மணவாட்டி ஊழியம்

மணவாட்டி ஊழியம்

Saturday, November 5, 2011

ஆவியைப் பகுத்தறிதல்


ஆவியைப் பகுத்தறிதல்
மார்ச் 8 , 1960. சர்ச் அசெம்ப்ளி ஆஃப் காட்
   
1. எங்கள் பரலோக பிதாவே, கூடுமானால் என் இருதயத்தில் நான் எவ்விதமாக உணருகிறேன் என்பதை நான் வெளிப்படுத்தி காட்ட விரும்புகிறேன். அதாவது பரிசுத்தத்தில் பரிசுத்தமானவரின்பால் உள்ள ஒருவர், ஏனெனில் என்னைப் போன்ற ஒரு பாவியை மீட்கும் படியாய் இறங்கி வந்தமைக்காய் உணருகிறேன். இங்கே வந்துள்ள போதகர்கள்  யாவரும் அவ்வண்ணமாகவே உணருகிறார்கள் என்று நான் உறுதியாய் நம்புகிறேன். அதாவது உமது கிருபையினால் ஊழியக்காரராய் ஆக்கப்பட்டோம். இந்த உடன்படிக்கையை விழுந்து போன ஆதாமின்  சந்ததிக்கு கொடுத்துள்ளீர். ஆகவே நாங்கள் வேறொரு நோக்கத்திற்காய் கூடி வரவில்லை.  ஆனால்  உம்மை அறியவும்,  தியானிக்கவும், தேவனுடைய சித்தத்தை அறிந்து இந்த தலைமுறையில் உள்ள ஜனங்களுக்கு கிறிஸ்துவை உண்மை பொருளாக்க நாங்கள் எதை செய்ய வேண்டும் என்பதை அறியவுமே இங்கே கூடியுள்ளோம். நியாயத்தீர்ப்பு நாளிலே இந்த சந்ததியை முகமுகமாய் சந்திக்க வேண்டும் என்பதை உறுதியாய் அறிந்திருக்கிறோம். ஊழியக்காரராய் இருப்பதினால் நாங்கள் நியாயாதிபதிகளாய் இருப்போம். நாங்கள் பேசினதான இந்த ஜனங்களிடத்தில் நாங்கள் கொண்டு வந்ததான வார்த்தையின்   பேரில்  அவர்களுக்கு  உண்டாயிருந்த  நடத்தையை அவர்களுடைய நித்தியமான சேருமிடத்தை நிர்ணயிக்கும். ஆகையால்  கர்த்தாவே  நாங்கள்  பிரசங்கித்த  ஜனங்களுக்கு எதிராகவோ அல்லது சார்ந்த நியாயாதிபதியாய் நாங்கள் இருப்போம்.
2. பிதாவாகிய தேவனே ஒரு வார்த்தையும் கூட நாங்கள் தவறாய் பேசாதபடிக்கு தயவு கூர்ந்து காத்துக் கொள்ளும்படி இயேசுவின் நாமத்தின் மூலமாய் வேண்டுகிறோம்.  ஆனால் உம்முடையவைகளாய்  இருக்கின்ற காரியங்களை நாங்கள் ஏற்றுக்கொள்ள எங்களுக்கு உத்தமமான இருதயத்தையும் பட்சபாதமற்ற சிந்தையும் இருக்கும்படி அருள்புரியும். இந்த நாளுக்கு பிறகு வித்தியாசப்பட்ட எங்கள் ஊழியங்களுக்கு போகத்தக்கதாயும், இன்று காலையில் நாங்கள் உம்மை சந்தித்துள்ள படியினாலே இன்னும் மேலாக  தரித்து  கொண்டவர்களாகவும் இருக்கும்படி செய்யும். இதை அளியும் கார்த்தாவே. நீர் எங்கள் போதகராயும், எங்களுடைய காதுகளாயும், எங்களுடைய நாக்குகளாயும், எங்களுடைய எண்ணங்களாயும்  இருக்கமாட்டீரோ. என்னுடைய இருதயத்தின் தியானமும், மனதின் சிந்தனையும், எனக்கு உள்ளாக இருக்கின்றயாவும, என்னுடைய இந்த சகோதரர்கள், சகோதரிகள் இவர்களுக்குள்ளாக இருக்கின்ற யாவும் உமது பார்வையிலே அவையாவும் பிரிதியாய் இருப்பதாக. இங்குள்ள உம்முடைய பரிசுத்தாவியின் சமுகத்தினால் நாங்கள் அவ்வளவாய் நிறைந்தவர்களாயும்,   வல்லமையினால் நிரப்பப் பட்டவர்களாய், இந்த அறை முழுவதுமாய்,  நாங்கள் உட்கார்ந்திருக்கும் கட்டிடமல்ல, நாங்கள் ஜீவிக்கின்றதான இந்த கட்டிடம் தேவனுடைய மகிமையின் மேகமாக ஆகும்படி செய்யும். இக்காலையில் நாங்கள் இங்கிருந்து போகும் போது அவ்வளவாய் பரிசுத்த ஆவியினால் நிறப்பப் பட்டவர்களாய் நாங்கள் ஜீவிக்கின்றோம் என்ற செய்தியை மரித்துக் கொண்டிருக்கின்ற  இந்த  தலைமுறைக்கு,  எங்கள்  ஜீவியத்தில்  இதற்கு முன்பு இராதவர்களுக்கு அதிக உறுதியை கொண்டு செல்லுகிறவர்களாய் இருக்கும்படி செய்யும். கர்த்தாவே எங்களுக்கு செவிகொடும். வார்த்தையின் மூலமாக எங்களோடு பேசும்படியாய்,  உம்முடைய குமாரனும் எங்கள் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.
3. இந்த காலையில் சங்கீதம் 105-ல் ஒரு பகுதியை வாசிக்க விரும்புகிறேன்.  ஒரு  பகுதியை மட்டும்  வாசிக்க விரும்புகிறேன். வேத வாக்கியங்களை குறித்துக்கொள்ளுகிற உங்களுக்கு, அவர்களில் அநேகர் போதகர்களும் ஊழியக்காரர்களுமாய் இருக்கிறதை காண்கிறேன். வார்த்தையை வாசிப்பது  நல்லது.  எத்தனை மணிக்கு முடிப்பார்கள். 12 வரையில் இருக்குமா? என்ன சொல்லுகிறீர். நன்றி.  சங்-105.

கர்த்தரை துதித்து அவருடைய நாமத்தை பிரஸ்தாபமாக்குங்கள். அவருடைய செய்கைகளை ஜனங்களுக்குள்ளே பிரசித்தப்படுத்துங்கள்.
அவரை பாடி அவரை கீர்த்தனம் பண்ணுங்கள். அவருடைய அதிசயங்களையெல்லாம் தியானித்து பேசுங்கள்.
அவருடைய பரிசுத்த நாமத்தை  குறித்து மேன்மை பாராட்டுங்கள். கர்த்தரை தேடுகிறவர்களின் இருதயம் மகிழ்வதாக.
கர்த்தரையும் அவருடைய வல்லமையையும் நாடுங்கள். அவர் சமூகத்தை நித்தமும் தேடுங்கள்.
அவர் செய்த அதிசயங்களையும், அவருடைய அற்புதங்களையும், அவர் வார்த்தையின்  நியாயத்தீர்ப்புகளையும் நினைவு கூறுங்கள்.
அவருடைய தாசனாகிய ஆபிரகாமின் சந்ததியே, அவரால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கiளாகிய யாக்கோபின் புத்திரரே. 
அவரே நம்முடைய தேவனாகிய கர்த்தர். அவருடைய நியாயத்தீர்ப்புகள் பூமியெங்கும் விளங்கும்.
ஆயிரம் தலைமுறைக்கென்றும் அவர் கட்டளையிட்ட வார்த்தையையும், ஆபிரகாமோடே அவர் பண்ணின உடன்படிக்கையையும், 
அவர் ஈசாக்குக்கு இட்ட ஆணையையும் என்றென்றைக்கும் நினைத்திருக்கிறார்.
இஸ்ரவேலுக்கு நித்திய உடன்படிக்கையாகவும் உறுதிபடுத்தி அவர்கள் சுதந்திர பாகமான கானான் தேசத்தை உனக்கு தருவேன் என்றார்.
அக்காலத்தில் அவர்கள்  கொஞ்ச  தொகைக்கு உட்பட்ட சொர்ப்ப ஜனங்களும் பரதேசிகளுமாய் இருந்தார்கள்.
அவர்கள் ஒரு ஜனத்தை விட்டு மறு ஜனத்தண்டைக்கும், ஒரு ராஜ்ஜியத்தை விட்டு மறு தேசத்தாரண்டைக்கும் போனார்கள்.
அவர்களை ஒடுக்கும்படி ஒருவருக்கும் இடங்கொடாமல் அவர்கள் நிமித்தம் ராஜாக்களை கடிந்து கொண்டு,     
நான்அபிஷேகம் பண்ணினவர்களை நீங்கள் தொடாமலும், என்னுடைய  தீர்க்கதரிசிகளுக்கு தீங்கு செய்யாமலும் இருங்கள் என்றார்.
      
4. கர்த்தர் தாமே வாசித்த அவருடைய வசனங்களை ஆசீர்வதிப்பாராக. ஒருக்கால் இந்த செய்தியின்  ஊடாக குறிப்பிடும்படியாக சில வேத வசனங்களை எழுதி வைத்திருக்கிறேன்.
5. அடுத்த ஜனாதிபதி யாராய் இருக்கப் போகிறார் என்பதே எனக்கு வியப்பாய்  உள்ளது. தேர்தல் வருகிறதென்று நீங்கள் அறிவீர்கள். அடுத்த கால வரம்பிற்கு யார் ஜனாதிபதியாக இருக்கப்போகிறார். எனக்கு  தெரிந்திருந்தால்  அதனால்  என்ன பயன். அதை அறிந்தவர் ஒருவரே. அது தேவனே. அடுத்த ஜனாதிபதி யாரென்று எனக்கு தேவன் வெளிப்படுத்தி, நான் ஃபீனிக்ஸில் நின்று கொண்டு இன்னார் இன்னார் அடுத்த அமெரிக்காவின் ஜனாதிபதியாக வரப்போகின்றார் என்று முன்னறிவித்தால், அதனால் என்ன பயன். அவர்கள் அதை பத்திரிக்கைகள் முதலானவைகளில் வெளியிட்டு,என் பெயர் பிரபல்லியமாகும். அது அப்படியே தவறாமல் நிறைவேறினதாய்  இருக்கும். ஆனால் நான் சொல்வதெல்லாமே நிறைவேறும் என்பதாகிவிடும். ஆனால் அது என்ன நன்மையை செய்யக்கூடும். நான் அப்படி ஒரு காரியத்தை செய்தால் அதனால் என்ன நன்மை. பத்திரிக்கைகள் அதை விளம்பரம் செய்யும். இப்படிப்பட்டவர் இப்படிப்பட்டவைகளை முன்னறிவித்தார். அது உண்மையாய் இருக்கும் என்று இவ்விதமாய் கூறப்படலாம்.  எல்லா  பத்திரிக்கைகளும்,  பிரசுரங்களும் அப்படியே விளம்பரப்படுத்தும்.
6. ஆனால் உங்களுக்கு தெரியும் தேவன் இப்படிப்பட்ட காரியங்களை செய்யவே மாட்டார். புத்தியீனமானவைகளுக்கு தேவன் தம்முடைய வல்லமையையும் வரங்களையும் உபயோகிக்கமாட்டார். அது சம்பவிக்கத்தான் போகின்றது. ஜனாதிபதி  யாராயிருந்தாலும்  அவர் ஜனாதியாய் தான் இருப்பார். ஜனாதிபதி யாராய் இருக்கப் போகிறார் என்று இப்பொழுது அறிந்து கொள்வதினால் சல்லி காசுக்கும் அது பிரயோஜனப்படாது.  ஜனாதிபதி யாரென்பதை நாம் அறிந்து கொள்வதினால் நமக்கு கொஞ்சம் கூட நன்மையை கொண்டு வராது. அக்காரணத்தின் நிமித்தமாக இப்படிப்பட்ட காரியங்களை தேவன் செய்யவே மாட்டார்.
7. பின்னர் அப்படிப்பட்டதான ஒரு  முன்னறிவிப்பை நான் செய்து  அது அப்படி நிறைவேறுமானால் பத்திரிக்கைகளும் ஏனைய பிரசுரங்களும்  அவைகளை  வெளியிட்டால் அது  எனக்கு தான்  மகிமையாய் இருக்கும். பாருங்கள் சகோதரன் வில்லியம் பிரன்ஹாம் எவ்வளவு பெரிய ஒரு தீர்க்கதரிசி. யார் ஜனாதிபதியாய் இருக்கப்போகிறார் என்பது அது சம்பவிப்பதற்கு முன்பதாகவே என்னிடம் சொன்னார் என்று ஜனங்கள் சொல்லுவார்கள். அந்த காரியம்  எனக்கு தான் மகிமையாய் இருக்கும். தேவனுக்கு அது பிரியமில்லை. எனக்கு மகிமை உண்டாகும்படியாக அல்லது வேறு எந்த மனிதனுக்கும் மகிமை உண்டாகும்படி செய்வதில் அவருக்கு நாட்டமில்லை. அவருக்கு மகிமையை கொண்டுவரக்கூடியதான காரியங்களை செய்வதில் மட்டுமே அவர் நாட்டம்  கொண்டுள்ளார். அவருக்கு ஏதோ நன்மையை கொண்டு வரக்கூடியது மட்டும் தான்.  
8. அவர் சொன்னது போன்று நாம் அன்னிய பாஷையில் பேசி அதின் அர்த்தத்தை சொல்லத்தக்கவன் ஒருவன் இல்லையென்றால் அதினாலே நாம்  நம்மையே  மகிமைப் படுத்திக்கொள்வதாகும்.  அப்படி  தான் சுய பக்தி விருத்தியாகிறது. அந்த விதமான காரியம்  தமக்கு மகிமையை கொண்டு  வரவேண்டும் என்று தேவன் விரும்புகிறார். நாம் சுய மகிமையை தேடுகிறவர்களாய் இல்லாமல் நாம் செய்கின்ற எல்லா காரியங்களினாலும் அவரை மகிiமைப் படுத்துகிறவர்களாய் இருக்க வேண்டும்.
9. அக்காரணத்தின் நிமித்தமாக அவர் யாராய் இருப்பார் என்றும் அவர் எப்பொழுது சரியாக தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் ஓ அவர்  எத்தனை அல்லது எவ்வளவு குறைவாக வாங்குவார் என்று நான் அறிந்திருந்தால் அல்லது அது எதுவாய்  இருந்தாலும்  அதை  கூறுவதினால் அது எந்த நன்மையும் செய்யப்போவதில்லை என்று இக்காலையயில் அறிந்திருக்கிறேன். ஒருக்கால் இதைக் குறித்து அறிந்திருந்தாலும் அதைக்குறித்து நான் மௌனமாய் இருப்பதே எனக்கு மேலானதாய் இருக்கும். அதை விளம்பரப்படுத்த முயற்சிக்கக்கூடாது,ஏனென்றால் அதை நான்  செய்வதற்கு எந்த காரணமும் இல்லை. ஏனென்றால் எப்படியும் அது  இருக்கத்தான் போகிறது. யார் ஜனாதிபதியாய் இருக்கப்போகிறார் என்பது, நமக்கு அதிக வித்தியாசத்தை கொண்டு வரப்போகிறதில்லை.
10. ஆனால் தேவன் தம்முடைய வரங்களை உபயோகப்படுத்தும் போது அவைளை தம்முடைய சொந்த மகிமைக்காக உபபோகப்படுத்துகிறார். அவருடைய ஜனங்களின் மகிமைக்காக,அவருடைய சபையின்  மகிமைக்காக உபபோகப்படுத்துகிறார். கிறிஸ்துவினுடைய சரீரத்தின் பக்தி விருத்திக் கேதுவாக, தேவனுடைய இராஜ்ஜியத்தின் மகிமைக்காக உபபோகப்படுத்துகிறார். அக்காரணத்தினால் அவர் இந்த காரியங்களை  தம்முடைய சபையில் உபபோகப்படுத்துகிறார். அவர் ஏன் போதகர்களையும், தீர்க்கதரிசிகளையும்,சுவிசேஷகர்களையும்,  மேய்ப்பர்களையும் உடையவராய் இருக்கிறார். அவர்கள் சபையினுடைய பக்தி விருத்திக்காகவும், தேவனுடைய  மகிமைக்காகவும் இருக்கிறார்கள். தீர்க்கதரிசியானவன்  வெளியே  போய் உலகத்தோடு கலந்து கொண்டு, ஒரு  வரத்தை  பாலாமுக்கு உபயோகித்தது போல இருக்கக்கூடாது. அதன் மூலமாக அழிவை ஏற்படுத்துவதோ, அல்லது  பணம் சம்பாதிப்பதோ, அல்லது வேறு ஏதோ காரியமோ செய்யக்கூடாது.  அவன் ஒரு  தீர்க்தரிசியாய் இருப்பானானால், அவன் சபைக்கு தேவனை வெளிப்படுத்துகிறவனாகவும், உலகக்காரியங்களுக்கு புறம்பானவனாயும் இருக்க வேண்டியிருக்கிறது. அதெல்லாம் தேவனுடைய மகிமைக்காகவே இருக்க வேண்டும்.                                    
11. இப்பொழுது அது நம்மிடையே உள்ளது. உண்மையிலேயே அது நமக்கு ஒரு நல்ல காரியமாக இருக்கிறதென்று நான் கருதுகிறேன். உலகத்தில் அப்படிப்பட்ட காரியங்கள் இன்றைக்கு நாம் காண்கிறது போல இருக்கிறதென்று நாம் காண்கிறதினால் நம்முடைய ஒழுங்கை நாம் பின்பற்றுவது நமக்கு நலமானதாய் இருக்கிறது. ஆவியை வகையறுக்கவும், ஆவியை சோதித்தறியவும்
வேண்டுமென்று நாம் தேவனிடத்தில் கட்டளை பெற்றுள்ளோம். இன்றைய சபைக்கு அது ஒரு பெரிய மகத்தான பாடமாயிருக்கிறதென்று நான் நம்புகிறேன். அதாவது எதினுடைய ஆவியையும் பரிசோதித்து அந்த ஆவியை வகையறுத்து பார். அவன் எந்த  ஸ்தாபனத்தை சேர்ந்தவன் என்பதை கொண்டு எவ்வித த்திலும் நாம் ஒருபோதும் சோதித்தறியக்கூடாது. அல்லது அவர்கள் எந்த குழுவோடு கூடுகிறார்கள் என்பதை கொண்டல்ல. அதாவது மெதோடிஸ்ட், பாப்டிஸ்ட், பிரஸ்பிடேரியன், பெந்தேகோஸ்தே அல்லது யாராயிருப்பர் என்று சோதித்தறியாதே. ஒரு மனிதனை அவன் சார்ந்த ஸ்தாபனத்தை கொண்டு தீர்ப்பு செய்யாதே. நாம் எப்பொழுதும் அவரிடம் உள்ள ஆவியையே சோதித்தறிய  வேண்டும்.  புரிகின்றதா? ஆவியை. அவன் பின்மாரியோ அல்லது முன்மாரியோ அல்லது மாரியே இல்லையோ,எதுவாயிருந்தாலும் அதைக் கொண்டு நாம் அவர்களை சோதித்தறியக்கூடாது. ஆனால் அவர்களிடத்திலிருக்கும் ஆவியைக் கொண்டு சோதித்தறிய வேண்டும். நாம் ஆவிகளை பகுத்தறிய வேண்டியவர்களாய் இருக்கிறோம். அவனுடைய சிந்தையில் என்ன இருக்கிறது, அவனிடம் என்ன இருக்கிறது, அவன் எதை அடைய முயற்ச்சிக்கிறான் என்பதை கவனியுங்கள். அவன் தன்னிடமுள்ள ஒருவரத்தைக் கொண்டு முயற்ச்சித்தால், அந்த வரம் எவ்வளவு பெரிதாயிருந்தாலும் சரி, கவலையில்லை.
12. சபைக்கு இதைத்தான் வலியுறித்தி கூற விரும்புகிறேன். நீங்கள் வித்தியாசப்பட்ட ஸ்தாபனங்களில் இருந்த போதிலும், யாவரோடும் சேர்ந்து  ஜீவிக்கின்ற தேவனுடைய சபையாய் நாம் இன்னமும் இருக்கிறோம். உண்மையாக நாம் பிரிந்திருப்பவர்களல்ல. புரிகின்றதா? இந்த காரியத்தைத் தான் நான் வலியுறுத்தி உங்களிடம் சொல்ல விரும்புகின்றேன். வித்தியாசமான விதங்களில் நாம் வெட்டப்பட்ட கற்களாய் நாம் இருக்கிறோம். எல்லாம் தேவனுடைய மகிமைக்கே.
13. நாம் ஜீவிக்கின்றதான இந்த நாளில் வரங்களை குறித்தானவைகளில் அவ்வளவு அதிகமாக உள்ளது.  ஒரு மனிதனிடத்தில் இருக்கும் வரங்களை வைத்து அநேக ஜனங்கள் அநேக ஜனங்களை எத்தன்மையானவர்கள் என்று தீர்மானிக்கின்றனர். இவைகளெல்லாம் வரங்கள் என்று நான் நினைக்கிறேன். நாம் காணும்படியாய் சம்பவிக்கின்ற காரியங்கள் வரங்கள் என்று விசுவாசிக்கின்றேன். அவைகள் தேவனால் கொடுக்கப்பட்ட வரங்கள். ஆனால் எந்த விதமாக வரங்களை உபயோகப்படுத்த வேண்டும் என்று தேவன் கருதினாரோ, அவ்விதமாக நாம் உபயோகப் படுத்தவில்லை என்றால், அப்பொழுது சரியான விதத்தில் உபயோகிக்காததால் உண்டாகும் தவறைக்காட்டிலும், அதிகமான தவறை நம்மால் செய்ய முடியும். அன்றிரவு இவ்விதமாக பீடத்திலிருந்து ஒரு காரியத்தை நான் சொன்னேன். அதாவது நமது மத்தியில் தெய்வீக சுகம் ஒரு முறை கூட நடக்காமல் போனாலும் பரவாயில்லை. ஆனால் சகோதர அன்பே நம்மிடையே காணப்பட வேண்டும் என்று உறைத்தேன். புரிகின்றதா? இந்த காரியங்களெல்லாம் எதற்காக கொடுக்கப்பட்டுள்ளன என்று நாம் அறிந்திருக்க வேண்டும்.
14. நம்மிடையே ஒரு மனிதர் வந்து, அவரிடம் ஒரு பெரிய வரம் இருக்குமேயானால், அவர் நம்மை சேர்ந்தவரோ அல்லது வேறொரு ஸ்தாபனத்தை சேர்ந்தவராய் இருந்தாலும் பரவாயில்லை, அவர் எப்படி உடுத்தியிருக்கிறார்,எந்த ஸ்தாபனத்திலிருந்து வந்திருக்கிறார் என்பதை கொண்டு அவரை நிதானிக்காதீர்கள். ஆனால் நீங்கள் கவனிக்க வேண்டியது என்னவென்றால் அந்த வரத்தை கொண்டு அவர் என்ன செய்ய முனைகிறார் என்று நீங்கள் நிதானிக்க வேண்டியவர்களாய் இருக்கிறீர்கள். அவனுக்குள்ள செல்வாக்கை உபயோகித்து அவனுக்கு ஒரு பேர், புகழை காட்ட அவர் பிரயாசம் எடுப்பாரானால், அது தவறானது என்று அறிந்து கொள்ள என்னிடம் போதுமான ஆவியை பகுத்தறியும் வரம் உண்டு. அவன் எவ்வளவு ஒரு மகத்தானதான போதகனாய் இருந்தாலும் சரி, அவன் எவ்வளவு வல்லமையுள்ளவனாய் இருந்தாலும் சரி. அவன் எவ்வளவு சாதுர்ய முள்ளவனாய் இருந்தாலும் சரி, அல்லது அவருடைய வரம் எப்படி கிரியை செய்தாலும் சரி. கிறிஸ்துவின் சரீரத்திற்கு நன்மையை கொண்டு வரத்தக்கதாய் அவருடைய பிரயாசங்கள் இல்லையென்றால்,உங்களுடைய சொந்த ஆவியின் பகுத்தறியும் வரமே,அது தவறானது என்று உங்களுக்கு சொல்லும். அவ்வளவு சரியாகவும்,அவ்வளவு பூரணமாயும்,எப்படியாய் இருந்தாலும், அது இயேசு கிறிஸ்துவின் சரீரத்திற்கு உபயோகப்படவில்லை என்றால் அது தவறானது.                              
15. ஒரு காரியத்தை அறியும் நோக்கத்திற்காக.  ஒருக்கால் அறிவின் காரணமாகவோ,அல்லது ஆவிக்குரிய வல்லமையின் காரணமாகவோ, சபைகளில் கலந்து கொள்ள ஒரு பெரிய வரத்தை உடையவனாய் இருக்கலாம். ஒருக்கால் அந்த வரத்தை உபயோகித்து, அந்த வரத்தின் மூலம்  தன்னை பிரபல்லியமாக்கிக் கொள்ள முயற்ச்சித்து,அதனால்  தனக்கு ஒரு பெரியபேர்ப்புகழை ஏற்படுத்திக் கொண்டு,அதன் காரணமாக சகோதரர்கள் தன்னை ஒரு பெரிய மனிதனாகப் நோக்கிப் பார்ப்பார்கள் என்ற நோக்கமிருக்கலாம். ஆனால் அது தவறானது. அவரும் அவரை சார்ந்தவர்களும் தவிர, மற்றவர்களை அகற்றிவிட்டு, தாங்களே எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்ற நோக்கமிருக்கலாம். அதுவும் கூட தவறு. புரிகின்றதா?
16. ஆனால் அவரிடம் ஒரு தேவ வரம் இருந்து, கிறிஸ்துவினுடைய சரீரம் பக்தி விருத்தி அடைவதற்காக முயற்ச்சித்து கொண்டிருப்பாரேயானால், அப்பொழுது அவர் எதை சார்ந்தவரானாலும் எனக்கு கவலையில்லை. நீங்கள் மனிதனை சோதித்தரியாமல்,ஆவியை சோதித்தறிந்து, அந்த  மனிதனுக்குள் இருக்கின்ற ஜீவியத்தை சோதித்தறிகிறீர்கள். அதைத்தான் நாம் சோதித்தறிய  வேண்டுமென்று தேவன் கூறியுள்ளார். மனிதனுடைய கூட்டத்தை சோதித்தறியும்படியாய் தேவன் ஒரு போதும் கட்டளை  இடவில்லை. நாமோ அந்த மனிதனுக்குள் இருக்கின்ற ஆவியை சோதித்தறியும்படியாய் தேவனால் கட்டாயப்படுத்தப்பட்டும்,கட்டளையிடப்பட்டும் இருக்கின்றோம். அவன் என்ன செய்ய  முயற்ச்சிக்கிறான். அவனுக்குள் இருக்கும் ஆவி அவனை எங்கு  வழி நடத்துகிறதென்று சோதித்தறிய வேண்டும். பின்னர் அவன் ஜனத்தை நடத்திக்கொண்டு போக பிரயாசிக்கிறான். அவர்களை ஒன்று கூட்ட பிரயாசிக்கிறான். ஜீவிக்கின்ற தேவனுடைய சபையை ஒரு ஸ்தாபனத்திற்குள் கொண்டு போகாமல், ஆவியின் ஒருமைப் பாட்டிலும், ஐக்கியத்திலும்,அறிந்து கொள்ளுதலிலும் வழி நடத்தினால், அவன் முன்மாரியோ, பின்மாரியோ அல்லது எந்த குழுவை சேர்ந்தவராயிருந்தாலும் சரி, அவனுடைய ஆவியும்  அவனுடைய நோக்கமும் சரியானதாய் இருக்கிறது.  அவர் எந்த  பிரிவை சேர்ந்தவராய் இருந்தாலும் அவருக்குள் இருக்கும் ஆவி சரியானதாய் இருக்கிறது. அவனுக்குள் இருக்கும் ஆவி கல்வாரியை சுட்டிக் காண்பிக்குமானால், தன்னையோ அல்லது வேறெதையோ சுட்டிக் காண்பிக்காமல் கல்வாரியை மட்டும் சுட்;டிக் காட்டுவதே அவனுடைய குறிகோளாய் இருக்குமானால் அது சரியானதாய் இருக்கிறது. மற்றவர்கள் தன்னை யாரென்று அறிந்துள்ளார்களா என்று கூட பொருட்படுத்தமாட்டான். மிகவும் அருமையானதாகவும்,  நல்லதாகவும் உள்ள தன்னுடைய சொந்த ஸ்தாபனத்தை பற்றி கூட கவலைப்படமாட்டான். அவன் ஒரு மெத்தோடிஸ்டோ  அல்லது ஒரு பிரஸ்பிடேரியனோ  அல்லது ஒரு ரோமன்  கத்தோலிக்கோ அல்லது எந்த  ஸ்தாபனத்தை  சேர்ந்தவனாய்  இருந்தாலும் சரி அவன் கவலைப்படமாட்டான்.
17. ஆனால் அவன் என்ன செய்ய பிரயாசிக்கிறான், எதை பெற வேண்டும் என்ற அவன் இருதயத்தின் நோக்கம். அந்த மனிதனின் ஜீவியத்தை அப்பொழுது உன்னால் காணமுடியும். அவனுடைய உள்ளெண்ணம்  அவனுடைய ஸ்தாபனத்தை சார்ந்துள்ளதா? அல்லது உலக பிரகாரமான காரியங்களில் சார்ந்துள்ளதா? அல்லது பெரிய பெயர் பிரஸ்தாபத்தை சார்ந்துள்ளதா? உதாரணமாக நான் அதை முன்னறிவித்தேன். அது நிறைவேறிவிட்டது போன்று. பாருங்கள்  அதுதான் அங்கே ஆரம்பத்திலேயே தவறானது. அவன் ஒரு போதகனாகவோ,ஒரு தீர்க்கதரிசியாகவோ, ஒரு ஞான திருஷ்டிகாரனாகவோ அல்லது தேவனிடத்திலிருந்த ஒன்றை அவன் எடுத்து அவ்விதமாக உபயோகிப்பானேயானால், அது தவறாக இருக்கிறது.
18. புதிய ஏற்பாட்டு தீர்க்கதரிசி ஒரு போதகனாய் இருக்கிறான். நாம் யாவரும் அதை அறிவோம். போதகனாய் இருக்கின்ற எந்த ஒரு ஊழியக்காரனும் தீர்க்கதரிசியாய், புதிய ஏற்பாட்டின் தீர்க்கதரிசியாய் இருக்கிறான். அதாவது தீர்க்கதரிசனம் உறைக்கும் போதும், போதிக்கும் போதும்,தனக்கு ஒரு பேர் உண்டாக, தன் வசதிக்காகவும் அல்லது அவனுடைய ஸ்தாபனத்தின்  வளர்ச்சிக்காகவும், உயர்வுக்காகவும் இருந்தால் அவன் ஒரு  தீர்க்கதரிசியாவான். அப்படி  இருக்குமானால் அவன் ஒரு  ஸ்தாபனத்தில்  இருக்கவேண்டும். இதோ நான் அப்படி ஒன்றை உடையனாக இல்லை. ஆனால் நீ பிரசங்கித்து கொண்டிருக்க வேண்டும்,அது சரியே. ஓவ்வொரு மனிதனுக்கும் தனக்கென்று ஒரு சபை இருக்க வேண்டும். உனக்கென்று ஒரு ஸ்தலம்  இருக்க வேண்டும்.  ஒரு  இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு அலைந்து கொண்டிருக்கிறவர்களாய் இருக்கக்கூடாது. ஆனால் எங்காவது ஒரு சபைக்கு போய், அது உன்னுடைய சபை என்று அழைக்க வேண்டும். எங்காவது நீ போய் உன்னுடைய தசம பாகத்தை செலுத்துகிறவனாக, எங்காவது  போதனையை தாங்குகிறவனாக இருக்க வேண்டும். நீயாகவே அதை தெரிந்து கொள். அதன் பின்னர் மற்றவர்களிடத்தில் ஐக்கியம் இல்லாதபடி செய்யாதே. அவன் உன் கூட்டத்தை சேர்ந்தவனல்ல என்பதற்காக அப்படி செய்யாதே.  புரிகின்றதாஅவனுடைய ஆவியை சோதித்தறிந்து, அவன் தன்னுடைய இருதயத்தில் அதே நோக்கத்தை உடையவனாய்  இருக்கின்றானா என்று கண்டறிந்து, அதன் பின்னர் ஒருவரோடு ஒருவர் ஐக்கியம் கொள்ளுங்கள். நீங்கள் ஒரு மகத்தான  நோக்கத்திற்காக பாடுபடுகிறீர்கள். அது கிறிஸ்துவின் நிமித்தமாக. இது முற்றிலுமாக  உண்மை என்று நான் கருதுகிறேன்.
19. இப்பொழுது பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசிகளின் உள்ளெண்ணத்தையும், நோக்கத்தையும நாம் கவனிப்போமானால், அந்த மனிதர்கள் ஒரே நோக்கத்தை உடையவர்களாய் இருந்தார்கள். அது இயேசு கிறிஸ்துவே. அவர்கள் ஒரே காரியத்தை உடையவர்களாய் இருந்தார்கள், அதாவது பழைய ஏற்பாட்டின் முழு பொருளும் அதன் பேரில் கட்டப்பட்டதாய் இருந்தது. அது மேசியாவின் வருகையாகும். அவர்கள் வெளியே எங்கும் போய்  பணத்திற்காகவோ அல்லது புகழுக்காகவோ எதையும் செய்யவில்லை. அவர்களிடம் ஒரு காரியம் இருந்தது. அவர்கள் தேவனுடைய ஆவியினால் அபிஷேகம் பண்ணப்பட்டிருந்தார்கள். அவர்கள் மேசியாவின் வருகையை முன்னுரைத்தார்கள். அந்த மனிதர்கள் ஆவியினால் அவ்வளவாய் அபிஷேகம் பண்ணப்பட்டு, அவர்களுக்குள்ளாக  இருந்த  ஆவியைக் கொண்டே நடந்து கொண்டு, அது அவர்கள் தங்களை குறித்து பேசுவது போன்றே காணப்பட்டது. தேவனுடைய ஆவி அவர்கள் எவ்விதமாய் நடக்கும்படி செய்தது என்று பாருங்கள்.                  
20. உதாரணத்திற்காக மகத்தான தீர்க்கதரிசியாகிய மோசேயை எடுத்துக்கொள்வோம். எப்படியாய் அந்த மனிதனிடத்தில் தன்னலமற்ற நோக்கமிருந்தது. அவன் எகிப்தின் ராஜனாய் ஆகியிருக்கலாம். விரும்பி இருந்தால் உலகத்தையே  அவன் பாதத்தின் கீழ் கொண்டு வந்திருக்கலாம்.  ஆனால் அவன் இருதயத்தில் தீர்க்கதரிசியாய்  இருந்த  காரணத்தினால்,  பார்வோனின் குமாரத்தியின் மகன் என்று  அழைக்கப்படுவதை விரும்பாமல்,    கிறிஸ்துவினிமித்தம் வரும் உபத்திரவத்தையும், துன்பத்தையும் அனுபவிப்பதையே தெரிந்து கொண்டு,  எகிப்தின் பொக்கிஷங்களைக் காட்டிலும், பரலோகத்தின் பொக்கிஷங்களை அதிக பாக்கியம் என்று எண்ணினான். ஜீவியம் அவனுக்களிக்கக் கூடிய ஆடம்பர உலகப்  புகழையும் வேண்டாமென்று புறக்கணித்து தள்ளினான். அவனுடைய நோக்கமானது இவை அனைத்தையும் கடந்ததாய் இருந்தது. வேணடுமானால் அவன் அந்த விதமாய் இருந்திருக்கலாம்.                                                                      
21. இன்றைய போதகர்களை எடுத்துக்கொள்ளுங்கள், அவன் பரிசுத்தாவியின்  அபிஷேகத்தை பெற்றிருந்து, அந்த வார்த்தையை அவன் பிரசங்கித்தால், அவனுடைய புகழை அது குறைக்கப்  போகிறது என்று அவன் அறிந்திருந்தால்,  அது  அவனை  எரி  நிலையில் வைக்கும் அல்லது அவன் வெளியே  தெருக்கோடியில்  இருக்க வேண்டியதாயிருக்கும். ஆனால் அவன் இருதயத்தில் ஏதோ காரியம் பற்றி எரிந்துக்கொண்டிருக்கிறதை  அவன் அறிவான். அவன் கர்த்தருடைய வருகையை காண்கிறான். அவனுக்கு சிறிய சபை இருக்கின்றதா அல்லது பெரிய சபை  இருக்கின்றதா என்று கவலைப்பட மாட்டான். அவனுக்கு ஆகாரம் இருக்கின்றதா இல்லையா என்பதை  குறித்து கவலைப்பட மாட்டான். அவனுக்கு உடைகள் இருக்கின்றதா இல்லையா என்பதை குறித்து கவலைப்படமாட்டான். அவன்  ஒரே ஒரு காரியத்தை குறித்து தான் அக்கரை உள்ளவனாய்  இருப்பான்.  அது  அவனுக்குள்ளாய் இருந்து கொண்டு கூக்குரலிடுகின்ற அந்த ஜீவனைக்  குறித்தே. தேவனுடைய மற்ற காரியங்களை அறியும்படியாய் அவன் பிரயாசிக்கிறான். அந்த மனிதன் அப்படியாய் செய்யும்பொழுது,  தனக்குள்ளாய் இருக்கின்ற அதே ஆவியின் படியாய் நடக்கிறவனாய் இருப்பான். நான் சொல்லட்டுமா, அவன் அப்படியே அதை செய்து காட்டுகிறவனாய் இருப்பான்.
22. மோசேயை நோக்கி பாருங்கள். அவனுக்கொரு நேரம் வந்தபோது  தன்னுடைய  ஜீவியம் முழுவதுமே கிறிஸ்துவின் ஆவியாய் இருக்கிதென்று அவன் வெளிப்படுத்திக் காட்டினான். ஏனெனில் கிறிஸ்து  அவனுக்குள் இருந்தார். ஒரு குறிப்பிட்ட அளவில் கிறிஸ்து மோசேக்குள் இருந்தார். இப்பொழுது நாம் கவனித்து பார்ப்போமானால், உலகத்தின் குழப்பமான பகுதியில் அவன் பிறந்தான். கிறிஸ்து பிறந்தபோது செய்யப்பட்டது போலவே அவன்  பிறந்தபோது குழந்தைகள் கொல்லப்பட்டனர். இஸ்ரவேல் புத்திரர் அந்த விதமாக கீழ்படியாதவாகளாய் போய் தேவனே அவர்கள் மீது கோபம் கொண்டிருந்ததான ஒரு கட்டத்தில் அவன் வந்தபோது, தேவன் மோசேயினிடத்தில் விலகி நில்,  அந்த முழு கூட்டத்தையும் நான் அழித்துப் போடுவேன். உன்னைக் கொண்டு இன்னொரு தலைமுறையை எழுப்புவேன் என்றார்.
23. தேவனுடைய நியாயத்தீர்ப்பின் நிலையில், நீர் அவர்களை கொன்று போடுவதற்கு முன்பு என்னை கொன்றுபோடும் என்றான். வேறு வார்த்தையில் நீர் அவர்களை தொடும் முன்பு நீர் என் மீது தான் நடந்து வரவேண்டும் என்றான்.
24. சரியாக அதைத்தானே இயேசு கிறிஸ்துவானவரும்; செய்தார். இந்த பாவிகளை,  நீயும் நானும் பூமியிலிராதபடி நிர் மூலமாக்கி இருக்க வேண்டும். ஆனால் தேவனுக்கும் நமக்குமிடையே கிறிஸ்து  தம்மை நிறுத்திக்கொண்டார். தேவனால் தம்முடைய சொந்த குமாரன் மீது ஏறி கடந்து வந்து நம்மை நிர்மூலமாக்க கூடாமல் போயிற்று.
25. மோசேக்குள்ளாக இருந்த அந்த ஆவி அங்கே சிலு வையைப் போன்று நியாயத்தீர்ப்பு தொங்குகின்றதை தேவன் பார்த்தார். உம்மால் அவர்களிடம் வரமுடியாது,  முதலில் என்னை எடுத்துக்கொள்ளும். மோசேக்குள்ளாய் இருந்த தேவனுடைய ஆவியை பார்த்தீர்களா? எகிப்தின் ராஜாவாக இருந்திருக்கலாம். பேர் பெற்றவனாய் இருக்கும்படி உலகத்தின் எல்லா ஆடம்பரங்களையும் உடையவனாய் இருந்திருக்கலாம். அந்த நேரத்தில் உலகத்தின் மகா பெரிய ராஜாவாய் இருந்திருக்கலாம். ஆனால் அவன் துன்பத்தையும் பாடனுபவிப்பதையும் தெரிந்து கொண்டான். ஏனெனில் எகிப்தின் பொக்கிஷங்களை காட்டிலும்,  கிறிஸ்துவின் நிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியமென்று எண்ணினான். அவன் தன்னைத்தானே பாதையில் தூக்கி எரிந்தான். ஏன்? அது மோசேக்குள்ளாக இருந்த தேவன். அதை செய்தான். சாதாரணமாய் சிந்திக்கக் கூடியவனும்,  அறிவில் தேறினவனும் ஒரு போதும் அதை செய்யவே மாட்டான். அவன் சுலபமான பாதையை தெரிந்து கொள்வான். மோசே எவ்வளவுதான் பைத்தியக்காரனாக காணப்பட்டாலும், பாருங்கள் அவன் ஒரு உண்மையான தேவனுடைய தீர்க்கதரிசி,  ஏனெனில் அவன் தேவனுடைய ராஜ்ஜியத்திற்காக ஏதோ காரியத்தை யோசித்துக் கொண்டிருந்தான்.
26. அவனுக்கிருந்த மகா தீர்க்கதரிசன வரத்தினால் அவன் ஒரு பெரிய ஞானவானாய் இருந்திருக்கலாம். இப்பொழுது கொஞ்சம் பொறுங்கள், இன்னான் இன்னான் இப்படி,  இன்னான் இன்னான் இப்படி என்று நான் தீர்க்கதரிசனம் கூறுகிறேன் என்று அவன் எகிப்தில் கூறுகிறவனாய் அவனுடைய தீர்க்கதரிசனத்தோடு எழும்பி நின்றிருக்கலாம். ஓ,  உலக புகழ் பெற்றவனாய் இருக்கலாம். ஆனால் அப்படிப்பட்ட காரியம் அவனிடத்தில் இல்லை. அவனுடைய இருதயத்தில் இருந்திருக்க முடியாது.
27. ஆக ஒரு பெரிய வரத்தை உடையவனாய் தங்களை மகிமைப்படுத்திக் கொள்ளத்தக்கதான சில காரியங்களை செய்ய முயற்ச்சிக்கும்படியாய் நீங்கள் காணும்படி நேர்ந்தால், உங்களுடைய சொந்த ஆவியின் பகுத்தறியும் வரம்இ அது தவறானது என்று சொல்லும். ஆனால் மோசேயோ தேவனுக்கு மகிமையை கொண்டு வரத்தக்கதாய் ஏதோ காரியத்தை செய்து கொண்டிருந்தான். அது எவ்வளவுதான் மோசமானதாய் காணப்பட்டாலும்,  அதைக்குறித்து எவ்வளவுதான் பேசப்பட்டாலும்இ மோசேக்குள்ளாக இருந்த ஆவியானது அவனுடைய கடமையின் பாதையிலே அவனை நேராக வழி நடத்தினது. அவனுக்குள் இருந்த ஆவி அதை செய்தது.
28. யோசேப்பை நோக்கி பாருங்கள். அவன் பிறந்தபோது அவனுடைய தகப்பனால் நேசிக்கப்பட்டான். தன் சகோதரரால் வெறுக்கப்பட்டான். கிறிஸ்துவின் பரிபூரண பாவனை. அவர்களுடைய இரத்த சம்பந்தமான சகோதரன், அதே தகப்பன். ஆனால் அவனுடைய சகோதரர்கள் அவனை வெறுத்ததன் காரணம்? காரணம் ஒன்றுமேயில்லை. ஏனென்றொல் தேவன் அவனை தீர்க்கதரிசியாக உண்டுபண்ணினார். ஆவிக்குரியவனாக,  ஞான திருஷ்டிக்காரனாக. அந்த காரணத்தின் நிமித்தமாகத்தான் அவர்கள் அவனை வெறுத்தார்கள். ஆனால் யோசேப்பினால் அதற்காக என்ன செய்ய முடியும். ஏனென்றால் அவ்விதமாக தேவன் அவனை உண்டு பண்ணி இருந்தார்.
29. யோசேப்பிலிருந்த தேவனுடைய ஆவியை கவனியுங்கள். அவன் என்ன செய்தான் என்று பாருங்கள். அவன் கிறிஸ்துவின் பாகத்தையே செய்து காட்டினான். சகோதரர்களால் வெறுக்கப்பட்டான், தகப்பனால் நேசிக்கப் பட்டான். அந்த ஆவியின் காரணமாக அந்த வித்தியாசம் அவனுக்கு உண்டாயிருந்தது. அவன் ஒரு ஆவிக்குரிய மனிதனாய் இருந்தான். அவன் தரிசனங்கள் கண்டான்,  அவன் சொப்பனங்களுக்கு அர்த்தம் சொன்னான். அவன் அதை தன்னுடைய சொந்த மகிமைக்காக அதை செய்யவில்லை. அவன் அதை செய்தான். ஏனெனில் அவனுக்குள் ஏதோ காரியம்,  தேவனுடைய ஆவி அவனுக்குள் இருந்தது. அந்த குழிக்குள் போடப்பட்டு,  அவனுடைய வயதான ஏழை தகப்பனார் அந்த வருஷங்களெல்லாம் கவலைப்படும்படியாக செய்து, முப்பது வெள்ளிக்காசுக்கு விற்கப்படும் படியாகவும் அவன் சம்மதித்திருந்திருக்க மாட்டான். குழியிலிருந்து வெளியே எடுக்கப்பட்டு அந்த நேரத்தில் பூமியின் இராஜாவாய் இருந்த பார்வோனின் வலது கரமானான். அவன் சிறை வாசத்தில் அங்கே ஒரு சுயம்பாகியும்,  பானபாத்திரக்காரனும் இருந்தானார்கள். ஒருவன் தூக்கிலிடப்பட்டான், ஒருவன் இரட்சிக்கப்பட்டான். சிறை வாசத்தில் அவனுடைய முன்னறிவின்படியே அப்படியாயிற்று.
30. இயேசுவானவர் வந்தபோது நீங்கள் கவனித்தீர்களா? அவர் பிதாவினால் நேசிக்கப்பட்டார். பலவர்ண அங்கியை அவன் தகப்பன் யோசேப்பக்கு கொடுத்தான், வானவில். அது ஒரு உடன்படிக்கை. பிதாவாகிய தேவன் அவருடைய குமாரனாகிய இயேசுவுக்கு உடன்படிக்கையை கொடுத்தார். பின்னர் யூத சகோதரர்கள் யாதொரு காரணமுமின்றி அவரை வெறுத்தனர். அவரை வெறுக்கும்படியாய் அவரிடம் ஒரு காரணமும் இல்லை. அவர் ஆவிக்குரியவராய் இருந்தார். அவர் வெளிப்பட்ட தேவனுடைய வார்த்தையாயிருந்தார். அவர் பிதாவின் சித்தத்தை செய்ய வந்தார். வேத வார்த்தையை நிறைவேற்றும்படியாய் வந்தார். அவர்களுக்கு சமாதானம் அளிக்கும்படியாய் வந்தார். ஆனால் அவர்கள் அவரை தவறாய் புரிந்து கொண்டு காரணமின்றி அவரை பகைத்தார்கள்.அவர் எதை அறியும்படியாய் முயற்ச்சிக்கிறார் என்பதை காண முயற்ச்சிக்கும்படியாக அவர்கள் நின்று பார்க்கவில்லை. அவர் அவர்களோடு இசைந்து போகாதபடியினால் நியாயந்தீர்த்தார்கள். அவர் தம்மை இப்படி இப்படியாய் ஆக்கிக்கொண்டார்,  அவர் தம்மை தேவனாக்கிக் கொண்டார். அவர் தேவனாய் இருந்தார்.தேவன் அவருக்குள் இருந்தார். வேதம் சொல்லுகிறது,  தேவன்  தம்மை கிறிஸ்துவுக்குள் செளிப்படுத்தினார் என்று. தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகின்ற மகிமையின் தேவனாய் அவர் இருந்தார்.
31. மோசேயை கவனியுங்கள், தன்னைத்தான் குறுக்கே வைக்காமல் அவனால் இருக்க முடியவில்லை. அவன் அதை மாய்மாலமாய் செய்யவில்லை. தேவன் அவனுக்குள் இருந்தபடியினாலே அவன் அதை செய்தான். யோசேப்பினாலும் தன்னை வேறு விதமாய் மாற்றிக் கொள்ள முடியவில்லை. ஏனென்றால் தேவன் அவனுக்குள்ளாக கிரியை செய்து கொண்டு,  மனிதனின் மூலமாக தம்மை வெளிப்படுத்தி காட்டிக் கொண்டிருந்தார். அவன் சுய மகிமைக்காய் ஒருபோதும் செய்யவில்லை,  
32. அந்த ஆசாரியர்களுக்கு மட்டும் ஆவியின் பகுத்தறிதல் இருந்திருக்குமாயின், இன்று காலையில் உங்களிடையே நான் பேசிக்கொண்டிருக்கிற போது, உலகம் எவ்வளவு தான் அவனைக்குறித்து  கவலையற்றதாய் பேசிக்கொண்டிருந்தாலும், அவன் வந்த நோக்கத்தை கவனித்திருந்து, கர்த்தருடைய வார்த்தையை ஆராய்ந்து  பார்த்திருந்திருப்பார் களானால் அவர்கள்  அதை கண்டு கொண்டிருந்திருப்பார்கள்.   பிதாவை  மகிமைப்படுத்தும்படியாய் அவர் எப்பொழுதும் அதை செய்து கொண்டிருந்தார். ஓ, இந்த மனிதர் ஒரு மகத்தான சுகமளிப்பவர், இந்த விதமாக அவர் காரியங்களை செய்கிறார் என்று சொன்னார்கள்.
33. ஆனால் அவரோ பிதாவானவர் எனக்கு காண்பியாமல் நானாக ஒன்றும் செய்ய முடியாது. இந்த கிரியை செய்வது நானல்ல, எனக்குள்ளாய் வாசம் பண்ணும் பிதாவானவரே இவைகளை செய்கிறார். அவர் தமக்கு மகிமையை எடுத்து கொண்டதில்லை.
34. அது போலவே எந்த ஒரு ஊழியனும் மகிமையை எடுத்துக் கொள்ளமாட்டான். அதே விதமாகவே எந்த ஒரு ஊழியக்காரனும் தேவனுடைய வரத்தை எடுத்து பெருமைப்படுத்தவோ அல்லது வேறெதையோ செய்ய முயற்ச்சிக்கமாட்டான். ஆனால் அவனுடைய சரியான இலக்கு தேவனுக்காக எதையாவது செய்ய வேண்டுமே என்பதாக இருக்கும். ஆனபடியினாலே நீங்கள் அதே காரியத்தை இன்றைக்கும் காண்கிறீர்கள். நம்மிடம் ஆவியை பகுத்தறிதல் இருக்க வேண்டும். ஒரு நபர் என்ன செய்ய முயற்சிக்கிறார் என்பதை புரிந்து கொள்வது தேவையாய் இருக்கிறது. அவர்கள் தேவனை மகிமைப்படுத்த முயற்சிக்கிறார்களா அல்லது தங்களை மகிமைப்படுத்திக்கொள்ள முயற்சிக்கிறார்களா என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
 35. ஒரு மனிதனுக்குள்ளிருந்து கிரியை செய்யும் தேவனுடைய ஆவியானது தேவனைப்போன்று அவன் கிரியையை நடப்பிக்கும் படியாய் செய்கிறது. நீங்கள் தேவர்களாய் இருக்கின்றீர்கள் என்று வேதத்தில் வாசிக்கவில்லையா? தேவனுடைய ஆவியைப் பெற்று கொண்டவர்களை தேவர்களென்று சொல்லியிருக்கிறது. நான் தேவனுடைய குமாரன் என்று சொன்னதினாலே நீங்கள் எப்படி என்னை குற்றப்படுத்துகிறீர்கள் என்று அவர் சொன்னதில் வியப்பொன்றும் இல்லை. உங்களால் மோசேக்குள் தேவனுடைய ஆவியைக் காணக்கூடுமானால், அவன் தேவனாய் இருப்பான். மோசே ஒரு தேவனாய் இருந்தான்இ யோசேப்பு ஒரு தேவனாய் இருந்தான், தீர்க்கதரிசிகள் தேவர்களாய் இருந்தனர். அவர்களை தேவர்களென்று வேதம் அழைக்கின்றது. அவர்கள் தேவர்களாய் இருந்தார்கள், ஏனென்றால் அவர்கள் முற்றிலுமாக தங்களை தேவனுடைய ஆவிக்கு ஒப்புவித்திருந்தார்கள். அவர்கள் தேவனுடைய மகிமைக்காக கிரியைச் செய்து கொண்டிருந்தனர்.
36. ஒரு மனிதன் ஆவியினால் அவ்வளவாய் அபிஷேகம் பண்ணப்பட்டிருப் பானானால், இடது பக்கத்திலுள்ள ஐந்தாவது விலாவுக்கடியில் காரியம் ஆழமாக பதியட்டும். ஒரு மனிதன் தேவனுடைய ஆவியினாலே நிரப்பப்பட்டிருப்பானேயானால் அவனுடைய பழக்கங்கள், கிரியைகள் யாவுமே தேவன் அவனுக்குள் அசைவதாய் இருக்கும். சில சமயங்களில் அவன் தவறாக நிதானிக்கப்படுகிறான்.
37. 23 - ஆம் சங்கீதத்தில் தாவீதை கவனியுங்கள், அவன் என் தேவனே, என் தேவனே ஏன் என்னை கைவிட்டீர் என்று கூவினான். அது என்னவோ அவன்தான். தாவீதுதான் அந்த மனிதன் என்று அவன் கூவினான். என்னை கடந்து போகிறவர்களெல்லாம் உதட்டை பிதுக்குகிறார்கள் என்றான்.
38. அவன் தேவனோடு அவ்வளவாய் அபிஷேகம் பண்ணப்பட்டிருந்த படியால், அவன் அவ்வளவு பரிபூரணமாய் தன்னை தேவனுக்கு ஒப்புவித்திருந்த படியால், அந்த அபிஷேகம் அவன்  மீது அந்தளவாய் இருந்தபடியினால், அவன் அந்த தேவனுடைய ஆவியினால் கூவினபோது,அப்பொழுது யாரோ நின்று கொண்டிருந்திருப்பார்களேயானால் அவர்கள்  யாவரும் இவர்களுக்கு விரோதமாக உதட்டை பிதுக்குகிறார்கள் போலும்,இவனை ஏன் தேவன் கைவிட்டார் என்று சொல்லியிருக்கக்கூடும்.
39. அது தாவீதல்ல,தாவீதின் மூலமாய் ஆவியானது சத்தமிட்டது. என் தேவனே, என் தேவனே ஏன் என்னை கைவிட்டீர். எல்லாரும் என் எலும்பை நோக்கி  பார்க்கிறார்கள். என் கைகளையும், என் கால்களையும் உருவ குத்தினார்கள் என்று சத்தமிட்டது.
40. அங்கிருந்த யாராவது அங்கிருக்கின்ற அந்த மாய்மாலக்காரன் கூறுவதை கேளுங்கள். யாருடைய கைகள் உருவகுத்தப்பட்டுள்ளது, யாருடைய கால்கள் உருவ குத்தப்பட்டுள்ளது என்று சொல்லியிருப்பார்கள், அதுதான் ஞானவான்கள்.
41. ஆனால் ஆவியை பகுத்தறிதல் உள்ள எவரும் அது அவனுக்குள் உள்ள ஆவி சத்தமிடுகிறது என்பதை அறிந்து கொள்வார்கள். ஒரு மனிதன்,  தேவனுடைய ஆவியினாலே அபிஷேகம் பண்ணப்பட்டிருப்பானேயானால், அவனிடம் தேவனுடைய செயல்களிருக்கும். தேவனுடைய செய்தியானது ஒரு போதும் நம்மை உடைக்காது. தேவனுடைய செய்கை நம்மை ஒன்றுபடுத்தும்,ஏனென்றால் நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் நாம் ஒன்றாய் இருக்கிறோம். நம்மை ஒன்றாக கூட்டுவதே தேவனுடைய நோக்கமாய் இருக்கிறது. ஒருவரிலொருவர் அன்பு கூறுங்கள்.
42. அந்த மகத்தான தீர்க்கதரிசிக்குள் ஆவியின் அசைவை நாம் காண்கிறோம். இயேசு அவர்களை தேவர்களென்று  அழைத்தார். அவர்கள் தேவர்களாய் இருக்கிறார்களென்று அவர் சொன்னார். ஆவியானது அவர்கள் மேல் வரும்போதுஇ ஒரு அளவுக்கு தான் அது வந்தது. ஆனால் இயேசு என்ற ஒருவர் மீது அது வந்தபோது, அவர் தேவனுடைய குமாரன், அது அவர் மேல் அளவில்லாமல் வந்தது. தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருந்தது. ஏனென்றால் அவர் பரிபூரணமாக எடுத்து காட்டாக அவர் இருந்தார். மகிமையின் தேவனாக அவர் தேவனுடைய மகிமையை ஜனங்களுக்கு வெளிப்படுத்தி காட்டிக் கொண்டிருந்தார். அவருக்குள்ளாக தாமே தேவன் அங்கே நடமாடிக்கொண்டிருந்தார். அவருடைய ஜீவியத்தை கவனியுங்கள். பழைய ஏற்பாடு முழுவதுமாக இவர் தாமே பழைய ஏற்பாட்டின் மத்திய பொருளாய் இருந்தார். பழைய ஏற்பாட்டின் எல்லா தீர்க்கதரிசிகளும் தங்களுக்கென்று அவர்கள் சத்தமிடவில்லை. அவர்கள் தேவனுடைய ஆவியின் கீழ் சத்தமிட்டனர். அவர்கள் தேவர்களைப் போன்று செய்கைகளை செய்தார்கள். அதனால் அவர்கள் தேவர்களென்று அழைக்கப்பட்டார்கள். பின்னர் அந்த ஆவியின் பரிபூரணமெல்லாம் இயேசு கிறிஸ்துவுக்குள் வெளிப்பட்டது.
43. தாவீது தன்னுடைய சொந்த ஜனங்களால் புறக்கணிக்கப்பட்டு சிங்காசனத்திலிருந்து இஸ்ரவேலின் இராஜ பதவியிலிருந்து விலக்கப்பட்ட போது தாவீதை கவனியுங்கள். எருசலேமுக்கு வடக்காக உள்ள ஒலிவ மலைக்கு ஏறி போன போது, அந்த பட்டணத்தை திரும்பி பார்த்தபோது அவன் அழுதான்,ஏனென்றால் அவன் புறக்கணக்கப்பட்டான். அது என்ன, அது அவனுக்குள்ளிருந்த கிறிஸ்துவின் ஆவி.
44. ஐந்நூறு வருஷங்களுக்கு பிறகு தாவீதின் குமாரனாகிய இயேசுவானவர் ஒரு புறக்கணிக்கப்பட்ட  இராஜாவாக அதே மலையின் மேல் உட்கார்ந்து எருசலேம் பட்டணத்தை பார்த்து கொண்டு எருசலேமே, எருசலேமே எத்தனை முறை நான் உன்னை கூட்டி சேர்த்தேன். உங்களுடைய வித்தியாசமான ஸ்தாபனங்களிலிருந்தும், உங்களுடைய எல்லா  காரியங்களிலிருந்தும் உங்களை  கூட்டி சேர்த்தேன்.  ஒரு கோழி  தன் குஞ்சுகளை கூட்டி சேர்க்கும் வண்ணமாய் நான் கூட்டினேன், ஆனால் கூடி வர நீங்கள் மறுத்தீர்கள். நான் எத்தனை முறை அதை செய்தேன் என்று சொல்லி அழுதார்.
45. இப்போது தாவீதுக்குள்ளாயிருந்து கிறிஸ்துக்குள் பரிபூரணமாய் இருந்த அதே ஆவியானது, இந்நாட்களில் சபைக்குள்ளாய் இருந்து கொண்டு இஸ்ரவேலரிடத்தில் சத்தமிடுகிறது. எத்தனை தரம் நான் உன்னை கூட்டி சேர்த்தேன் என்று சத்தமிடுகிறது.  நீங்கள் கிரியைகளையும்,  வித்தியாசங்களையும், சகோதர ஸ்நேகம் குலைகிறதையும், கிறிஸ்தவ ஜீவியம் உடைகிறதையும்,  ஒருவருக்கெதிராய்  ஒருவர் ஆகிறதையும் நீங்கள் காணும்போது அது உங்களுக்குள்ளிருக்கிற ஆவியை சத்தமிட வைக்கிறது. நீங்கள் ஏதோ ஒன்றை அறியும்படியாய் முயற்சிக்கிறீர்கள். ஆனால் ஒரு  உண்மையான  தீர்க்கதரிசியோ, ஒரு உண்மையான போதகனோ சபையை ஆவியின் ஒருமைப்பாட்டிற்குள் கொண்டுவர,அதாவது  அவர்கள் தேவனை கண்டுகொள்ளும்படியாக  ஒருமைப்பாட்டிற்காக முயற்சிக்கிறார்கள். அவர்கள் ஏதாவது ஸ்தாபனத்தையோ அல்லது எதை சேர்ந்தவர்களாயிருந்தாலும் கவலையில்லை,அதை அடைய யோசக்கிறார்கள்.  அது தேவனுடைய ஆவியா இல்லையா என்பதை அறிந்து கொள்ளத்தக்கதாக ஒரு மனுஷனுக்குள் இருக்கும் ஆவியை சோதித்தறிய நம்மிடம் வகையறுப்பது இருக்கிறது.
46. இப்பொழுது உலகத்தில் அவர் இருந்த போது எப்படியாய் அவர் நன்மை செய்கிறவராய் இருந்து வந்தார்; என்று நாம் பார்க்கிறோம். என்னிடத்தில் இன்னொரு காரியம் எழுகின்றது. தாவீது ஒரு இராஜாவாய் புறக்கணிக்கப்பட்டபோது நீங்கள் கவனித்தீர்களா ? அவன் நகரத்திற்கு புறம்பே சென்றபோது,ஒரு பென்யமீன் கோத்திரத்தான்,ஒரு சகோதரனாய் இருக்க வேண்டியவன், அவன் புறக்கணிக்கப்பட்டதினால் வருத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால்  என்ன, அவன் ஒரு ஊனமுற்றவன். அவனுடைய ஊனமுற்ற நிலையில் அங்கே வந்து தாவீதின் மேல் மண்ணை வாரி போட்டு பலவித தூஷணமான பெயர்களை சொல்லி கர்த்தருடைய நாமத்தினால் அவனை சபித்தான். இந்த சப்பாணியான சிறிய பென்யமீன் கோத்திரத்தான் கர்த்தருடைய நாமத்தினால் தாவீது இராஜாவை சபித்தான். தேவனுடைய ஆவி கிரியை செய்கிறதையும், பிசாசின் ஆவி கிரியை செய்கிறதையும் கவனியுங்கள்.
47. நீங்கள் கவனிப்பீர்களேயானால் அவன் சப்பாணியானவன். கிறிஸ்துவில் இருக்கின்ற தேவனுடைய ஆவியானவர் சபையில் தானே தம்மை வெளிப்படுத்தும் போது, இன்றைக்கு அதை பார்த்து பரியாசம் செய்கின்ற ஜனங்களுடைய ஆவிக்குரிய ஊனத்தை அது காட்டுகிறது. இராஜாவாய் புறக்கணிக்கப்படுகையில் தாவீதுக்குள்ளிருந்த  கிறிஸ்துவினுடைய ஆவியே அது.  பரிசுத்த ஆவியை பெற்றவர்களாய் ஏதோ காரியத்தை அடையும் படியாய், ஒரு கிறிஸ்துவின்  சரீரமாய் ஒன்றாக  இணைந்து ஒரு ஒருமைபாடாய் பெந்தேகோஸ்தே, மெத்தோடிஸ்ட், பிரஸ்பிடேரியன், பாப்டிஸ்ட் இன்னும் எல்லாமாக சேர்க்க முயற்சிக்கிற ஜனங்களை இன்றைக்கு ஜனங்கள் பரியாசம் செய்கின்றனர். ஆவி கிரியை செய்து கொண்டிருக்கிறதை கண்டு அவர்கள் பாருங்கள், அது ஒரு பெந்தேகோஸ்தே. அவனை அகற்றுங்கள், அவன் இன்னொருவனுடைய மனைவியுடன் சென்று விட்டதை அறிவேன். இவன் குடித்திருக்கிறான்  என்பதை நான் அறிவேன். இவன் இந்த காரியத்தை செய்தான் என்ற நான் அறிவேன். அவன் அந்த காரித்தை செய்தான் என்று  நான் அறிவேன். இப்படியெல்லாம் கூறுகின்றனர். அவர்களுடைய காரியங்களையெல்லாம் மறைத்து கொள்ளுகிற அளவுக்கு அவர்கள் பெரிய மனிதர்களாய் இருக்கிறார்கள். அவர்களால் அதை மறைக்க முடியும். ஆனால்  தாவீதுனுடையதோ வெளியரங்கமாக்கப்பட்டது. ஏன் அவன் அவனுக்குள்ளாக கிறிஸ்துவின் ஆவியை உடையவனாய் அவன் இருந்தான்.
48. அந்த காவலாளன் என்னுடைய இராஜாவை சபிக்கின்ற அந்த நாயின் தலையை நான் வாங்கிப்போடட்டுமே என்றான்.
49. தாவீதுக்குள்ளாய் இருக்கின்ற கிறிஸ்துவின் ஆவியை பாருங்கள். அவனை விட்டுவிடுங்கள்,என்னை சபிக்கும்படியாய் கர்த்தர் அவனிடம் சொன்னார். நீங்கள் புரிந்து கொண்டீர்களா? அவனை  விட்டுவிடுங்கள், என்னை சபிக்கும்படியாய்  கர்த்தர் அவனிடம் சொன்னார்.
50. அதற்கு பதிலாக நாம் கைகளை உயர்த்தி சண்டைக்கு போக விரும்புகிறோம். புரிகின்றதா? அவன் தலையை வெட்டிவிடுகிறேன். அவனை வெளியே தள்ளுங்கள்.
51. அவனை விட்டுவிடுங்கள் என அவனிடம் கூறியுள்ளார். அந்த சப்பாணி கூடவே ஓடி வந்து தாவீதின் மேல் மண்ணை வாரி இறைத்தான்.
52. அதே தான் அவர்கள் இன்றைக்கும் கிறிஸ்துவின் ஆவியின் மேல் வீசினார்கள். அவர்கள் ஒரு கூட்ட பரிசுத்த உருளைகள். அவர்கள் இப்படியானவர்கள், அவர்கள் ஒன்றுமில்லை. தெய்வீக சுகத்திற்கு அங்கு  ஒன்றுமே இல்லை. அங்கே  தூதர்கள் என்ற அப்படி ஒரு காரியமே கிடையாது. அங்கே தீர்க்கதரிசிகள் என்ற ஒரு காரியமே  கிடையாது. அப்படிப்பட்ட காரியங்களெல்லாம் சொல்லி, அற்புத நாட்கள் கடந்துவிட்டது என்று சொல்லி மண்ணை வாரி அடிக்கிறார்கள். ஆனால்  அவர்களை விட்டு விடுங்கள். ஆனால் அவன் மறுபடியுமாய் ஆட்சிக்கு வந்த போது, அவன் முழு இஸ்ரவேலுக்கும் இராஜாவாய் வந்தபோது, கவலைப்படாதீர்கள், இந்த இயேசுவானவர் அவருடைய ஆவியைதான் நாம் இன்றைக்கு உடையவர்களாய் இருக்கிறோம். அவருக்கான பகுதியை நிறைவேற்றி விட்டார். இரண்டாவது முறை வல்லமையோடும், மகிமையோடும் சரீரத்தோடு அவர் திரும்ப வருவார்.
53. மண்ணை வாரி அடித்தவன் முகங்குப்புற விழுந்து இறக்கத்திற்காக மன்றாடினான். அவனை விட்டுவிடுங்கள், தாவீதுக்குள்ளிருந்த கிறிஸ்துவின் ஆவி. அவனை புறம்பே தள்ளாதே. இந்த காரியங்களெல்லாம் சம்பவித்தே ஆக வேண்டும் என்பதை நினைவில்  வையுங்கள்.  நாம் செய்ய வேண்டிய ஒரே ஒரு காரியம் உண்டு, முன்னே செல்லுங்கள். அவரிடத்தில் அன்பு கூறுகிறவர்களுக்கு சகலமும் நன்மைக்கேதுவாகவே வாய்க்கப்பண்ணுவார் என்று தேவன் வாக்களித்துள்ளார்.  நோக்கத்தை சரியாக வைப்போமாக. ஆவியை பகுத்தறிவது வைத்துக் கொள்வோமாக. ஓவ்வொருவரும் ஐக்கியப்பட்டு கொண்டும், அப்படி இருந்து கொண்டு தேவனுக்கு சேவை செய்வதிலும், தேவ சேவைக்காக நாம் இங்கே இருக்கிறோம். மனிதர்களிடத்தில் ஒரு காரியம் இருந்தால் அப்பொழுது என்ன சம்பவிக்கும், புரிகின்றதா?

54. தேவனுடைய ஆவி அவரிடத்திலிருந்ததென்று நாம் கண்டறிந்தோம். எல்லா பழைய தீர்க்கதரிசிகளும் அவரை குறித்து பேசினார்கள். உண்மையான தீர்க்கதரிசிக்குள்ளிருந்த ஆவியின் அளவு சிறிய அளவாய் இருந்தது. ஒவ்வொரு சிறிய அளவும் தன்னைதான் மகிமைபடுத்தி கொள்ளவில்லை. எல்லா உண்மையான  தீர்க்கதரிசிகளும் அவரை  குறித்தே பேசினார்கள். அவரை வெளிப்படுத்தி காட்டினார்கள். அவர்கள் சொன்ன எல்லா காரியங்களும்  அவருக்குள் நிறைவேறின. அவர்களுக்குள்ளாக தேவனுடைய ஆவி இருந்து அது நிறைவேறிற்று என்பதை அது காட்டுகிறது. தேவன் தம்மை குறித்தே பேசுகிறார். புரிகின்றதா? இந்த  தீர்க்கதரிசிகளின் மூலமாக தம்மை தாமே வெளிப்படுத்துகின்றார்.
55. அடுத்த ஜனாதிபதி யார்? அது யாராய் இருக்கக்கூடும் என்று சொல்லி மகிமையை எடுத்து கொள்வதல்ல. தலையில் கொட்டி, கொட்டியது யார் என்று சொல், அப்பொழுது நாங்கள் உன்னை விசவாசிப்போம். அதுவல்ல காரியம். அது தேவனை வெளிப்படுத்துகின்ற ஏதோ ஒரு காரியம். அது இங்கிருக்கின்ற சகோ. ஸ்டீவட்,ஜோன்ஸ் அல்லது சகோதரன் இன்னார், இன்னார் ஒரு பெரிய மனிதனாகுவதற்கு செய்யும் காரியம் அல்ல. அவருடைய கூட்டத்திலுள்ள மக்கள் யாவரை காட்டிலும் பெரியவனாக ஆக்க அல்ல. ஃபீனிக்ஸில் அவரை காட்டிலும் பெரியவராய் ஆக்க அல்ல. இல்லை பிரன்ஹாம் ஏதொ ஒரு பெரியவராகும் படியாக அல்ல. ஆனால் எனக்கு செய்வதற்கு இது ஓரல் ராபட்ஸை ஏதோ பெரியவராக்க அல்ல. பில்லி கிரஹாமை பெரியவராக்கும்படியாக அல்ல. ஆனால் அது அவருடைய இருதயத்தை பொருத்தது. தேவனுடைய இராஜ்ஜியத்திற்காக ஏதோ காரியத்தை நாம் அடைவதற்காக நாம் முயற்சிக்கின்றோம். அது தேவனை வெளிப்படுத்துகிறதாய் இருக்கிறது. எல்லா மதங்களும் மற்ற காரியங்களும் ஒருவரை மற்றவரை காட்டிலும் பெரியவனாக்குவதில்லை. சரீரத்தின் பரிபூரணத்திற்காக யாவரும் சேர்ந்து கிரியை செய்யும்படி அது செய்கிறது. ஒரு ஜனமாகவும், தேவனுடைய ஜனமாகவும் ஆக்குகிறது. ஆனால் அவர்கள் முரணாகபோகிறதை நீங்கள் காணும் போது அதை சபிக்காதே. அதை அப்படியே விட்டுவிடுங்கள். யாராவது அதை செய்துதான் ஆக வேண்டும். ஆனால் இயேசுவானவர் வல்லமையோடு வருமட்டாக காத்திருங்கள்.
56. அந்த தீர்க்கதரிசிகள் எல்லாவற்றையும் பேசினார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் தேவனையும் வரப்போகின்ற மேசியாவையும் மகிமைப் படுத்தினார்கள். அவர்கள் ஆவிக்குள்ளானபோது மேசியா செய்தது போலவே பேசினார்கள், ஜீவித்தார்கள். சிலுவைக்கு முன்னான காலத்தில் அது அவ்விதமாக கிரியை செய்திருக்குமானால் அதாவது வருகையை குறித்து பேசியிருந்தால், அவருடைய வருகைக்கு பின்னர் எவ்வளவு அதிகமாய் செய்யப்படும். சபைக்குள்ளாக கிரியை செய்ய, மேசியாவை போன்று ஜீவிக்க, கிரியை செய்ய மேசியாவின் ஆவியை ஊற்றுவாரா? அது தேவனுடைய ஆவி.
57. அந்த ஆவியை சோதித்தறியுங்கள். தேவனால் ஆனதா இல்லையா என்ற பாருங்கள். அது அவரைப்போன்று கிரியை செய்கின்றதா என்று பாருங்கள். உனக்கெதிராக யாராவது பேசினால், உன்னுடைய ஜீவியத்தின் மீது மண்ணை வாரி அடித்தால், உங்களுக்கு தெரியும் நீங்கள் எவ்வளவு நிரபராதி என்று. நீங்கள் தேவனுடைய ஆவியை பெற்றிருக்கிறீர்கள் என்று உங்களுக்கு தெரியும். உங்களை பிரித்து கொள்ள வகை தேடாதீர்கள்.அவர்கள் பால் மிகவும் இழிவாக நடந்து கொள்ளாதே, அவர்களை சபியாதே. உனக்கு ஒரு சோதனையை கொடுத்து அந்த சோதனையின் போது நீ எவ்விதமாக கிரியை செய்கின்றாய் என்பதை காணும்படியாய் தேவன் செய்தார் என்பதை அறிந்தவனாய் நடந்து கொண்டிரு. எப்படி இருந்தாலும் அதினிடத்திற்கு அவர் வருவார்.
58. அன்றொரு நாள் கனடாவில், சைக்கிள் ஓட்டியனைப்பற்றி கூறினேனே, சகோ. ஃபுல்லருடைய சபை என்று நினைக்கிறேன்.போட்டியிலிருந்த மற்ற அனைவரும் இந்த சிறிய பையனை பெண் தன்மையுடைய பையன் என்றும், தோர்க்கடித்து விடலாம் என்றும் எண்ணினர். ஏனெனில் அவன் ஒருவனுக்கு மாத்திரம் சைக்கிளின் கைப்பிடிகளை பிடிக்காமல் சைக்கிள் ஓட்ட முடியாது.
59. எனக்கு சந்தோஷம், நீங்கள் அந்த பழைய கைப்பிடிகளை பிடித்து கொண்டு சைக்கிளை ஓட்டுகிறவர்கள் போன்று நீங்கள் இருக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். சிலுவையை இரண்டு பக்கங்களிலும் பிடித்தவனாக என் கரங்களில் நான் ஒன்றையும் கொண்டு வரவில்லை. கர்த்தாவே நான் சிலுவையை பற்றிக் கொண்டிருப்பவனாக இருக்கச் செய்யும். கர்த்தாவே நான் சிலுவையை பற்றிக் கொண்டிருப்பவனாக இருக்கச்செய்யும். நான் படித்து தேறினவன் அல்ல, என்னிடம் ஒன்றுமில்லை, சிலுவையை மாத்திரம் பற்றிக்கொண்டு பரலோகத்தை நோக்கினவனாய் இருக்கும்படி செய்யும்.
60. பன்னிரெண்டு அங்குல பலகையின் மீது சைக்கிள் ஓட்டி இலக்கை அடைய வேண்டும். ஜெயிப்பவருக்கு நூறு டாலர் பெறுமானமுள்ள ஸ்ப்ரிங் சைக்கிள் பரிசாக அளிக்கப்படும். சைக்கிள் கைப்பிடியை பிடிக்காமலே ஓட்டக்கூடிய இந்த பையன்கள் கீழாக உள்ள பட்டணத்திற்கு சென்று தாயாருக்கு மளிகை சாமான்கள் வாங்கிக் கொண்டு வந்து பழக்கம். அச்சமயம் கைப்படியை பிடிக்காமலேயே ஓட்டி செல்பவர்கள். அவர்கள் ஒவ்வொருவரும் அவனை நோக்கி பார்க்க தொடங்கினர். கைப்பிடியை பிடித்து கொண்டு ஓட்டி அவர்ளுக்கு பழக்கமே இல்லை. எனவே வழியில் விழுந்து விட்டனர். ஆனால் அந்த சிறு பையனோ ஏறி உட்கார்ந்து கைப்பிடியை இறுக பிடித்து கொண்டு கடைசி மட்டும் ஓட்டி சென்றான். அவர்கள் உன்னால்  எப்படி முடிந்தது என்று கேட்டனர்.
61. அவன் இங்கு தான் நீங்கள் தவறு செய்கிறீர்கள். நீங்கள் என்னை காட்டிலும் சிறந்த சைக்கிள் ஓட்டுபவர்கள். ஆனால் இங்கே கீழே பார்த்து கொண்டிருக்கிறீர்கள். அது உங்களை பயமுற செய்தது. விழாமல் இருக்க முயற்சி செய்தீர்கள். ஆனால் கீழே விழுந்து விட்டீர்கள் என்று சொன்னான். ஆனால் நான் கீழே பார்க்கவே இல்லை. அந்த கடைமுனையையே நோக்கியவாறு நிலையாக ஓட்டினேன் என்றான்.
62. அதையே தான் நாம் செய்ய வேண்டியவர்களாய் இருக்கிறோம். இவன் அதை செய்தான்இ அவன் அதை செய்தான் என்ற சிறு காரியங்களை நோக்கி பார்க்காதீர்கள். கடைமுனையை நோக்கியவாறு நிலையாய் இருங்கள். கிறிஸ்து வருகிறார்இ கடைமுனையை கவனியுங்கள். எது நடந்து கொண்டிருக்கிறது என்று கவனிக்க வேண்டாம். கடைசி நேரத்தில் பரலோகத்தில் என்ன நடைபெறுகிறது என்பதை மட்டும் கவனியுங்கள். நம்முடைய ஜீவியத்திற்கு கணக்கு கொடுக்க வேண்டியவர்களாய் இருக்கிறோம். சப்பாணியாய் இருந்த அந்த சிறிய பென்யமீன் கோத்திருத்தான் தாவீது மீது மண்ணை வாரி போட்டதை அவனுடைய மெய் காவலாளன் கவனித்து கொண்டிருந்தான்.
63. அவனை தாவீது கவனிக்கவே இல்லை. அவனுடைய மெய் காவலாளன் அவனுடைய தலையை வெட்டுவதற்கு கூட அனுமதிக்கவில்லை. அவனை அப்படியே விட்டு விடுங்கள், அதை செய்யும்படியாய் அவனுக்கு சொன்னார். தேவன் என்னை சபிக்கும்படியாய் அவனிடம் சொன்னார். அவனை அப்படியே விட்டுவிடு என்று சொன்னான். ஒரு நாளில் அவன் ஆட்சிக்கு வருவான் என்பதை அறிந்திருந்தான். அந்த பென்யமீன் கோத்திரத்தானுக்கு நேரம் வரும்.
64. ஆம் அப்படிதான் காரியம், சபையானது வெற்றியோடு இறங்கி வரும். எப்படி இருந்தாலும் அவனுடைய வியாதியுள்ள பிள்ளைகளுக்காக ஜெபம் செய்யும்படியாய் நான் அனுப்பப்பட்டேன்.என்னால் செய்யக் கூடியதெல்லாம் அவ்வளவு தான். அவர்கள் எங்கிருந்தாலும் சரி, அவர்கள் எந்த ஸ்தாபனத்தில் இருந்தாலும் சரி. அது எவ்வித வித்தியாசத்தையும் உண்டு பண்ணாது. அவருடைய வியாதியாயுள்ள பிள்ளைகளுக்காக ஜெபம் செய்ய முயற்சிக்கஇ அவருடைய மகிமைக்காய் வரங்களை வெளிப்படுத்த நான் முயற்சிக்கிறேன். அக்காரணத்தினால் தான் நான் யாரையும் சார்ந்தவனில்லை.
65. இப்பொழுது நினைவிருக்கட்டும் அதெல்லாம் சரிதான் பாருங்கள். இப்பொழுது நான் அதை சொல்லவில்லை. எல்லா சபைகளிலும் கிறிஸ்தவர்கள் இருக்கிறார்களென்று எனக்கு நம்பிக்கை உண்டு என்பதை நான் உங்களுக்கு தெளிவுப்படுத்த விரும்புகிறேன். இதைப்பற்றி யாரும் என்னிடம் கேள்வி கேட்டதே இல்லை. பிள்ளைகளுக்காக ஜெபிக்கும்படியாய், இந்த காரியங்களை செய்யும்படியாய் அவரை வெளிப்படுத்தும்படியாய் நான் அனுப்பப்பட்டவனாய் இருக்கிறேன்.
66. இப்பொழுது நீங்கள் கவனியுங்கள், இயேசுவும் அவருடைய தீர்க்கதரிசிகளும் அவர் பேசினதை நீங்கள் கவனித்திருக்க வேண்டும். ஏனென்றால் அவர்களுக்குள்ளிருந்தது தேவனுடைய வல்லமையாய் இருக்கிறது. தேவன் தாமே அவருடைய சொந்த மகிமைக்கு வருகின்ற அவரை பற்றி அவர்கள் மூலமாய் பேசுகின்றதாய் இருக்கின்றது.
67. அது யாராய் இருக்கப் போகிறார். நல்ல மழை இருக்க போகின்றதா? அதில் எவ்விதமான பயனும் இல்லை. கர்த்தருடைய மகிமைக்காக ஏதோ காரியம். சபையை ஒழுங்கு படுத்துவதற்கான ஏதோ காரியம், தேவனிடமாக ஏதோ காரியம். தனக்கு ஒரு பெயரை கொண்டு வருவதற்காக அல்ல. ஆனால் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துவதற்கான தீர்க்கதரிசனம்.
68. இப்பொழுது நாம் கவனிக்கிறது என்னவென்றால் அந்த தீர்க்கதரிசிகள் யாவரும் அவரை குறித்து அவர்கள் சொன்ன காரியங்களெல்லாம் உண்மையாய் நிறைவேறின. அவரே பழைய ஏற்பாட்டின் பொருளாய் இருந்தார். இயேசு, மேசியா வரப்போகும் மேசியா, ஆதாம் தொடங்கி மல்கியா மட்டுமாக எல்லா தீர்க்கதரிசிகளும் அவரையே எதிர் நோக்கி இருந்தனர். ஒவ்வொரு தீர்க்கதரிசியும் இதை குறித்து பேசியுள்ளனர். ஓவ்வொருவரும் அவர்;களுடைய பங்கை அதில் செலுத்தினர். ஏனென்றால் அவரே தேவனால் அபிஷேகம் பண்ணப்பட்டவராய் இருந்தார். அவர்கள் செய்யக் கூடியதெல்லாம் அதுவே.
69. அதன் பேரில் பேசுவதற்கு நமக்கு அதிக நேரம் இருக்குமானால் நலமாய் இருக்கும். ஆனால் கவனியுங்கள், அவர்கள் சொன்ன எல்லா காரியங்களும் நிறைவேறின. தீர்க்கதரிசிகள் சொல்லி சென்ற சில காரியங்களை நாம் பார்ப்போம்.
70. ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனை பெறுவாள். அது சம்பவித்ததா? நிச்சயமாக. அவருடைய நாமம் இம்மானுவேல், சமாதான பிரபு, சர்வ வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா என்று அழைக்கப்பட்டார், அவர் சரியாக நித்திய பிதா. இந்த பூமியில் ஒருவனையும் பிதா என்று அழைக்க வேண்டாம், ஏனென்றால் அவர் பிதாவாய் இருக்கிறார்;.
71. சரியா, நாம் மறுபடியுமாய் பார்ப்போம். நம்முடைய மீறுதல்களின் நிமித்தம் அவர் காயப்பட்டார், நம்முடைய அக்கிரமங்களின் நிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்,நமக்கு சமாதானத்தை உண்டு பண்ணும் ஆக்கினை அவர் மேல் வந்தது, அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். இப்பேர்ப்பட்ட இந்த மனிதன் பிலாத்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக ஒன்பது குண்டுகள் பொருத்தப்பட்ட வாரினால் அடிக்கப்பட்டவராய் பிலாத்துவின் முன்பு நின்று கொண்டிருந்தார். வேத வாக்கியங்கள் அந்த விதமாகத்தான் சொல்லியிருக்கிறது என்பதை அவர்கள் அறியாமல் இருந்தனர். ஆவியை பகுத்தறியும் தன்மை இல்லாதவர்களாய் அவனை அகற்றும், அவனை அகற்றும் என்று அந்த ஆசாரியர்கள் சொன்னார்கள்.
72. சிலுவையில் அவர் உரத்த சத்தமாய் சொன்னதை அவர்கள் கேட்டு தங்கள் உதட்டை பிதுக்கினர். அதாவது என் தேவனே,என் தேவனே ஏன் என்னை கைவிட்டீர் என்று உரைத்த போது பகுத்தறியும் தன்மை அவர்களுக்கு இல்லாமற் போனது. பாருங்கள் அவர்களால் ஆவியை பகுத்தறிய முடியவில்லை. அது தான் தாவீது 22-ஆம் சங்கீதத்தில் கூறியிருக்கிறார். தாங்கள் அவ்விதம் செய்கிறோம் என்பதை அறியாதவர்களாய் அவர்கள் உதட்டை பிதுக்கினார்கள். அந்த பென்யமீன் கோத்திரத்தான் தாவீதுக்கு செய்தது போலவே செய்தார்கள். தாவீது இராஜ்ஜியபாரத்தை நடத்த கடைபிடித்த அடிப்படை கொள்கைகளை அவன் அங்கீகரியாததினால், தாவீது செய்த யாவும் தவறு என்று அவன் கருதினான். தேவனுடைய ஆவி தாவீதுக்குள் இருந்து கொண்டு அதை செய்கிறதென்று அவன் அறியாதிருந்தான்.
73. அங்கே தான் நாமும் கூட இன்றைக்கு, மனுஷருக்குள்ளாக இருக்கின்ற அவன், என்ன செய்ய முயற்சிக்கிறான், அவன் எதை அடைய பிரயாசிக்கிறான் என்பதை அறிய வேண்டும். அவன் எந்த கூட்டத்தை சேர்ந்தவன், அதை சேர்ந்தவனா,இதை சேர்ந்தவனா,அவன் கருப்பு மனிதனா அல்லது மஞ்சள் மனிதனா அல்லது அவன் எதுவாய் இருந்தாலும் அதை அறிய வேண்டிய அவசியமில்லை. என்ன அடைய முயற்சிக்கிறானென்றும், அவன் தேவனுடைய இராஜ்ஜியத்திற்கென்று என்ன செய்ய முயற்சிக்கிறானென்றும் பாருங்கள். அவன் கொண்டுள்ள கருத்துக்கள் நம்முடைய கருத்துக்களுக்கு வேறுபட்டிருந்தால் பரவாயில்லை, ஆனால் அவன் தேவனுடைய இராஜ்ஜியத்திற்காக ஏதோ காரியத்தை அடைய முயற்சிக்கிறானா என்பது தான் காரியம். அது அவனுக்குள் இருக்கின்றதா என்று பகுத்தறிய வேண்டும். அவன் தவறாய் இருந்து அவனுடைய இருதயம் உண்மையாய் இருக்குமானால், கொஞ்ச காலம் கழித்து தேவன் அவனை அப்படியே அந்த காலத்தின் சத்தியத்திற்கு கொண்டு வருவார். அவனை விட்டு விடுங்கள், அவனை விட்டு விடுங்கள். அவன் என்ன செய்ய முயற்சிக்கிறான் என்று பாருங்கள்.
74. இப்பொழுது அவருடைய மரணத்தில் நாம் என்ன கண்டறிந்தோமென்றால் தீர்க்கதரிசிகள் சொன்ன எல்லா காரியங்களும் அவர் சிலுவையில் மரித்தபோது, என் கால்களையும் என் கைகளையும் அவர்கள் உருவ குத்தினார்கள் என்பது அங்கே நிறைவேறினது. தீர்க்கதரிசிகள் சரியாய் உரைத்தார்கள். தாங்கள் தான் அதுவென்றும், அவர்களுக்கு தான் அது நேர்ந்தது என்றும் அவர்கள் கருதினார்கள், ஆனால் அவர்கள் சொன்ன யாவும் சிலுவையில் வெளிப்பட்டு நிறைவேறினது.
75. அவர் அக்கிரமத்தில் ஒருவராக எண்ணப்பட்டார்,அப்படிதான் அவருக்கு செய்தார்கள். அவர் அக்கிரமக் காரரோடுதான் இருந்தார். அவர் மரித்தபோது ஐசுவரியவானோடே அடக்கம் பண்ணப்பட்டார். அவரை ஒரு ஐசுவரியவானின் கல்லரையில் தான் அடக்கம் செய்தார்கள்,அதை செய்தார். அவர் என் ஆத்துமாவை பாதாளத்தில் விடமாட்டார் என்று தாவீது சொன்னான். தாவீதுக்கு உள்ளிருந்து தேவனுடைய ஆவியானவர் பேசிக்கொண்டிருந்தார். என்ஆத்துமாவை பாதாளத்தில் விடீர், என்னுடைய பரிசுத்தவானை அழிவை காணவொட்டீர். அப்படித்தான் ஒரு பரிசுத்தவான் போல் உரைத்தான். அது தாவீதல்ல, தாவீதுக்குள் இருந்த தேவனுடைய ஆவியானவர் அவ்விதம் கூறினார். பாருங்கள் அந்த மனிதனுக்குள்ளிருந்த தேவனுடைய ஆவியானவர் அவ்விதம் கூறினார். அந்த மாய்மாலக்காரனை பாருங்கள் என்று அங்கு இருந்த யாராவது கூறி இருப்பார்கள்.
76. அவன் கூறவில்லை, அவனுக்குள்ளிருந்த தேவனுடைய ஆவியானவர் கூறினார். பாருங்கள் அவனுக்குள்ளிருந்ததான தேவனுடைய ஆவியானது தன்னைதானே வெளிப்படுத்தி அதை காட்டுகிறது. என் ஆத்துமாவை பாதாளத்தில் விடீர், உம்முடைய பரிசுத்தவானை அழிவை காணவொட்டீர்.
77. இப்பொழுது சகோதரர்களே பிரசங்கத்தை முடிப்பதற்கு முன் இதை கூற விரும்புகிறேன். நமக்கு நேரம் ஆகிக்கொண்டே போகிறது. ஆனால் கவனியுங்கள், இந்த வேத வாக்கியங்கள் இங்கிருக்க இதை சொல்லி முடிக்கின்றேன். நாம் பார்ப்போம், பழைய ஏற்பாட்டின் பொருள் அனைத்தும் ஒரு பொருளை பற்றியிருக்க, தேவனுடைய ஆவியின் அபிஷேகம் பெற்ற யாவரும், பரிசுத்த தீர்க்கதரிசிகளும், அவர் எல்லாமும்,அவர் உரைத்த எல்லா காரியங்களும் ஒரு எழுத்து கூட பிசகாமல் அந்த ஒருவரில் நிறைவேறி இருக்குமானால்,தேவனுடைய குமாரனென்று அழைக்கப்படும் அவர்இ புதிய ஏற்பாட்டின் சபையை எப்படி நிறுவவேண்டும் என்பதை நிச்சயம் அறிந்திருக்க வேண்டும். நீங்கள் அதை நம்புகிறீர்களா? புதிய ஏற்பாட்டின் சபையை எவ்விதம் நிறுவவேண்டும் என்ற கருத்தை அவசியம் அறிந்திருக்க வேண்டும்.
78. முதலாவதாக உங்கள் கவனத்திற்கு நான் கொண்டு வர விரும்புவது மத்தேயு 16 – ஆம் அதிகாரத்தில் அவர் கடந்து வந்து கொண்டிருந்தபோது அவர் சீஷர்களிடத்தில் பேசிக்கொண்டிருந்தார், அதாவது மனுஷக் குமாரனாகிய என்னை ஜனங்கள் யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார்.
79. அதற்கு அவர்கள் சிலர் உம்மை எலியா என்றும் இன்னும் சிலர் உம்மை இன்னார் இன்னார் என்றும் வேறு சிலர் இன்னார் இன்னார் என்றும் வித்தியாசப்பட்டவர்களாய் சொல்லுகிறார்கள் என்றனர். அதற்கு அவர் நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார்.
80. அதற்கு பேதுரு நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான்.
81. அதற்கு அவர் யோனாவின் குமாரனாகிய சீமோனே,நீ பாக்கியவான். மாம்சமும், இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை. பரலோகத்தில் இருக்கிற என் பிதா அதை உனக்கு வெளிப்படுத்தினார். மேலும் நான் உனக்கு சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கின்றாய்,இந்த கல்லின் மீது என் சபையை கட்டுவேன். பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை என்றார். இப்பொழுது அவர் சபையை குறித்து அங்கு பேசினார்.நன்றாய் கூர்ந்து கவனியுங்கள், நான் தவறாய் இருப்பேனானால் தேவனே எனக்கு மன்னியும், நீங்களும் என்னை மன்னியுங்கள்.
82. கத்தோலிக்க சபை சொல்லுகிறது, அது அங்கே இருந்ததான ஒரு கல் என்று. பேதுருவின் மீது அவர் சபையை கட்டினார் என்று சொல்லுகிறது. அது தவறென்று நாம் அறிவோம், பிராட்டெஸ்டென்டுகளாகிய நாம் அதை ஆமோதிப்பதில்லை.
83. ஆனால் பிராட்டெஸ்டென்டுகளாகிய நாம், அது அவர்தானே, அவர் மேலேயே சபையை கட்டினார் என்று சொல்லுகிறோம். ஆனால் நீங்கள் கவனிப்பீர்களேயானால், நட்பு முறையில் நான் அதை ஆமோதிப்பதில்லை. காரியம் அதுவல்ல,அவரைப்பற்றின ஆவியின் வெளிப்பாடாய் அது இருக்கிறது. மாம்சமும்இ இரத்தமும், வேதாகம கல்லூரிகள் எவ்வளவு நன்றாக இருந்தாலும், நீங்கள் ஒருபோதும் அவைகளில் கற்றுக்கொள்ள முடியாது. சபை கோட்பாடுகளினால் அவைகளை நீங்கள் கற்றுக்கொள்ள முடியாது. அவை எவ்வளவு நன்றாய் இருந்தாலும் அதெல்லாம் சரி. ஆனால் மாம்சமும்,இரத்தமும் அதை உனக்கு வெளிப்படுத்தவில்லை.
84. நீங்கள் எவ்விதமாகவும் பிரசங்கம் செய்யலாம், எவ்வாறு நீங்கள் தலை குனிந்து இருக்க வேண்டும்,இந்த பூமியில் எப்படி அல்லது என்ன பெரிய காரியங்களை செய்ய வேண்டும் என்ற மனித ஞானத்தினால் உன்டான கருத்தல்ல, அந்த காரியம் அதுவல்ல. அது ஏதோ காரியத்தை கட்டுவதல்ல, செய்வது அல்ல, அது என்னவென்றால் தேவனுடைய வார்த்தையை பற்றியதான வெளிப்பாடாய் அது இருக்கிறது. அது தேவனைப்பற்றின வார்த்தையின் வெளிப்பாடாய் அது இருக்கிறது. அவரே வார்த்தையாய் இருக்கிறார். ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்தில் இருந்தது, அந்த வார்த்தை தேவனாய் இருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி நமக்குள்ளே வாசம் பண்ணினார்.
85. அது தான் தேவனை பற்றின வார்த்தையின் வெளிப்பாடாய் இருக்கிறது. வெளிப்பட்ட தேவனுடைய குமாரன் அவரே என்ற ஆவிக்குரிய வெளிப்பாட்டை பேதுருக்குள் இருந்த ஆவியானவர் வெளிப்படுத்தினார். மகிமையின் தேவனானவர் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்தி காண்பித்து கொண்டிருந்தார். இந்த கல்லின்மேல், வார்த்தையை பற்றின ஆவிக்குரிய வெளிப்பாடாகிய இந்த கல்லின் மேல் என் சபையை கட்டுவேன். ஏன், அவரே தேவனுடைய குமாரன் என்று தேவனுக்கு கீழாக இருந்து பரிசுத்த ஆவியினால் தீர்க்கதரிசிகள் பேசி இருப்பார்களேயானால், இந்த பக்கத்தில் அதே காரியத்தை அதே ஆவியானவரால் வெளிப்படுத்துகிறார். உங்களால் அதை புரிந்து கொள்ள முடிகின்றதா?
86. மாம்சமும், இரத்தமும், நீங்கள் அதை வேதாகமக் கல்லூரிகளில் அதை கற்றுக்கொள்ள முடியாது. நீங்கள் அங்கே படித்து உங்களுடைய  டீடீ,பீ.ஹெச்.டி,உங்கள் எல்.எல்.டி போன்ற பட்டங்களை நீங்கள் அங்கே பெற்றுக்கொள்ளலாம். அவைகளெல்லாம் பரவாயில்லை, நானும் கூட டாக்டர் பட்டம் பெற்றிருந்தால் நலமாயிருக்கும். அது நல்லது தான்,ஆனால் அப்படி இருந்தாலும் காரியம் அதுவல்ல. அதை நீங்கள் பெற்றிருக்க வேண்டிய அவசியமில்லை. அதை பெற்றிருப்பது நல்லதுதான். பட்டத்தை பெற்றுக்கொண்டு வெளிபாட்டையும் பெற்றிருக்கலாம். ஆனால் நீங்கள் வெளிப்பாட்டை வெளியே தள்ளிவிட்டு பட்டத்தை பெற்றுக்கொள்ள வேண்டியதாக இருந்தால், பட்டம் தான் வெளிப்பாடு என்றால், இதுதான் அது,இது வெளிப்பாடாய் இல்லாமற் போகுமானால் பட்டத்தை காட்டிலும் வெளிப்பாட்டை பெற்றிருப்பதே நலம்.எனக்கு வெளிப்பாடுதான் தேவை,வெளிப்பாடு.
87. மாம்சமும், இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, கல்வி வாயிலாக நீங்கள் அதை கற்றுக்கொள்வில்லை,நீங்கள் அதை ஸ்தாபன வழியில் அதை கற்றுக்கொள்ளவில்லை. கல்வி ஸ்தாபனம் நல்லதுதான்,அது அதனுடைய ஓரு பகுதி. ஆனால் ஜனங்களோ அதின் மீது பற்றுதல் வைத்து ஆவிக்குரிய வகையறுத்தலை விட்டு விடுகின்றார்கள்,புரிகின்றதா?
88. மாம்சமும், இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, ஆனால் பரலோகத்தில் இருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்துவார். இந்த கல்லின் மேல் என் சபையை கட்டுவேன். பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை.மேற்கொள்வதில்லை என்பது அவைகளுக்கு எதிராய் இருக்கும் என்று பொருள்படும்.
89. இப்பொழுது பாதாளத்தின் வாசல்கள் எங்கே இருக்கின்றது என்பதை கவனித்து புரிந்து கொள்ளுங்கள். அவைகள் ஸ்தாபனங்களுக்கு எதிராக இல்லைஇ அரசாங்கம் அதை அங்கீகரிக்கின்றது. நம்முடைய ஸ்தாபனங்கள் அனைத்தையும் உலகம் அங்கீகரிக்கின்றது. நமக்கந்த உரிமை இருக்கின்றது. அமெரிக்க குடிமகன் என்ற அடிப்படையில் நம் ஒவ்வொருவருக்கும் ஸ்தாபனங்களில் உரிமையுண்டு. எது அருமையானது என்று அறிந்து கொள்ளும் உண்மை, நாம் அதை பாராட்டுகிறோம். ஆனால் பாதாளத்தின் வாசல்கள் அதற்கு எதிராய் இல்லை. நேற்றும் இன்றும் என்றுமான கிறிஸ்துவானவர் இங்கு இருக்கிறார் என்கிற ஆவிக்குரிய வெளிப்பாட்டிற்கு எதிராகத்தான் பாதாளத்தின் வாசல்கள் இருக்கின்றன. அதைத்தான் அவைகள் எதிர்க்கின்றன. பாதாளத்தின் வாசல்கள் அதற்கு எதிராக இருக்கும், ஆனால் அவைகள் ஒருபோதும் அதை மேற்கொள்வதில்லை.
90. அங்கே தான் இருக்கிறது ஆவிக்குரிய வகையறுத்தல். அது யாராய் இருந்தாலும் சரி, நான் பிரயாசிக்கின்ற அதே நோக்கத்தில் அவர் முயற்சிக்கும் மட்டும் அவர் என் சகோதரர்தான். அவர் ஒரு தீர்க்கதரிசியாய் இருக்கட்டும், அவர் ஒரு போதகராய் இருக்கட்டும், அவர் ஒரு டீக்கனாய் இருக்கட்டும். அது இன்னார் இன்னாராய் இருக்கட்டும். தேவன் அவரை இந்த விதமாக அந்த விதமாக அல்லது எந்த விதமாக வேண்டுமானாலும் பயன்படுத்தி இருக்கட்டும். என்னை அவர் கனவீனப்படுத்தட்டும்,என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். எப்படி இருந்தாலும் அவர் என் சகோதரனாய் இருக்கிறார். ஆகையினாலே காரியத்திற்காக கிரியை செய்கின்றோம். அக்கரையிலுள்ள அதே இராஜ்ஜியத்திற்காக எங்கள் கிரியைகளையெல்லாம் அனுப்புகின்றோம். நான் கிரியை செய்கின்ற அதே காரித்திற்காக அவரும் கிரியை செய்கின்றார். ஆவிக்குரிய வகையறுத்தல்,தேவனை பற்றின ஆவிக்குரிய வெளிப்படுத்தல். உங்களுக்கு அது தேவையாய் இருந்தால் இங்கே பாருங்கள்.
91. மற்றொரு இரவு எங்கோ ஆதி முதற்கொண்டு அவ்விதமாக இல்லை என்ற ஒரு பொருளின் மேல் பிரசங்கித்துள்ளேன். பிரசங்கத்தின் பொருளை கண்டறிய நான் சற்று நேரம் துவக்கத்திற்கு போக வேண்டியது இருக்கும். ஆரம்பத்திலேயே காயீன் இருந்தான். அவன் ஒரு மேதை,அருமையான ஒரு சபையை கட்டினான். நாம் இப்படியாய் சொல்வோம்இ ஒரு அழகான பலிபீடத்தை கட்டி ஒரு பலியை செலுத்தி ஜெபித்தான். உத்தமத்தோடு நன்றி செலுத்தினான், அவனுடைய தசமபாகத்தை கொடுத்தான். ஆபேல் எவ்வளவு பயபக்தியாய் இருந்தானோ அவ்வளவாக காயீன் எல்லாவற்றையும் செய்தான்.
92. ஆனால் ஆபேலோ, அந்நாட்களில் வேதாகமமே கிடையாது. ஆனால் ஆவிக்குரிய வெளிப்பாட்டின் மூலமாக வயலின் கனிகள் பாவத்திற்கு காரணமாய் இல்லை என்பதை அவன் கண்டறிந்தான். அவர்கள் சாப்பிட்டது ஆப்பிள்கள் அல்ல, பாருங்கள் அது ஆப்பிள்களல்ல. வெளிப்படுத்தல் அவனுக்கு அதை கூறிற்று. ஏதேனிலிருந்து அவனை வெளியே கொண்டு வந்ததற்கு காரணம் பழங்களல்ல, அது ஜீவன். ஜீவனின் வேறு பிரிதல், ஆகவே அவன் போய் ஒரு செம்மறி ஆட்டு குட்டியை கொண்டு வந்து விசுவாசத்தினால் அவனுக்கு பதிலாக அதை பலியாக செலுத்தினான்,அதுவே ஆவிக்குரிய வெளிப்பாடாகும். ஆமேன். தேவனுடைய வெளிப்பாடு அவனுக்கு வெளிப்படுத்தப்பட்டது. அது ஆவிக்குரிய வெளிப்பாடாயிருக்கிறது. அது ஏதோ ஒரு பழமல்ல,அது ஆப்பிள்களல்ல. அது பிச்சி பழங்களல்ல,அது ஃபெரன்ச் பழங்களல்ல, அது டேட்ஸ் பழங்களல்ல. அது ஜீவனின் வேறு பிரிதலாய் இருக்கிறது. ஆகவே அவன் போய் ஒரு ஜீவனை கொண்டு வந்து பழங்களுக்கு பதிலாக அதை பலியாக செலுத்தினான்.
93. உங்கள் சொந்த கைகளினாலான உங்கள் கிரியைகளாகிய கனிகள் தான். நீங்கள் புசிப்பது பழங்கள். நீங்கள் அங்கே என்ன செய்கிறீர்கள். நான் போய் இதை கட்டுவேன், நான் போய் இதை செய்வேன், நான் அதை தாங்குவேன் என்று. அவைகள் எல்லாம் நல்லது தான். மற்றவர் செய்தது போலவே இவனுக்கு ஒரு பலிபீடம் இருந்தது. அவர்கள் இருவருக்கும் பலி பீடங்கள் இருந்தது. அவைகள் எல்லாம் நல்லது தான்.
94. ஆனால் அது ஒரு வெளிப்படுத்தின காரியமாயிருக்கிறது.ஏனென்றால் தேவ ஆவியானவர் அதை வெளிப்படுத்தினார். அந்த கல்லின் மேல், கிறிஸ்து மரித்ததான அந்த கல்லின்மேல், காலங்களாய் உள்ள அந்த கல்லின் மேல்,ஆபேலின் ஆட்டுக்குட்டி மரித்ததான அந்த கல்லின் மேல் என் சபையை கட்டுவேன்.அந்த சிறிய ஆபேல் அந்த சிறிய ஆட்டுக்குட்டியின் மீது தன் கரங்களை வைத்த போது,அந்த நாட்களில் அவனிடம் கூர்மையான கத்தி இல்லாத படியினாலே ஒரு கல்லை எடுத்து அறுத்தான். அதினுடைய வெண்மையான ரோமம் அப்படியே இரத்தத்தால் தோய்ந்திருந்தது. அந்த கல்லை கொண்டு கழுத்தை அழுத்தி அறுத்தான். அந்த பாவமான ஆட்டுக்குட்டியானது மரித்து கொண்டு அவனுடைய கைகளெல்லாம் இரத்தத்தினால் தோய்க்கப்பட்டதாய், அதனுடைய ரோமமெல்லாம் இரத்தத்தினால் தோய்க்கப்பட்டதாய்இ கத்திக்கொண்டும் அழுது கொண்டும் இருந்தது.
95. அது எதை குறித்து பேசுகிறது, தேவ ஆட்டுக்குட்டியானது நான்காயிரம் ஆண்டுகளுக்கு பிறகு, தேவ ஆவியானவர் சபையானது அவரை புறக்கணித்து தள்ளுகிறது. ஆவிக்குரிய பிரகாரமாக வெளிப்படுத்துகிறது. ஜனங்கள் அவரை பெயல்செபூலென்றும் ஒரு பிசாசு என்றும் அழைத்தனர். ஏனென்றால் எல்லா தீர்க்கதரிசிகளும் உரைத்திருக்கிறார்கள், அவர்கள் தீர்க்கதரிசிகளை மறுத்தனர். ஓ நீங்கள் அவர்கள் கல்லறைகளை எழுப்பி,நீங்கள் தான் அவர்களை கல்லறைகளில் வைத்தீர்கள். வெள்ளை அடிக்கப்பட்ட சுவர்களே என்று அவர் அவர்களிடம் சொன்னார். ஆவிக்குரிய வகையறுத்தல் இல்லாமல் இருந்தார்கள். அது தான் தேவ ஆட்டுக்குட்டி என்று அழுது அவர்கள் நின்றார்கள். அவர் அந்த விதமாகத்தான் இருக்க வேண்டியவராய் இருந்தார், அந்த விதமாகவே நடந்து கொண்டார். ஏனென்றால் அவர் தேவனுடைய வார்த்தையை நிறைவேற்றிக் கொண்டிருந்தார்.
96. இன்றைய பரிசுத்த ஆவியின் சபையானது அவர்களுடைய வழிகளில் நடந்து கொண்டு, அவர்களைப்போலவே கிரியை நடப்பித்து கொண்டு அவர்கள் தேவனுடைய வார்த்தையை நிறைவேற்றி கொண்டிருக்கிறார்கள், அல்லேலூயா. பாருங்கள் பெந்தேகோஸ்தே நாளன்று பேதுரு இது தான் அது என்று கூறினான். அது உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் தூரத்திலிருந்து தேவன் வரவழைக்கும் யாவருக்கும் என்று  சொன்னான்.
97. அந்த ஆவியின் ஏவுதலை பெற்ற தீர்க்கதரிசிகள் தான் சாயங்காலத்திலே வெளிச்சம் உண்டாகுமென்றும், முன்மாரியும் பின்மாரியும் கிருபையின் நாட்களில் சேர்ந்து பெய்யும் என்று உரைத்தனர். அது என்ன? முன்மாரி வந்து கொண்டிருக்கிறது, பின்மாரி வரவேண்டிய காலத்தை தாண்டி போய் விட்டது. பின்னர் அவை ஒன்றோடு ஒன்று இணைந்து முன்மாரியும் பின்மாரியும் சேர்ந்து காணப்படுகிறது. வல்லமையினாலும் இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலினாலும் பரிசுத்த ஆவியானவர் வெளிப்படுத்தி வருகிறது. அது தான் காரியம், இரண்டும் இணைந்து வருகிறது. முன்மாரியும், பின்மாரியும், தேவனுடைய கிருபையும், நோவாவின் நாட்களில் நடந்தது போல என்று அவர் சொல்லுகிறார். அவருடைய கிருபை நீடிய பொறுமையாய் இருந்தது. அதே காரியம் இதோ இந்நாட்களிலும் இருக்கிறதுஇ நீடிய பொறுமையானது ஒன்றன் மேல் ஒன்றாக இரண்டையும் ஒன்றாக்கிற்று. பழைய நாட்களில் இருந்த ஒரு மேகத்தையும், இன்றைய காலத்தில் இருந்த ஒரு மேகத்தையும் ஒன்றாக கொண்டு வந்து இணைக்கிறது. முன்மாரி என்பது முதலாவதாக பெய்வது, முதல் மழை.நமக்கு ஏற்கனவே வந்துவிட்டது. இப்பொழுது இதோ வருகிறது, பின்மாரியானது வருகிறது, முன்மாரியானது பின்மாரியின்மேல் பொழிகிறது. கிழக்கும் மேற்கும் ஒன்றாக இணைகிறது. இருமாரிகளும் ஒன்றாக சேர்ந்து பொழிகிறது. தெய்வீக சுகமளித்தலும், இருதயத்தின் ரகசியங்கள் தேவனுடைய தூதனானவர் வெளிப்படுத்துகிறதும் சேர்ந்து எல்லா காரியங்களும் நிறைவேறுதலுக்கு கொண்டு வருகிறது. உண்மையாய் பிறந்த தேவனுடைய பிள்ளைகள் இதை காணுவார்கள் போலிருக்கின்றது. அது தான் ஆவியானவர் வெளிப்படுத்துகின்றது. வெளிப்பாடு,அதை தான் இயேசு சொன்னார். அதன் பேரில் தான் சபை கட்டப்பட வேண்டுமென்று.
98.அப்படியானால் யாராவது எழும்பி நின்று இன்னார் இன்னாராகிய நாங்கள் தான் அதன் பேரில் கட்டப்பட்டவர்கள் என்று கூறலாம்.
99. இன்னும் தொடர்ந்து அவருடைய வார்த்தையை சற்று நாம் நோக்குவோம். சபைக்கு கொடுத்த கடைசி கட்டளையில் அவர் நீங்கள் உலகமெங்கும் போய் சகல சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தை பிரசங்கியுங்கள் என்று சொன்னார். உலக முழுவதற்கும், இது எவ்வளவு காலம் நீடிக்கும், உலக முழுவதையும். எத்தனை பேருக்கு, சர்வ சிருஷ்டிக்கும். விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன்,சபையையல்ல. பெற்றவன்இ அவன் என்பது ஒரு பிரதி பெயர். விசுவாசமுள்ளவனாகி, தனிப்பட்ட ஒரு ஆள்.
100. டேவிட் ட்யூஃப்லஸிஸ் பேரப்பிள்ளைகளை குறித்து சொன்னது போன்று,தேவனுடைய இராஜ்ஜியத்தில் பிள்ளைகள் தவிர பேரப்பிள்ளைகள் இருக்கப் போவதில்லை. என்னுடைய தகப்பனார் ஒரு பெந்தெகோஸ்தே வாயிருந்தார். அவர் இந்த சபைக்கு வருகிறதினால் நீயும் லெவன்த் அண்ட் கார்ஃபீல்டிலுள்ள இந்த சபைக்கு வந்து கொண்டிருக்கிறாய். அவர் பரிசுத்த ஆவியை பெற்றுள்ளார். ஒரு பேரப்பிள்ளை, அவர் வெறுமனே இங்கே உன்னை கொண்டு வந்தார், அது தவறு. தேவனானவர் உனக்கு தம்மை வெளிப்படுத்த வேண்டும்.
101. மனித ஞானத்தின் மூலம் ஒருவனும் இயேசுவை கிறிஸ்து என்று அழைக்கக்கூடாது. ஆபத்திற்காக மனஸ்தாபப்பட்டு மனந்திரும்புவதற்கு வருவதினால் ஒருவன் இயேசுவை கிறிஸ்து என்று அழைக்கக்கூடாது. பரிசுத்த ஆவியானவரின் வெளிப்பாட்டினாலே உனக்கு அது அறிவிக்கப் பட்டாலொழிய எந்த ஒரு மனிதனும் இயேசுவை கிறிஸ்து என்று அழைக்கக்கூடாது. இந்த கல்லின் மேல் என் சபையை கட்டுவேன். பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை. அங்கே தான் இருக்கிறது வெளிப்பாடு. அவருடைய சபையை எதின் மேல் கட்டுவேன் என்பதன் பேரில் தான் இருக்கிறது.
102. யார் அதை கட்டினது, பேதுருவா? இல்லை, இல்லை, இல்லை. யார் அதை கட்டினது, தேவனுடைய பரிசுத்த ஆவியானவர் அதை உங்களிடத்தில் கொண்டு வருவார் என்று கிறிஸ்து சொன்னார். சில காலம் நான் உங்களோடு இருப்பேன்,அதன் பின்பு நான் உங்களைவிட்டு போய்விடுவேன், ஆனால் நான் பிதாவை வேண்டிக்கொள்வேன், அவர் உங்களுக்கு ஒரு தேற்றரவாளனை அனுப்புவார். அவர் வந்து இந்த காரியம் எல்லாவற்றையும் உங்கள் ஞாபகத்திற்கு கொண்டு வருவார். அது சரி தானே, இன்று காலையில் அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் அவர் என்ன செய்வார்? வரப்போகிற காரியங்களை உங்களுக்கு காண்பிப்பார். கடைசி நாட்கள் சபையிலுள்ள பரிசுத்த ஆவியானவர். இப்பொழுது நீங்கள் அல்லேலூயா அது தான் என்னுடைய சபை என்று நீங்கள் சொல்லலாம்.
103. ஒரு நிமிடம் பொறுங்கள், அதினால் நீங்கள் என் சீஷர்கள் என்று எல்லாரும் அறிந்து கொள்வார்ளென்று யோவான் 13:35- ல் கூறியுள்ளார். நீங்கள் ஒருவரிலொருவர் அன்பு கூர்ந்தால் அதனால் நீங்கள் என்னுடைய சீஷர்களாய் இருப்பீர்களென்று எல்லாரும் அறிந்து கொள்வார்கள். வரப்போகும் தேவனுடைய இராஜ்ஜியத்தை பற்றின ஆவியானவர் வெளிப்படுத்தின சத்தியத்தை கடைசி மட்டுமாய் நோக்கிப் பார்த்து தீர்க்கதரிசிகள் உரைத்தவைகளை கண்டு, இயேசு கிறிஸ்துவானவர் அதை குறித்து கூறினவைகளை கடைசி மட்டும் நோக்கி பார்த்து, இங்கே அதே பரிசுத்த ஆவியானவர் உனக்குள்ளாக இருந்து கொண்டு அது சரிதான், அது சரிதான் என்று சத்தமிடுகின்றார்.அது என்ன, அது ஆவிக்குரிய வெளிப்படுத்தின சத்தியமாய் இருக்கிறது. அவர்கள் எந்த சபைக்கு போகிறார்கள் என்ற பாகுபாடின்றி, நான் என் சகோதரனை நேசிக்கிறேன். அவர்கள் முன்மாரியோ, பின்மாரியோ அல்லது மாரியே இல்லாதவர்களோ அவர்கள் கிறிஸ்துவின் சரீரத்தில் இருக்குமட்டில்,அவர்கள் கிறிஸ்துவின் சரீரத்தில் இருக்குமட்டில், ஏதோ ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக உங்களை தானே பூமியில் வெளிப்படுத்தி காட்டும்படியான நோக்கத்திற்காக அல்ல, ஆனால் தேவனுடைய இராஜ்ஜியத்தின் நோக்கத்திற்காக, அவருடைய வருகையின் மகிமைக்காக, அவருடைய சீக்கிரமான தோன்றுதலை குறித்து     வெளிப்படுத்தவும், அறியப்படுத்தவுமே.
104. இப்பொழுது முடிக்கப்போகின்றோம், இதை குறித்து சிந்திக்க விரும்புகிறேன். இந்த கல்லின் மேல் என் சபையை கட்டுவேன்,சரியாக அப்படியே. இன்னும் யோவான் 14 – ஆம் அதிகாரம் 7 – ஆம் வசனத்தில் அவர் இங்கு சொல்லுகிறார், நான் செய்கிற கிரியைகளை நீங்களும் கூட செய்வீர்கள், நான் செய்கிற கிரியைகளை. அவர் தம்மை அறிந்து கொள்ளும்படியாய் செய்ய என்ன கிரியைகளை செய்தார். இயேசுவை குறித்து உங்களுக்கு ஞாபகம் இருக்கின்றதல்லவா? நாம் எதை குறித்து பேசிக் கொண்டிருந்தோம்? கிறிஸ்து, கிணற்றண்டையில் இருந்த பெண், புறஜாதிகளிடம் போக வேண்டாமென்றும் ஆனால் கடைசி நாட்களில் அவர்களுக்கு கடைசி நாட்கள் இருக்கிறதென்றும், அவர்களுக்கு முன்னுறைத்தார். லோத்தின் நாட்களில் நடந்தது போல மனுஷ குமாரனுடைய நாட்களிலும் நடக்கும். இதை போன்ற இரகசியங்களில் அங்கே ஒரு வெளிப்படுதல் இருக்கின்றது. வெளி உலகத்தாருக்கு, உலகத்துக்கு இதை குறித்து ஒன்றும் தெரியாது. ஆனால் விலையேறப்பெற்ற சகோதரர்களாகிய நீங்கள், விலையேறப்பெற்றதான சகோதரிகளாகிய நீங்கள் இருளின் பிள்ளைகளல்லவே. நீங்கள் இரவின் பிள்ளைகளுமல்லவே. ஆனால் நீங்களோ வெளிச்சத்தின் பிள்ளைகளாய் இருக்கிறீர்கள். அவர் ஒளியில் இருக்கிறது போல, நீங்களும் ஒளியிலே நடக்கிறீர்கள். அப்பொழுது ஒருவரோடொருவர் உங்களுக்குள் ஐக்கியம் இருக்கும். தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம் அப்பொழுது நம் எல்லோரிடத்திலும் இருக்கும் பாவங்களை சுத்திகரிக்கும். கர்த்தரின் ஊழியக்காரரே இதை புரிந்து கொள்ளுங்கள்.
105. நான் குறித்து வைத்துள்ள வேதவாக்கியங்களில் நான் மாற்கு 16 கூறுகிறேன். அவர் சொல்லுகிறார் நீங்கள் உலகமெங்கும் போய், அவர் எந்த விதமான சபையை ஏற்படுத்தியுள்ளார் என்பது இங்கு இருக்கிறது. சபைக்கு கொடுத்ததான கடைசி கட்டளை. நீங்கள் உலகமெங்கும் போய் சகல சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தை பிரசங்கியுங்கள். விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான். விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாக தீர்க்கப்படுவான். இப்பொழுது இங்கே பாருங்கள், இந்த ஆவிக்குரிய கவனியுங்கள். விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன், சரியாக எந்த விதமான ஞானஸ்நானம் என்று அங்கே சொல்லப்படவில்லை. ஆனால் நாம் தான் மிகுதிபடுத்த விரும்புகின்றோம். இன்னொரு காரியம் பாருங்கள், விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான். எந்தவிதமாக ஞானஸ்நானம் பெற விரும்புகிறானோ அது அவனை பொறுத்தது. அவனுடைய நோக்கங்கள் தேவனுடைய இராஜ்ஜியத்திற்காக இருக்குமானால் முன் வாருங்கள். சகோதரனே நாம் அதே ஆவியுடன் தான் நாம் பவனி போகிறோம். நான் தவறாய் இருக்கிறேன் என்றால் அப்பொழுது நீங்கள் எனக்கு சொல்லுங்கள். அந்த விதமாய் எல்லாம் அந்த விதமாக வரும். நீங்கள் தவறாய் இருப்பீர்களானால் அப்படியே அதுவும் இருக்கும். ஆனால் நம்முடைய இருதயங்களும், குறிகோள்களும், நோக்கங்களும் அக்கரையிலுள்ள தேவனுடைய இராஜ்ஜியத்தை பற்றினதாய் இருக்கும். அப்பொழுது நாம் கல்வாரியை சுட்டி காட்டுகிறவர்களாய் இருப்போம்.
106. நானும் என்னுடைய கருத்துகளும் ஏன்? எனக்கு விருப்பமாய் இருப்பது போன்று விரும்புகின்ற ஒரு சகோதரன் எனக்கு இல்லை. ஆகிலும் நாம் சகோதரர்களாய் தான் நாம் இருக்கிறோம். புரிகின்றதா? வேட்டையிலும்,மீன் பிடிப்பதிலும் எனக்கு இருக்கும் ஆர்வம் ஒருவருக்குமில்லை,ஆனாலும் நாம் சகோதரர்கள் தான். நான் என்ன சொல்லுகிறேன் என்ற புரிகின்றதா? என்னிடம் என் சொந்த கருத்துக்கள் உண்டு. ஆனால் அது அவர் என் சகோதரன் அல்ல என்று ஆக்காது. அவருடைய தகப்பன் தான் என்னுடைய தகப்பன், அவருடைய குடும்பம் தான் என்னுடைய குடும்பம்,அது தான் காரியம்.
107. கோத்திர பிதாக்கள் யாவரும் வித்தியாசப் பட்டவர்களாய் இருந்தார்கள் ஆனால் அவர்களுக்கு ஒரு தகப்பனே. அது எல்லாமாக ஒரே காரியத்திற்காக கிரியை செய்ய வேண்டும், அவர்களில் முக்கியமாக புறக்கணித்தல், ஏனென்றால் அவன் ஆவிக்குரியவனாக இருந்தான். சகோதரர்களே உங்களால் அதை புரிந்து கொள்ள முடியவில்லையா? நான் எதை குறித்து பேசுகிறேன் என்று நீங்கள் விளங்கிக் கொள்ளவில்லையா?
108. இப்பொழுது கவனியுங்கள். நீங்கள் உலகமெங்கும் போய் சகல சிருஷ்டிகளுக்கும் சுவிசேஷத்தை பிரசங்கியுங்கள். விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான். விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின் தொடரும். என் நாமத்தினால் பிசாசுகளை துரத்துவார்கள், நவமான பாஷைகளை பேசுவார்கள். ஆவிக்குரிய வெளிப்படுத்தல், புரிகின்றதா? அவர்கள் நவமான பாஷைகளை பேசுவார்கள், அவர்கள் சர்ப்பங்களை எடுத்தாலும், சாவுக்கேதுவான் யாதொன்றையும் புசித்தாலும் அது அவர்களை சேதப்படுத்தாது. வியாதியஸ்தர்கள் மீது கைகளை வைத்தால் அவர்கள் சுகமடைவார்கள். புதிய சபையானது அந்த வண்ணமாய் தான் இருந்தது. எல்லா தீர்க்கதரிசிகளும் தீர்க்கதரிசனமாய் உரைத்த இந்த மகத்தான ஒருவர்,இயேசு கிறிஸ்துவானவர் இந்த விதமான சபையை தான் அவர் உருவாக்குவார். அவருடைய ஆவியானவர் மீண்டும் சபைக்கு வந்து அதே கிரியைகளை அவருடைய ஆவியை பெற்ற ஜனங்கள் செய்வார்களென்று முன்னுரைக்கிறது.
109. நான் இதை கூறி முடிக்க விரும்புகிறேன். இன்னும் சுமார் பன்னிரெண்டு வேத வாக்கியங்கயை குறித்து வைத்துள்ளேன். ஆனால் இப்போது நமக்கு நேரம் கிடையாது. ஆனால் இதை கவனியுங்கள், இதை கூறி முடிக்க விரும்புகிறேன். ஓவ்வொரு மறுபடியுமாய் பிறந்த தீர்க்கதரிசியும், போதகரும்,ஞாயிறு பள்ளி உபாத்தியாயரும், ஞானதிருஷ்டிக்காரரும், அப்போஸ்தலரும்,அனுப்பப்பட்டவரும் அவர் என்னவாயிருந்தாலும் சரி அவருடைய முழு இருதயமும் அவ்வளவாய் அற்பணிக்கப்பட்டு,அவ்வளவாய் நிரப்பப்பட்டு தேவனுடைய ஆவியினால் அபிஷேகிக்கப்பட்டு அவ்வளவாய் அபிஷேகிக்கபட்டவராய் இருந்தால் அவர் எந்த ஸ்தானத்தில் அழைக்கப்பபட்டவராய் இருந்தாலும் அது என்னவாய் இருந்தாலும் சரி பிரசங்கிக்கவோ அல்லது உபதேசிக்கவோ அல்லது சுவிசேஷிக்கவோ அல்லது தரிசனங்கள் காணவோ அல்லது எதுவாய் இருந்தாலும் சரி அவன் அதை தேவனுடைய இராஜ்ஜியத்திற்கென்றே செய்வான். தேவனுடைய ஆவியானவர் உடனே அந்த மனிதனின் மூலமாக பேசி அது தான் தேவனுடைய இராஜ்ஜியம் என்று வெளிப்படுத்துவார்.
110. நான் ஒரு பாப்டிஸ்ட் என்ற முறையில் பெந்தேகோஸ்தேக்களாகிய உங்களை பார்க்கிறேன். நீங்கள் என்னுடைய சகோதரன். நீங்கள் பாப்டிஸ்ட் சபையை சேர்ந்தவரல்ல, நான் தான் பாப்டிஸ்ட். நான் சார்ந்துள்ளதான ஒரே சபை பாப்டிஸ்ட் சபை. ஆனால் அது என் வழியில் குறுக்கே போவதில்லை. பரிசுத்த ஆவியானவர் உனக்குள்ளே எதற்காக இருக்கிறார் என்பதை நான் காண்கிறேன். அவர் என்ன செய்ய முயற்சிக்கிறார் என்பதை நான் காண்கிறேன். சரி ஒரு பாப்டிஸ்டாகிய நான் அந்த விதமாக உணருவேனானால் அசம்பிளீஸ், சர்ச் ஆஃப் காட், யுனைடட் பென்டிகாஸ்டல், இன்டிபென்டென்ட் சகோதரர்களாகிய நாம் அனைவரும் சேர்ந்து ஒரே நோக்கத்திற்காய் கிரியை செய்கிறவர்கள் என்ற நோக்கம் உள்ளவர்களாய் இருக்க வேண்டும்.நாம் ஆவிக்குரிய வகையறுத்தலை உடையவர்களாய் இருப்போமாக.
111. இப்பொழுது கவனியுங்கள், இந்த கடைசி குறிப்பை சொல்லுகிறேன். நமது மத்தியில் பெலவீனரும், சுகவீனருமாய் இருக்கிறோம். அநேகர் நித்திரை அடைந்தவர்களாய் இருக்கிறோம். ஆவிக்குரிய பிரகாரமாக மரித்தவர்களாய் இருக்கிறோம். ஏனென்றால் கிறிஸ்துவின் சரீரத்தை நிதானிக்கும் தன்மையை உடையவர்களாய் இல்லை. நமக்கிருக்கின்றதான இந்த சுகவீனமான சரீரம், நமக்கிருக்கின்றதான தேவனுடைய இராஜ்ஜியத்தை குறித்தும்இ பரிசுத்த ஆவியினால் நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கும் அன்பை குறித்தும் நமக்கு பகுத்தறியும் தன்மையை தந்து உதவி செய்வாராக. அதன் மூலமாய் நம்முடைய கரங்களை எட்டி நீட்டி நாம் சகோதரர்களாய் இருக்கிறோம் என்று கூறுவோம். நான் என்ன சொல்லுகிறேன் என்று புரிகின்றதா?  உங்களிடம் இருக்கின்ற ஒவ்வொரு சிறிய வரத்தையும் நமக்காக ஏதோ பெரியதொன்றை அடையும் நோக்கத்திற்காக உபயோகிக்காமல் தேவனுடைய இராஜ்ஜியத்திற்காக அதை உபயோகித்து எல்லோரோடும் சேர்ந்து உழைத்து கிறிஸ்துவினுடைய வருகை சீக்கிரம் இருக்க போகின்ற படியினால் அந்த நோக்கத்தை உயர்த்தி பிடிப்போமாக. நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா?
112. உங்களை இவ்வளவு நேரம் காக்க வைத்ததற்காக வருந்துகிறேன். உங்களுக்கு வேத வாக்கியங்களை போதிக்கும்படியாக நாளை சகோதரன் டேவிட் இங்கே இருப்பார். இப்பொழுது நாம் ஜெபத்திற்காக தலைவணங்குவோம்.