ஆழம் ஆழத்தை
நோக்கி கூப்பிடுகிறது.
ஓ, என்னே! இரண்டு பரிசுத்த ஆவிகளே கிடையாது. அன்று காலை சியோனை கிறிஸ்துவண்டை
வழிநடத்தின அதே பரிசுத்த ஆவியானவர் இன்றிரவு இங்கே வழி நடத்தியிருக்கிறார்.
நீங்கள் பரிசுத்த ஆவியின் வாக்குதத்தத்தை விசுவாசிக்கின்றபடியால் அவர் சிமியோனுக்கு
செய்தது போன்று உங்களுக்கும் செய்ய அவர் கடமை பட்டுள்ளார்.
ஏனென்றால் அவர் தேவனாயும், அவருடைய வார்த்தையை காத்துக்கொள்ள வேண்டிய வராயுமிருக்கிறார். என்னால்
சிமியோனை காண முடிகிறது. அவன் கிறிஸ்துவை காண்பதற்கு வாஞ்சித்தான். தேவனுடைய
வார்த்தை அவனிடத்தில் கூறியிருந்ததையே அவன் விசுவாசித்தான்.
குறை கூறுபவர்கள் என்ன
கூறினர் என்று கவலை படவில்லை. கிறிஸ்துவை காண வேண்டும் என்ற ஏக்கம்
அவனுக்குள்ளிருந்தது.
தாவீது ஆழத்தை ஆழம்
கூப்பிடுகிறது என்று கூறினது போன்று, இங்குள்ள அநேகர்
தெய்வீக சுகமளித்தலில் நம்பிக்கை கொண்டுள்ளீர்களா?.
நீங்கள் தெய்வீக சுகமளித்தலை
விசுவாசிப்பதின் காரணமே, ஒரு தெய்வீக சுகமளிப்பவர் உண்டு
என்பதை நிரூப்பிக்கிறது.
நாங்கள் அமெரிக்காவுக்கு
வந்தபோது சூரியனையும், சந்திரனையும், இயற்கையையும்
ஆராய்து வந்த அமெரிக்க இந்தியர்களை கண்டோம். ஏனென்றால் அவனுக்கு சிருஷ்டிகர்
இருந்தார் என்று அறிந்திருந்தார். அவனுடைய இருதயத்தில் இருந்த ஏதோ ஒன்று அவனை
ஆராதிக்கும்படி செய்தது. அது ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கிறது.
நீங்கள் உங்கள் மோட்டார்
வண்டியை,
உங்களுடைய உத்தியோகத்தை, உங்களுடைய வீட்டை ஏதோ
ஒன்றை ஆராதிக்கலாம். எந்த விக்கிரகமா யிருந்தாலும் அதை எட்த்து போட்டுவிட்டு
இயேசுகிறிஸ்துவை முதலிடத்தில் இருக்க செய்யுங்கள். அவரே எல்லாவற்றிலும்
முதன்மையாய் இருக்கட்டும்.
ஆகையால் தான் தாவீது உமது
மதகுகளின் இரைச்சலால் ஆழத்தை ஆழம் கூப்பிடுகிறது என்று கூறினது போன்ற ஆழமிக்க
பசியாய் இருக்கும்.
இப்பொழுது ஆழமானது ஆழத்தை
கூப்பிடுகிறது. உதாரணமாக இங்கு ஒரு ஆழமானது இருந்து கூப்பிட்டுக்
கொண்டிருக்குமானால், அந்த அழைப்பிற்கு பதிலளிக்க ஒரு ஆழம்
இருக்கத்தான் வேண்டும்.
இதைப்பற்றி நான் தெளிவாக
கூறவிரும்புகிறேன். நான் இயற்க்கையை நேசிப்பவன். காடுகளுக்கு சென்று சூரிய
அஸ்தமனத்தை கவனிப்பேன். நான் விலங்குகளின் காட்டுத்தனமான அச்சக்கூக்குரலைக்
கேட்டிருக்கிறேன்.
என்னுடைய தாயார் பாதி சிவப்பு
இந்தியர். நான் இயற்க்கையை நேசிப்பது என் இரத்தத்திலேயே இருக்கிறது. நான்
காட்டிலிருந்து அந்த கூக்குரலை கேட்கும் போது, ஏதோ ஒன்று என் ஆத்துமாவை
அனல் மூட்டச் செய்தது.
அன்மையில் நான்
காரிடோனாவிலுள்ள ஒரு மலையின் மேல் நின்று கொண்டு ஒரு வயதான தாய் கழுகு தன் சிறிய
குஞ்சுகளை கூட்டிலிருந்து எடுத்து வந்து அவைகளை பசுமையான புல் தரையில் வைத்ததை
கவனித்துக்கொண்டிருந்தேன்.
பின்னர் அது மிகவும் உயரமான
கன்மலையின் உச்சிக்கு பறந்து சென்றது. அங்கு அமர்ந்து கவனிக்க துவங்கினது. நான்
என் இருகண் தூரதரிசினியின் கண்ணாடியின் வழியாக கவனித்தேன். நான் அப்படியே
கவனித்துக்கொண்டிருந்தேன்.
என்னுடைய குதிரையோ ஒரு
மரத்தில் கட்டப்பட்டிருந்தது. நான் கர்த்தாவே! நான் அதை விரும்புகிறேன் என்றேன்.
நீங்கள் எப்பொழுதாவது கழுகின்
கூட்டை கவனித்திருந்தால் நலமாயிருக்கும். கழுகுள் கூர்மையான குச்சிகளை கொண்டே
கூடுகளை கட்டுக்கின்றன. அந்த சிறிய கழுகுகளோ எதையுமே அறியாதிருந்தன.
ஆனால், ஒருநாள் அந்த தாய் கழுகு தன் செட்டைகளை விரிக்க அவைகள் மேலே ஏறிக்கொண்டு
கீழே வந்தன. நான் அந்த சிறிய கழுகு குஞ்சுகளை கவனித்தேன். அந்த சிறிய குஞ்சுகள்
சரியாக ஒரு பெந்தெகொஸ்தே எழுப்புதலைக் கொண்டவைகளாய் அந்த மிருதுவான புல் தரையில்
சுற்றிக்கஒண்டும், ஓடிக்கொண்டும் கலகலவென்று
சத்தமிட்டுக்கொண்டும், குதித்துக்கொண்டும் எவ்வளவு சுதந்திரமாய்
இருக்க முடியுமோ அவ்வளவு சுதந்திரமாய் இருந்தன.
நானோ நல்லது. அது உண்மைதான்.
உலகத்தின் பழைய கூட்டிலுள்ள ஒரு மனிதன் பிசாசு அவனுக்கு கொடுக்கக்கூடியது தவிற
வேறொன்றையும் அறியாதிருப்பது போன்றுள்ளது என்று நான் நினைத்தேன்.
ஆனால் ஒருநாள் தேவன் அவனை
தூக்கியெடுத்து, நிழலுள்ள பசுமையான புல் தரையில் கிடத்துகிறார்.
அப்பொழுது ஓ, அவன் எப்படியாய் அவன் களிகூறுகிறான். அப்பொழுது
அவன் சுயாதீனமாய் இருக்கிறான்.
நான் ஏன்? அந்த சிறிய குஞ்சுகள் பயமே இல்லாமல் இருக்கின்றன. அங்கே ஓநாய்கள்
சுற்றிலும் இருக்கின்றதே என நினைத்தேன். ஆனால் அவைகள் ஒவ்வொரு முறையும் பார்க்கும் போது அந்த தாய் கழுகு
அவைகளை கவனித்துக்கொண்டிருந்தது.
தேவனுக்கு ஸ்தோத்திரம்
உண்டாவதாக! அவர் என்னை உலகத்தின் கூட்டிலிருந்து வெளியே எடுத்தார். மகிமையின்
கொத்தரங்களில் ஏறி உன்னத்தத்தில் உட்கார்ந்து கொண்டு தம்முடைய சுதந்திரத்திற்கு
ஒரு தீங்கும் வராதபடி கவனமாக கவனித்துக் கொண்டிருக்கிறார் என்று நான் நினைத்தேன்.
ஒரு ஓநாய் அந்த சிறிய கழுகு
குஞ்சுகளை நோக்கி வர துவங்கினால், அந்த தாய் அதை கொத்தி கிழித்து
விடுவாள். சாத்தான் ஒரு விசுவாசியை பின் தொடரட்டும் அவன் இயேசுகிறிஸ்துவையே தன்னுடைய
கரங்களில் கொண்டிருப்பான்.
அவளோ தன் காணக்கூடிய
கன்மலையிலிருந்து, தன்னுடைய மகத்தான கம்பீரமான தலையினால்
சுற்றிலும் பார்த்துக்கொண்டிருந்தாள். அவளுடைய கூர்மையான கண்களினால்
எல்லாவிடங்களிலும் பார்க்க முடிந்தது.
கொஞ்சம் கழித்து, அவள் தன் தலையை உயர்த்தி, ஆகாயத்தில் மெல்ல
சிறகடித்து பறந்ததை என் இருகண் தூரதரிசினி கண்ணாடி வழியாக பார்த்தேன்.எங்கோ வடக்கு
பாகத்தில் இடிமுழக்கம் துவங்கினது. அவள் திடீரென்று கூச்சலிட்டாள்.
அவள் கீழே சென்று தன்னுடைய
செட்டைகளை பறந்த புல் தரையின் மீது விரிக்க, அந்த எல்ல கழுகுளும்
அந்த செட்டைகளின் மேல் ஏறிக்கொண்டன. அவைகள் தங்கள் பாதங்களினாலும், தங்களுடைய அலகுகளினாலும் செட்டையின் இறகுகளை இருக்கி பிடித்துக்கொள்ள,
அவள் அந்த செட்டைகளின் மேலிருந்த சிறிய கழுகு குஞ்சுகளோடு நேரடியாக
மேலே எழும்பி மணிக்கு ஐம்பது கிலோ மீட்டர் வேகத்தில் காற்றை கிழித்துக்கொண்டு
கன்மலை வெடிப்புக்குள் பறந்து சென்றாள்.
நான் ஒரு குழந்தையைப் போல்
அழுதேன். என்றோ ஒரு மகிமையின் நாளில் என்றோ எழுப்புதல் முடிவுரும் போது, அவர் மகிமையிலிருந்து வந்து தம்முடைய மகத்தான வல்லமையின் செட்டைகளை
விரிப்பார். அந்த சிறிய கழுகளைப்போன்றே அதற்குள்ளாக இருக பற்றிக்கொண்டு அவரோடு
மகிமைக்கு பறந்து செல்வோம் என்று நான் கவனித்தேன்.
ஆழமானது கூப்பிட்டுக்
கொண்டேயிருக்குமானால், பதிலளிக்க ஒரு ஆழம் இருக்கின்றது.
வேறு வார்த்தைகளில் கூறவேண்டுமானால், பூமியின் மேல் ஒரு மரம்
இருப்பதற்கு முன்பாக அது வளர்தற்கு பூமியானது இருக்க வேண்டும். தேவன் பூமிக்காக
மரத்தை ஒருபோதும் உண்டாக்கவில்லை. அவர் மரத்திற்க்காக பூமியை உண்டுபண்ணினார்.
மரமானது வரும் வரையில் பூமியானது கூப்பிட்டுக் கொண்டிருந்தது.
ஒரு மீனினுடைய முதுகின்மேல்
ஒரு துடுப்பு இருப்பதற்கு முன்பே அது நீந்துவதற்கு தண்ணீர் இருந்தது. அது ஒரு
துடுப்பை பெற்றிருந்ததே தண்ணீருக்காகத்தான். நமக்கு உண்டாயிருக்கும் ஒவ்வொரு
காரியமும் ஒரு நோக்கத்திற்காகவே.
அண்மையில் ஒரு சிறு பையன்
எழுதுகோலின் அழிப்பான்களையும், இரு சக்கர வண்டியின் காலடி
மிதியையும் மற்றும் அவனுக்கு கிடைக்கக்கூடிய எல்லா எழுதுகோல் அழிப்பான்களையும்
தின்று விட்டதை நான் வாசித்துக்கொண்டிருந்தேன். அவர்கள் அவனை ஒரு பரிசோதனைக்காக
ஒரு வைத்தியரிடம் கூட்டிச் சென்றனர். அவனை பரிசோதித்தப் பிறகு, அவனுடைய சரீரத்திற்கு கந்தகம் தேவையென்று கண்டுபிடித்தனர். ரப்பரில்
கந்தகம் இருக்கிறது. அவன் கந்தகத்தை பெறுவதற்காகவே ரப்பரை சாப்பிட்டுக்
கொண்டிருந்தான்.
ஏதோ ஒன்று இங்கே
கந்தகத்திற்காக கூப்பிட்டுக் கொண்டிருந்ததால் அதற்கு பதிலளிக்க அங்கே ஒரு கந்தகம்
இருக்க வேண்டியதாயிருக்கிறது. நான் என்ன கூறுகிறேன் என்று புரிகிறதா? ஆழத்தை ஆழம் கூப்பிடுகிறது.ஒரு ஆழம் கூப்பிடுவற்கு முன்பாகவே அதற்கு
பதிலளிக்க ஒரு ஆழம் இருக்க வேண்டயதாயிருக்கிறது.
ஒரு சில வருடங்களுக்கு முன்பு, ஜனங்களாகிய நீங்கள் ஒரு சம்பிரதாய சபையில் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை
விசுவாசிக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் உள்ளே இருந்த ஏதோ ஒன்று தேவனைப்பற்றி
அதிகமாக அறிந்துக்கொள்ள விரும்பினது.
நீங்கள் ஒரு நீதிமானக்கப்பட்ட
ஜீவியத்தில் ஜீவித்தீர்கள், ஆனால் ஆவியின் அபிஷேகத்திற்காக
பசியாயிருந்தீர்கள். பரிசுத்த ஆவி என்ற ஒன்று இருப்பதன் காரணமே நீங்கள் அதற்காக
பசியாய் இருந்ததால் தானே? ஏதோ ஒன்று உள்ளேயிருந்து வெளியே கூப்பிட்டிருந்தாலொழிய
நீங்கள் அதற்காக பசியாய் இருந்திருக்க மாட்டீர்கள்.
அந்த காரணத்தால் தான் நீங்கள்
இன்றிரவு இங்கிருக்கிறீர்கள். நீங்கள் தெய்வீக சுகமளித்தலில்
விசுவாசமாயிருக்கிறீர்கள். ஒருவேளை வேதாகமத்தில் போதிக்கபடாமலிருந்து நீங்கள்
தெய்வீக சுகமளித்தலில் விசுவாசமாயிருந்தால் எங்கோ ஒரு ஊற்று திறந்திருக்க
வேண்டும்.
நீங்கள் தேவனால் சுகமடைய
வாஞ்சித்தால் உங்களை சுகப்படுத்த தேவன் இங்கிருக்கிறார். ஆழத்தை ஆழம்
கூப்பிடுகிறது.
அந்த விதமாகத்தான் அது
சியோனிடமிருந்தது. கிறிஸ்து வருவதாக இருந்ததை சிமியோன் அறிந்திருந்தான். அதாவது, அவன் மரிக்கும் முன்பாக அவரை காண்பான் என்று தேவன் அவனுக்கு
வாக்களித்திருந்தார்.
இப்பொழுது கவனியுங்கள்! இது
வினோதமாக இல்லையா?. சரியாக இயேசுவானவர் காட்சியில்
வந்தபோது வாக்குத்தத்தத்தை கொடுத்த பரிசுத்த ஆவியானவர் இன்றிரவு உங்களை இங்கே
நேராக ஊற்றன்டைக்கு வழிநடத்தியுள்ளார்.
அது விருப்பமுள்ள
யாவருக்காகவும் திறக்கப் பட்டுள்ளது. தேவனுடைய குமாரரும், குமாரத்திகளுமாகிய நீங்கள். ஒவ்வொருவரும் இங்கே
வழிநடத்தப்பட்டிருக்கிறீர்கள். ஏனென்றால் தேவனுடைய வாக்குத்தத்தத்தை
விசுவாசிக்கின்றீர்கள். நான் என்ன கூறுகிறேன் என்று புரிகின்றதா?
ஓ, நான் அதைக்குறித்து சிந்தித்துப் பார்க்கிறேன். எங்கோ ஒரு மூலையில் ஒரு
வயதான ஸ்திரீ இருந்தாள் என்பதை நினைத்துப் பார்க்கிறேன். அவள் பார்வை இழந்தவளாய்
என்றும் நாம் போதிக்கப்பட்டிருக்கிறோம். அவளுடைய பெயர் அன்னாள். அவள் ஒரு
தீர்க்கதரிசினியாள். கர்த்தருடைய வருகைக்காக காத்துக்கொண்டிருந்தாள். கிறிஸ்துவை
அவளுக்கு காண்பிக்க தேவன் கடமைப்பட்டிருந்தார்.
அந்த வயதான பார்வையிழந்த
தீர்க்கதரிசினி, அந்த காலை அந்த கட்டிடத்தினூடாக வந்து பரிசுத்த
ஆவியினால் வழி நடத்தப்பட்டு, அந்த பெண்களின் வரிசையினூடாக
நடந்து வந்து நேராக ஊற்றண்டைக்கு முன்பாக நின்றாள். ஏனென்றால், அவள் பரிசுத்த ஆவியினால் வழிநடத்தப்பட்டாள்.
ஆம்! அவர் மரித்தோரிலிருந்து
எழுந்தவராய் இன்றிரவு இங்கிருக்கிறார். அவர் உங்களுக்கு வாக்குத்தத்தம்
கொடுத்திருக்கிறார். பரிசுத்த ஆவியானவர் இங்கு
கொண்டு வராமலிருந்தால், நீங்கள் உலகத்தில் எங்கேயோ இருப்பீர்கள். ஆனால் இந்த
உஷ்ணமான கட்டிடத்தில் உட்கார்ந்துக் கொண்டு விசிறிக்கொண்டிருகிறீர்கள்.
ஏனென்றால் இயேசுகிறிஸ்து
தம்முடைய வார்த்தையை உறுதிப்படுத்துவதைக் காண நீங்கள் எதிர்ப்பாரத்துக்
கொண்டிருக்கிறீர்க்கள். எதிர்பார்த்தல், நீ ஏதோ ஒன்றை குறை
கூறும்படி எதிர்ப்பார்த்து வந்திருந்தால் பிசாசு உங்களுக்கு ஏராளமானவற்றைக்
காட்டுவான். நீங்கள் எதிர்ப்பார்க்கிறதை பெற்றுக் கொள்வீர்கள்.
சிலர் இதைப்போன்ற ஏதோவொன்றை
கண்டால் அப்பொழுது விசுவாசிப்பேன் என்கிறார்கள். நீங்கள் எதிர்பார்கிறதை பெற்றுக்கொள்கிறீர்கள்.
பரிசுத்த ஆவியானவர்
வருவதையும், தம்மைத்தாமே வெளிப்படுத்துவதையும், அநேகர் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை பெறுவதையும், ஆவியில்
அழுதுக் கொண்டு கல்வாரிக்கு போவதையும், வியாதியஸ்தர்
சுகமாக்கப்படுவதையும், எல்லாவிதமான அடையாளங் களையும்,
அற்புதங்களையும் காணும்படியாக நான்
எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன். ஏனென்றால் இயேசு கிறிஸ்து அதை
வாக்களித்திருக்கிறார்.
நாம் ஜெபம் செய்வோமாக:
பரலோக பிதாவே, உயிர்தெழுந்த இயேசுவின் அடையாளங்களினாலும், அற்புதங்களினாலும்
உம்முடைய வார்த்தையை உறுதிப்படுத்தும். அவர் பூமியின் மேல் இருந்தபோது, என்ன செய்ய வேண்டுமென்று நீர் அவருக்கு தரிசனங்கள் காண்பித்தீர் என்று
மட்டுமே அவர் உரிமை கோரினார் என்பதை நாங்கள் அறிவோம். அவர் ஜனங்களின்
நினைவுகளையும், அவர்களுடைய நிலைமைகளையும் அறிந்திருந்தார்.
பெரும்பாடுள்ள ஒரு ஸ்திரீ, அவருடைய வஸ்தீரதை தொட்டதை அவர்
அறிந்து கொண்டார். அவள் அங்கு நின்று கொண்டிருந்தாள். அவள் மறைந்துக் கொள்ள
முடியாது என்பதை அவள் கண்டாள். இயேசுவானவர் சரியாக அவளை நோக்கிப் பார்த்துக்
கொண்டிருந்தார். எனவே, அப்பொழுது அவர் உன் விசுவாசம் உன்னை
இரட்சித்தது என்றார்.
பிதாவே, இன்றிரவு அவர் இங்கிருக்கிறார் என்று நாங்கள் அறிவோம். ஏனென்றால்
இருப்பதாக அவர் வாக்களித்தார். எங்களுடைய நம்பிக்கை அரிளும், அவருடைய வார்த்தையிலும் நங்கூரமிடப் பட்டிருக்கிறது. நாங்கள் அவரை அவருடைய
சபையிலுள்ள, அவருடைய ஜனங்கள் மத்தியில் அவருடைய மகத்தான
உயிர்தெழுதலின் வெளிப்படுதலில் கண்டிருக்கிறோம்.
கர்த்தாவே, நாங்கள் இக்காலத்தின் வெளிச்சத்தின் உண்மை பொருளாய் இருப்போமாக. அதாவது,
மகத்தான நாடகத்தின் பாதையின் முடிவில் நாங்கள் ஒவ்வொருவரும் உமக்கு
முன்பாக வருகையில் மகத்தான திரையானது இழுக்கப்பட்டு எங்களுடைய ஜீவியங்கள் எங்க்களுக்கு
முன்பாக திரும்பி கொண்டுவரப்படுகையில், என்னுடைய சத்தம்
அநீதிக்கு எதிராக கூக்குரலிடுவதையும் உம்முடைய குமாரனாகிய இயேசுவின்மேல்
விசுவாசமாய் இருக்கும்படி ஜனங்கள் அழைப்பதையும் நான் கேட்பேனாக.
இன்றிரவு ஜனங்களை
ஆசிர்வதியும். அவர்கள் கடுமையான உஷ்ணத்தில் இங்கு உட்கார்ந்துக்
கொண்டிருக்கின்றனர். ஒரு விஷேஷித்த ஆசிர்வாதத்தை அவர்களுக்கு அருள வேண்டுமென நான்
ஜெபிக்கிறேன். ஆறுதல் படுத்தும் வல்லமையுள்ள பரிசுத்த ஆவியானவர் இந்த எல்லா
சிந்தனைகளையும் அப்புறப்படுத்துவாராக.
கர்த்தாவே, வருகின்ற ஆராதனைக்காக உம்முடைய ஊழியக்காரனை பரிசுத்தப்படுத்தும். தெளிவாக
உணரப்படும் கண்கள் இந்த பக்கமாக திருப்படட்டும். நீர் உம்முடைய மகத்தான மகிமையான
வல்லமையை ஒவ்வொருவரும் அறிந்துக்கொள்ளும்படியாக நான் ஜெபிக்கிறேன்.
உம்முடைய தகுதியற்ற
ஊழியக்காரனுக்கு உம்முடைய கண்களில் கிருபை கிடைத்திருக்கிற தென்றால், நீர் அந்த தகுதியற்ற நபரை எடுத்து, இந்த சரீரத்தில்
அப்புறப்படுத்தி கர்த்தராகிய இயேசுவே இன்றிரவு உள்ளே வந்து, உம்முடைய
ஜனங்களிடத்தில் பேசுவீராக.
முழு ஜீவியமும், பூமியின் மேல் முடிவுரும் போது, கடைசி ஜெபமானது
ஜெபிக்கப்படும் போது, யுத்தங்கள் யாவும் முடிவுறும் போது,
புகையானது நின்று விடும் போது, போர்க்களங்கள்
குவியலாக குவிக்கப்படும் போது, வேதாகமங்கள் மூடப்படும் போது,
நாங்கள் உம்முடைய வீட்டிற்கு வருவோம். தெரிந்துக்கொள்ளப்பட்டவர்கள்
ஆகாயத்திற்கு அப்பாலுள்ள தங்கள் வீடுகளில் ஒன்று கூடும்போது அந்த காலை நித்தியமாயும்,
பிரகாசமாயும், அழகாயும் விடியுமென்று புலவன்
கூறினான்.
கர்த்தாவே, அந்த மகத்தான பஞ்சு மேஜையானது ஆயிரக்கணக்கான மைல்கள் நீளத்தில்
போடப்பட்டிருப்பதை நாங்கள் காணும்போது, போர்கள வடுக்களை
கொண்ட, அனுபவம் வாய்ந்த போர்வீரர்கள் அந்த மேஜையிலே ஒருவர்
மற்றவரை நோக்கி பார்க்கையில் ஆனந்த கண்ணீர் எங்களுடைய கன்னங்களில் வழிந்தோடும்.
இராஜாவானவர் அவருடைய அழகிலும், பரிசுத்ததிலும், வெளியே வந்து அந்த மேஜையண்டை நடந்து சென்று இனி அழவேண்டாம் எல்லாம்
முடிந்து விட்டது. கர்தருடைய சந்தோஷத்திற்குள் பிரவேசியுங்கள் என்று கூறுவார். நாங்கள்
பாதையின் முடிவுக்கு வரும்போது, அந்த பாதையின் பிரயாசங்கள்
அப்பொழுது ஒன்றுமற்றதாய் தோன்றும். பின்னானவைகளை மறந்து, பரம
அழைப்பின் இலக்கை நாங்கள் தொடரும்படியாய், கர்த்தாவே,
இன்றிரவு எங்களுக்கு உதவி செய்யும். உம்முடைய ஆவியானது வந்து,
இயேசுகிறிஸ்துவை இந்த ஜனங்களுக்கு வெளிப்படுத்திக் காட்டுவதாக. நீர்
நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறீர் என்று நான் அவர்களுக்கு சொல்ல
முயற்ச்சித்திருக்கிறேன். நாங்கள் அதை உம்முடைய நேசப்பிள்ளையாகிய இயேசுவின்
நாமத்தில் கேட்கிறோம். ஆமென்.
கர்த்தர் உங்களை
ஆசிர்வதிப்பாராக. சிறுபிள்ளைத்தனமாக இருந்தற்காக என்னை மன்னிக்கவும். ஆனால் நான்
அவரைப்பற்றி பேசும்போது ஏதோ ஒன்று என் இருதயத்திற்குள்ளாக வந்துவிடுகிறது. நான்
என் ஊழிக்காரர்களால் முதன் முறையாக அழைக்கப்பட்டதை நினைவு கூறுகிறேன். நான் சிறு
வயதாய் இருந்தது முதற்கொண்டே தரிசனங்கள் வரும். ஊழிக்காரர்கள் பில்லி, நீ அதனன்டைக்கு ஒருபோதும் போகாதே அது பிசாசு என்றனர். நான் தரிசனங்கள்
தவறானது என்று அறைகுறையாக விசுவாசித்தேன்.
அதன் பின்னர் அவர் அன்றிரவு
என்னிடம் வந்து அவர் யாரென்பதை என்னிடம் கூறினார். ஓ, என்னே அவர் இப்பொழுது இங்கே இருக்கிறாரென்று நான் அறிவேன். நான் அவருடைய
சமூகத்தை அறிவேன். நான் ஒரு பிசாசாக இருந்துக்கொண்டு கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை
நேசிக்க முடியுமென்று நான் சிந்தித்தேன். நான் அவரை விசுவாசித்தேன். ஏனென்றால்
நாம் விசுவாசிக்கின்ற இந்நாளுக்கான தேவனுடைய வார்த்தையோடு ஒத்துப்போகிறது. அவருடைய
வார்த்தையோ ஒத்துப்போகவில்லை. இப்பொழுது கிறிஸதவ நண்பர்களே நான் உங்கள்
யாவருக்கும் இதை கூற விரும்புகிறேன். காரணம் என்னவெனில், அது
எனக்கு சம்பவிக்கும் போது நான் அதை விளக்கி கூற முடியாது. அது விளக்கி கூறுவதற்கு
அப்பாற்பட்டதாய் இருக்கிறது.
எனவே, நாம் ஒன்று அல்லது இரண்டு பேரை சந்தித்த பிறகு நான் நிற்க முடியாமல்
மிகவும் பலவீனமடைகிறேன். நீங்கள் அதை புரிந்துக்கொள்ளாமலிருக்கலாம். ஆனால்
வேதவாக்கியங்களை வாசியுங்கள். அது அதை கூறுகிறது.
தீர்க்கதரிசி தானியேல் கண்ட
தரிசனம் அவனுடைய தலையில் அநேக நாட்கள் அவனை கலகம் பண்ணிற்று. அது சரிதானே! ஒரு
சமயம் ஒரு ஸ்திரீ இயேசுவை தன்னன்டை இழுக்கக்கூடிய விசுவாசத்தை உடையவளாய் இருந்த
போது,
அவர் என்னிடமிருந்து வல்லமை புறப்பட்டு சென்றது என்றார். ஜனங்கள்
அங்கிருந்தார்கள்.
கிறிஸ்தவர்களே! அது நானல்ல, நான் வெறுமனே ஒரு மனிதன். பாவிகளில் பிரதான பாவி, முழு
சுவிசேஷ ஜனங்களாகிய உங்களுக்கு நான் ஒரு அகால பிறவி. அது உண்மை. தேவனுடைய
கிருபையினால் உங்களை என் சகோதரன், சகோதரி என்று
அழைக்கும்படியாக அவர் என்னை அனுமதித்திருக்கிறார்.
நான் உங்களை நேசிக்கிறேன்.
நான் காணப்படவோ, அல்லது கேட்கும்படியாகவோ இருக்கவில்லை. நான்
பணத்திற்காக இங்கில்லை. நீங்கள் அதை அறிவீர்கள். எனவே, நான்
இங்கிருப்பதற்கான காரணம் என்னவெனில், இயேசுவை நேசிக்கிறேன்.
நான் உங்களையும் நேசிக்கிறேன். நான் நெருங்கி வந்து, நான்
என்னையே ஒப்புக்கொடுக்க முடிந்தால், அவர் ஏதோ ஒன்றை என்
மூலமாக செய்ய நீங்கள் இன்னும் அதிகமாக அவரை நேசித்து, விசுவாசித்து
சுகமடைவீர்கள் என்று நான் விசுவாசிக்கிறேன். அதுவே என்மூல காரணமாய் இருக்கிறது.
மேய்ப்பர்களே, வர்த்தக புருஷர்களே தேவன் உங்களை ஆசிர்வதிப்பாராக. நான் பெலவீனம்
அடைவதற்கு முன்னமே நான் பிரியா விடையுடன் வாழ்த்து கூற விரும்புகிறேன். சில
நேரங்களில் நான் மேடையைவிட்டு செல்ல நேரிடுகிறது. என் மகனும், மேளாலரும் அதை கவனித்துக் கொள்கிறார்கள். நான் உங்களை மீண்டுமாய்
ஆற்றங்கரையிலே சந்திக்க முடியாமல் போனால், நான் அந்த
காலையில் இதே சாட்சியுடன் சந்திப்பேன்.
நான் கர்த்தராகிய இயேசுவை நேசிக்கிறேன்.
தேவன் எனக்கு தரிசனங்கள் கொடுக்கிறார் அது உண்மை. வேதம் எனக்கு முன்பாக
இருக்கிறது. தேவனே சாட்சி. அவருடைய கிருபையினால் அனுமதிக்கின்ற காரணத்தினால்
மட்டுமே என்னால் கூற முடிகிறது. எனவே, எனக்காக
ஜெபியுங்கள்.
இன்னும் ஒரு காரியத்தை
கேட்கிறேன். நான் ஆப்பிரிக்காவுக்கும்,இந்தியாவுக்கும்,பாலஸ்தீனாவுக்கும், ஜெர்மனிக்கும் போகிறேன். அந்த
தேசங்களில், பில்லி சூனிய வைப்பவர்களும், பிசாசினால் பீடிக்கப்பட்ட ஜனங்களும் உங்களுக்கு சவால் விடுவார்கள்.
நீங்கள் எதைக்குறித்து பேசிக்கொண்டிருக்கிறீர்கள் என்பதை அறிந்திருப்பது நலமாயிருக்கும்.
அது உண்மை.
காற்று உஷ்ணமாகவும், பலமானதாகவும் வீசிக்கொண்டிருக்க, உபத்திரவத்திற்குள்ளாக
இருக்கும் போது, யாரோ ஒருவர் வாஷிங்டன் டீசியில் எனக்காக
ஜெபித்துக்கொண்டிருப்பீர்கள் என்று நினைவு கூறுவேன். நீங்க்கள் அதை எனக்கு
வாக்களிப்பீர்களா? அப்படியானால் உங்கள் கரத்தை
உயர்த்துங்கள். உங்களுக்கு நன்றி.
கடந்த மாலை, அவர்கள் நூறு ஜெப அட்டைகளை கொடுத்தனர் என்று இப்பொழுது நான் நினைக்கிறேன்.
அந்த எழுத்து ஒய் என்று இருந்தது என்று நம்புகிறேன். கடந்த இரவு நான் முதல்
பதினைந்து ஜெப அட்டைகளை கூப்பிட்டுவிட்டேன். என்று நம்ம்புகிறேன். சகோதரர்களே,
அது சரிதானே? அவைகளில் முதல் பதினைந்து
கொடுக்கப்பட்டுவிட்டன.
இப்பொழுது நாம் அவைகளில்
இன்னும் சிலவற்றை அழைப்போம். ஒருவேளை விசுவாசமானது மிகுதியாய் இருந்தால், நாம் அவர்களை இரண்டு அல்லது மூன்று குழுக்களோடு தொடர்பு கொள்ள முடியும்.
ஒரு ஜெப அட்டை இல்லாமல்
இருந்து இன்றிரவு தேவனால் சுகமாக்க விரும்புகிறவர்கள் எத்தனை பேர்
இங்கிருக்கிறீர்கள். உங்களுடைய கரத்தை உயர்த்துங்கள். ஜெப அட்டை இல்லாதவர்கள்.
நல்லது,
உங்களால் கூறமுடியவில்லை. எங்கும் காண முடிகின்றன.
நான் உங்களை ஒரு காரியம்
கேட்க விரும்புகிறேன். இது உங்களுடைய முதல் முறையான சந்திப்பாய் இருக்கலாம். நாம்
நீண்ட நேரம் தரித்திருக்க முடியாமல் போவது மிகவும் மோசமாக உள்ளது. எனவே தெய்வீக
சுகமளித்தல் எப்படி பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
ஒரு சதை வளர்ச்சி என்பது ஒரு
பிசாசாய் இருக்கிறது. ஒவ்வொரு வியாதியும் பிசாசினால் உண்டாகிறது. தேவன் தம்முடைய
பிள்ளைகள் மீது வியாதிகளை போடுவதில்லை. பிசாசு அதை செய்கிறான். நீங்கள் ஏன்
பிசாசுகள் கூட சுகப்படுத்துகிறது என்கிறீர்கள். அவன் சுகப்படுத்த முடியாது என்று
இயேசு கூறினார்.
சாத்தானே, சாத்தானை துரத்தினால் அவனது ராஜ்ஜியம் பிரிந்திருக்குமே! தேவனால்
மாத்திரமே சுகப்படுத்த முடியும். மருந்தும், மருத்துவர்களும்
சுகப்படுத்துகிறதில்லை. மேயோ சகோதரர்களே, நாங்கள்
சுகமளிக்காமல் இயற்க்கைக்கு மாத்திரமே உதவி செய்கிறோம் என்கிறார்கள். ஒரேயொரு
சுகமளிப்பவர்தான் இருக்கிறார் தேவன்.
அவர்கள் உங்கள் கரத்தை தைக்க
முடியும். ஆனால் அவர்களால் சுகமாக்க முடியாது. ஒரு பல் வைத்தியனால் ஒரு பல்லை
பிடுங்கத்தான் முடியும். ஆனால் அந்த இடத்தை சுகப்படுத்தப்போகிறது யார்? ஒரு வைத்தியனால் ஒரு குடல்வால் நோயை வெட்டியெடுக்க முடியும். ஆனால் அந்த
வெட்டு பாகத்தை சுகப்படுத்த போகிறது யார்? தேவனே!. மருந்து
சதைகளை வளர்ப்பதில்லை. அது அதற்கு உதவியாக மட்டுமே இருக்கிறது. ஒரு வைத்தியரால்
உன்னுடைய முறிந்த பாகத்தை சரிசெய்ய போதிக்கப்பட்ட படியே பொறுத்த முடியும். ஆனால்
தேவன் அதை சுகப்படுத்தும்படி விட்டுவிடுகிறார். எல்லா சுகமளித்தலும் தேவனுடையதாய்
இருக்கிறது.
எனவே நீங்கள் அவரை
விசுவாசியுங்கள். பிசாசின் ஜீவன் அந்த சதை வளர்ச்சியிலிருந்து வெளியே போகிறபோது
அது மரிக்கிறது. உங்களுடத்திலிருந்து ஜீவன் வெளியே சென்றால், நீங்கள் மரிப்பீர்கள். ஆனால் உங்களுடைய சரீரம் அங்கேயிருக்கிறது. அது
சுருங்குகிறது. ஜீவனானது புறப்பட்டு செல்லும் போது அந்த சரீரமும் சுருங்குகிறது.
வேட்டையாடுபவர்களில் சிலர்
அதில் இங்குள்ள இறைச்சி கடைக்காரர்களே, நீங்கள் ஒரு
பிராணியைக் கொன்று அதை எடை போடுங்கள், காலையில் மீண்டுமாய்
அதை எடை போட்டால் அது எவ்வளவு எடை குறைந்துள்ளது என்பதை நீங்கள் காண்பீர்கள்.
பின்னர் அதனை இரண்டு அல்லது மூன்று நாட்கள் வைத்திருந்தால் அதன் பின்னர் எவ்வளவு
கோரமாக இருக்கும் என்பதை காண்பீர்கள். ஒரு சதை வளர்ச்சி மரிக்கும் போது
பிசாசினுடைய ஜீவனானது கட்டியிலிருந்தும், புற்று
நாயிலிருந்தும், கற்படலித்திலிருந்தும் வெளியே போகிறது.
இங்குள்ள ஒவ்வொரு நபரும் ஒரு நோய் துன்பத்திலிருந்து படிப்படியாய்
வளர்ச்சியடைந்திருந்த உயிரனுக்களில் இருந்தே வந்தது. அதற்குள் இருக்கும் ஜீவனின்
சுபாவத்தின்படியே அந்த உயிரனுக்கள் வருகின்றன. அது மனிதனை உண்டாக்குகிறது.
நாயிலிருந்து வரும் ஒரு உயிர்
அனு ஒரு நாயை உண்டாக்குகிறது. பறவையிலிருந்து வரும் உயிர் அனு ஒரு பறவையை
உண்டாக்குகிறது. ஒரு சதை வளர்ச்சியே ஒரு பிசாசாய் இருக்கிறது. இல்லையென்றால், அது ஒரு சதை வளர்ச்சியாய் இருக்க வேண்டியதில்லை. உயிரனுக்கள் படிப்படியாய்
வளர்ச்சியடைய துவங்குகின்றன. புற்றுநோய் உயிர் அனுக்களில் துவங்கி பெரிதாகிறது.
அது ஒரு ஜீவனை பெற்றிருக்கிறது. அது ஜீவித்துக்கொண்டிருக்கிறது.
சரியாக நீங்கள் உங்கள் தாயின்
கர்ப்பத்தில் படிப்படியாக உருவாகிக்கொண்டே
ஜீவித்துக் கொண்டிருந்தது போன்றே ஆனால் அந்த ஜீவன் உங்களுடைய ஜீவனல்ல. அது
ஒரு வித்தியாசமான ஜீவனாயிருக்கிறது. நீங்கள் ஜீவிக்கும் படியான
ஜீவனைப்பெற்றீர்கள். அது ஒரு மரணத்தின் ஜீவனாய் இருக்கிறது. அது உங்களுக்குள்ளே
தொடர்பு கொண்டதாக இருக்கவில்லை. அது அதற்கு முன்பாக அங்கு இல்லாதிருந்தது. ஆனால்
இப்பொழுது அது இங்கே இருக்கிறது. அப்படியானால் யார் அங்கே வைத்தது. அது
பிசாசினிடத்திலிருந்து வருகிறது. புற்றுநோய் கட்டி ஒரு நோய் கிருமியிலிருந்து
வருகிறது. நீங்களும் கூட ஒரு கிருமியிலிருந்தே வருகிறீர்கள். புரிகின்றதா?
அடுத்த பாகம் கூடிய விரைவில்- (வீடியோவில் உள்ளபடி
22:45 நிமிடங்கள் வரை)
No comments:
Post a Comment