மணவாட்டி ஊழியம்

மணவாட்டி ஊழியம்

Tuesday, August 9, 2011

ஐக்கியம்,தனிப்பட்ட பேட்டி

ஐக்கியம்
47-1100

1. இந்த நேரத்தில் என் நல்ல நண்பர் போஸ்வர்த் அவர்கள் மூலம் ஒரு குழல் வாத்திய இசையைக் கொண்டிருக்க போகிறோம். சகோ. போஸ்வர்த் (சகோ. போஸ்வர்த் ஒரு இசையை கொடுக்கிறார்.- ஆசிரியர்)
2. என்னே,சகோ. போஸ்வர்த், அது மிகவும் அருமையாய் இருந்தது. நாங்கள் நிச்சயமாக அதை பாராட்டுகிறோம். நீர் அங்கே உயர்த்தி வாசிக்கும் போது, சிலுவையின் கீழே என்ற அந்த சிறிய கோரஸை நாம் பாட முடிந்தால், நான் வியப்படைகிறேன். அது எனக்கு பிடித்தமான ஒன்று. நீங்கள் அதை இசைக்க முடிந்தால், சரி,  சகோ. போஸ்வர்த். (சகோ. போஸ்வர்த் சிலுவையின் கீழே என்ற கோரஸை இசைக்கிறார்.)
3. என்னை அந்த சத்தம் அந்த பழைய எழுப்புதல் நேரத்தில் உள்ளதை போலிருந்தது. அநேக காலங்களுக்கு முன்னால், சொல்லுங்கள், சகோதரன் மற்றும் சகோதரி மெக் ஆனல்லியுடன் இங்கே இன்றிரவுள்ள இந்த சிறிய சந்திப்பிற்காக நாங்கள் உண்மையாகவே மகிழ்ச்சியடைகிறோம். நான் வியக்கிறேன். சகோ. கூப்பர் இப்பொழுது நீங்கள் ஒலிப்பெருக்கியில் சில காரியங்களை சொல்ல விரும்பி, ஏதாவது வார்த்தையை நீங்கள் கொண்டிருப்பீர்களானால், (சகோ. கூப்பர் ஒரு சில வார்த்தைகளை பேசுகிறார் - ஆசிரியர்)
4. ஆம் ஐயா சகோ. மேக் ஆனல்லி தேசத்தில் அடுத்த சிறந்த வேட்டைக்காரராக உள்ளார். நான் போயிருந்த போது, அவர் சிறிந்த வேட்டைக்காரர்.
5. சரி இங்கே இருக்கும் மனைவியிடமிருந்து ஒரு வார்த்தையை நான் விரும்புகிறேன். சரி தேனே, நீ என்ன சொல்ல போகிறாய்? (சகோதரி. மேடா, நான் அரிசோனாவில் இருப்பதற்கு கிடைக்கப் பெற்ற சிலாக்கியத்திற்காகவும், சகோதரன் மற்றும் சகோதரி மெக் ஆனல்லி போன்ற நண்பர்களை சந்திக்க கிடைத்த சிலாக்கியத்திற்காகவும்  நிச்சயமாக  மகிழ்ச்சி  அடைகிறேன் என்று கூறுகிறார். - ஆசிரியர்)
6. சகோ. போஸ்வர்த், அரிஸோனாவையும்,  இங்குள்ள ஜனங்களையும் குறித்து, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? (சகோ. போஸ்வர்த் ஒரு சில வார்த்தைகளை பேசுகிறார்.) (சகோ. மேக் ஆனல்லி வேட்டையை குறித்து குறிப்பிடுகின்றார்.-ஆசிரியர்.) (சகோ. போஸ்வர்த் மற்றொரு இசையை கொடுக்கிறார்.- ஆசிரியர்)
7. சகோதரன் மெக்  இந்த பிரயாணத்தில்  நாங்கள் இங்கு இருக்கும் போது, எங்களுக்காக அனைத்தையும் செய்திருந்தீர்கள். ஏதாவது ஒரு நாள் நாங்கள் மீண்டும் திரும்ப ஒன்று கூடுவோமென்று சர்வ வல்லமையுள்ள தேவனை நம்புகிறேன். உங்கள் மனைவியின் சத்தத்தை கேட்க நான் எப்போதும் விரும்புவதுண்டு. சகோதரி மெக் ஆனல்லி நான் பல மைல்கள் அப்பால் இருக்கலாம். ஆனால் நீங்கள் இதை இசைக்கும் போது, (சகோதரி ஆனல்லி ஒரு சில வார்த்தைதைகளை பேசுகிறார்.- ஆசிரியர்)
8. சரி நன்றி.  சகோதரி மெக் ஆனல்லி. அது மிக மிக அருமையாக இருந்தது. ஓ அவர்கள் ஒரு சிறிய பயந்த சுபாவமுடைய சகோதரியாக  இருக்கிறார்கள் நான் அதை விரும்புகிறேன். சகோ. போஸ்வர்த் அந்த பழைய குழல் வாத்திய இசைக்கருவியில் மற்றொரு இசையை கொடுப்பீர்களா? சகோதரன் மெக்கிற்காகவும், அவர்களுக்காகவும் மற்றொரு இசையை கேட்க விரும்புகிறோம். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக சகோதரனே. சரி சகோ. போ ஸ்வர்த். (சகோ. போஸ்வர்த் மற்றொரு இசையை கொடுக்கிறார்.- ஆசிரியர்.)
9. சகோ. போஸ்வர்த் அது அருமை. அதிகமான நன்றிகள். சகோ. கூப்பர், நீங்கள் சொல்வதற்கு வேறு வார்த்தைகள் ஏதேனும் உண்டா? சொல்வதற்கு ஏதேனும் உண்டா? சொல்வதற்கு ஏதும் இல்லையா?  தேனே,  ஓ, என்னே.  சகோ.  மெக், இந்த ஒலிப்பெருக்கியில் சீக்கிரமாய் ஏதாவது எங்களுக்கு சொல்லுவீர்களா?
(சகோ. மெக் ஆனல்லி வேட்டையைப் பற்றி கூடுதலாக ஒரு சில வார்த்தைகளை பேசுகிறார்.- ஆசிரியர்)
10.  சரி அருமை சகோ. போஸ்வர்த், நீங்கள் ஏதாவது வார்த்தையை சொல்ல விரும்புகிறீர்களா? வேறு ஏதாவது சொல்லுங்கள். 
(சகோ. போஸ்வர்த் ஒன்றறை நிமிடங்கள் பேசுகிறார்.- ஆசிரியர்.).
            ----------------------------------------------------
தனிப்பட்ட பேட்டி

1. நான் அந்த நேரத்தில் மருத்துவமனையில் உங்களை சந்திக்கிறேன். நான் அடிக்கடி உங்களுக்காக ஜெபித்தேன். நீங்கள் மரிக்கும்படி தேவன் உங்களை விடமாட்டார், ஏனெனில் நீங்கள் சபைக்கு முக்கியமானவராக இருக்கிறீர்கள். இப்பொழுது உங்களை எனக்கு தெரியும் சகோதரி ப்ரூஸ். நீங்கள் சுகமடைய போகிறீர்கள் என்பது எனக்கு தெரியும். நான் அதை என் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கின்றேன். பாருங்கள். (சகோதரி ஜார்ஜியா ப்ரூஸ், “சகோ. பிரன்ஹாம் எல்லாவற்றுக்கும் மேலாக, நான் பரிசுத்தாவியால் முத்திரையிடப்படும் அனுபவத்தை விரும்புகிறேன். தேவன் அதை உங்கள் இருதயத்தில் வெளிப்படுத்துவாரானால் ! என்று கூறுகிறார். - ஆசிரியர்)
2. சகோதரி ப்ரூஸ் நீங்கள் ஒரு உண்மையான மறுபடியும் பிறந்த கிறிஸ்தவர் என்பதை என் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறேன். எப்படி அந்த ஆவி போக முடியும் ?  நீங்கள் சுகவீனப்படும் போது  களைப்படைகிறீர்கள். மேலும் நீங்கள் ஒரு பயந்த சுபாவமுடையவர்களாய் இருக்கிறீர்கள். (சகோதரி ப்ரூஸ் ஆம் என்கிறார்கள். - ஆசிரியர்)  பாருங்கள் ? மேலும் நீங்கள் மனதில் காரியங்களை பெற்றுள்ளீர்கள். பாருங்கள் சிறிய மனக்கிலேசமான காரியங்களை. அது அப்படியே இரு வழிகளில் கட்டிடத்தைக்கட்டி எழுப்பிக் கொண்டிருக்கிறது. நீங்கள் உங்கள் இருதயத்தில் சிலரை வைத்து, அவர்களுக்காக ஜெபிக்க விரும்புகிறீர்கள். நீங்கள் எழும்பி அதற்காக ஜெபிக்கிறீர்கள். அந்த ஒருவருக்காக ஜெபிக்கும்வரை, உங்களால் இளைப்பாற முடிவதில்லை. அது தான் நீங்கள். அப்பொழுது மற்றொரு வகையில், சாத்தான் கட்டாயமாக சில காரியங்களை செய்கிறான். மேலும் இந்த பாதைக்கு வெளியே பாருங்கள். பாருங்கள்?  மேலும்  தேவன்… நீங்கள் இயல்பாகவே இருக்கின்றீர்கள். மேலும் தேவன் கிரியை செய்கிறார். நீங்கள் விசுவாசிக்கவில்லை என்று உங்களை நம்பச் செய்ய சாத்தான் முயற்ச்சிக்கும் போது, சாத்தான் கிரியை செய்கிறான். பாருங்கள்? சகோதரி ப்ரூஸ் உங்களை நீங்கள் பார்க்க வேண்டாம். நினைவில் கொள்ளுங்கள்.
3. நான் உங்களுக்காக ஜெபிக்க முடிவு செய்து கொண்டிருக்கிறேன். நான் அதற்கு தகுதியானவன் அல்ல. “இயேசு கிறிஸ்து இப்பொழுது இங்கிருப்பாரானால், நான் என்ன செய்ய முடியும்?” என்று நான் நினைக்கிறேன். அவர் இங்கே உட்கார்ந்து கொண்டிருந்தால்,  அவர் என்ன செய்ய முடியும்?  அவருடைய மகா விசுவாசத்துடன், அவருடைய கரத்தை உங்கள் மேல் வைக்கிறார், பாருங்கள்? நீங்கள் சுகமடைகிறீர்கள். “நல்லது” நான் நினைக்கிறேன். “நல்லது” நான் ஒரு பாவி, நான் அவரல்ல. ஆனால் நான் அவரை அடையாளமாக கொண்டு வருகிறேன். ஆனால் என்னை ஒரு பாவியென்று  நினைவு கூறுங்கள். தேவனுக்கு முன்னால் நான் ஒரு  பாவியில்லை. நீங்களும் அல்ல. அங்கே கிடக்கும் ஒரு இரத்தம் தோய்ந்த பலியை  நாம் பெற்றுள்ளோம். தேவன் எப்போதும் நம்மை பார்க்க முடியாது. அவர் நம்முடைய சத்தத்தை கேட்கிறார். ஆனால் அவர் கிறிஸ்துவின் இரத்தத்தையே காண்கிறார். இது தான் அது. பாருங்கள்? அவர் தம்முடைய சொந்த குமாரனுடைய இரத்தத்தையே பார்க்கிறார். இது நம்முடைய சத்தம்… கிறிஸ்தவினுடைய இரத்தம், அப்படியாயின் கிறிஸ்துவே நம் வழியாக தேவனிடம் பேசிக் கொண்டிருக்கிறார். எனவே நாம் பாவியல்ல. இல்லை. நாம் கிறிஸ்தவர்களாக இருக்கிறோம். நீங்கள் ஒரு உண்மையான  கிறிஸ்தவராக இருப்பதை நான் விசுவாசிக்கிறேன். நான் காரியத்தை நினைவு கூறுகிறேன். (சகோதரி ப்ரூஸ் நான் அநேக தவறுகளை செய்திருக்கிறேன். மேலும் அநேக முறை தவறியிருக்கிறேன் என்கிறார். - ஆசிரியர்)
4. அதற்காக தான் கிறிஸ்து மரித்தார். உங்கள் தவறுக்ளுக்காக உங்களுக்கு விலைகிரயத்தை செலுத்தினார். பாருங்கள்? உங்கள் தவறுகளை அவர் எடுத்து விட்டார்.
5. அவரை சேவிப்பதே உங்கள் இருதயத்தின் வாஞ்சையாக உள்ளது. (சகோதரி ப்ரூஸ் ஆம் என்கிறார்கள். - ஆசிரியர்) சரி , அவர் எதற்காக மரித்தாரோ அதுவே தான். எனவே நீங்கள் அவரை சேவிக்க முடியும். பாருங்கள்? உங்கள் தவறுகளை அவர் பார்ப்பதில்லை. உங்கள் தவறுகள் உங்களுடையதல்ல. பாருங்கள்? அவர் உங்கள் பதிலாளாக இருக்கிறார். பாருங்கள்? அவர் உங்கள் பாவ நிவாரண பலியாக இருக்கிறார். உங்கள் பாவங்கள் அறியப்படவில்லை. தேவனுக்கு முன்பாக நீங்கள் ஒரு பாவியல்ல. கிறிஸ்து உங்களுடைய பாவங்களை எடுத்து கொண்டு,  உங்களை உண்டாக்கினார். ஏனெனில்,  அவரை சேவிக்க நீங்கள் வாஞ்சிக்கிறீர்கள். (சகோதரி ப்ரூஸ், “ஆனால் என்னிடத்தில் இறங்கி கால் பதிக்க, நான் பரிசுத்தாவியால் நிறையப்படும் ஒரு அனுபவத்தை நான் பெற்றிருக்கவில்லை என்கிறார்கள். - ஆசிரியர்)
6. சரி, இதை கவனியுங்கள். சாதாரணமாக ஒரு மனிதன் பாவத்தில் பிறந்து இ அக்கிரமத்தில் உருவாகி, பொய் பேசுகிறவனாக உலகத்தில் வருகிறான். அது  ஒரு மனிதனின் இயல்பாக உள்ளது. (சகோதரி ப்ரூஸ் ஆம் என்கிறார்கள். - ஆசிரியர்) அது உங்களுடைய இயற்கையான குணம். அது ஒரு முறை மாற்றப்பட்டது. ஆனால் அதை மாற்றினது என்ன ? (கிறிஸ்து)  சகோதரியே அங்கே தான் நீங்கள் இருக்கிறீர்கள். பாருங்கள் ? இது தான் அது.
7. “என் வசனத்தை கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக் கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு” அவன் ஆக்கினை தீர்ப்புக்கு உட்படாமல் மரணத்தை விட்டு நீங்கி, ஜீவனுக்கு உட்பட்டிருக்கிறான். “கடந்த காலம்” மரணத்தினின்று நீங்கி ஜீவனுக்கு உட்பட்டிருக்கிறான். ” யோவான் 5:24 ல் இயேசு சொல்லுகிறார். பாருங்கள் ?
8. எனவே சகோதரி ப்ரூஸ் நீங்கள் ஒரு கிறிஸ்தவராக இருக்கிறீர்கள். நான் உங்கள் ஜீவியத்தை கவனித்தேன். தரிசனத்தின் கீழ் நான் உங்களை கவனித்திருக்கிறேன். நீங்கள் ஒரு கிறிஸ்தவராக  உள்ளதை அறிகிறேன். பாருங்கள். ஒரு மாசும் இல்லை… பாருங்கள் ? நான் உங்கள் மேய்ப்பன்,  உதவுவதற்காக  அது இருந்தது போல். (சகோதரி ப்ரூஸ்   “ஆம் ”என்கிறார்கள். - ஆசிரியர்) பாருங்கள்? என் மனதில் ஏதாவது சந்தேகமிருந்தால், உங்களில் ஏதாகிலும் தவறு இருந்தால், நான் உங்களிடம் சொல்லியிருப்பேன், சகோதரி ப்ரூஸ் ( “நான் அதை விசுவா சிக்கிறேன்” ) சகோதரி ப்ரூஸ். ஆனால் உங்கள் அனுபவத்தில் ஏதாவது தவறு இருக்குமானால், இதுவரையில் அதை பற்றி நான் அறிந்துள்ளபடி, அங்கு ஒரு காரியமும் இல்லை. அங்கே ஒரு காரியமும் தவறாக இல்லை. நாம் இப்பொழுது ஜெபிக்க போகிறோம். ( “சகோதரி ப்ரூஸ்” இருதயத்திற்காக தேவன் எதையாகிலும் செய்யவில்லை என்றால் நான் மரிக்கப்போகிறேன் என்கிறார்கள். -  ஆசிரியர்)
9. சகோதரி ப்ரூஸ் நீங்கள் மரிக்கப் போகிறதில்லையென்று நான் நினைக்கிறேன். அதுவாக இருந்தால் அது என்னிடமிருந்து மறைக்கப் பட்டிருக்கிது. (சகோதரி ப்ரூஸ் “ நன்றி சகோதரனே” என்கிறார்கள். - ஆசிரியர்)
10. இந்த சிறிய ஸ்திரீ எப்பொழுதும் நல்லவைகளையே செய்திருக்கிறார்கள். (சகோதரி ப்ரூஸ் “ ஓ தேவனே ” என்கிறார்கள். - ஆசிரியர்) அவர்கள் பழைய டார்கஸை போல முயற்ச்சித்தார்கள். மேலும் இப்பொழுது அவர்களுடைய இருதயம் மிகவும் மோசமாக இருக்கும் இந்த நேரத்தை அவர்கள் பெற்றிருக்கிறார்கள். ஜ“ஓ”ஸ  உம்மிடத்தில் அன்பு கூறுகிறவர்களுக்கு சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று, உம்முடைய வார்த்தை சொல்லவில்லையா ? அதில் எங்கள் முழு ஆத்துமாவையும், முழு மனதையும் வைக்கிறோம். அப்பொழுது நீர் ஏதாகிலும் நடப்பித்து கொண்டிருந்து, நாங்கள் அதை பற்றி எதையும் அறியாமல் இருக்கலாம். (“ நன்றி  தேவனே !” )  அவை எல்லாம் நன்மைக்காகவே. அவர்கள் உம்மை நேசிக்கிறார்கள்.
11. இப்பொழுது எங்களெல்லாருக்கும் பெரிய மேய்ப்பருக்கு, அவருடைய நாமத்தில், என் சகோதரி மீது என் கரங்களை வைக்கிறேன். அவர்களை உருவாக்கி இவ்வுலகத்திற்கு அவர்களை கொண்டு வந்த தேவன் தாமே  உம்முடைய வேலையாளாய் இருப்பதற்கு, உலகத்தின் காரியங்களிலிருந்து அவர்களை வெளியே முத்திரையிட்ட அவருடைய ஆவி தாமே இவர்களுடைய வியாதிப்பட்ட சரீரத்தை சுகமாக்குவதாக. முழுமையாக அவர்களுக்கு சுகத்தை உண்டாக்குவாராக. தேவனே அவர்கள் எங்களுக்கு ஊழியத்தில் தேவைப்படுகிறார்கள். இந்த ஜெபத்துடன் என்னை நானே ஈடுபடுத்த, என் கரங்களை அவர்கள் மீது வைத்து, விசுவாச ஜெபத்துடன் நான் அவர்களை உம்மிடத்தில் ஒப்புக்கொடுக்கிறேன். இந்த மலையை பார்த்து, “இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் விலகிப்போ ” என்று சொல்லுகிறேன். எங்கள் சகோதரி தாமே தேவனுடைய இராஜ்ஜியத்திற்காகவும், தேவனுடைய மகிமைக்காகவும் ஜீவிப்பார்களாக.
( “சிறந்த வேலைப்பாடு” என்ற அவருடைய செய்திக்கு முன் நடைபெற்ற பாடல் ஆராதனையின் போது, அவருடைய அலுவலகத்தில் அமர்ந்து,  சகோதரி ஜார்ஜியா ப்ரூஸ் அவர்களிடம் பேட்டி கண்டார். சகோதரி ப்ரூஸ் 1902 – ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 8 - ஆம் தேதி பிறந்தார். இந்த பேட்டிக்கு பிறகு, இயேசு கிறிஸ்துவுக்காக 27 வருடங்கள்  ஜீவித்து , 1991 – ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 7 –தேதி, தன்னுடைய 89 - ஆம் வயதில் மரித்தார். 1975 - ஆம் ஆண்டு    சகோ. கென்னத் ஆன்டஸ் அவர்களுக்கு, சகோதரி ப்ரூஸ் கொடுத்த மூல ஒலி நாடாவிலிருந்து, புத்தக வடிவில் கொண்டு வரப்பட்டு,இலவசமாக வினியோகிக்கப்படுகிறது. -  ஆசிரியர்).

ஜெபவரிசை

ஜெபவரிசை

நவம்பர் 27 1953


1. உங்களுக்கு நன்றி.  மாலை  வணக்கம்  நண்பர்களே நீங்கள் விரும்பினால் உட்காரலாம். (ஒலி நாடாவில் காலியிடம் - ஆசிரியர்)
2. ஏறக்குறைய ஏழு வருடங்களுக்கு முன்னர் 1946 மே 7ல் இந்தியானாவிலுள்ள கிரீன்ஸ் மில் அருகே நான் இருந்த அறையில் ஒரு தூதன் வந்தார். ஒரு மனிதர் நடந்து கொண்டிருந்தார். அவர் செட்டைகளை கொண்டிருக்கவில்லை. அவர் அப்படியே ஒரு பெரிய மனிதனாக இருந்தார். ஒரு வெண் வஸ்திரத்தை தன்னுடைய பாதம் வரை கொண்டிருந்தார். மேலும் வியாதியுள்ள ஜனங்களுக்கு ஜெபிக்கும்படி நான் பிறந்தேன் என்று அவர் கூறினார். நான் கல்வி அறிவு இல்லாதவன். எழுத படிக்க தெரியாதவன் என்றும், நான் செல்ல இயலாது என்றும் நான் அவரிடம் கூறினேன். நான் இராஜாக்களுக்காகவும், பேரரசர்களுக்காகவும் ஜெபித்து கொண்டிருந்தேனென்றும், உலகத்தை சுற்றிலும் செய்தி பரப்பிக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார். கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை சமீபமாய் கொண்டுவரும் ஒரு செய்தி. நான் அதை செய்ய இயலாதென்று அவரிடம் கூறினேன். என்னுடைய கரங்களை ஜனங்களின் மீது வைக்கும்படியும் கோளாறு என்னவென்று அது கூறும் என்றும் அவர் என்னிடம் கூறினார். நீ உத்தமமாய் இருந்தால் அவ்விதமாக சம்பவிக்கும். அப்பொழுது அவர்களுடைய இருதயத்தின் இரகசியங்களை கூட அறிந்து கொள்வாய் என்றார். இதன் மூலம் அவர்கள் விசுவாசிப்பார்கள் என்றார்.
3. நான் நல்லது அதை குறித்து தான் நான் ஜெபித்து கொண்டிருந்தேன். நான் அதை புரிந்து கொள்ளவில்லை என்றேன். பிலிப்பு வந்து ஜெபவரிசையை அடைவதற்கு முன்னமே பிலிப்பு என்ன செய்தார் என்று இயேசு அறிந்து கொள்வதை பற்றிய வேத வசனத்தை அவர் குறிப்பிட்டார். இயேசு அவனிடம் கூறினார். நீ ஒரு கிறிஸ்தவன் அல்லது ஒரு விசுவாசி என்று கூறினார்.
4. நான் ஒரு விசுவாசி என்றும், கபடற்ற ஒரு மனிதன் என்றும் நீர் எப்படி அறிவீர் என்றான்.
5. அவர் பிலிப்பு உன்னை அழைக்கிறதற்கு முன்னே, நீ அத்தி மரத்தின் கீழ் இருந்தபோதே உன்னை அறிவேன் என்றார்.
6. அதற்கு பிலிப்பு நீர் தேவனுடைய குமாரன் என்றான்.
7. அதை செய்யும்படி அவர் என்னை அனுப்பினார் என்று நீங்கள் விசுவாசிக்கின்றீர்களா?  நீஙகள் செய்வீர்களா?  உங்கள் முழு இருதயத்துடனும் நீங்கள் செய்வீர்களா? அப்பொழுது நான் உங்களுக்கு உதவி செய்ய முடியும். ஏனெனில், எதற்காக உங்களுக்கு உதவுகிறேன்.?  இயேசுவை விசுவாசிப்பதற்கு உங்களுக்கு உதவி செய்கிறேன். ஜனங்கள் உன்னை விசுவாசிக்கும்படி செய்து, பிறகு உத்தமமாக இருந்து நீ ஜெபிக்கும்போது, உன்னுடைய ஜெபத்திற்கு முன்னால் எதுவும் நிற்கபோவதில்லை என்றார். உங்கள் முழு இருதயத்தோடும் நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா?  இப்பொழுது இந்த வழியே பாருங்கள். அங்கே அது உள்ளது.
8. இப்பொழுது கூட்டத்தினரே இங்கே அவர் இருக்கிறார். அந்த படத்தை பார்த்திருக்கிற நீஙகள் நியாயத்தீர்ப்பின் நாளில் நாம் சந்திக்கும்போது அந்த தூதனானவர், நான் சரியாக இப்பொழுது நின்றுக் கொண்டிருக்கும் இடத்திலிருந்து இரண்டு அடியில் நின்று கொண்டிருக்கிறார் என்று. அது சரியே.
9. இப்பொழுது இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இந்த அறையிலுள்ள ஒவ்வொரு ஆவியின் மீதாகவும் சட்டபடியான அதிகாரத்தை எடுத்துக்கொள்ளுகிறேன். தம்முடைய குமாரனை மேலே எழுப்பின சர்வ வல்லமையுள்ள தேவன் தாமே தம்மை பிரதிநிதித்துவப்படுத்தும்படி தம்முடைய ஆவியை திரும்ப தம்முடைய தீர்க்கதரிசிக்குள் அனுப்புவாராக. இன்றிரவு அது வெளிபடுத்தப்பட்டதை அவர் காண்பாராக.
10. ஸ்திரீயானவள் என்னிடமிருந்து அப்பால் போய் கொண்டிருப்பதாக காணப்படுகிறாள். அவள் பெற்றுக் கொண்டாள். இல்லை அவள் இருக்கிறாள். அவள் ஒரு மருத்துவமனை அல்லது ஒரு  மருத்துவரின் அலுவலகம் அல்லது ஒரு மருத்துவரின் அறை அல்லது ஏதோ ஒன்றினுள் இருக்கிறாள். அவள் பரிசோதிக்கப்பட்டுக்கொண்டிருந்தாள். மேலும் அவர்கள் அவளுடைய பக்கவாட்டில் அழுத்திக் கொண்டிருக்கிறார்கள். அது அவளுடைய இடது புறத்தில். மேலும் அங்கே ஒரு நடுத்தர வயது மனிதர் இருக்கிறார். மேலும் அது ஒரு கட்டியாக இருக்கிறது. அது ஸ்திரீயின் இடது புறத்தில் உள்ளது. அங்கே இரண்டு மருத்துவர்கள் இருக்கிறார்கள். மேலும் அது அறுவை சிகிச்சை பண்ண வேண்டியதாய் உள்ளது என்று ஒருவர் கூறுகிறார். இன்னொருவர் அது இயலாது என்று கூறுகிறார். உண்மையா? அந்த விளக்கம் மிக சரியாக இருந்ததா? ஏதோ ஒன்று அசைந்து கொண்டிருப்பதை நான் அப்படியே பார்க்கிறேன். நீர் முன்னர் ஒரு விசேஷித்த கூட்டத்தில் ஜெபித்திருக்கிறாய். ஒரு சுவிசேஷ கூட்டம். நல்ல கருநிறமான முடியுடனிருந்த ஒரு மனிதர் அங்கே இருக்கிறார். மெலிந்த சரீரத்தோடு. அது நானாக இருந்தேன். நான் உனக்காக ஜெபித்தேன். நீ மூளையில் கட்டியை கொண்டிருந்தாய். மேலும் நீ சுகமானாய். உன்னை சுற்றிலும் ஒரு ஒளி வெளிச்சத்தை காண்கிறேன். மூளையில் கட்டியுடன் இருந்த நீ சுகமானாய். மேலும் நீ இந்த பட்டினத்திலிருந்து வரவில்லை. நீ இல்லினாய்ஸ் பட்டணத்திலிருந்து வந்திருக்கிறாய். அது சரியா?  சில மாதிரியான பனை மரங்கள் அல்லது ஒரு மகத்தான பெரிய சமுத்திரம்…. சுற்றிலும் ஒரு ஏரி அல்லது அதை போன்ற மற்ற ஏதோ ஒன்று இருந்த இடத்தில் உனக்காக ஜெபிக்கப்பட்டது. நீ சுகமான இடத்தை சுற்றிலும் பனை மரங்கள் அது சரியா? இங்கே வாருங்கள்.
11. யெகோவா, அந்த யெகோவா ரஃப்பா ஒரு வெண்கல சர்ப்பம் மீது தோன்றி, சிலுவை மீது தோன்றி, இப்பொழுது இந்த கடைசி நாட்களில் வியாதியையும், பாவத்தையும் அப்பால் எடுத்து செல்லும்படி மனிதனாய் தோன்றிய சர்வ வல்லமையுள்ள தேவனே, உம்முடைய குமாரனாகிய இயேசுவின் நாமத்தில், இந்த ஸ்திரீயை கட்டி வைத்திருக்கிற சாத்தானை நான் கடிந்து கொள்ளுகிறேன். அது அவளை விட்டு வெளியே வருவதாக. மேலும் அவள் வெளியே சென்று இயல்பாக இருப்பாளாக. தேவனுடைய மகிமைக்காக அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் இதை கேட்கிறேன். ஆமேன்.
12. நீ சுகமடைய போகிறாயென்று நீ விசுவாசிக்கிறாயா? பார், இப்பொழுது நீ அவருடன் நெருங்கி நடக்கும்படி நான் விரும்புகிறேன். எப்படியாயினும் சமீபகாலமாக நீ அதை செய்யும்படி முயற்சித்து கொண்டிருக்கிறாய். நீ உன்னுடைய எல்லா ஜீவியத்தினூடாகவும் மேடு  பள்ளங்களை  கொண்டிருக்கிறாய். உனக்கு  பின்னால் ஒரு நீண்ட கருப்பு கோட்டையை நான் கவனித்தேன். நீ மேடு பள்ளங்களை கொண்டிருந்தாய். முயற்சித்தாய், தேடினாய், ஜெபித்தாய். மேலும் தேடினாய், முயற்சித்தாய். இப்பொழுதே சென்று கொண்டேயிரு. தேவனுடைய நன்மையினாலும், வல்லமையினாலும் இப்பொழுது நிறப்பப்பட போகிறாய். தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக.
13. எப்படி இருக்கிறீர்கள். நான் அவருடைய ஊழியக்காரனாய் இருப்பதாக உங்கள் முழு இருதயத்துடனும் என்னை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் அவ்விதம் விசுவாசிப்பீர்களா?  இப்பொழுது அது உங்களிலிருந்து துரிதமாக அந்த குழந்தையிடம் நகர்ந்து கொண்டிருக்கிறது. அது குழந்தையை தகர்த்து கொண்டிருக்கிறது. உங்களை குறித்தும் ஏதோ ஒன்று இருக்கிறது. இயேசு கிறிஸ்து உங்களுடைய இரட்சகராக உங்களுக்கு தேவை. குழந்தையின் தகப்பனுக்கும் அதுவே தேவை. அது சரியா? உங்களிருவருக்குமே கிறிஸ்தவர்களாய் இருப்பது அவசியமாயுள்ளது. உங்களுடைய குழந்தையை தேவன் சுகமடைய செய்வாரானால் தேவனை சேவிப்பீர்களென்று நீங்கள் வாக்குபண்ணுவீர்களா? உங்கள் முழு இருதயத்துடனும், அவர் அதை சுகமடைய செய்வாரென்று நீங்கள் விசுவாசிக்கின்றீர்களா? குழந்தையின் மீது உங்கள் கரத்தை வைத்து கொண்டிருங்கள். எல்லா இடத்திலிருந்தும் உங்கள் தலைகளை வணங்கியவாறு இருங்கள்.
14. கர்த்தராகிய இயேசுவே இந்த குழந்தையை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் ஆசீர்வதிக்கிறேன். அதனுடைய சிறிய சரீரம் சுகமடைவதாக. அன்பார்ந்தவர்கள் இந்த இரவு கிறிஸ்தவர்கள்  ஆவார்களாக. அவர்களுடைய முழு இருதயத்துடனும் அவர்கள் உம்மை சேவிப்பர்களாக. இந்த ஆசீர்வாதத்தை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் கேட்கிறேன். ஆமேன். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இப்பொழுது நீங்கள் போகலாம். குழந்தை சரியாகிவிடும்.
15. வாருங்கள், ஸ்திரீயை கொண்டு வாருங்கள். இப்பொழுது துரிதமாக இராதேயுங்கள். ஒவ்வொருவரும் ஒரு நிமிடம் அமைதியாகவும், பயபக்தியுடனும் அப்படியே இருங்கள்.  கடிகாரத்தை கவனிக்காதீர்கள். ஒரு நிமிடம் வெறுமனே அப்படியே அமைதியாயிருப்போம்.
16. சரி ஸ்திரீயே, அப்படியே சிறிது நேரம் உன்னுடன் பேச விரும்புகிறேன். நீ என்னை தேவனுடைய ஊழியக்காரனென்று விசுவாசிக்கிறாயா? அது ஒரு உண்மையான இருதயத்திலிருந்து வருகிறதென்று விசுவாசிக்கிறேன். சரி நீ நரம்பு சம்பந்தமான கோளாரினால் அவதிபட்டு கொண்டிருக்கிறாய். மேலும் நீ ஒரு அசுத்த ஆவியால் உபாதைபட்டாய். சரியாக அங்கே தொங்கி கொண்டிருக்கிறது. அவர் பார்ப்பதற்கு கருப்பாக அலையலையாக இருக்கிறார். ஆனால் அவருடைய நேரம் வந்திருக்கிறது என்பதை அறிந்திருக்கிறார். ஊ…. இப்பொழுது நீ மேலும் ஏதோ ஒன்றுடனும் அவதிபட்டுக் கொண்டிருக்கிறாய். இல்லை ஏதோ ஒன்று எனக்கு முன்பாக திறப்பதை நான் காண்கிறேன். சிறிது நேரம் ஒரு மருத்துவமனையை அல்லது சில மாதிரியான அறுவை சிகிச்சையை காண்கிறேன். மேலும் அவர்கள் அவளுடைய பித்தப்பையை அகற்றி கொண்டிருக்கின்றனர். அது காலத்தினூடாக முன்னால் இருந்திருக்கத்தான் வேண்டும். நீ அதிக வாலிபமாக காணப்படுகிறாய். ஆனபோதிலும் அது இன்னும் உனக்கு உபத்திரவத்தை கொடுத்து கொண்டுதான் இருக்கிறது. அந்த காரியம் உண்மையா? மேலும் இதுவும் உண்மையே. என்னை பார். அது உன்னிலிருந்து போய்விட்டது. குதூகலத்துடனும்இ மகிழ்ச்சியுடனும் மேடையை விட்டு போ. நீ சரியாக அங்கு நின்று கொண்டிருந்தபோதே அந்த அசுத்த ஆவி உன்னை  விட்டு போய்விட்டது. தேவனே இயேசு கிறிஸ்துவின் நாமத்தில்….?
17. விசுவாசம் கொண்டிருங்கள். இப்பொழுது சிறிது நேரம், அது அவளை பின் தொடர்கிறது. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. சகோதரியே குதூகலத்துடன் செல்வதற்கு அது தான் வழி..
18. சிறிது நேரத்திற்கு முன்னால் என்னை பார்த்து கொண்டிருந்த நரைத்த தலைமுடி கொண்ட ஒரு ஸ்திரீ மீது அது நிற்கிறது. அதாவது இருதய கோளாரும், ஸ்திரீகளுக்குள்ள கோளாரும் உள்ளவள். சரியாக அங்கே முன் வரிசையில் உட்கார்ந்திருக்கிறார்கள். இயேசு கிறிஸ்து உங்களை சுகமடைய செய்வார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?  பெருங் குடல் கோளாரை பெற்றுள்ள உங்களின் பக்கத்தில் அமர்ந் திருக்கும் ஒருவர். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. உங்களுடைய சுகத்தை ஏற்று கொள்ளுங்கள். சுகமடைந்தவர்களாய் இருங்கள். நீங்கள் விசுவாசிக்க மாத்திரம் செய்வீர்களானால் தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து உங்களை சுகமாக்குவார்.
 19. சிறிது நேரம், அப்படியே விசுவாசம் கொண்டிருங்கள். அங்கே                   பின்னால் உட்கார்ந்திருப்பவரே, நீங்கள் அந்த எலும்பு முறிவை மேற்கொள்ள வீரும்புகிறீர்களா ஐயா?  உள்ளே உட்கார்ந்திருக்கும் இரண்டாவது நபர். தேவன் உங்களை சுகமாக்குவார் என்று நீங்கள் விசுவாசிக்கின்றீர்களா? சரி நீங்கள் விசுவாசித்தால் உங்களுடைய காலில் எழுந்து நின்று உங்களுடைய சுகத்தை ஏற்று கொள்ளுங்கள். அங்கே நின்று கொண்டிருக்கும் மனிதரே. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அதை செய்வதற்கான வழி அதுதான். சுகமானவர்களாய் இருங்கள்.
20. அங்கே ஏதோ ஒன்று திடீரென்று பளிச்சிடுகிறது. எழுந்து  நிற்கும் ஒரு ஸ்திரீ. கர்த்தருடைய தூதன் மூலையில் இருக்கிறார். நீங்கள் அதை காணமுடியவில்லையா?  இங்கே பாருங்கள் நண்பர்களே. உங்களில் ஒவ்வொருவரும் பாருங்கள். இங்கே சரியாக மேலாக இந்த பக்கத்தில் நின்று கொண்டிருக்கிறார். அந்த மஞசள் நிற ஒளி கீற்றை உங்ளால் அங்கே உங்களால் காணமுடியவில்லையா? இப்பொழுது காத்திருங்கள். அது வெளியே நகர்ந்து கொண்டிருக்கிறது. நான் ஏதோ ஒன்றை காண்கிறேன். ஒரு பிரசங்க பீடத்தில் நின்று கொண்டிருக்கும் ஒரு ஊழியக்காரராய் அது இருக்கிறது. அவர் இருதய கோளாரும்,  இரத்த அழுத்தமும் உள்ள ஒருவர். சற்று பொறுங்கள். அங்கே அவர் இருக்கிறார். அவர் தன்னுடைய கரத்தை உயர்த்தியவாறு இருக்கிறார். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஐயா நீர் சுவிசேஷத்தின் ஊழியக்காரராய் இருக்கிறீரா. அதிக இரத்த அழுத்தமும்,  இருதய கோளாறும் உங்களுக்கு இருக்கிறதல்லவா?  உங்ளை முழுமை அடையச் செய்ய இயேசு கிறிஸ்து இங்கே இருக்கிறார். நீங்கள் அதை ஏற்று கொள்வீர்களா?
21. சிறிது நேரம் உங்களுக்கு அடுத்து உட்கார்ந்து கொண்டிருக்கும் அந்த சிறு பையன் உங்களுக்கு கொஞ்சம் உறவினர் இல்லையா? சங்கை ஐயா தேவனுடைய தீர்க்கதரிசியென்று என்னை நீர் விசுவாசிக்கிறீரா?  அந்த சிறு பையன் தன்னுடைய தொண்டையில் ஏதோ ஒரு கோளாறை கொண்டிருக்கிறான் இல்லையா?  அது சரியா? அந்த பகுதியின் மீது உங்கள் கரத்தை வையுங்கள்.
22. தேவனே. இயேசுவின் நாமத்தில் அவனுடைய சுகத்திற்காக பையனை ஆசீர்வதிக்கிறேன். தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக.
23. உமக்கு அடுத்து உட்கார்ந்திருக்கும் அந்த ஸ்திரீ உம்முடைய மனைவியாய் இருக்கிறார். அதே வீட்டில் நீங்கள் இருக்கிறீர்கள் நான் என்பதை காண்கிறேன். அந்த சிறு பையனிடம் அழவேண்டாம் என்று கூறுங்கள். அவன் சுகமாகிவிட்டான். அவன் சரியாகி விடுவான்.
24. அந்த ஸ்திரீ ஏதோ ஒன்றை அவள் மீது கொண்டிருந்தாள். இங்கே அவளுடைய தலைக்கு பின்னால், அது அவளுடைய தலையின் மீதும்,  அவளுடைய பக்க உறுப்பின் மீதும் உள்ளது. அது புற்றுநோய். அவள் உங்களுடைய மனைவி. அவள் மீது உங்கள் கரங்களை வையுங்கள். தேவனே. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அவளை சுகமாக்கும்.
25. அவளுக்கு அடுத்து உட்கார்ந்திருக்கும் ஒரு ஸ்திரீயின் மீதாக அங்கே அது போகிறது. ஸ்திரீகளுக்கான கோளாறும், இருதய கோளாறும் உள்ளவள். அது சரியா சகோதரியே? ஆனால் இந்த மற்ற ஜனங்களுடன் இணைக்கப்பட்டிருக்கவில்லை. இந்த ஜனங்கள் இங்கிருந்து அப்பாலிருந்து வருகிறார்கள். அவர்கள் இல்லினாய்ஸிலிருந்து என்று நான் நம்புகிறேன். உங்களுடைய இருதய கோளாறும், ஸ்திரீகளுக்கான கோளாறும், அங்கே உங்ளுக்கு அடுத்து உட்கார்ந்;திருக்கும் ஸ்திரீ,  சிறுசீரக கோளாறு உள்ளவள். அது சரியா ஸ்திரீயே?  ஒருவர் மற்றவர் மீது உங்கள் கரங்களை வையுங்கள். ஓ இயேசுவே தேவனுடைய குமாரனே உம்முடைய மகத்தான ஆவியானது அந்த மூலையில் அசைவாடி கொண்டிருக்கிற நேரத்தில் அவர்கள் ஒவ்வொருவரையும் சுகப்படுத்தும். இதை அருளும் பிதாவே. தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் அதை கேட்கிறேன். தேவனுடைய மகிமை வெளிப்படட்டும். ஆமேன்.
26. தேவனிடத்தில் விசுவாசம் கொண்டிருங்கள். சந்தேகப்பட வேண்டாம். தேவன் அதை நடப்பிக்கப்பண்ணுவார் என்று உங்கள் முழு இருதயத்துடனும் விசுவாசியுங்கள். ஞாபகம் கொள்ளுங்கள். அவருடைய பிரசன்னம் சமீபமாய் உள்ளது. மேலும் ஆசீர்வதிக்கக்கூடும்.
27. எப்படி இருக்கிறீர்கள் சகோதரியே. இப்பொழுது சிறிது நேரம் உங்களிடம் பேச விரும்புகிறேன்.. நீங்கள் உங்கள் முழு இருதயத்துடனும் விசுவாசிக்கிறீர்களா?  நீங்கள் ஒரு நிமிடம் இந்த வழியாக என்னை பார்ப்பீர்களா?  உங்களிடம் ஏதோ ஒன்று தவறாக உள்ளது. நீங்கள் தேவனுடன் இணைப்பில் இல்லை. நீங்கள் தேவனுடைய சித்தத்திற்கு வெளியில் இருக்கிறீர்கள். அது மிக சரியானதாகும். நீங்கள் ஒரு போதகர் அல்லது ஏதோ ஒன்றாக பயன்படுத்தப்பட்டீர்களா? மேலும் நீங்கள் பின்மாற்றம் அடைந்துள்ளீர்கள். சிகரெட்டுகள்  புகைப்பதற்கும் மற்ற ஒவ்வொன்றிற்காகவும் நீங்கள் சென்று கொண்டிருக்கிறீர்கள். மேலும் தேவனுக்கு உங்கள் முதுகை திருப்பினீர்கள். அது சரியா?  ஆனால் தேவனுடன் சரியாவதற்கு இன்றிரவு நீங்கள் இங்கே வந்திருக்கறீர்கள். நல்லது அவர் உம்மை நேசிக்கிறார். ஒவ்வொரு பாவத்தையும் உங்களுக்கு அவர் மன்னித்து மீண்டும் அவருடைய அலுவலில் திரும்ப உங்களை வைப்பார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா?  நீங்கள் அதை ஏற்று கொள்ள விரும்பி உங்கள் கரங்களை உயர்த்துவீர்களா?
28. சர்வ வல்லமையுள்ள தேவனே, இந்த ஸ்திரீயின் ஜீவியத்தைக் கட்டி வைத்திருக்கும் அந்த சாத்தான் சபிக்கப்படட்டும். சாத்தானே இந்த ஸ்திரீயை விட்டு வெளியே வா. தேவனுடைய ஊழியக்காரனாக உனக்கு கட்டளையிடுகிறேன். அவளை விட்டு விலகு. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அவளை விட்டு வெளியே வா. சரி ஸ்திரீயே உன் வழியே போ. உன்னுடைய பாவங்கள் இப்பொழுதே உனக்கு மன்னிக்கப்பட்டது. திரும்பி சென்று தேவனை உன்னுடைய முழு இருதயத்தோடும் சேவி. தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக.
29. ஆமேன் தேவனுக்கு ஸ்தோத்திரம் என்று கூறுவோம். அங்கே வெளியில் இருக்கும் உங்களில் சிலர் ஏன் விசுவாசிக்கவில்லை?  தேவனிடத்தில் விசுவாசம் கொண்டிருங்கள். அங்கே பின்னால் இருப்பவர்கள், நீங்கள் எங்கிருந்தாலும் இந்த வழியாக பார்க்கும்படியும், விசுவாசிக்கும்படியும், விசுவாசம் கொண்டிருக்கும்படியும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் சவால் விடுகிறேன். தேவன் உங்களை சுகமாக்குவார்.
30. வாருங்கள் ஸ்திரீயே எப்படியிருக்கிறீர்கள். உங்கள் முழு இருதயத்துடனும் நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? பாவிகளை           பாவத்திலிருந்து விடுவிக்கவும்,  சுகவீனத்திலிருந்து நோயை        சுகப்படுத்துவதற்கும் தேவன் தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை அனுப்பினாரென்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?  உங்களுடைய கோளாறு உங்கள் தலையிலுள்ளது. அது மூக்கடைப்பு. முழு அடைப்பு. முகரும் புலனை நீங்கள் கொண்டிருக்கவில்லை.அவர் உங்களை சுகமாக்கிவிட்டார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?   சென்று கொண்டே இருங்கள். இப்பொழுது உங்களால் முகர முடியும். அப்படியே  சென்று சுகமாயிருங்கள். தலைவலியும் மற்ற காரியங்களும் உங்களை விட்டு போய்விடும்.
31. தேவனிடத்தில் விசுவாசம் கொண்டிருங்கள். ஆமேன். அசையாதீர்கள். அங்கே அவர் போகிறார். அங்கே பின்னால் உட்கார்ந்து கொண்டிருக்கும் ஸ்திரீ,  ஊதா நிற தொப்பியுடன் கூடிய ஒரு ஸ்திரீயின் மேல் தொங்கிக் கொண்டிருக்கிறது. அவள் தன்னுடைய கண்ணீரை துடைத்து கொண்டிருக்கிறாள். ஆம்,  நீங்கள் உங்களுடைய தொண்டையில் ஏதோ ஒரு கோளாறை கொண்டிருந்தீர்கள். அது மார்ச்சளி பிரச்சனை, மார்ச்சளி. உங்கள் சுகத்தை நீங்கள் ஏற்று கொள்ளுகிறீர்களா? நீங்கள் விசுவாசித்தால் உங்கள் கரத்தை உயர்த்துங்கள். நீங்கள் உங்களுடைய சுகத்தை ஏற்ற கொண்டீர்களென்று தேவனுக்கு தெரியப்படுத்த,  அவ்விதமாக உங்கள் கரத்தை அசையுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. வீட்டிற்கு சென்று சுகத்தை பெற்றிடுங்கள்.
32. உங்களை பற்றி என்ன ஸ்திரீயே?  உங்கள் முழு இருதயத்தோடும் நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?  நீங்கள் ஒரு நல்ல உத்தமமான ஒருவர் என்று நம்புகிறேன். நான் அதை என் முழு இருதயத்தொடும் விசுவாசிக்கிறேன். மேலும் உங்களுக்கு பின்னால் அங்கே ஒரு ஆழமான நீண்ட துக்கம் உள்ளதென்று நான் அறிவேன். நீங்கள் ஒரு வாலிப ஸ்திரீயாய் இருப்பினும்,  சம்பவித்திட்ட அநேக காரியங்கள் அங்கே இருந்து கொண்டிருக்கின்றன. உங்களில் மிகவும் கருமை மற்றும் இருளின் ஒரு தடத்தை நான் காண்கிறேன். நீங்கள் இன்றிரவு இங்கே இருக்கிறீர்கள். நீங்கள் இந்த குழந்தையைக் கொண்டு வந்துள்ளீர்கள். மேலும் இந்த குழந்தை ஒரு எலும்பு முறிவை கொண்டுள்ளது. குழந்தையை தேவனுக்கு பிரதிஷ்டை செய்வதற்கு நீங்கள் விரும்புகிறீர்கள். அது உண்மை இல்லையா?  கூறுங்கள். ஏதோ ஒன்று தவறாயுள்ளதை நான் காண்கிறேன். அது ஒரு மனிதன். மேலும் அவர் மிகவும் வியாதிக்குள்ளாயிருக்கிறார். மனரீதியாக நோயுற்றிருக்கிறார். அது உன்னுடைய புருஷன். மேலும் வெடித்தல் அல்லது யுத்தம் அல்லது ஏதோ நடந்து கொண்டிருக்கிறது. அது ஒரு குண்டு வீசப்பட்ட தாக்குதலினால் ஏற்பட்ட மன அதிர்ச்சி. இல்லையா?  தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நீங்கள் இருவருமே சுகமடைய போகிறீர்கள். தேவனே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இந்த சகோதரி சுகமடைய செய்யும். பிதாவே அவளுடைய சுகத்திற்காக இதை அருளும் கர்த்தாவே. உம்முடைய ஆவியானது இயேசு கிறிஸ்துவின் நாமத்தின் வழியாக சுகமாக்குவதற்கு இங்கிருப்பதாக. சென்று கொண்டேயிருங்கள் சகோதரியே.
33. ஏதோ ஒன்று இப்பொழுது தான் சம்பவித்தது. ஏதோ ஒன்று திடீரென்று தோன்றினது,  அல்லது கடந்து போனதை நான் கண்டேன். உங்கள் முழு இருதயத்துடனும் நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?  அங்கே பின்னால் அந்த வரிசையில் உட்கார்ந்து கொண்டிருக்கும் மூன்றாவது நபர், அப்படியே உங்கள் தலையை திருப்பினீர்கள். அந்த சிறிய ஸ்திரீ ஸைனஸ் பிரச்சனையுடன் காணப்படுகிறார்கள். சகோதரியே ஸைனஸ் பிரச்சனையிலிருந்து சுகமடைந்தவர்களாயிருக்க நீங்கள் விரும்புகிறீர்களா?  தேவன் உங்களை சுகமாக்குவார் என்று நீங்கள் விசுவாசிக்கறீர்களா?  சரி உங்கள் காலில் எழுந்து நின்று ஸைனஸிலிருந்து உங்களுடைய சுகத்தை ஏற்று கொள்ளுங்கள். தேவன் இப்பொழுது உங்களை சுகமாக்குகிறார். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவனித்தில் விசுவாசம் கொண்டிருங்கள். சந்தேகப்படாதீர்கள். அப்படியே உங்கள் முழு இருதயத்துடனும் விசுவாசியுங்கள்.
34. ஸ்திரீயை கொண்டு வாருங்கள். இந்த வழியாக பாருங்கள் சகோதரியே. நான் அவருடைய தீர்க்கதரிசியென்று நீங்கள் என்னை விசுவாசிக்கிறீர்களா? சென்று நீங்கள் விரும்புவதை புசியுங்கள். உங்களுடைய வயிற்று கோளாறு உங்களை விட்டு போய் விட்டது.
35. வாருங்கள் சகோதரியே. பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம் சமீபமாயுள்ளது. சிறுநீரக பிரச்சனையை மேற்கொள்ள நீங்கள் விரும்புகிறீர்களா? ஸ்திரீயே நீங்கள் சிறுநீரக கோளாறினால் அவதிப்படுகிறீர்கள். மேடையை விட்டு இறங்கி செல்லுங்கள். அவர் உங்களை சுகமாக்குகிறார். சென்று உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசித்து கொண்டிருங்கள். ஆம் ஐயா. தேவனை ஸ்தோத்தரியுங்கள்.
36. வாருங்கள். அங்கே பின்னால் கடைசி வரிசையில் உட்கார்ந்திருப்பவரே. உங்கள் காலில் ஏதோ பிரச்சனை உள்ளது. இல்லையா ஐயா? தேவன் உங்களை சுகமாக்குவார் என்று நீங்கள்  விசுவாசிக்கிறீர்களா?  நீங்கள் அப்படியாய் விசுவாசிப்பீர்களா?  சரி. உங்கள் காலில் எழுந்து நின்று உங்கள் சுகத்தை ஏற்ற கொள்ளுங்கள். நீங்கள் அங்கே உட்கார்ந்து கொண்டு ஜெபித்து கொண்டிருந்தீர்கள். தேவன் உங்களோடு இருந்து உங்களை ஆசீர்வதிப்பாராக. நினைத்திருக்கும் எல்லாவற்றிற்கும் மேலாகவும்,  மிக அதிகமாகவும்,  நிறைவாகவும்,  அபரிதமாகவும் உங்களுக்கு தந்தருளுவாராக. இன்னும் அந்த பக்கம் நகர்ந்து கொண்டிருக்கிறது. தேவனிடத்தில் விசுவாசம் கொண்டிருங்கள்.
37. சகோதரர் போஸ்வர்த் இங்கே உள்ளே வருவதை நான் கண்டேன். அவர் ஒரு சிறு பையன் அல்லது ஒரு வாலிபனுக்காக அவர் ஜெபித்து கொண்டிருந்தார். அந்த வாலிபன் ஒரு கண்ணை மாத்திரமே உடையவராயிருந்தார். குருடாயிருக்கும் ஒரு கண்ணுடன் கூடிய ஓரு வாலிபனுக்காக ஜெபித்து கொண்டிருந்தார். ஆம். அந்த வாலிபன் தன்னுடைய கரத்தை உயர்த்தியிருக்கிறார். வாலிபனுக்கு அடுத்து உட்கார்ந்திருப்பவர் அவருடைய தந்தை. ஒரு பையன் அல்லது பேரனுடன் அங்கு ஏதோ தவறாக உள்ளது. அது ஒரு சிறு பெண். அது பிறவியிலேயே கால் ஊனம் அல்லது ஏதோ ஒன்று. தகப்பன் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தை தேடிக்கொண்டிருக்கிறார். சில பழக்க வழக்கங்களை விட்டுவிடும்படிக்கு சில பிரச்சனைகளை அவர் பெற்றுள்ளார். சகோதரனே நீங்கள் அதை செய்வீர்களானால்,  தேவன் பரிசுத்த ஆவியை உங்களுக்கு கொடுப்பார். மேலும் அந்த பிள்ளைகளை சுகமாக்குவார். தேவனிடத்தில் விசுவாசம் கொண்டிருங்கள்.
38. நான்… சற்று பொறுங்கள். நான் சகோதரர் போஸ்வர்த்திடம் பேசிக்கொண்டிருந்தேனென்று நான் நினைத்தேன்.
39. நான் அவருடைய தீர்க்கதரிசியாய் இருக்கிறேன் என்பதை விசுவாசிக்கிறாயா?  உன்னுடைய முழு இரதயத்தோடும் அப்படி நீர் விசுவாசிப்பீரா?  மனதிலுள்ளவைகளை படிப்பவராக இருப்பதாக நீர் என்னை விசுவாசிப்பதில்லை. அப்படிதானே. நான் தேவனுடைய ஊழியக்காரனாய் இருப்பதாக நீர் என்னை விசுவாசிக்கிறீரா?   நீர் சில  மாதிரியான… அதிக இரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக கோளாறுடனும் அவதிபட்டுக் கொண்டிருக்கிறீர். மேலும் நீர் ஒரு போதகர். நீர் ஒரு பெந்தேகோஸ்தே போதகர். மேலும் நீர் வலிப்பு அல்லது ஏதோ ஒன்றை கொண்டிருக்கிறீர். நீர் வாலிபராக இருந்த போதே வருடா வருடங்களாக பிரசங்கித்தீர். நீர் சில வருடங்களுக்கு முன் முழுவதும்                 ஊக்குவிக்கப்பட்டு, ஒரு பிரசங்க பீடத்தில் பிரசங்கித்து கொண்டிருக்கிற உங்களை நான் காண்கிறேன். நீங்கள் வலிப்பினால் பாதிக்கப்பட்டு,  அது உங்களை கீழே தள்ளியது. இங்கே வாருங்கள் என் சகோதரனே. தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து உங்களை சுகமாக்கவார். 
40. என்னுடைய சகோதரனை கட்டி வைத்திருக்கும் பிசாசே. அவரை விட்டு வெளியே வா. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இந்த மனிதரை விட்டு விலகு. பொல்லாங்கனே இப்பொழுதே அவரை விட்டு வெளியே போ. சத்தயத்திற்கு கட்டுபட்டு அவரிடமிருந்து போகும்படி தேவனுடைய குமாரனாகிய இயேசுவினால் உன்னை ஏவுகிறேன். சகோதரனே தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. உங்களுடைய பிரசங்க பீடத்திற்கு சென்று திரும்ப பிரசங்கித்து கொண்டிருங்கள். தேவன் உங்களை                         ஆசீர்வதிப்பாராக.
41. வாருங்கள் ஸ்திரீயே, அந்த முதுகு பிரச்சனையிலிருந்து விடுபடும்படிக்கு நீங்கள் விரும்புகிறீர்களா? உங்களுடைய சுகத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். உங்கள் முழு இருதயத்தோடும் சத்தமிட்டு கொண்டு, தேவனை ஸ்தோத்தரித்து கொண்டு மேடையை விட்டு செல்லுங்கள். அது உங்களிலிருந்து போய்விட்டது.

42. சரி வாருங்கள் ஸ்திரீயே. நீங்கள் வந்து கொண்டிருக்கும்போது  இதை உங்களுடைய முழு இருதயத்துடனும் நீங்கள் இதை  விசுவாசிக்கிறீர்களா? அப்படியே ஒரு நிமிடம் இங்கே வாருங்கள். இப்பொழுது உங்களை பிடித்து வைத்திருக்கும் சாத்தான்,  இங்கே உள்ள அநேகரை பிடித்து வைத்துக் கொண்டிருக்கிறான். அவன் ஒவ்வொரு பக்கத்திலிருந்தும் முழுவதுமாக சுற்றிலும் இழுத்துக் கொண்டிருக்கிறான். தேவன் உனக்கு உதவி செய்யவில்லையென்றால் சிறிது காலம் மாத்திரமே நீ ஜீவிக்கக் கூடும் என்பதை நீ புரிந்து வைத்திருக்கிறாய்.

Sunday, July 17, 2011

சகோ. பிரன்ஹாம் அவர்கள் தான் ""கிறிஸ்து அல்ல'' என்று தெளிவாய் அறிக்கையிட்டு தனது பிரசங்கத்தில் கூறியதன் தமிழாக்கம்

        சகோ. பிரன்ஹாம் அவர்கள் தான் ""கிறிஸ்து அல்ல'' என்று தெளிவாய் அறிக்கையிட்டு தனது பிரசங்கத்தில் கூறியதன் தமிழாக்கம்


கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் முதல் வருகையில் எலியாவின் ஆவியும் பெலமும் உடையவனாய் முன் நடப்பான், முன்னோடுவான் என்று தீர்க்கதரிசிகளால் முன்னுரைக்கப்பட்டவனாகிய யோவான் ஸ்நானனின் ஊழியத்தின் நாட்களில் மக்கள் அவன் கிறிஸ்துவோ என்று ஐயமுற்றனர். லூக்கா 3:15ல் ""யோவானைக் குறித்து இவன் தான் கிறிஸ்துவோ என்று ஜனங்களெல்லாரும் எண்ணங்கொண்டு தங்கள் இருதயங்களில் யோசனையாயிருக்ககையில்'' என்று வாசிக்கிறோம்.ஆனால் யோவான் அவர்கள் நினைக்கிறபடி, தான் கிறிஸ்து அல்ல என்பதை உறுதியாக காண்பிக்கும்படி, லூக்கா 3:16ல், ""யோவான் எல்லாருக்கும் பிரதியுத்தரமாக: நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானங் கொடுக்கிறேன், என்னிலும் வல்லவர் ஒருவர் வருகிறார். அவருடைய பாதரட்சைகளின் வாரை அவிழ்க்கிறதற்கும் நான் பாத்திரன் அல்ல. அவர் பரிசுத்த ஆவியினாலும், அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானங் கொடுப்பார்'' என்று தெளிவுபடுத்தினான்.
        அதே போல், ""நீர் யார்'' என்று (யோவான் 1:19) யோவானிடத்தில் ஆசாரியரையும், லேவியரையும் யூதர்கள் அனுப்பிக் கேட்டபோதும், யோவான் ஸ்நானன் யோவான் 1:20ல் ""அவன் மறுதலியாமல் அறிக்கையிட்டதுமன்றி, நான் கிறிஸ்து அல்ல என்று அறிக்கையிட்டான்'' என்று வாசிக்கிறோம்.
        இதிலிருந்து நமக்கு என்ன தெரிகிறது? இயேசுவின் முதல் வருகையின் முன்னோடின தூதனாகிய யோவான் ஸ்நானனை கிறிஸ்துவோ என்று மக்கள் சந்தேகப்பட்னர். ஆனால் தான் அவர் அல்ல என்று யோவான் உறுதிப்பட கூறினான்.
        அதே போல், இயேசுவின் வருகைக்கு எலியா தீர்க்கதரிசி முன்னோடுவான், அவன் செய்தி முன்னோடும் என்று வேத தீர்க்கதரிசிகளாலும் நமது கர்த்தராலும் முன்னுரைக்கப்பட்டபடி (வெளி 10:6; மத்தேயு 17:11; மல்கியா 4:6) எலியாவாக சகோ.பிரன்ஹாம் அவர்கள் வெளிப்பட்ட போது, இவரையும் மக்கள் கிறிஸ்துவோ என்று ஐயமுற்று, அதைக் குறித்து அவரிடம் கேட்டனர்; சிலர் அவ்வாறு விசுவாசித்து எங்கும் அதைக் குறித்து பரப்பினர். ஆனால் சகோ. பிரன்ஹாம் அவர்கள் யோவான் ஸ்நானனைப் போன்று தான் கிறிஸ்து அல்ல என்று திட்டவட்டமாக அறிக்கையிட்டார். மேலும் ஏழு முத்திரைகளின் வெளிப்பாட்டின் இரண்டாம் முத்திரை பாரா 42 முதல் 48ல் சகோ.பிரன்ஹாம்,""கிறிஸ்து வருவதற்கு முன் பொய்யான வழிகாட்டிகள், கள்ள மேசியாக்கள் எழும்பினர் என்பதை நீங்கள் அறிவீர்களா? அப்போஸ்தலர்களை அடித்துக் துன்புறத்த வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்ட போது, அக்காலத்தில் யூதமார்க்கத்தின் போதனைகளில் தலைசிறந்து விளங்கிய கமாலியேல் அவர்களிடம், ""இவர்களை விட்டுவிடுங்கள். இது தேவனால் உண்டாயிருந்தால் நீங்கள் தேவனோடு போர் செய்கிறவர்களாய் காணப்படுவீர்கள், இது தேவனால் உண்டாகவில்லையெனில்...'' என்றான். மேலும் அவன், ""ஒரு மனிதன் சில நாட்களுக்கு முன்பு 400 பேரை வனாந்தரத்துக்குக் கொண்டு செல்லவில்லையா?'' என்றான் இவ்விதமாக காரியங்கள் நம்மிடம் உண்டு என்றான். இவையெல்லாம் என்ன? உண்மையான ஒன்று வருவதற்கு முன்னால் நிகழும் சம்பவங்கள்.
        இப்பொழுது, பாருங்கள்? சாத்தான் இக்கள்ளப் போதகர்களை எழுப்புகிறான். நாம் இங்கே பேசிக் கொண்டிருக்கிற இந்த சாத்தானுடைய புத்தி நுட்பத்தை கவனியுங்கள். நாம், அவன் யார் என்பதை படிப்படியாக வெளிக்கொணர்கிறோம். வேதத்தின் வாயிலாக அவன் முகத்திரையைக் கிழித்து, அவன் யார் என்பதை நீங்கள் காணும் படியாகச் செய்து கொண்டிருக்கிறோம். செய்யப்பட வேண்டிய காரியமும் அதுதான்.
        அவன் மிக சாமர்த்தியமுள்ளவன். புத்தி நுட்பம் வாய்ந்தவன். உண்மையான ஒன்று வருவதை அவன் காணும் போது அது வருவதற்கு முன்னால் அதை கவிழ்ப்பதற்குத் தன்னால் முடிந்த ஒவ்வொன்றையும் அங்கே எறிகிறான். கடைசி சாட்களில் கள்ளக் கிறிஸ்துக்கள் எழும்புவார்களென்று உங்களுக்குத் தெரியுமல்லவா? எலியாவின் ஆவியினால் அபிஷேகம் பண்ணப்பட்டு, உண்மையாகவே வரவிருக்கின்ற இந்த சகோதரன் இந்த மகத்தான செய்தியை பேசினவுடனே அவர்கள் தோன்றுவார்கள்.
        அவனை ஜனங்கள் மேசியா என்று தவறாக எண்ணக்கூடும். ஆனால் அவன், யோவான் ஸ்நானனைப் போல், ""நான் அவரல்ல'' என்று திட்டவட்டமாகக் கூறுவான். ஏனெனில் அவன் யோவானைப் போலவே வரவேண்டியவனாயிருக்கிறான்.
        யோவான் அங்கே பிரசங்கிக்க வந்த போது, ஜனங்கள், அவனிடம் ""நீ மேசியாவல்லவா? நீ அவரல்லவா?'' என்று கேட்டனர்.
        அதற்கு அவன், "நான் மேசியா அல்ல. அவருடைய பாதரட்சைகளின் வாரை அவிழ்ப்பதற்கும் நான் பாத்திரனல்ல, நான் தண்ணீரினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறேன். அவரோ பரிசுத்த ஆவியினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார்' என்றே கூறியுள்ளார். அதுவுமன்றி, ஏழு சபை காலங்களின் வியாக்கியானம் என்ற புத்தகத்தில், லவோதிக்கேயா சபையின் தூதன் என்ற பகுதியிலும் சகோ. பிரன்ஹாம், ""லவோதிக்கேயா கால தீர்க்கதரிசி செய்தியாளனுக்கும், இயேசு வின் முதலாம் வருகைக்கு முன்னோடியான தீர்க்கதரிசி செய்தியாளன் யோவானுக்கும் மற்றுமொரு ஒப்பீட்டை நான் செய்ய விரும்புகிறேன். யோவானின் நாளின் ஜனங்கள் அவனை மேசியா என்று தவறாக எண்ணினர். யோவான் 1: 19,20 ""எருசலேமிலிருந்து யூதர்கள் ஆசாரியரையும் லேவியரையும் யோவானிடத்தில் அனுப்பி, நீர் யார் என்று கேட்ட பொழுது, அவன் மறுதலியாமல் அறிக்கையிட்டதுமின்றி நான் கிறிஸ்து அல்ல என்றும் அறிக்கையிட்டான்'' இப்பொழுது, இந்த கடைசி நாளின் தீர்க்கதரிசி செய்தியாளனும் கர்த்தருக்கு முன்பாக மகத்தான வல்லமையை கொண்டிருப்பார். ஆதலால் அவரை (செய்தியாளனை தமிழாக்கியோன்) கர்த்தராகிய இயேசு என்று சிலர் தவறாக எண்ணுவார்கள். (காலத்தின் முடிவில், அவர்கள் இதை நம்பத்தக்கதாக, பூமியில் ஒரு ஆவி இருந்து அவர்கùள வஞ்சிக்கும்). மத் 24: 23-26. ""இதோ, கிறிஸ்து இங்கே இருக்கிறார், அதோ, அங்கே இருக்கிறார் என்று எவனாகிலும்சொன்னால் நம்பாதேயுங்கள். ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள். இதோ முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன். ஆகையால், அதோ, வனாந்தரத்தில் இருக்கிறார் என்று சொல்வார்களானால் புறப்படாதிருங்கள்; இதோ இரகசிய அறைவீட்டிற்குள் இருக்கிறார் என்று சொல்வார்களானால் நம்பாதிருங்கள். ஆனால் நீங்கள் அதை நம்பாதீர்கள். அவர் (செய்தியாளன் தமிழாக்கியோன்) இயேசு கிறிஸ்து அல்ல. அவர் தேவனுடைய குமாரன் அல்ல. அவர் சகோதரர்களில் ஒருவர், ஒரு தீர்க்கதரிசி, ஒரு செய்தியாளன், ஒரு தேவனுடைய ஊழியக்காரன். அவருக்கு மகத்தான கனம் செலுத்தப்பட தேவையிராது. யோவானும் கீர்த்தி எதுவும் தனக்கென்று தேடிக்கொள்ளாமல், ""நான் அவரல்ல, எனக்குப் பின் ஒருவர் வருகிறார்'' என்று கூப்பிடுகிற சத்தமாயிருந்தான். சகோ. பிரன்ஹாம் தன்னை கிறிஸ்து என்ற பொய் போதகத்தை பரப்புகிறவர்களின் செயல் பிசாசினுடையது, அது அந்தி கிறிஸ்து, அது கேவலமான பொய், அது சாவுக்கேதுவான காயம் அடைந்தது, எனவே அது ஒழிந்து போகும், அதனோடு எந்தவித சம்மந்தமும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்றெல்லாம் கூறிப் பிரசங்கித்தார். அப்பிரசங்கம், ""இயேசு கிறிஸ்துவைப் பற்றிய வெளிப்பாடு'' என்ற தலைப்பில் பிரசங்கித்த 15 பிரசங்கங்களில் பதினான்காவதான செய்தியாகும். அதன் தலைப்பு ""மிதிக்கப்பட்ட சர்ப்பம்'' என்பதாகும். அச்செய்தியின் 20 முதல் 48 முடிய உள்ள பாராக்களில் தன்னை இயேசு கிறிஸ்து என்று அழைப்பது பிசாசின் பொய்ப் போதகம் என்று தெளிவுபடுத்தி உறுதியாக அறிக்கையிட்டுப் பிரசங்கித்திருக்கிறார். அதன் தமிழாக்கமே இதில் அளிக்கப் பட்டுள்ளது. அது பின்வருமாறு:
        எனது வாழ்க்கைப் பாதையின் முடிவை நான் போய் அடைகையில் அங்கே என்ன இருக்குமோ என்று நான் அடிக்கடி அறிய விரும்பியதுண்டு. அவ்வேளை எப்பொழுது நேரிடும் என்பதை நாம் அறியோம், நம்மில் எவரும் அறியோம், ஆகவே வாழ்க்கையில் இதுவரை நான் நடந்து வந்திருக்கும் கடந்த கால பாதையை நான் திரும்பிப் பார்த்து அப்பாதையில் நான் வெவ்வேறு குன்றுகளையும், முட்புதர் நிறைந்த பாதைகளையும், பாறைகளையும், கஷ்டமான இடங்களையும், மிருதுவான பயணங்களையும் என் வாழ்வில் கடந்து வந்ததைப் பற்றியும், அவ்விதமான வேளைகளில் நான் என்ன செய்தேன் என்பதையும் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தேன். அவை யாவும் இந்நாட்களில் ஒன்றில், நான் கடந்து சென்றுவிடும் வேளையில் தெளிவாகத் தெரியவரும். நம் ஒவ்வொருவரிலும் அவ்வாறு தான் சம்பவிக்கும். ஒவ்வொருவருக்கும் அவ்வேளை வரும்பொழுது, அது தெளிவாகத் தெரியவரும் என்பதைப் பற்றி நாம் யாவரும் நிச்சயமுள்ள வர்களாய் இருப்போம்.
        ஒரு குறிப்பிட்ட காரியத்தைப் பற்றி கூறத் தூண்டுகிறதாகவோ நடத்துகிறதாகவோ இருக்கிறது; ஆனால் அதைக் கூறுவதை விட ஓடிப் போய்விடலாம் என்று நான் விரும்புகிறேன். ஒரு காரியத்தைக் குறித்துக் கூறும்படி அது என்னை நடத்துகிறது, அதைப் பற்றிக் கூறுவது என் இருதயத்தின் அடித்தளத்தையே நொறுக்குகிறது. ஆனால் நான் என்ன கூறுகிறேன், அதைக் கூற வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டுள்ளது. இது ஒலிநாடாவில் பதிவு செய்யப்படுகிறதென்றும், அதனால் உலகம் அதைக் கேட்கும் என்பதையும் நான் உணர்ந்தேயிருக்கிறேன். ஆனால் நான் ஒரு காரணத்திற்காக ஊழியத்தை விட்டு விலகி விட்டேன். நான் அக்காரணத்தினால் ஊழியத்தை விட்டு விலக வேண்டிய நிலை ஏற்பட்டது குறித்து வருந்துகிறேன். நான் எனது அலுவலகத்தை மூடுகிறேன் என்பதைப் பற்றியும், ஊழியத்தை விட்டு விலகுவதைக் குறித்தும் ஒரு வேளை உங்களில் அநேகர் கேள்விப் பட்டிருப்பீர்கள்.
        நமது கர்த்தர் என்னை எங்கே வழி நடத்துவார் என்பதைப் பற்றி எனக்கே தெரியாது, அது என் கட்டுப்பாட்டில் இல்லை; அல்லது நான் என்ன செய்ய வேண்டும் என்பதைக் குறித்து அவர் என்னவெல்லாம் சித்தங்கொண்டிருக்கிறாரோ தெரியாது. ஆனால் வாழ்க்கைப் பாதையில் நான் வந்தடைய வேண்டிய இறுதிக் கட்டத்தைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். என் வாழ்க்கைப்பாதை நெடுகிலும் நான் அநேக பிழைகளை செய்திருக்கிறேன்; அதற்காக நான் உளப்பூர்வமாக வருந்துகிறேன். மானுடனாய் இருப்பதனாலும், ஒரு நபர் மாறுபாடாக நடக்க விரும்பாமல் இருந்துங்கூட, மானுடனாய் இருப்பதிலும், மனுஷ பெலவீனமும் அவ்வாறு காரியங்களை செய்யவோ அல்லது பேசவோ ஆக்கி விடுகிறது என்று நான் கருதுகிறேன். மனுஷ பெலவீனங்களால் நமக்கு அவ்வாறான வேளைகள் ஏற்பட்டு விடுகிறது.
        என்னுடைய இருதயத்தில் எதாவது விருப்பம் இருக்கிறதென்றால், அதென்னவெனில், எனது இந்த வாழ்க்கைப் பயணத்தின் இறுதியில், ""நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே'' என்று நமது கர்த்தராகிய இயேசுவின் வார்த்தைகளை நான் கேட்க வேண்டுமென்பது தான். ""என்னிடத்தில் வா'' என்று கூறும்பொழுது, நானும் அங்கே நின்றிருக்க வேண்டுமென்று வாஞ்சிக்கிறேன் என்று நான் அநேக தடவைகள் கூறியிருக்கிறேன். ஆனால், அதைவிட, ""நன்றாகச் செய்தாய்'' என்று அவர் கூறுவதையே நான் விரும்பியிருக்கிறேன். வேதாகமம் எழுதப்பட்ட நாட்களில் ""என்னிடத்தில் வா'' என்கிற சத்ததத்தை நான் கேட்டது கூட இல்லை; ஆனால் ""நன்றாகச் செய்தாய்'' என்று அச்சத்தம் என்னிடம் கூறுவதையே நான் கேட்க விரும்புகிறேன்.
        நான் எப்பொழுதும் விரும்பியிருக்கிற காரியம் யாதொன்றும் இருக்குமென்றால், என் இருதயத்தின் வாஞ்சைகள் என்னவெனில் என்னுடைய ஆண்டவரும் இரட்சகருமாயிருக்கிற இயேசு கிறிஸ்துவுக்கு உண்மையான ஊழியக்காரனாக இருக்க வேண்டுமென்பதேயாகும். என்னுடைய சாட்சி சுத்தமானதாகவும், தெளிவானதாகவும் உடையவனாக நான் நிற்க வேண்டும் என்பதையே நான் விரும்புகிறேன். என்னிடம் எத்தனையோ பிழைகள் இருந்தன, ஆயினும் நான் அவரை என் முழு இருதயத்தோடும் நேசித்தேன். இக்காலையிலும் கூட நான் அவரை என் முழு இருதயத்தோடும் நேசிக்கிறேன்.
        ஆகவே தான் நான் ஊழியத்தை விட்டு விலகுகிறேன் என்று கூறும்படி நிர்ப்பந்தப்படுத்தப்பட்டுள்ளேன். ஏனெனில், ஜனங்கள் மத்தியில் ஒரு காரியம் எழும்பியுள்ளது, அதுவே நான் அவ்வாறு கூறும்படி செய்திருக்கிறது. அதென்னவெனில், நான் ""ஊழியக்காரன்'' அல்லது ""ஒரு சகோதரன்'' என்று அழைக்கப்படும் அடைப்புக்குறியிலிருந்து எடுக்கப்பட்டு, இயேசு கிறிஸ்து என்று அழைக்கப்படுகிறேன். அவ்விதமாக என்னை அழைப்பது என்னை ஒரு அந்தி கிறிஸ்து என்று பட்டம் சூட்டி விடும். நான் அவரை, ஒரு அந்தி கிறிஸ்துவாக சந்தித்து, அவரை விட்டு அகற்றப்படுவதற்கு முன்னர், பணியை விட்டு விலகி ஓடிப் போனவனாகவே சந்திக்க விரும்புகிறேன்.
        சில ஆண்டுகளுக்கு முன்பாக அதைப் பற்றி என் காதுகளில் விழுந்தது. நான் அதை ஒரு தமாஷ் என்று எண்ணினேன். ஒரு சமயம் மீன் பிடிக்கச் சென்றிருந்த பொழுது, இரண்டு அல்லது மூன்று சகோதரர்களை நான் சந்தித்தேன். அவர்களில் ஒருரைக் கூட நான் இன்று காலைக் கூட்டத்தில் காணவில்லை. அவர்கள் இந்த விஷயத்தைப் பற்றி பேசுவதற்காக என்னை அணுகி, ""சகோதரன் பிரன்ஹாம் அவர்களே, நீர் அபிஷேகிக்கப்பட்ட மேசியாவாகிய கிறிஸ்துதானே?'' என்று கேட்டார்கள்.
        அவ்விரு சகோதரர்களுடைய கழுத்தைக் கட்டிக் கொண்டு, எல்லோரிடமும், ""சகோதரர்களே, என்னால் முடிந்த அளவு நான் கிறிஸ்துவின் உண்மையான ஊழியக்காரனாக இருக்கவே முயன்றிருக்கிறேன். நீங்கள் அவ்விதமான காரியங்களைக் கூறுவதை நான் விரும்பவே மாட்டேன். அவ்வாறு என்னைப் பற்றி எப்பொழுதுதாவது சொல்லப்படுமென்றால் , அப்பொழுது நான் ஒரு தெளிவான மனசாட்சியோடு ஊழியத்தை விட்டு விலகி விடுவேன். அவ்வாறு ஊழியத்தை விட்டு என்னை நீங்கள் போகச் செய்வதால், காலத்தில், நான் ஊழியத்தில் இருந்திருந்தால் என்னால் ஆத்தும ஆதாயம் செய்யப்பட்டிருக்க வேண்டிய ஆத்துமாக்கள் ஒவ்வொருவருக்கும், நீங்களே பொறுப்பாளிகளாயிருப்பீர்கள்; என்னை ஊழிக்களத்தை விட்டு விலகிச் செல்லும்படியான நிலைக்கு தள்ளினதற்கும் நீங்கள் பொறுப்பாளிகளாவீர்கள்'' என்று கூறினேன். அத்தோடு அது முடிந்து போகும் என்று நான் எண்ணினேன்.
        அதன் பிறகும், இன்னும் சில தடவைகளிலும் நான் அதே விஷயத்தைப் பற்றி கேள்விப்பட்டேன். ஆàல் அது இவ்வாறில்லை. அன்றொரு நாள் கனடா தேசத்தில் ஒரு சகோதரன் என்னிடம் ஒரு சிறிய டிக்கெட்டை தன் சட்டைப் பையிலிருந்து எடுத்துக் காண்பித்தார். அதில் ""வில்லியம் பிரன்ஹாம் எங்களுடைய கர்த்தராயிருக்கிறார்'' என்று இருந்தது. அவர் வில்லியம் பிரன்ஹாமின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுப்பதாகவும் தெரிய வந்தது. அது ஒரு சத்துருவாக இருந்திருந்தால், அது என் சத்துருவாக இருந்திருந்தால், நான் அதை நகைப்புக்கிடமானதாக எடுத்துக் கொண்டிருப்பேன். ஆனால் விலையேறப்பெற்ற, பிரிய முள்ள சகோதரன் ஒருவர் என்னை இயேசு கிறிஸ்து என்று தான் விசுவாசங்கொண்டுள்ளதாகக் கூறி, என்னிடம் தனது பாவங்களையும் தவறுகளையும் அறிக்ககையிட வந்திருந்தார்.
        நான் அந்த கோட்பாட்டினை விசுவாசிக்கிறேன் என்று கேள்வி கேட்டு, வீட்டில் எனக்குக் கடிதங்கள் வந்துள்ளன; சிகாகோ மற்றும் பல்வேறு இடங்களிலிருந்தும், தொலைபேசியின் மூலமும் அதைக் குறித்து என்னிடம் கேட்டனர்.
        நான் கிறிஸ்து என்று கூறுகிறதான எல்லாவிதமான கடிதங்களும் தொலைபேசி அழைப்பு மூலம் கூறுவதும் கடந்த சில நாட்களில் எனக்கு வந்துள்ளன. சகோதரரே! அது பிசாசினுடைய பயங்கரமான, வெட்கக்கேடான, தேவபக்தியற்ற ஒரு பொய்யாகும்! பார்த்தீர்களா, நான் உங்களுடைய சகோதரன் என்பதை உணருங்கள். அவ்விதமாகக் கூறுவது எந்த ஒரு நபரையும் ஊழியத்தை விட்டு ஓடிப்போகச் செய்துவிடும். அவ்வாறு கூறுவது, கிறிஸ்துவை நேசிக்கிற எந்த ஒருவனையும் ஊழியத்தை விட்டு ஓடிப் போகச் செய்துவிடும்.
        ஒரு வருடத்திற்கு முன்பாக நான் முதன்முறையாக இதைக் குறித்துக் கேள்விப்பட்ட பொழுது, சமீபத்தில் நான் ஆண்டவரிடம் சென்று கேட்டேன். நான் ஆண்டவரை அணுகியபொழுது, அவர் எனக்கு வேதவாக்கியங்களைச் சுட்டிக்காட்டி, அநேக ஆண்டு காலமாக யூதர்களுக்கு ஒரு தீர்க்கதரிசியும் வராதிருந்த பொழுது, அவர்களுக்கு யோவான் பிரசங்கித்துக் கொண்டு வந்த பொழுது அவனைக் குறித்து அவர்கள் தங்கள் இருதயத்தில் ஆச்சரியப்பட்டு, யோவான் ஒருவேளை மேசியாவாக இருக்கக்கூடும் என்று தங்கள் மனதில் எண்ணியதைக் குறித்துள்ள விஷயத்தை குறிப்பிட்டார். எனவே அப்பொழுது நான்... அவர்கள் யோவானிடம் போய் அவன் கிறிஸ்துதானா என்று கேட்டபொழுது அவன் தான் கிறிஸ்து அல்ல என்று அறிக்கையிட்டான். அதை நீங்கள் லூக்கா 3ம் அதிகாரம் 15ம் வசனத்தில் காணலாம். ஆகவே அதன் பிறகு, அது ஓய்ந்து விட்டது; ஆகவே அதை அப்படியே விட்டுவிட்டேன்.
        ஆனால் அது இந்த அளவுக்கு நீடித்துக்கொண்டே இருக்கும் போது, அதற்கு ஒரு முடிவு கட்டியாகவேண்டும் என்று நான் அப்பொழுது அறிந்துகொண்டேன். சபைக்கும் உலகுக்கும் இதுவே எனது கடைசி செய்தியாக இருக்குமானால், எனக்கு ஏற்பட்ட தரிசனமும், நதிக்கரையில் கர்த்தருடைய தூதன் தோன்றி கூறியவைகள் யாவும் சத்தியமாயிருக்கின்றன.
        அநேக சமயங்களில் மக்கள் என்னை தீர்க்கதரிசி என்று அழைக்கும் போது, அதைப் பற்றி நான் ஒன்றும் சொல்லவில்லை. ஏனெனில், ஆங்கில ஏற்பாட்டில், ""தீர்க்கதரிசி'' என்றால் வெறும் ஒரு "பிரசங்கி' என்றும், ""தீர்க்கதரிசனம் உரைப்பவன்'' என்றும், "வார்த்தையை முன்னுரைப்பவன்' என்றும் பொருள்படும். அப்படி அழைத்தபொழுது நான் ஓடிப்போய்விடவில்லை, ஏனெனில், அதையெல்லாம் நாம் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், ""அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்து'' என்று அழைக்கப்படும் நிலைக்கு வரும்போது, அது என்னால் தாங்கிக் கொள்ள முடியாத காரியமாயிருக்கிறது. எனவே என்னால் அதை சகித்துக் கொள்ள முடியவில்லை.
        கனடா தேசத்தில் நடந்த கூட்டத்திற்குப் பிறகு, புறப்பட்டுச் செல்லும் போது, தூரத்தில் எஸ்கிமோக்கள் அல்லது சிகப்பு இந்தியர்கள் மத்தியிலும் அவ்விஷயம் பரவியிருக்கக் கண்டேன்.
        ஆகவே அது என்னை முற்றிலுமாக மனமுறிவடையச் செய்து விட்டது. வேட்டைக்குச் செல்ல நீண்டகாலமாகவே நான் திட்ட மிட்டிருந்தேன், ஆனால் அதை நான் மேற்கொள்ள இயலாமற் போயிற்று. ஏனெனில் நான் வேட்டைக்கால விபத்தொன்று ஏற்படுமோ என அஞ்சினேன். நான் என்ன கூறுகிறேன் என்பதை நீங்கள் புரிந்து கொண்டீர்களென்றால், இது உங்களுக்கு புரியம். நான் இப்பொழுது இங்கே நடுக்கத்தோடு நின்று கொண்டிருப் பதைவிட மிகவும் நடுக்க முள்ளவனாக இருந்தேன். முப்பத்தியொரு ஆண்டுகால ஊழியமானது பிசாசின் சாக்கடை குழாயின் ஆழத்தில் விழுந்து விட்டதே என்று எண்ணுகையில் என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. நான் போய்விட்ட பின்பு, அவர்கள் என்னைப் பற்றி என்ன சொல்லுவார்கள்? ""அதோ அவனைப் பற்றி கூறியது முற்றிலும் சரியாகி விட்டது'' என்பார்கள். ஜனங்கள் மேல் எனக்கிருந்த செல்வாக்கெல்லாம் போய், அது ஒரு அந்தி கிறிஸ்துவின் காரியம் என்பதாக ஆகிவிடும். ஆகவே என்னால் அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
        ""நான் இந்த காட்டிலே தானே என் துப்பாக்கியின் மீதோ அல்லது வேறெதன்மீது விழுந்து இறந்துவிடுவதே நல்லது'' என்று எண்ணினேன். பிறகு நான் வளர்த்து ஆளாக்கப்பட வேண்டிய என்னுடைய சிறிய மகன் ஜோசப்பைக் குறித்து எண்ணிப் பார்த்தேன். அதற்கு மேல் நான் வேட்டையாடும் நிலையில் இல்லை; எனவே நான் காட்டைவிட்டுப் புறப்பட்டு, வீட்டுக்குத் திரும்பி வந்தேன்.
        எட்டு அல்லது பத்து நாட்களுக்கு நான் மனமுறிவடைந்தவனாக, குழப்பமான சூழ்நிலையில் இருந்தேன். நான் என் சிந்தை தடுமாறுகிறேன் என்று எண்ணினேன். நான் ஒவ்வொருவரையும் என்னை விட்டு நீங்கியிருக்கும்படியும் என்னைத் தனியே விட்டு விடும் படியாகவும் கூறினேன், ஏனெனில் நான் தடுமாற்றமான சூழ்நிலையில், பதற்றமுள்ளவனாக, நிலைகுலைந்து, சுக்குநூறாக இதயம் கிழிந்த நிலையில் இருந்தேன்.
        இதையெல்லாம் கூறுவது என்னுடைய சத்துருவாயிருந்தால் அதைப் பற்றி பரவாயில்லை; நான் அதைப் பற்றி கேள்விப்பட்ட மாத்திரத்தில் அதைக் குறித்து நகைத்து, என் வேலையை செய்து கொண்டே இருந்திருப்பேன். ஆனால், இதையெல்லாம் கூறுவது, விலையேறப்பெற்ற சகோதரனோ, விலையேறப்பெற்ற சகோதரியாகவோ இருக்கும்போது, அதுவே என்னை புண்படுத்துகிறது. ""கர்த்தாவே, இவ்விஷயம் என்னால் தாங்கவொண்ணாத காரியமாகும். நான் இதை உம்முடைய கரத்தில் கொடுத்துவிட்டு, ஊழியத்தை விட்டு வெளிநடப்புச் செய்வதைத் தவிர எனக்கு வேறு எதுவும் தெரியவில்லை'' என்று கூறினேன்.
        சில நாட்களுக்கு முன் ஓர் இரவில், கர்த்தரிடத்திலிருந்து இதைப் பற்றி நிச்சயமாய் அறிந்து கொள்வதற்காக, ஒரு தரிசனம் உண்டாயிற்று. கருப்பும் மஞ்சள் நிறமுமான அழகான குட்டி சர்ப்பம் ஒன்று என்னைப் பின்தொடர்ந்து வந்து கொண்டே, என் காலில் கடித்தது. ஆனால் எனது இரத்தம் உயர்தரமானதாக இருந்தபடியால், அதன் விஷம் எனக்கு சேதம் ஒன்றும் விளைவிக்கவில்லை. நான் குனிந்து சர்ப்பம் கடித்த இடத்தைப் பார்த்தேன். நான் உடனே திரும்பி துப்பாக்கியை எடுத்து அச்சர்ப்பத்தை சுட்டேன், அதனுடைய நடுப்பாகத்தில் அதற்கு காயம்பட்டது.
        ஒரு சகோதரன் கூறினார்... நான் என்னுடைய துப்பாக்கியினால் அதன் தலையைச் சுட்டுவிடத் திரும்பினபோது, ஒரு சகோதரன் கூறினார், ""அப்படிச் செய்யாதீர்கள், உங்கள் பக்கத்தில் கிடக்கும் அந்த கம்பை எடுத்துக்கொள்ளுங்கள்,'' என்றார். அந்த கம்பை எடுக்கத் திரும்பிய போது, அது தடுமாறிக் கொண்டே வளைந்து வளைந்து ஒரு சிறு குட்டையினுள் போய் விட்டது.
        ""நல்லது, அது இனிமேல் அதிகம் சேதத்தை விளைவிக்க முடியாது, ஏனெனில் அந்த சகோதரர், அந்த சகோதரர்கள் உணர்வடைகிறதான காரியம் நடக்கும் என்று நான் விசுவாசிக்கிறேன். அந்த சர்ப்பம் சாவுக்கேதுவாக காயப்படிருக்கிறது. எனவே அது செத்துவிடும்'' என்று நான் கூறினேன்.
        எனது சபையின் அங்கத்தினர்கள் அநேகரையும்... இந்தக் கூடாரத்தில் சகோ. நெவிலும் நானும் இருக்கையில் கேள்வியோடு இங்கு வந்து என்னை அணுகுகிறவர்களை நான் கேட்கிறேன்: சகோதரர்களே, சகோதரிகளே, நான் உங்களுக்கு முன்பாக கிறிஸ்துவுக்கு உண்மையான ஊழியக்காரனாக நடந்து கொள்ளும் படி முயற்சி செய்ததில்லையா? நான் உங்களுடைய சகோதரனாக இருக்க முயற்சி செய்ததில்லையா?
        எங்கெல்லாம் இப்போதகம் இருக்கிறதோ, அங்கே அது தானே விலையேறப் பெற்ற மக்கள் மேல் இருக்கும் ஒரு ஆவியாக இருக்கிறது. அநேகர் இதைப் பற்றி என்னிடம் கேட்டிருக்கின்றனர். ஆனால் அது ஒரு ஆவியாக இருக்கிறது. ஆனால், இன்றைக்கு அப்படிப்பட்ட போதகம் சாவுக்கேதுவான காயத்தைப் பெற்றுக் கொள்கிறது, அது விரைவில் மரித்துவிடும், எனவே நான் ஊழியத்திற்கு திரும்பி வந்துவிட முடியும் என்று நான் நம்புகிறேன். அது வரையிலும் நீங்கள் ஒவ்வொருவரும் எனக்காக ஜெபிக்கும்படி நான் கேட்டுக் கொள்வேன். நான் என்ன செய்வேன் என்பது அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. நான் வசிக்கும் ஸ்தலம் விற்கப்படயிருக்கின்றது. நான் இங்கு தங்கியிருப்பேன் என்றால் எனக்கு முழுவதுமாக பைத்தியமே பிடித்துவிடும். எனக்காக ஜெபிக்கும்படி உங்களை நான் கேட்டுக்கொள்கிறேன்.
        நீங்கள் என்னை விசுவாசிப்பீர்களாயின், ஞாபகமிருக்கட்டும், நீங்கள் என்னை கிறிஸ்துவின் ஊழியக்காரன் என்று விசுவாசிப் பீர்களாயின் அப்பொழுது ஒரு காரியம் உங்களுக்கு ஞாபகமிருக் கட்டும்; அதென்னவெனில், ""அப்போதகம் சத்தியத்திற்கு விரோதமாக நெறி பிறண்டதாக இருக்கிறது. அது பொய்யானதாக இருக்கிறது. கர்த்தர் உரைக்கிறதென்னவென்றால்; அது முறை கேடானதாக இருக்கிறது. அப்படிப்பட்டதோடு எந்தவித சம்மந்தமும் வைத்துக் கொள்ளாதீர்கள். நான் உங்களுடைய சகோதரன்''.
        நாம் தலைகளை வணங்குவோமாக.
        பரலோகப் பிதாவே, என் மாம்சமானது நடுங்குகிறது; என் கைகள் பிசைகின்றன; என் கால் விரல்கள் என் காலணிகளுக்குள் விறைக்கின்றன. ஓ, தேவனே இரக்கமாயிரும். இது எனக்கு நேரிட நான் என்ன செய்தேன்? நீர் என்னிடத்திலும் எல்லாரிடத்திலும் இரக்கமாயிருக்க வேண்டுமென நான் ஜெபிக்கிறேன். அந்த விலையேறப்பெற்ற இனிய மக்கள், அவர்கள் செய்திருக்கிற நெறி பிறண்ட செயலைக் குறித்து உணர்வடையட்டும், கர்த்தாவே. அவர்களது இச்செயல், தங்கள் சகோதரனின் இருதயத்தையும், தங்கள் சகோதரனை மாத்திரமல்ல, ஆனால் நமது இரட்சகருமாகிய நமது பரம பிதாவின் உள்ளத்தையும் உடைத்ததே. நீர் எங்கள் பிழைகளை எங்களுக்கு மன்னித்தருளும், கர்த்தாவே. கிறிஸ்துவின் பரிசுத்த இரத்தம் எங்கள் ஜீவன்களை ஒன்று சேர்க்கட்டும், கர்த்தாவே. எங்கள் இருதயங்களை கிறிஸ்தவ அன்பிலும், ஐக்கியத்திலும் இணைக்கிற அந்த அன்பின் கட்டு ஆசீர்வதிக்கப்படுவதாக.
        தேவனே எங்கள் சகோதரர்களையும், எங்கள் சகோதரிகளையும் அக்கள்ளப்போதகத்தோடு அணுகியிருக்கிற சத்துருவானவன் இனிமேலும் நிலைத்திருக்காதபடி சாவுக்கேதுவான காயத்தை பெற்றுக் கொள்ளட்டும்; அது அப்படியே மரித்து போகட்டும், கர்த்தாவே. பிதாவே, நீர் அதைச் செய்யும்பொழுது, நான் ஊழியக்களத்திற்கு மீண்டும் திரும்பி வருவேன். ஆனால் அது வரைக்கிலும் கர்த்தாவே, இருதயம் நொறுங்கினநிலையில் உள்ள உம்முடைய ஊழியக்காரனாகிய நான் காத்துக்கொண்டிருப்பேன். என்னால் எதுவும் செய்யக் கூடியதான நிலையையும் அது தாண்டிப் போய்விட்டது. அதைத் தடுப்பதற்கு என்னால் எதுவும் செய்ய முடியும் என்ற நிலையை அது தாண்டிப் போவதற்கு முன் அதை நிறுத்துவதற்காக நான் கண்ணீரோடும், கதறுதலோடும், புத்தி சொல்லி இணங்க வைக்க நான் மிகவும் கடினமான முயற்சி செய்தேன், நீர் என் இருதயத்தை, கர்த்தாவே, அறிவீர். ஆனால் அது வரம்பு மீறிப் போய்விட்டது, என்னால் இப்பொழுது எதுவும் செய்ய முடியாத நிலை வந்துவிட்டது. எனவே, பிதாவே, அதை நான் உம்முடைய கரத்தில் அநேக ஆண்டுகளாக பிரசங்கித்து வந்த இந்த பிரசங்க பீடத்திலிருந்து ஒப்புக் கொடுக்கிறேன். அதை உம்முடைய கரத்தில் ஒப்புக் கொடுக்கிறேன்.
        இப்பொழுதும் பிதாவே, நீர் உம்முடைய சொந்த தெய்வீக வழியில் அதைக் கவனித்துக் கொள்ளும். அது முற்றிலும் ஒழிந்து போன பிறகு, ஓய்ந்து போன பிறகு, அப்பொழுது உம்முடைய ஊழியக்காரன் ஆகிய நான் ஊழியத்திற்கு திரும்புவேன். அது வரையிலும், நீர் பேசுவதைக் கேட்கும்படி காத்திருப்பேன், கர்த்தாவே.
        இப்பொழுது எங்களை ஆசீர்வதித்து, எங்களுக்கு இன்றைக்கு மகத்தான ஆராதனையை தந்தருளும். ஏனெனில், நாங்கள் இதற்காக மாத்திரம் இங்கு கூடி வந்திருக்காமல், அதை உலகுக்கு முன்பாக பகிரங்கமாக தெளிவுபடுத்தவும் கூடி வந்திருக்கிறோம். அதனால் அவர்கள், நான் உம்மை நேசித்து, விசுவாசித்து உமக்காக நின்றேன், இன்னமும் நிற்க விரும்புகிறேன் என்பதை அறிந்து கொள்வார்களாக. அடியேன் போய்விட வேண்டுமென்றால், நான் உம்மை விசுவாசித்து உம்மில் நம்பிக்கை கொண்ருந்ததைப் பற்றிய உண்மையான சாட்சியோடும், சுத்த இருதயத்தோடும் நான் போய்விடட்டும், கர்த்தாவே. அதை அளித்தருளும், வரப்போகும் காலங்கள் நெடுகிலும், நான் உம்மை துதிப்பேன்; நாங்கள் உமக்கு மகிமை செலுத்துவோம். இயேசு கிறிஸ்துவின் மூலமாக. ஆமென்.
        இப்பொழுது நாம் வேதாகமத்தில் ... வேத வசனங்களுக்கு திரும்புவோம். சகோதரன் நெவில் அவர்கள் பொருட்படுத்த வில்லையென்றால், இன்னும் சில நிமிட நேரம் தொடர்ந்திடலாம் என்று நான் இன்று காலை எண்ணினேன்.
        உங்களில் இனி எவருக்கும் இக்காரியம் பேசப்பட்டு அது என் காதில் வந்து விழ வேண்டாம். ஜெபித்து, அதை தள்ளிவிட்டு, அதைப் பற்றி பேசாதிருங்கள். நான் ஐம்பத்திரண்டு வயதுடையவனாய் இருக்கிறேன். ஆனால் ஒருவேளை தேவன் என்னை உயிரோடு இன்னும் வைத்திருப்பாரெனில், இன்னும் கொஞ்ச காலம் மாத்திரமே என் ஜீவன் இருக்கும், நான் என்னுடைய நேரம் முழுவதின் ஒவ்வொரு துளியையும் கிறிஸ்துவுக்கென்றே செலவழிக்க விரும்புகிறேன். ஆகவே, நான் ஊழியத்தை விட்டு விலகிச் செல்கிறேன், ஏனெனில் நான் அவ்வாறு செய்யும்படியான கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டிருக்கிறேன். இது உங்களுக்கு ஞாபகமிருக்கட்டும்.

தொடர்புக்கு;-
சகோ.ஜீவகிருபைநீதி
சகோ.ஜீவஜெயம்

+919884595250