மணவாட்டி ஊழியம்

மணவாட்டி ஊழியம்

Sunday, July 17, 2011

சகோ. பிரன்ஹாம் அவர்கள் தான் ""கிறிஸ்து அல்ல'' என்று தெளிவாய் அறிக்கையிட்டு தனது பிரசங்கத்தில் கூறியதன் தமிழாக்கம்

        சகோ. பிரன்ஹாம் அவர்கள் தான் ""கிறிஸ்து அல்ல'' என்று தெளிவாய் அறிக்கையிட்டு தனது பிரசங்கத்தில் கூறியதன் தமிழாக்கம்


கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் முதல் வருகையில் எலியாவின் ஆவியும் பெலமும் உடையவனாய் முன் நடப்பான், முன்னோடுவான் என்று தீர்க்கதரிசிகளால் முன்னுரைக்கப்பட்டவனாகிய யோவான் ஸ்நானனின் ஊழியத்தின் நாட்களில் மக்கள் அவன் கிறிஸ்துவோ என்று ஐயமுற்றனர். லூக்கா 3:15ல் ""யோவானைக் குறித்து இவன் தான் கிறிஸ்துவோ என்று ஜனங்களெல்லாரும் எண்ணங்கொண்டு தங்கள் இருதயங்களில் யோசனையாயிருக்ககையில்'' என்று வாசிக்கிறோம்.ஆனால் யோவான் அவர்கள் நினைக்கிறபடி, தான் கிறிஸ்து அல்ல என்பதை உறுதியாக காண்பிக்கும்படி, லூக்கா 3:16ல், ""யோவான் எல்லாருக்கும் பிரதியுத்தரமாக: நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானங் கொடுக்கிறேன், என்னிலும் வல்லவர் ஒருவர் வருகிறார். அவருடைய பாதரட்சைகளின் வாரை அவிழ்க்கிறதற்கும் நான் பாத்திரன் அல்ல. அவர் பரிசுத்த ஆவியினாலும், அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானங் கொடுப்பார்'' என்று தெளிவுபடுத்தினான்.
        அதே போல், ""நீர் யார்'' என்று (யோவான் 1:19) யோவானிடத்தில் ஆசாரியரையும், லேவியரையும் யூதர்கள் அனுப்பிக் கேட்டபோதும், யோவான் ஸ்நானன் யோவான் 1:20ல் ""அவன் மறுதலியாமல் அறிக்கையிட்டதுமன்றி, நான் கிறிஸ்து அல்ல என்று அறிக்கையிட்டான்'' என்று வாசிக்கிறோம்.
        இதிலிருந்து நமக்கு என்ன தெரிகிறது? இயேசுவின் முதல் வருகையின் முன்னோடின தூதனாகிய யோவான் ஸ்நானனை கிறிஸ்துவோ என்று மக்கள் சந்தேகப்பட்னர். ஆனால் தான் அவர் அல்ல என்று யோவான் உறுதிப்பட கூறினான்.
        அதே போல், இயேசுவின் வருகைக்கு எலியா தீர்க்கதரிசி முன்னோடுவான், அவன் செய்தி முன்னோடும் என்று வேத தீர்க்கதரிசிகளாலும் நமது கர்த்தராலும் முன்னுரைக்கப்பட்டபடி (வெளி 10:6; மத்தேயு 17:11; மல்கியா 4:6) எலியாவாக சகோ.பிரன்ஹாம் அவர்கள் வெளிப்பட்ட போது, இவரையும் மக்கள் கிறிஸ்துவோ என்று ஐயமுற்று, அதைக் குறித்து அவரிடம் கேட்டனர்; சிலர் அவ்வாறு விசுவாசித்து எங்கும் அதைக் குறித்து பரப்பினர். ஆனால் சகோ. பிரன்ஹாம் அவர்கள் யோவான் ஸ்நானனைப் போன்று தான் கிறிஸ்து அல்ல என்று திட்டவட்டமாக அறிக்கையிட்டார். மேலும் ஏழு முத்திரைகளின் வெளிப்பாட்டின் இரண்டாம் முத்திரை பாரா 42 முதல் 48ல் சகோ.பிரன்ஹாம்,""கிறிஸ்து வருவதற்கு முன் பொய்யான வழிகாட்டிகள், கள்ள மேசியாக்கள் எழும்பினர் என்பதை நீங்கள் அறிவீர்களா? அப்போஸ்தலர்களை அடித்துக் துன்புறத்த வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்ட போது, அக்காலத்தில் யூதமார்க்கத்தின் போதனைகளில் தலைசிறந்து விளங்கிய கமாலியேல் அவர்களிடம், ""இவர்களை விட்டுவிடுங்கள். இது தேவனால் உண்டாயிருந்தால் நீங்கள் தேவனோடு போர் செய்கிறவர்களாய் காணப்படுவீர்கள், இது தேவனால் உண்டாகவில்லையெனில்...'' ன்றான். மேலும் அவன், ""ஒரு மனிதன் சில நாட்களுக்கு முன்பு 400 பேரை வனாந்தரத்துக்குக் கொண்டு செல்லவில்லையா?'' ன்றான் இவ்விதமாக காரியங்கள் நம்மிடம் உண்டு என்றான். இவையெல்லாம் என்ன? உண்மையான ஒன்று வருவதற்கு முன்னால் நிகழும் சம்பவங்கள்.
        இப்பொழுது, பாருங்கள்? சாத்தான் இக்கள்ளப் போதகர்களை எழுப்புகிறான். நாம் இங்கே பேசிக் கொண்டிருக்கிற இந்த சாத்தானுடைய புத்தி நுட்பத்தை கவனியுங்கள். நாம், அவன் யார் என்பதை படிப்படியாக வெளிக்கொணர்கிறோம். வேதத்தின் வாயிலாக அவன் முகத்திரையைக் கிழித்து, அவன் யார் என்பதை நீங்கள் காணும் படியாகச் செய்து கொண்டிருக்கிறோம். செய்யப்பட வேண்டிய காரியமும் அதுதான்.
        அவன் மிக சாமர்த்தியமுள்ளவன். புத்தி நுட்பம் வாய்ந்தவன். உண்மையான ஒன்று வருவதை அவன் காணும் போது அது வருவதற்கு முன்னால் அதை கவிழ்ப்பதற்குத் தன்னால் முடிந்த ஒவ்வொன்றையும் அங்கே எறிகிறான். கடைசி சாட்களில் கள்ளக் கிறிஸ்துக்கள் எழும்புவார்களென்று உங்களுக்குத் தெரியுமல்லவா? எலியாவின் ஆவியினால் அபிஷேகம் பண்ணப்பட்டு, உண்மையாகவே வரவிருக்கின்ற இந்த சகோதரன் இந்த மகத்தான செய்தியை பேசினவுடனே அவர்கள் தோன்றுவார்கள்.
        வனை ஜனங்கள் மேசியா என்று தவறாக எண்ணக்கூடும். ஆனால் அவன், யோவான் ஸ்நானனைப் போல், ""நான் அவரல்ல'' என்று திட்டவட்டமாகக் கூறுவான். ஏனெனில் அவன் யோவானைப் போலவே வரவேண்டியவனாயிருக்கிறான்.
        யோவான் அங்கே பிரசங்கிக்க வந்த போது, ஜனங்கள், அவனிடம் ""நீ மேசியாவல்லவா? நீ அவரல்லவா?'' என்று கேட்டனர்.
        அதற்கு அவன், "நான் மேசியா அல்ல. அவருடைய பாதரட்சைகளின் வாரை அவிழ்ப்பதற்கும் நான் பாத்திரனல்ல, நான் தண்ணீரினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறேன். அவரோ பரிசுத்த ஆவியினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார்' என்றே கூறியுள்ளார். அதுவுமன்றி, ஏழு சபை காலங்களின் வியாக்கியானம் என்ற புத்தகத்தில், லவோதிக்கேயா சபையின் தூதன் என்ற பகுதியிலும் சகோ. பிரன்ஹாம், ""லவோதிக்கேயா கால தீர்க்கதரிசி செய்தியாளனுக்கும், இயேசு வின் முதலாம் வருகைக்கு முன்னோடியான தீர்க்கதரிசி செய்தியாளன் யோவானுக்கும் மற்றுமொரு ஒப்பீட்டை நான் செய்ய விரும்புகிறேன். யோவானின் நாளின் ஜனங்கள் அவனை மேசியா என்று தவறாக எண்ணினர். யோவான் 1: 19,20 ""எருசலேமிலிருந்து யூதர்கள் ஆசாரியரையும் லேவியரையும் யோவானிடத்தில் அனுப்பி, நீர் யார் என்று கேட்ட பொழுது, அவன் மறுதலியாமல் அறிக்கையிட்டதுமின்றி நான் கிறிஸ்து அல்ல என்றும் அறிக்கையிட்டான்'' இப்பொழுது, இந்த கடைசி நாளின் தீர்க்கதரிசி செய்தியாளனும் கர்த்தருக்கு முன்பாக மகத்தான வல்லமையை கொண்டிருப்பார். ஆதலால் அவரை (செய்தியாளனை தமிழாக்கியோன்) கர்த்தராகிய இயேசு என்று சிலர் தவறாக எண்ணுவார்கள். (காலத்தின் முடிவில், அவர்கள் இதை நம்பத்தக்கதாக, பூமியில் ஒரு ஆவி இருந்து அவர்கùள வஞ்சிக்கும்). மத் 24: 23-26. ""இதோ, கிறிஸ்து இங்கே இருக்கிறார், அதோ, அங்கே இருக்கிறார் என்று எவனாகிலும்சொன்னால் நம்பாதேயுங்கள். ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள். இதோ முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன். ஆகையால், அதோ, வனாந்தரத்தில் இருக்கிறார் என்று சொல்வார்களானால் புறப்படாதிருங்கள்; இதோ இரகசிய அறைவீட்டிற்குள் இருக்கிறார் என்று சொல்வார்களானால் நம்பாதிருங்கள். ஆனால் நீங்கள் அதை நம்பாதீர்கள். அவர் (செய்தியாளன் தமிழாக்கியோன்) இயேசு கிறிஸ்து அல்ல. அவர் தேவனுடைய குமாரன் அல்ல. அவர் சகோதரர்களில் ஒருவர், ஒரு தீர்க்கதரிசி, ஒரு செய்தியாளன், ஒரு தேவனுடைய ஊழியக்காரன். அவருக்கு மகத்தான கனம் செலுத்தப்பட தேவையிராது. யோவானும் கீர்த்தி எதுவும் தனக்கென்று தேடிக்கொள்ளாமல், ""நான் அவரல்ல, எனக்குப் பின் ஒருவர் வருகிறார்'' என்று கூப்பிடுகிற சத்தமாயிருந்தான். சகோ. பிரன்ஹாம் தன்னை கிறிஸ்து என்ற பொய் போதகத்தை பரப்புகிறவர்களின் செயல் பிசாசினுடையது, அது அந்தி கிறிஸ்து, அது கேவலமான பொய், அது சாவுக்கேதுவான காயம் அடைந்தது, எனவே அது ஒழிந்து போகும், தனோடு எந்தவித சம்மந்தமும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்றெல்லாம் கூறிப் பிரசங்கித்தார். அப்பிரசங்கம், ""இயேசு கிறிஸ்துவைப் பற்றிய வெளிப்பாடு'' என்ற தலைப்பில் பிரசங்கித்த 15 பிரசங்கங்களில் பதினான்காவதான செய்தியாகும். அதன் தலைப்பு ""மிதிக்கப்பட்ட சர்ப்பம்'' என்பதாகும். அச்செய்தியின் 20 முதல் 48 முடிய உள்ள பாராக்களில் தன்னை இயேசு கிறிஸ்து என்று அழைப்பது பிசாசின் பொய்ப் போதகம் என்று தெளிவுபடுத்தி உறுதியாக அறிக்கையிட்டுப் பிரசங்கித்திருக்கிறார். அதன் தமிழாக்கமே இதில் அளிக்கப் பட்டுள்ளது. அது பின்வருமாறு:
        எனது வாழ்க்கைப் பாதையின் முடிவை நான் போய் அடைகையில் அங்கே என்ன இருக்குமோ என்று நான் அடிக்கடி அறிய விரும்பியதுண்டு. அவ்வேளை எப்பொழுது நேரிடும் என்பதை நாம் அறியோம், நம்மில் எவரும் அறியோம், ஆகவே வாழ்க்கையில் இதுவரை நான் நடந்து வந்திருக்கும் கடந்த கால பாதையை நான் திரும்பிப் பார்த்து அப்பாதையில் நான் வெவ்வேறு குன்றுகளையும், முட்புதர் நிறைந்த பாதைகளையும், பாறைகளையும், கஷ்டமான இடங்களையும், மிருதுவான பயணங்களையும் என் வாழ்வில் கடந்து வந்ததைப் பற்றியும், அவ்விதமான வேளைகளில் நான் என்ன செய்தேன் என்பதையும் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தேன். அவை யாவும் இந்நாட்களில் ஒன்றில், நான் கடந்து சென்றுவிடும் வேளையில் தெளிவாகத் தெரியவரும். நம் ஒவ்வொருவரிலும் அவ்வாறு தான் சம்பவிக்கும். ஒவ்வொருவருக்கும் அவ்வேளை வரும்பொழுது, அது தெளிவாகத் தெரியவரும் என்பதைப் பற்றி நாம் யாவரும் நிச்சயமுள்ள வர்களாய் இருப்போம்.
        ஒரு குறிப்பிட்ட காரியத்தைப் பற்றி கூறத் தூண்டுகிறதாகவோ நடத்துகிறதாகவோ இருக்கிறது; ஆனால் அதைக் கூறுவதை விட ஓடிப் போய்விடலாம் என்று நான் விரும்புகிறேன். ஒரு காரியத்தைக் குறித்துக் கூறும்படி அது என்னை நடத்துகிறது, அதைப் பற்றிக் கூறுவது என் இருதயத்தின் அடித்தளத்தையே நொறுக்குகிறது. ஆனால் நான் என்ன கூறுகிறேன், அதைக் கூற வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டுள்ளது. இது ஒலிநாடாவில் பதிவு செய்யப்படுகிறதென்றும், தனால் உலகம் அதைக் கேட்கும் என்பதையும் நான் உணர்ந்தேயிருக்கிறேன். ஆனால் நான் ஒரு காரணத்திற்காக ஊழியத்தை விட்டு விலகி விட்டேன். நான் அக்காரணத்தினால் ஊழியத்தை விட்டு விலக வேண்டிய நிலை ஏற்பட்டது குறித்து வருந்துகிறேன். நான் எனது அலுவலகத்தை மூடுகிறேன் என்பதைப் பற்றியும், ஊழியத்தை விட்டு விலகுவதைக் குறித்தும் ஒரு வேளை உங்களில் அநேகர் கேள்விப் பட்டிருப்பீர்கள்.
        நமது கர்த்தர் என்னை எங்கே வழி நடத்துவார் என்பதைப் பற்றி எனக்கே தெரியாது, அது என் கட்டுப்பாட்டில் இல்லை; அல்லது நான் என்ன செய்ய வேண்டும் என்பதைக் குறித்து அவர் என்னவெல்லாம் சித்தங்கொண்டிருக்கிறாரோ தெரியாது. ஆனால் வாழ்க்கைப் பாதையில் நான் வந்தடைய வேண்டிய இறுதிக் கட்டத்தைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். என் வாழ்க்கைப்பாதை நெடுகிலும் நான் அநேக பிழைகளை செய்திருக்கிறேன்; அதற்காக நான் உளப்பூர்வமாக வருந்துகிறேன். மானுடனாய் இருப்பதனாலும், ஒரு நபர் மாறுபாடாக நடக்க விரும்பாமல் இருந்துங்கூட, மானுடனாய் இருப்பதிலும், மனுஷ பெலவீனமும் அவ்வாறு காரியங்களை செய்யவோ அல்லது பேசவோ ஆக்கி விடுகிறது என்று நான் கருதுகிறேன். மனுஷ பெலவீனங்களால் நமக்கு அவ்வாறாவேளைகள் ஏற்பட்டு விடுகிறது.
        என்னுடைய இருதயத்தில் எதாவது விருப்பம் இருக்கிறதென்றால், அதென்னவெனில், எனது இந்த வாழ்க்கைப் பயணத்தின் இறுதியில், ""நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே'' என்று நமது கர்த்தராகிய இயேசுவின் வார்த்தைகளை நான் கேட்க வேண்டுமென்பது தான். ""என்னிடத்தில் வா'' என்று கூறும்பொழுது, நானும் அங்கே நின்றிருக்க வேண்டுமென்று வாஞ்சிக்கிறேன் என்று நான் அநேக தடவைகள் கூறியிருக்கிறேன். ஆனால், அதைவிட, ""ன்றாகச் செய்தாய்'' என்று அவர் கூறுவதையே நான் விரும்பியிருக்கிறேன். வேதாகமம் எழுதப்பட்ட நாட்களில் ""என்னிடத்தில் வா'' என்கிற சத்ததத்தை நான் கேட்டது கூட இல்லை; ஆனால் ""நன்றாகச் செய்தாய்'' என்று அச்சத்தம் என்னிடம் கூறுவதையே நான் கேட்க விரும்புகிறேன்.
        நான் எப்பொழுதும் விரும்பியிருக்கிற காரியம் யாதொன்றும் இருக்குமென்றால், என் இருதயத்தின் வாஞ்சைகள் என்னவெனில் என்னுடைய ஆண்டவரும் இரட்சகருமாயிருக்கிற இயேசு கிறிஸ்துவுக்கு உண்மையான ஊழியக்காரனாக இருக்க வேண்டுமென்பதேயாகும். என்னுடைய சாட்சி சுத்தமானதாகவும், தெளிவானதாகவும் உடையவனாக நான் நிற்க வேண்டும் என்பதையே நான் விரும்புகிறேன். என்னிடம் எத்தனையோ பிழைகள் இருந்தன, ஆயினும் நான் அவரை என் முழு இருதயத்தோடும் நேசித்தேன். இக்காலையிலும் கூட நான் அவரை என் முழு இருதயத்தோடும் நேசிக்கிறேன்.
        ஆகவே தான் நான் ஊழியத்தை விட்டு விலகுகிறேன் என்று கூறும்படி நிர்ப்பந்தப்படுத்தப்பட்டுள்ளேன். ஏனெனில், ஜனங்கள் மத்தியில் ஒரு காரியம் எழும்பியுள்ளது, அதுவே நான் அவ்வாறு கூறும்படி செய்திருக்கிறது. அதென்னவெனில், நான் ""ஊழியக்காரன்'' அல்லது ""ஒரு சகோதரன்'' என்று அழைக்கப்படும் அடைப்புக்குறியிலிருந்து எடுக்கப்பட்டு, இயேசு கிறிஸ்து என்று அழைக்கப்படுகிறேன். அவ்விதமாக என்னை அழைப்பது என்னை ஒரு அந்தி கிறிஸ்து என்று பட்டம் சூட்டி விடும். நான் அவரை, ஒரு அந்தி கிறிஸ்துவாக சந்தித்து, அவரை விட்டு அகற்றப்படுவதற்கு முன்னர், பணியை விட்டு விலகி ஓடிப் போனவனாகவே சந்திக்க விரும்புகிறேன்.
        சில ஆண்டுகளுக்கு முன்பாக அதைப் பற்றி என் காதுகளில் விழுந்தது. நான் அதை ஒரு தமாஷ் என்று எண்ணினேன். ஒரு சமயம் மீன் பிடிக்கச் சென்றிருந்த பொழுது, இரண்டு அல்லது மூன்று சகோதரர்களை நான் சந்தித்தேன். அவர்களில் ஒருரைக் கூட நான் இன்று காலைக் கூட்டத்தில் காணவில்லை. அவர்கள் இந்த விஷயத்தைப் பற்றி பேசுவதற்காக என்னை அணுகி, ""சகோதரன் பிரன்ஹாம் அவர்களே, நீர் அபிஷேகிக்கப்பட்ட மேசியாவாகிய கிறிஸ்துதானே?'' என்று கேட்டார்கள்.
        அவ்விரு சகோதரர்களுடைய கழுத்தைக் கட்டிக் கொண்டு, எல்லோரிடமும், ""சகோதரர்களே, ன்னால் முடிந்த அளவு நான் கிறிஸ்துவின் உண்மையான ஊழியக்காரனாக இருக்கவே முயன்றிருக்கிறேன். நீங்கள் அவ்விதமான காரியங்களைக் கூறுவதை நான் விரும்பவே மாட்டேன். அவ்வாறு என்னைப் பற்றி எப்பொழுதுதாவது சொல்லப்படுமென்றால் , அப்பொழுது நான் ஒரு தெளிவான மனசாட்சியோடு ஊழியத்தை விட்டு விலகி விடுவேன். அவ்வாறு ஊழியத்தை விட்டு என்னை நீங்கள் போகச் செய்வதால், காலத்தில், நான் ஊழியத்தில் இருந்திருந்தால் என்னால் ஆத்தும ஆதாயம் செய்யப்பட்டிருக்க வேண்டிய ஆத்துமாக்கள் ஒவ்வொருவருக்கும், நீங்களே பொறுப்பாளிகளாயிருப்பீர்கள்; ன்னை ஊழிக்களத்தை விட்டு விலகிச் செல்லும்படியான நிலைக்கு தள்ளினதற்கும் நீங்கள் பொறுப்பாளிகளாவீர்கள்'' என்று கூறினேன். அத்தோடு அது முடிந்து போகும் என்று நான் எண்ணினேன்.
        அதன் பிறகும், இன்னும் சில தடவைகளிலும் நான் அதே விஷயத்தைப் பற்றி கேள்விப்பட்டேன். ஆàல் அது இவ்வாறில்லை. அன்றொரு நாள் கனடா தேசத்தில் ஒரு சகோதரன் என்னிடம் ஒரு சிறிய டிக்கெட்டை தன் சட்டைப் பையிலிருந்து எடுத்துக் காண்பித்தார். அதில் ""வில்லியம் பிரன்ஹாம் எங்களுடைய கர்த்தராயிருக்கிறார்'' என்று இருந்தது. அவர் வில்லியம் பிரன்ஹாமின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுப்பதாகவும் தெரிய வந்தது. அது ஒரு சத்துருவாக இருந்திருந்தால், அது என் சத்துருவாக இருந்திருந்தால், நான் அதை நகைப்புக்கிடமானதாக எடுத்துக் கொண்டிருப்பேன். ஆனால் விலையேறப்பெற்ற, பிரிய முள்ள சகோதரன் ஒருவர் என்னை இயேசு கிறிஸ்து என்று தான் விசுவாசங்கொண்டுள்ளதாகக் கூறி, என்னிடம் தனது பாவங்களையும் தவறுகளையும் அறிக்ககையிட வந்திருந்தார்.
        நான் அந்த கோட்பாட்டினை விசுவாசிக்கிறேன் என்று கேள்வி கேட்டு, வீட்டில் எனக்குக் கடிதங்கள் வந்துள்ளன; சிகாகோ மற்றும் பல்வேறு இடங்களிலிருந்தும், தொலைபேசியின் மூலமும் அதைக் குறித்து என்னிடம் கேட்டனர்.
        நான் கிறிஸ்து என்று கூறுகிறதான எல்லாவிதமான கடிதங்களும் தொலைபேசி அழைப்பு மூலம் கூறுவதும் கடந்த சில நாட்களில் எனக்கு வந்துள்ளன. சகோதரரே! அது பிசாசினுடைய பயங்கரமான, வெட்கக்கேடான, தேவபக்தியற்ற ஒரு பொய்யாகும்! பார்த்தீர்களா, நான் உங்களுடைய சகோதரன் என்பதை உணருங்கள். அவ்விதமாகக் கூறுவது எந்த ஒரு நபரையும் ஊழியத்தை விட்டு ஓடிப்போகச் செய்துவிடும். அவ்வாறு கூறுவது, கிறிஸ்துவை நேசிக்கிற எந்த ஒருவனையும் ஊழியத்தை விட்டு ஓடிப் போகச் செய்துவிடும்.
        ஒரு வருடத்திற்கு முன்பாக நான் முதன்முறையாக இதைக் குறித்துக் கேள்விப்பட்ட பொழுது, சமீபத்தில் நான் ஆண்டவரிடம் சென்று கேட்டேன். நான் ஆண்டவரை அணுகியபொழுது, அவர் எனக்கு வேதவாக்கியங்களைச் சுட்டிக்காட்டி, அநேக ஆண்டு காலமாக யூதர்களுக்கு ஒரு தீர்க்கதரிசியும் வராதிருந்த பொழுது, அவர்களுக்கு யோவான் பிரசங்கித்துக் கொண்டு வந்த பொழுது அவனைக் குறித்து அவர்கள் தங்கள் இருதயத்தில் ஆச்சரியப்பட்டு, யோவான் ஒருவேளை மேசியாவாக இருக்கக்கூடும் என்று தங்கள் மனதில் எண்ணியதைக் குறித்துள்ள விஷயத்தை குறிப்பிட்டார். எனவே அப்பொழுது நான்... அவர்கள் யோவானிடம் போய் அவன் கிறிஸ்துதானா என்று கேட்டபொழுது அவன் தான் கிறிஸ்து அல்ல என்று அறிக்கையிட்டான். அதை நீங்கள் லூக்கா 3ம் அதிகாரம் 15ம் வசனத்தில் காணலாம். ஆகவே அதன் பிறகு, அது ஓய்ந்து விட்டது; ஆகவே அதை அப்படியே விட்டுவிட்டேன்.
        ஆனால் அது இந்த அளவுக்கு நீடித்துக்கொண்டே இருக்கும் போது, அதற்கு ஒரு முடிவு கட்டியாகவேண்டும் என்று நான் அப்பொழுது அறிந்துகொண்டேன். சபைக்கும் உலகுக்கும் இதுவே எனது கடைசி செய்தியாக இருக்குமானால், எனக்கு ஏற்பட்ட தரிசனமும், நதிக்கரையில் கர்த்தருடைய தூதன் தோன்றி கூறியவைகள் யாவும் சத்தியமாயிருக்கின்றன.
        அநேக சமயங்களில் மக்கள் என்னை தீர்க்கதரிசி என்று அழைக்கும் போது, அதைப் பற்றி நான் ஒன்றும் சொல்லவில்லை. ஏனெனில், ஆங்கில ஏற்பாட்டில், ""தீர்க்கதரிசி'' ன்றால் வெறும் ஒரு "பிரசங்கி' என்றும், ""தீர்க்கதரிசனம் உரைப்பவன்'' என்றும், "வார்த்தையை முன்னுரைப்பவன்' என்றும் பொருள்படும். அப்படி அழைத்தபொழுது நான் ஓடிப்போய்விடவில்லை, ஏனெனில், அதையெல்லாம் நாம் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், ""அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்து'' என்று அழைக்கப்படும் நிலைக்கு வரும்போது, அது என்னால் தாங்கிக் கொள்ள முடியாத காரியமாயிருக்கிறது. எனவே என்னால் அதை சகித்துக் கொள்ள முடியவில்லை.
        கனடா தேசத்தில் நடந்த கூட்டத்திற்குப் பிறகு, புறப்பட்டுச் செல்லும் போது, தூரத்தில் எஸ்கிமோக்கள் அல்லது சிகப்பு இந்தியர்கள் மத்தியிலும் அவ்விஷயம் பரவியிருக்கக் கண்டேன்.
        ஆகவே அது என்னை முற்றிலுமாக மனமுறிவடையச் செய்து விட்டது. வேட்டைக்குச் செல்ல நீண்டகாலமாகவே நான் திட்ட மிட்டிருந்தேன், ஆனால் அதை நான் மேற்கொள்ள இயலாமற் போயிற்று. ஏனெனில் நான் வேட்டைக்கால விபத்தொன்று ஏற்படுமோ என அஞ்சினேன். நான் என்ன கூறுகிறேன் என்பதை நீங்கள் புரிந்து கொண்டீர்களென்றால், இது உங்களுக்கு புரியம். நான் இப்பொழுது இங்கே நடுக்கத்தோடு நின்று கொண்டிருப் பதைவிட மிகவும் நடுக்க முள்ளவனாக இருந்தேன். முப்பத்தியொரு ஆண்டுகால ஊழியமானது பிசாசின் சாக்கடை குழாயின் ஆழத்தில் விழுந்து விட்டதே என்று எண்ணுகையில் என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. நான் போய்விட்ட பின்பு, அவர்கள் என்னைப் பற்றி என்ன சொல்லுவார்கள்? ""அதோ அவனைப் பற்றி கூறியது முற்றிலும் சரியாகி விட்டது'' என்பார்கள். ஜனங்கள் மேல் எனக்கிருந்த செல்வாக்கெல்லாம் போய், அது ஒரு அந்தி கிறிஸ்துவின் காரியம் என்பதாக ஆகிவிடும். ஆகவே என்னால் அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
        ""நான் இந்த காட்டிலே தானே என் துப்பாக்கியின் மீதோ அல்லது வேறெதன்மீது விழுந்து இறந்துவிடுவதே நல்லது'' என்று எண்ணினேன். பிறகு நான் வளர்த்து ஆளாக்கப்பட வேண்டிய என்னுடைய சிறிய மகன் ஜோசப்பைக் குறித்து எண்ணிப் பார்த்தேன். அதற்கு மேல் நான் வேட்டையாடும் நிலையில் இல்லை; எனவே நான் காட்டைவிட்டுப் புறப்பட்டு, வீட்டுக்குத் திரும்பி வந்தேன்.
        எட்டு அல்லது பத்து நாட்களுக்கு நான் மனமுறிவடைந்தவனா, குழப்பமான சூழ்நிலையில் இருந்தேன். நான் என் சிந்தை தடுமாறுகிறேன் என்று எண்ணினேன். நான் ஒவ்வொருவரையும் என்னை விட்டு நீங்கியிருக்கும்படியும் என்னைத் தனியே விட்டு விடும் படியாகவும் கூறினேன், ஏனெனில் நான் தடுமாற்றமான சூழ்நிலையில், பதற்றமுள்ளவனா, நிலைகுலைந்து, சுக்குநூறாக இதயம் கிழிந்த நிலையில் இருந்தேன்.
        இதையெல்லாம் கூறுவது என்னுடைய சத்துருவாயிருந்தால் அதைப் பற்றி பரவாயில்லை; நான் அதைப் பற்றி கேள்விப்பட்ட மாத்திரத்தில் அதைக் குறித்து நகைத்து, என் வேலையை செய்து கொண்டே இருந்திருப்பேன். ஆனால், இதையெல்லாம் கூறுவது, விலையேறப்பெற்ற சகோதரனோ, விலையேறப்பெற்ற சகோதரியாகவோ இருக்கும்போது, அதுவே என்னை புண்படுத்துகிறது. ""கர்த்தாவே, இவ்விஷயம் என்னால் தாங்கவொண்ணாத காரியமாகும். நான் இதை உம்முடைய கரத்தில் கொடுத்துவிட்டு, ஊழியத்தை விட்டு வெளிநடப்புச் செய்வதைத் தவிர எனக்கு வேறு எதுவும் தெரியவில்லை'' என்று கூறினேன்.
        சில நாட்களுக்கு முன் ஓர் இரவில், கர்த்தரிடத்திலிருந்து இதைப் பற்றி நிச்சயமாய் அறிந்து கொள்வதற்காக, ஒரு தரிசனம் உண்டாயிற்று. கருப்பும் மஞ்சள் நிறமுமான அழகான குட்டி சர்ப்பம் ஒன்று என்னைப் பின்தொடர்ந்து வந்து கொண்டே, என் காலில் கடித்தது. ஆனால் எனது இரத்தம் உயர்தரமானதாக இருந்தபடியால், அதன் விஷம் எனக்கு சேதம் ஒன்றும் விளைவிக்கவில்லை. நான் குனிந்து சர்ப்பம் கடித்த இடத்தைப் பார்த்தேன். நான் உடனே திரும்பி துப்பாக்கியை எடுத்து அச்சர்ப்பத்தை சுட்டேன், அதனுடைய நடுப்பாகத்தில் அதற்கு காயம்பட்டது.
        ஒரு சகோதரன் கூறினார்... நான் என்னுடைய துப்பாக்கியினால் அதன் தலையைச் சுட்டுவிடத் திரும்பினபோது, ஒரு சகோதரன் கூறினார், ""அப்படிச் செய்யாதீர்கள், உங்கள் பக்கத்தில் கிடக்கும் அந்த கம்பை எடுத்துக்கொள்ளுங்கள்,'' ன்றார். அந்த கம்பை எடுக்கத் திரும்பிய போது, அது தடுமாறிக் கொண்டே வளைந்து வளைந்து ஒரு சிறு குட்டையினுள் போய் விட்டது.
        ""நல்லது, அது இனிமேல் அதிகம் சேதத்தை விளைவிக்க முடியாது, ஏனெனில் அந்த சகோதரர், அந்த சகோதரர்கள் உணர்வடைகிறதான காரியம் நடக்கும் என்று நான் விசுவாசிக்கிறேன். அந்த சர்ப்பம் சாவுக்கேதுவாக காயப்படிருக்கிறது. எனவே அது செத்துவிடும்'' என்று நான் கூறினேன்.
        எனது சபையின் அங்கத்தினர்கள் அநேகரையும்... இந்தக் கூடாரத்தில் சகோ. நெவிலும் நானும் இருக்கையில் கேள்வியோடு இங்கு வந்து என்னை அணுகுகிறவர்களை நான் கேட்கிறேன்: சகோதரர்களே, சகோதரிகளே, நான் உங்களுக்கு முன்பாக கிறிஸ்துவுக்கு உண்மையான ஊழியக்காரனாக நடந்து கொள்ளும் படி முயற்சி செய்ததில்லையா? நான் உங்களுடைய சகோதரனாக இருக்க முயற்சி செய்ததில்லையா?
        எங்கெல்லாம் இப்போதகம் இருக்கிறதோ, அங்கே அது தானே விலையேறப் பெற்ற மக்கள் மேல் இருக்கும் ஒரு ஆவியாக இருக்கிறது. அநேகர் இதைப் பற்றி என்னிடம் கேட்டிருக்கின்றனர். ஆனால் அது ஒரு ஆவியாக இருக்கிறது. ஆனால், இன்றைக்கு அப்படிப்பட்ட போதகம் சாவுக்கேதுவான காயத்தைப் பெற்றுக் கொள்கிறது, அது விரைவில் மரித்துவிடும், எனவே நான் ஊழியத்திற்கு திரும்பி வந்துவிட முடியும் என்று நான் நம்புகிறேன். அது வரையிலும் நீங்கள் ஒவ்வொருவரும் எனக்காக ஜெபிக்கும்படி நான் கேட்டுக் கொள்வேன். நான் என்ன செய்வேன் என்பது அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. நான் வசிக்கும் ஸ்தலம் விற்கப்படயிருக்கின்றது. நான் இங்கு தங்கியிருப்பேன் என்றால் எனக்கு முழுவதுமாக பைத்தியமே பிடித்துவிடும். எனக்காக ஜெபிக்கும்படி உங்களை நான் கேட்டுக்கொள்கிறேன்.
        நீங்கள் என்னை விசுவாசிப்பீர்களாயின், ஞாபகமிருக்கட்டும், நீங்கள் என்னை கிறிஸ்துவின் ஊழியக்காரன் என்று விசுவாசிப் பீர்களாயின் அப்பொழுது ஒரு காரியம் உங்களுக்கு ஞாபகமிருக் கட்டும்; அதென்னவெனில், ""அப்போதகம் சத்தியத்திற்கு விரோதமாக நெறி பிறண்டதாக இருக்கிறது. அது பொய்யானதாக இருக்கிறது. கர்த்தர் உரைக்கிறதென்னவென்றால்; அது முறை கேடானதாக இருக்கிறது. அப்படிப்பட்டதோடு எந்தவித சம்மந்தமும் வைத்துக் கொள்ளாதீர்கள். நான் உங்களுடைய சகோதரன்''.
        நாம் தலைகளை வணங்குவோமாக.
        பரலோகப் பிதாவே, என் மாம்சமானது நடுங்குகிறது; என் கைகள் பிசைகின்றன; என் கால் விரல்கள் என் காலணிகளுக்குள் விறைக்கின்றன. ஓ, தேவனே இரக்கமாயிரும். இது எனக்கு நேரிட நான் என்ன செய்தேன்? நீர் என்னிடத்திலும் எல்லாரிடத்திலும் இரக்கமாயிருக்க வேண்டுமென நான் ஜெபிக்கிறேன். அந்த விலையேறப்பெற்ற இனிய மக்கள், அவர்கள் செய்திருக்கிற நெறி பிறண்ட செயலைக் குறித்து உணர்வடையட்டும், கர்த்தாவே. அவர்களது இச்செயல், தங்கள் சகோதரனின் இருதயத்தையும், தங்கள் சகோதரனை மாத்திரமல்ல, ஆனால் நமது இரட்சகருமாகிய நமது பரம பிதாவின் உள்ளத்தையும் உடைத்ததே. நீர் எங்கள் பிழைகளை எங்களுக்கு மன்னித்தருளும், கர்த்தாவே. கிறிஸ்துவின் பரிசுத்த இரத்தம் எங்கள் ஜீவன்களை ஒன்று சேர்க்கட்டும், கர்த்தாவே. எங்கள் இருதயங்களை கிறிஸ்தவ அன்பிலும், ஐக்கியத்திலும் இணைக்கிற அந்த அன்பின் கட்டு ஆசீர்வதிக்கப்படுவதாக.
        தேவனே எங்கள் சகோதரர்களையும், எங்கள் சகோதரிகளையும் அக்கள்ளப்போதகத்தோடு அணுகியிருக்கிற சத்துருவானவன் இனிமேலும் நிலைத்திருக்காதபடி சாவுக்கேதுவான காயத்தை பெற்றுக் கொள்ளட்டும்; அது அப்படியே மரித்து போகட்டும், கர்த்தாவே. பிதாவே, நீர் அதைச் செய்யும்பொழுது, நான் ஊழியக்களத்திற்கு மீண்டும் திரும்பி வருவேன். ஆனால் அது வரைக்கிலும் கர்த்தாவே, இருதயம் நொறுங்கினநிலையில் உள்ள உம்முடைய ஊழியக்காரனாகிய நான் காத்துக்கொண்டிருப்பேன். என்னால் எதுவும் செய்யக் கூடியதான நிலையையும் அது தாண்டிப் போய்விட்டது. அதைத் தடுப்பதற்கு என்னால் எதுவும் செய்ய முடியும் என்ற நிலையை அது தாண்டிப் போவதற்கு முன் அதை நிறுத்துவதற்காக நான் கண்ணீரோடும், கதறுதலோடும், புத்தி சொல்லி இணங்க வைக்க நான் மிகவும் கடினமான முயற்சி செய்தேன், நீர் என் இருதயத்தை, கர்த்தாவே, அறிவீர். ஆனால் அது வரம்பு மீறிப் போய்விட்டது, ன்னால் இப்பொழுது எதுவும் செய்ய முடியாத நிலை வந்துவிட்டது. எனவே, பிதாவே, அதை நான் உம்முடைய கரத்தில் அநேக ஆண்டுகளாக பிரசங்கித்து வந்த இந்த பிரசங்க பீடத்திலிருந்து ஒப்புக் கொடுக்கிறேன். அதை உம்முடைய கரத்தில் ஒப்புக் கொடுக்கிறேன்.
        இப்பொழுதும் பிதாவே, நீர் உம்முடைய சொந்த தெய்வீக வழியில் அதைக் கவனித்துக் கொள்ளும். அது முற்றிலும் ஒழிந்து போன பிறகு, ஓய்ந்து போன பிறகு, அப்பொழுது உம்முடைய ஊழியக்காரன் ஆகிய நான் ஊழியத்திற்கு திரும்புவேன். அது வரையிலும், நீர் பேசுவதைக் கேட்கும்படி காத்திருப்பேன், கர்த்தாவே.
        இப்பொழுது எங்களை ஆசீர்வதித்து, எங்களுக்கு இன்றைக்கு மகத்தான ஆராதனையை தந்தருளும். ஏனெனில், நாங்கள் இதற்காக மாத்திரம் இங்கு கூடி வந்திருக்காமல், அதை உலகுக்கு முன்பாக பகிரங்கமாக தெளிவுபடுத்தவும் கூடி வந்திருக்கிறோம். அதனால் அவர்கள், நான் உம்மை நேசித்து, விசுவாசித்து உமக்காக நின்றேன், இன்னமும் நிற்க விரும்புகிறேன் என்பதை அறிந்து கொள்வார்களாக. அடியேன் போய்விட வேண்டுமென்றால், நான் உம்மை விசுவாசித்து உம்மில் நம்பிக்கை கொண்ருந்ததைப் பற்றிய உண்மையான சாட்சியோடும், சுத்த இருதயத்தோடும் நான் போய்விடட்டும், கர்த்தாவே. அதை அளித்தருளும், வரப்போகும் காலங்கள் நெடுகிலும், நான் உம்மை துதிப்பேன்; நாங்கள் உமக்கு மகிமை செலுத்துவோம். இயேசு கிறிஸ்துவின் மூலமாக. ஆமென்.
        இப்பொழுது நாம் வேதாகமத்தில் ... வேத வசனங்களுக்கு திரும்புவோம். சகோதரன் நெவில் அவர்கள் பொருட்படுத்த வில்லையென்றால், இன்னும் சில நிமிட நேரம் தொடர்ந்திடலாம் என்று நான் இன்று காலை எண்ணினேன்.
        உங்களில் இனி எவருக்கும் இக்காரியம் பேசப்பட்டு அது என் காதில் வந்து விழ வேண்டாம். ஜெபித்து, அதை தள்ளிவிட்டு, அதைப் பற்றி பேசாதிருங்கள். நான் ஐம்பத்திரண்டு வயதுடையவனாய் இருக்கிறேன். ஆனால் ஒருவேளை தேவன் என்னை உயிரோடு இன்னும் வைத்திருப்பாரெனில், இன்னும் கொஞ்ச காலம் மாத்திரமே என் ஜீவன் இருக்கும், நான் என்னுடைய நேரம் முழுவதின் ஒவ்வொரு துளியையும் கிறிஸ்துவுக்கென்றே செலவழிக்க விரும்புகிறேன். ஆகவே, நான் ஊழியத்தை விட்டு விலகிச் செல்கிறேன், ஏனெனில் நான் அவ்வாறு செய்யும்படியான கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டிருக்கிறேன். இது உங்களுக்கு ஞாபகமிருக்கட்டும்.

தொடர்புக்கு;-
சகோ.ஜீவகிருபைநீதி
சகோ.ஜீவஜெயம்

+919884595250

Friday, July 8, 2011

ஆவியானவரால் வழிநடத்தப்படுதல் ஜுலை 15, 1950


1.நன்றி, சகோதரன் லின்ட்சே. கூட்டத்தினருக்கு மாலை வணக்கம். பேசுவதற்கு கடினமாய் உள்ளதற்காக வருந்துகிறேன். என்னைக் கேட்க முடிகிறதா? சரி. அது அருமையானது. சரியானது எதுவோ அதையே நாம் செய்ய முயற்சிக்கிறோம்;, தேவன் நிச்சயமாக இதை நமக்காக பொறுப்பெடுத்துக் கொள்வார்.

2.நாளை பிற்பகல் 2 மணிக்குக்குள்ள ஆராதனைகளில் இருக்க வேண்டுமென்று சகோதரன் லின்ட்சே என்னிடம் சொன்னார்.  நாளை பிற்பகல் இரண்டு மணி. அப்போது அது யாருடைய ஆராதனையிலும் குறுக்கிடாது. ஒவ்வொருவரும்உங்களுடைய சபை ஆராதனையிலும்வெளியில் இருந்து கொண்டு, ஒரு ஆராதனையை உடையவர்களாயும் இருக்கலாம். எனவே அதை நினைவில் வையுங்கள். மேலும் அப்போது சிலநாளை இரவு மீண்டும் வழக்கம் போல பிரசங்க ஆராதனையோ அல்லது வழக்கமான சுகமாக்கும் ஆராதனையோ ஏதோவென்று  இருக்கலாம். நாளை பிற்பகலில் பிரசங்க ஆராதனை இருக்கிறது. உங்களால் வர முடியுமானால், வரும்படி முயற்சி செய்யுங்கள். உங்களைக் கொண்டிருப்பதில் நிச்சயமாக நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

3.இங்கிருப்பவர்களில் எத்தனை பேர் கிறிஸ்தவர்களாக இருக்கிறீர்கள், உங்கள் கரங்களைப் பார்ப்போம். ஓ, அது அற்புதமாக இல்லையா? ஏறக்குறைய 99 சதவீதம் ஜனங்கள் கிறிஸ்தவர்களாக இருக்கிறார்கள். கூடியிருப்பவர்களில் பெரும்பாலான பகுதியினர் ஏற்கனவே இரட்சிக்கப் பட்டவர்களாகவும், தங்களின் இருதயத்துக்கு நேசராக இயேசுவை கண்டடைந்தவர்களாகவும் இருப்பதை அறிந்து, அதை குறித்து  மகிழ்ச்சியடைகிறேன். 

4. இப்பொழுது, முதலில்  அப்படியே வார்த்தையில் சிறிது வாசிக்க  நான் விரும்புகிறேன். என் வார்த்தை தவறும், ஆனால் தேவனுடைய வார்த்தை ஒருபோதும் தவறாது. மத்தேயு புஸ்தகத்தில் 9-ம் அதிகாரத்தில், 27-ம் வசனம் தொடங்கி, அவைகளை குறிப்பெடுக்கும் நீங்கள்…  கர்த்தருக்கு சித்தமானால் நாளைப் பிற்பகல், “எல்லா காரியங்களையும் என்னிடம் சொன்ன ஒரு மனிதனை வந்து பாருங்கள்என்ற பொருளில் நான்  பேச  விரும்புகிறேன். எனக்குத் தெரியாது, ஆனால் அவருக்குச் சித்தமானால்அப்படி செய்வேன் எல்லாம் சரியே. மத்தேயு  சுவிசேஷம் 9-ம் அதிகாரம் 27-ம் வசனத்தில் நாம் இதை வாசிக்கிறோம்:
இயேசு அவ்விடம் விட்டுப் போகையில், இரண்டு குருடர் அவர் பின்னே சென்று: தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும் என்று கூப்பிட்டார்கள்.
அவர் வீட்டிற்கு வந்தபின்பு, அந்தக் குருடர் அவரிடத்தில் வந்தார்கள். இயேசு அவர்களை நோக்கி: இதைச் செய்ய எனக்கு வல்லமை உண்டென்று விசுவாசிக்கிறீர்களா என்று கேட்டார். அதற்கு அவர்கள்: ஆம் விசுவாசிக்கிறோம், ஆண்டவரே! என்றார்கள். 
  
அப்பொழுது, அவர்களுடைய கண்களை அவர் தொட்டு: உங்கள் விசுவாசத்தின்படி உங்களுக்கு ஆகக்கடவது என்றார்.
உடனே அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டது. இதை ஒருவரும் அறியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள் என்று இயேசு அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார்.
அவர்களோ புறப்பட்டு, அத்தேசமெங்கும் அவருடைய கீர்த்தியைப் பிரசித்தம் பண்ணினார்கள். 

அவர்கள் புறப்பட்டுப் போகையில், பிசாசுபிடித்த ஊமையான ஒரு மனுஷனை அவரிடத்தில் கொண்டு வந்தார்கள்.

5.            பிசாசு துரத்தப்பட்ட பின்பு ஊமையன் பேசினான்… (ஊமையான மனிதனைக் கட்டி வைத்திருந்தது என்னவென்று நீங்கள் கவனித்தீர்களா? ஒரு பிசாசு என்பதை குறித்து நான் நிச்சயமுடையவனாய் இருக்கிறேன். நவீன விஞ்ஞானம் அதனுடன் உடன்படாது, ஆனால் நாம் கிறிஸ்தவர்களாக வேதகமம் என்ன கூறுகிறதோ அதை விசுவாசிக்கிறோம்.) மேலும் ஊமையான… 

6.            (சிறிது நேரம் பார்ப்போம்) மேலும்என்னை மன்னியுங்கள், மீண்டும் 33-வது வசனம்; பிசாசு துரத்தப்பட்ட பின்பு ஊமையன் பேசினான். ஜனங்கள் ஆச்சரியப்பட்டு: இஸ்ரவேலில் இப்படி ஒருக்காலும் காணப்படவில்லை என்றார்கள்.
                பரிசேயரோ: இவன் பிசாசுகளின் தலைவனாலே பிசாசுகளைத் துரத்துகிறான் என்றார்கள்.
                பின்பு, இயேசு சகல பட்டணங்களையும் கிராமங்களையும் சுற்றி நடந்து, ஜெப ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்ஜியத்தின் சுவிசேஷத்தை பிரசங்கித்து, ஜனங்களுக்கு உண்டாயிருந்த சகல வியாதிகளையும்சகல நோய்களையும் நீக்கி, அவர்களை சொஸ்தமாக்கினார்.

7.  அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் இருக்கிறார் என்று எபிரேயர் சொல்லுகிறது. அவர் ஒருக்காலும் மாறுவதில்லை  அவர் தேவன். மேலும் இப்பொழுது தேவனுக்கும் கிறிஸ்தவனுக்கும் உள்ள காரியங்களில் மிகவும் அற்புதமான காரியம் என்வென்றால் தேவனுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையேயுள்ள ஐக்கியத்தின் இணைப்பின் படி தேவனுடைய ஆவியினாலே வழிநடத்தப்படுகிறவர்கள் எவர்களோ அவர்கள்  தேவனுடைய குமாரர்கள் எனப்படுவதே.
8.            இப்பொழுது பின்னால் இருக்கிற உங்களுக்கு என்னை கேட்க முடிகிறதா? இது சரியாக உள்ளதா? உங்களால் முடிந்தால், அங்கே பின்னால் உள்ள நீங்கள் சரியாக கேட்க முடிந்தால், உங்கள் கரங்களை உயர்த்துங்கள். அது அருமையானது. இந்த ஒலி பெருக்கிக்கு அப்படியே எவ்வளவு அருகில் நிற்க முடியுமோ அவ்வளவு அருகில் நான் நிற்க முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். அது இரைச்சல் எழுப்பலாம், எனக்குத் தெரியாது.
9.                            ஆனால் உங்களை பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலுக்கும், வழிகாட்டுதலுக்கும்  விட்டுக் கொடுப்பதே கிறிஸ்தவ ஜீவியத்தில் நான் கண்ட மிகச்சிறந்த காரியம். அவருடைய கிரியை ஆச்சரியமானவை, இங்கிருக்கும் எத்தனை பேர் ஆவியானவரால் எப்போதாவது வழிநடத்தப்பட்டீர்கள், உங்கள் கரங்களைப் பார்ப்போம். ஓ, என்னே, அது அற்புதமானது. தேவனுடைய ஆவியால் வழிநடத்தப்படுதல்
                தேவனுடைய ஆவியேயன்றி வேறு எவரும் உங்களை பீடத்தண்டை வழிநடத்த முடியாது. தேவனுடைய ஆவியேயன்றி வேறு எவரும் உங்களை இன்றிரவு இங்கு கொண்டு வந்திருக்க முடியாது. அது சரியா? அவருடைய ஆச்சரியமானவைகளை நிகழ்த்துவதற்காகவே, அவர் புரிந்து கொள்ள முடியாத வழிகளில் அசைகிறார். 

10.   பல நேரங்களில் வழிநடத்தப்படுதலில்… (ஒலி நாடாவில் காலியிடம் ஆசிரியர்.) நான் சிறு பையனாய் இருந்ததிலிருந்துஒரு வாரம் ஞாயிற்றுக்கிழமை, நாம் அவ்வளவு  நேரம் தங்கியிருக்க முடிந்தால் , நான் என் சுய சரிதையைச் சொல்ல விரும்புகிறேன், ஒரு வாரம் ஞாயிறு, பிற்பகல் ஆராதனையில், (என் வாழ்க்கை பாதையில்) பாதையினூடாக என்னென்ன கண்ணீர்களும் இரத்தமும் உண்டாயிருந்தனவென்று நீங்கள் அறியலாம். யாராவது ஒருவர் அது ரோஜாக்களால் நிறைந்தது என்று எண்ணலாம், ஆனால் அது அப்படியாக இல்லைநண்பர்களே!

11.          இப்பொழுது, அநேக சமயங்களில் நான் ஜனங்களுக்கு அவர்களுடைய வியாதிகளையும் மற்றவைகளையும் பற்றி ஏதாகிலும் எப்போதாவது  சொல்ல முடிந்தால் அது நிச்சயமாக ஆவியானவரால் வழிநடத்தப்படும்போது மாத்திரமே அதைச் செய்ய நான் அவரை அனுமதிக்க வேண்டும். எனக்கு நானாகவே ஏதோ ஒன்றை சொல்வேனாகில் அது நிச்சயமாக ஒரு தவறானதாய் இருந்துவிடும்.
12.          அநேக நேரங்களில், அங்கே அநேகர் இருக்கும் போது, அது என்னை குழப்பமடைய செய்கிறது. நான் சாவகாசமாய் இருக்கும் போது அவர்கள் ஒவ்வொருடனும் பேசி, தனிப்பட்ட விதத்தில் அவர்களை தொடர்பு கொள்வதே மிக சிறந்த வழிஆனால் அப்போது அது சில நேரங்களில் இது போன்ற கலப்பு கூட்டத்தினராய் இருக்கும்போது அது என்னவென்று அறிவதும், அப்படியே அது என்னவென்று உணர்வதும் ஒரு வகையாக கடினமாகவே இருக்கிறது. ஆனால் ஆவிகளுக்கு நீங்கள் மிகவும் உணர்வுள்ளவர்களாய் இருக்க வேண்டும்.

13. இப்பொழுது, நாம் தெளிவாகப் உணர்ந்து கொள்ளுகிறோம், மேலும் ஆவிகள் உண்டென்பதை ஒவ்வொருவரும் அறிவோம். அப்போது அங்கே ஆவிகள் இருக்குமென்றால், அந்த ஆவியின் எஜமானர் ஒருவர் இருக்கத்தான் வேண்டும். ஏனெனில் அது பாவிகளின் சுபாவத்திலிருந்து  ஒரு கிறிஸ்தவனாக மாற்றுகிறது. மேலும் அங்கு எங்கோ உள்ள ஒரு எஜமானன் அல்லது தலைவர் இருக்கத்தான் வேண்டும். அது தேவனே. நாம் மீட்கப்பட்டு தேவனுடைய குமாரர்களும் குமாரத்திகளுமாக மறுபடியும் அவருடன் நடக்கம்படிக்கும் தேவனிடத்தில் திரும்ப கொண்டிவரப்படும்படிக்கும் அவர் தம்முடைய குமாரனை பாவ மாமிசத்தின் சாயலாக உருவாக்கி அவரை மரிக்கும்படி இந்த பூமிக்கு அனுப்பினார். ஏதேன் தோட்டத்தில் ஆதாம் எதை  இழந்தானோ, அந்த தவறின இணைப்பை; கிறிஸ்து திரும்ப அளித்தார்.
14 அனேக சமயங்களில்சிறிது நேரம் பேசுவதற்காக நாம் ஒன்று சேர்ந்திருக்கும் சமயத்தை நான் விரும்பினேன். ஆனால் அதற்கு எட்டு அல்லது பத்து நிமிடங்கள் மாத்திரமே கொண்டிருக்கிறோம். நான் அப்படியே என் இருதயத்தை திறந்து ஒரு சில அனுபவங்களை உங்களிடம் கூற விரும்புகிறேன். 

15. அநேக சமயங்களில், கிறிஸ்தவ நண்பர்களேஅதற்கு அதிக காலமில்லையென்று நான் யூகிக்கிறேன், அநேகமாக ஒரு சில கூடுதலான சுகமளிக்கும் ஆராதனைகளை நாம் கொண்டிருப்போம். இப்போது, அந்த ஆராதனைகள் நிறுத்தப்படிப் போகிறது நான் என்று பயப்படுகிறேன், இவ்விதமான ஆராதனைகள். நமக்கு முன்பாக தொல்லை இருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். எனவே நம்மால் முடிந்த எல்லாவற்றையும் அதில் வைக்க நாம் விரும்புகிறோம். மேலும் ஒரு வேளை நாங்கள் இவ்விடத்தை விட்டு செல்லும்போது உங்களில் அனேகரை என் ஜீவியத்தின் எஞ்சியுள்ள நாட்களில் மீண்டும் காணாமுடியாமல் போகலாம். இனிமேல் ஒருபோதும் நாம் சந்திக்க முடியாமலும் இருக்கலாம். எனவே நாம் ஒருவருக்கொருவர் உத்தமமாகவும் தேவனுடன் உத்தமமாகவும் இருப்போமாக! இப்பொழுது நாம் கொண்டிருக்கும் இந்த பொன்னான தருணத்தில் அவர் நம்முடன் இடைபடுவாராக. 

16. ஒரு நாளெல்லாம்    நான் உங்கள் ஒவ்வொருவருடனும் உட்கார்ந்து பேச விரும்புகிறேன். ஆனால் என்னால் அதைச் செய்ய இயலாது. அவ்வாறு செய்வேனானால் ஜெபத்தில் தேவனைத் தேடும்படி என் நேரத்தை செலவழிக்க இயலாது, ஆனால் நான் ஒரு குறித்த நேரத்தில் எங்கோ ஓரிடத்தில் உங்களை சந்திப்பேனென்று நிச்சயப்படுத்துகிறேன். நாம் ஆற்றைக் கடந்த பிறகு, நீங்கள் விரும்பும் எல்லா நேரத்தையும்  நான் - நான் உங்களுடன்  செலவழிப்பேன். ஜீவக்கடலினால்  என்றென்றும் பசுமைமாரா விருட்சத்தின் கீழ் அப்படியே உட்கார்ந்து அங்கே ஆயிரம் வருடங்களாக நாம் ஒவ்வொருவரும் பேசிக்கொண்டே இருக்கலாம். அது அற்புதமாயிருக்குமல்லவா? அந்த நேரத்தில் உங்கள் கரங்களைக் குலுக்கி நாம் கீழே மின்னியாபோலிஸில் (பிரசங்கித்துக் கொண்டிருக்கிற இடம்)  ஒருவருக்கொருவர்  ஒன்றாய் இருக்க முயற்ச்சித்த அந்த நேரத்தை நினைவிருக்கிறதா? இப்போது அது எவ்வாறு உள்ளது என்று பாருங்கள்என்பேன்.

17.  நான் வீட்டை அடையும்போது நீங்கள் அதை அறிந்து கொள்ள விரும்புகிறேன், ஏன், நான் ஆற்றைக் கடந்ததும் ஆச்சரியமான கிருபைஎன்று  பாடுவதற்கு முயற்சித்துக் கொண்டிருப்பேன். என்னால் பாடமுடியாது, ஆனால் அந்த பாடலை பாட எப்போதும் நான் விரும்பினதுண்டு. நான் அங்கு அடையும் போது அதைச் செய்ய தேவன் என்னை அனுமதிப்பார் என்று நான் விசுவாசிக்கிறேன். நான் அங்கு போவதற்கு முன்பாக நீங்கள் போக நேர்ந்தால் ஏதோ ஒரு காலையில் யாரோ ஒரு நபர் வெளியே நழைவு வாயிலில் வந்து ஆச்சரியமான கிருபைஎன்று பாடுவதைக் கேட்டு நீங்கள் சகோ. பிரான்ஹாம் வீட்டை அடைந்துவிட்டார்என்று சொல்வீர்கள். அது நான்தான். நான் பழைமையான பாடலை நேசிக்கிறேன். அந்த ஆச்சரியமான கிருபை தான் என்னை இரட்சித்து இம்மட்டும் கொண்டு வந்தது.

18.அநேக சமயங்களில் ஆவியானவரின் வழிநடத்துதலின் ஊடாக நடக்கும் காரியங்களை நான் குறிப்பிடுவது கூட இல்லை, அதைப் பற்றி எதுவும் சொல்வதுமில்லை. தரிசனங்கள் வழக்கமாக எப்போதும் பார்க்கப்படுகிறது. அது எவ்வாறு சம்பவிக்கிறது என்பதை நான் உங்களுக்கு விளக்க முயற்சித்தேன். அது இந்த தனிபட்ட நபர்களுடையது…. அது அவர்;கள் அசைகிற விதானம், அவர்கள் தங்களுடைய ஜீவியத்தில் என்ன செய்தார்கள் என்பவைகள். மேலும் நான் உங்களை பார்ப்பது எவ்வளவு நிஜமோ அவ்வளவு நிஜமாக அது அப்படியே வருகிறது. கூட்டத்தில் அது கிரியை செய்வதை பார்த்த பிறகும்; யாராவது நீங்கள் அதை சந்தேகிப்பீர்கள் என்று நான் நம்பவில்லை; ஒரு கூடாரத்தில் நடைபெறும் கூட்டத்தில் பேசுவது அநேக தொல்லைகளைக் கொண்டதாயுள்ளதால் அது அதனுடைய ஸ்தானத்தை இன்னும் பெறவில்லை, நாம் ஒருவருக்கொருவர் புதியவர்களாயுள்ளோம். இங்கே அது புதியதாயுள்ளது. ஆனால் நீங்கள் அதை அற்புதவிதமாக ஏற்றுக்கொண்டதற்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாய்யிருக்கிறேன். நான் ஒவ்வொரு இரவும் எப்போதும் உணர முடிகிறது…  எல்லா நேரத்திலும் விசுவாசமானது அதிக உந்து விசையுடன்  எழுப்புவதை  காண முடிகிறது. தேவன் அனுமதித்தால், கூட்டம் முடியும் முன்னால், நீங்கள் இதற்கு முன் கண்டிராத ஒரு மகத்தான துப்புரவாக்குதல் இருக்கப் போகிறது என நம்புகிறேன். அது சரியாக எவ்வளவு அருகாமையில் உள்ளது என்பதைப் பாருங்கள்.

19.கவனியுங்கள், சில நேரங்களில் அவர் காரியங்களை எனக்குக் காட்டுகிறார், நான் அதைப் ஒருபோதும் பேசுவது இல்லை. இப்பொழுது சரியாக இப்பொழுதே, நான் இங்கே நின்று கொண்டிருந்த முதல், இங்கே இந்த ஒலிப்பெருக்கியில் பேச துவங்கினது முதல்  ஏற்கனவே கடந்து போன நான்கு அல்லது ஐந்து காரியங்களை நான் பார்த்துவிட்டேன். ஆனால் ஏதாவதொன்று  சம்பவிப்பதை நான் காணும் மட்டாக நான் அதை பேசுவதில்லை. 

20.என்னுடைய மேலாளர் மற்றும் அவர்களும் அநேக சமயங்களில்இப்பொழுது ஊழியக்காரர்களும் மற்றவர்களும் மிகவும் ஆவிக்குரிய சிந்தை உடையவர்களாய் இல்லையென்றால் சரியாக இப்பொழுதே அதை அப்படியே கிரகிப்பது, சற்று வினோதமாகவும் மேலும் ஒருவேளை ஒரு வகையான கடினமானதாகவும் தோன்றும் என்பதை நான் அறிவேன். ஆனால் என்னால் முடிந்ததெல்லாம்  உத்தமமாய்ருப்பதே.
21.          இங்கே சில நாட்களுக்கு முன்பாக, நாங்கள் இங்கிலாந்தில் சந்தித்த போது (வெறுமனே இரண்டு அனுபவங்கள்), ஒரு நாள் நான் என் அறையில் இருந்தேன், நான் உள்ளே சென்று என் மேலாளரிடம் கூறினேன், நான் சொன்னேன்நான் அறையில் உட்கார்ந்து கொண்டு சாத்தான் எங்களிடம் வருவதாக ஒரு தரிசனம் கண்டேன்… (ஒலி நாடாவில் காலியிடம் ஆசிரியர்.)
                அது  சம்பவிக்க எவ்வளவு காலம் ஆகும் என்றும், எங்கோ ஓரிடத்தில்; சுமார் இருபத்திநான்கு மணிநேரத்துக்குள் சம்பவிக்கும் என்றும் அவர்களிடம் சொன்னேன், அது அங்கே சம்பவித்தது.

22. ஒரு நாள் காலை, சுமார் ஐந்து மணியளவில் எழுந்து பட்டணத்துக்குள் சென்று கொண்டிருந்ததை நினைவு கூருகிறேன். அவர் என்னை எழுப்பினார்; அவர் உன் ஆடைகளை அணிந்துகொள்என்றார். நான் பட்டணத்துக்கு சென்றேன், நான் சுமார் 3 மைல்கள் நடந்தேன். அவ்வாறு தான் என்று நான் நம்புகிறேன்… (அது நார்வே அல்லது ஸ்வீடன் ஆக இருக்கலாம்)

நான் ஒரு ஆற்றினூடாக ஒரு மரத்தின் கீழ் போய் ஒன்பது மணி வரை ஜெபித்தேன், ஐந்து மணியிலிருந்து ஒன்பது மணி வரை. சுமார் ஒன்பது மணிக்கும் என்னை அவர் போக விடவில்லை. நான்  கிளம்பின என்னுடைய அறையில் அங்கே நான் இல்லாததற்காக அவர்கள் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தார்கள் என்பதை நான்  அறிந்தேன். எனவே நான் ஜெபித்துக் கொண்டிருந்தேன்;. நான், “இப்பொழுது எழும்புஎன்ற அவருடைய சத்தத்தைக் கேட்டேன். நான் எழுந்தேன்.

23. இப்பொழுது, நண்பர்களே இது வெறும் கற்பனை அல்ல. (தேவனுடைய) அவருடைய சத்தம் என்னுடைய  சத்தம் உங்களுக்கு கேட்பது போல கேட்க கூடியதாய் இருக்கிறது. அவர் அங்கே நிற்கின்றபோது, அது வெறுமனே உங்கள் கற்பனை அல்ல, அவர் பேசுகின்றபோது நான் அவரைக் கேட்கிறேன், அவரை பார்க்கிறேன். நீங்கள் என்னோடு பேசுவது அல்லது நான் உங்களோடு பேசுவது போல அவரிடம் பேசுகிறேன். அது ஒரு ஜீவிக்கிற ஒன்று, “அது வெறும் கற்பனை அல்ல”. மேலும் அவர் தன்னுடைய பாதத்தை கீழே பதித்து நடக்கும் போது அச்சத்தத்தை நான் கேட்கிறேன். அவர் பேசும் போது நான் பேசுவதுபோல அப்படியே அவர் பேசுகிறார். ஓ, அவர் பேசும் ஒரு ஒரு வார்த்தை ஒரு வகையில் மிகவும் தாழ்மையானதாகவும் வேறொரு வகையில் மிகவும் கண்டிப்பானதாகவும்; உள்ளது. அவருடைய உருவம் அதுஎந்த மனிதனாலும் வரையபட முடியாது. அவர் சாதாரணமாக பேசவாராகில் அது உலகத்தை தலைகீழாக்கிவிடும். ஆவரைப் பார்க்கும்போது மிகவும் சாந்தமுள்ளவராக இருப்பினும் நீங்கள் பெருமாபாலும் அழுதே விடுவீர்கள்.

24.மேலும் அவர் எழுந்திருஎன்றார். நான் எழும்பி நடக்கத் தொடங்கினேன். நான் சுமார் ஒரு மைல் தூரம் நடந்தேன், மேலும்நான் அதற்கு முந்தின நாள் கண்ட ஒரு கடைக்குச் சென்று கொண்டிருந்தேன். என்ன செய்வதென்று நான் அறியவில்லை, நடக்க மாத்திரம் செய்தேன் அவர் நடஎன்று சொன்னார். நான் அப்படியே இந்த மூலையைச் சுற்றி செல்வேன் என்று நினைத்தேன். மேலும் நான் மூலையை சென்றடைந்தேன்;@ அவர் உன் வலதுபுறம் திரும்புஎன்றார். நான் வலப்பக்கத்தில் இரண்டு சதுக்கத்தை (கட்டிடங்கள்) கடந்து சென்றேன், மேலும் அப்போது, “உன் இடதுபுறம் திரும்புஎன்றார். ஒரு நொடிப்பொழுதில் முந்தின இரவு இருந்த என் மொழி பெயர்ப்பாளரைக் நான் கண்டேன். மேலும் ஏதோவொன்று சம்பவிக்கப் போகிறது என்பதை அறிந்தேன், ஏனெனில் அவர் (தேவன்) அப்படியே என்னிடம் நெருங்கி நெருங்கி வந்து கொண்டிருந்தார். என்ன சம்பவிக்க போகிறது என்பதை நான் அறிந்தேன்;@ அது சரியாகதான் நடக்கப்போகிறது. 

25.அவர் (மொழிபெயர்ப்பாளர்) என்னிடம் வந்து என் கரத்தைக் குலுக்கினார். மேலும் அங்கே அவர், “சகோதரன் பிரான்ஹாம், இது ஏதோ ஒரு வினோதமாய் உள்ளதுஎன்றார். 

26.நான், “ஒரு நிமிடம்என்றேன், நான் அவரிடம் சொல்லத்தொடங்கினேன்.  அவர் என்னை நோக்கினார். அவர் அதைச் செய்த போது, முந்தின இரவு அவர் மொழி பெயர்த்துக் கொண்டிருந்த போது நாங்கள் அங்கே நின்று கொண்டிருந்ததை ஒரு தரிசனத்தில் நான் பார்த்தேன். நான், “நீங்கள் அப்படியே மருத்துவமனையிலிருந்து வருகிறீர்கள், இல்லையா?” என்றேன். அவர் ஆம் ஐயாஎன்றார்.
                நான் உங்களின் சிறுநீரகத்தில் ஒன்று நீக்கப்பட்டுள்ளதுஎன்றேன். அவர் அது சரியேஎன்றார்.

27.அதற்கு முந்தின தினம் தான் அவரை நான் சந்தித்தேன். அந்த இரவு  மேடையிலிருந்தது மாத்திரமே. 

28. “சுமார் மூன்று அல்லது நான்கு வருடங்களுக்கு முன் நீஙகள் ஏதோவொன்றைச் செய்தீர்கள், நீங்கள் அதைச் செய்திருக்கக் கூடாது. அது உண்மைதானா?” என்றேன்.
                                அவர் அது சரியேஎன்றார்.

29.நான் அப்போது உங்களுக்கு ஒரு அறுவை சிகிச்சை நடந்தது, உங்கள் அறுவை சிகிச்சையின் போது அது மற்ற சிறுநீரகத்திற்குப் பரவியது. அது சரியா?” என்றேன்.
  அவர் அது சரியேஎன்றார். 

30.நான், “சென்ற இரவு சபையாருக்கான ஒரு ஜெபத்தில் நான் ஜெபித்துக் கொண்டிருக்கும் போது, நீங்கள் உங்கள் கரங்களை எடுத்து மிக சுலபமாக, என்னுடைய மேற்சட்டையை இவ்விதமாக பற்றிபிடித்தீர்களல்லவா?” என்றேன்.

31.அவர் அப்படியே அழத்தொடங்கினார். அவருடைய கண்ணீர் கரங்களை மேலே உயர்த்தி 'அது சரிதான், சகோதரன் பிரான்ஹாம். மேலும் அது அவ்வாறு இருப்பின் அவர் அதை உறுதிபடுத்த வேண்டும் என்று சென்ற இரவு நான் தேவனிடம் கேட்டேன். சுமார் அரை மணி நேரத்துக்கு முன்னால் அவர் என்னிடம், எழுந்து தெருவின் ஊடாக செல்லும்படி கூறினார்" என்றார்

32.ஒரு வினாடி நேரம் தாண்டியிருந்தால் கூட அவரை பார்க்க இயலாது போயிருக்கும். அங்கே அவருடைய சுகமாக்குதல் உறுதிபடுத்தப்பட்டது. தேவன் எப்படிபட்ட புரிந்துகொள்ள முடியாத வழிகளில் கிரியை செய்கிறார். 

33.நான் மேலே சென்று சகோதரன் மூர் சகோதரன் லின்ட்சே மற்றும் அவர்களையும் சந்தித்தேன். நாங்கள் பட்டணத்தின் முக்கிய வியாபாரஸ்தலம் உள்ள இடம் நோக்கிச் சென்றோம். இன்னுமாக ஆவியானவர் என்னை அபிஷேகித்து கொண்டிருக்க அவர் என்னை அப்படியே சிறிது சுற்றி நடக்கும்படி செய்தார். நான் அநேக தடவைகள் அவ்விதமாக நடந்து கொண்டே இருந்திருக்கிறேன், ஏனெனில் அப்போது என்னால் அமைதியாக இருக்க முடியாது. பட்டணத்தின் முக்கிய வியாபார ஸ்தலத்திற்கு சென்றோம். நாங்கள் நின்று ஜன்னலில் நோக்கிக் கொண்டிருந்தோம், மேலும் நான்  சகோதரன் மூர்என்றேன்.
 “ஆம்என்றார். 

34.நான், “இப்போது பின்னால் உள்ள சாலையில் தன்னுடைய மனைவிக்காக ஜெபிக்க சொல்லும்படி கேட்கிற ஒரு மனிதன், ஒரு கருப்பு சூட்டையும் மங்கின நிற தொப்பியும் அணிந்தபடி ஒரு கட்டிடத்தின் வெளியே படியில் நின்று கொண்டிருப்பான். நான் மட்டும் அதை செய்ய முடியாதுஎன்றேன். அவர் அது எப்போது சம்பவிக்கும்?” என்று கேட்டார். 

35.நான் இந்த காலையில் ஏதொவொரு நேரத்தில்என்றேன். நான் ஏனெனில் அந்த தரிசனம் வந்த போது அதில் அதே காலை நேரமாய் இருந்தது.

36.மேலும் நாங்கள் போய் சுமார் அரை மணி நேரம் கழிந்த பிறகு நாங்கள் ஒரு மூலையைச் சுற்றி திரும்பினோம், ஒரு கடைக்கு வெளியே படியில் ஒரு கருப்பு சூட்டையும் ஒரு ஒரு மங்கின தொப்பியும் அணிந்துள்ள ஒரு மனிதன் வந்தான். தன்னுடைய தொப்பியை கழற்றி, “சகோதரன் பிரான்ஹாம் உங்களை சந்திப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்என்றார். என்னுடைய மனைவியை இங்கே மேல்மாடியில் நான் கொண்டு வந்துள்ளேன்என்றார்.
                                ஜேக்... சகோதரன் மூர் அதைப்பற்றி என்ன?” என்றார்.
                                                நாங்கள் உள்ளே சென்றோம்.

37.கோதரன் பாக்ஸ்டர், அடுத்த மேலாளர். அந்த பிற்பகல் நாங்கள் நடந்து பட்டணத்தின் முக்கிய வியாபாரஸ்தலம் நோக்கிச் சென்று, அங்கே வீதியில் நின்று கொண்டிருந்தோம். நான், “சகோதரன் பாக்ஸ்டர், கருப்பு நிற ஆடையணிந்திருக்கும் இரண்டு ஸ்திரீகள், ஒரு  கடைக்கு வெளியே வந்து, நம்மை இன்னும் சிறிது நேரத்தில் நிறுத்துவார்கள் என்பதைக் காண்கிறேன். என்றேன்.

நாங்கள் சுமார் இரண்டு சதுக்கங்கள் (கட்டிடங்கள்) தாண்டி சென்றிருப்போம், ஒரு ஆடவர் கடையில் நான் சில கழுத்தில் அணியும் டைகளைப்  பார்த்துக் கொண்டிருந்தேன். மேலும் அப்பொழுது அதே கடையிலிருந்து கருப்பு நிற ஆடையணிந்திருந்த இரண்டு ஸ்திரீகள் வெளியே எங்களிடம் ஓடி வந்து தங்களுடைய கரங்களை பிசைய தொடங்கினார்கள். அவர்களால் ஆங்கிலம் பேச முடியவில்லை, ஆனால் அவர்களுடைய கரங்களின் மேல் அவர்களிடம் உள்ள கோளாறு என்ன என்பதை ஆவியால் பகுத்தறிய விரும்பினார்கள். 

38.சகோதரன் பாக்ஸ்டர் சொன்னார்நான் - நல்லது இப்பொழுது, அந்தக் காரியங்கள் எல்லா நேரங்களிலும் சம்பவிக்கின்றன. ஆனால் அவைகள் பிரயோஜனமானதாகவோ அல்லது நன்மையான ஏதோவொன்றாக இல்லாவிட்டால் நான் நான் அவைகளை குறிப்பிட மாட்டேன், நண்பர்களே - அவ்விதமான ஏதோவொன்று.

39.இப்பொழுது, அநேக நேரங்களில் கிறிஸ்தவர்கள் ஜெபிக்கிறார்கள்சென்ற இரவு இங்கே உட்கார்ந்திருந்த ஒரு ஸ்திரீ ஒரு சிறு குழந்தையை வைத்திருந்தாள். இப்பொழுது, சென்ற இரவு சிறு குழந்தையுடன் அந்த ஸ்திரிக்காக நான் தேடினபோது, அநேகமாக உங்களில் அநேகர் இங்கே இருந்தீர்கள், உங்களுக்கு அது நினைவிருக்கிறதா? இப்பொழுது அவள் அதைக் குறித்து ஜெபித்துக் கொண்டிருந்தாள். மேலும் அறையில் நான் அவளைக் கண்டேன், அது என்ன மாதிரியான ஒரு வஸ்திரம் என்பதை என்னால் அறிய முடியவில்லை, ஆனால் அவள் தன்னுடைய தலைமயிரை பின்னியிருப்பதையும், பொன்னிற தலைமயிருடன் ஒரு சிறு குழந்தையை வைத்திருப்பதையும் நான் கண்டேன், மேலும் குழந்தை சுகமாக்கப்படுவதை  கர்த்தர் எனக்குக் காட்டினார். சென்ற மாலை கட்டிடத்தை விட்டு செல்லும் முன்பதாகவே குழந்தை  சுகமாகிவிட்டது. இப்பொழுது, அது அற்புதமானது.

40.சமீபத்தில் ஃபோர்ட் வேய்னில் நாங்கள் ஒரு கூட்டத்தைக் கொண்டிருந்தோம். எத்தனை பேர் எப்பொழுதாவதுஏன், ஃபோர்ட் வேய்ன் கூட்டங்களில் இருந்த யாராவது இங்கிருக்கிறீர்களா? ஒரு வேளை யாரோ ஒருவர்ஆம், ஃபோர்ட் வேய்ன் கூட்டங்களில் இருந்த இரண்டு அல்லது மூன்று கரங்கள் இங்கே உள்ளன. வியக்கத்தக்க விதத்தில் பெருங்கூட்டம் கூடியிருந்தது. பி;.இ.ரெடிக்கர், சில வருடங்களுக்கு முன்பாக இருந்த பி.இ.ரெடிக்கர் என்பவரை குறித்து எத்தனை பேர் எப்போதாவது  கேள்விப்பட்டிருக்கிறீர்கள். பால் ரேடர் அங்கே அவருடைய கூட்டத்தில் நம்பிடுவாய் என்ற இந்த பாடலை எழுதினார். நல்லது, திரு. ரெடிக்கர் சில குமாரத்திகளைக் கொண்டிருந்தார்சிறிது காலத்துக்கு முன்னால், அவர் மகிமைக்குச் சென்று விட்டார், தெய்வீக சுகமளித்தலில் தேசத்தின் மிகவும் தனிச்சிறப்பு வாய்ந்த மனிதர்களில் அவர் ஒருவர்.

41.இப்பொழுது தான் நான் ஃபுளோரிடாவிலுள்ள பென்சகோலா-விலிருந்து திரும்பினேன். அங்கே நான் இதுவரை கொண்டிருந்ததிலேயே மிகப் பெரிய பீட அழைப்பை நான் கொண்டிருந்தேன்: ஒரே பீட அழைப்பில் இரண்டாயிரம் பேர்கள் ஒரே சமயத்தில் தங்களுடைய இருதயத்தைக் கிறிஸ்துவுக்கு கொடுத்தார்கள்.  நான் வீட்டிற்கு வந்து, மேலும் நான் அந்த காலையில் சிறிய சபைக்குள் பிரவேசித்தேன். அது முழுவதும் நிரம்பி பல நூற்றுக் கணக்கானனோர் சபையை சுற்றிலும் இருந்தனர். யாரோ ஒருவர் என்னிடம், “ஒரு இளம்பெண் ஒரு மனநோயாளி சபையின் பின்னால் உள்ள நிலக்கரி கொட்டகையில் படுத்திருக்கிறாள்என்று சொன்னார்
                 “திருமதி. ரெடிக்கர்என்று சொன்னார்.
 நான் திருமதி. ரெடிக்கரா? அவர்கள் பி.இ.ரெடிக்கருக்கு என்ன உறவு?” என்றேன்.
அது அவருடைய மகள்என்றார்.  

42.பி.இ.ரெடிக்கர் மகிமையில் இளைப்பாறிக் கொண்டிருக்கும் தேவனுடைய ஒரு போர் வீரர், அவருடைய மகள் ஒரு மனநோயாளி. அவருடைய மற்றொரு மகளும் அதே நிலைமையில் மரித்தாள். மனநோயாளியாக மனநோய் மருத்துவமனையில் சுமார் இரண்டு வருடங்களாக இருந்திருக்கிறாள்.

43.அவளுடைய தாய் அவளை பிடித்து வைக்கும்படி முயற்சித்துக் கொண்டிருந்தாள், ஒரு அழகான வாலிப ஸ்திரீ, அவளுடைய தலைமயிர் தொங்கிக் கொண்டிருந்தது, அங்கே பின்னால் உட்கார்ந்து கொண்டு அவளை அப்படியே பிடித்தாள், அவளுடைய கண்கள் முறைத்துக் கொண்டிருந்தவளாய் அவள் அங்கே இருந்தாள்.    அவள் எங்கே இருந்தாளோ அவ்விடத்திற்கு நான் நடந்தேன்;@ அவள் பின்னால் நகரத்துவங்கினாள், அவ்விதமாக அவள் தன் வாயினால் முணுமுணுத்துக் கொண்டு பென்னி” (Pnலெ) அல்லது மற்ற ஏதோவொன்றை சொல்லுவது போல் சொல்லிக் கொண்டு அவ்விதமாக பின்னாக நகர்ந்தாள்.
                எனவே திருமதி. ரெடிக்கர் மேலே நோக்கினாள், மேலும் நான் , என்னே, அது சகோதரர் ரெடிக்கரின் மகளா?” என்றேன்.
ஆம்என்றாள்.

44.நான் அன்புள்ள கர்த்தராகிய இயேசுவே, வாலிப பெண் மீது இரக்கமாயிரும்என்றேன். மேலும் சத்துருவின் வல்லமை இந்த பெண்ணை விட்டு விலகும்படி கேட்டேன். ஒரு நிமிடத்தில் அவள் தன் சுயநினைவுக்கு வந்தாள். 

45.          மேலும் ஆகஸ்ட் மாதத்தில் அவள் திருமணம் செய்து கொள்ள  போகிறாள், என்கிற ஒரு கடிதம் இன்று கிடைக்கப் பெற்றேன். எவ்வளவு மகிமையானது. மனநல காப்பகத்திலிருந்து வெளியே வந்தவளுக்கு@ மேலும் அவருடைய வழிநடத்துதலை கண்டு கொள்வது எவ்வளவு மகிமையானது.

46.ஃபோர்ட் வேய்னில் நான் எந்த ஓட்டலில் தங்கியிருந்தேன் என்பதை அவர்கள் கண்டுபிடித்தார்கள். அது இந்தியானா ஓட்டல்.  அவர்களுடைய முகப்பு வாசலில் நாங்கள் வெளியே செல்வதற்கான வழியை உண்டாக்க  அங்குள்ள உதவிக்கார பையன்களில் ஒருவனை கூலிக்கு அமர்த்தத்தக்கதான அளவுக்கு அங்கே ஜனக்கூட்டம் கூடியிருந்தது. சாம்பல் குவியலின் மேல் ஏதாவது சாப்பிட கிடைக்குமாவென்று அநேக ஜனங்கள் வழி நெடுக திரளாய் கூடியிருந்தனர்.

47.திடீரென ஒருநாள் நாங்கள் தெருவில் சென்றுகொண்டிருந்தோம், என் மனைவி குழந்தையுடன் என்னுடன் இருந்தாள். நான் என்னுடைய கோட்டின் கழுத்துப்பட்டையை உயர்த்திக் கொண்டேன். அது... என் சிறு மகளை தூக்கிக் கொண்டு தெருவில் சென்றோம்.  நான் நம்புகிறேன், டோடல் விடுதி அல்லது ஹோபில் விடுதி அல்லது ஏதோவொன்று என்று அழைக்கப்படும் இடத்திற்குச் நாங்கள் சென்றோம். அங்கே நாங்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். அவர்களுடைய முகப்பு வாசலில் நாங்கள் வெளியே செல்வதற்கான வழியை உண்டாக்க, அங்குள்ள உதவிக்கார பையன்களில் ஒருவனை கூலிக்கு அமர்த்த தக்கதான அளவுக்கு அங்கே ஜனக் கூட்டம் கூடியிருந்தது. அங்கு தான் அந்த காலையில் அங்கே ஒரு அறையில் தன் வயிற்றுக் கோளாரிலிருந்து சுகமடைவதற்காக கூட்டங்களில் கலந்து கொண்டிருந்த, கனடா தேசத்தை சேர்ந்த திருவாளர் ஏடன் அவர்கள் சந்தித்தார். மேலும் சில நாட்களுக்குப் பிறகு தேவன் அவரை கூடாரத்தில் சுகமாக்கினார்.  நான் அந்த காலையில் எங்கே சாப்பிட்டுக் கொண்டிருந்தேனோ அங்கே அவர் வரவில்லை. வெறுமனே அவர் என்னுடைய காலை உணவிற்காக பணம் செலுத்தினார். 

48. அடுத்த நாள் காலை தெருவில் நடந்து போய் கொண்டிருந்தோம், ஏதோவொன்று, “உன்னுடைய இடதுபக்கம் திரும்புஎன்றது.
 
49. திருமதி. மார்கன்,  இருபத்தொரு வருட பட்டதாரி நர்ஸ், அதிர்வுகளினால் உணரப்பட்ட என்னுடைய முதல் புற்றுநோய் பிணியாளி, முப்பத்தேழு பவுண்டு எடையுடன் அப்படியே எலும்பும் தோலுமாய் கூட்டத்துக்கு கொண்டு வரப்பட்டாள். இப்பொழுது அவள் பரிபூரண சுகத்துடன் நூற்று ஐப்பத்தைந்து பவுண்டு எடையுள்ளவளாய் இருக்கிறாள். மேலும் தேசத்திலேயே சிறந்த மருத்துவர்கள் அவள் சிறிது நாட்கள் தான் உயிர் வாழ்வாள் என்று அவளிடம் சொன்னார்கள். அது அவளுடைய எல்லாவற்றினூடாகவும் சென்றது. அவர்கள் அவளுடைய சரீரத்தை அப்படியே திறந்து  திரும்ப தையலிட்டனர். புற்று நோயானது அதன் உச்சக்கட்ட ஆக்ரோஷத்தில் உயிர் கொல்லியாக அவளினூடாக பரவி இருந்தது. எதுவுமே செய்ய முடியவில்லை. யார் ஒருவரும் அறுவை சிகிச்சை செய்வதற்கு கத்தியை கூட அவள் மீது வைக்க முடியவில்லை. இப்போது அவள் பரிபூரண சுகமுடையவளாய் நூற்று ஐப்பத்தேழு பவுண்டுகள் எடையுள்ளவளாய் இருக்கிறாள்.

50. சில நேரங்களில் பிணியாளிகளின் காரியத்தில் எனக்கு உதவி செய்யும் விதமாக எங்களுடன்  வந்து கொண்டிருந்தாள். ஏனெனில் அவள் ஒரு மிகவும் புத்திகூர்மையான ஸ்திரீ.
51. நாங்கள் போய்க் கொண்டிருந்தோம், மேலும் அது ஏதோவொன்று உன் இடது புறம் திரும்புஎன்றது. நீங்கள் என் சத்தத்தை கேட்பது போல அப்படியே நான் அதைக் கேட்டேன். நான் இடதுபுறம் திரும்பினேன்.
                மார்ஜி  என்னுடைய மனைவியிடம், “என்ன விஷயம்?” என்றாள்.
                “இப்பொழுது, அவர் அப்படியே போகட்டும்என்றாள்.

52. நான் சென்றேன். நாங்கள் நடந்து சென்றோம். கீழே இடதுபுறத்தில் மில்லர்ஸ் சிற்றுண்டி விடுதி  என்றழைக்கப்படும் ஒரு இடத்திற்கு முன்பாக நான் நின்றேன். ஏனென்று நான் வியந்தேன். ஏதோ ஒன்று, “இங்கே உள்ளே போஎன்றது. நான் சிற்றுண்டி விடுதிக்குள் சென்று சிறிது காலை சிற்றுண்டியையும், உலர் பழங்கள் மற்றும் அவ்விதமானவைகளை பெற்று உட்கார்ந்தேன். 

53. என் மனைவி நீங்கள் நிச்சயமாக கண்ணியில் சிக்கும்படி இப்படிப்பட்ட ஒரு பெரிய இடத்தினுள் இருக்கிறீர்கள்என்றாள். ஜனங்கள் சுற்றிலும் கூடியிருந்தனர். 

54. நான் சாப்பிடத் தொடங்கினேன். நான் ஆசீர்வாதத்தைக் கேட்டவாறே, “கர்த்தருக்கு ஸ்தோத்திரம்என்று யாரோ ஒருவர் சொல்லுவதை நான் கேட்டேன். நான் சுற்றிப் பார்த்தேன். ஒரு வயதான தாய் தன்னுடைய கண்களின் கண்ணீரைத் துடைத்தவாறே  எழும்பிக் கொண்டிருந்தாள்.
55. மார்ஜி நீங்கள் முழு கூட்டத்துக்குமாக இல்லையென்றால்; நீங்கள் போய் விடுவது நல்லது”… என்றாள்.
                நான் ஒரு நிமிடம் பொறு, இது பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதல்என்றேன். 

56. அவள் அங்கே வந்து, “சகோதரன் பிரான்ஹாம்என்றாள். நான் கூட்டத்துக்குப் பின் கூட்டமாகப் பின்தொடர்ந்து என்னுடைய சகோதரனை வரிசையில் கொண்டு வர முயற்சித்துக் கொண்டிருந்தேன். நான் அதை செய்ய முடியவில்லைஎன்றாள். 'அவனுடைய இருதயமானது மிகவும் மோசமாக உள்ளது. இப்பொழுது அது வெளியிலிருந்து அழுத்தும் கருவியின் மூலம் இயக்கப்படுகிறது" என்றாள். வருவதற்கு சில நாட்களுக்கு முன்பதாக நாங்கள் பரிசோதித்தோம், அவன் சிறிது காலம் தான் ஜீவனோருடிப்பான் என்று மருத்துவர் சொன்னார். டெக்ஸாஸிலிருந்து இங்கு  வர ஆகும் செலவிற்காக நாங்கள் எங்களுடைய  பசுவை விற்றோம்என்றாள். நான் அநேக கூட்டங்களில் இருந்திருக்கிறேன். எங்களுக்கு உண்டாயிருந்த எல்லாவற்றையும் நாங்கள் விற்றோம்என்றாள். அதை பெற்றுக் கொள்ள முடியாததையே நான் கண்டேன், அங்கே அநேகர் இருக்கின்றனர். அநேக சமயங்களில் நான் ஒரு ஜெப அட்டையை கொண்டிருந்தேன், ஆனால் அந்த எண்கள் ஒருபோதும் அழைக்கப்படவே இல்லைஎன்றாள். அவள், “ஆனால் நான் சென்ற இரவு, முழு இரவும் உபவாசித்து ஜெபித்துக் கொண்டிருந்தேன்என்றாள். மேலும் அவள் 'இந்த காலையில் ஏறக்குறைய பகல் வெளிச்சத்தில் நான் விழித்தெழுந்தேன், மேலும் நான் ஒரு சொப்பனம் கண்டேன். நான் இங்கே இந்த சிற்றுண்டி விடுதிக்கு வந்து ஒன்பது மணிக்கு காத்திருக்க வேண்டும் என்று நான் சொப்பனம் கண்டேன்என்றாள்.
 நான் என்னுடைய கைக்கடிகாரத்தைப் பார்த்தேன். அது அப்படியே சரியாக ஒன்பது. அவனை இங்கே கொண்டு வாருங்கள்என்றேன்.

57. என்ன சம்பவித்ததென்று நீங்கள் அறிவீர்களா?, உங்களுக்கு தெரியுமா? கர்த்தர் அற்புத ஆச்சரியமாக அவனை சுகமாக்கினார். ஆவியானவரின் வழி நடத்துதல். அவர் இரு முனைகளிலும் கிரியை செய்கிறார்.

58. பிறகு வாசலுக்கு வெளியே சென்று, அப்படியே கடந்து போனோம். சுமார் இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு வாசலுக்கு வெளியே சென்றோம். சாப்பிடவில்லை. நான் அப்படியே கதவுக்கு வெளியே போன போது, அங்கே நின்று கொண்டிருந்த ஒரு வாலிப ஸ்திரீ தெருவில் விழுந்து  கூச்சலிட தொடங்கினாள் கறுப்பு நிறத்தில் உடுத்தியிருந்தாள். அவள் சிகாகோ ஹெயிட்ஸ்-ல் வசித்தாள்: உச்சக்கட்ட ஆக்ரோஷத்தில் தொற்றி பரவுகிற புற்றுநோய். சகோதரன் பிரான்ஹாம், நான் முழுவதுமாக ஜெபித்தேன் நான் இங்கே வருவதற்காக வாரக்கணக்காக ஜெபித்துக் கொண்டிருந்தேன்என்றாள். நான் சிறிது நேரத்துக்கு முன்புதான் பதிலைப் பெற்றேன்என்றாள்.

59.அவள் இங்கே சிறப்பு மருத்துவ குழு உள்ள ஆஸ்பத்திரியில் இருந்து கொண்டிருந்தாள், மேலும் அவளுக்காக செய்யக்கூடியது எதுவுமில்லை, அவளுடைய கணவன் அங்கே இருக்கிற பெரிய வியாபாரிகளில் ஒரு மகத்தான வியாபாரி. மேலும் அவள், “இந்த அதிகாலையில்என்றாள். ஏதோவொன்று  9.10 மணிக்கு மில்லர்ஸ் சிற்றுண்டி விடுதிக்கு வந்து இங்கே நிற்கும்படி என்னிடம் சொன்னதுஎன்றாள். அங்கே அதுதான் காரியம். நான் ஒரு சில வாரங்களுக்கு முன்னால் இங்கே லிட்டில் ராக்கில் அவளை சந்தித்தேன், அவள் பரிபூரண சுகத்துடனும் ஆரோக்கியத்துடனும் இருந்து அப்படியே தேவனை சத்தமிட்டு புகழ்ந்து கொண்டிருந்தாள்.
60. தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தோம், பரிசுத்த ஆவியானவர், “இங்கே நில்என்றார். 

61.நான் மனைவியிடம் கூறினேன், “நீங்கள் எல்லாரும் செல்லுங்கள்;, அவர்கள் உங்களை ஓட்டலுக்கு கொண்டு செல்வார்கள்என்றேன். 

62. எல்லா நேரங்களிலும் குழந்தையை அறைக்குள்ளாகவே வைத்துக் கொண்டிருந்த படியால் அவள், “நல்லது, நான் சில புத்தகங்கள் - வண்ணம் தீட்டும் புத்தகங்களை வாங்குவதற்காக நான் மருந்துக்கடையை கடந்து அங்கே செல்வேன்என்றாள்.

63. நான் நின்றேன், நான் திரும்பி மேலே சென்று சில மீன் பிடிக்கும் சாதனங்களைப் பார்த்துக்கொன்டே, நான் அப்படியே சிறிது நேரம் காத்திருந்தேன்.  பிதாவே, நீர் என்னில் என்ன செய்ய வேண்டும் என்று இருக்கிறீர்?” என்றேன்.

64. மேலும் நான் சிறிது நேரம் காத்திருந்தேன். மூலைக்கு போஎன்று அந்த சத்தம் சொல்லக் கேட்டேன். நான் மூலைக்கு சென்று, அந்த மூலையில் நின்று கொண்டிருந்தேன், “தெருவை கடந்து செல்என்றது. நான் தெருவின் குறுக்காக சென்று, அங்கே நின்று கொண்டிருந்தேன். ஃபோர்ட் வேய்னிலிருந்து வருகிற ஜனங்களாகிய நீங்கள் போக்குவரத்தை அவர்கள் எவ்வாறு ஒழுங்குபடுத்துவார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். மேலும் அதுஒரு சனிக்கிழமை காலை. 

65. நான் சிறிது நேரம் அங்கே நின்றேன். சிறிது நேரத்திற்கு பிறகு ஒரு ஸ்திரீ தெருவைக் கடப்பதை நான் கண்டேன், அநேக தடவைகள் விசில் ஊதப்பட்டது. ஒரு ஸ்திரீ தன்னுடைய கையில் ஒரு பாக்கெட் புத்தகத்தை பிடித்தவளாய்;, தெருவைக் கடந்தாள். அவள் ஒரு கட்டம் போட்ட சூட்டையும் ஒரு கட்டம் போட்ட வட்டவடிவ தொப்பியையும் அணிந்திருந்தாள். அவள் நடந்தாள் போய்க் கொண்டிருந்தாள்.
                பரிசுத்த ஆவியானவர், “அவளருகில் போஎன்றார். நான் சென்று அங்கே நின்றேன். (அநேகமாக நான் அறிந்துள்ளபடி அந்த ஸ்திரீ இன்றிரவு இந்த கூட்டத்தில் இருக்ககூடும்) நான் சரியாக அங்கே மூலையில் நின்றேன். மேலும் அவள் வலதுபுறத்தில் எனதருகில், கடந்து போனாள். நான், “அது விசித்திரமாயுள்ளது@ அவர் ஒருபோதும் எதையும் தவறாக என்னிடத்தில் சொன்னதேயில்லைஎன்று நினைத்தேன்.

66. அவள் ஏறக்குறைய அந்த கம்பம் வரையுள்ள தூரம் நடந்தாள். அவள் கீழே பார்த்தாள், பக்கவழியாக நோக்கினாள். மேலும் அவள் சுற்றிலும் திரும்பி பின்னால் பார்த்தாள்@ அவள், “, சகோதரன் பிரான்ஹாமேஎன்றாள். அவள் பின்னால் வந்து  அழத்தொடங்கினாள். மேலும் அவள், “நான் கனடாவை சேர்ந்தவள்என்றாள். அவள், “நான் கனடாவிலிருந்தே பின்தொடர்ந்து வருகிறேன்என்றாள். நான் இங்கே கடந்து வருவதற்கு ஓரளவு பணத்தை மட்டுமே அனுமதித்தார்கள்என்றாள், “நான் கடந்த இரவு ஒரு ஓட்டலின் வராண்டாவில் உட்கார்ந்தவாறே தூங்கினேன். மேலும் இந்த காலையில் ஒரு கப் காப்பிக்காக ஒரு ஐந்து சென்ட்களை நான் கொண்டிருந்தேன்என்றாள். இங்கிருக்கிற இலவசமாய் தங்கும்  சத்திரம் நோக்கி போய்க் கொண்டிருந்தேன்என்றாள். நான் - சரியாக இரண்டு சதுக்கங்களை (கட்டிடங்களை)  தாண்டுவதற்குள், பரிசுத்த ஆவியானவர் என்னிடம், ‘உன்னுடைய வலது பக்கத்துக்குத் திரும்புஎன்றார். நல்லது, நான் வலதுபுறம் சென்றேன், - என்றாள். மேலும் அவர், “உன்னுடைய இடது பக்கத்துக்குத் திரும்புஎன்றார். ஆனால் நான் அவரால் வழி நடத்தப்பட்டு கொண்டிருந்தேன், “திரும்பி சுற்றிலும் பார்என்றார். சகோதரன் பிரான்ஹாம், என்னுடைய கரம் முடமாய் இருக்கிறதுஎன்றாள்.

67. நான் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில், அந்த கரத்தை என்னிடம் கொடுஎன்றேன். மேலும் இங்கே அந்த கரம் நேரானது.

68.   ஒரு பெரிய ஐரிஸ் காவலர்  விசிலை ஊதி, “நீங்கள் யாரென்று எனக்கு தெரியும், சகோதரன் பிரான்ஹாம்என்றார்.

69. என்னே, சிறிது நேரத்துக்கு தெருவில் ஒரு ஜெப வரிசையை  நாங்கள் நடத்தினோம். எல்லா இடத்திலும் அது அப்படியே இருந்தது. அது என்ன? தேவ ஆவியால் வழிநடத்தப்படுதல். அது தான்காரியம் நண்பர்களே.

70. சமீபத்தில் டல்லாசுக்கு போகும் வழியில் (நான் மிகவும் துரிதப்படுகிறேன்), டல்லாசுக்குப் போய்க் கொண்டிருந்தபோது விமானம் தரையிறங்கியது. நான் நினைத்தேன், ஓ என்னே. முழு இரவும் நான் தங்கினேன், அடுத்த நாள் காலையில் நான் அஞ்சல் பெட்டியில் என்னுடைய கடிதங்களைப் போடுவதற்காக போய்க் கொண்டிருந்தேன். அவர்கள் தாங்கள் வந்து எங்களைக் அழைத்து செல்வதாக சொல்லி இருந்தனர்.
  நான் தெருவில் சென்று கொண்டிருந்தேன், பெந்தேகொஸ்தே கூட்டத்தினர் பாடும் அவர்களில் நானும் ஒருவன் என்று சொல்ல முடிவதால் சந்தோஷமேஎன்னும் அந்த சிறிய பழைய கிறிஸ்தவ பாடலை பாட முயற்சித்துக் கொண்டிருந்தேன். நீங்கள் அதை எப்போதாவது கேட்டு இருக்கிறீர்களா? அது ஒரு
 மக்கள் எங்கும் இருக்கின்றனர்,
 இதயங்கள் எல்லாம் கொழுந்து விட்டு எரிகின்றன,
 அக்கினி மேலே விழ
 பரிசுத்த ஆவி நம்மையெல்லாம் ஒரே விதமாய் உருவாக்குகிறது,
 (அல்லது அவ்விதமாக ஏதோவொன்று)
நான் தெருவில் சென்றவாறே அதை பாட முயற்சித்துக் கொண்டிருந்தேன். என் கரத்தில் என்னுடைய கடிதங்களை கொண்டவனாய் தெருவில் நடந்து போய்க் கொண்டிருந்தேன்.

71.  நான் தெருவை கடக்க ஆரம்பித்தேன். பரிசுத்த ஆவியானவர் நில்!. நீ சரியாக ஒரு வங்கியின் முன்பாக இருக்கிறாய்என்றார். - மெம்பிஸ், டென்னஸி.
72.  “ஓ என்னே! இது என்ன?” என்று நினைத்தேன். நான் ஒரு மூலைக்கு நடந்து சென்று, நான் பிதாவே நீர் என்னில் என்ன செய்ய வேண்டுமென்று இருக்கிறீர்?” என்றேன். சிறிது நேரம் அமைதியாக நான் நின்றேன். ஏனென்றால் அதை குறித்து நான் சிந்திக்காமல் இருந்தேன். நான் உண்மையான விசித்திரமான உணர்ச்சி என் மேல் அசைவதை நான் உணர்ந்தேன்.
பின்னால் திரும்பிபோஎன்றார்.

73.  மேலும் நான் சரியாக திரும்பி சென்று மறுபடியும் ஓட்டலை கடந்து போனேன். அப்படியே, தெருவில் போய்க் கொண்டிருந்தேன். , நானும் அவர்களில் ஒருவன் என்று சொல்ல முடிவதற்காய் நான்  மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்என்ற பாடலை எனக்குள்ளே ரீங்காரம் செய்து கொண்டு போய்க் கொண்டிருந்தேன்நான் மெம்பிஸின் மற்றொரு பக்கத்தில் இருக்கிற கருப்பின மாவட்டம் போகும் வழியாக கடந்து போனேன். நான் இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறேன்என்று நான் நினைத்தேன். அப்படியே ஆவியானவரால் வழி நடத்தப்பட்டுக் கொண்டிருந்தேன். மேலும் நான் நோக்கினேன். இந்தப் பாதையை கடந்து செல்என்றார். 

74. நான் தெருவை கடந்து மறுபக்கத்துக்குச் சென்றேன். நான் அங்கே போய்க் கொண்டே இருந்தேன். என்னுடைய வலது புறம் திரும்பி இந்த வழியாக அந்த தெருவில் போனேன். அங்கே எல்லாம் சிறு வெள்ளை அடிக்கப்பட்ட இடங்களாய் இருந்தது. சிறிய கருப்பின மக்கள் வசிக்கும் சிறிய கருப்பின பகுதியாய் இருந்தது. மேலும் நான் கடந்து சென்றேன். நான் ஒரு வயதான தன் இனத்தை பிரதிபலிக்கும் விதத்தில் இருந்த ஆன்ட்டி ஜெமிமாவை ஒரு சட்டையுடன், தன்னுடைய தலையை சுற்றிலும் ஆடவர் சட்டையை கட்டினவளாய் வாசலின் மீது சாய்ந்து நின்றுக்கொண்டிருந்ததைக் கண்டேன். சூரியன் மேலே எழும்பி வந்து கொண்டிருந்தான், வாசலைச் சுற்றிலும் ரோஜாக்கள். ரோஜாக்களினின்று வெளிவரும் நறுமணத்தை சூரியன் முத்தமிட்டு எடுக்க மேலும் அது காற்றில் முழுவதும் நிரம்பி இருக்க பறவைகள் பாடி கொண்டிருந்தது: எவ்வளவு மகிமை! மேலும் நான் ஆவியானவரால் வழிநடத்தப்பட்டவனாக பாடிக்கொண்டே என் கரத்தை இவ்விதமாக வைத்துக் கொண்டு போய்க்கொண்டிருந்தேன். நான் கடந்து போகிற போது அவளை நான் நோக்கி பார்த்தேன். அவள் வெளி வாசல் கதவின் மீது சாய்ந்து நின்று கொண்டிருந்தாள்.

75.  அவள், “காலை வணக்கம், பார்சன்என்றாள். கீழே தெற்கில், அது பார்சன், நீங்கள் அறிவீர்கள்… (பாஸ்டர்) என்பதற்கு  பதிலாக

76. நான், “காலை வணக்கம், ஆண்ட்டிஎன்றேன். அவள் தன்னுடைய கண்களிலிருந்து வந்த கண்ணீர்களை துடைத்துக்கொண்டு சிரிக்க தொடங்கினாள்.

77. “நான் ஒரு பார்சன் என்று நீங்கள் எப்படி அறிவீர்கள்? உங்களுக்கு என்னைத் தெரியுமா?” என்றேன்.
                அவள், “இல்லை, ஐயாஎன்றாள்.
 “நான் பார்சன் என்று நீங்கள் எப்படி அறிவீர்கள்?" என்றேன்.

78. “பார்சன், வேதாகமத்திலுள்ள ஒரு ஸ்திரீயாகிய சூனேமிய ஸ்திரீயைப் பற்றி எப்பொழுதாவது நீங்கள் கேட்டிருக்கிறீர்களா?” என்றாள்.
                                நான் ஆம்என்றேன்.
                “கர்த்தர் அவளுக்கு ஒரு பிள்ளையைக் கொடுத்தாரா?” என்றாள்.
                                நான் ஆம்என்றேன். 

79. “நானும் கூட மலடியாயிருந்த ஸ்திரீதான்;. கர்த்தர் எனக்கு ஒரு மகனைக் கொடுத்தார்என்றாள். மேலும், “கர்த்தருக்காக அவனை நான் வளர்ப்பேன் என்று நான் வாக்களித்தேன்”;. “எனக்குள்ள சிறந்ததை செய்து இருக்கிறேன்என்றாள். ஆனால், “பார்சன், தவறான பாதையை அவன் எடுத்துக்கொண்டான்என்றாள். அவன் ஒரு அருமையான வாலிபன், மேலும், அவன் பின்வாங்கிப் போனான்என்றாள். மேலும் அவன் தவறான நண்பர்கள் கூட்டத்தினருடன் போனான்என்றாள். இப்பொழுது, இங்கே அவன் உள்ளே படுத்துக்கிடக்கிறான்என்றாள். மருத்துவர்கள் தங்களால் கூடுமான எல்லா மருந்துகளையும் அவனுக்கு செலுத்தி விட்டனர். இரண்டு நாட்களாக அவன் சுயநினைவற்ற நிலையில் இருந்து கொண்டிருக்கிறான். அவன் மரிக்கப் போகிறான் என்று மருத்துவர் சொல்லுகிறார் அது பால்வினை நோயாக உள்ளதுஎன்றாள். கொடுக்க முடிந்த எல்லாவற்றையும் அவனுக்குக் கொடுத்து விட்டோம். ஆனால் அவர்கள் அதைக் கண்டுபிடிப்பதற்கு முன்பதாகவே, அது மிகவும் தாமதமாகி விட்டது, அவன் மரிக்கப் போகிறான்" என்றாள்;. 

80. மேலும், “பார்சன், ஒரு பின்வாங்கிப் போனவனாக அவன் அங்கே மரித்துக்கொண்டு கிடப்பதை நான் அறிவேன்என்றாள், “நான் அதை தாங்கிகொள்ள முடியவில்லைஎன்றாள். நான் ஜெபித்து, ஜெபித்து, மேலும்  நான், ~கர்த்தாவே, நீர் எனக்குப் இந்த பையனைக் கொடுத்தீர், ஆனால் எலியா எங்கே இருக்கிறார்என்று கேட்டேன்? என்றாள், எனவே, “நான் ஜெபித்தேன், மேலும் நான் ஜெபித்தேன்என்றாள். இந்த காலை, பொழுது விடிவதற்கு சற்று முன்னால்,”  “இங்கே வெளியே வந்து, இந்த  வெளி வாசலண்டை கதவில் நிற்கும்படி கர்த்தர் என்னிடம் சொன்னார்என்றாள். பனியினால் அவளுடைய முதுகு நனைந்திருந்தது. 

81. “நான் அப்படியே இங்கே நின்றேன், ஏனெனில்,” 'ஆவியானவரின் வழி நடத்துதலில் நான் விசுவாசம் கொண்டிருக்கிறேன்என்றேன். ஓ, என்னே, தேவனும் விசுவாசியும் விசுவாசத்தினுடைய பொதுவான ஸ்தலமாகிய அங்கே தான் ஒருவரை ஒருவர் சந்திக்கிறார்கள்.
                “இங்கே நிற்கும்படி என்னிடம் அவர் சொன்னார்என்றாள். சூரியன் மேலே வந்தது”. “நான் அப்படியே காத்துக்கொண்டே இருந்தேன். நீங்கள் தெருவினூடாக வந்தபோது,” “நீர் ஒரு பார்சன் (பாஸ்டர்) என்று நான் அறிந்தேன்;,” என்றாள்.

82.  நான், “என்னுடைய பெயர் பிரான்ஹாம்என்றேன். அவளுடைய பெயர் என்னவென்று அவள் என்னிடம் சொன்னாள். நான், “என் கூட்டங்களை குறித்து நீங்கள் எப்பொழுதாவது கேட்டிருக்கிறீர்களா?” என்றேன்.
                                “இல்லை, ஐயா, பார்சன்என்றாள்.
83. நான் அதைப்பற்றி அவளுக்கு சொன்னேன், அவளுடைய கன்னங்களில் கண்ணீர் வழிய தொடங்கியது. கர்த்தர் என்னை கைவிடமாட்டார் என்பதை நான் அறிவேன்.என்றாள்.

84. நாங்கள் அறைக்குள் சென்றோம். அங்கே ஒரு அருமையான பெரிய பையன் படுத்திருந்தான், சுமார் நூற்று அறுபது அல்லது எழுபது பவுண்டுகள் எடையுள்ள ஒரு ஆரோக்கியமான தோற்றத்துடன், அவனுடைய கரங்களில் போர்வைகளை ஒன்று திரட்டிக்கொண்டு, “ம்ம்ம், ம்ம்ம்என்று இதைப் போல் முணங்கிக் கொண்டிருந்தான்.
   மேலும்      அவள்  அங்கே நடந்து சென்று கன்னத்தில் அவனைத் தட்டிக் கொடுத்து, “அம்மாவின் செல்லமேஎன்றாள். ஒருவேளை அவன் அவ்வளவு பெரியவனாக இருந்த போதிலும்ஆனாலும் பாருங்கள் ஒரு தாயினுடைய அன்பை  நீங்கள் எப்பொழுதுமே அம்மாவின் செல்லமாக இருக்கிறீர்கள். நீங்கள் அறிவீர்கள், அது  தாயின் அன்பு. நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது காரியமல்ல, தாயின் அன்பு அது ஒருக்காலும் மறக்கப்படாது.
  எனவே அவள் அவனுடைய கன்னத்தின் மீது தட்டிக் கொடுத்தவளாய், “அம்மாவின் செல்லமேஎன்றாள்.

85. மேலும் நான் அவனுடைய பாதத்தை பிடித்து பார்த்தேன், அவனுடைய பாதம் சில்லென்று  இருந்தது, “, என்னே, அவன் மரித்துக் கொண்டிருக்கிறான்என்று நினைத்தேன். நான், “அம்மையாரே, அவன் மிகவும் பயங்கர மோசமான நிலையில் இருக்கிறான்என்றேன்.

 86. “ஆம், ஐயா, பார்சன். இனி ஒருபோதும் அவன் தன் சுயநினைவுக்கு வரமாட்டான் என்று மருத்துவர் சொல்லி விட்டார்என்றாள்.
                நான் அவனுடைய பாதத்தைப் பற்றினேன், நான், “நாம் ஜெபிக்கலாமா?” என்றேன்.
                                அவள், “சரி, பார்சன்என்றாள். 

 87. அவள் கீழே தரையில் முழங்கால் படியிட்டு அவள் ஜெபிக்கத் துவங்கினாள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் அந்த வயதான பரிசுத்தவாட்டி, ஜெபித்த ஜெபமானது அவள் அதிகமாக தேவனோடு பேசினவள் என்பதை நீங்கள் அறியும்படியாக இருந்தது. ஜெபத்தினூடாக அவள் போன போது, அவள், “அன்புள்ள கர்த்தாவே, உமக்கு நன்றிஎன்றாள்.

88.  அவன் இருந்த இடத்திற்கு நான் நடந்து சென்றேன். சிறிது நேரம் அவனையே நோக்கி பார்த்து, நான் என்னுடைய கரங்களை அவன் மீது வைத்தேன். நான், “அன்புள்ள தேவனே, நீர் என்னை ஏன் இங்கே வழிநடத்தினீர் என்பதை நான் அறியேன். இப்பொழுது என்னுடைய விமானம் புறப்பட தயாராக உள்ளதுஎன்றேன். ஆனால் நான், 'நீர் என்னை ஏன் இங்கே வழிநடத்தினீர் என்பதை நான் அறியேன், ஆனால் நான் அப்படியே வழிநடத்துதலின் மூலமாக வருகிறேன். மேலும் இப்பொழுது, உம்முடைய குமாரனாகிய இயேசுவின் நாமத்தில், இந்த மரித்துக் கொண்டிருக்கும் பையனின் மீது அவனுடைய ஜீவனுக்காகவும், அவனுடைய ஆத்துமா இரட்சிக்கப்படுவதற்காகவும் நான் என் கரங்களை வைக்கிறேன்" என்றேன்.
                                “அம்மா, , அம்மாஎன்றான்.
                அவள,; “அவன் பேசுகிறான், பார்சன்.என்றாள். இரண்டு நாட்களாக பேசவே இல்லை.

 89. “அம்மா, அது வெளிச்சமாகிக் கொண்டிருக்கிறதுஎன்றான். இங்கே உள்ளே வெளிச்சம் வந்து கொண்டிருக்கிறது, அம்மா, என்னுடைய படகு இப்பொழுது எங்கே போய்க் கொண்டிருக்கிறது என்பதை நான் காண முடிகிறதுஎன்றான். சில நிமிடங்களில் அவன் தரையின் மேலாக குதூகலத்தோடும், மகிழ்ச்சியோடும் இருந்தான்.

90. சுமார் ஒரு வாரம் கழித்து, மருத்துவர்கள் அவனுக்கு அந்த வியாதி இல்லையென்று அறிவித்ததாக அவனிடமிருந்து ஒரு கடிதம் கிடைக்கப் பெற்றேன். அவன் மெம்பிஸ், டென்னஸியில் இன்றிரவு ஆரோக்கியத்தோடும் பலத்தோடும் ஜீவித்துக் கொண்டிருக்கிறான், ஏனெனில் அவனுடைய அந்த வயதான நேசத் தாய் பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலைப் பின்பற்றினாள். எவர்கள்; தேவனுடைய குமாரரும் குமாரத்திகளுமாய் இருக்கிறார்களோ அவர்கள் தேவனுடைய ஆவியால் வழிநடத்தப்படுகிறார்கள். அது சரிதானே

91.  நம்முடைய தலைகளை நாம் வணங்குவோமாக. எங்களுடைய பரலோக பிதாவே, , நீர் எங்களுக்கு மிகவும் நல்லவராகவே இருந்து கொண்டிருக்கிறீர். நாங்கள் இயேசுவைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் போதும் அவருடைய ஆச்சரியமான கிரியைகளைக் குறித்து பேசும்போதும், கேட்கும்போதும், நேரம் மிக எளிதாக சென்றுவிடுகிறது. மேலும் இன்று அவர், “கொஞ்ச காலம், இந்த உலகம் என்னைக் காணாதுஎன்றார். உலகம் புரிந்து கொள்ளாது  அவர்கள் தங்களுடைய சொந்த வழியில், அவர்களுடைய சொந்த பாவமான இச்சையுடையவர்களாய் இருளில் நடக்கின்றனர். இப்பிரபஞ்சத்தின் தேவனால் அவர்கள் குருடாக்கப் பட்டுள்ளார்கள். ஆனால், “உலகத்தின் முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன்என்று நீர் சொல்லியிருப்பதற்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். இன்றிரவு எங்கெல்லாம் ஒரு உத்தமமான இருதயத்தை நீர் காண்கிறீரோ, அவர்களை உம்முடைய ஆவியினால் நீர் வழி நடத்துவீராக!

92. , தேவனே, இந்த சனிக்கிழமை இரவு, அநேக ஜனங்கள் கடைகளுக்குச் சென்று பொருட்களை வாங்கிக் கொண்டிருக்க, அனேகர் வெளியில் இருக்கிறார்கள், பட்டணத்திற்கு வெளியே முக்கிய சாலையில் அமைந்துள்ள சாலையோர உணவு விடுதி, நடத்தைகெட்ட இடங்கள், மது அருந்தும் அறைகளில்; வாலிப பையன்கள் தரையில் விழுந்து கிடக்க, வாலிப பெண்கள் தவறான பாதையில், கிறிஸ்து அற்ற கல்லறையை நோக்கி நடனமாடி சென்றுக் கொண்டிருக்க, வயதான தாய்மார்களின் ஜெபங்கள் சரியாக அவர்களுக்கு மேல் கடந்து போக, எஜமானரே, எப்படியாவது அந்த ஜனங்களை வழிநடத்தும். இன்றிரவு அவர்களிடம் பேசும், நாளை அவர்கள் ஒரு நல்ல பழைய பாணியிலான பீடத்தில் ஓர் இடத்தைக் கண்டு பிடிப்பார்களாக, உம்முடைய ஊழியக்காரர்களாவார்களாக. கர்த்தாவே நீர் இயேசுவை சீக்கிரமாய் அனுப்புவீர் என்று நாங்கள்  விசுவாசிக்கிறபடியால் இந்த கூட்டத்தின் பலனாக ஒரு பழைய மாதிரியான எழுப்புதல் வெடித்து அதன் முழு வேகத்தோட இந்த பட்டணங்கள் தேசங்கள் வழியாக அடித்து கடந்து போகட்டும். எங்களை ஒன்றாக கூட்டியருளும். 

93. பிதாவே, இன்றிரவு இப்பொழுது இங்கே உமது ஆவியை
உணரும் அநேகர், வியாதியுள்ளவர்களாயும், தேவையுள்ளவர்களாயும் இருக்கிறார்கள். நீர் இங்கே இருக்கிறீர் என்பதை நாங்கள் யாவரும் அறிந்திருக்கிறோம். நீர், “எங்கே இரண்டு அல்லது மூன்று பேர் கூடியிருக்கிறார்களோ, அவர்கள் மத்தியில் நான் இருப்பேன்என்று சொல்லியிருக்கிறீர். நாங்கள் ஆவிக்குரிய உணர்வினால் தத்ரூபமாக உம்மை உணருகிறோம். நீர் இங்கிருக்கிறீர் என்று நாங்கள் அறிவோம்.

94.   மேலும் இப்பொழுது, பிதாவே, ஒரு தெய்வீக வரத்தை குறித்து இந்த ஜனங்களுக்கு நான் சாட்சிகொடுத்து கொண்டிருக்கிறேன்;. கர்த்தாவே, நீர் பேசாவிட்டால் அவர்கள் என்னுடைய வார்த்தைகளை மாத்திரம் கொண்டிருப்பார்கள். ஆனால் நீர் பேசுவீர் என்றும், அதை நிரூபிப்பீர் என்றும், அதை குறித்து நீர் சாட்சியிடுவீர் என்றும் நான் அறிவேன். மேலும் ஆச்சரியமான தேவகுமாரனே எல்லா துதியும் மகிமையும் உமக்கே.

95.    மரணத்திற்கும், பிரிவினைக்கும், பாதாளத்திற்கும்;, பாத்திரமான பரிதாபமாய் இழக்கப்பட்ட பாவிகளான எங்களை, மீட்டுக்கொள்வதில் நீர் மிகவும் ஆச்சரியமானவர். ஆனால் எங்களை மீட்டுக்கொண்டீர். ஓ, நான் மீட்கப்பட்டவன்; என்பதை நான் நினைக்கும் போது எப்படியாக என் இருதயம் துள்ளுகிறது. மேலும் நீர் கல்லறையினின்று எழும்பினது எவ்வளவு நிச்சயமோ அவ்வளவு நிச்சயமாய் ஏதோவொரு நாளில் ஒருபோதும் வியாதியோ அல்லது வருத்தமோ இல்லாத ஒரு புதிய சரீரத்தில் நாங்கள் வருவோம்.

96. இப்பொழுது அன்புள்ள தேவனே, இன்றிரவு
இங்கு இருக்கிறவர்களை ஆசீர்வதியும். பரிசுத்த ஆவியானவர் தாமே அப்படியே சரியாக இந்த கூட்டத்தினரின் மேல் இப்பொழுது அசைவாடுவாராக! அவர்கள் ஒவ்வொருவருடனும் பேசி, “இவர் என்னுடைய நேச குமாரன், இவரில் நான் பிரியமாயிருக்கிறேன்என்று சொல்லும்.  தேவனுடைய குமாரன், நசரேயனாகிய இயேசு இன்றிரவு அவருடைய ஆவி எங்களில் மத்தியில் அசைவாட அவர்கள் இனிமையுடன் பரிசுத்த ஆவியின் ரூபத்தில் அதை ஏற்றுக் கொண்டு மேலும் இன்றிரவு இரட்சிக்கப்பட்டு சுகமடைவார்களாக. நாங்கள் அதை உம்முடைய குமாரனாகிய இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென்.

97.    ஆம், நான் ஏற்றுக் கொள்கிறேன்;. அது அப்படியேநான் ஒரு மிகவும் உணர்ச்சிவசப்படும் வகையான நபரல்ல, ஆனால் இன்றிரவு இங்கு சில காரணங்களுக்காக நான் உள்ளே வந்தபடியால் என்னுடைய இருதயமானது விசித்திரமாக அனலுள்ளதாய் இருக்கிறது. ஏனென்று  நான் அறியேன். இன்றிரவு முழு கூட்டத்தினரின் மீதும் தேவன் தம்முடைய ஆவியை ஊற்றுவாரென்று நான் நம்பிக்கையாருக்கிறேன். நாளை, பிரகாசமான தேவனுடைய வெளிச்சம் இந்த சிறு இடத்தை சுற்றிலும் இருக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன்.

98. , ஜனங்களே, உபவாசித்து ஜெபியுங்கள், ஆயத்தமாகுங்கள், இயேசு சீக்கிரமாக வருகிறார். நான் அதை விசுவாசிக்கிறேன். ஆயத்தமாகுங்கள். நாம் உலகம் முழுவதையும் ஆதாயபடுத்திக் கொண்டாலும் நம்முடைய ஆத்துமாவை நஷ்டப்படுத்தினால் உங்களுக்குக் கிடைக்கும் இலாபமென்ன? அது நமக்கு என்ன நன்மையை செய்யும்? எந்த நன்மையும் செய்யாது. நம்முடைய முழு இருதயத்தோடும் நாம் அவரை சேவிப்போமாக. 

99. கூட்டத்தினரை அவர்கள் வரிசைபடுத்திக் கொண்டிருக்கும் நேரத்தில்நாம் மீண்டும் அப்படியே சிறிது நேரம் ஜெபிப்போமாக. 

100.  பிதாவே, இப்பொழுது அருகில் வாரும். இயேசுவே எங்களுடன் தங்கியிரும், இன்றிரவு எங்களை ஆசீர்வதியும். இங்கே உம்மை மிகவும் ஆவலுடன் நோக்கி பார்க்கிறவர்கள் இருக்கிறார்கள். மேலும் அது இன்றிரவு எப்படியும் எங்கள் மீது எங்கள் அருகில் சுற்றிலும் சற்று கூடுதலான ஆசீர்வாதம் இருப்பது போல் தோன்றுகிறது, ஒரு வேளை நீர் எங்கள் மேல் ஆவியை ஊற்றும்படியாய் தீர்மானித்திருக்கக் கூடும். அப்படியே அது செய்யப்பட வேண்டுமென்று நாங்கள் ஜெபிக்கிறோம், பிதாவே. இப்பொழுதே யாவரையும் சுகப்படுத்தும்.

101.  என்னுடைய பிறப்பின் போது நீர் என்னிடம் அனுப்பினவரும் உம்முடைய கரத்தினால் வாழ்க்கையினூடாக என்னை வழி நடத்தினவரும் சந்தித்து பேசுகிறவருமான அவர் நான் பேசுகிற தரிசனங்களை காண்பித்தவருமான அந்த தேவனுடைய தூதனை, ஓ! இயேசுவே, உம்முடைய நாமத்தில் அவரை இப்பொழுது  அனுப்பும். இருதயத்தை அறிந்து பகுத்தறியும் வரத்தினால் அவரால் தான் பகுத்தறிய முடியும். நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள், அதற்கு அதிகமாகவும்என்றீர். எல்லா ஜனங்களின் இருதயத்தையும் நீர் அறிவீர். எல்லா வியாதிகளையும் நீர் அறிவீர். ஜெபவரிசைக்கு வருவதற்கு முன்னமே பிலிப்பு எங்கிருந்தான் என்று நீர் சொன்னீர். கட்டப்பட்ட குதிரைகளை எங்கே கண்டு பிடிக்கலாம் என்று சொன்னீர். கடைசி பந்தியை ஆயத்தப்படுத்தும்படியாக காலியான அறை எங்கே இருக்கிறது என்று அவர்களிடம் சொன்னீர். ஓ! அந்த ஸ்தீரியிடம் அவளுடைய பாவங்களை சொன்னீர்.

102. மேலும் அப்போது ஒருநாள் அவர்கள் உம்முடைய கண்களை ஒரு கந்தைத் துணியால் கட்டி, உம்முடைய முகத்திலிருந்த தாடியை இழுத்து உம்மீது துப்பி, “இப்பொழுது, உன்னை அடித்தது யார் என்று தீர்க்கதரிசனமாக சொல்என்றார்கள். கர்த்தாவே, நீர் ஒரு போதும் உம்முடைய வாயை திறக்கவேயில்லை. உம்முடைய மிக அருமையான ஜீவியத்திற்காகவும், நாங்கள் ஜீவிப்பதற்கு நீர் எங்களுக்கு கொடுத்திருக்கும் ஆவிக்காகவும் நாங்கள்  நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம்.

103. இப்பொழுது எங்களுக்கு உதவிசெய்யும். ஒவ்வொரு வியாதியும் இந்த வழியாக கடந்து போவதாக, மகத்தான தரிசனங்களும் அற்புதங்களும் இன்றிரவு செய்யப்படுவதாக. இதை அளியும் கர்த்தாவே. இந்தக் காரியங்கள் செய்யப்படுவதை ஜனங்கள் கண்டு, உம்முடைய குமாரனாகிய இயேசுவின் நாமத்தில் சரியாக அப்போதே அவர்கள் உம்மை ஏற்றுக்கொள்வார்களாக. ஆமென்.