மணவாட்டி ஊழியம்

மணவாட்டி ஊழியம்

Sunday, January 27, 2013

ஆவிக்குறியவை நம் தலைக்குமேல் போக விடாதேயுங்கள்!



104. இப்பொழுது, அது உங்கள் பிறப்பின் பாதை; அதற்கேற்றவாறு தான் மாம்சப்பிரகாரமான மனிதரும் ஸ்திரீகளுமாகிய நீங்கள் இருக்கிறீர்கள்.  ஆனால் நீங்கள் மறுபடியும் பிறக்கும் போது, அது வெளிப்புறமான புலன் அல்ல. வெளிப்புறத்தில் நீங்கள் பார்த்து , உணர்ந்து, முகர்ந்து, காதுகளினால் கேட்கிறீர்கள். ஆனால் உங்கள் உள்ளில் உள்ளதுதான் நிஜமான நீங்கள். இப்பொழுது, இங்குள்ள வெளிப்புறத்தில், சாத்தான் உங்களை சோதித்து, எல்லா வகைகளிலும் உங்களை கீழே விழத்தள்ளுகிறான்; ஆனால் உள்ளில் உள்ள இங்கேயோ,அவனை நீங்கள் அனுமதித்தாலொழிய அவனால் ஒன்றும் செய்ய இயலாது. ஏனெனில் இங்கு உள்ளில் உங்களுக்கு விசுவாசம் உள்ளது. விசுவாசம் வெளிப்புற புலனில் மூலம் வருவதில்லை. அந்த வெளிப்புறப் புலனின் மூலம் வருவதில்லை. அந்த வெளிப்புறப் புலன் அறிவைப் பயன்படுத்தி சிந்திக்கிறது. ஆனால் விசுவாசத்தில் அவ்விதம் சிந்தித்தல் எதுவுமில்லை. அதை நீங்கள் தேவனிடத்திலிருந்து பெற்றிருக்கிறீர்கள், அது அங்குள்ளது என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். அது எவ்வளவு தவறாக காணப்பட்டாலும் எனக்குக் கவலையில்லை, அது சரியென்று நீங்கள் அறிந்திருப்பீர்கள்; அது கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால் என்பது. பாருங்கள்? அதை எதுவுமே தொல்லைப்படுத்த முடியாது. அது நேராக சென்று கொண்டிருக்கிறது. கடினம் என்பது அதற்கு கிடையவே கிடையாது. அது அதன் வழியாக கடந்து சென்று விடுகிறது. ஏனெனில் அது வார்த்தையாயுள்ளது. வார்த்தை என்பது பட்டயம், அது வெட்டுகிறது. அந்த பட்டயம் வெட்டி தன்னை எல்லாவற்றிலிருந்தும் விடுவித்துக்கொள்கிறது. பார்த்தீர்களா? அந்த வார்த்தையாகிய பட்டயத்தைப் பிடிக்க விசுவாசம் என்னும் கரம் தேவைப்படுகிறது.
 
106. ... மற்ற எல்லோருமே இந்த வலையில் சிக்கிக் கொண்டுள்ளனர். அங்கு  ஒரு கூட்டம் மக்கள் ஒன்று சேர்ந்து அறிவைப் பயன்படுத்தி சிந்திக்கின்றனர். மனிதனுக்கு அதிகமான கௌரவம் உண்டு. இங்கு ஒரு பேராயர் உட்கார்ந்து கொண்டிருக்கிறார், பொதுவான மேற்பார்வையாளர், அவர் ஏதாவதொன்றைச் சொன்னால், ஒரு சின்ன அள் என்ன? சொல்ல முடியும்? அவன் ஏதாவதொன்றைச் சொல்ல பயப்படுவான். "நீர் சொல்வதை நான் ஆமோதிக்கிறேன். ஆம், அது உண்மை! உ! ஊ! ஆம், பேராயர் அவர்களே, போதகர் அவர்களே, அது முற்றிலும் உண்மை" என்பான். அவன் அவருடன் ஒத்துப்போகிறான்.
 
109. ஒரு ஸ்தாபனத்தில் மனிதர் ஒன்று கூடும்போது, அவர்கள் உட்காருகின்றனர்; சிறிய ஆட்கள் ஏதாவது சொல்ல பயப்படுகின்றனர். ஏனெனில் பேராயர் இவ்விதம் உரைத்துள்ளார். அந்த மனிதனை அவமதிக்க வேண்டாம். அவர் நல்லவர் என்று நம்புங்கள். ஆனால், தேவனுடைய வார்த்தையே சரியென்றும் அதற்கு முரணான மற்ற எல்லாமே தவறு என்பதை எப்பொழுதும் நினைவில் வைத்திருங்கள். "என் வார்த்தையே சத்தியம், மற்றெந்த மனிதனுடைய வார்த்தையும் பொய்" (ரோமர் 3:4). அதை கண்டீர்களா? அதை தான் நாம் செய்ய விரும்புகிறோம், அதை                 நாம் விசுவாசிக்க விரும்புகிறோம்………………………………………………………………………
 
113. ஆனால் பாருங்கள்? பெந்தெகொஸ்தே நாளில் அவருடைய ஜீவன் வெவ்வேறாகப் பிரிந்தது. அந்த அக்கினி ஸ்தம்பம் இறங்கி வந்தபோது அது அக்கினி நாவுகளாகப் பிரிந்து அவர்கள் ஒவ்வொருவர் மேலும் அமர்ந்தது. தேவன் ஜனங்களின் மத்தியல் தம்மை பிரித்துக் கொள்ளுதல். ஏனெனில் கணவனும் மனைவியும் ஒருவர் போல, சபையும் கிறிஸ்துவும் ஒருவரே.
செய்தி: கேள்விகளும் பதில்களும் 2:21 64-0830M

15. இயேசுவானவர் உலகத்திற்கு வந்தபோது, அவரை புரிந்துக்கொள்ள முடியாமற் போயிற்று. அவர்கள் மட்டும் அந்த நாட்களில் அவர்களுடைய பாரம்பரியத்தை பாராமல், தேவனுடைய வார்த்தையை நோக்கி பார்த்திருப்பார்களேயானால், அவர்தான் தேவகுமாரன் என்று அவர்கள் அறிந்திருப்பார்கள். ஏனெனில் வேதமானது அவருடைய முழு வருகையை குறித்தும் யாவரும் அறியும் படியாக அறிவிக்கிறது. அவர் வார்த்தையின் முழு வெளிப்படுத்தலுடன் வருகிறார்.

26. இதை நான் மரியாதையுடன் சொல்லுகிறேன். ஆனால் இது உங்களுக்குள் பதிய வேண்டும் என்பதற்காக சொல்லுகிறேன். அன்று காலையில் சந்தித்த அந்த ஊழிக்காரர் கூட்டத்தை காட்டிலும், ஆப்பிரிக்காவை சேர்ந்த மாந்திரீக வைத்தியர் கூட்டத்திடம் அதிக புரிந்துக்கொள்ளுதலும், மேலான ஒரு ஐக்கியமும் எனக்கு இருந்தது. அவர்கள் தேவனுடைய வார்த்தைக்கு அதிக சிரத்தை காட்டினார்கள். கேள்விகள் கேட்டார்கள். எனக்குள்ளாக அழுந்தி இருந்ததான நம்பிக்கையை நித்திய ஜீவனின் நம்பிக்கையை என்னால் அவர்களுக்கு கொடுக்க முடிந்தது.

27. இந்த ஊழியக்காரர்களுக்கு அப்படிப்பட்ட காரியங்களுக்கெல்லாம் நேரமே இல்லை. மிகவும் சீக்கிரமாக, ஏதோ நீ சொன்ன மாத்திரத்தில், எழும்பி போய்விடுவார்கள். அந்த விதமாகதான் அது இருக்கின்றது. அவர்கள் தாங்களாகவே அதை குறித்து ஒரு எண்ணத்தை உடையவர்களாய், கொஞ்ச நேரம் அப்படியே இருந்து போய்விட்டார்கள். அவ்வளவுதான் அவர்களுக்கு அறியவேண்டியிருந்தது. அவர்கள் விசுவாசிக்கின்ற காரியத்தில் ஒரு வார்த்தை ஒப்புக்கொள்ளக் கூடாமற் போகுமானால், அவர்களால் தரித்திருந்து அதை முழுவதுமாக கேட்க முடியாது. அதே காரணத்தினால்தான் அவர்களால் இயேசுகிறிஸ்துவை அவருடைய முதலாம் வருகையின் போது அவர்களால் ஏற்றுக்கொள்ளக் கூடாமற் போயிற்று, அந்த காரணத்தினால்தான் அவருடைய இரண்டாம் வருகையில் காண தவறிவிடுவார்கள்.

28. ஒவ்வொரு முறையும் அவர்கள் காணத்தவறிவிடுகிறார்கள். அவர்கள் எப்பொழுதும் அப்படிதான்……

29. இருந்த போதிலும், இவை எல்லாவற்றின் மத்தியிலேயும், நாம் நோக்கி பார்க்கும் படியாய் கட்டளையிடப்பட்டுள்ளோம். பூமியின் எல்லை யெங்குமுள்ளவர்களே என்னை நோக்கிப் பாருங்கள்.
32.எனக்கு ஒரு காரியம் தெரியும். அது என்னவென்றால் இயேசுகிறிஸ்துவை, அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையில் அறிவேன் எனக்கு தெரிந்ததெல்லாம் அதை குறித்து சொல்வதே.

42. ஆதியாகமம் துவங்கி, ஒவ்வொரு தலைமுறைக் கென்றும் தேவனுடைய வார்த்தையின் ஒரு பகுதியானது சரியானபடியாக ஒதுக்கப்பட்டிருக்கின்றது. தேவன், எப்பொழுதும் யாரையாவது அனுப்புகிறார். வழக்கமாக பிரசங்கிமார்கள் அதை அவ்வளவாய் அது ஒரு பாரம்பரியமாக ஆகுமட்டாய் குழப்பிவிடுகிறார்கள். இயேசுவின் வருகையில் அது இருந்தது போன்று.

112. …நீங்கள் சுவிசேஷத்தை சுமந்து கொண்டு போகும்போது, பரிசுத்த ஆவியானவர் உள்ளே வந்து, ஒரு கூட்ட பழைய விதமான ஜனங்களின் மத்தியில் அதை ரூபகாரப்படுத்துவாரானால், அது உங்களுக்கு அந்நியமாய் காணப்படுவதில் ஆச்சரியம் ஏதுமில்லை. உங்களுக்கு அதை விசுவாசிப்பது கடினமாயிருக்கும்.

117. …பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படாமல், பிரசங்கம் செய்ய எந்த மனிதனுக்கும் உரிமையில்லை. சரியா! வேத சாஸ்திரிகளும் கணித மேதைகளும் மற்றவர்க்களும் உள்ளது அற்று போகும்படி அவை எல்லாவற்றையிம் உனக்கு விவரிக்ககூடும். ஆனால் ஒரு மனிதன் எப்பொழுதாவது வனாந்திரத்திற்கு பின்பக்கமாக போய் அந்த பரிசுத்த இடத்தில், மோசேயை போன்று தேவனை சந்தித்திருப்பானேயானின், அவனிடமிருந்து அதை எடுத்துப்போட ஒருவனாலும் முடியாது. அவன் அறிந்திருக்கிறான். அங்கிருந்தவன் அவனே. அதை குறித்து அவனுக்கு சொல்ல அங்கே ஒருவனும் இல்லை. அவன் அங்கு இருந்தான். அந்த காரணத்தின் நிமித்தமாகத்தான் இயேசு அவருடைய சீஷர்களுக்கு “நீங்கள் எருசலேமுக்கு போய், பரத்திலிருந்து நீங்கள் வல்லமையை பெற்றுக் கொள்ளுமட்டாய் பிரசங்கியாதிருங்கள். அதற்குப் பின்பு நீங்கள் எனக்கு சாட்சிகளாய் இருப்பீர்கள்” என்று கட்டளையிட்டார். அதைத்தான் அவர்கள் கண்டார்கள். ஆம் ஐயா!

127. நண்பர்களே! அமெரிக்காவுங்கூட அதை செய்யப்போகின்றது. ஒரு நாளில் அவர்கள் நோக்கிப்பார்த்து உண்மையாகவே அது “தேவகுமாரன்” என்று சொல்லபோகிறார்கள். ஆனால் அது காலம் கடந்ததாயிருக்கும். கடைசி முறையாக அவர்கள் சிரித்து பரிகசித்தார்கள்.

128. எந்த இடத்தில் அவன் இரட்சிக்கப்பட்டிருக்கக்கூடும் என்பதை மட்டுந்தான் அவனால் நோக்கி அப்பொது பார்க்க முடியும். ஆனால் அச்சமயம் அது மிகவும் காலம் கடந்ததாயிருக்கும். ஜீவனின் அதிபதியை அவன் சிலுவையிலறைந்தான்.

129. அவர்கள் மத்தியிலேயே சரியாக அவர் யாரென்று தெளிவாக ரூபகாரப்படுத்திக் காணும்போதே, இன்றைக்கு, அநேக சமயங்களில் ஜனங்கள் இயேசு கிறிஸ்துவை அவர்களுடைய இருதயங்களிலிருந்து தள்ளிப் போடுகிறார்கள். ஆம் ஐயா.

185. உங்களுக்குத் தெரியும் சுகமளிக்கும் வரம் என்றால் என்னவென்று? சுகமளித்தலில் விசுவாசம். புரிகின்றதா? யாரோ ஒருவருக்கு ஜெபிக்கும் படியாக, நீ உன்னுடைய விசுவாசத்தை அனுப்புகிறாய். அவ்வளவுதான் சுகமளிக்கும் வரமெல்லாம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஊழிக்காரனும் அதை உடையவனாயிருக்க வேண்டும். புரிகின்றதா. சுகமளிக்கும் வரம் உன்னிடத்தில் இருக்க வேண்டும்.  உன்னை சுகப்படுத்துகிற வல்லமை உனக்கு உள்ளாக இருக்கிறது பரிசுத்த ஆவி. அது தானாய் தன் வழியே வெளியே வரும்படியாய் நீ விடவேண்டும் அவ்வளவுதான்.

இயேசுவை நோக்கிப்பார்த்தல் 64-0122

15. ஒரு அவசர நிலை ஏற்படும் போது, அதுதான் தேவனை நோக்கிப்பார்க்க வேண்டிய நேரம். அவசர நிலை வரும்முன் அவரை நோக்கிப் பார்த்திருந்து அவரோடு நட்பாயிருங்கள். இது நமக்குத் தெரியும். தேவனிடம் நமக்கு ஆதரவு உண்டாயிருக்குமானால், வேறு எந்த்த நண்பனிடமும் கேட்பது போல நாம் அவரிடம் எதுவும் கேட்கக்கூடும்; ஆபத்துக் காலத்தில் அநுகூலமான துணையுமானவர் அவர்.

19.  …இப்பொழுது அநேகமுறை, சில காரியங்கள் நிகழ்வதை பயங்கரமென்று எண்ணுகிறோம். ஆனால் தேவன் உங்களை அதுபோன்ற கட்டங்களுக்குள் வழிநடத்துவதாயிருக்கக் கூடும். அவர் அதை சொன்னபோது அவர் அதைச் செய்வார்.

41. மணவாட்டியையும், அவளிருக்கும் நிலையையும் நாம் காண்கிறோம். சபையானது புறப்பட ஆயத்தப்படுக்கொண்டிருக்கிறது என்பதை நாம் இயற்கையின் மூலமாகவே அறிகிறோம். என்ன ஒரு மகத்தான நேரம். எல்லாத் தீர்க்கதரிசிகளும் காண வாஞ்சித்த நேரம் இது, இந்த மணி நேரம்.

44. “இந்த மனிதன் நாங்கள் விசுவாசிப்பதைப் போல விசுவாசிப்பதில்லை. ஆண்டவரே, இவரை ஊழியத்தில் வைத்ததன் மூலம் நீர் ஒரு தவறை செய்து விட்டீர்” என்று அவரிடம் சொல்லி அவரைத் திருத்த துணியக்கூடியவன் யார்? தேவன்ன் அதில் தவறு செய்து விட்டார் என்று தேவனிடம் சொல்லப்போகிறவன் யார்? “நீ குற்றவாளி” என்று நான் சொல்லத்தக்கதாக குற்றம் புரிந்தவனைக் காட்டிலும் மோசமானவனாலேயே அது கூடும். தாம் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை தேவன் அறிவார். யாரைத் தெரிந்தெடுப்பது என்றும், யாரைத் தெரிந்தெடுக்கக் கூடாதென்றும், என்ன செய்ய வேண்டுமென்றும், எப்பொழுது செய்யவேண்டுமென்றும் அவர் அறிவார். ஒரு குறிப்பிட்ட வேலையைச் செய்ய ஒரு குறிப்பிட்ட ஆள் தகுதியுள்ளவர் என்று நாம் எவ்வளவுதான் எண்ணினாலும், அந்தக் காலத்திற்கும், பருவத்திற்கும், அல்லது அந்தக் காலத்திற்கும் அதை செய்வதற்கேற்ற வேளைக்கும் தகுதியானவர் யார் என்பதை தேவன் அறிவார்.

45. ஆகவே மெய்யான உண்மையான கிறிஸ்தவன், தேவன் பேரில் மெய்யான உண்மையான விசுவாசமுள்ள மனிதன், இத்தகைய காரியங்களுக்காக கர்த்தருக்கு காத்திருப்பான். உங்கள் ஊழியத்தைக் குறித்து காத்திருங்கள். நீங்கள் அழைக்கப்படுவதாக உணர்ந்தால், அது தேவன் தான் என்று நிச்சயித்துக் கொள்ளுங்கள். அது சரியானது என்ற நிச்சயத்தோடிருங்கள். நீங்கள் என்ன சொல்லுகிறீர்களோ அது அந்தக் காலத்திற்கேற்றது என்ற நிச்சயம் உங்களுக்கிருக்கட்டும். “கர்த்தருக்கு காத்திருக்கிறவர்களோ புதுபெலன் அடைந்து கழுகைப்போல செட்டைகை அடித்து எழும்புவார்கள். அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள். அவர்கள் நடந்தாலும் சோர்ந்து போகார்கள்” என்று வேதாகமம் கூறியிருக்கிறது.

64. அநேகமுறை, தேவன் மனிதருடன் இடைப்பட்டு, அவர்களுக்கு ஒரு வரத்தை அளிக்கும்போது, மக்கள் அந்த மனிதர்களை நெருக்குகின்றார்கள். அவர்கள் தேவனுடைய சரியான அழைப்பைப் பெற்று அவரால் அனுப்பப்பட்டிராவிட்டால், மக்கள் அவர்களை கட்டாயப்படுத்துவதன் மூலம் அந்த மனிதனையோ அல்லது ஸ்திரீயையோ தேவனுடைய சித்தமில்லாத ஏதாவதொன்றை சொல்ல வைத்து விடுவார்கள்.

78.  …என்ன காலம் நடந்து கொண்டிருக்கிறது என்பதைக் காணமல், அவர்கள் பழைய ஸ்தாபனங்க்களைக் கலந்தாலோசிக்கிறார்கள். வருஷத்தில் சில குறிப்பிட்ட காலங்களைத்தவிற, மற்ற காலங்களின் சில உணவுப் பொருள்களை உங்களால் உற்பத்தி செய்யமுடியாது.

79. … தேவனில்லாமல் உடன்படிக்கைப் பெட்டியால் பிரயோஜனம் என்ன? அது வெறும் மரப்பெட்டி, அதனுள் இரண்டு கற்பலகைகள் இருந்தன. அது இராப்போஜனம் எடுப்பது, ஞானஸ்நானம் பெறுவது போன்றது. நீ முதலில் மனந்திரும்பியிராவிட்டால், நீ ஞானஸ்நானம் பெற்றுக்கொள்வதால் என்ன பிரயோஜனம்? தேவனுடைய வார்த்தைக்கேற்ற ஜீவியம் ஜீவிக்காமல், தேவனுடைய மற்றெல்லா வார்த்தையையும் விசுவாசியாமல், இராப்போஜனம் எடுத்துக்கொண்டு ஒரு மாய்மாலக்காரனாவதல் என்ன பிரயோஜனம்? அதில் ஒரு பகுதியை மட்டும் எடுத்துக்கொண்டு மற்றதை எடுத்துக் கொள்ளாமல் போவது, அங்கே ஏதோ தவறிருக்கிறது என்பதைக் காட்டுகிறது.

94. ஓ, சகோதரனே, கவனி! நாம் எந்த நேரத்தில் வசிக்கிறோம்? இது எந்தக் காலம்? எந்த மணி நேரத்தில் நாம் வசிக்கிறோம்? அவர்கள் பேசிக்கொள்ளுகிற இந்தக் காரியங்களுக்கு இது நேரமல்ல. அது கடந்து விட்டது. நியாயதீர்ப்பு இப்போது இங்கேயிருக்கிறது. அது நிகழ ஆரம்பிப்பதை நீ பார்க்கலாம். மலையுச்சியின் மேலிருந்த கற்பாறை நினைவிருக்கிறதா? நியாயத்தீர்ப்பின் நேரம் மணவாட்டியைக் குறித்து வெளிப்பாடு அல்லது தரிசனம் நினைவிருக்கிறதா? அவள் (சரியான) நடை தவறாமல் போகும்படி மட்டும் பார்த்துக்கொள். அவள் நடை தவறிப்போக விட்டு விடாதே.

102. இப்போது, முன்னுரைக்கப்பட்டு “கர்த்தர் உரைக்கிறதாவது” என்று சொன்ன காரியங்கள் நிகழ்வதை அவர்கள் காணும் போது, “உங்கள் எண்ணெயில் எங்களுக்கு கொஞ்சம் கொடுங்கள்” என்று அவர்கள் கூறுகிறார்கள். பாருங்கள்?

103. ஆனால் இப்போது, செல்வாக்கை கவனியுங்கள். சில சமயங்களில் பெரிய மனிதர்கள் ஒன்று கூடுகிறார்கள். அவர்கள் இவ்வாறு கூறுவதை நீங்கள் கேட்கலாம். பெரிய இன்னார்-இன்னார் மற்றும் மகத்தான இன்னார்-இன்னார், நம்முடைய பெரியவர்… அதை ஒருபோதும் செய்ய வேண்டாம் நம்மில் மகத்தானவர் ஒருவரும் கிடையாது. மகத்தானவர் ஒரே ஒருவர்தான் உண்டு. அவர் தேவன். நாம் சகோதரர்களும், சகோதரிகளுமாயிருக்கிறோம். ஐந்து பேர் கொண்ட சபையின் மேய்ப்பனாக நீங்கள் இருந்தாலும் எனக்கு கவலையில்லை; அது உங்களை சிறியவராக்குவதில்லை. அது உங்களை ஒரு சகோதரனாக்குகிறது. (பாருங்க்கள்?) நீங்கள் தேவனுடைய வார்த்தைக்கு உண்மையா யிருப்பீர்களானால். என்ன எப்படி என்பதைக் குறித்து கவலையில்லை. நீங்கள் குறைவாகப் பெற்றுக் கொள்வதில்லை. தேவனுக்கு சிறு பிள்ளைகளென்றும் பெரிய பிள்ளைகளென்றும் இல்லை. அவருக்கு பிள்ளைகள் மட்டும் உண்டு; அவர்களனைவரும் ஒன்றாகவேயிருக்கிறார்கள்.

104. கவனியுங்கள், தேவன்தாமே நம்மில் ஒருவராகத்தக்கதாக மகிமையின் தந்தம் மாளிகையிலிருந்து இறங்கி வந்தார். இப்போது யார் பெரியவர்? ஒரு ஆசாரியனின் ரூபத்தை எடுக்க அவர் இங்கு இறங்கி வரவில்லை. ஆனால் ஒரு வேலையாளைப் போல ரூபமெடுத்து தாம் உண்டாக்கின களிமண்ணைக்கழுவ, தம்முடைய அப்போஸ்தல்களின் கால்களை கழுவ… இப்போது யார் பெரியவர்?

125. மனிதன் எவ்வளவுதான் உண்மையும் உத்தமமுமாக செய்தாலும், தேவன் அதை வெளிப்படுத்துவதற்கு அளித்துள்ள வழிக்கு புறம்பாக அவன் அவருக்கு சேவை செய்ய முயலும் போது அதைக் குழப்பிவிடுகிறான். தேவன் அதை தம்முடைய வழியிலே அமைக்கிறார். மனிதனோ, அதற்கு புறம்பாக செயல்படும்போது, எவ்வளவுதான் உண்மையும் உத்தமமுமாக செய்ய முயன்றாலும் நீங்கள்-நீங்கள் அதைக் குழப்பிவிடுகிறீர்கள்.

137. அநேக உண்மையான மக்கள் ஒரு ஸ்தாபனத்தையோ அல்லது ஒரு கூட்டத்தையோ அல்லது ஒருவித மத அணுசரணை முறையையோ சென்று சேர்ந்து கொள்கின்றனர். அங்கே அவர்கள் ஆவிக்குரிய மரணம் அடைகின்றனர். அவர்களிடம் உங்களால் ஒன்றும் சொல்ல முடியாது. அவர்கள் அந்த ஸ்தாபனங்களின் உபதேசத்தால் பலமாய் நிரப்பப்படுகின்றனர். “ஏன், இந்த அத்தியட்சகர்கள் இதை, இதை, இதை, இதை சொன்னார்கள்” என்பார்கள். நீங்கள் தேவனுடைய வார்த்தையிலிருந்து “கர்த்தர் உரைக்கிறதாவது” என்பதை அவர்களுக்கு காட்டினால், “ஆனால் எங்கள் போதகர்…” என்பார்கள். உங்கள் போதகர் என்ன கூறுகிறார் என்பதைக் குறித்து எனக்குக் கவலையில்லை. நான் என்ன கூறுகிறேன் என்பதைக் குறித்தும் எனக்குக் கவலையில்லை. அல்லது மற்ற யார் கூறுவதைக் குறித்தும் கவலையில்லை. அது தேவனுடைய உறுதிப்படுத்தப்பட்ட வார்த்தைக்கும், மணி நேரத்திற்கும், காலத்திற்கும், செய்திக்கும் ஆகிய காரியங்களுக்கு மாறுபட்டிருந்தால் அதை மறந்து விடுங்கள். அதை விட்டு விலகியிருங்கள். நியாயத்தீர்ப்பின் நாளன்று நான் உங்கள் ஒவ்வொருவர் முன்பாகவும் நிற்க வேண்டியிருக்கும், அதை அறிவீர்கள்.

139. …கோடா கோடிக்கணக்கான பணம் இருக்கும் போதும் மார்க்கத்திற்காக இன்னஉம் பிச்சைக் கேட்கின்றனர். உத்தமம்தான், சந்தேகமில்லை. சபைகள் சென்று பிரசங்கிக்கின்றன. தங்கள் சபைக்கு புது அங்கத்தினர்களைக் கொண்டு வர ஊழியக்காரர்கள் பிரசங்க மேடைகளில் நின்று கொண்டு தங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்கின்றனர். ஆனால் அது ஒரு புதிய உடன்படிக்கைப் பெட்டி. பின் செல்லவேண்டிய உடன்படிக்கைப் பெட்டி ஒன்றுதான் உண்டு. அது தேவனுடைய வார்த்தையாகும். அந்த உடன்படிக்கைப் பெட்டிக்கு மாறுபட்டதாக எது இருந்தாலும் அதை விட்டு விலகியிருங்கள். அது தேவனுடைய தோள்களின் மீதில்லாதபடி ஒரு புது இரதத்தின் மீது ஏற்றப்பட்டிருக்கிறது. அது உண்மை. அந்தக் காரியத்தைவிட்டு விலகியிருங்கள். அதோடு உங்களுக்கு எந்தவித தொடர்பும் வேண்டாம்.

145. …சபையார் முந்நூறு ஆண்டுகளுக்கு அல்லது அதற்கு அதிகமான ஆண்டுகளுக்குமுன் விழுந்ததையும், அநேக நூற்றாண்டுகளுக்கு முன் விழுந்ததைப் புசிக்க முயல்கின்றனர். அவர்கள் பழைய மன்னாவைப் புசிக்க முயல்கின்றனர். ஓ, சகோதரனே, அது தேங்கி நிற்பதால் அசுத்தமானது. அது கெட்டுப்போனது. அது…அதில்-அதில்-நான் எப்போதும் சொல்வதுபோல அதிலே புழுக்கள் நெளிகின்றன. அதைச் சாப்பிடுவாயானால் அது உன்னைக் கொல்லும்.

147. …கர்த்தர் உரைக்கிறதாவது அது பரிசுத்த வேதாகமத்திலுள்ளது..தேவன் அதை முழுமையாக பரிபூரணமாக அடையாளம் காட்டி அதுவே சத்தியம் என்று கடந்த முப்பத்து மூன்று ஆண்டுகளாக உயர வானத்திலும் மற்றெல்லாவற்றிலும் அடையாளங்களினாலும், அற்புதங்களினாலும் அதை உறுதிப்படுத்தியிருக்கிறார். அதற்கு அவர்கள் செவி சாய்ப்பார்களென்று நினைக்கிறீர்களா? இல்லை. அவர்கள் மரித்துப்போனார்கள். அவர்கள் ஏதோ ஒன்றிடம் தங்கள் கையை நீட்ட அது அவர்களை முற்றுமாக கொன்றுவிட்டது. இல்லை, இனி பிரயோஜனமில்லை, இனி பிரயோஜனமில்லை-ஒருபோதுமில்லை.

153. ….எந்த மனிதனும் தன்னைத் தவறாகப் பார்ப்பதில்லை. தேவனுடைய வார்த்தையாகிய கண்ணாடியில் உன்னை நீ பார்க்கும்போது அதுதான் நீ தவறு செய்கிறாயா? இல்லையா? என்று கூறுகிறது. …..

158. கிறிஸ்துவே நம் உடன்படிக்கைப் பெட்டியாயிருக்கிறார். ஆனால் அவர்களோ அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். கிறிஸ்துதான் வார்த்தை. அவர்களோ அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவர்களுக்கு அவர்கள் கொள்கைதான் வேண்டும், அவர்கள் ஸ்தாபனங்கள் வேண்டும். அல்லது-அல்லது-அல்லது ஒரு புது வாகனம் வேண்டும். கிறிஸ்துவே நமது உடன்படிக்கைப் பெட்டி என்பதை நினைவில் கொள்ளுங்கள். கிறிஸ்துதான் வார்த்தை என்பதை விசுவாசிக்கிறீர்களா? அப்படியானால் வார்த்தைதான் உடன்படிக்கைப் பெட்டியாகும். அது சரியா? சரிதான். கிறிஸ்து தமது சரியான ஸ்தானத்திற்கு எந்த ஸ்தாபன இரதத்தின் மூலமாகவும் கொண்டு செல்லப்பட முடியாது. கிறிஸ்து ஒரு தனிப்பட்ட நபருடன் இடைபடுகிறார். ஒரு கூட்டத்தினருடன் அல்ல. ஒரு கூட்டத்தினருடன் அவர் ஒருபோதும் இடைப்பட்டது (காரியங்களைச் செய்தது) கிடையாது; ஒரு தனிப்பட்ட நபர். எப்போது அவர்? … அப்படி அவர் செய்தால் அவர் தம்முடைய வார்த்தைக்கு முரண்பாடாக செய்கிறவராவார். ஆமோஸ 3:7. தேவனுடைய வார்த்தையை பொய் சொல்ல வைக்க உங்களால் கூடாது. இல்லை, ஐயா! அது-அது சத்தியம்.

162. பாருங்கள், தேவனுடைய ஆவியை தங்களுக்குள் பெற்றவர்கள் இன்றைக்குரிய வாக்குத்தத்தைப் பார்க்கிறார்கள். அதைத் தாங்கள் காணும்வரை அதற்காக கவனித்திருந்து காத்திருக்கிறார்கள். அதைக் கண்டவுடன் “அதுதான் இது” என்கிறார்கள். தேவன் அவர்களுக்கு அதை வெளிப்படுத்துகிறார்.

செய்தி: தேவ சித்தத்திற்குப் புறம்பாக அவருக்கொரு சேவை செய்தல் 65-0718.

Thursday, January 10, 2013

பரிசுத்த ஆவியின் அத்தாட்சி

பரிசுத்த ஆவியின் அத்தாட்சி

47. நீங்கள் ஆவியினால் நிறையப்படும்போது, எனக்குத் தெரிந்த மிகச் சிறந்த அடையாளங்களில் இது ஒன்றாகும்; அதாவது நீங்கள் கிறிஸ்துவில் மிகவும் அன்புகூர்ந்து, அவர் உரைத்துள்ள ஒவ்வொரு வார்த்தையும் சத்தியம் என்று விசுவாசிப்பீர்கள். பாருங்கள்? அதுவே பரிசுத்த ஆவியை நீங்கள் பெற்றுக் கொண்டீர்கள் என்பதன் அத்தாட்சியாகும். உங்கள் வாழ்க்கை சந்தோஷத்தினால் நிறைந்திருக்கும். ஓ, என்னே, எல்லாமே முன்னைக்காட்டிலும் வித்தியாசமாயிருக்கும். அதுதான் பரிசுத்தாவி.

51. இப்பொழுது கவனியுங்கள். இயேசு, “விசுவாசிக்கிறவர்கை இந்த அடையாளங்கள் தொடரும்” என்று உரைத்தார். பாருங்கள்? விசுவாசிக்கிற குழுக்களின் மூலமாக பரிசுத்த ஆவியின் முழு சுபாவமும் பாய்ந்தோடுகிறது. அவர்கள் அன்பினால் நிறைந்தவர்களாய் உள்ளனர். பாருங்கள், அதுதான் பரிசுத்த ஆவி. அவர்கள் தங்களுக்கு அந்நிய பாஷைகள் உண்டாகும் தருணத்தில் அந்நிய பாஷைகள் பேசுகின்றனர். அதற்கு அவசியம் உள்ள போது அவர்கள் அந்நிய பாஷைகள் பேசுகின்றனர். ஒரு தீர்க்கதரிசனம் உண்டாகுமானால், அதை உரைக்கின்றனர். ஓ, அது ஒவ்வொரு முறையிம் மிகவும் பரிபூரணமாக அமைந்துள்ளது.

55. இப்பொழுது, இந்த கூட்டத்தை நான் தர்மசங்கடத்தில் ஆழ்த்த விரும்பவில்லை, என்னையும் உங்கள் முன்னிலையில் தர்மசங்கடத்தில் ஆழ்த்திக்கொள்ள விரும்பவில்லை. இன்று காலையில் நான், இக்கூட்டத்தில் யாருக்கெல்லாம் பரிசுத்த ஆவி உள்ளதென்று கேட்டால், ஒருக்கால் உங்களில் 95% உங்களுக்கு பரிசுத்த ஆவி உள்ளதென்று கரங்களை உயர்த்தக்கூடும். அதன்பிறகு நான் உங்களுக்கு பரிசுத்த ஆவியை பெற்றுக்கொண்டதற்கான வேத அத்தாட்சியை கொடுத்தால், ஒரே ஒரு வேத அத்தாட்சி, ஒன்றிரண்டு கைகளும் உயர்த்தக்கூடுமா? என்பது எனக்கு சந்தேகம் தான். பாருங்கள், பாருங்கள்? அந்தவிதமான ஓரிடத்தில் உங்களை கட்டி விடுதல். ஆனால் அவ்விதம் செய்யும் போது, உங்கள் சபையோரை நீங்கள் புண்படுத்துகிறீர்கள். ஆனால் நீங்கள் அவர்களை குழந்தை பருவத்தை விட்டு மனித பருவத்துக்கு கொண்டு வர வேண்டியவர்களாயிருக்கிறீர்கள். பாருங்கள்?.

69. இப்பொழுது என்ன? இங்கு ஒரு நிமிடம் உங்களுக்கு ஒரு சிறு பிரச்சனையை அளிக்க விரும்புகிறேன். நான், “எத்தனை பேர் பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கிறீர்கள்?” என்று கேட்டால் நீங்கள் எல்லோருமே கைகளை உயர்த்துவீர்கள். நான், “சரி, நீங்கள் பெற்றீர்களா? என்று பார்க்கப் போகிறேன்” என்று கூறுவதாக வைத்துக் கொள்வோம். பரிசுத்த ஆவியைப் பெற்றிருந்தவர்கள் நகரத்தில் நடக்கும் அருவருப்புகளினிமித்தம் இரவும் பகலும் பெருமூச்சு விட்டு கதறி அழுதனர் என்று வேதம் உரைக்கிறது. இப்பொழுது, எத்தனை கரங்கள் உயர்த்தப்படும்? உங்களில் எத்தனைப்பேர் தேவனுடைய வல்லமையினால் நிறைந்து மகிழ்ச்சியினால் பொங்கி, இரவில் இளைப்பாற முடியாமல், இழக்கப்பட்ட ஜனங்களுக்காக பரிதபித்து, அருவருப்புகளின் நிமித்தம் இரவும்,பகலும் கதறி அழுகின்றீர்கள்? நீங்கள் செய்வதில்லை…பாருங்கள்? அப்படிப்பட்டவர்கள் நகரதில் யார் இருக்கின்றனர்? அப்படிபட்டவர்கள் எத்தனைப்பேர் சபையில் இருக்கின்றனர்? அதுவே பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டதன் அத்தாட்சி என்று வேதம் உரைக்கிறது.

71. யோசுவா கானான் தேசத்துக்குள் பிரவேசித்த போது, அவன், “நீங்கள் யாரையும் உயிரோடு விடாதீர்கள். அது சிறு குழந்தையாயிருந்தாலும்-சிறு அமலேக்கியன் அல்லது எமோரியனாயிருந்தாலும்-அதைக் கொன்று போடுங்கள். அவன் வளர்ந்து பெரிய அமலேக்கியன் ஆவான் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள்; அவன் பாளையத்தை அசுசிப்படுத்துவான்” என்றான். அது போன்று தேவனுடைய வசனத்துடன் இணங்காத சிறு காரியங்கள் வரும்போது, அதை ஒழித்து விடுங்கள். அது எந்த ஸ்தாபனத்தை சேர்ந்ததாயிருந்தாலும் எனக்கு கவலையில்லை.

72.  நீங்கள், “நல்லது, அவர்கள் நல்லவர்கள்” எனலாம். அவர்கள் எவ்வளவு நல்லவர்களாயிருந்தாலும் எனக்குக்கவலையில்லை. அவர்கள் வார்த்தைக்கு முரணாயிருப்பார்களானால் அதை உங்களை விட்டு அகற்றி விடுங்கள். அது வளருகின்ற சிறு அமலேக்கியன். காண்பதற்கு அழகாகவும் களங்கமில்லாதவனை போலவும் இருக்கலாம்; அது சரியாயுள்ளது போல் காணப்படலாம். ஆனால் அதனுடன் எந்த தொடர்பும் கொள்ளாதீர்கள். அதிலிருந்து விலகியிருங்கள்.

73. “நல்லது, சகோ.பிரான்ஹாமே, அங்கு நான் ஏன் போகிறேன் என்றால்…நல்லது, நான்…”இதை மட்டும் ஞாபகம் கொள்ளுங்கள், எந்த அமலேக்கியானாலும், அது வார்த்தையை மறுதலிக்கிற எதுவாயிருந்தாலும், அதை விட்டு விலகியிருங்கள்; அதனுடன் யாதொரு சம்பந்தமும் கொள்ளவே வேண்டாம்! அது உண்மையென்று எத்தனே பேர் விசுவாசிக்கிறீர்கள்? அது நிச்சயமாக உண்மையே. பாருங்கள்? அதை விட்டு விலகியிருங்கள்!

74. நகரத்தில் செய்யப்படுகிற அருவருப்புகளின் நிமித்தம் பெருமூச்சு விட்டு அழுகிறவர்கள்…அதை எங்கு காண்கிறீர்கள்? அந்நிய பாஷை பேசுகிறவர்களுக்கு; உண்மையில் பாவத்துக்காக பாரப்பட்ட ஒருவரை மட்டுமே நான் உங்களுக்கு காண்பிக்க முடியும்…ஒரு மணி நேரமாவது ஜெபிப்பவர். ஆனால் வேதம் அதை உரைத்துள்ளதென்று உங்களுக்கு தெரியுமா?...நகரத்தில் செய்யப்படுகிற அருவருப்புகளினிமித்தம் பெருமூச்சு விட்டு அழுகிறவர்களின் நெற்றிகளில் மட்டும் அடையாளம் போடு என்று? அதை எத்தனை பேர் படித்திருக்கின்றீர்கள்? நிச்சயமாக. அது ஜனங்களை அடையாளமிடுவதற்காக புறப்பட்டு வருகிற பரிசுத்த ஆவி. அவர் சங்காரத் தூதனிடம், “நீ புறப்பட்டுப் போய், நெற்றிகளில் அடையாளமில்லாத எல்லோரையும் சங்கரித்துக் கொன்று போடு” என்றார். தேவனுடைய அடையாளம் பரிசுத்த ஆவி; அதுதான் தேவனுடைய முத்திரை.

75. இப்பொழுது, அவ்வளவு அக்கரை கொண்டுள்ள ஜனங்கள் இன்று எங்கே? மேலும் கீழும் குதித்து சபையில் அழும் மக்களை என்னால் உங்களுக்கு காண்பிக்க முடியும். கூச்சலிட்டு கட்டிடம் முழுவதும் ஓடுகின்ற மக்களை என்னால் உங்களுக்கு காண்பிக்க முடியும். தீர்க்கதரிசனம் உரைத்து அது நிறைவேறுகின்ற மக்களை என்னால் உங்களுக்கு காண்பிக்க முடியும்; அந்நிய பாஷைகள் பேசுகிறவர்களையும், தீர்க்கதரிசனம் உரைத்து, அதற்கு அர்த்தம் உரைத்து, அது நிறைவேறுகின்ற மக்களையும் என்னால் உங்களுக்கு காண்பிக்க முடியும். ஆனால் நகரத்தில் செய்யப்படுகிற அருவருப்புகளின் நிமித்தம் பெருமூச்சு விட்டு அழுகிற நபர் எங்கே? அந்த பாரப்பட்ட ஆத்துமா எங்கே?  
செய்தி: கேள்விகளும் பதில்களும் 2:21 64-0830M