திருமண வைபவம்
ஞாயிறு , காலை 8 மணி , 1-12-1963
லைஃப் கூடாரம் , லூஸியானா
1. இந்த ஸ்திரீயை இந்த புருஷனுக்கு மனைவியாய் கொடுப்பதை நான் யாரிடத்தில் கேட்க வேண்டும். (மணப்பெண்ணின் தகப்பனார் நாங்கள் தான் என்று சொல்லுகிறார்).
2. மிகவும் அன்பார்ந்தவர்களே, தேவனுடைய பார்வையில் ஒருங்கிணைந்தவர்களாய் நாம் இங்கே கூடியிருக்கிறோம். இந்த இணைப்பை எதிர்நோக்கும் படியாகவும், பரிசுத்த விவாகத்தில் இந்த புருஷனையும், இந்த ஸ்தரீயையும் பரிசுத்த விவாகத்தின் மூலம் இணைக்கும் படியாகவும், பரிசுத்தபவுலின் மூலமாக கட்டளையிடப்பட்ட பிரகாரம், எல்லா மனிதர் மத்தியிலும் இது கனமுள்ளதாய் இருக்கிறது. அது ஏனென்றால் தேவனுக்கு பயப்படும் பயத்தோடும், மதிப்பிற்குரியதாகவும், பகுத்தறிதலோடும், தன்னடக்கத்தோடும், எவ்வித பரிந்துரைத்தல் இல்லாமலும்; அல்லது எந்த எளிய முறையிலும் ஒருவரும் இதில் பிரவேசிக்கக்கூடாது.
3. இந்த பரிசுத்த நிலைக்குள், இணைவதற்காக இந்த இருவரும் வந்திருக்கிறார்கள். இங்கு இவர்கள் சட்ட திட்டங்களுக்கு விரோதமாக, பரிசுத்த விவாகத்தில் இணையக்கூடாதபடி நியாயமான காரணங்கள் இருக்குமானால், இப்பொழுது சொல்லப்படட்டும், இல்லாவிட்டால இனி ஒரு போதும் சொல்லாமல் இந்த விஷயத்தில் இனி மௌனமாய் இருக்க வேண்டும்.
4. உங்கள் இருவரில் யாராவது பரிசுத்த விவாகத்தின் சட்ட திட்டங்களுக்கு விரோதமான, இணையக்கூடாத முட்டு கட்டையான நியாயமான காரணங்கள் இருக்குமானால், இப்பொழுதே அறிக்கை செய்யும்படியும், தேவனுடைய வார்த்தைக்கு விரோதமாக இணையும் எந்த ஒரு தம்பதியினுடைய திருமணமும் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டதல்ல என்று நிச்சயிக்கப்பட்டிருக்கிறபடியாலும், எல்லா இருதயத்தின் இரகசியங்களும் நியாத்தீர்ப்பின் நாளிலே திறந்து காண்பிக்கப் படப்போகிறபடியினால், நீங்கள் இருவரும் இப்பொழுதே தெரிவிக்கும்படியாக கட்டளையிடுகிறேன், அது தேவைப்படுகிறது.
5. தெய்வ பயத்தோடே, மதிப்பிற்குரியதாகவும், பகுத்தறிதலோடும், தன்னடக்கத்தோடும், மத சட்ட திட்டங்களுக்கு உட்பட்டும், கடமை பொறுப்போடும், கவனமாக பார்த்து இதை ஏற்றுக்கொள்ள முன்வந்துள்ளதை முழுவதுமாக விசுவாசித்து திருமண உடன்படிக்கையை நான் முன்மொழிகிறேன். இதற்குசாட்சியாக இருக்கும்படி உங்கள் வலது கரங்களை இணைத்துக்கொள்ளுங்கள். (மணமகனும், மணமகளும் தங்கள் வலது கரங்களை இணைத்துக் கொள்ளுகிறார்கள்).
6. பரிசுத்த நிலையிலிருக்கும் திருமணத்தின் மூலமாக, திருமண சட்ட திட்டங்களுக்கு உட்பட்ட மனைவியாக இந்த ஸ்திரீயை ஏற்றுக்கொண்டு, அவளோடு வாழ்க்கை நடத்துவாயா? அவளை நேசிப்பதிலும், அவளை கனம் பண்ணுவதிலும், நம்பிக்கை வைப்பதிலும், ஆதரிப்பதிலும், சுகத்திலும், சுகவீனத்திலும், நிறைவிலும், ஏழ்மையிலும், நீங்கள் இருவரும் ஜீவிக்குமட்டாக மற்ற எல்லோரையும் விட்டுவிடுவாயா? (மணமகன் அப்படியே செய்வேன் என்று பதிலளிக்கிறார்).
7. பரிசுத்த நிலையிலிருக்கும் திருமணத்தின் மூலமாக, திருமண சட்ட திட்டங்களுக்கு உட்பட்ட கணவனாக இந்த புருஷனை ஏற்றுக் கொண்டு, அவரோடு வாழ்க்கை நடத்துவாயா? அவரை நேசிப்பதிலும், அவரை கனம் பண்ணுவதிலும், நம்பிக்கை வைப்பதிலும், ஆதரிப்பதிலும், சுகத்திலும், சுகவீனத்திலும், நிறைவிலும், ஏழ்மையிலும், நீங்கள் இருவரும் ஜீவிக்குமட்டாக அவரை மாத்திரம் விடாது பற்றிக்கொண்டு ஜீவிப்பாயா? (மணமகள் அப்படியே செய்வேன் என்று பதிலளிக்கிறார்).
8. எனக்கு ஒரு அடையாளம் தேவையாய் இருக்கிறது. (இரண்டு மோதிரங்கள் ஊழியக்காரரின் வேதாகமத்தின் மீது வைக்கப்படுகிறது). மறுபடியுமாக உங்கள் வலது கரங்களை பற்றிக்கொண்டு, உங்கள் உடன்படிக்கைக்காக சற்று முன் வருவீர்களா?
9. நாம் நம்முடைய தலைகளை வணங்குவோம். பரலோகபிதாவே. எங்கள் சுய நினைவோடு கூட நிகழ்த்திக் கொண்டிருக்கிறதான இந்த செயல்பாட்டின் மத்தியில், இந்த பூமியில் நீர் நடத்தின முதல் தம்பதியரின் திருமணத்தின் போது, நீர் திருமணம் செய்து வைத்த எங்கள் தகப்பனும், தாயுமாகிய ஆதாம்இ ஏவாளிடம், நீங்கள் உலகமெங்கும் போய் கனி தரவும், பெருகவும் கட்டளையிட்டீர் என்பதை நினைவு கூறுகிறோம். இந்த நாள் மட்டாக கர்த்தாவே, உம்முடைய வார்த்தையின் வல்லமையோடும், வாக்குதத்தத்தோடும், ஒருமித்து இருக்கும் படியாக வந்திருக்கிற இந்த வாலிப புருஷனும், இந்த வாலிப ஸ்திரீயும் தங்களுடைய வாழ்க்கை பயணத்திலே, ஒருவருக்கொருவர் வாழ்க்கை துணையாக தெரிந்து கொண்டிருக்கிறார்கள்.
10. சர்வ வல்லமையுள்ள தேவனே, இவர்கள் மீது உம்முடைய ஆசீர்வாதத்திற்காக ஜெபிக்கிறேன். ஒரு புருஷனும், ஸ்திரீயும், உலகத்தினுடைய பார்வையிலும், தேவனுடைய பார்வையிலும், உண்மை உள்ளவர்களாகவும், ஒழுக்க உடையவர்களாகவும் வாழமுடியுமென, கவலையற்ற வாழ்க்கை நிலையின் மத்தியில், ஒரு முன் மாதிரியாக இவர்களை ஏற்படுத்தும். அவர்களை கனி கொடுக்கிறவர்களாக்கும். கர்த்தாவே, அவர்கள் எப்பொழுதும் உம்மையே சேவிக்கட்டும். இவர்களுடைய வீட்டில், நீர் எப்பொழுதும் காணப்படாத விருந்தினராக இரும். நீர் ஈசாக்கையும், ரெபேக்காளையும் ஆசீர்வதித்து, அவர்கள் ஒன்றாக, சந்தோஷமுள்ளவர்களாக தங்கள் வாழ்க்கை பயணம் முழுவதும் ஜீவித்தது போல, இந்த வாலிப புருஷனையும், இந்த வாலிப ஸ்திரீயையும் கூட அவ்விதமாகவே ஆசீர்வதிக்கும்படியாக ஜெபிக்கிறேன். பிதாவே, நான் ஜெபிப்பதை கேட்டருளும் கர்த்தாவே.
11. சர்வ வல்லமையுள்ள தேவனால், தேவனுடைய ஊழியக்காரனாய் இருக்கும் படியாகஇ இந்த ஒழுக்கமுள்ள பொறுப்பில், ஒரு தூதன் மூலமாய் எனக்கு சாட்சியாக அறிவிக்கப்பட்டபடி, இந்த புருஷனையும், இந்த ஸ்திரீயையும் புருஷன், மனைவி என்று, எனக்கு கொடுக்கப்பட்ட அதிகாரத்தின்படி அறிவிக்கிறேன். ஆமென்.
12. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. (தம்பதியர் முத்தமிட்டு பிறகு சபையாரை பார்க்கிறார்கள். பியானோ வாசிப்பவர் திருமண அணிவகுப்பு இசையை இசைக்கிறார்). தேவன் இணைத்தது எதுவோ அதை மனிதன் பிரிக்காதிருக்கக்கடவன். (மணமகன், மணமகள் மற்றும் உடன் வந்தவர்கள் வெளிNறுகிறார்கள்).
13. மண வாழ்க்கையின் இனிமை. வாழ்க்கை பயணத்தில் வரக்கூடிய ஏற்றத்தாழ்வுகளை எதிர்நோக்கும்படியாக, ஒரு மனினும், ஒரு ஸ்திரீயும் இணைந்திருக்கிறார்கள். இரு பக்கங்களிலுமிருக்கிற தகப்பனும், தாயும் மகனையும், மகளையும் கொடுக்க வேண்டும். ஒரு நாளிலே அதைத்தான உங்களுடைய தகப்பனும், தாயும் செய்தார்கள்.
14. இருவர் வெளியே கடந்து வருவதை பார்க்கும் போது,அது எப்பொழுதுமே கிறிஸ்து தம்முடைய மணவாட்டிக்காக வரும் அந்த காட்சியை நான் பார்க்கிறேன். அந்த நாளிலே நாமெல்லோரும் அதில் ஒரு பாகமாக இருக்கப்போகிறோம் என்கிற நம்பிக்கையை உடையவர்களாய் இருக்கிறோம். அவரும் வரப்போகிறார். இந்த வாலிப மக்களுடைய வாழ்க்கையிலே அது ஒரு சந்தோஷமான தருணமாய் இருக்கப்போகிறது. கிறிஸ்துவோடு ஒன்றாக இணையும்போது கிறிஸ்தவ ஜீவியத்திற்கு ஒரு சந்தோஷமான தருணமாய் இருக்கப்போகிறது.
15. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. நாம் எழுந்துநிற்போம்.
16. பரலோக பிதாவே, இந்த காலையில் எங்களுடைய கண்கள் ஒரு திருமணத்தின் பக்கமாக திருப்பப்பட்டிருக்கிற வேளையில், ஒரு மகிமையான காலையில், இயேசு மறுபடியும் வரப்போகிறபோது, அங்கே மற்றுமொரு திருமணம் இருக்கப்போகிறதை நாங்கள் சிந்தித்துக் கொண்டிருக்கிற வேளையில், ஆட்டுக்குட்டியானவருடைய மீட்கப்பட்ட, எல்லா சபை காலங்களிலும் மீட்கப்பட்டவர்கள், அந்த நித்திய ஜீவனில், அவருடைய ஜீவனில் பங்கடையப் போகிறவர்கள், இப்பொழுது அவர் ஜீவிக்கிறதான அந்த மகிமையான சரீரத்தை போன்ற சரீரத்தை நாம் பெற்றுக் கொள்ள போகிறோம். அந்த மணி நேரத்திற்காக ஏங்குகிறோம். இந்த காலையில் இந்த அறையை விட்டு வெளியேறும்போது, நாங்கள் அந்த நாளிலே அந்த மகத்தான திருமணத்திற்கு போகிறதான வேளையில், எங்களுடைய இருதயமும், எங்களுடைய ஜீவியமும் புதுப்பிக்கப்பட்ட நிலையில் பிரதிஷ்டை பண்ணப்பட்டதாய் காணப்படட்டும். இயேசுவின் நாமத்தில் நாங்கள் ஜெபிக்கிறோம். ஆமென்.
No comments:
Post a Comment