மணவாட்டி ஊழியம்

மணவாட்டி ஊழியம்

Sunday, February 26, 2012

ONE WEB SITE, FREE ALL LANGUAGE MESSAGES DOWLODING

 www.tamilbridemessage.com 

அனைவருக்கும் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் வாழ்துதல்கள். இந்த ஊழியம் அழைக்கும் செய்தியாய் இருக்கிறது. எங்களுடைய தனிப்பட்ட, எங்களால் அளிக்கப்படும் செய்தியள்ள. முற்றிலும் தீர்க்கதரிசி, ஏழாம் தூதன், சகோ.வில்லியம் மரியன் பிரன்ஹாம் அவர்கள் மூலம் கர்த்தராகிய இயேசுதாமே இந்த பூமியில் இறங்கி வந்து நம்மிடம் பேசிய சத்தமாகும். இந்த செய்திக்காக யாரிடமும் யாரும் கெஞ்சக்கூடாது என்கிற ஒரே நோக்கத்திற்காகத்தான் இந்த இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் ஆவியும் மணவாட்டியும் சேர்ந்து உருவாக்கிய இணையதளமாகும். அனைத்தும் இலவசம்தான். இந்த ஊழியமானது யாரிடமிருந்தும் காணிக்கை பெற்று நடத்தப்படவில்லை. ஒரே ஒருவர்தான் இதற்க்கு தலைமை அது தீர்க்கதரிசி.வில்லியம் மரியன் பிரன்ஹாமின் தேவன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மட்டுமே. இந்த ஊழியம் கிருபையின் ஊற்றிலே, உங்களது அயராது ஜெபத்திலே நடக்கிறது. தாங்கள் இதனால் முற்றிலுமாக தேவனுடைய வார்த்தைகளை இலவசமாக பெற இயலும். நாங்கள் காணிக்கை நிச்சயமாக கேட்கமாட்டோம். உங்களின் ஜெப நேரத்தில் எங்களை நினைவுகூற மட்டும் எப்பொழுதும் கேட்டுக்கொண்டேயிருப்போம். இந்த உதவியை மட்டும் எங்களுக்கு செய்ய தவறவேண்டாம். மேலும் இந்த இணையதளம் உங்களுக்கு பிரயோஜனமாய் இருப்பதுபோல மற்ற உடன் மணவாட்டியின் சரீர அவையங்களுக்கும் தெரியபடுத்துங்கள். அதாவது நமது இணைப்பு யாரென்று நாம் அறியாத காரணத்தால் தாங்கள் வேலை செய்யும் இடம், நீங்கள் சந்திக்கும் நபர் யாராக இருந்தாலும் இந்த இணைய தளத்தை ஒருமுறை காணச்சொல்லுங்கள், அல்லது காணச்செய்யுங்கள், அப்பொழுதுதான் அவர்களுடைய ஸ்தானங்களை அவர்கள் கண்டறிந்துக்கொள்வார்கள். இந்த ஊழியம் இந்த பூமியில் சகல சிருஷ்டிகளுக்கும் கொண்டு செல்ல அனைத்து வழிகளும் செய்து கொண்டிருக்கிறோம். இனி இக்காலத்தில் வந்த இந்த தேவனுடைய சத்தத்தை யாரும் கேட்காதவர்களாயிருக்க முடியாது, கேட்காமல் இருக்கவும் விடமாட்டோம், எந்தவகையிலாவது அவர்களிடம் இந்த செய்தியை கொண்டுபோய் சேர்ப்போம். மேலும் நம்முடைய இணையதளத்தில் மற்ற மொழிகளான ஹிந்தி (HINDI), மலையாளம்(MALAYALAM), ஆங்கிலம்(ENGLISH), தெலுங்கு(TELUGU, பஞ்சாபி(PUNJABI), ஆகிய மொழிகளில் உள்ள MP-3, வீடியோ, புத்தகங்கள், புகைப்படங்கள், பைபிள்- ஆகியவை காணிக்கையின்றி இலவசமாக பதிவிரக்கம் செய்துகொள்ளலாம் (மற்ற மொழிகள் கூடிய விரைவில்) . உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு தெரியப்படுத்துங்கள். 

எங்களுடைய கருத்துக்கள்:-
சத்தியத்தை வாங்குங்கள், அதை எந்த வகையிலும் விற்கவேண்டாம்.

ஊழியத்தை தணியாக பிரித்து பார்த்தால்தான் காணிக்கை எடுத்துத்தான் செய்ய தோன்றும்.
ஊழியம் நம்முடைய குடும்பம் என்று பாருங்கள், அப்பொழுதுதான் உழைத்து ஊழியம் செய்ய தோன்றும்.

பூமியில் நடக்கும் அவலட்சணமான சண்டையில் இதுவும் ஒன்று:
காணிக்கை கொடுப்பவர்கள் காணிக்கை வாங்குபவர்களை குறைகூறுவதும், காணிக்கை வாங்குபவர்கள் காணிக்கை கொடுக்காதவர்களை குறைகூறுவதும் வாடிக்கையான தொழில்துறை சண்டையாக உள்ளது. அவரவர் உழைத்து தன்னிச்சையாக ஊழியம் செய்ய வேண்டாம் தேவன் சொன்னது போல் ஊழிய போர்வையில் பல சரீரங்கள் உயிர்வாழ்கிறது. சிலர் தன்னை பெரிய மனிதாக ஆக்கிக்கொள்ள இந்த செய்தியை மற்றவர்களுக்கு சொல்லும்போதே பயப்படுத்திவிடுகிறார்கள். அநேகர் இதை பயன்படுத்திகொண்டு காணிக்கை என்கிற பெயரில் இந்த செய்தி பெற்ற ஜனங்களின் இரத்தத்தை குடிக்கிறார்கள். இப்படிபட்டவர்களை ஏன் இக்காலத்தின் சத்தியத்தையும், தேவனை அறியாத ஜனங்களையும் சந்திக்க, அல்லது தெருவில் நின்று அறைகூவ சொல்லுங்கள் பார்க்கலாம். அப்பொழுது தெரியும் ஊழியம் என்றால் என்னவென்று இவைகளை நாங்கள் கூறுவதால் எங்களை எதிரியாக பார்த்து புறம்பாக தள்ளிவிடுகிறார்கள் எங்களுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் காரியங்கள்தான்.
தீர்க்கதரிசியிடம் (வில்லியம் பிரன்ஹாம்) தேவன் சொன்ன தேவனுடைய சாட்சி:-
இந்த கடினமாக வழியை நீ தெரிந்த கொண்டதனால்... நீயே அதை தெரிந்து கொண்டாய், நீ அதை ஏற்றுக் கொண்டாய்... என் சொந்த தெரிந்து கொள்ளுதலின்படி அதை தெரிந்து கொண்டாய் (அது நமக்கு நன்றகத் தெரியும், மோசே தானாகவே அதை தெரிந்து கொள்ள வேண்டியதாயிருந்தது).இதுவே பிழையற்ற, சரியான வழி, ஏனெனில் அது என் வழி. என்னே ஒரு மகிமையான தீரடமானத்தை நீ செய்திருக்கிறாய்!... அதன் விளைவாக பரலோகத்தின் ஒரு பெரிய உனக்காக காத்திருக்கிறது. இது தன்னில் தானே தெய்வீக அன்பில் மகத்தான வெற்றியை அளிக்கும்.  (செய்தி:-பனி வெண்புறா சிறகுகள் மேல்)

2.தீமோத்தேயு 4 அதிகாரம் 2 முதல் 5 இப்படியாய் சொல்லுகிறது.
சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு; எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம்பண்ணி, கடிந்துகொண்டு, புத்திசொல்லு.
ஏனென்றால், அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்க மனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு,
சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும்.
நீயோ எல்லாவற்றிலும் மனத்தெளிவுள்ளவனாயிரு, தீங்கநுபவி, சுவிசேஷகனுடைய வேலையைச் செய், உன் ஊழியத்தை நிறைவேற்று.

தயவு செய்து உங்களுக்குகாக வேறு யாரையும் காணிக்கை என்ற பெயரில் சம்பளம் கொடுத்து ஊழியம் செய்ய வேலையில் அமர்த்த வேண்டாம். நாங்கள் முற்றிலுமாய் விசுவாசிக்கிறோம். நீங்களும் மணவாட்டிகள்தான். 
(நீங்கள் மணவாட்டி இல்லையென்றால் நீங்கள் யாரை வேண்டுமானாலும் ஊழிய பணியில் காணிக்கை என்கிற சம்பளம் கொடுத்து வேளையில் அமர்த்திக்கொள்ளலாம்)

நம்மைக் குறித்துதான் வேதம் சொல்லுகிறது:-
ஆவியும் மணவாட்டியும் வா என்கிறார்கள்; கேட்கிறவனும் வா என்பானாக; தாகமாயிருக்கிறவன் வரக்கடவன்; விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன். வெளி.22:17-