இப்பொழுது ஜெஃபர்ஸின்வில்லில் கேட்டுக்கொண்டிருப்பது, ரைட் என்னும்
பெயர் கொண்ட ஒரு குடும்பம். சகோதரன் உட்டும்
நானும் அவர்களை காணச் சென்றிருந்தோம். அவர்கள் சபை இராபோஜனத்திற்கு திராட்சை ரசம் தயாரிப்பவர்கள்.
சிறிய ஈடித் அறையில் உட்கார்ந்துக் கொண்டிருந்தாள்.
அவள் ஊன முற்ற ஒரு சிறு பெண். தன் வாழ்நாள்
முழுதும் வியாதியாய் இருந்தாள். அவளை சுகப்படுத்த வேண்டுமென்று நாங்கள் எப்பொழுதுமே
தேவனிடம் முறையிட்ட துண்டு. அவளுடைய சகோதரி ஒரு விதவை. அவளுடைய கணவர் கொல்லப்பட்டார்.
அவளுடைய பெயர் ஹாட்டி. மிகவும் தாழ்மையுள்ள ஸ்திரீ. நானும் சகோதரன் பாக்ஸும் அவளுக்காக
ஒரு முயலை வாங்க சென்றிருந்தபோது, அவர்கள் உணவு சமைத்து நாங்கள் சாப்பிட வேண்டுமென்று
கேட்டுக்கொண்டனர்.
நாங்கள் எல்லோரும் மேசையை சுற்றிலும் உட்கார்ந்து கொண்டு, சில நாட்களுக்கு
முன்பு நடந்த இந்த சம்பவத்தை குறித்து பேசிக்கொண்டிருந்தோம். நான் மேசையினருகில் உட்கார்ந்து
கொண்டு இதை குறித்து பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென்று நான், “என்ன நடந்திருக்க முடியும்?
சகோ.ரைட், நீங்கள் வயோதிபர். உங்கள் வாழ்நாள் முழுவதும் நீங்கள் அணில் வேட்டையாடியிருக்கிறீர்கள்.
சகோ.ஷெல்பி அணில் வேட்டையாடுவதில் நீர் நிபுணர். சகோ.உட் நீங்களும் அப்படிதான். நானும்
என் சிறு வயது முதற்கொண்டே அணில் வேட்டையாடி வந்திருக்கிறேன். நீங்கள் எப்பொழுதாவது
அணில் காட்டத்தி மர புதரிலும் வேலமர புதரிலும் கண்டதுண்டா? ” என்று கேட்டேன்.
“இல்லை, ஐயா” என்றனர்.
நான் “அவை அங்கிருக்கவில்லை. எனக்கு தெரிந்த ஒன்றே ஓன்று, அது அதே தேவன்.
ஆபிரகாமுக்கு ஆட்டுக்கடா தேவைபட்டபோது, அவர் யேகோவாயீரேவாக இருந்தார். அவர் தமக்கென்று
ஒன்றை அளிக்க முடிந்தது. அதே காரியம் நிகழ்ந்தது என்று நான் விசுவாசிக்கிறேன்” என்றேன்.
அங்கு உட்கார்ந்து கொண்டிருந்த அந்த சிறு ஹாட்டி, “சகோ.பிரன்ஹாமே, அது
உண்மையேயன்றி வேறொன்றுமில்லை” என்றாள்.
அவள் சரியானபடி கூறினாள். அவள் அதை கூறினபோது, பரிசுத்த ஆவியானவர் அந்த
வாய்காலுக்குள் மறுபடியும் வந்தார். அங்கிருந்த ஒவ்வொருவரும் அதை உணர்ந்தனர். நான்
எழுந்து நின்று, “சகோதரி.ஹாட்டி, கர்த்தர் உரைக்கிறதாவது, நீ அந்த சீரோபேனிக்கேயா தேசத்து
ஸ்திரீயைப் போல சரியான வார்த்தையை கூறினாய். பரிசுத்த ஆவியானவர் இப்பொழுது என்னிடம்
பேசி, உன் இருதயத்தின் வாஞ்சையை உனக்கு அருளும்படி கூறுகிறார். நான் தேவனுடைய ஊழியக்காரனாய்
இருந்தால், அது நிறைவேறும். நான் தேவனுடைய ஊழியக்காரனாக இல்லாமற் போனால், நான் ஒரு
பொய்க்காரன், அது நிறைவேறாது. இது தேவனுடைய ஆவியா இல்லையா என்று சோதித்துப்பார்” என்றேன்.
அவள், “சகோ.பிரன்ஹாம்” என்றாள் (எல்லோரும் அழுதனர்). அவள், “நான் என்ன
கேட்பது? ” என்றாள்.
நான், “ஊனமுள்ள உன் சகோதரி இங்கு உட்கார்ந்திருக்கிறாள்” என்றேன்.
அவள் நன்கொடையாக அளித்த இருபது டாலர்களை அவளிடம் திருப்பிக் கொடுப்பதற்காக
என் ஜேபியில் வைத்திருந்தேன். அந்த ஸ்திரீ அவளுடைய எளிய சிறு பண்ணை யிலிருந்து ஆண்டொன்றுக்கு
இருநூறு டாலர்கள் கூட பெறுவதில்லை. அவளுக்கு இரண்டு பையன்கள் இருந்தனர். அவர்கள் பள்ளிக்கூட
நாட்களில் ‘ரிக்கி’களாக இருந்து, அவர்களுடைய தாயை துன்புறுத்தி வந்தனர்-பதினைந்து,
பதினாறு வயதுடையவர்கள். அவர்கள் அங்கு நின்றுகொண்டு நான் கூறுவதைக் கேட்டு கேலியாக
சிரித்தனர்.
நான்,“உனக்கு வயோதிப பெற்றோர்கள் உள்ளனர். உன்னிடம் பணமில்லை. நீ பணத்தைக்
கேட்டு, அது உன் மடியில் வருகிறதா இல்லையா என்று பார். உன் சகோதரியின் சுகத்தைக் கேள்,
அவள் எழுந்து நடக்கிறாளா இல்லையா என்று பார்” என்றேன். ஆவியின் ஊக்கம் வரும்போது, அதை
அறிந்துக்கொள்ள முடியுமென்று யோபைப் போல நானும் அறிந்திருந்தேன். நான் “இதோ இங்கு பத்து
பேர்களுக்கு முன்பாக நான் நின்று கொண்டிருக்கிறேன். இது நிறைவேறவில்லையென்றால், நான்
ஒரு கள்ளதீர்க்கதரிசி” என்றேன்.
அவள், “நான் என்ன கேட்பது” என்றாள்.
நான், “நீ செய்யப் போகும் தீர்மானம் உன்னைப் பொறுத்தது. உனக்காக நான்
தீர்மானம் செய்ய முடியாது” என்றேன்.
அந்த ஸ்திரீ சுற்றுமுற்றும் பார்த்தாள். திடீரென்று அவள், “சகோ.
பிரன்ஹாமே, என் இருதயத்திலுள்ள மிகப்பெரிய வாஞ்சை என் இரு பையன்களின் இரட்சிப்பே” என்றாள்.
“இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, உன் பையன்களை உனக்கு தருகிறேன்” என்றேன்.
அங்கு சிரித்து, கேலி செய்துக்கொண்டிருந்த அந்த பையன்கள், அவர்களுடைய தாயின் மடியில்
விழுந்து, தங்கள் வாழ்கையை தேவனுக்கு அர்ப்பணித்து, அந்த நேரத்திலேயே பரிசுத்த ஆவியினால்
நிறைக்கப்பட்டனர். அந்தநேரத்திலேயே!
ஏன்? இது தவறாயிருக்குமானால் இந்த தேசத்திலுள்ள ஜனங்களுக்கு முன்பாக
என்னை கொன்றுபோட தேவனுக்கு அதிகாரமுண்டு. இங்குள்ள உங்களில் அநேகரும், ஜெஃபர்ஸன்வில்லில்
உள்ளவர்களும், ஜெஃபர்ஸன்வில் கூடாரம் “ஆமென்”என்று இப்பொழுது ரீங்காரம், செய்வதை என்னால்
கேட்க முடிகிறது. ஏனெனில் அவர்கள் அங்கு உட்கார்ந்துக் கொண்டு இதைகேட்டுக் கொண்டிருக்கின்றனர்.
இது உண்மை! அது என்ன? தேவன் தம்முடைய இராஜாதிபத்திய கிருபையினால் அருளும்போது, அது
நிறைவேறுகிறது. அதற்கு புறம்பே அது நிறைவேறுவதில்லை.
அந்த கடினமான நேரத்தில்...எனக்கு அறிமுகமான மனிதரையும் ஜனங்களையும்
சற்று சிந்தித்துப் பாருங்கள். தேவன் புகழ்வாய்ந்தவர் போன்ற அனைவரையும் கடந்து சென்று,
தன் பெயரை கையொப்பமிடவும் கூட அறியாத தாழ்மையுள்ள ஓரு ஏழை விதவைக்கு அதை அருளினார்.
அவள் என்ன கேட்பாள் என்பதை அவர் அறிந்திருந்தார். அது தான் மிகப்பெரிய காரியம். அவளுடைய
சகோதரி மரித்துவிட்டாள். அவளுடைய பெற்றோர் என்றாவது ஒரு நாள் மரிக்க வேண்டும். பணம்
அழிந்து போயிருக்கும். ஆனால் அவளுடைய பையன்களின் ஆத்துமாவோ நித்தியமானவை! அவர்கள் பெற்று
கொள்ள வேண்டிய நேரம் அதுவே. “இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் உன் பையன்களை உனக்கு தருகிறேன்”
என்று நான் கூறின மாத்திரத்தில், அவர்கள் தங்கள் தாயின் மடியின் மேல் விழுந்தனர். இங்குள்ள
எத்தனைப் பேருக்கு அது உண்மையென்று தெரியும். உங்களுக்கு தெரியுமா? பார்த்தீர்களா?
ஆம். ஏன்? ஆவியின் ஊக்கம்.
இப்பொழுது உம்மால் அணில்களை
சிருஷ்டிக்க முடியும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன், உம்மால் ஆட்டுக்கடாவை சிருஷ்டிக்க
முடியும் என்று உம்மை குறித்து கேள்விப்பட்டிருக்கிறேன். இப்பொழுதோ என் சொந்த கண்களால்
உம்மை காண்கிறேன்”. தோற்றம், தரிசனம் காணக் கூடியதாகிவிடுகிறது. தேவன் ஒன்றை வாக்களித்தால்,
அதை செய்து முடிப்பார்.
கவனியுங்கள், உங்களுக்கு யோசுவாவைப் போல் ஒருக்கால் தேவை எழலாம். யோசுவாவுக்கு
தேவையிருந்தது. அவன் சூழ்நிலையைப் பற்றி சிந்திக்கவேயில்லை. அவன் உரைத்தான், அது தேவன்!
சூரியன் தரித்து நின்றதென்று நீங்கள் விசுவாசிக்கிறர்களா? நானும் கூட. அது எப்படி நடந்தது?
அதைக் குறித்தெல்லாம் சிந்தனை செய்யாதீர்கள், அது நடந்தது. யோசுவா அதை செய்தான், அவன்
தன் கரங்களை உயர்த்தினான். அந்த கடினமான நேரத்தில் அவன் தேவனுடன் தொடர்பு கொண்டான்.
அதுதான் அது நிறைவேற காரணமாயிருந்தது. அது சரியான நேரத்தில் நிகழ்ந்தது. ஜீவனுள்ள தேவனின்
ஆவி அதற்கான தேவையை அறிந்து, யோசுவா அதை கூறும்படி அவனை உந்தினார். அதே தேவன் ஆபிரகாமின்
தேவையை அறிந்திருந்தார். அதே தேவன், இந்த வேதவாக்கியம் உண்மையென்று எனக்கு உறுதிப்படுத்த
வேண்டுமென்ற அவசியத்தை அறிந்திருந்தார். அதே தேவன் முன்குறிக்கப்பட்ட அந்த இருபையன்களின்
தேவைகளை உணர்ந்து, அந்த நேரத்தில் அதை நிரூபித்து, அவர் வார்த்தையை உறுதிப்படுத்தினார்.
நான் கேள்விப்பட்டேன் இப்பொழுது காண்கிறேன். நவம்பர் 27, 1965
மாலை.
No comments:
Post a Comment