மணவாட்டி ஊழியம்

மணவாட்டி ஊழியம்

Wednesday, September 23, 2015

அக்கினிஸ்தம்பம் வெளிப்படையாக தோன்றுதல்




ஒருவர் கூறினார், டாக்டர் டேவிஸ் என்னிடம் கூறினார், ‘பில்லி, நீர் அப்படிப்பட்ட காரியத்தைப் பிரசங்கிக்கிறீரென்றால், சபையின் தூண்களுக்குத்தான் நீர் வார்த்தையைப் பிரசங்கிப்பதாக அது இருக்கிறது.’

‘அப்படியென்றால், நான் தூண்களுக்கு தேவனுடைய வார்த்தையைப் பிரசங்கிப்பேன். ஏனெனில், தேவன் இந்தத் தூண்களைக் கொண்டு ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டு பண்ண வல்லவராயிருக்கிறார்’ என்று பதிலளித்தேன். அது சரிதான். தேவனுடைய வார்த்தை உண்மையாயிருக்கிறது.
‘அவர்கள் நீர் கூறுவதை விசுவாசிப்பார்கள் என்றா எண்ணுகிறீர்கள்?’ என்று கேட்டார்.

‘அது என் வேலையல்ல, அந்த வார்த்தையோடு உத்தமமாக நிலைத்திருப்பதே எனது கிரியையாயிருக்கிறது’ என்று நான் கூறினேன். அது சரிதான்.
அவர் மேலும், ‘தெய்வீக சுகமளித்தல் என்ற உபதேசத்தோடு இந்த கல்வியறிவு நிறைந்த இவ்வுலகை சந்திக்க முடியும் என்று எண்ணுகிறீர்களா?’ என்று கேட்டார்.
‘அது என்னுடைய தெய்வீக சுகமளித்தல் அல்ல, அது அவருடைய வாக்குத்தத்தமாகும். அவரே அந்தக் கட்டளையைக் கொடுத்தவர்’ என்று பதிலளித்தேன்.

ஓ, 1933ம் ஆண்டில் ஜூன் மாதத்தில் அந்த நதியில் அப்பெரிய ஒளியினுள்ளே அவர் தீவிரமாக வந்திறங்கி நின்று, ‘கிறிஸ்துவின் முதல் வருகைக்கு முன்பாக யோவான் ஸ்நானன் அனுப்பப்பட்டு, முன்னோடினது போல, கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு முன்னோடியாக போகும்படி, நான் உன்னை ஒரு செய்தியோடு அனுப்புகிறேன்’ என்று கூறியதை நான் நினைவு கூருகிறேன். அவ்வாறே உலகமெங்கிலும் செய்தியானது புறப்பட்டு போய்விட்டது, அதினால் எழுப்புதல் அக்கினியானது கடந்த பதினைந்து ஆண்டு காலமாக ஏறத்தாழ ஒவ்வொரு மலையின் மேலும் நிலைபெற்றுள்ளது. தேசங்கள் தோறும் தெயவீக சுகமளித்தலும், வல்லமையும், திரும்ப அளிக்கப்படுதலும் ஏற்பட்டுள்ளது. மேலும், இப்பொழுது அது இறுதியான உச்சகட்டத்தை பளீரென அளிக்க ஆயத்தமாயுள்ளது என்று நான் விசுவாசிக்கிறேன்; அவ்வாறு ஆகும்பொழுது, சபையை மகிமையில் எடுத்துக் கொள்வதற்கான விசுவாசத்தை அது கொண்டு வரும். அவள் தானே இந்த செய்திகளில் தங்கியிருக்கிறாள். நாம் உண்மையாகவே கடைசி காலத்தில் இருக்கிறோம். அவைகள் யாவையும் குறித்து நாம் பேசியிருக்கிறோம், ஆனால் அக்காரியமானது இப்போது நம் மேல் அசைந்து வந்துள்ளது. இங்கே ஒருவர் இருக்கிறார், ஆம் ஐயா, அவருக்கு செவி கொடுங்கள். அது சரிதான்.


முற்றிலுமானவர், டிசம்பர் 30, 1962, பத்தி எண் 207-212

லவோதிக்கேயா சபை காலம் 1977-ல் முடியும் என்று முன்னறிவித்தல்




கி.பி. 1906 லவோதிக்கேயா சபைக் காலமானது ஆரம்பித்தது என்று நாம் விசுவாசிக்கிறோம். நான் முன்னுரைக்கிறேன். இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள் ஒலிநாடாவில் செய்தியைக் கேட்கிறவர்களே! முன்னுரைக்கிறேன் என்ற வார்த்தையைக் கவனியுங்கள். அவ்வாறு நிச்சயம் நடக்கும் என்று நான் உரைக்கவில்லை; 1977 வாக்கில் அது முடியும் என்று நான் அனுமானித்து முன்னுரைக்கிறேன். ‘ப்ரெடிக்ட்’ அப்பொழுது சபையானது முற்றிலும் விசுவாசத்துரோகத்திற்குள் போய்விடும். தேவனுடைய வாயினின்றும் அவள் வாந்திப் பண்ணிப் போடப்பட்டிருப்பாள் என்றும் முன்னுரைக்கிறேன். கிறிஸ்துவின் இரண்டாம் வருகை அல்லது எடுத்துக்கொள்ளப்படுதல் எந்த வேளையிலும் வரலாம். அவ்விஷயத்தில் நான் ஒரு ஆண்டு தவறவிட்டிருக்கக்கூடும். அல்லது ஒருவேளை இருபதாண்டுகள் தவறவிட்டிருப்பேன் அல்லது நான் அது நடப்பதைப் பற்றி நூறு ஆண்டுகள் கணக்குத் தவறுதலாக சொல்லிவிடக் கூடும். அது எங்கே எப்பொழுது நடக்கும் என்பதை நான் அறியேன். அவர் எனக்குக் காண்பித்த ஒரு தரிசனத்தின் அடிப்படையிலும், காலமானது முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறதின் அடிப்படையிலும், அது 33க்கும் 77க்கும் இடையில் இருக்கலாம் என்று அனுமானத்தின் பேரில் முன்னுரைக்கிறேன். இந்த மகத்தான தேசமானது, ஒரு யுத்தத்திற்குச் சென்று அதினால் அது தூள் தூளாக நொறுங்கிவிடும். அது மிகவும் சமீபமாக இருக்கிறது பயங்கரமான விதமாக சமீபமாயிருக்கிறது. நான் அனுமானத்தின் பேரில் தான் முன்னுரைக்கிறேன். எனவே நான் தவறாக இருக்கக்கூடும். புரிந்து கொண்டுள்ள ஒவ்வொருவரும் ‘ஆமென்’ என்று கூறுங்கள். (சபையார், ‘ஆமென்’ என்று கூறுகிறார்கள் – ஆசி). பாருங்கள்.

ஆனால் கர்த்தர் 1933 ஆண்டில், பெரிய வல்லமை படைத்த ஒரு ஸ்திரீயைக் குறித்து எனக்கு தரிசனத்தில் காண்பித்தார். அது எழுதி வைக்கப்பட்டுள்ளது. எவ்வாறு ரூஸ்வெல்ட் உலகம் யுத்தத்திற்கு செல்லும்படி செய்துவிடுவார் என்பதைப் பற்றியும் சொல்லப்பட்டது. எவ்வாறு முúஸôலினி எத்தியோப்பியா தேசத்தின் மேல் தனது முதலாவது படையெடுப்பை எடுப்பான் என்பதும் அத்தேசத்தை அவன் கைப்பற்றுவான் என்பதும், ஆனால் அவன் அவமானகரமான முடிவை எய்துவான என்பதும் தரிசனத்தில் காண்பிக்கப்பட்டது. அதன் பிறகு, எவ்வாறு நாஜிக்கொள்கை, பாசிசக் கொள்கை, கம்யூனிசக் கொள்கை என்ற மூன்று விதமான இஸம்கள் தோன்றும் என்பதும், இவையெல்லாம் கம்யூனிஸத்தில் போய் முடிவடையும் என்பதும் காண்பிக்கப்பட்டது. அக்காலத்தில் எத்தனை பேர்கள் நான் பின்வரும் காரியத்தை நீங்கள் நின்று கொண்டு சப்தமாகக் கூறும்படி செய்ததை நினைவில் வைத்திருக்கிறீர்கள்? ‘ருஷ்யாவை கவனி, வடதிசை இராஜாவாகிய ருஷ்யாவைக் கவனி, வடதிசை இராஜாவாகிய ருஷ்யாவைக் கவனி, வடதிசை இராஜாவாகிய ருஷ்யாவைக் கவனி’ என்று மீண்டும் மீண்டும் உங்களை கூற வைத்தேன். எத்தனை பேர்கள் நான் இவ்வாக்கியங்களை கைகளை அசைத்து மீண்டும் மீண்டும் திரும்பத் திரும்ப கூறியதைக் கேட்டிருந்தீர்கள். முன் காலத்தவர்கள், சபையின் ஆரம்ப காலத்தில் இருந்தவர்கள், அதை அறிவார்கள். அவன் என்ன செய்வான் என்பதும், எல்லா ‘இஸம்களும்’ முடிந்து ருஷ்யாவில் போய் குவிந்துவிடும் என்று உரைக்கப்பட்டது.

‘இந்த தேசம் ஜெர்மனியோடு யுத்தத்திற்குச் செல்லும்’ என்று பிறகு நான் கூறினேன். ‘ஜெர்மனியானது அதன் எல்லையில் காங்க்ரீட் மதிலினால் அரணாக்கப்படும்’ என்றும் கூறினேன். அதுதான் மேகினோட் லைன் என்ற சுவராகும். அது கட்டப்படுவதற்கு பதினொன்று ஆண்டுகளுக்கு முன்பே முன்னுரைக்கப்பட்டது. ‘அமெரிக்கர்கள் அந்த சுவரண்டை மிக மோசமான தோற்கடிப்பை அடைவார்கள்’ என்றும் கூறினேன். இங்கேயுள்ள சில சகோதரர்கள் அங்கே அந்த காங்க்ரீட் சுவரண்டை இருந்திருக்கிறார்கள். சகோதரன் ராய் ராபர்ஸன் அவர்களும் மற்றும் ஏனையோரும் தான் அங்கே இருந்தார்கள். என்ன நடைபெற்றது என்பதை அவர்களிடம் கேட்டறிந்து கொள்ளுங்கள். அவ்வாறு தான் அமெரிக்கர்களுக்கும் நடந்தது. ‘ஆனால் முடிவாக நாம் ஜெயிப்போம், நமக்கும் ஜெர்மனிக்கும் இடையே நடைபெறும் யுத்தத்தில் ஜெயிப்பதில் நாமும் ஒருவராக இருப்போம்’ என்று கூறினேன்.

‘அந்தக் காலத்திற்கு பின்னர் விஞ்ஞானமானது மிகவும் முன்னேறிப்போய்விடும்’ என்று உரைத்தேன். அவ்வாறே அது நடந்தது, அவர்கள் அணுகுண்டையும் இன்னபிறவற்றையும் செய்தார்கள். ‘அவர்களுடைய முன்னேற்றத்தின் கட்டத்தில் அவர்கள் முட்டை வடிவ மோட்டார் வாகனங்களைச் செய்வார்கள்’ என்று உரைத்தேன். 1933இல் இருந்து அந்த பழைய காலத்து பெரிய மோட்டார் வாகனம், மடக்கிக் கொள்ளும் வசதியோடு துணியினால் மேல் மூடி உள்ளதாக இருந்தது. அதை நீங்கள் நினைவில் வைத்திருக்கிறீர்களா? அதன் பெரிய பின்பகுதியை கீழே இழுத்துக் கொள்ளலாம். பின்னால் உபரி டயர்கள் வைக்கப்பட்டிருக்கும். இப்பொழுது உள்ள வாகனங்களைப் பாருங்கள். அவைகள் முட்டை வடிவத்தில் இப்பொழுது வடிவமைக்கப்பட்டுள்ளன. ‘இறுதியாக அவர்கள் ஒரு மோட்டார் வாகனத்தைக் கண்டு பிடிப்பார்கள், அதற்கு ஸ்டியரிங் வீலும் இருக்காது. ஒரு குடும்பத்தினர் கண்ணாடியிலான மேல் மூடியையுடையதான அந்த அருமையான மோட்டார் வாகனத்தில் ஒரு பெரிய அழகாக காட்சியளிக்கும் சாலைகளில் பயணம் செய்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்த பொழுது அவ்வாகனமானது யாராலும் ஓட்டிச் செல்லப்படாமல், தானாகவே இயங்கி அது சாலைகளின் வளைவுகளிலும் மற்றும் எவ்விடங்களிலும் சென்று கொண்டிருந்தது’ என்று நான் கூறினேன். இப்பொழுது அவர்கள் அந்த மோட்டார் வாகனத்தை செய்திருக்கிறார்கள். ஏற்கனவே அதைக் கண்டு பிடித்துவிட்டார்கள். அவர்களிடம் இப்பொழுது அவ்வாகனம் இருக்கிறது. ‘விஞ்ஞானமானது அந்நாளில் முன்னேறி விடும்’ என்று நான் அப்பொழுது கூறினேன்.

நான் மேலும் கூறினேன்: ‘அவர்கள் பெண்களுக்கு வாக்குரிமையை வழங்கிடுவதை நான் பார்த்தேன்’ என்றேன். அவ்வாறே அவர்கள் பெண்கள் வாக்களிப்பதற்கும் அனுமதித்தும் விட்டார்கள். ‘அவ்வாறு வாக்களிப்பதன் மூலம் அவர்கள் இந்நாட்களில் ஒன்றில் தவறான மனிதனை தேர்ந்தெடுப்பார்கள்’ என்று கூறினேன். கடந்த தேர்தலில் நீங்கள் அதைச் செய்திருக்கிறீர்கள். பெண்களின் வாக்குகள்தான் கென்னடியைத் தேர்ந்தெடுத்தது. நாம் அறிவோம். அங்கே அவர்கள் ஆயத்தப்படுத்தியிருந்த சூழ்ச்சியான இயந்திரங்கள், மற்றும் சில காரியங்களுக்கும் நடுவில் சில ஏற்பாடுகள் மூலமாக அதை சாதித்தார்கள். பெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன் அதை கண்டுபிடித்து அம்பலப்படுத்தியது. ஏன் அதைக் குறித்து ஏதும் செய்யமாட்டேனென்கிறார்கள்? ஏன் அதைக் குறித்து ஒன்றும் சொல்லமாட்டே னென்கிறார்கள்? தங்கள் வேலையை இழந்து விடுவோமோ என்ற அச்சத்தினால்தான். முழுவதும் அழுகிப்போன அரசியலின் கூட்டம் அது. அவ்வளவுதான் அது நிச்சயமாக!

தயயு செய்து இதைக் கூறுவதற்கு மன்னித்துக் கொள்ளுங்கள். இத்தேசத்திற்கு இரட்சிப்பே இல்லை. எந்த தேசத்திற்கும் இரட்சிப்பே இல்லை. இரட்சிப்பு இயேசு கிறிஸ்துவில் மட்டுமே உள்ளது. அவரில் மட்டும் உள்ளது. அது சரிதான்; நான் அமெரிக்காவுக்காக நன்றியுள்ளவனாயிருக்கிறேன்; உலகில் வேறு எந்த நாட்டில் வாழ்வதை விட இத்தேசத்தில் வாழ்வதையே நான் விரும்புகிறேன். ஏனெனில், கனடாவிற்கு வெளியே... கனடாவும், அமெரிக்காவும் இரட்டையர்கள். நாம் அதை அறிவோம், இருவரும் அண்டை நாடுகள், அற்புதமான நாடு அது. வேறு எங்கும் வாழ்வதை விட இங்கு தான் நான் வாழ விரும்புகிறேன். ஏனெனில் இது எனது தாய் நாடு. 

நான் ஒரு அமெரிக்கனாயிருப்பதற்காக மகிழச்சியுள்ளவனாயிருக்கிறேன். அதற்காக நான் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். ஆனால் நான் உங்களுக்கு கூறுவதென்னவெனில், இத்தேசமானது அதற்கு சமமான எழுப்புதலை அவசியம் பெற்று இருக்க வேண்டும். ஆனால் அது அதைப் பெற்றுக் கொள்ளாது. இல்லை, ஐயா, அவள் மீண்டும் எழும்பப் போகிறதில்லை. இல்லை அவள் முடிந்து போய்விட்டாள். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக சிக்காகோவில் நான் கூறியது உங்களுக்கு நினைவிலிருக்கும். அது ஒலிநாடாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜீன், உன்னிடத்தில் அது இருக்கிறது. ‘ஒன்று இந்த ஆண்டில் அவர்கள் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும், தவறினால், அவர்கள் தொடர்ந்து அதை புறக்கணித்தே விடுவார்கள்’ என்று நான் கூறினேன். அதைத்தான் அவர்கள் செய்து இருக்கிறார்கள். பாருங்கள் அவள் தன்னுடைய முடிவை எய்துகிற வரையிலும் அதையே தான் அவர்கள் செய்வார்கள்.

ஆனால் வல்லமை வாயந்த ஒரு ஸ்திரீ தோன்றுவாள். இப்பொழுது நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இது ஒலிநாடாவிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு வல்லமை பொருந்திய ஸ்திரீ வருவாள், அவள் ஒரு வேளை ஜனாதிபதியாக இருக்கக்கூடும். அல்லது கத்தோலிக்க சபைக்கு எடுத்துக்காட்டாக அவள் இருக்கக் கூடும், அப்படியிருக்கும் என்று நான் கருதுகிறேன்; அவள் ஒரு நாளில் இந்நாட்டை தன் கையிலெடுத்துக் கொண்டு, இந்த தேசத்தை ஆட்சி செய்வாள். இந்நாடு ஸ்திரீயின் தேசமாக இருக்கிறது. கொடியானது ஒரு ஸ்திரீயினால் உண்டாக்கப்பட்டதாகும். அதில் பதின்மூன்று நட்சத்திரங்கள் உள்ளன. பதின்மூன்று கோடுகள் கொடியில் உள்ளன. பதிமூன்று காலனிகள் உள்ளன. எல்லாம் பதின்மூன்று, பதின்மூன்று, பதின்மூன்று என்று யாவற்றிலும் அவ்வாறே காணப்படுகிறது. அவளது வெள்ளி டாலர் நாணயத்திலும் பதின்மூன்று நட்சத்திரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. யாவும் பதின்மூன்று என்றே காணப்படுகிறது. இத்தேசத்தின் எண் பதின்மூன்றாகும். அது வெளிப்படுத்தின விசேஷத்தின் பதின்மூன்றாம் அதிகாரத்திலும் காணப்படுகிறது. முற்றிலும் பதின்மூன்று தான் யாவும், ‘ஸ்திரீ, ஸ்திரீ, ஸ்திரீ, ஸ்திரீ, ஸ்திரீ’ என்றே இருக்கிறது. அவள் அனைத்து அலுவலகங்களையும் கைப்பற்றியிருக்கிறாள். ஹாலிவுட்டையும் அவள் தன் கையில் எடுத்துக் கொண்டுவிட்டாள். தேசத்தையும் மேற்கொண்டு விட்டாள். அலுவலகங்கள் அவளால் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அங்கிருக்கின்ற யாவற்றையும் தன் அதிகாரத்தில் கொண்டு வந்திருக்கிறாள். மனிதனோடு அவள் சரிசமமான உரிமைகளை பெற்றுவிட்டாள், ஆண்களோடு வாக்களிக்கும் உரிமையும் கிடைத்துள்ளது. அவள் மனிதனைப் போலவே சபிக்கிறாள். ஆணைப்போலவே மது அருந்துகிறாள். இன்னும் என்னவெல்லாமோ செய்கிறாள். ஒரு ஸ்திரீயை தொழுது கொளவதற்காக கத்தோலிக்க சபையானது பயன்படுத்தும் ஒரு சரியான வஞ்சகமான கண்ணியாகும். எப்படியாயினும் அவர்கள் ஏற்கெனவே ஒரு ஸ்திரீயைத் தொழுது கொண்டுதானிருக்கிறார்கள்.


லவோதிக்கேயா சபையின் காலம், டிசம்பர் 11, 1960, பத்தி எண் 43-49

நான் அந்நிய பாஷையில் பேசினேன்




என் கொட்டிலில் நான் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றுக் கொண்டேன். ஏறக்குறைய ஒரு ஆண்டு கழித்து – அப்படி ஏதோ ஒன்று – நான் அந்நிய பாஷையில் பேசினேன்.

அதற்கும் ஓரிரண்டு ஆண்டு கழித்து, நான் ஒரு சபையில் பிரசங்கித்துக் கொண்டிருந்தேன். நான் இப்படி மேடையின் மேல் நின்று கொண்டிருந்தேன்... அப்பொழுது நான் இளைஞனாயிருந்தேன், இப்பொழுது உள்ளதைப் போல் வயதாகியும் விரைப்பாயும் இல்லை. அப்பொழுது என்னால் சிறிது நன்றாக மேடையில் நடமாட முடியும். அக்காலத்தில் நான் பிரசங்கிக்கும் போது அதிக உணர்ச்சி வசப்படுவதுண்டு. அங்கு நின்று கொண்டு பிரசங்கித்துக் கொண்டிருக்கையில், ஒரு மேசையின் மேல் குதித்தேன். அது ஒரு பாப்டிஸ்ட் சபை, மில்டவுன் பாப்டிஸ்ட் சபை. நான் மிகவும் பலமாக பிரசங்கித்துக் கொண்டே உட்பாதைக்கு சென்றேன். நான் பிரசங்கத்தை நிறுத்தினவுடனே, ஏதோ ஒன்று என்னை ஆட்கொண்டது. நான் சில வார்த்தைகளை - நான்கு, ஐந்து, ஆறு வார்த்தைகளை - அந்நிய பாஷையில் பேசினேன். நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்பதை அறிந்து கொள்வதற்கு முன், ‘களைப்படையும் தேசத்தில் கன்மலை, புயலடிக்கும் நேரத்தில் ஒதுங்குமிடம்’ என்று நான் கூறுவதை என்னால் கேட்க முடிந்தது. பாருங்கள்?

அதன் பிறகு ஒரு நாள் நான் ரயில் பாதையின் வழியாக, ஸ்காட்ஸ்பர்குக்கு இந்த பக்கமாக, ரோந்து வந்து கொண்டிருந்தேன். அப்பொழுது காற்று பலமாக அடித்துக் கொண்டிருந்தது. ஓ, என்னே, ரயில் பாதையின் மேல் பனிக்கட்டி படர்ந்திருந்தது. எனக்கு நியமிக்கப்பட்ட முப்பத்து மூன்றாயிரம் எண் நெடுஞ்சாலையில் நான் நடந்து செல்வதற்காக, நான் ரயில் பாதையைக் கடந்து மறுபுறம் சென்றேன். அறுபத்தாறு எண் கொண்ட நெடுஞ்சாலை மற்றொரு பக்கம் சென்றது. அது ஏறக்குறைய ரயில் பாதைக்கு இணையாக சென்றது. நான் பாதையின் வழியாக நடந்து சென்று கொண்டிருந்த போது சடுதியதாக... நான் பாடிக் கொண்டே தனிமையாக நடந்து சென்று கொண்டிருந்தேன். நான் எப்பொழுதும் பாடுவது வழக்கம். நான் ஜெபிக்க செல்ல எனக்கு வெவ்வேறு இடங்கள் இருந்தன. நான் பாடிக் கொண்டே தனிமையாக நடந்து சென்று கொண்டிருந்த போது, திடீரென்று நான் அந்நிய பாஷையில் பேசுவதை உணர்ந்தேன், பாருங்கள், நான் என்ன செய்து கொண்டிருந்தேன் என்று எனக்கு தெரியவேயில்லை.



கேள்விகளும் பதில்களும் (2:12), ஜனவரி 12, 1961, பத்தி எண் 103-105

மனமாற்றத்தின் போது. சிலுவையைப் போல் ஒளி தோன்றி ஒரு சத்தம் பேசுதல்




நாம் வாழ்கிற இக்காலத்தில், என்னுடைய குணப்படுதலின் போது, நான் இந்நிலையைக் கண்டேன். சபையானது என்னைப் பற்றிக் கொள்ளுமுன்னர் தேவன் என்னைப் பிடித்துக் கொண்டு விட்டார். அதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த சர்வ குழப்பங்களினால் நான் ஒருவேளை தேவனற்றவனாக ஆகியிருப்பேன். ஆம், ஐயா. ‘நல்லது, வந்து எங்களோடு சேர்ந்து கொள்ளுங்கள். இல்லையெனில், உங்கள் கடிதத்தை எடுத்துக் கொண்டு மற்றதை சேர்ந்து கொள்ளும்’ என்று கூறுனர்.

‘நீ உனது கடிதத்தைக் கொண்டு வந்து ஐக்கியத்தில் சேர்ந்து கொள்ளுகிறதில்லையா?’ என்றனர்.

ஒரேயொரு எழுத்துத்தான் உண்டு, அது கிறிஸ்து உங்களுடைய பெயரை ஆட்டுக் குட்டியானவருடைய ஜீவ புத்தகத்தில் எழுதும்போது உள்ளதாகும். அது ஒன்றுதான் உள்ளது.

நான் இந்த மதஸ்தாபனங்களையெல்லாம் காண்கையில்... ஐரிஷ் குடும்பப் பின்னணியை உடைய நாங்கள் முன்பு கத்தோலிக்கராயிருந்தோம். அதுதானே, ஊழலுள்ளதாயும், நாற்றமெடுத்ததாயும் இருந்தது. இந்நகரத்திலுள்ள ஒரு குறிப்பிட்ட ஸ்தாபன சபைக்கு நான் சென்றிருந்தேன். அவர்கள், ‘நாங்களே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறோம். எங்களிடம் அதன் யாவும் உள்ளது’ என்றனர்.
நியூ ஆல்பனியிலுள்ள மற்றொரு சபைக்குச் சென்றேன். அவர்களோ, ‘அங்கிருக்கிறவர்களுக்கு தாங்கள் என்ன பேசுகிறோம் என்பதே அறியார்கள்’ என்று கூறினார்கள்.

கத்தோலிக்கரோ, ‘நீங்களெல்லாருமே தவறாயிருக்கிறீர்கள்’ என்றனர்.

நான், ‘இது என்ன இப்படியிருக்கிறது’ என்று எண்ணினேன்.

நான் ஜெர்மன் லூத்தரன் சபையைச் சேர்ந்த ஒரு பையனுடன் விளையாடுவதுண்டு.

 அவனிடம், ‘நீ எந்த சபைக்குப் போகிறாய்?’ என்று கேட்டேன்.

‘நான் இன்ன சபைக்குப் போகிறேன்’ என்று கூறினான்.

நான் அந்த சபைக்கும் சென்றேன். அவர்களும் தாங்கள் தான் வழி என்று கூறக் கேட்டேன். இம்மானுவேல் பாப்டிஸ்ட் சர்ச் அல்லது முதல் பாப்டிஸ்ட் சபையைச் சேர்ந்த சகோ. டேல் அவர்களிடம் சென்றேன். ‘இதுதான் வழி’ என்று அவர்கள் கூறினர்.

நான் பிறகு, ஐரிஷ் சபைக்குச் சென்றேன். ஆனால் அவர்களும், ‘இதுவே மார்க்கம்’ என்று கூறினர்.

‘ஓ, நான் மிகவும் குழப்பமடைந்து போயிருக்கிறேன், என்ன செய்வதென்றே எனக்குத் தெரியவில்லை. ஆனால் நான் சரியானபடி ஆகவேண்டும் என்று நான் நம்புகிறேன்’ என்றேன். என்ன செய்வதென்றே எனக்குத் தெரியவில்லை; எப்படி மனந்திரும்புவது என்றே எனக்குத் தெரியவில்லை. நான் ஒரு கடிதம் எழுதினேன். அக்கடிதத்தில் நான் எழுதினதாவது:
அன்புள்ள ஐயா,

      இந்த வழியாக நீர் கடந்து செல்லுகிறீர் என்பதை நான் அறிவேன். ஏனெனில் நான் இங்கே தான் அணில் வேட்டைக்காக அமர்ந்திருப்பதுண்டு. நீர் அருகில் வருகிறீர் என்றும், நீர் இங்கே இருக்கிறீர் என்றும் நான் அறிவேன். நான் உம்மிடம் ஒரு விஷயத்தை கூற விரும்புகிறேன்.

நான் நினைத்தேன், ‘இப்பொழுது ஒரு நிமிடம் பொறு, நான் பேச விரும்புகிற எவரையும் நான் காணவில்லை. நான் அவரிடம் பேச விரும்புகிறேன். நல்லது, இப்பொழுது, அதை எப்படிச் செய்வது என்று தான் எனக்குத் தெரியவில்லை’ என்று எண்ணினேன்.

நான் அங்கிருந்த ஒரு கொட்டகைக்குச் சென்றேன். அங்கே சேதமுற்ற ஒரு பழைய மோட்டார் வாகனம் நின்றிருந்தது. அந்த இடம் தண்ணீரால் ஈரமாயிருந்தது. ‘நான் ஒரு படத்தைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் தங்கள் கரங்களை இவ்வாறு வைத்திருக்கிறார்கள் என்று நம்புகிறேன்’ என்றேன். நான் கீழே இறங்கினேன். இப்பொழுது நான் கூறப்போகிறேன். நீர் இதைச் செய்வதற்கான ஏதோ ஒரு வழியுள்ளது. எனக்கு அது தெரியாது. ஒவ்வொன்றையும் அணுகுவதற்கு ஒரு மார்க்கம் உண்டு என்று நான் அறிவேன் என்றேன்.

நான் எனது கைகளை இவ்வாறு வைத்துக் கொண்டு, அன்புள்ள ஐயா, ஒரு க்ஷணப்பொழுது நீர் என்னிடம் வந்து பேச வேண்டுமென நான் வாஞ்சிக்கிறேன். நான் எவ்வளவு மோசமாயிருக்கிறேன் என்பதை உமக்கு கூற வேண்டுமென நான் விரும்புகிறேன். என் கைகளை இந்தவிதமாக வைத்துக் கொண்டேன். நான் செவிகொடுத்தேன். மக்கள் தேவன் தன்னோடு பேசியதாகக் கூறினர். அவர் பேசுகிறார் என்பதை நானும் அறிவேன், ஏனெனில், நான் சிறுவனாக இருந்தபோது, அவர் என்னிடம், மது குடிக்காதே, என்றெல்லாம் கூறியிருக்கிறார். அவர் இத்தடவை என் வேண்டுதலுக்கு பதிலளிக்கவில்லை.

ஒருவேளை நான் எனது கரங்களை இந்தவிதமாக வைத்துக் கொள்ள லேண்டுமோ? என்று எண்ணினேன். எனவே, நான் ‘அன்புள்ள ஐயா, சரியாக எவ்விதம் இதைச் செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை. நீர் எனக்கு உதவி செய்வீர் என்று நான் நம்புகிறேன்’ என்று எண்ணினேன்.

ஒவ்வொரு பிரசங்கியும் தங்களுடையதை வந்து சேர்ந்து கொள்ளுமாறும், எழுந்து நின்று, இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டதாகவும், இயேசு தேவ குமாரன் என்று விசுவாசிப்பதாகவும் அறிக்கையிட வேண்டுமென்று என்னிடம் கூறிக்கொண்டிருந்தனர். பிசாசுகளும் அவ்வாறே விசுவாசிக்கின்றனவே. எனவே நான் எனக்குள் இவ்வாறு சிந்தித்தேன். இதைவிட மேலான ஒன்றை நான் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று, எனவே நான் இந்தவிதமாக வாஞ்சித்துக் காத்திருந்தேன்.

அலங்கார வாசலிலே, பேதுருவும், யோவானும் கடந்து செல்லுகையில், அங்கே தன் தாயின் வயிற்றிலிருந்து சப்பாணியாய் பிறந்து வளர்ந்த ஒரு மனிதன் இருந்தான். அவர்கள் அவனிடம், ‘வெள்ளியும் பொன்னும் என்னிடத்திலில்லை; என்னிடத்திலுள்ளதை...’ என்று கூறினர். நான் அதைப் பெற்றிருக்கவில்லை என்று அறிந்திருந்தேன்.

எனவே, அதை எவ்வாறு செய்வது என்பதை கண்டு பிடிக்க முயன்று கொண்டிருந்தேன். எவ்வாறு ஜெபிப்பது என்பதை நான் அறியவில்லை. நான் என் கைகளை விரித்தேன், பிறகு, நான் இவ்வாறு கிடந்தேன். வாஸ்தவமாகவே, சாத்தான் அப்பொழுது காட்சியில் தோன்றினான். ‘நீ பார்த்தாயா? நீ அதிக நேரம் காத்திருந்து விட்டாய், நீ ஏற்கனவே இருபது வயதை அடைந்து விட்டாய். அதை இப்பொழுது முயற்சி செய்வதற்கு அவசியமில்லை. நீ செய்துவிட்டாய்...’ என்று கூறினான்.

நான் அப்பொழுது மனமுடைந்து அழ ஆரம்பித்தேன். பிறகு, நான் என் இருதயம் உண்மையிலேயே உடைந்த போது, நான் இவ்வாறு கூறினேன், ‘நான் பேசப் போகிறேன். நீர் என்னிடம் பேசாவிடில், நான் எப்படியாயினும் உம்மிடம் பேசப் போகிறேன்.’ எனவே நான் சொன்னேன், ‘நான் நல்லவனல்ல, நான் என்னைக் குறித்தே வெட்கப்படுகிறேன். திருவாளர் தேவனே, எங்கிருந்தோ நீர் என் பேச்சை கேட்கிறீர் என்பதை நான் அறிவேன். நான் பேசுவது உமக்குக் கேட்கிறதா? நான் என்னைப் பற்றியே வெட்கமடைகிறேன். உம்மை நான் அசட்டை செய்து விட்டேன் என்பதினால் நான் வெட்கமடைகிறேன்’ என்று பேசினேன்.

ஏறக்குறைய அவ்வேளையில் நான் ஏறிட்டுப் பார்த்தேன். விசித்திரமான ஒரு உணர்வானது என்னைப் பற்றிக் கொண்டது. ஒரு ஒளியானது அவ்வறைக்குள்ளாக அசைந்து வந்து, ஒரு சிலுவையைப் போல் தோற்றத்தை உருவாக்கியது; என் வாழ்க்கையிலேயே நான் கேட்டிரா ஒரு சப்தம் என்னோடு பேசியது. நான் அதை உற்று நோக்கினேன். முழுவதும் குளிர்ந்து போனதாக இருந்தது. நான் பயந்தேன், என்னால் அசைய முடியவில்லை. நின்று அதை உற்று நோக்கினேன். அது கடந்து சென்று விட்டது.

 ‘ஐயா, உமது பாஷையை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. நீர் என்னுடைய மொழியில் பேசாவிடில் என்னால் உம்முடையதை புரிந்து கொள்ளவில்லை. நீர் என்னை மன்னித்தீரென்றால், சிலுவையில் என் கணக்குத் தீர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்று நான் அறிவேன். என் பாவங்கள் அங்கே சுமத்தப்பட்டிருக்கத்தான் வேண்டும். நீர் என்னை மன்னிப்பீரென்றால், திரும்ப வந்து என்னோடு உமது சொந்த பாஷையிலே பேசும். எனது பாஷையில் உம்மால் பேச இயலாவிடில் அதைக் கொண்டு நான் புரிந்து கொள்வேன். அது மீண்டும் திரும்ப வரச் செய்தருளும்’ என்று நான் கேட்டேன்.

அது மீண்டும் தோன்றியது. ஓ, அது மிகவும் நன்றாயிருந்தது. அங்கேதான் என்னுடைய முற்றிலுமானதைப் பெற்றுக் கொண்டேன். ஆமென். ஆம், ஐயா. எனது தோள்களை விட்டு நாற்பது டன் எடையளவுக்கு பாரம் நீங்கினதாக உணர்ந்தேன். அங்கேயிருந்த மரநடைபாதையில் நடந்தேன். என்னால் நிலத்தைத் தொடக் கூட முடியவில்லை.

என் தாயார், ‘பில்லி, நீ உணர்ச்சிவசப்பட்டிருக்கிறாய்’ என்றார்கள்.

‘இல்லை, அம்மா, என்ன நேர்ந்ததோ எனக்குத் தெரியாது’ என்றேன் நான்.

அங்கே பின்னால் ஒரு ரயில்பாதை உண்டாயிருந்தது. என்னால் இயன்ற அளவு உயரமாக அந்த ரயில் பாதையில் குதித்து ஓடினேன். எனது உணர்ச்சிகளை எவ்விதமாக வெளிப்படுத்துவது என்றே எனக்குத் தெரியவில்லை. எவ்வாறு ஆர்ப்பரிக்க வேண்டும் என்று எனக்கு மட்டும் தெரிந்திருந்தால் எப்படியிருக்கும். நான் ஆர்ப்பரித்தேன். ஆனால் நான் எனக்குத் தெரிந்த முறையில் அதைச் செய்தேன். நீங்கள் கவனித்தீர்களா?

அது என்னவாயிருந்தது – இளைப்பாறுதலின் துறைமுகத்தில் என் ஆத்துமாவை நங்கூரமிட்டுக் கொண்டு விட்டேன். நான் அத்தோடு யாவும் சரிப்படுத்தப்பட்டது. அதுவே எனது முற்றிலுமானதாக இருந்தது. அங்கே நான் ஏதோ ஒரு கட்டுக் கதையையல்ல, ஏதோ சில கொள்கைகளையல்ல கண்டு கொண்டது. நான் அந்த மனிதனோடு பேசினேன். நான் சிறுவனாயிருந்த போது, நீ மது அருந்தக் கூடாது, புகைக்கக் கூடாது, ஸ்திரீகளினால் உன்னைக் கறைபடுத்திக் கொள்ளாதே என்றும், நீ பெரியவனாகும் போது, நீ எனக்காக செய்ய வேண்டிய வேலை ஒன்று இருக்கிறது என்று கூறினாரே அந்த மனிதனோடு பேசினேன். நான் அவரைத் தொடர்பு கொண்டேன். அவரேதான். ஆம் ஐயா, அவரே அந்த ஒருவர்.



முற்றிலுமானவர், டிசம்பர் 30, 1962, பத்தி எண் 262-283

என் இருதயத்தில் ஏதோ ஒன்றுக்காக நான் பசியாயிருந்தேன்




நான் பதினெட்டு வயது வாலிபனாக இருக்கையில் கர்த்தரை விட்டு ஓடிக் கொண்டிருந்தபோது, ஒரு குறிப்பிட்ட நாளை நான் நினைவு கூருகிறேன். நான் மேற்கு பகுதிக்கு சென்றேன். என் தந்தை அங்கு குதிரைகள் சவாரி செய்து ஜீவனம் நடத்துகிறவராயிருந்தார். நான் அங்கே சென்று குதிரைகளைப் பழக்குவிக்கிற வேலையை செய்ய விரும்பினேன். அப்பொழுது, என் இருதயத்தில் ஏதோ ஒன்றுக்காக நான் பசியாயிருந்தேன். ஓ, நான் அதை உங்களுக்கு சொல்லுவேன்.

நான் பாப்டிஸ்ட் சபை பிரசங்கியாரிடம் சென்ற போது, அவர் என்னிடம், ‘நீ எழுந்து நின்று, ‘இயேசு தேவனுடைய குமாரன்’ என்று மட்டும் சொன்னால் போதும், நாங்கள் உன்னுடைய பெயரை சபைப் பதிவேட்டில் பதித்து விடுவோம்’ என்று கூறினார். அதுவும் என்னைத் திருப்தி செய்யவில்லை.

நான் சென்ற இடமெல்லாம் ஒவ்வொருவரும்... நான் ஏழு நாள் ஓய்வு சபையைச் சேர்ந்த சகோதரன் பார்கர் என்ற அருமையான நேசமுள்ள சகோதரர் ஒருவரிடம் சென்றேன். அவரும் என்னிடம், ‘பில்லி, நீ வந்து, கர்த்தருடைய ஓய்வை ஏற்றுக்கொள்’ என்று கூறினார். (நான் ஏற்கனவே அந்த ஓய்வை என் உள்ளத்தில் பெற்றிருக்கிறேன்). ஆனால் அவர், ‘ஓய்வு நாளை ஏற்றுக்கொள்’ என்று தான் கூறினார். அப்பொழுது, நான், ‘ஓ, இதுவும் நான் தேடுவதை கொடுப்பதாக இல்லையே’ என்று எனக்குள் எண்ணினேன்.

நான் மேற்கில் சென்றேன். அன்றொரு இரவில் நாங்கள் மந்தையை மேய்த்து அதை மடக்கினோம். குதிரையை விட்டு சேணத்தை எடுத்துவிட்டு, அங்கிருக்கும் கேம்ப் பையையும் எடுத்து வைத்துவிட்டு, படுத்துறங்கப் போகையில், அச்சேணத்தையை தலைக்கு தலையணையைப் போல் உபயோகிப்பதுண்டு. அவ்வாறு நான் அன்றிரவில் மிக வயதான பைன் மரங்களின் அடியில் படுத்துக் கொண்டிருந்தேன். நான் பகல் நேர கண்காணிப்பு வேலையைச் செய்தேன். ஆகவே இரவு நேர வேலையைச் செய்யும் பையன்கள் மந்தையை உள்ளே கொண்டு வந்தார்கள். அவர்களில் டெக்ஸôûஸச் செர்ந்த ‘ஸ்லிம்’ என்றழைக்கப்படும் ஒரு வயதான மனிதர் தன்னுடைய கிட்டாரை மீட்டி, ‘அவர் நாமத்திற்கே மகிமை’ என்ற பாடலை இசைத்தார்.

இன்னொரு நபர் ஒரு சீப்பின் மேல் ஒரு தாளை வைத்து அதை ஊதி இசைத்தார் (சகோதரன் பிரான்ஹாம் அவர்கள், ‘அவர் நாமத்திற்கே மகிமை’ என்ற பாடலை மௌனமாக இசைக்கிறார் – ஆசி) அவர்கள் வேறு பாடல்களையும், கௌபாய் பாடல்களையும் பாடினார்கள். ‘மீட்பர் மரித்த குருசண்டையில்’ என்ற பாடலையும் பாடினார்கள்.

நான் புரண்டு படுத்தேன். என் தலையில் மேல் பக்கமாக கம்பளியை எடுத்துப் போட்டுவிட்டு, பின்னால் திரும்பிப் பார்த்தேன். இரவில் காணப்பட்ட நட்சத்திரங்கள் கீழே இறங்கி வந்து அந்த பைன் மரங்களின் உச்சியில் தொங்கிக் கொண்டிருப்பது போலவும், அங்கிருந்த மலைகள் மேலும் வந்திறங்கி விட்டது போலவும் காணப்பட்டது. பைன் மரங்களில் இருந்து சதாகாலமும் மனிதரை நோக்கி அவர்கள் காதுகளில் முணுமுணுக்கும் அந்த வழக்கமான சப்தமாகிய, ‘ஆதாமே, நீ எங்கே இருக்கிறாய்?’ என்று அவர் என்னை நோக்கி கூப்பிட்டது எனக்குக் கேட்க முடிந்தது.

மூன்று வாரங்கள் கழித்து, நான் நகரத்திற்குள் சென்றேன். அந்தப் பையன்கள் யாவரும் மது அருந்தியிருந்தார்கள். நான் மட்டும் குடிக்கவில்லை. நான் எப்படியாவது அவர்களை மோட்டார் வாகனத்தில் ஏற்றி வீட்டுக்கு கொண்டு போய் சேர்த்தாக வேண்டும் என்ற நிலை இருந்தது. குடித்திருந்த நிலையில் அவர்களுக்கு பாதுகாப்பின்றி அபாயகரமானதாக இருந்தது. ஏனெனில் அவர்கள் ஒருவருக்கொருவர் முன்பாத விரல்களை சுட்டுக்கொண்டார்கள். அவர்கள் அங்கே ஒரு நேர்க்கோடு ஒன்றைப் போட்டு, அதில் வளையாமல் கோட்டின் மேல் நேராக யார் நடக்கிறார்களோ அவர்களுக்கு 5 டாலர் என்று பந்தயம் கட்டிக்கொண்டு நடப்பார்கள். அவர்களால் குடித்த நிலையில் பாத சாரிகளுக்கென போடப்பட்டிருக்கும் நடைபாதையிலேயே சரியாக நடக்க முடியாது. இவ்வாறு அவர்கள் ஆட்டம் போட்டு, பின்பு, குடிவெறி தெளிந்து தங்கள் பணத்தைப் பெற்றுக் கொண்டு போவார்கள்.

அவர்கள் யாவரும் குடித்து வெறித்திருந்தார்கள். நானோ தனியே அப்புறம் போய் உட்கார்ந்தேன். இது 35 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம். நான் தனியே போய் உட்கார்ந்தேன். அந்நாட்களில் பீனிக்ஸ் ஒரு சிறிய ஊர் தான். அவர்கள் விக்கன் பர்கிலிருந்து வந்திருந்தார்கள். நான் அவ்வாறு உட்கார்ந்து கொண்டிருக்கையில், வாலிபமான ஒரு ஸ்பானிய பெண்ணொருத்தி, நலுக்கி குலுக்கி கொண்டு அவ்வழியாக வந்தாள். பெரிய தொப்பி அவள் தலைக்குப் பின்னால் தொங்கிக் கொண்டிருக்க, அவ்வழியாகக் கடந்து சென்ற அவள், தனது சிறிய கைக்குட்டை ஒன்றை என்னருகில் நைசாகப் போட்டுவிட்டுச் சென்றாள். நான் அவளை நோக்கி, ‘ஏய், உனது கைக்குட்டையை கீழே போட்டு விட்டுச் சென்றாயே’ என்றேன். நான் அவள் சமிக்ஞையின் பேரில் ஆர்வம் காட்டவில்லை. (அந்நாட்டில் பெண்ணொருத்தி ஒரு ஆணிடம் சல்லாபம் கொள்ள தன்னுடைய விருப்பத்தை தெரிவிக்க இவ்விதமான ஒரு சமிக்ஞையை அவ்வாணுக்குத் தெரிவிப்பதுண்டு – மொழிபெயர்ப்பாளர்.)

கீழ்ப்பகுதியில் உள்ள தெருவில் அப்பொழுது ஒரு சப்தம் கேட்டதும் நான் அங்கே கீழே போனேன். அங்கே முகத்தில் வைசூரி வடுக்கள் கொண்ட வயதான கௌபாய் ஒருவர் உட்கார்ந்து தன்னுடைய கிட்டாரில், தன் கண்களில் கண்ணீர் வடிய இசைத்து, ‘அவர் நாமத்திற்கு மகிமை’ என்ற பல்லவியைப் பாடிக் கொண்டிருந்தார். அவர் அந்த மோசமான கூட்டத்திலிருந்து இரட்சிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டவராயிருந்தார்.

அவரது கன்னத்தில் கண்ணீர் வடிய பாடிக் கொண்டிருந்தார். நான் அவரருகில் சென்றதும் பாடுவதை நிறுத்தி விட்டு, ‘சகோதரனே, இந்த அற்புதமான கிறிஸ்துவை நீ பெற்றுக் கொள்கிற வரையிலும், இவ்வனுபவம் எத்தகையது என்பதை நீ அறிய மாட்டாய்’ என்று கூறினார்.

      ‘அவர் நாமத்திற்கு மகிமை’

நான் என்னுடைய தொப்பியை கீழே இழுத்து விட்டுக் கொண்டு அங்கிருந்து கிளம்பிவிட்டேன். அவர் சமுகத்தை விட்டு உங்களால் ஒளித்துக்கொள்ள முடியாது. நீங்கள் மறைந்திருக்கிற இடத்தை விட்டு வெளியே வந்து, கூப்பிடுகிற அவருக்கு முன்பாக வந்து, உங்கள் பாவங்களை அறிக்கை செய்தாக வேண்டும். ஓ! அவர் அற்புதமானவராக இருக்கிறார். ஆம், அவர் அப்படித்தான் இருக்கிறார்.


சர்தை சபையின் காலம், டிசம்பர் 9, 1960, பத்தி எண் 195-205

தேவன் இல்லாமல் போயிருந்தால். நான் கொலைக்காரனாகியிருப்பேன் "I'D A-BEEN A MURDERER" EXCEPT FOR GOD


ஜெபத்தின் மூலமாய் உங்கள் சுபாவத்தை இனிமையாக்கிக் கொண்டு, பிறகு உங்கள் மனதில் தீர்மானித்துக் கொள்ளுங்கள்... எனக்குத் தொடக்கத்தில் இருந்த கோபத்தைப் போல இந்த கட்டிடத்திலுள்ள அதிகம் பேருக்கும் இருக்காது என்று எண்ணுகிறேன். ஓ, என் வாய் எப்பொழுதும் அடித்து கொதறப்பட்டது. என் ஆகாரத்தை நான் 'ஸ்ட்ரா' வழியாக உறிஞ்சி சாப்பிடுவது வழக்கம்.

என் தாயார், உங்களுக்குத் தெரிந்தபடி, பாதி சிகப்பு இந்தியர். என் தந்தை அயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர், கென்டக்கியில் குடிபுகுந்த ஐரீஷ்காரர். இருவருக்குமே கோபம் அதிகம். எல்லா நேரங்களிலும் என் வாய் கொதறியிருந்தது; நான் தொடக்கத்தில் சிறுவனாயிருந்த போது, அவர்கள் என்னைத் தூக்கி, குத்தி கீழே வீழ்த்துவார்கள். நான் மறுபடியும் எழுந்திருப்பேன்; அவர்கள் மறுபடியும் குத்தி வீழ்த்தி, என்னால் எழுந்திருக்க முடியாத நிலை வரும் வரைக்கும் குத்தி வீழ்த்திக் கொண்டேயிருப்பார்கள். அது எப்பொழுதும் நடந்து வந்தது. என்னால் எழுந்திருக்க முடியும்போது, நான் எழுந்திருப்பேன்; அவர்கள் மறுபடியும் என்னைக் குத்தி கீழே வீழ்த்துவார்கள். அப்படித்தான் எனக்கு நடந்து வந்தது.

‘நான் கிறிஸ்தவனாக ஆகவே முடியாது’ என்று எண்ணினேன். ஆனால் பரிசுத்த ஆவி என் வாழ்க்கைக்குள் வந்த போது, அது அதை சாதித்து விட்டது.

ஒரு சமயம் ஒரு ஸ்திரீ இருந்தாள். அவளுடைய மின்சாரத்தைத் துண்டிக்க நான் சென்றிருந்தேன். அப்பொழுது என் தலையில் மயிர் இருந்தது. அவள் என்னைப் பார்த்து, ‘பித்தம் பிடித்த முட்டாளே’ என்றாள்.

நான், ‘ஸ்திரீயே, நீ அவ்விதம் என்னைத் திட்டக் கூடாது. ஓ, உனக்கு தேவ பயம் இல்லையா?’ என்று கேட்டேன்.

அவளோ, ‘பித்தம் பிடித்த முட்டாளே, அப்படிப்பட்ட காரியங்களைக் குறித்து என்னிடம் யாராவது பேசவேண்டுமென்று நான் விரும்பினால், உன்னைப் போன்ற பைத்தியக்காரனை அழைக்க மாட்டேன்’ என்றாள்.

‘ஹூ!’ அவள் என்னை எல்லாவிதமான அவதூறான பெயராலும் அழைத்தாள். ஓ, என்னே, அது மாத்திரம் ஒரு ஆண்டுக்கு முன்பு நடந்திருந்தால்! ‘ஒரு ஸ்திரீயை அடிக்கும் மனிதன், ஒரு மனிதனை அடிக்கக் கூடிய ஆண்மைத்தனம் கொண்டவன் அல்ல’ என்று நான் அடிக்கடி கூறுவது வழக்கம். ஆனால் என் தாயாரை அவதூறான பெயரால் அழைத்த போது, அந்த வாக்கை நான் மீறியிருப்பேன். ஆனால் என்ன நடந்தது தெரியுமா? அது என்னை சிறிதும் கோபப்படுத்தவில்லை. நான், ‘உனக்காக ஜெபிக்கிறேன்’ என்று சொன்னேன். அது தொல்லைப் படுத்தவேயில்லை... எனக்கு என்னமோ நடந்துள்ளதென்று நான் அந்த நேரத்தில் அறிந்து கொண்டேன். ஆம், ஐயா! ஓ, என்னே!

நான் சிறுவனாயிருந்த போது, சண்டையிட்டதனால் செய்த தீங்குகள் உங்களுக்குத் தெரியுமா? ஒரே நேரத்தில் நான் ஐந்து மனிதர்களை ஏறக்குறைய கொன்று விட்டேன். பதினாறு குண்டுகள் நிறைத்திருந்த ஒரு துப்பாக்கியை நான் கையிலெடுத்து, நான் கென்டக்கி நாட்டைச் சேர்ந்தவன் என்ற காரணத்தால் அந்த பையன்கள் என்னை அடித்த போது, வேறு எந்த காரணத்துக்காகவும் அல்ல... என் தலையை என்னால் நிமிர்த்தவும் கூட முடியவில்லை. ஒரு பையன் என் கைகளை இப்படி பிடித்துக் கொள்வான். மற்றொரு பையன் கையில் ஒரு கல்லை வைத்துக் கொண்டு நான் ஜீவனற்று போகும் வரை என் முகத்தில் குத்துவான். இவ்வுலகில் வேறெதுவுமே...

அவர்கள் என்னை ‘கென்டக்கி ஸ்வாப் ’ என்று அழைத்தார்கள். ஏனெனில் என் தாயார் வாலிபமாயிருந்த போது சிகப்பு இந்தியரைப் போல் காணப்பட்டார்கள் (சற்று முன்பு நான் அவர்களுடைய புகைப்படத்தை நோக்கிக் கொண்டிருந்தேன்), அவர்கள் பாதி சிகப்பு இந்தியர் என்று அந்த பையன்கள் அறிந்திருந்தனர். நான் கென்டக்கியை சேர்ந்தவனாயிருந்து என் தாயார் சிகப்பு இந்தியராக  இருந்த காரணத்தால் அவர்கள் என்னை ‘கென்டக்கி ஸ்வாப்’ என்று அழைத்தனர். அதற்கு நான் பொறுப்பாளியே அல்ல. நான் கென்டக்கியில் பிறந்தது என் தவறல்ல.

நான் பள்ளிக்கூடத்துக்குச் சென்றபோது எனக்கு உடுக்க துணிகளே இருக்கவில்லை. என் தாயார், தந்தை விவாகத்தின் போது உடுத்த அவருடைய பழைய கோட்டை எடுத்து அதை வெட்டி, எனக்கு கால் சட்டை தைத்துக் கொடுத்தார்கள். நான் பள்ளிக்கு முதன்முதலாக சென்ற போது அதை அணிந்து கொள்ள நான்... என் தாயார் எனக்கு வெள்ளை நிறக் காலுறையை அணிவித்து அதன் மேல் டென்னிஸ் காலணிகளை அணிவிப்பது வழக்கம். இந்த பையன்கள் என்னை நோக்கி, ‘உன்னைப் பார்த்தால் பயந்தாங்கொள்ளியான கென்டக்கி நாட்டான் போல் இருக்கவில்லையா?’ என்று கேலி செய்வார்கள். இது நான் பள்ளிக்கூடத்தில் இருந்த நாட்கள் முழுவதும் நடந்து வந்தது.

ஓரிரண்டு பையன்கள், நான் சாலையில் ஏதோ ஒரு சிறு பெண்ணுடன் அவளுடைய புத்தகங்களை தூக்கிக் கொண்டு நடந்து சென்ற காரணத்தால்... அவ்விதம் நான் செய்வது அவர்களுக்கு பிரியமில்லை. அவர்கள் என்னை அங்கு சந்தித்து, நான் நினைவிழந்து போகும் வரைக்கும் என்னை அடித்தார்கள். அவர்கள் என்னை போக விட்டால், நான் நேராக வீட்டுக்கு போய்விடுவேன் என்று அவர்களுக்கு வாக்கு கொடுத்தேன். எனவே அவர்கள் என்னை போகவிட்டு, எனக்கு நான்கைந்து உதைகள் கொடுத்து, என்னைக் குத்தி கீழே வீழ்த்தி, என் முகம் முழுவதும் குத்தினார்கள். நான் அடிபட்டவனாக வயலின் வழியாக அந்த நிலையில் வீடு திரும்பினேன்.

என்னிடம் .22 வின்சென்ஸ்டர் துப்பாக்கி இருந்தது. அது கதவண்டையில் வைக்கப் பட்டிருந்தது. நான் தோட்டாக்களால் நிறைக்கப்படடிருந்த அந்த துப்பாக்கியை என் கையிலெடுத்துக் கொண்டு, புதரின் வழியாக சென்று, சாலையின் பக்கத்தில் ஒளிந்திருந்து, இந்த ஐந்தாறு பையன்கள் வருவதற்காக காத்திருந்தேன். அவர்கள், ‘அந்த கென்டக்கி நாட்டான் இப்பொழுது முதற்கொண்டு அவன் நிலை என்னவென்பதை உணருவான்’ என்று பேசிக் கொண்டே வந்தனர்.

நான் துப்பாக்கியின் மேல்கம்பியை  பின்னால் இழுத்து, ஒளிந்த இடத்திலிருந்து வெளி வந்து, ‘உங்களில் யார் முதலில் இறக்க விரும்புவது, அப்பொழுது நீங்கள் மற்றவர்களை கவனிக்க மாட்டீர்கள்’ என்றேன். அவர்கள் அலறத் தொடங்கினர். நான், ‘அலறாதீர்கள், நீங்கள் ஒருவர் பின் ஒருவராக எல்லாரும் சாகப் போகிறீர்கள்’ என்றேன். அதை நான் உண்மையில் செய்ய வேண்டுமென்று நினைத்தேன். நான் மேல் கம்பியை இழுத்து சுட்டேன். துப்பாக்கியிலிருந்த குண்டு வெடித்தது. நான் வேறொரு தோட்டாவை உள்ளே போட்டு சுட்டேன். அதுவும் வெடித்தது. இப்படியாக பதினாறு தோட்டாக்களை நான் தரையை நோக்கி சுட்டேன். அவை ஒவ்வொன்றும் வெடித்தன. அந்த பையன்கள் அலறிக் கொண்டு ஓடி, மலையின் மேல் ஏறி ஓடினார்கள்.

அவர்கள் போன பிறகு அங்கு நான் நின்றேன். எனக்கு அதிக கோபம் வந்தால், நான் அழமாட்டேன், ஒரு முட்டாளைப் போல் சிரிப்பேன், அப்பொழுது என் கண்களிலிருந்து கண்ணீர் வடியும். இப்பொழுது, அது ஒரு கோபாவேசம். தேவன் இல்லாமல் போயிருந்தால், நான் கொலைகாரனாகியிருப்பேன்.

அந்த தோட்டாக்களை நான் பொறுக்கி அவைகளை துப்பாக்கியில் நிறைத்து,‘பௌ, பௌ’. அவை முன்னைப் போல் நன்றாக வெடித்தன. கிருபையைக் குறித்து பேசினால், இதுதான் கிருபை!


கேள்விகளும் பதில்களும் (COD 2:22), ஆகஸ்ட் 30, 1964 மாலை, பத்தி எண் 94-105