார்க்கங்களும் ஒன்றுமில்லாமல் மறைந்து போய் விடுகிறது.
3.         இப்பொழுது, பேசுவதற்கு எனக்கு அதிக சத்தம் இல்லை. யாராவது சிறிது அருகில் வர விரும்பினால், ஏன், நாங்கள் காத்திருக்கும் வேளையில் நீங்கள் - நீங்கள் முன்னோக்கி வரும்படி அதிகமாக வரவேற்கப்படுகிறீர்கள்.
4.         நான் கடல் கடந்து நடத்தப்பட்ட கூட்டங்களின் அறிக்கையை விரிவாக கொடுக்கும்படி விரும்புகிறேன், எனவே நீங்கள் கடல் கடந்து கர்த்தர் என்னவெல்லாம் செய்தார் என்பதன் ஒரு – ஒரு கருத்தை நீங்கள் கொண்டிருப்பீர்கள். நாம்… நீங்கள் என்னை அனுப்பின குழுவின் பகுதியாக இருக்கிறீர்கள், நான் அங்கே இருந்த சமயத்தில் நீங்கள் எனக்காக ஜெபித்தீர்கள், எனவே கர்த்தர் என்னவெல்லாம் செய்தார் என்பதை அறிவதற்கு உங்களுக்கு உரிமை உண்டு. அது நாங்கள் கொண்டிருந்த ஒரு - ஒரு மகத்தான அற்புதமான கூட்டங்களாக இருந்தன. அவர்கள்…
5.         போர்த்துக்கீஸ் - லிஸ்பன், போர்த்துக்கீஸில், அநேக காலங்களாக நாங்கள் கொண்டிருந்ததில் சிறந்த கூட்டங்களில் ஒன்றை நாங்கள் கொண்டிருந்தோம்,             இதுவரை செய்து வந்தது போலவே அப்படியே அங்கு சென்றோம். அது துல்லியமாக, நூறு சதவீதம்             கத்தோலிக்க தேசம், போர்த்துக்கீஸ், அது ஸ்பெயினி லிருந்து வருகிறது. மேலும் ஸ்பானியர்கள் கத்தேலிக்கர்   களாக இருந்து, செயல்பட்டனர். எல்லா - எல்லா போர்த்துக்கீஸியர்களும் கத்தோலிக்கர்களே. ஆனால் அதன் எல்லாவற்றின் மத்தியிலும், கர்த்தர் சரியாக கூட்டத்தினர் மீது தம்முடைய ஆவியை ஊற்றினார், நாங்கள் அப்படிப்பட்ட கூட்டங்களையும் அற்புதங்களையும் கொண்டிருந்தோம்.

6.         மேலும் அநேக, அநேக ஆயிரங்கள்… இப்பொழுது, இங்கே கத்தோலிக்க ஜனங்கள் இருந்தால், கத்தோலிக்கத்தை விட்டு கிறிஸ்தவத்திற்கு ஜனங்கள் மாறினர் என்று நான் கூற முயற்சிக்கவில்லை; ஏனெனில் அது கிறிஸ்தவத்திற்கு ஒரு பிரதிநிதித்துவமாக உள்ளது. ஆனால் அவர்கள், வழக்கமாக கத்தோலிக்க சபைக்குச் செல்லுகிற ஜனங்களாகிய அவர்கள், உண்மையான ஆழ்ந்த பற்றுள்ளவர்கள் அல்ல… ப்ராட்டஸ்டண்டுகளிலும் கூட அதை நாம் கொண்டுள்ளோம். அவர்கள் அப்படியே, “நல்லது, நான் ஒரு கத்தோலிக்கன், ஏனெனில் என்னுடைய பாட்டியும் ஒரு கத்தோலிக்கர்” என்று கூறுகின்றனர். அது தான், அவர்கள் அதை எண்ணிப்பார்ப்பதில்லை. ஆனால் இந்த ஜனங்கள், அதே போல், போர்த்துக்கீஸில் கூட்டத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் வழிநடத்தப்பட்டார்கள்.
7.         பின்னர் நாங்கள் அங்கிருந்து ரோமாபுரிக்குச் சென்றோம். மேலும் சரியாக… நல்லது, முற்காலத்தில் தொடக்கத்தில் கிறிஸ்தவர்கள் ஆராதித்து வந்த மகத்தான நிலத்தடி கல்லறைகளை நான் பார்வையிட்டேன், மேலும் அங்கே செல்வதற்கு அப்படிப்பட்ட ஒரு அற்புதமான அனுபவத்தை நாங்கள் கொண்டிருந்தோம், குறிப்பாக பரிசுத்த ஆஞ்சலோ நிலத்தடி கல்லறை. நிச்சயமாகவே, எங்களுடைய வழிகாட்டிகள் கண்டிப்பான கத்தோலிக்கர் களாக இருந்தனர். ஆனால் அவர்கள் (நிலத்தடி கல்லறைகளில் ஆராதித்து வந்த கிறிஸ்தவர்கள்- தமிழாக்கியோன்) கத்தோலிக்கர் என்று  கூற அவர்கள் முயற்சித்தனர், ஆனால் எல்லா கல்வெட்டு;களும் மற்றும் ஒவ்வொன்றும்,அது வித்தியாசமாய் இருந்ததென்று காட்டினது அவர்கள் கத்தோலிக்கர்கள் அல்ல. நீங்கள் பாருங்கள்?
8.         பின்னர் அங்கிருந்து நாங்கள் வாட்டிகன் சிட்டிக்குச் சென்றோம். வாட்டிகன் சிட்டியில், நான் ஒரு அற்புதமான நேரத்தைக் கொண்டிருந்தேன், அங்கே சரியாக பரிசுத்த பேதுருவின் ஆலயத்தின் நிழல்களில் ஒரு சுகமளிக்கும் ஆராதனையைக் கொண்டிருந்தேன்; ஒரு மகத்தான கூட்டம். அப்படியே சரியாக அவர்களனைவரும் அதை அறிந்து கொண்டனர், அந்தக் கூட்டம் எங்கே நடைபெற்றது என்பதை ஜனங்கள் அறியச் செய்வதை நாங்கள் இரகசியமாக செய்ய வேண்டியிருந்தது. ஆயிரகணக் கானவர்கள் வெளியே வந்து, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டனர், அவர் வாட்டிகன் சிட்டியில், ஜனங்களிடையில் அற்புதங்களையும், அடையாளங்களையும் அதிசயங்களையும் கிரியை செய்தார். உங்களால் அதைக் கற்பனை செய்ய முடிகிறதா?
9.         மேலும் நான்… இந்த நேரத்தில் தேசத்தின் மகத்தான புகழ் வாய்ந்தவர்களில் அநேகரை சந்திக்க முடிந்தது, ஏனெனில் பாரன் வான் பிளாம்பர்க் (டீயசழn ஏழn டீடழஅடிரசப) எங்களுடன் இருந்தார்; அவர் கூட்டத்தின் மேலாளராக இருந்தார், உலகத்தின் ராஜாக்கள், ஆளுநர்கள் மற்றும் அதைப் போன்ற எல்லாராலும் நன்றாக அறியப்பட்டவர். லிஸ்பனில், ஏன், பாராளுமன்றத்தின் ஆளுநரையே சந்தித்து, அவர்களுடன் விருந்தைக் கொண்டிருந்தோம். மேலும் ரோமாபுரியில், அங்கே கிறிஸ்தவ ஆலயத்தில் பதவி வகிக்கும் எல்லாரும்…
10.       இந்த பாருக் இராஜா (முiபெ குயசரம), பாருக், அதுதான் அவனுடைய பெயராக இருந்தது,அவன் எகிப்திற்கு வெளியே சென்று, அந்த வாலிப ஸ்திரீயை விவாகம் செய்தான், நீங்கள் அறிவீர்கள், நாம் அதைக் கேள்விபட்டுள்ளோம், பிறகு அவர்கள் மீண்டும் விவாகரத்து செய்தனர். நான்கு மனைவிகளைக் கொண்டிருக்க அவனுக்கு உரிமை உண்டு, எனவே அவர் - அவர் இப்பொழுது சுமார் ஒன்று அல்லது இரண்டை மாத்திரம் கொண்டுள்ளார். ஆனால் அவர் பள்ளியில் படிக்கும்  பெண்ணான இந்த சிறு வாலிப ஸ்திரீயை விவாகம் செய்தார், நீங்கள் பத்திரிகையில் செய்தி பரப்பப்பட்டதையும் மற்றவற்றையும் கேள்வி பட்டிருப்பீர்கள். பேசுவதற்கு அருமையான மனிதர். பெரிய ஆள், மகத்தானவர்… பெரிய ஆளென்று நான் கருதுகிறேன். அவர் பெரியவராக இருந்தார். எனவே அவர் – அவர் ஒரு அருமையான மனிதர்.
11.       பின்னர் கீழை நாடுகளிலும் மற்றவைகளிலும் உள்ள இரண்டு இராஜாத்திகளை நாங்கள் சந்தித்தோம். அப்போது அவர்கள் அங்கே ரோமாபுரியில் இருந்தனர், நாங்கள் அங்கே இருந்தோம் என்று அறிந்து எங்களைச் சந்திக்கும்படி வந்திருந்தனர்.
12.       மேலும் போப்புடன் குழுமியிருந்த ஒரு கூட்டத்தை கொண்டிருந்தோம், நாங்கள் சென்று அவருடன் பேச முடிந்தது. ஆனால் அவருடைய மோதிரத்தையும் அவருடைய பாதங்களையும் நீங்கள் முத்தமிட வேண்டும் என்பதை நான் கண்டுகொண்ட போது, நான், “இல்லை, இல்லை. ஊ-ஊ! முடியாது” என்றேன். பாருங்கள்? நான் எந்த மனிதருக்கும் சங்கை, டாக்டர், அவர் என்னவா யிருப்பினும் அவருக்கு செலுத்தப்படவேண்டிய மரியாதையை நான் செலுத்துவேன்;, நன்மதிப்பை அவருக்கு கொடுக்க ஒரு கண்ணியமானவனாக அல்லது அவ்வாறாக என்னுடைய தொப்பியை அவருக்காக கழற்றுவேன். ஆனால் ஆராதிப்பதற்கு அது வரும்போது, அங்கே ஒருவர் மாத்திரமே, அது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. மற்றவர்களுக்கு நான் அதைச் செய்ய மாட்டேன்.
13.       எனவே அவர் கூறினார்… செவ்வாய்க்கிழமை பிற்பகல் அல்லது  அதைப் போன்ற ஏதோவொரு நாளில் என்னை அவர் அங்கே கொண்டிருக்க கூடுமா என்று அவர் பிரபுவிடமும் மற்றவர்களிடமும் கேட்டார். அவர், “இப்பொழுது, நீங்கள் உள்ளே செல்லும் போது நீங்கள் செய்ய வேண்டிய முதலாவது காரியம் அவருக்கு முன்பாக கீழே விழுந்து வணங்குவது தான். பின்னர் அவர் தன்னுடைய மோதிரத்தை வெளியே காட்டுவார், நீங்கள் அவருடைய மோதிரத்தை முத்தமிட வேண்டும். பின்னர் அவர் தன்னுடைய பாதத்தை, ஒரு கால் விரலுடன் வெளியே நீட்டுவார்” என்றார்.
14.       நான், “இல்லை, இல்லை, இல்லை. இல்லை, ஐயா. அதை அப்படியே மறந்து விடுங்கள். நாங்கள் அதைச் செய்ய மாட்டோம்” என்றேன்.
15.       எனவே பிறகு கெய்ரோ, எகிப்து, ஏதென்ஸ், கிரீஸ், நாட்டின் பல்வேறு பாகங்களுக்கும் சென்றோம், மேலும் பிறகு பாம்பே (டீழஅடியல)-யில் இருந்தோம். மேலும் நான் - நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: பாம்பேயில் நான் கண்டவற்றை விட்டு வெளியே வர பத்து வருடங்களா னாலும் என்னால் வரமுடியும் என்று நான் நம்பவில்லை. நான்…......... உலகத்தைச் சுற்றிலுமிருந்து என்னுடைய ஜீவியத்தில் நான் எப்பொழுதாவது கண்டதிலேயே மிகவும் பரிதாபகரமான காட்சியாக அது இருந்தது.
16.       அனுபவத்தில் இது எல்லாமுமாய் இருக்கிறது ஆனால் மிகவும் கிழக்கு. நான் என் அனுபவத்தில் ஐரோப்பா மற்றும் ஆசியாவின் அனைத்து நாடுகளையும் நாட்டின் அந்தப் பகுதியினூடாகவும் சரியாக ருஷ்யாவின் எல்லைகளிலும்           சென்று பார்த்திருக்கிறேன், ஆயினும் ஜப்பானில் இருந்ததில்லை. ஒருவேளை அடுத்த பயணத் திட்டம்; ஆஸ்திரேலியா, நிய+சிலாந்த் மற்றும் ஜப்பானாக இருக்கும். என்னுடைய அடுத்த நிறுத்தம,; சீனாவின் ஹாங்க் ஹாங்க்-ல் நான் இருந்த இடத்திலிருக்கும். நாங்கள் மற்றொரு பக்கமாக அப்படியே சுற்றி, இந்தவொரு வழியில் வந்து கொண்டிருந்து, ஐக்கிய நாடுகளுக்கு சமீபமான வழியில் வந்தோம். நாங்கள் அப்படியே ஹாங்க் ஹாங்கிலும், டோக்கியோவிலும், பார்மஸாவிலும் மற்றும் கூவமிலும், வேக்கிலும், பிலிப்பைன்ஸிலும் பிறகு இங்கும் நிறுத்தத்தைக் கொண்டிருக்க வேண்டியதாயிருந்தது. அதற்குப் பதிலாக, நாங்கள் மீண்டும் வருவதற்கு, இந்த மற்றொரு வழியில் சரியாக  சுற்றி திரும்பி செல்கிறோம். ஆனால் அங்கே…
17.       அமெரிக்காவில் ஏழை ஜனங்களே கிடையாது. அவன் எங்கே இருக்கிறான் என்றோ, அவன் எப்படிப்பட்ட ஜீவியத்தைக் கொண்டிருக்கிறான் என்றோ எனக்கு அக்கறை இல்லை, அமெரிக்காவில் ஒரு ஏழை மனிதரும் இல்லை. ஒரு சந்தில் உள்ள குப்பைத் தொட்டியில் சாப்பிட்டுக் கொண்டிருந்து, அவனுடைய வஸ்திரமும்  மற்ற ஒவ்வொரு காரியமும் அவனிடம் இல்லாமல் இருக்கும் அவனை நீங்கள் கண்டுபிடித்தால், அவன் ஒரு கோடீஸ்வரனாக இருக்கிறான். அவன் ஏழையென்று நீங்கள் நினைக்க வேண்டாம், ஏனெனில் அவன் ஏழையல்ல@ நீங்கள் ஒருமுறை இந்தியாவுக்குச் சென்று பார்த்த பிறகு, அங்கே ஏழை ஜனங்கள் இருப்பதை நீங்கள் காணலாம். ஏன், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், ஒரு கடினமான…
18.       நான் இரக்கமற்றவன். நான் அதிகமானவற்றைக் கண்டு கொண்டேன், அதிகமானவற்றைக் கண்டு, அதிகமானவற்றின் வழியாக செல்ல வேண்டியிருந்தது. ஒரு மனிதன் மீது அது கொண்டிருக்கும் பாதிப்பை, அது எப்படியென்று உங்களில் அனேகர் புரிந்து கொள்ளாமல் இருக்கலாம், நீங்கள் அனேக காரியங்களைக் கண்டு அதைப் போன்று அதற்கு மேலாக முழு நேரமும் சவாரி செய்து கொண்டிருக்கும் போது, உங்களை நீங்களே வித்தியாசமாக உணரும்படி செய்கிறது. நீங்கள் அந்த மாதிரியான சூழ்நிலைக்குள் வந்த பிறகு பிறகு, நீங்கள் காரியங்களைக் காண்பது வரையில் அப்படியே அதில் கவனம் செலுத்துவதில்லை, ஏனெனில் நீங்கள் நீங்கள் - நீங்கள் உங்களைத் தானே அந்த இடத்திற்கு கொண்டு வருகிறீர்கள்
19.       ஒரு மருத்துவரைப் போல, ஒரு மனிதனை வெட்டி திறந்து, உள்ளே அடைந்து அவனுடைய குடல் முளையை (யிpநனெiஒ) வெளியே எடுக்கிறார். முதல் தடவை அவர் அதைச் செய்ததால், ஒருவேளை அவர் மயக்கமடையவோ அல்லது ஏதோவொன்றாக ஆகலாம். ஆனால் அதற்கு பிறகு, அவர் ஒரு இடத்திற்கு வருகிறார், அது செய்யப்பட்டதை அவர் அறிகிறார், எனவே அவர் அப்படியே சென்று அதைச் செய்கிறார். வியாதியஸ்தன் ஜீவித்தாலோ அல்லது மரித்தாலோ, ஏன், அவர் அப்படியே, அவரால் முடிந்த சிறப்பானதை அவர் செய்து கொண்டிருக்கிறார்.
20.       ஒரு ஊழியக்காரரும் அதே வழியில் தான் வருகிறார், நீங்கள்… முக்கியமாக ஒரு அப்போஸ்தலன். அல்லது – அல்லது, என்ன… நல்லது, ஒரு அப்போஸ்தலன் என்பவன் ஒரு மிஷனரியாக இருக்கிறான். மிஷன் என்ற வார்த்தை – “அப்போஸ்தலன்” என்பதற்கு “அனுப்பப்பட்ட ஒருவன்” என்று அர்த்தம். மிஷனரியானவன், ஒரு அப்போஸ்தலன் என்பதற்கு பதிலாக ஒரு மிஷனரி என்று ஏன் அழைக்கப்பட விரும்பினான் என்பது எனக்குத் தெரியாது. அதனுடைய வேதாகம ஒழுங்கு அப்போஸ்தலன் என்பதாக இருக்கிறது. எனவே பின்னர் அவன் வெளியே அனுப்பப்படுகிறான். அவன் சரியாக ஒரு ஸ்தலத்தின் ஊழியக்காரனாய் இருக்கவில்லை. அவன்…அப்போஸ்தலன் ஒரு ஸ்தலத்தின் ஊழியக்காரனாய் இருக்க வேண்டியதில்லை; அவன் அப்படியே அனுப்பப்பட்ட ஒருவனாய் இருக்கிறான். தேவன் அவனை ஏதோ சில காரியங்களைச் செய்வதற்கு அனுப்பினார்.
21.       பின்னர் அங்கே அந்த இடத்தில், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நாங்கள் இந்தியாவுக்குச் சென்ற போது, அந்த ஏழை ஜனங்கள் தெருக்களில் கிடந்து, பட்டினியால் மரித்துக் கொண்டிருக்கிறதைக் காண்பதற்கு, மேலும் சிறு தாய்மார்கள் தங்களுடைய குழந்தைகளுடன் ஏதோ வொன்றிற்காக பிச்சையெடுத்துக் கொண்டிருந்து, தாங்கள் பட்டினியால் மரித்துக் கொண்டிருந்தனர், ஆனால் தங்களுடைய குழந்தை மரித்துப் போக விடவில்லை…
22.       நீங்கள் அறிந்துள்ளபடி, அவர்கள் இங்கிலாந்திடமிருந்து கடனை அடைக்க  முடியாத நிலையில் ஏறத்தாழ ஆறு வருடத்திற்கு முன்னர் தான் தங்களுடைய சுதந்தரத்தைப் பெற்றனர். அவர்கள் - அவர்கள் மிகவும் விசித்திரமான ஜனங்கள்.
23.       முழு இந்தியாவிலும் நான் பார்த்த என்னைச்  சுற்றியிருந்த பெரும் மில்லியன் ஜனங்களில், இங்கே தொடைக்கு மேலே ஏதோவொரு இடத்திலாவது ஏதோவொரு ஊனத்தைக் கொண்டிராத ஜனங்களை நான் காணவில்லை. எல்லோரும் உண்மையிலேயே எலும்பும் தோலுமான ஜனங்கள். என்னுடைய ஜன்னலில், அது ஒரு மனிதனின் இருதயத்தை நொறுக்கும், என்னுடைய மகன் அங்கே பின்னால் உட்கார்ந்து, கவனித்துக் கொண்டிருக்கிறான். அவன் ஜன்னலில் உட்கார்ந்து, தெருக்களில் ஜனங்கள் உட்கார்ந்து கொண்டிருப்பதைக் கவனித்துக் கொண்டிருந்தான். நான் இருந்த இடத்தை அவர்கள் கண்டுபிடித்த போது, கைகளே இல்லாத குஷ்டரோகிகள், வெண்மையான குஷ்டரோகத்துடன் கால் இன்றி தங்கள் கைகளில் மீதியான சிறு துண்டுகள் போன்ற  காரியங்களை மேலே உயர்த்தி சாப்பிடும்படியான ஏதோ வொன்றிற்காக பிச்சையெடுத்துக் கொண்டிருந்தனர். மேலும், ஓ, ஒருவர் மற்றொருவருக்கு உதவி செய்ய முடியவில்லை, அது கடினமானது. ஓ, நீங்கள் எப்போதாவது கண்டதிலேயே மிகவும் பரிதாபகரமான காட்சியாகும்.
24.       நான் மிஷனரிகளிடம் சொன்னேன், நான் “என்னால் அதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை” என்றேன். நான் வைத்திருந்த ஒவ்வொரு பென்னியையும் (காசையும்), ஒவ்வொன்றையும் தெருக்களில் நான் கொடுத்தேன். மேலும் நான் - நான் - நான், “என்னுடைய (பிள்ளைகளான)  சாராவும் ரெபேக்காளும் சாப்பிட எவ்வளவு உரிமை உண்டோ அவ்வளவு உரிமை அவர்களுக்கும் உண்டு” என்று நினைத்தேன்.
25.       மேலும் - மேலும் - மேலும் ஜனங்களே, நீங்கள் எவ்வளவு ஆசிர்வதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்வதில்லை. இப்பொழுது, அது சரியே, நீங்கள் அதைப் புரிந்து கொள்வதில்லை. நீங்கள் அறிவீர்கள், நீங்கள் மேலே நோக்கி, அது எங்கிருந்து வருகிறது என்பதை கட்டாயமாக பார்க்க வேண்டும். என்னே, அது வருகிறது… அமெரிக்க ஜனங்கள் ஒரு ஆப்பிள் மரத்தின் கீழுள்ள ஒரு ஆண் பன்றியை போன்றிருக்கின்றனர். நீங்கள் அறிவீர்கள், அவன்… முழு நாளும் கால முழுவதும் ஆப்பிள்கள் அவனுடைய தலைமீது விழும், அவைகளை அவன் சாப்பிடுவான், அவைகள் எங்கிருந்து வந்து கொண்டிருக்கின்றன என்று பார்க்கும்படி மேலே நோக்கிப் பார்க்கவே மாட்டான். அது தான் நம்முடைய வழியாயிருக்கிறது. நாம் அதை எண்ணிப்பார்ப்பதே கிடையாது. நான் பொதுவாக பேசுகிறேன்@ நான் இங்கிருக்கும் ஜனங்களாகிய உங்களைப்பற்றி பேசவில்லை. நீங்கள் கிறிஸ்தவர்கள். ஆனால் நான் - நான் பொதுவான  ஜனங்களைப் பற்றி பேசுகிறேன், எப்படியாக அவர்கள்… அவர்கள் எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்கள் எவ்வளவு நலமாக உள்ளனர் என்பதையும்  புரிந்து கொள்வதில்லை.
26.       இன்று ஜெபர்ஸன்வில்லின் குப்பை போஷிக்க முடியும், இந்தியாவின் கால் பகுதியை போஷிக்க கூடும். அது சரியே. அது சரியே, எதையும் பெற்றுக்கொள்வதற்கு அவர்கள் மகிழ்ச்சியாய் இருந்தனர். அவர்கள்…
27.       நீங்கள் குப்பைத் தொட்டியிலுள்ள மனிதனைப் பார்க்க முடியும், “நல்லது, சகோதரன் பிரான்ஹாம், அங்கே ஆடைகளும் இல்லாமல், கடினமாக, கந்தைத் துணியைக் கொண்டுள்ள அந்த மனிதனைப் பற்றியென்ன?” என்று கூறுகிறீர்கள். ஆனால் பாருங்கள். அவன் செய்ய வேண்டியிருக்கும்  ஒரே காரியம் என்னவெனில் உதவி செய்யும்படி கேட்டலாக இருக்கிறது, அவர்கள் அவனுக்கு உதவி செய்ததுண்டு. அந்த மனிதன் அங்கே எந்த உதவியையும் பெற்றுக் கொள்ளவில்லை. குறிப்பாக, அவன் எங்கேயோ உள்ள அரைகுறையாக கட்டப்பட்ட குடிலில் வசித்துக் கொண்டிருக்கிறான், அங்கே, மழை பெய்தால், அவன் மேற்கூரை கொண்ட, சரக்குகளை எடுத்துச் செல்வதற்கான இரயில் பெட்டியில் தான் வரமுடிகிறது.
28.       அவன் போவதற்கு எதையும் பெற்றிருக்கவில்லை. அவன் எங்கே விழுகிறானோ, அப்படியே அங்கேயே கிடக்கிறான். அவர்கள் மரிக்கும்போது, அவர்களை எடுத்து, ஒரு பெரிய குழியில் அல்லது அதைப் போன்று ஏதோ இடத்தில் எரிக்கின்றனர், குஷ்டரோகிகளையும்; மற்றவர் களையும் தெருவுக்கு வெளியே இடுகின்றனர் அல்லது எதையாகிலும் செய்கின்றனர்: அவர்களை விரும்புவார் யாருமில்லை, செல்வதற்கு இடமில்லை, எதுவுமில்லை. அவர்கள் பசியாயிருக்கிறார்கள். அவர்களும் நம்மைப் போல மனிதர்களே.
29.       சகோதரனே, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நான் - நான் அதைப் பொறுத்துக்கொள்ள முடியாது. நான் ஏறக்குறைய நரம்பு பாதிப்பை கொண்டவனாய் இருந்தேன். இப்பொழுது சென்ற ஞாயிறு முதற்கொண்டே எல்லா நாட்களும் நான் வீட்டிலேயே இருந்து கொண்டிருக்கிறேன். நான் அறையை விட்டு வெளியே வர முடியவில்லை. அது உண்மையென்று அங்கேயிருக்கும் என்னுடைய மனைவி அறிந்திருக்கிறாள், சுமார் ஐந்து நாட்களாக. அது என்னை கொன்றதைப் போலிருந்தது. எங்களுடைய மருத்துவர் என்னுடைய இரத்த அழுத்தத்தை எடுத்தார், அவர், “மனிதரே, நீங்கள் கொஞ்சம் இளைப்பாறுவது நல்லது” என்றார். “உங்களுடைய இரத்த அழுத்தம் குறைந்து போய் உங்களுடைய நரம்புகள் தளர்வாக உள்ளன, அதைப் போன்று மீண்டும் சரியாக உங்களுடைய இரத்தத்தை எடுத்துக்கொண்டு வர முடியவில்லை” என்றார். நான்… அப்படிப்பட்ட காரியங்களைக் கண்டதால் அது என்னை அப்படியே ஏறத்தாழ இரண்டாக உடைத்தது.
30.       மேலும் அது, சில மிஷனரிகள், “சகோதரன் பிரான்ஹாம், இது உங்களை புண்படுத்தினால், நீங்கள் அத்தேசத்தின் உட்பகுதிக்குப் போகாதீர்கள், ஏனெனில் அது இதை விட அனேக அனேக மடங்கு மோசமானது” என்றனர். பாம்பே அவர்களுடைய பெரிய பட்டணம், அவர்கள் பெற்றிருந்த அருமையான பட்டணம், நீங்கள் அதைக் கட்டாயம் பார்க்க வேண்டும்.
31.       மேலும் இப்பொழுது, அந்த தேசத்தின் மார்க்கங்கள், நான் அப்படிப் பட்டவைகளை கண்டதேயில்லை, அநேக மூடநம்பிக்கைகள்: சூரியனை வணங்கும் ஜனங்கள், சூரியனைப் பார்த்து குருடாகிப் போதல்.
32.       பாராளுமன்றம் மற்றும் அவைகளெல்லாவற்றின் தலைவரான நன்றாக புகழ்பெற்ற திரு.நேருவிடமிருந்து அங்கே வரவேற்பு அளிக்கப்பட்டேன். நான் அவர்களுடைய டிக்கட்டுகளையும் காரியங்களையும் பெற்றேன், சரியாக இங்கே என்னுடைய சட்டைபையில், அவர்களுடைய சிறு அட்டைகளும் மற்றவைகளும் உள்ளன. அவர்கள் அருமையானவர்கள். வேறு எதுவும் அருமையாக இருக்க முடியாது. உங்களை அருமையாக நடத்துவார்கள்.
33.       ஆனால் நான் பாம்பேயின் மேயரிடத்திற்கு, அவருடைய அலுவலகத்திற்கு சென்றேன். அது அவர்கள் கொண்டிருந்த சிறந்த ஒன்று, உங்களுடைய கோழி கூண்டு கூட அதைவிட அதிக சிறப்பாக தோற்றமளிக்கும் (பாருங்கள்?). எனவே அங்கே சாப்பிட எதுவுமில்லை. மேலும் தெருவில் - அது நீங்கள் எப்போதும் கண்டதிலேயே மிகவும் பரிதாபகரமான காட்சியாகும். உங்களுடைய உணவு பொட்டலங்களை நீங்கள் அனுப்பும் போது, அவைகளை இந்தியாவுக்கு அனுப்புங்கள். ஆம் ஐயா.
34.       இப்பொழுது இங்கே நான் குறை காண்பவனைப் போலிருக்கவில்லை. நான் என்னுடைய மனைவியிடம் கூறினேன், நான் பாதிக்கப்பட்டு, “ஏதாவது (குற்றம் கண்டுபிடித்தல் - தமிழாக்கியோன்) என்னிடத்தில் இருந்தால், அதை நான் தூரவிலக்க விரும்புகிறேன்” என்றேன், இந்தச் சபையாரிடம், “என் குறைகாணுதல் மாற வேண்டும்” என்று எனக்காக ஜெபிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். நான் என்னுடைய இருதயத்தில் நெருக்கப்படுகிறேன், நான் - நான் அப்படி இருக்க விரும்பவில்லை.
35.       நான் அமெரிக்க மண்ணை அடைந்த உடனேயே, நான் இங்கே அடையும் முன்னரே நான் அமெரிக்க ஜனங்களைக் கண்டு ஒரு விமானத்தின் பின்புறத்தில் இருந்த ஒரு சிறிய வயதான தாயாரை நான் நோக்கிப் பார்த்த போதே, சரியாக அப்பொழுதே குற்றங்கண்டுபிடிக்கத் தொடங்கினேன், வழியில், உண்மையாகவே, போதகர்கள் பயணம் செய்ய வேண்டிய இரண்டாம் வகுப்பில் நாங்கள் வந்து கொண்டிருந்தோம். ஒரு விமானத்தின் பின்புறத்தில், அங்கே பின்னால் சில சிறு குழந்தைகளுடன் ஒரு சிறு தாயார் பிரயாணம் செய்தாள், அந்த குழந்தைகளுடன் குழப்பம் உண்டாக்கும் ஒரு ஆள் அங்கே இருந்தான், ஏனெனில் அவர்கள்… நாம்… நான் அந்தரத்தில் ஐம்பத்தெட்டு மணி நேரங்கள் இருந்திருந்தேன், ஆனால் அவர்களுடன் சுமார் – சுமார் முப்பத்தைந்து மணி நேரங்களைக் கொண்டிருந்தேன்; அந்த சிறு ஏழைகள் இளைப்பாறுதலற்று இருந்தனர், அவர்களை கொண்டு சென்றனர்.
36.       அப்போது அந்த அமெரிக்க பெண்மணி எழும்பினதைக் கவனித்தேன்,ஒழுக்கமற்றவிதமாக உடையுடுத்தியிருந்தாள்… பட்டினியாயிருக்கும் இந்திய ஸ்திரீகளாகிய அவர்கள், இங்கு வந்து இந்த அமெரிக்க ஸ்திரீகளுக்கு, எவ்வாறு ஒழுக்கமாக ஜீவிப்பது என்று கற்றுத்தர முடியும். அது சரியே. உங்களுக்கு (ஒழுக்கமென்பது) கிடையாது… தெருவில், அது உங்களுடைய மனைவியாயிருந்தாலும் எனக்கு அக்கறையில்லை, அவளுடைய ஆறு அங்குலத்தினுள் உங்களால் நிற்க முடியாது. அவர்கள் உங்களை மேற்கொண்டுவிடுவார்கள். பாருங்கள்? அது சரியே. அங்கே தெருவில் முத்தமிட்டு கட்டிப்பிடிப்பதோ காதலிப்பதோ, மற்றும் காரியங்களோ கிடையாது. அவர்களுடைய ஸ்திரீகள் ஒரு மனிதனை அவனுடைய முகத்தில் நோக்கிப்பார்க்க கூட மாட்டார்கள், அவர்கள் அவனிடம் பேசும்போது, அவர்கள் இதே போல தலையைக் கவிழ்த்து அப்பால் நடந்து சென்று விடுவார்கள். மேலும் அவர்கள் - அவர்கள் அதைப்போன்றவற்றையும் மற்றவற்றையும் தெருவில் அனுமதிக்க மாட்டார்கள். அது – அதுதான் ஒழுக்கங்கள். பட்டினியில் இருக்கும் ஒரு ஜனத்தில் அப்படிப்பட்டவைகளைக் கண்டபிறகு,தெய்வ நம்பிக்கையற்ற, இது போன்ற, அது போன்ற இங்கிருக்கும் நம்முடைய தேசத்தின் கீழான இழிவான பாகத்தைக் காணும்போது, அது என்னைக் குற்றம் கண்டுபிடிப்பவனாக ஆக்குகிறது.
37.       மேலும் நான் தாஜில், தாஜ்மஹாலில் ஹோட்டலில் நின்றேன். நான் ஊகிக்கிறேன் பில்லி… அதை நீ எவ்வாறு உச்சரிப்பாய், பில்லி? நீ எவ்வாறு… பில்லி பால், அதை நீ எவ்வாறு உச்சரிப்பாய், தாஜ் மஹால் ஹோட்டலா? (சகோதரன் பில்லி பால், “தாஜ் மஹால்” என்கிறார் – ஆசிரியர்.) தாஜ் மஹால், ஆம், எப்படியாயினும், அங்கே உணவு விடுதியில். பில்லி ஒரு சாட்சி.
38.       இரண்டு அமெரிக்கர்கள் உள்ளே வந்தார்கள். அவர்கள் தெருவில் வந்து நடந்து சென்ற போது நாங்கள் அவர்களை கவனித்தோம், அங்கே வெளியே அந்த ஏழை ஜனங்களுக்கிடையில் நடந்து சென்றார்கள். ஒரு சிறு வயது பையன் அவர்களிடம் ஓடிச்சென்றான். அவர்கள் சில வகையான வியாதிகளைக் கொண்டிருந்தனர். அவன் சுமார் எட்டு வயதுள்ளவனாய் இருந்தான். அவனுடைய கால் விரல்களில் இரண்டு ஏறக்குறைய அந்த அளவு பெரிதாக இருந்தன, அவைகள்  அந்த உயரத்துக்கு நகர்த்த முடியாமல் இருந்தது, அவன் தன்னுடைய சிறு காலை அதைப் போல இழுத்துக்கொண்டு நடக்க வேண்டியிருந்தது. அவன் நடந்து சென்று ஒரு பென்னியைக் (காசை) கேட்டான், நீங்கள் அறிவீர்கள், அல்லது அதைப்போன்று  சாப்பிட ஏதாவது தரும்படி அவன் கேட்டான்.  அந்த அமெரிக்கர்கள் கூறினார்கள்… (சகோதரன் பிரான்ஹாம் அவர்களுடைய எதிர்செயலை சைகையாக நடித்து காட்டுகிறார் – ஆசிரியர்.) அதைப்போல் சுற்றிலும் திரும்பி, வெளியே நடந்து சென்று விட்டார்கள். “தேவனே, இரக்கமாயிரும்” என்றேன்.
39.       தலைக்கனம் பிடித்த… நேருவும் அவர்களும் எங்களுடன் பேசிக் கொண்டிருந்தார்கள், “உங்களுடைய எல்லா வழிகளையும் உங்களுடைய மக்களாட்சியையும் அதைப்போன்ற மற்றவைகளையும் கொண்டிருப்பதற்கு நாங்கள் விரும்பினோம்… மேலும், ஆனால் உங்களுடைய ஆவியை நாங்கள் விரும்பவில்லை” என்றார்கள். அது சரியே. “நாங்கள் முரட்டுத்தனத்தையும் அமெரிக்காவில் நீங்களெல்லாரும் கொண்டிருக்கும் பெரிய உணர்ச்சி களையும் நாங்கள் விரும்பவில்லை. நாங்கள் அதை விரும்பவில்லை” என்றார்கள். பாருங்கள்? அவர்கள் எங்களிடம் கருத்து வேறுபாடோடு பேசிக்கொண்டிருந்தனர். “நாங்கள் அதை விரும்பவில்லை” என்றார்கள்.
40.       நான், “அது கிறிஸ்தவத்தின் உண்மையான பிரதிநிதித்துவம் அல்ல” என்றேன். நான், “அது ஒரு மாதிரியான மாய்மாலம்” என்றேன். முற்றிலுமாக. நான், “கிறிஸ்தவர்கள் அதைப்போல நடிக்கக் கூடாது. இல்லை ஐயா” என்றேன். நான், “அமெரிக்காவில் உள்ள எல்லாரும் அதைப்போல நடிக்கவில்லை” என்றேன். நான், “உலகத்தில் எங்காவது அவர்கள் இருப்பதைப் போன்று நாங்களும் எவ்வளவு தாழ்மையும் இனிமையுமான ஜனங்களாய் இருக்க முடியுமோ அப்படி இருக்கிறோம். ஆனால் நாங்கள் சிலவற்றைக்; கொண்டிருக்கிறோம்” என்றேன். நான், “அதைக் கூறுவதற்கு நான் வருந்துகிறேன்” என்றேன், நான், “அவர்களில் அதிகமானவர்கள், பெரும்பான்மையோர், உயர்ந்த, துடுக்கான, தலைக்கனம் பிடித்த, அதைப் போன்றவர்கள்” என்றேன்.
41.       மேலும் இங்கே வருவதற்கு, அது எனக்கு நெருக்கடியை உண்டாக்குகிறது. (நீங்கள் பாருங்கள்?) நான் அந்த வழியில் இருக்க விரும்பவில்லை. அதிகமானதை, அதிகமானதை – கண்ட பிறகு, சகோதர சகோதரிகளையும் அதைப் போன்று ஒவ்வொன்றையும் கண்டறிந்தேன். இங்கே கூடாரத்திற்கு வருகிற என்னுடைய வயதான நண்பர்களே, உங்களுடைய இருதயங்கள் ஆசீர்வதிக்கப்படட்டும்; நான் என்னுடைய நாட்களில் உங்களிடம் ஒவ்வொரு காரியத்திலும் நான் எதினூடாக செல்ல முயற்சித்தேன் என்று நீங்கள் புரிந்து கொள்ளவில்லை…?… ஏதோவொரு நாளில் நான் தேவனுக்கு முன்பாக பதில் கூறக்கூடும் என்று சிறந்ததைச் செய்யவே முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் நான்… இப்பொழுது, தவறானவற்றை செய்துக் கொண்டிருப்பதாக நீங்கள் என்னைக் கண்டால், என்னை பழித்துரைக்காதீர்கள், என்னைப் பரிதாபமாய் நினையுங்கள், மேலும் என்னைத் திருத்த முயற்சியுங்கள் (நீங்கள் பாருங்கள்?), ஏனெனில் நான் அந்த வழியில் இருப்பதற்கு விரும்பவில்;லை.
42.       ஆனால் நீங்கள் அதிகமானவற்றினூடாகச் செல்ல வேண்டியிருக்கிறது, நீங்கள் புரிந்து கொள்வதில்லை, நீங்கள் அதிகமானவற்றின் மேல் சவாரி செய்ய வேண்டிய வர்களாயிருக்கிறீர்கள். இந்த காலையில் உங்களிடம் கூறுவதற்கு எனக்கு சட்டப+ர்வமாக இல்லாத காரியங்களை இந்த காலையில் உங்களிடம் நான் கூற முடியும், நான் ஐந்து நாட்களாக ஏன் வீட்டிலேயே இருந்தேன் என்றும் ஏன் சுற்றிலும் அசைய முடியவில்லை என்றும் நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். அது சரியே. நீங்கள் அதைப் புரிந்து கொள்ளவில்லை.
43.       எவ்வாறு, ஒரு சிறிய வயதான மாசில்லாத போதகர் இங்கே மேடையில் நின்று கொண்டிருக்கும் போது என்ன நடக்கிறது, அந்த இருதயத்தை தாண்டி, ஊடுருவி, உடைத்து, இழுக்கிறது என்ன. தேவன் மாத்திரமே அதை அறிவார். நான் அதை ஜனங்களிடம் சரியாக கூறுவதில்லை, என்னுடைய சொந்த மனைவியிடம் கூட கூறுவது கிடையாது; நான் அதை தேவனுக்கும் எனக்கும் இடையில் வைத்து என்னால் முடிந்த சிறந்ததை செய்யும்படி அசைகிறேன். ஆனால் ஒரு மனிதன், தன்னுடைய மனம் அதிகமாக நிலைத்திருக்க மாத்திரம் முடிந்து, பிறகு அவன் வெளியே செல்கிறான் என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். நீங்கள் பாருங்கள்?  என்னை அதில் நிலைத்திருக்கச் செய்வது எதுவென்று எனக்குத் தெரியாது@ அதைச் செய்தது தேவன் மாத்திரமே.
44.       இப்பொழுது, இந்தியாவில் எல்லா வகையான மதங்களும் உள்ளன. ஒவ்வொன்றும் ஒரு மதத்தைப் பெற்றிருந்தன. ஓவ்வொன்றும் அதனுடைய சொந்த வழியை பெற்றிருந்தன. நான் வரலாற்று ரீதியாக வரவேற்பு அளிக்கப்பட்டேன்… ஒரு கிறிஸ்தவனுக்கு வரவேற்பு அளிக்க இந்தியாவின் அனைத்து மதங்களும் ஒன்றிணைந்தது போல இதற்கு முன் ஒரு போதும் நடந்ததில்லை. ஆனால் இரண்டு வாரங்களுக்கு முன், சென்ற வியாழக்கிழமை, நான் இந்தியாவில் உள்ள மதங்களால் வரவேற்பு அளிக்கப்பட்டேன்.
45.       அவர்களில் அநேகர் பூச்சிகளை வழிபடுகின்றனர், அவர்கள் கால்நடைகளையும் வழிபடுகின்றனர். ஊ, ஓ, அவர்கள் ஒவ்வொன்றையும் வழிபடுகின்றனர்.அங்கே ஜெயினர்கள் (வாந துயiளெ) இருந்தனர், நாங்கள் அவர்களுடைய கோவிலில் ஒன்றாக உட்கார்ந்து கொண்டிருந்தோம், அங்கே அவர்களுடைய பூசாரிகள்… எப்போதாவது கிறிஸ்தவம் தோன்றுவதற்கு முன்னமே மூன்று அல்லது நான்காயிரம் வருஷங்களுக்கு முன் அந்த மதம் தோன்றியது
46.       அவர்கள் ஒரு துறவி மடத்தைக் கொண்டுள்ளனர், அவர்கள் துறவிகளைக் கொண்டுள்ளனர், கத்தோலிக்கத் திற்குப் பெரிய எடுத்துக்காட்டு. அவர்கள் தங்களுடைய தாடிகளை தங்களுடைய கரங்களால் வருடிக கொள்கிறார்கள், தங்களுடைய தலையை விட்டு மயிரைத் தங்களுடைய கைகளால் இதைப்போன்று வைக்கிறார்கள்;, பின்னர் திரும்பி வரத் துவங்குகிறார்கள். நீங்கள் அதை வெட்ட கூடாது.
47.       மேலும் அவர்கள் ஒவ்வொரு வழியிலும், அவர்கள்-அவர்கள் ஒரு – ஒரு துடைப்பம் அல்லது துடைப்பக் குஞ்சத்தை (அழி) உடன் கொண்டு செல்லுகிறார்கள். அந்த துறவிகள் அங்கே உட்கார்ந்து இந்த சிறு துடைப்ப குஞ்சத்தை செய்கிறார்கள். ஒரு எறும்பு அல்லது ஏதோவொன்றின் மீது தாங்கள் மிதித்து அதைக் கொன்று விடக்கூடாது என்பதைக் குறித்து நிச்சயமுடையவர் களாயிருக்கும்படி அவர்கள் முன்னே செல்கிறார்கள்.  அதைச் செய்தால் அது ஒரு சாவுக்குரிய பாவமாயிருக்கும், நீங்கள் மன்னிக்கப்பட முடியாததாய் இருக்கிறீர்கள். அவர்கள் தங்களுடைய வாயின் மீதும், தங்கள் காதுகளைச் சுற்றிலும் ஒரு வெண்மையான காரியத்தைக் கொண்டு செல்கிறார்கள், அங்கே, அவர்கள் நன்றாக மூச்சு விட்டால், அவர்கள் ஒரு கொட்டும் சிறிய ஈயில் மூச்சுவிட நேரிட்டு அது-அது ஏதேவொன்றை கொல்லக் கூடும், அவர்கள் அதற்காக மன்னிக்கப்பட மாட்டார்கள். நீங்கள் பாருங்கள். ஓ, என்னே.
48.       அவர்கள் எப்போதாவது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்த பலியை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? அவர்கள் அவரைக் குறித்து கேள்வி பட்டிருக்கிறார்கள், ஆனால் அவர்கள் அதை விசுவாசிக்க மாட்டார்கள். அவர்கள் இயேசுவைக்குறித்து அறிந்துள்ளனர். மிஷனரிகள் அதை கொண்டு செல்லுகிறார்கள். அவன், “ஓ ஆம், ஆனால் ஜனங்களாகிய நீங்கள் எல்லாரும் கலந்தவராயிருக்கிறீர்கள்”என்றார். “நீங்கள் நீங்கள் - நீங்கள் அந்த மனிதராகிய இயேசுவைக் குறித்து  நினைக்கிறீர்கள்… அவர் ஒரு பரிசுத்த மனிதனாயிருந்தால், கொடூரமான மனிதன் அவரை சிலுவையிலறைய அனுமதிப்பாரா, அது முட்டாள்தனம்?” என்றார். “அவர் ஒரு குதிரையில் மேலே பரலோகத்துக்கு சவாரி செய்தார். அங்கே தான் அவர் சென்றார்” என்றான்.
49.       மேலும் - மேலும் சீக்கியர்கள், அவர்கள் ஒரு தலைப்பாகையை அணிகின்றனர், இங்கே உள்ளே அவர்கள் ஒரு கத்தியை கொண்டிருக்கின்றனர். ஒரு கிறிஸ்தவன் தன்னுடைய முதுகை திருப்புகிறவனாய் அவர்கள் காணும் ஒவ்வொரு தடவையும் அவனை அவர்கள் கொல்லுகிறார்கள் (பாருங்கள்?), ஏனெனில் அப்பொழுது அவன் பரலோகத்தை அடைகிறான். கிறிஸ்தவர்களும் கூட பரலோகத்திற்கு சென்று கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவன் பரலோகம் செல்கையில் கிறிஸ்தவனாக சென்று, ஜெயினனுக்கு (துயin) வேலைக்காரானாக போகிறான். நீங்கள் பாருங்கள்? எனவே இங்கே கீழே பூமியில் அவன் அவர்களில் அநேகரை தீர்த்துக்கட்ட முடிந்தால் அவன் அநேக வேலைக்காரனைக் கொண்டிருப்பான். நீங்கள் பாருங்கள்? எனவே அவன் உங்களைக் கொன்றால், நீங்கள் அப்படியே சாகிறீர்கள@; அவ்வளவு தான் பின்னால் அவர்களுடைய தலைப் பாகையில், நீங்கள் கூற முடியும், அவர்கள் இங்கே ஒரு சிறிய சீப்பை (உழஅடி) நுழைத்து வைக்கிறார்கள். ஒரு கத்தியை அங்கே பக்கவாட்டில் சுற்றி நுழைத்து வைக்கிறார்கள். அவர்கள் விரும்புவது உங்களுடைய பின்புறம் திரும்பி, நீங்கள் இருப்பது மாத்திரமே அவ்வளவு தான். மேலும் அப்படியே ஒவ்வொன்றும், உலகத்தின் மதங்கள்…
50.       செய்தி கொடுத்துக் கொண்டிருந்த அந்த இரவு, கூட்டத்தின் முதல் இரவு, அங்கே இருந்த ஜனங்களை கணக்கிடுவதற்கு எந்த வழியும் இல்லாதிருந்தது. நீங்கள் அவர்களை வைத்துக்கொள்ள போதிய இடம் அங்கே இல்லாதிருந்தது. இந்தியப் பெருங்கடல் பருவ காற்றால் மழைகளும் இருந்தன@ ஜனங்கள் அங்கே வெளியே சரியாக உதவியற்ற நிலையில் கிடந்தனர். மேலும், ஓ, அப்படிப்பட்ட பரிதாபகரமான வியாதியஸ்தர்கள்;. மேலே வந்த முதலாவது காரியம்  ஒரு சிறு பையனாக இருந்தது அது அவர்களை எழுந்து நிற்க செய்தது. அவன் இந்து மதத்தை சேர்ந்த ஒருவனாக  இருந்தான் என்று நான் நம்புகிறேன். பால், அவன் இந்து மதத்தை சேர்ந்தவன் தானே? அவனால் முடியவில்லை… சிறிய செவிடும் ஊமையுமான சிறுவன், செவிடும் ஊமையுமாகவே பிறந்திருந்தான்.
51.       மேலும் நான், “இப்பொழுது, இங்கே முதலாவது காரியம் என்னவெனில், இங்கே ஒரு சிறு பையன் இருக்கிறான்”என்றேன்.நான் “இப்பொழுது,  ஜெயினர்களாகிய உங்களில் ஒவ்வொருவரும், அவர்களை முகமதியர்களாக மாற்ற முயற்சிப்பீர்கள்@ மற்றவர்கள்  உங்களை வித்தியாச மான காரியங்களில் கொண்டு வர முயற்சிப்பார்கள்;, உங்களுடைய ஒரு எண்ணத்தின் மாற்றம் (யு-லயட-iஉமள) என்றேன்.
52.       அவர்களனைவரும் தாங்கள் கொண்டிருக்கும் தங்களுடைய வேதாகமங்களை வாசிக்கிறார்கள். இந்த பைபிள் அல்ல, அவர்கள் குரான் வேதாகமங்களைக் கொண்டிருக்கிறார்கள், நீங்கள் அதை அறிவீர்கள். எனவே அவர்கள்… அது முகமதியர்கள் வழியாக. அவர்கள்-அவர்கள் வௌ;வேறான ஸ்தாபகர்களைக் கொண்டுள்ளனர்.
53.       இப்பொழுது ஒரு மனிதன் தானே தேவனாக இருக்கிறான் என்றும் ஒவ்வொரு மனிதனும் ஒரு தேவனாக இருக்கிறான் என்றும் விசுவாசிக்கும்; சிலர் அங்கே உள்ளனர். நீங்கள் எவ்வளவு நல்லவர்களாக இருக்கிறீர்களோ அவ்வளவு நல்ல தேவனாக இருக்கிறீர்கள். மேலும், ஓ, அவர்கள் செய்வதைக் காணும் போது, அது எவ்வளவு பயங்கரமாக உள்ளது.
54.       நான் அங்கே மேலே நின்று, “கண்ணியமான மனிதர்களே, இப்பொழுது பாருங்கள்” என்றேன், சகோதரர்களே, நான் அவர்களை அவ்விதம் அழைக்க முடியாது தான். உலகத்தின் மதங்களுக்கு அவர்கள் கண்ணியமான மனிதர்களென்று பாவித்து  அவர்களுக்கு பிரசங்கித்தேன். பாருங்கள்?  மேலும், நான், “இப்பொழுது, நான் ஒன்றை உங்களிடம் கேட்க  விரும்புகிறேன்;. நாம் அனைவரும் இன்று, இன்னும் சரியாக கூறினால், இன்றிரவு இங்கே இருக்கிறோம். மேலும் நீங்கள் இந்த எல்லா வித்தியாசமான காரியங்களைக் கொண்டிருக்கிறீர்கள்@ நீங்கள் மிருக ஜீவன்களையும் வழிபடுகிறீர்கள்@ நீங்கள் ஒவ்வொன்றையும் ஆராதிக்கிறீர்கள்” என்றேன். மேலும் நான் “நீங்கள் என்னை பொறுத்துக் கொள்வீர்களானால், இதுவெல்லாம் மூட நம்பிக்கைகள்” என்றேன். அவர்களனை வரும் ஆங்கிலத்தைப் புரிந்து கொள்ள முடிந்ததே தவிர, அவர்கள் அதைத் திரும்ப பேச முடியவில்லை. ஏனெனில் நீண்ட காலமாக இங்கிலாந்து அவர்களை அடக்கி ஆண்டிருந்தது.
55.       நான், “இங்கேயிருக்கும் நீங்கள் ஒவ்வொருவரும் வித்தியாசமான மதங்களின் அங்கத்தினர்களாக இருக்கிறீர்கள்” என்றேன். நான், “நீங்கள் சென்று மதம் மாறுகிறீர்கள். நீங்கள் ஒரு–ஒரு– ஒரு சீக்கியனை எடுத்து அவனை ஒரு ஜெயினனாக (துயin) ஆக்குகிறீர்கள்@ நீங்கள் ஒரு முகமதியனை எடுத்து, அவனை ஒரு-ஒரு புத்த மதத்தை சேர்ந்தவனாக ஆக்குகிறீர்கள், மற்றும் அதைப் போன்று மற்றவைகளையும் செய்கிறீர்கள்.அது எண்ணத்தின் மாற்றம் மட்டுமே. அவ்வளவுதான்” என்றேன்.
56.       நான், “நாங்கள் அமெரிக்காவிலும் அதைப்போன்ற ஏதோவொன்றை கொண்டிருக்கிறோம். நாங்களும் இந்த காரியங்களினால் பாதிக்கப்படாமல் இல்லை. ஆனால் நாங்களனைவரும் ஒரே தேவனில் விசுவாசம் கொண்டிருக் கிறோம்.நாங்கள் மெதோடிஸ்டுகளையும் பாப்டிஸ்டுகளையும் பிரஸ்பிடேரியன்களையும் கொண்டிருக்கிறோம், அவர்கள் ஸ்தாபனங்களில் சேரும்படி ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு மாறுகிறார்கள்" என்றேன்.
57.       “ஆனால் நீங்களெல்லாரும் ஒரு தேவனிலிருந்து, மற்றொன்றிற்கு மதம் மாறுகிறீர்கள். நீங்கள் பாருங்கள்? இப்பொழுது, அது என்ன? அது ஒவ்வொருவரின் மூடநம்பிக்கைகள்” என்றேன்.
58.       நான், “நீங்கள் ஆராதிக்கும் பெரிய சிருஷ்டிப்பாகிய பூச்சி, நீங்கள் ஆராதிக்கும் பசு, குதிரை, அல்லது அது என்னவாகவும் இருக்கலாம், சர்வ வல்லமையுள்ள தேவனே அந்த ஐந்துவை சிருஷ்டித்தார். பாருங்கள். நீங்கள் சிருஷ்டிகருக்குப் பதிலாக சிருஷ்டிப்பை ஆராதித்துக் கொண்டிருக்கிறீர்கள் (பாருங்கள்?)” என்றேன், நான், “இப்பொழுது, அவையெல்லாம் ஒன்றுமில்லை…” என்றேன். அவர்களில் சிலர் சொரூபங்களுடனும் மற்றவைகளுடனும் இருந்தனர். நான், “அவைகளில் ஒன்றும் உங்களுக்கு உதவி செய்ய முடியாது, திருப்பிப்பேசக்கூடியது அவைகளில் எதுவுமில்லை. அவைகளெல்லாம் ஊமையானவை, திருப்பி பேசுவது அவைகளில் எதுவுமில்லை, கிரியையில் ஈடுபடுவது அவைகளில் எதுவுமில்லை” என்றேன்.
59.       “ஆனால் உண்மையான ஜீவிக்கும் தேவன் ஒருவர் மாத்திரமே, இயேசு கிறிஸ்து தான் அவருடைய குமாரன். இப்பொழுது, அவரைப் பிரதிநிதித்துவப்படுத்தும்படி தான் நான் இங்கே இருக்கிறேன்” என்றேன்.
60.       நான் “இப்பொழுது, யார் தேவனென்று நிரூபித்து கூறுவதற்கு பாகாலின் எல்லா தீர்க்கதரிசிகளையும் மற்றவர்களையும் தீர்க்கதரிசியாகிய எலியா கர்மேல் பர்வதத்திற்கு கொண்டு வந்தது போல இது உள்ளது” என்றேன், நான், “இப்பொழுது செய்வதற்கு அங்கே ஒரே ஒரு காரியம் மாத்திரமே உள்ளது. உங்களுடைய தேவர்கள் சரியானால், அப்போது என்னுடையதை விட்டு விட்டு, உங்களுடையதை சேவிப்பேன்" என்றேன்.
61.       “இப்பொழுது, இங்கே ஒரு செவிடும் ஊமையுமான பையன் நிற்கிறான் உங்களுடைய தேவர்களில் எந்த ஒன்று அவனுக்கு கேட்கும் திறனையும்; பேச்சையும் கொடுத்து சுகமாக்கமுடியும்? அதைத்தான் நான் அறிய விரும்புகிறேன். பாருங்கள்? எந்தவொன்று இந்தப் பையனுக்கு பேச்சை திரும்பக் கொடுக்க முடியும்?” என்றேன். ஒவ்வொருவரும் பேசாமல் இருந்தனர்.
62.       நான் “இப்பொழுது, கிறிஸ்தவமானது துண்டுபிரதிகளிலும் மற்றும் வேதாகமத்திலும் உபதேசத்தின் வடிவிலும் உங்களைப் பிரதிநிதித்துவப்படுத்திக் கொண்டிருக்கிறது” என்றேன். நான் நூறு சதவீதம் அதற்காக இருக்கிறேன். அங்கு சென்று அங்கே வசிக்கும் அந்த மிஷனரிமார்களுக்கு தேவன் உதவி செய்வாராக. ஆம், ஐயா. ஆனால், நான், “அது முழுவதுமாக உங்களிடம் பிரதிநிதித்துவப்படுத்துவதாக இல்லை” என்றேன். நீங்கள் பாருங்கள்? நான், “அது வார்த்தையில் மாத்திரம் உங்களைப் பிரதிநிதித்துவப்படுத்து வதாக உள்ளது. ஆனால் ஏற்கனவே உங்களுடைய இருதயங்களில் நீங்கள் வைத்திருக்கும்,அந்த வார்த்தையை எழுதின தேவன், இப்பொழுது வார்த்தையில் தம்மைத் தாமே அடையாளம் கண்டுக் கொண்டு, அவர் வார்த்தையை ஜீவிக்கச் செய்யப் போகும் நிலைக்கு அது வந்துள்ளது, (பாருங்கள்?)” என்றேன்.
63.       நான், “இங்கே இந்தப் பையன் நிற்கிறான். அவன் செவிடும் ஊமையுமாய் இருக்கிறான். அவனால் பேசவோ அல்லது கேட்கவோ அல்லது எதற்குமோ முடியவில்லை. அவன் அவ்வாறே பிறந்திருக்கிறான்” என்றேன். அங்கிருந்த பரிசுத்த ஆவியானவர் ஜனங்களின் பாவங்களையும் காரியங்களையும் வெளிப்படுத்தினார். அவர்கள் அதைக் கண்டபோது, ஏறக்குறைய மயக்கம் அடைந்து விட்டனர், நீங்கள் அறிவீர்கள்.
64.       மேலும் அவர்களனைவரும் அதிக சத்தமிடுகின்றனர், உங்களால் அதைப் புரிந்து கொள்ள முடியாது, ஏனெனில் அவர்களைக் கவனித்துக்கொள்ள குடிமக்கள் இராணுவத்தை (அடைவையை) அவர்கள் கொண்டிருந்தனர், நீங்கள் அறிவீர்கள். மேலும் அவர்கள் அப்படியே மேலும் கீழும் இருந்தனர். ஓ, என்னே. அங்கே முழு இந்தியாவைச் சுற்றிலுமிருந்து ஜனங்கள் வந்திருந்தனர். எனவே நீங்கள் - அங்கே எத்தனை பேர் இருந்தார்களா அல்லது இல்லையாவென்று உங்களால் கூற முடியாது. (நீங்கள் பாருங்கள்?) நீங்கள் அதைப் புரிந்துகொள்ள முடியாது. எனவே பிறகு, நான் இச்சிறு பையனை அங்கே மேலே கொண்டு வந்த போது…
65.       மேலும் நான், “பரலோகப் பிதாவே, இப்பொழுது இங்கிருக்கும் மற்ற மனிதர்களைப் போலவே நானும் இருக்கிறேன் என்பதை நீர் அறிவீர். அது உம்முடைய கிருபையாக இல்லாமல் இருந்தால், அவர்களுடைய உருவிலும் மோசமானவனாக நான் இருந்திருப்பேன். நீர் கவனியும். நீர் என்னை இரட்சித்தீர். மேலும் நான் - நான் இதுவெல்லாம் உம்முடைய கட்டளைப்படியே நடக்கிறது, எனக்காக அல்ல. மேலும் இப்பொழுது, என்னால் ஏதாவதொன்றைச் செய்ய முடியும் என்று நான் கூறவில்லை என்பதை நீர் அறிவீர். அது நீரே, கர்த்தாவே. ஆனால் சரியாக இங்கே, இவ்வுலகத்தின் மதங்களும் மூட நம்பிக்கைகளும்… தீர்க்கதரிசியாகிய எலியாவின் நாட்களில் இருந்தது போலவும், உம்முடைய குமாரனாகிய இயேசுவின் நாட்களில் இருந்தது போலவும், அப்படியே அது மீண்டும் இப்பொழுது இருக்கிறது” என்றேன்.
66.       நான், “தேவனாகிய கர்த்தாவே, நீர் மாத்திரமே ஜீவிக்கும் உண்மையான தேவனென்றும், மனித இனத்தை உண்டாக்கின ஒருவர் நீரே என்றும் ஊமையர்களைப் பேசவைக்கவும் அல்லது செவிடர்களைக் கேட்கச் செய்யவும் உம்மால் கூடும் என்றும் இன்னும் ஒருவிசை கூட கட்டாயம் அறியப்படட்டும். அவருடைய வார்த்தையின் பிரகாரம், உம்முடைய குமாரனுடைய நாமத்தில், நான் உம்மிடம் கேட்கிறேன்@ ஒரு கிறிஸ்தவ விசுவாசியாக இருந்து ‘உம்மிடம் எதையாவது கேட்டால்’ - ~அவருடைய நாமத்தில் பிதாவிடம் எதையாவது கேட்டால் அது அருளப்படும்| என்றீர். இப்பொழுது நான் அவருடைய வார்த்தையை விசுவாசிக்கிறேன், செவிடும் ஊமையுமான ஆவி பையனை விட்டு விலகும்படி நான் கேட்கிறேன்” என்று அதைப் போன்று கூறினேன்.
67.       இதைப்போன்று நான் என்னுடைய கரங்களைத் தட்டினேன். (சகோதரன் பிரான்ஹாம் தன்னுடைய கரங்களை ஒருமுறை ஒன்றாகத் தட்டுகிறார்–ஆசிரியர்) அவன் திரும்பி சுற்றிலும் நோக்கிப் பார்த்தான். அவன் தன்னுடைய காதுகளை இதைப்போன்று பிடித்துக்கொண்டு, கூட்டத்தினரில் யாரையும் போல எவ்வளவு நன்றாக பேச அல்லது கேட்க முடியுமோ அப்படியாக அதைப் போன்று அவன் அங்கே இருந்தான்.
68.       நல்லது, இது அதைத் துவங்கினது. அடுத்து, பின்னர் உங்களால் வெளியே போக முடியாது… அவர்கள் உங்களை வெளியே அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது. அங்கே போக வழியே இல்லாதிருந்தது. அவர்கள் அப்படியே…அவர்கள் பக்கத்திலேயே இருந்து என்னுடைய காலணிகளையும்,என்னுடைய உடைகளையும் இழுத்தார்கள். இராணுவங்கள் அவர்களை பின்னால் கொண்டு செல்ல முடியவில்லை. குடிமக்கள் இராணுவம், பாதுகாப்புப் படைகள் அவர்களை பின்னால் கொண்டு செல்ல முடியவில்லை. அவர்கள் ஓடிக்கொண்டிருந்து, சரியாக பாதுகாப்பு வேலியை இதைப்போன்று உடைத்து விட்டிருந்தார்கள், அவர்கள் - அவர்களால் கூடுமானால், அவர்கள் உங்களை ஆராதித்திருப்பார்கள் (நீங்கள் பாருங்கள்?)அவர்கள் புரிந்துக்கொள்ளவில்லை. அவர்களிடம் சென்றடைய நீங்கள் எவ்வளவு முயற்சிக்கிறீர்கள் என்பது காரியமல்ல, அவர்கள் புரிந்துகொள்ள மாட்டார்கள்.
69.       அடுத்ததாக ஒரு மனிதன், அடுத்த நாள் மாலையில், ஏறக்குறைய இருபது அல்லது முப்பது வருடங்களாக குருடாயிருந்த ஒரு மனிதன் இருந்தான், ஓ, சூரியனை ஆராதிக்கும் ஒருவன், தன்னுடைய கண்கள் குருடாகிப் போவது வரை சூரியனை பார்த்துக் கொண்டிருந்தவன், இதைப் போன்று, அவன் முழுவதும் குருடாகிப போவது வரை சரியாக சூரியனை நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தான். இருபது அல்லது முப்பது வருடங்களாக எதையும் கண் கொண்டு பார்த்திருக்கவில்லை. அவன் அடுத்ததாக இருக்க நேர்ந்தது, தன்னுடைய வழியில் சென்று அடுத்த இரவில் அங்கே மேலே வந்தான்.
70.       நான், “இப்பொழுது, கடந்த இரவு சம்பவித்தது என்ன?” என்றேன், நான் சென்ற பிற்பாடு, நீங்கள் கடினமாக கேட்க முடியாது. நீங்கள் பாருங்கள்? அவர்கள் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு மதத்தையும் மற்றும் காரியங்களையும் கொண்டிருந்தனர். நான், “உங்களில் எத்தனை பேர் இப்பொழுது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்?”என்றேன். நீங்கள் பாருங்கள்? காணக்கூடிய ஒவ்வொருவரும், ஒவ்வொரு இடத்திலும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டனர். மேலும் - மேலும், நிச்சயமாக, உங்களால் முடியாது… நான் காணக்கூடிய இடத்தில், என்னால் அதிகமாகப் பார்க்கமுடியவில்லை.
71.       நாங்கள் ஒரு திறந்த வெளியையும் கொண்டிருக்க முடியவில்லை, மழை பெய்து கொண்டும், மற்றும் அதைப் போன்ற காரியங்கள் இருந்தும் ஜனங்கள் அப்படியே அங்கேயே இருந்தனர், நீங்கள் அவர்களிடம் சென்றடைய முடியாது. ஓ, அது நீங்கள் எப்போதாவது கண்டதிலேயே மிகவும் பரிதாபகரமான காட்சியாகும். மேலும் - மேலும் கூட்டத்திற்கு வந்து சேர சாலையிலும் மற்றும் காரியங்களின் மீதும் நெடுகிலும், ஒரு வயதான வெள்ளாட்டை இழுத்துக் கொண்டே, (நீங்கள் அறிவீர்கள், அல்லது அதைப் போன்று ஏதோ மற்றொன்று) இடைவிடாது வந்து கொண்டிருந்தனர்.
72.       அந்த இரவில் அந்த குருடான மனிதன் அங்கிருந்தான், நான் “இப்பொழுது, உங்களுடைய தேவர்களில் எந்த வொன்று அவருக்கு பார்வையைக் கொடுக்கக்கூடும்?” என்றேன். நான், “உங்களுடனே கூட ஆராதிப்பவர்களில் ஒருவர் இங்கே இருக்கிறார், மூடநம்பிக்கையாயிருந்த போதிலும், சூரியனைப் பார்த்துக்கொண்டிருந்து, அவருடைய கண்கள் செயலிழந்தன” என்றேன்.மேலும் நான், “அவர் சூரியனை ஆராதிப்பவர், ஏனெனில் சிருஷ்டிக்கப்பட்ட ஏதோவொன்றுதான்; சிருஷ்டித்தன என்றும், சிருஷ்டிக்கப்பட்ட ஏதோவொரு சிருஷ்டிதான், ஏதோ வொன்றை சிருஷ்டித்தது என்றும் அவர் அறிந்தார்” என்றேன்.
73.       ஆனால் நான், “சூரியனை சிருஷ்டித்த பெரிய சிருஷ்டிகரே இந்த மனிதனில் கண்களையும் சிருஷ்டித்தார் (பாருங்கள்?) அதே ஒருவர்” என்றேன். மேலும் நான், “இப்பொழுது, தேவனுக்குச் சித்தமானால், அவர் அவனுக்கு அவனுடைய பார்வையைக் கொடுப்பார்… நான் உங்களிடம் மேலும் கேட்பதற்கு முன், சிலுவையிலறையப்பட்ட கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை தேவனுடைய குமாரனென்று உங்களில் எத்தனை பேர் ஏற்றுக்கொள்வீர்கள்?” என்றேன்.
74.       கிறிஸ்தவர்களாகிய நாம் கூறுகிற அந்த பரிசுத்த மனிதன் மரித்தது எப்படி என்று அவர்களால் புரிந்துக்கொள்ள முடியவில்லை. நான் “அவர் மரித்ததற்கு காரணம் நம்முடைய பாவங்களை அப்பால் நீக்குவதற் காகவே. அவர் மூன்றாவது நபரோ அல்லது இரண்டாவது  நபரோ அல்ல@ நம்முடைய பாவங்களை அப்பால் நீக்குவதற்காக மாம்சமான அதே நபராக அவர் இருந்தார்” என்றேன். நான், “அவர்–அவர் வந்து… உண்டாக்க வேண்டியவராயிருக்கிறார்” என்றேன்.
75.       நான் இங்கிருந்து செல்வதற்கு முந்தின இரவு, இங்கே நான் பிரசங்கித்த, தேனீயின் சிறு கதையை அவர்களுக்குக் கொடுத்தேன், நீங்கள் அறிவீர்கள், எப்படியாக அதன் முட்கள், அதனுடைய கொடுக்குகளை விட்டு விலகின பிறகு, நீங்கள் அறிவீர்கள், இனிமேலும் அது முள்ளாக இருக்க முடியாது. தேனீயின் கொடுக்கின் மரணத்திற்காக மனித மாம்சத்தை அது கொண்டிருக்க வேண்டிய தாயிருந்தது, ஏனெனில் மரணமானது ஆத்துமாவில் அல்ல. மரணமானது மாம்சத்தில் உள்ளது. எனவே அது… மரணத்தின் கொடுக்கை அப்பால் கொண்டு செல்ல வேண்டுமென்றால், தேவன் மாம்சமாக வேண்டியிருந்தது. எனவே பின்னர்…அவர்கள் அதைக் காண வேண்டியிருந்தது, நீங்கள் அறிவீர்கள், ஏனெனில் அனேக பூச்சிகள் இந்தியாவில் உள்ளன, மேலும் அவர்கள் - அவர்கள்...
76.       ஊ, நான், “இப்பொழுது பாருங்கள். பெரிய சிருஷ்டிகராகிய அந்த தேவனால் கூடும், … இந்த மனிதன், அவனுடைய மூடநம்பிக்கையில், சூரியனைப் பார்த்துக் கொண்டிருந்து, இங்கிருந்து அவன் மரிக்கும் போது ஏதோவொரு இடத்தில் அவன் செல்கிறானென்று அவன் அறிந்து, தன்னுடைய ஆத்துமாவுக்காக இரக்கத்தைக் கண்டுக் கொள்ளும்படி முயற்சித்தான்…இருந்த போதிலும், அவனுடைய கண்கள் போய்விட்டிருக்கிறது@ அறியாமையால் அவன் இதைச் செய்தான். ஆனால் அவன் பார்த்துக் கொண்டிருந்த சூரியனை உண்டாக்கின பெரிய சிருஷடிகர், அவனுடைய கண்ணில் திரும்பவும் பார்வையை உண்டாக்க முடியும்” என்றேன்.
77.       நான், “கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை உங்கள் இரட்சகராக ஏற்றுக்கொள்வதற்கும், எல்லா விக்கிரகங் களையும் மற்றவைகளையும் விட்டு விட்டு, உங்கள் ஜீவியத்தின் அனைத்து நாட்களிலும் அவரை சேவிக்க உங்களுக்கு விருப்பமா ஐயா? நீங்கள் விரும்பினால், உங்கள் கரங்களை உயர்த்துங்கள்” என்றேன். அந்த ஏழையான வயதான நபர் தன்னுடைய நடுங்கும் கரத்தை மேலே உயர்த்தினார். அங்கிருக்கும் ஒவ்வொருவரும் அவர்களைச்சுற்றிலும் வெறும் ஒரு துண்டு இடுப்புத்துணியை அணிகின்றனர், நீங்கள் அறிவீர்கள். அவன் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொள்வதாக தன்னுடைய கரங்களை உயர்த்தினான்.
78.       அங்கே சபை இருக்கும்போதும் அவர்கள் உட்காருவது கிடையாது. கிடையாது… அவர்கள் இருக்கைகளையோ அல்லது எதையுமோ கொண்டிருக்கவில்லை. அவர்கள் படுத்துக்கொண்டோ அல்லது உட்கார்ந்து கொண்டோ அல்லது தொங்கிக்கொண்டோ அல்லது ஒருவர் மீது மற்றவர் படுத்துக்கொண்டோ, அவர்களால் முடிந்த ஏதோவொன்றை செய்கின்றனர். அது என்ன வாஞ்சை யாயிருக்கும் என்று உங்களால் கற்பனை செய்ய முடியும். உங்களால் காணக்கூடிய தூரம் வரை ஜனங்கள் வாஞ்சையோடிருந்தனர், நீங்கள் பாருங்கள்.
79.       எனவே அவனுடைய பார்வையை அவனுக்கு கொடுக்கும்படி நல்லவரான கர்த்தரிடம் நான் ஜெபித்தேன். அங்கே தேவனுடைய கிருபையால், முழுவதும் குருடாயிருந்த அந்த மனிதன், அவனுடைய வயதான சுருக்கம் மிகுந்த முகத்திலும் தாடியிலும், நீங்கள் அறிவீர்கள், வெண்மையான தாடியிலும் கண்ணீர்கள் பாயத்துவங்கியது, அதைப்போன்று ஓடிக்கொண்டிருந்தது. மேலும் அவன் தன்னுடைய சொந்த மொழியில் ஏதோ வொன்றை கூக்குரலிடத் துவங்கினான். மேலும் ஒவ்வொருவரும் அலறத் துவங்கினர். அவன் அங்கே வெளியே சென்று, அதைப் போன்று ஒவ்வொருவரிடமும் துரிதமாக கூறிக்கொண்டிருந்தான். குருடாகி விட்டிருந்த அந்த மனிதனால் காணமுடிந்தது.
80.       இப்பொழுது, சகோதரன் காக்ஸ்-ம் அவர்களும், அவர் பின்னால் உட்கார்ந்துக் கொண்டிருக்கிறார் என்று நான் எண்ணுகிறேன்.இந்தியாவிலிருந்து வந்த இந்த காரியங்களின் நிரூபணத்தின் கடிதங்களை அவர் உங்களுக்குக் காட்ட முடியும், அதைக் கூறுவதற்கு அதிக-அதிக-அதிக நேரம் பிடிக்கும்.
81.       நாங்கள் சென்று கொண்டிருந்த வழியில், நான் - நான் தங்கமுடியவில்லை. அது… நான் எவ்வாறு ஐந்து இரவுகளைப் கொண்டிருந்தேன் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. என்னுடைய பையன் பில்லி பால் திரும்பிவராமலும் தேவ உதவியும் இல்லாமலிருந்தால்;, நான் எவ்வாறு அதைச் செயதிருப்பேன்; என்பது எனக்குத் தெரியாது. பில்லி என்னால் சிரமப்பட்டான். அவன் - அவன் என்னை கூட்டத்தினுள் செல்லும்படி அழைத்துச் செல்ல முயற்சித்தான். ஜனங்களாகிய அவர்கள், நீங்கள் அறிவீர்கள், அது… அவர்கள் அப்படியே…அவர்கள் மிகவும் எளிதில் பயப்படுகிறவர்களாயிருக்கிறார்கள்;. அவர்கள் எதையும் புண்படுத்த விரும்புவதில்லை. நீங்கள் அப்படியே போக வேண்டியதாயிருக்கிறது (பாருங்கள்?) ஏனெனில் நீங்கள் கூட்டத்தினரின் கீழே மிதிக்கப்படுவீர்கள், நமக்கு - நமக்கு தெரியாது. நீங்கள் அறிவீர்கள். அது அப்படியே உங்களை மரணத்திற்கு ஏதுவாக மிதித்துப் போடுகிறது. நீங்கள் பாருங்கள், அப்படியே அதனூடாகச் செல்ல வேண்டியிருக்கிறது.
82.       எனவே, நல்லது, நான் தேவனுடைய கிருபையால் மீண்டும் வீட்டிற்குத் திரும்பினேன். என்னால் இன்னும் அதிகமாகக் கூற முடியும், ஆனால் இது ஞாயிறு பள்ளிக்கான நேரம். நான் ஒரு மிஷனரி உரையில் வார்த்தையின் போதகத்தைப் பேச விரும்பவில்லை.
83.       நீங்கள் ஏதாவது உணவுப் பொட்டலங்களைக் கொண்டிருந்தால், நீங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்ள விரும்பினால், அதை இந்தியாவுக்கு அனுப்புங்கள். ஜெர்மனிக்கு எதிராக எனக்கு எதுவுமில்லை@ அவர்கள் அருமையான ஜனங்கள், இந்த மற்ற ஜனங்களுக்கு விரோதமாகவே. ஆனால், சகோதர சகோதரிகளே, நாம் மூலப்பொருளை அவர்களுக்கு மாத்திரம் அனுப்பி, அவர்களைக் கட்டுவித்து, பின்னர் அவர்களுடன் வேறொரு யுத்தத்தைக் கொண்டிருக்கிறோம். பாருங்கள்? அது சரியே. அது உண்மையாகவே தேவைப்படும் ஏதோவொரு இடத்திற்கு அதை அனுப்புவோமாக. பாருங்கள்? நீங்கள் அனுப்புவதற்கு ஏதாவது பெற்றிருந்தால், இந்தியாவுக்கு அதை அனுப்புங்கள்.தேவையாருக்கிற ஒன்று உண்டென்றால் அது அவர்களே. மேலும் அவர்கள் ஏழ்மையான, படிப்பறிவில்லாதவர்கள், அவர்கள் இயற்கை வளங்களைக் கொண்டுள்ளனர், ஆனால் அதை எவ்வாறு மேம்படுத்துவது என்பதை அறியும் அறிவுத்திறனைப் பெற்றிருக்கவில்லை. அவர்களுக்குத் தெரிந்த ஒரே காரியம் பிச்சை எடுப்பதே@ அதைத்தான் அவர்கள் செய்கின்றனர்.
84.       அவர்கள் என்னை ஒரு வேட்டைக்கு அழைத்துச் செல்லப் போவதாக இருந்தனர். நான் வேட்டையாடுவதை எவ்வளவு விரும்புகிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவர்கள் என்னை அவர்களுடைய செலவில் அங்கே ஒரு பெரிய வங்காள புலியை வேட்டையாட அழைத்துச் செல்லப் போவதாக இருந்தனர். நான், “எனக்கு ஒரு உதவி செய்யுங்கள். அதற்காக நீங்கள் செலவழிக்கும் அதே பணத்தை எடுத்துச் சென்று, அங்கே வெளியே இருக்கும் ஏழையான ஜனங்களாகிய அவர்களைப் போஷியுங்கள். நான் அது இல்லாமல் வீட்டிற்குச் செல்வேன். நீங்கள் பாருங்கள்? அது சரியே, ஏனெனில் நான் - நான் வேறு எங்காகிலும் வேட்டையாடிக் கொள்ள முடியும்” என்றேன். நீங்கள் பாருங்கள்?
85.       நீங்கள் ஏதாவது பழைய துணிகளை எப்பொழுதாவது கொண்டிருந்து, ஏதோவொன்றை நீங்கள் அனுப்ப விரும்பினால், அதை இந்தியாவிற்கு அனுப்புங்கள். பாருங்கள்? நான் இப்பொழுது ஏறக்குறைய உலகம் முழுவதும் பிரயாணம் செய்துள்ளேன். ஒரு கிறிஸ்தவ சகோதரனாக, இந்தியா தேவையில் உள்ளது என்பதை நான் - நான் அறிவேன்.
86.       இப்பொழுது, நான் வீட்டிற்குச் செல்லுகிறேன்@ கர்த்தர் என்னிடம் செய்யும்படி கூறிக் கொண்டிருக்கும் ஒவ்வொன்றையும் என் அறிவுக்கு எட்டினது வரை நிறைவேற்றினேன் என்பதை நான் அறிவேன். இந்த அடுத்த வாரம்… சம்பவித்த ஒரு சிறிய ஏதோவொன்றை நான் உங்களிடம் கூறப்போகிறேன்.
87.       நான் ஆளுநருடன் விருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அவர்கள் அதில் சமைக்கப்பட்டு ஒலிவ எண்ணெயில் பதப்படுத்தப்பட்ட ஆட்டுக்காலுடன் சிறிது பழைய அரிசியையும் அங்கே என்னிடம் கொடுத்தார்கள். நீங்கள் கற்பனை செய்து பார்க்க முடியும், எவ்வளவு முடியுமோ அவ்வளவு மந்தமாக நான்… எனவே என்னை சுகவீனமாக்கினது. நான் அதை கடுமையாக தாங்கிக் கொள்ள முடியவில்லை. நான் அப்படியே ஏறக்குறைய வாந்தியெடுக்க ஆயத்தமானேன். ஆளுநர் என்னை நோக்கி, “ஐயா, நீங்கள் சுகவீனமாயிருக்கிறீர்கள் என்று நான் நம்புகிறேன்” என்றார்.
88.       நான், “ஓ” என்றேன், நான் “ஆகாரம் சிறிது வித்தியாசமாய் உள்ளது என்று நான் எண்ணுகிறேன்” என்றேன்.
89.       நாங்கள் உணவு விடுதிக்குச் சென்ற போது, அங்கே ஆளுநரின் தனிப்பட்ட மருத்துவர் எனக்காக காத்துக் கொண்டிருந்தார். “நான் உங்களைப் பரிசோதிக்க விரும்புகிறேன்” என்றார். “நான் ஆளுநரின் தனிப்பட்ட மருத்துவர்” என்றார். நான் “ஓ, நான் நலமாகவே இருக்கிறேன்” என்றேன்.
90.       எனவே அவர் (பரிசோதிக்க) துவங்கினார், நிச்சயமாகவே, ஒரு கண்ணியமானவராக, என்னுடைய எல்லாவற்றையும் பரிசோதித்துக் கொண்டிருந்தார். மேலும் அவர், “நீங்கள் நலமாக இருக்கிறீர்கள் என்று நான் எண்ணுகிறேன்” என்றார். என்னுடைய இரத்த அழுத்தத்தை அவர் எடுப்பது வரை ஒவ்வொன்றும் அருமையாகச் சென்றது. அவர் என்னைத் திரும்பிப் பார்த்து, “நீங்கள் அதிக களைப்பாக இருக்கிறீர்களா?” என்றார்.
91.       நான், “ஆம், ஐயா” என்றேன். கூட்டங்களில் கொண்டிருந்த விளைபலனை நான் அவரிடம் கூறத் துவங்கினேன், அந்தத் தரிசனங்கள், நீங்கள் அறிவீர்கள், அவைகளில் உடைக்கிறதாயிருக்கிறது.
92.       “நீங்கள் எப்படி ஜீவிக்கிறீர்கள் என்றே நான் காணவில்லை” என்றார். “நான் உங்களை எச்சரிக்க விரும்பவில்லை” என்றார், ஆனால், “உம்முடைய இரத்த அழுத்தம் ஏறக்குறைய எவ்வளவு முடியுமோ அவ்வளவு குறைந்து உள்ளது” என்றார். அவர், “உம்முடைய இரத்தத்தைக் கொண்டு செல்ல முடியாத வகையில் உம்முடைய நரம்புகள் பெலவீனமாயுள்ளன” என்றார். பாருங்கள்? “உம்முடைய இரத்த அழுத்தமானது அபாயகரமாக குறைந்து உள்ளது. எவ்வளவு காலம் நீர் இங்கே இருக்கப் போகிறீர்?” என்றார்.
93.       அவர், “நல்லது, நீர் எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவாக அமெரிக்காவுக்குத் திரும்பி, உங்களைப் பார்ப்பதற்காக சில உண்மையான நல்ல டாக்டரைப் பெற்றிடுங்கள் என்று நான் உமக்கு ஆலோசனை கூறுகிறேன்” என்றார். அவர், “ஏனெனில் சிறிது காலத்திற்கு கூட்டங்களைக் கொண்டிருக்காதீர்கள் என்று நான் உமக்கு ஆலோசனை கூறுகிறேன்” என்றார். பாருங்கள்? அது எப்படி இருந்ததென்று நான் அவரிடம் கூறினேன். நிச்சயமாகவே, “பரிமாணங்கள்” என்று அவர் அதை அழைத்தார், நீங்கள் அறிவீர்கள், ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு உடைத்து செல்வது.
94. நான், “நல்லது, ஐயா, நான் வீட்டிற்குச் செல்லும் போது நீங்கள் சொன்னபடியே செய்வேன்” என்றேன், நான், “அவர்களுக்குக் கூட்டங்களை வைப்பேன் என்று அமெரிக்க ஐனங்களுக்கு நான் வாக்குக் கொடுத்திருக்கிறேன், இப்பொழுதிலிருந்து அது இருக்காது” என்றேன். நான்  “அவர்கள்… நான் வெறுமனே ஐனங்களுக்காக nஐபிப்பேன்” என்றேன். பாருங்கள்?
95. ஏனெனில், அது உறுதியான விளைபலனை அது-அது எடுக்க முடியாததை நான் காண்கிறேன். அங்கே கூட்டங்களைக் கொண்டிருக்கின்ற என்னுடைய சகோதரன் ஓரல் ராபர்ட்ஸையும் அந்த நபர்களில் சிலரையும் நான் நோக்குகிறேன், இங்கே அமெரிக்காவில் நான் செய்கிறதை விட அதிக ஜனங்களை இரட்சிக்கப் பண்ணுகிறார்கள். ஒரு மகத்தான தெய்வீக வரமாகிய ஒரு தீர்க்கதரிசன வரத்தை தெய்வீக சுகமளித்தலின் வழியில் பயன்படுத்தி, நான் தவறான வழியில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன் என்று நான் நம்புகிற ஏதோவொன்றாக அது இருக்கிறது. அது தேவனை உற்சாகப்படுத்தவோ, அல்லது நான் செய்து கொண்டிருப்பதில் தேவன் என்னை குறித்து அதிகமாக எண்ணுவதற்கு காரணம் இருப்பதாகவோ நான் எண்ணவில்லை, ஏனெனில் அது அப்படிப்பட்ட ஒரு விளைபலனைக் கொண்டிருக்காது.
96. அவர் அந்த ஐனங்களைக் குறித்து என்னிடம் கூறவில்லை, நீங்கள் அறிவீர்கள். ஒரு முறை செய்து விட்டதாக அவர் கூறினார். ஒரு வேளை மோசேயையும் அவர் அதே வழியில் பிரதிநிதித்துவப்படுத்தினார். ஒரு முறை மோசே எகிப்துக்குச் சென்று தன்னுடைய அற்புதங்களை நடப்பித்தான். அது இதை உறுதிபடுத்துகிறது. அவன் தன்னுடைய கரத்தை எடுத்து, குஷ்டரோகத்திலிருந்து குணமானான்;. மேலும் ஒரு கோலை சர்ப்பமாக மாற்றி, திரும்ப ஒரு கோலாக்கினான், அது இதை என்றென்றுமாக உறுதிபடுத்தியது.
97. பத்து வருடங்கள் அமெரிக்காவின் ஊடாக சென்று, முன்னும் பின்னும், ஒவ்வொரு பட்டணத்தினூடாகவும் அலசிப்பார்த்த பிறகு, இப்பொழுது ஐனங்கள் அது சத்தியம் என்று புரிந்து கொண்டுள்ளனர் என்று நான் எண்ணுகிறேன். பாருங்கள்? இந்த நேரத்தில், அது ஐனங்களுக்காக ஜெபிப்பதைத் தான் நான் செய்யும்படி எண்ணுகிறேன்.
98. நான் மிகவும் - மிகவும் அருமையாக இருந்து கொண்டிருக்கிறேன். நான் ஐனங்களாகிய உங்களை நேசிக்கிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். நான் மரித்துவி;டாத அன்புடன் உங்களை நேசிக்கிறேன், தேவன் அதை அறிவார். நான் தனிமையில் இருந்து கொண்டிருக்கிறேன். நான் கரங்களைக் குலுக்க விரும்பி, கூட்டங்களில் அதைச் செய்வதற்கு பேராவல் கொண்டிருக்கும் ஐனங்கள் இந்த - இந்த அமெரிக்காவின் குறுக்கே உள்ளனர். என்னால் முடியவில்லை. பாருங்கள்? அந்தத் தரிசனம் உங்களுக்கு என்னவாய் பாதிக்கின்றன என்பதை நீங்கள் அறியவில்லை. அப்படியே நீங்கள் அந்த நபருக்கு முன்னே நின்ற உடனேயே, அங்கே அது இருக்கிறது. நீங்கள் பாருங்கள்? நான் சிலசமயங்களில் அதை ஐனங்களுக்குக் கூறுவதில்லை, ஆனால் அந்த நபருக்கு முன்னே அது இருக்கிறது. எனக்குத் தெரியாதென்று நான் விரும்பினதை, ஐனங்களுடனான காரியங்களாக நான் கண்டு கொண்டேன். என்னுடைய நண்பர்களாக இருக்க வேண்டிய ஐனங்கள், இருப்பினும், அது தவறானதென்று நீங்கள் அறிந்துள்ளீர்கள். தேவன் இப்பொழுது கீழே வந்து உங்களுக்கு ஆச்சரியமூட்டும் காரியங்களை நான் உங்களுக்குக் கூறும்படி என்னை அனுமதிப்பார்.
99. அவருக்குச் சித்தமானால், அவர் என்னிடம் கூறுவதை, நான் பரிசுத்த ஆவியானவரிடம் கேட்டிருக்கிறேன்.நான் கூடாரத்தை விட்டுத் திரும்பும் போது, நான் இருக்குமிடத்தை நானே உறுதிபடுத்தும்படியான ஒரு நிலைக்கும், அப்படியே அங்கே திரும்பி வரவும், ஜனங்களுக்கு முன்னே நான் நிற்கும் போது நான் அந்த தரிசனத்தில் பேசாமல் அமைதியா யிருக்கவும் என்னை அனுமதிப்பீரா என்று கேட்டிருக்கிறேன். அது… நான் அந்த சகோதரனிடம் பேச வேண்டும், ஆனால் அவனுடைய நிலையைக் காணக் கூடாது. அப்போது அவருக்காக nஐபிக்க முன்வருதல் (பாருங்கள்?) அதைப்போலிருந்து, அதைச் செய்யும்படி தேவனிடத்தில் நான் கேட்டிருக்கிறேன்.
100. நான் வீட்டிற்கு வந்து சேர்ந்தேன். மேலும் இந்த வாரம் வீட்டைச் சுற்றிலும் யாருமில்லை என்பது எனக்குத் தெரியும்,. அது ஒரு நல்ல காரியம். நான் அங்கே ஏறக்குறைய ஐந்து நாட்களாக இருந்து கொண்டிருக்கிறேன்;; நான் அசையக்கூட முடியவில்லை. நான் எழுந்த போது, என் எலும்புகளில் வேதனை உண்டாகிஇருந்ததைப் போன்று காணப்பட்ட நிலையை அடைய வேண்டியிருந்தது.  நிச்சயமாகவே, அது ஏறக்குறைய மாறுகிறது, பாம்பேக்கும் இங்கேயும் இடையில் சரியாக பதினொன்றரை மணி நேர வித்தியாசம். ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரத்திற்கு முன்பு நான் அப்படியே ஏறக்குறைய தூங்கிக் கொண்டிருந்தேன். (பாருங்கள்?) அது இரவு நேரம், மேலும் அது அப்படியே மாறினது. மேலும் அப்போது அந்த குறைந்த இரத்த அழுத்தம் இதைப் போன்று குறைந்து போய் விட்டிருந்தது, நான் அப்படியே படுக்கையிலிருந்து எழும்ப முடியவில்லை. அவ்வளவு தான். நானே அதைக் கொண்டு வந்து வரம்பு மீறி செல்ல முயற்சித்துக் கொண்டிருந்தேன். எனவே இப்பொழுது தேவனுடைய கிருபையால் வீட்டிற்கு திரும்பி வந்திருக்கிறேன்.
101. இப்பொழுது இரண்டு மூன்று வாரங்கள் சிறிது தனிமையில் இருக்கும்படியாக செல்லப் போகிறேன். முதலாவதாக ஜெபிக்கவும் தனிமையிலிருக்கவும், கர்த்தருக்குச் சித்தமானால், நான் வேட்டையாட செல்ல போகிறேன். ஆனால் அதைச் செய்யும்  முன்பு அது... அது பருவ காலத்துக்கும் மற்றுமுள்ளவற்றிற்கும்!சில நாட்களுக்கு முன்பாக. நான் கொலராடோ வரை செல்கிறேன். அங்கு குறைந்தது இரண்டு மூன்று வாரங்கள் அல்லது அதற்கும் கூடுதலாக தங்க வேண்டுமென்றிருக்கிறேன். தனிமையில் உண்மையாகவே நான் தனித்திருப்பதற்காகவே சென்று 'தேவனே, நான் இங்கிருக்கிறேன்" என்று சொல்லுவேன்.
102.    நான் பொது சேவை நிறுவனத்தில் வேலைபார்க்கும்படி திரு.மிஸ்வரிடம்  வந்து மீண்டும் ஒரு வேலை கேட்கலாம்.
103.    அவர் செய்யும்படி என்னிடம் என்ன கூறுகிறாரோ நான்-நான் அதை நிறை வேற்றுகிறேன். நான் பத்து வருடங்களுக்கு முன்னால் விட்டுப்போன அதே வழியில் இந்தக் காலையில், நான் கூடாரத்தில் நிற்கிறேன். எனக்கு மேலாளர் கிடையாது. கோடை காலத்திலேயே என்னுடைய மேலாளர் ராஜினாமா செய்தார். நான் எந்த மேலாளரையும் கொண்டிருக்கவில்லை.
104.    என்னுடைய பையன் விட்டுச் செல்கிறான். அங்கே பின்னால் உட்கார்ந்திருக்கும், என்னுடைய பையன் இராணுவத்திற்குப் போகிறான். அவன் என்னுடைய தோழனாக இருந்து கொண்டிருந்தான். அவன் என் மூலம் சிரமப்பட்டான்.
105.    அவர்களில் சிலர் எப்போதும், “நீங்கள் ஏன் பில்லியை உங்களுடன் வைத்திருக்கிறீர்கள்?” என்று என்னிடம் படபடக்கின்றனர்.
106.    ஒரு தாயின்றி, அவன் ஒரு பால்குடி மாறாத குழந்தையாக இருந்த போது நான் எப்படியாக என்னுடைய தோளின் மீது அந்தப் பையனை பொதிந்திருந்தேன் என்பதை மாத்திரம் நீங்கள் அறிந்திருந்தால்… அவனுக்கு உணவூட்டுவதற்கு, வீட்டில் நெருப்பில்லாமல் அவனுடைய புட்டியை சூடாக வைத்திருக்கும்படி, இரவில் என்னுடைய தலையின் கீழாக அவனுடைய புட்டியை நான் வைத்திருப்பேன். எல்லா வழியினூடாகவும் அவன் என்னுடைய நண்பனாக இருந்து கொண்டிருக்கிறான். தேவனுக்கு சித்தமானால், அந்த வழியிலேயே நாங்கள் மரிக்கப்போகிறோம்.
107.    அவன்; உண்மையாகவே இராணுவத்திற்குப் போகிறான்@ அவன் தானாக இராணுவத்தில் சேருவானா அல்லது கட்டாயத்தினால் இராணுவத்தில் சேருவானா என்ற தீர்மானத்தை செய்வதற்காக, அவன் நேற்று தன்னுடைய பத்திரிகையை பெற்றான். நல்லது, நான் அவனைக் கொண்டிருக்க மாட்டேன்.
108.    பின்னர், நான் - நான் நானாகவே, ஆனால் நானாக அல்ல. பாருங்கள்? என்னுடைய தாயிடமிருந்து என்னை கொண்டு வந்து, என்னைப் போஷித்து, இந்த ஆழமான சோதனைகளினூடாக என்னை அழைத்துக்கொண்டு வந்த ஒருவர் அங்கு இருக்கிறார். இவ்வாறு நெடுங்காலமாக அவருடைய கிருபை என்னை பாதுகாத்து கொண்டு வந்து, இவைகளினூடாக அழைத்துக் கொண்டு வருகிறார் என்று நான் நம்பிக்கையாயிருக்கிறேன். நான் இருக்கும் இந் நிலைக்கு நான் வந்துள்ளேன்…
109.    வேதவாக்கியத்தில் படிப்பதற்கு சில இடங்களைப் நாம் பெறும் முன் நான் சபையிடம் மேலும் ஒரு காரியத்தை கேட்க விரும்புகிறேன்: அதாவது, நீங்கள் எனக்காக ஜெபிக்க வேண்டும். நான் ஒரு நெருக்கடியான ஆவியை வளர்த்து விட்டேன், அது என்னில் அடிக்கடி வந்து தோன்றுகிறது. நான் நேற்று என்னுடைய மனைவியிடம் முதல் தடவையாக கூறினேன். ஏதோவொன்று இப்பொழுது சம்பவித்தது, நான் வேலியில் உட்கார்ந்து கொண்டிருந்து, நான் அவளிடம் கூறினேன். அவள் என்னை ஞாபகப்படுத்தினாள், நான் அதைப்பற்றி அவளிடம் கூறினேன். நான்,“தேனே, நான் ஜனங்களால் நெருக்கப்படும் வரையுள்ள ஒரு நிலைக்கு வந்திருக்கிறேன்” என்றேன். நான் அப்படியிருக்க விரும்பவில்லை…யார்–அது யாருடைய வேலை? அது என்னுடையதல்ல. குற்றங்;கண்டு பிடிப்பவராக இருக்க வேண்டிய ஒருவர் தேவனே, நானல்ல.
110.    அங்கே சென்ற திருமதி. டவுட் என்ற ஒரு ஸ்திரீ இருக்கிறாள். அவளைப் பற்றி நீங்கள் எப்பொழுதாவது கேள்விபட்டிருக்கிறீர்களோ அல்லவோ எனக்குத் தெரிய வில்லை. ஓ, இந்தியாவிலிருந்த அப்படிப்பட்ட ஒரு வெட்கக் கேடு. நாம் நம்முடைய கூட்டங்களை ஒருவேளை திறந்த வெளியில் கொண்டிருக்க முடியாததற்கு அது தான் காரணமாக இருக்கிறது. அவள் அங்கே மேலே வந்து ஜனங்களாகிய அவர்களிடமிருந்து காணிக்கைகளை எடுக்க முயற்சித்தாள். ஏனெனில் அவர்கள் தங்களுடைய கொஞ்ச ரூபாய்களை கொடுக்க மாட்டார்கள்…
111.    ஒரு வேலையைப் பெற்றிருக்கும் ஒரு சிறு ஏழை ஸ்திரீ ஐந்து மணியிலிருந்து பத்து மணி வரை, தன்னுடைய தலையின் மேலே சாந்தை வைத்து மேலே நடந்து மற்றும் அதைப்போன்ற காரியங்களைச் செய்து, ஒரு நாளில் ஒரு ரூபாய் பெறுகிறாள், அதாவது இருபத்தொன்று சென்ட். பாருங்கள்? அந்த வேலையைத் தொடரும்படி அவள் கடினமாக உழைக்கிறாள். ஒரு ஸ்திரீ தன்னுடைய முழங்கால் வரை நின்று மண்ணைக் குழைக்கிறாள் மற்றும் அதைப் போன்றவைகளைச் செய்கிறாள். ஏழையான சிறிய பழைய காரியங்கள். அதோடு கூட தன்னுடைய சிறு குழந்தையை கவனிக்கிறாள் மற்றும் அதைப் போன்றவை களைச் செய்கிறாள்;: ஒரு ரூபாய், இருபத்தொன்று சென்ட்கள்.
112.    அங்கே ஜனங்களாகிய அவர்களில் குழப்பம் உண்டாக்கி, அந்த ரூபாய்களை எடுத்து, அவைகளை திரும்ப அமெரிக்க பணத்துக்கு மாற்றுகின்றனர். அவர்கள், “நாங்கள் கொண்டிருப்பதை எடுத்துக் கொள்ளவே நீங்கள் வந்திருக்கிறீர்கள், எங்களுக்கு உதவுவதற்கல்ல” என்றனர். பாருங்கள், “ஜனங்களாகிய நீங்கள்…”
113.    செல்வதற்கோ அல்லது திரும்பி வருவதற்கோ, என்னுடைய செலவுகளுக்கு பணம் கொடுப்பதற்கோ, அரங்குகள் எல்லாவற்றிற்கான வாடகைகளுக்கு பணம் கொடுப்பதற்கோ, உணவு விடுதியின் உணவுக் கட்டணச் சீட்டுகள் எல்லாவற்றிற்கோ, ஒவ்வொன்றிற்கும் எனக்கு ஒரு பென்னியை கொடுப்பதற்கும் கூட அவர்கள் கொண்டிருக்க வில்லை. பின்னர் நான் விட்டு வந்த ஒவ்வொன்றையும் நான் தெருவில் கொடுத்து விட்டேன், ஏதோ சில சங்கத்திற்கு அதைக் கொடுக்கவில்லை. நான் அதை வெளியே பட்டினியால் மரித்துக்கொண்டிருக்கும் ஏழையான சிறு ஜனங்களுக்கு அதைக் கொடுத்தேன். அங்கே தான் உங்களுடைய பணம் செல்ல வேண்டியதாக இருக்கிறது. அங்கே தான் உங்களுடைய பணம் செல்ல வேண்டியதாக இருக்கிறது. என்னுடைய அறிவுக்கு எட்டினவரை நான் செய்ய முடிந்த மிகச்சரியானது அதுவேயாகும். நான் அதனுடன் அதிகமாக செய்வதையே விரும்பினேன்.
114.    ஆனால், இப்பொழுது, என்னுடைய சகோதரனே, சகோதரியே, இந்த ஸ்திரீ (திருமதி டவுட்-தமிழாக்கியோன்) காணிக்கைகளை எடுத்து அவர்களில் குழப்பத்தை  உண்டாக்கத் தொடங்கினாள். அவர்கள், “கிடைப்பதை எடுத்துக்கொள்ளவே நீங்கள் வந்துள்ளீர்கள், எங்களுக்கு உதவுவதற்கல்ல. எங்களுக்கு உதவுவதற்காக நீங்கள் வந்துள்ளீர்களென்று நாங்கள் எண்ணினோம்” என்று கூறினர். அவள் ஒரு வேளை ஒரு தெய்வீக சுகமளிப்பவளாக இருக்கலாம்.
115.    நான் வெஸ்ட் கோஸ்டில் (றுநளவ ஊழயளவ) இருந்த போது, அவள் என்னிடம் கோபப்பட்டாள். அவள், 'ஹவார்டு, நான் உங்களுடைய தகப்பனைக் காண விரும்புகிறேன்” என்றாள். அவள் எகிப்து அல்லது எங்கேயோ உள்ள ஏதோவொரு மனிதனை விவாகம் பண்ணியிருந்தாள். “நான் கூடவே இந்தியாவுக்குச் சென்று கொண்டிருக்கிறேன்” என்றாள்.
116.    நான், “நல்லது பெருமாட்டியே, அந்த அபிஷேகம் அவர் மீது இருக்கும்போது, நாம் - ஜனங்கள் வெறுமனே சுற்றி வரமாட்டார்கள்” என்றேன்.
117.    அவள், “நான் திருமதி. டவுட் என்று நீங்கள் அவரிடம் கூறுங்கள்” என்றாள். மேலும், “நான் அவருக்கு முன்பாக இந்தியாவுக்கு சென்று, அவர் அங்கே சென்றடையும் போது அந்த சூழ்நிலையின்  நேரத்தை நானே கட்டுப்பாட்டுக்குள்  கொண்டிருப்பேன்” என்றாள். “எப்படியானாலும் அவர் எப்பொழுதாவது கொண்டிருந்ததை விடவும் என்னுடைய கூட்டங்கள் மகத்தானதாக இருக்கப் போகிறது” என்றாள். நல்லது, அது உண்மை, அது அவ்வாறே இருக்கலாம். பாருங்கள்? எனக்குத் தெரியாது.
118.    ஆனால் திறந்த வெளியில் கூட ஒரு கூட்டத்தை நடத்த முடியாத படியான கட்டுப்பாட்டை அவள் கொண்டிருந்தாள் என்பதை எண்ணிப்பார்த்தால். அவ்வாறு தான் அது இருந்தது. மேலும் அவர்கள் - அவர்கள் ஒரு கலகத்தைத் துவங்கினார்கள், அவள் அங்கே நின்று, “நீங்கள் கறுப்பு சாத்தான்கள்” என்றாள். அதைப்போன்று கூறினாள். மேலும் அவர்கள் அவளை வெளியே போகச்செய்ய முயற்சித்தார்கள், அவளோ வெளியே செல்லவில்லை. மேலும் யாரோ ஒருவர் அவளுடைய தலைமீது செங்கல்லால் தாக்கி, அவர்கள் அவளை வெளியே தள்ளினார்கள். எனவே அவர்கள், பின்னர் நாட்டை விட்டு வெளியேறும்படி அவளை நெருக்கினார்கள். அவள் அங்கே வேறொரு தேசத்திற்குச் சென்றாள், பாரன் வான் பிளங்பர்க் (டீயசழn ஏழn டீடழnடிரசப) சென்று ஒரு கொன்றுகுவித்தல் சம்பவத்திலிருந்து காக்கும்படி, அவளை அங்கிருந்து வெளியே கொண்டுவர, இராஜாவையும் காரியங்களையும் காண வேண்டியிருந்தது. எனவே பிறகு, எனவே அவர்கள்… அங்கே அது இருந்தது, நான் அதை நோக்கிப் பார்த்து  அதை குறை கூறினேன்.
119.    நான் திரும்பி வந்தேன், என்னுடைய கரங்களில் கிடைத்த முதலாவது காரியம், ஒரு “சுகமளித்தலின் சத்தம்” ஆக இருந்தது, நான் இந்த ஏ.ஏ ஆலனின் கூட்டத்தைக் கவனித்து அது எப்படியாக வேதத்திற்குப் புறம்பானதாக இருக்கிறது என்பதைக் கண்டேன். பின்னர் நான் அதைக் குறை கூறினேன். நீங்கள் பாருங்கள்? “ஓ, என்னே,” என்று நான் நினைத்தேன். ஆனால் அந்த ஏழை ஜனங்களைப் பாருங்கள், அன்பான ஜனங்கள், அதைப் பின்பற்றி அவருடன் செல்லும் நேர்மையான இருதயமுடைய ஜனங்கள அங்கே வெளியே இருக்கிறார்கள் (பாருங்கள்?);.
120.    நான் சுற்றிலும் நோக்கி, நடந்து கொண்டிருக்கும் இந்த மற்ற காரியங்களைக் கண்டு;, அதில் நான் - நான் என்னுடைய இருதயத்தில் குற்றங்கண்டுபிடிக்கத் துவங்குகிறேன். பாருங்கள்? நான் அந்த வழியில் அதைச் செய்ய விரும்பவில்லை. நான் அதைச் செய்தால், தேவனுடைய தயவை இழப்பேன். பாருங்கள்? மேலும் ஒரே காரியம்…
121.    நான் அமெரிக்கர்களை நோக்கி, அவர்களுடைய  வழிமுறைகளைக் காண்கிறேன், ஸ்திரீகளை நோக்குங்கள், எப்படி அவள் உடையுடுத்துகிறாள்@ மேலும் மனிதரை நோக்குங்கள், எப்படியாக அவர்கள் குடிக்கிறார்கள், உரள, புகைக்கிறார்கள், மெல்லுகிறார்கள், மற்றும் கிறிஸ்தவர் களென்று உரிமைகோருகிறார்கள், அது என்னை அப்படியே குமட்டல் உணர்ச்சி கொள்ளச்செய்தது. மற்ற பக்கத்தில் என்னவென்று நான் கண்ட போது, இதைப்பாருங்கள், பிறகு இடையே நோக்கி, “ஓ, தேவனே” என்று நினைக்கிறேன். ஆனால் இதைக் கேளுங்கள், இது யாருடைய யுத்தம்? தேவன், “களையும் கோதுமையும் ஒன்றாக வளரட்டும். கடைசி நாளில்  தூதர்கள் வந்து அவைகளைப் பிரிப்பார்கள்” என்றார். அது நானல்ல.
122.    எனவே நான் இங்கே என்னுடைய கரத்தை பீடத்தில் மேலே உயர்த்தினபடி, நீங்கள் எனக்கு உதவி செய்யுங்கள், யாரையும் குற்றங்கண்டுபிடிக்காமலிருக்க எனக்கு உதவி செய்யுங்கள். அதை குற்றங்கண்டுபிடிப்பதற்கு பதிலாக, எது எப்படியாயினும் அவர்களை நான் நேசித்து செல்ல, என்னுடைய இருதயத்தில் ஒரு ஆவியை தேவன் எனக்கு கொடுக்கும்படி எனக்கு உதவுங்கள்.
123.    அது அப்படியே ஒரு இடைவிடாத கடும் உழைப்பு, கடும் உழைப்பு, நான் அப்படியே மனிதனாக இருப்பது வரை கடும் உழைப்பாகவே இருக்கிறது. என்னுடைய மனவலிமை அதைப்போன்று உடைக்கப்பட்டுக் கொண்டிருக் கிறது.நீங்கள் பாருங்கள்? நான் சிறிது இளைப்பாறுவதற்காக தூர செல்ல வேண்டியிருக்கிறது.
124. தேவன் அந்த குற்றங்காண்கிற உணர்ச்சியை என்னைவிட்டு தூர விலக்கி, என்னை இனியவனாக்கும் படி ஜெபிப்பதற்காக நான் அப்பால் தங்கும்படிபோகிறேன்… நான் சென்று அதைப் போன்று செயல்படகூடும், ஆனால் அது என்னுடைய இருதயத்திலிருந்து வரக்கூடாது. அப்போது போதுமான அளவு நிச்சயமாக நான் ஒரு மாய்மாலக் காரனாக இருப்பேன். பாருங்கள்? அன்பில்லாத அவர்கள் மேல் நான் உண்மையிலேயே அன்பைக் கொண்டிருக் கிறேன் என்று என்னுடைய இருதயத்திலிருந்து அது வரும்படி நான் விரும்புகிறேன். அதை இயேசு செய்தார். நான் அதை குற்றங்கண்டுபிடிப்பவனாக இருந்தபோது, நான் மிகவுமாக குறை கூறப்பட வேண்டியவனாயிருந்த போதிலும், அப்படி இருப்பினும்,எது எப்படியாயினும் அவர் என்னை நேசிக்கிறார். எனவே அந்த வழியில் தான் நான் இருக்க விரும்புகிறேன். நீங்கள் எனக்காக ஜெபியுங்கள்.
125.    அதிக காலமாக ஏறத்தாழ நவம்பரில் நான் உங்களை மீண்டும் காண்பேன் என்றும், திரும்பி வந்து இங்கே கூடாரத்தில் ஒரு எழுப்புதல் கூட்டத்தை வைப்போம் என்றும் நம்புகிறேன், நாம்;…
126.    எனவே இப்பொழுது நான் செய்துள்ள ஒரு காரியம் இங்கே உள்ளது, மேலும் இந்த ஒரு காரியத்தைக் கேட்டேன். நான் கைக்குட்டைகள் அல்லது அதைப் போன்றவைகள் மூலமே தவிர இனிமேலும் வியாதியஸ் தருக்கு ஊழியம் செய்ய விரும்பவில்லை. நான் அந்த தரிசனத்திலிருந்து விலகி இருக்க முயற்சித்துக் கொண்டிருக் கிறேன். நீங்கள் பாருங்கள்? மேலும் குறிப்பாக இப்பொழுது எவ்வளவு இருக்க முடியுமோ அவ்வளவு நான் பெலவீனமாய்; இருந்து, சென்று ஜனங்களுக்கு முன்பாக நிற்கிறேன், நல்லது, அப்போது நீங்கள் துவங்குகிறீர்கள், அந்த – அந்த தரிசனம் திரும்பி வருகிறது. நான் அப்பால் சென்று நானே அமைதியாக இருந்து, நான் வரக்கூடிய இடத்தில், ஒரு வித்தியாசமான கூட்டத்தைக்கொண்டிருக்கவே விரும்பு கிறேன்.நீங்கள் எனக்காக ஜெபிப்பீர்கள், இல்லையா? மேலும் இப்பொழுது, நான்-நான் கடிதங்களுக்காக ஜெபித்து, கைக்குட்டைகள் மற்றும் காரியங்களை வியாதியஸ்தருக்கும், துயரப்படுபவருக்கும் அனுப்பிக்கொண்டிருக்கிறேன்.
127.    ஆனால் ஜனங்கள் ஜெபிப்பதற்காக அழைக்கும்போது, நான் அவர்களை சகோதரர் நெவிலிடமோ அல்லது அவர்களில் மற்ற சிலரிடமோ சென்று ஜெபிக்கும்படி அனுப்புகிறேன். ஏனெனில், நான் அந்த நபருக்கு முன்னே நிற்கும் போது, அது சரியாக மீண்டும் அதற்கு திரும்பி என்னை அசைக்கிறது. நீங்கள் பாருங்கள்? மேலும் நான் அதனிடமிருந்து விலகி இருக்கவே விரும்புகிறேன், எனவே நான் படுத்துக்கொண்டு, “இப்பொழுது, கர்த்தாவே, அப்படியே உம்முடைய சித்தத்தின்படி ஆகட்டும்.நான் ஏதாவது அறியும்படி நீர் விரும்பும் பொழுது, நீர் அதை எனக்குத் தெரியப்படுத்தும். நான் அதைக் கூறும்படி நீர் என்னிடம் சொல்வது வரை, நான் எனக்கு நானே அதை ஒரு இரகசியமாக வைத்திருப்பேன்” என்று கூறினேன். நான் என்ன கருதுகிறேன் என்பதைப் பாருங்கள்? பின்னர் அங்கே வெளியே சென்று வியாதியஸ்தருக்காக ஜெபிக்கிறேன். என்னுடைய ஊழியம் முற்றிலுமாக மாறுகிறது. நான் முன்னர் செய்ய முடிந்ததை விட பெரிய கூட்டங்களையும், மகத்தான கூட்டங்களையும், மற்ற ஒவ்வொன்றையும் கொண்டிருக்கக் கூடும்.
128.    இப்பொழுது, நாம் நம்முடைய தலையை வணங்கும் போது, கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
129.    பரலோகப் பிதாவே, இந்தக்காலையில் தூது பணிகளைப்பற்றியும், எப்படியாக நீர் எங்களை ஆசீர்வதித்து எங்களுக்கு உதவிச் செய்தீர் என்பதைப் பற்றியும் பேசுகிற இந்த தருணத்திற்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்து கிறோம்.அலைகள் உயர எழும்பி மகத்தான சோதனைகளின் போது, நான் எப்பொழுது வீட்டுக்கு திரும்புவேன் என்று எத்தனையோ தடவைகள் நான் நினைத்தேன். ஆனால் இங்கே நான் மீண்டும் இருக்கிறேன். கர்த்தாவே, நீர் எப்பொழுதும் என்னைத் திரும்ப கொண்டு வருகிறீர். இந்த சபைக்காகவும், இதனுடைய மேய்பனுக்காகவும், இதனுடைய ஜனங்களுக்காகவும் நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன். எங்களை ஆசீர்வதியும்.
130.    மேலும் இப்பொழுது, பிதாவே, இந்தக் காலையில் நான்… என்னுடைய இருதயம் இந்தியாவின் குறுக்காக நோக்கி, இந்தக் காலையில், அங்கே அந்தத் தெருவில் கிடந்து, அந்தத் தெருவின் பக்கத்தினூடாக அந்த சிறிய பழைய இடங்களில், அங்கே அந்த ஏழையான, பசியான, பசியால் மரித்துக் கொண்டிருக்கும் படிப்பறிவில்லாத ஜனங்கள், கர்த்தராகிய இயேசுவை அறியாமல் சில வகைப்பட்ட மூடநம்பிக்கையை அல்லது ஒரு சிலையை வணங்கும் அனைவரையும் நினைக்கிறேன். பின்னர், பிதாவே, நீரே ஜீவனென்று உம்மை நான் அறிந்திருப்பதைக் குறித்து உம்மை நான் அறிவதற்காய் எப்படியாக நன்றியுள்ளவனாயிருக்கிறேன்.
131.    இப்பொழுது, நீர் எனக்கு உதவவேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன். கர்த்தாவே, குற்றங்கண்டுபிடிக்கிற ஆவியை உம்முடைய ஊழியக்காரனிடமிருந்து எடுத்துப் போடும், தேவனே,நான் அப்படியிருக்க விரும்பவில்லை... கர்த்தாவே, மனிதர்கள் தவறாயிருந்தால், நீரே நியாயாதிபதியாக இருக்கிறீர். எப்படியாயினும் நான் உம்மை நேசிக்கட்டும், பிதாவே? ஸ்திரீயானவள் தகாதவிதமாய் உடுத்தினால், அவர்களாகவே அதை தவறான முறையில் பயன்படுத்தி வேசியாகின்றனர், மேலும் எங்களுடைய தேசம் மூழ்கடிக்கப்படுகிறது, நீர் அதை உரைத்திருக்கும் போது, நான் எப்படி வரலாற்றை மாற்ற முடியும், கர்த்தாவே? ஆனால் நீர் எனக்கு உதவி செய்ய வேண்டும் எனவும் நான் உம்முடைய ஊழியக்காரனாக இருக்க முடியவும் உம்முடைய சித்தத்தைச் செய்யவும் அன்புள்ளவனாகவும் இரக்கமுள்ளவனாகவும் இருப்பேனாக. இந்த காரியங்களை உம்முடைய மகிமைக்காக கேட்கிறேன், பிதாவே.
132.    இப்பொழுது எங்களை ஆசீர்வதியும். நான் சிறிது வார்த்தையை போதிக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளேன். பிதாவே இப்பொழுது அப்படியே ஒரு சிறு குறுகிய செய்தியை எங்களுக்கு அளியும், வார்த்தையானது முன்னே சென்று, இது ஒரு மகத்தான நாளாக எங்களுக்கு இருப்பதாக. நாங்கள் இதை இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென்.
133.    சரி. இப்பொழுது, பதினொரு மணிக்கு 15 நிமிடங்கள் உள்ளன. அது சரியா? நல்லது, நமக்கு சுமார் முப்பது நிமிடங்கள் உண்டா? பின்னர்  சுமார் பதினொன்றரை மணிக்கு வெளியே போனால் சரியாக இருக்குமா? இப்பொழுது, நாம் எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்?
134.    நான் பழைய ஏற்பாட்டிலிருந்து போதிப்பதைப் பற்றி எண்ணிக்கொண்டு இங்கே உட்கார்ந்துக் கொண்டிருந்தேன். ஆனால் நீங்கள், வழக்கமாக் எல்லா சமயங்களிலும் பழைய ஏற்பாட்டில் இருந்து பெறுகிறீர்கள். அதனால் யாரோ ஒருவர், “சகோதரன் பிரான்ஹாம், பழைய ஏற்பாட்டை தவிர உங்களுக்கு எதுவும் தெரியாதா?” என்று கூறினார். நல்லது, அது நல்லது. நான் அதைக் கற்றுக்கொண்ட போது, பின்னர் நான் புதிய ஒன்றை கற்றுக்கொள்வேன். ஆனால் நீங்கள் ஒன்றைக் கற்றுக்கொள்ளும் போது, நீங்கள் அவையிரண்டையும் கற்றுக்கொள்ளுகிறீர்கள். பாருங்கள், அவையிரண்டும் ஒன்றாயிருக்கிறது.
135.    ஆனால் நாம் புதிய ஏற்பாட்டில் ஏதோவொரு இடத்தி;ற்கு திருப்புவோம். நீங்களெல்லாரும் அங்கே படித்துக்கொண்டிருக்கிறீர்களா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை. நாம்… நான் உங்களிடம் கூறுகிறேன், நாம் பரிசுத்த யோவானுக்குச் செல்வோம்;. நாம் திருப்பி பரிசுத்த யோவான் ஒன்றாம் அதிகாரத்திற்குச் செல்வோம். பரிசுத்த யோவானைத் தொடங்கி வாசிப்போம். இப்பொழுது, அது அப்படியே… நான் அப்படியே அதற்கு திருப்பிக் கொண்டிருக்கிறேன். எனக்குத் தெரியாது. எனவே நாம் அப்படியே பரிசுத்த யோவானில் படிக்கத் துவங்குவோம். ஓவ்வொருவரிடமும் அது சரியாக உள்ளதா? (சபையார், “ஆமென்” என்கின்றனர் – ஆசிரியர்.) அதுவா? சரி, பரிசுத்த யோவான் முதலாவது அதிகாரம்.
136     மேலும் இப்பொழுது, வருகின்ற புதன்கிழமை இரவு இருக்கலாம், நான் கேள்விப்பட்டேன்… நான் இன்றிரவு உங்களுடன் இருப்பதற்கு விரும்புகிறேன். நான் இன்றிரவும், அதற்கு பிறகு புதன்கிழமை இரவும் உங்களுடன் இருக்கும்படி வருவதற்கு விரும்புகிறேன். நாங்கள் புதன் கிழமைக்கு முன்பாக இங்கிருந்து செல்ல மாட்டோம் என்று நான் எண்ணுகிறேன், எனவே நான் இங்கே புதன்கிழமை இரவு இருப்பேன். நாங்கள் இங்கிருந்து செல்வதற்கு முன்பாக, அடுத்த வியாழன் அல்லது வெள்ளிக்கிழமையில் நான் ஏறத்தாழ நிச்சயமாக இருப்பேன். எனவே பிறகு கர்த்தருக்குச் சித்தமானால் ஆராதனைக்காக இங்கே புதன் கிழமை இரவு நான் இருப்பேன். மேலும் இப்பொழுது நாம் ஏதோவொன்றைப் போதிக்க விரும்புகிறோம், கர்த்தருக்குச் சித்தமானால்,  புதன் இரவு இங்கிருக்கலாம்.
137.    சகோதரர் பிளீமான், அது அப்படியே ஒரு நல்ல கருத்தாக இருக்கிறது, இப்பொழுது உங்களுடைய மேற்சட்டையை கழற்றி விட்டு, வீட்டிலிருப்பது போல் உணருங்கள் என்று கூறுகிறேன்.
138.    யாரோ ஒருவருக்கு விரோதமாக யாராவது எதையாவது கொண்டுள்ளீர்களா? நீங்கள் எதையாவது கொண்டிருந்தால், உங்களுடைய கரத்தை உயர்த்தி அவர்களிடம் செல்லுங்கள், இப்பொழுது, இந்தக் காலையில் இந்த மகத்தான பெரிய பழைய அன்பின் விருந்தான ஒன்றை ஆக்குவோம். நீங்கள் என்ன கூறுகிறீர்கள்? ஓவ்வொருவரும், நீங்கள் எதைக் கொண்டிருந்தாலும், அந்த நபர் இங்கே இல்லையென்றாலும், “கர்த்தராகிய இயேசுவே.” என்று கூறுவோம். அதைச் சரியாக இப்பொழுதே இரத்தத்தின் கீழ் வைப்போம், மேலும்,“இந்த நாளிலிருந்து இதுமுதற்கொண்டு, இனிமேலும் அதைக் குறித்து நினைப்பதில்லை.” நாம் அப்படியே செல்வோம், இப்பொழுதிலிருந்து ஒவ்வொன்றும் புதியதாக துவங்கட்டும்.
139.    ஓ, நீங்கள் கட்டாயமாக எப்படிப்பட்ட – எப்படிப்பட்ட சந்தோஷத்தைக் கொண்டிருக்க வேண்டியதென்பதை மாத்திரம் நீங்கள் அறிந்திருந்தால்! உலகத்திலுள்ள எல்லா மதங்களும், அவர்களைக் காண்பதற்கு, ஒவ்வொருவரும், அப்படியே எவ்வளவு முடியுமோ அவ்வளவு அவர்கள் அஸ்திபாரமில்லாதவர்களாய் இருக்கின்றனர். ஒன்று மாத்தி;ரமே உண்மையானது@ அது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷமாயுள்ளது. பொருட்படுத்தாமல், அது மெதொடிஸ்ட் சபை, பாப்டிஸ்ட் சபை, பிரஸ்பிட்டேரியன் சபை ஆகியவற்றிலிருந்து வருமானால், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே சரியாயிருக்கிறார். ஆமென். பாருங்கள், அது எங்கிருந்து வருகிறது என்பது காரியமல்ல, கிறிஸ்தவமானது விஞ்சி ஒளி விடுகிறது. எல்லாவற்றிலும், அஸ்திபாரத்தை கொண்டிருக்கும் காரியம் அது மாத்திரமே. மற்ற காரியங்கள்… கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்த பலி தான் உலகத்தின் ஒரே நம்பிக்கையாக உள்ளது.
140.    இப்பொழுது, நான் அவர்களுடைய மதங்களை கண்டிருக்கிறேன். நான் அவர்களுடைய சொருபங்களைக் கண்டிருக்கிறேன். நான் அவர்களுடைய மூட நம்பிக்கை களை கண்டிருக்கிறேன். நான் அவர்களுடைய தேவர் களையும், எல்லாவற்றையும், ஒவ்வொன்றையும் கண்டிருக் கிறேன்... அவைகளைப் படித்திருக்கிறேன், குரானைப் படித்திருக்கிறேன். ஒவ்வொன்றினாலும் நான் படிப்பதற்கு அறிந்திருக்கிறேன். எப்படியாக ஒவ்வொரு மதமும் மூடநம்பிக்கைகளால் உண்டாக்கப்பட்டிருக்கின்றன. அது உங்களை அப்படியே உண்மையாக போற்ற செய்கிறது, ஓ, தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து மாத்திரமே உலகத்தின் நம்பிக்கையாயிருக்கிறார். மரணத்திலிருந்து எப்பொழுதாவது எழுந்தது அவர் ஒருவர் மாத்திரமே. அவர் மரணத்தினின்று எழுந்தார் என்றும் அவர் இன்றும் ஜீவிக்கிறவர் என்றும் நாம் நிரூபிக்க முடியும். ஆமென். ஓ, என்னே, சகோதரன் நெவில். நான் ஒரு கிறிஸ்தவனாக இருப்பதற்காக எவ்வளவாய் மகிழ்ச்சியடை கிறேன் என்பதை நீங்கள் அறியவில்லை. ஓ, நீங்கள் சந்தோஷமாய் இருக்க வேண்டும்.
141.    இப்பொழுது, இங்கே இந்த பரிசுத்த யோவானின் மகத்தான சுவிசேஷம், பரிசுத்த யோவான் எழுதின சுவிசேஷம். யோவான் அன்பிற்குரியவனாக இருந்தான். இந்தப் பரிசுத்த யோவான் இNசுவின் மார்பில் சாய்ந்திருந்த அன்பிற்குரிய ஒருவனாக இருந்தான் என்று நாம் நம்புகிறோம். அவர் அப்போஸ்தலர்களில் வயது சென்றவராக வாழ்ந்தவர் அல்லது அவர்களில் மீத முள்ளவர்களில் யாரையாவது விடவும் அதிக காலம் ஜீவித்தவர். மேலும் அவர்- அவர்…
142.    பேதுரு தன்னுடைய தலை கீழாகவும், தன்னுடைய பாதம் மேலாகவும் திருப்பப்பட்டு சிலுவையிலறையப்பட்டான். அந்திரேயா தன்னுடைய கைகள் இதைப்போன்று பக்கவாட்டில் வைத்து சிலுவையிலறையப்பட்டான். நான் அங்கே ரோமாபுரியில், அவர்கள் பரிசுத்த பவுலின் தலை வெட்டப்பட்ட இடத்தைக் கண்டிருக்கிறேன்.
143.    நான் ஏதோவொன்றைப் பெற்றுக்கொண்டுள்ளேன் என்று கூறுகிறேன், ஓ, நான் அடுத்த முறை வந்து நான் - நான் அந்த எல்லா இரத்த சாட்சிகள் மற்றும் ஒவ்வொன்றின் படங்களை, சிங்கங்களுக்கு உணவாகக் கொடுத்தல் மேலும் மற்றவைகளைக் கொண்டுவர முயற்சிக்கிறேன். நான் ஒரு பெரிய உறையில் எல்லாவற்றையும் கொண்டிருக்கிறேன்;. நான் அதைக்கொண்டு வந்து, ஒரு கம்பியில் ஒன்றையும், மற்றொன்றில் ஒன்றையும், மற்றவைகளையும் இடுவேன், எனவே நீங்கள் ஆங்கிலத்திலுள்ள அவையெல்லாவற்றையும் காணவும், அவைகள் மீது நோக்கிப் பார்க்கவும் முடியும்.
144.    கவனியுங்கள், ஓ, என்ன ஒரு இருதயம் உடைந்து போகும் காட்சி, அங்கே அவர்கள் பவுலின் தலையை வெட்டி, அவனை வெளியே சாக்கடையில் இதைப்போன்று கீழே தள்ளினார்கள்…, ஓ, என்னே, அவன் மகிமையில் இருப்பது வரை அவனுடைய தலையை இனிமேலும் எந்தக் கோடாரியும் தொடுவதில்லை என்று நான் எண்ணினேன். ஆமென், அவன் அங்கே அந்த அறையில் நின்று, “ஓ மரணமே, உன் கூர் எங்கே? பாதாளமே, உன் ஜெயம் எங்கே? ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே ஜெயம் கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்” என்று எழுதினதில் ஆச்சரியமில்லை. அவன்;,“நான் நல்ல போராட்டத்தைப் போராடினேன். ஓட்டத்தை முடித்தேன்@ நான் விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். இது முதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது@ நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அதை அந்நாளில் எனக்குத் தந்தருளுவார்” என்று எழுதினான். ஓ, ஏன், அது உங்களை இவ்விதம் எண்ணச்செய்கிறது:
மகத்தான மனிதர்களின் ஜீவியங்கள்
நமது வாழ்க்கையை நாம் உயர்த்திக் கொள்ள முடியும் என்பதை நினைப்பூட்டுகிறது
பிரிவினைகள் நமக்குப் பின்னால்
‘காலமென்னும் மணலின் அடிச்சுவடுகளை விட்டுச் செல்கின்றன’
145.    இப்பொழுது, யோவான், அன்பிற்குரியவன், வெளிப் படுத்தினவன்… மேலும், யோவான், இங்கே வேதாகமத்தில் அநேக யோவான்கள் உள்ளனர். ஆனால் யோவான், இந்தக்காலையில் நாம் பேசிக்கொண்டிருக்கும் பரிசுத்த யோவான், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ஒரு அப்போஸ்தலன், தேவனால் வெளியே அனுப்பப்பட்ட ஒரு மிஷனரி…
146.    ஒரு மிஷனரி என்பதற்கு ஒரு “அனுப்பப்பட்ட ஒருவன்” என்று அர்த்தமாம். இன்று அந்த ஜனங்கள் “ஓ, அங்கே பன்னிரண்டு அப்போஸ்தலர் மாத்திரம் இருக்கின்றனர் (பாருங்கள்?) பன்னிரண்டு மாத்திரம்” என்று எப்படி கூறுகிறார்கள் என்று நான் அடிக்கடி வியப்பதுண்டு. நீங்கள் அதைக் கேட்டிருக்கிறீர்கள். நல்லது, அந்த பெரிய வார்த்தை தன்னில்தானே, “அனுப்பப்பட்ட ஒருவன்” என்று பொருள்படுகிறது.
147.    பன்னிருவரைப் பொறுத்து, பவுல் ஒரு அப்போஸ்தலன் அல்ல. ஆனால் நீங்கள் எப்பொழுதாவது கவனித்தீர்களா, யூதாசுடைய இடத்தை எடுப்பதற்கு அவர்கள் மத்தியாவை தேர்ந்தெடுத்தனர், அது தான் என்று நான் நம்புகிறேன், அல்லது மத்தியா. அதுதான் மனிதன் செய்வது. அவன்… அதற்கு மேலும் அவனைக் குறித்து (மத்தியாவைக் குறித்து-தமிழாக்கியோன்) கேள்விப்படவில்லை. ஆனால் அவனுடைய இடத்தை எடுப்பதற்கு தேவன் பவுலைத் தேர்ந்தெடுத்தார். மனிதனுடைய தெரிந்தெடுப்பும் தேவனுடைய தெரிந் தெடுப்பும். அது எனக்கு என்னுடைய இருதயத்தில் காரியங்களையும் தப்பிதங்களையும் அதைப் போன்றவை களையும் பொறுத்து அதிக கிருபையைக் கொடுக்கிறது.
148.    சற்று கவனியுங்கள், சிறிது நேரத்திற்கு முன்னால், ரேடியோவில், இந்த மகத்தான பிரபலமான அற்புதமான போதகரான டாக்டர் டிஹான், என்னே, ஒரு அன்பான சகோதரன், அவரை என்னுடைய  முழு இருதயத்தோடும் நேசிக்கிறேன்@ தேவன் அதை அறிவார். எப்படிப்பட்ட மகத்தான மனிதராயிருந்தாலும் தவறுகள் செய்யக் கூடும் என்பதைப் பாருங்கள். சகோதரனே, நான் எவ்வளவு இயலுமோ அவ்வளவு விரைவாக, அவர் செய்திருந்த தவறை கண்ட போது, நான், “தேவனே, நானும் ஒருவேளை அதே காரியத்தை செய்வேன், எனவே நீர் என் மீது நோக்கமாயிரும்” என்று நினைத்தேன்.
149.    டாக்டர்.டிஹான், “ஞானஸ்நானமானது வேதாகமத்தில் ஒரு தடவை மாத்திரம் இருந்தது” என்று கூறினார். இங்கே இந்தக் காலையில் நான் சபைக்கு வருகிற போது அப்படியே கவனித்தேன். “பரிசுத்த ஆவியின் ஞானஸ்நான மானது அப்போஸ்தலர்களில் ஒவ்வொரு வரையும் ஞானஸ்நானம் பண்ணினது, அவர்களை அறையில் முழுக்கினது. அதைப் பிரதிநிதித்துவப்படுத்த நாம் தண்ணீரால் ஞானஸ்நானம் பண்ணுகிறோம். அது தான் அவர்கள் எப்பொழுதாவது பரிசுத்த ஆவியால் ஞானஸ்நானம் பெற்ற ஒரே தடவையாய் இருந்தது: வேதாகமத்தில் ஒரேயொரு தடவை” என்று கூறினார். நான், “ஓ, டாக்டர். டீஹான்!” என்று எண்ணினேன்.
150.    ஏன், சுமார் பத்து நாட்களுக்குப் பிறகு, பிலிப்பு சென்று சமாரியாவில் பிரசங்கித்தான். அவன் அவர்களுக்கு கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுத்தான். இருப்பினும் அவர்கள் மீது பரிசுத்த ஆவியானவர் வரவில்லை. பேதுரு சென்று அவர்கள் மீது கரங்களை வைத்தான், அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டனர்.
151.    அதற்கு ஏறத்தாழ இரண்டு மாதங்கள் அல்லது மூன்று மாதங்களுக்குப் பிறகு, பேதுரு ஒரு தரிசனத்தைப் பெற்று, கொர்நெலேயுவின் வீட்டிற்குச் சென்றான். அவர்கள் அனைவரும் அங்கே நின்று கொண்டிருந்தனர், அவர்கள் ஒரே இசைவாய் இருந்து ஜெபித்துக் கொண்டிருந்தனர். “இந்த வார்த்தைகளைப் பேதுரு பேசிக்கொண்டிருக்கையில் வசனத்தைக் கேட்டவர் யாவர் மேலும் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார்.” இருப்பினும் அதே சமயம் அவர்கள் தண்ணீரால் ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருக்க வில்லை. அவன், “நம்மைப் போலப் பரிசுத்த ஆவியைப் பெற்ற இவர்களும் ஞானஸ்நானம் பெறாதபடிக்கு எவனாகிலும் தண்ணீரை விலக்கலாமா?” என்று கூறினான். எனவே அங்கே அந்தச் சிறு சரீரம் பிரதிநிதித்துவப் பட்டிருந்தது எப்படி… ஓ, இல்லை, இல்லை.
152.    ஏறத்தாழ பல வருடங்களுக்குப் பிறகு, பவுல் மேடான தேசங்கள் வழியாய்ப் போய், எபேசுவுக்கு வந்தான்@ அங்கே சில சீஷரைக் கண்டு: “நீங்கள் விசுவாசிகளான போது பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா?” என்று கேட்டான்.
153.    அதற்கு அவர்கள், “பரிசுத்தஆவி உண்டென்பதை நாங்கள் கேள்விப்படவேயில்லை” என்றார்கள்.
154.    அப்பொழுது அவன், “அப்படியானால் நீங்கள் எந்த ஞானஸ்நானம் பெற்றீர்கள்?” என்றான். அதற்கு அவர்கள், “யோவான் கொடுத்த ஞானஸ்நானம் பெற்றோம்” என்றார்கள்.
155.    அப்பொழுது பவுல், “யோவான் தனக்குப்பின் வருகிறவராகிய கிறிஸ்து இயேசுவில் விசுவாசிகளாயிருக்க வேண்டும் என்று ஜனங்களுக்குச் சொல்லி, மனந்திரும்புதலுக்கு ஏற்ற ஞானஸ்நானத்தைக் கொடுத்தானே” என்றான்.
156.    அதைக் கேட்டபோது அவர்கள் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றார்கள். அல்லாமலும் பவுல் அவர்கள் மேல் கைகளை வைத்தபோது, பரிசுத்தஆவி அவர்கள் மேல் வந்தார். (நீங்கள் பாருங்கள்?) ஆதியிலே அது இருந்த அதே வழியில். ஓ, ஆம். பரிசுத்தஆவியின் ஞானஸ்நானம், தண்ணீர் ஞானஸ்நானம்  சரியாகவே இருக்கிறது, இயேசு மீண்டும் வருவது வரை அது இருக்கும்.
157.                ஆனால் அது என்னவொரு தவறான காரியம்! (பாருங்கள்?) அதைப்போன்ற ஒரு மகத்தான புத்திசாலித்தன மான கற்ற அறிவாளிக்கு அது என்னவொரு தவறாக உள்ளது. அது காணப்பட போகிறது, நீங்கள் எவ்வளவு புத்திசாலித்தனமானவன் என்பதோ, நீங்கள் எவ்வளவு அறிந்துள்ளீர்கள் என்பதோ காரியமல்ல. நீங்கள் ஒரு மனிதன், இந்த உலகத்தாரைப் போன்று நிச்சயமாக நீங்கள் தவறு செய்யப் போகிறீர்கள். “யுத்தம் கர்த்தருடையது”. அது சரியே.
158.    கர்த்தர் எனக்குக் காட்டும் தரிசனங்களையும் காரியங்களையும் கூட நான் காண்கிறேன், சரியாக சுற்றிலும் பின்னால் திரும்பியோ அல்லது அதற்கு மாறாகவோ இருக்கலாம். உங்களால் அதை கற்பனை செய்ய முடிகிறதா? தேவன் எனக்குக் காட்டுகிறார்… நான் லிஸ்பனில் அதைக் கொண்டிருந்தேன். நான், “கர்த்தாவே என்னை விட்டு உம்முடைய கரத்தை எடுத்துவிடும்@ நான் உம்முடைய ஊழியக்காரனாக இருக்கக்கூட தகுதியற்றவன்” என்றேன். அவர் என்னிடம் கூறின ஏதோவொன்றை நான் கண்ட பிறகும், நான் அதைப்பற்றி எல்லாவற்றையும் மறந்து விட்டு, சென்று விட்டேன். அது சம்பவித்தது. நான், “ஓ, என்னே. நான் ஏன்  அதை நினைவுபடுத்தவில்லை" என்று எண்ணினேன். பாருங்கள்? இங்கே நான் என்னுடைய பாக்கெட்டில் உள்ள ஒரு சிறு காகிதத்தில் அதை எழுதியிருந்தேன், சரியாக உள்ளே நடந்து ஏதோ வொன்றையோ அதற்கு மாறாகவோ செய்தேன். பாருங்கள்? அங்கே அது எவ்வளவாக காட்டப்படுகிறது… எவ்வளவாக, நான் எவ்வளவு நல்லவனாக இருக்கிறேன். (நீங்கள் பாருங்கள்?) அப்படியில்லை… ஓ, அவர்களெல்லாரைக் காட்டிலும் மோசமானவன், நான் அவ்வாறே இருக்கலாம். தேவன் ஏதோவொன்றை செய்யும்படி உங்களிடம் கூறின பிறகு, நீங்கள் சரியாக சுற்றிலும் திரும்பி, ஏதோவொன்றைச் செய்கிறீர்கள் அல்லது அதற்கு மாறாக செய்கிறீர்கள். அது பயங்கரமானது. பாருங்கள்?
159.                எனவே, நீங்கள் பாருங்கள்? அந்த மனிதர் யார் என்பது காரியமல்ல, அவர் எனக்கு ஒரு மனிதனேயன்றி வேறில்லை. அவன் தவறுகளைச் செய்யப் போகிறான். எனவே ஒருவர் மற்றொருவருடன் வருந்தி, நம்மால் முடிந்த சிறந்தவற்றைச் செய்வோம். அதுதான் நம்மால் முடிந்த ஒரே காரியம். சரி.
160.    இப்பொழுது, யோவான் முதலாவது வசனம். ஓவ்வொருவரும் உங்களுடைய வேதாகமங்களைத் திறந்து வைத்திருக்கிறீர்களா?“ஆதியிலே...” ஓ, உறுதியாக கூறினால், தொடங்குவதற்கு இது நன்றாக இருக்கிறது, இல்லையா?
ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. (கவனியுங்கள்.)
அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்.
161.    இங்கே பதினான்காவது வசனத்தை எடுக்கும்படி கூறுகிறேன். நான் இதை நினைத்து இதன் மீது அநேக தடவைகள் போதித்ததுண்டு. பாருங்கள்.
அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ள வாசம் பண்ணினார்@ அவருடைய மகிமையைக் கண்டோம்@ அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது. (பாருங்கள்!) ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது, அந்த வார்த்தையானது மாம்சமாகி, நமக்குள்N;ள வாசம் பண்ணினார்…
162.    “ஆதியிலே…“ இப்பொழுது சில உண்மையான காரியங்களைப் பெற்றுக்கொள்வோம்… இங்கே, நான் ஏதோ வொன்றைக் காண்கிறேன். பரிசுத்த ஆவியானவர் இதைக் கட்டாயம் இவ்விதமாக நிலைப்படுத்திக் கொண்டிருக் கிறார். பாருங்கள்? நான் இங்கே ஒரு மகத்தான காரியத்தைக் காண்கிறேன்.“ஆதியிலே வார்த்தை இருந்தது.”
163.    இப்பொழுது, நீங்கள் ஆதியில் இருந்ததை விட பின்னால் எந்த அதிக தூரமும்   போக முடியாது, மன ரீதியாகப் பேசிக்கொண்டிருக்கிறேன். “ஆதியிலே" அங்கே ஒரு உலகம் இருந்ததற்கு முன்னே, அங்கே ஒரு நட்சத்திரம் இருந்ததற்கு முன்னே, அங்கே ஒரு சூரியன், சந்திரன், வேறு எதுவும் இருந்ததற்கு முன்னே, அங்கே எந்த சிருஷ்டியும் இருந்ததற்கு முன்னே, அது தான், “ஆதியிலே” என்பது. அது சரியா? இப்பொழுது, எவ்வளவு தூரம் நாம் போக முடியுமோ, அவ்வளவு பின்னால் ஆதிக்கு.
164.    “ஆதியிலே, தேவன்… ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவானாயிருந்தது, அந்த வார்த்தை தேவனோடு இருந்தது, அந்த வார்த்தையானது மாம்சமாகி, நமக்குள்ளே வாசம் பண்ணினார்.” பிறகு, அந்த வார்த்தையானது இயேசு கிறிஸ்துவாக இருந்தது. அது சரியா? ஓ,என்னே. அப்போது… “ஆதியிலே இயேசு கிறிஸ்து இருந்தார்.”
165.    பின்னர் நம்முடைய கத்தோலிக்கத்தில் உள்ள நித்திய குமாரத்துவத்தின் உபதேசம், அது அவ்விதமாக இருக்க முடியாது. அவர் தேவனுடைய குமாரனாயிருந்தால், அவர் காலத்தின் தொடக்கத்தைக் கொண்டிருக்கிறார். அவர் தேவனுடைய குமாரனாயிருந்தால், அவர் ஒரு குமாரனாய் இருப்பதற்கு அவர் பிறப்பிற்கு அப்பால் இருக்க வேண்டிய வராயிருக்கிறார்(அது சரியா?)
166.    ஓ, இங்கே நாமாகவே அந்த நல்ல பழைய வேதவாக்கியத்தில் திருகுகிறோம். நான் எப்படியாக அதை நேசிக்கிறேன். அப்படியே… நீங்கள் அதற்குள் வரும் போது நீங்கள் வீட்டில் இருப்பதைப் போல உணருகிறீர்கள், நீங்கள் அறிவீர்கள். நீங்கள் அதை நேசிக்கவில்லையா?
167.    “ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனுடன் இருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.” வார்த்தை தன்னில் தானே தேவனாய் இருந்தது. “வார்த்தையானது மாம்சமாகி, நமக்குள்ளே வாசம் பண்ணினார்@ நாம் பிதாவின் மகிமையில் அவரைக் கண்டோம்." நீங்கள் பாருங்கள்? ஆதியிலே இருந்த வார்த்தை இங்கே பூமியில் மாம்சமானதை நாம் கண்டோம். இப்பொழுது, பாவத்தை அப்பால் எடுத்துச் செல்வதற்காக தேவன் மாம்சமானதை எண்ணிப்பார்ப்பது என்னவொரு அற்புதமான காரியமாக உள்ளது.
168.    இப்பொழுது, நாம் உலகத்தின் மூடநம்பிக்கைகளைப் பார்க்கமுடியுமானால், எப்படி அவர்கள் ஆராதித்து, நன்றாக ஆவதற்கு விரும்புகின்றனர்… இப்பொழுது, அங்கேயுள்ள அவர்களுடைய ஏதோ சில ஸ்தாபனங்கள் அல்லது அவர்களுடைய தனிப்பிரிவுகள், அவர்கள், “ஒரு மனிதன் உண்மையிலேயே நல்லவனாக ஆகக்கூடுமானால், அவன் ஒரு தேவனாக ஆகிறான், என்றும் அப்போது அவன் ஒரு தேவனாகவே இருக்கிறான்" என்றும் நினைக்கின்றனர். அவர்கள் தேவனைப் போல அவனை வழிபடுகின்றனர்.
169.    பின்னர் அவர்கள் அதை ஆராதிப்பதற்கு மற்றொரு காரணமும் உண்டு… இதைப் போன்ற கலந்திருக்கும் ஒரு-ஒரு கூட்டத்தினர் மத்தியில் போதிப்பது என்பது கடினமாகவே முடியாததாகும். ஏனெனில், ஜீவக்கிருமி ஆணிடமிருந்தே வெளிவருகிறது (நீங்கள் பாருங்கள்?) அதில் ஜீவன் வைக்கப்பட்டுள்ளது, நித்திய ஜீவன், என்றுமுள்ள ஜீவன், ஆணின் வழியாகவே ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு வருகின்றது. நாம் எப்போதும் இங்கே கொண்டிருக்கிறோம். நாம் எப்போதும் கொண்டிருக்கிறோம்" என்று அவர்கள் நினைக்கின்றனர். அதே ஆவி, ஜனங்களில் மீண்டும் மீண்டும் அசைந்து கொண்டிருக்கிறது. நீங்கள் பாருங்கள்? எனவே, அவர்கள் மனிதனை வழிபடுகின்றனர் ஏனெனில், ஜீவக்கிருமி அவனிடமிருந்து தான் வெளிவருகிறது.
170.    ஆனால் இப்பொழுது, அங்கே ஒரு மனிதன் இருந்ததற்கு முன்னமே அது இருந்ததென்று அது நம்மிடம் கூறுகிறது. முன்னமே ஆதியிலே வார்த்தை இருந்தது, வார்த்தை தேவானாயிருந்தது, வார்த்தை தேவனுடன் இருந்தது, வார்த்தையானது மாம்சமாகி… இப்பொழுது, மனித சிந்தை எவ்வளவு தூரம் போக முடியுமோ அவ்வளவு தூரம் நாம் இப்பொழுதிலிருந்து பின்னால் “ஆதிக்கு” போக முடியும். அது சரியா? “ஆதியிலே வார்த்தை இருந்தது.” ஆனால் இப்பொழுது, வேத சாஸ்திரம்   (வுhநழடழபல) மூலம் எவ்வளவு தூரம் நம்மால் போகக் கூடும் என்பதாக அது இருக்கிறது. நம்முடைய சிந்தை மூலம் நாம் எவ்வளவு தூரம் செல்ல முடியும் என்பதாக உள்ளது. ஆனால் வெளிப்பாடு அதற்கும் அப்பால் நம்மைக் கொண்டு செல்கிறது. அது சரியா?
171.    நீங்கள் வேதசாஸ்திரத்தின் மீது ஏதோவொன்றை போதித்தால், நீங்கள், ~ஆதியிலே வார்த்தை இருந்தது| அது தேவனாக இருந்தது. ‘வார்த்தை தேவனாயிருந்தது,’ அது சரியே. இந்த அதே வார்த்தையானது மாம்சமாகி நமக்குள்ளே வாசம்பண்ணினார்.| (பாருங்கள்?) ‘பிறகு தேவன் மாம்சமானார், அது முரண்பாடின்றி உள்ளது’. அது உண்மை. ~தேவன் மாம்சமானார்|, நாம் அதை விசுவாசிக்கிறோம்” என்று எண்ணுகிறீர்கள். ஆனால் இப்பொழுது, இது வார்த்தையாக இருந்ததற்கு முன்னால்…
172.    ஒரு வார்த்தை என்பது என்ன? ஒரு எண்ணத்தின் வெளிப்பாடு தான் வார்த்தை, ஒரு எண்ணத்தின் வெளிப்பாடாய் இருக்கிறது. அது சரியா? நீங்கள் எதையும் கூறுவதற்கு முன்னால், அதை நீங்கள் கூறுவதற்கு முன்னால், உள் மனதின்படி நீங்கள் சிந்திக்கிறீர்கள். அது சரியா?
173.    எனவே, “ஆதியிலே வார்த்தை இருந்தது.” இதன் மூலமோ வேதசாஸ்திரம் மூலமோ  நாம் எவ்வளவு தூரம் பின்னால் போக முடியும் என்பதாக அது உள்ளது. ஆனால் வார்த்தை இருந்ததற்கு முன்னால், அது ஒரு எண்ணமாக இருந்தது, ஒரு எண்ணம் வெளிப்பாடாக ஆனது. நான் என்ன கூற விரும்புகிறேன் என்று உங்களால் காண முடிகிறதா?
174.    இப்பொழுது அது அவர் எப்படி கூறினார் என்பதாக உள்ளது. முதலில் எண்ணினார், பின்பு அவர் அந்த வார்த்தையைப் பேசினார், வார்த்தை வெளிப்பாடாக ஆனது. ஓ, தேவன் எப்படியாக பிழையற்றவராக இருக்கிறார். கவனியுங்கள். ஒவ்வொரு நினைவும் அது பேசப்படும் போது…
175.    அந்த நேரத்தில், ஆச்சரியமில்லை, இயேசு அந்த இரவு நேரத்தில் மலையை விட்டு வெளியே வந்து ஆகாரத்திற்காக, அந்த மரத்தை சுற்றிலும் நோக்கிய போது, அந்த மரத்தில் ஆகாரமேயில்லாதிருந்தது. எனவே அவர்,“உன்னிலிருந்து இனி எந்த மனுஷனும் புசிப்பதில்லை” என்றார். அவர் தன் வழியே சென்று விட்டார். அடுத்த நாள், திரும்பிவரும்போது, மரம் பட்டுப்போயிருந்தது. தேவனுடைய சிந்தை@ ஆதியிலிருந்த சிந்தை, அது ஒரு வார்த்தையாக இருக்கும் முன்பு ஒரு சிந்தையாயிருந்தது, அது இயேசு கிறிஸ்துவை வெளிப்படுத்தினது, அதே ஒருவர் மீண்டும் திரும்பி அந்த வார்த்தையை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். பாருங்கள்?
176.    வேதாகமத்திலுள்ள ஒவ்வொரு வார்த்தையும் விதை வடிவிலுள்ள தேவனுடைய எண்ணங்களாய் வைக்கப் பட்டுள்ளது, அது மனுஷனுக்குள் ஏற்றுக் கொள்ளப்பட்டால், வேதாகமத்தை உண்மையாக்கும்; அதே எண்ணங்கள் வழியாக பேசப்படுமானால் காரியம் சம்பவிக்கிறது. நான் என்ன கூற விரும்புகிறேன் என்பதை காண்கிறீர்களா? சபையானது எவ்வளவு வல்லமையுள்ளதாக இருந்திருக்க வேண்டும்? வேதாகமமானது, “கிறிஸ்துவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருப்பதாக. ஒரு மனிதனுடைய இருதயத்தின் நினைவு எப்படியோ, அப்படியே அவன் இருக்கிறான்” என்று கூறுகிறது. இப்பொழுது, உங்களுடைய எண்ணங்கள், வெளிப்பாடாக ஆகுமானால்;…
177.    “உலகம் உண்டாவதாக” என்று தேவன் கூறினது போல. அது ஒரு வார்த்தையாக இருந்ததற்கு முன்னால், அது ஒரு சிந்தையாக இருக்க வேண்டியிருந்தது. ஆகவே சிருஷ்டித்தலில் தேவன், முதலில் தம்முடைய எண்ணத்தால் உலகத்தைச் சிருஷ்டித்தார், பின்னர் அதைப் பேசினார், எண்ணம் வெளிப்படுத்தப்பட்டு உண்மைப் பொருளாக  ஆனது. நான் என்ன பேச விரும்புகிறேன் என்பதை காண்கிறீர்களா?
178.    இப்பொழுது, “வெளிச்சம் உண்டாவதாக” என்று கூறியது அதே ஆவியாக இருந்தால், வெளிச்சம் உண்டானது, “மரங்கள் உண்டாவதாக” என்று கூற அங்கே மரங்கள் உண்டாயின@ கிறிஸ்துவிலிருந்த அதே சிந்தை உங்களிலும் இருந்தால், “புற்றுநோய்  மறைந்து போகக்கடவது” என்று எவ்வளவாய் கூறமுடியும், அது போய் விடும்@ “குருடனின் கண்கள் திறக்கப்படுவதாக” என்று கூற அது அப்படியே ஆகும். பாருங்கள்? அது – அது உங்களுடைய எண்ணம். இயேசு “மெய்யாகவே…” என்று கூறினார்.
179.    நீங்கள், “அது இயேசு” என்று கூறுகிறீர்கள். ஆனால் ஒரு நிமிடம் பொறுங்கள். அவர், “தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள். எவனாகிலும் இந்த மலையைப் பார்த்து நீ பெயர்ந்து, சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொல்லி, தான் சொன்னபடியே நடக்கும் என்று தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன் சொன்னபடியே ஆகும் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்று கூறினார். அது சரியா? 'அது உங்களுக்கு உண்டாயிருக்கும், நானல்ல, நீங்கள் அதைக் கொண்டிருப்பீர்கள்” சபைக்கு எப்படிப்பட்ட வல்லமை கொடுக்கப்பட்டுள்ளது, அது…
180.    இப்பொழுது நீங்கள் மனதில் ஏற்படும் எண்ணத்தினால் அதை வெளிப்படுத்த முடியும், ஆனால் அது தேவனுடைய ஒரு உண்மையான வெளிப்பாடாய் ஆகினால், அது சம்பவிப்பதற்கு முன்பே நீங்கள் அதை கண்டு, வார்த்தையின் வடிவில் அதை வெளிப்படுத்துகிறீர்கள், அந்த வார்த்தை தவறாமல் ஒரு உண்மைப் பொருளை உண்டாக்குகிறது: ஒரு எண்ணம் வெளிப்படுகிறது. ஓ, என்னே, எப்படியாக தேவன்… பாருங்கள்? உங்களுடைய இருதயமும் மனதும் தேவனுடைய ஆவியால் நிரப்பப்படுமானால் உங்களுடைய எண்ணங்கள் அவருடைய எண்ணங்களாக ஆகிவிடும்… ஆமென். அங்கே நீங்கள் இருக்கிறீர்கள். உங்களுடைய சிந்தையும், உங்களுடைய வழிநடத்துதலும், உங்களுடைய வழி காட்டுதலும் உங்களுடைய சாவுக்குரிய சரீரத்தில் அசைவாடுகிற பரிசுத்த ஆவியானவரின் ஒரு நேரடியான அகத் தூண்டுதலாய்  அல்லது ஒரு நேரடியான இடமாக ஆகுமானால்… ஓ, என்னே.
181.    நாம் எப்படிப்பட்ட ஜனங்களாய் இருக்க வேண்டும்? அந்த பெரிய பரிசுத்த ஆவியானவர் உங்களில் உள்ளடக்கி இருந்தாலோ அல்லது அதிகாரம் அளித்தாலோ, நீங்கள் உங்களுடைய சொந்த எண்ணங்களை பயன்படுத்த மாட்டீர்கள், நீங்கள் உங்களுடைய சொந்த கருத்தை உபயோகிக்க மாட்டீர்கள்@ ஆனால் உங்களுடைய எண்ணங்களும், உங்களுடைய தன்மைகளும் தேவனுடைய ஆவி உங்களினூடாக தானாகவே வெளிப்படுவது வரை, பரிசுத்த ஆவியானவர் கட்டி எழுப்புகிறார், நாம் எப்படிப்பட்ட ஒரு சபையாய் இருக்க வேண்டும்?
182.    இந்தக் காலையில், இந்தப் பிரான்ஹாம் கூடாரம் தேவனுடைய பிரசன்னத்தினால் நிறைந்து, ஏன், உங்களுடைய சொந்த சிந்தையைக் கூட நீங்கள் உபயோகிக்காமல் சொந்தமாக மாற்றாக எதுவும் கொண்டிராமல், ஆனால் ஆவியானவரால் வழி நடத்தப்படும் பொழுது, அது எப்படிப்பட்ட ஜனமாக இருக்கும்…?
183.    “தேவனுடைய புத்திரர்கள் தேவனுடைய ஆவியால் வழிநடத்தப்படுகிறார்கள்.” மனிதப் பகுதி வெளியே சென்று, அந்த வெற்றிடத்தை தேவனுடைய ஆவி நிரப்பும் பொழுது, எங்கே நீங்கள் உங்களைத் தானே வெறுமையாக்கு கிறீர்களோ (ஆமென்), பின்னர் சபையானது கர்த்தராகிய இயேசுவின் உயிர்த்தெழுந்த வல்லமையில் இருக்கும் பொழுது, அவருடைய காலடி சுவட்டில் (ளுவநிள) அவருடைய வல்லமையில், அவருடைய எண்ணங்களில்;, அவருடைய தன்மையில், அவருடைய அசைவில் நடக்கும்… நான் என்ன கூற விரும்புகிறேன் என்று நீங்கள் காண்கிறீர்களா? அப்படியானால் உங்களுடைய எண்ணங்கள் வார்த்தைகளாகும், வார்த்தைகள் உண்மைப் பொருளாகும். சபையானது அதனுடைய வல்லமையில் இருக்கும் போது அப்படியாகும்…
184.    நான் நம்புகிறேன், அது அதனுடைய வழியில், சபையானது கிறிஸ்துவில் பொதியப்பட்டிருக்கும் போது, பரிசுத்த ஆவியானவர், மனித இனம் தங்களுடைய சுயங்களிலிருந்து விலகி, அவர்கள் தங்களைத் தாங்களே காணமாட்டார்கள், அவர்கள் எதையும் கொண்டிருப் பதில்லை… (ஒலிநாடாவில் காலியிடம்-ஆசிரியர்.)… தேவனை சேவிப்பதைத் தவிர வேறு எந்த எண்ணமுமில்லை. அவர்களுடைய எண்ணங்கள் புதிதாக ஒன்றை உண்டாக்குகின்றன. அவர்கள் அப்படியே ஆவியானவரில் அசைந்து, ஆவியில் ஜீவித்து, ஆவியில் அசைந்து, ஆவியில் நடந்து, கிறிஸ்துவின் பிரமாணத்தை நிறைவேற்று கிறார்கள். பின்னர் மனித இருதயத்தில் கிறிஸ்துவின் அன்பு, பரிசுத்த ஆவியானவரில் அசைவாடி அந்த மகத்தான அற்புதமான சபை வல்லமையுடனும் தெய்வீகத்துடனும் முன் செல்லும்@ ஏனெனில் தெய்வீகமானது மனுஷனில் பரிசுத்த ஆவியானவரால் வெளிப்பட்டு, அவர்களுடைய சிந்தையின் எண்ணங்களை சம்பவிக்கப்பண்ணும்.
185.    நம்முடைய எண்ணங்கள் வித்தியாசமாக ஓடுகின்றன. அனேக தடவைகள் நாம் ஒருவரை நோக்கி நடந்து சென்று, “எப்படி இருக்கிறீர்கள், சகோதரனே?” என்று கூறுகிறோம். நீங்கள் உங்களுடைய இருதயத்திலிருந்து அதைக் கூற விரும்பவில்லை. அனேகத் தடவைகள் நாம், “நான் இது மற்றும் அது. நான் அதைச் செய்வேன்" என்று கூறுகிறோம். உங்களுடைய இருதயத்தில் அதைக் கூற விரும்பவில்லை. பாருங்கள்? நான் என்னுடைய இருதயத்தில் அதைக் கூற விரும்பவில்லை.
186.    ஆனால் நீங்கள் உலகத்தின் காரியங்களுக்கு மரித்தவர்களாக  ஆகும் போது, கிறிஸ்துவே முதலாவதா யிருக்கிறார், கிறிஸ்துவே எல்லாமுமாயிருக்கிறார், அப்போது உங்களுடைய முழு இயல்புமே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினுடையதாகிறது, அவர் முழு கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கிறார். அது உங்களுடைய எண்ணங்கள் தூய்மையாக இருக்கும்போது, உங்களுடைய எண்ணங்கள் மாசற்றதாய் இருக்கும்போது, உங்களுடைய இருதயம்- உங்களுடைய இருதயம்…
187.    அனேக ஜனங்கள், 'நல்லது, மதமானது உங்களுடைய இருதயத்திலிருந்து வருகிறது” என்று கூறுகின்றனர். 'இருதயம்" என்று அழைக்கப்படும் அந்தச் சிறிய ஜீவிக்கும் ஒன்றில் மனரீதியான வசதிகள் கிடையாது. நீங்கள் உங்களுடைய இருதயத்தினால் சிந்திக்க முடியாது. வேதாகமம், “ஒரு மனிதனுடைய இருதயத்தின் நினைவு எப்படியிருக்கிறதோ அப்படியே அவன் இருக்கிறான்” என்று கூறுகிறது. நீங்கள் உங்களுடைய இருதயத்தினால் சிந்திக்க முடியாது. உங்களால் அப்படி செய்ய முடியாது, ஏனெனில் அங்கே மனரீதியாக சிந்திப்பதற்கு எதுவுமில்லை, இயேசு ஜடப்பொருளைப் பற்றிப் பேசவில்லை@ அவர் இயற்கைக்கு மேம்பட்ட உயிருள்ள ஒன்றைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார்.
188.    நாம் மூன்று விதமான பொருளாய் இருக்கிறோம்: ஆத்துமா, சரீரம், ஆவி. இந்த சரீரம் எப்படி உள்ளது என்று நாம் அறிவோம்@ நாம் அதைப் புரிந்துக் கொள்கிறோம்@ அது இங்கேயுள்ளது. ஆவி என்னவாயுள்ளதென்று நாமறிவோம்@ அது மாம்சத்தை கட்டுப்படுத்துகிறது. ஆனால் ஆத்துமா என்பது என்ன? ஆத்துமா என்பது ஆவியின் சுபாவமாக உள்ளது.
189.    ஒரு மனிதன் மனம் திரும்பும்போது, அது அதை குறிக்கவில்லை… இங்கே ஒரு நல்ல, ஆழமான போதகமுள்ளது. நீங்கள் அதைப் பெற்றுக்கொள்கிறீர்கள் என்று நான் நம்புகிறேன். சிறிது காலத்திற்கு முன்னால்… அன்றொரு நாளில் நான் சில பையன்களைப் பற்றிக் கூறிக்கொண்டிருந்தேன்.
190. ஒரு மனிதன் என்னுடைய வராண்டாவில் உட்கார்ந் திருந்தான், அவன், “சகோதரன் பிரான்ஹாம், நான் ஒரு சமயம் ஒரு வியாபாரியாக இருந்தேன். நான் இரட்சிக்கப் படும்படி முயற்சிப்பதிலேயே அனேக வருஷங்களை கழித்து விட்டேன்” என்றார். தன்னுடைய துன்பங்களையெல்லாம் என்னிடம் கூறிக்கொண்டிருந்தார். தன்னுடைய மனைவி சென்று (பரிசுத்த)ஆவியைப் பெற்றுக்கொண்டதாக கூறினார். மேலும் அவள்… அவனால் பரிசுத்த ஆவியைப் பெற முடியவில்லை.
191.    நான், “நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள், சகோதரனே?” என்றேன். அவர் எங்கிருந்து வந்தார் என்று என்னிடம் கூறினார், அவராகவே வெளிப்படுத்தினார்.அவர் சொன்னார்… நான், “நீங்கள் இரட்சிக்கப்படும்படி முயற்சித்துக் கொண்டிருக்கிறீர்களா?”என்றேன். அவர், “ஆம், நான் இரட்சிக்கப்படும்படி முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்” என்றார்.
192.    மேலும் நான்“கர்த்தரும் அதைத் தான் விரும்புகிறார்…” என்றேன். “சகோதரன் பிரான்ஹாமே, இரட்சிக்கப்படக் கூடிய கோட்டை நான் தாண்டி விட்டிருக்கிறேன் என்று  நம்புகிறேன்” என்றார். நான், “ஓ, எனக்குத்தெரியாது” என்றேன்.
193.    அவர், “பாருங்கள், நான் ஒரு மகத்தான பிரபலமான போதகராகிய பில்லி கிரகாமின் கூட்டங்களுக்குச் சென்றேன். மேலும் அவர் தேவனுக்காக மகத்தான கிரியையை நடப்பிக்கும் தேவனுடைய ஒரு அற்புதமான மனிதர். மேலும் அவர், ‘இரட்சிக்கப்பட விரும்பும் எல்லாரும் உங்கள் கரங்களை உயர்த்துங்கள்’ என்று கூறினார். நான் என்னுடைய கரத்தை உயர்த்தினேன்.பின்பு ஒரு விசாரிப்பு அறையினுள் (iஙெரசைல சழழஅ) சென்றேன்” என்று கூறினார். “பின்னர் அவர்கள் திரும்பி என்னிடம் நான் இயேசுவை ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது என்று கூறினர்” என்றார். மேலும், “நான் ஜெபிக்க துவங்கினேன். மேலும் அவர் என்னிடம், ‘இப்பொழுது, இயேசு கிறிஸ்துவை விசுவாசிக் கிறீர்களா?’ என்று கேட்டார். நான் ‘ஆம்’ என்றேன், ‘நான் அவரை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ளுகிறேன்’ என்றேன். அவர் ‘இப்பொழுது, நீங்கள் ‘இரட்சிக்கப்பட்டீர்கள்’ என்றார்” என்று கூறினார். “எனக்கு எதுவும் சம்பவிக்க வில்லை” என்று கூறினார்.
194.    “பின்னர் இரண்டு வருடங்களாக நான் சென்று கொண்டேயிருந்தேன், நான் சத்தமிடுவதற்கு போதுமான சந்தோஷத்தைப் பெற்றுக்கொண்டுள்ள வேண்டும் என்று கூறின சுயாதீன மெதொடிஸ்டு ஜனங்களை நான் கண்டுபிடித்தேன்” என்றார். மேலும் அவர், நான் சத்தமிடுவதற்கு போதுமான சந்தோஷத்தைப் பெறுவது வரை, அவர்கள் என்மீது கரங்களை வைத்து ஜெபித்தனர் மற்றும் ஒவ்வொன்றையும் செய்தனர். அவர்கள், ‘இப்பொழுது நீங்கள் அதைப் பெற்றுவிட்டீர்கள். நீங்கள் பரிசுத்தமாகுதலைப் பெற்றுவிட்டீர்கள்’ என்று கூறினார்கள், நான் வெளியே சென்று என்னால் முடிந்தவரை அவையெல்லாவற்றையும் தேடிக்கொண்டிருந்தேன. “நான் இனியும் அதைக் கொண்டிருக்கவில்லை” என்று கூறினார்.
195.    “நான் ஓரல் ராபர்ட்சின் கூட்டங்களுக்குச் சென்றேன்” என்றார். அவர், “அவர்கள் அறையினுள் வந்து, நான் பரிசுத்த ஆவியைப் பெற்று அன்னிய பாஷையில் பேச வேண்டும் அல்லது நான் அதைக் கொண்டிருக்கவில்லை என்றும் என்னிடம் கூறினர்” என்றார். “நான் அங்கே உள்ளே திரும்பிச் சென்றேன், அவர்கள் என்னிடம் வந்து… என்மீது கரங்களை வைத்து ஜெபித்து, கர்த்தரிடம் பேசும்படி என்னிடம் கூறினர், நான் - நான் அன்னிய பாஷையில் பேசினேன்” என்றார்.
196.    அவர், “சகோதரன் பிரான்ஹாம், நான் இன்னும் அதைப் பெற்றுக்கொள்ளவில்லை” என்று கூறினார். அவர், “என்ன செய்வதென்று எனக்குத் தெரியவில்லை” என்று கூறினார். நான், “இப்பொழுது, என் சகோதரனே…” என்றேன்.
197.    அவர், “நான் ஷ்ரீவ்போர்ட்டில் “சுகமளித்தலின் சத்ததிற்கு சென்றிருந்தேன், நீங்கள் ஒரு தீர்க்கதரிசி என்றும், இங்கே வந்திருக்கிறீர்கள் என்றும் (பரிசுத்த) ஆவி உங்கள் மீது வரும் போது, என்னுடைய தொல்லை என்னவென்று உங்களால் எனக்கு வெளிப்படுத்தக்கூடும் என்றும் அவர்கள் என்னிடம் கூறினர்” என்றார்.
198.    நான், “சகோதரனே, அதைச் செய்வதற்கு நீங்கள் ஒரு தீர்க்கதரிசியாக இருக்க வேண்டியதில்லை. தேவனுடைய வார்த்தை அதை செய்து முடிக்கிறது” என்றேன். நான் “இதற்கு தீர்க்கதரிசனம் அவசியமில்லை” என்றேன்.
199.    நான், 'என் சகோதரனே, ஒரே காரியம் என்னவெனில், நீங்கள் சற்று குழப்பமடைந்துள்ளீர்கள்” என்றேன். நான், “நான், ஒரு காரியத்தை உங்களிடம் கேட்க விரும்புகிறேன். நீங்கள் எப்பொழுதும் கர்த்தராகிய இயேசுவை நேசித்ததுண்டா?” என்றேன்.
200.    அவர், “நல்லது, நான்-நான் பிரஸ்பிட்டேரியன் சபையைச் சேர்ந்தவன்” என்றார்,ஆனால், “நான் வெறுமனே அங்கே சென்றேன்” என்றார்.
201.    நான், “நல்லது, நான் உங்களிடம் கேட்க விரும்புகிறது என்னவெனில், உங்கள் சிந்தை முழுவதும் ஒரேயடியாக மாறும்படி என்ன சம்பவித்தது, என்ன நடந்தது?” என்றேன்.
202.    அவர், “நல்லது, என்னுடைய மனைவி; பெந்தே கோஸ்தேயினரிடம் செல்கிறாள்” என்றார்,“அவள் ஆவியைப் பெற்று விட்டாள்” என்றார். மேலும், “பின்னர் அவள் சந்திக்கப்பட்டு மகிழ்ச்சியாக இருந்தாள்" என்றார். மேலும் கூறினார்…
203.    நான், “நீங்கள் அதைக் குறித்து என்ன நினைக்கிறீர்கள்? நீங்கள் அதைக் குறை கூறுகிறீர்களா?” என்று கேட்டேன். அவர், “இல்லை” என்றார். அவர், “நான், ‘நல்லது, அது எவ்வாறு ஜீவித்திருக்கிறது என்று நான் காண்பேன்’ என்று அப்படியே நினைத்தேன். மேலும், “அது தொடர்ந்து நீடித்திருந்தது. அவள் அதைக் கொண்டிருப் பதாகக் காணப்பட்டாள்” என்றார்.
204.    ஒரு நாள் நான் விற்பனையை முடித்து விட்டு திரும்பி வேலியினருகில் வந்து கொண்டிருந்த போது என் சட்டைப் பையில் என் கையை நுழைக்க நேர்ந்து யாரோ ஒருவர் கொடுத்திருந்த ஒரு பழைய கைப்பிரதியை எடுக்க நேர்ந்தது என்றான். மேலும் 'நான் என் அலுவலகத்தில் உட்கார்ந்து இந்தக் கைப்பிரதியை வாசிக்கத் துவங்குவேன், மிகவும் ஆழமான உணர்வு என் மேல் வரவே நான் கட்டாயம் தேவனிடம் சரிப்படுத்திக் கொள்ள வேண்டும். நான் எப்பொழுதுமே அதைத் தேடிக் கொண்டிருக்கிறேன்" என்றான்.
205.    'நான் ஒன்றை உங்களிடம் கேட்க விரும்புகிறேன். இந்த உணர்ச்சி உங்கள் மீது வரும்பொழுது, நீங்கள் அதை விட்டு வெளிவர முடியுமா?” என்றேன். அவர், 'இல்லை, ஐயா,  நான்  கொண்டிருக்கவில்லை” என்றார்.
206.    நான் “நல்லது, அவ்வாறு தான் நீங்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளும்போதும்”என்றேன்.நான்,“அது உங்களுடைய கரங்களை உயர்த்துவதைக் குறிக்கவில்லை. அது சரியே. அன்னிய பாஷையில் பேசுவதும் சரியே, சத்தமிடுதலும் சரியே. ஆனால் அவர் உள்ளே வந்த பிறகு அது கிறுஸ்துவின் தன்மைகளாக இருக்கிறது” என்றேன். நான், “கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதென்பது கிறிஸ்து இயேசு வாகிய நபரை ஏற்றுக்கொள்வதாகும்” என்றேன். நான் “சத்தமிடுதலும், அன்னிய பாஷையில் பேசுதலும் மற்றும் எல்லா உணர்ச்சிவசப்படுதலும் இதைப் பின்தொடரும் தன்மைகள். ஆனால் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வது தான் முதலாவது செய்ய வேண்டியது” என்றேன்.
207.    அவர், “சகோதரன் பிரான்ஹாம், அப்படியானால் எல்லா நேரங்களிலும் நான் இரட்சிக்கப்பட்டிருக்கிறேனா?” என்றார். நான், “நிச்சயமாக. பாருங்கள்” என்றேன், நான், “நீங்கள் அவரை நேசிக்கிறிர்களா?” என்றேன். அவர், “என்னுடைய முழு இருதயத்துடனும் அவரை நேசிக்கிறேன்” என்றார்.
208.    நான், “ஒரு சமயம் நீங்கள் அவரை நேசிக்கவில்லை” என்றேன். அவர், “அது சரியே” என்றார். மேலும் “இப்பொழுது நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா?” அவர், “நல்லது, அது உண்மை” என்றார். “நல்லது, நீங்கள் அவரை எல்லா நேரங்களிலும் கொண்டிருக்கிறீர்கள்”
209.    அவர் கட்டிடத்தின் நுழைவாயிலில் குதித்து, அழத்தொடங்கி, தன்னுடைய கரங்களால் என்னைப் பற்றிப் பிடித்து, “ஓ தேவனே, இந்த எல்லா வருஷங்களிலும் நான் ஒரு கிறிஸ்தவனாக தான் இருந்து கொண்டிருக்கிறேன்” என்றார். நீங்கள் பாருங்கள், காரியம் என்னவெனில், அவர் ஆரம்பத்தில் ஒளிவு மறைவின்றியிருக்கவில்லை. அல்லேலூயா.
210.    என்ன? நீங்கள் செய்ய வேண்டியிருந்தால், ஒரு பன்றியை ஒரு செம்மறி ஆடாக மாற்ற உங்களால் கூடாது. அவன் ஆரம்பத்திலேயே ஒரு பன்றியாகவே துவங்குகிறான்@ அவன் தன்னுடைய சொந்த அலுவலில் ஈடுபடுகிறான், அவனுடைய சொந்த அலுவலைப் பார்த்துக்கொள்ளும்படி செம்மறிஆட்டிடம் கூறுகிறான். பன்றியை அடைத்து வைக்கும் இடத்தில் இருப்பது தவறென்று பன்றியை நீங்கள் விசுவாசிக்க வைக்கக்கூடிய ஒரே வழி என்னவெனில் அவனில் ஒரு செம்மறியாட்டின் ஆவியை வைப்பதாகும். அவன் தன்னில் ஒரு செம்மறியாட்டின் ஆத்துமாவை எப்போதாவது பெற்றிருந்தால்… அல்லது, ஒரு செம்மறி ஆடு ஆத்துமாவைப் பெற்றிருக்கவில்லை. ஆனால் அவன் எப்பொழுதாவது தன்னிடத்தில் ஒரு செம்மறியாட்டின் ஆவியைப் பெற்றிருந்தால், அந்த காரியத்தின் பெரும் சுபாவத்தை… ஒரு பன்றியை நீங்கள் ஆக்கவோ, மாற்றவோ முடியாததற்கு அதுதான் காரணம்@ நீங்கள் ஒரு செம்மறி ஆட்டை மாற்ற முடியாது, ஏனெனில் அவன் எந்த ஆத்துமாவையும் பெற்றிருக்கவில்லை. அவன் தன்னுடைய ஆவியில் என்னவாக இருக்கிறானோ, அதே சுபாவத்தை அவன் என்றென்றும் பெற்றிருக்கிறான். பாருங்கள்?
211.    ஆனால் ஒரு மனுஷன் ஒரு பன்றியிலிருந்து ஒரு செம்மறிஆட்டுக்குட்டியாக மாற முடியும், ஏனெனில் அவன் தேவனுடைய சாயலில் உண்டாக்கப்பட்ட ஒரு ஆத்துமாவைப் பெற்றுள்ளான். ஆமென்.
212.    நல்லது, அவனுடைய எண்ணங்கள் மாறிவிடுகின்றன. ஏதொவொன்று அவனுக்காக அதைச் செய்கிறது. அல்லேலூயா. “ஒரு மனுஷனுடைய இருதயத்தின் நினைவு எப்படியோ, அப்படியே” பாருங்கள்? சிருஷ்டிகராகிய கிறிஸ்து ஒரு அமைதியான வடிவில் வந்து, அவனில் சிருஷ்டிக்கிறார். அவருடைய சொந்த ஆவியானது, நடனம் மற்றும் உலகத்தின் சிநேகத்திலிருந்து அப்பால் கொண்டு சென்று, அந்த நேரமுதற்கொண்டு அவன் அப்படியே தனிமையில் வைக்கப்பட்டு தேவனை பின்பற்றி பசியாயிருக்கிறான். மேலும் தேவன் எல்லா நேரங்களிலும் அவனில் இருக்கிறார். ஆதியிலே தேவன் இருந்தார். பாருங்கள்? நீங்கள் அங்கே இருக்கிறீர்கள். ஆமென்.
213.    “ஒரு மனுஷனுடைய இருதயத்தின் நினைவு எப்படியோ, அப்படியே..” ஒரு வார்த்தையாக அது ஆவதற்கு முன்னால் அது ஒரு எண்ணமாக ஆக வேண்டியுள்ளது. ஒரு வார்த்தை வெளிப்பட்டு, உண்மை பொருளாகிறது. நான் ஒரு கிறிஸ்தவனென்று நான் என்னுடைய இருதயத்தில் விசுவாசிக்கிறேன், ஏனெனில் நான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டுள்ளேன்@ நான் அழாமலிருந் தாலும், நான் அசையாமலிருந்தாலும், நான் ஒரு காரியத்தையும் செய்யாமலிருந்தாலும், கிறிஸ்து என்னுடைய இடத்தில் எனக்காக மரித்தாரென்று நான் முதலாவது என்னுடைய இருதயத்தில் விசுவாசிக்கிறேன். ஆமென். நான் ஒரு கிறிஸ்தவனாக அதை ஏற்றுக்கொள்ளுகிறேன்@ நான் ஒரு கிறிஸ்தவனாக அதை ஏற்றுக்கொள்ளுகிறேன்@ அப்படியானால் அது என்னுடைய இருதயத்தில் இருக்கிறது. பின்னர் “நான் ஒரு கிறிஸ்தவன்” என்று ஒரு வார்த்தையில் அதை நான் வெளிப்படுத்துகிறேன். அல்லேலூயா. பின்னர் “நான் ஒரு கிறிஸ்தவனாக நடந்து, கிறிஸ்தவனாக ஜீவித்து, ஒரு கிறிஸ்தவனாக பேசி, அவ்விதமாக இருக்கத் தொடங்குகிறேன். என்னுடைய கனிகளின் மூலம் நான் ஒரு கிறிஸ்தவனாக உலகத்தால் அடையாளம் கண்டு கொள்ளப்படுகிறேன். அல்லேலூயா.
214.    சொல்லுங்கள், அந்தக்கூச்சலை நான் பெற்றுக்கொள்ள நோக்கங்கொள்ளவில்லை. ஆனால் நான்... ஆனால் அங்கே தேவனுடைய வார்த்தையில் அது இருக்கிறது,. இயேசு கூறினார்… இங்கே அது இருக்கிறது. ஓ, நான் அதிக நேரம் எடுத்துக் கொள்பவனாக இருக்கும் போது அப்படியே என்னிடம் கூறுங்கள். ஆனால் நல்லது, இயேசு இதைக் கூறினார். பாருங்கள், “ஆதியிலே…” கவனியுங்கள். பாருங்கள்,“ஒரு மனுஷன், அவன் தன்னுடைய இருதயத்தில் நினைக்கிறதை போல.” இப்பொழுது இயேசு என்ன கூறினார் என்பதைக் கவனியுங்கள். நாம் அதை அறியமாட்டோம்…
215.    ஓ, நீங்கள் மாத்திரம் சுற்றிலும் பயணம் செய்து அந்த மதங்களைக் காண்பீர்களானால்@ ஒன்று இதைச் செய்கிறது, ஒன்று அதைச் செய்கிறது, மேலும் ஒன்று அதைச் செய்கிறது. ஆனால், சகோதரர்களே, ஒரு தடவை இந்தப் பழைய கூடாரத்தை நாம் அனுமதிப்போம், நாம் என்றென்றுமாக சரியாவோம்;..
216.    நாம் விசுவாசத்தினால் கிறிஸ்தவர்களாயிருக்கிறோம். பாருங்கள்? தேவன் தம்முடைய முடிவற்ற கிருபையினால், கிறிஸ்து இயேசுவாகிய தம்முடைய குமாரன் வழியாக அவரிடம் ஒப்புரவாகும்படி நம்மை அழைத்தார். அது அதை முடிக்கிறது. நாம் என்ன செய்தோம் என்பதல்ல, அவர் என்ன செய்தார் என்பதே@ அவர் என்னுடைய ஆத்துமாவை உலகத்தின் காரியங்களிலிருந்து தேவனுடைய காரியங்களுக்கு மாற்றினார், குதிரைப் பந்தயம், சூதாட்டம், விபச்சாரம், பொய் சொல்லுதல் மற்றும் திருடுதலிலிருந்து அவர் என்னுடைய ஆத்துமாவை மாற்றினார்இ என்னுடைய எண்ணங்களை மாற்றினார்@ பின்னர் என்னுடைய எண்ணங்கள் என்னுடைய உதடுகளில் வார்த்தையாக ஆவது வரை அதிக உண்மையாக ஆகின்றது@ அவைகள் உண்மைப் பொருளாகிறது, இப்பொழுது நான் ஒரு கிறிஸ்தவனாக இருக்கிறேன். அது என்னை ஒரு வித்தியாசமான ஆளாக ஆக்கினது. அது தான் உங்களையும் ஆக்கினது. பாருங்கள்?
217.    இப்பொழுது, நீங்கள் ஒரு மந்தமான சிந்தையை பெற்றிருந்து, “ஆம்” என்று நீங்கள் அதை விசுவாசிக்க வில்லையென்றால், நீங்கள், “நல்லது, நான் அப்படியே வியப்படைகிறேன்” என்று கூறுகிறீர்கள். நீங்கள் விழிப்புடன் இருப்பது நல்லது.
218.    நீங்கள், “நல்லது சகோதரனே, நான் - நான் ஒரு நல்ல நேரத்தைக் கொண்டிருந்தேன்” என்று கூறுகிறீர்கள். எவ்வளவு நல்ல நேரத்தைக் கொண்டிருந்தீர்கள் என்று எனக்கு கவலையில்லை. “நல்லது, நான் சத்தமிடுகிறேன்” என்று கூறுகிறீர்கள். அது நல்லது, ஆனால் அது இன்னும் அதை குறிக்கவில்லை. நீங்கள், “நான் வியாதியை சுகமாக்குகிறேன்” என்று கூறுகிறீர்கள். அது இன்னும் அதைப் குறிக்கவில்லை.
219.    இயேசு, “அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை@ அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்” என்றார். ஆம், ஐயா.
220.    பவுல், “நான் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசினாலும், மலைகளைப் பேர்க்கத் தக்கதாக சகல விசுவாசமுள்ளவனாயிருந்தாலும், எனக்கு உண்டான யாவற்றையும் நான் அன்னதானம் பண்ணினாலும், நான் ஒன்றுமில்லை” என்று கூறுகிறார்.
221.    அது ஒரு மாற்றத்தை அடைய வேண்டியதாக உள்ளது (இங்கே அது இருக்கிறது) ‘இருதயத்தின் ஒரு மாற்றம், இந்த ஜடப்பொருளல்ல, ஆனால் உங்களுடைய ஆத்துமாவில் இருதயத்தில். அந்த வழியானது சலிப்பு தருவாதாயிருக்கிறது என்று உங்களுடைய எண்ணங்கள் வரை ஏதோவொன்று நங்கூரமிடப்படுதல்@ இனிமேலும் நீங்கள் அதை காணமாட்டீர்கள். நீங்கள் அப்படியே கர்த்தராகிய இயேசுவைக் காண்கிறீர்கள். நீங்கள் நீதியை, பரிசுத்தத்தை, தூய்மையை, அன்பை, கிருபையைக் காண்கிறீர்கள். அது நீங்கள் மாறிவிடும் போது, ஒரு மனந்திரும்புதல் என்பது என்ன? “மனந்திரும்புதல்” என்பது “ஏதோவொன்று மாறுவது” என்பதாகும். உங்களுடைய எண்ணங்கள், உங்களுடைய பழக்க வழக்கங்கள், உங்களுடைய தன்மைகள் ஒரு பாவியிலிருந்து ஒரு கிறிஸ்தவனுக்கு மாறிவிடுகின்றன. முதலாவது காரியம், நீங்கள் உங்களுடைய இருதயத்தில் அதை அறிவீர்கள்@ பின்னர் நீங்கள் உங்களுடைய உதடுகளால் அதை வெளிபடுத்துகிறீர்கள்@ பின்னர் அது உண்மைப் பொருளாகிறது, அது நீங்களாக இருக்கிறீர்கள்.
222.    இப்பொழுது, நீங்கள் அதை நினைப்பதாக நீங்கள் எண்ணினால் (என்ன ஒரு வார்த்தை!), ஆனால் நீங்கள் அதை நினைப்பதாக நீங்கள் கற்பனை செய்கிறீர்கள், நீங்கள் அதை வெளிப்படுத்துகிறீர்கள், அது உண்மைப் பொருளாவதில்லை, அப்படியானால் நீங்கள் தவறான பாதையில் இருக்கிறீர்கள். நீங்கள் அதைப் பெற்றுக் கொண்டீர்களா? நான் சிறிது மெதுவாக பேசுவது சிறந்ததாக இருக்கலாம். பாருங்கள், நீங்கள் ஒரு கிறிஸ்தவனென்று நீங்கள் கற்பனை செய்து, நீங்கள் அதை வெளியே உங்களுடைய உதடுகளால் பேசுவீர்களானால், ஆனால் நீங்கள் அவ்விதமில்லை என்பதை நீங்கள் கண்டு பிடிக்கிறீர்கள், உங்கள் எண்ணங்கள் மாறி, உங்கள் இருதயமும் மாறுவது உங்களுக்கு நல்லது, ஏனெனில் அது உச்சநிலையைக் கொண்டிராது, அது அதனுடைய கனியைப் பிறப்பிக்காது. “ஆனால் ஆவியின் கனியோ அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்” ஒவ்வொரு சிறு காரியமும் மேலாக வருமானால், நீங்கள் அதற்கு மேலாக பறக்கிறீர்கள், கவனமாய் இருப்பது நல்லது. அங்கே ஏதோவொன்று சம்பவிப்பதில்லை. இங்கே இல்லாத ஏதோவொன்றை நீங்கள் வெளிப்படுத்துகிறீர்கள்.
223.    இயேசு பரிசேயர்களிடம், 'நீங்கள் மாய்மாலக்காரர்கள். நீங்கள் நற்காரியங்களை எப்படி கூற முடியும்?” என்று கூறினார். அதுதான் அவர்களை ஒரு மாய்மாலக்காரர்களாக ஆக்கினது@ அவர்கள் தங்களுடைய இருதயத்தில் ஒரு காரியத்தை எண்ணினர், அவர்களுடைய உதடுகளால் வேறொன்றை வெளிப்படுத்தினர். ஒரு மாய்மாலக்காரன் என்பது அதுவே. அதுதான் ஒரு மாய்மாலக்காரனை உண்டாக்குகிறது. “மாய்மாலக்காரர்களாய் இருப்பவர்களே, உங்களால் எப்படி முடியும். இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும். நீங்கள் உண்மையாகவே என்ன எண்ணு கிறீர்களோ அதை நீங்கள் பேசுவதில்லை” என்றார். நான் என்ன கருதுகிறேன் என்பதைப் பாருங்கள்? நீங்கள் எண்ணுவதைத் தான் நீங்கள் பேசவேண்டும். நீங்கள் அதை எண்ணவில்லையென்றால், அதைப் பேசாதீர்கள். பாருங்கள்? உங்களுடைய வார்த்தைகளைப் பேசுங்கள்@ உங்களுடைய இருதயத்தின் ஆழத்திலிருந்து வருவதாக அவைகள் இருக்கட்டும்.
224.    இயேசு அந்த மரத்தினிடம், “உன்னிடத்திலிருந்து எந்த மனுஷனும் புசிப்பதில்லை” என்று கூறினது போல. ஏன், அவருடைய இருதயத்தில் அங்கே ஒரு – ஒரு சந்தேகத்தின் நிழலும் இல்லை, அந்த மரம் பட்டுப்போனது. ஏன்? அவருடைய இருதயம் தூய்மையிலிருந்து வந்து கொண்டிருந்தது… அது அந்த சீஷர்களுக்கு ஒரு பாடத்தை போதித்துக் கொண்டிருந்த, அந்த வழியில் அவரை உருவாக்கிக் கொண்டிருந்த, அவரில் இருந்த தேவனுடைய ஆவியாக இருந்தது. நான் என்ன கருதுகிறேன் என்று பாருங்கள்? சரி.
225. அப்போது அது தூய்மையாக இருக்கட்டும். உங்களுடைய நினைவுகள் தூய்மையாக ஓடட்டும், உங்களுடைய அனுபவங்கள் தூய்மையாகவும் இருக்கட்டும். தூய்மையாக ஜீவியுங்கள். தூய்மையாக இருங்கள். இப்பொழுது, உங்களுடைய இருதயமானது தீய எண்ணத்திற்கும், விபசாரத்திற்கும், இந்த எல்லா வித்தியாசமான காரியங்களுக்கும் நடத்திச் செல்கிறது. அது உங்களுடைய இருதயத்திலிருந்து வெளியே வருமானால், உங்களுடைய இருதயத்தில் என்ன உள்ளது. ஆனால் உங்களுடைய இருதயத்திலிருந்து நீதி, அமைதி, அன்பு, சந்தோஷம் வருமானால், ஓ, என்னே, அது இங்கே அதை உருவாக்கும் ஒரு ஆதாரத்திலிருந்து வருகிறது. நான் என்ன கருதுகிறேன் என்று பாருங்கள்? அது இங்கே வார்த்தைகளின் வழியாக தானாகவே வெளிப்படும் தேவனுடைய ஆவியினால் உருவாகிறது, மேலும் நீங்கள் என்ன கூறுகிறீர்களோ அது சம்பவிக்கும்.
226. தேவனுடைய வார்த்தை எப்படியாக தவறாததாக உள்ளது என்பதன் ஏதோவொன்றின் ஒரு சிறிய நுண்ணறிவுத் திறனை நான் உங்களுக்குக் கொடுப்பேன். நீங்கள் என்ன கூறிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதைக் கவனியுங்கள். தேவன் எதையாவது கூறும் போது, அது சம்பவிக்கும்;. அது காண்பதற்கு எவ்வளவு வித்தியாசமாக உள்ளது என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை. நான் சிறிது முன்னால் இந்த பெரிய பிரயாணம் செய்வதைப் போலவே, நான் காரியங்களைக் கண்டு கொள்கிறேன். தேவன் ஏதோவொன்றைச்செய்வதை நான் கண்டிருக்கிறேன். நண்பர்களே, அது எப்பொழுதாவது சம்பவிப்பதற்கு கூடாதது என்று நான் நினைத்தேன், ஆனால் அது சம்பவித்தது. நான் செய்த ஏதோவொன்றின் தவறை நான் கண்ட பிறகு, ஒரு தவறாக இருந்தது. ஏதோவொன்றை ஒருவேளை செய்து கொண்டிருந்தது. சென்று அதைச் செய்யும்படி தேவன் என்னிடம் கூறினாh.;; இங்கே என்னுடைய சட்டைப் பையில் அதை எழுதி வைத்திருந்தேன். அதைச் செய்வதற்குப் பதிலாக, நான் அதைப்பற்றி மறந்துவிட்டு, சுற்றிலும் திரும்பி வேறு எதையோ செய்தேன். தேவனுடைய கிருபை சரியாக அதை பின்னால் சுழற்றி, எப்படியாயினும் அதனூடாக அதை நடப்பித்தது. ஆமென். அது சம்பவித்தாக வேண்டியிருந்தது.
227. நல்லது, இங்கே பரிசுத்த யோவானில் உள்ளது என நான் நம்புகிறேன், நான் அப்படியே அன்றொரு நாளில் அதே காரியத்தை இங்கு எங்கோ வாசித்தேன். நாம் காணலாம், ஏறத்தாழ அது 12-வது (அதிகாரம்). ஆம், இங்கே அது உள்ளது. பாருங்கள், பரிசுத்த யோவான் 12 ம் அதிகாரம், 37 வது வசனம்.   கவனியுங்கள், 36 லிருந்து, நாம் தொடங்குவோம்.
ஓளி உங்களோடிருக்கையில் நீங்கள் ஒளியின் பிள்ளைகளாகும்படிக்கு,ஒளியினிடத்தில் விசுவாசமாயிருங்கள் என்றார். இவைகளை இயேசு சொல்லி, அவர்களை விட்டு மறைந்தார்.
228. இப்பொழுது, கவனியுங்கள். இங்கே அது உள்ளது. இப்பொழுது, இதைக் கவனியுங்கள், உண்மையாகவே கூர்ந்து கவனியுங்கள். நான் இங்கே அதை, குறித்து வைத்துள்ளேன். நான் பாம்பேயில் அதை வாசித்துக் கொண்டிருந்தேன். அவர் இத்தனை அற்புதங்களை அவர்களுக்கு முன்பாகச் செய்திருந்தும், (பாருங்கள்?) அவர்கள் அவரை விசுவாசிக்கவில்லை.
229. என்ன செய்யப்பட்டது என்பது காரியமில்லை, அவர் அற்புதங்களை நடப்பித்தார். இந்த தேசத்தைப் பாருங்கள். இந்த ஜனங்களைப் பாருங்கள். இந்தக் கூடாரத்தில் சரியாக இங்கே என்னென்ன அடையாளங்களும் அற்புதங்களும் நடப்பிக்கப்பட்டன என்று பாருங்கள். என்ன காரியங்க ளெல்லாம் கூறப்பட்டதென்றும் என்னவெல்லாம் தேவனுடைய தாயிருந்ததென்று நிரூபிக்கப்பட்டதென்றும் பாருங்கள். பாருங்கள். பாருங்கள்?தேவனுடைய நிரூபணம், இருப்பினும், பட்டணத்தின் ஜனங்கள் அதை நகைப்பார்கள், அதை கேளிக்கையாக்கி, மனதில் உள்ளவைகளை வாசித்தல் அல்லது மற்ற ஏதொவொன்று என்று கூறுகிறார்கள். அவர்கள் அதை புரிந்து கொள்ளவில்லை. இங்கே கவனியுங்கள். அவர் இத்தனை அற்புதங்களை அவர்களுக்கு முன்பாகச் செய்திருந்தும், அவர்கள் அவரை விசுவாசிக்கவில்லை.
கர்த்தாவே, எங்கள் மூலமாய் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார்? கர்த்தருடைய புயம் யாருக்கு வெளிப்பட்டது என்று ஏசாயா தீர்க்கதரிசி சொன்ன வசனம் நிறைவேறும்படி இப்படி நடந்தது.
ஆகையால் அவர்கள் விசுவாசிக்க மாட்டாமல் போனார்கள். ஏனெனில் ஏசாயா பின்னும்:
230. தேவன் எதையாவது பேசும் போது, அது சம்பவித்தாக வேண்டும். அவருடைய நினைவுகள் முதலாவதாக உள்ளது, பின்னர் அவருடைய வார்த்தை வெளிப்படுகிறது. பின்னர் அது எதுவுமில்லை… என்ன வந்தாலும் போனாலும் காரியமில்லை, அது சம்பவித்தே தீரும். ஓ, வார்த்தையின் பிழையற்ற தன்மையை உங்களால் காண முடிகிறதா? ஓ, என்னே.
அவர்கள் கண்களினால் காணாமலும், இருதயத்தினால் உணராமலும், குணப்படாமலும் இருக்கும்படிக்கும், அவர்களுடைய கண்களை அவர் குருடாக்கி, அவர்கள் இருதயத்தைக் கடினமாக்கினார் என்றான்.
231. பாருங்கள், நாம் செய்வதைப் போன்ற அவனுடைய மேடு பள்ளமான ஒரு நிலை மற்றும் நாம் செய்வதைப் போன்ற அவனுடைய தவறுகளைக் கொண்ட ஒரு மனிதனாகிய ஏசாயா என்ற தம்முடைய தீர்க்கதரிசி, வழியாக, தேவன், ஆனால் தேவனோ அந்த மனிதனின் தோல்வியை ஒரு தீர்க்கதரிசியாக இருந்ததால், ஏற்றக் கொண்டார், அவனுடைய வார்த்தைகள்…தேவனுடைய நினைவுகள் (அல்லேலூயா), தேவனுடைய நினைவுகள் ஏசாயாவின் அந்த சாவுக்குரிய உதடுகள் மூலமாக வெளிப்பட்டன. நான் கொண்டிருப்பது போன்ற பாவம் மற்றும் காரியங்களுடன் கூடிய ஒரு மனிதன், நான் கொண்டிருப்பது போன்ற நீங்கள் கொண்டிருப்பது போன்ற அவனுடைய மேடுகள் பள்ளங்களுடன். ஆனால் தேவனுக்கு ஒரு அதிகாரத்திற்கு பணியும் பாத்திரம், எண்ணங்களை வெளிப்படுத்துதல், வார்த்தை வழியாக தேவனுடைய எண்ணம். அவர்கள் என்ன செய்தார்கள் என்பது காரியமல்ல, ஏசாயாவின் வார்த்தைகள் நிறைவேற வேண்டியதாயிருந்தன, ஏனெனில் அது ஏசாயாவின் மூலமாக வெளிப்பட்ட தேவனுடைய நினைவுகளாக இருந்தன.
232. அங்கே தான் நீங்கள் இருக்கிறீர்கள் அல்லேலூயா. ஓ தேவனே.“இந்தக் கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை.” ஓ, என்னே, இனிமேலும் உலகமானது இல்லாதிருக்கும் போது, “வானமும் ப+மியும் ஒழிந்து போம், என் வார்த்தையோ ஒரு நாளும் ஒழிந்து போகாது.” ஏன்? அவன் சர்வ வல்லமையுள்ள தேவனின் நினைவுகளை வார்த்;தையில் வெளிப்படுத்திக் கொண்டிருந்தான். மேலும் விசுவாசத்தினால் அந்த வார்த்தையை ஏற்றுக் கொள்ளக் கூடும் போது, அது உண்மைப் பொருளை உண்டாக்குகிறது. ஓ, “கர்த்தாவே, உம்முடைய வார்த்தை என்றென்றைக்கும் வானத்தில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது” என்பதை எண்ணுவதற்கு எப்படியாய் அது என்னுடைய இருதயத்தை சிலிர்ப் ப+ட்டுகிறது. தேவனுடைய நினைவுகள் என்னவாக உள்ளதோ, அவன் வார்த்தையில் அவைகளை வெளிப்படுத்துகிறான், இங்கே ஜீவிக்கிற தேவனுடைய வார்த்தைகள் உள்ளது.
233. இயேசு, “என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பின வரை விசவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு, அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல் மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறான்” என்றார். அல்லேலூயா!
234. “சபைக்கு செல்லுபவன்” என்பதல்ல, “புத்தகத்தில் தன்னுடைய பெயரை வைத்திருப்பவன்” என்பதல்ல. “உரிமை கொண்டாடுபவன்” என்பதல்ல. “சத்தமிடுபவன்” என்பதல்ல. “வியாதியஸ்தரை சுகமாக்குபவன்” என்பதல்ல. “குருடான கண்களைத் திறப்பவன்” என்பதல்ல. “அன்னிய  பாஷையில் பேசுவபன்” என்பதல்ல. “ஆனால் என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிற வனுக்கு நித்திய ஜீவன் உண்டு, அவன் ஆக்கினைத் தீர்ப்புக்கு உட்படாமல் மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக்கு உட்பட்டிருக்கிறான்”. ஓ, சகோதரனே, அந்த வார்த்தைகள் தேவனுக்கு முன்பாக உண்மையாகும் வரை அந்த விசுவாசம் அந்த இருதயத்தில் ஒரே சமயத்தில் நங்கூரமிடப் படட்டும். பிறகு வானமும் ப+மியும் ஒழிந்து போகலாம், ஆனால் உன்னுடைய இருதயத்தினுள் நினைவாயுள்ள தேவனால் வெளிப்படுத்தப்பட்ட நித்திய வார்த்தையானது, ஏசாயாவின் வார்த்தைகள் தவற முடியாததை விடவும் என்றுமே தவற முடியாது.
236. அற்புதங்கள் செய்யப்பட்டதை ஆயிரக்கணக்கான பேர்கள் பார்த்து விட்டார்கள், இருப்பினும் விசுவாசிக்க வில்லை, ஏனெனில் ஏசாயா அதை வெளிப்படுத்தி யிருக்கிறான், “அவர்கள் அதை விசுவாசிக்க மாட்டார்கள்” என்று கூறினான்.
237. தேவனுடைய வார்த்தை நித்தியமானது. “ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்தி லிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.” தேவன், அங்கே பின்னால் ஆதியிலே அவர் உலகத்தைப் பார்த்த போது, அவர் இங்கே இந்தக் காலையில் உங்களையும் என்னையும் கண்டார். அதோ அங்கே பின்னால் உட்கார்ந்து கொண்டிருக்கும் என்னுடைய குழந்தையை அவர் கண்டார். இந்தியாவிலுள்ள ஒவ்வொரு பசியான மனிதரையும் அவர் கண்டார். மேடையிலுள்ள ஒவ்வொரு போதகரையும் அவர் கண்டார். ஓவ்வொரு மாய்மாலக்காரன் நடப்பதையும் அவர் கண்டார். அவர் முழு காரியத்தையும் கண்டார். தேவனுடைய முடிவில்லா சிந்தையானது அதை முன்னதாகவே கண்டது.
238. மேலும் அவர், “இப்பொழுது, அந்த விழுந்துக் கிடக்கும் ஜனக்கூட்டத்தை மீட்பதற்கு, நான் கிறிஸ்து இயேசுவாகிய என்னுடைய குமாரனை அனுப்புவேன்” என்று கூறினார். அங்கே வார்த்தை இருந்தது. ஆதியிலே, அது ஒரு வார்த்தையாக இருப்பதற்கு முன்னால், அது ஒரு எண்ணமாக இருந்தது.அதற்கு முன்னால், அது ஒரு சிந்தையாக இருந்தது. அது ஒரு வார்த்தையில் வெளிப்படுத்தப்பட்டது. வார்த்தையானது மாம்சமாகி நமக்குள்ளே வாசம் பண்ணினார். அல்லேலூயா. உலகமானது எப்போதாவது தோன்றுவதற்கு முன்னமே, பத்து மில்லியன் வருடங்கள் இருக்கலாம், மரணத்தை விட்டு கொடுக்கை வெளியே எடுப்பதற்கு தம்முடைய சரீரமானது மாமிசத்தில் கூடாரமிடப்பட்டதை தேவனுடைய சிந்தையானது கண்டது. விய+!
239. தேவனுடைய வார்த்தையானது எப்படியாய் நித்தியமா யுள்ளது. ஓ, காலங்கள் மாறும்;. வருடங்கள் வந்து செல்லும். நேரத்தின் எல்லையற்ற நீண்ட காலமானது கடந்து செல்லும@;; ஆனால் தேவனுடைய வார்த்தையோ என்றென்றும் மாறாது. அங்கே அது இருக்கிறது.
240. “ஓ கர்த்தாவே, உமக்கு விரோதமாய் பாவம் செய்யாதபடிக்கு உம்முடைய வார்த்தையை என்னுடைய இருதயத்திலே வைத்து வைக்கட்டும். அதை இரவும் பகலும் தியானிக்கட்டும். என்னுடைய இருதயப் பலகையில் (டிநனிழளவ) உம்முடைய கற்பனைகளை எழுதட்டும். அவைகள் எப்பொழுதும் எனக்கு முன்பாக இருக்கட்டும். மேலும், கர்த்தாவே, உமக்கு விரோதமாய் என்னுடைய இருதயத்தில் நான் பாவம் செய்யாதபடிக்கு. ஆனால் அங்கே என்னை நடத்தும்”. “எனவே அங்கே இப்பொழுது ஆக்கினைத் தீர்ப்பில்லை,” ரோமர்.8:1, அல்லேலூயா, “கிறிஸ்து இயேசுவுக்குட்;பட்டவர்களாயிருந்து மாம்சத்தின் படி நடவாமல் ஆவியின்படி நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத் தீர்ப்பில்லை.”ஆமென்.
241.மனுஷனுடைய இருதயத்திற்குள் இருக்கும் தேவனுடைய வெளிப்படத்தப்பட்ட எண்ணங்கள்;, என்றென்றும் ஜீவிக்கிற தேவன், இடத்திற்கு இடம் தம்முடைய பிரஜைகளை வழிநடத்துவது போன்று சரியாக அசைகிறது. மேலும் “நல்ல மனுஷனுடைய நடைகள் கர்த்தரால் உறுதிப்படும்” என்று வேதாகமம் கூறுகிறது. ஓ, என்னே. உலகம் எப்படி புதியதாக உள்ளது? முடிவற்ற காலம் என்பது எவ்வளவு காலம் இருக்கும்? ஒரு சாவுக்குரிய தன்மையுடைய உதடுகள் வழியாக வெளிப்படுத்தப்படும் தேவனுடைய வார்த்தையை நாம் நினைக்கும் போது, இருப்பினும் தேவனுடைய வார்த்தைக்கு இணங்கிப் போவது…
242. அவர், “ஏசாயா அதைக்குறித்து சொல்லியிருக்கிறான். அவர்களால் அதைச்செய்ய முடியாது, ஏனெனில் ஏசாயா ஊக்குவித்தலினால் அதைக் கூறியிருக்கிறான்” என்று கூறினார்.
243. இம்மானுவேலாகிய அந்த இயேசு கிறிஸ்து இங்கே ப+மியின் மீது, ஒவ்வொரு இடங்களிலுமிருந்தும் எல்லா வேதவாக்கியங்களுடனும்… அவர் ப+மியின் மீது நடந்து திரிந்த போது, அவர் மூன்றாம் நாளில் எழும்பப் போகிறாரென்று அறிந்திருந்தார். ஏன்? ஏனெனில் தாவீது, ஊக்க உணர்ச்சியினால், “என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர். உம்முடைய பரிசுத்தவானை அழிவைக் காண வொட்டீர்” என்று கூறினான். அவன், “ஆகையால் என் இருதயம் ப+ரித்தது, என் மகிமை களி கூர்ந்தது. என் மாம்சமும் நம்பிக்கையோடே தங்கியிருக்கும்” என்று கூறினான். இயேசு ஒரு வார்த்தையின் கீழே, அபிஷேகம் பண்ணப்பட்டு, தன்னுடைய மேடு பள்ளமானவைகளை கொண்டிருந்த ஒரு மனிதனான தாவீதின் வழியாக தேவனால் பேசப்பட்டது. தாவீது, “என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர். உம்முடைய பரிசுத்தவானை அழிவைக் காணவொட்டீர்” என்று கூறினான்.
244. இயேசு, “இந்த ஆலயத்தை இடித்துப் போடுங்கள், மூன்று நாளைக்குள்ளே இதை எழுப்புவேன்” என்று கூறினார். அல்லேலூயா! அவர் என்றும் நிலைத்திருக்கிற தேவனுடைய வார்த்தையை விசுவாசித்தார். ஆம், ஐயா,… விசுவாசத்தை தவிர வேறு காரியமில்லை.
245. “அவர் சொல்லாத காரியத்தை அவர் செய்ய மாட்டார்”, “நல்லது, நீங்கள் அறிவீர்கள், அவர் வெள்ளிக் கிழமையன்று மரித்தார், ' பின்பு அவர் உயிர்த்தெழுந்தார். அப்படியானால் ‘மூன்று| நாட்களைப் பற்றி என்ன?” என்று கூறுகிறீர்கள்.
246. எழுபத்திரண்டு மணி நேரத்தில் சரீரத்துக்கு அழிவு வருமென்று இயேசு அறிந்திருந்தார். அந்த மூன்று நாட்களுக்கிடையில் ஏதோவொரு நேரத்தில், அங்கே உள்ளே ஏதொவொரு நேரத்தில் தேவன் அதை எழுப்பப் போகிறாரென்று அவர் அறிந்திருந்தார். ஏனெனில் தாவீது ஊக்குவித்தலுக்குக் கீழே, அவர் அதை எழுப்புவார் என்று கூறினான். அல்லேலூயா! வேதத்தில் எழுதப்பட்ட ஒரு வேதவாக்கியம், தேவன் தம்முடைய வார்த்தையை காத்துக் கொள்வார் என்று அறிந்தவராய் ஒரு வீரனைப் போல மரணத்திற்கு அவர் முன்னோக்கி சென்றார்: தேவன் முதலில் எதை நினைத்தாரோ, பிறகு வெளிப்படுத்துதல். அல்லேலூயா!
247.எனவே இன்று, மேலே ஏறிச் சென்ற அந்த கர்த்தராகிய இயேசு சென்ற போது அவரை நீங்கள் பார்த்தவிதமாகவே மீண்டும் அதோ அங்கே மேலே வந்து கொண்டிருக்கிறார் என்று நான் நம்புகிறேன். மறுபடியும் பிறந்து இரத்தத்தால் கழுவப்பட்டவர்களை மீட்பதற்காக அவர் வந்து கொண்டிருக்கிறார். “அவர் போனது போன்றே, அவர் வருவார்.” அது வேதாகமத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ‘இராஜாக்கள் எழும்பலாம்;@ வித்தியாசங்கள் வரலாம், இடி ப+மியை நிறுத்தலாம், பஞ்சம், அணு குண்டுகள், அது என்னவாக இருந்தாலும். “தேவகுமாரனாகிய இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப் போனாரோ, அப்படியே மறுபடியும் வருவார்,” அது அவ்விதமாக கூறப்பட்டிருக்கும் தேவனுடைய ஊக்குவிக்கப்பட்ட வார்த்தை.
248. தேவன்; வியாதியஸ்தர்களின் சரீரத்தை சுகமாக்கு வாரென்று நான் உண்மையாகவே விசுவாசிக்கிறேன், ஏனெனில் “நம்முடைய மீறுதல்களினி மித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினி மித்தம் அவர் நொறுக்கப்பட்டார் ; நமக்கு சமாதானத்தை உண்டு பண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது. அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்” என்று அவன் கூறினான். போதகர்களோ, வேதசாஸ்திரமோ என்னவாயிருந்தாலும் அங்கே எழும்பலாம், வேதாகமப் பள்ளிகள் எழும்பலாம் விழலாம், ஆனால் தேவனுடைய வார்த்தை யானது அப்படியே அதே போல் அசையும். ஆம், ஐயா. தேவன் கூறியுள்ளார். தேவன் அதை கூறுவதற்கு முன்பு அது ஒரு எண்ணமாக இருந்து கொண்டிருந்தது. தேவன் முழு காரியத்தையும் எண்ணினார்;, தம்முடைய வார்த்தையில் அதை வெளிப்படுத்தினார், அது சம்பவிக்க வேண்டும்.
249. சிறிது காலத்திற்கு முன்னால், நான் வாசித்துக் கொண்டிருந்தேன் அல்லது ஒரு இடத்தில் கண்டேன், அங்கே ஒரு பெண் ஒரு கைக் கடிகாரத்தின் நேரம் காட்டும் எண்கள் கொண்டுள்ள பாகத்தை வைத்திருந்து, அதை ரேடியத்தில் அமிழ்த்தினாள். மேலும் அவள் அவளுடைய நாவினால் சுத்தப்படுத்தும்படி இதை நக்க நேர்ந்தது. அது அவளைக் கொன்று போட்டது. வருஷா வருஷங்களுக்குப் பிறகு, அவர்கள் அவளுடைய மண்டையோட்டை தோண்டி மேலே எடுத்தனர். மேலும் அவர்கள் தங்களுடைய காட்சி பரப்புகளையும் (ளுஉழிநள) மற்றும் காரியங்களையும் தங்களுடைய காதுகளில் வைத்து கீழே மண்டையோட்டில் அதை ஒட்டினர். நீங்கள் அந்த ரேடியத்தில், “ரட்-ரட்-ரட்” என்பதை கேட்க முடிந்தது. அதற்கு முடிவேயில்லை. அது அப்படியே அசைந்து சென்று சென்று சென்று சென்று கொண்டேயிருக்கிறது. அங்கே ரேடியத்திற்கு முடிவே யில்லை. அது தொடர்ந்து அசைந்து கொண்டேயிருக்கிறது. வருஷங்கள், வருஷங்கள், வருஷங்களுக்குப் பிறகும், மண்டையோடு என்பது ஒரு வெண்மையான எலும்பு தான், ரேடியம் அங்கே ஊடாக இன்னும் அசைந்து கொண்டேயிருக்கிறது, ஏனெனில் அவள் அதை தன்னுடைய வாயில் அமிழ்த்தினாள், அதைப் போன்று அதனுடைய ஒரு பாகம், ரேடியம் அசைகிறது.
250. அப்படியானால் முடிவற்ற தேவன், தம்முடைய வார்த்தையைப் பேசும் போது, தம்முடைய தேவத்துவ தன்மை மற்றும் தம்முடைய வார்த்தையின் உரைக்கப்பட்ட வல்லமையின் வழியாகவும் எவ்வளவு அதிகமாக இருப்பார். காலம் மாறும்;@ ஜனம் மாறும்;@ தேசங்கள் மாறும்;@ உலகங்கள் மாறும்;. ஆனால் அந்த வார்த்தையோ என்றென்றுமாய் எப்போதும் அசைந்து கொண்டேயிருக்கும், ஏனெனில் அது வெளிப்படுவதற்கு முன்னால் அது தேவனுடைய எண்ணமாக இருக்கிறது. அல்லேலூயா.
251. நான் அவரை என்னுடைய முழு இருதயத்தோடும் நேசிக்கிறேன். இந்த உலகத்தின் நூற்றுக் கணக்கான மதங்களைப் பார்த்த பிறகு, இந்தக் காலையில் நான் கூறுகிறேன்: “கிறிஸ்து என்னும் திடமான பாறையின் மேல் நான் நிற்பேன்;@ மற்ற எல்லா நிலங்களும் அமிழ்ந்து போகிற மணல் தான், மற்ற எல்லா நிலங்களும் அமிழ்ந்து போகிற மணல் தான்”.
252. நாம் ஜெபிப்போம். பரலோக பிதாவே, ஓ, ஒரு பாவ ஜீவியத்திலிருந்து எங்களை மீட்டுக் கொண்டுள்ள உம்முடைய குமாரனையும், உம்முடைய மீட்பின் கிருபையையும் அறிவதற்கு இந்தக் காலையில் நான் எப்படியாய் மகிழ்ச்சியடைகிறேன். ஓ, என்னுடைய சொந்த சரீரமானது தளர்வடைந்து, வயதாகி, நரைத்தலாக மாறி, சுருங்குவதை நான் காணும் போது, கைகளால் செய்யப்படாத சரீரம் அதோ அங்கே கிடக்கிறது என்பதை நான் அறிவேன். அதோ அங்கே அழிவில்லாத ஒன்று காத்துக்கொண்டு கிடக்கிறது. அந்த, ஏதோவொரு நாளில், ஜீவனானது இந்த சரீரத்திலிருந்து இழுக்கப்படும் போது, அது அதோ அங்கே அவருடைய பிரசன்னத்தில் காலத்தினூடாக அவருடன் இருக்கும்படி, மறுபடியும் எழும்பும்.
253. தேவனே, இந்தக் காலையில் அவைகளில் இந்த நம்பிக்கையை கொண்டுள்ள ஒவ்வொரு மனிதனும் ஸ்திரீயும் தாங்களாகவே உலகத்தின் காரியங்களிலிருந்து சுத்திகரிக் கட்டும். அவர்களை கீழே இழுக்கும் இந்த சிறிய பழைய இழிவான காரியங்கள், அவர்களை இழிந்த நிலையிலிருந்து காத்துக் கொள்ளும், உம்மை சேவிக்கும் சந்தோஷமுள்ள கிறிஸ்தவர்களாக இருக்கட்டும்.பிதாவே, இந்த காரியங்களை உம்முடைய குமாரனாகிய இயேசுவின் நாமத்தினால் அளித்தருளும். ஆமென்.
254.    நான் உங்களுக்காக சிறிது அதிக நேரம் எடுத்துக் கொண்டு விட்டேனென்று எண்ணுகிறேன், ஆனால் என்னுடைய இருதயமானது அவருடைய வார்த்தையிலும், அவருடைய தன்மையிலும் கொண்டு செல்லப்பட்டது. நான் ஆயத்தப்படாமலும் நான் பேசப்போவதை அறியாமலும் வந்து, அப்படியே இந்த வார்த்தைகளை சொல்ல நேர்ந்தது. நான் பெற்றிருக்கவில்லை, ஆனால் வேதவாக்கியத்திலிருந்து ஒரு வசனத்தை எடுத்து, நாம் அங்கேயிருந்து முன்னேறி ஒரு சில ஞாயிற்றுக்கிழமைகளில் வார்த்தை என்னவாக உள்ளதோ அதற்கு செல்லலாம்.
255. நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? (சபையார், “ஆமென்”என்கின்றனர்-ஆசிரியர்)கவனியுங்கள்,என் கிறிஸ்தவ நண்பர்களே. அங்கே உங்களுடைய இருதயத்தில் யாருடனாவது விரோதம் இருந்தால், இப்பொழுதே அவர்களிடம் சென்று ஒப்புரவாகுதல் கட்டாயமாக செய்ய வேண்டியதாகும்.கடந்த காலத்தில் உள்ள எல்லாவற்றையும் மறந்து விடுங்கள்.நீங்கள் ஒரு மேடு பள்ளமான ஜீவியத்தை கொண்டிருப்பீர்களானால், நினைவில் கொள்ளுங்கள், அந்த இருதயத்தில் ஏதோவொன்று வந்து கொண்டுள்ளது, அந்த எண்ணங்களில் ஏதோவொன்று அசைந்து கொண்டிருக்கிறது. உங்களுடைய சத்துரு யாராயிருந்தாலும் காரியமல்ல, அவரை நேசியுங்கள். அவரை நேசியுங்கள். என்ன சம்பவித்தது என்பது காரியமல்ல, அது போகட்டும். எல்லாவற்றிற்கும் பிறகு, களைச் செடிகளுள்ள ஒரு நிலத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். நாம் அதை புரிந்து கொள்ளுகிறோம், ஆனால் நாம் இருவரும் ஒன்றோடொன்று கட்டாயமாக வளர வேண்டும். நாம் ஒன்று சேர்ந்து வர வேண்டியவர்களாயுள்ளோம்.
256. ஒரு நல்ல கிணறு தீமையான தண்ணீர்களையோ, ஒரு தீய கிணறு நல்ல தண்ணீர்களையோ ஊற்ற முடியாது. ஒரு மரமானது ஒரே சமயத்தில் கெட்ட கனியையும் நல்ல கனியையும் கொண்டு வர முடியாது. எனவே முழு கிணறும் தூய்மையாக ஆகவோ அல்லது முழு கிணறும் அழுக்கடைந்ததாகவோ ஆகட்டும்: ஒன்று அல்லது மற்றது. பாருங்கள்? துவங்குவதற்கு அது அழுக்காக உள்ளது, எனவே இந்தக் காலையில், கிணறுகளைத் தூய்மைப்படுத்தி, “கர்த்தாவே, உம்முடைய ஆவியை ஊற்றி என்னை வழிநடத்தும், ஓ தேவனே, என்னை வழிநடத்தும்” என்று கூறுவோம்.
257. எப்படியாக நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்… அங்கே ரோமாபுரியில்   ஒரு - ஒரு கத்தோலிக்க சபைக்கு சென்றேன், எலும்பு சபையென்று அழைக்கப்படும் ஒரு இடத்திற்கு என்னை அவர்கள் கொண்டு செல்ல விரும்பினர். மேலும் அவர்களுடைய துறவிகள், நூற்றுக்கணக்கான வருஷங்களாக அவர்கள் ஆக்கிரமித்து, சபையில் கீழே நிலத்தில் அவர்களை வைத்து, அவர்களைப் புதைத்தனர். ஓவ்வொரு சபையும் எறத்தாழ பிணங்களை புதைக்கும் ஒரு இடமாகும். அவர்கள் அந்த ஆட்களை அங்கே உள்ளே பெற்றிருந்தனர். அங்கே அவைகள் அநேக நாட்கள் உள்ளே இருந்த பிறகு, அவர்கள் சென்று அவைகளைத் தோண்டி மேலே எடுக்கின்றனர். மாமிசமானது புழுதியில் அழுகிப்போன பிறகு, அவர்கள் அவைகளைத் தோண்டி மேலே எடுக்கின்றனர்.
258. அவர்கள் இதை விடவும் அனேக அனேக மடங்கு பெரிய ஒரு அறையை உண்டாக்கி கொண்டுள்ளனர், அப்படியே மனித எலும்புகளால் எப்படியாக அவர்கள் அவைகளை உண்டாக்க அவைகளை ஒன்றாக சேர்த்து வைத்துள்ளனர். மூலையில், அங்கே நீங்கள்; மண்டை யோடுகளும் மற்றும் ஒவ்வொரு காரியமும் கிடக்கிற இடத்தில் இதேப் போல் நடக்கிறீர்கள். விரல்கள் மற்றும் எலும்புகளின் சிறு பகுதியில் பொருத்தப்பட்ட விளக்குகள் உண்டாக்கப்பட்டுள்ளது. விளக்குகள் எலும்புகளாலும் மற்றும் ஒவ்வொரு காரியத்தாலும் உண்டாக்கப்பட்டுள்ளது. அதாவது அப்படியே… அழுகிப்போன மற்றவர்களின் கல்லறைகளும் அங்கே உள்ளது. ஒரு அடையாளமான காரியம், பெரும் கவனத்தை ஈர்க்கிறதாய், “ஓரு சமயம் நாங்கள் உங்களைப் போலிருந்தோம், ஏதோவொரு சமயம் நீங்கள் எங்களைப் போலிருப்பீர்கள்” என்று கூறுகிறது. அது சரியே.
259. தேவனை நேசிக்கிறவர்கள் மாத்திரம் எப்பொழுதும் முடிவில்லாத ஜீவனைக் கொண்டுள்ளனர். அது உண்மை.
260. நான் அங்கே ஜனங்கள் அதனூடாக வந்து கொண்டிருப்பதைக் கவனித்தேன். கத்தோலிக்க மதமானது ஒரு முழுவதும் மூடநம்பிக்கைகளும் மற்றும் காரியங்களு மாய் இருக்கிறது. அவர்கள் அங்கே துறவிகளின் மண்டையோடுகளை அவைகள் வெண்மையாவது வரை தேய்க்கின்றனர், அவைகளில் சில அந்த ஆழத்தில் சிதைந்து போய் விட்டன. ஆனால் ஜனங்களோ அவைகளைத் தேய்த்து, இந்த துறவிகளின் மண்டையோடு களிலிருந்து ஆசீர்வாதங்களையும் மற்றும் அதைப்போன்ற காரியங்களையும் பெறும்படிக்கு முயற்சிக்கிறார்கள். அது ஒரு மனுஷன் என்பதை மாத்திரமே காண்பிக்கப் போகிறது. அங்கே உள்ளே ஏதோவொன்றிற்காக பசியாயிருக்கும் ஒரு இருதயம் உள்ளது.
261. சகோதரனே, இயேசு கிறிஸ்துவின் மதமானது மரித்த மனுஷர்களின் எலும்புகளை தேய்த்தலில் அடங்கியிருக்க வில்லை. அது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து, என்றென்றும் மரிக்காத ஜீவனை ஏற்றுக் கொள்கிறது. ஓ, என்னே.
262. ஆனால் அது உண்மையென்று எண்ணுவதற்கு, நாம் இங்கே இந்தக் காலையில் இருப்பது போலவே ஒரு சமயம் அந்த மனிதர்களும் இருந்தனர். அவர்கள் தங்களுடைய வாய்ப்பைக் கொண்டிருந்தனர், நாம் நம்முடையதைக் கொண்டிருக்கிறோம். நீங்கள் அதனுடன் என்ன செய்யப் போகிறீர்கள்?
263. ஓ, அதனுடைய ஒவ்வொரு சிறிய அளவிலும் கர்த்தராகிய இயேசுவுக்காக செலவழியுங்கள். உலகத்தின் காரியங்களுக்காக சமயத்தைக் கொண்டிருக்காதீர்கள். “உங்களை எளிதாக சிக்கவைக்கும் ஒவ்வொரு சுமையிலிருந்தும் விலகி இருந்து, நமக்கு முன்னால் இருக்கும் இந்த ஓட்டத்தைப் பொறுமையோடே ஓடக்கடவோம்.” கர்த்தராகிய இயேசுவை நேசிப்போம்.
264. ஒருவர் மற்றொருவரோடு அன்போடே இருங்கள். உங்களுடைய சத்துருக்களோடும் அன்பாய் இருங்கள். ஒவ்வொருவரையும் நேசியுங்கள். அவர்கள் என்ன செய்திருந்தாலும் பரவாயில்லை. எப்படியாயினும்; அவர்களை நேசியுங்கள். உங்களால் அதைச் செய்ய முடியவில்லை யென்றால், சகோதரனே, சகோதரியே, இந்த பீடத்தில் உங்களுக்குத் தேவையான ஒரு நேரம் இருக்குமானால், அது இப்போது தான். நீங்கள் பின்னால் வரக்கூடும் போது, அதைச் செய்யுங்கள்….
265. ஓரு சுயநல ஆவி என்னில் மேலே வந்து, “இந்த மனிதன் தவறாயிருக்கிறான். நான் அதைப்பற்றி அவனிடம் கட்டாயமாக கூறியாக வேண்டும்” என்று கூறுவதைப் பற்றி அன்றொரு நாளில் நான் அடையாளம் கண்டு கொண்டேன். அது தவறு. அதைப்பற்றி அவரிடம் கூறும் ஒருவர் தேவனே. அது…அது என்னுடைய வேலையல்ல. ஆனால் என்னுடைய உத்தியோகமோ சுவிசேஷத்தைப் பிரசங்கித்து ஒவ்வொரு வரையும் நேசித்து, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, நான் அவருடைய சத்துருவாய் இருந்தபோது என்னை நேசித்தது போல என்னுடைய சத்துருக்களை நேசித்து, சென்று கொண்டிருப்பதாகும். அது சரியே. நான் நேசிக்கப்பட தகுதியற்றவனாயிருந்த போது, அவர் - அவர் தன்னுடைய இருதயத்தில் என்னை நேசித்தார். நேசிக்கப்பட தகுதியற்றவர்களாய் இருக்கும் யாரையாவது, அதே விதமாக அவர்களையும் நேசிப்பேன். கிறிஸ்துவில் இருந்த ஆவியே நம்மிலும் இருப்பதாக. ஆமென். நான் அவரை நேசிக்கிறேன். நான் அவரை நேசிக்கிறேன். ஓ, என்னே.
விரைவில் கெட்டுப்போகும் இவ்வுலகின் மாயையான ஐசுவரியங்களை இச்சியாதீர்                                    ஒருக்காலும் ஒழிந்து போகாத நித்தியமானவைகளின் பேரில் உங்கள் நம்பிக்கையைக் கட்டுவீர்!
காலமானது விரைவான மாற்றங்களை கொண்டது. பூமியில் யாவம் மாயைஇ அசையாதவைகள் நிலைக்குமே
நித்தியமானவைகளில் உங்கள் நம்பிக்கையை கட்டுவீர்
தேவனுடைய மாறாத கரத்தை பற்றிக்கொள்வீர்!
தேவனின் மாறாக் கரத்தைப் பற்றிக்கொள்வீர்    
தேவனின் மாறாக் கரத்தைப் பற்றிக்கொள்வீர்
நித்தியமானவைகளில் உம் நம்பிக்கையைக் கட்டி 
தேவனின் மாறாக் கரத்தைப் பற்றிக்கொள்வீர்!
266. இன்று இங்கே உள்ளே இருக்கும் ஒவ்வொரு மனிதனும், ஸ்திரீயும், பையன் அல்லது பெண்ணின் ஜெபமானது இதுவாக இருக்கிறதா? தேவன் உங்களை ஆசீர்வதித்து, அந்தப் பாதையில் அவர் உங்களை வைப்பாராக: உங்களுடைய ஆவியில் தாழ்மையாயிருங்கள், உங்களுடைய ஆத்துமாவில் மென்மையாயிருங்கள், தேவனின் நிமித்தமாக, கிறிஸ்து உங்களை மன்னித்தது போல மற்றவர்களை மன்னியுங்கள். இரக்கமுள்ளவர் களாயும், பெருந்தன்மையுள்ளவர்களாயும், வரவேற்பளிப்பவர் களாயும் இருங்கள்.
267. சபையில் மேலும் செயல்பாடு ஏதாகிலும் உள்ளதா, சகோதரன் நெவில்?
268. இந்தக் காலையில், நீங்கள் இங்கிருந்து பிரயாணம் செய்யும் போது, என் அன்பான கிறிஸ்தவ நண்பர்களே, கவனியுங்கள். எங்களுடைய வாசலில் இருக்கும் அந்நியர்களாகிய நீங்கள், சாதனங்களாக உங்களுக்கு கொடுப்பதற்கு இங்கே நாங்கள் அதிகம் பெற்றிருக்க வில்லை. நாங்கள் ஒரு சிறிய பழைய கூடாரத்தைப் பெற்றிருக்கிறோம். நாங்கள் எவ்வளவு தரித்தரராக இருக்க முடியுமோ அவ்வளவு நாங்கள் ஒரு தரித்திரமான ஜனங்களாய் இருக்கிறோம். ஜனங்களுக்கு இங்கே ஒரு-ஒரு வரவேற்பளிப்பதற்கு சுட்டிக்காட்ட ஒரு சிறிய சிறந்த ஏதோவொன்றை கூட நாங்கள் கொண்டிருக்க முடியவில்லை என்பதற்காக நாங்கள் நாங்கள் வருந்துகிறோம். ஆனால் என்னுடைய சகோதர சகோதரிகளே, இங்கே இந்தச் சிறிய மதிலுக்குள்ளே அமைப்பு காண்பதற்கு நன்றாயில்லை, ஆனால் நீங்கள், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்காக ஒரு வரவேற்பைக் கண்டு கொள்வீர்கள். நீங்கள் போவதற்கு ஒரு இடத்தைக் கொண்டிருக்கவில்லையென்றால், வந்து எங்களுடன் ஆராதியுங்கள். நாம் இங்கே ஒரு அன்பான மேய்ப்பரையும், டீக்கன் வாரியத்தில் இங்கே சில அருமையான மனிதர்களையும் மேலும் மற்றவற்றையும், சில அருமையான கிறிஸ்தவர்களையும் பெற்றுள்ளோம். வந்து, நீங்கள் ஒரு இருக்கையை கண்டுகொள்ளுங்கள், இங்கே பிரான்ஹாம் கூடாரத்தில் நீங்கள் எப்போதும் வரவேற்கப்படுகிறீர்கள்.
269. நாம் செய்யக்கூடிய ஒரு காரியத்தை மாத்திரம் நாங்கள்  கொண்டிருக்கிறோம். நாங்கள் எங்களுடைய முழு இருதயத்தோடும் கர்த்தராகிய இயேசுவை நேசிக்கிறோம். இந்த வேதாகமம் தேவனுடைய வார்த்தையாக இருக்கிற தென்று நாங்கள் விசுவாசிக்கிறோம். இந்த வேதாகமத்தைத் தவிர வேறு எந்தப் பாடப் புத்தகமும் எங்களுக்குக் கிடையாது. இங்கே எந்தப் பிரமாணமும் எங்களுக்குக் கிடையாது… நல்லது, அன்பு தான் எங்களுடைய பிரமாணம். எங்களுடைய கோட்பாடு கிறிஸ்துவே. நாங்கள் அப்படியே உங்களை எங்கள் முழு இருதயத்துடனும் நேசிக்கிறோம். நீங்கள் விரும்பினால் திரும்பவும் வந்து எங்களுடன் இருங்கள். ஒரு மகத்தான ப+மியில் ஏதோவொரு நாளில் நாங்கள் உங்களை காண்போம் என்று நம்புகிறோம், அங்கு நாம்…
270. ஆனால் இந்த சமயத்தில், நீங்கள் விரும்பினால், நீங்கள் நின்று கொண்டிருக்கும் சமயத்தில், 'சீயோனுக்கு அணி வகுத்து செல்வோம்" என்ற பாடலைப் பாடுவோம். டெட்டி, மகனே, நீ இங்கே மேலே துரிதமாக ஒரு நிமிடம் வருவாயா?. நாம்…
271.இன்றிரவு இராப்போஜன ஆராதனை, ஓ, நான் அதற்காக இங்கிருப்பதற்காக மகிழ்ச்சியடைகிறேன். கவனியுங்கள், இயேசு, “என் மாம்சத்தைப் புசித்து என் இரத்தத்தை பானம் பண்ணுகிறவனுக்கு நித்திய ஜீவனுண்டு. நான் அவனைக் கடைசி நாளில் எழுப்புவேன்” என்றார். அந்த வார்த்தையானது என்றைக்கும் நிலைத்திருக்கிறது. அது சரியா? சரி.
272. இப்பொழுது, இப்பொழுது எல்லோரும் ஒன்று சேர்ந்து, “சீயோனுக்கு அணுவகுத்தல்” என்பதை பாடுவோம். சரி.
தேவனை நேசிக்கும் நாம் ஒன்று கூடி                            நம்முடைய மகிழ்ச்சியை தெரிவித்து
இனிமையான ஒற்றுமையுடன் பாடலில் சேர்ந்து கொள்வோம்;
இனிமையான ஒற்றுமையுடன் பாடலில் சேர்ந்துகொள்வோம்                                                      இவ்விதமாய் சிங்காசனத்தை சூழ்ந்து கொள்வோம்
இவ்விதமாய் சிங்காசனத்தை சூழ்ந்து கொள்வோம்
நாம் சீயோனுக்கு அணிவகுத்து செல்கின்றோம்
அழகானஇ அழகான சீயோன்                                                            நாம் மேல் நோக்கி சீயோனுக்கு அணிவகுத்து செல்கின்றோம்                                                            அந்த அழகான தேவனுடைய நகரத்துக்கு
நாம் சீயோனுக்கு அணிவகுத்து செல்கின்றோம்
அழகானஇ அழகான சீயோன்                                                            நாம் மேல் நோக்கி சீயோனுக்கு அணிவகுத்து செல்கின்றோம்                                                            அந்த அழகான தேவனுடைய நகரத்துக்கு
273. இப்பொழுது, நாம் அந்த கோரஸை ஒரு முறை கூட பாடும் நேரத்தில், பிறகு நம்முடைய பிரிந்து செல்வதற்கான பாடல். நாம் ஒரு முறை கூட “சீயோனுக்கு அணி வகுத்து செல்லுதல்” ஐ பாடப் போகிறோம். அன்னியர்களுக்கு உங்களை நீங்களே அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள். அவர் இங்கே இருப்பது உங்களுக்கு சந்தோஷம் என்று அவர்களிடம் கூறுங்கள். ஏனெனில் சபையானது வெப்பமாக உள்ளது, சபை சென்று கொண்டிருப்பதில் நாம் அதிக நேரம் காலதாமதம் ஆகமாட்டோம். இப்பொழுது ஆராதனை முடிகின்றது. நாம் அப்படியே ஒரு சில நிமிடங்களில் பிரிந்து செல்லப் போகிறோம். இப்பொழுது, சுற்றிலும் திரும்பி, “நான் திரு.ஜோன்ஸ், உங்களை சந்தித்ததில் எனக்கு மகிழ்ச்சி. கூடாரத்துக்கும் திரும்பவும் வாருங்கள்” என்று கூறுவோம். ஒவ்வொருவரும் நட்புடனும், புன்சிரிப்புடனும் இருங்கள்.சரி, இப்பொழுது. நாம் அணிவகுத்து செல்வோம்… (உங்களை நீங்களே அன்னியர்களுக்கு அறிமுகப் படுத்துங்கள், திரும்பவும் வரும்படி அவரிடம் கூறுங்கள்.)
… அழகான சீயோனுக்கு
நாம் மேல்நோக்கி சீயோனுக்கு அணிவகுத்து சென்று கொண்டிருக்கிறோம்.
தேவனுடைய அந்த அழகான பட்டணம்.
274. இப்பொழுது, பிரான்ஹாம் கூடாரத்தின் தெய்வீகமான பாடலுக்காக, பிரிந்து செல்வோம். பழைய காலத்து பிரிந்து செல்லும் பாடலை எத்தனை பேர் நினைவில் வைத்துள்ளீர்கள்?
இயேசுவின் நாமத்தை உன்னுடன் கொண்டு செல்
துயரமும் துக்கமும் உள்ள பிள்ளையே
அது உனக்கு மகிழ்ச்சியும் ஆறுதலும் அளிக்கும்
நீ செல்லும் இடமெல்லாம் அதைக் கொண்டு செல்!
இயேசுவின் நாமத்தை உன்னுடன் கொண்டு செல்
துயரமும் துக்கமும் உள்ள பிள்ளையே
அது உனக்கு மகிழ்ச்சியும் ஆறுதலும் அளிக்கும்                                 நீ செல்லும் இடமெல்லாம் அதைக் கொண்டு செல்!
விலையுயர்ந்த நாமம்இ ஓஇ எவ்வளவு இனிமை!
பூலோகத்தின் நம்பிக்கையும் பரலோகத்தின் மகிழ்ச்சியுமாம்  விலையுயர்ந்த நாமம்இ
ஓஇ எவ்வளவு இனிமை!
ஒவ்வொரு கண்ணிக்கும் கேடயமாக
சோதனைகள் உன்னை சூழும்போது
அந்தப் பரிசுத்த நாமத்தை ஜெபத்தில் உச்சரி!
விலையுயர்ந்த நாமம்இ ஓஇ எவ்வளவு இனிமை!
பூலோகத்தின் நம்பிக்கையும் பரலோகத்தின் மகிழ்ச்சியுமாம்
விலையுயர்ந்ந நாமம் (விலையுயர்ந்த நாமம்)இ ஓஇ எவ்வளவு இனிமை!
நாம் இப்பொழுது ஜெபத்தில் நம்முடைய தலைகளை வணங்குவோம், மேய்ப்பரே, வந்து எங்களை அனுப்பி வையுங்கள், நீங்கள் அவ்வாறு செய்வீர்களா, என் சகோதரனே?